Monday, January 30, 2012

திரும்பவும் இறந்த உடலை தூக்கிக்கொண்டு வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது.


கூட்டமைப்பின் தேவை தனிநாடே அவர்களுக்கு இல்லை அதிகாரம்; தெரிவுக்குழுவின் விருப்பே தனது விருப்பமும் என்கிறார் ஜனாதிபதி
news
 அரசியல் தீர்வொன்றை வழங்குவதில் நாடாளுமன்றத்தின் பெரும் பான்மை விருப்பமே எனது விருப்பம். 13 பிளஸ் என்ற எனது நிலைப்பாடு புதிய தீர்மானமல்ல. இதனை நான் அன்றிலிருந்து கூறிவருகிறேன். தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பினருக்குத் தனிநாடு ஒன்றே தேவையாக இருக்கிறது. தனிநாடு ஒன்றுக்குரிய அதிகாரத்தை நாம் கொடுக்கவே மாட்டோம். அது தான் எமது நிலைப்பாடு. இவ்வாறு தெரிவித்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.  

நேற்று நடைபெற்ற பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி மேலும் கூறியவை வருமாறு:
 
நியாயமான அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கான ஆணையை மக்கள் எனக்கு வழங்கியுள்ளனர். மஹிந்த சிந்தனையின் 54ஆம் பிரிவில் நாம் இதனைத் தெளிவாகக் கூறியுள்ளோம். இதன்படி நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. 
 
13ஆவது திருத்தம் இப்போதுள்ள விடயம் என்பதால் அதற்கு மேல் பேச்சு நடத்தத் தெரிவுக்குழுவிற்குச் செல்லவேண்டும். 13 பிளஸ் என்பது புதிய விடயம் அல்ல. இதனை முன்னர் கூட இந்தியாவிடம் நான் கூறியிரு க்கிறேன்.
 
 
 
 
* பொலிஸ் அதிகாரத்தைக் கொடுத்தால் என்னால் பெந்தரைக்கும் போகமுடியாது.
* 30 வருடகால பிரச்சினையை என் ஒருவனால் தீர்க்கமுடியாது. 
* தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பது குறித்து அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சு.
*தெரிவுக்குழுவிற்கு வருவதற்கான எண்ணமே கூட்டமைப்பிடம் இல்லை. 
* 13 பிளஸ் பற்றி அறிவிக்க கிருஷ்ணாவிடம் சம்மதித்தேன். 
* 13 பிளஸ் புதிதான விடயமல்லவே.
* இனவாதத்தைக் கக்குகின்றன தமிழ்ப் பத்திரிகைகள். 
 
 
 
 
 
13 பிளஸ் பற்றி என்னுடன் பேசிய இந்திய அமைச்சர் கிருஷ்ணா,  "அது குறித்து பகிரங்கமாக  அறிவிக்கவா'' என்று என்னிடம் கேட்டார். நான் சரி என்றேன். ஏனெனில், இது புதிய விடயமல்ல. 13 பிளஸ் பற்றி அல்லது காணி, பொலிஸ் அதிகாரங்கள் பற்றி சில அமைச்சர்கள் என்ன கூறினாலும், நியாயமான ஓர் அரசியல் தீர்வு பற்றிக் குறிப்பிட்டுள்ள மஹிந்த சிந்தனையை அவர்கள் ஏற்றுக்கொண்டிருப்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. பொலிஸ் அதிகாரத்தைக்  கொடுத்தால் என்னால் பெந்தரைக்குக்கூடப் போகமுடியாது. சம்பந்தன் வேண்டுமானால், அவரின்இடங்களுக்குச் செல்லக்கூடியதாக இருக்கும்.
 
அவர்களுக்குத் தனிநாடு ஒன்றுதான் தேவை. அவர்களின் படிப்படியான செயற்பாடுகள் இதனைத்தான் கூறுகின்றன. அன்றிருந்த அடிப்படையிலிருந்து அவர்கள் இன்னமும் விலகவில்லை. இப்போது கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர்களில் பலர் அன்று புலிகளுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புகளை வைத்திருந்தனர். கூட்டமைப்பு உறுப்பினர்களின் செயற்பாடுகளைக் கண்காணிக்கவென உறுப்பினரொருவரைப் புலிகள் நாடாளுமன்றத்திற்கு அனுப்பிவைத்திருந்தனர். இதுதான் வரலாறு.
 
என்னால் மட்டும் இயலாது
13 பிளஸ் அல்லது செனட்சபை குறித்து பேசுவதாயின், முதலில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்குப் பெயர்களைக் கொடுக்கவேண்டும். ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள் பெயர்களைக் கொடுத்துள்ளன. இதுபோல, ஐ.தே.க., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி., ஜே.வி.பி. மாற்றுக்குழு என்பனவும் பெயர்களைக் கொடுக்கவேண்டும். 
 
நாம் ஜனநாயக ரீதியில் அனைவரிடமும் பேசவேண்டும். நான் தனியே தீர்வொன்றை கொடுக்க முன்வந்தால், நிச்சயம் அதற்கு எதிர்ப்பு வரும். ஒருவர் ஒன்றைச் செய்ய முற்பட்டால் எல்லோரும் அதனை எதிர்ப்பர். அதுதானே வரலாறு. 13 பிளஸோ, 13 மைனஸோ எது வேண்டுமானாலும் என்னால் தனித் தீர்மானம் எடுக்கமுடியாது. இது தேசியப் பிரச்சினை. எனது தனிப்பட்ட பிரச்சினை அல்ல. 
 
ஊடகங்கள் இந்த விடயத்தில் பொறுப்புடன் செயற்படவேண்டும். தமிழ்ப் பத்திரிகைகள் தமிழ் இனவாதத்தைக் கக்குகின்றன. சில பத்திரிகைகள் தவறான கொள்கையில் உள்ளன. அது கூடாது. ஆட்சி மாற்றமொன்று தேவையானால், அதை தேர்தல் வரும்போது பார்க்கலாம். அதைவிடுத்து, உலகத்திற்குத் தவறான செய்திகளைச் சொல்லவேண்டாம். நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் விவகாரம் மற்றும் தீர்வு பற்றிய இறுதி முடிவை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் எடுப்பது பற்றியும் அனைத்துக் கட்சிகளையும் அழைத்துப் பேசவுள்ளோம். இன்னும் சில தினங்களில் இது நடக்கும்.
 
எல்லோருடனும் பேசுவோம்
நாடாளுமன்ற ஜனநாயகம் பற்றிப் பேசுவோர் இன்று நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்குப் பெயர்களைத் தராதது ஏன்? இது ஒருவருக்கொருவர் பேசித் தீர்வு காணமுடியாத விடயம். அனைவரும் பேசுவேண்டும். குறைந்தபட்சம் உங்களது பெயர்களை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்குக் கொடுங்கள் என்றுதான் கூறுகிறோம். புலிகள் செய்த வேலையைத்தான் கூட்டமைப்பு தொடர்ந்து செய்கிறது.
ஆனாலும் நாம் நேர்மையாக விட்டுக்கொடுத்து செயற்படுகின்றோம். 30 வருடகால பிரச்சினையை தனி ஒருவரால் தீர்க்கமுடியாது. அப்படியான தீர்வை மக்கள் ஏற்கமாட்டார்கள். மக்கள் ஏற்காவிடின் தீர்வில் அர்த்தமில்லையே. தெரிவுக்குழுவிற்கு வராமலிருப்பது பிரச்சினைக்குத் தீர்வாகாது. தெரிவுக்குழுவிற்கு வருவதற்கு அவர்களுக்கு எண்ணம் இல்லை.  
 
சிலவேளை காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதாக நாம் கூறினால் நிதி அதிகாரம் இல்லையே என்று அதையும் கேட்பர். நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையானோரின் விருப்பமே, தீர்வு விடயத்தில் எனது விருப்பமும் கூட என்று குறிப்பிட்டார் ஜனாதிபதி. 
 
நன்றி உதயன்.

Sunday, January 29, 2012

ஜெனீவாவில் அரசைக் காக்க 15 பேர் கொண்ட உயர்மட்ட குழு விரைவு.


news
ஜெனீவாவில் பெப்ரவரி மாத இறுதியில் ஆரம்பமாக உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படாமல் தடுப்பதில் இலங்கை அரசு தீவிரமாக உள்ளது. இந்தப் பணிகளுக்காக அமைச்சர்கள் பலரை உள்ளடக்கிய 15 பேர் கொண்ட குழு பல்வேறு நாடுகளுக்கும் விரையவுள்ளது. நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை இந்தக் குழு கொழும்பில் இருந்து புறப்படவுள்ளது.

இலங்கையின் இறுதிப் போரில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்காகச் சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்படவேண்டும் என்று மேற்கு நாடுகள் வலியுறுத்துகின்றன.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் மார்ச் மாதக் கூட்டத் தொடரில் இலங்கை மனித உரிமைகள் நிலைமை குறித்துப் பகிரங்க விசாரணை கோரும் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது என்ற தகவல் அரசுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த விவாதத்தை நடத்த அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றும் அரசு கேட்கப்பட்டுள்ளது. ஆனால்,அத்தகைய விவாதம் ஒன்று தேவையற்றது; அதனைத் தான் ஒருபோதும் ஏற்கப்போவதில்லை என்று ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

இருப்பினும் ஜெனீவாவில் ஏற்படக்கூடிய நெருக்கடி நிலையைச் சமாளிப்பதற்கென அமைச்சர்கள் உயர் அதிகாரிகளை உள்ளடக்கிய 15 பேர் குழு ஒன்றை அரசு அமைத்துள்ளது. இந்தக் குழுவில் அமைச்சர்கள் பீரிஸ், மஹிந்த சமரசிங்க, கெஹலிய, ஜோன் செனவிரட்ன, டிலான் பெரேரா ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

நாளை திங்கட்கிழமை இந்தக் குழுவினர் கொழும்பில்கூடி ஆராயவுள்ளனர். இலங்கை விவகாரம் குறித்த பகிரங்க விசாரணை கோரும் பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டால் அதனை முறியடிப்பதற்கான ஆதரவைத் திரட்டுவதே இந்தக் குழுவின் நோக்கம்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் உறுப்புரிமை பெற்றுள்ள லத்தீன் அமெரிக்க  நாடுகள், அரபுலக  நாடுகள் மற்றும் ஆசிய நாடுகளுக்குச் சென்று இலங்கையின் நிலையைத் தெளிவுபடுத்த உள்ளன.

இதேவேளை, இந்தக் கூட்டத் தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழர் தரப்பு நியாயத்தை எடுத்து விளக்கும் வகையில் அவர் கூட்டத்தொடரில் கலந்துகொள்வார் என்று ஆங்கிலப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மற்றொரு நகர்வாக உலகெங்கும் வாழும் புலம்பெயர் தமிழர்களைத் திரட்டி பெப்ரவரி 27ஆம் திகதி ஜெனீவாவில், போர்க் குற்றச்சாட்டை விசாரிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கு நாடு கடந்த தமிழீழ அரசும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

நன்றி உதயன்.

Friday, January 27, 2012

நிருபாமா அமெரிக்காவுக்கு காட்டிய குறளி வித்தை.

இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வு அதிக அக்கறை காட்டுகிறது இந்தியா; நேற்றுமுன்தினம் ஹிலாரியைச் சந்தித்த நிருபமா அவரிடம் நேரில் தெரிவிப்பு news
இலங்கையில் நிலைத்து நிற்கக் கூடிய காத்திரமான அரசியல்  தீர்வு ஒன்றை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு இந்தியா முழுமையான அதீத அக்கறை காட்டி வருகிறது. அதே சமயம் அமைதித் தீர்வு தொடர்பாக இலங்கையின் வாக்குறுதிகள் இந்தியாவுக்குத் திருப்தி அளிக்கின்றன.
இவ்வாறு அமெரிக்காவுக்கான இந்தியத் தூதுவர் நிருபமா ராவ், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்ரனிடம் தெரிவித்திருக்கிறார். நேற்றுமுன்தினம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தற்போதைய இலங்கையில் அரசியல் நிலைமை மற்றும் இலங்கை விவ காரத்தில் ஏனைய நாடுகளின் தலையீடுகளை அடுத்தே இவர்களின் தீடிர் சந்திப்புக்குக் காரணமாக இருக்கலாம் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
வோஷிங்டனில் கடந்த வருட இறுதியில் இந்தியத் தூதுவராகப் பதவியேற்ற பின்னர் நிரூபமாராவ், ஹிலாரியைச் சந்திப்பது இதுவே முதற் தடவையாகும் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்திய அமெரிக்க உறவுகள் குறித்தும், ஆப்கானிஸ்தான், மியன்மார் உட்பட்ட நாடுகளின் பிரச்சினைகள் குறித்தும் இதன்போது பேசப்பட்டன.  என்றும் அதேசமயம், இலங்கையின் அமைதி முயற்சிகள் குறித்தான இந்தியாவின் பங்களிப்பு பற்றியும் இதன்போது ஹிலாரி கிளின்ரன் நிருபமா ராவிடம் கேட்டறிந்து கொண்டார் என்றும் வோஷிங்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் இலங்கைப் பயணம் மற்றும் தீர்வு முயற்சிகளில் இந்தியா செலுத்திவரும் அக்கறை குறித்து ஹிலாரியிடம் இங்கு சுட்டிக்காட்டிய நிருபமாராவ், தமிழர்களுக்குத் தீர்வு வழங்குவது தொடர்பிலான விடயத்தில் கொழும்பின் உறுதிமொழி இந்தியாவுக்குத் திருப்தியளிப்பதாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.????

Wednesday, January 18, 2012

இந்திய கிருஷ்ணரின் வருகையால் தமிழர்களுக்கு அரசியல் ரீதியாக ஏதாவது நன்மையுண்டா,

  1. சென்ற ஆண்டு இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ ஒரு வேண்டுகோள் வைத்திருந்தார். அதில் ஈழத்தமிழினத்தை ஈன இரக்கமின்றி அழித்து இனப்படுகொலை செய்த நாடான ஸ்ரீலங்கா நாட்டுக்கு பொருளாதாரத்தடை விதிக்க கோரியும்,
அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்க்ஷவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டுமென்றும், தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களும் உறுதியாக இருக்கிறார், அதையே வைகோ அவர்கள் தானும் விரும்புவதாகவும் தமிழ்நட்டின் மனநிலையும் அதுவே என்றும் பல ஆதாரங்களின் அடிப்படையில் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார் அது நியாயமான வேண்டுகோளாகவும் இருந்தது.

அதைக்கேட்ட மன்மோகன் சிங். அது இயலாத காரியம் என்றும், இந்தியா அப்படியான நடவடிக்கையில் இறங்கினால்,  சீனா, ஸ்ரீலங்காவை ஆக்கிரமித்துவிடும் அதனால் இந்தியாவுக்கு ஆபத்தாக முடியும் என்று ஒரு அ'நியாயப்பாட்டை எடுத்துவைத்து மனுதர்மத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு இனப்படுகொலையை,, ஏதோ காரணத்தால் திடமாக எதிர்க்காமல் தனது இயலாமையை வெளிப்படுத்தி இந்தியாவின் பலவீனத்தை ஒப்புக்கொண்டு தனது அரசாங்கத்தின் தீர்க்கமான நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டு  கலைந்து சென்றுவிட்டார்.

இலங்கை போரின்போது போட்டி போட்டு தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் சீனா, பாகிஸ்தான், ஈரான், ரஷ்யா ஆகியவையும் இருந்தன அந்த நாடுகள் வழங்கிய ஆயுதங்கள் வியாபார நோக்கோடும் நட்புரீதியான சலுகை கட்டண அடிப்படையில் கடனாகவும் வழங்கப்படன. இந்த ஆயுதங்கள் தருவிக்கப்பட்டபோது இலங்கையுடன் இந்தியாவுக்கு இருக்கும் மொழி கலாச்சார உறவு., அவை சார்ந்த தலையிடும் உரிமை, மனுதர்மம் போன்ற காரணிகளை முன்னிறுத்தி அவற்றை மட்டுப்படுத்த வேண்டிய தார்மீக கடமை இந்தியாவுக்கு நிச்சியம் இருந்தது. ஆனால் எரியும் நெருப்பில்  எண்ணெய் வார்க்கும் விதமாக இந்தியா தன்நலனுக்காக போட்டிபோட்டு தன்பங்கிற்கும் அழிவு ஆயுதங்களை இலங்கைக்கு வழங்கியது.

ஏழு கோடி தமிழர்களை தன்னகத்தே கொண்டதால் அந்த உரிமையின் அடிப்படையில்  ஈழத்தமிழர்களின் நியாயமான போராட்டத்தை ஆரம்பத்தில் நியாயப்படுத்தி விரும்பி ஊக்குவித்த இந்தியா, அயல் நாடான இலங்கையில் இன ரீதியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு அசாதாரண நிலை உருவாகாமல் கட்டுப்படுத்தி ஒரு நீதியான அரசியல் தீர்வை நிறுவி அமைதி ஏற்ப்படுத்தக்கூடிய பொறுப்பும் வல்லமையும் இருந்தது. அதற்கான நியாயமும் உண்டு.

அப்படிச்செய்திருந்தால் உலகிலுள்ள எந்த ஒரு வல்லரசு நாடும் குறை குற்றம் காணாமல் மிகுந்த மதிப்புடன் இந்தியாவை போற்றியிருக்கும். இன்று நடைபெறும் கடற் படுகொலைகளும், பல லட்சம் மக்களின் ஈழப்படுகொலையும் தவிர்க்கப்பட்டிருக்கும். ஆனால் மாறாக இந்தியா பயங்கரவாதம் என்ற பதத்தை பாவித்து விடுதலைப்புலிகளையும் ஒரு மக்கள் கூட்டத்தையும் அழித்தது.

ஒரு அழிவிற்கு பயன்படுத்திய அதே பலத்தை பாவித்து ஒரு அரசியல் தீர்வை இந்தியா உண்டுபண்ணியிருக்கலாம். அதன்பின் வேண்டாதவர்கள் மீது தனது வல்லமையை பாவித்து சட்டப்படி நடவடிக்கையையும் எடுத்திருக்க முடியும். ஆனால் இந்தியா குறுக்குத்தனமாக நடந்து கொண்டது.

2008, 2009ல் கடுமையான இன அழிப்பின்போது, ஒருசில தமிழக அரசியல் கட்சியை சார்ந்த ஒரு சில பேர் தவிர மற்றவர்கள் அனைவரும் இலங்கயில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போரையும், மத்திய அரசின் கொள்கைகளையும் வன்மையாக எதிர்த்துக்கொண்டிருந்தனர். அந்த நேரம் இந்தியா தமிழர்கள் மீதான போரை நிறுத்துவதற்கு தானும் பாடுபடுவதாக கூறி பல தூதுவர்களையும்  பேச்சுவார்த்தைகளையும் நடத்திக்கொண்டு, மறுபுறம் தொடர்ந்து நச்சு ஆயுதங்களையும் கண்காணிப்பு கருவிகளையும் மேலாக பெருந்தொகையாக பணம் மற்றும் இராணுவ உதவியும் செய்து மனுதர்மத்தை அடியோடு மீறி நடந்துகொண்டது.

இவை அனைத்தும் எல்லோரும் அறிந்த விடயம். எனவே இந்தியா ஈழத்தமிழர் பிரச்சினையில் போர்க்காலத்திலும் சரி போர் முடிவுக்கு வந்தபின்னும் சரி ராஜபக்க்ஷவை காத்து நிற்பதில் எவ்வளவு உறுதியாக இருக்கின்றதென்பதை சொல்லி தெரியப்பட்டுத்தவேண்டிய நிலையில் உலகம் இல்லை.

ஜனநாயகத்தை மதிப்பதாக தம்பட்டமிடும் இந்தியா நியாயமாக நடந்து கொள்ளவேண்டும். அதற்கு இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையில் நீதியான மாற்றம் கொண்டுவரப்படவேண்டும். அல்லது அந்நாட்டின் அரசியல் மாற்றம் அதாவது ஆட்சி மாற்றம் நிகழவேண்டும். அவை எதுவும் நிகழாதவரை இந்திய ஆதிக்கவாதிகளால் பொதுவாக தமிழருக்கு தொடர்ந்து மோசமான விளைவுகளே காத்திருக்கிறது என்றே கருத இடமுண்டு.

அங்கு ஒரு ஆட்சிமாற்றம் உண்டாகி பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை பொறுப்பேற்றாலும், ஈழம் பற்றிய கொள்கையில் அல்லது நியாயமான தன்னாட்சி தீர்வு கொள்கையில் மாற்றம் நிகழுமா என்பதும், ஆட்சியாளர்களின் வெளியுறவு கொள்கையின் நாகரீகத்திலும், தமிழ்நாட்டின் ஆட்சியாளர்களின் குணநலனைப்பொறுத்துமே நகர்த்தல்களின் வீச்சை காணலாம்.

இன்று முதலமைச்சராக இருக்கும் ஜெயலலிதா அவர்கள் ஈழத்தமிழர்களின் ஒரே காப்பரணான விடுதலைப்புலிகளை பரம விரோதியாக கருதுபவர். திமுகவைப்பொறுத்தவரை அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தமிழர்களை காப்பதில் எந்த நோக்கமும் இல்லாதவர். அத்துடன் ஈழத்தமிழினத்தை மிக மலிவாக மதிப்பவர். தனது குடும்பநலன் கெட்டுவிடக்கூடது என்பதில் கவனம் செலுத்தி காரியம் சாதிப்பாரே தவிர அவரால் உலகத்தில் தமிழர்களுக்கு துளி நன்மை பயக்காது.

ஆனால் ஜெயலலிதா விடுதலைப்புலி இயக்கத்திலிருந்து பொதுமக்களை வேறு விதமாக பார்ப்பதாகவே படுகிறது. தமிழர்களுக்கு ஒரு நியாயமான தீர்வு வரையறுக்கப்படவேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். எது நடக்கவேண்டுமானாலும் மத்தியில் காங்கிரஸ் இருக்கும்வரை எந்த ஒரு துரும்பும் வேறு விதமாக அசைவதற்கான அறிகுறிகள் இல்லை.

இந்த நிலையில் ஸ்ரீலங்காவில் ஒரு அரசியல் மாற்றம் நிகழவேண்டுமென சர்வதேசம் விரும்புகிறது.  அங்கு நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் விசாரணைக்குட்படுத்தப்படவேண்டும் என்றும் அதற்கான சில அறிவுறுத்தல்களையும் உள்நாட்டு தமிழ் அரசியல்வாதிகளான தமிழர் தேசிய கூட்டமைப்பிற்கும் ஆளும் ராஜபக்க்ஷ தரப்பிற்கும் சில பிடிமுறைகளின் அடிப்படையில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எந்த ஒரு நல் நகர்வு நடந்தாலும் இடையூறு ஏற்படும் விதமாக இந்தியா தன்பாட்டிற்கு தலையீடு நடத்தி வருவது மிகவும் வெறுக்கத்தக்கதாகவே இருக்கின்றது.

இந்தியாவை விடவும் சீனா இலங்கையில் ஓரளவு பலமாக காலூன்றிவிட்டிருந்தாலும் அரசியல் ரீதியில் சீனா ஈழத்தமிழினத்துக்கு இடஞ்சலாக இப்போதைக்கு இல்லை. ஸ்ரீலங்காவுக்குள் இந்தியாவின் தலையீடு இருந்துகொண்டிருப்பதை சீனா பெரிதுபடுத்துவதாகவும் தெரியவில்லை. கடற்பரப்பில் சீனா தனது ஆளுமையை அகல விரித்து முக்கிய கேந்திரங்களை கைப்பற்றிவிட்டதால் எந்த எதிர்வினையையும் வெளிக்காட்டாமல் மௌனமாக பல இடங்களையும் பலப்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறது.

இன்னும் சில வருடங்களில் ஸ்ரீலங்காவில் சீனாவின் ஆதிக்கத்தை எவராலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சீனாவின் முதலீடுகள் குவிக்கப்பட்டுவிட்டன. ராஜபக்க்ஷ சீனாவை நம்புமளவுக்கு எவரையும் நம்பவுமில்லை. ராஜபக்க்ஷவின் சீனச்சார்புக்கு இந்தியாவின் திடமில்லாத்தன்மையும் நேர்மையற்ற நம்பகத்தன்மையற்ற அவர்களது அரசியல் நடவடிக்கைகளும் முக்கிய காரணியாகும்.

சட்டத்தை மதிக்காமல் புறந்தள்ளி, பொய் வாக்குறுதிகளை வழங்கி பெருவாரியான ஊழல் செய்து மன்னராட்சிபோல் பழக்கப்பட்ட இந்தியா. தொடர்ந்தும் தந்தரமாக இலங்கையை எதிர்க்காமல் உள்ளிருந்தே தமிழினத்தை காவு கொடுத்து தந்திரமாக தப்பிக்க விரும்புகிறது. அந்த நோக்கத்தின் ஒருகட்ட விஜயம்தான் வெளிநாட்டு மந்திரி கிருஷ்ணா இலங்கை சென்று ராஜபக்க்ஷ சொல்லுவதை கேட்டு குளிர்ச்சி செய்து மாட்டுப்பொங்கல் விழாவிலும் பங்குபற்றி சிறப்பித்திருக்கிறார்.

கிருஷ்ணாவின் பயணம் தமிழர்களின் பிரச்சினை தீர்வுக்கான பயணமென ஊடகங்கள் மூலம் முக்கியத்துவம் கொடுத்து  விளம்பரப்படுத்தப்பட்டன. ஆனால் தமிழர்களின் பிரச்சினைகளை கையில் வைத்து காத்திருக்கும் தேசிய கூட்டமைப்பினரின் சந்திப்பு வேண்டுமென்றே முக்கியத்துவம் குறைக்கப்பட்டிருந்தது. சந்திப்பு நிகழும்,, ஒருவேளை  சந்திப்பு நிகழாது, என்ற அளவுக்கே வேண்டுமென்றே கிருஷ்ணா கூட்டமைப்பு சந்திப்புக்கு மதிப்பு தரப்பட்டிருந்தது.

ஆனால் மறுபுறம் கூட்டமைப்பினர் விரும்பாவிட்டாலும் கிருஷ்ணர் எப்படியும் கூட்டமைப்பை சந்தித்தே திரும்பவேண்டிய தேவை தந்திரம் இந்தியாவுக்கும் ஸ்ரீலங்கா அரசுக்கும் உண்டு.

கொழும்பு சென்ற கிருஷ்ணா ராஜபக்க்ஷவையும் கூட்டி தமிழினத்துக்கே முதல் மரியாதை செய்வதுபோலவும் அதையும் மாட்டுப்பொங்கலாக்கி அரசியல் செய்து மகிழ்ந்திருக்கின்றனர்.

ஸ்ரீலங்காவுக்குள் ஊடுருவியுள்ள சீனாவின் அடர்த்தியை குறைப்பதற்கு இந்தியா தனது வல்லமையை பயன்படுத்தி வென்று கொண்டால் எவரும் சினப்படப்போவதில்லை.

தமிழர்களை களப்பலியாக்கி அரசியல் செய்வது மிக கீழ்த்தரமானதும் கண்டனத்துக்குமுரிய செயலாகும். ஸ்ரீலங்காவின் ஆட்சியாளர்கள்மீது தமிழினத்திற்கு இருக்கும் அதேயளவு வெறுப்பை இன்று இந்தியாவின் மத்திய காங்கிரஸ் அரசு பெற்றிருக்கிறது. இந்திய ஆட்சியாளர்கள் மாற்றுச்சிந்தனை கொண்டு இவற்றை ஆராய முற்படவில்லையானால் தமிழர்கள் இந்தியாவுக்கு எதிராகவும் சர்வதேச ரீதியில் போராட்டத்தை கொண்டுசெல்ல நேரலாம்.

அனைத்து அரசியல் தலைமைகளிடமும் ஆளுமை ஒரேசீராக இருப்பதில்லை. ஈழத்தமிழினத்திற்கு இன்று வாய்த்திருக்கும் அரசியல் தலைமையும் மாற்றுச்சிந்தனையின்றி அதரப்பழசான ஒரே கீறல் விழுந்த மந்திரத்தையே பாவித்து இந்தியாவை உருவேற்றிவிடலாமென ஏமாந்துகொண்டிருக்கின்றனர். அமெரிக்காவும் அவர்களை அழைத்து வேறு சுலோகத்தை சொல்லிக்கொடுத்தும் பார்த்தது. தென்னாபிரிக்காவுக்கும் சென்று கருத்து பகிர்ந்து வந்தனர். திரும்பி வந்ததும் "ஆரோக்கியமான பயணமாக அமைந்தது "வலியுறுத்தி வந்திருக்கிறோம்" என்பதை மட்டும் அவர்கள் அறிக்கையிட தவறவில்லை".

இந்தியா எதையும் பெற்றுத்தரப்போவதுமில்லை பெற்றுவிட அனுமதிக்கப்போவதுமில்லை என்பதுதான் யதார்த்தமான் உண்மை. 1980 களில் திம்புவில் தொடங்கப்பட்ட "பேச்சுவார்த்தை" முப்பது வருடங்களை தாண்டி திரும்பவும் சுப்பற்றை கொல்லை(இந்தியா)க்குள் வந்து நிற்கிறது. இனப்பிரச்சினை என்ற நிலையை தள்ளி வைத்துவிட்டு  பேச்சுவார்த்தை என்ற புள்ளிக்கு இரண்டு தரப்பையும் கொண்டு சேர்ப்பதற்கே உலகநாடுகளின் உதவி தேவைப்படுகிறது. நோர்வே, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா முயன்று தோற்றுப்போன ஒரு விடயத்தை கிருஷ்ணா முடித்துத்தருவார் என ஒரு குழந்தையும் நம்பவேண்டிய அவசியமும் இல்லை.

அதை உண்மையாக்கும் விதமாக உலகத்தால் விமர்சிக்கப்பட்டு புறந்தள்ளிய ஸ்ரீலங்கா ஜனாதிபதியின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் காணப்படும் சில விடயங்களை நடைமுறைப்படுத்தினாலே தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிடலாம் என்றும் அதற்கும் கால வரம்பு காட்டமுடியாது என்றும் ராஜபக்க்ஷவும் கிருஷ்ணாவும் கூட்டமைப்பினருக்கு சொல்லி அனுப்பியதாக கேள்வி.

யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு 49,000 வீடுகள் கட்டிக் கொடுக்க இந்தியா ரூ.1,319 கோடி நிதி அளித்துள்ளதாகவும். அதில் தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ள 50 வீடுகளை தமிழர்களுக்கு எஸ்.எம். கிருஷ்ணா வழங்குகிறார். என்றும் செய்திகள் வருகின்றன. ஆனால் 13 வீடுகள்தான் கட்டுமானம் தொடங்கப்பெற்றதாகவும், 03 வீடுகள் ஓரளவு பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாகவும் நம்பகமான செய்திகள் வருகின்றன்.

03 வீடு எங்கே 49,000. வீடுகள் எங்கே எப்போ கட்டி எவருக்கு கொடுக்கப்போகின்றனர் என்பதும், நடந்து முடிந்தால் மட்டுமே அதுபற்றி சிந்திக்கமுடியும்.  சில சைக்கிள்கள் வழங்கப்பட்டதாகவும் அவைகளில் கணிசமானவை உடனடியாக சிங்களவர்களுக்கும். மீதி ஒட்டு ஆயுதக்குழுவின் தலைவர் டக்கிளஸ் கையகப்படுத்தி சில சைக்கிள்கள் ஒரு சிலருக்கு வழங்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

பேச்சுவார்த்தை தீர்வுத்திட்டம் என்று கிருஷ்ணா கூட்டமைப்பினரை களக்கட்டையில் மாட்டி விட்டிருக்கிறார் இது காலம் கடத்தி சிங்கள குடியேற்றத்தை விஸ்த்தரித்து தமிழினத்தை அழிக்கும் உபாயமே தவிர கௌவைக்கும் உதவப்போவதில்லை.  அடுத்து மொழியை பாவித்து ஏதோ ஒரு ஏமாற்று நோக்கோடு அப்துல் கலாம்  யாழ்ப்பாணம் வரவிருப்பதாகவும் பீதி கிளப்பப்பட்டிருக்கிறது. அதற்கு  பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன். எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

போனதெல்லாம் போனாலும் வலியையும் வேதனையும் தந்தவனுக்கு தண்டனை வாங்கிக்கொடுப்பதற்கான முயற்சியை தொடர்ந்து செய்தால் பலன் கிடைக்கலாம். அதற்கான அரங்கும் நிறையவே சாதகமாக் காணப்படுகிறது.

பொருத்தமான இடங்கள் எனக் கருதக் கூடிய எந்த இடத்திலும் இராணுவ முகாம்களை அமைகின்ற உரிமை சிறிலங்கா அரசுக்கு உள்ளது என்றும். எந்த ஒரு தகுதிவாய்ந்த அதிகாரமும் வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களுக்கு வழங்கமுடியாது என்று கோத்தபாய மூலம் சொல்லப்பட்டுவிட்டது.

செத்துப்போன இந்திய துணைக்கண்டத்தின் பிரதமர் ராஜீவ், அன்றைய ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி ஜே ஆர் இருவரும் கூட்டுச்சேர்ந்து ஜூலை 29, 1987ம் ஆண்டு அன்று தமிழர்களுக்கு எதிராக ஒரு ஒப்பந்தம் எழுதினர். அந்த ஒப்பந்தம் காகிதத்தரத்தில் அப்போ இருந்து பேணப்பட்டதே தவிர அதிகாரம் எவையும் வழங்கப்படவில்லை. அன்றைக்கு முதலமைச்சராக வரதராஜப்பெருமாளை இந்தியாவே தெரிவு செய்தது. இந்தியாவுக்கு விருப்பமிருந்திருந்தால் அல்லது வல்லமை இருந்திருந்தால் அதிகாரத்தை ஒப்பந்தம் எழுதிய அன்றே பெற்றுக்கொடுத்திருக்க முடியும். கால் நூற்றாண்டு கடந்தும் காகிதத்தில் இருப்பதில் ஒன்றையும் இன்றுவரை நிறைவேற்ற இந்தியாவால் முடியவில்லை.

இன்று வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டிருக்கிறது ஒப்பந்தத்தில் உள்ள ஒரு சரத்தான 13வது திருத்தத்தில் கூறப்பட்ட சில விடயங்களையே எவராலும் சிங்களவனிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியவில்லை. காரணம் என்ன?

ஈழதேசம் இணையத்திற்காக.
கனகதரன்.

Monday, January 16, 2012

கலாம் ஏன் யாழ்ப்பாணம் வருகிறார்?

news
இந்தியா மீது தமிழர்கள் முற்றுமுழுதாக அவநம்பிக்கை அடைந்துள்ள இன்று, அப்துல்கலாம் ஏன் அவசரமாக யாழ்ப்பாணம் வருகிறார்?

அவர் வந்து சென்ற பின்னராவது ஈழத்தமிழர் தொடர்பான இந்திய நிலைப்பாட்டில் மாற்றம் ஏதாவது ஏற்படுமா? சோனியா காந்தி உள்ளிட்ட இந்தியத் தலைவர்களிடம் கலாம் இங்குள்ள தமிழ் மக்களின் உண்மையான உணர்வுகளை எடுத்துரைப்பாரா? இவ்வாறு கேள்விகளை அடுக்கினார் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.
 
வலி.மேற்கு அராலி மாவத்தை விளையாட்டுக் கழகத்தினரால் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட உழவர் விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவற்றைத் தெரிவித்தார்.அராலி தெற்கு மாவத்தை விளையாட்டுக்கழகத் தலைவர் கே.துஷ்யந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தொடர்ந்தும் கூறியதாவது,
 
 
பொங்கு தமிழ் எழுச்சி நிகழ்வைக்கொண்டாடிய நாம் இன்று பொங்கல் விழாவைக் கொண்டாடுகின்றோம். இந்த உழவர் விழா பல வீர விளையாட்டுக்களை உள்ளடக்கிய தமிழர் திருவிழா. நாம் தன்மானம் உள்ள வீரப் பரம்பரையில் உதித்தவர்கள்.
 
 
எமது இளைஞர்களுக்குப் பயிற்சிகளையும் உற்சாகத்தையும் வழங்கி நமது ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்து வைத்ததே இந்தியாதான். அதேவேளை அதே ஆயுதப் போராட் டத்தை ஒழிக்கவும் இலங்கை அரசுக்கு துணை நின்றதும் இந்தியாதான்.
 
 
இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களைச் சந்தித்த பின்னரே அரசுடன் பேசுவார் என்று முன்பு கூறப்பட்டது.ஆனால் இந்திய வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்ட உத்தியோக பூர்வ நிகழ்ச்சி நிரலில் இதனை இழுத்தடிப்புச் செய்துள்ளனர்.
 
 
இதனைச் சுட்டிக்காட்டிக் கேட்டபோது ""இல்லை, இல்லை, தமிழ்த் தேசியக் கூட்டணியினரையும் சந்திப்பார்'' என்று கூறப்படுகிறது.ஏன் இந்த கண்ணாமூச்சி விளையாட்டு. இது பெரும் சந்தேகத்தை தமிழ் மக்களிடையே எழுப்பி உள்ளது. இவ்வாறே முன்னாள் ஜனாதிபதி கலாமின் பயண மும் அவரை ஏன் இந்திய அதிகாரிகள் இங்கு அழைத்து வருகிறார்கள்? 
 
தமிழர்கள் கொல்லப்பட்ட போது வாயே திறக்காத கலாம் இப்போது இங்கு வந்து என்ன செய்யப்போகிறார். ஈழத் தமிழருக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் வடித்திருப்பாரா  இங்கே இப்போ எதைப் பார்க்க வருகிறார் கலாம்?
 
வடபகுதி மக்கள் இப்பொழுது வெள்ளைச் சீருடையணிந்து சிவில் அதிகாரி என்று காட்டிக்கொள்ளும் இராணுவ அதிகாரியின் ஆளுநரின் பிடிக்குள் சிக்கிச் சீரழிகின்றனர்.ஆட்டைக் கடித்து , மாட்டைக் கடித்து இப்பொழுது தமிழ் மக்களின் பெரும் சொத்தான கல்வியிலும் மூக்கை நுழைத்துவிட்டார் அவர்.
 
தகுதியும் திறமையும் உள்ள கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் சுதந்திர மாக செயற்பட முடியவில்லை. ஆளுநரின் அடாவடி உத்தரவு களை நிறைவேற்றும் தலை யாட்டி பொம்மைகளாக அவர்கள் நடத்தப்படுகின் றனர்.
 
அகில இலங்கை ரீதியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் மாணவன் முதலாம் இடத்துக்கு வந்துவிட்டது இவர்களுக்குப் பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள் ளது. இதனால் கல்வி வளர்ச்சியையும் சீரழிக்க முனைகின்றனர்.அரசு மாகாணக் கல்வி வளர்ச்சிக்கு ஒரு சதவீதத்தை மட்டுமே ஒதுக்கியுள்ளது. இது யானைப் பசிக்கு சோளப் பொரியை போட்டது போன் றது. எமது பெற்றோரும் பழைய மாணவர்களும் சுயமாகவே முன்வந்து எமது பாடசாலைகளுக்கும் மாணவர் களுக்கும் பெருமளவில் உதவுகின்றனர்.
 
இதனைக்கூடக் கண்டு பொறுக்க முடியாத ஆளுநர் எந்த ஒரு பாடசாலை அதிபரும் தனது அனுமதியின்றி எந்த ஒரு உதவியையும் எவரிடமும் பெறக்கூடாது எனக் கட்டளை இட்டுள்ளார் தென்னிலங்கை அரசுகள் முன்பு தமிழர்களின் கல்வி யில் கை வைத்ததாலேயே இளைஞர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அதேபோன்ற ஒரு நிலையை மீண்டும் உருவாக்க முனைகின்றார்  ஆளுநர்.  அதற்கு துணை போகின்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.
 
மீளக்குடியமர்ந்த மக்க ளுக்கு இந்திய அரசு வழங் கிய 1,500 சைக்கிள்களில் 500 சைக்கிள்களை சிங்கள வர்களுக்கு வழங்கிவிட்டார் ஆளுநர். எஞ்சிய ஆயிரம் சைக்கிள்களையும் அப்ப டியே அபகரிக்க முயன்றார் அமைச்சர் டக்ளஸ். இப் பொழுது இந்த மோசடி அம்ப லமாகிவிட்டது. இத்தகைய அடக்குமுறை களுக்கு எதிராக பாதிக் கப்பட்ட மக்கள் ஒற்றுமை யாகக் குரல் எழுப்ப வேண் டும். அஞ்சக்கூடாது.
 
நல்லிணக்கம், இணக்க அரசியல் என்று இலங்கை அரசும் அமைச்சர் டக்கிளசும் நமது முதுகில் குத்துகின் றனர். தொடர்ந்தும் நம்மை அடிமைப்படுத்துவதிலேயே இலங்கை அரசு தீவிரமாகச் செயற்படுகின்றது.அதேவேளை எமது விடயத்தில் இந்தியாவும் நேர்மையாக நடக்காதது பெரும் கவலையாகிறது. இப்படியான ஒரு சூழலில் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி யாழ் வருகின்றார். அவர் பல்லைக்கழகத் துக்கும் இந்துக் கல்லூரிக்கும் வருகை தரவுள்ளார். இந்தக் கல்விமானின் வருகை ஏதாவது ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறோம். அப்படி இல்லை எனில் வேறு எந்த இந்தியரும் வடக்கே வராத படிக்கு செய்து விட வேண் டும் என்றார் சரவணபவன்.
 
 
நன்றி உதயன்.

Saturday, January 14, 2012

வடக் குப் பிரதேசம் ஆதரவற்ற சிறுவர்களால் நிரம்பி வழிகின்றது


news
 வன்னியில் நடந்த மிகக் கொடூர மான போரைத் தொடர்ந்து வடக் குப் பிரதேசம் ஆதரவற்ற சிறுவர் களால் நிரம்பி வழிகின்றது. நாட்டின் வேறு எந்தப் பகுதியிலும் இல்லாத வகையில் வடக்கிலுள்ள 5 மாவட்டங்களிலும் 4,300 சிறுவர்கள் பராமரிப்பு இல்லங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வசதி குறைந்த பெற்றோரால் சிறுவர் இல்லங்களில் சேர்க்கப்பட்டுள்ள சிறுவர்கள் இவர்களுள் அடங்கவில்லை. 
 
நாட்டிலேயே அதிகூடிய சிறுவர் இல்லங்கள் இயங்கும் பிரதேசமாகவும் வடபகுதியே உள்ளது. 91 சிறுவர் இல் லங்கள் இங்கு இயங்குகின்றன. முறைப்படியான அனுமதி பெற்றுப் பதிவு செய்யப்படாத 44 இல்லங்களும் அவற்றி னுள் அடக்கம். 
சிறுவர் இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள சிறுவர்களில் 729 பேர் தாய், தந்தை இருவரையும் இழந்துள்ளனர். மீதி 3,600 பேரும் தாய் அல்லது தந்தையில் ஒருவரை   இழந்துள்ளனர். 
 
இவர்களுக்கு மேலதிகமாக 9,678 சிறுவர்கள் அவர்களது உறவினர்கள் மற்றும் பாதுகாவலர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் 1,366 பேர் தாய், தந்தை இருவரையும் இழந்தவர்களாவர். மீதி 8,312 பேர் தாய் அல்லது தந்தையில் ஒருவரை இழந்துள்ளனர். 
 
"இந்தச் சிறுவர்களில் 80 விழுக்காட்டிற்கும் அதிகமானவர்கள் போர் காரணமாகவே தமது பெற்றோரை இழந்து நிராதரவான நிலைக்கு வந்துள்ளனர். ஆனால், இவர்களில் எத்தனை விழுக்காட்டினர் வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரில் அநாதரவாக்கப்பட்டனர் என்பதைத் தெரிந்து கொள்வதற்கான சரியான புள்ளிவிவரங்கள் இல்லை. எனினும் கணிசமானவர்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பதை ஊகிக்க முடிவது இயல்பானது'' என்று சிறுவர் பாதுகாப்புத் துறை சார்ந்த உயர் அதிகாரி ஒருவர்  தெரிவித்தார்.
 
நன்றி உதயன்

Thursday, January 12, 2012

நெடுந்தீவில் பல பொண்டாட்டிகளை வைத்துள்ள டக்ளஸ்! காணொளி
டக்கிளஸின் முகத்திரை  கிழித்த விஜயகலா எம்.பிநெடுந்தீவுப் பகுதிகளில் பல மனைவிமார்களை வைத்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது பாராமன்றில் அதிரடித் தாக்குதலை மேற்கொண்டுள்ளார் விஜயகலா எம்.பி.

பாராளுமன்றத்தில் முழங்கிய விஜயகலா எம்.பி., மகேஸ்வரனைக் கொன்றது முதல் தென்மராட்சிப் பகுதியில் கொலை செய்தது வரை எல்லாமே நீங்கள்தான் எனவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மீது சொற்தாக்குதல் நடத்தியுள்ளார்.

இவரின் துணிகரப் பேச்சினால் பாராளுமன்றத்தில் இருந்தவர்கள் கரகோஷம் எழுப்பியதுடன், டக்ளஸ் தேவானந்தாவின் முகத்தில் அறைந்தது போல் இருந்தது.

இதனால் கிழிந்தது டக்ளஸி்ன் முகமூடி. 


நன்றி, தமிழ் சி என் என்.
 


Wednesday, January 11, 2012

வடக்கு கிழக்கு இராணுவ முகாம்கள் பற்றி எவரும் கேள்வி கேட்க முடியாது. 'கோத்தபாய'

  இலங்கை இராணுவ மயப்படுத்தப்படவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச சமூகத்தினால் சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைக்கப்பட்டிருந்த பல இராணுவ முகாம்கள் யுத்த நிறைவின் பின்னர் அகற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் இலங்கை முகங்கொடுக்கும் தேசிய பாதுகாப்புக்கான சவால்கள் எனும் தொனிப் பொருளிலான கருத்தரங்கொன்று நேற்று இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் சிறப்புரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

"நாட்டின் எந்தவொரு பகுதியிலும் இராணுவத்தினரை நிலை நிறுத்தும் உரிமை அரசாங்கத்துக்கு உள்ளது.

மக்களின் நன்மைக்காக இவ்வாறு இராணுவத்தினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். இலங்கையில் இராணுவத்தினரை நிலை நிறுத்துவது குறித்து உலகின் வேறு எந்தத் தரப்புக்கும் கருத்து வெளியிடும் உரிமையோ அதிகாரமோ கிடையாது" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
_நன்றி வீரகேசரி.

Sunday, January 8, 2012

உச்சிதனை முகர்ந்தால் - திரை விமர்சனம் : இதயச்சந்திரன் !

 நேற்றைய தினம் முதல் லண்டன் சினி வேல்ட் சினிமாவில் காண்பிக்கப்படும் உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்தைப் பார்க்க தமிழ் மக்கள் மட்டுமல்லாது வேற்றின மக்களும் சென்றுள்ளனர். அரங்கம் நிறம்பி வழிய அனைத்து தமிழ மக்களும் பார்வையிட்ட இத் திரைப்படத்தின் விமர்சனத்தை மூத்த எழுத்தாளர் மற்றும் அரசியல் ஆய்வாளருமான திரு. இதயச்சந்திரன் அவர்கள் எழுதியுள்ளார்

இலங்கை இராணுவத்தால் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு ஈழச்சிறுமியின் கதைதான் 'உச்சிதனை முகர்ந்தால். தென்தமிழீழம் மட்டக்களப்பில் நிகழ்ந்த சம்பவமொன்றினை மையமாகக் கொண்டு இத்திரைப்படத்தை உருவாக்கி நெறிப்படுத்தியுள்ளார் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் அவர்கள். தன் விருப்பத்தின் வழியில் மட்டுமே இத்திரைப்படம் முழுவதும் அவர் பயணித்திருக்கிறார். பாத்திரங்களின் ஆளுமை சிதறடிக்கப்படாமலும் , அவை அதன் எல்லைகளை தாண்டிச் செல்லாமலும், இத் திரைக்கதையை மிகவும் கவனமாகவும், நேர்த்தியாகவும் கட்டமைத்துள்ளார் புகழேந்தி. பேரினவாத வன்மத்தின் தாக்குதலுக்கு உள்ளான பெண்ணாக, அதன் குறியீடாக, "புனிதவதி" என்கிற பாத்திரத்தில் நீநிகா இப்படத்தை ஆக்கிரமித்திருக்கிறார். சக மனிதன் மீது கொள்ளும் நெருக்கம், உறவு, பரிவு என்பவற்றை, நடேசனின் [சத்தியராஜ்] மாமியாரைத் தவிர்த்து, ஆட்டோ சாரதி உட்பட எல்லாக் கதாபாத்திரங்களும் உயர்த்திப் பிடிக்கின்றன.

இப்படத்தை பார்க்கும் போது, ஆழ் மனதில் பதிந்து கிடந்த வலிமிகுந்த உயிர்ப்புள்ள நினைவுகள், மனவெளியில் மீண்டும் மிதக்க ஆரம்பித்தன. ''இது உன் தேசத்தில் நடந்தது... இன்னமும் நடக்கிறது... வலிகளுக்கு கட்டாய ஓய்வு கொடுத்து , கற்பனைச் சித்திரங்களை நிஜமென்று நம்பி கைதட்டிக் கொண்டிருக்கிறாயா'' என்று முகத்தில் ஓங்கி அறைந்தது போலிருந்தது.

புனிதவதியை வாழ்வின் நெருக்கடிகள் கடுமையாக முடக்கினாலும், பறவை,நாய், செடிகொடிகள் எல்லாமே அவளுடைய நண்பர்கள்தான். அமுதனோடு [நாயின் பெயர்] அவள் பேசுகிறாள். நாய் பேசாது என்று தெரிந்திருந்தும் பேசுகிறாள். அது அவளுக்கான வடிகால். விமானம் பறக்கும் இரைச்சலைக் கேட்டவுடன், அவளைத் தாயக நினைவுகள் பலவந்தமாக துரத்துகின்றன.. இன்றும் கூட ,தாயகத்தில் வாழும் இலட்சக்கணக்கான குழந்தைகள் ,பெரியவர்கள் இவ்வகையான உளவியல் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் தவிக்கின்றார்கள். இவர்களை ஆற்றுப்படுத்த எவருமில்லை.

போர்க்காலத்தில் எதிர்கொண்ட அதே ஆக்கிரமிப்பு இராணுவமே இன்றும் அவர்கள் வீதிகளில் உலாவிக்கொண்டிருக்கிறது. கொடூரமான சம்பவங்களை அவை இன்றும் நினைவூட்டுகின்றன. நினைவுகளை அழிக்க முடியவில்லை. மார்ச் 1 ...அவள் வாழ்வினை சூது கவ்விக் கொண்ட நாள். சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவம் அவளை குதறிக் கடித்த நாள். ''அன்னைக்குத்தான் எனக்கு வலிச்சது அக்கா'' என்று அவள் குழந்தைத்தனமாக சொல்லும்போது நிர்மலாவின் [சங்கீதா] கண்கள் பனித்தன என்று கூறுவதைவிட, அதில் மனிதத்தின் மீதான நேசிப்பினை கண்டேன் என்று கூறுவது  பொருத்தமானது. இசை அமைப்பாளர் டி.இமான் பற்றியும் குறிப்பிட வேண்டும். 'உச்சிதனை முகர்ந்தால்...சுட்டிப் பெண்ணே.... இருப்பாய் தமிழா நெருப்பாய்..'

போன்ற பாடல்கள், கதை நகர்த்தலுக்கு எவ்விதமான இடையூறையும் விளைவிக்கவில்லை. மிகைப்படுத்தல் இல்லாத, வலிந்து திணிக்காத வகையில் இவை இணைக்கப்பட்டுள்ளன.

புனிதவதியின் அசைவியக்கம் இறுதிக் கணத்தை நெருங்கும் வேளையில், ''இருப்பாய் தமிழா நெருப்பாய்..'' என்கிற அற்புதமான போராட்ட இசை, ஒடுக்கப்படும் மக்களின் புதிய குரலாய் எழுகிறது. விழ விழ எழும் போராட்டத்தத்துவத்தை காட்சியோடும் கானத்தொடும், பிசிறல் இல்லாமல் சரிவரக் கலந்து படைத்திருக்கும் புகழேந்தி அவர்கள் நிற்சயம் போற்றுதலுக்குரியவர்.

''உன் தாய் மண்ணை எங்கே புதைப்பார்கள்...'' ..இதுதான் மண் மீதான எமது பிறப்புரிமையை, இறைமையை தெளிவாகச் சொல்லும் வரிகள். காசி அண்ணனின் கவிதைகள் மண்ணின் பெருமூச்சாகவும், மீண்டும் எழுவதற்கான ஊன்றுகோலாகவும் இருக்கிறது. உணர்ச்சிக் கவிக்குள் உண்மையின் உன்னதங்களை இரண்டறக் கலந்திருக்கும் அவரின் கவிதைகள், இசைவடிவத்துள் கச்சிதமாகப் பொருந்தியிருக்கின்றது.

மெட்டிற்கு பாட்டு எழுதுவது இலகுவான விடயமல்ல. இசைக்குரிய சொற்களை கவிதைக்குள் புகுத்தும் வித்தையையும் காசி அண்ணன் கற்றுள்ளார் போல் தெரிகிறது. பின்னணி இசை பற்றி குறிப்பிட வேண்டும். காட்சிகளுக்கு ஏற்ப ,தேவையற்ற இடங்களில் பின்னணி இசை தவிர்க்கப்பட்டிருக்கிறது.. பேரிரைச்சல் நிறைந்த தமிழ் திரைப்படங்களைப் பார்த்துப் பழக்கப்பட்ட மக்களுக்கு, இத் திரைப்படம், சில காட்சிகளில் மெதுவாக நகர்வது போன்றதொரு தோற்றப்பாட்டினை கொடுக்கும். ஆனாலும் தமிழருவி மணியன் அவர்களின் 'பஞ்ச் டயலக்' இல்லாத நிதர்சனமான வார்த்தைகளும், 'பெரியார்' புகழ் சத்தியராஜ், பிதாமகனில் புது அவதாரமெடுத்த சங்கீதா, நாசர், லக்ஷ்மி, 'செந்தமிழன்' சீமான், மற்றும் திருநங்கையாக நடித்தவர் போன்றோர்களது பங்களிப்பு இப்படத்தை தூக்கி நிமிர்த்தியுள்ளது என்று கூறலாம்.

இதன் படத் தொகுப்பாளர் , 'பா' வரிசையில் பல திரைப்படங்களை தமிழ் திரையுலகிற்கு அளித்த இயக்குனர் பீம்சிங் அவர்களின் புதல்வர்  திரு.லெனின் அவர்கள். சென்னை திரைப்பட தணிக்கை சபையின் வாள் வெட்டுக்கள் ஆங்காங்கே தெரிந்தாலும், இயலுமானவரை தனது பணியை அவர் திறம்படச் செய்துள்ளார். பிராந்திய மேலாதிக்கவாதத்தின் கழுகுப் பார்வையில், இத்திரைப்படமானது தமிழ் மக்களின் சுயநிர்ணயஉரிமைக்கான விடுதலைப் போராட்டம், மற்றும் விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் என்பவற்றை ஆதரிப்பதோடு, தமிழ்நாட்டில் ஈழ மக்களுக்கு ஆதரவான மீண்டுமொரு எழுச்சி உருவாகிவிடுமோவென்கிற அச்சம் தென்படுகிறது. இவை தவிர, இத்திரைப்படத்தில், சனல்௪ தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படத்திலுள்ள, கண்கள் கட்டப்பட்ட தமிழர்களை இலங்கை  இராணுவம் சுட்டுக்கொல்லும் காட்சிகள், மீள் உருவாக்கம் செய்து காண்பிக்கப்படுகின்றது. அதில் ஆடை வடிவமைப்பு மற்றும் ஒப்பனைக் கலைஜர்களின் பங்களிப்பில் சில குறைபாடுகளை காணக்கூடியதாக இருந்தது.

இப்படத்திற்கு வசனமெழுதிய தமிழருவி மணியன் அவர்கள் குறித்து கட்டாயம் பேச வேண்டும். தனது அனுபவங்களை , ஆளுமையை எந்தவொரு பாத்திரத்தின் மீதும் அவர் திணிக்க முற்படவில்லை. 'என் வயிறு பெரிதாகிவிட்டதால் என்னை பள்ளிக்கூடத்திலிருந்து நிற்பாட்டிவிட்டார்கள்' என்று புனிதவதி கூறும் போதும், புனிதவதியிடம் வம்பு பண்ண சில வாலிபர்கள் முயலும் போது 'நீங்களெல்லாம் ஒரு ஆம்பிளையாடா?' என்று அந்தத் திருநங்கை கொதித்தெழும் போதும், இவளின் கடந்த காலத் துயரங்களைப் புரியாமல் 'பதின்மூன்று வயதில் எவன் கூடப் படுத்தாய்' என்று மிகக் குரூரமாக மோசமான வார்த்தைகளில் ஆச்சி வசைபாடும் போதும், மணியன் அவர்களின் இயல்பான மொழி வழக்கின் ஆளுமை புரிந்தது. 'ஒரு நாய்க்கு இருக்கும் உணர்வுகூட .....அதற்கு இல்லாமல் போச்சே' என்று தனது தாயைப் [ஆச்சி] பற்றி மகள் நிர்மலா விமர்சனம் செய்கையில், அங்கு உயர்ந்து நிற்கிறார் எங்கள் தமிழருவி.

திருநங்கையரை, நல்ல இதயமுள்ளவர்களாக, மனிதம் போற்றும் மகத்தான பிறவிகளாக, இது போல் எந்தத்திரைப்படமும் நேர்மையாகக் சித்தரித்ததாக நினைவில் இல்லை. இவர்களை இலங்கையில் 'அலி' என்று கூறுவார்கள். அரவாணி என்பது தற்போது திருநங்கையாக உயர்வு பெற்றுள்ளது தமிழ்நாட்டில். சமூகத்தால் புறக்கணிக்கப்படும்  இவர்களால், ஒடுக்குமுறைக்கு

உள்ளான அந்தப் புனிதவதியின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. இவர்கள் குறித்தான சமூகப் பார்வை, மறுவாசிப்பிற்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்கிற வகையில் , இவர்கள் உடனான புனிதவதியின் தொடர்பாடல்களை  இப்படத்தில் இணைத்த தோழர் புகழேந்தி அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள். இன்னும் பல விடயங்கள் குறித்து எழுதலாம், பேசலாம். ஆனால் அதுவே , மணியன் அவர்களின் உரைநடைக்கான பொழிப்புரையாக மாறி விடுமென்பதால் இத்தோடு நிறுத்துவது சாலச் சிறந்தது என எண்ணுகிறேன்.

இனி குறிப்பாக இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் குறித்து பேச வேண்டும். திரைப்பட உருவாக்கத்தில் திரைக்குப் பின்னால் நின்று உழைத்த மனிதர்கள் இவர்கள். நோர்வேயைச் சேர்ந்த இந்த ஈழத்தமிழர்கள், வணிக நோக்கோடு இப்படத்தை தயாரிக்க முன்வரவில்லை என்பதை உறுதி செய்ய ,படத்தின் திரைக்கதையே சாட்சி. திரையரங்கை விட்டு வெளியேறும்போது , என்னைக் கடந்து சென்ற பெண்மணி ஒருவர் கூறிய கருத்து.  ''கொஞ்சம் கொஞ்சமா எங்கட சனங்கள் எல்லாத்தையும் மறந்து போகுதுகள். இதைப் பார்த்தாவது திருந்தட்டும். இவ்வளவு காலமும் படம் எண்டு சொல்லி என்னைத்தையோ எங்களுக்கு காட்டி இருக்கிறாங்கள். இதுதான் எங்கட படம்.

Wednesday, January 4, 2012

தன்வினை தன்னைச்சுடும் ஓட்டப்பம் வீட்டைச்சுடும். முல்லை பெரியாறு தேசத்தையே சுட்டுவிட இடமளிக்கலாகுமா?

.

கூத்தாடி குசும்பன்..

"முல்லை பெரியாறில் புதிய அணை கட்டி, தமிழக - கேரள கூட்டுக் குழு  கட்டுப்பாட்டில் நிர்வகிக்க கேரள அரசு தயாராக உள்ளது' என கேரள  முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்தார்.


முல்லை பெரியாறு பிரச்னையில் சுப்ரீம் கோர்ட் நியமித்த உயர்மட்டக் குழு கூட்டத்தில், அணையின் நீர்மட்டத்தை, 120 அடியாக குறைக்க முடியாது என அதிரடியாக தெரிவித்து, கேரள அரசின் கோரிக்கையை தள்ளுபடி செய்தது. இது முல்லை பெரியாறு பிரச்னையில், கேரள அரசுக்கு கிடைத்த பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இப்படி செய்திகள் தினமும் வருகின்றன.

கூ கு:இந்திய நாட்டின் அரசியல் சாசன விதிமுறைகளின் அடிப்படையில் அந்நாட்டின் மத்திய மானில அரசுகளில் பதவி வகிக்கும் அரசியல் தலைவர்கள் நாட்டின் அரசியல் சாசன விதிமுறைக்கு கட்டுப்பட்டு சத்தியப்பிராமாணம் எடுத்துக்கொள்ளுகின்றனர். (இதை மத்திய அரசிலிருக்கும் பிரதமர், கேரள அரசிலிருக்கும் உம்மன் சாண்டி ஆகியோர் கவனத்தில் கொள்ள வேண்டும்)

இது இந்தியாவுக்கு மட்டுமல்லாது அதிகபட்ஷமாக உலகிலுள்ள சகல ஜனநாயக நாடுகளுக்கும் பொருந்தும்.

ஒரு நாட்டின் அனைத்து நலன்களையும் பாதுகாக்கும் பொருட்டு அரசியல்ச்சாசனம் வரையப்பட்டிருக்கிறது. அந்தவகையில் ஒரு நாட்டின் அரசியல் வாதிகள் குறைந்தபட்ஷம் ஐந்து வருடங்கள் அரசியல் சாசன வரம்பிற்குட்பட்டு ஆட்சி செய்யும் அதிகார சுதந்திரம் வழங்கப்படுகிறது.

ஆட்சி செய்யும் காலங்களில் மக்கள் நலனை பாதிக்காமல் மதிப்பளிக்கும் அதே நேரம் நாட்டின் தேசிய அரசியல் அமைப்பு மற்றும் சட்டத்துறையையும் மதித்து நடக்கவேண்டிய பொறுப்பும் புரிதலும் அவர்களுக்கு கட்டாயமாகிறது.

தான் சார்ந்த கட்சியின் கொள்கை சார்ந்து, அல்லது தனது இன மத உறவு சார்ந்து,. ஒரு கொள்கைநிலைக்கு சார்பாக போகுமிடத்தில். அக்கொள்கை குறிப்பிட்ட குழுவினரிடம் பெரும்பான்மை ஆதரவு இருப்பினும், அந்தக்கொள்கை வேறு ஒரு விதத்தில் நாட்டின் நலனை பாதிக்குமாக இருந்தால் நிச்சியம் சிந்தித்து முடிவெடுக்கவேண்டிய கட்டாயம் உண்டு.

ஆட்சி அதிகாரத்திலிருக்கும் ஒரு மானில அரசு, அல்லது மத்திய அரசு, தனது கட்சி அல்லது இனக்குழு சார்ந்து எடுத்த ஒருமுடிவு. ஒரு தனி மனிதனுக்கு ஒப்புதல் ஆகவில்லையெனில் அவன் நீதிமன்றத்தை அணுகவும் அரசியல் சாசனம் வழி செய்கிறது. அப்படி நீதிமன்றத்திற்கு செல்லும் ஒரு பொது நலன் கொண்ட முறைப்பாடு, விசாரணைக்கு தகுதியுள்ளது தானா என்பதை அந்த நீதிமன்றம் முடிவுசெய்து தகுதியுள்ள முறைப்பாட்டை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுகின்றது.

எடுத்துக்கொண்ட முறைப்பாடு இரண்டு பக்க சட்டவல்லுனர்களான சட்டவாளர்களின் விவாத அடிப்படையில் விசாரிக்கப்பட்டு, நாட்டின் அரசியல் சாசன சட்டவரம்பிற்குட்பட்டு நீதிபதிகள் தீர்ப்பு வழங்குகின்றனர். நீதிபதிகளின் தீர்ப்பில் அதிருப்தியிருந்து இன்னும் நிமிர்த்தக்கூடிய சட்ட ஆதாரங்கள் வேறு இருப்பின், மீண்டும் அதே வழக்கை அப்பீல் செய்யும் தகுதியும் வாத தரப்பினருக்கு இருக்கிறது. மறு விசாரணையிலும் தீர்ப்பு முன்னையதையே பரிந்துரைக்குமாயின், நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளவேண்டிய தார்மீகப்பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது.

அதன்பின்னும் அடாவடியாக விதண்டாவாதம் புரிந்தால் அந்த நிர்வாகத்தை கலைத்துவிடும் அதிகாரம் குடியரசுத்தலைவருக்கு உண்டு. அத்துடன் பல இனங்கள் சேர்ந்த ஒரு நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வில்லங்கத்தை தூண்டும் கொள்கையுடைய அக்கட்சியை தடைசெய்யவும் நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகமாக செயற்படும் கட்சியின் தலைமத்துவத்திலிருக்கும் தனிமனிதர்களை இனங்கண்டு தேசியப்பாதுகாப்புச்சட்டத்தின் சட்டப்பிரிவை பயன்படுத்தி கைது செய்து சிறைப்படுத்தவும் முகாந்திரங்கள் நிறையவுண்டு.

இன்றைய கேரள அரசின் கொள்கை மேற்படி சட்டத்தையும் அரசியல் சாசனத்தையும் மதிக்காத முரண்பாட்டுடன் ஒரு இனக்குழுவை திருப்ப்திப்படுத்தும் விதமாகவே உள்ளது. கேரள முதலமைச்சர் உம்மாண்டி சாமுண்டி நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு வினை தேடும்வகையில் முல்லை பெரியாறு பிரச்சினையை சுயநலத்துடன் கையாண்டு நாட்டின் பிரிவினைக்கு விதை போட்டிருக்கிறார். உச்ச நீதித்துறையின் தீர்ப்பை அவர் மதிக்கவில்லை. அடுத்ததாக நீதிமன்றம் நியமித்த நிபுணர்கள் ஆதாரபூர்வமாக சோதனை நடத்தி வெளிக்கொண்டுவந்த பெறுபேறுகளை ஏற்றுக்கொள்ளவில்லை.

தான் எதை குறித்து விதண்டாவாதம் செய்கிறாரோ அதற்கேற்றபடி தீர்ப்பெழுதும்படி அழுங்குப்பிடியில் நின்றுகொண்டிருக்கிறார். மத்தியில் ஆட்சிபுரியும் காங்கிரஸ் கட்சியின் பிரிவாக கேரள அரசு இருப்பதால் மத்தியில் ஆட்சிபுரியும் அரசும் உம்மாண்டியின் அராஜகத்திற்கு துணை நிற்கிறது. 

முல்லை பெரியாறு அணை 1895ல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தமிழகத்தின் நீராதாரத்திற்காக  நிர்மாணிக்கப்பட்டது. 999 வருடங்களுக்கு முல்லை பெரியாறு நீரை தமிழகம் அனுபவிக்கும் உரித்தும் ஒப்பந்தமூலம் வரையப்பட்டிருக்கிறது. கேரள அரசு கூறுவதுபோல அணை பாவனைக்கு உதவாத வகையில் பாதிக்கப்பட்டிருக்குமாயின் கேரள அரசின் கூற்றை ஏற்றுக்கொள்ளவேண்டிய நியாயம் அனைவருக்கும் உண்டு. ஆனால் துவேஷ அடிப்படையில் நிமிடத்துக்கு ஒரு கருத்துக்கூறி மக்கள் மத்தியில் பிரிவினையையும் அணைபற்றி மிகவும் பொய்யான தகவல்களை பரப்பி தேவையற்ற ஒரு அசாதாரண நிலையை நாட்டினிடையே தோற்றுவித்த ஒரு பிரிவினரை ஏன் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து தூக்கில் ஏற்றாவிட்டாலும் சிறையில் அடைக்கக்கூடாது. 


மீண்டும் சந்திப்போம்.

Monday, January 2, 2012

ராஜபக்க்ஷவை வெல்ல வேண்டுமானால் கூட்டமைப்பினர் மாற்றி சிந்திக்க முயற்சிக்கவேண்டும்.

வல்லமையுள்ளதால் அமெரிக்கா, ஈரான் மீது மேலும் பல பொருளாதார தடைகளையும், பாகிஸ்தான் நாட்டுக்கு  நிதியுதவியை குறைக்கக் கூடிய பாதுகாப்பு மசோதாவிலும்,  அதிபர் பராக் ஒபாமா கையெழுத்திட்டுள்ளார்.

உள்நாட்டு தொழில்நுட்பம் மூலம் குறுகிய தூரம் சென்று தாக்கக் கூடிய ஏவுகணையை, ஈரான் வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது என்ற குற்றத்திற்காகவும். அணுமின் நிலையங்களுக்கான யுரேனிய எரிபொருளையும் தயாரித்துள்ளது என்பதற்காகவும். அமெரிக்கா தனது வல் வல்லமையை பாவித்து தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இந்த தடை உத்தரவை சிரத்தையுடன் உலகிலுள்ள பலநாடுகள் பின்பற்றும் என நம்பலாம்.

இலங்கையில் மனிதர்கள் கொலைசெய்யப்பட்டு, உரிமை மீறப்பட்டு இனப்படுகொலைகள் நடத்தப்பட்டதற்காக சென்ற ஆண்டு இதேபோன்ற ஒரு தடையுத்தரவை அமெரிக்க காங்கிரஸ் பரிந்துரை செய்திருந்தும், வல்லமை இல்லாத தமிழினம் என்பதால் இந்தியா போன்ற அநீதிக்கு துணை நிற்கும் நாடுகளின் தலையீட்டால் அதிபர் ஒபாமாவின் மேசைவரை அந்தக்கோப்பு சென்றடையவில்லை.

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது என்று ஜனாதிபதியும் அமைச்சர்களும் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்து வந்ததால் பேச்சுவார்த்தையில் விரிசல் விழுந்து சர்வதேச விசாரணை நோக்கி தள்ளப்பட்டு விடுவோமோ என்ற பயம், கூட்டமைப்புடனான அடுத்த சந்திப்பின் போது மட்டுப்படுத்தப்பட்ட காணி அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வது பற்றி ஆராயப்படும் என்று அரசாங்கம் தூண்டில் போட்டிருக்கிறது.

அழிக்கப்பட்டதாக அரசால் அறிவிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் தொடர்பில் அரச தரப்பு தொடர்ந்தும் குற்றஞ்சாட்டி கொண்டு வருகின்றது. இதேவேளை இலங்கையில் உண்மையான நல்லிணக்கம் வேண்டுமானால், போரின் போது ஏற்பட்ட பொதுமக்களின் உயிரிழப்புகளுக்கு அரசாங்கம் பொறுப்பேற்கவேண்டும். இல்லையேல் நாட்டில் ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

2012 ஜன, நடுப்பகுதியில் இந்தியத்துணைக்கண்டத்தின் வெளி விவகாரங்களுக்கான மந்திரி எஸ் எம் கிருஷ்ணா அழையா விருந்தாளியாக, இனப்பிரச்சினையை தீர்த்து வைத்துவிட்டு திரும்புவதற்காக இலங்கை வரவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதில் எவ்வளவு களவும் கபடமும் நிறைந்திருக்கிறது என்பதை 2012ம் ஆண்டு முடிவதற்குள் உலகம் அறிந்துகொள்ளும்.

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் நிலைகொண்டிருக்கும் இராணுவத்தை எக்காரணம் கொண்டும் அகற்ற இடமளிக்கப்போவதில்லை என்றும். தமிழர் தேசியக்கூட்டமைப்பு கோருவதுபோல பொலிஸ் அதிகாரங்கள் மற்றும் காணி நிர்வாகம் மாகாண சபைகளுக்கு கொடுக்க முடியாது என்றும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ கறாராக தெரிவித்திருக்கிறார்.

ஐநா நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் வெளிவந்த ஸ்ரீலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை, இராணுவத்தின் செயலையும் அரசாங்கத்தின் படுகொலை குற்றச்சாட்டுக்களையும் முற்று முழுதாக மறுத்து தன்னிலை நியாயத்தை விதந்துரைத்திருக்கிறது. அதுபற்றி ஐநா பொதுச்செயலாளர் பான் கீ மூன் எந்த எதிர்வு கூறலையும் உத்தியோகபூர்வமாக இன்னும் வெளியிடவில்லை. அத்துடன் சிங்களம் தனக்கு சார்பாக தயாரித்த அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளையே நடைமுறைப்படுத்த முடியாத அளவுக்கு அரசுக்குள்ளேயே உள்ளூர விமர்சனங்கள் எழுந்திருப்பதாக தெரிகிறது.

தமிழகத்தின் மக்களின் கொந்தளிப்பும், ஈழ ஆதரவு அரசியல்வாதிகளின் நெருக்கடிகள் காரணமாக ஸ்ரீலங்கா அரசுக்கு பொருளாதாரத்தடையை பெற்றுத்தருவேன் அதிபர் ராஜபக்க்ஷவை போர்க்குற்றவாளியாக இந்தியா அறிவிக்க வேண்டுமென உணர்ச்சிவசப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, அதுபற்றி மறந்து வேறு வேலைத்திட்டங்களில் தனது கவனத்தை திருப்பியிருக்கிறார்.

தமிழர் தேசிய கூட்டமைப்பு சென்ற ஆண்டு அமெரிக்க அரசின் அழைப்பின்பேரில் அமெரிக்காவுக்கும், ஐரோப்பா, கனடா போன்ற தேசங்களுக்கு அரசியல் சுற்றுப்பயணம் செய்து திரும்பி வந்ததும். உலகத்தின் பலதரப்பிற்கும் ஒவ்வாமையை உண்டுபண்ணிய ஸ்ரீலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை வரவேற்ற இந்தியாவின் அனுக்கிரகத்துக்காக தவநிலையில் நம்பிக்கையுடன் நின்றுகொண்டிருக்கிறது.

ராஜபக்க்ஷ அரசின் சிங்கள நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை  human right watch, மற்றும்  amnesty international,போன்ற, மனித உரிமையை மதித்துபேணும் பக்கச்சார்பற்ற சர்வதேச, அமைப்புக்கள் ஏற்றுக்கொள்ள மறுத்து நிராகரித்திருக்கின்றன. உலக அரங்கில் அரசியல் சார்புக்கு அப்பாற்பட்ட மனிதநேய நோக்கங்கொண்ட அமைப்புக்கள் இவை என்பதையும் நினைவில் கொள்ளலாம். இலங்கை அரசினால் வெளியிடப்பட்டுள்ள அவ் அறிக்கை போரில் கொல்லப்பட்டும், பாதிக்கப்பட்டு ஊனமுற்றிருக்கும், மக்களுக்கு எந்த விதத்திலும் உதவாத ஒரு காகிதக்கட்டு என வர்ணித்து புறக்கணித்திருக்கின்றன.

அடுத்ததாக நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை வெளியான பின் சர்வதேச நெருக்கடிக் குழு, வடக்குக்கிழக்கில் வாழும் தமிழ்ப் பெண்களின் பாதுகாப்பின்மை குறித்து ஆதாரங்களுடன் மிகவிரிவான அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கிறது. Sri Lanka: Women’s Insecurity In The North and East : International Crisis Group Report : 20 December 2011 ; Page II. வடக்குக் கிழக்குப் பெண்களின் மீதான பாலுறவு அத்துமீறல் குறித்த இலங்கை அரசின் வழமையான எதிர்வினை, அதனை முற்றிலுமாக நிராகரிப்பதுதான் என இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

சிறீலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட இறுதிக்கட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் போது சிறிலங்கா படையினரால் இழைக்கப்பட்ட கொடூரங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக போதுமானளவு விசாரணைகள் நடத்தப்படவில்லை.  உலக நாடுகளில் இடம்பெறும் மனித குலத்திற்கெதிரான செயற்பாடுகள் குறித்து எமது நாடு வாய்மூடி மௌனிகளாக இருக்கப் போவதில்லை யாரோ ஒருவர் இந்த உண்மைகளை வெளிக் கொண்டு வரவேண்டும். இது மிகவும் முக்கியமானதென்று நான் நினைக்கிறேன். என கனடா நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயார்ட் மிகக்கடுமையான தொனியில் தெரிவித்திருக்கிறார்.

மேற்கண்ட அனைத்தும்  நிதர்சனமான உண்மையென்பதும், சிங்கள அரசு ஒருதலைப்பட்ஷமாக நியாயப்படுத்தல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுவிட்டதால் எல்லாம் சரியென்று ஆகிவிடுமா என்பதும். கொல்லப்பட்ட கொடுமைப்படுத்தப்பட்ட மக்களின் எதிர்காலம் என்ன என்பதும், அறிக்கையின் பின்னான காலத்தில் தமிழர் வாழ்வு எந்த நம்பிக்கையை நோக்கி நகரப்போகிறது என்பதும், அறிக்கைபற்றிய தேசியக்கூட்டமைப்பினரின் எதிர்வினை என்ன என்பதும், அடுத்து பீதியை கிளப்பும் விதமாக 2012 ஜன, அவசரமாக ஸ்ரீலங்காவுக்கு வரவிருக்கும் இந்தியத்துணைக்கண்டத்தின் வெளிவிவகார மந்திரி கிருஷ்ணரின் வரவின் சூழ்ச்சுமம் என்ன என்பதும் பல மில்லியன் டொலர் கேள்வியாக எழுந்து நிற்கிறது.

எத்தனை ஆயிரம் கேள்வி எழுந்தாலும் நியாயமான நீதி கிடைக்காதவரை தமிழனுக்கான தீர்வு ஒன்று வரையறுக்காதவரை ஒரு அமைதியான நிலைக்கு இலங்கை திரும்பிவிடப்போவதுமில்லை. என்பதும் வெள்ளிடை மலையாக தெரிகிறது. எவர் தலைகீழாக நின்று மண் சுமந்தாலும் இலங்கைத்தீவின் அமைதி சாதாரணமாக செப்பனிட முடியாத அளவிற்கு மனுதர்மம் ஆழமான துவேஷத்திற்குள் மூழ்கிவிட்டது.

பூமியில் உள்ள நாடுகளில், இந்தியா என்ற ஒருநாடு தவிர்ந்த, அனைத்து சர்வதேச நாடுகளும், சர்வதேச தொண்டர் அமைப்புக்களும், இலங்கை அரசின் குதர்க்கத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து நிற்கின்றன. மனு தர்மத்தை குழி தோண்டி புதைக்கும் ஒருதலைப்பட்ஷ நிலையெடுப்புக்குப் பின்னான  தமிழர் அரசியல்த்தரப்பின் விருப்பு வெறுப்பு பற்றிய எதிர்வுகூறல்களும் நிச்சியம் உலகத்தால் கூர்ந்து கவனிக்கப்படும்.

கிடைத்திருக்கும் அனைத்து உலக ஆதரவையும் ஒருங்கிணைத்து குற்றவாளியை தண்டனைக்குட்படுத்துவது அரசியல் தீர்வுக்கான முகாந்திரங்களை கையாள்வது அனைத்தும்,களத்தில் நின்றுகொண்டிருக்கும் தமிழர்களின் வாதத்தரப்பின் பிரதிநிதிகளான தமிழர் தேசிய கூட்டமைப்பின்  மதிநுட்பத்தைப்பொறுத்து காட்சிகள் அரங்கேறலாம்.

சிங்கள ஆணைக்குழுவின் அறிக்கை வெளிவந்து பலதரப்பினருக்கும் ஒவ்வாமையை உண்டுபண்ணிவிட்டது என்பதை எமது தமிழ் அரசியல் சாணக்கியர்கள் உணராவிட்டாலும் சிங்கள ராஜபக்க்ஷ நன்கு உணர்ந்திருக்கிறார்.

தமிழ்க் கூட்டமைப்பினரின்  கோரிக்கைகளான வடக்கு, கிழக்கு இணைப்பு, பொலிஸ் மற்றும் காணி அதிகாரப்பகிர்வு என்பன நடைமுறைச் சாத்தியமற்றவை. இந்த அதிகாரங்களை வழங்குவதன் மூலம் அவர்கள் என்னைக் கைதுசெய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா?  மேற்கு நாடுகளில் எஞ்சியுள்ள புலிகள் தான், இலங்கைக்கு எதிராக அடிப்படையற்ற விவகாரங்கள் குறித்து, அங்குள்ள அரசியல் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். மேற்குலகம் என்னைத் தங்களின் அடிமையாக வைத்திருக்கப் பார்க்கிறது. அதற்கு நான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. என நிகழ இருக்கும் அபாயத்தை உச்சக்கட்ட குளப்பத்தில இந்தியாவிலிருந்து வெளிவரும் Deccan Chronicle (டெக்கன் கிறொனிக்ள்) ஆங்கில நாளிதழுக்கு (இந்தியா சீக்கிரம் புரிந்துகொள்ளட்டும் என்பதற்காக) ராஜபக்க்ஷ செவ்வியாக புலம்பியிருக்கிறார்.

ராஜபக்க்ஷவின் பயத்திலும், அச்சம் குறித்து அவர் கூறிய விடயங்களிலும் 100% நடைமுறைச்சாத்தியமான உண்மை ஒளிந்திருக்கின்றது என்பது ராஜபக்க்ஷ மூலமே தெரிய வந்திருக்கிறது. தான் தப்பிப்பதற்காக எந்த குளப்பைகளையும் செய்ய அவர் தயாராகவே இருப்பதும் தெரிகிறது. அந்தவகையில் தமிழர்களின் அரசியல் ஆடுகளத்திலிருந்துவரும் தமிழர் தேசியக்கூட்டமைப்பு, அறிக்கைபற்றி மற்றவர்களை விடவும் ஆழமாக பொறுப்புடன் வரையறுக்குமிடத்தில் இருக்கின்றது. ஆனாலும் கூட்டமைப்பினரின் போக்கு நிறைவு தருவதாக புரியப்படவில்லை.

தொடர்ந்து வரவிருக்கும் அரசியல் நகர்வுகளுக்கு அரசாங்கத்தால் வரையப்பட்டிருக்கும் அறிக்கையின் சாரம் எதை தொட்டு நிற்கிறது, அதிகாரப்பகிர்வு பற்றிய பேச்சுவார்த்தையை தொடர்ந்து கொண்டுசெல்ல அறிக்கையில் ஏதாவது குறியீடு காணப்படுகிறதா? என்பதை ஆராய்ந்து அறிந்துகொண்டு அவற்றை நாசுக்காகவாவது மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டிய கடமையும் இன்றய நிலையில் தமிழர் தேசியக்கூட்டமைப்புக்கு மட்டுமே உண்டு.

ஐநாவின் நிபுணர்கள் குழு பரிந்துரைத்த குற்றவாளிகளை இனங்காணுதல், நீதி விசாரணைக்குட்படுத்துதல், போன்ற முக்கியமமன விடயங்களை உள்வாங்கி அதற்கான வேலைத்திட்டங்களுக்கு நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வழி கண்டிருக்கிறதா, இவையெல்லாம் பாதிக்கப்பட்டு திக்கெட்டும் சிதறி நிற்கும் தமிழனின் எதிர்பார்ப்புக்களாக இருக்கும்.  ஏற்கெனவே தேசியம், தன்னாட்சி, என்ற நிலையில் நின்றுகொண்டிருக்கும் தமிழினத்தின் எதிர்பார்ப்புக்கு சமனீடு செய்ய பேச்சுவார்த்தை என்ன வைத்திருக்கிறது. இவை அனைத்தையும் கருத்தில்க்கொண்டு பேச்சுவார்த்தை மேசையை பாவிக்கவேண்டிய நுணுக்கமும் இராசதந்திரமும் தேசியக்கூட்டமைப்பிடம் வழங்கப்பட்டிருக்கிறது.

ஆனால் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அறிக்கைபற்றியும், அரசாங்கத்துடனான தீர்வு பேச்சுவார்த்தை பற்றிய நிலைப்பாடு பொறுத்தும் வெவ்வேறு கருத்துக்களை வெளிவருகின்றன.

பொலிஸ், மற்றும் காணி அதிகாரங்களை வடக்குகிழக்கு மாகாணங்களுக்கு வழங்கமுடியாது என்று கூறிக்கொண்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசாங்கம் பேச்சுக்கு அழைத்துக்கொண்டிருக்கிறது.  சர்வதேசத்தை ஏமாற்ற முனையும் இலங்கை அரசின் நடவடிக்கையே இது என்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது அரசுடன் பேச்சுக்குச் சென்றுள்ளதன் அடிப்படையே வடக்கு கிழக்குக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என்பதற்கேயாகும் காணி, பொலிஸ் அதிகாரங்கள் இல்லாமல் தமிழ் மக்களுக்கு எவ்வாறு அரசியல் தீர்வை அரசு வழங்கப்போகின்றது என்பது கேள்விக்குறியே. என்ற நியாயமான சந்தேகத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கொண்டு வருவதற்கே பேச்சு என்ற நாடகத்தை ராஜபக்க்ஷ அரசு ஏற்ப்படுத்துகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இணைத்து சர்வதேச நெருக்கடியிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவே அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அச்சுறுத்தி உள்வாங்க முனைகின்றது. இதற்குத் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருபோதும் அடிபணியாது என கருத்து தெரிவித்திருந்தார். அதே ஒத்த கருத்தை சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்களும் சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.

ஈழ அரசியலில் தமிழர்களின் நாடித்துடிப்பை சரியாக மதிக்காததால் தனித்து நிற்க தள்ளப்பட்ட அனுபவசாலியான ஐயா ஆனந்த சங்கரி அவர்களும் தமிழர்களின் தீர்வுக்கான புள்ளியை ஓரளவு சுட்டிக்காட்டி 13வது திருத்த சட்டமூலத்தில் உள்ள சரத்தை தவிர்த்து ராஜபக்க்ஷ செல்லும் பாதை தீர்வை சென்றடையப்போவதில்லை என்ற யதார்த்தத்தை தன்பங்குக்கு கடிதம் மூலம் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியிருக்கிறார்.

கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்களின் சிந்தனை வேறுவிதமாக கணப்படுகிறது. அறிக்கைபற்றி இந்தியா சார்பாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் என்ற தரத்திலுள்ள ஒருவரின் கருத்தை மேற்கோள் கொண்டதாக பயணிக்கவேண்டுமென தெரிவித்திருக்கிறார். சிங்கள அரசாங்கத்தின் போக்குக்கு விட்டுக்கொடுத்து தொடர்ந்து இந்தியவை தொங்கித்தான் பேச்சுவார்த்தையை வென்றெடுக்க முடியும் என இல்லாத ஊருக்கு பாதை தேடிக்கொண்டிருக்கும் விதமாக தனது எண்ணத்தை பத்திரிகைகளுக்கு தெரிவித்திருக்கிறார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளிவந்தபின்னர் இந்தியா வெளியிட்டிருக்கும் கருத்துகள் தொடர்பில்  கருத்து தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் இந்தியாவின் கருத்துகள் உள்வாங்கப்படவேண்டியதன் அவசியத்தை பத்திரிகை அறிக்கை மூலம் வலியுறுத்தியிருக்கிறார்.

புதுடில்லியின் வலியுறுத்தலை இலங்கை அரசு சாதகமான முறையில் பரிசீலிக்க வேண்டுமெனவும் இந்தியா சுட்டிக்காட்டியிருப்பதாகவும் எவர் நம்பினாலும் நம்பாவிட்டாலும் சம்பந்தன் ஐயா அவற்றை நம்பி ஏற்று நிற்பதாகவும் தெரிகிறது.

இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளரால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையை "நாம் வரவேற்கிறோம்".  அதில் சில முக்கியமானவிடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. முதலாவதாக, மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நம்பகத்தன்மையான  வெளிப்படையான விசாரணைகள் தேவையென அவர்கள் கூறியிருக்கின்றனர். இது மிகவும் அவசியமானது. "அதனை நாங்கள் வரவேற்கிறோம்".

இரண்டாவதாக, அர்த்தபுஷ்டியான அரசியல் அதிகாரப்பகிர்வு நடைபெறவேண்டுமெனக் கூறியுள்ளது. அவ்விதமான சாத்தியப்பாடான அதிகாரப்பகிர்வு இடம்பெறும்போதே நிதர்சனமான ஒரு நல்லிணக்கம் ஏற்படும். "அதையும் நாம் வரவேற்கிறோம்".

மூன்றாவதாக, இலங்கை அரசின் வாக்குறுதிகள் குறிப்பாக, இடம்பெயர்ந்த மக்களின் வாழ்வில் இயல்புநிலை திரும்புவதற்கும், யுத்தமற்ற சூழலில் அவற்றை நிறைவேற்ற அளித்த வாக்குறுதிகள் இலங்கை அரசால் நிறைவேற்றப்படவேண்டும். "இதனையும் நாங்கள் வரவேற்கின்றோம்".

இந்தியாவின் இந்த அறிக்கையைப் பொறுத்தளவில் தமிழ் மக்களின் முக்கியமானதும், அத்தியாவசியமானதுமான தேவைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன(?!).

இந்தியா எமது விடயத்தில் நீண்டகாலமாக முக்கிய பங்கு வகிக்கும் ஒரு தரப்பாகும்(!?). தீர்வு முயற்சியில் இந்தியாவின் ஒத்துழைப்பு, அரசுக்கும் தமிழர்களுக்கும் தேவை!!. அந்த முயற்சியினூடாக நியாயமான  விசுவாசமான ஒரு தீர்வையே நாங்கள் எதிர்பார்க்கின்றோம்?. இந்தியாவின் இந்தக் கருத்தைச் சாதாரண ஒரு விடயமாக எடுத்துக்கொள்ளாமல்!  இலங்கை அரசு சாதகமாகப் பரிசீலிக்கவேண்டும்???. நிரந்தரமான அரசியல் தீர்வை எட்டும் முயற்சிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்பு நிச்சயம் கிடைக்கும். என்று குறிப்பிட்டு மகிழ்ந்திருக்கிறார்.

தமிழர் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் ஐயா சம்பந்தன் அவர்களின் ஆசையும் விருப்பமும் அனைத்து தமிழருக்கும் உள்ள ஒன்றுதான். இருந்தும் சம்பந்தர் அவர்களின் நம்பிக்கை ஈடேற அந்த புத்தபிரானும், அம்ரித்ஸர் பொற்கோவிலில் வீற்றிருக்கும் குரு நானக் சுவாமிகளும் துணை புரியவேண்டும்.

இந்திய, ஸ்ரீலங்கா ஆட்சியாளர்களின் வாக்குறுதி மற்றும் நம்பிக்கை அடிப்படையில், இதுவரை உள்ளதை விட்டது தவிர பெற்றுக்கொண்டதற்கான  வரலாறு எந்தப்பதிவிலுமில்லை. சம்பந்தன் ஐயா அவர்களின் இந்த நம்பிக்கை எங்கு போய் முடியும் என்பது அரசியல் தெரியாத சாதாரணமானவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. இதன் எதிர்வினை ஒரு சூனிய அரசியல் புதைகுழியை நோக்கி நகர்த்தும் ஒன்றாகவே அனுபவங்கள் உணர்த்துகின்றன.

சிங்கள அரசு உலகத்தை ஏமாற்ற எடுக்கும் அனைத்து நாடகங்களுக்கும் ஏதோ ஒருவிதத்தில் இந்தியாவும், தமிழனும் உடந்தையாகி காவடி எடுத்து ஆடுவது நிறுத்தப்படும்வரை சிங்கள ஏமாற்று தொடர்ந்துகொண்டேயிருக்கும். வலியை உண்டாக்கும் இந்தியாவின் வலியுறுத்தல் இன்று நேற்று தொடங்கிய ஏமாற்று நாடகமுமல்ல. உதவி போர்க்குற்றவாளியான இந்தியா பிரதான போர்க்குற்றவாளியை என்றைக்கும் காட்டிக்கொடுக்கப்போவதில்லை. விட்டுக்கொடுக்கப்போவதுமில்லை.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் எந்தச்சந்தற்பத்திலும் யுத்தத்தின்போது இராணுவம் தெரிந்தோ தெரியாமலோ  தமிழர்களுக்கு தீங்கு இளைத்திருப்பதை சுட்டி ஒரு வசனமும் இணைக்கப்படவில்லை. மாறாக இராணுவம் மனித உரிமையுடன் போர் புரிந்ததாக புனையப்பட்டிருந்தது. அறிக்கையை தமிழர் கூட்டமைப்பின் தலைமை ஏற்றுக்கொண்டாலும், இழப்புக்களை நேரடியாக கொள்முதல் செய்துகொண்ட தமிழர் தரப்பு ஏற்றுக்கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

எந்த இடத்திலும் எவராலும் மதிக்கப்படாத இந்த அறிக்கையை ஒருபுறம் தள்ளிவைத்துவிட்டு தீர்வு பற்றிய புள்ளிக்கு வந்தாலும் தீர்வின் முக்கிய அம்ஷங்களான கல்வி. காணி. சிவில்பாதுகாப்பு.(பொலிஸ் அதிகாரம்) இவை இல்லாமல் தமிழர்களுக்கு எந்த நன்மையும் நிகழ்ந்துவிடப்போவதுமில்லை . எல்லாவற்றிற்கும் மேலாக "வடக்கு கிழக்கு தமிழர்கள் வாழும் பகுதிகளிலிருந்து இராணுவம் திரும்பப்பெறப்படவேண்டும்". இராணுவம் திரும்ப பெறப்படாத ஒரு நிலையில் தமிழர்களின் வாழ்வியலின் சீரழிவை எந்தச்சக்தியும் சமன் செய்துவிடவும் முடியாது.

இராணுவத்தை எக்காரணம் கொண்டும் அப்புறப்படுத்த முடியாது என்றும் பொலீஸ் அதிகாரம் வழங்கமுடியாது என்றும் ராஜபக்க்ஷ கறாராக தனது நிலைப்பாட்டை பலமுறை தெரிவித்திருக்கிறார் அதை கூட்டமைப்பினருக்கும் அழுத்தியுரைத்திருக்கிறார். இதற்குள் என்ன பேச்சுவார்த்தையை கூட்டமைப்பு பேசித்தீர்க்கப்போகிறதென்பதும் சம்பந்தன் ஐயா அவர்களை தவிர வேறு எவருக்கும் புரியவுமில்லை.

பேசித்தான் தீர்க்கப்படவேண்டிய விடயம் என்பதையும் எவரும் மறுக்கவில்லை.  முப்பது நாற்பது வருடங்களாக பல நூறு சுற்று பேச்சுவார்த்தைகள் பேசி முடிந்துவிட்டன. புதிது புதிதாக பேச்சுவார்த்தைக்கு அமர்வதை விடுத்து, இதுவரை நடந்த நிகழ்வுகளின் அடிப்படையில் இனி எதுபற்றி பேசப்போகிறோம் எது அடிப்படை என்பதை வரையறுத்து தெரியப்படுத்தவேண்டிய தேவை தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகளுக்கு மட்டும்தான் உண்டு.

கடந்த முக்கால் நூற்றாண்டு காலம் சிங்கள அரசியல்வாதிகளின் ஏமாற்றை புத்தகங்களில் படித்தறிந்த சிறியவர்கள் அளவுக்குக்கூட பல ஆண்டுகளாக அரசியலில் முனைப்புடன் முன்னிற்கும் கூட்டமைப்பின் தலைமை அறிந்து கொள்ளவில்லையானால் இனி எதைப்புரிந்துகொள்ளப்போகின்றனர்.

2011செப் ஜெனீவாவில் இடம்பெற இருந்த மனித உரிமை ஆணைக்குழுவின் 18 வது  கூட்டத்தொடரை ராஜபக்க்ஷ தரப்பு இடையூறு இன்றி சந்திக்கவேண்டும் என்பதற்காக, கூட்டத்தொடர் முடிந்தபின்  அரசாங்கம் 13வது சரத்துக்கு மேலே போயும் அனைத்தையும் பேசித்தீர்த்துக்கொள்ளலாம் என சம்பந்தருக்கு ஜனாதிபதி மாளிகையில் விருந்து வைத்து வாக்குறுதியளித்திருந்ததும். சம்பந்தர் ஏற்றுக்கொண்டு மகிழ்வுடன் விருந்துண்டு வந்ததையும் நினைவு கூரவேண்டிய ஒன்றாகும்.

அதன்பின் சம்பந்தன் அவர்கள் கனடாவில் சுற்றுலாவின்போது "நாங்கள் வடக்கு கிழக்கை எங்களுக்கு சொந்தமானதென்று சொல்லவில்லை" என்று கூறி ராஜபக்க்ஷவை குளிர்வித்ததையும் மறந்துவிடமுடியாது.

இந்தியா சொல்லுவதை வரவேற்கிறோம், வரவேற்கிறோம், வரவேற்கிறோம்,. என்று யாரை சம்பந்தர் திருப்திப்படுத்துகிறார் என்பதும் அவரைத்தவிர வேறு எவருக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது. இது தனிப்பட்ட ஒருசில அரசியல்வாதிகளின் விருப்பு வெறுப்புக்குட்பட்ட தனிப்பட்ட பிரச்சினையும் அல்ல. பின்னணியில் உள்ள பல ஆயிரம் உயிர் அர்ப்பணிப்பு தியாகம் சம்பந்தப்பட்ட உயிரோட்டமான நீண்டகால உரிமைப்பிரச்சினை.

தமிழினத்துக்கு எதிரான கொள்கையுடைய இந்திய மத்திய காங்கிரஸ் அரசு 2009ல் ஸ்ரீலங்கா அரசுடன் இணைந்து இன அழிப்பு செய்ததை மறந்துபோவதா. தமிழகத்து தமிழனின் முல்லை பெரியாறு நீர் உரிமையை நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த காங்கிரஸ் அரசு தடையாக நின்றுகொண்டிருக்கிறது. கடலில் ஸ்ரீலங்கா படையினரால் கொல்லப்படும் மீனவன் தமிழன் என்பதால் ஸ்ரீலங்கா அரசுக்கு சார்பாக விஷமம் பண்ணுகிறது. சொந்த நாட்டில் வாழும் மக்கள் தமிழர்கள் என்பதால் வஞ்சகம் செய்யும் காங்கிரஸ் அரசு நண்பன் ராஜபக்க்ஷவை சிக்கலுக்குள்ளாக்கும் வகையில் கடல்கடந்து தனது நிர்வாகத்துக்குட்படாத ஈழத்தமிழனுக்கு உதவிவிடுமா என்பதை மனதிலிருத்தி இந்தியாவை நம்ப முயலவேண்டும்.

கேரளாக்காரன் நடை உடை உணவு வழக்கத்தில் சிங்களவனைப்போல இருப்பதால் முல்லை பெரியாறு நீரை தமிழகத்துக்கு கொடுக்கக்கூடாது என்பதில் மத்திய காங்கிரஸ் அரசு மலையளவு உறுதியுடன் மலயாளிக்கு சாதகமாக துணை நிற்கிறது. கன்னடக்காரனின் எழுத்துரு சிங்களத்தை ஒத்திருப்பதால் காவிரி நீரை தமிழனுக்கு வழங்கத்தேவையில்லையென காங்கிரஸ் அரசு தமிழனை அலைக்கழிக்கிறது.

இந்திய துணைக்கண்டத்தில் ஒரு அங்கமாக இருக்கும் தமிழகத்து தமிழனே பிரிந்து போகுமளவுக்கு ஆவேசப்பட்டு உரிமைக்காக தொடர்ந்து போராடுகிறான் நிலமை அப்படியிருக்கும்போது சூதுவாது அறியாத சம்பந்தர் ஐயா அவர்கள் இந்தியா அனைத்தையும் பெற்றுத்தரும் இதனை பெற்றுத்தரும் அதை வரவேற்கிறோம் என தன்னையும் ஏமாற்றி தமிழனையும் ஏமாற்றும் கொள்கையை திரும்பப்பெற்று மறு ஆய்வுக்குள் செல்லவேண்டுமென சுட்டிக்காட்ட ஒவ்வொரு ஈழத்தமிழனுக்கும் உரிமை உண்டு.

செப், ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடருக்கு முன்னதாக அமெரிக்கா தெரிவித்த கருத்தையும் தமிழர் அரசியல் சக்திகள் நினைவு கூரத்தக்கது. "சிங்கள அரசிடம் இருந்து தீர்வைப் பெற போர்க்குற்றத்தைப் பாவியுங்கள் கூட்டமைப்புக்கு அமெரிக்கா ஆலோசனை கூறியிருந்தது. அந்த அறிவுரையை பின்பற்றினால் ஆகக்குறைந்தது குற்றவாளிகளையாவது தண்டனைக்குட்படுத்த உலகத்தின் ஆதரவு கிடைக்க வழியிருக்கிறது.

2012 ஜன, வரவிருக்கும் அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா சில மாதங்களுக்கு முன் ஐ.நா.சபையில் உரையாற்றிய போது, தூக்கக்கலக்கத்தில் இந்தியாவின் அறிக்கையை படிப்பதற்கு பதிலாக வேறொரு நாட்டின் அறிக்கையை எடுத்து வாசித்து பரபரப்பை ஏற்படுத்தியவர்.

ஒரு பாராளுமன்ற கூட்டத்தின்போது, பாகிஸ்தானை சேர்ந்த டாக்டர் முகமது காலில் சிஸ்டி(80), உடல்நிலை பாதித்திருந்த தனது தாயாரை பார்ப்பதற்காக  1992ல் இந்தியா வந்தபோது, கொலை வழக்கில் சிக்கினார். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அவர், ராஜஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அந்தக்கைதிக்கு கருணை காட்டும்படி இந்திய உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்தது

‘80 வயது சிஸ்டியின் பிரச்னையை பாகிஸ்தான் அரசு கருணையுடன் பரிசீலித்து நல்ல முடிவு எடுக்கும் என்று நம்புகிறேன். அவரை விடுவிப்பது பற்றி தூதரக மட்டத்தில் பேசுவோம் என ஞாபக மறதியில் முரண்பட்ட விதமாக பாராளுமன்றத்தில் புலம்பியவர்தான் கிறுஷ்ணா.   அவர் ஈழத்தமிழர்கள் பற்றி எந்தளவு புரிந்து வைத்திருக்கிறார் என்பதும் எவ்வளவு பொறுப்புள்ளவர் என்பதற்கும் அவ் இரண்டு சம்பவங்களும் நல்ல சான்று.

மீண்டும் ஒருமுறை தமிழனின் நினைவுக்கு: அமெரிக்கா கூறியதுபோல "சிங்கள அரசிடம் இருந்து தீர்வைப் பெற போர்க்குற்றத்தைப் பாவியுங்கள்" திரும்பத்திரும்ப அந்த வாக்கியம் நினைவுக்கு வந்தால் நல்லது. அதில் உண்மையும் இருப்பதாகவே படுகிறது.

ஈழதேசம் இணையத்திற்காக,
கனகதரன்.
நன்றி ஈழதேசம் இணையம்.

Sunday, January 1, 2012

வரும் ஆனால் வராது. இந்தியாவுடன் இணைந்து காலம் கடத்த அடுத்த தந்தரம்.

தரமுடியாது என்று அறிவித்தாலும் காணி அதிகாரங்கள் குறித்தே பேச்சு; கூட்டமைப்புக்கு சமிக்ஞை காட்டியது மஹிந்த அரசு
news
வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது என்று ஜனாதிபதியும் அமைச்சர்களும் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்து வந்த போதும், கூட்டமைப்புடனான அடுத்த சந்திப்பின் போது காணி அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வது குறித்தே விரிவாக ஆராயப்படும் என்று தெரிகின்றது. 

அரசு கூட்டமைப்பு இடையிலான அடுத்த கட்டப் பேச்சு எதிர்வரும் 17,18,19ஆம் திகதிகளில் நடை பெற உள்ளது. இதன்போது காணி அதிகாரங்கள் குறித்தே பேசுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இரு தரப்பினரும் உறுதியாகத் தெரிவித்தனர். மாகாண சபைகளுக்கு காணி அதிகாரங்களைத் தருமாறு கூட்டமைப்பு பேச்சின் போது அதிக அழுத்தங்களைக் கொடுக்கும் என்றும் அதன் தலைமை தெரிவித்தது. 
 
அதேவேளை, காணி அதிகாரங்களைப் பகிர முடியாது என்று அரச தரப்பினர் வெளியே பேசிக் கொண்டாலும் அது குறித்துத் தொடர்ந்து பேசி ஓர் இணக்கப்பாட்டுக்கு வரலாம் என்ற நெகிழ்வுப் போக்குக்கான சமிக்ஞைகளை அரச பேச்சுக் குழுவின் தலைவரான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூட்டமைப்பினருக்குக் காட்டியிருக்கிறார் என்று அரச வட்டாரங்கள் தெரிவித்தன. 
 
இந்தப் பேச்சுக்கள் இடம்பெறும் அதே காலப் பகுதியில் இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.எம்.கிருஷ்ணா கொழும்பு வருகிறார். இனப் பிரச்சினைக்கான தீர்வு இழுபட்டுப் போவது குறித்து இரு தரப்பினருடனும் கலந்தாலோசிப்பதே அவரது இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம் என்று புதுடில்லித் தகவல்கள் கூறுகின்றன. 
 
இத்தகைய ஒரு சூழலில் காணி, பொலிஸ் அதிகாரங்களைத் தரமுடியாது என்று பேச்சு மேசையில் ராஜபக்ஷ அரசு விடாப்பிடியாக இருப்பது சாத்தியமற்றது என்று கொழும்பில் உள்ள மேற்குலக ராஜதந்திரிகள் சிலர் சுட்டிக்காட்டினர். 
 
இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அடிப்படையாக ஜனாதிபதி அடிக்கடி குறிப்பிடும், அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தில் மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. எனினும் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக மாறி மாறி ஆட்சிக்கு வந்த மத்திய அரசுகளால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. 
நன்றி உதயன்.