வல்வையில் உதித்த வனப்புமிகு ஆதவனுக்கு அகவை 56,
ஈழத்தமிழினத்தை உலகுக்கு காட்டிய சூரியனுக்கு அகவை 56,
தமிழ் மொழியை சர்வதேசத்திற்கு இனங்காட்டிய சூரியத்தேவனுக்கு வயது 56,
ஒடுக்கப்பட்ட தமிழர் இதயத்தில் வீரத்தை பாய்ச்சி வீறு கொள்ளவைத்த வீரத்தலைவனுக்கு அகவை 56,
நீளுலகில் நிமிர்ந்த தமிழினத்தின் தலைவனுக்கு அகவை 56,
பாயும் புலிகளின் தலைவன் பிரபாகரனுக்கு அகவை 56,
தமிழினத்தின் தேசியத்தலைவன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு வயது 56,
மானத்தமிழ்தலைவன் பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துவோம்,
வாழிய பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரமாண்டு,

வீரகாவியங்கள், உருவகக்கதைகள், நன்னெறிக்கருத்துக்கள், எனப்பலவற்றை உலகம் கண்டிருக்கிறது. அவை வாழ்க்கையை வளப்படுத்தும் கற்பனையான சிருஸ்டிப்புக்களென்றும் உண்மையான வரலாற்று சரித்திர காவியங்களென்றும் இரு வேறுபட்ட கருத்துக்கள் உண்டு. இருந்தாலும் அக்கருத்துக்களில் இடம்பெறும் நாயகர்கள் அநீதியை அழிக்க பூமியில் அவதரித்த ஆண்டவனின் அவதார புருஷர்களாகவே அறியப்பட்டிருக்கிறார்கள், அவர்களுக்கு என்றென்றும் அழிவில்லை, அந்த அவதார புருஷர்களின் வரிசையில், ஈழத்தின் வல்லையில் உருவான "உலக அதிசயம்", திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள். இன்று பிரபாகரன் அவர்களின் அகவை 56, எமக்காக வாழ்கவென வேண்டி தலைவனை வாழ்த்துவோம்.

தலைவன் தனது 16 வயதில் தனியொரு இளைஞனாக விடுதலை வேள்வியை நோக்கிப்புறப்பட்டு கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன, இன்றுவரை தலைவன் தனது எதிரியை, அல்லது துரோகக்கூட்டங்களை, ஒரு வரியில்க்கூட விமர்சித்ததில்லை, தன் நம்பிக்கையும் வீரத்தையும் மட்டுமே நம்பியவர், செயற்பாடே அவரது தாயக மந்திரம், அவரது கொள்கையில் பின்பற்றுபவர் எவராக இருப்பினும் வாழ்த்துக்குரியவர்கள், தலைவனை துரோகங்களும் சதிகளும் உலுப்பியது உண்மை ஆனாலும் வீரத்தோடு விமர்சனங்களை தவிர்த்து தலைவனின் புகழ் ஈரெட்டு பதினாறு திக்கும் பரவி நிற்கிறது, இன்று 56 வது அகவை காணும் தேசியத்தலைவன் பிரபாகரன் அவர்களை நீடூழி வாழ்கவென வாழ்த்தி, நாளைய தினம் அனுஷ்டிக்கப்படும் மானத்துடன் ஈழமண் காத்த மாவீர மறவர்களையும் போற்றி வணங்கி தலைவன் வழி தாயகம் காக்க நிற்போம் என உறுதியெடுத்துக்கொள்ளுவோம்,

ஈழதேசம் இணையமும், எழுதுவோரும்,