Monday, August 22, 2011

>கூத்தாடி குசும்பன்< அங் 4,

>கூத்தாடி குசும்பன்< அங் 4,



உள்ளாட்சித் தேர்தலில் ராமதாசரின் பாமக தனித்து போட்டியிடும் என்று அறிவித்ததும். கேலியும் கிண்டலும் செய்கிறார்கள், என்று அக்கட்சியின் முதலாளி டாக்டர் ராமதாஸ் ஒப்பாரி வச்சு அயுதிருக்கிறாரு.

பாமகவின் திருவள்ளூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று மணவாளநகரில் நடந்தது. அதில் கலந்து கொண்ட கட்சியின் முதலாளி ராமதாஸ் பேசியதாவது,

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர், திருத்தணி, மதுரவாயல், அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி சட்டசபை தொகுதிகளில் கட்சியை மேலும் வலுப்படுத்தவும்?, இளைஞர் படையை அமைக்கவும்?, தொகுதி வளர்ச்சிக்காகவும்??? ஆட்களை தேடினோம்!!!. அப்போது பாலா என்ற பாலயோகியின் திறமை மீது நம்பிக்கை வைத்து அவரை மாநில துணை பொதுச் செயலாளர் ஆக்கியுள்ளோம். அவருக்கு நீங்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
Hilarious political cartoon images

தமிழகத்தில் பாமக மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கப் போகிறது?.

மக்களை வறுமையில் தள்ளி, இலவசங்களைக் கொடுத்து தமிழகத்தையே சீரழித்த திராவிடக் கட்சிகளை ஒழித்துக் கட்ட ஒவ்வொரு இளைஞனும், இளம்பெண்ணும் சபதம் எடுக்க வேண்டும்!.

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாமக தமிழகத்தில் குறைந்தது 13 இடங்களையாவது கைபற்றும்?.

வரும் உள்ளாட்சித் தேர்தலில் பாமக மிகப் பெரிய வெற்றி அடையப் போகிறது?.

1989-ம் ஆண்டு கட்சியை ஆரம்பித்த புதிதில் தனித்து போட்டியிட்டு 17 லட்சம் வாக்குகள் பெற்றோம்.

மீண்டும் 1991-ம் ஆண்டு தனித்து நின்று 1 எம்.எல்.ஏ. வைப் பெற்றோம்.

1996-வது ஆண்டிலும் தனித்தே நின்று 4 எம்.எல்.ஏ.க்களை பெற்றோம்.

அதன் பிறகு தான் கூட்டணி வைத்தோம். தற்போது வெறும் 3 எம்.எல்.ஏ.க்கள் தான் உள்ளனர்.

பாமக தனித்து போட்டியிடும் என்றதுமே கேலியும், கிண்டலும் செய்கிறார்கள் என்றார்.

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாமக தமிழகத்தில் குறைந்தது 13 இடங்களையாவது கைபற்றும்??? என்று ராமதாசு மாமா நம்பிக்கையோடு??? கூறியிருக்கிறார்,



கூ கு: அது என்ன பதிமூணு இடம் புரியவேயில்லைங்க.

அதுசரி ராமதாசு மாமா 2009 மக்களவை தேர்தலின்போதும், அம்மாவோடு கூட்டுச்சேர்ந்து நீங்க குடுத்த ஸ்ரேற்மென்ரை வசதியாக மறந்திட்டீங்களோ. வேற்றிக்கூட்டணி என்று கூவினீங்க. உங்க ஆளுங்க ஒருத்தர்கூட தேறல்லீங்களே.

அப்பொறம் ஞானம் பொறந்ததா சொல்லி. 2011 சட்டசபை தேர்தல் வந்தபோது குத்துக்கறணம் அடிச்சு கண்ணாடி குடும்ப தாத்தாவோட ஒறவாடி அன்னியோன்யமாகி கூட்டு அமைச்சு கடை போட்டீங்க, அப்ப குடுத்த ஸ்ரேற்மன்ரிலையும், அன்பு பொங்க வெற்றிக்கூட்டணி. 234 தொகுதியிலும் வெற்றிவாகை சூடுவோம் ன்னு அக்கப்போரா கூறினீங்க, ஒருத்தனும் தேறல்லங்களே.

ஒங்களுக்கு ஞானமும் வரல்ல வெக்கமும் வரல்ல!

இப்ப எந்த ஆதாரத்தின் அடிப்படையில் 13 எடத்தை படம் புடிச்சு வச்சு கூவுறீங்க. இது ஒங்களுக்கே தமாசா இல்லீங்களா?

ஒங்களுக்கு தான் வெக்கம் கக்கம் ஒண்ணும் கிடையாது. அது போவட்டும் தமிழ்நாட்டு மக்கள எல்லாம் மடையன்கள் என்றே முடிவு கட்டிட்டீங்களா?

வரும் உள்ளாட்சித் தேர்தலில் பாமக, மிகப் பெரிய வெற்றி அடையப் போகிறது ன்கிறீங்க, எப்பிடீங்க? நீங்க சொன்னா சரீங்களா? நீங்க சொன்ன அத்தினியும் தலைகீழாதான் ஆயிருக்குங்க, நீங்க விழுந்த பாட்டுக்கு குறி சுடுற பச்சோந்திங்கிறாங்க. நாளைக்கு எந்த மரத்தில இருப்பீங்கன்னு ஒங்களுக்கே தெரியாது,

ஓட்டுபோடுற சனம்தானுங்க சொல்லணும், தீர்மானிக்கணும். நீங்களே துடுப்பு இல்லாத, பாய்மரம் இல்லாத ஒரு பட்டமரம். அத கட்டுமரம்ன்னு நீங்க நினைக்கிறது புல்லரிக்குதுங்க.

ஒங்க சுத்துமாத்து இனியும் பலிக்கும் ன்னா நம்புறீங்க. கட்சி சொன்னதுக்கு கட்டுப்பட்டு ஒங்க பாச மகனை கட்சிக்காக மத்திய மந்திரி ஆக்கினதா நீங்க சொல்லுற நாயம் சிலிர்க்க வைக்குதுங்க,

1989-ம் ஆண்டு கட்சியை ஆரம்பித்த புதிதில் தனித்து போட்டியிட்டு 17 லட்சம் வாக்குகள் பெற்றோம். என்னுறீங்க இன்னிக்கு 2011 ம் ஆண்டு 22 வருசமாச்சு இன்னிக்கு நாதியத்து ஒண்ணுமில்லாமல் வெரட்டப்பட்டும். வாய் வீரம் ஒண்ணும் ஒங்களுக்கு குறையல்லீங்க, ஒங்க தன்னம்பிக்கை தலை கிறுகிறுக்குதுங்க

பாமக தனித்து போட்டியிடும் என்றதுமே கேலியும், கிண்டலும் செய்கிறார்கள் என்று நீங்க சொல்லி அழுவுறீங்க. அதில என்ன தப்புங்க. நாட்டு நடப்பு உண்மை அப்பிடி இருக்கும்போது, உங்க ஒருத்தரின் ஆகாசப் புளுகை நம்பச்சொல்லுறீங்களா?. ஒங்க நிலைமை இன்னும் மோசமாவப் பொகுதுன்னு சனங்க கேலியும் கிண்டலும் செய்வது தப்புங்கிறீங்களா.

எந்த நோக்கத்தில கச்சி கடை தொறந்தீங்களோ ஒங்களதவிர யாருக்கும் தெரியாது. ஆனால் திராவிடக்கட்சிகள் சரியோ பிழையோ, அவிங்க சைக்கிள்ளதானே மாறி மாறி, இம்புட்டு நாளும் சவாரிபண்ணிக்கிட்டிருந்தீங்க. காங்கிரசு கட்சியயாச்சும் நீங்க விட்டு வச்சீங்களா. எந்தக்கச்சியோடு நீங்க கூட்டு வைக்கல்லை. ஒரு கட்சியயாச்சும் விட்டு வச்சீங்களாங்க. கொள்கைன்னு ஏதாச்சும் இருக்குங்களா ஒங்ககிட்ட?

இப்போ மறைந்த நடிகர் சந்திரபாபுவின் பாட்டை எடுத்துவிட்டு துள்ளிவரும் காவேரியில் குதிக்கணுமா சோறு தண்ணி ஏதுமில்லாம கெடக்கணுமா, ன்னு, அதுக்கு மேலயும் போயி தீக்குளிக்கவும் தயார் ங்கிறீங்க அதுக்கு நீங்க நாக்க புடுங்கிக்க வாணாமா மாமா?

நடக்ககூடிய காரியத்த பேசுங்க மாமா! 70 வருசமா தாத்தா ஆடின ஆட்டம் பாத்தீங்கதானே. அவிரும் இப்பெல்லாம் ஒங்களப்போலதான் வில்லங்கமான வியாக்கிஞானம் பேசி பொலம்பிக்கிட்டிருக்காரு.

ஒரு பேச்சுக்கு கேக்கிறேனுங்க நேத்திக்கு சொன்னீங்க ஒரு கட்சியுடனும் கூட்டணி இல்லைன்னீங்க, அடுத்தநாள் சொன்னீங்க எந்த கட்சியுடன் கூட்டணி அமைச்சாலும் பாசக்கார மகன் கட்சிதான், தலைமை வகிக்கும் ன்னீங்க, அப்பொறமா தெருமா கூட்டணியில் சேர்ந்திருக்கிரார் இரு கட்சிகளும் இணைஞ்சி புரட்சி பண்ணுவோம் ன்னீங்க.

இப்போ என்னடான்னா தமிழகத்தில் பாமக மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கப் போகிறது? ன்னு பெரிய பட்டாசை கொயுத்தி போடுறீங்க. பாமாக ன்னு ஒண்ணு இருக்கு அல்லாங்காட்டி இல்லாம போச்சுன்னு யாரு அழுவுறாய்ங்க.

பொழுது போக்குக்கு நீங்க பொலம்பினாலும் கொஞ்சமாகிலும் நடைமுறை சாத்தியமான யதார்த்தம் இருக்குணுமுங்க, இப்பெல்லாம் நீங்க முழு ஜோக்கர் என்பதை பப்பிளிக்கில காட்டிக்கிட்டெ வர்றீங்க.

சனத்துக்கு சலிப்பு வந்திச்சுன்னா கல்லெடுத்து அடிச்சு விரட்டவும் தயங்க மாட்டாங்க பாத்து நடவுங்க. வரட்டுங்களா?

மீண்டும் சந்திப்போம்<

No comments: