Friday, July 16, 2010

கட்டுரை

[இவ் விடயம் 08. 07. 2010, (செவ்வாய்), தமிழீழ நேரம் 11:58க்கு பதிவு செய்யப்பட்டது]

பலநூறு ஆண்டுகள் வடமாகாணத்தின் தலைநகரமாகத்திகழ்ந்த யாழ்ப்பாணம் இரண்டாமிடத்திற்கு பின்தள்ளப்பட்டு. வடமாகாணத்தின் தலைநகராக கிளிநொச்சி நகரம் மாற்றம்பெற இருப்பதாக தெரியவருகிறது, இதனால் கொழும்புக்கு அடுத்து இரண்டாவது இராசதானியாக கிளிநொச்சி உருவாகுமென்றும் தெரியவருகிறது.

வடமாகாணத்திற்கான அனைத்து நிர்வாக அலகுகளும் இதுவரையில் யாழ்நகரில் இருந்துவந்தது. ஆனால் இனி அனைத்து நிர்வாக அலகுகளும், கிளிநொச்சி அறிவியல் நகரத்தில் இருந்தே செயற்படுத்தப்படுமென அறியப்படுகிறது. இந்த மாற்றத்திற்கேற்ப அனைத்து நிர்வாக அலுவல்களுக்குமான இடங்கள் கிளிநொச்சியில் தெரிவு செய்யப்பட்டிருப்பதாகவும், முதற்கட்டமாக ஆளுநர் அலுவலகமும், வடமாகாணத்திற்கான மாகாண பொதுநிர்வாக செயலகமும் அடுத்தமாதம் முதலாம் திகதிமுதல் கிளிநொச்சியிலில் இருந்த செயற்படுத்தப்படவுள்ளதாகவும், வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளதாக அறியப்படுகிறது.

பின்னணியில் வஞ்சகமான மோசமான சதித்திட்டம் எதுவும் இல்லாதபட்சத்தில். கிளிநொச்சிக்கு பெருவளர்ச்சியும் மக்களின் கல்வி பொருளாதாரமேம்பாடும். கிளிநொச்சி நகருக்கு நல்ல அந்தஸ்தும் கிடைப்பதற்கான வாய்ப்பு, நிச்சியம் உண்டாகுமென்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.

இந்த மாற்றங்களின் தொடர்ச்சியாக வடமாகாண பிரதம செயலாளர் அலுவலகம் உட்பட , மற்றும் அனைத்து அமைச்சுக்களின் உப பிரிவுகளும் கிளிநொச்சி நகருக்கு மாற்றப்படுமெனவும் குறிப்பிடப்படுவதாக மேலும் தெரியவருகிறது. இது தொடர்பான விரிவான செயற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் வன்னி நிலப்பரப்பு இருந்த காலத்தில், கிளிநொச்சியிலேயே அவர்களது செயற்பாட்டு மையங்கள் இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழருக்கு குடிப்பதற்கு பச்சைத்தண்ணீர் கொடுப்பதற்கு விரும்பாத சிங்கள அரசாங்கம். தமிழரின் நலனுக்காக கிளிநொச்சியை சுயநலனெதுமில்லாமல் கட்டியெழுப்புமா. என்றகேள்வி எல்லோரிடமும் எழுவது தவிர்க்கமுடியாது. அவசரப்பட்டு திட்டத்தை ஏற்றுக்கொண்டுவிட்டால் கிளிநொச்சி வெகுவிரைவில் அனுரதபுரமாவது தடுக்கமுடியாதுபோய்விடும்.

கிளிநொச்சியை வடமாகாணத்தின் தலைநகராக மாற்றப்போகும் பின்னணியில். பல வக்கிரநோக்கங்களும் சதியும் மறைக்கப்பட்டிருக்கிறது. அபிவிருத்தி கட்டியெழுப்புதல் என்றகோசத்துடன். தனது வஞ்சகத்திட்டங்களை எந்த எதிர்ப்புமில்லாமல் மிக இலகுவாக நிறைவேற்றிக்கொள்ள. திட்டமிட்ட அரசின் தந்திரவலைவிரிப்பின் காய்நகர்த்தல்தான் கிளிநொச்சியின் தலைநகரத்திட்டம்.

யாழ்ப்பாணத்தை தலைநகராக வைத்துக்கொண்டு தனது திட்டத்தை நடைமுறைப்படுத்துவது. பல முட்டுக்கட்டைகளை தோற்றுவிக்கும் என்பதையுணர்ந்து இத்திட்டம் வரையப்பட்டிடுக்கிறது. யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக இருந்துவரும் கல்விச்சமூகம். தொடர்ச்சியாக இருந்துவரும் நிர்வாகக்கட்டமைப்புக்கள் இத்திட்டத்திற்கு ஒத்திசைவாகாமல் முரண்பட வாய்ப்பிருப்பதை தெரிந்து. திட்டமிட்டு யாழ்ப்பாணதொடர்பை விலக்கி கிளிநொச்சி தெரிவுசெய்யப்பட்டிருக்கிறது.

ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் யாழ்சமூகம் முரண்டுபிடிக்குமானால் குடாநாட்டுக்கு தலைநகராக யாழ்ப்பாணமும், வன்னி பெருநிலப்பரப்புக்கு கிளிநொச்சியையும் தலைநகராக்கி பிரித்தாழும் தந்திரமும் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்படலாம். கடந்த ஆட்சியின்போது ஸ்ரீலங்கா அரசு. பாராளுமன்றத்தின் மரபு சட்டம் எதையும் கணக்கிலெடுக்காமல். 225 பா உ, உள்ள பாராளுமன்றத்தில் 110 பேருக்கு மேற்பட்டவர்களை பேருக்கு மந்திரியாக்கி. தனதுதிட்டங்களை தடையின்றி நிறைவேற்றிய அனுபவம் ராஜபக்க்ஷவுக்குண்டு,

என்ன எதிர்ப்பு தோன்றினாலும் காலவிரையமில்லாமல். தமிழர் நலிந்துபோயிருக்கும் இந்தக்காலத்தை பயன்படுத்தி. தமிழரின் அடர்த்தியை இல்லாமல்ச்செய்து. ஒரு கலப்பினத்தை உருவாக்கிவிட வேண்டுமென்பதே. ராஜபக்க்ஷவின் இரத்தத்தில் ஊறிப்போயிருக்கும் படுமோசமான வஞ்சக திட்டமாகும். சுத்தீகரிக்கப்பட்டிருக்கும் கிளிநொச்சி மாவட்டம். போரின் மூர்க்கத்தால் முற்றுமுழுதாகப்பாதிக்கப்பட்டு. ஆளரவம் குறைந்த வெட்டைவெளியாகவே இருந்துவருகிறது. நிர்வாகக்கட்டமைப்புக்கள் எல்லாம் புதிதாக தொடங்கவேண்டிய நிலையில் இருப்பதால். இந்த சந்தற்பத்தைப்பயன்படுத்தி அந்த இடத்திலேயே தனது வலைப்பின்னலை தொடங்குவது ராஜபக்க்ஷ அரசாங்கத்திற்கு மிகவும் எளிதாகவிருக்கும்.

இந்த யோசனை சிங்கள ஆட்சியாளர்களின் நீண்டகாலத்திட்டமாகவிருந்தாலும். இன்றயநிலை மிகவாய்ப்பான வசதியானகாலமாக சிங்கள ஆட்சியாளருக்கு கிட்டியிருக்கிறது. இதுவரை இழுபட்டுவந்த மீழ்குடியேற்றத்தின் திட்டமிட்ட காலதாமதமும் இதற்காகவே திட்டமிட்டு உருவாக்கப்படிருந்ததே தவிர வேறொன்றுமில்லையென்று அடித்துக்கூறமுடியும்.

மக்களை நீண்டகாலமாக முகாம்களுக்குள் அடைத்து வைத்திருப்பதால். மக்களின் மனச்சோர்வு கிடைப்பதைப்பெற்றுக்கொள்வோம் என்கின்ற விரக்திநிலை. எல்லாம் இத்திட்டத்திற்கு பேருதவிபுரிகிறது. இத்திட்டத்திற்கு ஒட்டுக்குழுக்களின் பூரண ஆதரவு அரசாங்கத்திற்குண்டு. இத்திட்டத்தினால் ஒருசிலதமிழ் ஒட்டுக்குழுக்கள் பலனடைந்தாலும். தமிழினம் இரண்டாம் நிலைக்குத்தள்ளப்பட்டு சிங்கள ஆதிக்கம் மேலோங்குவதற்கான நிலை இயல்பாகவே தோற்றம்பெறம் வாய்ப்புண்டு.

கிளிநொச்சியில் மீழக்குடியேற்றப்பட்ட ஒருபகுதிமக்கள் தொழில்வாய்ப்பற்றவர்களாக ஐநா, வின் உலகஉணவுத்திட்ட உலர் உணவுப்பொருட்களை பெற்று. இராணுவக்காவலரண்களுக்குள்ளே கஸ்டஜீவனம் நடத்துபவர்களாகவே இருந்துவருகின்றனர்.

தொழில்துறை தொடங்குவதற்கான பொருளாதரம். கடைகண்ணி நடத்துவதற்கான கட்டடவசதி. கட்ற்தொழில் செய்வதற்கான புறச்சூழல். போக்குவரத்து தொழிலுக்கான நல்ல வாகனவசதி எதுவும் அவர்களிடமில்லை. குடியிருப்பதற்கான குடிசைகளை அமைப்பதற்கே மிகவும் கஸ்ட்டநிலையில் கூடாரங்களுக்குள் ஒதுங்கிவாழ்கின்றனர்.

இடைத்தங்கல்முகாம்கள் எனப்படும் கம்பிவேலிக்குள் இருக்கும் இலட்சக்கணக்கானவர்கள். மற்றும் முகாம்களைவிட்டுவெளியேறி உறவினர் நண்பர்களைசார்ந்து இருப்பவர்கள். தங்கள் இடங்களுக்கு திரும்பிச்செல்லவே விரும்புகின்றனர். ஆனால் புனரமைப்புக்கான நிவாரண உதவி ஏதுமில்லாமல் தமது இடங்களுக்குச்சென்று வாழமுடியாத கையறுநிலையில் வெறுங்கையுடனேயே இருக்கின்றனர். இந்தப்பலயீனங்கள் அனைத்தும் சிங்கள அரசுக்கும் இணைந்தியங்குபவர்களுக்கும் மிகவும் வாய்ப்பான வசதியாக தடையில்லா பெருவெளியாகக்காணப்படுகிறது.

இத்திட்டம் நிறைவேறும் பட்சத்தில் கிளிநொச்சியின் மனிதவள ஆண்தொழிலாளிகளின் பற்றாக்குறை, இயல்பாக வெளியிலிருந்து சிங்கள கட்டடத் தொழிலாளிகள் உள்ளீர்க்கப்படுவதற்கு சாதகமாகவே இருக்கிறது. நிர்வாக உத்தியோகத்தர்கள் வெற்றிடம், மற்றும் உத்தியோகத்துக்கு தகுதியான கற்றவர்களின் பற்றாக்குறையையும் பயன்படுத்தி அதிகாரிகளிலிருந்து சிற்றூழியர்கள்வரை நிச்சியம் சிங்களவர் நியமிக்கப்படும் ஆபத்தும். ஆரம்பத்தில் தற்காலிக இடங்களில் தங்கப்போகும் சிங்கள உத்தியோகத்தர்கள்
தொடர்ச்சியாக குவாட்டர்ஸ்களை அமைத்தும் வாடகைவீடுகளிலும் தங்கி நாளடைவில் தமது குடும்பங்களையும் உள்வாங்கவே இயல்பாக விரும்புவர். பின் மலிவுவிலையிலும் அரசகாணிகளிலும் வீடமைத்து நிரந்தரமாகக்குடியேறும் வாய்ப்புமுண்டு.

இன்றய கிளிநொச்சியின் வறுமையைப்பயன்படுத்தி கடைகண்ணி வணிகவளாகங்களை அரசாங்க உதவியுடன் சிங்களவர்த்தகர்கள் கைப்பற்றி படையெடுப்பதற்கான சாத்தியங்கள் நிறையவே காணப்படுகின்றன. கடற்றொழில்களில் சிங்கள்வர்கள் ஏற்கெனவே இறங்கியுமிருக்கின்றனர் கிளிநொச்சியில் இயங்கிவந்த தனியார் பஸ் உரிமையாளர்கள் எல்லாவற்றையும் இழந்து நிற்பதால் போக்குவரத்து அனைத்தும் சிங்களமயமாகுமென்பதில் சந்தேகமில்லை.

சிங்கள அரசு தனக்குகிடைத்திருக்கும் இந்த அரிய சந்தற்பத்தை எவரது எதிர்ப்பையும் எதிர் நோக்காமல் உலகநாடுகளின் ஒப்புதலோடு மிகமிகச்சுலபமாக இயல்பாக ஈடேற்ற. கிளிநொச்சி, வடக்கின் அரசியல் தலைநகரமாகிறது.

அரசாங்கத்திற்கு கிடைத்திருக்கும் இன்னுமொரு சாதகமான அம்ஷம். கிழகேயிருக்கும் முல்லைத்தீவையும் தென்மேற்கே மன்னாரையும். தெற்கே வவுனியா. வடக்கே யாழ்ப்பாணத்தையும் கண்காணிக்கும். கேந்திர முக்கிய்த்துவம் வாய்ந்த நகரமாக. பரபரப்பான தூங்கா நகரமாக கிளிநொச்சி அமையும். ஏற்கெனவே முல்லைத்தீவில் அமைக்கப்பட்டுவிட்ட இராணுவ, விமானப்படை கடற்படைத்தளங்கள். கிளிநொச்சியை கண்காணிக்க மிகவும் வசதியாக அமையும். முறிகண்டி, கொக்காவில் பகுதிகளில் ஏற்கெனவே இராணுவத்தினர் குடியிருப்புக்களை அமைக்கத்தொடங்கியிருந்தாலும். அவை விஸ்த்தரிக்கப்படும் வாய்ப்பும் உண்டு. இரணைமடு குளத்தையொட்டிய காடுகளும் இராணுவத்தினருக்கு ஒதுக்கப்படலாம். இந்தப்பின்புலத்தில் இரணைமடு ,முறிகண்டி, கொக்காவில், பழையமுறிகண்டி, பனிக்கங்குளம் , பகுதிக்காடுகள் சிங்களக்குடியேற்றத்திற்கான பிரதேசமாக அமைவதற்கான சூழல் நிறையவேயுண்டு இக்கருத்தை எவரும் உதாசீனப்படுத்தமுடியாது.

அழிந்துபோயிருக்கும் கிளிநொச்சி மாவட்டத்தை மீழ்கட்டுமானத்துடன் புனரமைக்கப்போகிறோம். வளமுள்ள கிளிநொச்சியை நலிந்துபோன தமிழ்மக்களுக்காக வடக்குமாகாணத்தின் விஷேட தொழில்நகரமாக தலைநகரமாக. இதயசுத்தியுடன் அறிவித்து அபிவிருத்திசெய்யப்போகிறோம் என்றபிரச்சாரத்தின் மூலம். எல்லோரது வாயும் அரசாங்கத்தால் மூடப்படும்,

உலகநாடுகளின் நிதியுதவியுடன் அந்நாடுகளின் அங்கீகரத்தையும் பெற அரசாங்கத்திற்கு இத்திட்டம் சாதகமாக அமைந்திருக்கிறது. அடுத்த ஆண்டு வடக்கின் மாகாணசபைக்கான தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தங்களும் திரைமறைவில் நடந்து கொண்டுடிருக்கும் சூழலில். பேச்சுவார்த்தை அதிகாரப்பகிர்வு போன்றவற்றின் காலத்தையிழுத்தடித்து போக்குக்காட்டி விரைவில் மாகாணசபைக்கான தேர்தலை நடத்துவதற்கும். உளவியல் ரீதியாக தமிழ் அரசியல்க்கட்சிகள் தேர்தலில் ஆர்வப்படுவதற்மும் கிளிநொச்சியின் தலை நகராக்கமும் ஒரு காரணமாக அமையும்.

தேர்தலொன்றை அறிவித்துவிட்டால் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் போட்டியிடுவதற்கான முனைப்புடனிருப்பதாக கருத்துக்கள் வெளிவந்திருந்ததை அரசாங்கமும் நன்கு அறிந்தேயிருக்கிறது, பேச்சுவார்த்தையிழுத்தடிப்புக்கு மத்தியில் மாகாணசபைக்கான தேர்தல் நிச்சியம் அறிவிக்கப்படும். ஆனால் அதற்கிடையில் பல குழுக்கள் அரசாங்க ஆதரவுடன் தேர்தலில் இறங்கப்பட்டு தமிழர் தேசியக்கூட்டமைப்பு சிறுபான்மைக்கட்சியாக மாகாணசபை தேர்தல்மூலம் மாறுமாகவிருந்தால் கிளிநொச்சி விரைவாக சிங்களமயமாவது எவராலும் தடுக்க முடியாமல்ப்போகலாம்.

புலம்பெயர் தேசங்களில் புலனாய்வினரும் ஒட்டுக்குழுக்களும் ஊடுருவி விடாமல் விழிப்புடனிருக்கும்படி அறிவுறுத்தும் புலம்பெயர் அரசியல்ச்சமூகமும். நாடுகடந்த தமிழீழத்திற்கான அரசாங்கமும். கிளிநொச்சி தாய் மண் சிங்களமயமாவதை தடுக்க உடனடியாக என்ன செய்யப்போகிறது என்பதே இந்த நிமிடத்தின் இந்த நொடியின் படபடப்பான எதிர்பார்ப்பும் கேள்வியுமாகும்,

- நெருடலுக்காக கனகதரன்

No comments: