Sunday, January 30, 2011

சினிமா பாடலாசிரியை, அக்கா தாமரை அவர்களுக்கு ஒரு ஈழ தமிழச்சியின் ஆதங்க மடல்,

அன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு வணக்கம்!நான் தமிழீழம், கிளிநொச்சி,யை பிறப்பிடமாகக்கொண்டவள், உங்களுடைய "வசீகரா என் நெஞ்சினிக்க", என்ற பாடல் எல்லோரையும் கவர்ந்ததுபோல் என்னையும் மிகவும் கவர்ந்திருந்தது, அந்தப்பாடலின் கவி நயமும் இனிமையும், தவிர வேறெதையும் நான் அறிய முயற்சிக்கவுமில்லை, ஆனால் அப்பாடலில் அப்படி ஒருவித்தியாசம் இருப்பதாக மனது உணர்ந்து கொண்டது, சிலகாலங்களுக்குப்பின் அந்தப்பாடலை எழுதியது ஒரு பெண்கவிஞர் என்றும், பெயர் தாமரை என்றும் படித்து அறிந்தேன், மனம் மகிழ்ச்சியை தோற்றியது, அந்த மகிழ்ச்சி ஏன் தோன்றியதென்பதுகூட எனக்குத் தெரியவில்லை.

நவீன கலை இலக்கியத்துறையில் குறிப்பிடும்படி தமிழகத்து பெண்கள் சிலர் இருந்தாலும், அனேகர் பட்டிமன்றங்களிலும் மேடை கவியரங்குகளில் மட்டுமே தங்களை வெளிப்படுத்த முடிந்திருந்த வேளையில், சினிமாவில் அதுவும் ஆண்களின் ஆதிக்கத்திலிருந்த ஒரு துறைக்குள், புரட்சிகரமாக ஒரு பெண் பாடலாசிரியர், வியப்பும் பெருமையுமாக இருந்தது,,,, தொடர்யுத்தத்தினால் மூழ்கிக்கிடந்த ஈழத்தவள் நான் என்பதால், மிக அரிதாக காணக்கிடைக்கும் சினிமா, தொலைக்காட்சி, சில புத்தகங்கள், போன்ற ஊடகங்கள் மூலம் அறிதல் தவிர வேறு வழியில் தமிழகத்து கலையை அறிந்துகொள்ளக்கூடிய சந்தற்பமுமில்லை, இப்போ புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடொன்றில் வாழ்கிறேன்.

தாங்கள் 20.01.2011 திகதியிடப்பட்டு சீமானுக்கு என்று குறிப்பிடப்பட்டிருந்த மடல் வாசிக்கும் சந்தற்பம் கிடைத்தது. வாசித்தேன், சிந்தித்தேன். நீங்கள் சீமானுக்கு,, என்று விளித்திருக்கும் மடல், வெகுஜன ஊடகங்களில் வெளியிடப் பட்டிருப்பதிலிருந்து ஏதோ வில்லங்க விளையாட்டு என்பதை மட்டும் மனம் கீச்சுமூச்சு காட்டி உணர்த்தியது, தாங்கள் சீமானுக்கு அனுப்பிய மெயில், தவறுதலாக ஊடகங்களிடம் சிக்கிவிட்டதா, அல்லது நீங்கள்தான் பகிரங்க மடல் என்று குறிப்பிடாமல் ஒருதலைப்பட்சமாக யாரோ சிலருக்கு உதவும் நோக்கில் அந்த மடலை ஊடகங்களுக்கு தந்திருந்தீர்களா என்று சுய விசாரணை மனதுக்குள் நடத்திக்கொண்டிருக்கிறேன்.

தாங்கள் கிளப்பியிருக்கும் கேள்விகளுக்கும் ஆதங்கங்களுக்கும் ஏதாவது தீர்வு எட்டமுடியுமா, அல்லது ஏதாவது முயற்சியாவது செய்யலாமா என்றால், அவை தமிழகத்திலுள்ள தமிழ் மக்களால்த்தான் ஈட்டமுடியும், அதற்கும் அதிகபட்சம் உங்களைப்போன்ற, தமிழகத்து உணர்வாளர்கள் தான் ஒன்று திரண்டு நல்லமாற்றத்தை தோற்றுவிக்கவும் வேண்டும், களமும் அப்படித்தான் அமைந்திருக்கிறது, அதற்கு நீங்களும் முயற்சிக்கிறீர்கள் என்பது தெரிகிறது.

ஆனால் நீங்கள் எந்தக்கட்சியையும் சார்ந்தவளில்லை என்றும், இனியும் இப்படியே இருக்க விரும்புகிறேன் என்றும் குறிப்பிட்டிருந்தீர்கள், அப்படியெனில் உங்களால் எப்படி சமூகம் சார்பாக அரசியலில் ஒரு முடிவுக்கு வரமுடியும் என்ற கேள்வியும் என்னுள் எழுகிறது, மக்கள் நலனுக்காக ஏதோ ஒன்றை மாற்ற வேண்டுமென்ற துடிப்பு வரும்போது, மறுபுறத்தே நின்று பற்றிப் பிடித்தால்த்தானே மாற்றத்தை காணமுடியும், அதை தவிர்த்து அதிகாரத்தை கைப்பற்றக்கூடியவர்களிடம் ஏன் பொல்லாப்பு என்று ஒரு பக்கச்சார்பான கருத்தையும் வெளிப்படுத்தி, நான் கட்சி சார்பற்றவள் என்று நழுவல்போக்கை கடைப்பிடிக்கலாமா? என்பதும் என் சிறுபுத்திக்குள் கேள்விக்குறியாகி குடைகிறது.

மக்கள் ஜனநாயகம், என்று கூறிக்கொள்ளும் ஒரு நாட்டில், கண் கொண்டு பார்க்கமுடியாத ஊழலும், லஞ்சமும், மன்னராட்சியை ஒத்த மனித வழிபாட்டு கிலிசகேடுகளும், கலாச்சார சீர்கேடுகளும் கட்டப்பஞ்சாயத்தும், ஆட்சியாளர்களால் அறிமுகப்படுத்தி நீரூற்றி வளர்க்கப்படும்போது, தட்டிக்கேட்கக்கூடிய இடத்தில் இருப்பவர்தானே தட்டிக்கேட்க முடியும், மக்களுக்கு சரியான வழிமுறைகளை சொல்லிக்கொடுக்கும் கடமை அவர்களுக்குத்தானே உண்டு, குறைந்தபட்ஷம் மற்றவர்களுக்காக அல்லாவிட்டாலும் தமது சொந்த வாரிசுகளின் எதிர்காலத்தை மனதில்க்கொண்டாவது, சரியில்லாதவற்றை எதிர்த்து சரியெனக்காணப்படும் வலுவுள்ள சக்திக்குத்துணை நின்றால்த்தானே மாற்றத்தைக்காண முடியும்.

தமிழ்நாட்டு அரசியல் பற்றிப்பேச என்னிடம் அவ்வளவு அரசியலறிவில்லை, அத்துடன் தமிழகத்தின் உள்ளூர் அரசியலில் மூக்கு நுழைப்பதும் எனக்கு சரியாக இருக்காது, இருந்தாலும்,, அரசியல் ஒன்று இல்லாது ஈழத்தில் நாதியற்று துடித்த எம்மினத்துக்காக, இன-மொழி-மான-உணர்வு கொண்டு, ஈடுபாட்டுடன் நீங்கள் எங்களுக்காக குரல்கொடுப்பதும், உங்களைப்போல இன்னும், இன உணர்வுள்ள பலர் காலாகாலமாக தொடர்ந்து எமக்காக போராடிவருவதும், தமிழ்நாட்டு தமிழர்கள் கடலால் பிரிக்கப்பட்டிருந்தாலும் தமிழால், உறவுமுறையால், எங்கள் உறவினர்தான் என நாங்கள் தொடர்ந்து நம்பிவருகிறோம், அந்த நம்பிக்கையின் அடிப்படையில் "தாமரையும்" சரி, சீமானும் சரி, வைகோவும் சரி, ஐயா நெடுமாறன் அவர்களும் சரி, இன்னும் உணர்வாளர்கள் எவராகினும். எவரையும் நாங்கள் பிரித்துப்பார்த்ததுமில்லை, ஆனால் நாங்கள் பட்ட மிகவும் கசப்பான மானுடம் காணாத கொடுமையான அனுபவங்களை, கண்ணால் காணாவிட்டாலும் கேள்விப்பட்ட வரையிலாவது எல்லோரும் புரிந்துகொள்ளுவீர்கள் என்றே நம்புகின்றேன்.

தமிழகம் தேர்தலை சந்திக்க இருக்கும் இந்தக்குறுகிய தருணத்தில், ஜெயலலிதாவையும் அ.தி.மு.க வையும் சீமான் ஆதரிப்பது எங்கள் நெஞ்சங்களில் ஆயிரம் இடிகளை ஒன்றாக இறக்கியுள்ளது. என்று நொந்து குறிப்பிட்டிருக்கிறீர்கள்!. அதற்கான காரணமாக கடந்தகாலங்களில் ஜெயலலிதா நடந்துகொண்ட விதத்தையும் குறிப்பிட்டு ஞாபகப்படுத்தியிருந்தீர்கள். உங்கள் ஆதங்கம் ஆத்திரம் நியாயமானதாக இருந்தாலும், (நீங்கள் ஈழத்தமிழர்கள் பற்றிய அரசியலை காரணம் காட்டியதால்) ஒன்றை குறிப்பிட்டுக்காட்டக் கடமைப்பட்டுள்ளேன் ஜெயலலிதா அவர்கள் பற்றி எங்களுக்கும் கசப்பான அனுபவம் உண்டு என்பதும் மறுக்கவில்லை,

ஆனாலும் காலாகாலமாக ஜெயலலிதா விடுதலைப்புலிகளை நேரடியாகவே எதிர்த்து அரசியல் செய்து வந்திருக்கிறார், ஆனால் கருணாநிதி நல்லவர்போல் பாசாங்கு செய்து ஜெயலலிதாவின் புலி எதிர்ப்பை தனக்குச்சாதகமாக பயன்படுத்தி, வஞ்சகமாக நடந்துகொண்டது ஒன்று இரண்டல்ல, 2009 யுத்த இறுதியிலும் கொடு வஞ்சனை புரிந்து கோல்லப்பட்ட 100,000, மேலான தமிழர்களின் ஒவ்வொரு படுகொலையிலும் மறைமுகமாக, நேரடியாக கருணாநிதி சம்பந்தப்பட்டிருக்கிறார், இதற்கான ஆதாரங்கள் நிறையவுண்டு.

ராஜபக்க்ஷ சிங்களவன், ஆனால் கருணாநிதி தன்னை தமிழன் என்று சொல்லுகிறார், ஈழத்தமிழினத்துக்கு அரசியலைத் தாண்டி ராஜபக்க்ஷமீது எவ்வளவு வெறுப்பு இருக்கிறதோ, அதைவிடவும் கருணாநிதிமீது இரட்டிப்பு வருத்தமும் கோபமும் இருக்கிறது, சமீபத்தில் ராஜபக்க்ஷவுக்கு எதிராக இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் போர் குற்றத்தின் மூலம் மனித உரிமைமீறல், சித்திரவதைக்குட்படுத்தல் ஆகிய குற்றங்களுக்காக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது, அதே குற்றச்சாட்டுக்கள் கருணாநிதிமீதும் இருக்கிறது, படிப்படியாக இலங்கை ஆட்சியாளர்களுக்கு எதிராக வழக்குகளை தொடுத்தகையோடு கருணாநிதிக்கு எதிராகவும் நிச்சியமாக வழக்குப்பதிவு செய்யும் முனைப்போடுதான் புலம்பெயர் தமிழர்கள் இருக்கிறார்கள், அப்படி எவரும் முயற்சிக்காவிட்டாலும் நானாவது கருணாநிதிமீது படுகொலை, கொலைக்கான சதி செய்தவற்றிற்காக வழக்கு தாக்கல்செய்யும் நோக்கோடு பல ஆதாரங்களை சேகரித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

காங்கிரஸ் கட்சியின் மத்திய அரசின் உறுதுணையுடன், தடைசெய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களால் கொன்று குவித்தது போக மீந்திருந்த மக்களை கருணாநிதி தன் சுயநலன் கருதி பயன்படுத்திய, அவரது அரசியலில் மிகவும் கொடுமையான ஒன்றை நீங்கள் மறந்திருந்தாலும் ஞாபக்கப்படுத்த ஒரு சம்பவத்தை கூறுகிறேன்.

போரின் உச்சக்கட்டத்தில் களத்திலிருந்த என் உறவுகள் மருந்து. உணவு. குடிநீர். உடை. ஏதுமின்றித்தவித்தபோது அன்னிய தேசத்தில் வாழும் நாங்கள், மருந்து மற்றும் குழந்தைகளுக்கான பால், குடிநீர், சொற்ப உணவுப்பொருட்களை சேகரித்து "வணங்காமண்" என்ற கப்பல் மூலம் ஈழத்துக்கு அனுப்பிவைத்தோம், கப்பல் போய் சேர்வதற்குள் ஈழம் எரித்துமுடிக்கப்பட்டு விட்டது, கப்பல் செல்லுமிடமின்றி கடலில் தத்தளித்தது, அப்போ புலம்பெயர் தேசங்களிலிருந்த சில அமைப்புக்கள் தமிழக அரசை நம்பினர், கப்பலிலுள்ள பொருட்களை ஊனமுற்று மனநலன் பாதிக்கப்பட்டு வக்கரித்துக்ப்போய் "பயித்தியம்பிடித்த நாயின் நிலையில்", தடுப்பு பட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த மக்களிடம் சேர்க்கும்படி, "மரமான" கருணாநிதியிடம் கருணைக்கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் கருங்கல்லான, கருமி கருணாநிதி, அப்பொருட்களை அந்த பாவப்பட்ட மக்களிடம் சென்றுசேர அனுமதிக்கவே இல்லையே?. இதை நீங்கள் மறந்திருக்கக்கூடும், எங்களால் எப்படி அக்கா இப்படி ஒரு கொடூரனை மறக்கமுடியும்?,,மன்னிக்க முடியும்,

இந்தப்பழியை வேறு எப்படித்தான் தீர்க்கமுடியும்?, கோர்ட்டா, கச்சேரியா, தமிழகத்தில் உள்ள தகுதிவாய்ந்த அரசியல்ச்சக்தி ஏதாவது எம் இனத்திற்கு உதவியா நிற்கிறது? காங்கிரஸின் ஆயுதத்திற்கு பலியான ஒவ்வொரு தமிழரின் கொலைக்கும் கருணாநிதிதானே முழுக்காரணம், சோனியா இத்தாலிக்காரி, மன்மோஹன் பொம்மையான பஞ்சாபி, பிரணாப்முகர்ஜி ஹிந்திக்காரன், சிவசங்கர்மேனன் மலயாளி; நாராயணன் மலயாளி, சிதம்பரமும் கருணாநிதியும் வேட்டிகட்டிய தமிழர்கள், இந்த இருவரும் சேர்ந்து வேடங்கட்டி நடத்திய நாடகத்தால், குடிதண்ணீரும் இல்லாமல் கிடந்த என் தாயும், வயிற்றில் குழந்தையை சுமந்த சகோதரியும், அப்பனும் அண்ணன் தம்பியிம் ஷெல்க்குண்டிலும், எரிகுண்டிலும் ராணுவத்தின் ரவைகளிலும் கருகிச்சாகும்போது, தமிழகத்தில் இந்த நாசக்காரர்கள் என்ன செய்துகொண்டிருந்தனர் என்பதை பார்த்தவர்தானே நீங்கள், இப்பொழுது இரண்டு பொழுது விடிவதற்குள், அரசியலில் இல்லாத அரசியல்வாதியாக, சீமானுக்கு கடிதமெழுதி இணையத்தளங்களில் அழுகிறீர்களே, எங்களின் அவலத்தை கொஞ்சமாவது சிந்தித்தீர்களா?

உள்நோக்கம் எதுவுமில்லாமல் உண்மையாக ஈடுபாட்டுடன் நீங்கள் நடந்துகொள்ளுபவராக இருந்தால், குறிப்பிட்ட அந்தக் கடிதத்தை சீமானிடம் நேரடியாக சேரும் வண்ணம் அவருக்கு அனுப்பவேண்டியதுதானே, அதுதானே முறையும் கூட, அல்லது இவ்வளவு அக்கறையுள்ள நீங்கள் சீமானை சந்தித்து நேரடியாக இதுபற்றி விவாதித்து முடியாத பட்சத்தில் ஒரு அறிக்கையாக நடந்த உண்மைகளை வெளியிட்டிருக்கலாமே, அதுதானே தர்மம்.

உங்களைப்போல பலரிடம் என் இனமும் சரி, எங்கள் தலைவனும் ஏமாற்றப்பட்டிருக்கிறோம், என்பதை மிகவும் வேதனையோடு தெரியப்படுத்துகிறேன்.

எனது சிறுவயதில், தமிழகத்திலிருந்து வெளிவரும் ஜூனியர் விகடன் இதழில் தோழர் தியாகு அவர்களால் எழுதப்பட்டு, தொடராக வெளிவந்த "சுவருக்குள் சித்திரங்கள்" தொடரை எனது தகப்பனார் படிப்பதை பார்த்திருக்கிறேன், அந்தத்தொடரில் கம்பிக்கூண்டுக்குள் தண்டனைக்கைதியின் உடையுடன் நின்றுகொண்டிருக்கும் ஒரு படம் இன்றும் எனது மனத்திரையில் பதிந்திருக்கிறது, அப்படி பாதிக்கப்பட்ட தியாகு அவர்கள்தான் உங்கள் கணவர் என்பதையும் உங்கள் வாக்குமூலமாகத்தான் எங்கோ படித்தறிந்தேன்.

அதே தியாகு அவர்கள், சீமான் சிறையில் இருந்தபோது சீமானின் விடுதலைக்காக சிரத்தையுடன் பாடுபட்டதும் நான் அறிந்துள்ளேன், அவ்வளவு நெருக்கத்தை சீமானுடன் கொண்டிருக்கும் நீங்கள், சீமானின் நிலைப்பாட்டையும் யதார்த்தமான ஈழமக்களின் நியாயப்பாட்டையும் அறிந்துணர்ந்து பேசி முடிவுக்கு வராமல்,

முற்றுமுழுதாக ஈழமக்களின் அழிவின்பால் உருவாகி ஈழத்துரோகத்திற்கு தண்டனை கொடுப்பதற்காக, காலத்தால் தோற்றப்பட்டு ஒருபெரும்சக்தியாக வளர்ந்து தமிழக அரசியல்வாதிகள் மத்தியில் நடுக்கத்தை உண்டுபண்ணிக்கொண்டிருக்கும், நாம் தமிழர் இயக்கத்தையும், சீமானையும், நீங்கள் வெளியிட்டுள்ள குறுகிய அரசியல்க்கடிதம், பாம்பும் ஏணியும் விளையாட்டில் சீமானையும். ஈழ வக்கிரங்களையும்தள்ளி விடுவதுபோலில்லையா? ஏதோ ஒன்றால் உருவான ஒன்றை முற்றிலும் சம்பந்தமில்லாத ஒன்றிற்கு முண்டு கொடுக்கச்சொல்லுகிறீர்களா?

எங்கள் ஊரில் ஒரு பழங்கதை சொல்லுவார்கள், தெருவில் கிடந்த தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு பலிகொடுத்து வேண்டுதல் நிறைவேற்றினானாம் வழிப்போக்கன் ஒருவன்.

ஜெயலலிதாவையோ, கருணாநிதியையோ நம்பி. எங்கள் தலைவர் பிரபாகரன் அவர்கள் ஆயுதம் ஏந்தவில்லை. ஆனாலும் குறிப்பிட்ட இரண்டு தற்குறிகளையும் அவர் தேவையில்லாமல் எதிர்க்க விரும்பவுமில்லை, இயக்கத்திலிருக்கும் உறுப்பினர்கள் சிலர் இவர்கள் மீது சிலசமயம் ஆத்திரங்கொண்டாலும், தலைவர் கூறும் பதில், அவர்கள் பட்டம் பதவி பணத்துக்காக போராடும் அரசியல்வாதிகள், அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள் நடந்துகொள்ளுவார்கள். அதை விட்டுவிட்டு எங்கள் வேலையை நாம்தான் பார்க்கவேண்டும் என்பார்.

தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு 20 வயதாக இருக்கும்போது கருணாநிதிக்கு வயது 50 , அந்த 20 வயதுகளிலேயே கருணாநிதி பற்றி நன்கு புரிந்துகொண்டு பிரயோசனமற்ற ஒரு தொடர்பாடலையும் தலைவர் பிரபாகரன் கருணாநிதியுடன் வைத்துக்கொள்ளவில்லை.

நீங்கள் கூறுவதுபோல் காங்கிரசை எதிர்க்க, காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் எதிர்த்து பிரச்சாரம் செய்து போட்டிக்கு ஆட்களையும் நிறுத்தி மற்ற இடங்களில் சமரசம் சாதித்தால் எப்படியிருக்கும் என்பதை 2009 பாராளுமன்றத்தேர்தலில் நீங்கள் கண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

எதிரிக்கு எதிரிதான் நண்பன், முதலில் கருணாநிதியை களையெடுக்கவேண்டிய தேவையிருக்கிறது. 2009 ஈழத்தின் இறுதி சங்காரத்தின்போது வைகோவால் ஜெயலலிதாவை தமிழர்களுக்காக குரல் கொடுக்கச்செய்ய முடிந்தது, ஒருநாள் உண்ணாவிரதம் இருத்தமுடிந்தது, தமிழீழத்தை பெற்றுத்தருவேன் என்று சொல்லவைக்க முடிந்தது, குறைந்தபட்சம் ஜெயலலிதாவுடன் கூட்டுவைத்து அரசியல் செய்யும் வைகோ அவர்கள் முற்று முழுதாக ஜெயலலிதா எதிர்த்துக்கொண்டிருக்கும் விடுதலைப்புலிகள் சார்பாக தான் நினைக்கும் அனைத்தையும் செய்ய முடிகிறது, அப்படி இறங்கிவரும் ஜெயலலிதா காலமாற்றத்தையும் யதார்த்தத்தை மனதில்க்கொண்டு மாறுவதற்கான சந்தற்பங்கள் நிறையவே இருக்கின்றன, ஜெயலலிதா பயப்படுகிற அல்லது எதிர்க்கிற விடுதலைப்புலிகளும் இப்போதைக்கு ஈழத்தில் இல்லையென்றாகி விட்டிருக்கிறது, ஈழத்து மக்கள் மீது கருணாநிதியைப்போல ஜெயலலிதா கொலை வெறி கொண்டவராகவும் தெரியவில்லை.

போர்முடிவடைந்து இரண்டு வருடங்களை அண்மிக்கின்றன , போர்முடிந்தபின் ஈழத்தமிழர்களுக்காக கருணாநிதி கொடுத்த வாக்குறுதிகளும் எழுதிய கடிதங்களும் எந்தத்தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் அப்படியே நிலுவையில் கிடக்கின்றன, இந்த நிலையில் திரும்பவும் வாக்குமாறிப்போய்க்கிடக்கும் கொலை வெறி பிடித்த கருணாநிதியின் வெற்றி வாய்ப்புக்கு பரிந்துரைக்கிறீர்களே, உங்களை நினைத்து மிகவும் பரிதாபப்படுவதைத்தவிர வேறு எதுவும் முடியவில்லை.

கருணாநிதியால் இதுவரை ஏதாவது செய்ய முடிந்திருக்கிறதா?. அல்லது அவரால் ஒன்றும் செய்ய முடியாமல்த்தான் இருக்கிறதா?. தமிழகத்தில் அனேகரால் மதிக்கப்படும் அறிவாளி "தமிழருவி மணியன்" அவர்களிடம் சற்று ஆலோசனை செய்து பாருங்கள், தமிழினம் எக்கேடு கெட்டு அழிந்தாலும் தன் குடும்பங்களின் வளர்ச்சிக்காக காங்கிரசை விட்டு விலக அவர் தயாரக இல்லை, என்று கூறுகிறார்,,,,நானும் கூட நானும் கூட என்று கூவிக்கொண்டு கருணாநிதி செய்யும் அதி உச்சமான நரியை வென்ற தந்திரத்தை நீங்கள் அறிந்தொகொள்ளாததற்கு வருந்துகிறேன் வெட்கப்படுகிறேன்.

newsயுத்தநிறுத்தம் மத்திய அரசு செய்யாவிட்டால், கூண்டோடு கைலாயம் போய் பதவி விலகுவோம் என்றார்,, உயிரை விடுவேன் என்றார்,,, ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எப்படி உதவமுடியுமென்றார்,,, ஒருநாடு இன்னொரு நாட்டுப்பிரச்சினையில் எப்படித்தலையிட முடியுமென்றார்,,,, பிரபாகரன் பயங்கரவாதியென்றார்,,,, சகோதர யுத்தம் செய்வதாக புலிகள் இயக்கத்தை குற்றம் சாட்டினார்,,,, , முத்துக்குமார் தீ மூட்டி செத்தபோது மிக இளக்காரமாக அந்தப்பயலுக்கு வீட்டில் ஏதோ பிரச்சினை என்றார்,,,, இன்னுமொருவர் செத்தபோது மிக மலிவாக, மனநோய் பாதிக்கப்பட்டவர் என்றார்,, ஒவ்வொருநாழும் 1,000 ,2,000, 5,000 என்று என் உறவுகள் செத்தழிந்தபோதும் கடிதமெழுதி டில்லிக்கு அனுப்புவதாக கதை விட்டவர்,,, தனது வாரிசுகளின் பதவிப்பேரம் பேசலுக்கு டில்லிக்கு பறந்து சோனியாவுடன் காலில் விழுந்து பதவி பெற்றாரே,,,,, எதை மறக்கச்சொல்லுகிறீர்கள்?

1/2 நாள் உணவு ஒறுப்பு வேள்வி என்று கூறி கடற்கரையில் குளிர்சாதன வசதியுடன் மனைவி, துணைவி, மக்கள், கூட்டம் சூழ காற்றுவாங்கி யுத்த நிறுத்தம் பிரகடனப்படுத்தியுள்ளேன் என்று கூறிய பச்சைப்பொய்யை ஜீரணிக்கச்சொல்லுகிறீர்களா? நீங்கள் கூறுவதும் திருமா கூறுவதும் ஒன்றுதானே, நீங்கள் அரசியலில் இல்லையென்கிறீர்கள் திருமா ஒற்றைப்பதவியுடன் அரசியலில் இருக்கிறார் அவ்வளவுதானே வித்தியாசம்.

நீங்கள் கூறும்படி காங்கிரசை ஒட்ட அழிக்கவேண்டுமென்றால், காங்கிரஸ் என்ற நச்சுமரத்தை பசளையிட்டு நீரூற்றி பாதுகாக்கும் சக்திகளையும், நச்சுமரங்கள் வேரூன்றி வளர்வதற்கு காரணமான புறம்போக்கு நிலத்தையும், தீயிட்டு எரித்து அழித்துத்தானே சுத்தப்படுத்தி புனிதமாக்க முடியும். வெறுமெனவே நீரூற்றுவதை தற்காலிகமாக நிறுத்தினால், நீண்டதொலைவுக்கு வேரோடி நாட்டின் ஈரத்தன்மையையே உறுஞ்சிக்கொண்டிருக்கும் அந்த விஷமரங்களின் ஆதிக்கத்தையும் ஆணவத்தையும் கட்டுப்படுத்திவிட முடியுமா?

இன்று முதலாவதாக அப்புறப்படுத்தப் படவேண்டிய தீயசக்திகள், கருணாநிதியும் தி மு கவும், கூட்டுச்சேர்ந்து இனப்படுகொலை செய்த காங்கிரஸையும் இல்லாமல்ச்செய்ய வேண்டிய, கலாச்சாரப்புரட்சி தமிழகத்துக்கும் தமிழனுக்கும் தேவைப்படுகிறது, இந்த கலாச்சாரப்புரட்சிக்கு சரியான நேரமும் இதுதான், இந்த விடயம் வெற்றியளிக்கும் பட்சத்தில் இனி வரும் காலங்களில் ஜெயலலிதாவின் கட்சியாக இருந்தாலும் சரி வேறெந்தக் கட்சியாகவிருந்தாலும் சரி, தமிழனிடம் சரியான பாடம் கற்றுக்கொண்ட படிப்பினையை பட்டறிவாக புரிந்துகொள்ளும்.

கடைசியாக ஒன்று, குறுகிய ஒரு காலத்துக்குள் உங்கள் பால் மிகவும் ஈர்க்கப்பட்டவள் நான், எனது கணினியின் முகப்பிலும் சத்தியமாக உங்கள் படத்தையும் தலைவரின் படத்துடன் ஐந்து ஆறு மாதங்களாக வைத்திருக்கிறேன், இன்னும் அப்படியேதான் இருக்கிறது, அது இருப்பதும் இல்லாமல் போவதும் உங்கள் நடவடிக்கையும் காலமும் தீர்மானிக்கட்டும், தலைவரின் மறுபிரவேசத்தை தர்மத்தாயும் ஈழப்பூமித்தாயும் நீண்டகாலத்துக்கு தள்ளிப்போடப்போவதுமில்லை, கவலையற்றிருந்த எங்களை தலைவரின் இடைவெளி பல சக்திகளுக்கு பதிலளிக்க வைத்து சோதிக்கிறது.

எங்கள் விடுதலைப்போராட்டத்தை தலைவரோ, நாங்களோ விரும்பி வேண்டி எடுத்துக்கொண்டதுமில்லை, ஈழத்தில் கிட்டத்தட்ட 45-50 விடுதலை இயக்கங்கள் உருவாகியிருந்தாலும், முற்று முழுதான போராட்ட இயக்கமாகவும், மக்கள் இயக்கமாகவும், மிகவும் கட்டுப்பாடு கொண்ட வழிமுறையை தோற்றுவித்த தீர்க்கதரிசனமான தலைவனைக் கொண்ட இயக்கமாக, தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் வழிநடத்தலில் வந்த ஒன்றுதான் "தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம்", இன்று ஒரு பின்னடைவை என்னினமும் என் "தலைவனும்" சந்தித்து நிற்கும் காலகட்டம், ஆனாலும் தலைவன் கொண்டகொள்கையிலிருந்து எந்த ஒரு ஈழத்தமிழ் பிறப்பும் நிமிடத்துக்கு ஒன்றென மாற்றி சிந்திக்க பழக்கப்படவில்லை. புலம்பெயர் தேசத்திலோ சந்திர மண்டலத்திலோ நாடு விட்டுச்சென்று வாழ நேரிட்டாலும் ஈழத்தமிழன் அழியும் வரை ஈழப் போராட்டம் தொடரும்.

தமிழ்நாட்டின் அரசியல் விளையாட்டு எங்களுக்கு ஒருபோதும் ஒத்துப்போவதுமில்லை. எவராவது உதவினால் நாங்கள் நன்றியுடன் சிரம் தாழ்த்தி வரவேற்போம், மாறாக எவராவது துரோகமிழைத்தாலும் அவர்களை புறக்கணித்து ஒதுக்கிவிட்டு ஒதுங்கி எங்கள் முயற்சியை முன்னெடுத்து தமிழீழம் கிடைக்கும்வரை போராடுவோம்.

இப்போ சகோதரன் செந்தமிழன் சீமான், அவர்களின் உணர்வும் ஈடுபாடும் எங்களை அவரோடு மிக நெருக்கமாக இணைத்திருக்கிறது, உள்ளூரில் அவர் எடுக்கும் அரசியல் நடவடிக்கைகளுக்கும் அவரே பொறுப்பாளி, நாங்கள் அதை புரிந்து கொள்ளவும் முடியாது, முள்ளில் விழுந்துள்ள சகோதரியின் புடவையை சமயோசிதமாக அவர் எடுக்கத்தலைப்பட்டிருக்கிறார், எங்கள் மன எண்ணங்களையும் அவருக்கு தெரியப்படுத்தியிருக்கிறோம், இருந்தும் அவர் வெற்றிபெறுவார் என்பதுதான் எங்கள் நம்பிக்கையும், அத்துடன் சீமான் கொண்டகுறியிலிருந்து சிதறமாட்டார் என்பதும் ஈழ மக்களின் அசையாத நம்பிக்கையுமாகும்.
இருந்தும் வெல்லுவோம்,

உங்களை எனது மடல் எந்தவகையிலாவது புண் படுத்தியிருந்தால்
மன்னிக்க வேண்டுகிறேன்,
ஏனெனில் நான் வேதனையே வாழ்வாக பழகிக் கொண்டவள்.
அன்புடன் ஈழத்தமிழச்சி
ஆரணி,,


இம்மடல்,
ஈழதேசம் இணையம் ஊடாக

தமிழ் மறவன் முத்துக்குமாரை அவமானப் படுத்திய விடுதலை சிறுத்தைகள்.J

தமிழ் மறவன் முத்துக்குமாரின் நினைவு தினத்தில் அவரின் சிலையை திறந்து, இழந்த ஈழத் தமிழர் ஆதரவுகளை மீண்டும் பெறுவதற்காக, தொல்.திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நேற்று திருச்செந்தூரில் நடத்திய விழா, பெரும் சிக்கலில் முடிந்துள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் மாநாடு நடத்தினாலே, அக்கட்சியின் தொண்டர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும், ரவுடிகளால், பொது மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாவதும், பொதுச் சொத்துக்கள் சூறையாடப் படுவதும் ஊரறிந்த விஷயம்.

Thiruma_new11

இதன் தொடர்ச்சியாகவே, நேற்று முன்தினமே, திருச்செந்தூரில், சட்டம் ஒழுங்குக்கு அச்சுறுத்தல் விடப்படும் வகையில், விடுதலை சிறுத்தைகள் தொண்டர்கள் உற்சாக பானம் அருந்தி விட்டு, பெரிய அளவில் சளம்பியிருக்கிறார்கள்.

இவர்களின் மாநாட்டுக்காக, மாநாடு நடைபெறும் இடம் அருகிலும், திருச்செந்தூர் நகரிலும் உள்ள கடைகளை மறைக்கும் வகையில் பல்வேறு டிஜிட்டல் பேனர்களை வைத்துள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்த வியாபாரிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்ததும், விடுதலை சிறுத்தை தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து பெருமளவில் போலீசார் குவிக்கப் பட்டிருந்தனர்.

IMG_0301

இந்த அராஜகத்தை கண்டித்த, திருச்செந்தூர் நகர வியாபாரிகள் சங்கம், நேற்று முன்தினமும், நேற்றும் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கடையடைப்பு நடத்தி, கடைகளில் கருப்புக் கொடியை ஏற்றியதோடு மட்டுமல்லாமல், வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில், விடுதலைச் சிறுத்தைகள் இருக்கும் கூட்டணிக்கு எதிராக வாக்களிப்பது என்றும் முடிவெடுத்துள்ளனர்.

IMG_0303

ஈழத் தமிழரை கொன்று குவித்த, காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் இருந்து, காங்கிரஸின் வாக்குகளைப் பெற்று, எம்.பியாக ஆன, திருமாவளவன், முத்துக்குமாரின் சிலையை திறந்து வைத்ததை விட, முத்துக்குமாருக்கு பெரிய அவமானம் இருக்க முடியாது.

ஈழத் தமிழரை காப்பாற்றுங்கள் என்று தன் உயிரையே நீத்தவன் அவன். ஈழத் தமிழரின் பிணத்தை வைத்து வியாபாரம் நடத்துபவர் திருமாவளவன்.

தமிழ்ப் பெண்களை பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கிய இந்திய ராணுவத்தை அனுப்பிய ராஜீவ் காந்தி மீது விடுதலை சிறுத்தைகளுக்கு பெரும் மதிப்பும் மரியாதையும் உண்டு என்று, கடிதம் எழுதி, சோனியாவின் பாதங்களை கழுவி பிராயசித்தம் தேடியவர் திருமாவளவன்.

இனப்படுகொலை குற்றவாளி ராஜபக்ஷேவோடு, விருந்துண்டு, இன்பச் சுற்றுலா சென்று வந்தவர் திருமாவளவன்.

தலித் இளைஞனை கொன்று விட்டு, சட்டத்தின் பிடியில் அகப்படாமல் தப்பி ஓடி, இலங்கையில் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தாவோடு கொஞ்சிக் குலாவியவர் திருமாவளவன்.

Indian-MPs8_1

ஈழத் தமிழர்கள் கை வேறு கால் வேறாக, கொத்துக் குண்டுகளுக்கு இரையாகி வீதிகளில் குப்பைகளைப் போல கிடந்த போது, ஸ்பெக்ட்ரம் பணத்தை எண்ணிக் கொண்டிருந்த கயவன் கருணாநிதியின் காலை நக்கிக் கொண்டிருந்தவர் திருமாவளவன்.

ஏழை தலித்துகள் கருணாநிதி ஆட்சியில் தொடர்ந்து வஞ்சிக்கப் பட்டுக் கொண்டிருக்கையில், ஏழை தலித்துகள் காவல்துறையினரால் அடித்து துவைக்கப் பட்டு கொண்டிருக்கையில், காவல்துறை அதிகாரி எம்.சி.சாரங்கனுக்கு பதவி உயர்வுக்காக கருணாநிதியை கெஞ்சிக் கொண்டிருப்பவர் திருமாவளவன்.

Indian-MPs4_1

ஊரான் வீட்டு இடத்தில் அலுவலகம் கட்டிக் கொண்டு, அந்த இடத்தை அபகரிக்க நீதிமன்றத்தில் நியாயம் தேடியவர் திருமாவளவன். அதற்காக நீதிபதிகளை பின்புற வாசல் வழியாக அணுகியவர் திருமாவளவன்.

ராஜபக்ஷே தனது இனத்துக்காக போராடுகிறான். தனது இனத்துக்கு நியாயம் செய்கிறான். தனது இனத்துக்கு விசுவாசமாக இருக்கிறான்.

ஆனால் திருமாவளவன், ஏழை தலித்துகள் பெயரைச் சொல்லிக் கொண்டே, சொகுசு வாழ்க்கை வாழும், போலி தலித். தலித் இனத்தின் எதிரி. குலத்தை கெடுக்க வந்த கோடரிக் காம்பு.

என் அன்பான உறவுகளே…. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் கணக்கு ஸ்லேட் எப்படி சுத்தமாக துடைக்கப் பட்டதோ, அதே போல விடுதலை சிறுத்தைகளின் ஸ்லேட்டும் துடைக்கப் பட வேண்டும். இதற்கு நீங்கள் வரக்கூடிய மூன்று மாதங்களில் தொடர்ந்து பணியாற்றுங்கள். இடைவிடாமல் பணியாற்றுங்கள்.

24552781

இது சவுக்கு உங்களுக்கு இடும் அன்புக் கட்டளை. இச்செய்தியை நமது உறவுகள் அனைவருக்கும் அனுப்புங்கள்.

எதிரிகளை களத்தில் சந்திப்போம். துரோகிகளை ஒழித்துக் கட்டுவோம்.

நன்றி சவுக்கு இணயம்,

Monday, January 24, 2011

540 மீனவர்கள் படுகொலை, 2020 ல், வல்லரசாகும் கனவில் இந்தியா???,

தமிழ்நாட்டின் சட்டசபைக்கான தேர்தலுக்கு இன்னும் சிலமாதங்கள் உள்ளன, அரசியல்க்கட்சிகள் எல்லாமே தேர்தலுக்கான தத்தமது வியூகங்களை மிகவும் இரகசியமாக அமைத்துக்கொண்டிருக்கின்றன. ஆளும் திராவிடமுன்னேற்றக்கழகம் மட்டும் புதிதாக எந்த மாற்றமுமில்லாமல் ஏற்கெனவே கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சியுடன் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கிறது.

2006ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டமைத்து தேர்தலை சந்தித்திருந்த மருத்துவர் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளிமக்கள் கட்சி, நடப்பு ஆட்சியில் பங்கு வேண்டாம் எனக்கூறிக்கொண்டபோதும் வேறு சலுகைகளை பெற்றுக்கொண்டு தனது இருப்பையும் உறுப்பினர் தொகைகளையும் உறுதிப்படுத்திக்கொண்டார்., இடையில் 2009ல் பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் ஈழ இறுதியுத்தத்தின்போது காங்கிரஸ் திமுக கூட்டணி தோற்றுப்போகும் என்ற பரவலான கருத்தை மனதில்க்கொண்டு நடந்த பாராளுமன்றத்தேர்தலின்போது அ,அ.தி.மு.க.வுடன் இணைந்து போட்டியிட்டு பாமக படுதோல்வியடைந்திருந்தது. இன்று மீண்டும் திமுகவுடன் இணைந்து சட்டசபை தேர்தலில் போட்டியிடத்தயாராக இருப்பது தெரிகிறது.

எது எப்படியிருப்பினும் வரும் சட்டசபைத்தேர்தலின் வெற்றி தோல்வியை இலங்கைப்பிரச்சினைதான் தீர்மானிக்கும் என்பதை எல்லாக்கட்சிகளும் நன்கு அறிந்தே இருக்கின்றன. ஆனால் கருணாநிதியின் திமுக மட்டும் தனது இனாம்களையும் இலவசங்களையும் சாதனைகளையும் பிரச்சாரம் செய்தே வெல்லவேண்டிய நிலையில் இருக்கிறது. கருணாநிதி தனது இலவசத்திட்டங்களும் தேர்தல்காலத்தில் ஓட்டுக்காக கொடுக்கப்படும் பணமும் பொலிஸாரின் அடக்குமுறைகளையும் சேர்ந்து தனது கட்சியை வெற்றிபெற வைக்கும் என்று நம்புகிறார். அதற்கான காரணங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

நகரப்புறங்களிலுள்ள மக்கள்தான் ஈழ இன அழிப்பை உணர்ந்து அறிந்திருக்கின்றனர். கிராமப்புறங்களில் அப்படியல்ல, விகிதாசாரப்படி பார்த்தால் 20/30 விழுக்காடு மக்கள் தொகையினர்தான் நகரப்பகுதிகளில் ஈழப்பிரச்சினையை அறிந்துணர்ந்து ஆளும் கட்சியை எதிர்க்கும் மனநிலையில் உள்ளனர். கிராமப்புறமக்கள் பலருக்கு ஈழ படுகொலைகள் பற்றித்தெரிந்திருந்தாலும், வறுமையும் வாழ்க்கைப்போராட்டமும் கால ஓட்டமும் கட்சிக்காரர்களின் மூளைச்சலவையும் அவர்களை தடுமாறவைத்து செய்வதறியாது திகைக்க வைத்திருக்கிறது.

கருணாநிதியின் குறியெல்லாம் செம்மொழி மாநாடு, மானாட மயிலாட, சினிமா விழாக்கள், பாசத்தலைவனின் பாராட்டுவிழா, இலவசங்கள், இளைஞன் திரைப்படம் போன்றவற்றால் மூடி மறக்கவைக்கப்பட்டிருக்கும் ஈழப்பிரச்சினையை, எவரும் எக்காரணங்கொண்டும் மக்களுக்கு ஞாபகப்படுத்தக்கூடாது என்பதுதான். மறக்கடிக்கப்பட்டிருக்கும் அந்த படுகொலைகளை ஞாகபப்படுத்தினால் புதிதாக புறப்பட்ட ஸ்பெக்ரம் ஊழல் குற்றச்சாட்டும் சேர்ந்து தனது இருப்புக்கு குந்தகமாக அமையும் என்பதே கருணாநிதியின் பயமெல்லாம். அதன் எதிர்த்தாக்கம்தான் ஈழ ஆதரவாளர்களின்மேல் பொலீஸை ஏவி தனது இரும்புப்பிடியை தொடர்ந்து இறுக்கிக்கொண்டிருக்கிறார். சென்னை போன்ற பெருநகரங்களில் நடைபெறும் பேரணிகள் கூட்டங்களை ஊடகங்களின் நெருக்கடி காரணமாக ஓரளவுக்கு அனுமதிக்கும் கருணாநிதி கிராமப்புறங்களில் எந்த ஒரு சிறு அசைவையும் அனுமதிக்க மறுப்பதைக்காணலாம்.

ஈழ ஆதரவாளரான பேராசிரியர் கல்யாணி அவர்கள் கடலூரில் ஈழத் தமிழருக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடத்தியதற்காக 22 ம் திகதி சனி, கடலூரில் வைத்து கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். பேராசிரியர் கல்யாணி உள்ளிட்ட பலபேரை கைது செய்த காவல்துறை, பேராசிரியர் கல்யாணி உள்ளிட்ட முக்கியமான 10 பேரை சிறையில் அடைத்துள்ளது. அவர்கள் மீது கலவரத்தில் ஈடுபட்டது, கலவரத்தை வேண்டுமென்றே தூண்டுவது, பொது ஊழியரின் உத்தரவை மீறுவது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. குறிப்பிட்ட கூட்டத்திற்கு ஆரம்பத்தில் கருணாநிதியின் அரசால் உள்நோக்கத்தோடு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றபின்னே கல்யாணி அவர்கள் கூட்டத்தை நடத்தியிருந்தார். இருப்பினும் வேண்டாப்பெண்டாட்டி கை பட்டாலும் குற்றம் கால்பட்டாலும் குற்றம் என்பதுபோல கருணாநிதியின் நடவடிக்கை அமைந்திருக்கிறது.

கருணாநிதியும், மத்திய அரசும், தமிழக மக்கள்மீதும் மீனவர்கள்மீதும். மாற்றான்தாய் மனப்பாண்மையுடன் வேண்டாவெறுப்பாக நடந்துகொள்ளும் விதத்தைப்பார்த்த இலங்கை அரசும் படையினரும் தமது பங்கிற்கு கிள்ளுக்கீரைகளாக அடுத்தடுத்து கடலில் தமிழக மீனவர்களை கேட்பாரற்று கொன்று கொண்டிருக்கின்றனர், கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை சிங்கள கடற்படையினர் தாக்கி கொல்லும் சம்பவங்கள் உலகில் எங்கும் நிகழாத தொடர்கதையாக உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த மீனவர் பாண்டி சமீபத்தில் சிங்கள கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்துக்கு தமிழக முதலமைச்சர் கருணாநிதி கண்துடைப்பு கண்டனம் தெரிவித்து. பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, வழக்கம்போல் கடிதம் எழுதினார். . இந்தநிலையில் சிங்கள கடற்படை கொடூர தாக்குதலுக்கு வேதாரண்யம் மீனவர் ஒருவர் மீண்டும் உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனம் மீனவக்கிராமத்தை சேர்ந்த ஊனமுற்றவரான ஜெயக்குமார் கொல்லப்பட்டிருக்கிறார்.

22 ம் திகதி சனிக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் கடலில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்களின் படகு மீது மோதிச்சேதப்படுத்திய சிங்கள படையினர். மீனவர்களை அடித்து துன்புறுத்தி கடலில் தள்ளிவிட்டு நீந்தத்தெரியாது என்று கடலில் குதிக்க மறுத்த ஊனமுற்றவரான ஜெயக்குமார், என்ற 28 வயதான இளைஞரை கயிற்றால் கட்டி கழுத்தை இறுக்கி கொடூரமாக கொன்று கடலில் வீசிவிட்டு சென்றிருக்கின்றனர்.

வழமைபோல மீடியாக்களுக்கு படங்காட்டிய மத்தியமந்திரி பிரணாப் முகர்ஜி, வழமைபோல இதுபோல் இனிமேல் நடக்காது என்றுகூறி வரும்சட்டசபை தேர்தல் தொகுதிப்பங்கீடு பற்றி கரிசனையுடன் கருணாநிதியோடு பேசிவிட்டு சென்றிருக்கிறார். கருணாநிதியும் மன்மோஹனுக்கு கடிதம் எழுதிவிட்டு, தனது கதை வசனத்தில் உருவாகி குஷ்பு, மீராஜஸ்மின், நமீதா, ஆகியோர் நடித்த இளைஞன் படத்திற்காக தனக்கு பாராட்டு விழா நடத்தும்படிகேட்டு அதற்கு தன்னை தயார்செய்துகொண்டிருக்கிறார். ஆனால் ஏழை மீனவப்பெண்ணான முருகேஸ்வரி தாலியறுக்கப்பட்டு விதவையாக்கப்பட்டிருக்கிறார்.

தமிழகத்து மீனவர்களின் துன்பம் கண்டு துடித்த குற்றத்திற்காக, செந்தமிழன் சீமான் ஐந்து மாதங்கள் தேசியப்பாதுகாப்புச்சட்டத்தில் சிறை வைக்கப்பட்டிருந்தார், இப்போ சீமான் வெளியே வந்திருந்தாலும் அவர் எந்தவிதத்திலும் மக்களை கிளர்ச்சி ஏற்படும் வகையில் கூட்டம் கூட்டி பேசக்கூடாதென்ற நிபந்தனை நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது, இந்த நிலையில் குரல் கொடுப்பதற்கும் தமிழர்மத்தியில் எவரும் முன் வரமுடியாது. இடியமீனின் ஆட்சியில் நடந்த அராஜகம் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. கருணாநிதியின் பதவி வெறியும் மக்கள் விரோதமும் சிலவருடங்களாக எல்லைமீறி தொடர்கிறது, கருணாநிதியின் வயோதிபமும் சிந்தனை ஆற்றல் குறைவும் குழந்தை தனத்திற்கு இட்டுச்சென்றிருப்பதாக சில ஊடகங்கள் பூடகமாகத்தெரிவிக்கின்றன. வெளிப்படையாக சொல்ல பலர் அஞ்சுவதும் தெரிகிறது,

திமுக வை சுற்றிப்படர்ந்திருக்கும் ஸ்பெக்ரம் ஊழல்க்குற்றச்சாட்டுக்கள், ஊழல் குற்றச்சாட்டில் பதவி விலக்கப்பட்ட ஆ. ராசா, மற்றும் பாதிரி ஜெகத் கஸ்பர், ஆகியோருடன் மகள் கனிமொழியின் தவறான உறவுகள் பற்றி மகன்மார்களான அழகிரி, ஸ்ராலின் ஆகியோரின் கண்டிப்பு, கட்சிக்குள் அழகிரியின் மீறிய தலையீடு, வயோதிபம், மீண்டும் முதலமைச்சராகாமல் தோற்று, பதவி பறிக்கப்பட்டபின் ஊழல் குற்றச்சாட்டுக்களுக்காக சிறை செல்ல நேர்ந்துவிடுவோமோ, என்றபயம், எல்லாம் சேர்த்து கருணாநிதியை சிலநாட்களாக உறக்கமில்லாமல் செய்திருக்கிறது, இந்த நேரத்தில் தனது கதை வசனத்தில் சமீபத்தில் உருவான இளைஞன் திரைப்படத்தை திரும்பத்திரும்ப பார்த்துக்கொண்டு உறக்கமில்லாமல் இருந்திருக்கிறார், இதன் பலன் என்ன பேசுகிறோம் என்பதை மறந்து தடுமாறியிருக்கிறார், எப்போதும் ஒன்றாக இருந்து நகைச்சுவையை அள்ளிவிடும் துரைமுருகனுக்கும் கேட்கும் திறன் கெட்டுப்போயிருக்கும் ஆற்காடு வீராசாமிக்கும் முதல்வரின் நடவடிக்கை தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பேராசிரியர் அன்பழகன் கருணாநிதியையும் விஞ்சிய முதுமை காரணமாக எதையும் புரிந்துகொள்ளும் நிலையில் இல்லை, கருணாநிதியின் பிடிவாதமும் மந்தமான போக்கும் மகன்மார்களான அழகிரி, ஸ்ராலின், ஆகியோரை அச்சப்படுத்தியிருக்கிறது இருந்தும் தேர்தல்வரை எதையும் வெளியில் கசியாமலிருப்பதற்காக அவர்கள் கருணாநிதியுடன் விவாதிப்பதையும் மீடியாக்களின் பார்வையை தவிர்ப்பதற்கும் முயற்சிப்பதாகவும் தெரிகிறது.

தமிழ்நாட்டின் அரசியல் அணுகுமுறை, மத்திய அரசுமீதும் மானில அரசுமீதும், மக்களை என்றுமில்லாத விரக்திநிலைக்கு தள்ளியிருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் நாங்கள் இந்தியர்கள்தானா?, இந்தியாவில்த்தான் இருக்கிறோமா என்ற கேள்வி ஒவ்வொரு தமிழனிடமும் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது, தமிழ் நாட்டைப்பொறுத்தவரை பிரிவினைக்கான சாதகமான புறச்சூழ்நிலை குறைவாகக்காணப்பட்டாலும், நடைபெறும் அராஜகங்களும் கடல்ப்படுகொளைகளும் மக்கள் இந்தியாவிலிருந்து பிரிந்திருப்பவர்களாகவே உணரத்தலைப்பட்டுள்ளனர், சில கட்சிகள் பிரிவினைவாதத்தை நோக்கியகருத்துக்களை வெளிப்படையாகவே பேசுகின்றன. இரும்புத்திரை நாடு எனப்பெயர்பெற்ற உலகப்பெரும் வல்லரசான சோவியத் ஒன்றியமே மகா ரஷ்யர்களின் மாற்றந்தாய் மனப்பாண்மையால் உடைந்துபோன வரலாறுகள் உண்டு.

சிலவருடங்களாக வல்லரசுக்கனவில் மக்களை வைத்திருக்கும் இந்திய அரசியல்க்கட்சிகள், வல்லரசுக்கான தகுதிகள் என்ன என்பதை அறிந்தவர்களாக இல்லை, வளர்ந்துவரும் நாடுகளின் வரிசையில் தாராள பொருளாதாரக்கொள்கை காரணமாக, இந்தியா ஒரு நல்ல இடத்தில் இருக்கின்றதென்பது உண்மை, இந்தியாவிற்குள் படையெடுத்திருக்கும் பன்நாட்டுக்கொம்பனிகளின் சலசலப்பை தனது வளர்ச்சியாக மக்களுக்கு காட்டிக்கொள்ள ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றனர். நாட்டின் கல்வி, திட்டமிடல், வறுமை ஒழிப்பு எதற்கும் முக்கியத்துவம் காணப்படவில்லை, இவற்றுடன் இந்தியப்பொருளாதாரத்தில் முக்கிய பங்குவகிக்கும் விவசாயிகளின் உற்பத்திக்கு உரிய திட்டம் எதுவும் வகுக்கப்படவில்லை, 2009ம் ஆண்டில் மட்டும், 17 ஆயிரத்து 175 விவசாயிகள் தற்கொலை செய்திருந்தனர். தமிழகத்தில் அதே ஆண்டில், 1,060 விவசாயிகள் தற்கொலை செய்தனர். இவையனைத்தும் ஆளும் அரசின் கையாலாகாத்தனமாகவே நோக்கலாம்,

இந்திய நீதித்துறை சாகும் தறுவாயில் இருக்கிறது, சட்டம் ஒழுங்கை பேணவேண்டிய காவல் துறை ஆட்சியாளர்களின் அடியாட்களாகவும், மக்களிடம் பறித்து தின்னுபவர்களாகவும் அச்சமூட்டுகின்றனர், கல்விக்கூடங்கள் பெருத்த அரசியல்வாதிகளின் வியாபர மையங்கள் ஆக்கப்பட்டிருக்கின்றன, , இந்தியாவின் எந்தத்துறையை நோக்கினாலும் ஊழல், லஞ்சம், இந்நிலையில் அப்துல் கலாம் அவிழ்த்துவிட்ட வல்லரசு கனவு பட்டிமன்றங்களிலும் மக்கள் அரங்கங்களிலும் வெற்றிகரமாக விவாதிக்கப்படுகிறது, சில இடங்களில் சில அப்பாவிமக்கள் இந்தியாவா சீனாவா அடுத்தவல்லரசு என்றும் விவாதிப்பதைக்காணலாம்.

சீனா ஏற்கெனவே பலவருடங்களுக்கு முன் வல்லரசாகி (வீடோ) நிராகரிக்கும் அதிகாரம் கொண்ட அதி உச்சத்திலிருக்கும் நாடு என்பதை பலர் அறியாமலே இருக்கின்றனர், சீனாவின் சட்டங்கள் இந்தியாவின் உழுத்துப்போன 17ம் நூற்றாண்டுச்சட்டங்களைப்போலல்லாமல் மிகவும் கூர்மையானவை, லஞ்சம் ஊழல் சீனாவில் கொலைக்குற்றத்திற்கு சமமாக பார்க்கப்படுகிறது, இந்தியாவின் சட்டங்களும் நீதித்துறையின் லட்சணங்களும் கருணாநிதியின் குடும்ப அரசியலிலும், சோனியாவின் சவாதிகார ஆட்சியிலும், லல்லு பிரசாத் யாதவ்வின் மாட்டுத்தீவனத்திலும் தெரிந்து கொள்ளக்கூடியதே.

டில்லி, மும்பாய், கல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத், சென்னை, போன்ற பெருநகரங்களைத்தவிர, இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களுக்குள்ளும் 7 யூனியன் பிரதேசங்களுக்குள்ளேயும் ஏகப்பட்ட வளற்சியற்ற பழங்குடிகளும் ஏழைகளும் படிப்பறிவில்லாதவர்களுமுண்டு. அவர்களின் வாழ்க்கை காட்டுவாசிகளை ஒத்ததாகவே பாம்புடனும், பல்லி, ஓணான், போன்றவற்றுடனும் தொடர்வு கொண்டதாகவே காணலாம், சினிமாவிலும் தொலைக்காட்சிகளிலும் நான்கு ஐந்து வளர்ச்சியடைந்த மானிலங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை முறைகளையும் படித்தவர்களையும் காட்டி இதுதான் இந்தியாவென அரசியல்வாதிகள் காட்ட முயலுவதுண்டு, பரந்துபட்ட வளம் குறைந்த ஒரிசா, பீகார், சட்டீஸ்கார், ஜார்க்கண்ட் நிலப்பரப்புக்களிலும் தமிழ்நாடு கொங்குமலைப்பகுதிகளிலும் வறியவர்களும் பழங்குடியினரும், போக்குவரத்துக்கான தெரு வசதிகூட இல்லாமல் காட்டுவாசிகளின் வாழ்க்கை வாழ்வதைக் காணலாம், அந்த இடங்களில் வாழும் மக்களுக்கு தமது கிராமங்களைத்தவிர வேறு எதுவும் தெரியாது, இந்தியா என்றொரு அரசு இருப்பதுகூட பலர் அறிந்திருக்கவில்லை.newsnews

அப்படிப்பழக்கப்பட்ட மக்கள்தான் இந்தியாவில் அதிகம் வாழுகின்றனர். இவற்றுள் உண்மையான பழங்குடியினர் 8 விழுக்காட்டினர் இருப்பதாக் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. ஆனால் இந்தியாவின் மக்கள் தொகையில் 42 சதவீதம்பேர் வறுமைக்கோட்டின் கீழ் இருப்பதாகவும். 12 சதவீத மக்கள் வாழ்வுக்கான ஆதாரமற்று இருப்பதாகவும். இன்னும்பலர் நகரங்களில் வறுமையுடன் இருப்பதாகவும் அறியப்படுகிறது. உலக சனத்தொகையில் 3 ல் ஒருபகுதி வறுமையானவர்கள் இந்தியாவில்த்தான் இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன, இந்தநிலையில் இந்தியாவின் வல்லரசுக்கனவு நகைச்சுவையான ஒன்று மட்டுமே.

நடைமுறை அப்படியிருக்கும்போது ஏன் இந்திய அரசியல்வாதிகள் 2020 ல் இந்தியா வல்லரசு என்று கதை கட்டிவிட்டுக்கொண்டிருக்கின்றனர், என்று எண்ணத்தோன்றும். நாட்டின் வறுமையும் சாதிக்கொடுமைகளும், பொருளாதார ஏற்ற இறக்கங்களும், ஒவ்வொரு மானிலங்களுக்கும் அடுத்தமானிலங்களால் உண்டாகும் நீர் பரிவர்த்தன தடை, வளங்கள் பகிர்ந்துகொள்ளமுடியாத இன மொழிப்பகை, ஆகியவற்றை வைத்து ஒவ்வொரு மானிலமும் பிரிந்துபோக எத்தனிக்கலாம். இந்த எண்ணம் ஒருமானிலத்தில் கருக்கொண்டுவிட்டால் படிப்படியாக எல்லா மானிலங்களையும் பற்றிக்கொள்ளும் அபாயம் உண்டு. அந்த எண்ணத்தை நீர்த்துப்போக உருவாக்கப்பட்ட மாயமான்தான், இந்திய வல்லரசு,

வல்லரசு ஆகிறது என்ற மாயையைத்தோற்றுவித்து காலத்துக்கு காலம் சில றொக்கற்றுக்களையும் ஏவி, பக்கத்து நாடுகளான பாகிஸ்தான் சீனா? போன்ற நாடுகளை நாங்களும் ஆயுதபலத்தில் ஸ்டெடியாக இருக்கிறோம் எனக்காட்டுவதோடு, இந்திய பாமரனுக்கு நம்பிக்கையை கொடுப்பதுபோன்ற ஏமாற்றுத்திட்டம்தான் வருகிறது வல்லரசு என்ற மாயை எனக்கொள்ளமுடியும்,

இலங்கை இந்தியக்கடற்பரப்பில் நேற்றுவரை கொல்லப்பட்ட மீனவர்களின் தொகை கிட்டத்தட்ட 540 க்கு மேலாகிவிட்டது தமிழக அரசாங்கத்தாலோ இந்திய மத்திய அரசாங்கத்தாலோ அந்தக்கொலைகளை தடுத்து நிறுத்த முடியாவிட்டாலும் ஏனென்று கேட்கும் திராணி கூட இல்லை, குறைந்தபட்சம் ராஜபக்க்ஷவையோ, அந்தநாட்டின் வெளியுறவு அமைச்சரையோ, இன்னும் கீழேபோய் ஸ்ரீலங்கவுக்கான தூதுவரையோ கண்டித்து விசாரணை செய்யக்கூடிய தைரியம் இந்தியாவுக்கு இருப்பதாகத்தெரியவுமில்லை,

சிறிய ஒரு நாடானாலும் ராஜபக்க்ஷவின் துணிச்சல் இந்திய அரசியல்வாதிகள் எவருக்கும் இல்லை என்பதே வெளிப்படையாகத்தெரிகிறது, இவ்வளவு இனப்படுகொலைகளை புரிந்துவிட்டு கடற்பரப்பில் இந்தியநாட்டு மக்களை கொன்றொழித்துவிட்டு எந்தச்சலனமுமில்லாமல் இந்தியாவுக்குள் வந்து சுவாமிதரிசனமும் சுற்றுலாவும் செய்துகொண்டு போகிறான் ராஜபக்க்ஷவும் அவனது சகோதரர்களும், இந்தியா பல்லைக்காட்டிக்கொண்டு பேயறைந்ததுபோல் நிற்கிறது,

இந்தப்போக்கை தமிழகத்து மக்கள் தொடர்ந்தும் சகிக்கத்தயாராகவில்லை. பிரிவினை நோக்கிய எண்ணம் பல அரசியற் கட்சிகளிடமும் மக்களிடமும் தோன்றிவிட்டது, கையாலாகாத அரசுடன் இருந்து எல்லாவழிகளிலும் அழிவதிலும் பார்க்க தனித்து இருந்து சுய பலத்தில் மக்களை காக்கமுடியும் என பெரும்பான்மையானவர்கள் விரும்புகின்றனர். உடனடியாக இந்தக்குறை நிவர்த்தி செய்யப்படவேண்டும் இல்லயேல் இலங்கையில் உண்டான பிரிவினை இந்தியாவின் நிம்மதியைக்கெடுக்கலாம் என்பது எவராலும் தடுக்கமுடியாது,

ஈழதேசம் இணையத்திற்காக,
கனகதரன்,

Sunday, January 23, 2011

ராஜபட்சேவை அடித்து விரட்டும் புலம்பெயர் சொந்தங்களுக்கு நன்றி, சீமான்.

உலகின் எந்த நாட்டிலும் நடமாடமுடியாதபடி சிங்கள இனவெறியன் ராஜபட்சேவை விரட்டி விரட்டி அடிக்கும் புலம்பெயர் தமிழ்ச் சொந்தங்களுக்கு நாம் தமிழர் கட்சி நன்றி கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

இந்தியா முதலான எல்லா நாடுகளிடமிருந்தும் ஆயுதம் வாங்கி, எங்கள் சொந்தங்கள் ஒருலட்சம் பேரைக் கொன்று குவித்தவன் அந்தக் கொலைவெறியன். இன்று அந்த இனவெறியனால் எந்த நாட்டுக்கும் போகமுடியாத நிலை.

லண்டனிலிருந்து அமெரிக்கா வரைஇ ராஜபட்சேவை ஒரு விரும்பத்தகாத விருந்தாளியாகக் கருதும் அளவுக்கு ஒன்றரை ஆண்டுகளில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அந்த அளவுக்கு வலுவான போராட்டங்களை நடத்தி வரலாறு படைத்திருக்கும் எங்கள் புலம்பெயர் சொந்தங்கள் ஒவ்வொருவரையும் வரலாறு வாழ்த்தும்.

ராஜபட்சே என்கிற அந்த கொடுங்கோலன், சொந்த நாட்டின் மக்கள் மீதே விமானக் குண்டுவீச்சு நடத்தியவன் - பச்சைக் குழந்தைகளைக் கூட கொன்று குவித்தவன் - பல ஆயிரம் அப்பாவிகளைப் பட்டினி போட்டே சாகடித்தவன் - மிகக்கொடிய நச்சு ஆயுதங்களையும் ரசாயனக் குண்டுகளையும் ஈவிரக்கமில்லாமல் பயன்படுத்தியவன் - எங்கள் தமிழ்ச் சகோதரிகள் கதறக் கதறப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப் பட்டதற்கு முழுமுதல் காரணகர்த்தா. அந்தக் கொடுமையாளன் செல்கிற இடத்திலெல்லாம், தமிழ் மக்கள் விழிப்போடும் உறுதியோடும் நின்று போராடுவதைப் பார்க்கும் போது, எங்கள் இனம் எத்தகைய அழிவிலிருந்தும் மீண்டு எழும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

வீரத் தமிழ்மகன் முத்துக்குமார் உடல் தகனம் செய்யப்பட்ட மறுநாள், கடும் குளிரையும் கொட்டுகிற பனியையும் பொருட்படுத்தாமல், தேசியத் தலைவர் அண்ணன் பிரபாகரன் படத்தை ஒரு கையிலும், தம்பி முத்துக்குமார் படத்தை மறுகையிலும் ஏந்தியபடி லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் ஒன்றேகால் லட்சம் இளைஞர்கள் திரண்டார்கள்.

ஈழப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் முன்னணியில் இருக்கும் கனடாவிலும், பிரான்ஸ் முதலான ஐரோப்பிய நாடுகளிலும், லட்சக்கணக்கான இளைஞர்கள், இளம்பெண்கள் திரண்டார்கள். எங்கள் தேசியத் தலைவர் பிராபகரன் என்கிற பதாகைகளை ஏந்தி வந்தார்கள். ஈழப்போராட்டம் அடுத்த தலைமுறையின் கைக்கு வந்துவிட்டது என்பது அப்போதே உறுதியாகிவிட்டது.

இப்போதும், லண்டனில், கொட்டுகிற பனியில் நனைந்தபடி ராஜபட்சேவை விரட்ட ஆயிரக்கணக்கில் திரண்ட இளைஞர்கள், உலகெங்குமுள்ள தமிழ்ச் சொந்தங்களுக்கு தெளிவான பாதையைக் காட்டியிருக்கிறார்கள். ஒன்று சேர்ந்து உறுதியுடன் நின்றால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்ததோடு, 'ராஜபட்சே ஒரு நாட்டின் அதிபரல்ல, ஓர் இனத்தைப் படுகொலை செய்த கொலைவெறியன்' என்பதை சர்வதேச அளவில் நிலைநிறுத்தியும் உள்ளார்கள்.

ராஜபட்சேவை மட்டுமில்லாமல் இனப்படுகொலைக்குக் காரணமான ஒவ்வொருவரையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அந்தக் கடமையை நிறைவேற்றாவிட்டால் வாகரையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை விரட்டி விரட்டிக் கொல்லப்பட்ட நமது சொந்தங்களுக்கு நியாயம் கிடைக்காது. அந்தக் கடமை முடியும்வரை, மெய்வருத்தம் பாரோம், கண் துஞ்சோம், அஞ்சோம் - என்று உறுதியேற்போம்.

Friday, January 14, 2011

சிங்களவன் என் தாய், தந்தையர்களின் உடல்களை பிளந்தான். இதைப் பார்த்து போராட யாரும் வரவில்லை, சீமான்,"தமிழக மக்கள் தீர்மானிப்பார்கள், காலம் பதில் சொல்லட்டும்"ஈழதேசம் இணையத்திற்காக கனகதரன்,

,

newsஇலங்கைத்தீவில் காலாகாலமாக வாழ்ந்துவரும் பூர்வீகதேசிய இனமான தமிழர்களுக்கும், வந்தேறுகுடி பௌத்த இனவாதிகளான சிங்கள இனத்திற்கும் மூண்ட இனப்பகை இன்று நேற்றான ஒன்றல்ல.

நீண்ட நெடிய வரலாற்றையும் பல விரும்பத்தகாத நிகழ்வுகளையும் இலங்கையினுள் தோற்றுவித்து ஒரு முக்கிய காலகட்டத்தில் இன்றும் பகையும் போராட்டமும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

பகைமைக்கான காரணங்கள் ஒன்றும் உலகமறியாததுமல்ல. சிங்களவனின் வாழ்வாதாரத்தை தமிழினம் தட்டிப்பறித்து வாயில்ப்போட்டுக்கொள்ள வலுச்சண்டையிட்டு சதிசெய்ததுமில்லை. வந்தேறிகளான சிங்களவரை வெளியேற்ற வேண்டுமென்று காழ்ப்புணர்வுகொண்டு சூழ்ச்சியுடன் தமிழன் நடந்துகொண்டதுமில்லை. தமிழனின் தரப்பிலிருந்து இனக்கலவரம் ஆரம்பிக்கப்பட்டதான குற்றச்சாட்டுக்களும் எந்தக்காலத்திலும் பதியப்பட்டதுமில்லை.

தமிழினம் மக்கள்தொகைகுறைந்த வலிமையற்றகாரணத்தால் பிரித்தானிய கொலனித்துவத்திலிருந்து சுதந்திரம் பெற்றபோதும் பெரும்பான்மை இனமான சிங்களவரின் கைகளில் நிர்வாக அலகு கையளிக்கப்பட்டு இன்றுவரை தமிழ்த்தேசிய இனத்தின் தேசியம், சுயநிர்ணய உரிமை, உறுதிப்படுத்தப்படாமல் உதாசீனப்படுத்தப்பட்டு மிகக்கொடூரமான அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டு பகிரங்கமாக மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் .என்பது உலகம் அறிந்த வரலாற்றுப்பின்னணி. ஆனாலும் 21,ம் நூற்றாண்டான இந்த நவீனயுகத்தில் உள்ள உலக இயக்கம் இன்றுவரை எந்த அசைவாடலுமில்லாமல் கல்லுப்போல் வேடிக்கை பார்த்து நின்றுகொண்டிருக்கிறது.

இலங்கைத்தீவுக்கு மிகவும் அருகே பல்லினமக்கள் வாழும் இந்தியத்துணைக்கண்டத்தில் தமிழை தாய்மொழியாகக்கொண்ட ஒரு தொகுதிமக்கள் காலாகாலமாக வாழ்ந்தும் வருகின்றனர். இந்தியத்துணைக்கண்டத்தில் வாழும் தமிழர்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் தொப்புள்க்கொடி உறவுகளும் இரத்த உறவுமுறையான பிணைப்புக்களும் உண்டென்றும் வரலாறுகள் கூறுகின்றன. தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களின் சனத்தொகையை கணக்கிட்டால் இலங்கையின் ஒட்டுமொத்த சனத்தொகையின் அளவில் மூன்று மடங்கு அதிகமான தமிழ்மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதும் உலகம் அறியும். அவர்களுக்கு தமது வாழ்வை, சுயநிர்ணய உரிமையை, பாதுகாத்து கொள்ளக்கூடிய சகல உரிமையும் ஆட்சி அதிகாரமும் உண்டு. உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடென்ற பெருமையும் இந்தியாவுக்குண்டு.

1947,ம் ஆண்டு சுதந்திரமடைந்த இந்தியாவில் தென்னிந்திய மானிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, ஒன்றாக திராவிடநாடு என்ற கூட்டில் இருந்தகாலத்தில் (இன்றைய சென்னை) மதிராஸ் பட்டினம் தலைநகராக (இராசதானி) இருந்தது. அப்போது வணிக நோக்கோடும் உத்தியோகம் வேலைவாய்ப்பு போன்றகாரணங்களுக்காக பல இனத்தவரும் பாகுபாடின்றி மற்றாஸ் நகரத்தில் கலந்து குடியிருந்தனர். காலப்போக்கில் மானிலங்கள் பிரிக்கப்பட்டு தமிழ்நாடு பிரிந்தபின்னும். வந்தேறி வேற்றுமொழிக்காரர் தமிழை படிக்க எழுத பேச கற்றுக்கொண்டு தமிழ்நாட்டின் பல இடங்களுக்கும் பரவிவிட்டனர். அதில் அனேகர் தமது தாய்மொழியை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தாமும் தமிழர் என்றே காட்டிக்கொள்ள விளைவதையும் காணலாம். அதில் ஒருவர் கருணாநிதி என்றும் சொல்லப்படுகிறது.

தென் இந்தியா, மொழிவாரி மானிலங்களாகப்பிரிந்தபோது. எல்லைக்கிராமங்களிலிருந்த தமிழ்மக்கள் மற்றய மானிலங்களுக்குள்ளும். வேற்று மொழி கன்னட, ஆந்திர, கேரள, மக்கள் கணிசமான அளவு தமிழ்நாட்டுக்குள்ளும். அகப்படும் சூழலும் ஏற்பட்டிருந்தது. ஒன்றுபட்ட இந்தியா என்ற கோசத்தின்கீழ் இவற்றை எந்த அரசியல்வாதிகளும் பிரித்துப்பார்க்கவுமில்லை.

இந்திய சுதந்திரத்தின்பின், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், பூ. ச. குமாரசுவாமி ராஜா, சி. இராஜகோபாலாச்சாரி (இராஜாஜி), காமராசர், எம் பக்கவத்சலம் ஆகியோர் காங்கிரஸ் கட்சி சார்பாகவும் அதன்பின் திராவிடக்கட்சிகளின் கைகளில் (இன்றய) தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரம் இருந்து கொண்டிருக்கின்றது. ஆரம்பத்தில் தெலுங்கரான ஈ வே ராமசாமி பெரியாரின் தலைமையில் பகுத்தறிவு இயக்கமாக உருவான திராவிடர்கழகத்தில் பலமொழிக்காரரும் பாகுபாடின்றி கலந்திருந்தனர், அதிலிருந்து பிரிந்து தமிழரான C N அண்ணாத்துரை திராவிட முன்னேற்றக்கழகத்தை ஆரம்பித்தார். அதன்பின் C N அண்ணாத்துரை அவர்களிடமும், திமுக கட்சியிலுள்ள தமிழை பேச்சுவழக்காகக்கொண்ட வேற்று மொழி, திராவிட இனத்தவர்களின் கைகளிலும் ஆட்சி அதிகாரம் மாறி மாறி சுழல்வதைக்காணலாம்.

தமிழகத்து அரசியல்வாதிகளில் மிகவும் வித்தியாசமான அரசியல்த்தலைவராக, மனிதாபிமானியாக, எம் ஜீ ராமச்சந்திரன், (எம் ஜீ ஆர்) அவர்கள் 1977 ம் ஆண்டு தொடக்கம் 1987 ம் ஆண்டுவரை தொடச்சியாக தமிழக முதல்வராக பதவிவகித்தார். 1987 டிசம்பர் 24ம் நாள் அவர் இறக்கும் வரையில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவிவகித்த எம்ஜீஆர் அவர்கள். தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் மீதும் ஈழமக்கள்மீதும் அளவற்ற அன்பும் பாசமும் ஈடுபாடும் ஈழவிடுதலைக்கு உந்துசக்தியாகவும் இருந்தார். எம் ஜீ ஆரின் இழப்பின் பின் இந்தியத்துணைக்கண்டத்திலிருந்து தமிழினத்திற்காக உரிமைக்குரல் கொடுப்பதற்கு ஈடுபாட்டுடன் சுயநலனை கடந்து இதயசுத்தியுடன் எவரும் துணியவில்லை, அல்லது விரும்பவில்லை, ஆனாலும் ஈழமக்கள் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களது தலைமையில் தன்மானத்துடன் போராடவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர்.

newsஎம்.ஜீ.ஆர், அவர்களின் தாய் தந்தையர்களின் பூர்வீகம் மலயாளமாக இருந்தாலும், இலங்கை (மலையகம்) நாவலப்பிட்டியில் பிறந்து தமிழில் மிகுந்த பற்றுடையவராகவும். ஏழை எளியோரை போற்றும் பெரும் பண்பு கொண்டவராகவும், பேராசையற்ற பொதுநலனில் ஈடுபாடு கொண்டவராகவும், வாழ்நாள் முழுவதும் நடந்துகொண்ட ஒரு அபூர்வபிறவியாகவே தமிழ்நாடும் உலகத்தமிழினமும், எம்.ஜீ.ஆர், அவர்களை கடவுளுக்கு சரியாக நோக்குகிறது.

தனக்கு போட்டியாக எம்ஜீஆர், அவர்கள் வளர்வது கண்டு பொறுக்க முடியாத திமுக, தலைவர் கருணாநிதியால் திட்டமிட்டு 1972 எம்ஜீஆர், வெளியேற்றப்பட்டபின். எம்.ஜீ.ஆர் அவர்கள் தலைமையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். உதயமாகியது. 1977 ல் எம்ஜீஆர் தேர்தலை சந்தித்து ஆட்சியை கைப்பற்றும்வரை, இரண்டுமுறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி, எம்ஜீஆர், அவர்களின் வருகைக்குப்பின், 1977, ல் இருந்து 1987, வரை மக்களால் ஓரங்கட்டப்பட்டு ஆட்சியை கைப்பற்றமுடியவில்லை.

எம்.ஜீ.ஆர், அவர்களின் மறைவிற்குப்பின் எம்.ஜீ.ஆர், அவர்களால் நிறுவப்பட்ட அ,அ.தி.மு.க. கட்சியின் அதிகாரத்தை கட்சியின் கொள்கைப்பரப்பு செயலாளரான, முன்னணி நடிகையான கன்னடரான ஜெ.ஜெயலலிதா கைப்பற்றினார், அதிமுக வின் மூத்த தமிழ்த்தலைவர்களான நெடுஞ்செழியன், திருநாவுக்கரசு, எம் ஆர் வீரப்பன், போன்ற பெருந்தலைவர்களை மதிக்காமல் ஓரங்கட்டி அடாவடியாக ஜெயலலிதா தலைவரானார். ஆனாலும் அவரது முற்கோபத்தாலும் அடக்கமற்ற அடாவடிக்குணத்தாலும் ஆட்சியை கைப்பற்றமுடியவில்லை. கருணாநிதியின் திமுக வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது. தந்திரசாலியான கருணாநிதியின் திமுக ஆட்சி நீண்டகாலம் நிலைக்கவில்லை. ஆட்சி கலைக்கப்பட்டு தமிழ்நாட்டின் பத்தாவது சட்டமன்றத் தேர்தல் 1991 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடை பெற்றது. அத்தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று, ஜெ.
ஜெயலலிதா, முதல் முறையாக தமிழகத்தின் முதல்வரானார். அன்றுதொடக்கம் ஜெயலலிதா ஈழத்தமிழரின் எதிரியாகவே தன்னை வரித்துக்கொண்டிருப்பதை காணலாம்.

2006 மே 13, நடப்பு ஆட்சிக்காக பதவியேற்ற கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில்த்தான், ஈழவரலாற்றில் மிகக்கொடுமையான படுகொலை இடப்பெயர்வு குடிநீருக்குக்கூட வழிகிடைக்காத வகையில் சொல்லொண்ணா கொடுந்துயரத்தை ஈழத்தமிழினம் சந்தித்தது, ஆனால் கருணாநிதி தான்கூட்டுச்சேர்ந்திருந்த காங்கிரஸ் கட்சியின் அனுதாபத்தை இழந்து தனது பதவியை இழக்க விரும்பாமல் மிக இழிவாக பொய்யும் கபட நாடகங்களும் அரங்கேற்றி தனது பதவியையும் வாரிசுகளின் பதவிகளையும் தக்கவைத்து அவர் ஆடிய நாடகங்கள் கின்னஸ்ஸில் இடம்பிடிக்கத்தக்கவை.

கருணாநிதியின் தமிழர்மீதான கழுவியமீனில் நழுவியமீன் கொள்கை வேலைக்காகாது என்பதை தேசியத்தலைவர் பிரபாகரன் நன்கு அறிந்தே வைத்திருந்தார். இருந்தும் தமிழ்நட்டுத்தமிழர்களின் ஆதரவை புறந்தள்ளி போராட்டம் எடுத்துச்செல்ல முடியாது என்பதை தலைவர் பிரபாகரன் உளப்பூர்வமாக வெளிப்படையாக தெரிவித்தே வந்துள்ளார், தலைவரின் அடிப்படைக்கருத்துக்கும் கருணாநிதியின் தந்திரப்போக்குக்கும் நிறையவே இடைவெளியும் இருந்தது. இதை தலைவர் பிரபாகரன் என்றைக்கும் பிரித்துக்காட்டியதில்லை. என்றாவது ஒருநாள் யதார்த்தத்தை புரிந்துகொண்டு ஒடுக்குமுறைக்கெதிராக படுகொலைகளுக்கெதிராக தமிழ்த்தாய்மார்களின் அவலங்களை பார்த்தாவது கருணாநிதி தனது மனதை ஈரமாக்குவார் தனது செல்வாக்கை நிச்சியம் பொறுத்த தருணத்தில் பயன்படுத்துவார் என்று தேசியத்தலைவரும், ஈழமக்களும் அரசியல்த்தலைவர்களும் நம்பியிருந்தனர்.

ஆனல் சர்வ உலகத்தால் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களைப்பயன்படுத்தி போரை நடத்திக்கொண்டிருந்த, சோனியாவின் மத்திய அரசை, பகைத்து தனது பதவியையும் வாரிசுகளின் பதவிகளையும் சுகபோக வாழ்க்கையையும் கருணாநிதி விட்டுக்கொடுக்கத்தயாராக இல்லை, என்பதை அறுதி உறுதியாக முத்துக்குமார் தொடக்கம் தீயில் எரிந்து தற்கொடையாகி கரிக்கட்டையான 18, தமிழகத்தின் மண்ணின் மைந்தர்கள், சுதேசிகள் எரிந்தபோதுதான் தமிழகம் அறிந்தது. ஆனாலும் கருணாநிதி விடாப்பிடியாக தனது நாடகத்தை விட்டுவிலகவில்லை.

ஜெயலலிதாவும் கருணாநிதியை பின்பற்றி தன்பங்குக்கு நடித்த நாடகங்களில் ஒன்றுதான் 2009ம் ஆண்டு ஈழம் எரிக்கப்பட்டபோது, பாராளுமன்றத் தேர்தலில் தனது கட்சி வெல்லவேண்டும் என்பதற்காகவும். வைகோ, ராமதாஸ், த பண்டியன், போன்ற கூட்டிணைவு கட்சிகளை திருப்த்திப்படுத்துவதற்காகவும் ஈழமக்களுக்கு ஆதரவு தருவதுபோல் சுயநலத்தின்பால் ஒருசில மேடைகளில் குரல் கொடுத்து தேர்தல் முடிவடைந்த பின் அதுபற்றி வாய் திறப்பதை தவிர்த்து கருணாநிதியை காய்வதிலேயே கலங்கடத்துகிறார். சிலமேடைகளில் ஜெயலலிதா பேசும்போது இந்திய மத்திய அரசு ஈழமக்களுக்காக என்னசெய்யவேண்டுமென்று ஒப்புக்கு ஏமாற்றி உலக கண்துடைப்புக்கு முன்வைக்கும் கோரிக்கைகளை தானும் சற்று மாற்றி குரல் கொடுப்பதையே காணலாம்.

ஈழமக்களின் அடிப்படையை புரிந்துகொள்ளாது. அவலத்தை தமக்குச்சாதகமாக்கி குளப்பத்தை உண்டுபண்ணும் சுயநல அரசியல் கோசங்கள் தெவையற்றவையாகவே ஈழத்தமிழினத்தின் மீது ஈடுபாடுள்ள அரசியல் ஆய்வாளர்கள் பார்க்கின்றனர். சுருக்கமாக சொல்லப்போனால் உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் பண்ணவேண்டாம் என்பதே தமிழீழ மக்களின் எதிர்பார்ப்புமாகும் கோரிக்கையுமாகும்.

தமிழ்நாட்டில் எம்ஜீஆர் அவர்களின் ஆட்சியின் பின் தமிழ்நாட்டில் அரசியல் செய்யும் எந்தக்கட்சியும் ஈழத்தை நினைவுகூராமல் தேர்தல்களில் வெற்றி பெறமுடியாதென்பதே யதார்த்தமுமாகியிருக்கிறது, இவற்றை தமிழக அரசியல் கட்சி வியாபாரிகள் நன்கு உணர்ந்தும் இருக்கின்றனர். அப்படியானால் தமிழ்நாட்டில் ஈழ ஆதரவு நிறைந்திருக்கின்றதென்பது நிதர்சனமாக இருக்கவேண்டும், கோடி கோடியாக ஊழல்செய்து பணத்தின்மூலம் ஓட்டை விலைகொடுத்து வாங்கும் நிலையிலுள்ள திராவிடக்கட்சிகளான திமுக, அதிமுக, அரைகரைவாசி பணத்தையே நம்பி தேர்தல்களில் நின்று ஜெயித்து விடுகின்றன. நியாயமான சிறியகட்சிகள் ஊழல் செய்வதற்கு களமில்லாததால் பணப்புழக்கமின்றி தோற்றுப்போவதற்கு நிறைய சந்தற்பமிருப்பதால் விபச்சாரிகள் போல் பெரிய ஊழல்க்கட்சிகளுடன் சோரம்போய் அடிமைப்பட்டுக்கிடப்பதும் மறுக்கமுடியாத ஒன்றுதான்.

தேசியக்கட்சியான காங்கிரசும், தமிழ்நாட்டிலுள்ள மானிலக்கட்சிகளான அனைத்துக்கட்சிகளும் வாய்வீச்சில் ஈழத்துக்காக சிலுவை சுமப்பதாக கூறி கிராமமக்களை ஏமாற்றிவிடுகின்றன. ஈழம், ஈழத்தமிழர் நலன் என்ற கோசமே ஓங்கி ஒலித்து அரசியலில் வியாபாரம் நடப்பதை விபரம் அறிந்தவர்கள் புரிந்துகொள்ளலாம். வாய் ஜாலமும் நடிப்பும் தவிர தமிழகத்து கட்சிகள் செயலில் எதையும் செய்யவில்லை என்பதே உண்மை.

ஈழபோராட்டத்தை மட்டுமே சுற்றிப்படர்ந்து உருவான தமிழகத்தின் அரசியல்க்கட்சிகள் பலவுண்டு. அவற்றில் முக்கியமான சில. 1)திமுக விலிருந்து பிரிந்த மறுமலர்ச்சி திமுக, ( 2) மருத்துவர் ராமதாஸ் அவர்களினால் நிறுவப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி, (3)திருமாவளவன் அவர்களால் உருவாக்கப்பட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சி, (4) தற்போது உருவாகியிருக்கும் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையிலான நாம் தமிழர் இயக்கம், ஆகியவையாகும், இவற்றில் நாம்தமிழர் இயக்கம் அரசியலுக்காகத்தோன்றாமல் ஈழ அழிப்பை கண்டு சகிக்கமுடியாமல் தானாகத்தோன்றி இன்று அரசியல் அரங்குக்குள் தள்ளப்படுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறது.

இவற்றில் பாட்டாளிமக்கள் கட்சி,,, நிறுவனர் ராமதாஸ், கருணாநிதியின் தலையையே தின்று தீர்த்துவிடுமளவுக்கு தந்திரசாலியாக தமிழ்நாட்டில் காணப்படுகிறார், பா ம க, என்பது சுயநலனே குறியாகக்கொண்டு நேரம் ஒரு கிளையில் இரைதேடும் கொள்கையற்ற குடும்ப சுயநலக்கட்சியாகும், 2006,ல் கருணாநிதியுடன் கூட்டுவைத்து தேர்தலில் நின்று வெற்றிபெற்று, மத்தியில் மந்திரிப்பதவிகளையும் பெற்ற ராமதாஸ், தனது மகனை சுகாதரத்துறை அமைச்சருமாக்கி பதவியில் இருந்துகொண்டே, ஈழப்பிரச்சினையின் கோரத்தை பயன்படுத்தி ஈழத்தையே முன்னிலைப்படுத்தி பிரச்சாரம் செய்து, 2009 ஆண்டு பாராளுமன்றத்தேர்தலுக்கு தன்னை தயார் செய்திருந்தார். மக்கள் தொலைக்காட்சியின் காட்சிகளை பார்த்த எவரும் ராமதாஸுன் உள்நோக்கத்தை விஞ்ஞானரீதியாகக்கூட கண்டுபிடித்துவிடமுடியாத அளவுக்கு மிகுந்த திட்டமிடலுடன் நெறிப்படுத்தி ஈழப்படுகொலைக்காட்சிகளை மக்கள் முன் கொண்டுசென்றார். இவற்றை புலனாய்வுசெய்த மலை விழுங்கியான கருணாநிதி, மௌனமாக காய் நகர்த்தி ஒரு ஓட்டுக்கு 500 ரூ என்றிருந்த கணக்கை 5,000,ரூ வரை ஏற்றி ராமதாசுக்கும் ஜெயலலிதாவுக்கும் நாமம் வரைந்து திருவோடு கையில் தந்திருந்தார், ஈழத்தின் அனுதாபம் பணத்தால் கழுவப்பட்டுவிட்டது. கருணாநிதியின் வல்லமையை அறிந்துகொண்ட ராமதாஸ் என்கிற அரசியல் வியாபாரி இன்றய திகதியில் திமுகவுடன் வியாபார ஒப்பந்தம் செய்துகொண்டிருப்பதை காணலாம்.

ஈழப்போர் காரணமாக 2009, க்கான பாராளுமன்றத்தேர்தலில் காங்கிரசும் திமுகவும் தோல்வியடையும் என்ற எண்ணத்தில் உள்நோக்கத்தோடு மருத்துவர் ராமதாஸ் மிக மிக மலிவாக ஈழத்தின் அவலத்தை சுயலாபத்திற்காகப்பயன்படுத்தியதையும் ஜெயலலிதாவுடன் கூட்டு வைத்துக்கொண்டதை எவரும் மறக்கமுடியாது. 2009, ஜனவரி தொடங்கி ஏப்பல் மே மாதங்களில் மக்கள் தொலைக்காட்சி மூலம் செய்த பரப்புரை ஈழத்தமிழனுக்கு சாதகமாக இருந்தாலும் ராமதாஸின் உள்நோக்கம் மிக மிக மலிவானதே, ஆனால் அவை எல்லாவற்றையும் கரைத்துக்குடிக்கும் வல்லமை பெற்ற கருணாநிதி தனது நீண்டகால அரசியல் அனுபவத்தின்மூலம் பாவப்பட்ட ஏழை மக்களின் பலவீனத்தை பயன்படுத்தி பணத்தால் ஒரே இரவில் எல்லாக்கட்சிகளையும் தரைமட்டமாக்கி வெற்றிவாகை சூடினார்.

அடுத்தவர் மா,நடிகன்,, கருணாநிதியை வென்ற மகா,நடிகன் திருமாவளவனார் ஆகும். இவரது பெயரை எழுதவே கை கூசுகிறது அவ்வளவு அற்பனாகிய திருமா இன்னும் ஈழத்தமிழரின் சோகக்கதைகளை பாத்திரங்களாக்கி நாடகமேடைகளிலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறார். தினமும் இவரது செய்தியும் படமும் வராத சர்வதேச தமிழ் இணையத்தளங்கள் 2007/2008/2009 ல் இருக்கவில்லை, இன்றும் ஒருசில இணையத்தளங்கள் இவரது செய்திகளை நகைச்சுவை கருதி வெளியிடுவதுண்டு, சுயநலன்கருதி சோனியா கானை, கடிந்துகொள்ளும் திருமா, சோனியா முன்னிலையில் எண்சாண் உடம்பையும் ஒருசாணாக்கி கூனிக்குறுகுவது பெருத்த சாதனையாக பாற்கப்படுகிறது, கருணாநிதியை கடவுளாக காணும் திருமா, தமிழீழத்தின் மேய்ப்பர் கருணாநிதி என்றும், ஈழத்தமிழர்களுக்கு கருணாநிதியுடன் இணைந்து ஈழத்தை பெற்றுக்கொடுப்பதற்கு உயிருள்ளவரை உழைப்பதாகவும் அழுதுகொண்டிருப்பதைக்காணலாம்.

ஒருகாலத்தில் திருமாவளவனை ஈழத்தமிழினம் சகோதரனாக தொப்புள்க்கொடி உறவாக நம்பிக்கெட்டதும் உண்டு. இறுதி யுத்தத்தின்போது தொடர் செத்தவீடாக ஈழத்தை எரித்துக்கொண்டிருந்த காங்கிரஸையும் கருணாநிதியையும் உலகத்தமிழினம் மண்வாரி திட்டிக்கொண்டிருந்தபோது. ஒன்றாக இணைந்து ஈழ ஆதரவு படங்காட்டிய ராமதாஸ் ஜெயலலிதாவின் புடவைக்குள்ளும், இனப்பிறவியான திருமா, சோனியா கருணா, காலுக்குள்ளும் ஒடுங்கிக்கொண்டனர்! இனி எந்தக்காலத்துக்கும் திருமாவால் ஈழத்தமிழனுக்கு விழுந்த சூடு ஈழ மக்களால் மறக்கப்படப்போவதுமில்லை. அவர்பாட்டுக்கு ஈழத்தமிழரின் பெயரை பாவித்து அரசியல் செய்வதால் அவரது சாதி அருந்ததியர் மக்களும் அருவருத்து திருமாவை அரசியலில் இருந்து நிராகரித்து ஒதுக்கக்கூடும், கருணாநிதியின் நடிப்பில் சற்றும் குறைவில்லாத நாடக மேதையான தந்தரசாலி திருமாவளவனின் பொய், பித்தலாட்டம், புளுகு, இல்லாதவற்றை நடந்ததுபோல் காட்டும் தந்திரம், இவைகளிலிருந்து தப்பிப்பதே ஈழத்தமிழனுக்கு இப்போதைக்கு பெரும் தலையிடியாகவுள்ளது.

மதிமுக தலைவர் திரு வைகோ பற்றியும் சொல்லியாகவேண்டும். வைகோ அவர்கள் தனது அரசியல்வாழ்வில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக ஈழத்தமிழரின் மீது பிறழ்வற்ற நேர்மையான அனுதாபியாக இருந்து வருவதை தமிழ் உலகம் தீர்க்கமாக அறியும், 1993,ல் கபடத்தனமாக கருணாநிதியால் திமுக விலிருந்து வெளியேற்றப்பட்டு, வைகோ தலைமையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் உருவானது. அடுத்துவந்த ஜெயலலிதாவின் ஆட்சியின்போது மதிமுக தலைவர் வைகோ விடுதலைப்புலிகளுக்கு சார்பாக செயற்படுகிறார் என காரணங்காட்டி "போடா" என்ற தடைச்சட்டத்தை பிரயோகித்து வைகோ அவர்களை வருடக்கணக்கில் வெளியேவரமுடியாத வகையில் சிறையில்த்தள்ளினார் ஜெயலலிதா, அந்த ஆத்திரத்தை தீர்க்கும்பொருட்டு,வைகோ அவர்கள் அதிரடியாக முடிவெடுத்து மீண்டும் கருணாநிதியின் திமுக வுடன் கூட்டு வைத்து அரசியல் செய்ததும், அந்தநேரத்தில் திமுகவில் உரிய மரியாதையின்றி கருணாநிதியால் வஞ்சிக்கப்பட்டு திரும்பவும் சிறைப்படுத்திய ஜெயலலிதாவுடன் கூட்டு வைத்து கருணாநிதியை எதிர்த்து அரசியல் செய்வதும் , இந்தியத்தமிழர்கள் ரசிக்கிரார்களோ என்னவோ ஈழத்தமிழனால் ரசிக்க முடியவில்லை என்பதும் உண்மை, ஆனாலும் வைகோ ஈழத்தமிழரின்பால் நீண்டகாலமாக கொண்டிருக்கும் களங்கமற்ற ஈடுபாடும், தேசியத்தலைவர் மீது வைத்திருக்கும் நடிப்பற்ற உண்மையான அன்பு மரியாதையும் காரணமாக, வைகோ அவர்களின் தனிப்பட்ட அரசியல் கூட்டுப்பற்றி ஈழத்தவர் எவரும் பெரிதுபடுத்தி பேசுவதில்லை. ஆனாலும் வைகோ அவர்கள் எந்தக்கட்சியுடன் கூட்டு வைத்துக்கொண்டாலும் தனது கொள்கையிலிருந்து மாறாமல் ஈழத்தமிழரின் வாழ்வே தனது வாழ்வையும் விட மேலானது என்ற கொள்கையுடையவர், அந்தவகையில் வைகோ தனது கட்சி அழிந்துபோனாலும் ஈழமீட்சியை மறக்கமாட்டார் என்று நம்பலாம்.

ஜனநாயகம் என்னவிலை என்று பணநாயகம் மூலம் அரசியல் செய்யும் இந்திய அரசியல்க்களத்தின் யதார்த்தமும், ஈழமக்களால் புரிந்துகொள்ள முடியாமலும் இருக்கக்கூடும். யதார்த்தம் எப்படியிருப்பினும் வைகோ அவர்களின் மதிமுக ஒன்றுமட்டும் தன்னால் முடிந்தவரை மானசீகமாக ஈழத்துக்காக குரல் கொடுத்து வருவதை உளப்பூர்வமாக ஈழ மக்கள் உணர்ந்துள்ளனர்.

அடுத்து கட்சி அரசியலுக்கப்பாற்பட்டு மானசீகமாக ஈழத்துக்காக அற்பணிப்புடன் இயங்கிவரும் ஐயா நெடுமாறன் அவர்களையும் மரியாதையுடன் ஒவ்வொரு ஈழத்தமிழனும் நெஞ்சில் இருத்திக்கொண்டிருக்கின்றான். அப்பழுக்கற்ற அவரது பணி எந்தப்பிரதியுபகாரமுமில்லாமல் நெடுமாறன் ஐயா அவர்களால் எடுக்கப்படுகின்றது, அவரது நடவடிக்கைகள் ஈழதமிழினத்தை நெகிழவைப்பனவாகும்,

அடுத்து சுப வீரபாண்டியன், பாதிரி ஜெகத் கஸ்பர் ராஜ், ஆகியோரின் கசப்பான பிபுலங்களை விட்டு விடலாம் ஏனெனில் அவர்கள் இருவரும் இப்போ கருணாநிதியின் வீட்டு முற்றத்து மரத்தில் குடியிருக்கும் ஆட்காட்டி பறவைகள்,

2009,ல் ஈழப்போராட்டம் கருணாநிதியின் வரலாற்றுப்பிழையால், இந்திய காங்கிரஸ் அரசின் தலைமையில் பலநாடுகளின் உதவியோடு ஒடுக்கப்பட்டது, தமிழர் தரப்பிலிருந்து கணக்கிடமுடியா விலைகொடுத்தபின், போராட்டம் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது, இருந்தும் போராட்டம் சாத்வீகமுறையில் புலம்பெயர்தேசங்களிலும், வெவ்வேறு பிரிவுகளாகவும் முன்னெடுக்கப்படுகின்றன, ஈழ இனம் அழிந்துபோனாலும் ஏதோ ஒரு வழியில் வலியை திருப்பி செலுத்தவேண்டும் என்பதே எமது இனத்தின் தலையாய குறிக்கோளாகும்,

இந்த நோக்கத்தோடு ஈழத்தமிழினத்துக்காக மிகுந்த நெருக்கடிகளைச்சந்தித்து துணிவுடன் தமிழ்நாட்டிலிருந்து போராடிக்கொண்டிருக்கும் ஒருவர் மறத்தமிழன் செந்தமிழன் சீமான் அவர்கள். ஈழத்தின் சாவுகளை கண்டு தாங்கமுடியாமல் ஒரே இனம் என்ற உணர்வில் தாய் பிள்ளையாக தன்னை இருத்தி, ஈழமக்களுக்காக குரல்கொடுத்த காரணத்தினால், ஒரு குறுகிய காலத்தில் இரண்டுமுறை தேசியப்பாதுகாப்பு சட்டத்திலும் மூன்றுமுறை பொலிஸ் கஸ்டடியிலும் மொத்தம் ஐந்துமுறை சிறை சென்று திரும்பியவர், ஈழ விடுதலைக்காக எந்தச்சக்திக்கும் அடிபணியாமல் போராடப்போவதாக சீமான் கூறியிருக்கிறார், சீமான்மீது ஈழத்தமிழ் மக்கள் பெருமதிப்புக்கொண்டிருக்கின்றனர், காரணங்களும் நிறைய உண்டு, ஈழப்போராட்டம் வலுவாக இருந்தகாலத்தில் போராளிகள் களத்தில் நிறைந்திருந்தபோது பேச்சுவார்த்தைக்கென ஐரோப்பிய அமெரிக்க தூதர்கள் வன்னியை நோக்கி படையெடுத்தபோது தரும் ஆதரவிற்கும், இன்றயநிலையில்த்தரும் ஆதரவிற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. அந்த வகையில் சீமான் அவர்கள் களம் இறங்கியிருக்கும் தருணம் மிக மிக வித்தியாசமான காலகட்டமாகும்.

"சீமானின் கருத்துக்களில் சிறு துளி: பிரபாகரன் என் தலைவன். பிரபாகரன்தான் எங்கள் வழிகாட்டி. என் தாய் இனத்தை அழித்தவன் சிங்களவன் அதே தாய் மண்ணில் எங்கள் தாய் மண்ணை மீட்டெடுப்போம். 10 ஆண்டுக்குள் ஈழ விடுதலை நிச்சயம். ஈழ விடுதலைக்கு இந்த மண் என்ன செய்தது. எங்களை அழிக்கத்தான் முன்வந்தது. அதனால்தான் எங்கள் ஈழ விடுதலை தமிழ் தாயகம், தமிழ் ஈழம் எங்கள் தாகமாக உள்ளது. 16 கல் தொலைவில் உள்ளது என் தாய் மண். அதை மீட்டெடுக்க நான் செல்வதில் என்ன தவறு. இதற்கு முன்பு தனி ஈழம் கிடைக்கச் செய்வோம் என்று சொல்லியவர்கள் புறம்தள்ளிவிட்டு ஓடிவிட்டார்கள். ஆனால் நாம் புலிக்கொடி என்ற தேசியக்கொடியை பறக்க விடுவோம். இந்த மண்ணில் பேச்சுக்கு, கருத்துக்கு சுதந்திரம் கிடையாது. என் இனம் காக்க ஒவ்வொரு கட்சி மேடையிலும் ஓடி ஓடி பேசினேன். கடைசியில் வென்று நின்று செத்தவனாகி விட்டேன். அதன்பிறகுதான் என் நாட்டைக் காக்க, என் இனம் காக்க, படை கட்ட திட்டமிட்டு தம்பிகளை ஒன்றிணைத்து படை கட்டியிருக்கிறேன். லட்சக்கணக்கான கண்ணீரில்தான் இந்த படை கட்டப்பட்டு இருக்கிறது. சிங்களவன் என் தாய், தந்தையர்களின் உடல்களை பிளந்தான். இதைப் பார்த்து போராட யாரும் வரவில்லை என்றுதான், நாம் தமிழனை உருவாக்கினேன். மீனவனை அடித்தால் மாணவனை அடிப்பேன் என்று சொன்னதற்கு சிறைப்படுத்தினார்கள்.

இதற்கு நீதிபதி சொன்னார் சீமான் சொன்னதில் என்ன தவறு என்று. என் சொந்தங்களை தட்டி எழுப்பத்தான். நெருப்பில் வெந்து செத்தான் முத்துக்குமார். இவனுக்காக என்ன செய்தார்கள் ஆட்சியாளர்கள். இனம் காக்க போராடியவர்களைத்தான் ஒடுக்கினீர்கள். ஈழ மண்ணில் சுதந்திரத்திற்காக போராடியவர்களை அங்கே செத்து மடிந்தவர்களை வெளியே தெரியாமல் மூடி மறைத்தீர்கள். ஊடகங்களில் வெளிவராமல் தடுத்தீர்கள். இதை பதிவு செய்து வீடு வீடாக கொடுத்த என் தம்பிகளை சிறைப்படுத்தினீர்கள். இதுதான் உங்களால் செய்ய முடிந்தது. முதல்வன் படத்தைப் போல, என்னையும் ஒருநாள் முதல்வராக ஆக்கிப் பாருங்கள். எப்படி மாற்றி காட்டுகிறேன். இந்திய பேரரசே தமிழ் தேசிய இனம் எங்கள் இனம். அனைத்தையும் மாற்றி காட்ட என்னால் முடியும் என்றார்."

சிங்கள அரசுத்தலைவர் ராஜபக்க்ஷ எந்தளவுக்கு தமிழனின் எதிரியோ துரோகியான கருணாநிதி ஈழத்தமிழர்களுக்கு இரண்டு மடங்கு மோசமானவராகும். கருணாநிதியை அரசியல் ரீதியாக எதிர்ப்பதற்கு தமிழ்நாட்டு தமிழர்கள் திரட்டப்படவேண்டும் அதற்கு இளைஞரான, பலராலும் அறியப்பட்ட சீமான் மிகச்சரியானவரே, ஆனால் சீமான் மீதி ஒரு குற்றச்சாட்டும் உண்டு, விரைவில் உணர்ச்சி வசப்படுபவரென்றும் கோபப்படுபவரென்றும் கூறப்படுகின்றது. அதை சகோதரர் சீமான் மறுத்தாலும், உண்மை ஓரளவு இருப்பதாகத்தான் உணரக்கூடியதாகவும் உள்ளது, கருணாநிதி ஜெயலலிதா போன்றவர்களை உணர்ச்சி வசப்பட்டு எதிர்க்காமல் காரியத்தால் எதிர்ப்பதே வெற்றிதரும் என்பதுதானே யதார்த்தமும்.

வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் கருணாநிதியையும் காங்கிரஸையும் எதிர்ப்பதற்காக சீமான் அவர்கள் தெரிவுசெய்திருக்கும் முறையும் சரிதானா என்பதும் சிலரது சந்தேகம், ஏனெனில் ஜெயலலிதா என்ற சக்தி யதார்த்தத்தை புறந்தள்ளி திடீர் நடவடிக்கைகளில் இறங்கி தலைகீழாக மாறக்கூடிய ஒன்றாகும். ஆனாலும் சீமானின் முயற்சி வெற்றி பெறவேண்டும் என்பதே எல்லோரது அவாவும். வெற்றிபெற்றவர்களை போற்றுவதும் தோத்துப்போனவர்களை பார்த்து சிரிப்பதும் உலக நடைமுறை, சீமான் தனது கருத்துப்பட முயற்சிப்பது அவரது சுதந்திரமும் கூட,

ஆனால் ஈழத்தமிழர்கள் அரசியல் ஆராய்ச்சிப்பொருளாக இனிமேலும் இருக்க தயாரகவில்லை ஏனெனில் அவ்வளவுக்கவ்வளவு அவர்கள் நொந்துபோய்விட்டனர் என்பதை மற்றவர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

தேசியத்தலவர் மேதகு பிரபாகரன் அவர்கள் கூறுவதுபோல், திடமாக இருப்போம் காலம்தான் போராட்டத்தை தீர்மானிக்கும்.

ஈழதேசம் இணையத்திற்காக
கனகதரன்,,

நன்றி ஈழதேசம்,

Saturday, January 8, 2011

தொல் திருமாவளவனின் பரிணாம வீழ்ச்சி

ரோஷப்பட்டேனா நான் ?


இந்திய உளவுத்துறையும் இலங்கை அரசும் இணைந்து புலிகளின் அண்மைத் தாக்குதல் பற்றிய கட்டுக்கதைகள் பரப்புகின்றன. இந்தியாவில் நடக்கவிருந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டு விட்டதாகவும் புலிகளின் அடுத்த இலக்கு இலங்கையின் பொருளாதார மையங்கள் தான் என்றும். இரு பகுதியும் ஒருமித்த குரலில் கூறுகின்றன.

இந்திய முன்னணிச் செய்திப் பத்திரிகை ரைம்ஸ் ஒப் இந்தியா ஒருபடி மேலே போய் இந்தியப் பிரதமர், காங்கிரஸ் கட்சித் தலைவி, அவருடைய சற்புத்திரர், உள்துறை அமைச்சர் ஆகியோரைத் தாக்கப் புலிகள் திட்டம் தீட்டியுள்ளனர் என்று செய்தி வெளியிட்டுள்ளது.

செத்தும் கொடுத்தான் சீதக் காதி என்பார்கள் புலிகளை சாக்காக வைத்து அரசியல் நடத்தும் திட்டம் இந்திய இலங்கை அரசுகளுக்கு இருப்பதை இதன் மூலம் காணலாம் சிந்தனை வறட்சியும் தடுமாற்றமும் இரு பகுதியிடமும் காணப்பட்டாலும் தமிழர்களை ஓரங்கட்ட வேண்டும் என்ற இலக்கு மாத்திரம் உறுதியாக இருக்கிறது.

சென்ற வருட டிசம்பர் 22ம் நாள் சென்னையில் தமிழக எழுத்தாளர்களையும் பத்திரிகையாளர்களையும் சந்தித்துப் பேசிய ராகுல் காந்தி உண்மைக்குப் புறம்பான பல தகவல்களை வெளியிட்டார். எதிர்பாராத விதமாகச் சில பத்திரிகையாளர்கள் அவரை நிலைகுலைய வைத்த ஈழத் தமிழர் தொடர்பான கேள்விகளைக் கேட்டனர்.

ஈராக்கில் முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் அவர் மீது காலணித் தாக்குதல் நடத்திய தன்மானமுள்ள பத்திரிகையாளன் முண்டாதர் அல் ஜெய்தி போன்ற ஒருவரும் இந்தச் சந்திப்புக்கு வரவில்லை.

அதை விட ராகுலின் பத்திரிகையாளர் சந்திப்புகளுக்கு வரும் ஊடகவியலாளர்களின் காலணிகள் களையப்படுவது வழமையாகி விட்டது. காலணி என்றால் அவருக்கு அலர்ஜி என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈழத்தமிழர்களுக்கு இவ்வளவு கொடுமை நடந்தும் இலங்கைக்கு எதிராகக் காங்கிரஸ் கட்சி கண்டனக் குரல் எழுப்பவில்லை என்று ஒரு அப்பாவிப் பத்திரிகையாளர் கேட்டார். அத்தனைக்கும் ஊக்கமும் ஆக்கமும் அளித்தது இந்தியா தான் என்பதை மறந்து அவர் இந்தக் கேள்வி கேட்டார்.

பதிலளித்த ராகுல் தமிழ் நாட்டில் நடத்திய ஐந்து பொதுக்கூட்டங்களில் இலங்கை அரசை கண்டித்தேன் என்று கூறினார். உயர் மட்டத்தில் தமிழர்கள் மீதான தாக்குதல்களுக்கு உத்தரவிட்ட இந்திய அரசின் வருங்காலத் தலைவர் இந்தப் பதில் மூலம் யாரை ஏமாற்றப் பார்க்கிறாரோ தெரியவில்லை.

தமிழ் நாட்டுத் தலைவர்கள் கிணற்றுத் தவளைகள் போல் தமது மாநிலத்தின் கட்டுக்கோப்பிற்கு வரவிருக்கும் அல்லது ஏற்கனவே வந்துவிட்ட ஆபத்தை உணராமல் அரசியல் நடத்துகின்றனர். இன்று உனக்கு நாளை எனக்கு என்பது வரலாற்று உண்மை.

ஈழத்தமிழர் வாழ்வை அழித்த இந்திய ஆளும் வர்க்கம் அடுத்த கட்ட நடவடிக்கையாகத் தமிழ்நாட்டில் கண் வைத்துள்ளது. தமிழ்நாட்டில் 6.5 கோடி மக்கள் உள்ளனர். சாதிகள் 500 வரையில் அவை உயர், இடை, கடை என்ற மூவிதமாக வகுக்கப்பட்டுள்ளன. தாழ்த்தப்பட்டோர் என்ற ரகமும் உண்டு.

இந்தியாவில் சாதி தான் அரசியல். சாதியை முன்நிறுத்தி வாக்குக் கேட்பார்கள். சண்டை சச்சரவுகளும் சாதி அடிப்படையில் நடக்கும். முப்படை, காவல்துறை, நிர்வாக சேவைகளின் தலைமை அதிகாரிகள் உயர் சாதியினராவர்.

ஊசிக் கண் ஊடாக ஒட்டகம் நுளைவது போல் அடித்துத்தட்டுச் சாதியினர் சிலர் தமது அசாத்திய திறமை மூலம் உயர் பதவியில் அமர்ந்துள்ளனர். வேறு சிலர் உயர் சாதிக் குடும்பத்தினரின் ஆதரவும் சொந்தத் திறமையும் ஒன்றுபட்டதால் மேலுக்கு வந்துள்ளனர்.

தமிழ் நாட்டு வன்னியர்களின் எண்ணிக்கை 2.5 கோடி. தமிழ் நாட்டில் தான் மிகக் கூடுதலான எண்ணிக்கையில் வன்னியர்கள் உள்ளனர் ஒரு முறை கூட வன்னியர் ஒருவர் முதல்வராக வர முடியவில்லை. வன்னியர்களை மிகவும் நுட்பமாகக் காங்கிரஸ் கட்சியினர் பிரித்துள்ளனர்.

வன்னியர்களுக்குச் சொந்தமான வன்னியர் சங்கம் 1990ல் பாட்டாளி மக்கள் கட்சியாக மாற்றப்பட்டது. கட்சியைச் சாதி அரசியலுக்குள் முடக்காமல் உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களுக்குப் பயன்தரும் வகையில் பா.ம.க கட்சித் தலைவர் மருத்துவர் ராமதாஸ் மக்கள் தொலைக்காட்சியை நிறுவி அரும் பணி ஆற்றுகிறார்.

அவருடைய உலகெலாம் தூய தமிழ் பரப்பும் பணிக்காக உலகத் தமிழ்க் காவலர் என்ற விருதை மலேசிய வன்னியர் சங்கம் அவருக்கு வழங்கியுள்ளது. தொலைக்காட்சியைப் பயன்தரு மாற்று ஊடகமாக மாற்றிய தனிச்சிறப்பு அவருடையதாகும். கேளிக்கைச் சாதனத்தை அறிவுச் சாதனமாக மாற்றியவர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள்.

இன்னொரு சாதிக்கட்சித் தலைவரான தொல் திருமாவளவன் குளிக்கச் சென்று சேற்றை உடலில் பூசியவர் போல் சாக்கடை அரசியல் நடத்துகிறார். கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழியின் வழியில் அவர் தனது சாதிக் கட்சிக்கு விடுதலைச் சிறுத்தைகள் என்று பெயரிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு நிகரான கட்சி என்று விடுதலைச் சிறுத்தைகள் பற்றி எண்ணியவர்கள் ஏமாற்றுப்பட்டுள்ளனர். ஈழத் தமிழினத்தின் விடுதலைக்காகவும் பரந்து விரிந்த உலகத் தமிழினத்தின் எழுச்சிக்காகவும் உருவாக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் அரசியல் கட்சி அல்ல.

தொல் திருமாவளவன் சுயலாபத்திற்காக அரசியல் நடத்துபவர். ஒரு எம்பி பதவிக்காக அவர் அடிக்கும் பல்டிகள் பரிதாபகரமானவை. தன்னை வளர்க்க அவர் எடுக்கும் முயற்சிகள் அவரை இனம் காட்ட உதவுகின்றன. வீரம், மானம், நடத்தை, தெளிவு என்பனவற்ற சோதாப் பயலாகக் காட்சிதருகிறார்.

தனது சாதிக்குத் தன்னும் தொல் திருமாவளவன் விசுவாசமாக இருக்கிறாரா என்பது சந்தேகமே. சாதியின் பெயரால் அரசியல் நடத்தித் தன்னை உயர்த்துவதே அவர் அடிப்படை நோக்கம். இதற்காக ஒட்டுமொத்த தமிழினத்தைக் காட்டிக்கொடுக்கத் தயங்காத அற்ப மனிதனாக அவரை வர்ணிக்கலாம்.

சாதி என்ற குறுகிய வட்டத்திற்குள் நிற்காத தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் சாதி பற்றி ஒருபோதும் சிந்திக்காதவர். அவர் சாதிகளுக்கு அப்பாற்பட்டவர். அவர் இலட்சியங்களில் தமிழினத்தைப் பீடித்துள்ள சாதியத்தை ஒழித்துச் சமத்துவமான சமுதாயத்தின் தோற்றம் முதலிடம் வகிக்கிறது.

இது தொடர்பில் அவர் சொன்னதொரு முக்கிய கருத்தை இங்கு பதிவு செய்கிறோம். “நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிது என்று வாழுங்கள். நாடு பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே. எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரிது.

தன்னை ஈழத்தமிழர்களின் நண்பனாகக் காட்டிய தொல் திருமாவளவன் சிறிது காலம் அவர்களால் பாச உறவாகப் பார்க்கப்பட்டது உண்மையே. தான் பிரபாகரனுக்கு நெருக்கமானவர் என்று காட்டுவதற்காக அவர் வன்னிக்கு வருகை தந்து ஒட்டி உறவாடினார். இதையும் ஈழத்தமிழர்கள் வரவேற்றனர்.

எளியேனின் கண்ணில் ஒரு காட்சி விரிகிறது. தேசியத் தலைவருடன் நெருக்க உறவைக் காண்பித்த தொல் திருமாவளவனுக்குச் சம்பிரதாய பூர்வமாக வாழை இலையில் உணவளிக்க பிரபாகரன் விரும்பினார். உபசரிப்பின் முக்கிய பகுதியாகச் செம்பும் தண்ணீரும் வழங்கிக் கை கால் அலம்பும்படி கேட்டுக் கொண்டார்.

பாசாங்கு செய்தாரோ என்னவோ தெரியவில்லை. திருமாவளவனின் கண்கள் பனித்தன. ‘தமிழ் நாட்டில் உணவு நேரம் நெருங்கியதும் உயர் சாதித் தலைவர்கள் ஏதோ சாக்குப் போக்குச் சொல்லி வெளியேற்றி விடுவார்கள். நீங்கள் என்ன வென்றால்” என்று சொல்லி நிறுத்தினார்.

ஈழத் தமிழர்களையும் தேசியத்தலைவர் பிரபாகரனையும் மூலதனமாக்கி அரசியல் நடாத்தும் திட்டம் தொல் திருமாவளனிடம் நெடுகாலம் இருக்கிறது. வேறு சதி நோக்கும் இருக்கலாம். புலம் பெயர் உறவுகள் இதை நன்கு உணர்ந்து தாம் நடத்தும் தேசிய நிகழ்வுகளுக்கு அவரை அழைக்காது விடுத்துள்ளனர்.

எனினும் தொடர்பு இன்னும் இருப்பது போல் தொல் திருமாவளவன் காட்டிக் கொண்டிருந்தார். தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் உரிய அனுமதியுடன் மருத்துவ சிகிச்சைக்காகத் தமிழகம் சென்றபோது திட்டமிட்டுத் திருப்பி அனுப்பப்பட்டார்.

அரசியல் குடிலன் கருணாநிதியும் அவருடைய சகா சிதம்பரமும் இந்த அநாகரியச் செயலைப் புரிந்தனர். நாடு திரும்பிய மூதாட்டியைத் தான் தமிழகம் கொண்டு வரப் போவதாக திருமாவளவன் மலிவான பத்திரிகை விளம்பரம் தேடுவதற்காகச் சூளுரைத்தார். ஆனால் செய்யவில்லை.

செட்டிக்குளம் தடுப்பு முகாமில் முட்கம்பி வேலிகளுக்குள் அடைபட்ட ஈழத் தமிழர்களைப் பார்வையிட டி.ஆர்.பாலு தலைமையில் ஒரு குழுவை இந்திய நடுவண் அரசு அனுப்பியது நினைவிருக்கலாம். அந்தக் குழுவோடு ஒட்டிக் கொண்டு திருமாவளவனும் வந்து சேர்ந்தார்.

புகைப்படக் காரர்களுக்கு முகங்காட்டி மலிவான விளம்பரம் தேடுவதற்காக இந்தச் சுற்றுப்பயணத்தை அவர் மேற்கொண்டார். முகாமில் அடைக்கப்பட்டோருடன் பேசுவதற்கு அவர் மறுத்துவிட்டார். யாழ் நூலக மண்டபத்தில் நடந்த பொது மக்கள் சந்திப்பில் கலந்த போதும் மெனனமாக இருந்தார்.

டி.ஆர். பாலு குழுவினர் கொழும்பில் அதிபர் ராஜபக்சவைச் சந்தித்தபோது தொல் திருமாவளவனும் கூட இருந்தார். அது போதாதென்று தான் கொண்டு சென்ற பொன்னாடையை ராஜபக்சவுக்குப் போர்த்தி வாழ்த்துத் தெரிவித்தார். ஒரு இனப் படுகொலையைச் செய்த ஒருவருக்கு தொல் திருமாவளன் இந்திய அரசின் கட்டளைப்படி இவற்றைச் செய்தார்.

தமிழ் நாட்டின் உறுதிப்பாடும் இயல்பு நிலையும் நீடிக்க வாய்ப்பில்லை. இந்திய அரசை வழி நடத்தும் பின்னணிச் சக்தியான உளவுத்துறையினர் தமிழ் நாட்டின் அமைதியைக் குலைப்பதற்குத் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே இந்தக் கைங்காரியத்தை ஆந்திரா மானிலத்தில் நிறைவேற்றியுள்ளனர்.

சோவியத் ஒன்றியத்தின் உடைவிற்குப் பல காரணிகள் கூறப்பட்டாலும் உறுப்பு நாடுகள், மாநிலங்கள் மீதான நடுவண் அரசின் இறுக்கமான கட்டுப்பாடுகள் முக்கியமாகக் குறிப்பிடப்படுகின்றன. கேஜிபி உளவுப்படை மூலம் கட்டுப்பாடுகள் அமுலாக்கப்பட்டன.

இந்தியாவும் சோவியத் ஒன்றியத்தின் பாதையில் செல்வதை அவதானிக்க முடிகிறது. உறுப்பு நாடுகள், மாநிலங்கள் பலம் பெறுவதை மொஸ்கோ அரசு கேஜிபியின் சீர்குலைப்புத் திட்டங்கள் மூலம் தடுத்து வந்தது. நடுவண் ஆதிக்கத்தை நிலைபெறச் செய்வதற்காக அதைச் செய்தது, இந்தியாவிலும் அது நடக்கிறது.

தமிழ் நாட்டின் சாபக்கேடு அதன் சாதி அரசியல்தான். பெரியார் போன்ற திராவிடச் சிந்தனையாளர்கள் வளர்த்த முற்போக்குக் கருத்துக்கள் மறைந்து விட்டன. சாதி போன்ற குறுகிய சிந்தனை ஆதிக்கம் செலுத்துகிறது.

இந்திய உளவுத் துறைக்கு தொல் திருமாவளவன் போன்ற சுயநலவாதிகள் தேவைப்படுகின்றனர். ராஜிவ் காந்தியின் சிலைக்கு யாரோ செருப்பு மாலை போட்டதற்கு தொல் திருமாவளவன் அலறி அடித்துக்கொண்டு ‘அன்னை” சோனியா காந்திக்கு விசுவாசம் தெரிவித்து வெளியிட்ட அறிக்கை அவருடைய அடிமைப் புத்தியை எடுத்துக் காட்டுகிறது.

நக்குகிற நாய்க்கு செக்கு என்ன சிவலிங்கம் என்ன என்று சொல்வார்கள். தொல் திருமாவளவன் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் பற்றி அவதூறு பரப்பி வருகிறார். இது வியப்பான செய்தியல்ல. தொல் திருமாவளவன் எடுப்பார் கைப்பிள்ளை. அவருக்குத் தேவை அரசியல் பதவி மற்றும் விளம்பரம்.

தமிழ் நாட்டில் விரிசலை உண்டாக்கும் கருவியான தொல் திருமாவளவனுக்கு அங்கு நிறைய வேலை இருக்கிறது. தமிழீழத்தில் அவருடைய நிழல் படாமல் இருந்தால் போதும். ஒன்று மாத்திரம் நிச்சயம். அவரைப் போல் இன்னும் பலர் தமிழ் நாட்டில் இருக்கிறார்கள். விழிப்பாய் இருப்போம்.

நன்றி தமிழ் வின்

Thursday, January 6, 2011

காடேறிகளின் கோரப்பிடியில் யாழ்ப்பாணம், பயமும் வேதனையும் துரத்துகிறது!!

யாழ்ப்பாணம், இந்தப்பெயரை கேட்டால் ஒருகாலத்தில் ஒழுக்கம் தமிழ்மணம், பண்பு விருந்தோம்பல் கல்வியும் உழைப்பும், நினைவுக்கு வந்தது இன்று யாழ்ப்பாணம் என்றவுடன் "கலாச்சாரசீரழிவும்" பயமும் வேதனையும் EPDP யும் இராணுவ ஆக்கிரமிப்பும்தன் ஞாபகத்துக்கு வருகிறது. நாளாந்தம் ஆள்க்கடத்தல் கப்பங்கோரல் படுகொலைகள், அத்துடன் வாழ்நாளில் காணாத கலாச்சார சீர்கேடுகளை கொண்டுவந்து குவிக்கப்படும் பிரதேசமாக யாழ்ப்பாணம் மாற்றப்பட்டிருக்கிறது. தினமும் படுகொலைகள் கற்பழிப்புக்கள் கடத்தல்கள் இவைதான் யாழ்ப்பாணத்தின் இன்றய அடையாளம்.

சமீபத்தில் யாழ்ப்பாணத்து பள்ளி மாணவி ஒருவருக்கு 76பேருடன் பாலியல்ரீதியாத தொடர்பு இருந்ததாக அவரே தெரிவித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். 17வயதாகும் இம் மாணவிக்கு எயிட்ஸ் நோய் இருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. சமீபத்தில் கொழும்பு வைத்தியசாலை ஒன்றில் இராணுவச் சிப்பாய் ஒருவருக்கு எயிட்ஸ் நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அச் சிப்பாய் யார் யாருடன் உடலுறவை வைத்திருந்தார் என மருத்துவர்கள் கண்டறிய முற்பட்டவேளை இச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக அறியப்படுகிறது. இச் சிப்பாய் குறித்த 17 வயது மாணவியோடு உறவுவைத்திருந்ததை ஒத்துக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து நடாத்தப்பட்ட விசாரணையின்போது, தன்னுடன் 76 ஆண்கள் தொடர்புகளை வைத்திருந்ததாக அவர் முதல் கட்டமாகத் தெரிவித்துள்ளார். 14வயதில் இருந்தே தன்னுடன் ஆண்கள் உடலுறவுரீதியான தொடர்புகளை திணித்திருந்ததாகவும் அந்த மைனர் பெண் அப்பாவித்தனமாக தெரிவித்துள்ளார். இவர்களில் கணிசமானவர்கள் படையினர் என்பதும் கவனிக்கவேண்டும். இதை ஒரு சாதாரணமான நடைமுறையாக எவராலும் எடுத்துக்கொள்ள முடியாது, இது யாழ்ப்பாண சீரழிவின் ஒரு துளி மட்டுமே.

இவற்றை தடுக்கவேண்டிய பொறுப்பும் தலையாய கடமையும் பெற்றோருக்கும் சமூகப்பெரியோருக்கும் (அரசுக்கும்) உண்டு, ஆனால் ஆதரவற்ற மக்களை அச்சுறுத்தி பீதிகலந்த பய உணர்வுக்குள் சமூகத்தை இருத்தி மக்களை அழித்து அவர்களது வாழ்வியலை திசைதிருப்ப எண்ணும் சிங்கள அரசு தனதுகபட நோக்கத்தை தமிழ்த்துரோக ஒட்டுக்குழுக்களையும் இராணுவத்தையும் பயன்படுத்தி நிறைவேற்றி வருகிறது. இந்த அச்சுறுத்தல் பொறியிலிருந்து தப்பிக்க நினைக்கும் இளைஞர்கூட்டம் தாம் தப்பிப்பதற்காக தாமாகவே இந்தப்பொறியில் விழுந்து கலந்து சமூக விரோதிகளாக மாற்றப்படுகின்றனர். இந்த இளைஞர்கள்தான் இன்று தெருத்தெருவாக குடி, கும்மாளம், என்று சென்று அடிதடியில் முடிக்கின்றனர். இன்னும் சிலர் ஒட்டுக்குழுக்கள் மற்றும் இராணுவத்துடனும் உறவுகளை வைத்து சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டுவருவதாகவும் கூறப்படுகிறது'. இது கவனிக்கப்படாவிட்டால் யாழ்ப்பாணத்தை அழிப்பதற்கு வேறு எந்தவினையும் தேவைப்படப்போவதில்லை.

பூனைக்கு மணிகட்டுவது யார் என்ற நிலையில் அக்கறையுள்ளவர்கள் நின்றுகொண்டிருக்கின்றனர். விடுதலைப்புலிகள் ஆட்சி செய்தபோது மக்கள் இதுபற்றி சிந்திக்க இடமிருக்கவில்லை. இயக்கம் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தது. இன்று ஏற்பட்டிருக்கும் இந்த வெற்றிடம் எந்தச்சக்தியாலும் ஈடுசெய்ய முடியவில்லை, என்பது ஒவ்வொருவரது அடிவயிற்றிலும் நெருப்பை கொட்டியதை விடவும் கொடூரமாக கனன்றுகொண்டிருக்கின்றது. சாதாரணமாக ஒரு நாட்டில் பொலிஸ் மற்றும் இராணுவம்தான் மக்களை பாதுகாக்கும் அரணாக இருப்பதுண்டு தமிழர்களுக்கு இது என்றைக்கும் ஒத்துவராத ஒன்று.

இந்நிலையில் மக்கள் நம்பவேண்டியுள்ள ஒரே ஆதாரம் தமிழ் அரசியல் தலைவர்கள், மற்றும் பொறுப்பான பதவிகளில் இருந்து மக்களை பாதுகாத்து சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுமிடத்தில் பதவிவகிக்கும் சிவில் நிர்வாக அதிகாரிகளையே. ஆனால் வீடு எரிக்கும் ராசாவுக்கு நெருப்பு எடுத்துக்கொடுக்கும் டக்ளஸும் கருணாவும் மந்திரியாகவும் அவற்றை நடைமுறைப்படுத்தும் பொறியாக அரச அதிபர் இமெல்டா சுகுமாரும் இன்னும் பலரும் களத்தில் நிற்கின்றனர்.

தமிழ்த்தாயின் வயிற்றில்ப்பிறந்து அரசியல்செய்யும் அரசியல்வாதிகளும், தமிழ் அரச அதிகாரிகளும் அங்கு இன்னும் வாழுவதாகவும் சேவைசெய்வதாகவும் உதிரியாக செய்திகள்மட்டும் வருகின்றன. யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக ஒரு பாதிக்கப்பட்ட பெண் (தாய்க்குலம்) திருமதி. விஜயகலா மகேஸ்வரன், மற்றும் யாழ் அரசாங்க அதிபராக ஒரு தமிழ்த்தாய் பெற்றெடுத்த பெண் இமெல்டா சுகுமார், ஆகியோர் முக்கிய இடத்தில் இருக்கின்றனர். இன்றய நிலையில் அரசாங்கத்தை தட்டிக்கேட்கக்கூடிய இடத்திலும் இவர்கள்தான் இருக்கின்றனர்.

அத்துடன் சிலகாலங்களாகக் யாழ்குடாநாட்டில் பொறுப்பான சிவில் அதிகாரங்களில் இருப்பவர்கள் அதிகமானவர்கள் பெண்களாகும், ஐந்து ஆறு மாதங்களுக்கு முன்பிருந்த பட்டியலின்படி மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ரூபிணி வரதலிங்கம், யாழ்ப்பாண பிரதேச செயலர் திருமதி சுகுணரதி தெய்வேந்திரம், மாநகரமேயர் யோகேஸ்வரி பற்குணராஜா, உடுவில் பிரதேச செயலர் திருமதி மஞ்சுளாதேவி சதீஷன், சங்காணை பிரதேச செயலர் திருமதி தேவநந்தினி பாபு, யாழ். உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திருமதி மதுமதி வசந்தகுமார், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பசுபதிராஜா பவானி, யாழ்ப்பாண கல்விப்பணிப்பாளர் திருமதி.கே.வேதநாயகம், யாழ்.பிராந்திய மாகாண ஆணையாளர் திருமதி எஸ். சிவலிங்கம், யாழ்.பிராந்திய உதவிப் பதிவாளர் திருமதி மகாராணி இராஜரத்தினம், புவிச்சரிதவியல் சுரங்கப்பணிகள் அகழ்வு பணிப்பாளர் எந்திரி கே.யோககௌரி, வலிகாமம் தெற்கு பிரதேசசபை செயலாளர் சுலோசனா முருகேசன், யாழ்ப்பாண சித்தமருத்துவத்துறை தலைவர் திருமதி சிவஞானமணி பஞ்சராசா என பெரும்பாலான சிவில் நிர்வாகப்பொறுப்புக்களில் பெண்களே இருந்துவருகின்றனர் இவர்கள் ஒன்றுசேர்ந்து குரல் கொடுக்கத்தேவையில்லை அடிப்படை சட்டத்திற்கிசைவாக மனிதாபிமானத்துடன் நியாயமாக நடந்து கொண்டாலே அரவாசி பிரச்சினைகள் தீர்வுக்கு வந்துவிடும். கற்றறிந்த பெண்களான இவர்கள் ஒன்றுசேர்ந்து நியாயமாக நடந்துகொண்டாலே அதிகாரவர்க்கம் அடங்கிப்போவதற்கு நிறையக்காரணங்கள் இருக்கின்றன.

ஆனால் தமிழ்ச்சாதியின் பிறவிக்குணமான சுயநலமும் கால்வாரும் புத்தியும் காட்டிக்கொடுப்புக்களும் எவர் செத்தால் எனக்கென்ன எவரது குமர் எவனால் சீரழிக்கப்பட்டு தெருவில் வீசப்பட்டால் எனக்கென்ன!, என்ற கொள்கையுடன் அவரவர் காரியத்துடன் தமது உத்தியோகத்தையும் தமது குடும்ப சுற்றுவட்டத்தையும் மிகக்கவனமாக பாதுகாத்து கொள்ளுகின்றனர், அப்படி செய்துகொண்டாலும் இலங்கை அரசியல் சட்டத்திலிருக்கும் மக்களுக்கான உரிமையை மக்கள் அனுபவிக்க இடமளிக்காமல் அராஜக ஆட்சி ஏவலுக்கு அடிமைச்சேவகம் அரங்கேறுகிறது.
யாழ்ப்பாண சிவில் நிர்வாகத்தில், அரசியல்வாதிகளையும் புறந்தள்ளி முழுத்தலையீடு செய்து கட்டளையிடவேண்டிய நேரடியான இடத்தில் இருப்பவர் யாழ் அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், அவர்கள். இமெல்டா அவர்கள் முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மாற்றல் அறிவித்தல் வந்தபோதே பிரச்சினைகளும் அவர்கூடவே வந்திருந்தது. சென்ற ஆண்டு யாழ் அரசாங்க அதிபராக இருந்த கே கணேஸ், அவர்களுக்கும் இமெல்டாவுக்கும் பல இழுபறிகளின் பிற்பாடுதான் 13, 2010 ஜூலை திருமதி இமெல்டா,பதவியை ஏற்றுக்கொண்டார் அந்த முகூர்த்தமோ என்னமோ இமெல்டா அவர்களின் நிர்வாக காலத்தில் விரும்பத்தகாத செயற்பாடுகளின் இடமாக யாழ்ப்பாணம் மாறியிருக்கிறது.

வவுனியாவிலும் கொழும்பிலும் 2009க்கு முன் நிகழ்ந்த காட்டுமிராண்டித்தனம் வடக்கு கிழிக்கில் வரையறையின்றி ஈடேற்றப்படுகிறது. சிங்களவரை விட தமிழர்கள் இதற்குள் ஊடுருவியிருப்பதுடன் அரச அதிகாரிகள் துணைபோவதும்தான் பெரிய துன்பம். ஒரு பெற்றோரின் இடத்தில் ஒரு சகோதரனின் இடத்தில் ஒரு உறவினரின் இடத்தில் இருந்து நடைபெறும் சம்பவங்களை நோக்கினால் வலியின் விஸ்தீரணம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளலாம். வேதனை வலி என்பது எல்லோருக்கும் பொதுவானதே.

தமிழர்கள்மீது கட்டவிழ்த்து விடப்படும் இந்த அனீதிக்கு தீர்வு காணவேண்டிய பொறுப்பிலிருக்கும் அமைச்சர்களான டக்கிளஸ் தேவானந்தா மற்றும் கருணா பிள்ளையான் போன்றவர்களே பிரச்சினைகளின் ஊற்றுவாய் என்று பலராலும் குற்றம் சுமத்தப்படுகிறது. ஆனால் மறுப்பு தெரிவிக்கும் அவர்களின் குழுவினர்தான் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பொலிஸும் மக்களும் கூறுகின்றனர். இக்குழுக்களைச்சேர்ந்த பலர் குற்றவாளிகளாக இனங்கணப்பட்டும் நீதியின் முன் நிறுத்தப்பட்ட வரலாறுகளுமில்லை.

இப்பேர்ப்பட்ட செய்திகளை ஊடகங்கள் வெளியிடவேண்டாம் என்பதை உணர்த்தும் விதமாக EPDP யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவரகள் நேற்று ஒரு செய்தியை வெளியிட்டு மறைமுகமாக ஊடகங்களை தணிக்கை செய்திருந்தார்: யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும சம்பவங்கள் தொடர்பில் ஊடகங்கள் நிதானமாக செய்தி வெளியிட வேண்டுமெனவும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விருப்பம் தெரிவித்திருந்தார்(????)

ஆதாரங்கள் காணப்படும் சம்பவங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும். யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் மக்கள் அமைதியாக வாழ்வதனையே விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் கொள்ளை மற்றும் கொலை சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கண்டுபிடித்து தகுதி தராதரம் பாராது தண்டனை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
யாழ்ப்பாணத்தில் கொலை மற்றும் ஆட்கடத்தல் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். கடத்தப்பட்டவர்கள் உயிருடன் திரும்பி வரவேண்டும். கடத்தலில் ஈடுபடுபவர்கள் கண்டறியப்பட்டு, தகுதி தராதரம் பாராது தண்டிக்கப்பட வேண்டும். இந்த பிரச்சினையை சமூக பிரச்சினையாக நோக்க வேண்டும். பாதுகாப்பு தரப்பினரின் அதிகாரத்தை பயன்படுத்தி, இடம்பெற்று வரும் வன்முறைகளை தடுக்க வேண்டும். எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார். இதன் உள் அர்த்தம் என்னவென்பது அவரைத்தவிர வேறு யார் அறிவார்?

இந்தச்செய்திமூலம் சர்வதேசத்திற்கு தான் ஒரு புனிதன் எனக்காட்டிக்கொள்ள வேண்டுமானால் பயன்படுத்தலாம் அத்துடன் உள்ளூர் ஊடகங்களை தணிக்கைக்குட்படுத்தலாம் வேறு அபிவிருத்தி எதுவும் நடந்துவிடப்போவதில்லை.

இதேநேரம் அரசாங்கத்துடன் இணைந்து செயல்ப்படும் பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜே. ஸ்ரீரங்கா யாழ். குடாவில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் சம்பவங்களின் பின்னணியில் அங்கு இயங்கும் ஆயுக் குழுக்கள் செயற்படுவதாகத் தான் கருதுவதாக தனது பங்கிற்கு தெரிவித்துள்ளார். யாழ். குடாவில் இடம் பெறும் சம்பவங்கள் தொடர்பில் தான் ஆயுதக் குழுக்களைச் சந்தேகிப்பதாக யாழ். குடாவுக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரி தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
அவ்வாறெனின் இராணுவத்துக்குத் தெரியாத ஆயுதக் குழுக்கள் அங்கு உள்ளனவா அல்லது அவர்கள் மீது நடவடிக்கையெடுக்க முடியாத நிலை உள்ளதா, மேலும் சாவகச்சேரியில் மாணவன் ஒருவன் கடத்தப்பட்டுக் கப்பம் கேட்கப்பட்ட நிலையில் பின்னர் கடத்தல்காரர்களால் கொல்லப்பட்டிருந்தான். இது தொடர்பான வழக்கை நீதியான விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முயன்ற நீதிபதி உடனடியாகவே இடமாற்றம் செய்யப்பட்டார். இவ்வாறாக நீதித்துறையில் இடம்பெறும் தலையீடுகளும் இன்று யாழ். குடாவில் இவ்வாறான சம்பவங்கள் அதிகரிக்கக் காரணமாகின்றன.
சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட பிரதிக் கல்விப் பணிப்பாளர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார். மனநிலை பாதிக்கப்பட்டவர்கள சுட்டுக் கொல்லப்பட வேண்டியவர்களா? மேலும் மன நிலை பாதிக்கப்பட்ட ஒருவரை எவ்வாறு பிரதிக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்ற அனுமதிக்க முடியும்? இதேவேளை, படுகொலை செய்யப்பட்டவர்களில் இன்னொருவர் மணலுடன் தொடர்புள்ளவர். யாழ். குடாவில் மணல் வியாபாரத்தின் ராஜாக்கள் யார் என்பதனை அந்தப் பிரதேச மக்கள் நன்கு அறிவர். இவற்றையெல்லாம் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது இவ்வாறான சம்பவங்களின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது புலனாகும் என அவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீரங்காவின் இந்தக்குற்றச்சாட்டு நேரடியாக டக்கிளஸ் தேவானந்தாவையே குறித்து நிற்கிறதென்பதும் வெளிப்படையாக தெரிகிறது.
யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற தேசிய அனர்த்த நிகழ்வில் சிங்கள மொழியில் தேசிய கீதத்தை பாடுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவே தனக்கு உத்தரவிட்டதாக அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்திருந்தார். சர்ச்சைக்குரிய வகையில் தேசிய கீதம் பாடப்பட்டமை தொடர்பாக எழுப்பப்ட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவே சிங்கள மொழியில் தேசிய கீதத்தை பாடுமாறு தனக்கு பணித்ததாக இமெல்டா சுகுமார் தெரிவித்தார். ஆனாலும் தான் முன்னதாக தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் மாறி மாறி படிப்பதற்கு ஏற்பாடு செய்திருந்ததாகவும் ஆனால் இறுதி நேரத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேசிய கீதத்தை சிங்கள மொழியில் பாடுமாறு தனக்கு கட்டளையிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மட்டுமல்லாது தமிழர் வாழும் பிரதேசங்கள் யாவும் அடக்குமுறையும் அடாவடியும் தலைவிரித்தாடுகின்றன தமிழ் அரசியல் கூர்க்காக்கள் கொழுப்பிலும் சென்னையிலும் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களிலும் தமிழர்களுக்கான (தங்களுக்கான) தீர்வை தேடி அலைகின்றனர். புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழர்களால்த்தான் ஈழத்தின் அவலத்தை கட்டுக்குள் கொண்டுவரக்கூடிய கடிவாளமான போர்க்குற்ற விசாரணை முன்னெடுப்பு சர்வதேசமட்டத்திற்கு கொண்டுசெல்லக்கூடிய தாற்பரீகம் காலத்தால் கையளிக்கப்பட்டிருந்தது. அந்த நம்பிக்கையிலும் மண் விழுந்துகொண்டிருப்பதை பிரிவினையும் பணத்தாசையும் காட்டிக்கொடுப்புக்களும் உட்புகுந்து தலைவிரித்தாடுவதை பார்க்கும்போது எந்தக்காலத்திலும் தமிழினத்திற்கு விமோசனம் கிடைப்பதற்கான சாத்தியம் தென்படவில்லை.

உலக நாடுகள் ஒன்றுசேர்ந்து ஈழத்தமிழரின் சுதந்திர விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தை அழிப்பதற்கு காட்டிய ஆர்வம் வேகம் தமிழினத்தின் போராட்டத்துக்கான அடிப்படையை அறிந்து முறையான தீர்வுகாண்பதில் உலகம் முனைப்புக்காட்டவில்லை. எலிக்கும் எறும்புக்கும் வாழ்வியல் ஆராய்ச்சிக்கட்டுரைகளும் பாதுகாப்பும் தேடும் உலகம் தமிழர்களின் அனர்த்தத்தில் மனிதத்தன்மையையாயினும் காட்ட மறந்துவிட்டது. அரசியல் மயப்படுத்தப்பட்ட நகர்வுகளாகவே எல்லாம் நோக்கப்படுகிறது வலிமையே வாழும் என்ற பொறிமுறை ஆட்சி கொண்டிருப்பதையே கண்கூடாக காணமுடிகிறது.

யூதர்கள், ரோமானியர்கள், யூகோஸ்லாவிய முஸ்லிம்கள், அல்பேனிய கொசோவோக்கள், குரோசியர்கள், ஆர்மேனியர்கள் ஆபிரிக்காவில் ருவாண்டா புறூண்டி ., கம்போடியர்கள், கிழக்கு திமோரியர்கள், பாலஸ்தினியர்கள், எல்லாமே பெரும்பான்மை ஆதிக்கத்தால் கொடுமைப்படுத்தப்பட்டிருந்தாலும் அவர்களில் ஒற்றுமை கொண்டிருந்த இனங்கள் வெற்றியை பெற்றிருக்கின்றன வீரமான தமிழினத்துக்கு ஒற்றுமைக்குலைவே மாறி மாறி வீழ்ச்சியை சந்திக்கும் துர்ப்பாக்கியம் கண்முன்னே விரிந்து வெறுப்புக்குள்ளாக்குகின்றது.

இன்று ஸ்ரீலங்கா அரசாங்கம் பயப்படும் ஒரேயொரு புள்ளி போர்க்குற்றத்துக்கான சர்வதேச அழுத்தம் ஒன்றுமட்டுமே. அந்த துருப்புச்சீட்டை தூக்கி நிறுத்தவேண்டிய பொறுப்பு புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்களுக்கு உண்டு. இவர்கள் விடுதலைப்புலிகள் என்ற அமைப்பின் கட்டுப்பாட்டுக்குட்பட்டு நகர்வினை மேற்கொண்டாலே தவிர, இமயமலையை தூக்கி தோளில் சுமந்து வீரம் காட்டினாலும் தமிழினம் ரசித்துவிட்டு திரும்புமே தவிர எவரும் நம்பி பின் செல்லப்போவதில்லை. பிரிந்து குழுக்களாகி எதையும் சாதித்துவிடவும் முடியாது. இதை அனைவரும் நன்கு அறிந்தேயுள்ளனர். அத்துடன் விடுதலை பெறவேண்டிய இடமும் ஈழமேயன்றி புலம்பெயர் தேசமல்ல, களையெடுப்பிற்கான காரணத்திற்காக புலம்பெயர் தேசத்தில் காலத்தால் இந்தப்பிரிவினை ஏற்படுத்தப்பட்டு பொய்யர்கள் இனங்காணப்படக்கூடும்.

எந்த ஒரு சுயநல நோக்கமுமில்லாமல் தமிழும் ஈழமும் மூச்சாக தலைவரால் கட்டியெழுப்பப்பட்ட விடுதலைக்கோட்டைக்குள் எலிகளும் கோட்டான்களும் சிலசந்தற்பங்களில் வந்து போகலாமே தவிர நிரந்தரமாக தங்கவோ ஆட்சிகொள்ளவோ முடியாது, சத்தியம் நிச்சியம் வெல்லும்.


ஈழதேசம் இணையத்திற்காக ஆரணி,

Monday, January 3, 2011

ஊழல் மன்னனுக்குப் பாராட்டு விழா,

கருணாநிதிக்கு பல்வேறு தலைப்புகளில் பாராட்டு விழா நடத்தியாகி விட்டது. சமீப காலமாக பாராட்டு விழா நடத்தி நீண்ட நாட்கள் வேறு ஆகி விட்டன. அதனால் என்ன செய்யலாமென்று, திமுகவினர் யோசித்த போது அவர்களுக்கு வந்த திடீர் யோசனைதான், “ஊழல் மன்னன்“ என்ற பட்டத்தை கருணாநிதிக்கு வழங்கலாம் என்ற யோசனை.

இதையொட்டி, நடைபெற்ற விழாவில் ஒவ்வொருவரும் கலந்து கொண்டு பேசியன…

முதலில கலைஞானி கமலஹாசன்.

நான் பல மேடைகளிலே சொல்லியிருக்கிறேன். சொல்லிக் கொண்டும் இருக்கிறேன். சொல்லிக் கொண்டே இருப்பேன். செல்வி ஜெயலலிதா முதல்வராகும் வரை. நான் கலைஞரின் சினிமாவைப் பார்த்து தமிழ் கற்றுக் கொண்டவன். அந்த சினிமாவிலே நான் கண்டதே, என்றோ ஒரு நாள் இந்த வசனத்தை எழுதியவர், இந்தியாவிலேயே மிகப் பெரிய ஊழலைப் புரியப் போகிறார் என்று.

vairamuthu3111_339

அதற்கு முன்னோட்டமாகத் தான், பெரம்பலூர் போர்வீரன் ஆ.ராசாவை மனதில் வைத்து இந்த வசனத்தை எழுதியிருக்கிறார்.

“பொன்னும், மணியும், மின்னும் வைரமும் பூட்டி மகிழ்ந்து கண்ணே முத்தே என்றெல்லாம் குலவிக் கொஞ்சி, தந்தத்தால் ஆன கட்டிலிலே, சந்தனத் தொட்டிலிலே, `வீரனே! என் விழி நிறைந்தவனே!' என்று யாரைச் சீராட்டி பாராட்டினீர்களோ“ என்று எழுதினாரே….. அது ஆ.ராசாவை மனதில் வைத்துத்தான் என்பதை எத்தனை பேர் அறிவார்கள்.

அது மட்டும் அல்ல. என்றாவது ஒரு நாள் அவர் குடும்பம் ஊழலில் ஈடுபட்டது தெரிந்து போகும் என்பதை அறிந்துதான் “குடும்பத்தகராறு கொலு மண்டபத்துக்கு வரும் விசித்திரத்தை சரித்திரம் இன்றுதான் முதன் முதலாகச் சந்திக்கிறது“

சொன்னால் நம்பமாட்டீர்கள். ஆனாலும் நான் சொல்லாமல் விடமாட்டேன். அந்த காலத்திலேயே நீரா ராடியாவைப் பற்றி வசனம் எழுதியவர்தான் கலைஞர் என்பதை, அவர் உள்ள ஓட்டத்தை நன்கு புரிந்தவர்கள்தான் புரிந்து கொள்ள முடியும்.

ஆ.ராசா நீரா ராடியாவோடு பேசி மாட்டிக் கொண்டால் என்ன பதில் கூறுவார் என்பதைக் கூட அறிந்து வசனம் எழுதியிருக்கிறார்.

“இதோ குற்றவாளிக் கூண்டிலே உங்கள் முன் நிற்கிறாளே இந்த ஜாலக்காரி ஜூலி, இவள் வலையில் விழுந்தவர்களில் நானும் ஒருவன். பணப் பெட்டியைப் பறிகொடுத்தேன். பசியால் மெலிந்தேன் நலிந்தேன், கடைசியில் பைத்தியமாக மாறினேன்.”

இந்த வசனத்தில் ஜாலக்காரி ஜுலி என்று கலைஞர் அவர்கள் குறிப்பிடுவது நீரா ராடியாவைத்தான். கடைசியில் பைத்தியமாக மாறினேன் என்று, ஆ.ராசா எப்படி ஆகப் போகிறாரோ, அதை தீர்க்கதரிசனத்தோடு எழுதியவர்தான் கலைஞர்.

அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

vairamuthu3111_353

கலைஞர்ஜீ ஊழல் மன்னான்னு என்னேக் கேட்டா…. அவர் ஊழலோட சூப்பர் ஸ்டார்னு சொல்லுவேன். இல்லேன்னாக்கா… சூப்பர் ஸ்டாரோட ஊழலப் பத்தி அவர் சொல்லுவார்….. ஹாஹ்ஹா.

நான் தெய்வமா வழிபட்ற பாபாஜியப் பாக்க இமயமலேக்கு போயிருந்தேன். அப்போதான் தெரிஞ்சது, கலைஞர்ஜி மூணு மலைய வாங்கிருக்கார்ன்னு…. இமயமலேல்ல இருக்கற மூணு மலைய வாங்கிருக்காரே… நீங்க எப்படி பாபாஜி இருக்கறீங்கன்னு கேட்டதுக்கு, பாபாஜி, ராசாத்தி அம்மாஜிக்கு மாசா மாசம் வாடகை தர்றார்னு சொன்னதும் அசந்து போய்ட்டேன், நம்ம கலைஞர்ஜி டேலண்டப் பாத்து.

சிம்பிளா சொல்லனும்னா… ஊழல் பண்றதுல, கலைஞர்ஜி சிட்டி ரோபோ மாதிரி.. ஜெயலலிதாஜி கூட ஊழல் பண்ணாங்க… ஆனா அவங்க பண்ண ஊழல் 66 கோடி… கலைஞர்ஜியோட ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ஊழலே கம்பேர் பண்ணாக்கா…. அது ஜுஜுபி.

நான் சினிமால ஒரு டயலாக் பேசுனேன். நான் ஒரு தடவ சொன்னாக்கா நூறு தடவ சொன்ன மாதிரின்னு…. ஆனா கலைஞர்ஜி ஒரு கோடி அடிச்சாக்கா.. ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி அடிச்சா மாதிரி…..

அடுத்து நீரா ராடியா.

Niira-Radia_20101119

ஹாய் கனி…. ஹாய் ராஜா…. ஹாய் கருணாநிதி…. ஹாய் ராசாத்தி… வேர் ஈஸ் ரத்னம் யார்…. கருணாநிதி நெவர் ஸ்போக் டு மீ ஓவர் போன் யார். ஒய் கருணாநிதி ஈஸ் நாட் டாக்கிங் ?. ஒன் மினிட் யார். (போனில் பேசுகிறார்)

ஹாய் மன்மோகன்….

ஹவ் ஆர் யு…

ஹவ் ஈஸ் சோனியா….

வெரி நைஸ் யார்…

யா… யா… யு ஆர் ரைட் மன்மோகன்.

தேர் ஈஸ் ஒன் ஃபெலோ கால்ட், ஜாபர் சேட்….

யு ஆர் ரைட்..

ஹி டேப்ஸ் ஆல் தி போன் கால்ஸ் யார்..

இன்க்லுடிங் மை ஃப்ரெண்ட் ராஜாத்தி யார்.

யா கருணாநிதி ஈஸ் ஸ்டில் இன் வீல் சேர் யார். பட் ஹி ஈஸ் வெரி ஹெல்தி.

யு நோ வாட் மன்மோகன். யு வோன்ட் பிலிவ் திஸ். ஐ யம் தி ஹீரோயின் இன் ஹிஸ் நெக்ஸ்ட் மூவி. ட்ரூலி யார். வாட்..?

யா யா. ஐ வில் ஆஸ்க் ஹிம் டு கிவ் யூ ய ஃபாதர் ரோல்.

ஓகே மன்மோகன் சி யூ இன் டெல்லி யார்…

(மீண்டும் மேடையில் பேசுகிறார்.) கருணாநிதி ஈஸ் தி நம்பர் ஒன் கரப்ட் பொலிடீஷியன். தேர் ஈஸ் நோ டவுட் யார். டெல்லி போலிடீஷியன்ஸ் ஆர் யங். பட் திஸ் ஓல்ட் மேன் இன் ய வீல் சேர் ஈஸ் அமேஸிங் யார். ஓகே.. பை எவ்ரிபடி.

அடுத்து வைரமுத்து…

vairamuthu3111_307

அன்று சர்க்காரியா சொன்னார்.

நீ விஞ்ஞான முறையில் ஊழல் செய்பவன் என்று.

ஆனால் இன்று விஞ்ஞானத்திலேயே நீ ஊழல் செய்திருக்கிறாய்.

வானில் உள்ள தேவர்களின் எண்ணிக்கை கூட முப்பத்து முக்கோடி தான்.

நீ ஒரே தவணையில் அடித்ததோ ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி.

ஊழல் செய்வதில் நீ ஒரு எட்டமுடியாத சிகரம்.

ஊழலுக்கே உன் குடும்பம்தான் தலைநகரம்.

வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தின் தலைவன் நீ..

உன் குடும்பம் வழி வந்தாரை வாழ வைக்கும் தலைவன் நீ…

ஆம் குடும்பத் தலைவன் நீ..

நான் கட்டியதோ பொன்மணி மாளிகை….

நீ கட்டியதோ பத்மாவதி, தயாளு மற்றும் ராசாத்தி…

சர்காரியாவையே சாக்கு மூட்டையில் கட்டியவன் நீ….

உன்னிடம் சுண்டைக்காய் சிபிஐ எம்மாத்திரம்…..

அடுத்து கவிஞர் வாலி.

poet-vaali-stills-pics-photos

கொற்றவனே… கொற்றவனே….

ஸ்பெக்ட்ரத்தை விற்றவனே…

தறுதலைகளை பெற்றவனே…

சூடு சொரணை அற்றவனே…

கொற்றவனே.. கொற்றவனே..

உன்னால் அடைய வேண்டியது ஏற்றம்.

தமிழகத்துக்கு கிடைத்ததோ ஏமாற்றம்.

மக்களுக்கு மிஞ்சியதோ முற்றம்.

உனக்கு அள்ளித் தந்தது ஸ்பெக்ட்ரம்.

தமிழ்ல உனக்கு புடிச்ச வார்தை கோடி

நீ பெத்து வச்சுருக்க புள்ளைங்களோ கேடி

தள்ளு வண்டில போனாலும் தளராது உன் பாடி..

உன் புள்ளைங்களுக்கு நீதான் சரியான டாடி

எக்கச்சக்கமா சேத்துருக்க துட்டு

நீ கதை வசனம் எழுதுனா சூப்பர் ஹிட்டு

உன்னால தமிழகம் போனது கெட்டு

உனக்கு மக்கள் அடிக்கப் போறாங்க ரிவிட்டு

ஏற்புரை.. கருணாநிதி.

vamsamaudio020710_182

என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே….

எனக்குப் புகழ்ச்சி அறவே பிடிக்காது. இவ்வாறு வந்து கூட்டங்களிலே அமர்ந்திருக்கும் நேரத்திலே கூட ஏதாவது கோப்புகளை பார்த்தால் சில கோடிகள் கிடைக்கும் என்று சிந்திப்பவன் நான்.

ஆனால் தம்பி வைரமுத்துவும், கலைஞானி கமலஹாசனும், விழாவிலே பங்கெடுப்பதற்காக 50 லட்சம் ரூபாய் தருவதாக சொன்னதால், எனது பணிகளுக்கு சிறிதே ஓய்வு கொடுத்து விட்டு இந்த விழாவிலே பங்கெடுக்க வந்துள்ளேன்.

இந்தியாவிலேயே சிறந்த ஊழல் மன்னன் என்று திட்டமிட்டெல்லாம் நான் என்றுமே பணியாற்றியது கிடையாது. பல ஆண்டுகளுக்கு முன்பு அறிஞர் அண்ணா என்னை பொதுப்பணித்துறை அமைச்சர் ஆக்கும் போது அவரே நினைத்திருக்க மாட்டார். அவர் தம்பி இப்படி ஊழல் மன்னனாக வளர்வான் என்று….

நான் ஊழல் மன்னனாகியது காலத்தின் கட்டாயம் என்றால் அது மிகையாகாது. ஒரு மனைவி, ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள், வைத்திருப்பவர்கள் சில கோடிகள் ஊழல் செய்யலாம். ஆனால் என் குடும்பத்தையும் என் வாரிசுகளையும் பாருங்கள்… அவ்வளவு பேரையும் திருப்தி படுத்த வேண்டுமென்றால், ஓய்வுக்கே ஓய்வு கொடுத்து விட்டு, இடையறாது உழைத்தால்தானே முடியும் ?

ஏறக்குறைய 50 ஆண்டுகால பொதுவாழ்விலே, உழைத்து, மக்கள் பணியாற்றியே நான் இன்று ஊழல் மன்னன் என்று அழைக்கப் படும் இடத்திற்கு வந்திருக்கிறேன்.

ஆனால் இது கூட பொறுக்காமல் 20 ஆண்டுக்கும் குறைவாக அரசியல் வாழ்வில் ஈடுபட்டுள்ள அந்த அம்மையார், என்னை விட அதிகமாக ஊழல் புரிய முயற்சிக்கிறார். அடிக்கடி அந்த அம்மையார் ஊழல் புரிகிறார், ஊழல் வழக்கில் சிக்கிக் கொண்டுள்ளார் என்று கூறுவதற்கு காரணம் என்ன தெரியுமா ? அவ்வாறு கூறாமல் போனால், அந்த அம்மையார் என்னை விட அதிகமாக ஊழல் புரிந்து நான் இன்று பெற்றிருக்கும் பேரை தட்டிப் பறித்து விடுவாரோ என்ற அச்சத்திலேதான்….

நான் சென்று கொண்டிருக்கும் தள்ளு வண்டி சமயத்தில் பஞ்சராகி, என்னை முடக்க முயற்சி செய்தாலும், இந்த வயதிலும் நான் தொடர்ந்து உழைக்க ஒரே காரணம், இன்றும் என் குடும்பத்தினருக்கு போதுமான அளவுக்கு சொத்து சேர்க்காததே…..

இன்னும் கொஞ்சம் சொத்துக்கள் சேர்த்து, டாடா, ரிலையன்ஸ், பிர்லா, மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களை விலைக்கு வாங்கும் அளவுக்கு வளர்ந்து விட்டால், அதற்குப் பிறகு நான் அரசியலில் இருந்து விலகி, இலக்கியப் பணியிலே ஈடுபடலாம் என்று நினைக்கிறேன். அந்த விதத்தில், எனக்கு இப்படி சிறந்த ஊழல் மன்னனுக்கான விழாவை நீங்கள் எடுத்தது என்னை மீண்டும் ஊக்கப் படுத்தி மேலும் சிறந்த ஊழல்களை, இப்போதைய ஸ்பெக்ட்ரம் ஊழலை விட, இன்னும் பன்மடங்கு ஊழல் புரிய ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகத் தான் என்ற அளவிலே அதை எடுத்துக் கொண்டு, நன்றி கூறி விடை பெறுகிறேன்.

நன்றி சவுக்கு இணையம்,