Thursday, September 30, 2010

கருணாநிதி குடும்பத்தின் எந்திரன் கேளிக்கை திரைப்படம், அதை நாங்கள் திருபியும் பாற்கப்போவதில்லை,

அன்பார்ந்த புலம்பெயர் உறவுச்சொந்தங்களே! இளையதலைமுறைகளே! தயவுசெய்து இந்த வேண்டுகோளை கருத்தில் கொள்ளுவீர்கள் என நம்புகிறோம்!,


ஈழத்தமிழினத்தின் தோல்விக்கும் குரூர இன அழிப்புக்கும் அதிக காரணமாக இருந்துவருகின்றது கருணாநிதியின் குடும்பம் என்பதை அறிவீர்கள்,, அவர்களால் தயாரித்து வெளியிட இருக்கும் எந்திரன் என்கின்ற கோமாளி திரைப்படத்தின் கணிசமான வியாபாரத்தை புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் எதிர்நோக்கி பலதரப்பட்ட விளம்பரங்களில் கருணாநிதி குடும்பம் முனைப்பாக ஈடுபட்டுள்ளனர்.

எமது உயிரையும், வாழ்வையிம், பூச்சி புழுக்களைவிடவும், கேவலமாக உதாசீனப்படுத்திய அனீதியின் பட்டறிவை, முள்ளிவாய்க்கால் படுகளத்திலும், அதன்பின் வந்தகாலங்களிலும், நன்கு அறிவோம், கருணாநிதி அரசும் சரி தமிழக திரைப்படத்துறையினரும் சரி இன்றுவரை எம்மை எவ்வளவு கேவலப்படுத்தி வருகின்றனர் என்பதை நாம் எல்லோரும் மறந்திருக்க முடியாது.

ஈழத்தை எரித்த யமகாதகன் கருணாநிதியின் குடும்பம் தயாரித்த கேளிக்கை திரைப்படம் "எந்திரன்" இதை எமது இன அழிப்பை மறந்து ரசிக்கப்போகிறீர்களா, வரவேற்புக்கொடுக்கப்போகிறீர்களா, தயவுசெய்து சிந்தியுங்கள்.

ஈழத்தை அழிப்பதற்காக உண்ணாவிரதமென்று உச்ச நாடகமாடிய வலியை மறந்து. கருணாநிதியின் குடும்பத்தின் கல்லா நிறைவதற்காகwe எந்திரன் என்ற சதிகார குடும்பத்தின் படத்தைப்பார்த்து எம்மை நாமே அசிங்கப்படுத்துவதா?

தீக்குளித்த முத்துக்குமாரை சித்த சுவாதீனமற்றவன் என்றுகூறி. ராமகிருஸ்ணா மருத்துவமனையில் ஒளித்து விளையாடிய வஞ்சகன் கருணாநிதி குடும்பம் மேலும் தளைக்க எந்திரன் திரைப்படம் பார்த்து உதவப்போகிறீர்களா?

ஈழத்தமிழனுக்காக குரல்கொடுத்த குற்றத்திற்காக தேசியப்பாதுகாப்புச்சட்டத்தில் சீமானை சிறையிலடைத்த கருணா குடும்பம் தயாரித்த எந்திரன் படத்தை ரசிக்கப்போகிறீர்களா?

தேசியத்தலைவன் அனுப்பிவைத்த தமிழர் தேசியக்கூட்டமைப்பை 2008 பெ டில்லிக்கு போகவிடாமல் தடுத்து உதாசீனப்படுத்திய கருங்காலி கருணாநிதியின் குடும்ப கேளிக்கை விளையாட்டுப்படமான எந்திரன் நிச்சியம் பார்க்கத்தான் வேண்டுமா?

தாய்மார்களையும் குழந்தைக்ளையும் நச்சுப்பொசுபரசால் எரித்த காதகி சோனியாவை தியாகத்திருவிளக்கு என்றுகூறி ஈழம் எரிந்து சாம்பலானபின்னும் நியாயப்படுத்திக்கொண்டிருக்கும் கருணாநிதியின் குடும்ப விருத்திக்கு எந்திரன் என்கின்ற தந்திரனின் திரைப்படத்தை பார்க்கப்போகிறிர்களா?

கீழுள்ளவற்ரையும் திரும்ப ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள்,


1 ஓட்டு மொத்த எம்.பிக்கள் இராஜினாமா!

2 இந்த ஆட்சி இனியும் தேவை தானா!

3 இந்த உயிர் தேவையா!

4 அனைத்துக்கட்சிகளின் கூட்டு தீர்மானம்!

5 மனிதச் சங்கிலி;!

6 அனைத்துக் கட்சித் தலைவர்கள் டில்லி பயணம், பிரதமர் சோனியா சந்திப்பு!

7 உண்ணாவிரதமிருப்பேன்!

8 யுத்தநிறுத்தம் செய்யப்படும்!

9 சோனியாவும் மன்மோகனும் ஒப்புக்கொண்டனர்!

10 பிரணாப் முகர்ஜி இலங்கை பயணம்!

11 புலிகள் சகோதர யுத்தம் நடத்துகிறார்கள்!

12 இறையாண்மை தடைபோடுகிறது!

13 அது வேறு நாட்டு உள்விவகாரம்

இன்னும் ஆயிரம் நயவஞ்சக துரோகங்கள்,

கடைசியாக 3 மணி நேரம் உண்ணாவிரதமென்று ஏமாற்றிய வடுவை வலியை மறந்து. எந்திரன் என்ற விஷவிருட்ஷத்தை பார்க்க வேண்டுமா?

புலம்பெயர் சொந்தங்களே,, இரத்த உறவுகளே ,,நாங்கள் பல இடங்களில் கருணாநிதிக்கு எதிராகவும். சிங்கள பாசிசத்தோடு சேர்ந்து சல்லாபிக்கும் சினிமாத்துறைக்கும் எதிராக குரல் மட்டுமே கொடுத்து எச்சரித்து வந்திருக்கிறோம், சந்தற்பம் கிடைத்திருக்கும் இந்த ஒரு இடத்திலாவது எமது பலத்தையும் ஒற்றுமையையும் காட்டவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம், என்பதை தயவுசெய்து உணர்ந்து கொள்ளுவோம்.


"பரிதாபத்தை காட்டி எதிரியிடம் எதையும் பெற்றுவிட முடியாது, எமது பலம் எதிர்த்தாக்கத்தை எதிரிக்கு ஏற்படுத்தும்போதுதான் எதிரி எம்மை உணர்ந்து
பணிந்துகொள்வான்"
இதுதான் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தாரக மந்திரம், ஒன்றிணைந்து எந்திரன் திரைப்படத்தை புறக்கணிப்போம்

எமது பலத்தையும் ஒற்றுமையையும் துரோகிகளுக்கு படிப்பினையாக்கிக்காட்டுவோம்,

புலம்பெயர் எழுத்தாளர் குழுமம்,


http://www.youtube.com/watch?v=vTYqFLWi1lA&feature=player_embedded

Tuesday, September 28, 2010

''ஈழப்படுகொலைச்சூத்திரதாரி கருணாநிதிக்கு'', பொன்னாடை போர்த்திய சம்பந்தர், எங்கே போகிறது ஈழத்தமிழனின் மானம்,

ஊர்கூடி என்னதான் ஒப்பாரி வைத்தாலும், தமிழினம் செத்தழிந்து மண்ணோடு மண்ணாகிப்போனாலும் தாய்மார் தாலியறுந்து சடைவிரித்துச்சன்னதமாடினாலும், குட்டிச்சுவரில் கழுதை கட்டுச்சோறு தின்றகதையாக, தமிழர் விடுதலைக்கூட்டணியிடமிருந்து, மன்னிக்கவும் தமிழர் தேசியக்கூட்டமைப்பிடமிருந்து ஈழத்தமிழினம் கௌரவமான அரசியலை அதாவது யதார்த்தமான மானம் மரியாதையுள்ள கௌரவமான அரசியலை எதிர்பார்க்க முடியாது என்பது சம்பந்தர் ஐயா மீண்டுமொருமுறை நிரூபித்துக்காட்டிருக்கிறார்,

வன்னியில் முள்ளிவாய்க்காலில், ஈழத்தமிழினத்திற்கும் தமிழீழக்கனவுக்கும். சுயநலத்தின்பால் தன் குடும்பநலனுக்காக வரலாற்றுத்தவறிழைத்து சங்கூதி சாவுமணியடித்த கருணாநிதியை, கௌரவிப்பதற்காக தமிழர் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்கள். தமிழினத்தின் மோசமான துரோகசக்தியான கருணாநிதியின் வீட்டுக்குச்சென்று தன்மானமிழந்து கருணாநிதியின் கால்களில் விழுந்து வணங்கி ஆசிபெற்றதாக 26,09,2010 அன்று ஒரு செய்தி வெளியாகியிருந்தது, ஈழத்தமிழர்களுக்கும், மானமுள்ள தாய்த்தமிழகமக்களுக்கும், தேசியத்தலைமையின் கொள்கைக்கும், சேர்த்து தமிழர் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் எனச்சொல்லப்படும் சம்பந்தன் சேற்றுடன் கரியும் சேர்த்து பூசி அசிங்கப்படுத்தி வைத்திருக்கிறார்,

கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா. சம்பந்தன் தமிழக முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது அவரது மனைவி லீலாதேவி, மகன் செந்தூரன் ஆகியோர் உடனிருந்தனர். என்றும் செய்தி கூறுகிறது,

கொலைக்களத்திலிருந்து தெய்வாதீனமாக உயிர்தப்பி இன்று நடைப்பிணங்களாக வன்னியில் வாழும் ஈழத்தமிழர்களாலும். போரின்போது உயிர்தப்புவதற்காக நாட்டை விட்டோடி உலகம் முழுவதும் பரந்து அகதிகளாக வாழும் புலம்பெயர் தமிழ்ச்சமூகத்தாலும். ஈழ இன அழிப்புப்போரின்போது இந்திய மத்திய அரசுடன் சேர்ந்து. ஈழத்தமிழினத்தை அழிக்க கண்மூடித்தனமாக கருணாநிதி உதவிபுரிந்தார் என நேரடியாக குற்றஞ்சாட்டப்படும் தருணத்தில், மரியாதை நிமித்தம் சந்தித்தேன் என சம்பந்தர் கூறியிருப்பது பெருத்த கேள்வியை தமிழ்ச்சமூகத்தில் தோற்றுவித்துள்ளது,

கருணாநிதியுடனான சந்திப்பில் இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரம்?, ஈழத்தமிழர்கள் விடயத்தில் மகிந்த அரசு கடைப்பிடிக்கும் போக்கு?, இலங்கையில் தமிழர்களின் அரசியல் இருப்பு? போன்ற பல விடயங்கள் குறித்து சம்பந்தன் பேசினார் ? என்று தெரிவிக்கப்படுகிறது.
நாடு திரும்பியதும் கருணாநிதியுடனான சந்திப்பு குறித்து தனது கட்சியினருடன் இரா. சம்பந்தன் விரிவாக பேசுவார் என்று கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. என்றும் செய்தி குறிப்பிடுகிறது.

இதுதான் தமிழினத்தை திடுக்கிடவைத்திருக்கும்பேரிடியான அவமானச்செய்தியாகும், படுகொலைப்போர் முடிந்தபின் சோனியா+ மஹிந்த + கருணாநிதியின் தந்திர நிகட்சிநிரலின் திட்டப்படி. வன்னித்தடை முகாம்களுக்கு பயணஞ்செய்த தி மு க தலைமையிலான டி.ஆர். பாலு , கனிமொழி, திருமாவளவன், குழுவினர். மக்கள் வன்னியில் இராணுவக்கம்பிவேலிக்குள் மிகவும் சந்தோசமாக வாழுவதாக வெளியுலகுக்கு கூச்சமின்றி கூறியிருந்தனர், இதன்பின்னரும் பல பேச்சுவார்த்தைகள் கொடுக்கல் வாங்கல்கள் என்றெல்லாம் பேசப்பட்டது, ஆனால் வன்னியில் மக்களுக்கு உலக உதவித்திட்டத்தின் மூலம் சிங்களவனால் கொடுக்கப்பட்ட சில தளவாடங்களும் விதைநெல்லும், இந்தியாவால் கொடுக்கப்பட்ட ஐந்து கூரைத்தகரங்களும், தவிர வேறு எந்தப்பெரியபலனும் கிடைத்ததக இதுவரை செய்தியில்லை. கூட்டமைப்பினரின் அறிக்கைகள் மட்டும் ஒவ்வொரு எம்பி க்கள்மூலம் தனித்தனியாக பிரசவமாகிக்கொண்டிருக்கிறது.

சம்பந்தன் நாடு திரும்பியதும் விரிவாக எதை தமிழினத்துக்கு ஒப்புக்கொடுக்கப்போகிறார்? இற்றைக்கு 60ஆண்டுகளாக (இந்திய) தமிழ்நாட்டு சுயநல அரசியல்ச்சாக்கடைக்குள் அமிழ்ந்து கிடக்கும் அழுக்குத்தவளை கருணாநிதிபற்றி இனித்தான் தமிழர்களுக்கு விலாவாரியாக விரிவாக சம்பந்தன் புட்டு வைக்கப்போகிறாரா. கடந்தகாலங்களில் உலக மஹாக்கலைஞர்களால் சிந்திக்கக்கூட முடியாத கொடூர கபடவஞ்சக நாடக காட்சிகளை மக்கள்முன் விரித்து கருணாநிதி ஆடிய அட்டூழியத்தை புறந்தள்ளிவிட்டு. புதிய அத்தியாயத்தைப்பற்றி முன்னோட்டம் செய்யப்போகிறாரா,

இன்றைய நிலையில் சிங்கள ராஜபக்க்ஷ குடும்பத்துடன் மல்லுக்கட்டி சொற்பசலுகைகள் பெறுவதே குதிரைக்கொம்பு என்பது உலகமறிந்தவிடயம். இது தமிழினத்திற்கு தெரியாத ஒன்றல்ல, புதிதான உபாயங்களை தேடிச்சிந்திக்க வேண்டிய நிலையில்த்தான் தமிழினமும் தமிழர்களின் அரசியலும் இருக்கின்றது என்பதும் பாவப்பட்டுப்போன தமிழினம் அறியாததுமல்ல, ஆனால் மோசமான துரோகவித்தான கருணாநிதியின் வரப்போகும் தேர்தல் வெற்றிக்கு வலுச்சேர்க்க சம்பந்தர் வரிந்துகட்டி ஈழத்தின்மேல் நடத்தப்பட்ட அழிவை ஒருவினாடிக்குள் மறந்து சோரம்போயிருப்பது சம்பந்தரின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் என்பதை வருங்காலங்களில் தமிழர் தேசியக்கூட்டமைப்பு உணரவேண்டியிருக்கும்,

உதாரணத்துக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் உணர்வுபூர்வமான எவ்வளவோ உறுதிமிக்க தமிழர் இருந்தும். தேசியக்கூட்டமைப்பிலுள்ள ஒருசிலரின் தன்னிச்சையான முடிவால். ஒரு சிங்களவரான பொடிஹப்புஹாமி பியசேன, வுக்கு இடங்கொடுக்கப்போய். இன்று தேசியக்கூட்டமைப்பினுள் இன்னும் உடைவுகளை கட்சி எதிர்நோக்கியுள்ளதாக செய்திகள் கசிகின்றன, உறுதியான தமிழ்ப்பற்றளர்களான சிவாஜிலிங்கம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரின் வெளியேற்றத்திற்கு கட்சிக்குள் உள்ள ஒருசிலரின் ஒத்துப்போகததன்மையே காரணமாகவிருந்திருக்கிறது, இந்நிலைதொடருமானால் ஆனந்தசங்கரியின் கூட்டணியின் நிலை கூட்டமைப்புக்கும் ஏற்படும் என்பதில் தமிழனுக்குச்சந்தேகமில்லை,

வேடதாரி கருணாநிதி தனது அரசியல் இருப்புக்காக எதுவும் செய்யக்கூடியவர் என்பது தமிழுலகம் அறியும், அவரது அரசியல் வரலாற்றில் ஜெயலலிதா தவிர எவரதுகாலிலும் வீழ்ந்து காரியம்பெற கருணாநிதி பின்னின்றதில்லை. அணுகமுடியாத ஒரே இடம் ஜெயலலிதாவின் காலடிதான் என்பதால் கருணாநிதி புறந்தள்ளுவதுபோல் காட்டிக்கொள்ளும் ஒரே ஒரு நபரின் இருப்பிடம் போயஸ் தோட்டம்,

ஈழத்தமிழ்ச்சமூகத்திற்கு அவலத்தையும் அனீதியையும் தொடர்ந்து தோற்றுவித்துக்கொண்டிருக்கும். காட்டு விலங்கையொத்த, படு மரத்தையொத்த மனம்படைத்த கருணாநிதியை. சம்பந்தர் மரியாதை நிமித்தம் சந்திப்பை ஏற்படுத்தி கௌரவித்திருப்பது. பகிரங்கமாக கருணாநிதியின் கடந்தகால ஈழத்தமிழின அழிப்பை சம்பந்தன் மற்றும் தமிழர் தேசியக்கூட்டமைப்பு சரியென்று ஆமோதிப்பது போல் ஆகிவிட்டிருக்கிறது,

மூத்த அரசியல்வாதியான சம்பந்தர் ஒருவினாடியேனும் சிந்தித்துச்செயற்பட்டிருக்க வேண்டாமா?? அல்லது முள்ளிவாய்க்கால் மூலைக்குள் தினந்தினம் கருணாநிதியும் கூட்டாளிகளும்சேர்ந்து கொன்றுகுவித்த என் தமிழினத்தின் அவலக்குரலையும் சவக்கும்பிகளையும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட்டாரா?? இதற்காகத்தான் முப்பது வருட தியாக வேள்வியில் இளங்குருத்துக்கள் காவுகொடுக்கப்பட்டதா?? , சம்பந்தரின் குடும்பம் தொடர்ந்து சென்னையில் வசிக்கவேண்டும் என்பதற்காக. எல்லாவற்றையும் விலைபேசி விற்றிவிட முடியுமா??, இந்தக்கொடுமைகளை மறந்து கருணாநிதியின் வீட்டில் விருந்துண்டு மரியாதை தெரிவித்துவருவதற்கு ஈழத்தமிழர்களின் அரசியலை பயன்படுத்த சிறு கூச்சமாவது வேண்டாமா, இப்படிப்பட்ட கேள்விகள் ஈழத்தமிழர்மத்தியிலும் தமிழக தமிழர்மத்தியிலும் வெட்கத்தையும் வேதனையையும் உண்டுபண்ணியிருக்கிறது.

2009 பெப் ஆளுனர் மாளிகைமுன் தீக்குளித்து ஈகையான முத்துக்குமார் தொடங்கி 19 சுதேசிகள் அடுத்தடுத்து கருகியபோது, தாயகம் வாசலில் தமிழகத்து தாய்க்குலம் உண்ணா நோன்பிருந்து துவண்டபோது, கல்லூரி மாணவ இளைஞர்கள் வெகுண்டெழுந்து போராடித்துடித்து பொலிஸ் தடியடிமூலம் அடக்கப்பட்டபோது, வழக்கறிஞர்கள் கூட்டங்கூட்டமாக கொந்தளித்தபோது, அரசியல்க்கட்சிதலைவர்கள் தொண்டர்கள் உணர்ச்சி வசப்பட்டுத்துடித்தபோது, ஆள்த்தூக்கிச்சட்டங்களைப்பயன்படுத்தி. அவர்களை சிறைப்படுத்தியபோது, தமிழகம் பட்ட கொந்தளிப்பையும் உணர்வையும் கொச்சைப்படுத்திய கருணாநிதியை, மரியாதை நிமித்தம் சந்தித்ததாக கூறினால் மேற்சொன்ன தியாகங்களுக்கு காரணமான தமிழகத்து தமிழ்சமூக உறவுகளை கொச்சைப்படுத்தி அவமரியாதை செய்வதாகத்தானே பொருள்,

அந்தமக்கள் துடித்த துடிப்பையெல்லாம் ஒரு நொடியில் மறந்து அவமானப்படுத்தியதாகத்தானே அவர்கள் நொந்து வேதனைப்படுவார்கள், இவற்றை ஒரு சராசரி தமிழனாகவேனும் மதிப்பிற்குரிய சம்பந்தன் ஐயா ஒருநிமிடம் சிந்தித்திருக்க வேண்டாமா, இவற்றை இராசதந்திரம் என்றும் அவர் கற்பிதம் கூறக்கூடும். ஆனால் இப்பெர்ப்பட்ட நடவடிக்கைகளை சோரம்போதல் என்றும் குறிப்பிடுகின்றனர்.

இன்றைக்கும் சம்பந்தன் ஐயாவைவிடவும் அதிகமாக உழைக்கக்கூடிய. சினிமாத்துறையில் தொடர்ந்து கோலோச்சக்கூடிய. மானத்தமிழன் இளைஞன் சீமான், அவர்கள் இன உணர்வுகாரணமாக ரோசம்காரணமாக ஈழத்தமிழனத்தின் எழுச்சிக்காக குரல் கொடுத்து, கொடுங்கோலரின் உண்மை முகம் தமிழகமக்கள் அறியக்காரணமாக இருந்துவிட்டானே என்ற காழ்ப்புணர்ச்சி காரணமாக. பொய் வழக்குப்போட்டு, ஆள்த்தூக்கிச்சட்டத்தின் மூலம் ஒருவருடத்திற்கு வெளிவரமுடியாதபடி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சீமான் அவர்களை அவமரியாதைக்குட்படுத்தி அவமானப்படுத்தியதாக ஆகாதா, இவற்றை சாதாரணமாகவேனும் சிந்திக்கலாகாதா,

2008 ல் இந்திய பொம்மைப்பிரதமரை கூட்டமைப்பினர் சந்திக்க முற்பட்டவேளை. கோபாலபுரம், மற்றும் ஆள்வார்ப்பேட்டை, CஈD நகர், கருணாநிதியின் வீடுகளின் கேற் வாசல்களில் கூட்டமைப்பினரை காக்கவைத்து திருப்பி அனுப்பியதுரோகம் நடந்தபோதும், பின் 2010 போர்முடிவுக்கு வந்து ஒருவருடத்தின் பின்னும் கருணாநிதியை சந்திக்கப்போனவர்களை "ஏன் இங்குவருகிறார்கள் என்னத்திற்கு வருகிறார்கள்'' என அவமானப்படுத்தி கரித்துக்கொட்டி கலைக்கப்பட்டதாக ஜூனியர் விகடன் செய்தி வெளியிட்டிருந்தது, இவ்வளவு அவமானப்பட்டபின்னும். குறிப்பிட்ட கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கருணாநிதியின் காலை நக்குவதற்கு ஆர்வம் காட்டுகிறார்களென்றால். அவர்கள் அச்சுறுத்தப்படவேண்டும். அல்லது சொந்த இலாபம் ஏதாவது இருந்தாகவேண்டும்,

ஆனால், கருணாநிதியுடனான சந்திப்பில் இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரம், ஈழத்தமிழர்கள் விடயத்தில் மகிந்த அரசு கடைப்பிடிக்கும் போக்கு, இலங்கையில் தமிழர்களின் அரசியல் இருப்பு. போன்ற பல விடயங்கள் குறித்து சம்பந்தன் பேசினார் என்ற நகைச்சுவையும் தெரிவிக்கப்படுகிறது. அங்குதான் தமிழன் மிகவும் அச்சத்துடன் சந்தேகப்படுகின்றான், ஏற்கெனவே சம்பந்தர் ஐயா அவர்களின் நடவடிக்கைகளில் அவரால் முன்னெடுக்கப்படும் அரசியலில் மக்கள் அவநம்பிக்கைகொண்டு அச்சப்பட்டுக்கொண்டிருக்கும் இந்தத்தருணத்தில். மூன்றாம் கிட்லர் கருணாந்தியை சந்தித்திருப்பது. பலத்த சந்தேகங்களையும் ஐயத்தையும் கிளப்பிவிட்டிருக்கிறது, பணம் பொருள் ஏதாவதற்கு ஆசைப்பட்டு தடம்புரண்டுவிட்டாரா, குடும்பம் சென்னையில் குடியிருப்பதால் அச்சுறுத்தப்பட்டிருக்கிறாரா, என்பது புரியாத புதிராக இருக்கிறது,

இந்தியநாட்டில் சம்பந்தன் குடும்பம் தொடர்ந்து குடியிருந்து வருவதால். அவர் தனது தனிப்பட்ட (இருப்பு), குடியிருப்பு சம்பந்தமாக வேண்டுமானால் நட்பு ரீதியில் கருணாநிதியுடனோ, ஜெயலலிதாவிடமோ, சோனியாவிடமோ, பேசிவிட்டுப்போகட்டும். என்றும் விட்டுவிடமுடியாது, அவர் தமிழர்களுக்கான தனது பொறுப்பை களைந்துவிட்டு வேண்டுமானால் அவர்களுடன் கூட்டாகக்குடியிருக்கலாம், அதன்பின் அவரது தனிப்பட்ட விடயங்களில் பொதுவானவர்கள் தலையிடுவது நாகரீகமற்றது என்பதும் தமிழனுக்குத்தெரியும்,

மூத்த அரசியல்வாதி என்பதினாலும். வயதில் மூத்தவர் என்பதாலும். தேசியத்தலைவர் அவர்கள் சம்பந்தன் அவர்களுக்கு முதல் மரியாதை கொடுத்து கௌரவித்ததை தமிழர்சமுதாயம் ஏற்றுக்கொண்டிருந்தது,. ஆனாலும் சம்பந்தன் அவர்களது மந்தமான ஆளுமையற்ற அரசியல் நகர்வுகள்.சமையோசிதமாக முடிவெடுத்து நடந்துகொள்ளமுடியாத தன்மையும். பலரையும் அச்சப்படுத்தியிருந்ததை சம்பந்தர் அவர்களும் நன்கு அறிவார்,

இந்திய அரசியல்த்தலைவர்கள் பலர், பா ஜ க. தலைவர் அத்வானி அவர்கள் உட்பட, ஈழப்படுகொலையின் சூத்திரதாரியாக கருணாநிதியை பல இடங்களில் பலமுறை குற்றஞ்சாட்டியிருந்தனர், எதிர்க்கட்சித்தலைவி ஜெயலலிதா உட்பட தமிழ்நாட்டு அரசியல்த்தலைவர்கள் அனைவரும் குற்றஞ்சுமத்தியும் சோனியாவின் செல்லப்பிள்ளையான கருணாநிதி ஈழம் அழிந்து இல்லாமல்ப்போவதற்காக இன்றுவரை துரோகியாகவே இருந்துவருகிறார்,

அது மட்டுமல்லாமல் எம்மினத்தின்மீது மிகுந்த கரிசினைகொண்ட. மானத்தமிழரான மலேசிய நாட்டின் பினாங் மானிலத்தின் துணை முதல்வர், டொக்டர் பழனியப்பன் ராமசாமி, அவர்களும் கருணாநிதி ஈழக்கொலைகளில் சூத்திரதாரியென்றும், சிங்கள அரசாங்கத்துடன் இணைந்து படுமோசமான போர்க்குற்றத்தில் ஈடுபட்டாரென்றும். அதற்கான ஆதாரங்கள் தம்மிடமுள்ளதாகவும். அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் பலருடன் இணைந்து கருணாநிதியை குற்றவாளிக்கூண்டிலேற்றி விசாரணைக்குட்படுத்தப்போவதாகவும். அதற்காக ஒரு பிரத்தியேக குழுவை அமைத்திருப்பதாகவும். வெளிப்படையாக பல ஊடகங்களுக்குத்தெரிவித்திருந்தார், இவையெல்லாவற்றையும் அவமதிக்கும் இழி நடவடிக்கையாக சம்பந்தன் கருணாநிதி சந்திப்பு தமிழர் மத்தியில் வெட்கத்துடன் வெளிச்சமாகியிருக்கிறது,

இப்பேற்பட்ட கொலை குற்றவாளிப் பின்னணியைக்கொண்ட கருணாநிதிக்கு உடந்தையாக சம்பந்தரும். அவரது ''சகாக்கள் சிலரும்'' நெருக்கமான உறவை வைத்திருப்பது. தமிழ்ச்சமூகத்தை மீழமுடியாத சிக்கலுக்குள் தள்ளியிருக்கிறது, சிங்கள் ராஜபக்க்ஷதான் உலகம்முழுவதும் ஓடியோடி போர்க்குற்றத்தை திசை திருப்ப வினோதமான வேலைத்திட்டங்களில் ஈடுபடுகிறார்களென்றால். மறுபுறத்தே உள்ளேயும் துரோகங்கள் குடிகொண்டிருப்பது தமிழினத்தின் அரசியலை மேலும் சிக்கலாக்கியிருக்கிறது,

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டசபைத்தேர்தலை கணக்கில்க்கொண்டு. கருணாநிதி அவ்வப்போது தனது நிறத்தையும் பாத்திரத்தையும் ஆளாளுக்கு ஏற்றவாறு மாற்றி நடிக்க ஆரம்பிப்பது ஒன்றும் புதிதல்ல. சாகும்வரை தான் பதவியிலிருக்கவேண்டுமென்பதற்காகவும். தனது குடும்பத்தைவிட்டு தமிழ்நாடு கைநழுவிவிடக்கூடாதென்பதற்காகவும். எத்தகைய நாடகத்தையும் கருணாநிதி மேடையேற்றிக் கொண்டேயிருப்பார். அந்த நாடடக்காட்சிகளில் ஏமாறுவது ஏமாறாமல் புறந்தள்ளுவது இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் மக்களின் புரிதல் சம்பந்தப்பட்டது, கவனமாக இருக்காவிடில் காற்றுப்போன பையே மிஞ்சும்,

பொது வெளியீடு கனகதரன்,

நன்றி. ஈழதேசம் இணையம்,

Sunday, September 26, 2010


யாழ் சமூக இளைஞர் மத்தியில் இராணுவத்தின் ஊடுருவல்??.சீரழியும் பண்பாட்டு விழுமியங்கள், ''ஓடாத மானும் போராடாத இனமும் வாழ்ந்ததாக சரித்திரமில்லை'' புதுவை,

இன்று தமிழர்களின் தேசியத்துக்கான ஆயுதப்போராட்டம் ஏதோஒரு உறங்கு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கலாம். ஆனால் மக்கள் தமது வாழ்வாதாரத்திற்காகவும் சுய தனிமனித பாதுகாப்புக்காகவும் போராடிக்கொண்டுதானிருக்கின்றனர். அந்த நிலையை எவரும் எதற்காகவும் விட்டுக்கொடுக்கப்போவதில்லை. அதற்கு எவரும் தயாராகவுமில்லை,



இதுகூட போராட்டவடிவங்களில் ஒன்றுதான். இந்தநிலை சிறுகச்சிறுக பெரிதாகி மீண்டும் பழைய நிலைக்கு மாறி, ஆயுதப்போராட்டமாகி முடிவுபெறும் என்பதே நியதியாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது, இதை எவராலும் தடுக்கமுடியாமல் போகும் காலம் வெகு தூரத்திலில்லை.

ஏனெனில் தமிழினத்தை அடிமைத்தனத்துள் திணிக்கும் சிங்களவனின் ஒடுக்குமுறை வழிகாட்டலும் சமூக விரோதிகளின் செயற்பாடும் அப்படித்தான் சென்றுகொண்டிருக்கிறது, இதை இன்றய இளையதலைமுறையினர் உணர்ந்துகொள்ளவேண்டியவர்களாக இருக்கின்றனர்.

''ஓடாத மானும் போராடாத இனமும் வாழ்ந்ததாக சரித்திரமில்லை'' என்பது தாயகக்கவிஞர் ''புதுவை அண்ணன்'' அவர்களின் இரும்பு வரிகள். அவை இன்றுவரை சாத்தியப்பட்டதோ இல்லையோ. நிச்சியமான உண்மை அதுதான் என்பது ஒவ்வொருநாள் வாழ்க்கையிலும் உலக தமிழ்ச்சமூகம் நன்கு உணர்ந்தே வருகின்றது.

இன்று நடப்பதுதான் நாளைய நடைமுறையென்றோ நேற்று நடந்ததுதான் முடிவான முடிவென்றோ எதுவும் உலகத்தில் நிர்ணயிக்கப்பட்டதல்ல. ஒருபயிரை நாட்டி நீர் வார்த்து நன்கு பராமரித்தால் நற்பலன் கிடைக்குமென்பது இயற்கையான எதிர்பார்ப்பு. யதார்த்தமும் அதுதான்.

இலங்கைத்தீவில் காலாகாலமாக வாழும் தமிழ்த்தேசிய இனமும் சுதந்திரப்பயிரின் விளைச்சலுக்காக ''தன்மானத்துடன்'' அளவுக்கதிகமான சக்தியை செலவிட்டு அந்த எதிர்பார்ப்போடுதான் நீண்டகாலமாக சுதந்திர வாழ்க்கைக்காக போராடிக்கொண்டிருக்கிறது. சுதந்திரம் என்பது சமுதாயத்தை இருளில் இட்டுச்செல்லும் கலாச்சார பண்பாட்டு அழிவிலிருந்து மீழுவதையும் முக்கியமாக குறிப்பிடும்.

சமீப காலமாக யாழ் சமூக இளைஞர்களின் மத்தியில் மிகமோசமான கலாசார சீர்கேட்டை ஸ்ரீலங்கா இராணுவத்தினர் jaffnaதோற்றுவிப்பதாகவும் பல இளைஞர்கள் இதற்கு பலியகியிருப்பதாகவும் உலகம் முழுவதுமுள்ள தமிழ்ச்சமூகம் அதிர்ச்சியையும் கவலையையும் தெரிவிக்கின்றனர். இந்தச்சீர்கேடு இளைஞர்களைக்கடந்து பல முதியவர்களையும் உள்வாங்கி. இளம்பெண்களையும் தாய்மார்களையும் பாதிப்பதுதான் மிகக்கேவலமானதும் கவலைக்குரியதுமாகும்.

இப்போது யாழ்குடாநாட்டிற்கு வெளிமாவட்டங்களிலிருந்து நிறைய மக்கள் இடம்பெயர்ந்து கல்விகற்பதற்காகவும் வேறுபல காரணங்களிற்காகவும் இடம்பெயர்ந்தும் வாழ்ந்துவருகின்றனர். இவர்களில் இளம் பெண்கள் சந்திக்கும் இடைஞ்சல்கள் நெருக்கடிகள் அவர்களை மிகுந்த மன உழைச்சலில் தள்ளியிருக்கிறது.

அவர்களது தனிமனித சுதந்திரம் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் அதுபற்றி நம்பிக்கையுடன் முறையிடுவதற்கோ குற்றவாளியை தண்டனைக்குட்படுத்துவதற்கோ எந்த நம்பகமான அமைப்பும்தமிழர் மத்தியில் இன்று வெளிப்படையாக இல்லை.

இந்தப்பலவீனத்தை பயன்படுத்தும் சமூகவிரோதக்கும்பல்கள். மட்டமான பலகாரியங்களில் ஈடுபடுவதாக யாழ்ப்பாணத்திலிருந்து ஆதாரபூர்வமான தகவல்கள் தினமும் வெளியாகிக்கொண்டிருகின்றன.பாதுகாப்பு வழங்கவேண்டிய இடத்திலிருக்கும் எமது இளைஞர்களும் பெற்ற தகப்பனுக்கு நிகரான பெரியவர்களும் சிங்களவனின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப நடந்துகொள்ளும் வெட்கக்கேடான நடவடிக்கைகளும் வக்கிரங்களும் சம்பந்தப்பட்டவர்களுக்கு பலபக்கவிளைவுகளை காலத்தின் கட்டாயமாக நிச்சியம் தோற்றுவிக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது,

jaffnaவன்jaffnaனிப்பகுதியிலும், திருகோணமலை மட்டக்களப்பு பிரதேசங்களிலும் பாதிக்கப்பட்ட பல விதவைத்தாய்மாரும் உடல் ஊனமாக்கப்பட்டோரும் படும் அவஸ்தையும், அவர்களது பாதுகாப்பும் கேள்விக்குறியாகியிருக்குமிந்த நேரத்தில். ஓரளவு வாழக்கூடிய இடமாக இனங்காணப்பட்டிருக்கும்
பாரம்பரியம் மிக்க, யாழ்குடாவின் கலாச்சாரச்சீரழிவு. ஒட்டுமொத்த தமிழினத்தின் தலைகுனிவையும் முத்திரைகுத்தி உலக அரங்கின் ஊடகங்களில் சிரிக்கின்றன. இந்தச்சீரழிப்பின் பின்னணியிலுள்ளவர்கள் நிச்சியம் தமிழ்ச்சமூகத்தால் இனங்காணப்படும்போது மன்னிக்கப்படமாட்டார்கள் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் மனதில்க்கொள்ளவேண்டும்.

சமீபத்தில் யாழ்குடாநாட்டில் பல இடங்களில் பிரசிவிக்கப்பட்ட சிசுக்கள் (குழந்தைகள்) தெருவோரங்களில் கண்டுபிடிக்கப்பட்டன. யாரால் இக்குழந்தைகள் பெற்று வீசப்பட்டன என்று தெரியவில்லை எனக்கூறப்பட்டாலும் சீரழிக்கப்பட்டவர்கள் ஏதோ ஒருவழியில் ஆதரவற்ற இளம்பெண்கள். இவர்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள், அல்லது தவறாக நடத்தப்பட்டிருக்கிறார்கள், அல்லது பலாத்காரப்பட்த்தப்பட்டிருக்கிறார்கள்.

குடும்ப மானப்பிரச்சினை காரணமாக சில சம்பவங்களை வெளியே அடையாளம் காட்டமுடியாமல் உறவினர்களே சிலவற்றை மறைப்பதாகவும் சொல்லப்படுகிறது. இவையெல்லாம் தமிழினத்தின் மீது தொடுக்கப்பட்டும் ஒருவித வக்கிர அத்துமீறல் யுத்தமென்றே கொள்ளப்படவேண்டும்.

இதன் எழுவாய் இராணுவத்தினரின் தொடர்பிலிருக்கும் பலரும். மற்றும் ஒட்டுக்குழுக்களின் பின்னலில் தொங்கிக்கொண்டிருக்கும் கூட்டத்தினரும் தமது சமூகவிரோத இராணுவ செல்வாக்கைப்பயன்படுத்தி. மக்கள் மத்தியில் மிகமோசமான இடைவெளியையும், தோல்வி மனப்பாண்மையையும் தோற்றுவிக்கின்றனர், தென்னிலங்கை வியாபாரிகளின் கூட்டும் இராணுவத்தினரின் சகவாசமும் இதற்கு பக்கபலமாக இருப்பதாகவும் நம்பப்படுகிறது.

நேற்றைய தினம் கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் சேவீஸ்வீதி, 10 வீட்டுத்திட்டம் குடியிருப்பில் இரவு துணிகரமாக வீடு பூர்ந்த இராணுவச்சிப்பாயை துணிச்சலுடன் தன்னந்தனியாக அந்த வீட்டு உரிமையாளர் துரத்தி கத்தியால் வெட்டி துரத்திய சம்பவத்தை தமிழ் சமூகம் மறக்கமுடியாது.
இந்தப்பின்னணியில்த்தான் சில காலமாக தமிழனின் வாழ்வு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

இலங்கையிலுள்ள தமிழ்த்தேசியஇனம் போராட்டத்தின் மூலம் தனது சுதந்திரத்தை பெற்றுக்கொண்டாலேயொழிய எந்தக்காலத்திலும் சுதந்திரமாக வாழ தமிழினத்தை சிங்களவன் அனுமதிக்கப்படப்போவதில்லை. இந்த யதார்த்த உண்மையை தேசியத்தமிழினம் தொடர்ந்து ஆழமாக நம்பினாலும் சிலர் சுயலாப நோக்கத்திற்காக மானங்கெட்ட இனத்துரோக மோசடிகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருவது ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்தை வெட்கப்பட வைக்கிறது.

கலாசாரசீர்கேடுகளும் அன்றாடவாழ்வியல் நெருக்கடிகளும் ஒரு சமூகத்தை தொடர்ந்து பாதிக்குமாக இருந்தால் அந்த இனம் jaffnaஅழிகிறதென்று தெரிந்துகொள்ளலாம். அங்கு சுதந்திரம் உறுதிப்படுத்தப்படவில்லை .இந்நிலை தொடருமானால் ஒருசமூகம் அழிவின்பால் வேகமாக
செல்லுகின்றதென்பதுதான் அர்த்தமாகும். அதற்கு தமிழ்த்தாயின் வயிற்றில் பிறந்த ஒருவன் துணையாக சோரம்போனால் அந்தத்துரோகியை சமூகத்தின் முன் இனங்காட்டவேண்டியது சரியான தமிழ் இளைஞனின் கடமையாகும்.

தமிழ்ச்சமூகம் இப்படியே அழிந்து போய்விடுமென்று எவரும் கற்பனையில் மூழ்கி மலங்கழித்துக்கொண்டிருக்க அனுமதிக்கமுடியாது. எல்லாவற்றிற்கும் எதிர் விளைவு இருந்துகொண்டேயிருக்கும் உறங்குநிலையில் இருப்பவை எந்தநாளும் உறக்கத்திலேயே இருந்துவிடுமென்று எண்ணி மேற்கொள்ளப்படும் சமூகவிரோதம் நிச்சியம் அழிக்கப்படும். அதற்கு மக்களின் ஒத்துழைப்பும் பரசுபர ஒற்றுமையுமே வழி வகுக்கும்.

சிங்களவனும் உலகவல்லாதிக்கங்களும் சொல்லுவதுபோல போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தால் தமிழனின் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கவேண்டும். நான் சுதந்திரமாக உலாவுவதை உளப்பூர்வமாக நான் உணரவேண்டும். அப்படியல்லாமல் எனது சுதந்திரம்
எங்காவது பறிக்கப்பட்டிருந்தால் சுதந்திரம் மறுக்கப்பட்டிருந்தால் என்னை வழிநடத்தமுயலுபவன் என்னை அடிமையாக வைத்திருக்கின்றான் என்பதுதானே உண்மை. அதை உடைத்தெறிய நான் நிர்ப்பந்திக்கப்பட்டால் அது எனது தவறல்லவே,

ஈழதேசம் இணையத்திற்காக.
கனகதரன்,

http://www.eeladhesam.com/

Friday, September 24, 2010

போர்க்குற்ற விசாரணையை திசைதிருப்ப முனையும் இந்தியாவுக்கு ஐநா ஒத்துழைக்குமா,???

போர்க்குற்ற விசாரணையை திசைதிருப்ப முனையும் இந்தியாவுக்கு ஐநா ஒத்துழைக்குமா,???

இலங்கையில் ஈழ தமிழர்கள்மீது நடத்திமுடிக்கப்பட்ட. ஒரு படுமோசமான மனித இனப்படுகொலையை விசாரணை செய்யச்சொல்லி. உலகிலுள்ள எத்தனையோ ஜனநாயகநாடுகளும், மனிதநேய அமைப்புக்களும், கூட்டாக கூக்குரலிட்டு நீதிநியாயம் வேண்டிப்போராடும் வேளையில். இலங்கை தொடர்பான போர்க்குற்ற விசாரணைகளை ஒத்தி வைக்குமாறு இந்தியா, ஐக்கிய நாடுகள்சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது,

இப்படி வக்கிரமாகவும் மிகவும் கீழ்த்தரமாகவும் ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியா இறங்கியிருப்பது இன்றுமட்டுமல்ல பல்லாண்டுகளாக செய்துவந்தாலும். இந்தியா தனது காட்டுமிராண்டி அரசியலை சர்வதேசத்திற்கும் கொண்டுசேர்க்க நியாயம்துறந்து மானம்துறந்து சர்வ நிர்வாணியாக தலைவிரித்தாடுகிறது.

இந்திய இலங்கை உடன்படிக்கையின் பின்னர் அமைதி காக்கும் நோக்கில். இலங்கைக்கு விஜயம்செய்த இந்திய அமைதிகாக்கும் படையில் கடமையாற்றிய ''சித்தார்த்த சட்டர்ஜீ'' என்ற உயர் இராணுவ அதிகாரி இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சித்தார்த்த சட்டர்ஜீ, ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் மகளைத் திருமணம் முடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதிலிருந்து, இந்தியாவின் அரசியல்வாதிகள் உயர் அதிகாரிகளின் தன்னிச்சையான குடும்ப அரசியல் கலாச்சாரம், சர்வதேச மட்டத்தில் அதிகாரத்திலிருப்பவர்கள் கூட தங்கள் நலன் சார்ந்து எந்தவிதமான மாற்றங்களையும் அதிகாரமட்டத்தலையீடுகளையும், ஐநா மன்றம்வரை குடும்ப செல்வாக்கைப்பயன்படுத்தி நீட்டிக்குறுக்க முடியுமென்ற அசிங்கமான உண்மை உலகுக்கு சொல்லப்பட்டிருக்கிறது,

இதில் எவ்வளவு சாதகபாதகம், நடைமுறையில் தோற்றம் பெறும் என்பது ஒருபுறம் விவாதத்துக்குள்ளதாக இருப்பினும், மேற்சொன்ன செய்தியில் ஓரளவு உண்மைத்தன்மை உள்ளதென்பது பான் கீ மூன் அவர்களின் செயற்பாடுகளில் அவ்வப்போது எதிரொலித்துக்கொண்டு மிருந்ததை உணரலாம்,

இலங்கை ஜனாதிபதி ராஜபக்க்ஷவும் கூட்டாளிகளும். இந்தியாவுக்கும் ஐநா சபைக்கும் எந்தமதிப்பும் கொடுக்காத போதிலும். ஈழபடுகொலை போர்க்குற்றத்தை தடுத்து நிறுத்த, அல்லது திசைமாற்ற, இந்தியா தன்னிச்சையாக தேவையற்ற விதத்தில் தலையிடுவதன் பின்னணியில் படுபயங்கரம் மறைந்திருப்பதை ஒவ்வொருவரும் உணர்ந்துகொள்ளவேண்டும். தேவையில்லாமல் இலங்கையில் இடம்பெற்ற மனித அவலப்போர்க்குற்றத்தை இலாபநோக்கமில்லாமல் இந்தியா தலையிட்டு நிறுத்தவேண்டிய தேவையில்லை. விசாரணையின் முடிவு இந்தியாவுக்கு பாதகமான சூழலை ஏற்படுத்திவிடும், அல்லது இந்தியா இழைத்த குற்றம் உலக அரங்கில் அம்பலப்பட்டுப்போகும் என்ற பயம். இந்தியாவை பீடித்திருக்கிறது, என்பதை கைபிடித்துப்பாற்காமலே இந்தியாவின் இந்த உதறலும் உளறலும் வெளிக்காட்டி நிற்கிறது,

சர்வதேச மனுதர்ம அமைப்புக்களின் இடைவிடா நெருக்குவாரத்தால் தோற்றுவிக்கப்பட்ட. பான் கீ மூனின், இலங்கை தொடர்பான ஆலோசனைக் குழு அண்மையில் தமது பணிகளை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதேநேரம் இலங்கையின் சர்வாதிகார அதிபர் தன்பாட்டிற்கும் நல்லிணக்க ஆணைக்குழு என்று ஒன்றை உருவாக்கி தனக்கு விசுவாசமானவர்களை நியமித்து விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார்.

சமீபத்தில் விசாரணைகளை தொடங்கியிருந்த சிறிலங்கா அரசின் விசாரணைக்குழுவின்முன், தனது மனஆறுதலுக்காக குழு முன்னிலையில் சாட்சியமளித்த, விடுதலைப்புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர்களில் ஒருவரான எழிலனின் மனைவி, சிறிலங்கா அரசின் விசாரணைக்குழு முன்னிலையில் தனது கவலைகளை தைரியமாக மிகத்தெளிவாக தெரிவித்தார்.

இந்த குழு முன்பு சமூகமளித்த விடுதலைப்புலிகளின் திருகோணமலை அரசியற்துறை பொறுப்பாளரான எழிலனின் மனைவி ஆனந்தி சசிதரன், தன்னுடைய கணவர் எழிலன், வணக்கத்துக்குரிய அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் தலைமையில், எழிலன் மற்றும் பல அரசியல் துறைப் போராளிகள் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைவதை தான் நேரில் பார்த்ததாகவும், அதன் பின்னர் தனது கணவர் குறித்து எவ்வித தகவலும் இல்லை என கூறியுள்ளார்.

இந்தக் குழுவின் விசாரணைகள் பல பொதுமக்கள் முன்னிலையில் பகிரங்கமாக நடைபெறுகின்றன. என்றாலும், குறிப்பிட்ட இந்த விசாரணைகளுக்கு பிபிசி செய்தியாளர்கள் சென்று செய்தி சேகரிக்க அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது. மறுப்புக்கு காரணம் தொடர்பில் அரசாங்கம் விளக்கம் எதுவும் அளிக்கவில்லை. அரசாங்கத்தின் இத்தகைய தமிழர்விரோதம் பற்றிய தொடர் நிலைப்பாடுகள் விசாரணைக்குழுவின் நம்பகத்தன்மையில் மீண்டும் சந்தேகத்தை இரட்டிப்பாக்கியிருக்கிறது. ஏனெனில் குற்றத்தையும் கொலைக்களத்தையும் நடத்தியவனே விசாரணைக்குழு அமைத்து விசாரிக்கும் அவலமும் ஈழத்தமிழர்கள் முன் உருவாக்கி பக்கச்சார்பற்ற வகையில் சர்வதேச பத்திரிகையாளரின் பார்வையையும் தடைசெய்திருப்பது விசாரணையின் முடிவின் லட்சணம் எந்தளவுக்கு தமிழருக்கு நீதி வழங்குமென்பதை காட்டுகிறது,

இலங்கை இந்திய வரலாற்றில் விசாரணைக்குழுக்கள் என்பதே காலத்தை இழுத்தடிப்பது, பிரச்சினையை திசைதிருப்புவது அல்லது குறிப்பிட்டபிரச்சினையை இல்லாமல் செய்யும் வசதியான உத்தியென்றே கடந்தகால நிகழ்வுகளின் பாடங்கள் போதித்திருக்கின்றன. இதையும் தமிழர் தரப்பு கவனமாக நினைவில்க்கொள்ளவேண்டிய ஒன்றாகும்.

இன்று புலம்பெயர் சமூகம் இடைவெளியில்லாமல் தொடரும் காத்திரமான வேலைத்திட்டங்களான. கவனயீர்ப்பு நடைப்பயணங்கள். ஜனநாயகரீதியான போராட்டங்கள், சர்வதேசகவனத்தை ஈர்த்துநிற்க்கும் இந்தநேரத்தில். முக்கியமாக இனப்படுகொலை விசாரணைகளை தாமதிக்காமல் துரிதப்படுத்தும் கோரிக்கைகளை வேண்டுகோளாக மட்டும் வைக்காமல். எம்பக்கத்து நியாயங்களை அவர்கள் உள்வாங்கச்செய்யவேண்டிய கட்டாயமும் புலம்பெயர் சமூகத்துக்குண்டு,

ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு, கனடியத்தமிழர் அமைப்புக்கள், நாடுகடந்த தமிழீழ அரசு அமைப்பு, ஐரோப்பியத்தமிழர் அமைப்புக்கள், கூட்டாகவோ தனித்தனியாகவோ, ஐநா வால் ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்ட போர்க்குற்றவிசாரணையை எந்தத்தலையீடுகளும் குறுக்கீடு செய்து குளப்பிவிட இடமளித்துவிடக்கூடாது,

ஈழத்தின் குரலாக ஸ்ரீலங்கா அரசின் விசாரணைக்குழுவின்முன் விடுதலைப்புலிகளின் திருகோணமலை அரசியல்த்துறைப்பொறுப்பாளர் எழிலனின் மனைவி ஆனந்தி துணிச்சலான ஒரு ஆரம்பத்தை தொடக்கிவைத்திருக்கிறார்,

இன்றைய சூழலில் ஈழத்திலிருந்து துணிவான ஒருகுரலை இவ்வளவு விரைவில் எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை, இந்த ஆரம்பம் விசாரணைகளில் தோற்றப்போகும் பாதிக்கப்பட்ட இன்னும் பல தமிழ் உறவுகளுக்கும் ஈழத்திலுள்ள தமிழ் அரசியல்வாதிகளுக்கும் ஒரு துணிச்சலான ஆரம்பமாக அமைந்திருக்குமென்றும் நம்பலாம்,

யுத்தம் முடிவடைந்தபின் சரணடைந்த விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்கள், போராளிகள், தீவிர ஆதரவாளர்களின், இருப்பு பற்றிய கேள்வி இன்னும் அதிகரித்திருக்கிறது, 3,00,000 இலட்சத்துக்கு அதிகமான பொதுமக்களும் 12,000 ஆயிரத்துக்கும் அதிகமான விடுதலைப்புலிகளும் கடைசி நேரத்தில் அரச படையினரிடம் சரணடைந்திருந்தனர், மூத்தவிடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் இதில் சேர்த்ததாக தெரியவில்லை, படிப்படியாக கணக்கு குறைக்கப்பட்டு கடைசியாக 7,000 க்கும்குறைவானபோராளிகளுக்குள்தான் கணக்கு இருந்ததாதாகவும் அவர்களும் படிப்படியாக
விடுவிக்கப்பட்டு வருவதாகவும் சிங்கள அரசால் கணக்கு முடிக்கப்படுகிறது,

மூத்த உறுப்பினர்களின் கதை எதுவும் வெளிவரவில்லை, சரணடைந்தவர்களுக்கு பொறுப்பாகவிருந்த டி.யு. குணசேகர, மூத்த உறுப்பினர் வே. பாலகுமாரனின், மற்றும் தாயகக்கவிஞர் புதுவை இரத்தினதுரை ஆகியோரின் இருப்புப்பற்றிய கேள்வியுடன் மௌனமாகிவிட்டார்,

பொதுமக்களில் பல இளம் பராயத்தினர் ஆரம்பகாலத்திலேயே இரவுகளில் முகாம்களில் இருந்து வெள்ளை வான்கள் மூலம் காணாமல் போனதும் மறந்தகதையாகிவிட்டது, இனியொரு சுயாதீன விசாரணைக்குழுவொன்று விசாரிக்கும் பட்ஷத்தில் சிலகணக்கு வெளிவரலாம், வெளிவராமலும் போகலாம், பத்து பன்னிரண்டு என்று ஒட்டுமொத்த குடும்பமாக கொல்லப்பட்டு இல்லாமல்ப்போய் தேடுவதற்கு ஆளில்லாத கணக்குகளும் மண்ணோடு மண்ணாகி அவை முடிந்தகதை, முள்ளிவாய்க்கால் முற்றுகைக்குள் அழிக்கப்பட்ட கணக்கு இங்கு எவருக்கும் எவரும் சரியாக வெளிப்படுத்தவில்லை,

இந்த லட்சணத்தில் இந்தியா ஐநா செயலாளரை அணுகி விசாரணைகளை ஒத்திவைக்குமாறு கேட்டதாகச்சொல்லப்படுகிறது, இவைஎல்லாவற்றிற்கும் முடிவுகட்ட ஏதாவது மாற்றீட்டுத்திட்டம் இல்லாமலில்லை, ''நாம்தான் அந்தக்கதவை தட்டி அணுகாமலிருக்கிறோமோ'' எனவும் எண்ணத்தோன்றுகிறது.

சமீபத்தில் : பொன் - குகதாசன் அவர்கள் எழுதியிருந்த ஒரு கட்டுரையில் சில நியாயங்கள் அவரால் முன் வைக்கப்பட்டிருந்தது, சுதந்திரமடைந்த காலந்தொட்டு இலங்கைத் தீவில் மாறிமாறி வந்த சிங்களப் பெரும்பான்மை மொழி மதவாத அரசாங்கங்கள் யாவும், தாங்கள், ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட , அரசியலமைப்பைக் கொண்ட சுய தன்னாதிக்கம் உள்ள ஒரு இறைமையுள்ள அரசாங்கம் என்ற வகையில் தங்களது எந்தத் தவறுகளை யார் சுட்டிக் காட்டினாலும், ஐ நா அடங்கலாக அனைவரையும் உள்ளக விவகாரங்களில் தலையிடுவதாக குற்றஞ்சாட்டி மறுதலிப்பது வழமையாகிவிட்டது. என்பதை சுட்டிக்காட்டி இன்னும்பல நடைமுறைச்சாத்தியமான விடயங்களையும் முன்வைத்திருந்தார்,

உலக நாடுகளை அவசியமானபோது கூட கட்டுப்படுத்தும் பலத்தை ஐ நா இழந்து விட்டமையும், உலகை உலுப்பிக் கொண்டிருந்த அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சி காரணமாக எந்த நாட்டின் மீதும் அதனால் படையெடுக்க இயலாத இன்றைய நிலையும், போரை விரும்பாத ஒபாமாவின்
அமெரிக்காவும், சீனாவின் எழுச்சியும், உலக ஒழுங்கு மாற்றமுமே தவிர வேறுகாரணங்கள் காணப்படவில்லை. என்றும் குறிப்பிட்டிருந்தார் ,

இந்தச்சந்தற்பத்தை பயன்படுத்தி சீனாவின் கழுத்தில் சிறீலங்கா ஏறி அமர்ந்து கொண்டு ஐரோப்பா அமெரிக்கா இந்தியா போன்ற தேசங்களுடனேயே வாதத்தில் இறங்கியுள்ளது., .

ஈராக் மீதான படையெடப்பை ஐ நாவை மீறி அன்று அமெரிக்கா எடுத்தமையால் தான் ஐ நா முற்றாகவே செல்லாக்காசாக்கப்பட்டது. இப்போது அமெரிக்கா பொருளாதார வீழச்சிக்குள் படு வேகமாக கீழிறங்கிக் கொண்டிருக்கையில் சீனா உச்ச பலத்தை அடைந்து விட்டது. அமெரிக்கா அன்று தான்விட்ட தவறால் சீனாவை தட்டிக்கேட்க அமெரிக்காவால் இன்று முடியவில்லை,

மறு புறத்தில் அஞ்சினாலும் போர்க் குற்ற விசாரணையிலிருந்து தப்ப வேறு மார்க்கமேயில்லாமல் விளைவுகளை கருதாமல் சீனாவுடன் சிங்கள ஆட்சியாளர்கள் சேர்ந்துள்ளனர். இதன் வாதங்களின் போது பயன்படும் வெறும் சொற்கள் தான் இந்த இறைமை, அரசியலமைப்பு, மக்கள் முடிவு, நீதி மன்ற முடிவு போனறனவே ஒழிய, இறைமை அல்ல.

மனித உரிமைச் சாசனங்களில் ஒப்பமிட்டுவிட்டு அவற்றை மக்களால் அல்ல மகேசனால் கூட அடிப்படை மனித உரிமை விதிகளை மீற முடியுமா? மூன்றில் மூன்று பலமிருந்தாலும் வாக்கெடுப்பிற்கு விட முடியாத, விடக் கூடாத அம்சங்களை சிறீலங்காவானது வாக்கெடுப்பிற்கு விட்டுக் கொண்டிருக்கிறது. இதனால் தானே என்னமோ சில நாடுகளின், அரசியலமைப்புக்களில் அடிப்படை விதிகள் என ஒரு பகுதியை வாக்கெடுப்பிற்கு விட முடியாத பகுதியாக வரையறை செய்து வைத்துள்ளனர்.

உண்மையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியலமைப்பைக் கொண்ட ஜனநாயக நாட்டின் தேசிய எல்லைகளிற்குள் நீதிச் சட்டங்களின் கரங்கள் இலகுவாக நுழைய இயலும். இதற்கு ஏற்றாற் போல் ஐ நா வில் பல வழிவகைகள் உள்ளன. “ஆர் ரூ பி” என்று அழைக்கப்படும் பாதுகாப்பதற்கான கடமை சர்வ தேச நாடுகளிற்கு உண்டு. பிராந்திய அமைப்புக்கள் அடங்கலாக வெளிநாடுகளிற்கு சர்வ தேசப் பொறுப்பு என்று ஒன்றும் உண்டு. யாரும் உள்நாட்டு விடயங்களில் தலையிட முடியததென்றால் இவை தோற்றம் பெற்று செயற்பட்டது எப்படி,

அடுத்து சிறீ லங்கா அரசானது , மக்கள் அங்கீகாரம் என்பதையும் காட்டி தர்க்கம் செய்து வருகிறது. உரிமை என்ற சொல்லிற்குள்ளேயே அது அவர்களிற்கு உரியது என்னும் போது இறைமையுள்ள அரசைக் கொண்டிருந்த தமிழ்த் தேசிய இனத்தின் உரிமையின் அளவை தீர்மானக்கும் அதிகாரத்தை எந்த ஜனநாயகம் பெரும்பான்மை இனவாத வாக்காளரிற்கு கொடுத்தது.

எல்லா முடிவுகளையம் வாக்கெடுப்பிற்கு விட இயலாதே. தமிழர்களை இலங்கைத் தீவில் கடலுள் தள்ளி கொல்வதா வேண்டாமா என்று சர்வ சன வாக்கெடுப்பை சிறீ லங்காவில் நடாத்தினால் கொல்லத்தான் வேண்டும் என்று தான் சிங்கள மக்கள் வாக்களிப்பர். இது மக்கள் தீர்ப்பா? அல்லது மக்களின் இனவாத ஆசையா?

சரணடைந்தமைக்கான சாட்சியங்களும் வெளியாகிவிட்டன. ஒரு வீட்டுள் ஒருவரை இன்னொருவரைக் கொன்றது உறுதியாகிய பின்னரும் யாரும் அந்த வீட்டிற்குள் நுழைய இயலாதா? தட்டிக் கேட்க இயலாதா? விசாரனை நடாத்த பொலிசாரிற்கும் அனுமதி இல்லையா, உண்மை என்னவென்றால் இந்த அடிப்படையில் வாதிட கொழும்பில் எந்தவொரு நாட்டுத் தூதரும் தயாராகவில்லை. என்பது தான் உண்மையே ஒழிய இறைமை அவர்களிற்கு தடை போடுவது என்பது எற்புடையது அல்ல.


சர்வதேசதரத்தில் அல்லது உரிய முறையில் இடம் பெயர்ந்த தமிழ் அகதிகளை கவனிக்க பொருளாதார பலம் இல்லை உதவுங்கள் என்று சிறீ லங்கா கேட்டால் உங்களிற்கு ஏன் சிரமம் நமது நாட்டு தொண்டர் நிறுவனங்களை அனுமதியுங்கள் என்று கனடாவும் ஐரோப்பிய நாடுகளும் கேட்கவும் இறைமை தடுக்குமா?

புலம்பெயர் சமூகம் முனைப்புடன் செய்ய விளையும் திட்டங்களில் எதையாவது முன்னிலைப்படுத்த முனையும்போது முதலாவதாக போர்க்குற்ற விசாரணைகளை முன்வைக்கவேண்டும் போர்க்குற்றவிசாரணைகள் முன்னெடுக்கப்படும் போது மற்றய வேலைத்திட்டங்கள் தானாக முகங்கொடுக்கும், தவறும் பட்சத்தில் நல்லிணக்கம், அரசியல்த்தீர்வு சர்வதேச தொண்டர் நிறுவனங்கள் சர்வதேச ஊடகங்களையும் அனுமதிக்கக்கோரவேண்டும்,

இவைதான் இன்று புலம்பெயர் சொந்தங்கள் ஈழத்தில் தவிக்கும் உறுவுகளுக்கு ஈட்டித்தரக்கூடிய அரசியல் மறுமலர்ச்சியாகும். ஈழத்திற்கான ஆரம்பமும் அதிலிருந்துதான் ஆரம்பமாகும், ஈழத்தின் சோர்வை போக்கும் அரசியல் புலத்திலிருக்கும் ஈழத்தமிழரின் கைகளினால்த்தான் முடிவுபெறும் என்ற யதார்த்தம்தான், போராட்டம் தனக்கு தேவையான்வர்களை புலத்தை நோக்கி நகர்த்திவைத்திருக்கிறது, அவைதான் யூதர்களின் இஸ்ரேலின் பிறப்பின் வரலாறுமாகும்,

பொது வெளியீடு
கனகதரன்,

நன்றி ஈழதேசம்,

மீண்டும் எழுந்து போராட வேண்டிய கடமை தமிழினத்திற்கு உண்டு

மீண்டும் எழுந்து போராட வேண்டிய கடமை தமிழினத்திற்கு உண்டு - திருச்சியில் ஆரம்பித்துள்ள போர்முகங்கள் ஓவியக்காட்சியில் ஓவியர் புகழேந்தி.(படங்கள் இணைப்பு)

kankaachchi புரட்சி ஓவியர் புகழேந்தியின் ஓவியங்கள் போர்முகங்கள் என்ற தலைப்பில் திருச்சியில் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றது. தனது உள்ளக்குமுறல்களை ஓவியத்தின் மூலம் வெளிப்படுத்தி வரும் ஓவியர் புகழேந்தி அவர்கள் 27ஆண்டுகளாக சமூகப்பார்வையோடு ஓவியப்பணி ஆற்றி வருகின்றார்.



1983ம் ஆண்டு தமிழர்கள் சிங்கள காடையர்களால் இனப்படுகொலை செய்யப்பட்டது முதல்கடந்த ஆண்டு முள்ளிவாய்காலில் அனைத்துலக நாடுகள் சிங்களத்துடன் சேர்ந்து எமது விடுதலைப் போராட்டத்தை அழித்தொழித்ததுடன் அதன் கட்டமைப்புகளையும் எமது மக்களையும் ஒருசேர கொன்று குவித்து நரவேட்டையாடியது வரை ஈழப்போராட்டத்துடன் தன்னை இணைத்து கொண்டு போராடிவரும் புரட்சி ஓவியர் புகழேந்தி அவர்கள் தனது தூரிகை மூலம் உலக மக்களது ஆண்மாவை தட்டிஎழுப்பும் உண்ணத பணியை ஆற்றிவருகின்றார்.kankaachchi

குறிப்பாக கடந்த ஆண்டு முள்ளிவாய்காலில் வைத்து தேசியத் தலைமை ஆயுதங்களை மௌனிக்க செய்த பின்னரான இன்றுவரையான காலப்பகுதியில் உலகத்தமிழர்கள் அரசியல் வெற்றிடத்தில் துயருற்று இருக்கும் வேளை தனது தூரிகையினை ஆயுதமாக ஏந்தி களமாடிவருகின்றார் புரட்சி ஓவியர் புகழேந்தி அவர்கள்.
kankaachchi
இன்று ஆரம்பித்து 26ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை காட்சிப்படுத்தப்பட இருக்கின்றது. முன்னதாக அன்று காலை 10மணிக்கு ம.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனேசமூர்த்தி அவர்கள் திறந்துவைக்க நிகழ்வுகள் ஆரம்பமாகின. தொடர்ந்து ஓவியர் புகழேந்தி உரையாற்றுகையில்...kankaachchikankaachchi

உலக வரலாற்றில் மனித இன விடுதலைக்கான போராட்டங்கள் பல நடைபெற்றிருக்கின்றன. இனத்தின் பேராலும், நிறத்தின் பேராலும் நடைபெற்ற ஒடுக்குமுறைகளை எதிர்த்துப் போராடிய பல்வேறு இன்னல்களையும் துயரங்களையும் அடக்குமுறைகளையும் சந்தித்து அப்போராட்டங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன.
kankaachchi
அதேபோல் இரத்தம் தோய்ந்த தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் சந்தித்த ஆபார்களும் இழப்புகளும் கொஞ்சமல்ல. பிறந்த மண்னைத் துறந்து சொந்த மக்களை இழந்து உலகின் பல்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்து ஏதிலிகளாக வாழும் நிலை.
kankaachchi
எல்லாவற்றையும்விட இந்த நூற்றான்டின் மனிதப்பேரவலம் தமிழீழத்தில் நடந்து இருக்கின்றது. ஈழத்தமிழினத்தைப்போல் பாவப்பட்ட வேறொரு இனம் தற்போது இருக்க முடியாது. அந்த அளவிற்கு பலவந்தமாக அவலப்படுத்தப்பட்ட இனமாகவும் சர்வதேசத்தினால் முற்று முழுதாகக் கைவிடப்பெற்ற ஓர் இனமாகவும் ஈழத்தமிழினம் போய்விட்டது. என்பது சோகத்திலும் சோகம். வல்லரசு வல்லூறுகளின் பிராந்திய வல்லாதிக்கப் போட்டிகளின் நடுவே சிக்குண்டு சின்னாபின்னமாகிப்போனது ஈழத்தமிழரின் வாழ்வு. வளமாய் வாழ்ந்த இனம் இன்று தன் வாழ்வைத் தொலைத்து நிற்கின்றது.
kankaachchikankaachchikankaachchi
ஆனால் மீண்டும் எழுந்து போராட வேண்டிய கடமை தமிழினத்திற்கு உள்ளது. எந்தப் போராட்டங்களிலிருந்தும் என்னால் விலகி நிற்கமுடியவில்லை. அது என்னால் இயலாது. அவ்வாறு ஒரு மனிதனாக ஈழப்போராட்டத்தை கடந்த 27 ஆண்டுகளாக உள்வாங்கியவைகளை ஒரு கலைஞனாக புயலின் நிறங்கள் உயிர் உறைந்த நிறங்கள் போன்ற தலைப்புகளில் ஏற்கனவே வெளிப்படுத்தியிருக்கின்றேன்.

தற்போதைய போர்முகங்கள் ஓவியங்களும் ஒரு வரலாற்றுச் சான்று. இவ்வாறு ஓவியர் புகழேந்தி தெரிவித்தார்.
kankaachchikankaachchikankaachchikankaachchikankaachchikankaachchikankaachchikankaachchikankaachchikankaachchikankaachchikankaachchikankaachchikankaachchikankaachchikankaachchikankaachchikankaachchikankaachchikankaachchikankaachchikankaachchikankaachchikankaachchikankaachchikankaachchi
ஈழதேசம் செய்தியாளர் மு.காங்கேயன்

நன்றி ஈழதேசம் இணையம்,

Monday, September 20, 2010

2030 வரை திமுக தமிழ் நாட்டில் தொடர்ந்தால்

2030 வரை திமுக ஆட்சி தொடர்ந்து நடைபெறுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது, தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் எப்படி இருக்கும் தெரியுமா ?

இப்படித்தான்.


தமிழ்

11

முதலில் கடவுள் வாழ்த்து

மொழி வளர்த்த ஆசாடபூதியே போற்றி

திருக்குவளை தீய சக்தியே போற்றி

மஞ்சள் துண்டு மடாதிபதியே போற்றி

காகிதப்பூவை மணந்த கண்ணனே போற்றி

கனிமொழியின் தந்தையே போற்றி

செம்மொழி மாநாடு தந்த செம்மலே போற்றி

அஞ்சாநெஞ்சனை பெற்ற அண்ணலே போற்றி

தளபதியின் தந்தையே போற்றி

மானாட மயிலாட தந்த மன்னவா போற்றி

குஷ்பூவை கட்சியில் சேர்த்த தலைவா போற்றி

வீல் சேரில் வரும் வில்லனே போற்றி

சிங்களனை வாழவைத்த சிற்பியே போற்றி

ஈழத்தை அழித்த இதயமே போற்றி

தமிழின துரோகியே போற்றி போற்றி

அடுத்து மொழி வரலாறு.

தமிழ் என்ற மொழி, 20ம் நூற்றாண்டு வரை, எழுத்து வடிவம் பெறாமல் பேச்சு வடிவிலேயே இருந்தது. 20ம் நூற்றாண்டில் திருக்குவளையில் பிறந்த முத்துவேல் கருணாநிதி என்பவர் தான் தமிழ் என்ற மொழிக்கு எழுத்து வடிவத்தை தந்தவர். அவர் பிறந்த பிறகுதான் தமிழே பிறந்தது.

தமிழ் மட்டும் இல்லாமல், இயற்றமிழ், இசைத் தமிழ் மற்றும் நாடகத்தமிழ் ஆகிய அனைத்தையும் கண்டு பிடித்ததால் தான், கருணாநிதியை முத்தமிழ் அறிஞர் என்று அழைக்கின்றனர்.

20ம் நூற்றாண்டு வரை, திருக்குறளை திருவள்ளுவர்தான் கண்டுபிடித்தார் என்று சில பார்ப்பன ஏடுகள் திரித்து எழுதிக் கொண்டிருந்தன. 2010ல் வாழ்ந்த சிறந்த மொழியறிஞரான வாலி என்பவர் தான், திருக்குறளை எழுதியது கருணாநிதிதான் என்று கண்டு பிடித்தார். திருக்குறள் மட்டுமல்லாமல், கருணாநிதி, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, கம்பராமாயணம் என்று பல்வேறு இலக்கியங்களை கருணாநிதி எழுதியுள்ளார் என்று வாலி கூறியுள்ளார்.

21ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர் வைரமுத்து என்பவர், தமிழை மட்டுமல்ல, பாரசீகம், உருது, வங்காளம், இந்தி, துளு, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளுக்கும் எழுத்து வடிவை தந்தவர் கருணாநிதி தான் என்று ஒரு மொழி ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இது மட்டுமல்லாமல், கருணாநிதி தொல்காப்பியம் என்ற தமிழ் இலக்கண நூலையும் எழுதியுள்ளார் என்று வரலாற்று ஏடுகள் தெரிவிக்கின்றன.

கணிதம்.

திருக்குவளையிலிருந்து திருட்டு ரயிலில் வந்த ஒரு தகரப் பெட்டி, பல்லாயிரம் கோடிகளாக எப்படி மாறுவது என்பதை மாணவர்கள் கணக்காக போட வேண்டும்.

அடுத்து, ஒன்று இரண்டாக, இரண்டு மூன்றாக, பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கையில் குடும்பத்தை எப்படி பெருக்குவது என்பது அடுத்த கணக்கு.

பத்துக்கு பத்து என்ற சுற்றளவில் இருந்த ஒரு அறையை எப்படி ஆயிரக்கணக்கான சதுர கிலோ மீட்டர்களாக எப்படி பெருக்குவது என்பதை மாணவர்கள் பயிற்சி எடுக்கவும்.

1ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு நடந்து அரசுக்கு 7000 கோடி வருமானம் வருகிறது. 2ஜி ஏலம் விடும் போது, 60,000 கோடி வருமானம் அரசுக்கு செல்லாமல், அந்தப்புரத்திற்கு செல்வது எப்படி என்பதை பித்தாகரஸ் தியரத்தை வைத்து மாணவர்கள் கணக்கிட வேண்டும்.

புவியியல்

உதய சூரியனை கோள்கள் அனைத்தும் எப்படி சுற்றி வருகின்றன என்பதைப் பற்றி மாணவர்கள் இந்தப் பாடத்திட்டத்தில் தெரிந்து கொள்ளலாம்.

விஞ்ஞானம் வளர்வதற்கு முன்னால், சூரியன் தான் பூமியை சுற்றி வருகிறது என்று நம்பிக் கொண்டிருந்தனர். முதன் முதலில் கோப்பர்நிக்கஸ் என்ற விஞ்ஞானி,

கருணாநிதி என்ற சூரியனைத் தான் அனைவரும் சுற்றி வருகிறார்கள் என்று கண்டு பிடித்து சொன்னார்.

final_output

தலைமைச் செயலகத்தில் கருணாநிதி என்ற சூரியனை அமைச்சர்கள் அதிகாரிகள் என்ற பல்வேறு கோள்கள் சுற்றி வருவதே சூரியனைத் தான் மற்ற கோள்கள் சுற்றி வருகின்றன என்பதற்கான சான்று.

வரலாறு

தமிழ்நாட்டை ஆட்சி செய்த திருக்குவளை சாம்ராஜ்யம் தான் இருப்பதிலேயே மிகப் பெரிய சாம்ராஜ்யமாக கருதப் படுகிறது. முதன் முதலில் அண்ணா என்பவர் உருவாக்கிய இந்த சாம்ராஜ்யத்தை, கருணாநிதி என்பவர் கைப்பற்றினார். அவர் கைப்பற்றியவுடன், தமிழகத்தை பல்வேறு குறுநில மாநிலங்களாக பிரித்து தனது குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் ஆட்சி செய்ய பிரித்துக் கொடுத்தார்.

கருணாநிதி சந்தித்த முதல் போர், அண்ணாமலை பல்கலைகழகத்தில் உதயக்குமார் என்ற குறுநில மன்னனை கொன்று சிதம்பரத்தை கைப்பற்றியது. உதயக்குமார் என்ற குறுநில மன்னன், கருணாநிதிக்கு வழங்கப் பட்ட பட்டத்தை கேள்வி கேட்டதால், அவர் மீது போர் தொடுத்தார் கருணாநிதி.

கருணாநிதிக்கு மூன்று மகன்கள். ஒருவர் இளவரசர் மு.க.முத்து. இவர் தண்ணீர் தேசத்தின் இளவரசனாக ஆக்கப் பட்டார். அடுத்தவர் இளவரசர் அஞ்சா நெஞ்சன்.

திருக்குவளை சாம்ராஜ்யத்திலேயே அஞ்சா நெஞ்சன் தான் மிகச் சிறந்த வீரனாக கருதப் படுகிறார். தனது சாம்ராஜ்யத்தை திருச்சிக்கு தெற்கே விரிவுப் படுத்திக் கொண்டே சென்றர் அஞ்சா நெஞ்சன்.

3

தா.கிருஷ்ணன் என்ற ஒரு குறுநில மன்னன் அஞ்சா நெஞ்சனை எதிர்த்துக் கேள்வி கேட்டார் என்ற காரணத்துக்காக அங்கே படையெடுத்துச் சென்று அவரை வீழ்த்தினார் அஞ்சா நெஞ்சன். அதற்கு அடுத்து தினகரன் என்ற ஒரு சிறு குழு, அஞ்சா நெஞ்சனுக்கு எதிராக குரல் கொடுத்த போது, தினகரனை படையெடுத்துச் சென்று தாக்கி, மூன்று பேரை கொன்று தினகரனையும் வெற்றி கண்டவர் இளவரசர் அஞ்சா நெஞ்சன்.

அடுத்த இளவரசரான இளைய தளபதி தனது அண்ணன் அளவுக்கு சுதாரிப்பாக இல்லை என்றாலும், தன்னால் இயன்ற அளவுக்கு தந்தையின் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்துவதில் உதவிகள் செய்துள்ளார். 21ம் நூற்றாண்டின் இறுதியில் துணை மன்னனாக பதவி ஏற்றார் இளைய தளபதி.

பட்டத்து இளவரசியான கனிமொழி தனது அண்ணன்களுக்கு சிறிதும் சளைத்தவர் இல்லை என்ற வகையில் டெல்லி வரை சென்று வெற்றிக் கொடி நாட்டியவர். 2ஜி அலைக்கற்றை என்ற நாட்டை தனது தளபதி ராசாவோடு சேர்ந்து வெற்றிகரமாக கபளீகரம் செய்தவர். பட்டத்து இளவரசியாக அறிவிக்கப் பட்டிருந்தாலும், இவரால் கடைசி வரை தலைமைப் பதவிக்கு வர முடியவில்லை.

2

கருணாநிதியின் மருமகன்களான பெரிய மாறன், சிறிய மாறன் ஆகிய இருவரும் பதவிக்கு வர போட்டி போட்டாலும் கூட அவர்களால் தலைமைப் பதவியை பிடிக்க முடியவில்லை. அதனால் அவர்கள் அரசின் பிரச்சாரத் துறையை கைப்பற்றி இறுதி வரை செல்வாக்கு செலுத்தினர். இவர்களுடன் ஏற்பட்ட தொழில் போட்டியால், இளவரசன் அஞ்சா நெஞ்சன் போட்டியாக தொடங்கிய பிரச்சாரத் துறை பிரபலமடையாமல் போனது.

திருக்குவளை சாம்ராஜ்யத்திற்கு கடும் சவாலாக விளங்கியவர் ராணி ஜெயா. இந்த ராணியின் கடுமையான சவாலை கருணாநிதி திறம்பட எதிர் கொண்டு, ராணியின் படைத் தளபதிகள் அனைவரையும் விலைக்கு வாங்கி, ராணியை நிலை குலையச் செய்தார்.

திருக்குவளை அரசப் பரம்பரையைச் சேர்ந்தவராக இல்லாவிடினும், திருக்குவளை சாம்ராஜ்யத்தில் மிக முக்கிய பொறுப்பு வகித்தவர், இளவரசி குஷ்பூ. இவரை உருவகப் படுத்தித் தான் சிலப்பதிகாரம் என்ற காப்பியம் உருவாக்கப் பட்டது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

இறுதி காலத்தில் மன்னரின் நம்பிக்கையை பெற்ற இவர், மற்ற வாரிசுகளை பின்னுக்குத் தள்ளி, அரச பதவியை கைப்பற்ற எடுத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை என்றும் வரலாற்று ஏடுகள் கூறுகின்றன.

நன்றி சவுக்கு இணையம்,

Saturday, September 18, 2010

அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் தலைமையில் சரணடைந்த எழிலன் எங்கே? அவரது மனைவி கேள்வி (ஒலிவடிவம் இணைப்பு)

தனது மனஆறுதலுக்காக சிறிலங்கா அரசின் விசாரணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த, விடுதலைப்புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர்களில் ஒருவரான எழிலனின் மனைவி, சிறிலங்கா அரசின் விசாரணைக்குழு முன்னிலையில் தனது கவலைகளை தெரிவித்தார். அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள படிப்பினை மற்றும் நல்லிணக்கக் குழு மேலும்… »

நன்றி புதினம் நியூஸ்