நாம் தமிழர்
2010-06-25 02:00:41
சுட்டெரிக்கிறது
கோடை
சொட்டு தண்ணிர் இல்லாமல்
கானல் மட்டும்.,
சாக்கடைச்சேற்றுக்குள்
மொக்கு தவளை இரண்டு
வக்கு வக்கென்று
இடைவெளியில்லாமல்.
நிசப்த வேளையிலும்,
தண்ணீர் என்று ஏமாந்து
திரும்பிய பூச்சி புழு குருவிகள்
தவளைகளை சபித்துக்கொண்டு
ஏக்கத்தோடு வானத்தை நோக்கி
ஏதோபாடுகின்றன,
வழிப்போக்கன்
சாக்கடைப்பக்கம் ஒதுங்கி
வெற்றிலைச்சாற்றையும்
சிறுநீரையும்
கலந்துவிட்டு போகிறான்,
எதையும் பொருட்படுத்தாமல்
தவளைகளின் சத்தம் மட்டும்
சாக்கடைக்குள்
தொடர்ந்து குதூகலமாக
வக்கு வக்கென்று,
- - - - - - - - - - - -
கனகதரன்,
No comments:
Post a Comment