Wednesday, March 20, 2013

மண்ணெண்ணெயும் தண்ணீரும் எப்படி ஒன்று சேரமுடியாதோ அதேபோல ஈழத்தமிழர்களின் நல்வாழ்வும் கருணாநிதியின் அரசியலும் ஒருபோதும் ஒன்று சேரமுடியாதவை.‏

ஈழத்தமிழர்களை இனப்படுகொலைக்கு இட்டுச்சென்ற ராஜபக்‌ஷவின் அதி உயர் நட்பு சக்தியான காங்கிரஸ் கட்சியுடன்,  ஒரு தசாப்தகாலமாக கூட்டமைப்பிலிருந்த கருணாநிதியின், திமுக,  ஈழ மக்களின் நல்வாழ்வுக்காக  அந்தக் கூட்டணியிலிருந்து  விலகியிருப்பதாக,   ஈழ தமிழினத்துக்கு ஆற்றுண்ணா துரோகம் செய்த அக்கட்சியின் மானங்கெட்ட தலைவர் கருணாநிதி,  வெட்கம் கெட்டு இன்று அவசரமாக புது அறிவித்தல் ஒன்றை விடுத்திருக்கிறார்.  இந்த அறிவிப்பு தமிழ் இனத்திற்கு மகிழ்ச்சியையோ,  மறந்தேனும்  நற்பலனையோ ஒருபோதும் ஈட்டிவிடப்போவதில்லை. மாறாக பெருத்த சந்தேகங்களையும் பதற்றத்தையும் தமிழகத்திலும்,   புலம்பெயர்,  உலக தமிழர்கள் மத்தியிலும் தோற்றுவித்திருக்கிறது.

இன்று தமிழகம் எங்கும் தன்னிச்சையாக தீயாக பரவி நிற்கும் ஒப்பற்ற மாணவர்களின் போராட்டத்தை திசை திருப்பி,   அரசியலாக்கி நீர்த்துப்போக செய்வதற்காக காங்கிரஸின்,   திட்டமிடலுடன்  தன்னையும் தற்காத்துக்கொள்ளுவதற்காக,  கருணாநிதியால் இப்படி ஒரு அறிவித்தல் விடப்பட்டிருக்குமோ என்று பலராலும் அஞ்சப்படுகிறது.

தமிழக மாணவர்களின் ஈழ விடுதலைக்கான போராட்டம் பரந்து விரிந்து சர்வதேச மட்டத்திற்கு பரவி வருவதற்கான அறிகுறிகள் காணப்படும் இந்தச்சந்தற்பத்தில் ஒரு புலன்மாற்று   உத்தியாகவும்,  போராட்டத்தை கைப்பற்றி வேறு திசை நோக்கி திருப்பி சந்தற்பவாத அரசியலுக்குள் கலந்து காங்கிரஸ் அரசை அவலநிலையிலிருந்து மீட்டு தானும் இலாபம் பெறும் நோக்கில் கருணாநிதியின் அறிவித்தல் புரியப்படுகிறது.

இதை இனமானம் கொண்ட தமிழக போராட்ட மாணவர்களும்,   அவர்களுக்கு ஆதரவாக செயற்படும் செயற்பாட்டாளர்களும்,   புரிந்துகொண்டு தீய சக்திகளிடம் பலியாகாமல் தமது பாதையை தளம்பவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டிய கால கட்டாயத்தில் இருக்கின்றனர்.

ஈழமக்களை காட்டிக்கொடுத்து வஞ்சித்து இனப்படுகொலைவரை இட்டுச்சென்றதால் கருணாநிதி இன்று மிகப்பெருத்த வீழ்ச்சியில் சிக்கியிருப்பது கருணாநிதி, திமுக மட்டுமல்லாது உலகறிந்த உண்மை.

2008,  ம் ஆண்டிலிருந்து 2009,  மே வரை தினமும் ஆயிரம்,   இரண்டாயிரம், நாற்பதாயிரம் என்று ஈழமக்கள் கொல்லப்பட்டபோது விடுகதைகளும்,  நய்யாண்டிகளும் செய்து,  அன்று தெருவுக்கு வந்து இனங்காக்க போராடிய அனைத்து அமைப்புக்களையும் காவல்த்துறையை ஏவி,   ஈன இரக்கமின்றி அடித்து நொருக்கி சிறைப்படுத்தியவர் கருணாநிதி.  அடுத்தடுத்து தீக்குளித்து  உயிர்நீத்த உணர்வாளர்களின் ஈகையை மிகவும் கீழ்த்தரமாக கொச்சைப்படுத்தியவர் கருணாநிதி.  தேசியத்தலைவர்  வே பிரபாகரன் அவர்களின்  தாயார் மருத்துவம் செய்வதற்கு தமிழ்நாட்டில் இடங்கொடுக்கக்கூடாது என்று,  மிருகத்திலும் கேடான உணர்வை வெளிப்படுத்தி பார்வதி அன்னையை விமானத்திலிருந்து கீழிறங்காமல் தடைபோட்டு  திருப்பி விரட்டியவர் கருணாநிதி.  போரில் கொல்லப்பட்டவர்களின் படங்கள் வெளிவந்தபோது அவை பழையபடங்கள் போல தெரிகிறது என்று நய்யாண்டியாக உதாசினப்படுத்தியவர் கருணாநிதி.  ஈழம் என்ற சொல் உச்சரித்தால் பாதுகாப்புச்சட்டம் பாயும் என்று கடுமையாக மிரட்டியவர் கருணாநிதி. ஈழமக்களுக்காக குரல்கொடுத்த சீமான். நெடுமாறன், வைகோ போன்றவர்களை  இந்திய மத்திய அரசின் ஆணைக்கேற்ப பலமுறை சிறையில் அடைத்தவர் இதே கருணாநிதி.

அப்படிப்பட்ட கருணாநிதி அமெரிக்கா கொண்டுவரும் இரண்டாவது தீர்மானத்தில் "இரண்டு வரிகள் மாற்றஞ்செய்ய கேட்டு"" அதற்கான பதில் கிடைப்பதற்கு முன்னே தியாக திருவிளக்கின் கூட்டமைப்பிலிருந்து விலகுகிறோம் என்றால் ஒன்று அவருக்கு சித்த சுவாதீனம் உண்டாகியிருக்கவேண்டும்,  அல்லது ஏதோ ஒரு மிகப்பெரிய சக்தியால் மிரட்டப்பட்டிருக்கவேண்டும்.  அல்லது அவர் இதற்கு முன் ஆடிய நாடகங்களிலும்பாற்க பெருத்த திட்டத்துடன் தமிழர்களை அழிக்க ஒரு பெரிய சதியில் இறங்கியிருக்கிறார் என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.

மண்ணெண்ணெயும் தண்ணீரும் எப்படி ஒன்று சேரமுடியாதோ அதேபோல ஈழத்தமிழர்களின் நல்வாழ்வும் கருணாநிதியின் அரசியலும் ஒருபோதும் ஒன்று சேரமுடியாதவை.

அமெரிக்காவின் தீர்மானம் சபையில் வாக்கெடுப்புக்கு வருவதற்கு இன்னும் இரண்டு,  மூன்று நாட்கள் மட்டுமே கால அவகாசம் இருக்கின்றது. இந்த இடைவெளி முடிந்துவிட்டால் கருணாநிதிக்கு அரசியல் செய்வதற்கு ஆதாரம் இல்லாமல் போய்விடும்.   அவரால் ஆரம்பிக்கப்பட்ட டெஸோ,   நாடக கொட்டகையும் அவருக்கு சொல்லிக்கொள்ளுமளவுக்கு உதவிவிட்டிருக்கவில்லை,  அத்துடன் தமிழகம் கடந்து மாணவர்களின் இன உணர்வுக்கோபம் தன்மீது திரும்பி விரும்பத்தகாத சம்பவங்கள் மேலோங்கி அரசியல் செய்யமுடியாத சூழ்நிலை தமிழகத்தில் உருவாகிவிடலாம் என்பதை அவர் மனதில்க்கொண்டு,   சோனியாவின் ஒப்புதலுடன் வழமைபோல ஒரு அரசியல் குத்துக்கரணத்தை அடித்து ஆழம் பார்த்திருக்கிறார் என்பதே உண்மையாக இருக்கும்

இன்று மாலையோ,   நாளையோ கருணாநிதியின் சுயநல தந்திர,  குத்துக்கரண,  அறிவித்தல் மறு பரிசீலனை செய்வதற்கு சந்தற்பம் இருப்பதாகவும் அரசியலரங்கில் சொல்லப்படுகிறது.  சூழ்நிலை பொறுத்து அது நடக்கலாம் நடக்காமலும் போகலாம்.

கடந்த 2004, ஆண்டிலிருந்து ஒன்பது வருடங்களாக மத்திய காங்கிரஸ் அரசை தனது உயிரினும் மேலாக மதித்து,   தன்னிடம் இருக்கும் தனது ஒற்றைக்கணைப்போல கட்டி காவல்காத்து பாதுகாத்து வந்தவர் கருணாநிதி,.   2009ல் ஈழத்தமிழர்கள் இலட்சத்து முப்பதினாயிரம்பேர் இனப்படுகொலை செய்யப்படுவதற்கு முழுக்காரணியாக இருந்தவர் கருணாநிதி.  ஈழ இனப்படுகொலை நடந்து முடிந்த ஒருமாதகாலத்தில் தனது மகளையும்,  தனது கட்சியில் சிலரையும் காங்கிரஸ் காரர்களையும் ஒன்றாக திரட்டி இலங்கைக்கு அனுப்பி அங்கு மக்கள் ஆனந்தமாக வாழ்கின்றார்கள் என சர்வதேசத்திற்கு பரப்புரை செய்து மத்திய காங்கிரஸ் அரசை புத்துணர்வாக்கி மந்திரிப்பதவிகளை பெற்று மகிழ்ந்தவர் கருணாநிதி.

இலங்கையில் போர் அதி உச்சத்தில் நடந்துகொண்டிருந்த 2009, ம் ஆண்டு ஏப்ரலில் இந்திய நாடாளுமன்ற தேர்தல் நடந்தது.  அப்போது மானில மத்திய ஆட்சிகள் தனது கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் ஈழப்பிரச்சினை பாராளுமன்றத்தேர்தலில் எந்தத்தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று துணிச்சலாக கூறியவர்.

மத்திய அரசின் ஆயுட்காலம் அண்ணளவாக ஒருவருடம் மட்டுமே இருக்கும் இன்றைக்கு,  கூட்டமைப்பில் இருந்து விலகல் என்று முடிவு எடுத்திருப்பதற்கு என்ன தேவை இருக்கிறது.  கருணாநிதி எதைச்செய்தாலும் ஆதாயமில்லாமல் அவர் செய்யப்போவதில்லை. ஒன்று அவரது வாரிசுகளுக்கு மந்திரிப்பதவி கொடுக்கப்படவில்லையென்றால் அவர் கூட்டமைப்பிலிருந்து விலகப்போவதாக மிரட்டுவதுண்டு.  ஸ்பெக்ரம் 2ஜி,  விவகாரத்தின்போதும் மத்திய அரசை நெருக்கடி கொடுத்து கருணாநிதி பணிய வைத்த சாணக்கியம் நாம் அனைவரும் கண்ணார கண்டிருக்கிறோம்.

ஈழ விவகாரத்திற்காக மனச்சாட்சிக்கு கட்டுப்பட்டு அவர் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுபவராக இருந்திருந்தால். ஈழப்படுகொலைகளில் அவருக்கு பங்கு இல்லையென்று ஒரு உண்மையிருந்திருந்தால் 2008, 2009,  களில் அவர் சோனியாவின் கட்சியிலிருந்து வெளியேறி இருப்பார்.  மனிதனாக இருந்தால் அதைத்தான் எவனும் செய்திருப்பான்,  ஆகக்குறைந்தது மத்திய அரசை கண்டித்து மானசீகமாக ஒரு கண்டன அறிக்கையாவது கருணாநிதி வெளியிட்டிருப்பார்.  எதுவும் நடக்கவில்லை. மத்திய அரசின் நிலைப்பாடுதான் தனது நிலைப்பாடு என்று டில்லிக்கு கேட்கும்படியாக முழங்கியவர்.    ராஜினாமா என்று நாடகம் ஆடினார்,  1/2 நாள் சாகும்வரை உண்ணாவிரதம் என்றார். அனைத்தும் ஈழத்தமிழினத்துக்கு சவக்குழியாக மாற்றம் பெற்றது.

இன்றைக்கு இரண்டு சொற்பதங்கள் அமெரிக்க பிரேரணையில் இணைக்கப்படவேண்டும் என்பதற்காக சோனியா குறூப்பிலிருந்து வெளியேறியதாக அறிவிக்கிறார்.  ஈழ விவகாரத்தை அதிகம் அறியாத காட்டுவாசிகள், காக்கை குருவிகள்கூட இதை நம்பப்போவதில்லை.

கருணாநிதி காங்கிரஸ் கூட்டமைப்பிலிருந்து விலகியதாக அறிக்கை விட்ட காலகட்டத்தை கணக்கிட்டுப்பார்க்கவேண்டும்.  அத்துடன் தமிழகத்தில் மாணவர்களின் தன்னாரவார எழுச்சி செறிந்த போராட்ட சூழ்நிலையையும் அறிவுபூர்வக பார்க்கவேண்டும்.

கருணாநிதி காங்கிரஸிலிருந்து விலகிப்போவதற்கான தேவை இன்று எவருக்கும் எந்த முன்னேற்றத்தையும் ஈடேற்றிவிடப்போவதில்லை.  ஈழத்தமிழர்களுக்கான மாணவ போராட்ட எழுச்சி மந்தநிலையை அடையவே கருணாநிதியின் அரசியல் தந்திரம் வழிவகுக்கும். காரணம் ஈழத்தமிழர்களுக்கு எல்லாம் முடிந்துவிட்ட காலகட்டம் இது.  கருணாநிதியின் தலையீட்டை தமிழகம் விரும்புகிறதோ இல்லையோ ஈழத்தமிழர்களில் ஒரு குழந்தைகூட விரும்பவில்லை.  மணவர்களின் போராட்டத்தை புதுவடிவமாக சர்வதேச உலகம் நோக்க தலைப்பட்டிருக்கும் தருணம் இது.  அந்த உயிர்ப்பான போராட்டத்துள் அதரப்பழசான கருணாநிதியின் சாக்கடை சங்கமிக்குமானால் நிலமை எப்படியிருக்கும் என்பதை வாயால் சொல்ல முடியாது.

வரவிருக்கும் தேர்தலுக்கான பரப்புரையாகவே கருணாநிதியின் குப்பை கூட்டமைப்பு முறிவு சமூக மட்டத்தில் கருத்து பகிர்கிறது. கருணாநிதிக்கு கொடுங்கோலன் என்ற பட்டமும், தமிழீனத்தலைவர்,  இனத்துரோகி  என்ற பட்டமும் இந்த சந்தற்பத்தில் இன்னும் முன்னெழுந்து நிற்கிறது,  வேறு எந்த விவரணத்தையும் கருணாநிதியின் கபட தந்தர நாடகங்கள் ஒருபோதும் தமிழர்களுக்கு ஈட்டித்தரப்போவதில்லை.

ஒருவேளை கருணாநிதி தீ மூட்டி தற்கொலை செய்துகொண்டால், அல்லது கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்குப்போட்டு செத்து காட்டுவாராக இருந்தால் ஒரு சிலர் கருணாநிதியின் கபடத்தை கபடம் இல்லை என்று நம்பக்கூடும்.

அடுத்த ஆண்டு இந்திய பாராளுமன்றத்துக்கான தேர்தல் வரவிருக்கிறது.  தெருமாவின் விசி,  கட்சியைத்தவிர வேறு எந்தக்கட்சியும் ஐயனின் கட்சியை எட்ட நின்று பார்த்தாவது நட்பு பாராட்டுவதாகவும் தெரியவில்லை. காங்கிரஸுடன் இணைந்திருந்தால் தேர்தலில் கட்டுப்பணமும் கைவிட்டுப்போகும் என்பதோடு கட்சியும் காணாமல்ப்போய்விடும் என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருந்துவருகிறது.   கருணாநிதியை ஒரு பிராணியின் தகுதியில் தமிழகம் பார்க்கத்தொடங்கிவிட்டிருக்கிறது,  மக்களின்  மனநிலைகள் அவற்றைத்தான் காட்டி நிற்கின்றன.  இதிலிருந்து தப்பிக்க  அவருக்கு வேறு வழியுமில்லை.

நயவஞ்சகமாக கடைசி அஸ்திரத்தையும் கருணாநிதி  ஏவிவிட்டிருக்கிறார்.  இருந்தும் காலம் எல்லாவற்றையும் சரியாகவே தீர்மானிக்கிறது.

என்னதான் முயற்சி செய்தாலும் "தோல்வியடைந்த அரசியல்வாதி" என்ற வரையறைக்குள் கருணாநிதி வந்து சேர்ந்துவிட்டார்.. அதை சரிக்கட்டும் காலவரைக்குள் அவரது வயதும் இல்லை.  முதுமைக்கான அனுபவம் அவரிடம் இருந்தாலும் அனைத்தும் தந்திரமாகவே மக்களை இம்சைப்படுத்தி துன்பப்படுத்துகின்றன.

தீதும் நன்றும் பிறர்தரவாரா என்பதை மட்டும் அவருக்கு மீண்டும் வேதனையுடன் ஞாபகப்படுத்தவேண்டியிருக்கிறது.

ஈழதேசம் இணையத்திற்காக.
கனகதரன்.

No comments: