வன்னியில் நடந்த மிகக்
கொடூர மான போரைத் தொடர்ந்து வடக் குப் பிரதேசம் ஆதரவற்ற சிறுவர் களால்
நிரம்பி வழிகின்றது. நாட்டின் வேறு எந்தப் பகுதியிலும் இல்லாத வகையில்
வடக்கிலுள்ள 5 மாவட்டங்களிலும் 4,300 சிறுவர்கள் பராமரிப்பு இல்லங்களில்
தங்கவைக்கப்பட்டுள்ளனர். வசதி குறைந்த பெற்றோரால் சிறுவர் இல்லங்களில்
சேர்க்கப்பட்டுள்ள சிறுவர்கள் இவர்களுள் அடங்கவில்லை.
நாட்டிலேயே அதிகூடிய சிறுவர் இல்லங்கள்
இயங்கும் பிரதேசமாகவும் வடபகுதியே உள்ளது. 91 சிறுவர் இல் லங்கள் இங்கு
இயங்குகின்றன. முறைப்படியான அனுமதி பெற்றுப் பதிவு செய்யப்படாத 44
இல்லங்களும் அவற்றி னுள் அடக்கம்.
சிறுவர் இல்லங்களில் தங்க
வைக்கப்பட்டுள்ள சிறுவர்களில் 729 பேர் தாய், தந்தை இருவரையும்
இழந்துள்ளனர். மீதி 3,600 பேரும் தாய் அல்லது தந்தையில் ஒருவரை
இழந்துள்ளனர்.
இவர்களுக்கு மேலதிகமாக 9,678
சிறுவர்கள் அவர்களது உறவினர்கள் மற்றும் பாதுகாவலர்கள் வசம்
ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் 1,366 பேர் தாய், தந்தை இருவரையும்
இழந்தவர்களாவர். மீதி 8,312 பேர் தாய் அல்லது தந்தையில் ஒருவரை
இழந்துள்ளனர்.
"இந்தச் சிறுவர்களில் 80
விழுக்காட்டிற்கும் அதிகமானவர்கள் போர் காரணமாகவே தமது பெற்றோரை இழந்து
நிராதரவான நிலைக்கு வந்துள்ளனர். ஆனால், இவர்களில் எத்தனை விழுக்காட்டினர்
வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரில் அநாதரவாக்கப்பட்டனர் என்பதைத் தெரிந்து
கொள்வதற்கான சரியான புள்ளிவிவரங்கள் இல்லை. எனினும் கணிசமானவர்கள்
பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பதை ஊகிக்க முடிவது இயல்பானது'' என்று
சிறுவர் பாதுகாப்புத் துறை சார்ந்த உயர் அதிகாரி ஒருவர்
தெரிவித்தார்.
நன்றி உதயன்
|
Saturday, January 14, 2012
வடக் குப் பிரதேசம் ஆதரவற்ற சிறுவர்களால் நிரம்பி வழிகின்றது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment