Sunday, December 4, 2011

மேற்குலக இராஜதந்திரிகள் அதிர்ச்சி

அரசு  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடையிலான பேச்சில் விரிசல்நிலை ஏற்பட்டுள்ளதால், கொழும்பிலுள்ள மேற்குலக நாடுகளின் தூதுவர்கள், இராஜதந்திரிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
 
தமிழர் பிரச்சினை தொடர்பாக இலங்கை அரசு காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என மேற்குலக நாடுகள் வலியுறுத்திவரும் நிலையில், அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பான பேச்சுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதானது மேற்கத்தேய நாடுகளைப் பெரும் கவலையடையச் செய்துள்ளது என்று பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த இராஜதந்திரி ஒருவர் தெரிவித்தார்.
 

இதேவேளை, அரசியல் தீர்வு குறித்தான பேச்சுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளமை குறித்து தமது நாட்டுத் தலைமைப்பீடத்துக்கு இங்குள்ள இராஜதந்திரிகள் விளக்கமளிக்கும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர் என அறியமுடிகின்றது.இந்த வருட இறுதிக்குள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்படவேண்டும் என சர்வதேசம் வலியுறுத்திவரும் நிலையில், பேச்சுகளில் தடை ஏற்பட்டுள்ளதானது சர்வதேசத்தின் கவனத்தை இலங்கை நோக்கி நகரவைத்துள்ளது என அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 
 
நன்றி, உதயன் இணையம்.

No comments: