Saturday, July 31, 2010

படிமம்:EttayapuramBharathiHouse.png
நன்றி விக்கிபீடியா,

ஈழத்தமிழனின் ஆண்டுத்திவசம் கருணாநிதிக்கு செம்மொழி மாநாடு

ஈழத்தமிழனின் ஆண்டுத்திவசம் கருணாநிதிக்கு செம்மொழி மாநாடு!!

தமிழர்களின் சாபக்கேடாக, ஈழத்தின் துரதிஸ்ட்டமாக, விரும்பியோ விரும்பாமலோ அப்புறப்படுத்த முடியாத பெரும் சமூகச்சுமையாக. ஊழல், பணபட்டுவாடா மூலம் தழிழ்நாட்டை குட்டிச்சுவராக்கி. கற்காலத்தை நோக்கிய பாதையில் தமிழ்நாட்டை இட்டுச்செல்லும் துரோக சக்தியாக, முத்துவேலுநாயக்கர், தெட்சணாமூர்த்தி, என்கின்ற “கருணா நிதி” தழிழர்களை மையங்கொண்டு, சூரிய கிரகணமாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்.

மாற்றுத்தெரிவான ஜெயலலிதா ஒன்றும் முன்னவருக்கு சற்றும் குறைந்தவரல்ல. இருந்தும் குடும்பங்களின் பங்கீடு இல்லாத சிறிய இடைவெளி மட்டும் அங்கு உண்டு.

கருணா நிதி தனது சுய விளம்பரத்திற்காகவும். தன் குடும்ப வளர்ச்சிக்காகவும், திட்டமிட்டு தான் பிறந்த மாதமான ஜூன் மாதத்தில் 23 ம் திகதியிலிருந்து 27 ம் திகதி வரையிலான ஐந்து தினங்கள்.

தமிழகத்தின் பாமரர்களின் பலகோடி வரிப்பணத்தின் பொருட்செலவில் தான்தோன்றித்தனமாக கோவைமாநகரில் பிரமாண்டமாக கூட்டும் களியாட்டக்கேளிகை நிகழ்ச்சிதான் “செம்மொழி மாநாடு”.

ஈழத்துயரத்தை ஈடேற்றிய கருணாநிதியால், ஈழ அழிப்பின் ஓராண்டு வெற்றி விழாபோல கொண்டாடப்படும். இந்நிகழ்வில் பங்குபற்ற பல தமிழ் அறிஞர்கள் மறுத்து புறக்கணித்தபோதும். “அழுங்கு” என்ற விலங்கின் மூர்க்கத்தோடு, செம்மொழி மாநாடு நடத்தியே தீருவேன், எதுபற்றியும் எனக்கு கவலையில்லை, என்னுடைய வளர்ச்சிதான் எனக்கு முக்கியம், என்று தமிழர்களின் மனங்களில் சேறடித்திருக்கிறார்.

செம்மொழி மாநாடு, என்று ஒன்று இதுவரை உலகில் நடந்ததாக தரவுகளில்லை.,”உலகத்தமிழாராய்ச்சி மாநாடு” என்பதுதான் பல ஆண்டுகாலமாக பல நாடுகளிலும் . தமிழ், இலக்கிய, கலை, பண்பாடு, மொழி, பற்றிய ஆழமான தொலைநோக்குடன் நடாத்தப்பட்டு வருகிறது, தமிழ் நாட்டில் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, நடாத்துவதற்கு உகந்த சூழல் உள்ள காலமல்ல இது, ஈழத்தமிழர்களின் நெஞ்சில் நிறைந்த வேதனையை பகிர்ந்து கொள்ளவேண்டிய காலம், எனக்கூறி தமிழ் அறிஞர்களின் ஒத்துளையாமையால். ஏற்பட்ட தொல்வியை ஈடுகட்ட, தெட்சணாமூர்த்தி போட்ட மாற்றுத்திட்டந்தான் “செம்மொழி”மாநாடு என்ற பெயரில் களியாட்டமாக உருப்பெற இருக்கிறது,. தனது தலைமையில் இனி வருங்காலங்களில் தமிழாரய்ச்சி மாநாடு நடாத்த சந்தர்ப்பம் கிடைக்கபோவதில்லை, என்ற ஈகோ இந்த வேடிக்கை வினோத நிகழ்ச்சியை தோற்றுவிக்க அவரை தூண்டிநிற்கிறது.

தந்திரசாலியான கருணா நிதி தன் முயற்சியில் சற்றும் மனந்தளராமல் இறந்து கிடந்த உடலை மீண்டும் தூக்கிக்கொண்டு முருங்கை மரத்தில் ஏறும் முயற்சிதான் செம்மொழி மாநாடு, தமிழுக்கு அலங்காரமாக செம்மொழி மாநாடு நடாத்துவது பெருமைக்குரிய ஒன்றுதான். அந்தமாநாட்டுக்கு தலைமை தாங்கும் தகுதி இருப்பவர்கள் தலைமை தாங்கலாம்,.

அந்தத்தகுதி கருணாநிதிக்கு இருக்கின்றதா என்பது ஆராயப்படவேண்டியது, தாந்தோன்றித்தனமாக அவரவர் தமிழுக்கு ஆராய்ச்சி மாநாடு நடாத்த முற்பட்டால், அது கட்சிக்கூட்டங்கள் போல் இருக்குமே தவிர இலக்கிய தமிழ் வளர்ச்சி மாநாடாக இருக்காது., தமிழுக்காக தன்னலமின்றி உழைத்தவர்களும், தமிழுக்காக புரட்சி செய்தவர்களும், தமிழை சீர்திருத்தக்கூடிய திறமை பெற்றவர்களும் தான் தலைமைவகிக்க முடியும், முத்துவேலுநாயக்கர் தெட்சணாமூர்த்திக்கு இதில் எந்தத்தகுதி இருக்கின்றதென்று தெரியவில்லை. குறைந்தது தமிழனாகவாவது பிறந்திருக்க வேண்டும்.

http://nadaivandi.blogspot.com/2009/04/blog-post.html சில திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதிய தகுதியை கொண்டு தலைமை தாங்க முடியாது.

அம்புலிமாமா என்ற புத்தகம் குழந்தைகளுக்காக பல ஆண்டுகளாக பழைமையுடன் வெளிவந்துகொண்டிருக்கிறது. அந்த புத்தகத்தில் வரும் கதைகள் எல்லாம் சரித்திர அரசர் காலத்து கதைகளாகவே இருந்துகொண்டிருக்கிறது. அதேபொன்ற ஆலாபணை சோடிப்புக்களுடன் சரித்திர நாவல்கள் எழுதக்கூடிய ஆற்றல் கருணாநிதியிடம் தொழில் முறைபயிற்சியாக நிறைய அனுபவமுண்டு. அவரது சில கவிதைகளை நானும் படித்திருக்கிறேன் அவைகள் சாடல்களாக இருக்குமே தவிர ரசனையான கவிதையாக நான் ரசித்ததில்லை. மற்றும், இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் எல்லம் செளக்கியமே. கருணாநிதி கக்கூசுக்கு போனாலும் அதையே செய்தியாக்கி வெளியிடுவதற்கு அவருக்கென்றே பத்திரிகை, ஊடக வசதிகளும் அடிப்பொடிகளும் நிறையவே உண்டு. இவற்றைப்பயன்படுத்தி அவர் எது வேண்டுமானாலும் செய்யலாம் அவர் கொட்டாவி விட்டல் சங்கு, குசு விட்டால் நாதஸ்வரம் என்று உரை விளக்கம் எழுத ஆயிரம் பேர் உண்டு.

புகழ் விரும்பியான அவர். இவைகளைப்பயன்படுத்தி தனது பதவிக்காலத்தில் தன்னை புகழ்ந்து தனது பெயரால், தமிழுக்கு ஒரு மாநாட்டை மக்கள் பணத்தில் நடத்தி விட்டால். தனது அஸ்தமனத்தின் பின் வரலாற்றில் தனது “பாசிசம்” மறைக்கப்பட்டு நற்பெயர் நின்று நிலைக்குமென கடைசி காலத்தில் பேரசை படுகிறார்.

http://www.savukku.net/2010/03/blog-post_16.html

ஈழத்தில் வடக்கே வல்லிவெட்டித்துறை கடற்கரையில், எந்த ஒரு அரசியல் பின்னணியுமில்லாமல் பிறந்த ஒரு சிறுவன், கூத்து, நாடகம்,. திரைக்கதை, வசனம், மேலாக. விளம்பரமேதுமில்லாமல், அறிக்கை விளையாட்டு இல்லாமல், (உலகதமிழரிடம் மட்டுமில்லை) உலகாரங்கில் தமிழர் தலைவன், என்று பெயரெடுத்து வேகமாக வளர்ந்து தன்னை எட்டி உதைத்து விட்டானே, என்ற குரூர காழ்ப்புணர்ச்சி , செம்மொழியின் பெயரால் மாநாட்டை நிறுவ வேண்டிய கட்டாயத்திற்கு அவரை தள்ளிவிட்டுள்ளது, புகழ் தானாக வந்து சேரவேண்டியது, ஆனால் கருணாநிதி தன்னை புகழவேண்டி, (இளைஞர்கள்) மக்கள் அதிகமாக சரிந்திருக்கும் சினிமாவுக்குள் தானாக நுழைந்து வெட்கம் துறந்து நடு நாயமாக பிச்சை ஏற்பது போல புகழேந்தி நிற்பது என்னவோபோல் இருக்கிறது. மக்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டிய ஒரு முதியவர், கேளிக்கை கொண்டாட்டங்களையும் சோம்பேறித்தனத்தை இளைஞர்களிடம் ஊட்டக்கூடிய சீரழிவுகளையும், ஏற்படுத்தி தன்னை நிலைநிறுத்திக்கொள்ளுவதற்காக, சினிமாவுக்குள் சாய்ந்து மக்கள் தன்னை விட்டு விலகாத சூழலை விரித்து வேறு ஒரு உலகத்திலுமில்லாத கலாசாரத்தை ஊட்டி மக்களின் அழிவுப்பாதைக்கு வழிதிறந்திருக்கிறார்.

நடக்கப்போகும் செம்மொழி மாநாட்டில் உலகதமிழ் அறிஞர்கள் வருகிறார்களோ இல்லையோ, (கூத்தாடிகள்) சினிமாக்கலைஞர்கள் நிச்சியம் உண்டு, நித்திரையிலும் தன்னை புகழக்கூடிய சினிமாக்கலைஞர் வாலி, வஞ்சகமில்லாமல் அள்ளிவிடும் வைரமுத்து, கருணாநிதியை கனவிலும் கரையும் பா.விஜய், எல்லாம் நீங்களே என்று சமீபகாலமாக வழிந்து கொண்டிருக்கும், ஆரிய வம்ஷ பார்ப்பன்ன காமகீர்த்தி கமலகாசன், கருணாநிதியின் உளியின் ஓசை நாடகப்படத்தில் ஆடிய திருன அழகிய வினித், இவர்கள் போக தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு வேறு மொழி சினிமா ஆடிகளும் நிச்சியம் அலங்கரிப்பார்கள், கருணாநிதியின் இன்னுமொரு குறி, தனது மூன்றாம் தாரத்து ராஜாத்தி அம்மாவின் மகள், திருநங்கை கனிமொழி, யை செம்மொழி மாநாட்டின் மூலம் நிச்சியம் முன்னிலைப்படுத்துவார். கனிமொழியின் கவிதைகள்,கட்டுரைகள், வேறு எந்த ஆக்கங்களும் இன்னும் என் கண்களுக்கு படவில்லை, இருந்தும் அடைமொழியுடன் “கவிஞர் கனிமொழி” என்று அழைப்பதால் அவர் சிறந்த கவிஞராகவே இருக்கக்கூடும், கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும், கருணாநிதியின் வீட்டு கழுதை கூட குதிரையாகலாம்.

தொல்காப்பியர் எழுதிய தமிழ் இலக்கிய கிரந்தமான தொல்காப்பியத்தை, தனது விளம்பரத்திற்காக, 2002 2003ல் சென்னையில் இடப்பற்றாக்குறை காரணமாக பெங்களூரிலும்,கோவாவிலும் ,ஒய்வெடுத்து விளக்கவுரை ஆலாபணை எழுதிய கருணாநிதி, அதற்கு “தொல்காப்பியப்பூங்கா” என பெயரிட்டு கட்சிக்காரர்களிடம் விற்று பணம்பண்ணினார், கொடுமை என்னவென்றால் கருணாநிதி எழுதிய தொல்காப்பிய விளக்கவுரையில் 500 க்கு மேற்ப்பட்ட பிழைகள் இருப்பதாக , புலவர், அ.நக்கீரனார், ஆதாரத்துடன் 11,01,2003 ல் குற்றச்சாட்டுக்களுடன் திருத்தஞ்செய்து சுட்டிக்காட்டியிருந்தார், ஆதாரம் பாற்க (நனவுகள்) http://nanavuhal.wordpress.com/2010/02/02/ellai-karunanidhi/ தன்னை விஞ்சிய தகுதியுடையவர்களை மாநாட்டில் உள்ளீர்க்க கருணாநிதி விரும்பாவிட்டாலும், பார்வையாளர்களுக்காகவும் விமர்சனங்களை தவிர்ப்பதற்காகவும் ஒருசிலரையாவது உள்ளீர்த்து விடவேண்டுமென்ற கட்டாயம் இருக்கிறது , இலங்கையின் தமிழறிஞர் பேராசிரியர் திரு கா.சிவத்தம்பி, கம்பன் கழகம் ஜெயராஜ், மலேசிய தமிழறிஞர் பேராசிரியர் பழனியப்பன் இராமசாமி, ஆகியோர் மாநாட்டை புறக்கணித்தது உறுதியாகியிருக்கிறது, தமிழ்நாட்டில் சினிமா உலகம் தவிர்ந்த தமிழறிஞர்களும் மாநாட்டை ரசிக்கவில்லை, தமிழருவி மணியன் நெடுமாறன் பொன்றோர் மாநாட்டில் பங்கு பற்றப்போவதில்லை.

கருணாநிதிக்கு இருக்கும் ஒரு ஆறுதல், நேரம் ஒரு பந்தலில் குடியிருக்கும் சுப வீர பாண்டி ஒருவர் மட்டுமே, 29 மே 2010 இணயத்தள செய்தி ஒன்றில், தென் இந்திய திரைப்பட வர்த்தகசபை, மற்றும் தென் இந்திய திரைப்படத்துறையினர் ஒரு கூட்டறிக்கை மூலம் தங்கள் எதிற்பை வெட்டை வெளிச்சமாக காட்டியிருக்கின்றனர், அவர்களுக்கு நன்றியை தெரிவித்து பணிந்து கேட்பது என்னவென்றால், தமிழரான நாங்கள் கம்பிவேலிகளுக்குள்ளும் கட்டந்தரையிலும் மரங்களின் கீழும் உறவுகளை இழந்து குழந்தைகளை இழந்து சிங்களவனிடம் அடிமைப்பட்டுக்கிடக்கும் தருணத்தில், எங்களை மீட்டெடுக்கக்கூட தமிழ்நாடு அரசு முயலாவிட்டாலும், எங்களுக்காக திரைப்படத்துறையினரும் இன்னும் பல அமைப்புக்களும், தமிழ்நாட்டு உறவுகளும், காட்டும் ஈடுபாட்டுக்கு மதிப்பளித்து செம்மொழிமாநாட்டின் முதல் நாள் அமர்வை ஈழ அழிப்பு நாளாக பிரகடனப்படுத்தி நினைவு கூர்ந்து கொண்டால் உலகம் செம்மொழி மாநாட்டை ஏற்றுக்கொள்ளக்கூடும்,

ஈழத்தை எரித்த வெப்பம் என் தமிழால் கழுவுப்படுமாக இருந்தால்! முயற்சி பாதகமில்லை,
செய்ய மணிமா முடிவீழ
சென்ற மன்னர் எண்ணிலராம்-ஐய
இதனை உள்ளத்தில்
ஆழ்ந்து காணல் அறிவாமே,
அறுகு அம்பு, ……….

நன்றி நெருடல் இணையம்,

Friday, July 30, 2010

சினிமா உலகத்துக்கான நிராகரிப்பு போர்

சிங்களவனுக்கு ஆராத்தியெடுக்க துடிக்கும் சினிமா உலகத்துக்கான நிராகரிப்பு போர்

சிறந்த கலைஞர்கள். கலைத்தாயின் நேரடியான பார்வையினால் ஆசீர்வதிக்கப்பட்டு பிறப்பெடுப்பவர்கள்.

இயல்பாகவே சுயதிறமையும் கலைத்தாயின் கருணையும் கிடைக்கப்பெற்று. கலையுடன் சமூகநலன்கொண்டு வாழ்பவர்கள் சிறந்த கலைஞர்கள்.

எம்.ஜீ.ஆர். என் எஸ். கிருஸ்ணன். போன்ற சமூகச்சிந்தனையுடன்.பரந்த மனங்கொண்ட நடிகர்கள் எந்தக்காலத்திலும் அழிவில்லாப்புகழுடன் எம்மத்தியில் வாழ்ந்ததுமுண்டு. இவர்கள் மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்து இன்றும் அன்றும் என்றும் வாழ்வாங்கு வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

கலைத்தாயின் அதீதகருணைகொண்டு. வித்தியாசமான திறமைகளினால் உலகத்தை பிரமிப்புக்குள்ளாக்கியவர்களும் உண்டு.அந்தப்பிரமிப்புக்கள் சாகாவரம் பெற்று வாழ்வதற்கு. அவர்களின் சமுதாயபக்திகாரணமாக காலங்கடந்தும் வாழ்வாங்கு வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

கலை பிறந்தபோதுதான் நாகரீகம் அறியப்பட்டிருக்கிறது. கலையில் வெளிப்பாடுதான் நாகரீகம் என்றேகொள்ளமுடியும். எனவே கலைதான் நாகரீகம் என்ற பெயர்ச்சொல்லுடன் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்றேகொள்ளலாம்.

கலையை தொழிலாகக்கொண்டு வாழ்பவர்கள் மனித நாகரீகத்தை மதிக்கக்கற்றுக்கொள்ளவேண்டும்.

1452 ல் இத்தாலியில் பிறந்த ஓவியக்கலைஞன் ‘டாவின்ஸியின்’ புகழ் உலகம்முழுவதும் பரவுவதற்கு அவருடைய சமூகப்பற்று முக்கிய காரணமக இருந்தது.

டாவின்ஸி இறந்துபோய் அவரது உருவம் மக்கள் மனங்களில் ஒருவேளை மறந்துபோனாலும். அவரால் தீட்டப்பட்ட பல ஓவியங்களில். ஓவியங்களின் இராணியாக. Queen of the arts. ‘மோனோலிசா’ ஓவியம் பலநூறு வருடங்களாக நிலைத்து நின்றுகொண்டிருக்கிறாது. Leonardo di ser piero da vinci. தவிர்ந்த வேறுபல ஓவியக்கலைஞர்கள் வியக்கத்தகு ஓவியங்களை வரைந்திருந்தாலும். மோனோலிசா ஓவியத்திற்கு கிடைத்த விஞ்சியபுகழ் எவரும் அடைந்ததாக பதிவுகாளில்லை.

டாவின்சி அவர்கள் நல்ல வசதி படைத்தவராக இருந்தும் அவரது பண்புதான் சமூகத்தில் அவரது ஓவியங்கள் வெளிவருவதற்கு உதவியாகவிருந்தன.

கலைகளில் ஓவியம் சிற்பம் மிகநுணுக்கமான கலையும்கூட. மூளை கற்பனை ஞாபகம் போன்றவற்றின் அரிய வெளிப்பாடுகள் அவை. நாடகம் கூத்து போன்றகலையல்ல. ஓவிய சிற்பக்கலைகள். நடிப்புக்கலை பாவனையோடு கூடிய ஒன்று.

இன்று சினிமாவில் நடிப்பு இல்லாத நடவடிக்கைகளைத்தான். நாங்கள் பணங்கொடுத்து நடிப்பு என்று பிரமிப்புடன் பார்த்துக்கொண்டிருக்கிறோம். மாறிவரும் உலகத்தின் தேவையும்
அப்படியேதான் எதிர்பாற்கப்படுகிறது. ரசனை எப்படி இருக்கிறதோ படைப்புக்களும் அப்படியே மாறுபடும். அவ்வளவுதான் நடிப்பும் சினிமாவும்.

இன்றுசினிமா. உலக அளவில் குறுகியகாலத்தில் பெரும்பணம் சம்பாதிக்கும் ஒரு தொழிலாக மாறிவிட்டது. அதிர்ஸ்டம் கிடைக்கப்பெற்ற நடிகர்களுக்கு பள்ளிபடிப்பறிவு. பெருத்தமுதலீடு. இல்லாமல். நல்லவருமானத்தை குறுகியகாலத்தில் ஈட்டிக்கொள்ள சினிமா வழி
கோலிக்கொடுத்திருக்கிறது .

ஆனால் அவ்வளவு பணமும் மிக கீழ்மட்டத்திலிருக்கும் பாமர மக்களிடமிருந்துதான் ஈட்டிக்கொள்ளப்படுகின்றதென்னும் உண்மையை. சினிமாப்பிம்பத்தின் உச்சத்தில் நின்றுகொண்டிருப்பவர்கள் ஒருசிலரைத்தவிர மற்றவர்கள் உணருவதில்லை.

பிறவிக்கலைஞர்களிடம் செல்வம் தங்குவதில்லை. சரஸ்வதியும் இலட்சுமியும் ஒரே இடத்தில் ஒன்றாக வாழமாட்டார்கள்.

தன்னுடைய முழுத்திறமைதான் அவ்வளவு பெரும்பொருள் ஈட்டக்காரணமென புகழின்போதையால் நடிகர் நடிகையர்கள் எண்ணிவிடுவதுண்டு. இப்படித்தலைக்கனம் கொண்டு வீழ்ச்சியடைந்தபலர் எழுந்திருக்க முடியாமல் முடங்கிப்போன வரலாறுகள் சினிமா உலகத்தில் ஒன்றிரண்டல்ல.

ஒருபடத்தின் கதையம்சமும். அந்தப்படம் வெளிவந்த சூழலும். அதிர்ஸ்டமும். ஊடகங்களின் விளம்பரமும் சேர்ந்து. சிலபடங்கள் ஓடிவிட்டால் நடிகர். நடிகைகளின் மன ஓட்டமும் கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் ஓடிக்கொண்டிருப்பதுண்டு.

சினிமா என்ற சாதனத்தின் மூலம் நடிகர்களின் முகம் வெகுவிரைவில் சமூகத்தில் அறிமுகமாகி விடுவதால். நல்லதோ கெட்டதோ அவர்கள் சொல்லுவது வெகுவிரைவாக சமூக அடுக்குகளுக்கு சென்று சேர்ந்துவிடுகிறது. இந்தமாயையினால் மக்கள்கூட்டம் நடிப்புக்கலைஞர்களை பின்பற்றி
தொடர்வதற்கான வழியும் நிறையவுண்டு.

யதார்த்தத்தில் குறிப்பிட்ட அந்தநடிகர். நடிகை அப்படித்தான் இருப்பார்களென்பது எதிர்பார்க்கமுடியாத ஒன்று. ஆனால் சமூகபொறுப்போடு கூடிய துறையான சினிமாவில் மக்கள் ஆதரவுபெற்று பிரகாசிப்பவர்கள். அந்தச்சமூகத்திற்கு அழிவை ஏற்படுத்தவல்ல. களங்கம் ஏற்படும்படி. ஒருசிக்கல் ஏற்படும்படி. நடந்துகொள்வதை தவிர்த்து நடக்கவேண்டிய எழுதப்படாத சட்டத்தின் கட்டாயத்திலிருக்கின்றனர்.

மக்களால் உண்டான புகழைவைத்து அந்த சமூகத்தை அழிப்பதற்கு முயற்சிசெய்தால். ஏறிய ஏணியை எட்டியுதைத்த கதை எதிர்காலத்தில் அவர்களது பெயருக்கு கண்டம் வைக்குமென்பதை புகழில் இருக்கும்போது அவர்களால் உணரமுடிவதில்லை.

சினிமாநடிகர் நடிகைகள் ஓரளவு அழகாகவும். உடை ஒப்பனைகள் கவர்ச்சியாக இருப்பதால். விரைவில் அவர்களது நடவடிக்கைகள் பாவனைகள் மக்கள்பின்பற்றிநடக்கும் வாய்ப்புக்களும் அதிகமுண்டு

சமூகம்சார்ந்து அடக்குமுறைகளுக்கு எதிராக. துன்பத்தைக்கண்டு துடித்தெழும் மனிதாபிமானியாக சீர்திருத்தவாதியாக. சினிமாவில் நடிப்பவர். கதாநாயகன் என்றும். எதிர்வினையாக நடிப்பவரை வில்லன்என்றும் விளித்துக்கொள்வதுண்டு. நிஜவாழ்விலும் அந்த நடிகர்கள் அப்படித்தான்
இருப்பார்களென அதிகமான பாமரமக்கள் எண்ணி ஏமாந்துவிடுவதுமுண்டு.

அவர்களது இயல்பு எப்படியிருந்தாலும். நான்கு சுவர்தாண்டி தமது அழுக்குக்களை வெளியில் கொட்டிவிட்டால். சமூகம் காலதாமதமில்லாமல் தூக்கியெறிவதற்கு பின்நிற்பதுமில்லை. இருந்தும் காலத்திற்குகாலம் கசப்பான சமூகக்கெடுதலான நடிக நடிகைகள் வந்துபோய்க்கொண்டிருப்பதும் குறையவில்லை.

அடிமட்ட மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்றதனது அந்தஸ்த்து எப்படி வந்தது என்பதை மறந்து. தலைக்கனங்கொண்டு. தன் வளர்ச்சிக்கு காரணமான சமூகத்தை மதிக்காதவர்களை. வெறுமென எதிர்ப்புக்காட்டுவதை விடுத்து திருந்துவதற்கான சந்தற்பத்தை ஒருமுறை கொடுத்துப்பாற்கலாம்.

முடியாதபட்சத்தில் குறிப்பிட்டவரையும் அவர் சார்ந்தவர்களையும் விரோதித்து எதிர்ப்பைச்சம்பாதிப்பதிலும் பாற்க. அந்தக்குறிப்பிட்டவர்களை துணிவுடன் நிராகரித்து எமது ஒத்துழைப்பை திருப்பபெற்றுக்கொண்டொமேயாகவிருந்தால். எங்கள்பலம் பலவீனத்தையும் அவர்கள் அறியவாய்ப்புண்டாகும். இந்தநடைமுறையால் குறிப்பிட்டவர் திருந்துவதற்கும் இன்னுமொருவர் அதேபோன்றதவறை செய்யாமல் தடுப்பதற்கான எச்சரிக்கையும் ஏற்படுவதற்கு வாய்ப்பாக அமையும்.

தேசியத்தலைவர் அவர்கள் தீர்க்கமாக நம்பும் ஒருவாசகத்தை இங்கு நினைவுகூருவது பொருத்தமாகவிருக்கும்.
“எங்கள் தரப்பு பிரச்சினைகளை இரக்கமாக ஒருவருக்கு எடுத்திச்சொல்லி இரக்கத்தின் மூலம் குறிப்பிட்ட காரியத்திற்கு தீர்வுபெறலாமென்பது ஒருபரீட்சையேதவிர முடிவாக ஒருபோதும் அமையாது. எங்கள்சக்திக்கு முடிந்த நியாயமான எதிர்விளைவை தோற்றுவிப்போமேயானால் சில
நியாயங்களை நியாயப்படுத்தவும் முடியும். எங்கள்பலத்தை எதிர்த்தரப்பும் இனங்கண்டுகொள்வதற்கு வாய்ப்பாகவும் இருக்கும். நாங்களும் எமது பலத்தை அறிந்தவர்ளாவோம்.”

இந்திய அரசியல் முதலாளிகளின் கபடமான திட்டத்திற்கு அசினும். அடுத்து கருணாசும். பலியாகியிருக்கின்றனர். மேல்மட்டத்தின் திட்ட விஸ்தரிப்புக்கான தயாரிப்புக்களின் பரீட்சார்த்தம்தான் அசின், கருணாசு என்பதை புலம்பெயர் தமிழர்கள் மறந்துவிடக்கூடாது.

பரிட்சார்த்த எதிர்வினையாக குறிப்பிட்ட விரோத நடவடிக்கைகளுக்கு காரணமானவர்களின் படங்களை ஒதுக்கி, நிராகரிப்பு போரை அவர்களுக்கெதிராக நடத்தவேண்டிய கட்டாயம் உடனடித்தேவையாகியிருக்கிறது.

புலம்பெயர் நாடுகளிலிருக்கும் அமைப்புக்களுடன் கலந்து ஆலோசித்து காலம் தாழ்த்தாமல் குறிப்பிட்டவர்களின் படங்களை ஒதுக்கி எமது பலம் என்னஎன்பதை உணரவைக்கவேண்டும்.

இதுதான் “புலம்பெயர் மக்களின் கையில் போராட்டம்”. கொடுக்கப்பட்டிருக்கின்றதன் அர்த்தப்பட்ட பொருளாகும்.

புலத்தில் வேகமாகச்செயற்படுபவர்களை, சீர்திருத்தங்களை விரும்புபவர்களை, ஒருவருக்கு ஒருவரை எதிரிகளாக்கி பிரித்துமுடக்கும் நோக்குடன் பிரிவினையை தூண்டுபவர்கள்தான் ஒருத்தருக்கொருத்தர் கோள்மூட்டி பிரித்தாளும் தந்திரத்தை அரச புலனாய்வுத்துறைக்காக கங்கணம் கட்டி சில ஊடகங்கள்வாயிலாக ஒற்றுமையை உடைத்து பகையை வளர்க்க திட்டமிட்டு செயற்படுகின்றனர்.

நோக்கம் ஒன்றாகஉள்ள புலத்துத்தமிழர்கள் உள்ளுக்குளிருந்து விவாதிப்பது அவர்கள் பிரிந்து போய்விடவில்லையென்பதைத்தான் தொடர்ந்து காட்டி நிற்கிறது. குறைகுற்றங்களை சுட்டிக்கட்டுப்வர்களை எதிராளியாக்கபோடும் திட்டம்தான் இடையிலுள்ள பிரச்சாரங்கள். தயவுசெய்து எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு காரியத்தை ஆக்கமுன் வாருங்கள்.

அமெரிக்காவிலும் கனடாவிலும் உள்ள தமிழ்ச்சங்கங்கள் திரையுலகினரின் போக்குக்குஎதிரான நடவடிக்கைக்கு தயாராக இருப்பதாக அறிக்கைகள்மூலம் அறியமுடிகிறது மற்ற அமைப்புக்களும் வீச்சாக கருமத்தில் இறங்குவர் என நம்புகிறோம்.

தமிழ்நாட்டில் சகோதரன் செந்தமிழன் சீமான் அவர்களின் வேகத்தையும் எமக்காக அவர் சிறைக்குப்போன விசுவாசத்தையும் கொச்சைப்படுத்தாமல் எமது பலத்தை சிங்களவனுக்கு ஆராத்தியெடுக்க துடிக்கும் தமிழ்நாட்டின் சினிமா உலகத்திற்கு காட்டவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.

கனகதரன்,

நன்றி நெருடல் இணையம்,

Wednesday, July 28, 2010

குருதியுறைந்த ஜூலைப் படுகொலைகள் : சபா நாவலன்

குருதியுறைந்த ஜூலைப் படுகொலைகள் : சபா நாவலன்பிரித்தானியக் குடியேற்றத்தின் பின்னான காலம் நெடுகிலும் தனது தேசிய அடையாளத்திற்காக மரணத்துள் வாழ நிர்பந்திக்கப்பட்ட மக்கள் கூட்டம் தான் இலங்கைத் தமிழ்ப் பேசும் சிறுபான்மையினர். 1956 இல் தான் முதல் படுகொலையைச் எதிர்கொண்டனர். 1952 ஆம் ஆண்டு இலங்கையின் முதல் பிரதமரான டி,எஸ்.சேனாநாயக்கவினால் 7.2 மில்லியன் டொலர் செலவில் ஆரம்பித்து வைக்கப்பட்ட கல்லோயத் திட்டத்தின் பின்னணியில் கிழக்கு மாகாணத்தில் தமிழ்ப் பேசும் மக்களின் செறிவைச் சீர்குலைப்பதற்கான பேரினவாத நோக்கமே அடிப்படையாக அமைந்தது.

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்திற்கான முதல் பரீட்சாத்த முயற்சியாக இது கருதப்படலாம். பட்டிப்பளை ஆறு என்ற தமிழ்ப் பெயர் கல் ஓயா என்று சிங்களத்தில் மாற்றப்படிருந்தது.

150 குடும்பங்களைக் குடியேற்றும் நோக்கோடு, ஏறத்தாள நாற்பதாயிரம் ஏக்கர் நிலத்திற்கு நீர்ப்பாசனம் வழங்கும் வகையில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. தமிழர்கள், முஸ்லீம் தமிழர்கள், வேடர்கள், சிங்களவர் போன்ற இனக் கூறுகளைக் கொண்ட நிலமற்ற குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. குடியேற்றம் நிகழ்ந்த போது சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியிலிருந்தது. சிங்கள மொழியை மட்டும் ஆட்சிமொழியாக மாற்றும் தனிச் சிங்களச் சட்டமூலம் சமர்பிக்கப்பட்ட ஜூன்.1956 இல் கல் ஒயா குடியேற்றங்கள் முற்றுப் பெற்றிருந்தன. 50 வீதமான சிங்களக் குடும்பங்களை கொண்டிருந்த இத்திட்டத்தில் குடியேற்றப்பட்ட தமிழ்ப் பேசும் சிறுபான்மையினர் மத்தியில் அதிர்ப்தி நிலவிவந்தது. வளமற்ற பகுதிகளில் அவர்கள் குடியேற்றப்பட்டிருந்தனர்.

கொழும்பில் தனிச் சிங்களச் சட்ட மசோதா சமர்ப்பிக்கப்பட்ட வேளையில் அதற்கு எதிராகப் போராடிய தமிழ்த் தேசிய வாதிகளை இலங்கை அரச குண்டர் படையினர் தாக்கிய சம்பவம் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தது.

ஜூன் மாதம் ஐந்தாம் திகதி 1956 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தச் சம்பவத்தின் பின்வந்த சில நாட்கள் தலைநகரிலிருந்த தமிழ்ப் பேசும் மக்களின் வியாபார நிறுவனங்கள் தாக்கியழிக்கப்பட்டன.

கல் ஓயாவில் இதன் எதிரொலியை காணக்கூடியதாக இருந்தது. குடியேற்றப்பட்ட தமிழ்- சிங்கள இனப் பிரிவுகளிடையே சிறிய வன் முறைகள் ஏற்பட்டன. 10ம் திகதி ஜூன் மாதம் கொழும்பு சிங்கள நாழிதழ்கள் சிங்கள யுவதி ஒருவர் பாலியல் வன் முறைக்கு உள்ளாக்கப்பட்டதாக செய்த் வெளியிட்டிருந்தன. 11ம் திகதியில் சிங்களக் குடியேற்ற வாசிகள் மத்தியில்ருந்த காடையர்கள் தமிழ்ப் பேசும் சிறுபான்மையினரைக் கோரமாகக் கொலைசெய்ய ஆரம்பித்தனர். காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இரண்டு நாட்களுக்குள் 150 அப்பாவித் தமிழர்கள் அனாதைகளாகக் கொன்று குவிக்கப்பட்டனர்.

ஒரு புறத்தில் சிங்களப் பேரினவாதிகளும் தமிழ் அரசியல் வாதிகளும் தமது சமூகம் சார்ந்த வாக்குத் திறனை அதிகப்படுத்திக்கொள்ள மக்களின் உணர்வுகளைப் ப்யன்படுத்திக் கொள்ள, கல் ஓயா கொலைகள் சில அறிக்கைகளோடு மறைந்து போயின.

இந்தியாவின் தென் மூலையில் அதன் இரத்தக் கண்ணிர் போன்று அமைந்திருக்கும் இலங்கைத் தீவின் முதல் இனப்படுகொலை கல் ஓயாப்படுகொலைகளே.

1958 இல் நாடு தழுவிய அளவில் தமிழ்ப் பேசும் மக்களுக்கு எதிரான வன் முறைகள் ஆரம்பித்தன. பண்டாரநாயக்க தனிச்சிங்களச் சட்டத்தைக் கொண்டுவந்ததன் பின்னதாக ஏற்பட்ட பண்டா – செல்வா ஒப்பந்தம் ஐக்கிய தேசியக் கட்சியின் தீவிர எதிர்ப்பினால் கிழித்தெறியப்பட்டது. இது குறித்துப் பேசுவதற்காக தமிழரசுக் கட்சியின் மாநாடு ஒன்று வவுனியாவில் ஏற்பாடுசெய்யப்பட்டது. இந்த மாநாட்டில் சிங்கள எதிர்பு முழக்கங்கள் முன்வைக்கப்பட்ட அதே வேளை வன்முறையற்ற வழிகளில் போராட்டங்கள் நடத்துவதகத் தீர்மானிக்கப்படுகிறது. மாநாட்டில் கலந்துகொள்ள மட்டக்களப்பிலிருந்து சென்ற இரண்டு தமிழர்கள் சிங்கள இனவெறியர்களால் பொலநறுவைப் புகையிரத நிலையத்தில் கோரமாகக் கொலைசெய்யப்படுகின்றனர்.

பொலநறுவைக் கரும்புத் தோட்டத்தில் தொழில் செய்த ஏழைத் தமிழ்த் தொழிலாளர்கள் சிங்களக் காடையர்களால் தாக்கப்படுகின்றனர். 70 தமிழர்கள் கொல்லப்படுகின்றனர். மே மாதம் 25 ஆம் திகதி 70 தமிழர்களை கொன்று குவித்த படுகொலை நிகழ்வு தமிழ்ப்பேசும் மக்கள் வாழும் பகுதியெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழ்ப் பேசும் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் நாடு முழுவதும் பரவ ஆரம்பித்தது. பாணந்துறையில் இரண்டு சிங்களப் பெண்கள் கொலை செய்யப்ப்படுகிறார்கள். இதனைத் தொடர்ந்து அங்கிருந்த இந்துக் கோவில் அர்ச்சகர் உயிரோடு எரிக்கப்படுகிறார்.

நுவரெலிய நகராட்சித் தலைவர் தனிப்பட்ட காரணங்களுக்காகக் கொலைசெய்யப்படுகிறார். இவரது கொலையே வன்முறைகளுக்குக் காரணம் என நாட்டின் பிரதமர் வானொலியில் உரையாற்ற தமிழ்ப் பேசும் மக்களுக்கு எதிரான வன் முறைகளுக்குப் பிரதமர் அங்கீகாரம் வழங்கியது போல் இருந்தது.

300 வரையான தமிழ்ப் பேசும் மக்களைக் காவுகொண்ட வன் முறை நிகழ்வுகளின் எதிர்விளைவாக 12 ஆயிரம் தமிழர்கள் அகதிகளானார்கள்.

ஓகஸ்ட் மாதம் 1977 ஆம் ஆண்டு இலங்கைப் பொதுத் தேர்தலின் பின்னதாக உருவெடுத்த வன்முறைகள் இலங்கை முழுவதும் 400 வரையான தமிழர்களைக் கொன்று போட்டதுடன் 15 தமிழர்களை அகதிகளாக்கியது. 77 வன்முறை மலையகத் தமிழர்களையும் பெருமளவில் பாதித்தது. 1977 தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியும், அதன் பின்னதான உணர்வலைகளும் இலங்கையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

பல்கலைக் கழகங்களுக்கான மொழிவாரித் தரப்படுத்தல்கள், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் போன்றன தமிழ்த் தேசிய வாத அலையைத் தோற்றுவித்திருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவத் தாக்குத்தல்கள் அதன் மீதான வெறுப்புணர்வு என்பன பேரினவாதத்தை உக்கிரன்மடையச் செய்திருந்தது. பிரதம மந்திரி ஜே.ஆர்.ஜெயவர்தன தனது யாப்பியல் சர்வாதிகாரத்தை நிலை நாட்ட சிங்களப் பேரின வாதத்தைப் பயன்படுத்திக் கொண்டார். இவை அனைத்திற்கும் பலியான அப்பாவித் தமிழர்கள் இலங்கைத் தீவின் பிரசைகளாகக் கருதப்பட்டனர்.

1977 இல் தமிழ்ப் பேசும் மக்கள் மீதான படுகொலைகள் கட்டவிழ்த்துவிடப்பட்ட பின்னர், நாட்டின் பிரதமர் ஜெயவர்தன பாராளுமன்றத்தில் பேசியது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. “நீங்கள் சண்டையிட முயற்சித்தால் அவர்களும் சண்டை போடுவார்கள். நீங்கள் சமாதனத்தை விரும்பினால் அவர்களும் விரும்புவார்கள். தமிழர்கள் சிறுபான்மை என்ற வகையில் அவர்களுக்கு உரிய இடம் வழங்கப்படும்.” இலங்கையில் வாழுகின்ற ஒவ்வொரு தமிழ்ப் பேசும் குடிமகனுக்கும் தான் இலங்கையன் அல்ல என்ற உணர்வை முதலில் வெளிப்படையாக ஏற்படுத்திய உரை அதுவாகும்.

23ம் திகதி ஜூலை மாதம் 1983 ஆம் ஆண்டு இதுவரை நடந்திராத நாடுதழுவிய வன்முறை தமிழ்ப் பேசும் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டது. 3000 தமிழர்கள் வரை கோரமாகக் கொல்லப்பட்ட ஜூலைப் படுகொலைகள் யாழ்ப்பாணத்தில் 13 இராணுவத்தினர் விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்டதன் எதிர்வினையாக மேற்கொள்ளப்பட்டது என அரச தரப்புப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. 1977 இல் ஜெயவர்தன கூறிய போர் என்றால் போர் என்ற தமிழ்ப் பேசும் மக்களுக்கு எதிரான யுத்தப் பிரகடனம் 1983 இல் மறுபடி பிரயோகிக்கப்பட்டது.

அரச படைகள் இனப்படுகொலையைக் கட்டுப்படுத்த முனையவில்லை. சிங்களக் காடையர்கள் வெலிக்கடை சிறைச்சாலையில் சிறை வைக்கப்படிருந்த தமிழ் அரசியல் கைதிகளைப் மனித குலம் வெட்கித் தலைகுனியும் வகையில் கொன்று குவித்தனர். தலை நகரில் வாக்களர் விபரத்தைச் சேகரித்துக்கொண்ட இனவெறியர்கள் தமிழ்ப் பேசும் மக்களின் வீடுகளைச் சூறையாடினர். உயிரோடு தீவைத்துக் கொழுத்தப்பட்ட தமிழர்கள் பலர்.

நாடே மனித அவலத்துள் அமிழ்த்தப்பட்டது. தெருவோரத்தில் சாகடிக்கப்பட்ட அனாதைத் தமிழர்களின் பிணங்கள் அப்புறப்படுத்தப்பட நாட்கள் சென்றன. அரச இயந்திர வன்முறையை வெளிப்படையாக தனது நாட்டு மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட போதுதான் தமிழ்ப் பேசும் மக்கள் மரணத்துள் வாழ்வதாக உணரத் தொடங்கினார்கள்.

இனப்படுகொலை திட்டமிட்டு ஆரம்பிக்கப்பட்ட இரண்டாவது நாள் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்த போராளிகள் 37 பேர் சிங்கள இன வெறியர்களால் கோரமாகக் கொலைசெய்யப்பட்டார்கள். தமிழ்ப் பேசும் மக்களின் உணர்வுகள் எரிந்துகொண்டிருக்க, இது நடந்து மூன்றாவது நாள் மறுபடியும் பதினைந்து தமிழ்க் கைதிகள் கொசுக்கள் போல அதே சிறைக்கூடத்தில் கொல்லப்பட்டார்கள். பேரினவாதம் என்ற கருத்தியல் நிகழ்த்திய படுகொலைகள் தான் இவைகள்.

மலையகத் தமிழர்கள் அரை மனிதர்களாகவே கருதப்படுகிறார்கள். இலங்கை அதிகாரம் தங்கியிருக்கும் பெருந்தோட்டத் தொழிற்துறையின் கூலி அடிமைகளாக அவர்கள் நடத்தப்படுகிறார்கள். இலங்கையின் மத்திய பகுதியில் அங்கீகரிக்கப்பட்ட சிறைகளில் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். பேரினவாதத்தின் ஒவ்வொரு அசைவும் அவர்களை மேலும் சூறையாடுகின்றது.

சிங்கள மக்கள் மத்தியில் புரையோடிப் போயிருக்கும் சிங்கள பௌத்த மேலாதிக்கச் சிந்தனை, பிரித்தானியரால் உரமிட்டு வளர்க்கப்பட்டது. அனகாரிக தர்மபாலவைத் திட்டமிட்டு உருவாக்கியது பிரித்தானிய அரசு. பௌத்த மதத்தை அரசியல் தளத்தை நோக்கி நகர்த்திய பிரித்தானியப் பிரித்தாளும் தந்திரம், நிறுவன மயப்பட்ட சிங்கள பௌத்த மேலாதிக்க வாதத்தை பேரினவாதமாக வளர்த்துள்ளது.

இலங்கையில் பேரினவாதம் என்பதே சிங்கள பௌத்த மேலாதிக்க வாதக் கருத்தியலை அடிப்படையாகக் கொண்டதாக அமைகிறது. தொலைதூரக் கிராமங்கள் வரை அக்கிராமங்களை கட்டுப்படுத்தும் பௌத்த விகாரைகள் வழியாக இக்கருத்தியல் நிறுவனமயப்பட்டுள்ளது. எந்த அரசியலும் எப்போதும் பயன்படுத்தக் கூடிய வகையிலான சோவனிசமாக, சமூகத்தின் எதிர்மறைச் சக்தியாக உருவெடுத்துள்ள சிங்கள பௌத்த மேலாதிக்கம், அதன் வழியான சோவனிசம் எப்போது அழிக்கப்படும் என்பது சிங்கள முற்போக்காளர்கள் எழுப்ப்பும் வினா.

சிறுபான்மைத் தேசிய இனங்களின் விடுதலைக்கான போராட்டம் சரியான திசைவழி நோக்கி வளர்ந்து செல்லும் உச்ச நிலையில் சிங்களத் தேசிய இனம் தான் கட்டுண்ட சிங்கள பௌத்த மாயையிலிருந்து விடுதலை பெற வாய்ப்புகள் உண்டு. ஐம்பதாயிரம் அப்பாவிகளை கொன்றுகுவித்த ராஜபக்ச அரச அதிகாரம் மீண்டும் வெற்றிபெறத் துணைவந்தது கூட சிங்கள பௌத்த சிந்தனையில் ஊறியிருக்கும் சோவனிசம் தான்.

30 ஆண்டுகால யுத்தப் பயங்கரத்திலிருந்து மக்கள் இன்னும் விடுப்பட்டாகவில்லை. மனிதச் சீர்குலைவு நிலையிலிருந்து அவர்கள் மீண்டாகவில்லை. இப்போது தவறுகளை அவர்கள் பார்த்திருக்கிறார்கள். நண்பர்கள் எதிரிகள் எல்லாம் வெளிப்படையாகத் தம்மை இனம் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் விரோதிகள், சமூகத்தின் எதிரிகள், காட்டிக்கொடுத்தவர்கள், லும்பன்கள் ஏன் தமது “துரோகிகள்” என்பவைகளை எல்லாம் மக்கள் தெரிந்துவைத்திருக்கிறார்கள். தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் தனது பிரிந்துபோகும் உரிமைக்காகத் தொடர்ந்து போராடுவது தவிர்க்க முடியாது என்பதை இன்று ஜூலைப் படுகொலை நாளில் மக்கள் விரோதிகளின் முகத்தில் அறைந்து உரக்கச் சொல்வோம்.

நன்றி இனியொரு,

கவிதை, வலியல்ல இது "வெம்மை"

கவிதை: வலியல்ல இது “வெம்மை” – உலகம் பலிகொண்ட தீயின் மாதம்

ஈரெட்டு திசை யிருந்தும்
எறி குண்டு சீறி வீழ.,- இரு
பத்து நாடு சுற்றி
எரி கொள்ளி நீட்டி நிற்க.
வெறி கொண்ட காந்தி தேசம்
விண் முட்ட சூழ்ச்சி செய்ய.
பரகதி யாச்சே ஈழம்
பாவியாய் எரிந்தே மாண்டோம்,

வீடுகள் எரிந்து சாம்பல்
விடலைகள் குண்டாய் ஆனர்.
தாயவர் வழியில் மாண்டர்
தந்தையர் சித்தம் போனர்.
குழந்தைகள் சகதியாக- கோவிலாய்
படு மரத்தின் கீழே
கொலைக் களமாகி மாந்தர்
கும்பியாய் மாண்டார் காணீர்,—–

கோவிலாய் இருந்த தேசம்
கொலைக் காடாய் ஆகக் கண்டீர்
சோலையாய் இருந்த பூமி
சுடுகாடாய் ஆகக் காணீர்
நாயினும் கடையன் நஞ்சன்
நாலைந்து தாரக்காரன்
பாவியாய் பிறந்தான்(பக்க)மண்ணில்
படு துயர் நாங்கள் கொண்டோம்,—–

குடித்திட நீருமில்லை
குழவிக்கு பாலுமில்லை
நோவுக்கு மருந்துமில்லை
நடுக்கமே வாழ்வாயானோம்
அதிகாலை இரவு மத்தி
அடை மழை போலக் குண்டு
சுருதியாய் மனித ஓலம்
தேற்றுவோர் எவருமில்லை,—–

கொடும் புகை மூட்டங்கொண்டு
கொட்டிடும் குண்டு போக
எத்திசை நோக்கினாலும்
கக்கிடும் ரவையாய் கண்டோம்
மண்ணொடு மண்ணாய் மக்கள்
மாண்டனர் மீண்டோர் சொற்பம்
செத்தவர் பொக மிச்சம்
செவிடொடு குருடாயாச்சு,—–

பறந்தங்கோர் ஈயுமில்லை
பார்த்திட எறும்புமில்லை
மலந்தின்ன நாயுமில்லை
மண் உண்ணும் புழுவுமில்லை
கலங்கியோர் கொடு நெஞ்சோடு
காத்திருந் தேமாந்தோமே -இஃது
மனுதொரு தர்மந்தானோ
மாற்றமாய் வருவோம் நாளை,—–

வானிடை விரைந்து வந்து
வாழ்த்துக்கள் ஷெல்லும் கூற
மானிடக் குடிகள் மீது
மழையெனக் குண்டும் பாய
மேனிகள் சிதறி இரத்த
வெள்ளமாய் சகதியாயின் -மீண்டும்
நாங்களே புலியாய் மாறி
நாட்டுவோம் கொடியை மண்ணில்,—–

வலியல்ல இது வெம்மை – உலகம்
பலிகொண்ட தீ யின் மாதம்
நிலையில்லை மாந்தர் வாழ்வு
நிச்சியம் வருவோம் நாளை
அதுவொரு பலி நாளென்போம்
பாவியர் அழிவர் அன்று
மலர்ந்திடும் தமிழர் ஈழம்
மாண்புடன் தலைவா வாழ்க!,—–

- கனகாம்பிகை கதிர்காமன், ஜனனி,

நன்றி நெருடல் இணையம்.


Tuesday, July 27, 2010

தலைவனே உன் பாதம் பட்ட இடத்தில் நிற்கின்றேன்

தலைவனே உன் பாதம் பட்ட இடத்தில் நிற்கின்றேன்

[ பிரசுரித்த திகதி : 2010-05-15 11:21:40 AM GMT ]

செல்லரித்துப்போய் இருண்டு கிடக்கின்ற
என் வீட்டு முற்றத்தில்.
காட்டுப்பன்றிகளும் கரடிகளும்
இனந்தெரியாத வேறு பல விலங்குகளும்
மேச்சல் காடாக்கி
மலம் சலம் கழித்துக்கொண்டிருக்கின்றன,

என் உணவுக்கான ஆதாரங்கள்
அவைகளின் ஆக்கிரமிப்பால்
காலடிகளில் மிதிபட்டு
அழிந்து போகின்றன,

நேற்றுவரை
நீ எங்களோடு எங்களில் ஒருவனாக
பாதுகாவலனாக ஒன்றிக்கிடந்த தருணத்தில்
என் குழந்தைகள்
முற்றத்தில் விழையாடிக்கொண்டிருந்தபோது
ஒன்றிரண்டு காகங்கள் மட்டுமே
எச்சம் போட முடிந்தது,

அது கூட அவமானமென
அவ்வளவு கோபப்பட்ட நீ

இன்று
பருந்தும் கரிக்குருவி வல்லூறுக்கூட்டங்களும்
எங்கள் குடியிருப்பு மரங்களில்
கூடு கட்டிக்கொண்டிருக்கின்றன.

அவை குடியிருப்பதற்காகவோ
அல்லது
என் குஞ்சுகளை வேட்டையாட போடுகின்ற
கயமையோ,
சத்தமின்றி இதயம் படபடக்கிறது,

என் முட்டைகளும் இன்னும் சில நாட்களில்
பொரித்து குஞ்சாகிவிடும்,
வடலிகளும் பூச்செடிகளும்
எரிந்து கருகிவிட்டபடியால்
குஞ்சுகளுக்கு போக்கிடமில்லாமல்
பொருமிக்கொண்டிருக்கிறேன்,

சிலவேளைகளில்
உள் மனம் படபடத்து துடிக்கிறது
தூரத்தே குளிர் தேசத்திலிருக்கும்
என் உறவுக் குஞ்சுகள்
உதவிக்கு
ஓடிவரக்கூடுமெனவும்
மனம் அலைபாய்கிறது,

குளிர் தேசத்தில் அவைகள்
ஒன்றுக்கொன்று கோள் மூட்டி
கொத்தி
போர் முட்களை உடைத்துக்கொள்வதாக
காற்றிடையே கசிவது கேட்டு
நெஞ்சு கனக்கிறது,

தூரத்தே எங்கோ- நீ
ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருக்கிறாய் என்றும்,
இல்லை இல்லை!!!
ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறாய் என்றும்,
பக்கத்து பட்ட மரத்தின் கீழ்
எங்கள் பட்சிகள் சில கீச்சுகீச்சுகின்றன,

என் குமுறலும் ஆதங்கமும்
எந்த நிலையிலும்
உன்னை சென்று சேர்ந்திருக்குமென்றே
உள் மனம் ஏங்கிக்கொண்டிருந்தாலும்,
ஏதோ ஒரு வெறுமை
என்னை துரத்திக்கொண்டிருக்கிறது,

பாதுகாப்பான இடம்
எதுவும் தென்படாததால்
நீ பாதம் பதித்த குழிகளில்த்தான்
நான் முட்டைகளை இட்டு
பாதுகாப்பாக மூடி வைத்திருக்கிறேன்,

முட்டைகள் இன்னும் சில நாட்களில்
பொரித்து குஞ்சாகிவிடும்,
நீயும் மெளனம் காத்து
குளிர் தேசக்குஞ்சுகளும் முட்டி மோதி
என்னையும் என் குஞ்சுகளையும்
கை விட்டுவிட்டால்?......

உன் பாதக்குழிக்குள் பொரித்த
என் குஞ்சுகளுக்கு
உன் மந்திரச்சிரிப்பையும்,
உன் கம்பீரமான
சீருடை அணிந்த மிடுக்கான நடையையும் காட்டி,
நீ வந்து சேரும் வரை
முற்றத்தில் காவலுக்கு நிறுத்துவேன்,

இந்த ஓராண்டை ரணத்துடன் கழிந்து
இன்னும் எத்தனை ஆண்டு வந்தாலும்
உன் பாதம் பதித்த குழிகளை
காப்பரணாக்கி
என் குஞ்சுகளை அங்கிருத்தி
முற்றத்தை காக்க முயலுவேன்


-கனகாம்பிகை கதிர்காமன்

நன்றி தமிழ் உலகம்.
தமிழ் நாட்டின் தமிழ்ச் சொந்தங்களே! எங்கள் கையை கொஞ்சம் பற்றிக்கொள்ளுவீர்களா?

[ பிரசுரித்த திகதி : 2010-05-13 01:42:37 PM GMT ]

தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் அன்னையார் பார்வதி அம்மா அவர்கள் 10,05,2010, திங்கள் மலேசியாவிலிருந்து திரும்பி இலங்கை சென்று சேர்ந்திருக்கிறார்கள்.

16,04,2010, மலேசியாவிலிருந்து இந்திய தமிழ் நாட்டின் தலைநகர் சென்னைக்கு, வைத்தியத்தின் நிமித்தமும் எங்கள் சொந்தங்கள் நீங்கள் இருக்கின்றீர்கள் என்ற நம்பிக்கையுடனும் வந்து விமானத்திலிருந்து இறங்க முயன்றபோது, சட்டவிரோதமாக உங்கள் நாட்டின் காவல்த்துறையினர் அம்மாவை கீழே இறங்க அனுமதிக்காமல் அதே விமானத்தில் திருப்பி அனுப்பியிருந்தனர்.

அது பற்றி அரசியல் மட்டங்களிலிருந்தும், ஊடகங்களின் பார்வையிலும், மக்கள் கருத்துக்களாகவும் பல கண்டனங்களும் வெளிவந்துள்ளன. அவைகளில் "தமிழகத்து உறவுகளான" உங்களின் அப்பழுக்கற்ற காட்டமான பல குமுறல்கள் இணையத்தளங்களிலும் பத்திரிகைகளிலும் வெளியாகி எங்களை ஆற்றி, மனம் நெகிழவைத்ததுடன் முடிவுக்கு வந்திருந்தது.

ஊடகங்களில் எழுதுவதற்கு எமது சமூகம் சார்ந்த ஆக்கபூர்வமான பல்வேறு தேவைகள் நிறையவே எனக்கு இருந்தும் நடந்து முடிந்த அந்த கசப்பான விடயத்தை திரும்பத் திரும்ப தூசி தட்டிக்கொண்டிருப்பது தேவையில்லை என்றும் எரிச்சலடைய வைக்கிறது.

இருந்தும் தமிழகத்து சுதேசிகளான உங்களின் ஒருவருடைய கருத்திற்கும் குரலுக்கும் கொஞ்சமேனும் மதிப்பளிக்காமல், திரும்பத் திரும்ப திமுக தமிழ்நாட்டுக்கு செய்யும் துரோக நாடகங்கள் கணக்கு வழக்கில்லாமல் போய்க்கொண்டிருப்பதை பார்க்கும்போது ஏற்பட்ட‌ அதிர்ச்சியும் அருவருப்பும் ஆதங்கத்தின் வெளிப்பாடுமாகவே இதை எழுத நேர்ந்தது.

இதற்காக தயவுசெய்து என் மேலான உறவுகள் என்னை மன்னிக்கவும்.

மண்ணின் மைந்தர்களான நீங்கள் எங்களுக்காக நெருப்புக்குளித்து எரிந்து செத்தபோதும் உண்ணாநோன்புகள் இருந்தபோதும் கணக்கிலெடுக்காத ஆட்சியாளர்கள்(துரோகக்கும்பல்) உங்கள் குரலுக்கும் எழுத்திற்கும் என்ன மதிப்புக்கொடுப்பார்கள் என்பதை ஊகிக்க முடியாமல் இல்லை.

இத‌ற்கு சரியான பாடமாக இனி வரும் தேர்தல் காலங்களில் மறக்காமல் சமர்த்தியான செருப்படி கொடுப்பீர்களென நம்புகின்றேன்.

தயவுசெய்து கொஞ்சம் நினைத்துப்பாருங்கள் ஒரு நோயாளியான அந்தத்தாய் பெற்ற பிள்ளைகள் உறவினர்கள் எவரும் பக்கத்திலிருந்து ஒரு ஆறுதல் வார்த்தை கூட கேட்க வழியில்லாமல் அனாதையாக படுக்கையில் இருக்கும்போது மனதில் சொற்ப ஈரங்கூட இல்லாமல் தன் குடும்ப நலனுக்காக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அதை அரசியலாக்கி அசிங்கப்படுத்திக்கொண்டு, நாகரீக தமிழ்ச் சமுதாயத்தின் தலைவன் தான் என்று சொல்லிக்கொண்டிருப்பவர் செய்யக்கூடிய செயலா?, அவருடைய வயதுக்கு இது நாகரீகமா? அல்ல‌து நல்லதா??

அந்த தாயின் பெற்ற மகள் சென்னையிலும் வைத்தியம் பார்த்த மருத்துவர் திருச்சியில் இருப்பதால், மகள் மூலமாக அந்தத்தாய்க்கு கடைசி காலத்தில் கிடைக்கக்கூடிய உளரீதியான பரிவுக்குக்கூட வெடி வைத்திருக்கிறார் கலைஞர்.

2003 ம் ஆண்டு ஜெயலலிதா செய்த சதி காரணமாக அந்த தாய் 16,04,2010, திரும்ப நேர்ந்ததாக பரிந்துரைத்த கலைஞர் இன்று யாருக்கு குடுமிகட்டுகிறார் ?????

மலேசியாவில், இலங்கையில், மருத்துவம் இல்லாமலா தமிழ்நாட்டை தேர்வு செய்திருந்தார்கள், அவர்களது மனதுக்கு நிம்மதியும் சரியான பராமரிப்புந்தானே அவர்களுடைய அந்திம காலத்தில் சரியான மருந்தாக இருக்க முடியும்.

அம்மா குண்டை கட்டிக்கொண்டு வந்து கோபாலபுரம்,அண்ணாநகர், சீஐடி கொலனி வீடு ஏதாவது ஒன்றை தகர்த்து விடுவார்கள் என்றா பெருத்த சிறைக்கைதியை போல மனித சுதந்திரத்தை முற்றாக மறுத்து குறிப்பிட்ட அரசு மருத்துவமனையில்த்தான் மருத்துவம் பார்க்க வேண்டும் அரசு சிபார்சு செய்யும் ஒரு சிலரைத் தவிர வேறு ஒருவரும் பார்வையிடக்கூட முடியாதென்ற தடை , சிறைக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது.

தயவுசெய்து என் தமிழ் உறவுகளே சிந்தித்துப்பாருங்கள், இப்படி ஒரு அவமானமான அநீதி நியாயமானதுதானா?,

கலைஞர் 87 வயதிலும் ந‌ல்ல ஞாபகசக்தியுடனும் புஷ்டியுடனும் இருக்கிறார் என்பதால், அவரது வயதையொத்தவர்கள் எல்லோரும் அப்படியே தன்னைப்போல செயல்ப்பட்டு விடுவார்களோ என அவர் பயப்படலாமா?

மானுட உடல் கூறு பற்றிய யதார்த்தத்தை ஏன் அவரால் சிந்திக்க முடிவதில்லை,

அரசியல் அநாகரீகத்தைக்கடந்து அவர் ஏன் ஒரு நாளாவது சராசரி மனிதனாக நடந்து கொள்ள முயற்சிப்பதில்லை, இசகு பிசகான சொல்லாடல்கள் தவிர தீர்க்கமான ஒரு வசனத்தையாவது ஈழ மக்கள் சம்பந்தமாக அவர் பேசியதுண்டா?

வரவேண்டாம் என்று ஒரு வரியில் சொல்லவேண்டிய அவரது அழுக்கான உள்ளக்கிடக்கையை லாவகமாக பூசி மெழுக எவ்வளவு நாடகமாடுகிறார்.

தடைசெய்யப்பட்ட அமைப்புக்களை சேர்ந்தவர்கள் சந்திக்கக்கூடாது என்பது சம்பந்தமாக எவருக்கும் மாறுபட்ட கருத்து கிடையாது, மீறி ஏதாவது நடந்தால் தமிழ்நாடோ இந்திய மத்திய அரசோ ஆகவேண்டிய எதிரான நடவடிக்கையை நிச்ச‌யம் தொடரலாம் தவறில்லை.

அதை விடுத்து முற்று முழுதான தனி மனித சுதந்திரத்தில் தலையிட்டு மிக மோசமாக பல வழிகளிலும் பாதிக்கப்பட்ட ஒரு வயோதிப தாயை அங்கு இங்கு எங்கும் திரும்பிக்கூட பார்க்கக்கூடாது என்று சர்வ அதிகாரத்தனமாக கட்டளை என்பதெல்லாம் என்ன ஒரு நடைமுறை, சிந்தியுங்கள் என் சகோதரர்களே,

என் இனம் அழிந்தபோது எரிந்து கருகி துடித்த எங்கள் மேலான தமிழ் உறவுகளே! தயவுசெய்து சிந்தியுங்கள்.

இந்த அரக்கர்களை அழிக்க தேர்தல் காலங்களில் வாக்கு என்ற ஆயுதம் தான் சரியாக இருக்கும்,அப்போதாவது இந்த ஓநாய்களுக்கு பச்சோந்திகளுக்கு சரியான பாடம் புகட்டுவீர்களென நம்பிக்கையுடன் விடைபெற்றாலும் தேர்தல் காலங்களிலும் ஞாபகப்படுத்த நான் நிச்சியம் வருவேன்.

தர்மத்தின் வழ்வுதனை சூது கெளவும்
மீண்டும் தர்மம் வெல்லும்


என்றென்றும் உறவுடன்,

அறுகு அம்பு

நன்றி தமிழ் உலகம்,
ஈழத்தமிழர்கள் வாழ்வு செய்தியாகவே முடியவேண்டாம்
--------------------------------------------------------------------------
[ சனிக்கிழமை, 05 யூன் 2010, 10:15.41 AM GMT +05:30 ]
ஈழத்தமிழர்களின் வாழ்வாதாரம் எப்படி ஆகிக்கொண்டிருக்கிறது. என்பது பற்றிய செய்தி. எவ்வளவு இருக்கிறதோ, அதை விட பலமடங்கு ஈழத்தைப் பற்றிய அதிர்ச்சி செய்திகள் உலகம் முழுவதும் சென்று, செய்தியாகவே முடிந்துகொண்டிருக்கிறது.

கிளிநொச்சி, கணேசபுரத்தில் அடுத்தடுத்து மனித புதைகுழிகள் தோண்டப்படுகின்றன, அதன் மூலத்தை அறிந்து உண்மையை வெளிக்கொண்டுவர எவராலும் எந்த நாட்டாலும் முடியவில்லை, எந்த விடயத்தை தொட்டு செய்தி வந்ததோ அந்த விடயத்தை அப்படியே விட்டுவிட்டு, செய்தியை மட்டும் செய்தியாகவே உலகம் கை கழுவிக்கொண்டிருக்கிறது. தமிழனின் இன்றைய செய்தி நாளை மறக்கப்படுகிறது, அல்லது மறக்கடிக்கப்படுகிறது. நாளை வேறு ஒரு செய்தி பெரிதாகி முந்தய செய்தி அதற்குள் புதைந்து மறைந்து விடுகிறது, இதுதான் ஈழத்தமிழனின் யதார்த்த வாழ்க்கை நிலை,

இந்த நிலை தொடருமானால் பாழாய்ப்போன தமிழனின் செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கும், இதற்கு முற்றுப்புள்ளிவைக்க வேண்டுமாயின் உலகம் காரணத்தை ஆராய்ந்து மனிதாபிமானமான நீதியான தீர்வின் மூலம் ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும். அதற்கான சந்தர்ப்பங்கள் சாதகமாக வந்தாலும் எவரும் ஒற்றுமையுடன் அதை தீர்த்து வைப்பதற்கான முனைப்பை இதுவரை காட்டி நிற்கவில்லை, ஈழப்பிரச்சினையை எவராவது தீர்த்து வைக்காத பட்சத்தில் அது விபரீதமான ஒரு முடிவை நோக்கிச்சென்று தானாக ஒரு நாள் முடிவுக்கு வரும்
என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

இனப்பிரச்சினையை தீர்வுக்கு கொண்டுவரவேண்டுமென ஓரளவேனும் ஈடுபாடு காட்டும் மேற்குலகம் அன்றைக்கு தமிழர் தரப்பிற்கு மெளனமாக வேனும் வழிமொழிந்து யதார்த்தத்தை புரிந்துகொள்ளும், இலங்கையில் வாழும் இரு இனங்களும் என்றைக்காவது தாமாக பிரச்சினையை தீர்வுக்கு கொண்டுவந்து, சுமுகமாக ஒரு சமத்துவத்தை ஏற்படுத்தி ஒன்றாக வாழும் என்பது எவரும் கனவிலும் நினைத்துப்பார்க்க முடியாத கற்பனை, பிரிவினை ஒன்றைத்தவிர இலங்கைத்தீவில் சுமுகத்தை ஏற்படுத்த கடவுளாலும் முடியப்போவதில்லை. விதி எப்போதோ கிறுக்கிவைத்திருக்கும் பதிவு அது,

இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்தவேண்டிய தார்மீகப் பொறுப்பு, (அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா,போன்ற வல்லரசு நாடுகளையும் விட) பிரித்தானிய இராச்சியத்திற்கே உண்டு, 1948, பெப், 02ம் நாள் பிரித்தானியா சிங்களவனிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைத்தபோது பிரித்தானியரால் வரையப்பட்ட யாப்பில் இலங்கையின் தேசிய இனமான தமிழர்கள் சம அந்தஸ்துடன் தமது பாரம்பரிய பிரதேசங்களில் வாழ உரித்துடையவர்கள் சிங்களவர்களுடன் சேர்ந்து வாழமுடியாத சந்தர்ப்பத்தில் பிரிந்துபோவதற்கும் தகுதியுடையவர்கள் என குறிக்கப்பட்டிருக்கிறது. எனவே தமிழர்களின் மீது திணிக்கப்படும் படுமோசமான படுகொலை அரசியலையும், தமிழர்களின் பிரிவினை கோரும் காரணங்களையும் ஆராய்ந்து, நியாயமான காரணங்களுடன் அவர்களின் விருப்பையும் அறிந்து பிரச்சினையை தீர்க்கவேண்டிய கடமை ஆங்கிலேயர்களுக்கே உண்டு.

இந்தியாவுக்கு தார்மீகப் பொறுப்பு என்று எதுவும் கிடையாது, ஆனால் தமிழகத்து தமிழர்களின் தொன்றுதொட்ட தொப்புள்கொடி உறவுத் தொடர்புகள் இருப்பதனால் தமிழகத்து மக்களின் உணர்வுகளை மதித்து நடக்கவேண்டிய பொறுப்பும் இந்திய ஹிந்தி அரசாங்கத்துக்கு நிறையவே உண்டு, துரதிஷ்டவசமாக தமிழகத்தில் தமிழர்களுக்கான அரசு ஒன்று இன்னும் உருவாக்கப்படாததால், ஈழத்து அழிவை பொறுக்க முடியாது தமிழர்கள் நெருப்பில் கருகியபோதும், ஹிந்தி அரசாங்கம் கணக்கிலெடுக்காமல் ஈழத்தமிழர்களை எரித்துச் சாம்பலாக்க இலங்கைக்கு நேரடியாக உதவியது.

2009 வைகாசி, ஈழம் எரிந்து போனதை பார்த்த தமிழகத் தமிழர்கள், பொங்கியெழுந்து தங்களுக்கான ஒரு தமிழ் அரசியல்தலைமை தேவை என்பதை உணர்ந்து, தோற்றுவித்திருக்கும் தமிழ் கட்சி "நாம் தமிழர்" என்ற அரசியல்கட்சி, குறுகிய காலத்தில் அக்கட்சி பல அரிய சாதனைகளை புரிந்திருக்கிறது, இம்மாதம் 3,4,5,திகதிகளில் கொழும்பில் நடைபெறும் ஐஃபா என்ற திரைப்பட விருது வழங்கும் மிக பிரமாண்டமான விழாவுக்கு முக்கியமாக கலந்துகொள்ள இருந்த உலகப் பிரசித்திபெற்ற திரைப்பட நட்சகத்திரங்களை முழு இந்திய அளவில் இந்தக்கட்சி தடுத்து நிறுத்தியிருக்கிறது, இக்கட்சி ஏற்கெனவே தோன்றியிருந்தால் தமிழீழம் எரியாமல் தடுக்கப்பட்டிருக்கும்,என்பதை காலங்கடந்து தமிழ்நாட்டுத் தமிழன் யோசித்திருக்கிறான், கருணாநிதி என்கிற கோழை நடிகனும், ஜெயலலிதா என்கிற மூழி நடிகையும், தமிழ்நாட்டை விட்டு கரை கடத்தப்படவேண்டிய நச்சுப்புயல்கள் என்பதையும் தமிழன் இப்போதான் நன்கு உணர்ந்திருக்கிறான்,

வன்னியில் தமிழரின் இராணுவச் சமநிலை உடைந்து, சிங்கள இராணுவ மேலாதிக்கம் ஏற்பட்ட நாள் தொடக்கம், எந்த எதிர்ப்பும் இல்லாத அந்த மயானபூமியில், மீதமுள்ள அப்பாவி மக்களையும் நிம்மதியாக வாழவிடாமல், இலங்கை அரசு இராணுவ மயப்படுத்தி அச்சுறுத்தும் ஒவ்வொரு நடவடிக்கையும், அங்கே ஏதோ பூதாகரமான எதிர்ப்பை இராணுவம் இன்னும் நோக்கியிருப்பது போன்ற மாயையை, சிங்கள அரசு உலகத்திற்கு வெளிப்படுத்தி நிற்கிறது, இச்சூழ்ச்சியின் பின்னணியில் சிங்களக் குடியேற்றங்கள் ஈடேற்றப்படுகின்றன, சிங்களக்குடியேற்றங்கள் பூர்த்தியடைந்தபின் இராணுவம் வாபஸ் பெறக்கூடும்?,,, இந்த நிலை நீடிக்குமானால் பொறுமையிழக்கும் தமிழினம் மீண்டும் தற்காப்புக்காக எதையாவது கையில் தூக்கி அடிதடியில் இறங்க நிர்ப்பந்திக்கப்படும், இது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறலாம்,

நாளாந்தம் தமிழர் பகுதிகளில் கண்டமாத்திரத்தில் வெளிவரும் மரணப்படுகுழிகள், மீதமுள்ள ஒவ்வொரு தமிழன் மனதிலும் முன்னெச்சரிக்கை தற்காப்பை உருவாக்கி நிற்கும் என்பதை காலங்கடந்துதான் எவரும் உணரமுடியும், (தேடித்தேடி மரணபடுகுழிகளின் தடயங்கள் அழிக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன,)

சர்வதேச மன்னிப்புச்சபை. Human right wach, மற்றும் லூயிஸ் ஆபர் அம்மையார் தலைமையிலான,போர்க்குற்றங்கள் தொடர்பாக ஆராயும் சர்வதேச நெருக்கடிகள் குழு, International crisis group, மற்றும் மிக மெதுவாக கண்துடைப்புக்கேனும் களத்தில் இறங்க எத்தனிக்கும் UN, அமைப்பு ஆகியவைகளை போர் குற்றம்பற்றி விசாரிக்க அனுமதிக்க முடியாது,என சர்வ வல்லமை படைத்த வல்லரசுபோல இலங்கை அரசு மல்லுக்கட்டி நிற்பது பலரையும் சிந்திக்க வைக்கிறது, இதன் பின்னணி நிச்சியம் பலமாகத்தான் இருக்க முடியும், இங்கு இலங்கையின் முரண்டு பிடித்தலை
பின்னணியிலிருந்து வழிமொழியும் சக்திகள் சர்வதேச பாமர மக்களுக்கு சொல்லும் செய்தி, எவரும் எதுவும் செய்யலாம் அது அவரவர் வல்லமையைப் பொறுத்தது என்பதுதான் பதிலாக இருக்கும், இது சர்வதேசத்தில் சாதாரண மக்களிடையே ஜனநாயக விரோத நிலையையும், தனிமனித பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்படும் அச்ச உர்வையும், நியாயமாக ஆட்சி செய்பவர்களிடத்தில்கூட சந்தேகத்தை உண்டாக்கிவிடும்,

ஜி,எல் பீரிஸ் அவர்கள் ஒரு பேராசிரியராக இருந்தால், சட்டவல்லுனராக இருந்தால், மேற்கூறியவற்றின் தாக்கம் எப்படி இருக்குமென்பதை அவர் உணராமல் இருக்கமுடியாது, இலங்கை அரசு காட்டும் இறுக்கம், ஒரு தற்காலிகமான நிவாரணமாக அரசிற்கு இருக்குமே தவிர முற்றுமுழுதாக தப்பித்து விட வாய்ப்பில்லை, சற்றுமுன் வாய்திறந்திருக்கும் கோபி அனான் அவர்களும் இதை உறுதிப்படுத்தியிருக்கிறார்,

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்தி போர்க்குற்றவாளியாக தண்டனைக்குட்படுத்தலாம், என்பது இப்போதைக்கு உடனடியாக செய்யக்கூடிய விடயமல்ல, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் அங்கத்துவம் பெற்ற நாடுகளை மட்டுமே அந்த நீதிமன்றம் விசாரணைக்குட்படுத்த முடியும், அங்கத்துவம் அல்லாத நாடுகளின் குற்றச்செயல்களை ஐநா,அமைப்பு வழிமொழிந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால் மட்டுமே விசாரணை செய்யமுடியும்,(இது பலரும் அறிந்த விடயமாக இருந்தாலும் ஒரு சிலரின் சந்தேகத்தை தீர்ப்பதற்காகவே தரப்படுகிறது)

ஐநா,பாதுகாப்புச் சபையில், (veto power of right to reject or negative a resolution or act vested legally in one) நிராகரிக்கும் அதிகாரம் இருக்கும் நாடுகள் மறுப்புத்தெரிவித்தால், இந்த நீதிமன்றத்தால் அந்த நாடுகளை விசாரணைக்குட்படுத்தமுடியாது, இலங்கைக்கு சாதகமாக சீனா இருப்பதாலும் அனுசரணையாக ரஷ்யா இருப்பதாலும் (இவை இரண்டும் நிராகரிக்கும் அதிகாரம் கொண்டவை) அமெரிக்கா, பிரன்சு, இங்கிலாந்து, நினைத்தாலும் குற்றவியல் நீதிமன்ற குற்றவாளிக்கூண்டில் இலங்கையை ஏற்ற முடியுமோ என்பது யோசிக்க வேண்டிய ஒன்று, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் 2002 அளவில்த்தான் நெதர்லாந்தில் நிறுவப்பட்டது, இதுவரைக்கும் உகண்டா,கொங்கோ, சூடான், போன்ற ஆபிரிக்க வறியநாடுகளைத்தான் விசாரணை செய்ததாகவும் அறியமுடிகிறது,

செல்வாக்கான நாடுகளை இந்த நீதிமன்றத்தின் குற்றவாளிக்கூண்டில் எளிதாக ஏற்றிவிட முடியாது, என்ன இருந்தாலும் சர்வதேச மன்னிபுச்சபை, மற்றும் சர்வதேச நெருக்கடிகளை அறியும்குழு, ஐநா, மற்றும் சர்வதேச நாடுகள் ஒன்றிரண்டு இலங்கையின் அத்துமீறலை, போர்க்குற்றத்தை, ஒப்புக்கொண்டு ஈழத்தமிழரின் கோரிக்கையை அங்கீகரித்தாலே இலங்கை அரசால் எதுவும்
செய்யமுடியாது தமிழீழம் தானாகவே உருவாகிவிடும், இதற்கு முட்டுக்கட்டையாக நிற்பது இந்தியா என்பதுதான் பல நாடுகளின் கருத்து,

எந்தச்சக்தி எதிர்த்தாலும் "அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு" என்பதுபோல் தமிழர்களின் ஒற்றுமையே இங்கு முன்னணியில் நிலைநிறுத்தப்பட வேண்டிய ஒன்று, தேசியத்தலைவரின் வழிவந்த தமிழரை இலகுவில் எவராலும் உடைத்துவிட முடியாதென்றே கருதலாம், இருந்தும் புலத்தில் வெளிவரும் சில செய்திகள் மனதைக்குடைகின்றன, உடைவு அல்லது சிதைவு ஈழத்தில் வாழும் மக்களிடம் மனக்குமுறலையும் நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தி அரசியல் ரீதியாகவும் பெருத்த பின்னடைவையும் அம்மக்களுக்கு தோற்றுவித்து, சிங்களவனின் ஆதிக்கம் அதிகரிக்கவும் வழிதிறந்துவிடும், நாளைடைவில் புலத்தின் அரசியல் நகர்வுகள் ஈழத்தால் ஒதுக்கப்பட்டுப் போவதற்கும் நியாயங்கள் நிறையவே உண்டு,

தமிழர்களிடையே பலதரப்பட்ட முற்போக்கான நோக்கங்கள் இருந்தாலும் சில இடங்களில் முரண்பட்டு நிற்பது, இந்த இடைப்பட்ட காலத்தில் தேசியத்தலைவருக்கு கொடுக்கும் மரியாதையாக இருக்காது,

ஈழத்தமிழருக்கும் தேசியத்தலைவருக்கும் உள்ள உறவும், பரமஹம்சர் விவேகானந்தர் உறவுக்கும் வேறுபாடு கிடையாது, அன்றையகாலத்திலும் புரியாமல் சில நாஸ்திகர்கள் பரமஹம்சரை தூற்றியதுபோல் இன்றும் இலங்கையிலும் புலத்திலும் ஒருசிலர் இருக்கக்காணலாம், தேசியத்தலைவர் தனது தேசியக்கொள்கையை ஓரிரண்டு வருட அனுபவத்தில் வகுத்துக்கொண்டவரல்ல, அண்ணளவாக அரை நூற்றாண்டு பட்ட அனுபவ அறிவு, சறுக்கல்களும் பின்னடைவுகளும் துரோகங்களும் இயல்பானவை, அவைகூட அவருக்கு அனுபவபாடம், அடுத்தகட்டத்தில் அவர் அவற்றை எப்படிக்கையாளுகிறார் என்பதை நடைமுறையின்போதுதான் காணமுடியும்,

இப்போ நாம் அனைவரும் குளித்துக்கொண்டிருப்பது அவரால் நிர்மாணிக்கப்பட்ட குளம், அவர் ஒருபோதும் குளத்திற்கு தனி உரிமை கொண்டாடியதில்லை, எவரும் நீராடலாம் நீந்தலாம் நீர்ப்பாசனத்தை வயலுக்கு பாய்ச்சலாம் தடுக்க எவரும் வரப்போவதில்லை, (பிறகு எதற்கு முட்டிமோதுவானே) நீர்ப்பாசனம் திசைதிருப்பப்படும்போது குளத்தில் எருமைகளும் பன்றிகளும் துவம்சம் செய்யமுற்படும்போது குளத்தை தனி நபர் எவரேனும் உரிமை கொண்டாட முயலும்போது முரண்பாடு வெடிக்கத்தான் செய்யும், தலைவரின் வழி வந்த தமிழன் எவனும் வேடிக்கை பார்க்கவும் மாட்டான், வேண்டுமானால் இப்போ இருக்கும் குளத்தைவிட பெரிதாக ஒன்றை நிர்மாணித்து எவர் எப்படிவேண்டுமானாலும் நீச்சலடிக்கலாம் எவரும் குறுக்கே நிற்கப்போவதில்லை, இப்போ நாங்கள் குளித்துக்கொண்டிருப்பது புனிதமான மிகப்பெரிய பொதுக்குளம்,

போராட்டத்தை நாசம்பண்ண சிங்களவன் தேவையில்லை தமிழனே போதும், இரண்டு நாள் முன்புவரை மானாட மயிலாட, சினிமா விருது, குடும்ப நலன், பதவிப் பேரம், டில்லி என முடித்து, அடுத்தகட்டம் செம்மொழி மாநாடு என்ற சுற்றில் வந்து நிற்கும் கருணாநிதி, திடீரென ஒரு அறிக்கை வெளியிட்டு அடுத்த நாடகத்திற்கு தயாராகி விட்டார், மத்திய (தி மு க)அரசு ஈழமக்களின்பால் காத்திரமான நடவடிக்கை எடுக்கத்தவறிவிட்டது, மீள்குடியேறிய மக்களை நிவாரணங்கள்? சென்றடையச் செய்யவேண்டும், 75 000 அகதிகளுக்கு இந்தியாவில் குடியுரிமை அழிக்க(அளிக்க)வேண்டும், இப்போது மத்திய அரசு இலங்கை மக்கள் தொடர்பாக செய்யும் நன்மைகள் திருப்தியழித்தாலும்,,,,, திருப்தியளிக்கவில்லை, என தனக்கே புரியும் தமிழில் கடிதம் ஒன்றை வெளியிட்டு, தான் நடாத்த இருக்கும் வேடிக்கை வினோத களியாட்ட விழாவுக்கு தமிழர்களிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெறுவதற்காக, வெட்கம் துறந்து வாழும் வள்ளுவன் நானே எனக்கூறி வஞ்சகவலை வீசி நிற்கிறார்,

இந்தியா ஒருபோதும் சிங்களவனுக்கு பாதகமாக நடந்துகொள்ளப்போவதில்லை, ஜூன் 08ம் திகதி மன்மோகன் - மஹிந்த ஒன்றுகூடல், நடக்க இருக்கிறது உலகத்தை ஏமாற்ற புதிய மேடையில் நடிக்கப்போகும் முதலாவது நாடகம், இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் பங்குபற்றக்கூடும், இந்த நாடகம் முடிவில் ஒரு கூட்டறிக்கை வெளிவரும், புதிய தீர்வுப்பொதி உருவாகும், இந்த நாடகம் இரண்டு மூன்று வருடத்தை எப்படியும் போர்த்து மூடி ஏமாற்றமே தொடரும், இந்த நேரத்தில் ராஜபக்ஷ கூறிய ஒரு விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும், விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் இன்னும் அற்றுப்போய்விடவில்லை! அவர்களின் செயற்பாடுகள் வெளிநாடுகளில் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார், காலத்தை இழுத்தடிப்பதற்கும் உலகத்தை ஏமாற்றுவதற்கும் சிங்களக் குடியேற்றங்களை நிறுவி முடிப்பதற்கும் அவகாசம் தேடி அவர் எறிந்த முதற்கல், இதேநேரம் ஹெகலிய ரம்புக்வெல கூறுகிறார் இலங்கையில் புலிகளின் அச்சுறுத்தல் எதுவும் இல்லையென்று,

நோக்கத்தின் இலக்கும் ஒற்றுமையும் தவிர்ந்த பலம் வேறு எதுவும் கிடையாது, நேற்று பூத்த "நாம் தழிழர்" இயக்கம் இன்று புயலாக எதிரிகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது, பல கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட, மிகப்பெரிய பணபலமுள்ள, மத்திய அரசின் அரசியல் பின்னணியை கொண்ட இந்திய சுப்பர் ஸ்ரார் அமிதாப்பச்சனை சிறுத்தை "சீமானின்" மிகச்சிறிய நாம் தழிழர் இயக்கம் கட்டிப்போட்டிருக்கிறது, விசித்திரம் என்னவென்றால் Iifa,(ஐபா) அமைப்புக் கூட சிங்களவனுடையதல்ல இந்தியனுடைய பலமிக்க அமைப்பு, நாங்களே எங்களை
இழிவுபடுத்திக் கொண்டிருக்கிறோம்,

எந்தக்கஸ்டமுமில்லாமல் பெரிய ஒரு களமும் நல்ல வாழ்க்கைச்சூழலும் எங்களுக்கு கிடைத்துவிட்டது, மற்றநாய்கள் எங்கு கிடந்தால் எமக்கென்ன எரியிறவீட்டில் அள்ளும்வரை எங்களுக்கு இலாபந்தான், தேசியத்தலைவர் ஒரு கோவில் திருவிழாவுக்கு போகாமல் ஒரு சலூனில் போய் சுதந்திரமாக உட்கார்ந்து முடிவெட்டாமல், ஒருதியேட்டரில் போயிருந்து படம் பார்க்காமல், சயிக்கிளில் ஒழுங்கை சுற்றாமல்,கள்ளடிக்காமல், காட்டிலிருந்துகொண்டு பத்து இலட்சம் பேரை ஐரோப்பாவுக்கும் கனடாவுக்கும் அமெரிக்கா அவுஸ்திரேலியாவுக்கும் போய் வாழக்காரணமானது தப்புத்தான் தயவுசெய்து உணர்ந்து கொள்ளுவோம் ஒருவருடத்திற்குள்ளே இப்படியென்றால் எப்படி வெட்கப்படவேண்டாமா? காலங்கனியும் அதுவரை,

கனகதரன்,

நன்றி தமிழ் வின்

Monday, July 26, 2010

அண்ணா சமாதியில் கருணாநிதி,
P m

அன்றாடம் தன் பரிவாரங்களுடன் கோபாலபுரத்தில் இருக்கிற தன் இரண்டாவது மனைவியின் வீட்டில் இருந்தோ அல்லது மூன்றாவது மனைவியின் வீடு இருக்கும் ஆழ்வார்பேட்டையில் இருந்தோ கிளம்பி புதிய தலைமைச் செயலகம் செல்வது தமிழக முதல்வர் கருணாநிதியின் வழக்கம். சட்டமன்றத்திற்குச் செல்லும் கருணாநிதி அங்கிருந்து அரிய பல ஆலோசனைகளில் ஈடுபடுவது வழக்கம். மேல் மாடியில் இருந்து வெளியே எட்டிப்பார்த்து சென்னையில் அழகை ரசிப்பது. சட்டமன்றத்தில் வேறு எங்கெல்லாம் தன் படத்தை மாட்டுவது , யாரை எல்லாம் எந்தெந்த வழக்குகளில் உள்ளே போடலாம், கஞ்சா கேஸ் போடுவதா? அல்லது வழிப்பறி வழக்கே போதுமா? என்பது போன்ற அதி முக்கிய ஆலோசனைகளில் தலைமைச்செயலாளர் சிரிபதியுடன் அலோசனை செய்வார். இநிலையில் நேற்று மாலை வழக்கம் போல சட்டமன்ற வளாகத்திற்குச் சென்ற முதல்வர் திரும்பும்போது அண்ணா சமாதிக்குச் செல்லுமாறு டிரைவரிடம் கூறினார். இதையடுத்து முதல்வரின் கார் அண்ணா சமாதிக்குச் சென்றது.
அங்கு நீண்ட நேரம் சமாதியை முதல்வர் சுற்றிப் பார்த்தார். 8 மணி முதல் 9 மணி வரை அங்கேயே அமர்ந்திருந்தார். பழைய நினைவுகளில் முதல்வர் மூழ்கினார். தன்னுடன் இருந்தவர்களிடம் அண்ணா குறித்த நினைவுகளையும் அவர் பகிர்ந்து கொண்டார். பின்னர் கனத்த இதயத்துடன் அங்கிருந்து அவர் புறப்பட்டுச் சென்றார். திராவிட இயக்கத்தின் சீரழிவு அண்ணாதுரையிடம் இருந்தே துவங்கிறது. அவர்தான் எதுகை மோனையில் பேசி தன் தம்பியின் குடும்ப, சவாதிகார சீரழிவுக்கு தூபம் போட்டவர் என்ற வகையில் அண்ணன் இறுதியாக குடிகொண்ட மெரீனா நினைவகத்தில் தம்பி நினைவலைகளில் ஆழ்ந்திருக்கலாம் என்று தெரிகிற்து. தமிழ்நாட்டிற்கு மிகவும் தேவையான கருணாநிதியின் இந்த நடவடிக்கையால் தமிழகத்தில் புதிய விடிவும் ஒழியும் கிடைக்கும் என்றூ சமூக ஆர்வலர்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

நன்றி இனியொரு இணையம்,

Friday, July 23, 2010

திராவிட இயக்கம் தமிழர்களுக்கு பாதுகாப்பில்லை- -மதி.

மிகவும் ஆபத்தான சூழலுக்குள் பேசவும் எழுதவும் வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. சிகப்புத் தீவீரவாதம் என்று மக்கள் பிரச்சனைகளைப் பேசும் ஊடகவியளார்களை ஒடுக்கும் மத்திய அரசு. இப்போது நாடெங்கிலும் அறிவிக்கப்படாத மிசாவைக் கொண்டு வருகிறது. எதிர்ப்பியங்கள் கூட இந்துத்துவ சக்திகளிடம் மாட்டுப்பட்டுள்ள நிலையில் இடது சாரி அமைப்புகளின் போராட்டங்களும் தேசிய இன உணர்வு போராட்டங்களும் மிக பலவந்தமான முறையில் ஒடுக்கப்படுகின்றன. அதிகாரவர்க்கங்களின் மேல்கட்டுமானம் பெரு முதலாளிகளுக்கு ஏற்றவாரு திருத்தி அமைக்கப்பட்டு விட்டது. காஷ்மீர், தண்டகாரண்யா என விரிவு படுத்தப்பட்டும் ஆள்தூக்கிச் சட்டங்கள் இப்போது தமிழகத்திற்கும் தேவைப்படுகிறது. ஆமாம் திராவிட இயக்கத்தின் தொட்டில் என்றும் திராவிட இயக்க ஆட்சி என்றும் சொல்லப்படும் தமிழகத்தில் தமிழர்களின் உரிமைக்குக் கூட குரல் கொடுக்க முடியாத நிலை.இனி ஒரு மீனவனைத் தாக்கினால் இங்கிருக்கும் சிங்களர்களைக் கொல்வோம் என்கிற சீமானின் கூற்றின் நமக்கு உடன்பாடில்லாமல் இருக்கலாம். ஆனால் சீமானைக் கைது செய்வதற்கு முன்னால் குறைந்த பட்சம் தமிழகத்தில் இருக்கும் துணைத் தூதருக்கு எதிராகவும், தூதரகத்தை விலக்கிக் கொள்ளும் படியும் ஒரு சட்டமன்ற தீர்மானத்தையாவது நிறைவேற்றியிருக்கலாம். ஆக எதிர்வன்முறையை மட்டும் அடக்கி விட்டு பேரினவாத வன்முறைக்கு இடம் கொடுக்கும் விதமாக இந்திய மத்திய அரசும் கருணாநிதி தலைமையிலான திராவிட அரசும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு திராவிட அரசான திமுகவிற்கும் ஆள்தூக்கி கருப்புச் சட்டங்கள் தேவைப்படுகின்றன.

மிசா, தடா, பொடா என எல்லா ஆள் தூக்கிக் கருப்புச் சட்டங்களாலும் பாதிக்கப்பட்ட ஒரு அமைப்பு திமுக. மக்கள் விரோத காங்கிரஸ் கட்சியே இச்சட்டங்களின் உதவியுடன் பல முறை திமுக தலைவர்கள் மீது வேட்டை நாயைப் போல பாய்ந்துள்ளது. அது போல தமிழகத்தில் சிறிய அளவில் ஆனால் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தும் புரட்சிகர அமைப்புகளும் இச்சட்டங்களால் பாதிக்கப்பட்டவைதான். மிக மோசமாக பாதிகப்பட்ட இன்னொருவர் வைகோ. இன்று அவர் கூட்டணி வைத்துள்ள ஜெயலிதாவே அவரை சிறையில் தள்ளினார். சீக்கியப் படுகொலைகளில் கை நனைத்த குற்றவாளியும், போபால் கொலைகாரன் வாரன் ஆண்டர்சனை தனி விமானத்தில் அனுப்பி வைத்தவரும், ஈழ மக்களை அநியாயமான முறையில் கொன்று குவித்தவருமான ராஜீவ்காந்தியின் கொலை நடந்த நாளில் இருந்து தமிழகத்தில் அறிவிக்கப்படாத மிசா தொடர்ந்து கொண்டிருக்கிறது. ராஜீவ்காந்தி இறந்து சுமார் 18 ஆண்டுகள் ஆகிவிட்ட பின்னரும் கொடூரமான முறையில் தமிழகத்தில் போராட்டங்கள் நசுக்கப்படுகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரையில் மக்கள் விரோத ஜெயலலிதாவுக்கு இம்மாதிரியான கருப்புச் சட்டங்கள் தேவைப்படலாம். ஆனால் கருணாநிதிக்கு?

இன்று கருணாநிக்கும் இப்படியான சட்டங்கள் தேவைப்படுகிறது. திராவிட எதிர்ப்பரசியலில் உருவானதாகச் சொல்லப்படும் கருணாநிதியின் இன்றைய இருத்தலைப் புரிந்து கொள்ளவும் அவரது இன்றைய தேவைகளைப் புரிந்து கொள்வதும் மிக எளிதான ஒன்று. இந்திய பெருமுதலாளிகள் செல்வாக்குச் செலுத்தும் கட்சிகளில் இன்று திமுகவும் ஒன்று. இன்னும் அழுத்தமாகச் சொல்லப் போனால் கருணாநிதியின் குடும்பமே இந்திய பெருமுதலாளித்துவக் குடும்பம்தான். கடந்த காலத்தில் பெயரளவில் பேசிய கொள்கைகளைக் கூட இன்று அது பேசத் தயாராக இல்லை. பேசுவது அவர்களின் வர்க்க நலனுக்கே ஆபத்தாகக் கூட போகலாம். இலங்கையில் ஈழ மக்கள் மீதான பேரினவாதிகளின் யுத்தம் என்பது பாதி பிராந்திய நலன் சார்ந்தது, மீது இந்திய பெருமுதலாளிகளின் வர்த்தக நலன் சார்ந்தது. முதலீட்டிற்கு உகந்த சூழல் நிலவும் இலங்கையை இந்தியா தனது சுரண்டல் நலனுக்கு பயன்படுத்தும் போது அதில் தனக்கோ தனது குடும்பத்தினருக்கோ பங்கில்லாமல் போனால் அதை கருணாநிதி எப்படி பொறுத்துக் கொள்வார்?

கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு ராயல் பர்னிச்சர் என்றொரு பெரிய நிறுவனம் உண்டு. மேலும் தமிழகம் முழுக்க விவசாய நிலங்களை வளைப்பது அப்பாவி கிராம மக்களை மிரட்டி பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தங்களுக்கும் நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி ரியல் எஸ்டேட் தொழில் செய்வது என்று கருணாநிதி குடும்ப வாரிசுகள் செய்யாத தொழிலே இல்லை. முன்னர் ஜெயயலிதா, சசிகலா கும்பல் ஊரில் கண்ணில் நிலங்களை எல்லாம் எப்படி வழைத்துப் போட்டு தமிழகத்தையே தனது சொத்தாக மாற்ற முனைந்ததோ அதை விட மிக மோசமான முறையில் செய்து கொண்டிருக்கிறார்கள் கருணாநிதி குடும்பத்தினர். தஞ்சையில் டி.ஆர். பாலுவில் எரிசாராய ஆலைக்கு மக்கள் எதிர்ப்பிருந்தும் போலீசின் துணையோடு அந்த ஆலையை அமைத்தே தீருவது என்று முடிவோடு இருக்கிறார் டி.ஆர். பாலு எதிர்ப்புகள் இருக்கும் உள்ளூரிலிலேயே தனது தொழிலுக்காக மக்களை வதைக்கும் திமுகவின் குறுநில மன்னர்கள் இலங்கையில் கிடைத்தால் வேண்டாம் என்றா சொல்வார்கள். கனிமொழிக்கு கொழும்பில் ஒரு நட்சத்திர விடுதியும், டி.ஆர்.பாலுவுக்கு திருகோணமலைத் துறைமுகத்தில் பிரமாண்ட காண்டிராக்டும்., பொன்முடிக்கு தனியார் மருத்துவக்கல்லூரியும் கட்டிக் கொள்ளலாம் என்று சொன்னால் இன்றைய கருணாநிதியோ அவரது குறுநில மன்னர்களான தம்பிகளோ அய்யய்யோ இலங்கை ஒரு இனவெறி நாடு நாங்கள் அங்கு முதலிட மாட்டோம் என்று ஒதுங்கிவிடுவார்களா? என்ன?

ஆக, ஈழப் படுகொலைகளின் போது மத்திய அரசுக்கு துணை போன துரோகத்தை பேசுவது மட்டுமல்ல இலங்கை அரசுக்கு எதிராகக் கூட இன்று தமிழகத்தில் பேச முடியாத நிலையை உருவாக்கியாக வேண்டிய தேவை பெருமுதலாளியக் கட்சியாக மாறிப் போன திமுகவிற்குத் தேவைப்படுகிறது. அதைத்தான் அவர் முள்ளில் விழுந்த சேலையை எடுப்பது போல இலங்கைத் தமிழர் பிரச்சனையை தீர்க்க வேண்டும். என்று வஞ்சகமாகப் பேசினார். இலங்கை அரசிடம் சுமூக உறவு நிலவினால் மட்டுமே தன் குடும்ப, கட்சி நலன்களுக்கு அது உகந்ததாக இருக்கும் என நினைக்கிறார் கருணாநிதி. இந்தியத் தேசியத்தில் ஒன்று கலந்து மையநீரோட்ட அரசியலை பிரதிபலிக்கும் தமிழக அரசின் கொள்கையும் போர் வெறி பிடித்த இந்திய அரசின் கொள்கையும் இன்று வேறு வேறல்ல, இலங்கை விவாகரத்தில் மத்திய அரசின் கொள்கையும் மாநில அரசின் கொள்கையும் ஒன்றுதான் என்று கருணாநிதியே தெளிவு படுத்தியிருக்கும் நிலையில் போருக்குப் பின்னரான மத்திய மாநில அரசுகளின் நோக்கம் என்பது முழுக்க முழுக்க முதலீடுகள் சார்ந்ததே. ஆக முதலீட்டிற்கு உகந்த சூழல் இலங்கையில் நிலவுகிறது. அங்கு நிலவும் மயான அமைதி, எதிர்ப்பற்ற நிலை, இந்தியாவின் காலடிகளின் விழுந்து கிடந்து கெஞ்சிக் கொண்டிருக்கும் தமிழ் தலைமைகள் என இந்திய பெரு முதலாளிகளின் வர்த்தக நலனுக்கு உகந்ததாய் இருக்கும் போது அந்த முதலீடுகளை இடையூறு செய்யும் ஒரு தளமாக தமிழகம் கொதிப்பதை அது விரும்புமா? இலங்கையில் நிலவும் அதே உகந்த சூழல் தமிழகத்தில் நிலவ வேண்டும். உகந்த சூழல் என்பது போருக்குத் துணை போன கருணாநிதியைப் பற்றி மட்டுமல்ல, சோனியா, மன்மோகன், சிதம்பரம், ப்ரணாப்முகர்ஜி, பற்றி மட்டுமல்ல இலங்கை அரசைப் பற்றியோ ராஜபட்சே பற்றிக் கூட பேசக் கூடாத சூழல்தான் இப்போதைய முதலீடுகளுக்கு உகந்தது.

முதலில் விளக்கமாக அறிக்கை விடுவது, நாடகமாக மாற்றுவது, அந்த நாடகங்களுக்கு மற்றவர்களை துணைக்கழைப்பது, ஆரத்தழுவி ஆதரவைப் பெறுக்குவது, எதிப்பவர்களின் கட்சிகளை உடைப்பது, அதையும் மீறி எதிர்ப்பில் உறுதியாக இருந்தால் போலீசை ஏவி மண்டையை உடைப்பது, வழக்கு மேல் வழக்குகளைப் போட்டு உள்ளே தள்ளுவது இதுதான் கருணாநிதி ஸ்டைல். கடந்த இரண்டுவருடமாக ஈழப் பிரச்சனையில் கருணாநிதியால் நினைத்த மாதிரி காய்களை நகர்த்த இயலவில்லை. பெரும்பாலானோர் சுயலாபங்களுக்காக கருணாநிதியிடம் அண்டி நடந்தாலும் ஜெயலலிதா, கருணாநிதி என்னும் இரண்டு மக்கள் விரோத சக்திகளுக்கு அப்பாற்பட்ட கருணாநிதி எதிர்ப்பு ஈழப் பிரச்சனையை மையமிட்டு உருவாவதை அவரால் தடுக்க முடியவில்லை.

செம்மொழி மாநாட்டின் மூலம் அதைச் சரி செய்யலாம் என நினைத்தார். ஆனால் நீதிமன்றத்திலேயே அதற்கு குட்டு கிடைத்தது. செம்மொழி மாநாட்டை புறக்கணித்த தமிழ் கூட்டம் ஒன்று வெளியில் ஆழமான விமர்சனங்களை முன் வைத்தது. இப்படி எவ்வளவோ சொல்லலாம். ஆக தனது ஜென்ம எதிரி ஜெயலலிதாவுக்கு அப்பாற்பட்டு தான் ஈழத் தமிழர்களுக்கு இழைத்த துரோகத்தை இன்று வரை பூசி மொழுக முடியவில்லை. தான் விடுகிற அரதப்பழசான எதுகை மோனை அறிக்கைகளுக்கு ஜெயலலிதாவைத் தாண்டி தமிழ் மக்களிடம் அதற்கு எந்த மதிப்பும் இல்லை. தனக்கு உலகம் முழுக்க எதிர்ப்பு இருப்பது கருணாநிதிக்கும் தெரியும் அதனால்தான் மீண்டும் மீண்டும் தன்னை தமிழினத்தின் தலைவனாக காட்டிக் கொள்ள தன் அல்லக்கைகளை விட்டே பாராட்டு விழா நடத்துவது தனது கட்சி எம்,பிக்களை விட்டே மலர் மாலை போட்டுக் கொள்வது. திமுகவின் டூபாக்கூர் விருதுகளை தானே எடுத்துக் கொள்வது என்று கீழ்த்தரமான எல்லா வேலைகளையும் தொடர்ந்து செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறார். முதல்வர் பதவியில் ஒரு பொம்மையைப் போல அமர்ந்திருக்கும் இந்த கோமாளியின் நாடகங்கள் எல்லாமே மக்களிடம் அமபலப்பட மீண்டும் மீண்டும் தமிழால் ஒன்றிணைவோம். செம்மொழி மாநாடு எழுச்சியைக் கொண்டு வந்து விட்டது. என்றெல்லாம் உளறிக் கொண்டிருக்கிறார் இந்த கோமாளி. விரைவில் தேர்தல் வரவிருக்கும் நிலையில் இப்போதே கருணாநிதியை வீழ்த்த ஒரு பெரும் கூட்டம் விம்மலில் இருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலைப் போல இம்முறையும் மக்களிடம் ஈழப் பிரச்சனையைக் கொண்டு செல்லும் உத்வேகத்தோடு அவர்கள் இருக்க இரண்டு நோக்கங்களுக்காக இப்போது கருணாநிதிக்கு கருப்புச் சட்டம் ஒன்று தேவைப்படுகிறது. ஒன்று இலங்கையுடனான தனது வர்த்தக நலன்களைப் பேணவும், இன்னொன்று வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தனக்கு எதிராக ஈழம் நிறுத்தப்படுவதை அடக்கி ஒடுக்கவும். இந்த இரண்டு நோக்கங்களுக்காகவே விரைவில் வரவிருக்கிறது அந்தச் சட்டம் வரவிருக்கும் மாதங்களை ஈழ ஆதரவாளர்கள் எதிர்கொள்ள வேண்ட்யிருக்கும்.


நன்றி இனியொரு

Thursday, July 22, 2010

ஈழமக்களுக்கான அடுத்த கொலைக்களம்-தயாரிப்போர்
த தே கூட்டமைப்பினர் ,கருணாநிதி,இந்தியா;-சமரன்

பல மாதங்களாக அவர்கள் சென்னையில் தங்கியிருந்தார்கள்.2006 செப்டம்பரில் ஈழத்தில் நிலமைகள் மோசமாகத் துவங்கிய போது சென்னையில் பல நாட்களாக கருணாநிதியைச் சந்தித்து ஈழ நிலமைகள் தொடர்பாகப் பேச முயர்சித்தனர். இந்த முயர்ச்சி 2006

ஜூலை முதல் வாரத்திலிருந்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்டது. கருணாநிதியை மட்டுமல்ல ஜெயலலிதாம் ராமதாஸ், விஜயகாந்த் என்று தமிழக கூத்தாடிகள் எல்லோரையுமே சந்திக்க நேரம் கேட்டு கடிதங்களைக் கொடுத்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனும் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் சந்திப்புகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் தமிழகத்தின் சகல கட்சிகளினதும் தலைவர்களுக்கு சென்னையில் நீண்டகாலமாகத் தங்கியிருக்கும் மறவன்புலவு க.சச்சிதானந்தன் தமிழரசுக் கட்சியின் கடிதத்தலைப்புகளில் தானே கையெழுத்திட்டு கடிதங்களை அனுப்பிவைத்திருந்தார். இப்படியான கடிதம் அனுப்பட்ட போதும் ஜெயலலிதா, சி.பி.எம், விஜயகாந்த் போன்றோர் எந்த ஒரு பதிலையும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு வழங்கவில்லை. சம்பந்தன் சென்னை வந்துசேர்ந்த பின்னர் செப்டெம்பர் முதலாம் திகதி அவரும் மாவை சேனாதிராஜாவும் கூட்டாக கையெழுத்திட்ட கடிதத்தை சச்சிதானந்தன் மூலமாக முதலமைச்சர் கருணாநிதியின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் கையளித்திருந்தார். தங்களைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு சம்பந்தனும் மாவையும் அக் கடிதத்தின் மூலம் கலைஞரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். பின்னர் செப்டெம்பர் 4 ஆம் திகதியும் மீண்டும் ஒரு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. மீண்டும் மீண்டும் கருணாநிதிக்கு நான்கு கடிதங்கள் எழுதப்பட்ட போதும் அவர் கண்டு கொள்ளவே இல்லை. இது போக சம்பந்தனும் மாவை சேனாதிராஜாவும் முதலமைச்சர் கருணாநிதியின் செயலாளர் சண்முகநாதனுடன் அடிக்கடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சந்திப்புக்கான நேரம் குறித்து வேண்டுகோள் விடுத்த வண்ணமிருந்தனர். 14 ஆம் திகதி நண்பகல் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியைச் சந்தித்து கலைஞருக்கான கடிதத்தின் பிரதியொன்றும் கையளிக்கப்பட்டது. தொலைபேசி மூலமான வேண்டுகோள்கள் சகலதுக்கும் முதலமைச்சரின் செயலாளரிடமிருந்து பல்வேறு சாக்குப் போக்குகள் கூறப்பட்டு காலம் இழுத்தடிக்கப்பட்டது. செப்டெம்பர் 19 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் தூதுக் குழு புதுடில்லிக்கு புறப்பட்டுச் சென்று விட்டது. இக் குழுவினர் புது டில்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுச் செயலாளராகப் பதவியேற்கவிருக்கும் சிவ் சங்கர் மேனன், வெளியுறவு இணையமைச்சர் ஈ. அஹமட் ஆகியோர் உட்பட பல அதிகாரிகளை சந்தித்துப் பேசி நிலைவரங்களை விளக்கிக் கூறமுடிந்ததெனினும் பிரதமரரைச் மன்மோகன்சிங்கைச் சந்திப்பதற்கான வாய்ப்புக் கிட்டவில்லை.

தானும் சந்திக்க வில்லை பிரதமரையும் சந்திக்க விடவில்லை கருணாநிதி.

முதலில் டில்லியில் சந்திப்பு வேண்டி தொடர்பு கொண்ட போது நீங்கள் முதலில் மாநில முதல்வர் கருணாநிதியை சந்தியுங்கள் பின்னர் டில்லிக்கு வாருங்கள் என்று பிரதமர் அலுவலகம் கூட்டமைப்பிற்கு உத்தரவு போட்டது. ஆனால் கருணாநிதியோ கடைசி வரை தமிழ் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்திக்கவே இல்லை. கருணாநிதியை சந்திக்க முடியாமல் அவமானப்பட்டு தோல்வியடைந்த கூட்டமைப்பினர் டில்லி போன போது அதிக பட்சம் அவர்கள் பார்க்க முடிந்தது. எம்.கே. நாராயணனையும், சிவசங்கரமேனனையும் மட்டுமே கடைசி வரை அவர்களை மன்மோகன் சந்திக்கவே இல்லை. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கருணாநிதியே சந்திக்கவில்லை மாநில முதல்வரே சந்திக்காதவர்களை பிரதமரும் சந்திக்கத் தேவையில்லை என்று அறிக்கை அனுப்ப பிரதமரும் சந்திக்கவில்லை. ஆனால் சந்திப்பதற்கு முன்னரே மிகக் கீழ்த்தரமாக இறங்கி இந்த அறிக்கையை டில்லியில் வைத்து வெளியிட்டனர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் “இலங்கை

விவகாரத்தில் இந்தியாவுக்கு முக்கியப் பங்கு உள்ளதாக நாங்கள் நம்புகிறோம். தமிழர்கள் நலனைக் கருதி இலங்கை பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டும்.ராஜீவ் காந்தி படுகொலை சம்பவம் ஒரு துயரமான சம்பவம். அதை மன்னிக்க முடியாது. அந்த சம்பவத்திற்காக இலங்கை தமிழ் மக்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.இருப்பினும் இந்தியா இந்த துயரத்தை மறந்து விட்டு, மன்னித்து விட்டு தமிழர்கள் நலன் கருதி இலங்கை விவகாரத்தில தலையிட வேண்டும் என்றனர்“ இவ்வளவு கெஞ்சியும் எதிர்பார்த்த அளவுக்கு எந்த சந்திப்புகளும் நடைபெறாத நிலையில் சலித்துப் போன கூட்டமைப்பினர் இலங்கைக்குத் திரும்பினர்.இருக்கும் போது உதவாமல் அவர்கள் இலங்கைக்குச் சென்ற பிறகு கருணாநிதி ஆதரவாளரான சு,ப.வீரபாண்டியன் என்ன சொன்னார் தெரியுமா? “நானும் ராமதாசும் கலைஞரைச் சந்திக்க ஆவனச் செய்யும் முயர்ச்சிகளை மேற்கொண்டோம். ஆனால் அவர்கள் இலங்கை சென்று விட்டார்கள்” என்றார். எப்படி இருக்கிறது பாருங்கள் இந்தத் தந்திரம். பின்னர் மீண்டும் போர் மூண்ட போது தமிழக மக்கள் போர் நிறுத்தம் கேட்டுப் போராடிய போது கூட இதே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கருணாவைச் சந்தித்து போர் நிறுத்தம் கேட்க முயன்றனர். ஆனால் கடைசி வரை சந்திக்க முடியவில்லை. மிக மோசமான வரலாற்றில் கண்ணீரும் துயரமுமான அந்த 2009 ஆண்டு ஒரு வழியாக ஒரு இலட்சம் மக்கள் படுகொலையில் முடிந்து போனது. ” ராஜீவ் கொலை மன்னிக்க முடியாத குற்றம் அதை மன்னித்து மறந்து விட்டு இந்தியா உதவ வேண்டும்” என்று யாரிடம் சம்பந்தன் கெஞ்சினாரோ அவர்களே இக்கொலைகளின் நாயகர்கள். அன்றைக்கு சென்னையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை எந்த கருணாநிதி சந்திக்க மறுத்தாரோ அவரே இந்தியாவின் கொலைகளுக்கு துணை போன சூத்திரதாரி. யார் யார் எல்லாம் உங்களை கடைசி நேரத்தில் கழுத்தறுத்து கை கழுவினார்களோ அவர்களை இன்று மீண்டும் சந்திக்கிறீர்கள்.

இந்தியாவும் கருணாவும் சேர்ந்து தயாரிக்கும் சுருக்குக் கயிறு

அன்றைக்கு ஈழ மக்களுக்கும் இலங்கை தமிழ் எம்பிக்களுக்கும் உதவி வேண்டி கருணாநிதியைச் சந்திக்க வேண்டிய தேவை இருந்தது அப்போது சந்திக்க மறுத்தவர் கருணாநிதி. இப்போதோ ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலையில் தான் செய்த துரோகங்களை மறைக்கவும் தன்னை தமிழர்களின் தலைவன் என்று காட்டிக் கொள்ளவும் இலங்கை எம்பிக்களின் சந்திப்பு கருணாநிதிக்குத் தேவைப்படுகிறது. ஒரு துரோகியின் முகத்தை சாத்வீகமாகக் காட்ட உங்களின் கைகள் இன்று கருணாநிதிக்குத் தேவைப்படுகிறது. நீங்கள் கொடுக்கிறீர்கள். ஆனால் ஏற்கனவே நடந்து முடிந்து விட்ட அழ்விலிருந்து மக்கள் மீளாத போது இன்னொரு அழிவுக்கான அறிகுரியாக இதை நாம் காண வேண்டும். போரை நிறுத்த மாட்டோம், மக்களை அழிவைத் தடுக்க மாட்டோம். எல்லாம் செய்து முடித்து விட்டு நாங்கள் இடித்ததைக் மீண்டும் கட்டிக் கொடுப்போம். அதுதான் ஈழ மக்களுக்கு இந்தியா செய்யும் உதவி என்றால் இதைச் செய்ய இந்தியா எதற்கு தன்னார்வக்குழுக்களே போதுமே! மாறாக அரசியல் தீர்வுக்காக இந்தியா முயர்ச்சிக்கும் என்பதெல்லாம் இன்னொரு முறை ஈழ மக்களையும் புலத்து மக்களையும் முட்டாளாக்கும் முயர்ச்சிதான். அய்யா தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே அஞ்சிக் கெஞ்சி அண்டி கால்களை நக்கிப் பெற வேண்டியதல்ல ஈழ மக்களுக்கான அரசியல் தீர்வு. கால்களை நக்குவதும் கெஞ்சுவதும் இன்னமும் எம் மக்களை அழிவுக்கே இட்டுச் செல்லும். மக்களிடமிருந்து பிடுங்கப்பட்ட நிலங்களை அவர்களிடம் ஒப்படைத்து அவர்களை விவசாயம் செய்ய விட்டாலே போதும் சில ஆண்டுகளில் அவர்கள் தங்களை மீளமைத்துக் கொள்வார்கள். இனியும் இந்தியாவை நம்பி நீங்கள் இருந்தால் நீங்கள் சென்னையிலேயே உங்கள் அலுவலகத்தைத் திறந்து அங்கேயே இருங்கள். ஈழ மக்களை இனியும் உங்களுக்காக அரசியல் செய்கிறோம் என்று ஏமாற்ற வேண்டாம். ஏனென்றால் இனி கருணாநிதியின் ஈழ ஆர்வம் என்பது அவரது குடும்ப முதலாளிகள் சந்தை வாய்ப்புகளுக்காகவே அன்றி ஒரு போதும் ஈழத் தமிழர்களுக்கானதாக அது இருக்காது.

நன்றி இனியொரு,

Monday, July 19, 2010

புதுவை அண்ணா எங்கே,

ஈழத்து கவிஞர் புதுவை இரத்தினதுரை எங்கே?

இந்தக் கேள்வியை கடந்த ஒரு வருடமாக எனக்குத் தெரிந்தவர்கள் எல்லாரிடமும் கேட்கிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலை சொல்கிறார்கள். ஆனால் கவிஞர் எங்கே இருக்கிறார் என்று திட்டமாக எவரும் சொல்கிறார்களில்லை.

கவிஞரை நான் இறுதியாக சமாதான நேரத்தில் 2006 இல் பொற்பதியில் சந்தித்தேன். நீண்ட நேரமாக என்னோடு கதைத்துக்கொண்டு இருந்தார்.

அவரின் பேச்சில் தமிழர் சிங்களவர் மத்தியில் வேலை செய்யவேண்டிய புரிந்துணர்வு பற்றியதாகவே அநேக விடயங்கள் இருந்தன. தனக்கு இருக்கும் சீனி வியாதிபற்றியும் பேசினார். என்னோடு மிகவும் அன்பாகவே இருந்தார். தொடர்ந்து நாங்கள் கதைக்கவேண்டும் என்றும் சொன்னார். என்னோடு பேசிய அன்று புலிகள் தொடர்பாக எதுவுமே பேசவில்லை. ‘வெளிச்சம்’ சஞ்சிகைக்கு கவிதை அனுப்பச் சொன்னார். இரண்டு கவிதைகள் அனுப்பினேன். இரண்டும் பிரசுரமாகியிருந்தன.

யுத்தத்தின் இறுதிக் காலத்தில் வெளிச்சம் 100 வது இதழில் பிரசுரிப்பதற்கு ஒரு சிறுகதை தரும்படி இங்கே லண்டனில் உள்ள நண்பர் ஒருவரூடாக கேட்டிருந்தார். நான் ‘புளியங்குளம்’ கதையைக் கொடுத்திருந்தேன். அது பிரசுரமாகியிருந்தது. ஆனால் வெளிச்சம் 100வது சஞ்சிகை யுத்தத்தில் அகப்பட்டு அது வன்னியைவிட்டு வெளியில் வரவில்லை என்பதுதான் சோகம். புதுவையின் ‘பூவரசம் வேலிகளும் புலுனிக் குஞ்சுகளும்’ கவிதைத் தொகுப்பைப் புரட்டும்போது மனது பாரமாகிக் கிடக்கிறது.

இந்த யுத்தத்தில் ஒரு நல்ல தமிழ்க் கவிஞனை இழந்துவிட்டோமோ என்ற கவலை மனதை அழுத்துகிறது. புதுக்கவிதைகள் போர்க்காலக் கவிதைகள் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. புதுவையின் கவிதைகள் போராட்டத்தை முன் உந்தித் தள்ளியது. அது மக்கள் மத்தியில் பெரும் பெரும் தாக்கத்தை மன உத்வேகத்தை அளித்தது.

ஆனால் அந்த நல்ல தமிழ்க் கவிஞன் எங்கே இருக்கிறான், உயிருடனோ அல்லது இறந்துவிட்டானோ என்று தெரியாமல் இருப்பதுதான் பெரும் கவலை. புலிகளின் பெரும் புள்ளிகளே அரசின் அரவணைப்பில் இருக்கும்போது ஒரு கவிஞனை காணாமல் ஆக்கியிருப்பது பெரும் கொடுமைதான்.

‘இத்தனைக்குப் பின்னும்
கொழும்பும் எமதென்றே
குறிப்பெழுதி
இடையிருந்த எல்லைதகர்த்து
வந்தோம் உங்கள் வாசல்
ஆணியறைந்த காலத்துயர்
மீண்டும் கையிணையும் மகிழ்வில்
அந்தப் பெரும்தெரு ஏறிவந்தோம்
துருப்பிடித்திருந்த கபாடம் திறந்து
தூசி படிந்த தெரு கழுவி
புன்னகை சுமந்தோராய்
ஊறிய நினைவில் வந்தோம் தலைவாசல்
சகோதர உறவுகளுடன்
முகிழ்த்து மலர்வோம் என
நீங்களனுப்பிய அழைப்பிருந்தது நெஞ்சில்
அச்சமில்லையெனும் நம்பிக்கையும்
உலகு உறவுகளால் நிரம்பியதென்ற உணர்வும்
அந்த வாசகத்தின் மேலே ஒளிர்ந்தது.
வரும் வழியெல்லாம் வாகனம் நிறுத்தி
வெள்ளையப்பம், கிரிபத், மாசிச்சம்பல்,
கித்துள்பாணி என
பல காலமுண்ணாப் பலகாரமுண்டோம்.
அனுராதபுரத்தில்
மேலிருந்திறங்கித் தகுமெனச் சொல்லி
அதுவே தருணமென்றுரைத்து
எல்லாள மகாராசனும்
கெமுனு இளவரசனும்
ஒன்றாக நின்று வாழ்த்தியனுப்பினர் வழி
இருளழித்து ஒளி தூவி வந்தன எம் தேர்கள்
பாதி வழி வந்து எதிர்கொண்டன
உம் பல்லக்குகள்,……..

என்று தொடரும் புதுவையின் இந்தக் கவிதையை 2003 ஆம் ஆண்டிலி இருந்து எனது பையில் வைத்துக்கொண்டு இன்றுவரை திரிந்துகொண்டிருக்கிறேன் நான். இதுவரை எவரும் ‘இத்தனைக்குப் பின்னும்’ என்ற புதுவையின் கவிதையைப் போல எழுதவே இல்லை. 2003 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 29 ஆம் திகதி ‘ஹிரு’ அமைப்பினர் தமிழ்க் கலைக்கூடல் என்ற நிகழ்வை கொழும்பில் புதிய நகரசபை மண்டபத்தில் நிகழ்த்தியிருந்தனர். வன்னியிலிருந்து கலைஞர்கள், கவிஞர்கள் வந்திருந்தனர். இரண்டு நாள் நடந்த இந்த நிகழ்வை ‘ஹெல உறுமய’ உறுப்பினர்கள் குழப்ப முயன்றனர், முடியவில்லை. இந்த ஒன்றுகூடல் தொடர்பான புதுவையின் பதிவு இந்தக் கவிதை மிகவும் அற்புதமாக வந்திருக்கிறது.

உண்மையில் இந்த கொடூர யுத்தம் முடிவடைந்து ஒருவருடம் முடிவடைந்த பின்னரும் திரும்பும் இடமெல்லாம் வெறுமையாகவே எல்லாம் இருக்கின்றன.

யுத்தத்தின்போது கொல்லப்பட்ட, காணாமல் செய்யப்பட்ட சித்திரவதைக்குட்பட்ட ஆயுதம் இல்லாத அப்பாவிகள்மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகளுக்கு யாரும் பதில் சொல்லத் தேவையில்லை என்ற உணர்வு மட்டுமே சனாதிபதி மற்றும் அவரது பாதுகாப்புச் செயலர் போன்றோருக்கு இருக்கிறது. இலங்கை மிகவும் அபாயகரமானதோர் நிலமைக்கும் சர்வாதிகாரத்துள்ளும் போகிறதோ என்ற அச்சம் எனக்கு ஏற்படுகிறது. தொடர்மாடி வீடுகள், பிச்சைக்காரர்கள், நகர அபிவிருத்தி என எல்லாமே பாதுகாப்பு செயலர் கோதபாய ராஜபக்சவுக்கு கீழே போவது எதிர்காலத்தில் ஒரு தனிமனித சர்வாதிகார இராணுவ பின்புலத்திற்குள் இலங்கை முழுமையாக தள்ளப்படப்போகிறதோ என்ற ஒரு பயக்கெடுதி வருகிறது.

ஒவ்வொருவரையும் ஒரு மறைமுகமான இராணுவத்தின் கண் பின் தொடரப் போகிறதா?

இடி அமீன் அப்படித்தான் செய்தார். உகண்டாவை முழு ஊழலுக்கும் அவருடன் சேர்ந்த இராணுவத்தினர் அனுபவித்து மகிழவும் ஆக்கினார். ஒரு கூட்டத்திற்குப் போனால் அங்கு அவரின் கண்ணில்படும் பெரும் பணக்காரர்களை அடுத்தநாள் ஏழையாக்கிவிடுவார். அவரின் சொத்துக்கள் எல்லாம் பறிக்கப்பட்டு விடும். அந்தக் கூட்டத்தில் அழகான பெண்கள் இருந்தால் அன்று இரவு இடி அமீன் படுக்கை அறையில் அந்தப் பெண் இருக்கவேண்டும். இவை எல்லாவற்றுக்கும் அவருடன் இருந்த இராணுவத்தினர் முழு ஒத்தாசை வழங்கினர். அதனால் இராணுவத்தினரும் சுகபோகமாக வாழ்ந்தனர். பிறகு நாடே நலிந்து நாசமாகிப் போய்விட்டது.

நாட்டின் அபிவிருத்தி என்று நாட்டு மக்கள் சந்தோசப்படும்படி அமையவேண்டும். மக்கள் பயந்து பயந்து செத்துக் கொண்டிருக்கும்படி ஆகக்கூடாது.

வன்னிப் பெரு நிலப்பரப்பு எங்கும் மக்கள் சிதறிப்போய் இருக்கின்றனர். வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச ஐ.நா. சபையை எதிர்க்கும் சக்தியில் ஒரு கொஞ்சத்தையேனும் வன்னி மக்களின் பக்கம் திருப்புவாரேயானால் அங்கு வீடில்லாதவர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கலாம். வன்னிப் பெருநிலம் காடுபத்திப்போய் கிடக்கிறது. மக்கள் இல்லா மயான வெளியாக இருக்கும் பூமிபற்றி யோசிக்கும்போது 1996 ஆம் ஆண்டு வெளிச்சம் சஞ்சிகையில் புதுவை எழுதிய கவிதைதான் எனது நினைவுக்கு வருகிறது.

‘நிலவு நேராக தலைக்குமேல் நிற்க
ஓ வென்று இரைகிறது காற்று
தூரத்தே
இரணைமடுக்காடு பனியில் நனைகிறது
பழைய முருகண்டித் தனியன் யானையாய்
அருகில் ஒருவரின்றி நான்
சுற்றமிழந்து எத்தனை நாளாச்சு?
அயல் வீட்டில் குடியிருந்த அவர்களை
எங்கு தேடுவேன்?
சிதறி ஓடியது தெரியும்
பிறகு என்னானார்கள் அவர்கள்?
வாய்க்கால் நீராய்ப் பெருகி வழிந்து
வந்தடைந்தது ஓரிடமல்லவே
திக்கொன்றாய் சிலும்பிப்போனோம்.
மீண்டும் ஊர் புகும் நாளில்
எவரெவர் கூடி உள்நுழைவோமோ?
உயிரோடிணைந்த உறவுகளே!
என் அயலிருந்தோரே!
எங்கே போய்விட்டீர்?
காண ஆசை மிகுதி ஓடி வருக!
இரணைமடுக்காடு அதிரக் கத்தவேண்டும்போல
உள்ளே ஒரு வேட்கை
இன்று பங்குனித் திங்கள்
பொங்கலுக்கென்றே பிறக்கும் நாள்.
உச்சி வெயில் உருக்கிலும்
தார் உருகும் தெருவில் நடப்போம்
காலிற் செருப்பும் இருக்காது.
காவடியும் பாற்செம்பும் சுமந்து
ஊரின் ஓரிருவர் நடப்பர்
உறவெல்லாம் முன்னும் பின்னும் அணிவகுத்து
கோயில் புக மணிச்சத்தம் வரவேற்கும்.
இன்றெங்கே அந்த ரத்தங்கள்?
ஒரு முகத்தையாவது காணும்வரை
இந்தக் குளக்கரையில் குந்தியிருப்பேன்’

வன்னி இடப்பெயர்வு தொடர்பான மிக துல்லியமான புதுவையின் பதிவு இது. பங்குனி மாதம் வன்னி எங்கும் பெரும் குதூகலமாகத்தான் இருக்கும். எங்கள் வாழ்வில் அனுபவித்த நாட்கள் இன்னும் மனதுக்குள் அப்படியே கிடக்கிறது.

முள்ளியவளைக்குப் போனால் எங்களுக்கெல்லாம் மனதுக்கு சந்தோசம் மட்டுமே கிடைக்கும்.

பங்குனி மாதத்தில் எங்கள் வன்னிக் காற்றில்கூட எத்தனை எத்தனை வாசனை. இலுப்பைப்பூ பூக்கும் அற்புதமான காலம். காற்று இலுப்பைப்பூ வாசனையை அள்ளிக்கொண்டு வந்து எங்கள் நாசியில் கொட்டும். இலுப்பைப்பூ மணத்தை உணர்ந்தவர்கள் வன்னி மக்கள். எத்தனை பேருக்கு அதன் வாசனை இன்னும் நாசிக்குள் கிடக்கும்.

பங்குனி மாதத்தில்தான் பனம்பழம் பழுத்து சொரியும். காட்டு ஈச்சம்பழம் பழுத்துக்கிடக்கும். நாவல்பழம், வீரப்பழம், கூழாம்பழம், கொய்யாப்பழம், பலாப்பழம் என்று எங்கள் முள்ளியவளை முழுக்க காற்றில் வாசனை வாசனையாகவே இருக்கும். மாம்பழம் பழுத்துச் சொரியும் காலமிது. எங்கள் பாதைகளில் கால்கள் மணலில் புதைய நடந்த நாட்கள் இன்னும் மனதில் பசுமையாக இருக்கிறது.

பங்குனித் திங்கள் காலத்தை முழுமையாக அனுபவித்தவர்கள் என்றால் முல்லைத்தீவு, வற்றாப்பளை, முள்ளியவளை, ஒட்டுசுட்டான், புதுக்குடியிருக்கு பகுதி மக்கள்தான். வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோவில் ஒவ்வொரு பங்குனித் திங்களிலும் களைகட்டும். அப்படியே பங்குனி முடிந்தால் வைகாசிப் பொங்கல் முழுக்க எங்களுக்குக் கொண்டாட்டம்தான். எல்லாம் அழிந்துபோய்விட்டது. எல்லாவற்றையும் அழித்துவிட்டு ஒன்றும் நடக்காததுபோல இருக்கிறார்கள் ஆட்சியாளர்கள். அதுதான் கொடுமை.

தெற்கைப்போல வடக்கையும் கிழக்கையும் பாருங்கள் என்றுதான் சொல்கிறோம். நாங்களும் மனிதர்கள்தானே என்றுதான் சொல்கிறோம்.

புதுவை சொன்னதுபோல,
‘..இன்றெங்கே அந்த ரத்தங்கள்?
ஒரு முகத்தையாவது காணும்வரை
இந்தக் குளக்கரையில் குந்தியிருப்பேன்’

இரணைமடுக் குளக்கரையில் தனியே புதுவை மட்டும்தான் குந்தியிருந்து உறவுகளைத் தேடுவதுபோல் தெரிகிறது. ஆனால் புதுவையை நாங்கள் தேடுகிறோம். கவிஞனே நீ எங்கு இருக்கிறாய்? உயிருடன் இருக்கிறாயா அல்லது இறந்துவிட்டாயா? அல்லது எங்காவது சிறையிலா? அல்லது தனிப்பட்ட முகாமிலா? தெரியவில்லை. ஒரு கவிஞனாக இருந்து புதுவை சாதித்தது அளப்பரியது. புதுவை இயமனுக்கு எழுதிய கவிதை இது.

‘காலனே!
கயிறு என்மேலெறிய
கணக்கெடுக்கின்றாயா நாட்களை?
விரைவில் முடியாதென் கணக்கு.
சாக்குறிக்கும் ஜாதகமே பொய்யென
உணர்த்துவேன் உனக்கு.
மரண பயமில்லை எனக்கு.
இறுதி நாளைச் சொல்லவரும் உன் தூதுவனைக்கூட
முகம் மலர்த்தி வரவேற்பேன்.
மேதியுர்தி ஏறிவரும் உன்னையும்
பாயருகே அமர்த்தி
பத்து வருடங்கள் கழித்து வாவெனச் செப்பும்
பலமெனக்குண்டு.
என் ‘அப்பு’ எனக்களித்த வரமிது.
சாவு ஒரு நாள் என்னைத் தழுவும்
என் ஒப்புதலுடன்
போதும் என் ஜீவிதமெனும் நிறைவுடன்
நானாக உன்னைக் கூவியழைத்து
கூட்டிப்போ என்பேன்
அதுவரை உனக்கு
என் முகவரி எதற்கு?
காலா!
சென்று வேறெவனும்
இழிச்ச வாயன் இருப்பான்
எடுத்துச் செல்.
என்னைத் தான் வேண்டுமெனில்
நானாக உன்னை அழைப்பேன்
அப்போது வா தோழா.’

உண்மையில் புதுவையின் உயிர் மீதான துணிச்சல் இப்படி இருந்திருக்கிறது. இறப்பது என்பது வேறு. காணாமல் போவதென்பது பெருங்கொடுமை. புதுவை உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பதற்கு விடை தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள்தான் சொல்லவேண்டும். ‘விரைவில் முடியாதென் கணக்கு’ என்று புதுவை சொன்னது மட்டும் தான் எங்களுக்குத் தென்பாக இருக்கிறது.

ஒரு நல்ல தமிழ்க் கவிஞனை அவ்வளவு சீக்கிரம் இழப்பதற்கு எனது மனது தயாராகுதில்லை. ஏனெனில் வன்னியில் நாங்கள் இழந்தது கோடி.

Tags:

Sunday, July 18, 2010

புத்தக’ஜீவிகள் - சேரமான்

ஈழத்திற்கு விலைபேசும் ‘புத்தக’ஜீவிகள் - சேரமான்

அண்மையில் தமிழகத்தில் இடம்பெற்ற செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்ட பேராசிரியர் சிவத்தம்பி செய்தியாளர்களிடம் கருத்துக் கூறுகையில், ஈழம் என்ற சொற்பதத்தை தான் பயன்படுத்துவதில்லை என்றும், அது சிங்கள மொழியில் இருந்த உருவாகிய சொல் என்றும், அதனை ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கங்கள் தவறாகக் கையாண்டிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். அத்துடன், தமிழ்நாட்டவர்கள் தங்களை இந்தியர்கள் என்று கூறிக்கொள்வது போன்று, தானும் தன்னை இலங்கையன் என்று கூறிக்கொள்வதில் பெருமையடைவதாகவும் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் மேலும் தெரிவித்திருந்தார்.

உண்மையில் ஈழத்தில் இன்று மிஞ்சியிருக்கக்கூடிய குறிப்பிடத்தக்க மூத்த அறிஞர்களில் ஒருவராக பேராசிரியர் சிவத்தம்பி திகழ்வதை நாம் மறுப்பதற்கில்லை. அதேநேரத்தில் இத்தனை காலமும் ஈழம் என்ற சொற்பதத்தை மறுதலிக்காது அமைதி காத்து வந்த பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள், திடீரென அதனைத் தவறான சொற்பதமாக சித்தரிக்க முனைவதும், தன்னை இலங்கையர் என்று கூறிக்கொள்வதில் பெருமையடைவதும், அவரது உள்நோக்கங்கள் தொடர்பான சந்தேகங்களை உலகத் தமிழர்களிடையே எழுப்பியிருப்பதையும் நாம் புறந்தள்ளிவிட முடியாது.

கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் ஈழம் என்ற சொல்லாடல் பயன்படுத்தப்படுவதற்கு அதிகாரபற்றற்ற தடையை கலைஞர் முத்துவேல் கருணாநிதியின் அரசாங்கம் விதித்திருப்பதும், ஈழத்தமிழர்களை அடிக்கடி இலங்கைத் தமிழர்கள் என்று கருணாநிதி விளிப்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. தற்பொழுது இதனை ஒப்புவிக்கும் வகையில் பேராசிரியர் சிவத்தம்பி கருத்து வெளியிட்டிருப்பது சிங்கள - இந்திய அரசுகளின் கூட்டுச்சதிக்கு பேராசிரியர் சிவத்தம்பியும் இரையாகிவிட்டாரோ என்ற கேள்வியையும் எழுப்புகின்றது.

ஈழத்தீவின் பூர்வீகக் குடிகளாகத் தமிழர்கள் திகழ்ந்தாலும், அது தொடர்பாக ஈழத்தில் இருந்து உருவாகிய புராதனகால எழுத்துமூலப் பதிவுகள் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன. இருந்த பொழுதும், ஈழத்தில் வரலாற்றுக்கு முந்திய காலத்தில் இருந்தே தமிழர்கள் வாழ்ந்ததை உறுதிசெய்யும் பதிவுகளை தமிழகத்தில் பண்டைக்கால இலக்கியங்கள் தம்மகத்தே கொண்டுள்ளன.

ஈழத்தில் சிங்கள இனம் தோற்றம் பெற்றதாகக் கூறப்படும் காலத்திற்கு முன்னர் எழுதப்பட்ட பல்வேறு சங்க கால இலக்கியங்களில், ஈழம் என்ற சொற்பதம் அடிக்கடி கையாளப்பட்டிருப்பதோடு, அங்கு தமிழர்கள் வாழ்ந்து ஆட்சி செய்ததை உறுதிசெய்யும் பாடல்களும் காணப்படுகின்றன. இவற்றைவிட கடந்த ஆறு தசாப்தகாலப் பகுதியில் ஈழத்தீவில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் பொழுது கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு கல்வெட்டுக்கள், அங்கு வரலாற்றுக்கு முந்திய காலம்தொட்டு தமிழர்கள் வாழ்ந்ததையே உறுதி செய்கின்றன. அதேநேரத்தில் இலங்கை என்ற சொற்பதம் பண்டைக்கால தமிழ் இலக்கியங்களில் பெரும்பாலும் அறியப்படாத ஒன்றாகவே விளங்குகின்றது.

வடமொழியில் எழுதப்பட்ட வான்மீகி இராமாயணம் ஈழத்தீவை லங்காபுரி என்ற வர்ணிப்பதோடு, அதன் மறுவாசிப்பாக இடைக்காலத்தில் (சங்க காலத்திற்குப் பின்னரான பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர்) கம்பரால் எழுதப்பட்ட இராமாயணம், இராவணனை இலங்கை வேந்தன் என்று விளிக்கின்றது. இந்த வகையில் இலங்கை என்ற சொற்பதம்; லங்கா என்ற வடமொழி சொற்பதத்தில் இருந்தே பிறந்ததாக நாம் கொள்ள முடியும்.

மேலைத்தேயத்தவர்களின் ஆட்சிக்காலத்தில் ஈழத்தீவை சிலோன் என்று வெள்ளையர்கள் அழைத்த பொழுது, அதற்கு மாற்றீடான தமிழ்ச் சொல்லாடலாக இலங்கை என்ற சொற்பதத்தை அப்போதைய மேலைத்தேய ஆட்சியாளர்களுக்கு அடித்தொண்டு செய்த தமிழ் ‘புத்தக’ஜீவிகள் கையாண்டிருந்தனர். இதன் விளைவாக ஈழத்தீவின் ஆட்சியதிகாரம் ஆங்கிலேயர்களிடமிருந்து சிங்களவர்களிடம் கைமாறிய பின்னரும், இலங்கை என்ற சொற்பதம் அரச பரிவர்த்தனைகளில் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இதேநேரத்தில் தமிழீழம் என்ற சொற்பதம் ஈழத்தீவின் ஆட்சியதிகாரம் ஆங்கிலேயர்களிடமிருந்து சிங்களவர்களிடம் கைமாறுவதற்கு முன்னரே தமிழ்த் தேசிய அரசியலில் கையாளப்பட்டு வந்துள்ளது. 1920களில் தமிழீழம் என்ற சொற்பதம் கையாளப்பட்டமை தொடர்பான வரலாற்றுப் பதிவுகளை, கடந்த 2006ஆம் ஆண்டு கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் பொழுது, தமிழீழ நிதித்துறைப் பொறுப்பாளர் கேணல் ச.வெ.தமிழேந்தி அவர்கள் சுட்டிக் காட்டியிருந்தார்தமிழீழம் என்ற பெயருடன் பண்டைக்காலத்தில் ஈழத்தில் அரசு எதுவும் முன்னர் இயங்காத பொழுதும், ஈழத்தீவு முழுவதும் தமிழர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலப்பகுதிகள் பலவற்றை, தமிழகத்தின் இலக்கியங்கள் மட்டுமன்றி சிங்கள வரலாற்று நூல்கள் கூட பதிவுசெய்துள்ளன.

இதில் உதாரணமாக அனுராதபுரத்தை தனது தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த எல்லாளன் என்ற ஈழத்தமிழ் மன்னனை நாம் குறிப்பிடலாம். எல்லாளனை சோழர் குலத்தை சேர்ந்த தளபதி என்று மகாவம்சம் குறிப்பிடுகின்ற பொழுது, பண்டைக்கால தமிழ் இலக்கியங்கள் எவையும் சோழர் குலத்தில் எல்லாளன் என்ற பெயரில் தளபதி ஒருவர் தமிழகத்தில் வாழ்ந்தது தொடர்பான பதிவுகளையோ, அன்றி படையெடுப்பின் மூலம் ஈழத்தை அவ்வாறான பெயருடைய ஒருவர் கைப்பற்றியமை தொடர்பான தகவல்களையோ கொண்டிருக்கவில்லை. அதாவது எல்லாளன் என்ற மன்னன் ஈழத்தைச் சேர்ந்த தமிழ் மன்னன் என்பதையே இது உணர்த்தி நிற்கின்றது என்பதே வரலாற்று அறிஞர்கள் பலரது கருத்தாக விளங்குகின்றது.

இதேபோன்று எல்லாளனுக்குப் பின்னரான காலப்பகுதியில் அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு, சேனன், குத்திகன் என்ற இரண்டு தமிழ் மன்னர்கள் ஈழத்தீவை ஆட்சி செய்தமை தொடர்பான பதிவுகளையும் மகாவம்சம் கொண்டுள்ளது. இவர்கள் இருவரையும் தமிழகத்தை சேர்ந்த குதிரை வணிகர்கள் என்று மகாவம்சம் சித்தரிக்கின்ற பொழுதும், வெறும் குதிரை வணிகர்களால் ஒரு தீவின் ஆட்சியைக் கைப்பற்றியிருக்க முடியுமா? என்று வரலாற்று ஆய்வாளர்கள் பலர் கேள்வியெழுப்பியுள்ளனர்.இடைக்காலத்தில் ஈழத்தீவில் தமிழர்களின் ஆட்சியென்பது தற்பொழுது தமிழீழம் என்றழைக்கப்படும் வடக்குக் கிழக்கு மாநிலங்களோடு மட்டுப்படுத்தப்பட்டு, யாழ்ப்பாண இராச்சியமாகவும், வன்னிப் பெருநிலம் முதல் புத்தளம் உள்ளடங்கலாக அம்பாறை வரையான வன்னிமைகள் என்ற குறுநிலங்களாக விளங்கிய பொழுதும், சிங்கள இராச்சியங்களின் ஆட்சியதிகாரத்தை தீர்மானிக்கும் சக்திமிக்கவர்களாக தமிழர்களே விளங்கியுள்ளனர்.

இதற்கு உதாரணமாக ஆறாம் பராக்கிரமபாகு என்ற சிங்கள மன்னனால் தத்தெடுக்கப்பட்ட பண்டைத் தமிழகத்தின் சேர சமூகத்தை சேர்ந்த செண்பகப்பெருமாள் (சப்புமல் குமரய என்று சிங்களத்தில் அழைக்கப்படும் இளவரசன்) என்பவரையும், கண்டி இராச்சியத்தை இறுதிவரை ஆட்சி செய்த மதுரை நாயக்க வம்சத்தை சேர்ந்த கண்ணுச்சாமி (விக்கிரமராஜசிங்க என்று சிங்களவர்களால் அழைக்கப்படும் மன்னன்) என்பவரையும் நாம் குறிப்பிட முடியும். இவ்வாறாக ஒருகாலத்தில் ஈழத்தீவு முழுவதையும் ஆட்சிசெய்த தமிழர்கள், இன்று தமக்கான அரசை பெருந்தன்மையுடன் வடக்குக் கிழக்கு மாநிலங்களுடன் மட்டுப்படுத்தியுள்ளனர் எனக்கூறின் அது மிகையில்லை.

உண்மையில் ஈழத்தீவு முழுவதையும் உரிமை கோரும் தகமை தமிழர்களுக்கு உண்டு. தமிழகத்தில் இருந்து ஈழத்திற்கு அடிக்கடி சோழர்களின் படையெடுப்புக்கள் இடம்பெற்ற பொழுதும், காலம்காலமாக ஈழத்தீவை ஈழத்தமிழர்கள் ஆட்சிசெய்திருப்பதை பல்வேறு கல்வெட்டுக்களும், அகழாய்வுச் சான்றுகள் நிரூபிக்கின்றன.1948ஆம் ஆண்டு ஈழத்தீவின் ஆட்சியதிகாரம் சிங்களவர்களிடம் கைமாறிய பின்னர் எழுதப்பட்ட சிங்கள தேசத்தின் தேசிய கீதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு, ஈழம் என்ற சொற்பதத்தை உள்ளடக்கியிருப்பதையும் நாம் இங்கு சுட்டிக் காட்ட வேண்டும். அதேநேரத்தில் 1972ஆம் ஆண்டு குடியரசாக ஈழத்தீவை சிங்களவர்கள் மாற்றியமைத்த பொழுது, அதன் மேலைத்தேயப் பெயரான சிலோன் என்பது கைவிடப்பட்டு, அதற்குப் பதிலாக சிறீலங்கா என்ற பெயர் சூட்டப்பட்டது.

பௌத்த மதத்தை முதன்மை மதமாக வரையறுக்கும் சிறீலங்காவின் அரசியலமைப்பு, சிறீலங்கா என்ற சொற்பதத்திலேயே தனது இனவெறியைக் கக்குகின்றது.அதாவது சிறீ என்ற வடமொழிச் சொல்லின் அர்த்தம் புனிதமானது என்பதாகும். இந்த வகையில் சிறீலங்கா என்று பெயர்சூட்டியதன் மூலம், ஈழத்தீவை பௌத்த மதத்தின் புனித பூமியாகவே சித்தரிப்பதற்கு சிங்களம் முற்பட்டுள்ளது. இந்தப் புனித பௌத்த லங்கா அல்லது சிறீலங்கா என்ற சொல்லாடல், கிறிஸ்துவிற்குப் பின் 6ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மகாவம்சத்தில் குறிப்பிடப்படும் ‘தம்மதீப’ என்ற சிங்கள-பௌத்த பேரினவாதக் கோட்பாட்டின் மறுவடிவமாகவே திகழ்கின்றது.

எனவே, தம்மை ‘சிறீலங்கன்’ அல்லது ‘சிறீலங்கன் ரமிள்’ என்று கூறிக்கொள்ளும் ஒவ்வொரு ஈழத்தமிழனும், தம்மை புனித பௌத்த லங்காவின் குடிமகன் என்று அடையாளப்படுத்தி, தமது தலையில் தாமே தூர்வாருகின்றனர். இதிலிருந்து ஓரளவுக்கு விதிவிலக்குப் பெற்ற சொற்பதமாக இலங்கை என்ற சொல்லாடலை நாம் கருதினாலும் கூட, லங்கா என்ற வடமொழி சொற்பதத்தின் தமிழ் வடிவமாகவே இதனை நாம் கொள்ள முடியும். இந்த வகையில் ஈழம் என்பதும், தமிழீழம் என்பதும், ஈழத்தமிழர் என்பதுமே, ஈழத்தீவில் எமது அடையாளத்தை என்றென்றும் நாம் தக்கவைப்பதற்கான சொற்பதங்களாக விளங்குகின்றன என்பதில் எவ்விதமான மாற்றுக் கருத்துக்களும் இருக்க முடியாது.

ஈழம் என்ற சொற்பதமும், சிங்களத்தில் கலந்துள்ள எலுவடிவத் தமிழும் (சிங் எல) ஒன்றோடொன்று தொடர்புபட்டவை என்று சில வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்ற பொழுதும், ஈழம் என்பது எலுவடிவம் தோற்றம் பெறுவதற்கு முன்னரே புராதன தமிழ் இலக்கியங்களில் கையாளப்பட்டு வந்த சொற்பதமாகும். இதனைத் திரிவுபடுத்தி ஈழம் என்பது சிங்களத்தில் இருந்து உருவான சொற்பதம் என்று பேராசிரியர் சிவத்தம்பி கூறுவது நகைப்புக்கிடமானது.

ஈழத்தீவை சிங்கள மயப்படுத்தும் தனது நிகழ்ச்சித்திட்டத்தின் ஓரங்கமாக ‘நாமெல்லாம் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள், நாமெல்லாம் சிறீலங்கன்கள்’ என்ற சொல்லாடலை அண்மைக் காலங்களில் அடிக்கடி சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்ச பயன்படுத்துவதை நாம் அவதானிக்க முடியும். அதாவது மகிந்தரின் வார்த்தைகளில் கூறுவதாயினும், ‘இங்கு சிறுபான்மையினர் என்று எவரும் இல்லை.

எல்லோரும் சிறீலங்கன்கள், அதனால் எல்லோரும் பெரும்பான்மையினர்.’ என்கின்றார் மகிந்தர். இது ஈழத்தீவில் தமிழினத்தின் வரலாற்றையும், இருப்பையும் மறுதலிப்பதற்கு சிங்கள-பௌத்த பேரினவாதம் கையாளும் மிகவும் நுண்ணியமான சூழ்ச்சியின் கோட்பாட்டு வடிவமாகும். இதற்குத் துணை போகும் வகையில் ‘நான் ஒரு இலங்கையன்’ என்று கூறி பேராசிரியர் சிவத்தம்பி பெருமிதம் கொள்வது, சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் நிகழ்ச்சிநிரலுக்குள் அவரும் சிக்கியிருப்பதையே சுட்டி நிற்கின்றது. ஈழத்தமிழர்களுக்கு புத்திஜீவிகள் தேவைதான்.

ஆனால் அவ்வாறான புத்திஜீவிகள் பௌத்தத்தின் வெற்றுப் ‘புத்தக’ஜீவிகளாகி சிங்கள-பௌத்த பேரினவாதத்திற்கு துணைபோகும் பொழுது, அவர்களுக்கு வரலாறு நிச்சயம் பாடம்புகட்டியே தீரும் என்பதில் ஐயமில்லை.

நன்றி்:ஈழமு