Tuesday, November 15, 2011

இந்தியாவின் சதியை இனியாவது புரிந்துகொள்வோம்.

இலங்கையின் சமாதான முயற்சிகளில் நோர்வேயின் பங்களிப்பு தோல்வியடைந்தமைக்கான காரணங்களைக் குறிப்பிட்டு நோர்வே அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

நோர்வே வெளிநாட்டு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மதிப்பீட்டை நோர்வேயிலிருந்து இயங்கும் நிறுவனம் ஒன்றும், லண்டனில் செயற்படும் அமைப்பு ஒன்றும் இணைந்து மேற்கொண்டுள்ளன.

கத்தரிக்காய் முற்றிவிட்டால் அதிகநாள் மரத்தில் தங்காது, சந்தைக்கு வந்தாகவேண்டும் என்பது விதி.

நோர்வே நாட்டின் (Pஅந்ன்ச் ஒf Pஎஅcஎ) சமாதானத்திற்கான அடமானங்கள், என பெயரிடப்பட்ட அறிக்கை மூலம் ஏற்கெனவே கிழிந்து தொங்கிக்கொண்டிருந்த இந்தியாவின் முகத்திரை அப்பட்டமாக கிழித்தெறியப்பட்டு உண்மை முகம் உலக அரங்கில் அம்பலமாகியிருக்கிறது.

சுதந்திர ஈழத்துக்காக போராடிய விடுதலைப் புலிகளை எப்படியாவது ஒழித்துவிட வேண்டும் என்றே இந்தியா விரும்பியது. சமாதான முயற்சிகள் சீர்குலைய, இந்தியாதான் பிரதான காரணம் என நோர்வே குற்றம்சாட்டியிருக்கிறது.

சிதைக்கப்பட்டு சிறுமைப்படுத்தப்பட்ட ஈழத்தமிழ்ச்சமூகம் இது சம்பந்தமாக இந்தியாவை ஒன்றும் செய்யமுடியாவிட்டாலும், நாகரீகம் தெரிந்த ஐரோப்பிய நாடான நோர்வேயின் அந்த அறிக்கை மூலம் மீண்டும் ஒருமுறை இந்தியாவின் துரோகச் சதி அம்பலமாகி சரித்திரத்தில் இடம்பெற்றிருக்கிறது. நோர்வே மட்டுமல்லாது அறிக்கையின் வெளியீட்டின்போது ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகளும், அமெரிக்க பிரதிநிதிகளும் ஒன்றுகூடி அறிக்கை வெளியிட்டமை கவனிக்கப்படவேண்டியவை.

"எதிரியை விடவும் துரோகி மோசமானவன்" இது தமிழினத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள், கூறிய தீர்க்கதரிசனமான சத்திய வாக்கு.

தேசியத்தலைவர் அவர்கள் கூறிய தீர்க்கதரிசனமான வார்த்தைகளை கருத்தில் எடுக்கமறந்து இந்தியாவை நம்பியவர்கள், இன்று அதுபற்றிய நிதர்சனத்தை சிந்திப்பதற்கு நோர்வேயின் Pஅந்ன்ச் ஒf Pஎஅcஎ அறிக்கை சாட்சியாகி நிற்கிறது. தமிழனினத்தின் போராட்டம் இந்தியாவின் வஞ்சகத்தால் அழிக்கப்பட்டதை மத்தியஸ்தம் வகித்த நோர்வே தனது சாட்சியமாக சர்வதேசத்திற்கும், பார்வையாளரான இந்திய மக்களுக்கும் சொல்லியிருக்கிறது.

இந்திய துரோகத்தால் உரிமைப்போரில் தோல்வியடைந்த ஈழத்தமிழினம் நம்பிக்கை ஒன்றுதவிர, மற்ற அனைத்து ஆதாரத்தையும் இழந்து நிற்கிறது. மேற்குலகத்தை மையமாகக்கொண்ட அனைத்து நியாயவாத அமைப்புகளும் அந்த உண்மையை வெவ்வேறு காலகட்டங்களில் ஆவணங்களாக அறிக்கைப்படுத்தியிருக்கின்றன.

இந்தியாவின் சதித்திட்டம் நிறைவுக்கு வந்த இந்த இரண்டு வருடங்களில் நல் மாற்றம் எதுவும் அந்த மண்ணில் அரும்பவில்லை. மாறாக வரலாற்றில் ஈழத்தமிழினம் கண்டறியாத சமூக கலாச்சாரச் சிதைவுகளையும், கட்டாய விபச்சார விடுதிகளின் பிரசன்மங்களையும். கேட்பாரற்ற பதின்ம வயதுப்பெண்கள் காடையர்களால் கட்டாய கர்ப்பம் தரித்த கொடுசெயலையும் தவிர்க்க முடியாமல் சந்தித்திருக்கிறது, இக்கொடுமைகள் தவிர மற்றவைகள் எல்லாம் ஏற்கெனவே அறியப்பட்டுவிட்ட விடயங்கள்.

தமிழினத்தின் சிறுமைக்கு மூல கரும்புள்ளியாக, தேவையில்லாத தலையீட்டை காட்டுமிராண்டிகளின் கூட்டு அரசான இந்தியா செய்து முடித்துவிட்டு இரட்டை வேசமிட்டு நாடகம் நடத்திவந்தது, ஆனால் காலம் இதற்கான மாற்றீட்டை எதோ ஒரு கொடுப்பனவு மூலம் நிவர்த்தி செய்யும் என்பது பின்னர் அறியப்படும்போது. இந்தியா சிந்திக்கக்கூடும்.

தென்கிழக்கு ஆசிய ஆளுமைக்குட்பட்ட பிராந்தியத்தின் அரசியல் அசைவுகளில் இந்தியா தலையிடுவதை சற்று விட்டுக்கொடுத்து தலை சாய்க்கவேண்டிய சங்கடம் ஐநா அமைப்புக்குட்பட்ட சர்வதேசத்திற்கு இருக்கிறது, ஏனைய வளர்ந்த நாடுகளின் கொள்கைகளும் சூழல்களும் அதை அனுமதிக்கின்றன. இந்தவகையில் இலங்கை போராட்டத்தில் இந்தியாவின் தலையீட்டை உலகம் புறந்தள்ளவில்லை.

இந்தியாவிடம் அணுவாயுதம் இருக்கிறது. பாகிஸ்தானிடமும் அணுவாயுதம் உண்டு. (மோடன் மலத்தில் மிதித்துவிட்டால் முழு இடத்தையும் அசிங்கப்படுத்தி விடுவான்) அவற்றை துஷ்பிரையோகம் செய்துவிடாமல் கண்காணிப்பதற்கு இந்நாடுகளை உலக வல்லரசுகள் தம்முடன் இணைத்து வைத்திருக்கின்றன.

ஒன்றாக இருந்து பிரிந்த இந்தியா, பாகிஸ்தான், ஆட்சியாளர்கள் குணாம்ஷத்தில் துளியளவு வித்தியாசம் இல்லாத ஒரே தன்மை கொண்டவர்கள். பொருளாதார வளர்ச்சி இல்லாவிட்டாலும் அணுவாயுதம் இருக்கின்றது என்னும் மாயை இந்தியாவை வல்லரசு என்னும் நகைச்சுவையான கனவை நோக்கி நகர்த்தியிருக்கிறது.

ஆரோக்கியமான இராஜதந்திரம், நிர்வாகத்திறமை, மற்றும் பொருளாதார வளர்ச்சித்திட்டங்கள் எவற்றையும் ஈடுபாட்டுடன் முன்னிலைப்படுத்த ஊக்கம் காட்டாமல், ஊரை அடித்து உலையில்போடும் ஊழல், பொதுச்சொத்துக்களை சூறையாடுதல் போன்றவற்றை வைத்துக்கொண்டு. வல்லரசாகப்போவதாக தனது நாட்டு மக்களை இந்தியா ஏமாற்றுகிறது. இத்திட்டத்தை இல்லாமல்ச்செய்ய பாகிஸ்தான் கண்கொத்திப் பாம்பாக காத்திருக்கிறது. இந்த இரு நாடுகளுக்கும் வேறு வினையும் தேவையில்லை.

இந்திய அரச மேல் மட்டத்தில் காலாகாலமாக இருப்பவர்கள் வர்க்க உணர்வும் காட்டுமிராண்டித்தனமான மனநிலை மேலோங்கி நிற்பதையே கவுரவமாக நினைக்கின்றனர், மந்திரிகள் மற்றும் உயர் மட்டத்துக்கு ஆலோசனை வழங்கும் அரசின் கொள்கை வகுப்பாளர்கள் தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்படி தவறான தகவல்களை மேல்மட்டத்திற்கு வழங்கக்கூடிய தொய்வான இடைவெளியும் நிறைய பாவனையிலிருந்து வருகிறது. இந்திய வெளியுறவு செயலர் நாராயணனின் விடுதலைப்புலிகள் பற்றிய அணுகுமுறையை விக்கிலீக்ஸ் இணையத்தளம் முன்பு தெரியப்படுத்தியிருந்ததை அறிந்திருக்கலாம்.

நாடுகளுக்கிடையே சிறிய சிக்கல் வரும்போது விரிவாக சிந்திக்கத்தெரியாத இவர்கள் அணுவாயுதத்தையும் அவசரப்பட்டு பாவிக்கக்கூடிய ஆபத்தையும் புரியக்கூடும், என்பதே வளர்ந்த நாடுகளின் அச்சம். சாதாரணமாக பேசித்தீர்க்கக்கூடிய விடயத்தை இவர்கள் சண்டையாக்கி விடக்கூடியவர்கள் என்பதை உலகம் அறிந்திருக்கிறது. இதில் அமெரிக்கா மிகவும் கவனமாக இருப்பதை காணலாம்.

உதாரணத்துக்கு உரிமைக்காக போராடிய விடுதலைப்புலிகளுடன் போரிட்ட ஸ்ரீலங்கா இராணுவத்திற்கு தடைசெய்யப்பட்ட கொடூர ஆயுதங்களையும் இராசயன குண்டுகளையும் இந்தியாவும் பாகிஸ்தானும், மிக குறுகிய நோக்கத்துடன் எந்த குற்ற உணர்வும் இல்லாமல் போட்டிபோட்டு வழங்கியதை பத்திரிகைகள் தொண்டு நிறுவனங்கள் உறுதிப்படுத்தின, இறந்த மக்களின் உடல் எச்சங்களும் அவற்றை அப்பட்டமாக வெளிப்படுத்தின.

இவற்றை புரிந்துகொண்ட மேற்குலகம் இப்பேற்பட்ட குறுமுட்டானவர்களிடம் நேரிடையாக சம்பிரதாய புன்னகையையும், மறுபுறத்தே எதிர்ப்பை காட்டாமல் கண்காணிக்கும் கொள்கைகளையும் தந்தரமாக பேணி சமாளித்து வருகிறது. இத்தொடரின் ஒரு அம்சமாக 2008 ம் ஆண்டு அப்போதய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் தந்தரமாக இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றை கொண்டுவந்தார்.

உலக ஓட்டத்திற்கு அமைய துட்டர்களுடனும் சம்பிரதாயமாக நட்பு பாராட்டவேண்டிய தேவை அமெரிக்கா, ஐரோப்பா, போன்ற தேசங்களுக்கு இருக்கிறது. மேற்குலகின் இந்த தற்காப்பு தந்திரத்தை இந்தியா பாகிஸ்தான் புரிந்துகொள்ளாமல் தமக்கு அமெரிக்கா ஐரோப்பா போன்ற நாடுகள் சமமான மதிப்பளிப்பதாக திருப்திப்பட்டுக் கொள்ளுகின்றன. உண்மையில் அமெரிக்கா இவர்களை ஆப்கானிஸ்தானின் நிலையில்த்தான் வைத்திருக்கிறதென்பது ஏதாவது ஒரு முறுகல் நிலையின்போது தெரியவரும்.

அமெரிக்கா ஒருபோதும் இந்தியா, பாகிஸ்தானை ஒரு பொருட்டாக கொண்டது கிடையாது. அதற்கு சான்றாக கடந்த செப் மாதம் 29ம் தேதி முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அமெரிக்கா சென்றிருந்தபோது நியூயார்க்கில் உள்ள ஜோன் எப் கென்னடி விமான நிலையத்தில் வைத்து அப்துல் கலாமை, யார் இவர் என கேட்டு அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தியிருக்கின்றனர்.

இவர் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், இவரிடம் சோதனை நடத்த வேண்டிய அவசியமில்லை என உடன் இருந்த (இந்திய அதிகாரிகள்) தெரிவித்தபோதும். அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்திருக்கிறது. அமெரிக்க அதிகாரிகள் எதையும் கண்டுகொள்ளவில்லை. கலாமின், கோட் சூட் மற்றும் ஷூக்களை பிடுங்கி சென்று சோதித்திருக்கின்றனர். சில நிமிடங்கள் கழித்து சோதனை முடிந்தது செல்ல அனுமதித்திருக்கின்றனர். (வெடிபொருட்கள் ஏதாவது இருக்கிறதா என்று சோதனை நடத்தப்பட்டதாம்.) முன்பும் ஒருமுறை அப்துல் கலாம் அவர்களை அமெரிக்க அதிகாரிகள் சோதனைக்குட்படுத்தியதுண்டு.

பொதுவாக தனிமனித பண்பில் நேர்மையில் அப்துல் கலாம் அவர்கள் மிகவும் வித்தியாசமானவர். கலாம் அவர்கள் மென்போக்கான நல்ல மனிதர். என்றாலும், இந்தியா பாகிஸ்தான் விடயத்தில் அமெரிக்கா தனது மனநிலையை மாற்றிக்கொள்ளத்தயாராக இல்லை என்பது நன்கு உணரப்பட்டிருக்கிறது. அமெரிக்க பாதுகாப்பு பிரிவினர் தமது கடமையை சரியாக செய்திருக்கின்றனர்.

பின்னர் அமெரிக்கா வருத்தம் தெரிவித்ததாகவும் மன்னிப்பு கடிதம் அனுப்பியதாகவும், இந்திய அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டு சட்டை கொலரை தூக்கி விட்டு பெருமை பாராட்டி சுயமாக திருப்திப்பட்டுக்கொண்டன.

மெற்குலக நாடுகள் இடைஞ்சலுக்கு வருத்தம் தெரிவிப்பதில் ஒருபோதும் பின்நிற்பதில்லை. போலியான படாடோபம் எதையும் அந்நாடுகள் பிடித்து தொங்கிக்கொண்டிருப்பதாகவும் தெரியவில்லை. அந்நாடுகளின் நோக்கமெல்லாம் எவரை எந்த இடத்தில் வைத்திருக்க வேண்டும் என்பதில் மிக நிதானமாகவே இருக்கின்றனர்.

முன்பு ஒருமுறை இந்திய மக்களின் காவல்த்தெய்வங்களான (நடிகர்கள்) சாருக்கான், காதல் கிறுக்கர் கமலஹாசன், ஆகியோரும் அமெரிக்க விமான நிலைய அதிகாரிகளின் சோதனைக்குட்பட்டு நீண்ட நேரம் தடுத்து விசாரிக்கப்பட்டபின் விடுவிக்கப்பட்டிருந்தனர். அப்போதும் அமெரிக்க அதிகாரிகள் தடங்கலுக்கு பெருந்தன்மையுடன் வருத்தம் தெரிவித்தது பலர் அறிந்திருக்கலாம்.

அப்போதும் இந்திய ஊடகங்கள் மற்றும், கற்பூரதீபம் காட்டி பால் அபிஷேகம் செய்யும் ரசிகர்கள்கூட்டமும், அமெரிக்காவுக்கு தெய்வக்குத்தம் தாக்கும் பேரிய அபாயம் இருப்பதாக கருத்து வெளியிட்டு மிரட்டிய செய்திகள் பாகம் பாகமாக பத்திரிகைகள் வெளியிட்டன.

ஈழத்தமிழர் பிரச்சினையில் நீண்டகாலம் மத்தியஸ்தம் வகித்த நோர்வேயின் அணுகுமுறையிலும் ஐயுறவான விமர்சனங்கள் தமிழர்தரப்பிலிருந்து வந்திருக்கிறது. இருந்தும் நோர்வே நாட்டின் அறிக்கை பல உண்மைகளை வெளிக்கொண்டுவரும் உத்தியோகபூர்வ ஆவணமாக உலகம் எடுப்பதற்கு காரணங்கள் நிறைய இருக்கின்றன.

இந்தியாவின் அவதூறான பிரச்சார நெருக்கடிதான் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உண்மையான நோக்கம் பரிமாணம், மேற்குலகத்தால் புரிந்து கொள்ளப்படவில்லை என்றும். உலக பயங்கரவாதத்தின் மூலம் விடுதலைப்புலிகள் இயக்கம் என தவறான புரிதல் உலகத்தில் பரப்பப்பட்டு இருந்தது என்றும் அறிக்கை சொல்லுகிறது.

நோர்வேயின் மதிப்பீட்டின் பிரகாரம் சமாதான பேச்சுவார்த்தையை அழிக்கவும் தமிழர் தரப்பு வாழ்வாதாரம் உரிமை போன்றவற்றை கிடக்காமல் செய்யவும் தேவையற்ற வகையில் இந்தியா தலையிட்டு நாடகமாடி மன்னிக்கமுடியாத வஞ்சகம் புரிந்திருக்கிறது.

சிங்களவனுடன்தான் உரிமைக்கான போரை தமிழன் நடத்தினான் என்று பொதுவான வரலாற்று பதிவு இருந்தாலும், நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தியாவுடனும் தமிழினம் இரண்டுமுறை தேவையற்று சக்தியை விரையமாக்கவேண்டிய துன்பியல் திணிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் இந்தியாவுடன் போராடவேண்டியிருக்கும் என்ற கவலை வருங்கால சந்ததி உணர்ந்துகொள்ளும்.

இந்திய அரசின் தலையீடு இல்லாமல் சுயமாக தமிழன் தீர்வுகாணவேண்டும், அதுதான் இலகுவானதும் கூட. அந்த வல்லமையும் தமிழினத்திடம் நிறையவே இருந்தது, இருந்தும் தேவையற்ற இந்திய மத்திய அரசின் தலையீட்டை தடுக்கும் சக்தியும் இந்தியாவின் தமிழ்நாட்டின் கையில்த்தான் உள்ளது.

ஈழ விடுதலை விடயத்தில் தமிழகத்து அரசியல் கட்சிகளை தவிர்த்து, தமிழகத்து மக்களின் மனநிலை இந்திய மத்திய அரசின் கொள்கைக்கு முரண்பட்ட விதமாகவே காலாகாலமக இருந்து வருகிறது. ஆனால் அங்குள்ள அரசியல் கட்சிகளின் ஏமாற்றிலிருந்து தப்பி மக்களால் எதுவும் முடியவில்லை.

2009 இறுதிப்போரின்போது தமிழ்நாட்டில் முத்துக்குமார் உட்பட 18 தமிழ் உணர்வாளர்கள் தீக்குளித்து இறந்திருந்தனர். இறுதியாக 2011ல் மூன்று தூக்குத்தண்டனை கைதிகளை காப்பாற்ற போராடிய இளம் குருத்து செங்கொடி. தனது ஆசாபாசங்கள் அனைத்தையும் துச்சமென துறந்து தீக்குளித்து இறந்து போனார். இவ்வளவு ஒப்பற்ற உணர்வு ஒரு ஈழத்தமிழனின் உணர்வுகளுக்கு மீறிய ஒன்றாகவே காணலாம்.

ஈழத்தமிழன் தனது உரிமையை மீட்க மண் மீட்புக்காக போராடிச்சாகலாம் வேறு வழியுமில்லை, ஆனால் தமிழகத்து இளம் உறவுகள் ஏதற்காக தீக்குளித்து உயிரை போக்கவேண்டும். தமிழக ஆட்சியில் இருந்தவர்கள் குறிப்பாக பல வருட அனுபவசாலியான முதியவர் கருணாநிதி ஒரு ஊசி முனையளவும் இதுபற்றி சிந்தித்திருக்கவில்லை. அவர் சிந்தித்திருந்தால் மத்திய அரசால் இப்பேற்பட்ட சதிகளை அரங்கேற்ற முடிந்திருக்காது. அல்லது அவரது அரசியல் வாழ்க்கை இவ்வளவு கீழ்த்தரமாக அஸ்த்தமித்திருக்க முடியாது.

ஈழத்தமிழர்கள் போராடி இறந்திருக்கிறார்கள், தற்கொலை படையாகி உயிர்க்கொடை ஈந்திருக்கிறார்கள், அது அவர்களுக்கு சுயநலன் சார்ந்த விடையமாகும், ஆனால் அவைகளை விட அதிகமான இன உணர்வும் மொழிப்பற்றும் உயிரை துச்சமென மதிக்கும் ஓர்மமும் தமிழகத்து உறவுகளுக்கு இருந்திருக்கிறது. ஆனால் தமிழகத்தை ஆண்ட ஆண்டுகொண்டிருக்கிற ஆட்சியாளர்களுக்கும் ஒத்தூதும் பக்கவாத்திய கட்சிகளுக்கும் அந்த ஓர்மமும் உணர்வும் அவர்களின் தனித்தன்மயும் இன்னும் புரியப்படவில்லை.

ஈழப்போராட்டத்தை அழிக்க தமிழக அரசியல்வாதிகள் செய்த சூழ்ச்சிகள்தான் பல உயிர்களை தீக்குளிக்க வைத்ததோடு மத்திய அரசாங்கம் தலையிட்டு தலைவிரித்து ஆடவைத்தது. இதில் கருணாநிதி ஜெயலலிதா இருவரின் பங்கும் கூடிக்குறையாமல் உண்டு. ஒவ்வொரு சந்தற்பத்திலும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் மிக வஞ்சகமாக காரியம் சாதித்திருக்கின்றனர். இந்த இளக்காரத்தின் பிரதிபலிப்பு இறுதியில் சோனியா சிதம்பரம் மன்மோஹன் ஆகியோரின் ஆட்டத்திற்கு உதவியிருக்கிறது.

தமிழகத்து அரசியல் வியாதிகள் ஈழ பதத்தை வஞ்சகத்திற்காக உபயோகிக்காமல் இருந்திருந்தால், தமிழக மக்களின் எழுச்சி, போராட்டம், மத்திய அரசை கட்டுப்படுத்தியிருக்கும். ஈழம் அழிவில் வீழ்ந்திருக்காது. இதை இன்றும் உணர்வுடன் துடிக்கும் தமிழகத்து மக்கள் இனியாவது உணர்ந்து கொள்ளவேண்டும்.போராட்டத்திற்கு ஆதரவு என்று நடித்தவர்களை நம்பி ஆட்சியில் அமர்த்தி தமிழினம் எமாந்து போயிருப்பது உண்மையே.

தமிழ் நாட்டின் மக்களிடையே ஈழத்திற்கான ஆழமான ஆதரவு இருப்பதை எவராலும் மறுக்கமுடியாது. எவர் ஈழத்தமிழினத்திற்கு எதிராக செயற்படுகின்றனரோ அல்லது கருத்து சொல்லுகின்றனரோ அவர் எவ்வளவு பெரிய வேந்தராக இருந்தாலும் ஒதுக்கப்பட்டே இருக்கின்றனர். அதுதான் தமிழகத்தில் நடந்திருக்கிறது. எந்த ஒரு கட்சியோ பத்திரிகை ஊடகமோ சினிமாவோ இதில் விதிவிலக்காகிவிடவில்லை.

கருணாநிதியின் தோல்வி, ஜெயலலிதாவின் வெற்றி, பமாக, விசி திருமாவின் தோல்வி, விஜயகாந்தின் வெற்றி. காங்கிரசின் படுதோல்வி அனைத்தும் எவர் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் ஈழ விவகாரமே நிர்ணயித்திருந்தது.

பத்திரிகைகளும் அந்த நாடித்துடிப்பு அறிந்துதான் பயணிக்கின்றன. இந்திய சினிமா கூட ஈழத்தாக்கத்திலிருந்து தப்பிவிடவுமில்லை. உள்ளூர வஞ்சகம் இருந்தாலும் வெளியே ஈழ ஆதரவுடனே படம் எடுத்தால்த்தான் ஓடும் என்ற உபாயமும் அனைவரும் அறிந்தே இருக்கின்றனர்.

சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ஏழாம் அறிவு, இப்படத்தில் பிரதம பாத்திரத்தில் நடித்திருப்பவர் சூர்யா, இவர் ஒரு காலகட்டத்தில் அசின் என்ற நடிகைக்காக வக்காளத்து வாங்கப்போய், மற்றும் ஸ்ரீலங்காவின் ஐபா திரைப்படவிழாவில் பங்குபற்றிய சல்மான் கானுடன் இணைந்து கொண்டாரென சர்ச்சைக்குள்ளாகி தள்ளி வைக்கப்பட்டிருந்தவர், இருந்தும் அவர் தனது மார்க்கெட்டை நிலை நிறுத்தும் நோக்கோடு தமிழினத்துரோகி கருணாநிதியின் பேரனின் தயாரிப்பில் தமிழை முதன்மைப்படுத்துவதுபோலவும் ஈழப்போராட்டத்தை நியாயப்படுத்துவது போலவும் இரண்டு வசனங்களை படத்தில் இணைத்து தந்தரமாக வெற்றி பெற்றிருக்கிறார்.

7ம் அறிவு படம், தமிழ் பேசும் உலகின் பெருத்த பொக்கிஷம் என்றும் ஈழப்போராட்டத்தை விஞ்சிய சாதனையென்றும் பலதரப்பட்ட விமர்சனங்கள் ஊடகங்களில் மாரி மழைபோல பொழிந்து படத்தை வெற்றிபெற வைத்தது. குறிப்பிட்டவர்களின் உள் நோக்கம் எதுவாக இருந்தாலும் என் தலைவனின் அப்பழுக்கற்ற பண்பை நேர்மையை சுத்த வீரத்தை அடியொற்றி தமிழினம் படையெடுக்கிறதென்றால் அந்தப் பெருமை தமிழினத்துக்கு என்றென்றும் பெருமையே.

கடைசி தகவலின்படி பாமக கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட வேல்முருகன் என்ற ஒருவர் புதிய கட்சியை தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் அன்று தொடங்கப்போவதாக அறிவித்திருந்தார், இருந்தும் வேல்முருகன் என்பவர் தேசியத்தலைவர் வே பிரபாகரன். அவர்களின் பிறந்த 26ம் திகதியை சரியாக அறிந்துகொள்ளவில்லை என்று படுகிறது. இருந்தும் தேசியத்தலைவரின் பெயரின் நிழலில் பயணித்தால்த்தான் கரை சேரமுடியும் என அவர் நம்புகிறார்.

எது எப்படியிருப்பினும் கால ஓட்டத்தில் இந்திய பேராதிக்கம் இட்டுச்சென்ற கரும்புள்ளி தமிழினத்தின் இதயத்தில் வடுவாக வீழ்ந்திருக்கிறது. இனி வரும் காலங்களிலும் தமிழினத்தின் விடுதலைக்காக போராடவேண்டிய பொறுப்பு ஈழத்தமிழனுக்கே உண்டு தமிழகத்தின் உணர்வுள்ள ஆதரவு நிச்சியம் ஈழத்தமிழினம் கரைசேர உதவும் என்பது நிதர்சனமானது.

இந்திய பேராதிக்கம் தமிழினத்திற்கு வஞ்சகம் செய்து சிங்கள ராஜபக்க்ஷவை தூக்கிவிட்டது. ஆனால் ராஜபக்க்ஷ இந்தியாவை, சீன பேராதிக்கத்திடம் இலகுவாக பிடித்துக்கொடுத்திருக்கிறார். இனி வரும் காலங்கள் இந்தியா சீன சிக்கலை களைவதற்காக அதிக விலை கொடுக்கவேண்டியிருக்கும்.

ஈழதேசம் இணையத்திற்காக,
கனகதரன்.
நன்றி ஈழதேசம் இணையம்.

No comments: