Monday, January 30, 2012

திரும்பவும் இறந்த உடலை தூக்கிக்கொண்டு வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது.


கூட்டமைப்பின் தேவை தனிநாடே அவர்களுக்கு இல்லை அதிகாரம்; தெரிவுக்குழுவின் விருப்பே தனது விருப்பமும் என்கிறார் ஜனாதிபதி
news
 அரசியல் தீர்வொன்றை வழங்குவதில் நாடாளுமன்றத்தின் பெரும் பான்மை விருப்பமே எனது விருப்பம். 13 பிளஸ் என்ற எனது நிலைப்பாடு புதிய தீர்மானமல்ல. இதனை நான் அன்றிலிருந்து கூறிவருகிறேன். தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பினருக்குத் தனிநாடு ஒன்றே தேவையாக இருக்கிறது. தனிநாடு ஒன்றுக்குரிய அதிகாரத்தை நாம் கொடுக்கவே மாட்டோம். அது தான் எமது நிலைப்பாடு. இவ்வாறு தெரிவித்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.  

நேற்று நடைபெற்ற பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி மேலும் கூறியவை வருமாறு:
 
நியாயமான அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கான ஆணையை மக்கள் எனக்கு வழங்கியுள்ளனர். மஹிந்த சிந்தனையின் 54ஆம் பிரிவில் நாம் இதனைத் தெளிவாகக் கூறியுள்ளோம். இதன்படி நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. 
 
13ஆவது திருத்தம் இப்போதுள்ள விடயம் என்பதால் அதற்கு மேல் பேச்சு நடத்தத் தெரிவுக்குழுவிற்குச் செல்லவேண்டும். 13 பிளஸ் என்பது புதிய விடயம் அல்ல. இதனை முன்னர் கூட இந்தியாவிடம் நான் கூறியிரு க்கிறேன்.
 
 
 
 
* பொலிஸ் அதிகாரத்தைக் கொடுத்தால் என்னால் பெந்தரைக்கும் போகமுடியாது.
* 30 வருடகால பிரச்சினையை என் ஒருவனால் தீர்க்கமுடியாது. 
* தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பது குறித்து அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சு.
*தெரிவுக்குழுவிற்கு வருவதற்கான எண்ணமே கூட்டமைப்பிடம் இல்லை. 
* 13 பிளஸ் பற்றி அறிவிக்க கிருஷ்ணாவிடம் சம்மதித்தேன். 
* 13 பிளஸ் புதிதான விடயமல்லவே.
* இனவாதத்தைக் கக்குகின்றன தமிழ்ப் பத்திரிகைகள். 
 
 
 
 
 
13 பிளஸ் பற்றி என்னுடன் பேசிய இந்திய அமைச்சர் கிருஷ்ணா,  "அது குறித்து பகிரங்கமாக  அறிவிக்கவா'' என்று என்னிடம் கேட்டார். நான் சரி என்றேன். ஏனெனில், இது புதிய விடயமல்ல. 13 பிளஸ் பற்றி அல்லது காணி, பொலிஸ் அதிகாரங்கள் பற்றி சில அமைச்சர்கள் என்ன கூறினாலும், நியாயமான ஓர் அரசியல் தீர்வு பற்றிக் குறிப்பிட்டுள்ள மஹிந்த சிந்தனையை அவர்கள் ஏற்றுக்கொண்டிருப்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. பொலிஸ் அதிகாரத்தைக்  கொடுத்தால் என்னால் பெந்தரைக்குக்கூடப் போகமுடியாது. சம்பந்தன் வேண்டுமானால், அவரின்இடங்களுக்குச் செல்லக்கூடியதாக இருக்கும்.
 
அவர்களுக்குத் தனிநாடு ஒன்றுதான் தேவை. அவர்களின் படிப்படியான செயற்பாடுகள் இதனைத்தான் கூறுகின்றன. அன்றிருந்த அடிப்படையிலிருந்து அவர்கள் இன்னமும் விலகவில்லை. இப்போது கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர்களில் பலர் அன்று புலிகளுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புகளை வைத்திருந்தனர். கூட்டமைப்பு உறுப்பினர்களின் செயற்பாடுகளைக் கண்காணிக்கவென உறுப்பினரொருவரைப் புலிகள் நாடாளுமன்றத்திற்கு அனுப்பிவைத்திருந்தனர். இதுதான் வரலாறு.
 
என்னால் மட்டும் இயலாது
13 பிளஸ் அல்லது செனட்சபை குறித்து பேசுவதாயின், முதலில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்குப் பெயர்களைக் கொடுக்கவேண்டும். ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள் பெயர்களைக் கொடுத்துள்ளன. இதுபோல, ஐ.தே.க., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி., ஜே.வி.பி. மாற்றுக்குழு என்பனவும் பெயர்களைக் கொடுக்கவேண்டும். 
 
நாம் ஜனநாயக ரீதியில் அனைவரிடமும் பேசவேண்டும். நான் தனியே தீர்வொன்றை கொடுக்க முன்வந்தால், நிச்சயம் அதற்கு எதிர்ப்பு வரும். ஒருவர் ஒன்றைச் செய்ய முற்பட்டால் எல்லோரும் அதனை எதிர்ப்பர். அதுதானே வரலாறு. 13 பிளஸோ, 13 மைனஸோ எது வேண்டுமானாலும் என்னால் தனித் தீர்மானம் எடுக்கமுடியாது. இது தேசியப் பிரச்சினை. எனது தனிப்பட்ட பிரச்சினை அல்ல. 
 
ஊடகங்கள் இந்த விடயத்தில் பொறுப்புடன் செயற்படவேண்டும். தமிழ்ப் பத்திரிகைகள் தமிழ் இனவாதத்தைக் கக்குகின்றன. சில பத்திரிகைகள் தவறான கொள்கையில் உள்ளன. அது கூடாது. ஆட்சி மாற்றமொன்று தேவையானால், அதை தேர்தல் வரும்போது பார்க்கலாம். அதைவிடுத்து, உலகத்திற்குத் தவறான செய்திகளைச் சொல்லவேண்டாம். நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் விவகாரம் மற்றும் தீர்வு பற்றிய இறுதி முடிவை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் எடுப்பது பற்றியும் அனைத்துக் கட்சிகளையும் அழைத்துப் பேசவுள்ளோம். இன்னும் சில தினங்களில் இது நடக்கும்.
 
எல்லோருடனும் பேசுவோம்
நாடாளுமன்ற ஜனநாயகம் பற்றிப் பேசுவோர் இன்று நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்குப் பெயர்களைத் தராதது ஏன்? இது ஒருவருக்கொருவர் பேசித் தீர்வு காணமுடியாத விடயம். அனைவரும் பேசுவேண்டும். குறைந்தபட்சம் உங்களது பெயர்களை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்குக் கொடுங்கள் என்றுதான் கூறுகிறோம். புலிகள் செய்த வேலையைத்தான் கூட்டமைப்பு தொடர்ந்து செய்கிறது.
ஆனாலும் நாம் நேர்மையாக விட்டுக்கொடுத்து செயற்படுகின்றோம். 30 வருடகால பிரச்சினையை தனி ஒருவரால் தீர்க்கமுடியாது. அப்படியான தீர்வை மக்கள் ஏற்கமாட்டார்கள். மக்கள் ஏற்காவிடின் தீர்வில் அர்த்தமில்லையே. தெரிவுக்குழுவிற்கு வராமலிருப்பது பிரச்சினைக்குத் தீர்வாகாது. தெரிவுக்குழுவிற்கு வருவதற்கு அவர்களுக்கு எண்ணம் இல்லை.  
 
சிலவேளை காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதாக நாம் கூறினால் நிதி அதிகாரம் இல்லையே என்று அதையும் கேட்பர். நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையானோரின் விருப்பமே, தீர்வு விடயத்தில் எனது விருப்பமும் கூட என்று குறிப்பிட்டார் ஜனாதிபதி. 
 
நன்றி உதயன்.

No comments: