Sunday, September 25, 2011

கூத்தாடி குசும்பன்< அங் 12.

இந்த மாதம் நடுப்பகுதியில் தொடங்கிய ஐநா சபையின் 2011ம் ஆண்டுக்கான. 66 வது பொதுச்சபை கூட்டத்தொடர் நியூயோர்க்கிலும், மற்றும் மனித உரிமை ஆணைக்குழுக்களின் கூட்டத்தொடர் சுவிட்சர்லாந்து ஜெனீவாவிலும் நடைபெற்று வருகிறது.

இந்தக் கூட்டத்தொடர் அனேக நாடுகளுக்கு ஆளுமை வல்லமை பாதுகாப்பு போன்ற பதங்கள் விவாதப்பொருளாக இருக்கின்றன. ஆனால் ஸ்ரீலங்காவுக்கும், ஆளுமை வல்லமை பாதுகாப்பு துளியும் இல்லாத இந்தியவுக்கும், பெரும் சங்கடங்கள் நிறைந்த மனித உரிமை சம்பந்தமான கேள்விகளுக்கு பதிலளிக்கவேண்டிய சிக்கல் நிறைந்த பொறிபந்தலாக அமைந்திருக்கிறது.

ஸ்ரீலங்கா, மனித இனப்படுகொலை செய்த இனவெறி நாடாக இருப்பதால். பயப்பட்டு பதட்டத்தில் புலம்புவதற்கு நியாயம் இருக்கிறது. ஆனால் அதே அளவு பதட்டமும் பறந்தடிப்பும் இந்தியாவுக்கும் இருப்பதை காணமுடிகிறது.

ஜெனீவாவின் மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டம் முடிந்தகையோடு, ஜெனீவாவில் அலசப்பட்ட விடயங்களின் தாக்கத்தை நியூயோர்க் பொதுச்சபையில் பிரதிப்லிப்பதற்கான நகர்வுகளை, பலநாட்டு தலைவர்களும் மனதில்க்கொண்டே கூட்டத்தொடரில் பங்குபற்றி உரையாற்றும்போது கருத்துக்களை வெளியிடுவர்.

எழுந்தமானமாக தேனீர் இடைவேளைகளில் கன்ரீன்களில் சந்திப்பின்போதும். தங்குமிட வதிவிடங்களிலும் ஒன்றாக கூடும் சந்தற்பங்களிலும் எந்தக் கருத்தும் பரிமாற நாகரீகமான நாட்டுத்தலைவர்கள் ஒருபோதும் முயற்சிப்பதில்லை.
ஆனால் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் வதிவிடப் பிரதிநிதி ஹர்தீப் சிங்
"பூரி" அவர்கள் தேனீர் இடைவேளையில் ஐநா அலுவலகத்தின் ஓய்வு மண்டபத்தில்.(கிட்டத்தட்ட நவீன கன்ரீன் போன்ற ஒரு இடத்தில்) பத்திரிகையாளர்களை அழைத்து வில்லங்கக்மாக தனது கருத்தை கூறியிருக்கிறார்.

இது கிட்டத்தட்ட இந்தியாவில் தேர்தல் காலங்களில் டீக்கடைகளில் அரசியல் பேசி தமது தரப்பை நியயப்படுத்தி பிரச்சாரம் செய்வதற்கு ஒப்பானதாகும்.

இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு எதிராக ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையம் எழுப்பிய குற்றச்சாட்டுகள் பற்றி ஐ.நா. சபையின் பொதுக்குழுவில் விவாதிக்க சாத்தியக்கூறுகள் எதுவும் இல்லை என்றும். ஜெனீவாவில் உள்ள ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையம் இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக மிகவும் மோசமான முறையில் தாக்குதல் நடந்திருப்பதாகவும், கடுமையான மனித உரிமை மீறல் நடந்திருப்பதாகவும் மோசமான தவறான அறிக்கை வெளியிட்டிருந்தது என்றும் பூரி நொந்திருக்கிறார்.

அந்த அறிக்கை அதிபர் ராஜபக்சவை நேரடியாகவே குற்றம்சாட்டியிருந்தது. இதைத் தொடர்ந்து உலக நாடுகள் பல அதிபர் ராஜபக்சவின்மீது வீணாக அவதூறும் கடும் கண்டனமும் தெரிவித்திருக்கின்றன என்றும்.

ஐ.நா. சபையின் பொதுக்குழு என்பது வேறு, ஜெனீவாவில் இருக்கும் ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையத்தின் செயல்பாடு வேறு.

ஐ.நா. சபையின் அங்கமாக மனித உரிமை ஆணையம் இருந்தாலும், அந்த ஆணையத்தின் அறிக்கைகளும் முடிவுகளும் ஐ.நா.வின் பொதுக்குழுவில் விவாதிக்கப்பட வேண்டிய கட்டாயம் இல்லை. என்று தனது பாண்டித்தியத்தின் வீரியத்தை தமது இந்திய அரசியல்ப்பாணியில் புட்டுப் புட்டு வைத்திருக்கிறாரு பூரி,

பெருவாரியான உறுப்புரிமை நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் அறிக்கை பற்றி விவாதிக்க வேண்டுகோள் விடுத்தால் மட்டுமே பொதுக்குழுவில் அந்த விவகாரம் பற்றிய விவாதம் எடுத்துக்கொள்ளப்படும். அதற்கும்கூட முன்னதாகவே அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்றும் பகர்ந்திருந்தார்.

இலங்கைக்கு அருகாமையில் உள்ள இந்தியா போன்று வேறு எந்த நாடும் இந்தப் பிரச்னையில் நேரடியாக அக்கறை காட்டாத நிலையில்.

இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட மனித உரிமை மீறல் பற்றியோ அவர்களது மறுவாழ்வு பற்றியோ பிரச்சினை எதுவும் எழுப்ப முடியாது. அதற்கான சாத்தியமும் கிடையாது என்று இந்திய பாராளுமன்றத்தில் அரசியல் வியாதிகள் எடுத்து வைக்கும் விவாதம்போல, இந்தியாவின் தரப்பு நிலைப்பாட்டை முன் நிறுத்தி ஹர்தீப் சிங் பூரி திட்டவட்டமாகத் கருத்து தெரிவித்தார்.

இலங்கையில் 95 சதவிகிதம் தமிழர்கள் சகஜவாழ்வுக்குத் திரும்பிவிட்டதாக அதிபர் ராஜபக்ச அவர்கள் தலையில் அடித்து சத்தியம் செய்திருப்பதால், அவர் சொல்லுவதுதான் உண்மையாக இருக்கமுடியும்.

இந்தியாவும் ஸ்ரீலங்காவின் கருத்தை ஏற்றுக்கொண்டிருப்பதால் , இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் பற்றி தற்போது நடைபெற்று வரும் ஐ.நா. சபையின் பொதுக்குழு விவாதிக்காது என்று நம்புவதாக தெரிவித்து பூரிச்சுப்போனாராம் பூரி.

இவிரு ஏன்தான் பறந்தடிச்சு கொக்கரிக்கிறார்ன்னு தெரியல்ல,

#கூகு>>>
பூரி'' என்ற பெயர் நாக்குல தண்ணி ஊறும்வண்ணம் இருந்தாலும் அவரது பேச்சு மலம் போல நாத்தம் எடுத்து அருவருக்குதுங்க,

பூரி, அவங்களோட பேச்சும் கருத்தும் அப்படியே துளி மாற்றமில்லாமல், இந்திய அரசியல்வாதிகளின் அதே சாக்கடை மணமாக நியூயோர்க்கின் ஐநா மன்றத்தில் தெறித்து விழுந்திருக்கிறது..

இந்தியாவில் அரசியல்வாதிகள் முற்றுமுழுதாக, சட்டத்தின் நியாயங்களை புறந்தள்ளிவிட்டு, சட்டத்திலுள்ள ஓட்டைகளை மட்டும் பயன்படுத்தி, மக்களையும் நிர்வாக அமைப்புக்களையும் ஏமாற்றி தப்பிப்பதுபோல, ஐநா சபையையும் மாற்றி அமைக்க வேண்டும் என்று தலைப்பா கட்டிய பூரி விரும்புவது அப்பட்டமா தெளிவாகி தெரிஞ்சுதுங்க.

இந்திய அரசியல் முதலைகள், இந்தியாவை கெடுத்தது குட்டிச்சுவராக்கியது போல, பூரி அவிங்க உலகத்தை கெடுக்க முயற்சி செய்கிறாரோ, என்று அமெரிக்காக்காரன் பயந்து நடுங்கிப்போயிட்டதா சொல்லிக்கிறாய்ங்க.

இந்திய அரசியலில் கொள்கை கோட்பாடு எதுவும் இல்லாமல். முரண்பட்ட கொள்கை உள்ளவய்ங்கள் எல்லாம் சந்தற்பவத கூட்டணி அமைத்து ஆட்சி அதிகாரத்தை மட்டும் குறிவைத்து கூட்டணி "தர்மம்: ன்னு பெயரிட்டு சுருட்டிக்கொள்வதுபோல,

ஒருபோதும் ஒத்துப்போகாத முரண்பட்ட கொள்கைகள் கொண்ட வெவ்வேறு துருவங்களான இந்தியாவும், சீனா, பாக்கிஸ்தானும், ராஜபக்க்ஷே விடயத்தில் கூடி கூட்டணி அமைத்து படுகொலைக்குற்றவாளி ராஜபக்க்ஷவை காப்பாற்ற முயற்சிப்பது. உலக அரங்கில் இந்தியாவின் அசிங்கமான உண்மை முகம் ஐநா வளாகத்தில் பூரியின் கருத்து மூலம் தெளிவாக வெளிப்பட்டிருக்கிறது.

அந்த டீலிங்கை இத்தாலி முதலாளியை தன்னகத்தே கொண்ட இந்தியாவைத்தவிர எவரால் முடியும் என நினைக்கும்போது. சுனாமியில குளிச்சு கும்மாளமடிச்ச சுகமா இருக்குதுங்க.

அதேநேரம் ஐநா வளாக சுற்றுவட்டத்தில் வந்து கூடியிருந்த உலக நாடுகளின் மனநிலை எப்படி என்பதை இந்த தலப்பாக்கட்டிகள் அறிய முயற்சி செய்யல்லையேன்னு ஒருபக்கம் வெக்கமாயும் இருக்குதுங்க.

கீழ உள்ள செய்திகள பாத்தா உலக நிலவரம் என்னான்னு தலப்பா கட்டதவனுக்கும் சட்டுன்னு புரியும்.

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் நியூயார்க்கில் குவிந்துள்ளனர். இவர்களில் ராஜபக்சேவும் ஒருவர். ஆனால் திருவிழாவில் காணாமல் போன குழந்தையின் நிலையில் ராஜபக்சே மற்றும் அவரது குழுவினரின் நிலை உள்ளது.

நியூயார்க்கை விட்டு வெளியே போகக்கூடாது என்று ராஜபக்க்ஷ,வுக்குத் அமெரிக்க அதிகாரிகள் தடை போட்டு விட்டனர். இதனால் பொறியில் சிக்கிய
எலி போல மாறிப் போயுள்ளார் ராஜபக்க்ஷே.

இந்த நிலையில் மேலும் ஒரு அவமானம் ராஜபக்க்ஷேவுக்குக் கிடைத்துள்ளது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை சந்திக்க ராஜபக்க்ஷே பம்மிப் பம்மி நேரம் கேட்டிருக்கிறாரு . ஆனால் அதெல்லாம் நேரமில்லை வந்த வேலையை பாத்திட்டு யாராச்சும் புடிச்சு உள்ள போட மின்னாடி கிளம்பப்பாருங்க. என்று அமெரிக்க அதிகாரிகளிடமிருந்து உடனடியாக பதில் வந்து விட்டதாம். இதனால் பெருத்த அதிர்ச்சியாகி விட்டார் மண்மோகன் சிங்கத்தின் நம்பன் இராஜபக்க்ஷே.

அதேபோல மேற்கத்திய நாடுகளின் தலைவர்களும் கூட ராஜபக்க்ஷேவை சந்திக்க மறுத்து விட்டனர். அதெல்லாம் தனியாக சந்திக்க முடியாது என்று கூறி புறக்கணித்து விரட்டி விட்டனராம்.

இதனால் உயிர் நம்பனான இந்தியப் பிரதமர் மண்மோகன் சிங்கத்தையும், சீன, பாகிஸ்தான் கூட்டாளிகளையும், ஒன்லி பார்த்து பேசி திருப்தியடைய வேண்டிய நிலை ராஜபக்க்ஷேவுக்கு.

அதோட நில்லாம அமெரிக்கா வாழ் தமிழர்கள், இலங்கையின் இனப்படுகொலை குறித்தும், போர்க்குற்றம் குறித்தும் தொடர்ந்து அமெரிக்க அரசை வலியுறுத்தி வருகின்றனர். நியூயார்க் கோர்ட்டில் ராஜபக்சேவைக் கைது செய்யக் கோரி வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இன்னும் சில சம்பவங்களும் ஸ்ரீலங்காவை சுத்திப்புடிச்சிருக்குங்க. ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான சர்வேந்திர சில்வாவுக்கு அமெரிக்க நீதிமன்றம் ஒன்று அதிரடியாக பிடியாணை பிறப்பித்துள்ளதாக நம்பகமான செய்தி ஒண்ணு வெளிவந்துள்ளது.

சற்று முன்னர் அமெரிக்காவில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அமெரிக்க சிவில் நீதிமன்றம் ஒண்ணு சர்வேந்திர சில்வாவுக்கு பிடியாணையைப் பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உலகத் தமிழர் பேரவை(GTF) உதவியுடனே அமெரிக்க நீதிமன்றில் இந்த வழக்கு தொடரப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன.

தற்போது சர்வேந்திர சில்வா ஐ.நா வின் கட்டிடத்தில் பாதுகாப்பிற்காக பதுங்கவேண்டிய நிலை தோன்றியுள்ளதாகவும் அறியப்படுகிறது. ஐ.நா வின் பிரதிநிதி என்ற வகையில் அவர் ஐ.நா கட்டிடத்தினுள் பதுங்கியிருகும்வரை அவரை அமெரிக்க பொலிசார் கைதுசெய்ய வேண்டுமானால் நிறைய போர்மாலிட்டிஸ்க்கள் தேவை. இருப்பினும் அவர் அக்கட்டிடத்தை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை தோன்றியுள்ளது. வெளியேறினால் அபெரிக்க பொலிஸாரல் கைது செய்யப்படும் நிலை இருக்கிறது.

இதன் காரணமாக அவர் அமெரிக்காவை விட்டு நாளை அல்லது இன்றைய தினம் இரவு வெளியேற வேண்டிய சூழ் நிலை தோன்றியுள்ளது. அவர் பெரும்பாலும் ஐ.நாவின் வாகனத்தில் ஏறி அதன் பாதுகாப்புடன் அமெரிக்காவில் இருக்கும் எதாவது ஒரு விமனாநிலையமூடாக வெளியேறலாம் என எதிர்வுகூறப்படுகிறது. இதுக்கும் இந்தியா கைகுடுக்கும் என்று ராஜபக்க்ஷே தரப்பு நம்பியிருக்கிறதாவும் பேசிக்கிறாய்ங்க.

இலங்கை அரசாங்கத்தின் மேல் அடுத்த பேரிடியாக இந்த குற்றச்சாட்டு வீழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்.

அமெரிக்காவில் உள்ள வோஷிங்டன் பல்கலைக்கழக சட்ட பீடமே இந்த வழக்கைத் தொடுத்ததாகவும், நீதிமன்றில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் இலங்கை இறுதிப்போரில் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகச் சுட்டிக்காட்டியும் அப்போது 58 படைப்பிரிவுக்கு தலைமையேற்ற சர்வேந்திர சில்வா இனப்படுகொலை செய்துள்ளதாகவும் வாதாடியுள்ளார்.

(இந்த படுகொலைக்கு தமிழ்நாட்டு கண்ணாடி தாத்தா கருணா அவய்ங்க காங்கிரஸுக்கு உதவும் முகமாக உண்ணா விரத நாடகம் நடத்தி யுத்த நிறுத்தம் உண்டாகியிருக்குன்னு வஞ்சகம் செஞ்சு மக்களை பதுங்கு குழியிலிருந்து வெளியே வரவழைத்து கொண்ணு குவிக்க உடந்தையாக இருந்தார் அவிரயும் கைது செய்யணுமுன்னு பேசிக்கிறாய்ங்க.)

இதனை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி சர்வேந்திர சில்வாவைக் கைதுசெய்து நீதிமன்றில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார் எனவும் அறியப்படுகிறது.

புலம்பெயர் ஈழத் தமிழர் போராட்டங்களில் இது ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளதோடு ஒரு வரலாறு படைக்கும் விடையமாகவும் பார்க்கப்படுகிறது.

இதோட முட்டிஞ்சிச்சுன்னு தப்பா கணக்கு போடாதீங்க இன்னுமொரு போர்க்குற்றவாளியான மேஜர் ஜெனரல் .ஜெகத் டயஸ் என்பவர்மீது மீது சுவிற்சர்லாந்தில் போர்க்குற்ற வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாகவும், தமது நாட்டு எல்லைக்குள் நுழைந்தால் அவர் மீது குற்றவியல் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் சுவிற்சர்லாந்தின் சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.

சிறிலங்காவில் இடம்பெற்ற போரின் போது பொதுமக்களுக்கு எதிரான மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், மருத்துவமனைகள், மற்றும் வழிபாட்டு மையங்கள் மீதான தாக்குதல்களுக்கு உத்தரவிட்டவர் என்ற அடிப்படையில் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் மீது போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.(ஜெகத் கஸ்பர் ன்னு தப்பா நெனைச்சிடாதீங்க . அவிரு வேற இவிரு வேற, இவிரு சிங்களவருங்க)

தீங்குகளுக்கு எதிரான சுவிஸ் அமைப்பும், அச்சுறுத்தல்களுக்குள்ளான மக்களின் சமூகம் என்ற அமைப்பும் இணைந்து மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் மீதான போர்க்குற்ற வழக்கை சுவிற்சர்லாந்தின் சட்டமா அதிபரிடம் சமர்ப்பித்திருந்தன.
இதையடுத்தே மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் சுவிற்சர்லாந்துக்குள் நுழைந்தால் அவர் மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்படும் என்று சுவிற்சர்லாந்தின் சட்டமாஅதிபர் அறிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்து, வத்திக்கான், ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கான சிறிலங்காவின் பிரதி தூதுவராக பணியாற்றிய மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் கடந்த 18ம் திகதி கொழும்புக்கு ஓடித்தப்பிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக நடப்பு நீதி நாயத்தோட இப்புடி போய்க்கொண்டிருக்க இந்தியா மட்டும் முரண்பட்டு நிற்பதிலிருந்து ஈழ யுத்தத்தின் சூத்திரதாரி யார்ன்னு தெரிஞ்சிருப்பீங்க.

இது ஒரு ஆரம்பந்தாங்க. புலம்பெயர் தமிழர் இப்போ கீழ்மட்ட குத்தவாளிகள்மீது வழக்கு போட்டுட்டாய்ங்க. அவய்ங்கள புடிச்சு விசாரிச்சா ராஜபக்க்ஷே எப்புடியும் மாட்டத்தான் போறாரு. ராஜபக்க்ஷே மாட்டிட்டா அவிரு எப்புடியும் தான் தப்பிக்க இந்தியாவ காட்டிக்குடுத்துத்தான் ஆவணும். அப்பொறம் இந்தியாவின் வடக்கிலிருந்து தெற்குவரை யார் யார் கொலைக்கு ஒடந்தைங்கிறது வெளிவரத்தான் போகுதுங்க.

ஐரோப்பிய அமெரிக்க நீதிமன்றங்கள் இந்திய நீதிமன்றங்களப்போல ஆட்சியாளர்களின் சொல்லுக்கேட்டு ஆடுறதில்லீங்களே. இத்தாலி பிரதமர்
சில்விவோ பெர்லுஸ்கோனி. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் ஆகியவங்களையே பொம்ம்பளைக்கேசு வழக்கில கோட்டுல ஏத்தி விசாரணை நடத்தினவய்ங்க. கொலை குத்தச்சாட்டுக்கள வுட்டுடுவாய்ங்கன்னு கனவிலயும் நம்பமுடியாதுங்க.

ராஜபக்க்ஷே ஏதோ நெனைக்க ஏதோ நடக்குதுங்க. அதான் தமிழினத்தை அழிச்சிடுலாமுன்னு கங்கணம் கட்டினாரு. ஆனா பாருங்க செத்துப்போன உறவுகள் ஒவ்வொருத்தரும். தங்களோட உடன்பிறந்த ஒவ்வொருத்தரை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைச்சிட்டுத்தான் செத்திருக்காங்க. வெளிநாடுகள்ள இருக்கிற உறவுக்காரங்க அவைய்ங்க சும்மா கெடப்பானுங்களா.

சாவறுதிகாலத்துக்கும் தங்களோட சொந்தங்களின் அழிவை மறக்கப் போறதில்லீங்க. அதத்தான் ஜெனீவாவுல நடந்த பொங்கு தமிழ் பேரணியில
பாத்தோமே.

இப்ப என்னன்னா ஈழத்தமிழன் ஒலகம் முழுக்க பெருகி பரவியிட்டான்கள். அவய்ங்களோட குறியே இனி, இப்போதிக்கு ரத்தம்சிந்தாம, ஆறா ஓடி ஈழமண்ணில காய்ஞ்சுபோன உறவுகளின் ரத்தத்துக்கு தகுந்த நியாயம் கிடைக்கணும். அதுவரை ஒருத்தனும் சும்மா கிடக்க மாட்டாய்ங்க. அமைதியா போராடி சட்டப்படி நியாயம் கிடைக்கும் வரை கொலைக்கூட்டத்தை கருவறுக்க சீண்டிக்கிட்டுத்தான் இருப்பாய்ங்க.

ராஜபக்க்ஷே மட்டும்தான் அவிங்களோட டார்க்கெட்ன்னு இல்லீங்க எவன் எவன் எங்கள கொடுமைப்படுத்தினானோ, அம்மா தங்கச்சிய கொன்னானோ அவனை சட்டத்தில புடிச்சுக்குடுத்து தூக்கில மாட்ட வச்சு நீதி வாங்கணும்.

ஈழமண் எங்க போயிடப்போவுது முப்பதுவருஷம் உயிரை குடுத்து போராடியிட்டு விட்டுடுவாய்ங்களா.

மீண்டும் சந்திப்போம்.
வரட்டுங்களா,

No comments: