இலங்கையில் பெரும்பான்மையாக வாழும் சிங்களவர்கள் என்றைக்கும் இலங்கை வாழ் சிறுபான்மைச்சமூகத்துடன் ஒத்துப்போகும் மனப்பாங்கைக்கொண்டவர்களாக இருந்ததாக வரலாற்றுப்பதிவுகளில் இல்லை.

சிங்களவர்களின் தோற்றம் சிங்கத்தின் வழித்தோன்றலான விஜயனின் இலங்கை வரவும். வேடுவர் குல பெண்ணான குவேனியின் கலப்பும். ஒரு வித்தியாசமான குணாம்ஷம்கொண்ட இனமாக தொடர்ந்து தம்மை வெளிக்காட்டிக் கொண்டே வந்துள்ளது. அது மஹிந்த ராஜபக்க்ஷ வரை தொடர்ந்து அவரினதும், அவரது குடும்ப வாரிசுகளினதும் மனிதத்தன்மையற்ற செயற்பாடுகள் களங்கமற நிரூபணமாக்கியிருக்கிறது.

hfgh1915ல் இலங்கையில் வாழ்ந்துவந்த தமிழ் பேசும் இனமான முஸ்லீம்களுடனான கலவரங்களுடன் சிங்களவர்கள் தமது துவேச மனப்பாண்மையை கொலைக்கலவரங்களாக காட்ட ஆரம்பித்திருந்தனர். இலங்கை வரலாற்றில் முதன் முறையாக ஏற்பட்ட அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட முதல் இனக்கலவரமாக 1915 சிங்கள-முஸ்லிம் இனக்கலவரம் அறியப்பட்டிருக்கிறது. இக்கலவரம் பெரும்பான்மை சிங்கள இன மக்களுக்கும் சிறுபான்மையினரான முஸ்லிம் இன மக்களுக்கும் இடையே ஏற்பட்டது. அதுதொடர்பில் ஆங்கிலேயே அரசு தீவிரமாகச் செயற்பட்டு டி.எஸ்.சேனநாயக்கா, எவ்.ஆர்.சேனநாயக்கா உள்ளிட்ட பல சிங்களத் தலைவர்களைக் கைது செய்தது. இதை பிரித்தானிய இராச்சியமும் முஸ்லீம்களும் மறந்திருந்தாலும் தமிழினமும் வரலாற்றுப்பதிவுகளும் மறந்துபோகவில்லை.

அந்தக்கலவரத்தின் போது சிங்களவர்களுக்காக பரிந்து இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முகமாக செயற்பட்டவர். யாழ்ப்பாணத் தமிழரான சேர் பொன் இராமநாதன் ஆகும். அவர் இங்கிலாந்து சென்று பிரித்த்தானிய மகாராணியுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி கலவரத்திற்கு காரணமாகவிருந்த சிங்களத் தலைவர்களை விடுவித்தார். இராமநாதன் நாடு திரும்பியபோது சிங்களத் தலைவர்கள் துறைமுகத்தில் அவரை வரவேற்றதோடு அவரது குதிரை வண்டியின் குதிரைகளைக் கழற்றிவிட்டுத் தாமே காலி வீதி வழியாக அவரது வீடுவரை குதிரை வண்டியை இழுத்துச் சென்று தமது மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தியதுபோல் அன்று காட்டிக்கொண்டனர்.

hfghஆனாலும் அவர்களது பிறவிக்குணமும் துவேச மனப்பாண்மையும் செத்துப்போகவில்லை. அடுத்து சிங்களவர்களால் திட்டமிடப்பட்ட இனக்கலவரம் 1958 காலப்பகுதியில் தமிழ், சிங்கள மக்களுக்கிடையே பொலநறுவையில் தோற்றம் பெற்று கொழும்புக்கும் பிற பிரதேசங்களுக்கும் பரவியது. இந்த இனக் கலவரங்களில் தமிழர்களும் தங்களை பாதுகாத்துக்கொள்ளவும் ஆத்திரம் காரணமாகவும் சிங்கள மக்களைத் திரும்பித் தாக்கினார்கள். இந்தக்கலவரத்தின் போது பலதமிழர்கள் கொல்லப்பட்டு சொத்துக்கள் உடமைகள் சூறையாடப்பட்டு விரட்டியடிக்கப்பட்டனர். இதுதான் சிங்களவர்களை தமிழர்கள் நேரடியாக எதிர்த்துக்கொண்ட முதலாவது நிகழ்வாகும்.

பின்வந்த காலங்களில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஆட்சியில். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி தினமான ஜனவரி 10, 1974 இல் மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் பதினொரு பேர் இலங்கை காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு உட்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் ஏற்படுத்திய குழப்ப நிலையினால் மரணம் அடைந்தனர். அதன் பின் ஜே ஆர் ஜெயவர்த்தன பிரேமதாசகாலத்திலும் அடுத்து வந்த சந்திரிக்கா காலத்திலும் இடைவெளியில்லாமல் ஒவ்வொரு அரசாங்கங்களும் தம்பங்கிற்கு படுகொலைகள் நிகழ்த்திக்கொண்டே வந்திருக்கின்றன. 1977கலவரம், 1981 யாழ் நூலகஎரிப்பு ,1983 கறுப்பு ஜூலை படுகொலை, 1983 வெலிக்கடைச்சிறைச்சாலை படுகொலை ,1997களுத்துறைப்படுகொலை ,இன்னும் பல தொடற்சியுடன். 2009ல் மஹிந்த ரஜபக்க்ஷ தன்பங்கிற்கு முள்ளிவாய்க்காலில் இலட்டக்கணக்கில் இன அழிப்பை வெளிப்படையாக் நடத்திமுடித்த பின். தேடியழிக்கும் படுகொலைகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. hfgh

அன்று 1958 லிருந்து கொழும்பு அனுராதபுரம் பொலனறுவை கல்லோயா மற்றும் தமிழ் எல்லைக்கிராமங்களிலிருந்தும் இடம்பெயரத்தொடங்கிய மக்கள் இன்று (யாழ்)மாதகல்லிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். திருகோணமலை, மட்டக்களப்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, ஆகிய பிரதேசங்கள் இராணுவக்கட்டுப்பாட்டிற்குள்ளாகி எந்த எதிர்ப்புமின்றி சிங்களக்குடியேற்றங்கள் தமிழ் அரசியற்தலைவர்கள் ஒத்துழைப்புடன் இலகுவாக விஸ்தரிக்கப்பட்டுவிட்டது.

கடைசியாக ராஜபக்க்ஷ கை வைத்திருக்குமிடம். தமிழர்கள் பாரம்பரியமாக தனித்தன்மையுடன் வாழ்ந்துவந்த இடமான யாழ்ப்பாண மாவட்டமாகும். இங்கு நிலைகொண்டிருக்கும் இராணுவத்தினரின் செறிவையும் ஆயுத வலிமையையும் தமிழருக்கெதிராக பிரயோகித்து. தென்பகுதி வறண்ட கிராமங்களில் வாழ்ந்துவந்த சிங்கள காடையர்களையும், விபச்சாரிகளையும், குற்றவாளிகளையும், தூண்டிவிட்டு சட்டவிரோதமான முறையில் யாழ் மையப்பகுதியில் ஒருகுடியேற்றத்தை நிறுவுவதற்கு தமிழ் அமைச்சர் டக்க்ளஸ் தேவானந்தாவின் ஆசியுடன் சதி நடந்துகொண்டிருக்கிறது. இந்தக்கட்டுரை எழுதிமுடிப்பதற்குள் பல சிங்களக்குடும்பங்கள் குடியேற்றப்பட்டிருக்கலாம்.

சிலதினங்களுக்கு முன் தென் பகுதியிலிருந்து பல பஸ் வண்டிகளில் அரசாங்கத்தால் திட்டமிட்டு சுற்றுலாப்பயணிகள் என இறக்கப்பட்ட பல காடை சிங்களவர்கள். யாழ்ப்பாண பொது வைத்தியசாலையில் அகில இலங்கை மருத்துவ ஒழுங்கமைப்பின் நிகழ்வு ஒன்று நடைபெற்றிருந்த வேளையில், தகாத முறையில் நடந்துகொண்டதாக செய்தி ஒன்று தெரிவித்துள்ளது. சுமார் 30 பஸ் வண்டிகளில் வந்த சிங்களவர்களே அவ்வாறு நடந்துகொண்டதாக யாழ்ப்பாண செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்ச்சியாக யாழ்ப்பாண நூலகத்திற்குச்சென்ற அந்தக்கூட்டத்தினர் நூலகத்திலும் அடாவடியில் இறங்கியிருக்கின்றனர்.வரவேற்பறையில் தமிழ் சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் அறிவித்தல் பலகை வைக்கப்பட்டிருந்தது. அதில் நூலகத்தின் அறையில் பிரவேசிக்கக் கூடிய நேரங்கள் குறிக்கப்பட்டுள்ளன.அந்த குறித்த நேரம் தவறிய நிலையில் வார இறுதி நாளில் வந்த குறித்த சிங்களவர்கள், தம்மை உள்ளே செல்ல அனுமதிக்குமாறு அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர்களை அச்சுறுத்தியுள்ளனர். பின்னர் அந்த அறிவித்தல் பலகையையும் உடைத்து
நொருக்கியுள்ளனர். இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டும் குறித்த சிங்களவர்கள், ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகள் என தம்மை அடையாளம் காட்டி, பொலிஸாரை அச்சுறுத்தியுள்ளதாகத்தெரிகிறது. பொலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் திரும்பிவிட்டதாக கூறப்படுகிறது.

தமிழர்களுக்கு எவ்வளவுக்கெவ்வளவு நெருக்கடிகளை கொடுக்கமுடியுமோ திட்டமிடப்பட்டு அரசாங்கத்தால் அவ்வளவு இடைஞ்சல்கள் கொடுக்கப்பட்டு வருகின்றது. எவ்வளவு விரைவில் தமிழ்சமூகத்தை நாட்டைவிட்டு விரட்டியடிக்க முடியுமோ அவ்வளவு நெருக்கடிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

ஒருபுறம் வெளிநாடுகளுக்கு சென்று எவரையும் அகதியாக ஏற்றுக்கொள்ள வேண்டாம் என பிரச்சாரம்செய்து அகதிகளை மேற்கு நாடுகளுக்கு செல்லவிடாமல் தடுப்பதன்மூலம் தமிழர்களை கைதிகளாகவும் அடிமைகளாகவும் வைத்திருக்கவும். மீறி நாட்டைவிட்டு வெளியேற முனைபவர்கள் கடல்ப்பயணங்களை மேற்கொள்ளுவதற்கும் தூண்டப்படுகின்றனர். கடல்ப்பயணத்தில் புறப்படுபவர்கள் கனடாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இலகுவில் சென்றடைந்துவிடமுடியாதவாறு புலனாய்வுத்தகவல்களை கனடா அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும் வழங்கி கடல்ப்பயணிகளை இந்தியா,மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து,போன்ற இடங்களுக்கு செலுத்துவதால் அவர்கள் நிரந்தரமாக அந்நாடுகளில் தங்கிவிட முடியாமலும் மன உழைச்சல் பொருளாதார நெருக்கடியில் தவித்து திரும்பினால் சிறையில் அடைத்துவிடலாம் என்பதும், இந்தியா போன்ற நாடுகளுக்குச்செல்லுபவர்கள் இலங்கையைவிட கொடுமையை அனுபவித்து அழிந்து போகட்டும் என்பதுதான் இன்றைய அரசின் தமிழர்பற்றிய கொள்கையக காணப்படுகிறது.

இதே நேரத்தில் உள்ளூரில் உளவியல் ரீதியான நிந்தனைகளையும் அரசாங்கம் இராணுவத்தின் மூலம் கட்டவிழ்த்து விட்டு. இராணுவத்தினரின் அத்துமீறிய கற்பழிப்பு சிறு வயதுப்பெண்களை காதல் என்ற வலையில் வீழ்த்தி கலாச்சாரச்சீரழிவையும் பண்டாட்டையும் அழிப்பதற்கான திட்டம் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

hfghஅவைகளில் ஒன்றாக போராளிகளின் கல்லறைகள் போராட்டத்தின் நினைவைத்தாங்கி நிற்கும் நினைவுச்சின்னங்கள் துடைத்தளிக்கப்படுகின்றன, அதுபற்றி ஐக்கிய நாடுகளின் கொழும்பு வதிவிட பிரதிநிதியும் கனடா நாட்டு பிரஜையுமாகிய நீல் பூனே.தனது கவலையையும் கருத்தையும் இவ்வாறு தெரிவித்தார் அரச படைகள் போர் முடிவுற்றதும் போராளிகளின் கல்லறைகளை புல்டோசர்களால் இடித்து தரைமட்டமாக்கினர். தம் போர்வீரர்களுக்கு அரசாங்கம் வெற்றி தூபிகளை தமிழர் பிரதேசங்களில் நிறுவிவருகின்றது. இது நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது இப்படியான விடயங்கள் குடா நாட்டில் உள்ள 10 இலட்சம் மக்களையும் பாதித்துள்ளது ஏன் இந்த வேலையை அரசாங்கம் செய்கின்றது என தமிழ் மக்கள் மனம் உடைந்துபோயுள்ளனர் என்று கூறியுள்ளார் .

உண்மையில் மாவீரர்கள் துயிலும் இல்லங்களை இடித்தும் படைகளுக்கு வெற்றி சின்னங்களை கட்டுவதும் தமிழ் மக்கள் மற்றும் சிங்கள மக்களிற்கு இடையே நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் அளவு கோல் அல்ல எனவும் கூறியுள்ளார்.

ராஜபக்க்ஷ தனது தொடர் இருப்பை தக்க வைக்கவும் சிங்களவர்களிடையே துவேசத்தையூட்டி தானொரு இனப்பற்றாளனாகவும் காட்டி தனக்குப்பின்னிருக்கும் அரசியல் நெருக்கடிகளிலிருந்து தப்பிப்பதற்குமான தந்திரமாகவே தன்னை பெருத்த பூதாகரமாக சித்தரிக்க முயலுகிறார். ராஜபக்க்ஷவுடன் கை கோர்த்து நிற்கும் தமிழ் அரசியல்வாதிகள் இவற்றைப் புரிந்துகொண்டாலும் தங்கள் பதவி சுகங்களை விட்டுக்கொடுக்கத்தயாராக இல்லை.

தமிழ் அரசியல்வாதிகளால் தமிழர்களுக்கு எந்த அனுகூலமும் இல்லையென்பது வெட்ட வெளிச்சமாகி தமிழர்களை செய்வதறியாது திகைக்க வைத்திருக்கிறது. ஆனால் இதுகூட தமிழினத்திற்கு அரசியல்வாதிகளிடமிருந்து நல்ல படிப்பினையாக அமைந்திருக்கிறது.

hikgddfvdஇந்தநிலையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி. யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள அதன் அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருப்பதாகத்தெரிகிறது. இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், திருமதி பத்மின் சிதம்பரநாதன் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: நூற்றுக்கணக்கான சிங்களக் குடும்பங்கள் யாழ் புகையிரதநிலையத்திலும் ஏனைய இடங்களிலும் திடீரென வந்து இறங்கியுள்ளன. அவர்கள் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்படும் முன்னர் யாழ்ப்பாணத்தில் வசித்து வந்துள்ளதாக கூறுகின்றனர். ஆனால் தாம் மீண்டும் யாழ்ப்பாணத்தில் குடியமர விரும்பி இங்கு வந்துள்ளதாகவும் கூறியுள்ளனர். தாம் குடியமர்வதற்கான ஏற்பாடுகளை செய்துதரும்படி அரசாங்க அதிபரிடமும் அமைச்சர்களிடமும் கோரியுள்ளனர்.

இவர்கள் புகையிரத நிலையத்திற்கு வந்து சேருவதற்கு முன்னதாகவே புகையிரதநிலையத்தில் அந்த மக்கள் தங்குவதற்கு வசதியான வகையில் அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்ட நிலையில் இந்த மக்கள் புகையிரத நிலையத்திற்கு வந்திறங்கிய நிகழ்வானது அம் மக்கள் குறிப்பிட்ட உள்நோக்கத்தோடு திட்டமிடப்பட்ட வகையில் கொண்டுவந்து இறக்கப்பட்டுள்ளார்கள் என்றே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கருதுகின்றது. என்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்திருக்கின்றனர். தமிழ் தேசிய மக்கள்
முன்னணியை பின்பற்றி மற்றய தமிழ் தேசியக்கட்சிகளும் கூட்டாகச்சேர்ந்து எதிர்ப்பையும் போராட்டத்தையும் தொடர்ச்சியாக நடாத்தி சர்வதேச மட்டத்திற்கு இந்தப்பிரச்சினையை எடுத்துச்சென்றாலொளிய யாழ்ப்பாண சிங்களக்குடியேற்றத்தை தடுப்பதற்கு முடியாமல்ப்போகும்.

ராஜபக்க்ஷவும் பரிவாரங்களும் தமக்கும் இந்த விடயங்களுக்கும் தொடர்பில்லாதது போலவே பாசாங்கு செய்கின்றனர் . கிளிநொச்சி. முல்லைத்தீவு போன்ற இடங்களின் பின்புலம் வேறுவிதமானது வன்னி நிலப்பரப்பைப்பொறுத்தவரையில் காடுகளும் அரசகாணிகளும் நிறைந்தபகுதி அங்கு எந்த எதிப்புக்காட்டினாலும் தடுப்பதற்கான சாத்தியம் சட்டப்படி என்றாலும் மிகவும் குறைவாகும். அரச காணிகளில் ஆயிரம் காரணங்களைக்காட்டி குடியேற்றத்தை அரசாங்கம் நிறுவமுடியும் . யாழ்ப்பாணத்தைப்பொறுத்த வரையில் மிக வித்தியாசமான நிலப்பரப்பைக்கொண்ட பகுதியாகும் அங்கு காடுகளோ அரசகாணிகளோ அதிகமில்லை மீறிப்போனாலும் கடற்கரையை ஒட்டிய குடிநீர் வசதியில்லாத மரஞ்செடி வளர்க்கமுடியாத ஒருவித உப்புக்களப்பு நிலங்களே அரசகாணிகளாக சில இடங்களில் சிறு சிறு துண்டுகளாக இருக்கின்றன அது குடியிருப்புக்கு
சாத்தியப்படக்கூடியதுமல்ல அப்படிக்குடியேறினாலும் மழைக்காலங்களில் வெள்ளம் நிரம்பி நிற்கும் தாழ்ந்த நிலப்பரப்புக்களாகும் .

இந்தச்சூழலை கேள்வியுற்ற யாழ் அரசாங்க அதிபர் அவர்கள் சிங்களவரின் குடியேற்ற கோரிக்கையை நிராகரித்து அது சாத்தியமில்லை என்று நேரடியாகவே கூறியிருக்கிறார் . முப்பது வருடங்களின் பின்னர் மீளக்குடியமரப் போகின்றோம் எனக் கூறிக் கொண்டு அவசர, அவசரமாக யாழ்ப்பாணம் வந்துள்ள சிங்களக் குடும்பங்களை உடனடியாக இங்கு குடியேற்றும் சாத்தியங்கள் எவையும் இல்லை என்று யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், திட்ட வட்டமாகத் தெரிவித்துள்ளார். குடியேறுவதற்கான வசதிகள் இல்லாத நிலையில் சிங்களக் குடும்பங்கள் தொடர்ந்தும் யாழ்ப்பாணத்தில் தங்கி இருப்பது ஆரோக்கியமானதல்ல .என்றும் அவர் கருத்துரைத்துள்ளார். இவறை முன்னிறுத்தி தமிழ் தேசிய அரசியல்க்கட்சிகள் களத்திலிறங்கி வரலாற்று அழிவிலிருந்து யாழ்ப்பாணத்தையும் மக்களின் பாரம்பரிய உரிமையையும் காக்க முன் வரவேண்டும்.

பயங்கரவாதம் அழிக்கப்பட்டுவிட்டது. உள்ளூரில் புலிகள் இல்லை. நட்டின் அபிவிருத்தியில் அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டு செயல்ப்படுகிறது எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள். வடக்கின் வசந்தம், கிழக்கின் வெளிப்பு, என்று கூறிக்கொண்டிருந்த அரசும் மந்திரிமாரும் திடீரென தொப்பியைபுரட்டி முள்ளிவாய்க்கால் படுகொலைக்குற்றச்சாட்டிலிருந்து தப்பிப்பதற்காக புலிகள் வெளிநாடுகளில் பதுங்கியிருப்பதாக கரணம் கூறி வடக்கு கிழக்கு பகுதிகளை இராணுவமயப்படுத்தி சிங்களக்குடியேற்றங்களையும் சிங்களமயப்படுத்தலிலும் மும்முரமாக ஈடுபட்டு தமிழினத்தை அழித்து வருகிறது.

வெளிநாடுகள் தமிழர் புனர் வாழ்வு அபிவிருத்திக்கென கொடுக்கும் நன்கொடை பணங்களைப்பெற்று நிறுவவேண்டிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை விட்டுவிட்டு திரும்பத்திரும்ப அபிவிருத்திக்குப்பதில் தமிழரின் அழிவின்பால் கங்கணங்கட்டி உலகத்தின் சொல்லையோ அரசியல்க்கட்சிகளின் நியாயமான் கோரிக்கைகளயோ காது கொடுத்து கேட்காமல் இலங்கை அரசு உதாசினம் செய்துகொண்டிருக்கிறது, இந்தக்கொதி நிலை ஸ்ரீலங்காவின் அமைதிக்கு மீண்டும் பங்கமாகவும் அமையலாம்.

  • ஈழதேசத்திற்காக கனகதரன்,
  • நன்றி ஈழதேசம்,