Thursday, October 21, 2010

நரியின் முதலைக்கண்ணீர்,

போலியாக கண்ணீர் வடிப்பதற்கு முதலைக் கண்ணீர் என்று உதாரணம் கூறுவார்கள். அப்படிப்பட்ட முதலைக் கண்ணீரை இன்று வடிப்பது யார் ?

1karuna_croc

வேறு யார், தமிழ்நாட்டின் மூத்த முதலையான கருணாநிதியைத் தவிர வேறு யார் ?

நேற்று உடன்பிறப்புகளுக்கு அவர் எழுதியிள்ள கடிதத்தில் ஈழத் தமிழரின் அவல நிலைப் பற்றி கண்ணீர் உகுத்துள்ளார். இது என்ன மாதிரி கண்ணீர் என்பதை உங்களுக்கு சொல்லி உணர்த்த வேண்டியதில்லை.

இந்தக் கண்ணீரையும் இப்போது உகுக்க வேண்டிய தேவை என்னவென்றால், காங்கிரஸ் கட்சியும், சோனியா காந்தியும், பழைய திமுக மீதான பழைய கரிசனத்தை காட்டாததும், வேண்டாத மருகளைப் போல திமுகவை நடத்துவதுமே ஆகும். 2004ல், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் வந்து, கருணாநிதியை சந்தித்த சோனியா, 2010ல் விமானநிலையத்தில், 10 நிமிடங்கள் மட்டுமே கருணாநிதிக்கு நேரம் ஒதுக்குகிறார் என்றால், கருணாநிதி எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

Tamils-at-Kadirgamh-camp--001

கடந்த ஒன்றரை வருட காலமாக தமிழ்ச் சொந்தங்கள் முள்வேளி முகாமுக்குள் தானே அடைபட்டுள்ளார்கள் ? அப்போதெல்லாம் இல்லாத கரிசனம், கருணாநிதிக்கு இப்போது என்ன ? என்னவென்றால், திமுகவை அனுசரித்து, சட்டசபைத் தேர்தலில் உரிய கூட்டணி வைக்காவிட்டால். திமுக தமிழர் பிரச்சினையை மீண்டும் கையில் எடுக்கும், காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் என்று சூசகமாக உணர்த்துகிறாராம்…..!!!!

sonia_2

ஆனால், காங்கிரஸ் இதையெல்லாம் கண்டு கொள்ளும் நிலையில் இல்லை. கருணாநிதி நெருக்கடி கொடுக்கத் தொடங்கினால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய புலனாய்வுத் துறையை முடுக்கி விட்டு, ஆ.ராசாவின் மென்னியைப் பிடித்து, அந்த விசாரணை, சிஐடி காலனி வரை கொண்டு செல்ல சோனியா காந்திக்கு தெரியும். பெயரில்தான் சோனி இருக்கிறதே தவிர, சோனியா சோனி அல்ல. அவர் சோனி நிறுவனத்தை போல திறமை வாய்ந்தவர். கடைந்தெடுத்த அரசியல்வாதி. 2014ல், ராகுல் காந்தியை பிரதமராக ஆக்கும் வரை மிக கவனமாக காய் நகர்த்தும் அளவுக்கு சாதுர்யம் படைத்த தேர்ந்த அரசியல்வாதி.

2011 தமிழக சட்டமன்றத் தேர்தல் என்பது, இது வரை இல்லாத அளவுக்கு, காங்கிரஸ் அடுத்த ஆட்சியை தீர்மானிக்கும் என்ற ஒரு வினோதமான சூழலுக்கு வழிவகுத்திருக்கிறது. இந்தச் சூழலை நன்கு அறிந்த கருணாநிதி, அதனால்தான், தன்னுடைய ஈகோவையெல்லாம் கோபாலபுரத்திலேயே மூட்டை கட்டி வைத்து விட்டு, மீனம்பாக்கம் சென்று, தன்னுடைய விசுவாசத்தை காட்டிக் கொண்டார்.

இந்தப் பின்னணியில்தான், விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிக்கப் பட்ட விவகாரத்தை ஆராய வேண்டும்.

800px-tamil-tigers-flagsvg

2009 மே மாதத்திலேயே விடுதலைப் புலிகள் வீழ்த்தப் பட்டார்கள் என்று சிங்கள அரசாங்கம் அறிவித்தது. தேசியத் தலைவர் இறந்து விட்டார் என்றும் அறிவித்தது. இதை நம்பி, இந்திய அரசாங்கமும், பிரபாகரனின் இறப்புச் சான்றிதழை யாராவது ஒரு சிங்கள தாசில்தாரிடம் வாங்கிக் கொடுங்கள் என்று விண்ணப்பித்தது.

ஒரு புறம், இறப்புச் சான்றிதழை தாருங்கள் என்ற இலங்கைக்கு விண்ணப்பித்து விட்டு, மறுபுறம், புலிகள் இயக்கத்தை 2010 மே 14 அன்று தடை செய்து ஒரு அறிவிக்கையை வெளியிடுகிறது.

இந்த அறிவிக்கையை சரியா தவறா என்று முடிவு செய்ய, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புத் தீர்ப்பாயம் ஒன்று, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி விக்ரம்ஜித் சென் தலைமையில் அமைக்கப் படுகிறது.

vsen1

இதே விக்ரம்ஜித் சென்தான், 2008ல், புலிகள் இயக்கம் மீதான தடையை உறுதி செய்தார்.

இந்நிலையில், இத்தீர்ப்பாயத்தின் இரண்டாவது கூட்டம், சென்னையில் அக்டோபர் முதல் வாரத்தில் நடந்தது. அக்கூட்டத்தில், மதிமுக பொதுச் செயலர் வைகோ, பழ.நெடுமாறன் ஆகியோர், புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்கின்றனர். தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பாகவும், புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கு என்று ஒரு மனு தாக்கல் செய்யப் படுகிறது.

அந்த மனு விசாரணைக்கு வந்த போது, தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பாக, வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் ஆஜராகி வாதாடினார்.

தனது வாதத்தின் போது, புலிகள் இயக்கம் அழிந்து விட்டாலும், அதன் ஆதரவாளர்களும், அனுதாபிகளும், அந்த இயக்கத்துக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறார்கள் என்று புலிகள் இயக்கத்தை தடை செய்த அறிவிக்கையில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. அந்த அறிவிக்கையில் ஆதரவாளர்களைப் பற்றி குறிப்பிட்டுருப்பதால், ஆதரவாளர் என்ற முறையில் தமிழக மக்கள் உரிமைக் கழகத்தை ஒரு அனுதாபியாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று வாதாடினார்.

அந்த மனுவை நிராகரித்த நீதிபதி விக்ரம்ஜித் சென் தனது தீர்ப்பில், தமிழக மக்கள் உரிமைக் கழகம் என்பது ஒரு பதிவு செய்யப் படாத அமைப்பு, மேலும், அந்த அமைப்பின் முகவரி முழுமையாக இல்லை (தெருப் பெயர் குறிப்பிட தவறுதலாக விடுபட்டு விட்டது.) என்று இரு பெரும் காரணங்களையும், சட்டத்தில் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் தான் தீர்ப்பாயத்தின் முன் வர வேண்டும் என்ற ஒரு முக்கியமற்ற காரணத்தையும் குறிப்பிட்டு, மனுவை தள்ளுபடி செய்தார் நீதியரசர் விக்ரம்ஜித் சென். இந்த முகவரி தொடர்பாக, நீதிபதி சந்தேகம் எழுப்பிய போது, தெருப்பெயர் தவறுதலாக விடுபட்டு விட்டது என்று விளக்கத்தை அவருக்கு அளித்து, திருத்தப் படும் என்று வாக்குறுதி அளித்த பின்பும், முகவரி சரியில்லை என்பதை மனுவை தள்ளுபடி செய்வதற்கு ஒரு காரணமாக குறிப்பிட்டுள்ளார் என்றால், நீதியரசர் விக்ரம்ஜித் சென்னின் நீதிபரிபாலணத்தை பார்த்துக் கொள்ளுங்கள்.

சாட்சிகள் குறுக்கு விசாரணையை அடுத்து, 28ம் தேதிக்கு அடுத்த அமர்வு ஒத்தி வைக்கப் பட்டது.

தனது நலனையும், தன் குடும்பத்தின் நலனையும் கருத்தில் கொண்டு, போரை நிறுத்த வேண்டும் என்று தமிழகமே போராடிக் கொண்டிருந்த போது தன்னால் இயன்றதையெல்லாம் செய்து, அந்த போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்து, ஒரு அடிமை இன்னொரு அடிமையிடம் என்ன கேட்க முடியும் என்று பசப்பி லட்சக்கணக்கான தமிழ் உயிர்கள் பலியாகக் காரணமாக இருந்த கருணாநிதி இப்போது மீண்டும் வடிக்கத் தொடங்கியிருக்கும் முதலைக் கண்ணீர், அடுத்த சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு தான்.

ஆனால், இனியும் உலகத் தமிழர்கள் கருணாநிதியை நம்பத் தயாராக இல்லை. 1991 தேர்தல் முதல் ஒவ்வொரு தேர்தலிலும், இதுதான் எனது கடைசித் தேர்தல், இதுதான் எனது கடைசித் தேர்தல் என்று கருணாநிதி கூறுவார்.


karuna_one_eyed_jack

ஆனால் இப்போது சவுக்கு கூறுகிறது. இதுதான் கருணாநிதியின் கடைசித் தேர்தல். அவர் முழுமையாக மக்களால் புறக்கணிக்கப் படப் போகிறார். தனது குடும்பத்தை வளர்த்து விட்டு, தமிழகத்தை சூறையாட விட்டு வேடிக்கைப் பார்த்த கருணாநிதியை மக்கள் மன்னிக்கப் போவதே இல்லை.


நன்றி சவுக்கு,


No comments: