Tuesday, April 5, 2016

தமிழ்நாடு சட்டமன்றத்துக்கான தேர்தல் திகதி 2016,மே மாதத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான முன்னோட்ட நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் பரபரப்பாக அனைத்து அரசியற்கட்சிகளும் தொடங்கிவிட்டன.

நடப்பில் ஆட்சியில் இருக்கும் ஜெயலலிதா தலைமையிலான அ இ அதிமுக விடமிருந்து ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் அனைத்து கட்சிகளும் கொள்கை கோட்பாடுகள் ஏதும் அற்ற சுயநல தந்திரபாயங்களை கையிலெடுத்து விபச்சாரியின் நியாயப்படுத்தல்களை ஒத்த விவாத பரிவர்த்தனையில் தேர்தல் களம் அனல் பறக்கும் பேரம்பேசல்களும் பிரச்சாரங்களும் எந்த ஒரு வரைமுறைக்கும் உட்படாமல் காட்டாற்று வெள்ளம்போல் பாய்ந்தோடிக்கொண்டிருக்கிறது.

 2011 சட்டசபை தேர்தலிலும், அடுத்து வந்த நாடாளுமன்ற தேர்தல்களிலும் மண்ணை கவ்வி படுதோல்வியடைந்த ஈழ இனப்படுகொலை சூத்திரதாரியான கருணாநிதி கள நிலவரம் எப்படி இருக்கும் என்று தெரிந்தும் யாரை கூட்டுச் சேர்த்தாவது இம்முறை ஆட்சியை கைப்பற்றிவிடமாட்டோமா என்ற ஆதங்கத்தில் தனக்கே உரித்தான் அத்தனை வஞ்சக தந்திரங்களையும் அஸ்திரமாக்கி உறக்கமில்லாமல் காய்நகர்த்தி வருகிறார்.

கருணாநிதிக்கு தற்போது வயது 94, சராசரி மனித வாழ்வின் கணக்கீட்டின்படி கருணாநிதி இன்னும் ஒரு ஐந்து வருடங்கள் மட்டுமே வாழக்கூடிய தகுதியில் இருந்தாலும் இன்னும் ஒருமுறை ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி முதலமைச்சராகிவிடவேண்டும் என்ற வெறியுடன், தனது ஆயுட்காலத்தில் ஆட்சி அதிகாரத்தை தனது சந்ததியிடம் கையளித்துவிடவேண்டும் என்ற பேராசை அவரை நிம்மதியாக உறங்கக்கூட விட்டு வைக்கவில்லை.

இதுவரை நடைபெற்ற தேர்தல்களை விடவும் இம்முறை மக்களிடத்தே விழிப்புணர்வு பெருமளவு மாறுபட்டிருக்கிறது. ஐம்பது ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி மக்களை ஏமாற்றி நாட்டை குட்டிச்சுவராக மாற்றிய திராவிட கட்சிகளின் ஊழலுக்கு எதிரான பெருத்த சமூக மாற்றம் ஒன்று பரவலாக கருக்கட்டி தமிழக அரசியலில் பலமுனை போட்டியை உருவாக்கியிருக்கிறது.

 இந்த மாற்றத்தின் எதிரொலி நான்கு கட்சிகளை ஒன்றிணைத்து மக்கள்நல கூட்டணியை பிரசிவித்தது, பலத்த பேரம்பேசல்களுக்குப்பின் விஜயகாந்தின் தேமுதிக மக்கள் நலக்கூட்டணியுடன் கூட்டுச்சேர்ந்தது காவாலி கட்டுமரம் கருணாநிதியை திகைப்புடன் பெருத்த ஏமாற்றத்துடன் ஆட்டம் காண வைத்திருக்கிறது.

 இந்த இடத்தில் ஒருவிடயத்தை தெளிவுபடுத்தவேண்டியிருக்கிறது தேமுதிக மநகூ வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கிறதோ இல்லையோ அந்த கூட்டணியின் ஒன்றிணைவு கருணாநிதியின் திமுகவை மிகவும் பின்னுக்கு தள்ளும் தன்மையை உண்டுபணணும் என்பது பொதுமக்கள் உட்பட அரசியல் விமர்சகர்களின் வெள்ளிடை மலையான கருத்தாகும்.

கருணாநிதி தனது சரிவை சரிக்கட்ட தேமுதிகவை தன்னுடன் இணைப்பதன் மூலம் சரிசெய்து ஈடுகட்டிவிடலாம் என்ற கனவில் தன்னால் முடிந்தளவு தனக்கே உரித்தான வாய் ஜால கபட தந்திரங்களை கையாண்டு இறுதியில் தோற்றுபோய் இருக்கிறார்.

கருணாநிதிக்கு குறுக்கே நிற்கும் இன்னும் ஒரு பெருத்த மலைபோன்ற முட்டுக்கட்டை பெருவாரியான இளைஞர்களை தன்னகத்தே கொண்டு விசுவரூபம் எடுத்திருக்கும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியின் கொள்கை முழக்கமும் பேரெழுச்சியும் கருணாநிதியின் கனவில் மண் விழுந்திருக்கிறது.

நாம் தமிழர் கட்சியினர் தாம் இந்த தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றுவோம் என்று சூழுரைத்து மிகுந்த எழுச்சி மிக்க எனர்ஜியுடன் தேர்தல் களத்தை சந்தித்தாலும் இந்தியாவில் புரையோடிப்போய் இருக்கும் பாரம்பரியமாக மதம்போல மூளை சலவை செய்து வளர்க்கப்பட்டிருக்கும் கட்சிகளின் சார்பு மனப்பாண்மையிலிருந்து பழமைவாத கிராமத்து வயதான மக்களை உடனடியாக ஒட்டுமொத்தமாக திருப்பிவிட முடியாது என்ற கசப்பான யதார்த்தமும் இந்த தேர்தல் முடிவுகளை நிர்ணயம் செய்யும் குறியீடாக இருக்கும் என்பதை புறந்தள்ள முடியாது.

 இருந்தும் நாம்தமிழத் கட்சி மிக அதிகமான வாக்குக்களை பெற்று முன்னர் மாற்று என்ற முழக்கத்துடன் பிரிந்து சென்று களம்கண்ட வைகோ, அவர்களின் மதிமுக, விஜயகாந்தின் தேமு திக கட்சிகளை விட விகிதாசாரத்தில் பெரும்பான்மை வாக்குக்களை பெற்று தன்னை நிலை நிறுத்திக்கொள்ளும் என்பது எவராலும் தடுக்க முடியாது.

நாம்தமிழர் கட்சிக்கு 2021 ம் ஆண்டுதான் மிக பிரகாசமான களமாக அமையும் என்பதும், நடக்கவிருக்கும் இத்தேர்தலில் கணிசமான வெற்றியுடன் கருணாநிதியின் குடும்ப அரசியலை நாம்தமிழர் கட்சி முடிவுக்கு கொண்டுவரும் என்பதை அடிக்கோடிட்டு குறிப்பிடலாம்.

அவைதான் பொதுவான தேர்தல் கள நிலையாக இருந்தாலும் இந்த தேர்தலில் படுமோசமான அடியை வாங்கப்போவது கருணாநிதியின் திராவிட முன்னேற்றக்கழகம் என்பதுதான் வரலாற்று பதிவாக அமைய இருக்கிறது.

கருணாநிதிக்கோ கருணாநிதியின் கட்சி தொண்டர்களுக்கோ இந்த யதார்த்தம் புரியாமலில்லை. திமுகவின் சாதாரண தொண்டர்களுக்கும் கள நடைமுறைகளில் ஏற்படும் இந்த புரிதல் நாளடைவில் தொண்டர்களை வேறு வீரியமான கட்சிகளை நோக்கி நகர்த்தும் உளவியலும் உள்ளூர இயல்பாகவே உருவாகும் அபாயம் இருக்கிறது.

இந்த எதிர்வினைகளை பற்றி கருணாநிதி ஆரம்பந்தொட்டு அவதானமாக இருந்தே வந்தாலும் 2009 ம் ஆண்டிலிருந்து எதிர்வினையின் தாக்கத்தை நன்கு புரிந்துகொண்டு அதற்கான ஆயுத்த வேலைகளையும் கட்டமைத்து செய்துவருகிறார். அதன் சில புள்ளிகள் தான் 1/2 நாள் உண்ணாவிரதம் டெசோ கட்டமைப்பு எனலாம்.

அந்த வகையில் சாதிக்கட்சிகளை கவர்வதற்காக சாதி தலைமைகளை தன்னகத்தே தோளமை போல் வைத்திருத்தல், மூத்த சினிமா நடிகர்களை கௌரவிப்பதுபோல பாசாங்கு செய்தல். அவர்களுக்குள்ளேயே மோதலை உண்டுபண்ணி தனது தயவைப்பெறவைத்தல் அதிகாரிகள் மடத்தில் மூட்டிவிடுதல் பத்திரிகைகளை மோதிவிடுதல், இன்னபிற தந்திரங்கள் கண்கூடு.

சென்ற தேர்தலின்போது விஜயகாந்துடன்கூட தான் நேரடியாக மோதாமல் படிப்பறிவில்லாத அரசியலின் ஆழம் தெரியாத வடிவேலுவை வைத்து நாறடித்து வடிவேலுவின் தொழிலுக்கே சமாதி கட்டிவிட்டவர் கருணாநிதி.

தனது குடும்பத்துள்ளேயும் தனக்கு கட்டுப்படாத அழகிரியைக்கூட அவர் இராச தந்திர ரீதியில் குடும்பத்துடன் இரண்டற கலக்காமல் பிரித்தே கண்காணிப்புடன் நகர்த்தியே வைத்திருக்கிறார்.

இப்போ கடைசியாக கூட்டணிக்குள் இழுப்பதற்கு அனைத்து கட்சிகளையும் முயன்று பார்த்து ஏமாந்துபோன கருணாநிதி முன்னூறுக்கு மேற்பட்ட பொது அமைப்புக்கள் திமுகவுக்கி ஆதரவாக இருப்பதாக விளம்பரப்படுத்தி சில அமைப்புகளுக்கு ஒன்று பாதி என்கிற அளவில் தேர்தலில் போட்டியிட சீற்றும் வழங்கி சமூக மட்டத்தில் ஒரு திசை திருப்பலை செய்திருக்கிறார்.

இரண்டு நாட்களுக்கு முன் கருணாநிதியின் கோவாலபுரம் வீட்டுக்கு அழைக்கப்பட்ட முன்னாள் ஐ ஏ எஸ் சிவகாமி என்ற தலித் சமுதாய பெண்ணுக்கு தேர்தலில் போட்டியிட ஒரு தொகுதி வழங்கப்பட்டிருக்கிறது.

சிவகாமிக்கு உதய சூரியன் சின்னத்தில் ஒரு தொகுதி வழங்கப்பட்டதை கேள்வியுற்ற வெவ்வேறு அமைப்புக்களை சேர்ந்த சிறு குழுக்கள் தமது ஊர் செல்வாக்கை திரட்டி வந்து போட்டியிட முன்வரும் பட்ஷத்தில் நிறைய சாதி கட்சிகளின் ஆதரவை பெற்று தோல்வியிலிருந்து தப்பிக்கலாம் என்பது கருணாநிதியின் ஒரு கபடமான தந்தரமாக இருந்தாலும், இந்த சிவகாமி ஐ ஏ எஸ், செப் 2013 அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நடைபெற்ற நேர்பட பேசு விவாதத்தில் விடுதலைப்புலிகள் இயக்கம் பாலியல் போராளிகளை வைத்திருந்தது என்றும் போராடும் வீரர்களின் பாலியல் இச்சையை தீர்ப்பதற்கு பல இளம் பெண்கள் பயன்படுத்தப்பட்டனர் என்று ஒரு அபாண்டமான குற்றச்சாட்டை பல பேச்சாளர்களின் எதிர்ப்பையும் புறந்தள்ளி பதிவு செய்திருந்தார்.

சிங்கள இனப்படுகொலையாளியான மகிந்த ராஜபக்‌ஷ கூட தலைவர் பிரபாகரன் அவர்களின் ஒழுக்கம், மற்றும் விடுதலை புலி போராளிகளின் ஒழுக்கம் நன்நெறி பற்றி தான் பலதடவை பிரமித்துள்ளதாக பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார்.

அவை தவிர விடுதலைப்புலிகள் பலரை படுகொலைகள் செய்ததாகவும் பயங்கரவாதிகளாக செயற்படுவதாகவும் பல இடங்களில் முறைப்பாடு செய்யப்ட்டிருக்கிறதே தவிர ஒரு சிங்கள பெண்ணையோ தமிழ்ப்பெண்ணையோ பாலியல் ரீதியாக துர்ப்பிரயோகம் செய்யப்பட்டதாக ஒரு தகவலும் இதுவரை எவராலும் பதியப்படவில்லை.

இந்த தகவல் பல ஊடகங்கள் அமைப்புக்கள் கண்டித்து எதிர் போராட்டங்கள் நடத்தி இருக்கின்றன எனவே அதுபற்றி இங்கு அதிகம் விபரிக்க தேவையில்லை.

அப்படி இருக்கும்போது தமிழ் இனத்தின்மீதும் விடுதலை போராளிகள்மீதும் திட்டமிட்டு காழ்ப்புணர்ச்சி காரணமாக மானாவாரியாக சேற்றை வாரி இறைத்த ஒரே காரணத்துக்காக சிவகாமியை கருணாநிதி தனது கோபாலபுரம் வீட்டுக்கு அழைத்து ஆரத்தழுவி பொன்னாடை போர்த்தி தேர்தல் செலவு நிதியும் ஒரு தொகுதியும் வழங்கி இருக்கிறார்.

இந்த நிகழ்வு தற்செயலாக நிகழ்ந்ததில்லை விடுதலைபுலிகளால் தனக்கு ஏர்ப்பட்ட வீழ்ச்சியினை வைத்து வஞ்சம் தீர்ப்பதற்காக சிவகாமிக்கு சீற் கொடுக்கப்பட்டதாகவும் மாறாக சினிமா நடிகை குஷ்பு தன்னை விட்டு போய் காங்கிரஸில் இணைந்து கொண்டதால் குஷ்புவின் பிரிவு நீண்ட நாட்களாக கருணாநிதியை வருத்தியதாகவும் அந்த இடைவெளியை ஈடுகட்ட குஷ்புவின் வயதை ஒத்த நிறம் மாறினாலும் முக ஜாடையில் குஷ்ப்புவைநினைவு கொள்ளக்கூடிய சிவகாமியை கருணாநிதி உள் வாங்கியிருக்கிறார் என்று உறுதிப்படுத்தப்படாத செய்திகள் கூறுகின்றன.

 கருணாநிதி ஒரு வயது முதிர்ந்த ஒரு பழுத்த அனுபவசாலியாக இருந்தும் அவரது மனது என்னவோ மிகவும் கீழ்த்தரமாக இருப்பது அருவருக்க வைக்கிறது.

குறிப்பிட்ட இருவருக்கும் பொருந்தும்வண்ணம் இந்த பாடலை அவர்களது சிந்தனைக்காக இங்கே பதிவு செய்கிறேன்.

“வேதாளம் சேருமே
வெள் எருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே – மூதேவி
சென்றிருந்து வாழ்வளே
சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை.”

ஈழதேசம் செய்திகளுக்காக

கனகதரன.

Saturday, February 13, 2016

ஒரு நாள் பயணமாக யாழ்ப்பாணம் முள்ளிவாய்க்கால் போன வைரமுத்தர் ஈழ காவியம் எழுதுவாராம்?



ஒருநாள் பயணமாக முள்ளிவாய்க்கால் போன பாட்டுக்கார வைரமுத்து ஈழ காவியம் எழுதுவாராம்?

 

படப் பாட்டுக்காரர் வைரமுத்து அவர்களுக்கு அதிகம் படிக்காத ஊர்க்குருவி மிகுந்த கவலையுடன் கொதிநிலையில் எழுதும் ஒரு உறைப்பான மடல்.

நான் எதையும் இட்டுக்கட்டி உங்கள்மீது போறாமை கொண்டு சேற்றை வாரி இறைப்பதற்காக இம்மடலை எழுத முன்வரவில்லை. அதற்கு எனக்கு நேரமும் இல்லை அப்படியான இயல்பும் எனக்கில்லை.

நீங்கள் இலக்கணத்திற்கு உட்படாமல் பத்து வரியில் ஒரு படத்துக்கு ஒரு பக்கம் பாட்டெழுதினால் பல இலட்சங்கள் கிடைக்கும், ஆனால் நான் பத்து இருபது பக்கங்கள் பரணி பாடினாலும் விற்பனைக்கு எழுதுபவனல்ல.

சமீபத்தில் நீங்கள் எழுதி படரவிட்ட ஒப்பாரி கவிதை ஒன்று ஆனந்த விகடன் இதழில் வெளிவந்ததாக குறிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் உலவ விடப்பட்டிருந்தது.

ஆறு ஆண்டுகள் காலங்கடந்து நீங்கள் எழுதி வெளியிட்ட அந்த ஒப்பாரியை படிப்பவர்கள் ஈழப்போரையும் அன்று ஈழப்போராட்டத்தை நசுக்கி அழிப்பதற்காக சூழ்ந்திருந்த பின்னணியையும் புரியாதவர்களாக இருக்கவேண்டும் அல்லது உங்களை தெரியாதவர்காளாக இருக்க வேண்டும்.

ஈழப்போர் உச்சத்தில் இருந்தபோது பதின்நான்கு பதினைந்து வயதாக வைரமுத்துவைப் பற்றி அறியாமல் இருந்தவர்கள்தான் இன்றைக்கு இருபது வயதாகி உங்கள் பின்னணி தெரியாமல் உங்களை வரவேற்பவர்களாக இருந்திருக்கின்றனர். நானும் எனது வயதை ஒத்தவர்களும் எனது மூத்தோரும்தானே உங்களையும் உங்கள் உள்ளுடன் அறிந்தவர்களாக இருக்கின்றோம். துரதிஷ்ட வசமாக நாங்கள் நாட்டில் வாழ முடியாமல் அகதியாக வெளியேறியது நீங்கள் முள்ளிவாய்க்கால்வரை சென்று செல்பி எடுத்து முகாரி ராகத்தில் ஒப்பாரிபாடி கொண்டாட முடிந்திருக்கிறது.

தமிழனாக ஒரு படைப்பாளி என்று கூறிக்கொள்ளும் நீங்கள் இனப்படுகொலை நடந்தபோது சார்ந்து பதுங்கியிருந்த இடம் எப்பேர்ப்பட்டது என்பதை அறியாதவர்கள் அந்த ஒப்பாரி வரிகளை உட்கார்ந்து உணர்ச்சி வசப்பட்டு கொதிநிலை அடையாமல் உண்மையான உங்கள் உள்ளக்கிடக்கைதான் அதுவென்று நினைத்து அப்பாவித்தனமாக சிலாகித்து படிக்க முடியும்.

எனக்கெல்லாம் இனப்படுகொலை என்ற வார்த்தையை யாராவது சொல்ல கேட்கும்போது 2009 போரின் கடைசி நாட்களை நினைக்கும்போது எங்கள் தோல்வியை நினைத்து நெஞ்சு கொதிக்கும்போதெல்லாம் ராஜ பக்‌ஷவோ சிங்களவனோ நினைவுக்கு வருவதில்லை மாறாக கருணாநிதியும் அவரது பரிவாரங்களான உங்களையும்தான் நான் மறக்காமல் நினைவு கூருகின்றேன.

உங்களைப்போன்ற வெகுஜன மதிப்பு பெற்ற காத்திரமான ஊன்றுகோல்களின் உதவி இல்லாமல் கருணாநிதியால் அன்றைக்கு ஈழத்தமிழினத்துக்கு எதிராக அவ்வளவு பெரிய மோசமான நிலையை எடுத்திருக்க முடியாது.

நீங்கள் மட்டுமல்ல சுப வீரபாண்டியன், வீரமணி, ரஜனிகாந்த், வாலி, இப்படி வெகுஜன கவர்ச்சி கொண்ட ஒரு பெரும் கூட்டம் கருணாநிதிக்கு அரணாக நின்றதன் விளைவு கருணாநிதியால் ஈழப்போராட்டத்தை அழித்து பெரும் இனப்படுகொலையை நிறுவ முடிந்தது,

அவரால் பல நாடகங்களை நியாயப்படுத்த முடிந்தது.

உங்கள் கவிதையை சமூக வலைத்தளங்களில் படித்தவர்களில் அனேகமானோர் படு மோசமாக தாறுமாறாக உங்களையும் உங்கள் கவிதையையும் விமர்சித்திருந்தனர். நீங்கள் அந்த விமர்சனங்களை கவனிக்காமல் இருந்திருக்க முடியாது.

வெளியே காட்டிக்கொள்ளாவிட்டாலும் ஏன் அந்தளவுக்கு நீங்கள் விமர்சிக்கப்பட்டீர்கள் என்பது உங்களுக்கு புரியாமல் இருப்பதற்கு நீங்கள் அவ்வளவு மக்கு கிடையாது.

உங்கள் புரிதலுக்காக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அடிக்கடி கூறும் ஒரு ஒப்புவமையை எடுத்துக்காட்டலாம் என்று நினைக்கின்றேன்.

இலங்கையில் ராஜபக்‌ஷவுடன் கூட்டாக சேர்ந்து நின்று போரை நடத்தி பல இலட்சம் மக்களை இனப்படுகொலை செய்தது இந்திய முன்னாள் மத்தியில் அதிகாரம் வகித்த சோனியா மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு, அந்த அனீதியை தட்டிக்கேட்காமல் கண்மூடி மௌனமாக இருந்தது அப்போ எதிர்க்கட்சியாக இருந்த பாரதிய ஜனதா கட்சி ( பாஜக)

2007/ 2008/ 2009 களில் கடுமையான போரின்போது காங்கிரஸ் சர்க்காருக்கு சகல விதத்திலும் ஒத்துழைத்து குடும்பத்துக்கு பதவி சுகங்களை பெற்றுக்கொண்டு ஒரு பட்ட மரத்தின் இயல்போடு காங்கிரஸுக்கு பேருதவி புரிந்தவர் திமுக தலைவர் கருணாநிதியும் அவரது தலைமையிலான திமுக அரசும்.

சம காலங்களிலும் பின்னரும் கடலில் மீன்பிடிக்க சென்ற தமிழகத்து மீனவர்கள் பல நூற்றுக்கணக்கானோரை சுட்டுக்கொன்றது ஸ்ரீலங்கா இராணுவம், கடலில் எல்லை மீறினால் சுட்டுக்கொல்லுவோம் என்று இலங்கையின் ஆட்சியாளர்கள் மகிந்த ராஜபக்‌ஷ ,மற்றும் இந்நாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பகிரங்கமாக பிரகடனம் செய்தனர் ஆனால் ஸ்ரீலங்கா இராணுவத்தை இராணுவ எதிர்வினைச் செயற்பாட்டு மூலமோ அல்லது அரசியல் ரீதியாகவோ காங்கிரஸ் அரசோ பாரதிய ஜனதா அரசோ ,மாறாக தமார்களின் தாய்மாமன் என்று சொல்லி ஆட்சி புரிந்துவந்த மாநில திமுக அரசோ எதிர்க்கவில்லை,

இந்த விடயங்களை பல அமைப்புக்கள் அரசியற் கட்சிகள் தட்டிக்கேட்டு தெருத்தெருவாக ஜனநாயக ரீதியில் பல போராட்டங்கள் நடத்தின அப்படியான வெகுசன போராட்டங்களை இந்திய ஆட்சியாளர்கள் எவரும் கண்டுகொள்ளவில்லை, நிலமை தீவிரமாகும் தருணங்களில் அப்போ ஆட்சியில் இருந்த மன்மோகன்சிங்காக இருக்கட்டும் இப்போ ஆட்சியிலுள்ள நரேந்திர மோடி ஆக இருக்கட்டும் கூறிக்கொண்ட நியாயம் ஸ்ரீலங்கா இந்தியாவின் உற்ற நண்பன் அவர்களுடன் முரண்பாடாக நடக்க முடியாது என்பதாகவே இருந்து வருகிறது.

இந்த இடத்தில் சீமான் வைக்கும் கேள்வி என்னவென்றால் ஸ்ரீலங்காவிலிருக்கும் சிங்களவன் என் இனத்தை சுட்டு கொல்லுகின்றான் அவன் இந்தியாவின் மத்திய சர்க்காரில் இருக்கும் உனக்கு நண்பனாக இருந்தால் ஒரு இந்திய குடிமகனாக இந்தியாவில் பிறந்து வளர்ந்து கடலில் தினம் தினம் கேட்பார் இல்லாமல் கொல்லப்படும் நாங்கள் யார்?

அப்படியானால் நீ எப்படி இந்த மண்ணில் பிறந்த எனக்கு பாதுகாவலனாக முடியும்? நீ எப்படி என்னை காத்தருளும் ஒப்பற்ற ஆட்சியாளனாக இருக்க முடியும்.

என்று சீமான் பல மேடைகளில் கேள்வி எழுப்பிவருகிறார். அது நியாயம் சத்தியம் என்றே மக்களும் சீமானை பின்தொடர்ந்து அணி திரளுகின்றனர்.

அதே கேள்வியைத்தான் நான் உங்களை நோக்கி வைக்கின்றேன், மத்திய ஹிந்தி சர்க்காருடன் இணைந்து எம்மை அழிக்க நாளொரு நாடகம் ஆடி அனைத்து சதிகளையும் அரங்கேற்றிய மேடைகளில் கருணாநிதியை தூக்கி நிறுத்தி பின்பாட்டு பாடிய நீங்கள் இன்று இரங்கல் கவி பாடியதன் பின்னணி நடக்கவிருக்கும் தேர்தலில் வீழ்ச்சியிலிருக்கும் கருணாநிதியை தூக்கி நிறுத்துவதற்கான அரசியலா அல்லது புதியவர்களின் வரவால் சினிமாவில் பாட்டெழுத சந்தற்பம் குறைந்துபோய் வறட்சியுற்றிருக்கும் சங்கடத்தை நிறைவு செய்வதற்காக பொற்கிழி வாங்கிப்போக வந்த கீழ்நிலையா?

உங்கள் கூட்டு சதியால் கொல்லப்பட்ட எனது உடன்பிறப்புக்களின் இடுகாட்டில் நின்று இன்றைக்கு நீலிக்கண்ணீர் வடித்து முகாரி பாடி பணமுடிச்சு பெற்று போகும்போது உங்களுக்கு கூச்சமாக இருக்கவில்லையா.

எனக்கு புரியவேயில்லை தமிழ்நாட்டின் பாமர மக்களால்த்தான் எங்களுக்கு பலமும் தமிழ்நாட்டின் அரசியல் சினிமா வியாபாரிகளால்த்தான் எங்கள் துயரமும் இரண்டறக்கலந்து இருக்கிறது. இது உங்களால் எப்படி வைரமுத்து முடிகிறது.

உங்களை நான் ஒரு காலத்தில் மறைந்த கவியரசு கண்ணதாசனின் இடத்தை நிரப்பவந்த ஒரு ஆளுமையாக கற்பனை பண்ணியதுண்டு, பின் ஒரு காலத்தில் பறவை முனியம்மாவின் பாடலின் தரத்தில் உங்கள் பாடல்களை கண்டு ஏதோ நடக்கட்டும் என்ற மனநிலையுடன் பார்த்ததுமுண்டு. இப்போ நீங்கள் முள்ளிவாய்க்கால் செல்வதற்கு பணம் பெற்றுக்கொண்டதாக அறிந்தபோது உங்கள் வறுமைநிலை உங்களை தரை மட்டத்துக்கு இறக்கிவிட்டதை எண்ணி வருந்தியதுமுண்டு.

அடுத்து நீங்கள் ஈழ காவியம் எழுதப்போவதாக ஒரு வதந்தி உலவுகிறது. அது உண்மையாக இருக்க முடியாது என்றுதான் நான் நினைக்கிறேன் ஏனெனில் அங்கு பிறந்து வளர்ந்த என்போன்றவர்களுக்கே ஈழ வரலாறு முழுவதும் புரியாதபோது ஒருநாள் பயணமாக யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு சென்று வந்த உங்களால் ஈழம் பற்றி ஒரு கற்பனை காவியத்தை த்தான் படைக்க முடியும்.

வந்தேறியான சிங்களவன் மகாவம்ஷம் என்ற பெயரில் ஒரு வரலாற்று திரிவு ஒன்றை எழுதி அதை வரலாறாக்கியதுபோல உங்கள் காவியமும் ஈழ மக்களுக்கு சிக்கலாகிவிடக்கூடாது என்பது எனது கருத்து.

ஊர்க்குருவி.