Tuesday, July 26, 2016
VIP.
---------------------------------------------------------------------------
சுபாஸ் சந்திரபோஸ்.
...................
இந்திய சுதந்திரத்துக்கு
உணர்வு பூர்வமாக
போராடிய மாவீரன்
ஆங்கிலேயருக்கு எதிராக
பெருத்த இராணுவத்தை
கட்டி எழுப்பி
ஆயுத போராட்டத்தை நிறுவியவர்
ஜெர்மனி, ரஷ்யா, ஜப்பான், சீனா
போன்ற நாடுகளுக்கு
பயணம் செய்து
இராசதந்திர நட்பில் இருந்தவர்
முக்கியமான ஒரு தருணத்தில்
காணாமல் போனவர்
இருந்தும்
மக்கள் மனங்களில்
மலைபோல் உயர்ந்து நிற்கிறார்.
----------------------------------
மோகன்லால் கரம்சந்த் காந்தி.
....................
லண்டனில் சட்டம் படித்தவர்
ஆங்கிலேயர் தனது
நட்பு வட்டம் என்று போற்றியவர்
பிடிவாதக்காரர்.
அகிம்சைவாதி என்று
உள்ளூரில் முழங்கிக்கொண்டு
இரண்டாம் உலகப்போருக்கு
ஆபிரிக்காவில்
வெள்ளையருக்கு
ஆள் திரட்டி கொடுத்தவர்
எழுபது வயதினிலும்
பதின்ம வயது பெண்களை
நிர்வாணமாக்கி
தன்னோடு படுக்க வைத்தவர்
நேதாஜியை
இருட்டடிப்பு செய்வதற்காக
இங்கிலாந்து மூலம்
முதன்மை படுத்தப்பட்டு
தேசபிதா ஆனவர்...,..
----------------------------------------
வ உ சிதம்பரம்பிள்ளை.
.......................
வசதியான குடும்பத்தில் பிறந்தவர்
பச்சை தண்ணீர் போன்ற
குணம் படைத்தவர்.
வெள்ளையரின் ஏஜண்டான
பார்ப்பன சதியை உணராமல்
மூர்க்கமாக முழு நாளும்
சுதந்திரத்துக்கு போராடியவர்.
சொத்துக்களை விற்று
கப்பல் கட்டி
வரலாறு படைத்தவர்
வஞ்சகத்தின் வக்கிரத்தால்
அந்தமானில்
சிறை பறவையானார்
செக்கிழுத்தார்
சிதிலமாகி
செத்து மடிந்தார்..........
------------------------
எம் ஜீ ஆர்.
தமிழகத்தின்
புரட்சி தலைவன்
தமிழ் சினிமாவின்
ஒற்றை சூரியன்
சிறின்ப சிருங்காரன்
மலருக்கு மலர் தாவி
மன்மதன்போல் வாழ்ந்தாலும்
மறுபக்கம் கொடை வள்ளல்.
இன்றைக்கும்
இவர்தான்
சினிமாவின் சுப்பஸ்ரார்.
மக்கள் திலகமாக
மனங்கவர் தலைவனாக
தீய சக்தி
கருணாவின் -முக
திரை கிழித்த பேராசான்.
என்றைக்கும் இறவாத
ஒப்பற்ற ஒளிக்கீற்று......
-------------------------
கவியரசு கண்ணதாசன்.
பிறந்தார் வறுமையுடன்
பெற்றோரால் விலைபோனார்.
பெருங்கவியாய்
புகழடைந்தார்
மழைபோல்
படைப் பியன்றார்
மனம்போல்
உணவெடுத்தார்
மங்கை மது சங்கமமித்து
சுந்தரமாய் களிப்படைந்தார்.
கவியரசாய்
கவிப்பேரரசாய்
காலத்தால் அழியாத காவியமாய்
இன்றும்
கல்வெட்டாய் வாழுகின்றார்........
-------------------------
காமராசர்.
அப்பழுக்கில்லாத
ஆழ்கடலின் முத்து இவர்,
கறுப்பு வைரம் அவர்
காமராசர் எனக்கண்டோம்.
படிக்காத மேதை
பள்ளி சாலைகளை
படைத்துவிட்ட விடிவெள்ளி.
கருணா குழுமத்தின்
திராவிட சதி மோத
இதயம்
உடைந்துருகி
அவர் இறந்த வரலாறு,
மக்கள் மனங்களில்
தீ சுட்ட புண்னாக
தீய்ந்து கிடக்கிறது.
நேற்றல்ல இன்றும் நாளை
மறுநாளும்
நீக்கமற நெஞ்சில் வாழுகின்ற
சுத்த தமிழ் வித்து
கர்ம வீரன்
காமராஜர்.
-----------------------------
பாரதிதாசன்.
தமிழை அமிழ்தென்றார்
தமிழே உயிரென்றார்,
தலை போய் தொலைந்தாலும்
தான் மறவேன்
தமிழ் என்றார்.
முறை தவறி
தமிழ் வளர்த்தால்
முகத்தினில் அறை என்றார்.
பாரதியின் தாக்கத்தில்
பக்தியுடன்
கவி புனைந்தார்
கனக சுப்பு பெயர் மாறி
பாரதிதாசன் என
பண் தமிழில்
நாம் கண்டோம்.
-----------------------------
கருணாநிதி.
திருட்டு ரயிலேறி
திராவிடத்தில்
இடம் பிடித்தார்.
அண்ணாவும் பெரியாரும்
அகராதி என்றவுழ்த்து விட்டார்.
மூன்று மணம் புரிந்தார்
முப்பது பேரை வைத்திருந்தார்.
காகம்போல் கரகரத்தார்
கடைசிவரை பொய்யுரைத்தார்.
ஊழல் பொய் வாழ்வாகி
உலை மூடி போல் வாழ்ந்தார்
நாச படுகொலைக்கு
நடு நாயகமாய்
அடுப்பெரித்தார்.
சாகும் வயதினிலும்
சகுனிபோல் தான் வாழ்ந்தார்.
தட்சணாமூர்த்தி என்றும்
கருணா நிதியென்றும்
வடமொழியில் பெயரமைத்து
தமிழன்
தீராத சிறுமைபட
திக்கெட்டும் பழியானார்.
-----------------------------
அட்டை கத்தி ரஜனிகாந்த்.
------------------------------
மராட்டியில் கருவாகி,
கன்னட
மானிலத்தில் அவதரித்தார்
முறுக்கு தெறித்தாற்போல்
முப்பொருளில் வசனமிட்டார்
வறுமை தமிழினத்தின்
உழைப்பு அனைத்தையுமே
தன் பொருளாய்
காவுகொண்டார்.
படத்துக்கு படம் பஞ்சு
டயலாக்கு பறக்கவிட்டார்
கவுத்து மடி நிறைத்தார்
காரியத்தில் குறியானார்.
பச்சோந்தி என்ற பெயர்
மொத்த பொருந்தி நின்றார்.
மொட்டை தலையாகி
முகமெல்லாம் புலையாகி
நிச்சியமில்லாத
நடு இரவு சாமத்தில்
செல்லா காசு இவரை
கல்லாக நட்டு
கபாலி என்று பெயருமிட்டு
இல்லாத ஊருக்கு
வழிகாட்டும் ஊடகங்கள்.
நெருப்பென்றார்
பருப்பென்றார்
கபாலி
ஓய்ந்தவுடன்
காணாமல் போய்விடுவார்.
-ஊர்க்குருவி-
Friday, July 22, 2016
தமிழக அரசியலுக்கு நாம் தமிழர் கட்சியின் வரவு காலத்தின் கட்டாயமே.
2016, புத்தாண்டு இனிதே பிறந்துவிட்டது. அனைவரும் புத்தாண்டை இனிதே கொண்டாடும் அதே நேரத்தில், இந்தியாவின் தமிழ்நாட்டில் 2016, மே மாதமாளவில் தமிழ்நாடு அரசு சட்டசபைக்கான தேர்தல் திருவிழா நடக்கவிருக்கிறது.
தேர்தல் திருவிழாவுக்கான அனைத்து ஆரம்ப வேலைகளையும் அனைத்து கட்சியினரும் சிரம் தழ்த்தி தத்தமது இடங்களை தக்க வைப்பதற்காக கொள்கை கோட்பாடுகளை ஒருபுறம் தள்ளி வைத்துவிட்டு தேர்தல் விழாவுக்கான நடவடிக்கைகளை பொறுப்பேற்றுக்கொண்டுவிட்டனர்.
முன்னைய செயற்பாடுகளால் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்களும், செயற்பாடு இன்றி கிடந்தவர்களுக்கும் பேருதவி செய்யும் விதமாக பெருத்த வெள்ளப்பெருக்கை இயற்கை தமிழநாட்டில் ஏற்படுத்தி கொடுத்து காணாமல்ப்போன கட்சியினரையும் மக்கள் மன்றத்தில் கலக்க வைத்து உதவியிருக்கிறது.
போதாக்குறைக்கு நடப்பில் ஆட்சியிலிருக்கும் ஜெயலலிதா அரசின் ஊழல் மற்றும் மக்களை கண்டுகொள்ளாத ஆண்டான் அடிமை போன்ற மோசமான நடவடிக்கைக்கள் எதிர்த்தரப்பினருக்கு வாக்கு வங்கியை அதிகரிப்பதற்கான அனைத்து செயற்பாட்டையும் செய்து கொடுத்திருக்கிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை இரு பெரும் திராவிட கட்சிகளான அதிமுக, மற்றும் திமுக ஆகிய இரண்டுகட்சிகளும் மக்களை ஏமாற்றி இரு பெரு மதங்கள்போல செழித்து வழர்ந்து நிற்கின்றன. இவை இரண்டில் ஒருகட்சிதான் ஆட்சியை பிடிக்கவேண்டும் என்பது பணக்கார கட்சிகளான அக்கட்சிகள் மற்றும் அக்கட்சிகளின் பின்னணியில் இருந்து செயற்பட்டுவரும் ஊடகங்களின் விருப்பம்.
ஊடகங்கள் எதை நோக்கி கை காட்டுகின்றனவோ அவற்றை உண்மையென்று நம்பி பின்பற்றுவதுதான் தமிழ்நாட்டு மக்களின் தலைவிதியாக இருந்துவருகிறது.
ஊடகங்கள் தமது விருப்பத்திற்கேற்ப இரண்டு கட்சிகளுக்கும் போட்டி போட்டு தமது ஆதரவு வர்ணனையை தொடர்ச்சியாக செய்துகொண்டிருக்கின்றன.
இருந்தும் குடும்பநல அரசியல் கட்டப்பஞ்சாயத்து, நிலமோசடி ஒழுக்கமின்மை போன்றவற்றால் செல்வாக்கு சரிந்திருந்து கூட்டணிகள் மூலம் சரிக்கட்டி ஆட்சியை பிடித்து சுபபோகமாக வாழ்ந்துவந்த கருணாநிதியின் திமுக, 2009ல், நடைபெற்ற ஈழ இனப்படுகொலை அதோடு ஒட்டி வந்த 2 ஜீ ஸ்பெக்ரம் மேஹா ஊழல் காரணமாக படு பாதாளத்தில் வீழ்ந்துவிட்டது.
கருணாநிதியின் கட்சியின் வீழ்ச்சி ஜெயலலிதாவின் அகம்பாவத்தை அதிகரித்ததுடன் மக்களை மதியாமை எதேச்சதிகாரம் ஆகிய ஜெயலலிதாவின் இயல்பான குணநலங்களை இன்னும் அதிகரிக்க செய்திருக்கிறது.
எவர் எப்படி எதை பதிவு செய்தாலும் கருணாநிதியின் படு வீழ்ச்சியின் மூழுமூலம், ஈழ தமிழர்களின் இனப்படுகொலைக்கு கருணாநிதி நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவினார் என்பதே, இதை கருணாநிதியின் மனச்சாட்சியும் மறுக்க முடியாது ஜெயலலிதாவாலும் மறுக்கமுடியாது, வரலாறும் மறுக்கப்போவதில்லை.
இங்குதான் தமிழகத்து அரசியல் அதிகாரத்தின் வெற்றி தோல்வி எதை வைத்து எதனால் தீர்மானிக்கப்படுகின்ற என்பதை புரிந்துகொள்ள முடியும்.
ஈழதேச தமிழர்களின் அரசியலின் அசைவாக்க உந்துதல் இன்றி தமிழ்நாட்டில் எந்த ஒரு பிரிவினரும் அரசியல் செய்ய முடியாது. இதுதான் யதார்த்தம், கடந்தகால வரலாற்றை புரட்டிப்பார்த்தால் இந்த உண்மை யாவரும் புரிந்து கொள்ள முடியும்.
இதுதான் தமிழகத்தின் விதி.
இதிலிருந்து தெரிந்துகொள்ளுவது என்னவெனில் தமிழ்நாட்டிலுள்ள தொண்ணூறு சதவிகித மக்கள் தமிழீழ விடுதலையை வேண்டி வரவேற்பவர்களாகவே இருந்துவருகின்றனர்.
தமிழீழ விடுதலைப்புலிகளையும் விடுதலைப்போராட்டத்தையும் மறைமுகமாக கொள்கை ரீதியாக எதிர்த்து அரசியல் செய்துவரும் கருணாநிதி, மற்றும் ஜெயலலிதா இவர்களை தாண்டி தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகள் கூட ஈழ விடுதலைப்போராட்டத்தை வெளிப்படையாக எதிர்ப்பதற்கு அஞ்சுகின்றனர். காரணம் மக்கள் ஆதரவு தமக்கு இல்லாமல் போய்விடும் என்பதை அவர்கள் நன்கே உணர்ந்திருக்கின்றனர்.
இலங்கையில் 1975 ம் ஆண்டளவில் தொடங்கப்பட்டு இன்றுவரை கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக தனி தமிழ் ஈழத்துக்கான ஆயுதப் போராட்டம் நடந்தது, கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் தேசியத்தலைவர் வே பிரபாகரன் அவர்களது தலைமையில் தமிழர்களுக்கான ஆட்சியும் அங்கு நடந்தேறியது.
2009 மே நடந்த இறுதிப்போரில் விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் இந்திய அரசாங்கத்தின் சூழ்ச்சியால் தோற்கடிக்கப்பட்டது. ( விடுதலைப்போராட்டம் தோற்கடிக்கப்பட்ட விதம். இறுதி போரில் விடுதலைப்புலிகள் சந்தித்த மிக நெருக்கடியான சவால்கள் அனைத்தும் உலக தமிழர்கள் அறிந்த ஒன்றுதான்)
இருந்தும் ஈழ விடுதலைக்கான தமிழர்களின் போராட்டத்தை கொள்கை ரீதியாக எவராலும் தோற்கடிக்க முடியவில்லை. அந்த உண்மையை இந்தியா மட்டுமல்லாது உலகநாடுகள் அனைத்தும் அறிந்து கொண்டே இருக்கின்றன. இப்படி இருக்கும்போது தமிழகத்தின் தமிழ் அரசியற் கட்சிகள் அவறறை புரிந்துகொள்ளாமல் இருக்க முடியாது.
ஈழ போராட்டத்துக்கான தேவை எது என்பதை எந்த ஒரு தமிழனும் உலக அரங்கில் எந்த ஒரு இடத்திலும் உரக்க கூவி கேள்வி எழுப்பக்கூடிய வெளியை ஈழப்போராட்டத்தின் தார்மீக நியாயம் இன்றுவரை எந்த சக்தியாலும் தடுக்க முடியாத வகையில் நியாயப்படுத்தி விட்டிருக்கிறது.
சாதாரணமாக சொல்லுவதாக இருந்தால் போராட்டத்தின் முக்கிய தரப்பான விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடை செய்த நாடுகளே தடையை விலக்கிக்கொள்ள தொடங்கிவிட்டன.
இந்தியாவின் அழுத்தம் காரணமாக ஒருசில தரப்புக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தடையை மீளப்பெற தயங்கினாலும் சம்பிரதாய தடைபோலல்லாமல் பெருத்த தடை உத்தரவுகளை பேண எவராலும் முடியவில்லை.
இன்று தனது செயற்பாடுகள் மூலமாக ஜெயலலிதா அரசு மக்கள் மன்றத்தில் மிகுந்த அதிருப்தியை பெற்று கணிசமாக செல்வாக்கு இழந்திருக்கிறது. இந்த இடைவெளியை பயன்படுத்தி எவரை கூட்டு சேர்த்தாவது ஆட்சியை கைப்பற்ற கருணாநிதியின் திமுக பகீரத பிரயத்தனத்தை மேற்கொண்டு வருகிறது.
2011 நடைபெற்ற தேர்தலின்போது விஜயகாந்தை மிக மலிவாக வடிவேலுவை வைத்து விமர்சித்த கருணாநிதி இன்றைய தப்பித்தலுக்காக விஜயகாந்தின் காலடியிலும் விழுவதற்கும் மறுப்பின்றி தயாராகி வருகிறார்.
இருந்தும் கருணாநிதியுடன் கூட்டு சேர எவரும் தயாராக இல்லை என்பதுதான் இன்றுவரையுள்ள கள நிலவரம். இனப்படுகொலையாளி என்று எல்லோராலும் தூற்றப்பட்ட ஒருவனுடன் கூட்டு வைத்துக்கொண்டு எப்படி மக்களிடையே வாக்கு கேட்பது என்ற அச்சம் கூச்சம் காரணமாக எவரும் கருணாநிதியை நெருங்க அஞ்சுகின்றனர்.
அதன் எதிரொலியாகத்தான் கருணாநிதியை புறந்தள்ளிவிட்டு இன்று மக்கள்நல கூட்டணி என்ற பெயரில் வைகோ, திருமா, மற்றும் கம்யூனிஸ்டுக்கள் ஒன்றுசேர காரணமாகியிருக்கிறது. இவர்களுடன் இறுதியில் விஜயகாந்தின் தேமுதிக வும் இணையக்கூடும் இல்லாமல் விஜயகாந்தின் கட்சி பாஜகவுடனும் பயணப்படலாம் வேறு எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம்.
இந்த தேர்தலுக்கான அரசியற் கட்சிகளின் கள வெள்ள ஓட்டத்தில் புதிதாக இணைந்திருப்பவர்கள் சீமானின் தலைமையிலான “நாம் தமிழர்” கட்சியினர்.
சீமான் எவ்வளவுதான் பிரபாகரனின் தம்பி என்று தன்னை முன்னிறுத்தினாலும் மிக மிக உணர்ச்சிகரமாக ஈழம் சார்ந்த பேருரைகளை நிகழ்த்தினாலும், “கத்தி” பட பஞ்சாயத்து, புலிப்பார்வை பட வெளியீடுகளின்போது அவர் எடுத்துக்கொண்ட நழுவல்ப்போக்கு ஈழ மக்களிடம் சீமான் முன்பிருந்த நெருக்கத்தை தொடர்ந்து பேணிக்கொள்ள முடியுமா என்ற கேள்வி பல தளங்களில் எழுந்து அடங்கியிருக்கிறது.
ஆனாலும் இப்போதைக்கு கருணாநிதி போன்று ஈழத்தமிழர்களுக்கு சீமான் பெருத்த ஆபத்தானவர் இல்லை என்பது மேலோட்டமான கருத்து. இன்னும் ஒரு கோணத்தில் பார்த்தால் தமிழ்நாட்டில் அவ்வளவு உறுதியாக நின்று இலகுவில் அரசியலில் கரை சேர்ந்துவிட முடியாது என்ற பொதுவான குணநலனும் புறந்தள்ள முடியாதது.
காலம் ஓட்டத்தில் மக்களிடமிருந்து மறக்கப்பட்டுவிடுவோம் என்ற பயம், .விபச்சார கூட்டங்கள்போல சுயநலவாத அரசியல் வியாபாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து தமது கட்சியை காணாமல் செய்துவிடுவார்களோ என்ற அச்சம், காலம் ஓடுவதால் தொண்டர்களை தக்கவைத்துக்கொள்ள முடியாமல் கட்சி கரைந்துவிடுமோ என்ற உள் உதறல் இவைகளை வைத்துதான் தமிழ்நாடு போன்ற களங்களில் அராசியலில் கரையேற வேண்டிய கட்டாயம் சீமானை தளம்பல்நிலைக்கு இட்டுச்சென்றிருக்கலாம். என்றும் ஒரு சாரார் கருதுகின்றனர்.
என்ன இருந்தாலும் சீமானின் அரசியல் வரவு என்பது கருணாநிதிக்கு பெருத்த சவால் என்பது மறுப்பதற்கில்லை. தமிழகத்தில் மன்னர்கள் போன்று கோலோச்சும் திராவிட கட்சிகளின் அஸ்தமனமும் அதன் பின் ஒன்றுதிரழும் தேசிய நோக்கம் கொண்ட தமிழகத்து இளைஞர்களின் அரசியல் இயக்க உருவாக்கம் ஒன்றுதான் இலங்கையில் சிங்கள ஆட்சியாளர்களிடையே ஒரு மாற்றத்தை உருவாக்க ஏதுவாக இருக்கும்
பதவிக்காக அரசியல் செய்து பதவிக்காக மத்திய அரசாங்கத்துடன் இணைந்து கூத்தாடக்கூடிய அரசியற்கட்சிகள் வீழ்ச்சி பெறாதவரை இந்திய மத்திய அரசு சிங்களவனின் நண்பனாகவே தொடரும் அபாயம் தவிர்க்கமுடியாத ஒன்றாகவே இருக்கும்.
விதிவசமாக இலங்கை இந்தியாவுக்கு பக்கத்தில் அமைந்துவிட்டது. ஆயுதப்போராட்டத்தின்போது அடங்கி கிடந்த சக்திகள் எல்லாம் இப்போ வன்மம் தீர்க்கவும் எழுச்சியை மழுங்கடிக்கவும் முனைப்பு கட்டுவரே தவிர உளப்பூர்வமான செயற்பாடுகளை எதிர்பார்க்க முடியாது.
ஜெயலலிதா தமிழீழத்துக்கு எதிராக செயற்பட்டவர். ஆனால் கருணாநிதி உன்னோடு உன்னோடு என்று சொல்லி கழுத்தறுத்து துரோகம் செய்தவர் இந்த இடத்தில் காலத்தின் கட்டாயத்திற்கமைய சீமானை வலிந்து தமிழகத்து அரசியல் உள்வாங்கியிருக்கிறது பழையன கழிதலும் புதியன புகுதலும் இயற்கையானது அந்தவகையில் சீமானின் வரவு தமிழீழத்திற்கு நன்மை பயற்கிறதோ இல்லையோ தமிழ்நாடுக்கு மிக மிக தேவையான ஒன்றே.
வயசு. வாய்ஜாலம் இவைகளை புறந்தள்ளி புதிய கொள்கைரீதியான சிந்தனை துடிப்பு ஆகியவற்றை கருத்தில்க்கொண்டு சீமானின் நாம் தமிழர் கட்சியை ஊடகங்கள் அங்கீகரிக்கவேண்டும்.
ஈழதேசம். செய்திக்காக
கனகதரன்.
மாற்றம் ஒன்றே மாறாதது.
2016 மே 14 தமிழ்நாடு சட்டமன்றத்துக்கான தேர்தல் முடிந்து மே, 19 ம் திகதி வாக்கு எண்ணிக்கயுடன் இரண்டு மாதங்களாக களைகட்டியிருந்த தேர்தல் திருவிழா முடிவுக்கு வந்து ஜெயலலிதா தலைமையில் மீண்டும் ஐந்தாண்டுகளுக்கான ஆட்சி அதிகாரம் கையளிக்கப்பட்டிருக்கிறது.
ஜெயலலிதா அம்மையாரும் மகிழ்ச்சி மேலோங்க தனது பிறவிக்குணத்துக்கு மாறாக ஆரம்ப அடிச்சுவட்டை சற்று தளர்த்தி வைத்து மக்களை குளிர்விக்கும் விதமாக விவசாய கடன் தள்ளுபடி, மதுக்கடைகள் நேரக்குறைப்பு என்று தனது பணியை தொடங்கியிருக்கிறார் இருந்தும் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தை நோக்கி போகாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
முன்னைய சட்டசபை போலல்லாமல் பலம் பொருந்திய எதிர்க்கட்சியாக திமுக இருப்பதால் வருங்காலத்தில் சட்டசபையில் இன்னும் சுவாரஷ்யம் எதிர்பார்க்கலாம். அடுத்த சட்டமன்ற தேர்தல் 2021 மே மாதம் நடைபெறும், அந்த தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக நிச்சியம் வெற்று ஆட்சி அமைக்கப்போவதில்லை என்பதை இங்கு அடிக்கோடிட்டு அழுத்தமாக பதிவு செய்தகொள்ள முடியும்.
அப்படி நடப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளூர இருந்தாலும் அதிமுக அடுத்த தேர்தலில் தோல்வியடையும் என்று சொல்லும் ஒரே சொல்லு போதுமானது. 2021, அன்றைக்கு ஆட்சி அமைக்கப்போவது யார்?
தமிழினத்தின்மீது அழுத்தமாக படர்ந்திருக்கும் மிகப்பெரிய தீயசக்தியான திமுகவை 2021 லும் புதைகுழியிலிருந்து மீண்டுவராமல் செய்யும் வல்லமை தமிழகத்து தமிழக்கு உண்டா என்ற எதிர்மறை வினாவுடன் இன்றைய கால நிகழ்வுக்கு வரலாம்.
விஜயகாந்த், வைகோ, திருமா, கொம்யூனிஸ்டுக்கள், வாசன் ஆகிய கட்சி தலைவர்களின் கூட்டமைப்பு ஒன்றியமான மக்கள் நல கூட்டணி, அது தவிர்த்து தனித்து போட்டியிட்ட நாம்தமிழர் கட்சி, பாமக, ஆகிய மூன்று பிரிவினரும் முதலமைச்சர் கோசத்துடன் போட்டியிட்டிருந்தாலும் அத்தனை பிரிவினரின் எண்ணக்கருவும் எக்காரணம் கொண்டும் கருணாநிதி குழுமம் மீண்டும் தலையெடுத்துவிடக்கூடாது என்ற கருதுகோள் உந்துதல் அவர்களின் உள்ளுணர்வில் அடிநாதமாக இருந்ததாகவே பரப்புரைகளும் நகர்வுகளும் உணர்த்தி நின்றன.
அப்படி நின்றதன் பின்னணியில் இரு பெரும் திராவிடக்கட்சிகளையும் வேரறுப்பதற்கான தந்திர உபாயம் அனைத்து கட்சிகளிடமும் ஒரு தொலைநோக்கு குறிக்கோளுடன் தனித்தனியாக இருந்ததும் மறுப்பதற்கில்லை.
அதை நன்கு புரிந்துகொண்ட திமுக அதிமுகவின் வாக்குக்களில் கணிசமானவற்றை தன்பக்கம் திருப்பி வெற்றி பெற்றுவிடவேண்டும் என்ற வெறியில் பறந்தடித்து பரப்புரை செய்து வந்தது.
ஏறுக்கு மாறாக பேசப்போய் மற்றக்கட்சிகளின் எதிர்வீச்சு தன்னை அதிகம் பாதிக்காமல் இருப்பதற்காக அதிமுக தவிர்ந்த எந்த கட்சியையும் தனக்கு எதிரான வீரியமான கட்சியாக காட்டி பரப்புரை செய்ய திமுக விரும்பவில்லை,
தனது பொது எதிரி அதிமுக என்பதுபோலவும் அதிமுகவுக்கு ஆதரவாக மக்கள் நலக்கூட்டணி இருப்பதுபோலவும் ஒரு மாயத்தோற்றத்தை உண்டாக்கி மக்கள் ஆதரவை தனது பக்கம் திருப்பும் விதமாக மக்கள் நலக்கூட்டணி அதிமுகவின் பி ரீம் என்று பரப்புரை செய்து மக்கள் அனுதாபத்தை பெற பகீரத பிரயத்தனம் செய்தது.
பாமகவையோ நாம்தமிழர் கட்சியையோ திமுக வம்புக்கு இழுக்க விரும்பவில்லை. அதேபாணியை பின்பற்றிய அதிமுகவும் தனக்கு போட்டியே இல்லை என்பதுபோலவும் பொதுவான எதிரி திமுக மட்டுமே என்பதுபோலவும் களமாடியது.
புதிய அரசை தெரிவுசெய்யும் தகுதி படைத்த வாக்காள பெருமக்கள் அனைவரிடமும் மாற்று சக்தி ஒன்றை நோக்கிய சிந்தனை மும்முரமாக தலையெடுத்திருந்தாலும் ஐந்து முனைப்போட்டியில் யாரை தேரிவு செய்வது என்பதில் அறுதி நிலைப்பாடு எடுக்கமுடியாத ஒருவித மயக்கநிலை ஒவ்வொரு வாக்காளர்களிடமும் தொடர்ந்தவண்ணம் இருந்தது,
இருந்தும் திமுக என்ற சமூக விரோத கொடிய சக்தி எப்படியும் தோற்கடிக்கப் படவேண்டும் என்ற ஆதங்கம் போட்டியாளர்கள் முதலாக மக்கள் மத்தியிலும் பரவலாக இருந்தது என்பதாகவே கள நிலமைகள் பல்வேறு கட்டங்களில் துல்லியமாக வெளிப்படுத்தியிருந்தன.
எதிர்காலத்தில் உண்டாகக்கூடிய சுய பாதுகாப்பு சம்பந்தமான பக்கவிளைவுகளின் எதிர்வினைகளை கருத்தில்க்கொண்டு அரசியலில் களத்தில் நின்ற போட்டியாளர்கள் முதற்கொண்டு வாக்களிக்கவல்ல ஒவ்வொரு தனி மனிதன்வரை எவரும் இவற்றை வெளிப்படையாக சொல்லமுடியாது என்ற யதார்த்தத்தை எவரும் புறக்கணிக்கவும் முடியாது.
இருந்தும் நீண்ட நெடுங்காலமாக மக்கள் பின்பற்றி வந்த பாரம்பரிய கட்சி சார்பு மனவோட்டம், மக்களின் அறியாமை, திமுகவின் பணபலம், ஊடகபலம், கருணாநிதியின் அனுபவம் வாய்ந்த கபடத்தனமான பிரித்தாளும் தந்திரோபாயங்கள், பிரச்சார தந்திரம் ஆகியவற்றுடன் ஜெயலலிதா அரசின் எதேச்சதிகார போக்கு அனைத்தும் ஒன்று திரண்டு திமுகவுக்கு கணிசமான வெற்றியை தந்திருப்பதும் மறுப்பதற்கில்லை.
தமிழகத்தின் திராவிட அரசியற் கலாச்சார சூழலில், கருணாநிதி+ ஜெயலலிதா ஆகிய இருபெரும் சக்திகள்தான் தொடர்ச்சியான தமிழகத்தின் ஆட்சிக்குரிய மன்னர்கள் போன்ற மாயையை திட்டமிட்டு தோற்றுவித்து ஆட்சியாளர்களாக இருந்துவரும் இவ் இரு பெரும் தீயசக்திகளை ஒருசேர வீழ்த்துவது என்பதும் ஆழமாக சிந்திக்க முடியாமல் புரையோடிக்கிடக்கும் தடுமாற்றம் நிறைந்த இந்திய கட்சி அரசியல் கலாச்சாரத்தில் சிரமமான ஒன்று என்பதும் யதார்த்தமே.
மொத்த மக்கள் தொகையில் படிப்பறிவு குறைவான கிராமங்கள் நிறைந்த தமிழகத்தின் வறியவர்களின் பலவீனத்தை சாதகமாக பயன்படுத்தி ஹிந்தி எதிர்ப்பு தமிழ் வளர்ப்பு போன்ற வாய்ஜால ஆசை முழக்கங்கள் மூலம் மூளைச்சலவை செய்யப்பட்டு இலவசங்களை மட்டுமே சமூக மேம்பாடாக முன் வைத்து மக்களை மந்தைக்கூட்டம் போன்ற கட்டுக்கோப்புக்குள் சிக்கவைத்தது மட்டுமல்லாது தம்மை பெரு மதம் போன்று மக்கள் மனங்களில் திராவிட கட்சிகள் திட்டமிட்டு பதியம் போட்டு வைத்திருக்கின்றன.
போதாக்குறைக்கு நாடு தழுவியவாறு பெருக்கெடுத்தோடும் மது, மற்றும் சமூகத்தை சீரழிவில் மூழ்கடித்து நிற்கும் சினிமா மோகம் இவ்விரண்டும் மக்களை சோம்பேறிகளாகவும் சிந்தனையற்றவர்களாகவும் செயற்கையாக மந்தமாக்கி வைத்திருக்கிறது. திராவிட கட்சிகளான திமுக,, அதிமுக ஆகிய கட்சிகளை தலை முழுகிவிட்டு நல்ல ஒரு மாற்று சக்தியை தெரிவுசெய்யவேண்டும் என்ற சிந்தனை தமிழகத்து இளைய சமுதாயத்திடம் இல்லாமல் இல்லை.
இருந்தும் மூத்த குடும்பத்தலைவர்கள் பாரம்பரியமாக பின்பற்றி வந்த திராவிட கட்சிகளை விட்டு வெளியேறமுடியாத ஒருவித பழமைவாத சம்பிரதாய சித்தாந்த சிக்கல்கள், கட்சிகள் மாவட்டங்கள் தோறும் கொடுக்கும் அற்ப பதவிகள் அவைகளைவைத்து நடத்தும் பஞ்சாயத்து, கட்சிகளின் பெயரால் கிடைக்கும் காண்ராக்ட் கமிஷன், இன்னபிற காரணிகளால் பின்னப்பட்டு புரையோடிப்போயிருக்கும் சமுதாயத்தில் ஒரே இரவில் மாற்றம் ஒன்றை கொண்டுவருவது என்பது இலேசான விடயமும் அல்ல.
அரசியல், சினிமா இவ்விரண்டும் மட்டுமே பெயர், புகழ், பணம் பண்ணுவதற்கான தொழிலாக இந்திய மட்டத்தில் வரையறுக்கப்பட்டிருக்கிறது. திராவிடத்திலிருந்து பிரிந்துபோன மதிமுக, அதிமுகவிலிருந்து பிரிந்துபோன திருநாவுக்கரசரின் கட்சி, ரீ ராஜேந்தரின் இலட்சிய திமுக, பாக்கியராஜின் கட்சி, கண்ணப்பனின் கட்சி, எம் ஆர் வீரப்பனின் கட்சி போன்ற பல உடைவுண்ட திராவிடத்துண்டுகள் எதுவும் இன்றுவரை தலையெடுத்திருகவில்லை என்பது இங்கு குறிப்பிட்டு கூறக்கூடிய ஒன்றாக பதிவுசெய்ய முடியும்.
கடைசியாக பிறந்த தேமுதிக கூட உடைவு கண்டு சந்திரகுமார் தலைமையில் மக்கள் தேமுதிக ஆக உருவம் பெற்று திமுகவுடன் கூட்டுச்சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டு காணாமல்போன நகைச்சுவையையும் நாம் கண்டு களித்தோம்.
எத்தனை கட்சி பிறந்திருந்தாலும் பிரிந்து சென்று கட்சி கண்ட யாரிடமும் சித்தாந்த ரீதியாகவோ கொள்கை ரீதியாகவோ எந்த மாற்றமும் உணரமுடியவில்லை, நானா நீயா என்ற தாழ்வு மனப்பாண்மையின் உச்ச வேறுபாடு மட்டுமே மேற்குறித்த கட்சிகள் பிறப்பதற்கு காரணியாக இருந்ததாக வரலாற்று வழித்தடம் சொல்கிறது.
ஈற்றில் பிரிந்து சென்ற வாசலுக்கு திரும்பச்சென்று பாராட்டு பத்திரம் வாசித்து மண்டியிட்டு யாசகம் கேட்டு கூட்டணி வைத்துக்கொண்ட சிறுமைகள் தெருக்கூட சிரிக்கும்வண்ணம் நடந்தேறியது. தனித்தன்மையுடன் கட்சி தொடங்கவேண்டுமாயின் அடிப்படையில் சமூகத்தை சீராக கட்டியமைக்கவல்ல கூர்மையான சிந்தனையுடன் நாட்டு வளங்களின் அடிப்படையில் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய உறுதிமிக்க கொள்கை தேவை,
இந்த ஐம்பது ஆண்டுகளில் நாம் தமிழர் இயக்கம் தவிர வேறு எவரும் அப்படி ஒரு சிந்தனையுடன் தமிழக அரசியல் அரங்கில் புறப்பட்ட வழித்தடமும் இல்லை.சீமானின் சீரான தலைமைத்துவம் இல்லாமல் சரியான அரசியற் புரிதல் அற்றுப்போய் இந்திய போலி ஜனநாயக மாயைக்குள் கிடக்கும் மக்களின் உணர்ச்சிகளை தூண்டி வப்படுத்தி அரசியல்செய்வதற்கு ஏற்ற இலகுவான தந்திர உபாயமாக சாதிவாரியான பிரிவினைகள் மட்டுமே திராவிட மேலாண்மை சாக்காட்டின் பின்னர் பலகட்சிகளாக பிறப்பெடுத்திருக்கின்றன,
இந்த சாதி ஆதிக்ககட்சிகள் ஒருபோதும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றவோ சமூகநீதியை பெற்றுத்தரவல்ல அரசியல் வெளியை நிர்ணயிக்கவோ ஒருபோதும் முடியாது.
ஒரு எம் எல் ஏ தொகுதி கிடைக்காத கடுப்பில் வெளியேறி கட்சி கண்ட இவர்கள் தேர்தல் காலங்களில் திராவிட கட்சிகளிடம் பேரம் பேசுவதற்காகவும் அரசியல் வியாபாரத்தில் நல்ல இலாபம் கிடைக்கும் என்ற ஒரே நோக்கத்துக்காக புற்றீசல்போல ஒவ்வொரு வட்டாரத்திலும் சாதி சங்கங்கள் கட்சிகளாக மாறி மக்களை சிறு சிறு குழுக்களாக சமூகத்தை துண்டுபோட்டு சீர்குலைத்தது மட்டுமல்லாது அக் கட்சிகளின் பின்னணியில் சாதி கலவரம், ஆணவக்கொலை போன்ற அவலங்கள் பெருகும் அளவுக்கு அவலம் மிக்க அங்கீகாரம் கிடைக்க வழி செய்திருக்கிறது.
எவ்வளவு சாதிசங்கங்கள் கட்சிகளாக களம் கண்டாலும் கடைசியில் இலாபம் முழுவதும் திராவிட கட்சிகளுக்கே, தேர்தல் காலங்களில் சாதி கட்சிகளை இணைத்துக்கொண்டு மிக இலகுவாக தமது இலக்குகளை தீர்மானித்து களம் காணலாம் என்பதும், சாதி கட்சிகளுக்கு ஒருசில இடங்களை கொடுப்பதன் மூலம் களத்தில் முட்டிமோதிக்கொள்ளாமல் பெரும்பான்மை பலத்தை எளிதாக பெற்று கோலோச்ச முடியும் என்பதும் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் நன்கு தெரியும்.
. ஜெயலலிதாவை விடவும் தேர்தலில் பெரும்பான்மையை ஒருபோதும் தனித்து பெறமுடியாத நிலையில் இருக்கும் கருணாநிதியே சாதிக்கட்சிகளை தோற்றுவிப்பதிலும் வளர்ப்பதிலும் தலைசிறந்த விஞ்ஞானி என்பதே உண்மை.
இருந்தும் இந்த சிறு சாதிகட்சிகள் திராவிட கட்சிகளின் புணர்ச்சிக்கு இடங்கொடுக்கும் விபச்சாரிகள்போல பயன்படுத்தப்பட்டு ஒரு அர்த்தமற்ற நகைப்புக்குரிய சந்தற்பவாத கூட்டணியை நிறுவி தேர்தல் காலங்களில் ஒன்றுகூடி ஓரிரு இடங்களுக்காக விபச்சார அரசியல் செய்து வருகின்றன.
திராவிட கட்சிகளின் கணக்கிலடங்கா பணபலம், மக்களின் வறுமை, அறியாமை ஆகியவற்றை சரியாக பயன்படுத்தி தம்மை கடவுளுக்கு நிகரானவர்களாக காட்டிக்கொள்ளும் மிகப்பெரிய தலை கழுவும் பிரச்சார யுக்தி, கட்சிகளின் கட்டிப்பாட்டில் உள்ள ஊடக பலம், மக்களை சிந்திக்க இடமளிக்காமல் தினம் தினம் ஒவ்வொரு சார்பு தொலைக்காட்சிகள் மூலமும் நேர்படபேசு, ஆயுத எழுத்து, திண்ணை, கேள்வி நேரம், விவாத அரங்கம் என குறிப்பிட்ட சில விதண்டாவாதிகளை மட்டுமே வைத்து நடத்தப்படும் பட்டிமன்றம், அரட்டை அரங்கம் போன்ற ஆளுமையற்ற நகைப்புக்குரிய நிகழ்ச்சிகள் அனைத்தும் இல்லாத இடத்தை நோக்கி வாக்காளர்களை வழிகாட்ட முனையும் திசை திருப்பும் தந்திரங்கள் என கொள்ளமுடியும்.
உலகத்தில் எங்குமில்லாத இப்படியான குளப்பமான மாயச்சூழலிருந்து தப்பித்து மக்களால் தனித்து முடிவெடுக்கமுடியாத திரிசங்குநிலை தொடர்ந்து திட்டமிட்டு பேணப்பட்டுவருவதே உறுதியான மாற்று சக்தி ஒன்று தலையெடுக்க முடியாமைக்கான பிரதான காரணி என்பதை நடுநிலையான அரசியல் ஆய்வாளர்கள் எவரும் கருத்தில் மாறுபட முடியாது.
தவிர மாற்றுச்சக்திகளென்ற முழக்கத்துடன் புறப்பட்டு வந்து உப்புப்போல திராவிட கட்சிகளுக்கு உவப்பாக சுவையூட்டி கரைந்து கடைசி துகளாக ஊசலாடிக்கொண்டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி, திமுகவிலிருந்து பிரிந்து வந்த வைகோவின் மதிமுக, அடுத்து களத்துக்கு வந்த விஜயகாந்தின் தேமுதிக, போன்ற கட்சி தலைமைகளின் உறுதியில்லா இயலாமை, மாற்றம் என்று கூறிக்கொண்டே புறப்பட்ட இடத்திற்கு திரும்பிச்சென்று ஒருசில ஆசனங்களுக்காக மண்டியிட்டு யாசகம் கேட்டு கூட்டணி அமைத்து கொண்ட நியாயப்படுத்த முடியாத செயற்பாடுகள் போன்றவை மக்களால் ஜீரணித்து கொள்ளவும் முடியவில்லை,
இத்தகைய விரும்பத்தகாத அனுபவங்களால் நாம்தமிழர் கட்சி போன்ற புதிய வரவுகள் இனியொரு பொழுது பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியமைப்பார்களா? என்ற நம்பிக்கையீனமும் கூட மக்களிடையே ஒரு பெருத்த ஆழமான மறைமுக அரசியலாக உருவெடுத்து தமிழகத்தில் ஆளுமை பெற்றிருக்கிறது.
இந்த அனுமான அடிப்படையில் ஜெயலலிதாவின் அதிமுகவின் 2016 வெற்றி என்பது தேர்தலில் போட்டியிட்ட போட்டியாளர்கள் உட்பட வாக்காளர்கள் என அனைவரும் வெளிக்காட்டிக் கொள்ளாவிட்டாலும் ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்றுதான். இத்தனை கலாச்சார சூழலில் முதலமைச்சர் போட்டியில் களத்தில் நின்ற போட்டியாளர்கள் எவராவது தாம் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆவோம் என்று நினைத்திருந்தால்கூட அது தமிழகத்தின் அரசியல் தற்ப வெப்பநிலையை அறிந்துகொள்ள முடியாத அளவுக்கு ஆளுமை இல்லாத அனுமானம் கொண்ட பெருத்த அறியாமை கொண்ட வர்கள் என்றும் கணிப்பிட முடியும்.
திமுக மிகப்பெரிய சுயநலவாத குடும்பநல ஊழல் கட்சி என்பதையும் தாண்டி, ஈழ அரசியலின் அப்பட்டமான கள்ளத்தனம், கயமை, மற்றும் ஈழ இனப்படுகொலை, 2ஜீ உலக மகா ஊழல் ஆகியவற்றினால் உண்டான பெரும் கறையை மிகப்பெரிய தந்திரவாதியான கருணாநிதி தனது வாய்ஜால மற்றும் கபட தந்திரங்கள் மூலம் வழமைபோல மக்களின் மண்டை கழுவி மறக்கடித்துவிடலாம் என்று நம்பிய நம்பிக்கை கெடுபேறு காரணமாக நாம்தமிழர் இயக்கத்தின் உறுதி மிக்க எதிர்வீச்சினால் 2009 களுக்குப்பின் தலைதூக்கமுடியாமல் மரணக்குழி நோக்கி தள்ளப்பட்டுவிட்டது.//
சீமானின் வரவுக்குப்பின் திமுக, விதிவசமாக மரண அடிவாங்கி குற்றுயிராக நாம்தமிழர் இயக்கத்தால் தேருவில் வீசப்பட்ட கட்சி என்பதை வெளியே காட்டிக்கொள்ளாவிட்டாலும் பாதிப்பின் தாக்கத்தை கருணாநிதி உள்ளூர நன்கே உணர்ந்திருந்தார், தமிழ்நாடு முழுவதும் அதே மனநிலையில்த்தான் இருந்தது என்பதை எவரும் மறுக்கவும் முடியாது.
இருந்தும் மறக்கும் மனநிலைகொண்ட தமிழகத்தில் தனது வழமையான தந்திர உபாயத்தை ஆயுதமாக்கி தொடர் கபட நாடகங்களை அரங்கேற்றி மீண்டும் வென்றுவிடலாம் என்ற கருணாநிதியின் அதீத தன்னம்பிக்கை இம்முறை எடுபடவில்லை.
கருணாநிதி காங்கிரஸ் கூட்டத்தினரால் ஈழத்தில் நடந்த இனப்படுகொலை நிகழ்வுகளை அப்படியே திரும்பத்திரும்ப மக்கள்முன் உணர்வுபூர்வமாக எடுத்து வைத்த நாம்தமிழர் கட்சியின் பரப்புரை மூலம் திமுக காங்கிரஸ் கட்சிகள்மீது மக்கள் மத்தியில் மிகப்பெரிய பாதிப்பு உண்டாவதை கண்ட சிறு கட்சிகள்கூட திமுகவுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை.
கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களுடன் வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்துவதைக்கூட காங்கிரஸ் தவிர்ந்த ஏனைய அரசியல் கட்சிகள் அஞ்சி ஒதுங்கிக்கொண்டன. திமுகவின் ஈழ எதிர்ப்பு அனீதியின் எதிரொலியாக பிறந்த நாம்தமிழர் இயக்கத்தின் பிறப்புடன் திமுகவின் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டதாகவே கொள்ளலாம்.
இனி நாம்தமிழர் இயக்கம் செத்துப்போனால் ஒளிய திமுக எழுந்திருக்க முடியாது என்றே இறுதியிட்டு கருத முடிகிறது. உண்மைத்தன்மை, மாற்றம் நோக்கிய வித்தியாசமான சமூக மேம்பாட்டுக்கான கொள்கை நெறி, இளமைத்துடிப்பான ஆற்றல் அனைத்தும் நாம்தமிழர் கட்சியிடம் இருப்பதாக தமிழகம் மிக நன்றாகவே உணர்ந்திருக்கிறது.
இத்தேர்தலில் நாம்தமிழர் இயக்கம் வாக்கு அதிகம் பெறாததற்கு அக்கட்சி மக்களை ஈர்க்கவில்லை என்பதை விட திராவிட இயக்கங்களின் அசுரத்தனமான ஊடக பரப்புரை, பிரமாண்ட தெருக்கூட்ட பரப்புரை அமைப்புக்கள், பல்லாயிரக்கணக்கான வாகன அணிவகுப்புக்கள், கடல்நீர்போன்று அள்ளிவிடப்பட்ட பணம். இவைகள் மத்தியில் “இவர்கள் ஆட்சியை கைப்பற்றுவார்களா” என்ற ஐயப்பாடும் நாம்தமிழர் இயக்கத்துக்கு எதிராக பயணித்தது.
கருணாநிதி அல்லது ஜெயலலிதா இருவர்கள் மட்டுமே முடிக்குரியவர்கள் நாட்டை ஆள்வதற்கும் வாக்குறுதிகளை செயல்ப்படுத்தும் வல்லமையும் அவர்களுக்கு மட்டுமே உண்டு மற்றவர்கள் எப்படி செயல்ப்படுத்த முடியும் என்ற பாமரத்தனமான அறியாமையும் பல இலட்சம் கிராமத்து ஏழைகளிடம் வினாவாக இருந்தது.
வள்ளுவருக்கு பெங்களூருல் சிலை வைத்தல், கண்ணகி சிலைக்கு வழக்காடுதல், அண்ணாபெயரில் தெருவுக்கு பெயர் வைத்தல், அண்ணா வளைவுக்கு பெயிண்ட் அடித்தல், செம்மொழி சீராய்வுக்கு விழாவெடுத்தல், தொல்காப்பியத்துக்கு பொழிப்புரை எழுதுதல், சினிமா நட்சத்திரங்களை ஒன்றுகூட்டி மாநாடுகள் நடத்துதல், வாக்கு வங்கியாக பரவிக்கிடக்கும் கிராமத்து சினிமா ரசிகன் விரும்பும் நடிக நடிகைகளுக்கு மாமணி பட்டங்களை கொடுப்பது போன்ற மக்களை ஏமாற்றும் திராவிட பூச்சாண்டி வித்தைக்கு நேரெதிராக, வளர்ந்த நாடுகளை பின்பற்றி இயற்கை வளங்கள், மற்றும் புவியியல் சார்ந்த பொருளாதார கொள்கையுடன் தொலைநோக்கு பார்வையுடன் ஆக்கபூர்வமாக அடிப்படையயே மாற்றியமைக்கவல்ல நாம்தமிழர் கட்சியின் அரசியல் பொருளாதார வரைவுகூட தமிழகத்தில் சாத்தியமானதுதானா என்பது திராவிட பாரம்பரியத்தில் ஊறிப்போய் கிடக்கும் கிராமத்து மக்கள் பலருக்கு புரிந்திருக்க அதிக வாய்ப்பில்லை.
அண்ணாவையும் பெரியாரையும் மட்டுமே சமூக மேம்பாட்டு கொள்கையாக சிலாகித்து ஒருவரது ஊழலை இன்னொருவர் புட்டுக்காட்டி தேர்தல் கால இலவசங்களை மட்டுமே மக்களின் அடிப்படை உரிமையாக நேர்நிறுத்தி அரசியல் செய்துவரும் திராவிட கட்சிகளுக்கும்கூட நாம்தமிழரின் அரசியற் பொருளாதார வரைவு கண்ணை கட்டி காட்டில் விட்டது போன்ற தன்மையை தந்திருக்கும் என்பதிலும் வியப்பதற்கு இல்லை.
இருந்தும் நாம்தமிழர் கட்சியின் வரைவுகளில் காணப்பட்ட திட்டமூலங்கள் கணிசமானவற்றை பல கட்சிகளும் மானாவாரியாக திருடி தமது தேர்தல் அறிக்கையை அலங்கரித்திருந்தமையும் நடந்தேறியது. எம்ஜீஆர் அவர்களின் காலம் தவிர்ந்து ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் ஒன்று நிகழ்ச்சி நிரலாக தொடரும் என்ற போலி சம்பிரதாயத்தை, காலதேவனால் வரையறுத்து வகுக்கப்பட்ட விதி போலவே காட்டி பரப்புரை செய்து மக்கள் செல்வாக்கை தனதுபக்கம் திருப்பிவிட திமுக பகீரத பிரயத்தனம் மேற்கொண்டது.
ஐந்தாண்டுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் என்ற எதிர்பார்ப்பு திமுகவுக்கு சிறு ஆறுதலாக இருந்திருந்தாலும் நாம்தமிழர் கட்சியின் மூர்க்கமான எதிர் முழக்கம் கருணாநிதியின் அத்தனை கனவையும் குழிதோண்டி புதைத்துவிட்டது. 2016ல் ஜெயலலிதா வெற்றி பெற்றதற்கு மூல காரணம் நாம்தமிழர் கட்சிதான் என்றால்க்கூட நான் வெட்கப்படப்போவதில்லை.
தேமுதிக, மதிமுக, விசி, பாமக இவைகள் ஒட்டுமொத்தமாகவோ, அல்லாமல் ஒருசில கட்சிகளாவது திமுகவுடன் இணைந்திருந்தால் ஒருவேளை முதலமைச்சராக ஆறாவது முறையாக கலைஞர் கருணாநிதி சிம்மாசனம் ஏறியிருப்பார்.
அப்படி நடந்திருந்தால் பதவியேற்புக்கு மறுதினம் வைரமுத்து, ரஜனிகாந்த், கமலகாசன் போன்றோருடன் இன்னும் சில வடநாட்டு சினிமா நடிகைகளை சூழ அருகிருத்தி கருணாநிதி நடுநாயகனாக குடும்ப சமோதரராக வீற்றிருக்க மக்கள் பணத்தில் பாராட்டுவிழாக்கள் பட்டொளிவீசி பறந்திருக்கும்.
கருணாநிதியின் மக்கள் விரோத, குடும்பநல கொள்கை, மிக மோசமான சுயநலம் ஊழல் கலாச்சாரம், முக்கியமாக ஈழ இனப்படுகொலை அனைத்தும் ஒன்றுசேர்ந்து தீண்டத்தகாத ஒரு புறம்போக்காக கருணாநிதியின் திமுகவை மக்கள் மட்டுமல்லாது சிறு கட்சிகளும் ஒருசேர புறக்கணிக்கப்பட்டு அன்னியப்படுத்தியிருக்கிறது.
இருந்தும் ஜெயலலிதாவின் அராஜக அகம்பாவ மனப்பாங்கு வேறு வழியின்றி கணிசமான வாக்குக்களை இம்முறையும் திமுக பக்கம் செலுத்தி திமுகவுக்கு இன்னும் மக்கள் ஆதரவு இருப்பதுபோன்ற மாயை நிலை ஒன்றை உருவாக்கி திமுகவுக்கு தொடர்ந்து அரசியல் செய்வதற்கு இடமளித்திருக்கிறது.
ஈழ இனப்படுகொலை அவப்பெயரினை தொடர்ந்து காங்கிரஸ் கட்சிசியை கைகழுவி வெளியேறியவர்கள் 2011 ஆண்டு சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸை புறக்கணித்து காங்கிரசை படுதோல்வியடைய செய்தனர். பின்னர் காங்கிரஸிலிருந்து பிரிந்துபோன மூப்பனாரின் வாரிசு வாசன் அணியில் தம்மை இணைத்துக்கொண்ட சில பாரம்பரிய காங்கிரஸ் வாதிகள், தற்போதய தேர்தலில் வாசன் முடிவெடுக்க முடியாமல் அல்லல்ப்பட்டதுடன் அவர் அரசியலுக்கு சரிப்பட்டுவராத ஒரு உருப்படி என்பதை புரிந்துகொண்டு செய்வதறியாது மீண்டும் தமது வாக்குக்களை திமுக காங்கிரஸுக்கு கூட்டணிக்கு செலுத்திக்கொண்டதன் காரணமாக காங்கிரஸ்காரர்களும் இனி வரும் ஊடக பட்டிமன்றங்களில் தமிழகத்தில் அரசியல் பேச காலம் இடம் கொடுத்திருக்கிறது.
சரியான கல்வி, மற்று பகுத்தறியும் தன்மை, பொது அறிவு இவைகளை மக்களுக்கு ஊட்டப்படாதவரை இப்படிப்பட்ட சீர்கேடு சரிசெய்வது என்பது நெருப்பாற்றில் நீந்துவதற்கு சரி நிகரானதாகவே படுகிறது.
பாரம்பரியத்தையும் சாதி பிடிப்பினைகளையும் விட்டு விலகாதவண்ணம் திராவிட அரசியல் மக்களை மந்தையாக்கி வைத்திருக்கிறது என்பதே கசப்பான உண்மை. இன்றைய ஜெயலலிதாவின் வெற்றி கருணாநிதி மீண்டும் வந்துவிடக்கூடாது என்ற வெறுப்பின் வெளிப்பாடாக நிகழ்ந்த ஒன்று என்றே வரையறுக்க முடியும்.
என்ன இருந்தாலும் கருணாநிதிக்கு இப்பொழுது வயது 0094 ஆகிறது, மனித வாழ்வியலின் சராசரி தத்துவத்தின்படி அடுத்து வரவிருக்கும் தேர்தலுக்கு அவர் உயிருடன் இருப்பார் என்பது கடவுள் அல்லது விஞ்ஞானம் இரண்டில் ஒன்று மட்டுமே விடையளிக்க முடியும், ஆண்டவன் கிருபையால் அவர் இன்னும் பல ஆண்டு வாழ்ந்தாலும் அவரால் அரசியலில் ஆரோக்கியமாக செயற்படக்கூடிய நிலையில் இல்லை என்பதை அவரே திருவார்ரூர் தேர்தல் பரப்புரையின்போது தனக்கு ஓய்வு தேவை என்று வேண்டுகோள் வைத்திருப்பதையும் கவனத்தில் கொள்ளுவோமானால் 2021 நிச்சியமாக திமுகவுக்கு இன்னொருவர் தலமை வகிப்பார் என்பது சாதாரணமாக அனைவராலும் புரிந்துகொள்ள முடியும்.
அது கனிமொழியாக இருக்கலாம், அழகிரியாக இருக்கலாம் மாறாக தளபதி ஸ்ராலினாகக்கூட இருக்கலாம். ஆனால் இந்த மூன்று எதிர்பார்ப்பாளர்களும் ஒன்று சேர்ந்து திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை கருத்தொருமித்து வழி நடத்தி கொண்டு செல்வார்கள் என்பதை கடவுளால்கூட வரையறுத்து தீர்கானிக்க முடியாது.
அப்படியானால் 2021 திராவிட முன்னேற்ற கழகம் குறைந்தது மூன்று துண்டாக ஆகாவிட்டாலும் நிச்சியம் இரண்டு துண்டாக நிலைபெறும் என்பது எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. அந்த உடைவு பாரம்பரியமாக இருந்து வரும் திமுக விசுவாசிகளில் பெருத்த ஊழல் செய்த முதலைகள் தவிர பாமர தொண்டனாக இருக்கும் அனைவரையும் வெற்றிபெறும் என கணிக்கப்படும் மாற்று சக்திகளை நோக்கி தள்ளுவது தவிர்க்கமுடியாமல் போகும். 2011/ 2016 ஐந்து ஆண்டுகள் ஆட்சியை முடித்து அடுத்த 2016/ 2021,ஐந்தாண்டுகள் ஆட்சி நடத்தும் ஜெயலலிதா அவர்கள் 2021க்கு இடையில் பெருத்த மக்கள் வெறுப்பை சந்திப்பார். ஜெயலலிதா ஒன்றும் மக்கள் மனம் கவர்ந்த காமராஜரோ, எம்ஜீஆரோ அல்ல, மாறாக கொண்ட கொள்கையிலிருந்து வழுவாத பிரபாகரனும் அல்ல.
எந்த அலைக்கழிவும் இல்லாமல் எம்ஜீஆரின் பிம்பத்தில் கட்டியெழுப்பட்ட அதிமுக என்ற அமைப்பை தன்வசப்படுத்தி வைத்துக்கொண்டிருக்கும் ஜெயலலிதா நான் என்ற அகம்பாவமும் ஆணவப்போக்கும் கொண்ட மனநிலையுடன் மாமன்னர் மனப்பாங்கில் மந்திரிகள் எம் எல் ஏ க்களை காலில் விழவைத்து சர்வாதிகாரியாக இருந்து வருகிறார்
கருணாநிதியைப்போல பாராட்டு விழாக்கள் நடத்தாத ஒரு குறைதவிர கொள்கையில் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.
கடுமை தவிர சமயோசிதமான நிர்வாகம் செய்யும் ஆற்றல் ஜெயலலிதாவிடம் துண்டற இல்லை. எம்ஜீஆரால் தொடங்கப்பட்ட கட்சி அதிமுக என்ற பின்னணி தவிர தனிப்பட்ட வரலாற்று சிறப்பு அம்ஷம் எதுவும் ஜெயலலிதாவுக்கு கிடையாது. 2016 ஆட்சி பல்லாயிரம் கோடி கடன் சுமையிலிருக்கும் தமிழக அரசுக்கு தொடர்ந்து ஆட்சியை நகர்த்திச்செல்ல ஜெயலலிதாவுக்கு நிதி மேலாண்மையில் மிக நெருக்கடி நிறைந்த காலமாக அமையும்.
படிப்படியாக குறைக்கப்படும் என்ற மது விலக்கு வாக்குறுதி அரசால் சுலபமாக நிறைவேற்றமுடியாத நிலை எதிர்க்கட்சிகளால் மிகுந்த நெருக்கடிக்குள்ளாகும். மின் உற்பத்தி, நீர் மேலாண்மை என்பவை பூதாகரமாக தாக்குதலை கொண்டுவரும்.
சொத்துக்குவிப்பு வழக்கும் ஜெயலலிதாவுக்கு பெரும் கண்டமாக எதிர்கொள்ளும். இதுவரை வெளியே வராவிட்டாலும் 2011/ 2016 ஜெயலலிதாவின் ஆட்சி காலப்பகுதியில் மோசமான ஊழல்கள் நடந்து முடிந்திருக்கின்றன.
மின் கொள்வனவில் பல ஆயிரம் கோடிகள் நத்தம் விசுவநாதன், ஓ பன்னீர்ச்செல்வம் ஆகியோர் ஊழல் செய்ததாக தேர்தல் காலத்தில் செய்திகள் கசிந்திருந்தன. இனி வரும் காலங்களில் எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக சட்டசபைக்குள் ஒருபக்கமும், சட்ட சபைக்கு தெரிவு செய்யப்படாத கட்சிகளான பாமக, தேமுதிக, மந கூட்டணியில் உள்ள கட்சிகள் மற்றும் நாம்தமிழர் போன்ற கட்சிகள் வெளி அரங்கிலும் மிகுந்த நெருக்கடியை கொடுத்து நெருக்குவாரம் செய்யும் அபாயம் இருக்கிறது.
ஒருவேளை ஜெயலலிதாவின் அரசு இன்னும் இரண்டு வருடங்களில் டிஸ்மிஸ் செய்யப்படும் ஆபத்துக்கூட ஏற்படலாம், அப்படியல்லாமல் மொத்தமாக பத்துவருடங்கள் என்னதான் நல்லாட்சி வழங்கினாலும் மக்கள் மத்தியில் பெருத்த சலிப்பு ஏற்பட்டு மாற்றம் நோக்கிய பார்வையே நிச்சியம் உருவாகும். இந்த இடத்தில் நாம்தமிழர் கட்சி ஒன்று மட்டுமே மக்களின் வாழ்க்கைக்கு ஏற்ற தத்துவார்த்த மாற்று இலக்குக்களை வழி மொழிந்து வைத்திருக்கிறது
திராவிடக்கட்சிகள் இரண்டைத்தவிர மற்றக்கட்சிகளும் நாம்தமிழர் கொள்கையை பின்பற்றி முழக்கமிடக்கூடும் இருந்தும் மாறி மாறி திராவிடக்கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மக்கள் மத்தியில் நீர்த்துப்போன தேமுதிக, பாமக, மதிமுக மக்கள் மத்தியில் இலகுவாக காலூன்ற முடியாது,
நாம்தமிழர் கட்சி ஒன்றுக்கு மட்டுமே கறைபடியாத களமாடும் தகுதி இருக்கிறது. தீதும் நன்றும் பிறர் தர வருவதில்லை என்பதை கருத்தில்க்கொண்டு களமாடினால் வெற்றிக்கனி தூரத்தில் இல்லை.
அடுத்து வரவிருக்கும் உள்ளூராட்சி தேர்தல், தொடர்ந்து வரவிருக்கும் நாடாளுமன்றத்தேர்தல்கள் நாம் தமிழர் கட்சிக்கு பெருத்த சவாலாக இருந்தாலும் நீந்தி கடக்கவேண்டிய கட்டாயம் நாம்தமிழர் கட்சிக்கு இருக்கிறது.
2021 தன்னிச்சையாக ஜெயலலிதா தோல்வியடையும் காரணிகள் நூறு மடங்கு இருப்பதால், திமுக எப்படியும் அந்த இடத்தை கைப்பற்ற கடைசி துளி சக்தியையும் பிரயோகிக்கும் 2021 லும் புதையுண்டிருக்கும் திமுக மீண்டும் எழுந்து நிற்க இடமளிக்காமல் நாம்தமிழர் கட்சி செய்யப்போகும் கடுமையான வேலைத்திட்டம் 2021 ல் நாம்தமிழர் கட்சி தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றமுடியும்.
மாற்றம் ஒன்றுதான் மாறாதது. நாம்தமிழர் 2021ல் நிச்சியம் வெற்றிபெறும், வெற்றி பெற்றாகவேண்டும்.
ஈழதேசம் செய்திகளுக்காக. கனகதரன்.
Subscribe to:
Posts (Atom)