Wednesday, October 5, 2011

உலகின் மிகப்பழைமையான கார் விற்பனைக்கு!

உலகின் மிகவும் பழமைவாய்ந்ததும் தற்போதும் பாவனையிலுள்ளதுமான கார் ஒன்று ஏல
விற்பனைக்காக வந்துள்ளது. La Marquise என பெயரிடப்பட்டுள்ள இந்த கார் 1 .6 மில்லியன்
ஸ்டேர்லிங் பவுண்களுக்கு விற்கப்படலாமென எதிர்பார்கப்படுகின்றது.

127 வருடங்கள் பழமைவாய்ந்த நீராவியின் மூலம் இயங்கும் இந்த கார் 1881 ஆம் ஆண்டு பிரான்சில்
தயாரிக்கப்பட்டது.

ஒன்பது அடி நீளமும் 2 ,100 பவுண்ட்ஸ் எடையுமுடைய இந்த கார் மணிக்கு
38 மைல் வேகத்தில் செல்லக்கூடியது. வாகனத்தை செலுத்துவதற்கு தேவையான நீராவியை 45
நிமிடங்களில் இது உற்பத்திசெய்துவிடும்.

மேலும் இதன் மெல்லிய உலோக சக்கரங்கள் திடமான இறப்பர் கொண்டு சுற்றப்பட்டுள்ளன. 1914 ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்தத்தின்போது இந்த கார்
சேதமடைந்தாலும், 1987 ஆம் ஆண்டு பிரித்தானியாவைச்சேர்ந்த Tim Moore என்பவரினால் அது
மீண்டும் உபயோகிக்கத்தக்கவகையில் திருத்தியமைக்கப்பட்டது.

நன்றி பதிவு,

No comments: