சிந்திய குருதியும், தியாகங்களும் வீண் போகாது, ஈழத்தமிழர்களுக்கு தனிநாடு உருவாகும் – கருணாநிதி
ஈழத்தமிழர்கள்
சிந்திய குருதியும், செய்த தியாகங்களும் வீண்போகாது, தமிழர்களுக்குத்
தனிநாடு ஒரு நாள் உருவாகும் என்று கூறியுள்ளார் திமுக தலைவர் மு.கருணாநிதி.
தனி ஈழம் அமைப்பதற்கு ஐ.நா தலையீட்டுடன் பொது வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு வரவேற்புத் தெரிவித்து, கருத்து வெளியிட்டு இரண்டு நாட்களில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“உலகெங்கும் வாழும் தமிழர்களின் காதுகளில் தனித் தமிழீழம் விடுதலைப் பாடலாக ஒலிக்கிறது.
சிறிலங்காவில் தமிழர்கள் சிந்திய குருதியும் செய்த உயிர்த் தியாகங்களும் வீண் போகாது.
நாளை இல்லாது போனாலும்,தமிழீழம் ஒரு நாள் உருவாகும்" என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment