Wednesday, January 4, 2012

தன்வினை தன்னைச்சுடும் ஓட்டப்பம் வீட்டைச்சுடும். முல்லை பெரியாறு தேசத்தையே சுட்டுவிட இடமளிக்கலாகுமா?

.

கூத்தாடி குசும்பன்..





"முல்லை பெரியாறில் புதிய அணை கட்டி, தமிழக - கேரள கூட்டுக் குழு  கட்டுப்பாட்டில் நிர்வகிக்க கேரள அரசு தயாராக உள்ளது' என கேரள  முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்தார்.


முல்லை பெரியாறு பிரச்னையில் சுப்ரீம் கோர்ட் நியமித்த உயர்மட்டக் குழு கூட்டத்தில், அணையின் நீர்மட்டத்தை, 120 அடியாக குறைக்க முடியாது என அதிரடியாக தெரிவித்து, கேரள அரசின் கோரிக்கையை தள்ளுபடி செய்தது. இது முல்லை பெரியாறு பிரச்னையில், கேரள அரசுக்கு கிடைத்த பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இப்படி செய்திகள் தினமும் வருகின்றன.

கூ கு:இந்திய நாட்டின் அரசியல் சாசன விதிமுறைகளின் அடிப்படையில் அந்நாட்டின் மத்திய மானில அரசுகளில் பதவி வகிக்கும் அரசியல் தலைவர்கள் நாட்டின் அரசியல் சாசன விதிமுறைக்கு கட்டுப்பட்டு சத்தியப்பிராமாணம் எடுத்துக்கொள்ளுகின்றனர். (இதை மத்திய அரசிலிருக்கும் பிரதமர், கேரள அரசிலிருக்கும் உம்மன் சாண்டி ஆகியோர் கவனத்தில் கொள்ள வேண்டும்)

இது இந்தியாவுக்கு மட்டுமல்லாது அதிகபட்ஷமாக உலகிலுள்ள சகல ஜனநாயக நாடுகளுக்கும் பொருந்தும்.

ஒரு நாட்டின் அனைத்து நலன்களையும் பாதுகாக்கும் பொருட்டு அரசியல்ச்சாசனம் வரையப்பட்டிருக்கிறது. அந்தவகையில் ஒரு நாட்டின் அரசியல் வாதிகள் குறைந்தபட்ஷம் ஐந்து வருடங்கள் அரசியல் சாசன வரம்பிற்குட்பட்டு ஆட்சி செய்யும் அதிகார சுதந்திரம் வழங்கப்படுகிறது.

ஆட்சி செய்யும் காலங்களில் மக்கள் நலனை பாதிக்காமல் மதிப்பளிக்கும் அதே நேரம் நாட்டின் தேசிய அரசியல் அமைப்பு மற்றும் சட்டத்துறையையும் மதித்து நடக்கவேண்டிய பொறுப்பும் புரிதலும் அவர்களுக்கு கட்டாயமாகிறது.

தான் சார்ந்த கட்சியின் கொள்கை சார்ந்து, அல்லது தனது இன மத உறவு சார்ந்து,. ஒரு கொள்கைநிலைக்கு சார்பாக போகுமிடத்தில். அக்கொள்கை குறிப்பிட்ட குழுவினரிடம் பெரும்பான்மை ஆதரவு இருப்பினும், அந்தக்கொள்கை வேறு ஒரு விதத்தில் நாட்டின் நலனை பாதிக்குமாக இருந்தால் நிச்சியம் சிந்தித்து முடிவெடுக்கவேண்டிய கட்டாயம் உண்டு.

ஆட்சி அதிகாரத்திலிருக்கும் ஒரு மானில அரசு, அல்லது மத்திய அரசு, தனது கட்சி அல்லது இனக்குழு சார்ந்து எடுத்த ஒருமுடிவு. ஒரு தனி மனிதனுக்கு ஒப்புதல் ஆகவில்லையெனில் அவன் நீதிமன்றத்தை அணுகவும் அரசியல் சாசனம் வழி செய்கிறது. அப்படி நீதிமன்றத்திற்கு செல்லும் ஒரு பொது நலன் கொண்ட முறைப்பாடு, விசாரணைக்கு தகுதியுள்ளது தானா என்பதை அந்த நீதிமன்றம் முடிவுசெய்து தகுதியுள்ள முறைப்பாட்டை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுகின்றது.

எடுத்துக்கொண்ட முறைப்பாடு இரண்டு பக்க சட்டவல்லுனர்களான சட்டவாளர்களின் விவாத அடிப்படையில் விசாரிக்கப்பட்டு, நாட்டின் அரசியல் சாசன சட்டவரம்பிற்குட்பட்டு நீதிபதிகள் தீர்ப்பு வழங்குகின்றனர். நீதிபதிகளின் தீர்ப்பில் அதிருப்தியிருந்து இன்னும் நிமிர்த்தக்கூடிய சட்ட ஆதாரங்கள் வேறு இருப்பின், மீண்டும் அதே வழக்கை அப்பீல் செய்யும் தகுதியும் வாத தரப்பினருக்கு இருக்கிறது. மறு விசாரணையிலும் தீர்ப்பு முன்னையதையே பரிந்துரைக்குமாயின், நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளவேண்டிய தார்மீகப்பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது.

அதன்பின்னும் அடாவடியாக விதண்டாவாதம் புரிந்தால் அந்த நிர்வாகத்தை கலைத்துவிடும் அதிகாரம் குடியரசுத்தலைவருக்கு உண்டு. அத்துடன் பல இனங்கள் சேர்ந்த ஒரு நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வில்லங்கத்தை தூண்டும் கொள்கையுடைய அக்கட்சியை தடைசெய்யவும் நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகமாக செயற்படும் கட்சியின் தலைமத்துவத்திலிருக்கும் தனிமனிதர்களை இனங்கண்டு தேசியப்பாதுகாப்புச்சட்டத்தின் சட்டப்பிரிவை பயன்படுத்தி கைது செய்து சிறைப்படுத்தவும் முகாந்திரங்கள் நிறையவுண்டு.

இன்றைய கேரள அரசின் கொள்கை மேற்படி சட்டத்தையும் அரசியல் சாசனத்தையும் மதிக்காத முரண்பாட்டுடன் ஒரு இனக்குழுவை திருப்ப்திப்படுத்தும் விதமாகவே உள்ளது. கேரள முதலமைச்சர் உம்மாண்டி சாமுண்டி நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு வினை தேடும்வகையில் முல்லை பெரியாறு பிரச்சினையை சுயநலத்துடன் கையாண்டு நாட்டின் பிரிவினைக்கு விதை போட்டிருக்கிறார். உச்ச நீதித்துறையின் தீர்ப்பை அவர் மதிக்கவில்லை. அடுத்ததாக நீதிமன்றம் நியமித்த நிபுணர்கள் ஆதாரபூர்வமாக சோதனை நடத்தி வெளிக்கொண்டுவந்த பெறுபேறுகளை ஏற்றுக்கொள்ளவில்லை.

தான் எதை குறித்து விதண்டாவாதம் செய்கிறாரோ அதற்கேற்றபடி தீர்ப்பெழுதும்படி அழுங்குப்பிடியில் நின்றுகொண்டிருக்கிறார். மத்தியில் ஆட்சிபுரியும் காங்கிரஸ் கட்சியின் பிரிவாக கேரள அரசு இருப்பதால் மத்தியில் ஆட்சிபுரியும் அரசும் உம்மாண்டியின் அராஜகத்திற்கு துணை நிற்கிறது. 

முல்லை பெரியாறு அணை 1895ல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தமிழகத்தின் நீராதாரத்திற்காக  நிர்மாணிக்கப்பட்டது. 999 வருடங்களுக்கு முல்லை பெரியாறு நீரை தமிழகம் அனுபவிக்கும் உரித்தும் ஒப்பந்தமூலம் வரையப்பட்டிருக்கிறது. கேரள அரசு கூறுவதுபோல அணை பாவனைக்கு உதவாத வகையில் பாதிக்கப்பட்டிருக்குமாயின் கேரள அரசின் கூற்றை ஏற்றுக்கொள்ளவேண்டிய நியாயம் அனைவருக்கும் உண்டு. ஆனால் துவேஷ அடிப்படையில் நிமிடத்துக்கு ஒரு கருத்துக்கூறி மக்கள் மத்தியில் பிரிவினையையும் அணைபற்றி மிகவும் பொய்யான தகவல்களை பரப்பி தேவையற்ற ஒரு அசாதாரண நிலையை நாட்டினிடையே தோற்றுவித்த ஒரு பிரிவினரை ஏன் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து தூக்கில் ஏற்றாவிட்டாலும் சிறையில் அடைக்கக்கூடாது. 


மீண்டும் சந்திப்போம்.

No comments: