Saturday, December 24, 2011

அதிகாரங்கள் எதையும் பகிர்ந்தளிக்க முடியாது. சிங்கள அரசு.




 மைதி தீவாக இருந்த இலங்கை அமைதியிழந்து யுத்தபூமியாக மாறியதற்கான அடிப்படை காரணம் வந்தேறு குடிகளான சிங்களஏகாதிபத்திய அரசியல்வாதிகளின் அடக்குமுறை என்பதுதான் கசப்பான வரலாறு.

நாட்டின் சொந்த பூர்வீக தேசிய இனமான தமிழர்களுக்கு சிறுபான்மை என ஒரு திணிக்கப்பட்ட அடக்குமுறைச்சட்டமும். வந்தேறிகளான சிங்களவர்கள் பெருகிவிட்டதால், பெரும்பான்மை என்ற ஏகபோக சட்டமும் காலாகாலமாக கடைப்பிடிக்க முற்பட்டதால் முறுகல் நிலை உருவானது.

தொடர்ந்து வந்த பேச்சுவார்த்தைகள் பேரினவாத சிங்கள இனவாதிகளால் மதிக்கப்படாததால் தமிழர்கள் ஆயுதம் தூக்கவேண்டிய துரதிஷ்டமும் ஈடேறியது.

2009 மே ஒரு பெரிய இனப்படுகொலையுடன் தமிழர்கள் மீண்டும் அடக்கப்பட்டனர். சுமூகமான ஒரு அமைதி அந்தநாட்டில் விளையவேண்டுமென்றால் அங்கு நிலவிவரும் அடிமைத்தளை களையப்படவேண்டும். மக்களின் உரிமைகள் அனைத்தும் மதிக்கப்பட்டு சமத்துவம் நிலைநிறுத்தப்படவேண்டும்.

சிங்கள தலைமைகள் நெருக்கடியான காலகட்டங்களில் சந்தற்பவாதமாக ஒரு பேச்சும், நெருக்கடிகள் சற்று விலகியதும் பழைய வக்கிரத்தை விட்டு விலகாத ஏமாற்றும் கதையும் தொடர்ந்து வருகிறது.

தமிழர்கள் தாம் சிங்களவர்களோடு இணைந்து வாழமுடியாது என்பதை பல்லாண்டுகால பட்டுணர்வின் அடிப்படையில் நியாயபூர்வமாக தரவுகளுடன் பதிவுசெய்துள்ளனர்.

ஆனால் சிங்கள அரசுத்தலைவர் மஹிந்த ராஜபக்க்ஷ இனப்படுகொலை குற்றத்திலிருந்து தப்பும் நோக்குடன். தாம் ஒரு நியாயமான தீர்வுத்திட்ட பேச்சுவார்த்தை நிலைக்கு வந்துவிட்டதாக உலகத்திற்கு வாக்குமூலம் கொடுத்து  ஏமாற்றியிருக்கிறது.

சிங்கள அரசியல்வதிகளின் சந்தற்பவாத வித்தையை நம்பிய சர்வதேசமும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வுகாணும்படி ஒத்துழைக்க முற்படும் தருணத்தில் சிங்களம் மீண்டும் தனது சுயரூபத்தை காட்டியிருக்கிறது.

"தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு பொலிஸ், காணி அதிகாரங்களைத் பிரித்து தரமுடியாது அந்த அதிகாரங்களை வலியுறுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவதில் பயன் ஏதும் இல்லை என்றும் சிங்கள அரசு தெரிவித்துள்ளது". 

தமிழர் சிங்களவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தையின் முக்கிய அம்ஷமே ஆட்சி அதிகாரத்துலுள்ள சிக்கல் தீரவல்ல கல்வி, காணி, சிவில் பாதுகாப்பு போன்றவற்றை பகிர்ந்தளிப்பதுதான் முடிவாக அமையும்.

வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் சிங்கள ஆட்சியாளர்களின் ஆட்சியின்போது தொடர்ச்சியாக கல்வி, காணிப்பங்கீடு, சிவில்ப்பாதுகாப்பு. ஆகியவற்றில் மிகவும் மோசமாக பாதிக்கப்படுள்ளனர். எனவே ஆகக்குறைந்தது அந்த மூன்று அதிகாரங்களவது தமிழர் கைகளில் இல்லையெனில் தமிழர்கள் மனிதர்களாக இலங்கையில் வாழமுடியும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே அந்த அதிகாரங்கள் வழங்கப்படாத ஒரு தீர்வு தேவையே இல்லை என்று கூட்டமைப்பு கூறியிருக்கிறது.

இலங்கையில் தமிழர்களுக்கான ஆட்சி அதிகாரம் பகிர்ந்தளிக்காவிட்டால். இன்று இராணுவ அடக்குமுறையினால் நிலமையை மூடிமறைத்தாலும் அடுத்துவரும் சந்ததி வேறொரு உபாயத்தை பயன்படுத்தி மீண்டுமொரு விடுதலைக்கான போராட்ட வித்தையை தோற்றுவிக்கும் என்பது எதிர்காலத்தில் தெரியவரும்.

No comments: