Thursday, September 15, 2011

தீபம் தொலைக்காட்சிக்குப் பின்னால் மறைந்திருந்து எழுந்த மங்காத்தா!

ஒரு கருத்து முன்வைக்கப்படும் போது அதனை கருத்தால் எதிர்கொள்ள முடியாத கோழைகள் வன்முறையை ஆயுதமாகக் கையாள்வது சமூகத்தின் ஒவ்வொரு தளத்திலும் வெவ்வேறு வடிவங்களில் நடைபெறுகின்றது. இலங்கையில் கொலைசெய்யப்பட்ட ஒவ்வொரு ஊடகவியலாளரினதும் மரணத்தின் பின்புலத்திலும் கருத்தை எதிர்கொள்ளத் துணிவற்ற மனிதர்களைப் பார்க்கிறோம்.

பெரும்பாலும் அவதூறுகளிலிருந்து ஆரம்பிக்கும் இவ்வாறான வன்முறைகள் மனித அழிவுகள், மரண தண்டனை என்பது வரை நீடிப்பவை. மதங்களின் பெயாரால், இனவாதத்தின் பெயரால், நிறவாதத்தின் பெயரால் அரங்கேற்றப்படும் வன்முறைகளின் பின்னணியில் அதிகார வெறிகொண்ட கோழைகளைக் காண்கிறோம்.
மக்களின் அவலங்களை தமது முதலீடாக்கிக்கொள்கின்ற சமூகக் கூறுகள், பெண்ணியம், தலித்தியம், தன்னார்வ நிறுவனங்கள், தேசியவெறி போன்ற உணர்ச்சிகரமான சுலோகங்களோடு முன்வருகின்ற தனிநபர்களால் தலைமைதாங்கப்படுவது சமூகப் பொதுப்புத்தியாக மாறியுள்ள ஆபத்துமிக்க அரசியல் சூழலில் வாழ்கிறோம்.

இலங்கையில் மகிந்த ராஜபக்ச பாசிச சர்வாதிகாரம் தமிழ்ப் பேசும் மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் பெண்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட்டுள்ள இத்தாக்குதல்களுக்கு எதிராக “பெண்ணிலைவாதிகள்” குரலெழுப்புவார்கள் என்று எதிர்பார்த்து ஏமார்ந்தவர்கள் பலர். மேட்டுக்குடிப் பெண்ணிலைவாதிகளின் ஒருபகுதி ராஜபக்ச அரசோடு தமது வாழ்க்கையை அமைத்துக்கொண்டு பாசிசத்தின் நிழலில் குடியேறிக்கொண்டது. இன்னொரு பகுதி தன்னார்வ நிறுவனங்களோடு ஐக்கியமாகிக்கொண்டது. போர்க்குணம் மிக்க பெண்கள் கிறீஸ் மனிதர்களின் அடக்குமுறைக்கு எதிராக வாழ்வதற்காகப் போராடுகிறார்கள்.

இந்த வரிசையில் இலங்கை அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ள கிறீஸ் பூதம் ஒரு அரசியல் பிரச்சனை அல்ல என்றும் சமூகப் பிரச்சனை என்றும் வாதிடும் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் என்ற “பெண்ணிலைவாதி” நேற்று (13.09.2011) தீபம் தொலைக்காட்சியின் கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டார்.

இலங்கை அரச சார்பாக இவர் முன்வைத்த கருத்துக்களை நாகரீகமாக இவரோடு கலந்துகொண்ட ஏனைய இருவரும் எதிர்கொண்டனர்.
உரையாடலின் சில பகுதிகளைக் கீழே பார்வையிடலாம்:

நேரஞ்சல் உரையாடலின் போதே ஆங்கிலத்தில் “நாகரீக வன்முறை” அதிகாரத்தைக் கையாண்ட ராஜேஸ் பாலா, நிழச்சி நிறைவின் பின்னர் நடந்துகொண்ட முறைமை அருவருப்பானது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பி.ஏ.காதர் அவர்களை நிகழ்ச்சி நிறைவுற்றதும் “வேசைமகனே” என விழித்து அவர் மீது கையில் கிடைத்தவற்றை வீசியெறிந்து தாக்குதல் நடத்தினார். ஆங்கிலத்திலும் தமிழிலும் கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டிய ராஜேஸ் பாலா காதர் மீது அங்கு வக்கைப்பட்டிருந்த நீர்க் குவழையிலிருந்த நீரை ஊற்றி அவமானப்படுத்தினார்.

தீபம் தொலைக்காட்சி ஊழியர்கள் உட்பட அனைவரும் அதிர்ச்சியடைந்த நிலையில் ஐந்து நிமிடங்கள் வரை நீடித்த இவரின் வன்முறையிலிருந்து சுதாகரித்துக்கொண்டு அனைவரும் அங்கிருந்து வெளியேறினர்.

முப்பது வருடப் பெண்ணிலைவாதி ராஜேஸ் பாலா பெண்ணியம் என்ற தலையங்கத்தில் திரைக்குப் பின்னால் நிகழ்த்திய கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான வன்மத்தால் புரையோடிப் போன சமூகத்தின் குறியீடு.


நன்றி இனியொரு.இணையம்,


No comments: