Monday, April 30, 2012

அழுக்குத்தனமான அரசியல்வாதி.

தமிழ் மக்களின் மொழி மீதான வேட்கை,  இன ஒடுக்குமுறைகளுக்கு எதிரான மக்கள் கிளர்ச்சி,  உரிமைகளை அடைவர்தற்கான மக்களின் ஒன்றுசேர்ந்த போராட்டம்,
அங்கு ஏற்பட்டுவிட்ட சில தொய்வுகள், ஜனநாயகத்தின்மீதான மக்களின் நம்பிக்கை, உலக அரசியல் ஏற்படும் மாறுபாடுகள், இவற்றை தமக்கு சாதகமாக பயன்படுத்தி , தம்மீதுள்ள அத்தனை அயோக்கியத்தனங்களையும் களைந்துவிடலாம் என்பதும்,  வீழ்ச்சியிலிருந்து எழுந்துவிடலாம் என்பதும் தமிழகத்து அரசியல்வாதிகள் சிலரின் தந்தரமாக நீண்டகாலமாக இருந்து வருகிறது.

இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் வளர்ச்சியடையாத நாடுகளிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளிலும் இப்பேர்ப்பட்ட  தந்தரமான அசிங்கங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. இருந்தும் அனைத்தையும் தாண்டும் விதத்தில் இந்தியா இருந்து வருகிறது.

தமிழ்நாட்டில் ஒன்றுக்கொன்று சளைக்காத, பதிவு செய்யப்பட்ட கொள்ளையர் கூட்டங்களாக பெருத்த அரசியல்கட்சிகள் பல இருந்து வருகின்றன. பாமர மக்கள் நிறைந்த கிராமங்களின் கூட்டான இந்தியாவில், மிக இலகுவாக இக்கட்சிகள் சமூகத்தை ஊடுருவி உட் புகுந்து, ஏமாற்று பரப்புரை விளம்பரங்கள் செய்வதன்மூலம் பாமரமக்கள் ஏமாற்றப்பட்டு, அரசியல் வியாபாரிகள் பெருத்த பணக்காரர்களாக குறிப்பிட்ட சில குடும்பங்களே இருந்து வருகின்றன.

அரசியலை வியாபார அடிப்படையில் கட்சி (முதலாளி) கள் கைக்கொண்டு வருவதால் பதவி பேரங்களிலும் ஊழல்களிலுமே  குறியாக இருக்கின்றன. ஒரு பெருத்த ஊழல் ஒருகட்சியை மக்கள் வெறுத்து  புறக்கணித்துவிட்டால், மற்ற ஒரு ஊழல்க்கட்சி ஆட்சியை பிடித்து இன்னுமொரு மாபெரும் ஊழலை தோற்றுவிக்கிறது. வேறு தெரிவுகளும் மக்களுக்கு தெரியாமல் மீண்டும் இன்னுமொரு ஊழல் கட்சியை ஆட்சிக்கட்டில் ஏற்றிவிடுகின்றன,.  பாமர மக்கள் உளவியல் ரீதியாக அடிபட்டு போய்விடவேண்டிய சூழலை தோற்றக்கூடிய பொறிகளாக ஊடகங்கள், தொலைக்காட்சிகள், அனைத்தும் இந்த அரசியல் வியாபாரிகளின் கைகளிலேயே வீழ்ந்து கிடக்கும் சாபக்கேடு தொடர்ந்துகோண்டே இருக்கிறது.

தமிழ்நாட்டில் அரசியலில் கருணாநிதியை ஜெயலலிதா வசை பாடுவதும், ஜெயலலிதாவை கருணாநிதி வசை பாடுவதும் மட்டுமே கொள்கை முழக்கங்களாக இருந்துவருகிறன. இந்த வசைபாடல்களில் இருக்கும் நியாய அநியாயங்களை கட்சியில் இருக்கும் கற்றவர்கள் கூட  பகுத்துணர்ந்து பார்ப்பதாகவும் தெரியவில்லை. தத்தம் தலைவர்கள் பாடும் வசைவுகளை கைதட்டி வரவேற்று ஏற்றுக்கொள்ளும் அடிமை நிலையிலேயே கட்சியின் உயர்மட்ட  உறுப்பினர்களும் தொண்டர்களும் காலாகாலமாக இருந்து வருகின்றனர்.

கட்சி தலைவர்களின் சுயநலன் தாண்டி,, மனதில் நிலைத்து நிற்கும் விதமாக வரலாற்றில் நிலைக்கும்படியான துணிச்சலான சமூக அரசியல் மாற்றங்களை இந்த அரசியல்க்கட்சிகள் ஒருபோதும் செய்ததில்லை. இனி செய்யப்போவதுமில்லை.

சுதந்திரத்தின் பின் "திராவிட நாடு" என்ற ஹிந்தி எதிர்ப்பு சுலோகத்தில் ஈர்க்கப்பட்ட தமிழகத்து மக்கள் திராவிடக்கட்சிகளை நம்பி அணிசேர்ந்தனர். ஒருகாலகட்டத்தில் ஹிந்தியும் திராவிடமும் இணைந்து இரண்டறக்கலந்து அரசியல் செய்தபோது மக்களுக்கு ஒரு மீழ முடியாத ஏமாற்றம், திகைப்பு, இருந்தும் திராவிடக்கட்சிகளின் தலைமைகளின் வாய் ஜால நியாயப்படுத்தல்கள், அனைத்தையும் மறக்க வைத்தது, அல்லது மக்கள் மந்தைகள் ஆக்கப்பட்டனர்.

ஈழப்போராட்டம் ஆரம்பமானபின் ஒருகாலகட்டத்தில் ஈழப்போராட்டத்திற்கு ஆதராவான நிலைகொண்ட  கட்சிகளை ஆட்சியில் அமர்த்தவேண்டும் என்ற மனநிலை தமிழ் நாட்டின் மக்கள் மனதில் தோன்றியிருந்தது. 2007/ 2008/ 2009, களில் ஈழமக்கள் போரில் பட்ட கொடுந் துயரங்களை தமிழக மக்கள் மறக்க தயாராகவுமில்லை. போர் முடிந்த 2009 க்குப்பின் ஈழ மக்களின் அழிப்பு, தமிழகத்தில் வாழும் 90 விழுக்காடு மக்களை மிகுந்த வேதனையில் தள்ளியிருக்கிறது. ஈழத்துக்காக தொடர்ந்து போராடவேண்டும், போர்க்குற்றவாளியை தண்டிக்க வேண்டும் துணைபோனவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்ற மனநிலை அனைவரிடமும் ஒரு வெறியாகவே பற்றியிருப்பதை எவரும் மறுப்பதற்கில்லை.

அந்த வேகத்தை வெளிப்படையாக காண்பிக்கமுடியாதவாறு தாம் சார்ந்த கட்சி தலைமைகள் தடையாக இருப்பதையும்  மீறி 2011சட்டசபை தேர்தலில் துரோகிகளுக்கு சரியான பதிலடி கொடுக்கப்பட்டிருந்தது. திமுக. காங்கிரஸ்.  பமக. விசி.கட்சிகள் இப்போ அதல பாதாளத்தில் கிடக்கின்றன.

மக்களது மனநிலையின் வெளிப்பாடுதான் தேர்தல்களில் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கும் என்ற யதார்த்த உண்மை புரியப்பட்டு,  பின்பற்றிவந்த கொள்கைகளை மூடி மறைத்து மாற்றம் செய்வதாக காட்டிக்கொள்ள வேண்டிய தற்காப்பு தந்தர நிலையை இப்போது கட்சி தலைமைகளுக்கு தோற்றுவித்து, அரசியல்வாதிகளின் சுயரூபத்தை காலம் மக்களுக்கு இனங்காட்டி சிரித்து நிற்கிறது.

கடைசியாக தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கருணாநிதியின் திமுக, காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடைந்ததற்கான காரணம் குடும்ப ஆதிக்கம், "2ஜி அலைக்கற்றை ஊழல் என்பதாகத்தான் அதிகமான ஊடகங்கள் நியாயம் கற்ப்பித்தன. தோல்விக்கு காரணமான உண்மை நிலை ஈழப்பிரச்சினைதான் என ஒரு  சில ஊடகங்கள் தெரியப்படுத்தியிருந்தாலும் அதை சற்று மந்தப்படுத்தியே ஊடகங்கள் நியாயப்படுத்தி வருகின்றன.

ஈழப்படுகொலை களத்துக்கு துணைபோன துரோகத்தின் வெளிப்பாடுதான் 2011 தேர்தல் படுதோல்வி என்பது தோல்வியுற்றவர்களுக்கும், வாக்களித்தவர்களுக்கும் மட்டுமே தெரியும். பத்திரிகை ஊடகங்கள் எத்தனை பம்மாத்து பண்ணினாலும் மக்களின் மனவோட்டத்தின் எழுச்சியை நீண்ட நாட்களுக்கு மறைக்கவும் முடியாது. ஈழ மக்களின் முள்ளிவாய்க்கால் படுகொலைகளில் ராஜபக்க்ஷ மற்றும் சோனியாவுடன் கைகோர்த்து முதல்த்தரமாக நின்று பங்களித்த கபட வேடதாரி "அழுக்கு மனிதன்" கருணாநிதி, என்பதை உலகின் எல்லைவரை அறியப்பட்டிருந்தது.

திமுக, மற்றும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக என்றைக்கும் ஈழப்போராட்டத்தை ஆதரித்தவர்களாக இருந்ததில்லை.  தேர்தல்காலங்களிலும், சந்தற்பவாத நேரங்களிலும் திரிவுபட புரியாத சித்தாந்தங்களை எடுத்துவைத்து ஈழ ஆதரவு கட்சிகளை இணைத்து ஆட்சியை கைப்பற்றிவருகின்றனர்.

திமுக சார்ந்த ஊடகங்கள் அதிமுக சார்ந்த ஊடகங்கள், காங்கிரஸ் சார்ந்த ஊடகங்கள் மற்றும் நடுநிலைபோல காட்டிக்கொள்ளும் ஊடகங்கள் அனைத்தும் அதிமுக, திமுக இரண்டு கட்சிகளும்தான் தமிழகத்தின் முடிக்குரிய கட்சிகள் என்பதை தீர்மானிக்கின்றன. அந்த இரண்டு கட்சிகளும்தான் மாறி மாறி ஆட்சியை கைப்பற்றிக்கொள்ளும் என்பது எழுதப்படாத விதியாக ஊடகங்களால் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆட்சி அமைக்கக்கூடிய அவ் இரு கட்சிகளின் கொள்கைகளை மீறி தமிழக மக்களின் ஈழ ஆதரவு உணர்வுகளை அப்பட்டமாக வெளியிட்டு ஆட்சியாளர்களின் கோபத்துக்குள்ளாகி அழிந்து போக பத்திரிகை ஊடகங்கள் தயாராக இல்லை.

சன் ரிவி, ஜெயா ரிவி, மேகா ரிவி, கப்ரன் ரிவி, ராஜ் ரிவி, போன்ற தமிழகத்தில் முன்னணியில் இருக்கும் தொலைக்காட்சிகள் அனைத்தும் கட்சி சார்பு கொண்டு செயற்படுகின்றன. அவை கட்சி சார்பு கொண்ட ஊடகங்கள் என்பதும் மக்கள் அறியாததுமல்ல. இந்து, தினமலர், தினகரன், தினமணி, தினத்தந்தி,போன்ற நாளிதழ்கள், ஏதோ ஒரு கட்சி சார்ந்தும் சந்தர்ப்பவாதமாக ஆட்சியாளர்களை சார்ந்தும் ஆரிய சிந்தனையுடனும் செயற்பட்டு வருகின்றன இந்தப்பத்திரிகைகள் எப்போதும் ஈழ எதிரிகளாகவே வாந்தி எடுத்து வருபவை.

ஜூனியர் விகடன், குமுதம் றிப்போட்டர், நக்கீரன், இந்தியா ருடே போன்ற புலனாய்வு பத்திரிகைகள் வியாபார நோக்கோடு சில ஈழச்செய்திகளை வெளியிட்டாலும், ஆட்சி மாற்றங்கள் நிகழும்போது ஆளும் கட்சியை அடியொற்றியே செய்திகளை பிரசுரித்து வருகின்றன. 

சமீபத்தில் சில நாட்களாக திமுகவின் தலைவர் கருணாநிதி வெளியிட்டுவரும் ஈழப்பாச அறிக்கைகள் உணர்வுள்ள தமிழகத்து ஈழ ஆதரவாளர்களையும் தமிழகத்து மக்களையும் மிகுந்த கொதிநிலைக்கு தள்ளியிருக்கிறது. அதன் வெளிப்பாடாக நெடுமாறன் ஐயா அவர்கள், வைகோ அவர்கள், உணர்வுள் இளந் தமிழன் சீமான் ஆகியோர் தமது வெப்பத்தை வெளிக்காட்டியிருந்தனர்.

இருந்தும் கருணாநிதி தனது பிரித்தாளும் அரசியல் சாணக்கியத்தில் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதாகவே தெரிகிறது.ஒரு பொய்யை திரும்பத்திரும்ப கூறிக்கொண்டிருந்தால் மக்களை நம்பவைத்து ஏமாற்றிவிடலாம் என ஹிட்லரின் உதவியாளர் கோயபல்ஸ், நம்பியிருந்ததாக வரலாற்றில் கறுப்பு பதிவு உண்டு. கருணாநிதியின் கபட வித்தைகளை ஒரு சிலர் இன்றைய தருணத்தில் நம்பினாலும் வரலாற்றில் கோயபல்ஸின், தகுதி கருணாநிதிக்கு உண்டாகும் என்பதில் எந்தச்சந்தேகமும் இல்லை.

இன்று 30 ஏப்.2012, கருணாநிதி தலைமையில் அறிவாலயத்தில் "டெசோ" என்ற முன்னர் செயற்படாமல் முடங்கிக்கிடந்த அமைப்பை மறு அங்குரார்ப்பணம் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார். வெளியிலிருந்து ஈழ ஆதரவாளர்கள் எவரும் இணைந்துகொள்ள மாட்டார்கள் என்பதை உணர்ந்து தனது ஆதரவு வட்டத்துக்குள்ளேயே உறுப்பினர்களையும் தெரிவு செய்திருப்பதாக கருணாநிதி அறிவித்திருக்கிறார். உறுப்பினர்களாக அன்பழகன், வீரமணி, சுப- வீரபாண்டியன் ஆகியோர் தெரிவு செய்யப்பட இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இவர்கள் அனைவரும் ஈழமக்களின் மனக்கசப்புக்கு ஆளானவர்கள் என்பதும் கருணாநிதியின் ஊதுகுழல் குரலாக பேசுபவர்கள் என்பதும் கடந்த காலத்தில் அறியப்பட்டவை.

:டெசோ அமைப்புக்கு இப்போ என்ன தேவை இருக்கிறது?..

அன்றைய முதலமைச்சர் எம்ஜீஆர் அவர்களின் முழு ஆதரவு விடுதலைப்புலிகளுக்கு இருந்ததை பொறுக்கமுடியாமல் அன்று இருந்த சிறிய இயக்கங்களை ஒன்றாக்கி ஈழத்தமிழ் போராளி இயக்கங்களிடையே பிரிவினையை தோற்றுவித்து புலிகள் இயக்கத்தை ஓரங்கட்டும் முயற்சியாக கருணாநிதியின் கபட தந்திரத்தில் உருவாக்கப்பட்டது "டெசோ" என்ற அமைப்பு.  இருந்தும் அந்த அமைப்பு செயல்ப்பட்டதாக எந்த அடையாளங்களும் இல்லை.

1, இன்று டெசோ அமைப்பை பிரதிநிதுத்துவப்படுத்திய இயக்கங்கள் எதுவும்  உலகத்தில் எந்த இடத்திலும் ஈழத்தமிழர்களுக்காக தனித்து நின்று ஆயுதம் தாங்கி, அல்லது குரல் கொடுத்து இயங்கும் நிலையில் இருப்பதாகவும் ஈழத்தமிழனான எனக்கும் தெரியவில்லை.  ஈபிஆர்எல்எfப் இயக்கத்திலிருந்து சுரேஸ் பிரேமச்சந்திரனும். ரெலோ இயக்கத்திலிருந்து சிவாஜி லிங்கம்/ செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் தேசிய அரசியல் நீரோட்டத்துடன்  இணைந்து தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் தெரிவான தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் ஐக்கியமாகிவிட்டனர். புளொட் சித்தாத்தனும் தனித்து இயங்கினாலும் தேசிய கூட்டமைப்பின் அரசியல் சித்தாந்தத்தை பின்பற்றுவதாகவே தெரிகிறது. மேல் குறித்தவர்களும் கருணாநிதியின் டெசோவுக்கு ஆதரவளிப்பார்கள் என்றும் சொல்லமுடியாது.

2,  80 களில் ஆயுதம் ஏந்தி போராடும் நிலையில் விடுதலை இயக்கங்கள் இருந்தன. அந்த நேரங்களில் ஒரு சமன்பாட்டை தோற்றுவிக்கும் முகமாக (அது தேவையற்றதாக இருந்தாலும்) நல்ல நோக்கத்துடன் ஒரு கட்டமைப்பை அன்றைக்கு ஏற்படுத்தியிருந்தாலும் இன்றைக்கு டெசோ வை நிறுவவேண்டிய தேவை கருணாநிதிக்கு என்ன இருக்கிறது?. ஈழ ஆதரவு தளத்தை தமிழகத்தில் உடைத்து தனது வீழ்ச்சியிலிருந்து எழும்பிவிட முயற்சிக்கும் ஒரு கபட உத்தியே அன்றி டெசோ என்ற பூச்சாண்டி வேறு எதற்கும் உதவப்போவதுமில்லை.

3, இன்றைக்கு உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் ஈழத்தமிழர்கள் விடுதலை புலிகளை பின்பற்றியே அணிதிரண்டிருக்கின்றனர். உலக நாடுகளும் நேரடியாக விடுதலைப்புலிகளை மட்டுமே ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகள் என்று பிரகரித்து பேச்சுவார்த்தை நடத்தின, நடத்திக்கொண்டிருக்கின்றன. வாழும் வீட்டில் கொள்ளி சொருவும் விதமாக டெசோ என்னும் குளப்பல்த் திட்டம் கருணாநிதிக்கு ஒரு சொற்ப மன திருப்தியை அளித்தாலும் பலன் எதுவும் கிடைக்காது என்பதே பின்னர் தெரியவரும்.

90 வயதை அண்மித்திருக்கும் ஒரு பெரியவரான கருணாநிதி சாகும் காலத்தில் என்றாலும் இப்படியான நஞ்சு விதைகளை தொடர்ந்து விதைத்துக்கொண்டிருக்காமல் தனது சொந்த வேலையில் கவனம் செலுத்துவதே நல்லது என்பது ஈழத்தமிழர்களின் நீண்ட நாளைய கருத்தாக காணக்கூடியதாக இருக்கிறது.

ஐநாவில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தின் பின்னர்தான் கருணாநிதி "ஈழம்" என்ற சொற்பதத்தையே பாவிக்கிறார்   அதற்கு முன்னர் ஒருபோதும் கருணாநிதி ஈழம் என்ற சொல்லை விரோதமான ஒன்றாகவே பார்த்து வந்திருக்கிறார். போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது ராஜபக்க்ஷவை கோபப்படுத்தாமல் இலங்கைத்தமிழர்கள் நடந்து சிங்கள அரசு தருவதை பெற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறிய கருணாநிதி இன்று ஈழம் கிடைக்கும்வரை போராடுவேன் என்று அறிக்கையில் விளையாடுவது எவ்வளவு "அழுக்கான நடத்தை" என்பதை ஏன் உணரவில்லை.

"ஈழத் தமிழர்கள் மீது இன்றைக்குக் காட்டும் உணர்வுபூர்வமான அக்கறையை இலங்கையில் போர் நடைபெற்றபோதே காட்டியிருக்கக் கூடாதா என்ற ஆதங்கம் உலகெங்கும் பரவிக் கிடக்கும் தமிழர்களுக்கு இருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இறுதிப் போரின்போது ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டதைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம் என்று எண்ணுகின்றனர். ஆனால் கேட்பவர்களுக்கே தெரியும், விடுதலைப் புலிகள் வெற்றியைப் பெறாமல் வீழ்ந்து போனதற்குக் காரணம் ஓரணியாய் நின்று போரிடாததுதான். சகோதர யுத்தம் வேண்டாம் என்று காலில் விழாத குறையாக ஒவ்வொரு அணியினரின் கரம் பிடித்து கெஞ்சிக் கேட்டும், அவர்களின் உள்பகையைத் தீர்க்க முடியவில்லை. (கருணாநிதி)"

இதற்கு சரியான பதிலை செந்தமிழன் சீமான் ஜூனியர் விகடனுக்கு அளித்த பேட்டி வீடியோவாகவும் (யூ ரியூப்பில்) வெளிவந்திருந்தது.  அதை கருணாநிதியும் அவரது கூட்டாளிகளும் நிச்சியம் பார்த்திருப்பார்கள் என்று நம்பலாம்.

அடுத்து ஈழமக்களின் முன் எழுந்திருக்கும் பூதாகரமான கேள்வி ஈழம் அமைப்பதற்கு இந்த கருணாநிதி யார்?. யார் அவருக்கு இந்த அதிகாரத்தை கொடுத்தது? ஈழத்தில் பிறந்த தமிழர்களில் எவருக்கும் கருணாநிதியின்மீது ஆத்திரமும் வெறுப்புமே தவிர நல் அபிப்பிராயம் கனவிலும் கிடையாது. 2009 போரின்போதும் அனீதி இழைக்காதீர்கள் படுகொலைகளுக்கு துணை போகாதீர்கள் என்று அதிகாரத்தில் இருந்த கருணாநிதியை மன்றாடி கேட்டுக்கொண்டது தவிர   போராட்டத்திற்கு எவரும் பங்களிக்கும்படி அழைக்கவில்லை. கருணாநிதியின் அதே நிலைப்பாட்டு கொள்கையில் இருந்துவரும்  டக்கிளஸ், கருணா, கேபி, பிள்ளையான் ஆகியோர் கூட கருணாநிதியின் கருத்துக்கு ஒத்துப்போவார்களோ தெரியவில்லை.

கருணாநிதி ஒருகாலத்தில் மக்களால் மதிக்கப்பட்ட அரசியல்வாதியாக இருந்தவர்தான், அவரது தந்திர அழுக்கு நடத்தை அத்தனையையும் புரட்டிப்போட்டு கருணாநிதியை இவ்வளவு கீழ்த்தரமாக இறக்கி பாதாளத்தில் விட்டிருக்கிறது. கருணாநிதி இயலாமையின் இறுதிக்கட்டத்தில் இப்போ எடுக்கும் எந்த ஆயுதமும் அவருக்கு எந்தவகையிலும் உதவப்போவதில்லை அவரது அழுக்கு தனமான குணம்ஷத்தை இன்னும் வெட்டவெளிச்சமாக்கும் என்பதே காலத்தின் கோலமாக முடிந்து மறைவார்.

ஈழதேசம் இணையத்திற்காக,
கனகதரன்.

Saturday, April 28, 2012

கலைஞர் அய்யா... தயவு செய்து பேச வேண்டாம் ! சிரித்தபடி கேட்கும் சீமான் - ஜுவி பேட்டி !

 
தமிழ் ஈழம் அடையும் வரை ஓய மாட்டேன்� என்றும் 'தமிழ் ஈழத்துக்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்� என்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி திடீர் என அறிவித்து இருப்பது தமிழ் உணர்வாளர்களையும் அதிர வைத்துள்ளது. 'ஆட்சியில் இருந்த காலத்தில் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது கருணாநிதி பேசுவது நாடகம்� என்று சொல்ல ஆரம்பித்து உள்ளார்கள். இந்த நிலையில், நாம்தமிழர் கட்சியின் தலைவர் சீமானிடம் பேசினோம். ''ஆற்ற முடியாத காயங்​களோடும் வலியோடும் பெரும் சோகத்தோடும் இருந்த எம் மக்கள் இப்போதுதான் மெள்ள விடுபட்டு வருகின்றனர். துக்கமான காட்சியை அடுத்து, ஒரு நகைச்சுவைக் காட்சியைப் போல, கலைஞர் அய்யா திடீ​ரென ஈழத்தைப் பற்றி பேசி இருக்கிறார். அவரு​டைய திடீர் 'தமிழீழ� ஆர்​வத்தைப் பார்த்து ஒவ்வொரு தமிழனும் வாய்விட்டுச் சிரிக்கிறான். அவரால் எப்படி இதுபோல அறிக்கை வெளியிட முடிகிறதோ ?

இறுதிப்போர் நடந்துகொண்டு இருந்த​போது, 'ஈழம் இனி சாத்தியம் இல்லை� என பேசினீர்கள். 'மத்திய அரசின் நிலைப்​பாடுதான் மாநில அரசின் நிலைப்பாடு� என்றீர்கள். ஒன்றுபட்ட இலங்கைக்குள், மாநில சுயாட்சியும் அதிகாரப் பரவலும் வேண்டும் என்பதுதான் அவரது கொள்கையாகச் சொன்னார். 65 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில், மிகப்பெரிய வலிமையான கட்சியை நடத்தும் கலைஞரின் முழக்கமே 'மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி� என்பதுதான். அதையே அவரால் அடைய முடியவில்லை. இந்தியாவிலேயே இந்த நிலைமை என்றால், இலங்கை ஜனநாயக நாடே இல்லை. அது, பவுத்த மதத் தீவிரவாத நாடு. அங்கு ஒரு சிங்கள பவுத்தனைத் தவிர யாருமே தலைமை அமைச்சராக வரமுடியாது.

அங்கே எப்படி மாநில சுயாட்சி கிடைக்கும்? இதை உணராத கலைஞர், மாநில அதிகாரம் பெற வேண்டும் என்று ஈழத் தமிழனுக்கு அறிவுரை சொன்னார். இப்போது, 'ஈழத்தை அடையும் வரை ஓயமாட்டேன்� என்று சொல்கிறார். நியாயப்படி, அவர், 'ஈழத்தை அழிக்கும் வரை ஓயமாட்டேன்� என்றுதான் சொல்லி இருக்க வேண்டும். அண்ணன் திருமாவளவன், சென்னையில் ஈழஆதரவு மாநாடு நடத்தியபோது, அதற்கான விளம்பரங்களில் 'ஈழம்� என்ற வார்த்தையைக் காவல்துறையைக் கொண்டு அழித்தவர் நீங்கள். அதை மறைக்க முடியுமா? ஈழம் என்ற சொல் இருக்கக் கூடாது என்​பதற்காக, இலங்கைத் தமிழர்... இலங்கைத் தமிழர் என்று பேசி​வந்தவர். தொடர்ச்சியாக, என்னை ஐந்து முறை சிறைப்படுத்தினீர்களே, நான் என்ன பேசினேன்?
இன்றைக்கு நீங்கள் பேசியிருப்பதைத்தானே, அன்றைக்கு நான் பேசினேன்? 'இறுதிப்போர் காணொளி காட்சியைப் பார்க்க முடியவில்லை� என்கிறீர்கள்.

இந்தக் காணொளிக் காட்சியை, அச்செடுத்து, வீடுவீடாகக் கொடுத்த​போது, கொடுத்தவர்களைத் தேடித்தேடி சிறைப்​பிடித்தீர்களே ஏன்? நீங்கள் இன்றைக்குச் சொல்லும் ஈழ விடுதலைக்காகத்தானே தம்பி முத்துக்குமார் தீக்குளித்தான்? ஏன் நீங்கள் அவனுக்காக ஒரு இரங்கல்கூட தெரிவிக்க​வில்லை? அவன் மரணத்துக்காகத் திரண்ட இளைஞர்களின் எழுச்சியை, கல்லூரி விடுதிகளை மூடி ஏன் அடக்கினீர்கள்? பெரும் ஊடகம் வைத்திருக்கிற நீங்கள் அதைப்பற்றி சிறு செய்திகூட அதில் வெளியிடவில்லையே, ஏன்? இன்றில்லாவிட்டாலும் நாளை மலரும் என்று நீங்கள் சொல்லும் ஈழத்துக்காகத்தானே, வழக்கறிஞர்கள் போராடி​னார்கள்? ஏன் அவர்களைக் காவல்துறையை விட்டு வெறிபிடித்த மாதிரி அடித்தீர்கள் ?

'ஈழம் அடையும்வரை ஓயமாட்டேன்� என்று, என் தலைவர் பிரபாகரன், அந்த ஈழ மண்ணில் கருவியோடு நின்றுகொண்டு இருந்தபோது, ஏன் நீங்கள் சொல்லவில்லை? பல்லாயிரக்கணக்கான மாவீரர்கள் சிந்திய ரத்தம் வீண்போகாது என்று இப்போது சொல்கிற நீங்கள், 'மாவீரர்களின் கல்லறைகளைக் கட்டினதைவிட வேற காரியத்துல கவனம் செலுத்தியிருக்கலாம்� என்று அப்போது சொன்னது ஏன்? 'தேவையில்லாமல் ஈழத்தைப் பற்றிப் பேசி தமிழகத்தில் வீணாக அரசியல் செய்கிறார்கள்� என நீங்களும் உங்கள் பிள்ளைகளும் நாடாளுமன்றத் தேர்தலில் பேசினீர்களா, இல்லையா? அந்த மக்களின் மீது இவ்வளவு அக்கறையும் பற்றும் கொண்டிருக்கிற நீங்கள், போர்க்குற்ற வீடியோவை உங்களின் ஊடகத்தின் மூலம் வெளியிடாதது ஏன்? இறுதிப் போரிலே, எதிரியால் உருக்குலைக்கப்பட்ட தமிழ் உறவுகளைக் காப்பாற்ற, தமிழகம் முழுவதும் குருவி சேர்த்ததுபோல, அத்தியாவசிய மருந்துப் பொருட்களைச் சேகரித்தார்களே, தமிழ் இளைஞர்கள். அவர்களை எல்லாம் வேட்டையாடி சிறப்பு முகாம்களில் அடைத்து வைத்தீர்களே, ஏன்?

'சிங்களர்கள் கோபப்படும்படி நடந்துகொள்ளக்​கூடாது� என்று அப்போது சொன்னீர்கள். இன்று, நீங்கள் ஈழத்துக்காகப் பேசுவதற்கு கோத்தபய ராஜ​பக்ஷே கோபப்படுகிறாரே? ஈழத் தமிழர்களுக்காக கண்ணீராக வருகிறது என இன்று சொல்கிறீர்களே. அன்று இறுதிப் போரில் தமிழ்க் குழந்தைகள் கரிக்கட்டையாகக் கிடந்த படங்கள் வரும்போது, பத்திரிகையின் அதே பக்கங்களில், உங்கள் பிள்ளை மதுரையில் பிறந்தநாள் கேக் வெட்டிக் கொண்டாடிய படமும் வந்ததே ஐயா? மறக்க முடியுமா எங்களால்? இன்றும் நா கூசாமல் சகோதர யுத்தம் என்று பேசுகிறீர்கள். உங்கள் பிள்ளைகளுக்கு இடையில் நடப்பது என்ன அன்பு முத்தமா? அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் ஒன்றாக இருக்க முடியுமா? எம்.ஜி.ஆரை ஏன் நீக்கினீர்கள்? வைகோவை ஏன் நீக்கினீர்கள்?

ஐயா, கலைஞரே. நீங்கள் தமிழ் இனத்துக்கு இனியாவது நல்லது ஏதாவது செய்யலாம் என நினைத்தீர்கள் என்றால், இதுபோல பேசாமல் அமைதியாக இருங்கள். நீங்கள் இருக்கும் திசைபார்த்து வணங்குகிறோம்'' எனச் சீற்றத்துடன் முடித்தார், சீமான்.

இதற்கு கருணாநிதி என்ன பதில் சொல்வாரோ?

இரா. தமிழ்க்கனல்.

 நன்றி அதிர்வு.

 

Thursday, April 26, 2012

தமிழ்நாடு செங்கல்ப்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம் சார்பாக சர்வதேசத்திடம் முறையிடவேண்டுமா?

இலங்கையில் போருக்கு முன்னயகாலங்களில்  சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் உள்ளவர்களை  குற்றப்பத்திரிகை பதிவு செய்தபின் அவர்களை பிணையில் செல்ல அனுமதிக்கவேண்டும். அவர்கள் குடும்ப உறுப்பினர்களுடன்   சகசமான வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டு நீதிமன்றத்தில் வழக்கை சந்திக்கலாம் என்பதுதான் சர்வதேசத்தின் நிலைப்பாடு.  இலங்கை அரசு நடைமுறையில் வேறு விதமான சித்தாந்தத்தை கைக்கொண்டாலும் வெளிப்படையாக சர்வதேசத்தின் கருத்தை மறுக்க முடியாமல் இருந்துவருகிறது.

ஸ்ரீலங்காவில் சிறைகளில் எத்தனைபேர் அடைக்கப்பட்டிருக்கின்றனர் என்ற கணக்கு வெளிப்படையாக எவருக்கும் தெரியாமலே இருந்து வருகிறது. சந்தேகத்திற்கிடமான முறையில் தடுத்து வைத்திருப்பவர்களை பிணையில் விடும் பட்சத்தில் விடுதலைப்புலிகள் என சரணடைந்தவர்கள் எவ்வளவுபேர் இருக்கின்றனர் என்ற கணக்கை உலகத்திற்கு காட்டவேண்டிய சிக்கல் அரசாங்கத்துக்கு இருப்பதாலும், தமிழர்களின் தேசியப்பிரச்சினையை தீர்வுக்கு கொண்டுவந்துவிடக்கூடாது என்ற நோக்கம் ராஜபக்க்ஷ தரப்பினருக்கு உள்ளூர இருப்பதாலும் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டவர்கள் பல பத்து ஆண்டுகள் சிறையில் வாடிவருகின்றனர்.

அந்தநாட்டின் கொடுங்கோல் ஆட்சியாளர்களின் துவேஷமும், புத்த துறவிகள்-சிங்களவர்களின் மனநிலையும் அதற்கு துணையாக இருக்கும் என்பதால் ஆட்சியாளர்களிடம் பேசுவதால் எந்தப்பலனும் கிடைக்கப்போவதில்லை. சர்வதேச தலையீடு ஒன்றுமட்டுமே இனி வரும் காலங்களில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும்.

இலங்கையில் அப்படியென்றால் தமிழ்நாட்டிலும் கைதிகள் சார்பாக சர்வதேச தலையீடு தேவை என்ற நிலை தோன்றியிருக்கிறது.  ஈழத்திலிருந்து அகதிகளாக தமிழ்நாட்டுக்கு தப்பிச்சென்று தஞ்சமடைந்தவர்களை  தேசத்துரோகிகள் போல சித்தரித்து எந்த முகாந்திரமும் இல்லாமல் பல ஆண்டுகள் சிறப்பு தடுப்பு முகாம்களில் அடைத்தி சித்திரவதை செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் பூந்தமல்லியிலும் செங்கல்பட்டிலும் சிறப்பு முகாம் என்ற பெயரில் இலங்கைத்தடை முகாம்களை மிஞ்சி நிற்கும் சித்திரவதை கூடமாக மூன்று முகாம்கள் செயற்பட்டு வருகின்றன. பெயரளவில் மட்டும் முகாம் என அழைக்கப்படும் இந்த இடங்கள் அடிப்படை வசதிகள் அற்றவை. இங்கு அடைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்கள் பலர் நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்டு குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டவர்களாகவும் இருந்தபோதும் யாரையோ திருப்திப்படுத்துவதற்காக தமிழக அரசால் பல ஈழத்தமிழர்கள் இந்த சிறப்பு முகாம் எனும் சித்திரவதைக்கூடங்களில் துன்பப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.

இவர்கள்மீது பெருத்த தேசத்துரோக குற்றச்சாட்டுக்கள் எதுவும் இல்லை.  2007 -2009  காலங்களில் ஈழத் தமிழர்கள் மீதான சிங்கள அரசின் கொலைவெறித் தாக்குதலில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஈழத்தில் கொல்லப்பட்டு, பலர் காயமடைந்தபோது அவர்களுக்கான அத்தியாவசிய  உயிர்காக்கும் மருந்துகளை தமிழகத்திலிந்து இலங்கைக்கு கடத்த முயன்றதாக பலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்திருப்பதாக தெரிகிறது.   அதே போல, அத்தியாவசிய பொருட்களான பற்ரறி, டோர்ச் லைட், சூரிய ஒளியில் இயங்கும் விளக்குகள், பெட்ரோல், டீசல் மற்றும் என்ஜின்கள் ஆகியவற்றை கடத்தியதாகவும், பீடி, போன்றவற்றை கடத்தியதாகவும் பலர் கைது செய்யப்பட்டு மேற்படி முகாம்களில் அடைக்கப்பட்டனர்.

சென்னை சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்ற வாலிபரை பட்டப்பகலில் சுட்டுக்கொன்ற டக்கிளஸ் தேவானந்தாவை, இரத்தின கம்பளம் விரித்து இருகரம் கூப்பி வரவேற்கின்றார் பாரதப்பிரதமர் மன்மோகன் சிங். கொலைக்குற்றவாளி ராஜபக்க்ஷவை அரச விருந்தினராக பெருத்த விழாக்களுக்கு பிரதம விருந்தினராக அழைக்கப்படுகின்றார்,. டக்கிளஸ் தேவானந்தா தேடப்படும் கொலை குற்றவாளியாக நீதிமன்றம் பிடியாணையும் பிறப்பித்திருந்தது. அவைபற்றி எந்தவிதமான எதிர்வினையையும் இந்திய மத்திய அரசோ தமிழக மானில அரசோ காட்டி பெரிது படுத்தவில்லை.

சமீபத்தில் இந்திய பாராளுமன்ற பிரதிநிதிகள் சிலர் எதிர்க்கட்சி தலைவர் சுஸ்மா சுவராஜ், தலைமையில் இன்பச்சுற்றுலாவாக இலங்கை சென்று திரும்பியிருக்கின்றனர். 2009ல் கருணாநிதியின் கபட பணிப்பின் பேரில் கனிமொழி தலைமையில் சென்று ராஜபக்க்ஷவுடன் குலாவி பரிசுப்பொருட்கள் வாங்கி வந்த அதே நிலைப்பாட்டை ஒற்றி பயணம் "திருப்திகரமாக" அமைந்தது ராஜபக்க்ஷ தீர்வுதிட்டத்திற்கு ஒத்துக்கொண்டிருக்கிறார் என அறிக்கை வெளியிட்டு ராஜபக்க்ஷ புகழ் பாடி எம்பீ,க்கள் குழு கலைந்துவிட்டனர்.

அவர்களது உள்நாட்டில் செங்கல்ப்பட்டிலும் பூந்தமல்லியிலும் அடைபட்டுக்கிடக்கும் ஈழத்தமிழர்கள் நிலைபற்றி சுற்றுலா குழுவில் பங்குபற்றிய தமிழக காங்கிரஸ்-கொம்யூனிஸ்ற் உறுப்பினர்கள் இதுவரை எந்த முயற்சியும் செய்யவில்லை.

இன்று அரசியல் அனாதையாக்கப்பட்டு செய்வதறியாது திகைத்து நிற்கும் கருணாநிதி என்ன காரணத்தினால் ஆட்சி கட்டிலிருந்து தூக்கி வீசப்பட்டார் என்பதை இப்போ நன்கு அறிந்து, ஈழமே தனது மூச்சு என்று மூச்சுக்கு முன்னூறு அறிக்கை விளாசி வருகிறார். சில நாட்களுக்கு முன் தமிழீழம் கிடைக்கும்வரை போராட்டம் தொடருமென தன்னாரவாரமாக அறிக்கை வெளியிட்டார். கடைசியாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் காந்திய வழியில் ஈழம் கிடைக்கும்வரை போராடப்போவதாக முழங்கியிருக்கின்றார்.

'போரட்டம்'  சோனியா காந்தி வழியா, கரம்சந்த் மோகன்லால் காந்தி வழியா என்பதை அவர் குறிப்பிடவில்லை. இன்று இவ்வளவு துள்ளி குதிக்கும் கருணாநிதி 2011 ஆட்சியிலிருக்கும்வரை செங்கல்ப்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாமிலிருந்த கைதிகள் நடத்திய தொடர் சாத்வீக போராட்டத்திற்கு சிறு அசைவைக்கூட காட்டி அவர்களுக்கு உதவவில்லை.

இன்றய முதல்வர் ஜெயலலிதா கூட மத்திய அரசின் மனநிலையை நோகடிக்காமல் நழுவல்ப்போக்கில் நகர்வதாகவே தெரிகிறது. செங்கல்பட்டு முகாமில் உள்ளவர்களில்  17 பேர் உண்ணாவிரதம் இருந்து மயக்க நிலையை அடைந்து இருக்கிறார்கள்.  சந்திரகுமார் என்ற கைதி நீர் கூட அருந்தாமல், தனது உண்ணாவிரதத்தை துவங்கியிருந்தார். அவர்களின் கோரிக்கை எல்லாம்  மற்ற முகாம்களில் இருக்கும் தங்களுடைய உறவினர்களோடு தங்களை சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்பது மட்டுமே.

இலங்கையில் வாழமுடியாத நெருக்கடியான சூழலில் மூன்றாம் நாடு ஒன்றுக்கு தப்பிச்செல்ல பொருளாதார வசதி இல்லாதவர்கள், தங்களிடமிருக்கும் நகை நட்டுக்களை அடகு வைத்து சிறு தொகையை செலுத்தி தமிழ்நாட்டுக்கு அகதிகளாக செல்வது வழக்கமான ஒன்று.

அகதியாக நாடுகடந்து செல்பவர்கள் பாஸ்போட்டை பயன்படுத்துவதும் மிகவும் குறைவானது, அல்லது கள்ள பாஸ்ப்போட்டை பயன்படுத்துவதுமுண்டு. வளர்ந்தநாடுகள் இவற்றை புரிந்துகொண்டு குதர்க்கம் செய்யாமல் தஞ்சம் கொடுத்து வருகின்றன. ஆனால் தமிழகத்து சிறப்பு முகாமில் அடைபட்டு கிடப்பவர்கள் சிலர்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு பாஸ்போட் இல்லாமல் நாட்டுக்குள் பிரவேசித்ததே குற்றமாக பதியப்பட்டிருக்கிறது. அடுத்து பீடி கடத்தியதும் ராஜ துரோகமாக காட்டப்பட்டிருக்கிறது.

தஞ்சம் கோரும் ஒருவரை "எதிலி" என்ற சொல் பதத்தால் விளிக்கப்படுவதுண்டு. அனைத்தையும் இழந்த ஒருவரே எதிலி ஆவார். கருணாநிதி ஆனாலும் சரி முதலமைச்சர் ஜெயலலிதா ஆனாலும் சரி மாற்று கட்சிகளை சார்ந்த எவரானாலும் சரி இவற்றை புரிந்து கொண்டு முதலில் செங்கல்ப்பட்டு, பூந்தமல்லி சிறப்பு (சித்திரவதை) முகாம்களில் துயருறும் மனிதர்களை மனிதர்களாக மதித்து மனிதாபிமானத்துடன் சகச வாழ்வில் கலக்க ஆவன செய்யவேண்டும்.

ஈழதேசம் இணையத்திற்காக.
கனகதரன்.

Sunday, April 22, 2012

இந்திய இராணுவத்தின் போர் குற்றங்களை யார் கேட்ப்பது ?


அமெரிக்காவுடன் இணைந்து இந்தியா தாம் ஒரு மாபெரும் ஜனநாயகவாதிபோல தன்னைக் காட்டிக்கொள்கிறது. இலங்கையில் நடைபெற்ற போர்குற்றங்களை விசாரிக்கவேண்டும் என அமெரிக்க ஏகாதிபத்தியம் பிரேரணை கொண்டுவர அதனை பவ்வியமாக ஏற்றுக்கொண்ட இந்திய அரசு, அதன் இராணுவம் இழைத்த போர்குற்றங்கள் உலகிற்குத் தெரியாது என்று எண்ணிவருகிறது. குறிப்பாக இந்திய அரசின் ஜனநாயக அடக்குமுறைகளை மேற்குலக நாடுகள் கண்டுகொள்வதே இல்லை. இந்தியா ஒரு பெரும் ஜனநாயக நாடு என்ற போர்வைக்குள் வைத்திருக்கவே அது விரும்புகிறது. இந்தியாவின் வளர்ச்சியும் ஏற்றுமதியையும் அவர்கள் பகைத்துக்கொள்ள விரும்பவில்லை !

இந்திய அரசு ஆயுதம் ஏந்தாத நக்ஸல் போராளிகள் மீது நடத்தும் தாக்குதல்கள், பழங்குடி மக்கள் மற்றும் ஆதிவாசிகள் மீது நடத்தும் தாக்குதல்கள் என்ப பற்றி அமெரிக்கா பிரித்தானியா போன்ற நாடுகள் நன்கு அறிந்துவைத்துள்ளது. இருப்பினும் அவர்கள் இதுகுறித்து பேசுவதே இல்லை. இங்கே நீங்கள் பார்ப்பது ஈழத்தில் இந்திய இராணுவத்தின் கொடுமை என்று நினைத்துவிடவேண்டாம். இது சாட்சாத் இந்திய இராணுவம் தான், ஆனால் தன் மக்கள் மீதே இவ்வாறு நடந்துகொள்கின்றனர்.





நன்றி அதிர்வு.

Friday, April 20, 2012

Thursday, April 19, 2012

துண்டு போட்டு இடத்தைப்பிடிக்க கருணாநிதியாரின் அடுத்த தந்திர நாடக வசனம்!

சிந்திய குருதியும், தியாகங்களும் வீண் போகாது, ஈழத்தமிழர்களுக்கு தனிநாடு உருவாகும் – கருணாநிதி

ஈழத்தமிழர்கள் சிந்திய குருதியும், செய்த தியாகங்களும் வீண்போகாது, தமிழர்களுக்குத் தனிநாடு ஒரு நாள் உருவாகும் என்று கூறியுள்ளார் திமுக தலைவர் மு.கருணாநிதி.
தனி ஈழம் அமைப்பதற்கு ஐ.நா தலையீட்டுடன் பொது வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு வரவேற்புத் தெரிவித்து, கருத்து வெளியிட்டு இரண்டு நாட்களில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“உலகெங்கும் வாழும் தமிழர்களின் காதுகளில் தனித் தமிழீழம் விடுதலைப் பாடலாக ஒலிக்கிறது.

சிறிலங்காவில் தமிழர்கள் சிந்திய குருதியும் செய்த உயிர்த் தியாகங்களும் வீண் போகாது.

நாளை இல்லாது போனாலும்,தமிழீழம் ஒரு நாள் உருவாகும்" என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Tuesday, April 17, 2012

ஆளில்லாத கடையில் ரீ ஆத்தி வடையும் சுட்டு ஆள் பிடிக்க கருணாநிதி முயற்சி.

 

தனி ஈழம் கிடைக்க இந்திய அரசு தேவையான ஆதரவும் அழுத்தமும் தர வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில்,

´தனி ஈழம்´ வழங்குவதற்கு தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கை வரவேற்கத்தக்கது.

ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தலையீட்டின் பேரில் இதைப் போல பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஒருசில நாடுகள் தனி நாடுகள் என்ற அங்கீகாரத்தைப் பெற்றிருக்கின்றன என தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்தி, அந்த வாக்கெடுப்பு முடிவின் அடிப்படையில் ´தனி ஈழம்´ கிடைப்பதற்கு ஐக்கிய நாடுகள் மன்றம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

அதற்கு நமது இந்திய அரசு தேவையான ஆதரவும் அழுத்தமும் தர வேண்டும் என தன் கேள்வி பதில் அறிக்கையில் கலைஞர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் செயல்படும் ஒபாமாவுக்கான தமிழர்கள் என்ற அமைப்பு ஒன்று, தனி ஈழம் குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அமெரிக்க அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது.

´தமிழ்ஸ் பார் ஒபாமா´ என்ற அந்த அமைப்பின் பிரதிநிதிகள், அமெரிக்க அமைச்சக துணை செயலாளர் ராபர்ட் ஓ பிளாக்கை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதோடு மட்டுமல்லாமல், வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.