Tuesday, September 20, 2016

பிரிவினைக்கு அடிகோலும் அரசியல் யோக்கர்கள்,

தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ? 



விக்னேஷ்.

கர்நாடகாவுக்கு எதிராக
மட்டுமல்ல
பாக்கிஸ்தனுக்கு
எதிராகக்கூட ஆர்ப்பாட்டம்
போராட்டம்
வேண்டாம் என்று
பிரதமர் சொல்வது சரிதான்
அதுதான் ஒரு
மன்னனுக்குரிய மாண்பு.

அரசியல் ரீதியாக
தரப்படுத்தல் இல்லாத
நேர்மையான
மக்கள் ஆட்சி ஒன்று
நாட்டில்
நடைமுறையில் இருக்குமானால்!
கிளர்ச்சிகள்
தேவையற்றது என்பதும்
உண்மைதான்.

விவசாயிகள்
தற்கொலை செய்துகொள்வது,
தீக்குளித்து
தன்னை தானே
தற்கொடை செய்து கொள்வது
ஏற்புடையதுமல்ல.

ஆட்சியில் இருப்பவன்
சத்தியவானாக இருந்தால்,
அவனுக்கு
உணர்வு இருந்தால்
மனித உரிமை என்பது
என்ன என்று புரிந்தவனாக
அவன் இருந்தால்!
கிளர்ச்சி
செய்பவன்..
உயிரை விடுபவன்
பயித்தியக்காரனாக இருப்பான்.

விவசாயம் பொய்த்து
வயிற்றுக்கில்லாமல்
கடனாளியாகியபோது
வேறு வழியின்றி
விவசாயி
தூக்கு போட்டு சாகிறான்.

உரிமைக்காக தினம் போராடி
ஒன்றுமில்லையென்றபோது
வேறு வழியின்றி
மண்ணின் மைந்தன்
தீக்குளித்து
செத்து மடிகிறான்.

ஓட்டு வாங்கி
அதிகாரத்தை வைத்திருப்பவன்
மழையில் நனைந்த
எருமைமாடுபோல
அசைபோட்டுக்கொண்டு
வியட்னாமின் வளர்ச்சி
மொசாம்பிக்கின் முன்னேற்றம்
ஸ்ரீலங்காவின்
அபிவிருத்திபற்றிய
கவலையில் இருக்கிறான்.

காவிரியின்
அரை நூற்றாண்டு
வரலாற்று சிக்கலை
அவிழ்த்து நேர்ப்படுத்த
முதுகெலும்பற்ற
இந்தியாவால் முடியவில்லை.

நீதிமன்ற தீர்ப்பைகூட
நடைமுறைப்படுத்த முடியாத
படு பச்சோந்தியாக
இந்திய அரசு இருக்கிறது.

கன்னட காவாலிகள்
கட்டவிழ்த்திவிட்ட வெறியாட்ட
கொட்டத்தில்
தமிழனின் பல கோடி சொத்துக்கள்
சாம்பலானது.

தமிழர்கள்
தெருவில் அடி வாங்கி
கூனி குறுகி
அம்மணமாக்கி
அவமானப்படுத்தப்பட்டனர்
பெண்கள் குழந்தைகளை
உயிரோடு தீயிட்டு கொழுத்தவும்

முயற்சியும் நடந்தது.
பிரதமர் என்ற சுடிதார் கோமாளி
இரண்டு மாநில மக்களும்
அமைதிக்கு திரும்புங்கள்
என்று கூறிவிட்டு
புதிய சுடிதார் மாட்டிக்கொண்டு
அடுத்தொரு வெளிநாட்டில்
கொமடி நிகழ்ச்சி நடத்த
மேக்கப் போடுகின்றான்.

இருபத்தாறு வயதில்
இளைஞன் ஒருவன்
நெருப்பு மூட்டி சாகிறான்,
ஏன் செத்தான்
அந்த இளைஞன்?
எங்கு வந்தது
அதற்கான தேவை?
யாரும் அதுபற்றி ஆராயவில்லை.

ஊர் சுற்றி பிரதமர்
உள்நாட்டை
சுற்றிப்பார்த்திருந்தால்
நாட்டு நடப்பு புரிந்திருக்கும்
விவசாயி தற்கொலையும்
விடலையின் தற்கொடையும்
தடுக்கப்பட்டிருக்கும்.

வியட்நாமுக்கும்
மொசாம்பிக் நாட்டுக்கும்
நன்கொடைகளை அறிவிக்கும்
அறிவுகெட்ட மோடி
தமிழ்நாட்டுக்கு கிடைக்கவேண்டிய
நீர் உரிமையை
உறுதிசெய்ய வக்கில்லை.

கிணற்று மீடியா வாசிகள்
மைக்கை நீட்டியபடி
கிளிப்பிள்ளைபோல்
யார்மீதோ பழியை போடுவதிலேயே
குறியாய் இருக்கின்றன

வெளியுலகத்தை
எட்டிக்கூட பார்க்காமல்
கிணற்றுக்குள் இருந்தபடி
கிரந்தம் பேசுகின்றன.

சீஸனுக்கு சீஸன்
கடைவிரித்து
காசு பார்க்கும் தொல்லைகாட்சிகள்
விவாதம் என்ற பெயரில்
புது புது அர்த்தங்களில்
நகைச்சுவையான
குறளிவித்தை நடத்துகின்றன

ஈழப்படுகொலையின்போது
முத்துகுமார் தீக்குளித்தான்
காங்கிரஸும் கருணாநிதியும்
தலை முழுகிவிட்டு
கோவணத்தால் அம்மணத்தை
மறத்துக்கொண்டு
வெட்கம் கெட்டு
வாக்கு கேட்க வந்தனர்.

மூவர் விடுதலைக்கு
நீதி வேண்டி தீக்குளித்தாள்
இளங்குருத்து செங்கொடி
சேற்றில் புரண்ட எருமைபோல்
திரும்பி படுத்து
அசைபோட்டுக்கொண்டிருந்தது
அதிகார வர்க்கம்.

காட்டு வேடுவர்களை ஒத்த
காவிகளையும்
நிர்வாண பரதேசிகளையும்
பணம் படைத்த
தேசிய திருட்டு
முதலாளிகளையும்
விபச்சார சினிமா கூட்டத்தையும்
வாழவைப்பதே
இறையாண்மை என்கிறது
இந்தியாவின்
அரசியலமைப்பு சட்டம்.

தேசிய திருடர்களையும்
விபச்சாரம் செய்து பிழைக்கும்
சினிமா கூத்தாடிகளையும்
அரசியல் வியாதிகளையும்
கடவுளுக்கு சமமாக மதித்து
காத்தருளுவதே கடமை என்று
செயற்படுகிறது
கழிப்பறைக்கு நிகரான
சூதக நீதி மன்றங்கள்.

குற்றத்துக்கு
சரியான தண்டனையை
கோர்ட்
உறுதி செய்யும் என்றால்,
எதிர்வினையாற்றுவது
தவறானது
என்பதும் சரிதான்.

இந்தியா போன்ற
காட்டுமிராண்டிகளின் தேசத்தில்
ஜனநாயகம் பேசினால் அது
எருமை மாட்டின்மீது
பெய்த மழைக்கு சரி என்கிறது
ஆயிரம் ஆண்டு சரித்திரம்.

எந்த கட்சிக்காரன்
காவிரி விடயத்தில்
நியாயம் பேசுகிறான்.
வாய் திறக்கும் அனைவரும்
அரசியல் சாக்கடையை மட்டுமே
வாந்தி எடுத்துக்கொண்டிருக்கின்றனர்.

அண்ணன் எப்போ சாவன்
திண்ணை எப்போ
நம்ம கட்டுப்பாட்டுக்கு வரும்
என்பதை முன்னிறுத்திதானே
சூதக நாற்றம் கொண்ட
தேசியகட்சிகள்
காலட்சேபம் செய்கின்றன

நீதிபதிகளாக இருக்கும்
கறுப்பாடுகள்
அரசியல்வாதிகளின் நகர்வுகளை
அப்படியே பிரதிபலித்து
மாய்மால
தீர்ப்பெழுதுகின்றன.

ரஜனி கமல்
அஜித் விஜய்
நான்கு நக்கிகளும்
சினிமாவை தமதாக்கி
வைத்திருப்பதுபோல,
தந்தியும்
புதியதலைமுறையும்
நியூஸ் 7 தொலைக்காட்சிகளும்
குறிப்பிட்ட நான்கு
கட்சி கைத்தடிகளை வைத்து
மீன் சந்தை நடத்துகிறது.

1970 களில்
பாலச்சந்தர் இயக்கி வெளிவந்த
தண்ணீர் தண்ணீர் படத்தின்
கதை இன்றைக்கும்
அச்சொட்டாக பொருந்துகிறது.

ஆடு கழுத்து கயிற்றுடன்
வேலியில் சிக்கிவிட்டது
அதை கண்காணித்து
எசமான்
சிக்கலை எடுத்து விட்டிருந்தால்
ஆடு திமிறி அடித்து
வேலியை துவம்சம் செய்திருக்காது
ஆடும் செத்திருக்காது.

எசமானன்
ஆட்டை கவனிக்காமல்
பக்கத்து வீட்டு பெண்
குண்டி கழுவுவதை
கண்ணும் கருத்துமாக
பார்த்துக்கொண்டிருந்ததால்
ஆடு
வேலியை உடைத்து
தன்னிச்சையாக தப்பிக்க முயன்று
செத்துப்போனது.

ஆட்டுக்கதை
அரசியல் விவாதமாகி
ஆயிரம் வியாக்கிஞானங்களுடன்
ஆண்டாண்டுகளாக
தீர்வு எட்டப்படாமல்
சூடு பறக்க விவாதிக்கப்படுகிறது.

இதுதான் இந்தியாவின் நிலை
கேட்டால்
இந்தியா மிகப்பெரிய
ஜனநாயக நாடு என்கின்றனர்
அரசியல்
ஜோக்கர்கள்.

அமெரிக்காவை
மேற்கோள் காட்டுவதும்
ஐரோப்பாவை விஞ்சியதா
எடுத்து இயம்புவதும்
கண்கொள்ளா காட்சி.

கற்றுணர்ந்த தமிழ்
தேசியவாத இளைஞர்கள்
புதிய சித்தாந்தங்களை
அறிமுகப்படுத்தினால்
பாசிசம்
பிரிவினைவாதம்
இனவெறி
இனவாதம் பேசுவதாக
மார்பில் அடித்து கொள்கின்றனர்.

சோவியத் யூனியன்
உடைந்தது போன்ற உடைவுக்கு
காவிரி
பிள்ளையார் சுழி
போட்டுவிட்டதாகவே
இப்போதைக்கு தெரிகிறது.
-ஊர்க்குருவி-

Thursday, August 11, 2016

சாதி சங்கங்கள். ------------------------ கண்ணீர் விட்டுன்று - நீ கதறி அழுதாலும் மண்ணில் புரண்டொருகால் மலையை சுமந்தாலும் கல்மேல் தலை மோதி கட்டையிலே போனாலும் பொல்லாத சாதி "சங்கம்" புனையும் கதை அனைத்துயும் மெய்யென்று நீ நம்பி ஐயா உருகுவதேன் அடி வயிறு எரிவதுமேன் மெய் ஒன்று சொல்லுகிறேன் முடிந்தால் அறந் தொழுகு. சங்கங்கள் உனக்கொன்றும் தோள்கொடுக்க பிறந்ததில்லை பொங்கி கிடக்கும் உந்தன் நிந்தனையை தீர்ப்பதில்லை நஞ்சாய்பரவி விட்ட சாதிக்கு மருந்துமில்லை சங்கத்தின் மந்திரத்தால் - மாங்காய் விழுந்திடவும் போவதில்லை மெல்ல நிமிர்ந் தெழுந்து முப்பரவும் கல்வி கற்று பொல்லா உலகை நீ வெல்லப் பொருள் தேடு எல்லாம் அகன்றுவிடும் சாதி (சங்கங்கள்) தொலைந்துவிடும். கூனி குறுகி நீ கும்பிட்டு நின்றிடும் கால் சாதிப் பிணி பரவும் சங்கங்கள் அரசாளும் நாயிற் கடையாய் நீ நடுத்தெருவில் நிற்க வரும் நொண்டி தலைமைகளும் நுரை கொண்ட அரசியலும் கல்லில் நார் உரிப்பார் காற்றில் படம் எழுதி - பரி மேற்கில் உதிக்கும் என்பார் மண்ணாகும் உன் வாழ்வு மலிவாகும் மனித குலம். அரசியலில் பதவி சுகம் அடுக்கு மொழி மாய்மாலம் விடுகதையாய் வரலாறு வெட்டி வசன மழை உல்லாச வாழ் வவர்கு உன்பாடு மாற்றமில்லை மிஞ்சி மிஞ்சி போனால் - நீ கஞ்சிக்கும் வழியின்றி கட்டையிலே போகும்வரை சங்கம் தழைத்தோங்கும் - நீ செத்து தொலைந்தாலும் உன்னை சுட்டெரிக்ககூட சுடுகாட்டில் தொல்லை வரும். வீர தலைவனென்றும் விண் உயர்ந்த சாமியென்றும் ஆசைக்கு வேண்டுமென்றால் அன்பாய் அழைத்திடுகாண் அடை மொழியும் சேர்த்திடலாம் சங்கம் பெரிதென்று - நீ சன்னதம் ஆடுங்கால் நிம்மதியாய் சாகவிடா நிலையில்லா அமைதி கெடும் பொல்லா வினையெல்லாம் புது விதமாய் வந்திணையும் செல்லா காசாகி சீரழிவுதான் மிஞ்சும் கல்லால் அடித்து கொல்லாத குறையாக கணக்கின்றி பெண்களெல்லாம் கற்பழித்து கொலை நிகழும். கொள்ளியில் எண்ணெய் ஊற்றி குறியெல்லாம் சுயநலமாய் வல்லானாய் தலைவன் வாழ வாடினாய் உருக்குலைந்து கோவிலில் கலகம் கண்டாய் குடும்பமாய் வெளியே நின்றாய் சுடுகாடு உனக்கு இல்லை சொம்பிலே தண்ணி இல்லை கடையிலும் தேனீர் இல்லை காலுக்கு செருப்புமில்லை கடை நிலை வாழ்வுனக்கு கல்வியை கற்று ஓங்கு கலைகளை பயின்று மேவு வல்லமை எல்லாம் கூடும் வாழ்க்கையே சொர்க்கமாகும். மடை நீரில் நுரையாயானாய் மாம்பழத்து வண்டாய் வாழ்ந்தாய் காலத்தின் தடத்தில் வீணே கறுப்பாக பதிவு கொண்டாய் சாவது ஒரு நாள் கண்டோம் சரித்திரம் உண்மை என்பேன் நாயிலும் கடையாய் மண்ணில் வாழ்ந்திட வேண்டாம் என்றேன் மடியினில் பொருள் இருந்தால் மன்னனே நீதான் என்பேன் அறிவுறு கல்வி கற்றால் அரசனும் நீதான் என்பேன் சங்கத்தை தூக்கி வீசு சகலமும் நீயாய் மாறு. ரோகித் வெமூலா மாண்டான் குஜராத்தின் கொடுமை கேட்டோம் கலைச்செல்வி கோலம் கண்டோம் சுவாதியின் கொலையில் கூட சங்கங்கள் தலையீடாச்சு இவை ஒரு தர்மம்தானோ கண்மூடி தூங்கலாமோ இனி வரும் எதிர்காலத்தில் என்னதான் நடக்காதென்பாய் பிரிவினை கருவூலங்கள் - சாதி சங்கமாய் உதிக்குதென்பேன் வறுமையை உரமாய் கொண்டு வளர்திடும் சூழ்ச்சி என்பேன். முடி வெட்டும் வழியில் வந்த முத்துவேல் கருணா இன்று உலகத்து முதல்வனாக உன் முன்னே வாழ கண்டோம் கடை நிலை வகுப்பில் வந்த நடிகனாம் ரஜனி இன்று கும்பிடும் தெய்வம்போல கோவிலாய் மின்ன கண்டோம் இசை வழி உயர்வு கண்டார் இசைஞானி இளையராஜா சாதிக்கு சங்கம் வேண்டாம் சாத்தியம் உழைப்பே என்பேன். கல்லும் கடல் வானும் புல்லும் மர நிழலும் புதிய விஞ்ஞானிகளும் மெல்ல மெல்ல புதுயுகமாய் எல்லாமே மாறகண்டோம் இல்லானாய் எளியவனாய் இப்புவியில் நீ பிறந்ததனால் பசுதோலே எமனாய் மாறி பாவி நாம் அழியக்கண்டோம் இல்லாத ஊருக்கு இரும்புப் பாலம் தேவையில்லை நல்ல கல்வி நீ பயின்று நாலுபேர்போல் பொருள் கறந்து வல்லானை வெல்ல வழி நூறு தெரிகிறது. முற்சந்திக் ஒரு சங்கம் மூன்று பேருக்கொரு கட்சி கொள்கையற்ற பெருங்கோசம் குறியில்லா வழிகாட்டல் சப்பாணி தலைவரிடம் சமரசம் கொண்டொரு பொழுது குட்டி விரட்டிவிட்டால் கரம் கூப்பி மறு வாசல் காட்டான் போல் விலங்குகள்போல் கன மழையில் குமிழிகள்போல் நோக்கமற்ற இழி வாழ்வு நிதர்சனமோ கனவுகளாய். நேர்மையற்ற வெறும் பேச்சு நெறியில்லா கொள்கை வெறி கேழ்விக்கும் பதிலுக்கும் கிட்டாத விஷ ஞானம் சாதிக்கொரு கொள்ளை சாவிலும் குளிர் காய்தல் அக்காளும் தங்கைகளும் வெட்டி படுகொலைகள் பின்னணியில் யாரென்றால் சங்கங்கள் தலைமறைவு பொல்லாத பூமியிலே புரையோடும் அரசியல்காண். கண்மூடி வாய் பொத்தி கபடம்செய் அரசியலை சன்னியாசி தாடிக்குள் விளைந்த காளான் போல் விஞ்ஞான காலத்தில் வீணான சாதிவெறி மூங்கில் போல் தலை விரித்து மெல்ல படர்ந் தறுகாய் மேவி அடம்பிடிக்கும் கல்லுக்குள் நீர்போல காற்றிடையே அணுப்போல உன்னிடையே ஊடுருவி - உனை உறங்க விடப்போவதில்லை. சாதியை உரமாய்க்கொண்டு சங்கங்கள் பிறக்கக் காண்பாய் சாகச வார்த்தை எல்லாம் சரளமாய் தருவார் கேட்பாய் இல்லாத சாதி எல்லாம் இருப்பதாய் எடுத்துரைப்பர் சங்கங்கள் உன்மேல் ஏற தந்தரம் செய்வார் காண்பாய் உயிருக்கு உயிர் தாமென்பர் உணர்ச்சியாய் முறுக்கி நிற்பர் கடைசியில் நீ செத்தாலும் கலகத்தை கூட்டி போவர். தலித்துக்கு உரிமம் என்பர் சாதிக்கு மீட்சி என்பர் - நீ வாழ்ந்திடும் நாளில் சங்கம் வீழ்ந்திடா விருட்சம் என்பர் உணவில் சாதி என்பர் அணுவிலும் சாதி என்பர் அகம் புறம் அனைத்தும் தீர அற்புதம் சங்கம் என்பர் அப்பாவி மனிதா நீயும் அம்பாகி அழிந்தாய் கண்டோம் துச்சமாய் தூக்கி வீசு சுகமான வழியை தேடு. நிலவினில் கால் பதித்தான் நீடுலகை அளந்துவிட்டான் உள்ளங்கை நேர்கோட்டில் உலகையே சுருக்கிவிட்டான் அலைபேசி அகமாய் கண்டான் அனைத்துமே சித்தமென்றான் மனிதா நீ சாதிக்குள் மண்ணாகி போவதுமேன் அதர்மம் தலைக் குவந்து அன்றொருவன் செய்த வினை சீழாய் மலக்கழிவாய் சிறுமையுடன் வாழாதே. கருவில் உருவாகி கட்டைவரை பின்தொடரும் கோவில் திருவிழாவில் குடிநீர் பகிர்வுகளில் சாலை பள்ளிகளில் சனம் கூடும் நிகழ்வுகளில் காவலன் போல் நின்று காவு கொள்ள காத்திருக்கும். சாதிக்கு சமாதி கட்ட சங்கத்தை வெறுத்தால் உண்டு. நேருக்கு நேர் எதிராய் நிற வெறியை மிஞ்சி நிற்கும் சாதி தரித்திரத்தை சங்காரம் செய்திடுவாய் தூக்கி அதை நீ சுமந்தால் துன்பமே இல்லை வேறு தருணத்தில் குழி பறிக்கும் சாவுக்கும் நாள் குறிக்கும், பூவிலே உள்ள வாசம் புலையாக மாறக்காண்பாய் நேசமும் பகையாய் மாறும் நிலை தடுமாறிப்போகும் ஆணவக்கொலைகள் கூட ஆணொடு பெண்ணும் சாவாள் வீடுகள் எரிந்து சாம்பல் விண்முட்ட ஓலம் கேட்கும் நாடு விட்டு வெளியே போனால் நாய்ச் சாதி வருவதில்லை தெருவோடு தங்கி நிற்கும் திண்ணையில் படுத்துறங்கும் திரும்பி நீ வந்தபோது குறும்போடு உன்னை சேரும் வாழ்க்கையின் பாதி நாளை வலியோடு வருந்த வைக்கும் சாதியை நீ மதித்தால் தரை மட்டமாகும் வாழ்வு யாருமே மதிக்கமாட்டார் நாயியிலும் கடையனாவாய் நேர்கொண்டு நிமிராவிட்டால் நிச்சியம் மண்தான் நீயும் பூமியில் பிறப்போர் எல்லாம் பொதுவாக மனிதர்தானே. கடையினில் குவளை ரண்டு குடித்திடும் தேனீர் ஒன்று மதுக்கடை சென்றாய் என்றால் ஒத்தையி குடிக்க கண்டோம் கிணத்தினில் தண்ணீர் கொண்டால் குற்றமாய் காணும் சாதி - நெல் வயலினில் சிறுநீர் விட்டு வாய்க்காலி குளித்தபோது உழைப்பினை உறிஞ்சும் நோக்கில் ஊமையாய் நிற்கும் சாதி. சங்கங்கள் அமைத்து சாதி சமத்துவம் செய்வோமென்று அங்கங்கே கட்சியாகி அரசியல் செய்யக்கண்டோம் சங்கத்தின் தலைவர் எல்லாம் சுந்தரமாக மாறி - உனை துன்பத்தின் குறியீடாக்கி சுகமாக வாழக் கண்டாய். சாவீட்டில் சாதி என்றார் சமாதியில் பிழையும் கண்டார் பள்ளியில் பிரிவு என்றார் - நடை பாதையில் வகுப்பு என்றார் கோவிலில் திருவிழாவில் கொடும்பகை மூட்டி வைத்தார் காதலில் திருமணத்தில் காவலாய் நிற்போம் என்றார் தேர்தலின் போது சங்கம் திசை மாறி போகக்கண்டாய். - ஊர்க்குருவி-