மறக்க முடியுமா….? |
மேலும் வாசிக்க... நன்றி ஈழதேசம். |
Monday, March 28, 2011
Sunday, March 27, 2011
கனிமொழி = வரதட்சிணை + கிவிதை + பேராசை + ஊழல்
மார்ச் 27, 2011
கனிமொழி ஒருகாலத்தில் நல்ல மனிதராக இருந்திருக்கலாம். ஆனால் அவர் கவிஞராக இருந்ததே இல்லை -
காரணங்கள்: கடன் வாங்கப்பட்ட அனுபவங்களும், கவிதை அனுபவம் இல்லாமையும் – முக்கியமாக அடிப்படை கற்பனை வளம் இல்லாமையும். ஆனால் கனிமொழி-அடிப்பொடிகள் அவரை எங்கோ தூக்கி வைக்கிறார்கள்.
ஒரு மதிக்கத்தக்க பெரியவருடன் (இவர் தமிழில் குறைந்த பட்சம் ஒரு மகத்தான சிறுகதை எழுதியிருப்பவர்) அண்மையில் பேசிக்கொண்டிருந்தேன் – அவர் சொன்னார்: “கனிமொழி நண்பர்களை நன்றாக ‘கவனித்து’ ஹெல்ப் செய்கிறார் – ஆனால் வடநாட்டு மீடியா இவரை சரியாக சித்ததரிக்காததுதான் இந்த ஊழல் குற்றசாட்டுக்கெல்லாம் காரணமோ என்னமோ… ; ‘ ஆனால், நான் இப்பெரியவரின் மனத்தை சிதைக்க விரும்பவில்லை… பொதுவாக சிரித்துவிட்டு வேறு விஷயங்களுக்குப் போய் விட்டோம்.
நிற்க, கனிமொழி துதி பாடினால் நண்பர்களாகி விடலாம் – தகுந்த (அதாவது: தகாத) ‘ஹெல்பும்’ பெற்றுக்கொள்ளலாம். வீடு வசதி வாரிய வீடுகளாகட்டும், மனைகளாகட்டும், ‘சங்கம’ விவகாரங்கலாகட்டும் – எப்படியோ தொண்டரடிப்போடியோ, குண்டரடிப்பொடியோ - ‘ஹெல்ப்’ பெற்று விடுவார்கள்.. (ஆனால் சாரு நிவேதிதா, ஞாநி போன்றவர்கள் – மனத்தில் நினைப்பதை நேர்மையாக பட்டென்று போட்டுடைத்து பேசி / எழுதி விடுபவர்கள் – எப்பொழுதுமே கனிமொழி போன்றவர்களால் இவர்கள் ‘ஹெல்ப்’ பெறவே முடியாது. விரும்பவும் மாட்டார்கள் என நினைக்கிறேன்.)
… ஆக ‘கை தட்டுங்கள், ஹௌசிங் போர்டு கதவு திறக்கப்படும்’ என்கிற அவல நிலைமை இருக்கும்போது, அடிப்பொடிகளின் மகிழ்ச்சிக்கும் பரணி பாடுவதற்கும் கேட்பானேன்!
ஆனால்… படியுங்கள் கீழ்க்கண்ட வரிகளை – உங்களுக்குத் தெரியும் கனிமொழியைப் பொறுத்தவரை கவிதையும் மூச்சும் (மூச்சாவும்?) ஒன்றுதான்… இவ்விஷயத்தில் அவருடைய நேர்மையை மெச்சுகிறேன்
மூச்சுபெருமைப்பட ஒன்றுமில்லை.
சுவாசிப்பதைப் பற்றிச்
சிலாகித்துச் சொல்ல
என்ன இருக்கிறது.
சும்மா மடக்கி மடக்கி மண்டையில் தட்டி அவ்வப்போழ்து கருவறைகளைப் பற்றி எழுதினால் அவர் எழுதுவது கவிதை ஆகி விடாது. அவரே சொல்வது போல இதில் பெருமைப்பட ஒன்றுமே இல்லை!
நிற்க. மன்னிக்கவும் நான் அவருடைய வரதட்சிணை பற்றி எழுத ஆரம்பித்து என்னவோ எழுதிக்கொண்டு இருக்கிறேன்.
நீங்கள் கேட்பது காதில் விழுகிறது – என்ன, இந்தப் பெண்ணியம் (ஹ ஹா!) பேசும் ‘மாதர் குல திலகமா’ வரதட்சிணை கொடுத்தது? இவருடைய தகப்பனார் (அதாவது ‘என் மகளின் தாயாரின் பெண்ணின் தந்தை’) முத்துவேல் கருணாநிதி அவர்களாவது, தன் திராவிடக்கொழுந்துவிற்கு வரதட்சிணை கொடுப்பதாவது? என்ன அவதூறு இது? ஒரு பழம்’பெறும்’ மற்றும் அதை பெற்றவுடன் தின்று கொட்டையையும் அமுக்கிவிடும் ‘Brilliant Strategist’ தலைவரைப் பற்றியே இத்தகைய காழ்ப்புக்குரிப்பா? இது நியாயமா? அடுக்குமா? அய்யன் வள்ளுவனுக்கு சிலை அமைத்திட்டாலும் இவர் ஜாதகம் இப்படித்தானோ? மட்ராஸ் மங்கமம் கூட அம்மணிக்கு மதிப்பு வாங்கித் தரவில்லையா? அரசியல்வாதிகளின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி விமர்சிப்பது நியாயமா?
சரி. விஷயத்துக்கு வருவோம். இருபது வருடங்களுக்கு மேலாகிவிட்ட செய்தி இது…
வருடம் 1989 . கனிமொழிக்கு திருமணம் நிச்சயிக்கப் படுகிறது.மணமகன் பெயர் அதிபன் போஸ். சிவகாசி சார்ந்த ஒரு பணம் படைத்த தொழிலதிபர் குடும்பத்தைச் சார்ந்தவர். தகப்பனார் பெயர் ‘சுபாஷ் சந்திர போஸ்.’ தாயார் பெயர் ‘காஞ்சனா போஸ்.’ பல வருடங்கட்கு முன்பு இக்குடும்பம் தேசபக்தியுடன் இருந்திருக்கக் கூடும்.மன்னித்து விடலாம்.
இச்சமயம் இந்தியன் வங்கி அதிபருக்கு ஒரு போன் வருகிறது. அங்கு அப்போது கோபாலகிருஷ்ணன் என்பவர் உயரதிகாரியாக இருந்தார். இவர் ஒரு பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் குடும்பத்தை சார்ந்தவர். பழகுவதற்கும் இனிமையானவர். அவருடைய இளமையில் மிகுந்த நேர்மையோடும் துடிப்போடும் இருந்தவர் தாம்.
உங்களில் சில பேருக்கு இவை நினைவிருக்கலாம். – அப்போது (ஏறக்குறைய 1988 – 1997) ஊழல் கொடிகட்டிப் பறந்தது இந்தியன் வங்கியில் – அதன் நிதி நிலைமையும் வெகு மோசமாக இருந்தது. மற்றும் பல வங்கிகளிலும் இப்படித்தாம். ஆனால் இந்தியன் வங்கியில், அது மதன் கார்ட்டூன் போல ‘சாரி, கொஞ்சம் ஓவர்.’ அச்சமயம் கோபாலகிருஷ்ணனுக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இருந்தது மேலும். ஆகவே ‘சேராத இடம் சேர்ந்து’ அவர் வஞ்சனையில் வீழ்ந்தார். அவரை நியாயப் படுத்தவில்லை இங்கு.
இப்போது இந்த கோபாலகிருஷ்ணன் சிறையில் இருக்கிறார். தண்டனையை அனுபவித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் அவர் உதவி (!) செய்த அனைத்து பெருச்சாளிகளும் (கட்சி வேறுபாடுகள், ஜாதி சங்க வேறுபாடுகள் – போன்றவைகளுக்கு அப்பாற்ப்பட்ட பெருச்சாளிகள் இவர்கள் எல்லோரும்) அவரைக் காப்பாற்றவில்லை. சீந்துவார் இல்லாமல் இருக்கிறார், பாவம். இப்பெருச்சாளிகளில், கருணாநிதியின் அடிப்பொடிகளும் அடக்கம். இவர்களால் பல்லாயிரம் கோடி ஸ்வாஹா – வயிறு பற்றி எரியவேண்டிய விஷயமிது. (சுப்பிரமணியன் சுவாமி அப்போதே இதைப் பற்றியெல்லாம் பேசினார் – அனைத்தும் உண்மை – ஆனால் நமது புத்திஜீவிகள் இந்த ஆளை ஒரு கோமாளியாகத்தான் பார்த்தார்கள். ஊடகங்களும் இவரை எப்போதும் ஒரு பொய்யராகவும், விளம்பரப்ரியராகவும் தான் சித்தரித்தன – சித்தரிக்கின்றன, என்னைப் பொறுத்தவரை இவர் ஒரு நேர்மையாளர். அநீதி கண்டு பொங்குபவர். இவர் இல்லாவிட்டால், மிகப்பெரிய ஊழல்களும், நெறி முறை தவறுதல்களும் – இவைகளைப் பற்றிய கருத்துகளும் மக்களை சென்றடையா.)
ஒ! கதை சொல்லிக்கொண்டிருந்தேன் அல்லவா?
… போனில் நல்ல செய்தி. கனிமொழிக்குத் திருமணம். நடக்கவிருக்கும் செய்தி – இந்தியன் வங்கியின் உதவி தேவை. ஆஹா! பேஷாக! அவசரமாகப் பணம் பட்டுவாடா பண்ண வேண்டும், யாருக்கு – போஸ் குடும்பத்தினருக்கு அப்படியே செய்கிறோம்..தங்கள் சித்தம், எங்கள் பாக்கியம்.
இந்தியன் வங்கியின் துறைமுகம் கிளையிலிருந்து அடுத்தநாள் சில ஊழியர்கள் செல்கின்றனர் – சென்னை வந்து தங்கியிருக்கும் போஸ் குடும்பத்தை நோக்கி! அவர்கள் இடமிருந்து ஒற்றைக் காகிதங்களில் கடிதம் வாங்கிக் கொள்கின்றனர். நகைப்புக்கிடமான இக்கடிதங்களின் சாராம்சம்: ‘எனக்குச் சொந்தச்செலவுக்காக பணம் வேண்டும்.’
அவர்களுக்கு உடனடியாக கீழ்கண்ட அளவு பணம் கொடுக்கப் படுகிறது:
அதிபன் போஸ்: பத்து லட்சம்; சுபாஷ் சந்திர போஸ்: இருபத்தைந்து லட்சம்; காஞ்சனா போஸ்: பத்து லட்சம்.
எப்படி? Clean Overdraft ஆக! ஒரு விதமான அடமானம், கியாரண்டீ ஒரு இழவும் இல்லாமல். தஸ்தாவேஜுகள் சரிஇல்லாமல். ஒரு கேள்வி கூட கேட்காமல். சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து கொண்டு… கருணாநிதி சோழனின் மகள் அல்லவா? நம் தமிழ் இளவரசி அல்லவா, கனிமொழி? மக்கள் பணம் என்றால் மகேசன் பணம் தானே? அதுவும் அற்ப நாற்பத்தைந்து லட்சம் தானே. ஆஹா! அடுத்த வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே!
சுப்பனுக்கும் குப்பனுக்கும் இப்படி தூக்கிக் கொடுப்பார்களா என்று நீங்கள் கேட்டால் – சமூக நீதி உங்கள் வீட்டிற்கு ஆட்டோவில் வரும். எங்கள் தலீவரை என்ன மசுருக்கு இஸ்கரே என்று உங்களுக்கு அர்ச்சனை நடக்கும். எலும்புகளை உடைக்கும். பேய் அரசு செய்தால் பிணம் எண்ணும் சமூக நீதி…
… எப்படியோ, திருமணமும் நன்றாக நடைபெற்றந்து. வேறு எவ்வளவு இடங்களின் இருந்து மண்டகப்படி போயிற்றோ! எவ்வளவு பேர் கப்பம் கட்டினார்களோ! ஆனால் வருந்தத் தக்க விதத்தில் திருமணம் விவகாரத்தில், மன்னிக்கவும் இந்த கூகிள் எடிட்டர் சரியில்லை – விவாகரத்தில் முடிந்தது.
ஆனால் 1989இல் அள்ளப்பட்ட இப்பணம் திருப்பி கொடுக்கப்படவே இல்லை – பத்து வருடங்களுக்குப் பின்னும் இதே கதைதான். கடனாளியைக் கண்டு பிடிக்க முடியவில்லையாம்.. கருணாநிதிக்கோ அல்லது கனிமொழிக்கோ இதன் பற்றிய கவலை இருந்தால் தானே – இவர்களா பணம் கொடுத்தார்கள்? என்ன இருந்தாலும் எவர் திருப்பிக் கொடுப்பார்கள் வரதட்சிணையை? அதுவும் போயும்போயும் அற்ப நாற்பத்தைந்து லட்சம் தானே! அது இப்போது குட்டி போட்டு சிலபல கோடிகள் தானே! வங்கியும் இவற்றை தள்ளுபடி செய்தது. வழக்கா போடமுடியும் பிசாத்து பெறாத பத்திரங்களை வைத்துக் கொண்டு?
ஆக கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாரின் மண்டையிலேயே ஓங்கி உடைத்த மகாத்மியம் தான் கருணாநிதியின் மகத்தான கைங்கர்யம். வாழ்க அவரது குற்றம்!
அம்மணி சம்பந்தப்பட்ட ஊழல்கள் அப்போதே ஆரம்பித்து விட்டன. மேலும் அவர் மட்டும் இல்லை – இக்குடும்பத்தைச் சார்ந்த அனைவருமே சமதர்மமாக மக்கள் பணத்தை மகேசன் ( பார்க்க: ‘நான் கடவுள்’) பணமாக மாற்றியுள்ளனர். என்னே அவர்கள் பணப்பணி! அல்லது பணப்பிணி அல்லது பிணப்பணி…
மற்ற வயிறெரிய வைக்கும் நிகழ்ச்சிகளை மற்றொரு சமயம் பார்க்கலாம்…
—–
வங்கிகள், அதுவும் அரசுடைமை செய்யப்பட வங்கிகள் எப்படி செயல் படுகின்றன? அல்லது எப்படி செயல் படவேண்டும் – என்பது பற்றியெல்லாம் நாம் யோசிக்க வேண்டும். இந்தியன் வங்கி ஒரு எடுத்துக்காட்டுதான்… இது பற்றி மற்றோர் சமயம் எழுதுகிறேன்.
ஆனால் – சில நண்பர்கள், வங்கி செய்ததிற்கு கருணாநிதியோ அல்லது கனிமொழியோ எப்படி பொறுப்பாக முடியும் என்று வினவலாம்.
உண்மைதான் நண்பர்களே! கருணாநிதி இந்த வரதட்சிணை கொடுக்கவில்லை. கனிமொழியும் இக்காரியம் செய்யவில்லை. கொடுத்தது எண்ணிறந்த இந்திய மக்கள். பண்டாரப் பரதேசிகள் – ஆனால், நேர்மையானவர்கள், வரி ஒழுங்காகக் கட்டுபவர்கள் – ஒரு பீடி வாங்கினாலும் கூட…
கொசுறு: கீழ்க்கண்ட வரிகள், கனிமொழியின் ‘பிற்பகல்‘ ஆக்கத்திலிருந்து (அம்மணீ – உங்கள் நேர்மையை மெச்சுகிறேன், மீண்டும்… இதை ஒப்புதல் வாக்குமூலமாக எடுத்துக்கொள்ளலாமா? திஹார் எப்போது செல்வதாக உத்தேசம்??)
“அறையின் கதவுகளுக்குப் பின்னால்
பத்திரமாய்ப் பதுக்கி வைத்திருக்கிறேன்நன்றி ஒத்திசைவு
Monday, March 21, 2011
இப்போதே பயமாக இருக்கிறது……
எதற்காக இப்போதே பயமாக இருக்கிறது… ? வேறு எதற்கு…. அதிமுக பெரும்பான்மை பெற்று, மீண்டும் ஆட்சி அமைத்து, ஜெயலலிதா முதலமைச்சர் ஆனால், எப்படி இருக்குமோ என்று இப்போதே பயமாகத்தான் இருக்கிறது.
1996ம் ஆண்டு, தமிழகம் எங்கும், ஜெயலலிதா எதிர்ப்பு அலை வீசியது. மக்களுக்கு, வளர்ப்பு மகனின் ஆடம்பரத் திருமணம், அங்கெங்கெனாதபடி, எங்கெங்கும் நிறைந்திருந்த ஊழல், அதிகாரிகளின் அட்டகாசம், எங்கெங்கும் கட்டவுட்டுகள், (அப்போது ப்ளெக்ஸ் போர்டுகள் இல்லை) என்று அந்த அராஜகத்துக்கு அளவே இல்லாமல் இருந்தது. ஒரு எதிர்க்கட்சி சேனல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சன்டிவி அன்று உதாரணமாகத் திகழ்ந்தது. இப்போது போல, அப்லிங்கிங் வசதி அப்போது இல்லாவிட்டாலும் கூட, பிலிப்பைன்ஸுக்கு கேசட்டை அனுப்பி ஒளிபரப்ப வேண்டிய நெருக்கடி இருந்தாலும் கூட, அற்புதமான எதிர்க்கட்சியின் பணியை செய்தது. அப்போது சன் டிவியில் சனிக்கிழமை தோறும் ஒளிபரப்பாகும் நேருக்கு நேர் நிகழ்ச்சி ஆட்சி மாற்றத்திற்கான ஒரு அடித்தளமாக அமைந்தது என்றால் மிகையாகாது. மக்கள் அந்த அளவுக்கு அந்த நிகழ்ச்சியை விரும்பிப் பார்த்ததன் காரணம், அன்றைய ஜெயலலிதா அரசாங்கத்தின் மீது அப்படி ஒரு வெறுப்பு. எப்போது இந்த அரசாங்கம் ஒழியும் என்று கடும் வெறுப்பில் இருந்தார்கள்.
கருணாநிதி அன்று இறுதியாக பேசிய தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்திய வரைபடத்தில் தமிழகம் இருந்த இடம், காலியாக இருக்கும் என்று கூறினார். ரஜினிகாந்த், ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வந்தால், தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று பேசினார். ஆட்சிக்கு வந்த திமுக, ஜெயலலிதா மீது பல்வேறு ஊழல் வழக்குகளை தொடுத்தது. ஜெயலலிதாவும், சசிகலாவும், நீதிமன்றப் படியேறி அந்த ஊழல் வழக்குகளை சந்தித்தனர். அத்தோடு அதிமுகவின் கதை முடிந்தது, ஜெயலலிதா இதோடு எழுந்திருக்க மாட்டார் என்றுதான் கருணாநிதி நினைத்தார். ஆனால், 1998 மற்றும் 1999ல் நடந்த பாராளுமன்றத் தேர்தல்களில் கணிசமான எம்பிக்களை பெற்று, மீண்டும் எழுந்தார்.
1996 – 2001 திமுக ஆட்சியை பொறுத்த வரை, பெரிய அளவில் ஊழல் புகார்களோ, குற்றச் சாட்டுகளோ, இல்லாமல் இருந்தது. இன்னும் சொல்லப் போனால், திமுக கட்சியினரையே கருணாநிதி சம்பாதிக்க விடவில்லை என்பதுதான் அன்றைய திமுக ஆட்சியின் மீது இருந்த அங்கலாய்ப்பு. இந்த நேரத்தில் தான் 2001 தேர்தல் நடந்தது.
2001 தேர்தல் அறிவிக்கப் பட்ட பிறகு, அப்போது விஜய் டிவியில் அரசியல் விவாதங்கள் ஒளிபரப்பப் பட்டு வரும். அந்த விவாதங்கள் எவ்வித கட்சி சார்பும் இல்லாத காரணத்தால், மிகப் பெரிய வரவற்பைப் பெற்றன. அப்போது, தேர்தல் முடிவுகளை விவாதித்துக் கொண்டிருந்த போது, ஜெயலலிதாவின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்று நிகழ்ச்சி நடத்துபவர் கேட்ட கேள்விக்கு, ஒரு பத்திரிக்கையாளர், கடந்த 5 ஆண்டுகளில், ஜெயலலிதா ஆட்சியில் இல்லாவிட்டாலும், கட்சியை நடத்தும் விதத்தைப் பார்க்கும் போதும், கட்சி நிர்வாகிகளை காலையில் ஒருவர், மாலையில் ஒருவர் என்று மாற்றும் போதும், ஜெயலலிதா மாறவேயில்லை என்று தெரிவித்தார். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பத்தே நாட்களில் அந்த பத்திரிக்கையாளர், பத்திரிக்கையாளர் மீது நடந்த தாக்குதல்களை கண்டித்து, தலைமைச் செயலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அதுதான் 2001 – 2006 வரையிலான அதிமுக ஆட்சியின் ஒரு சாம்பிள். ஆட்சிக்கு வந்த உடனேயே, ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் வார்த்தை யுத்தம் தொடங்கியது. ‘கஜானா காலி’ என்றார் ஜெயலலிதா. ’கஜானா காலியில்லை, அரிசியாக வைத்திருக்கிறேன்’ என்றார் கருணாநிதி. ’அத்தனை அரிசியும், புழுத்த அரிசி’ என்றார் ஜெயலலிதா. பத்தாது என்று சட்டப்பேரவையில் வேறு அந்த அரிசியை காண்பித்தார். சட்டப் பேரவையில் ஜெயலலிதா சொன்னதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பத்திரிக்கை நிருபர்களை அழைத்துக் கொண்டு, பொன்முடி, அரசு கோடவுனில் நுழைந்து, அரிசி சாம்பிள் எடுத்து, ’எது புழுத்த அரிசி’ என்று சவால் விட்டார். அப்போது கோடவுனில் நுழைந்த சன் டிவி நிருபர் மீது அத்து மீறி அரசு அலுவலகத்தில் நுழைந்தார் என்று வழக்கு. அதற்கு எதிராகத்தான் அன்று பத்திரிக்கையாளர்கள், போராட்டம் நடத்தினார்கள்.
பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதல் ஒரு தொடக்கம் மட்டுமே…. தொடர்ந்து, ஆடுமாடு கோழி வெட்டத் தடைச் சட்டம், மதமாற்றத் தடைச் சட்டம், புதிய நியமனத்திற்கு தடைச் சட்டம், அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் குறைப்பு, என்று தொடர்ந்து சாமான்ய மக்களை பாதிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை மட்டுமே எடுத்தார். அரசு ஊழியர்கள் மீது, சாமான்ய பொதுமக்களுக்கு ஒரு வெறுப்பு இருந்தாலும், ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்கள் ஒரே நாளில் டிஸ்மிஸ் செய்யப் பட்டதையும், அவர்கள் குடியிருந்த அரசுக் குடியிருப்பில் புகுந்து, இரவோடு இரவாக அவர்களை காலி செய்ய்ச் சொல்லியதையும், மக்கள் ரசிக்கவில்லை.
அடுத்த ஐந்தாண்டுகளில் அதிமுக ஆட்சி மீது பெரிய அளவில் ஊழல் குற்றச் சாட்டுகள் இல்லையென்றாலும், நற்பெயரும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
தற்செயல் என்று சொல்ல முடியாத வண்ணம், ஜெயலலிதா மீதான ஊழல் வழக்குகள் அனைத்தும், நீதிமன்றங்கள் ஜெயலலிதாவுக்கு சாதகமாக தீர்ப்பளித்தன.
2006 தேர்தல், யாருக்கும் சாதகமான அலை இல்லாமல், எந்தக் கட்சிக்கும் எதிர்ப்பு அலையும் இல்லாத ஒரு சூழலில் வந்தது. அறுதிப் பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும், கஷ்டப்பட்டுக் கரையேறி, ஆட்சி அமைத்தது.
2006 திமுகவின் ஆட்சி, கருணாநிதி குடும்பத்தின் அசுர வளர்ச்சியால், திமுக ஆட்சியாக இல்லாமல், கருணாநிதியின் குடும்ப ஆட்சியாகவே விளங்கியது. திமுக ஆதரவாளர்கள் கூட, இந்த ஆட்சி போக வேண்டும் என்ற எண்ணத்திலேயே உள்ளனர். குடும்பத்தின் கடும் ஆதிக்கமும், அரசு அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும், அடித்த கொள்ளைக்கு அளவே இல்லாமல் போனது. சாமான்ய பொதுமக்கள் வாழவே முடியாது என்ற சூழல் ஏற்பட்டது. ஊழலின் ஊற்றுக் கண்ணாகவே கருணாநிதி குடும்பம் மாறியது. 1996 பொதுத் தேர்தலின் கடைசி பிரச்சாரக் கூட்டத்தில் கருணாநிதி பேசியது, இன்று கருணாநிதிக்குத் தான் பொருந்தும். கருணாநிதி குடும்பம் மீண்டும் ஒரு முறை ஆட்சிக்கு வந்தால், இந்திய வரைபடத்தில் தமிழ்நாடு இருக்கும் இடத்தில் ஒரு காலியிடம் தான் இருக்கும்.
இப்படிப் பட்ட ஒரு மோசமான சூழலில் தான் இன்று 2011 தேர்தல் வந்துள்ளது. இந்தத் தேர்தல் அறிவிக்கப் பட்ட உடனேயே, பரபரப்பு தொற்றிக் கொண்டது. அதிமுக அணியை பலமாக்க வேண்டும் என்று, சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் பலரும், கடுமையாக பணியாற்றினார்கள். சவுக்கக்குத் தெரிந்த பத்திரிக்கையாளர்கள் பலரும், இந்தக் கூட்டணியில் தேமுதிக வந்து சேரவும், மதிமுக வெளியேறாமல் இருக்கவும், பலரும் கடுமையாக பணியாற்றினார்கள். இவ்வாறு பணியாற்றிய அனைவருக்கும் அதிமுக ஆட்சி வந்ததும், சலுகைகளை பெற வேண்டும் என்றோ, மந்திரியாக வேண்டும் என்றோ, வீட்டு மனை ஒதுக்கீடு பெற வேண்டும் என்றோ ஆசையில்லை. தமிழகத்தின் ஒரு மிகப்பெரிய கொள்ளைக் கூட்டம் அதிகார மையத்திலிருந்து அகற்றப் பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.
ஆனால் கருணாநிதியை ஆட்சியை விட்டு அகற்றும் வல்லமை படைத்த ஜெயலலிதாவின், போக்கோ, மிகுந்த கவலையையும், அச்சத்தையும் அளிக்கிறது. இந்த தேர்தல் கூட்டணி குறித்து ஜெயலலிதா நடத்திய பேச்சுவார்த்தைகளும், அதன் முடிவில், அதிமுக வெளியிட்ட வேட்பாளர்களின் பட்டியலும், அடுத்து அதிமுக ஆட்சிக்கு வந்தால் எப்படி இருக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
கூட்டணி கட்சிகளோடு பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கையிலேயே, கூட்டணி கட்சிகள் தற்போது எம்எல்ஏக்களாக இருக்கும் பல்வேறு தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர்களை அறிவித்ததைப் போன்ற, மோசமான காரியம் வேறு எதுவுமே இருக்க முடியாது. அதுவும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே இவ்வாறு அறிவித்ததென்பது, கூட்டணிக் கட்சிகளை கடும் கோபம் கொள்ளச் செய்தது. இவ்வாறு, தான்தோன்றித் தனமாக நடத்து கொள்வதற்கு, ஜெயலலிதா ஒன்றும் மிக மிக வசதியான ஒரு சூழலில் இல்லை. மீண்டும் திமுக ஆட்சிக்கு வருமானால், ஒரு காலத்தில் அதிமுக என்ற ஒரு கட்சி இருந்தது என்று வரலாற்றுப் பாடத்தில் பள்ளிப் பிள்ளைகள் படிக்கும் ஒரு நிலையை கருணாநிதி உருவாக்கி விடுவார். ஜெயலலிதாவின் இருப்பே கேள்விக்குள்ளாகும் ஒரு சூழலை எளிதாக கருணாநிதி ஏற்படுத்துவார்.
இப்படிப் பட்ட ஒரு சூழலில், மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டிய கட்டாயம், ஜெயலலிதாவுக்கு உண்டு. கூட்டணிக் கட்சிகளோடு நடத்தும் பேச்சுவார்த்தையின் விபரங்களே, பொதுமக்களுக்குத் தெரியாத வண்ணம், விரைவாகவும், ரகசியமாகவும், பேச்சுவார்த்தையை முடித்து, திமுகவுக்கு முன்னதாக, வேட்பாளர் மற்றும் தொகுதிப் பட்டியலை வெளியிட்டிருக்க வேண்டும். அதிமுக கூட்டணி சுமூகமாக தேர்தலை சந்திக்கத் தயாராகி விட்டது என்ற உணர்வு மக்களுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை அறிவித்ததையடுத்து, அதிமுக கூட்டணியில் பெரிய குழப்பம் என்ற எண்ணமே மக்களுக்கு ஏற்பட்டது. அது மட்டுமல்லாமல், ஜெயலலிதா திருந்தவே இல்லை. அவர் மாறவே மாட்டார் என்றும் பரவலாக பேசத் தொடங்கினார்கள். தெளிவாக முடிவெடுத்து, சுமூகமாக அறிவிப்பை வெளியிட்டிருந்தால், சன் டிவியும், தமிழக உளவுத்துறையும், இந்தக் குழப்பத்தை பயன்படுத்தி வெளியிட்ட செய்திகளையும், ஏற்படுத்திய பிரச்சினைகளையும் தவிர்த்திருக்க முடியுமே… !
ஒரு வேளை, ஜெயலலிதாவுக்குத் தெரியாமலேயே, சசிகலா குழுமத்தினரால், இந்தப் பட்டியல் வெளியிடப் பட்டது என்ற தகவல் உண்மையானால், அது இன்னமும் மோசம். ஒரு முக்கியமான சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை தெரிவு செய்வதற்குக் கூட ஜெயலலிதாவுக்கு சுதந்திரம் இல்லாத நிலையில் அவர் ஆட்சி அமைத்தால், அது யாருடைய ஆட்சியாக இருக்கும் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
ஓ.பன்னீர்செல்வமோ, செங்கோட்டையனோ, இது போல ஒரு தவறைச் செய்திருந்தால் இன்று என்ன நடந்திருக்கும்… ? அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து அவர்கள் நீக்கப் பட்டிருக்க மாட்டார்கள் ?
கட்சியில் வேறு எந்தப் பதவியில் இருப்பவர்களும், இது போல நடவடிக்கைக்கு ஆளாகக் கூடிய சூழலில் இருக்கையில், சசிகலா குழுமத்தினர் மீது மட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், இருப்பது ஏன்…. ? அப்படி சசிகலா குழுமத்தினர் அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருந்திருந்தால், அதற்கு ஜெயலலிதாதான் முழுப் பொறுப்பாக முடியும். அப்போதும், அவரின் அடுத்த ஆட்சியைப் பற்றிய அச்சம் இன்னும் அதிகமாகிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப் பட்ட உடனேயே, சசிகலா குழுமத்தினரைச் சேர்ந்த, என் நடராஜன், எம்.ராமச்சந்திரன், டாக்டர் வெங்கடேஷ், தினகரன், திவாகரன் ஆகியோர், ‘உங்களுக்கு அதிமுக எம்எல்ஏ சீட்டு வாங்கித் தருகிறேன் என்று 40 முதல், 50 லட்சம் வரை வசூல் செய்து குவித்தது உங்களுக்குத் தெரியுமா ?
இப்படி ஆட்சிக்கு வரும் முன்பே இவ்வாறு வசூல் செய்பவர்கள், ஆட்சிக்கு வந்த பிறகு என்னென்ன செய்வார்கள் ? உங்கள் கட்சி வேட்பாளர்களைத் தெர்வு செய்யக் கூட முடியாத நிலையில் நீங்கள் சூழ்நிலைக் கைதியாக இருக்கிறீர்களா என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுவதை தவிர்க்க முடியவில்லையே ?
இன்று, அதிமுக டிக்கட் வேண்டி வருவோரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, கோடிகளை குவிப்பவர்கள், நாளை திமுக ஆட்சியில் ஊழல் மன்னன்களாகத் திகழும், ஜாபர் சேட், ராதாகிருஷ்ணன், கண்ணாயிரம் போன்ற அதிகாரிகளிடம் நாளை வசூல் செய்து விட்டு, இவர்களுக்கு நாளை நல்ல பதவிகளை வாங்கிக் கொடுத்து, இவர்கள் மீது எந்த விசாரணையும் வராமல் தடுக்க மாட்டார்கள் என்று என்ன நிச்சயம் ?
மேலும் நீங்கள் ஏற்படுத்திய இந்தக் குழப்பங்கள், உங்கள் கூட்டணிக் கட்சிகள், மத்தியில் உங்கள் மீது எந்த அளவுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது தெரியுமா ? நீங்கள் எப்போதும் மாற மாட்டீர்கள் என்று எவ்வளவு வருத்தப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியுமா ?
இந்தக் காரணங்கள் தான், உங்கள் மீதான அச்சத்தை ஏற்படுத்தி நீங்கள் ஆட்சிக்கு வந்தால், என்ன நடக்குமோ என்று இப்போதே பயமாக இருக்கிறது. இந்த பயத்தைப் போக்க வேண்டிய கடமை உங்களுக்கு உண்டு.
நன்றி சவுக்கு இணையம்.
Friday, March 18, 2011
63 நாயன்மார்களும் …. 3 சீட்டு சூதாட்டமும் காங்கிரசுக்கு 63 நாயன்மார்களைப் போல 63 இடங்களை ஒதுக்கியிருக்கிறேன் என்று கருணாநிதி தெரிந்து சொன்னாரோ…தெரியாமல் சொன்னாரோ தெரியவில்லை. 63 –ல் முதலாம் நபர் திருஞான சம்பந்தர். 8000 சமணர்களை கழுவிலேற்றி அந்த காலத்து ராஜபக்சே பட்டம் வாங்கியவர். இரண்டாம் நபர் திருநாவுக்கரசர். வயிற்று வலியை காரணம் காட்டி கட்சி மாறியவர். .(யாருக்காவது இந்த காலத்து திருநாவுக்கரசர் நினைவிற்கு வந்தால் நான் பொறுப்பல்ல..) மூன்றாம் நபர் சுந்தரர் . முதலில் ஒரு பெண்ணை மணவறை வரை அழைத்து ஏமாற்றி விட்டு பின் திருவெற்றியூரில் ஒரு மனைவி, திருவாரூரில் ஒரு மனைவி என வாழ்ந்த அந்த காலத்து ‘நான் அவனில்லை’ ஆள். நான்காம் நபர் மாணிக்கவாசகர். குதிரை வாங்க சொல்லி கொடுத்த அரசுப் பணத்தினை கையாடல் செய்த அந்த காலத்து கல்மாடி. இவ்வாறாக நீளுகின்ற இந்த பட்டியலை தான் காங்கிரசாக கருணாநிதி காட்டுகிறார். நவீன நாயன்மார்களும்..அறிவாலய வியாபாரிகளும் ஆடிய 3 சீட்டு சூதாட்டத்தில் தோற்றது என்னவோ கரை வேட்டி கட்டி..முரசொலியில் முழ்கி..கருப்பு சிவப்பில் வாழ்க்கையை தொலைக்கும் வக்கற்ற அப்பாவி தொண்டன் தான். .சோகமும், வேகமும் , நகைச்சுவையுமாய் கலந்து கட்டி அடித்த இக்காட்சிகள் ஒரு வெகுஜன திரைப்பட காட்சிகள் அல்ல . உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தேர்தல் கள காட்சிகள் இவை. இளகிய மனம் படைத்தோர் இக்காட்சிகளை பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாலும் அது மிகையல்ல. திரெளபதி துரியோதனனைப் பார்த்து செய்த கிண்டல் தான் 18 நாள் போர்க்களமாக விரிந்தது என்கிறது இதிகாசம். அது போல “இவ்வளவு சீட்டு கேக்குறீங்களே – நிக்க உங்ககிட்ட ஆள் இருக்கா ?” என ஒருவர் அடித்த கிண்டல் தான் 63 ஆக நாம் ஆட வேண்டிய களமாக மாறி நிற்கிறது. அமைச்சர் துரைமுருகன் அடித்த அந்த கிண்டலில் வெகுண்டெழுந்து சென்ற கதர் பட்டாளம் கடைசியில் திரைமொழியில் சொல்வதென்றால் ப்ளாக்மெயில் செய்து 63 இடங்களை திமுகவிடமிருந்து பறித்தது. திமுக விடம் காங்கிரசு ப்ளாக்மெயில் செய்வதற்கு காரணம்…..இருக்கவே இருக்கிறது… இமாலய ஊழல் ஸ்பெக்ட்ரம். இதற்கு நடுவே அண்ணா அறிவாலயத்தில் சிபிஐ ரெய்டு….கனிமொழி,தயாளு அம்மாளிடம் விசாரணை என்றெல்லாம் பரபரப்பு காட்சிகள் வேறு…இதன் நடுவில் இடைவேளைக்கு முந்தைய ஒரு காட்சியில் …ஒரு பாட்டில் கோடீஸ்வரனாக்கும் விக்கிரமன் படத்து பாடல் போல மானமிகு. ஆசிரியர் வீரமணி சுயமரியாதை பேசி புல்லரிப்பை ஏற்படுத்தினார். நடுநடுவே நகைக்கடை அதிபர் போல வந்து நிற்கும் குங்குமப்பொட்டு தங்கபாலு சற்றும் அசராமல் “ மிக சுமூகமாக சென்று கொண்டிருக்கிறது.நாளையும் பேச்சுவார்த்தை தொடரும்” என்பதை சொல்லி வைத்த பாடத்தை தப்பாமல் பேசும் கிளிப்பிள்ளையாய் நிருபர்களிடம் சொல்லி நகைச்சுவையை ஏற்படுத்தினார். சகோதரப் பாசத்தினால் முதல்நாள் லாலி பாடிய திருமாவும், ராமதாசும் மறுநாள் அப்படியே திருப்பி அடித்து மக்களை திகைக்க வைத்தார்கள். நாக்கினால் இவ்வளவு வேகமாய் புரள முடியுமா என்பதற்கு நாசூக்கான ஆதாரங்கள் இவர்கள் . தமிழ்த் தேசிய சகதியாய் திமுகவின் சல்லடையில் தேங்கிக் கிடக்கும் பேராசிரியர் சுப.வீக்கு தற்போது பிடித்த வசனம்..வடிவேலின் அது நேத்திக்கு…இது இன்னிக்கு. காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து திமுக வெளியேற போகிறது என உயர்நிலை (?) செயல் திட்டக்குழுவின் தீர்மானத்தினை கேட்டு ( ஆவ்வ்…எவ்வளவு பாத்தாச்சி…) உணர்ச்சிவசப்பட்டு சோனியா ஒழிக…கலைஞர் வாழ்க என அப்பாவி திமுக தொண்டன் அலறி…அலறி தொண்டை புண்ணாகிப் போனதுதான் மிச்சமாய் நின்ற எச்சம். .தன் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் கொள்கை பேச வக்கற்று ஊழல் வழக்கில் சிக்கிக் கொண்டு திகார் சிறையில் களி தின்கிறார் . அவர்தான் குற்றவாளி என காங்கிரசு கட்சியின் மத்திய அரசு சொல்கிறது. முதல்வரின் மகளும்..மனைவியும் எப்போதும் விசாரணை வளையத்திற்குள். இதையெல்லாம் மீறி…கருணாநிதி காங்கிரசு மீது வைத்திருக்கும் அளவற்ற காதலுக்கு காரணம் பதவியின் மீதும்..பணத்தின் மீதும் வைத்துள்ள வெறிதானே ஒழிய வேறென்ன..? மக்களுக்கான பணி என்ற நிலைமாறி மக்களின் தீராத பிணியாக மாறி நிற்கிறது தமிழ்நாட்டு அரசியல். அழுக்கேறி குடலைப் பிடுங்கும் நாற்றமெடுக்கும் சாக்கடையில் நெளியும் புழுக்களாய் அரசியல் வியாதிகள் இவைகள் நெளிய …இவைகளை சற்றும் கூச்சம் இல்லாமல் பார்க்க பழக்கப் பட்டு விட்டான் தமிழன் . இந்த முறை இந்த கேடு கெட்ட ஆட்டங்கள் சற்றே அதிகம் . ஈழத் தமிழினத்தின் ரத்த கறை படிந்த காங்கிரசின் கரங்களோடு கை குலுக்க திமுக நடந்த நடை…அலைந்த அலைச்சல் இவை எல்லாம் யாரிவர்கள்.. என்பதனை நமக்கு அழுத்தம் திருத்தமாக அடையாளம் காட்டின. பதவியை பாதுகாக்கவும், ஊரை கொள்ளையடித்து சேர்த்து வைத்த ஊழல் காசினை பதுக்கவும் இவர்கள் காட்டிய அக்கறையை சற்றே அழிவின் விளிம்பில் நின்ற ஈழத் தமிழினத்தின் மீதும் காட்டியிருந்தால் கல்லறைகளாவது குறைந்திருக்குமே… .இன்றளவும் நம்மால் சீரணிக்கவே முடியாத அழிவுக் காட்சிகள் நம் கண்ணிலே தேங்கிக் கிடக்கின்றன. யாராலும் ஈடு கட்ட இயலாத ஒரு அறிவார்ந்த தமிழினத் தலைமுறை அழிக்கப்பட்டிருக்கிறது .. இனி நாம் கட்ட ஒரு தலைமுறை வேண்டுமே என்ற தவிப்பில் நம்மை தகிக்க வைக்கும் உலகத் தமிழினத்தின் ஒற்றை நாடு உருக் குலைந்து கிடக்கின்றது. இன்றளவும் கோணிப் பைக்குள் அடுத்த வேளை சோற்றிக்காக நாறிக் கிடக்கிறான் நம் இனத்து சகோதரன். பிணந்தின்னி கழுகு கூட உண்ண மறுக்கும் அருவருப்பு பிணமாய் நம் அக்காவையும் ,தங்கையும் சிதைத்துப் போட்டு வைத்திருக்கும் சிங்கள பேரினவாதத்திற்கு உற்ற துணையாய்…ஆயுதங்கள் அள்ளிக் கொடுத்து..ஆட்களை அனுப்பி வைத்து அழித்து முடித்து வைத்திருப்பது யார் என்று உலகத்திற்கே தெரியும். .பதவிகள்…பணங்கள்…என தங்க காசுகள் மினுமினுத்து புரளும் ஓசையில் இனத்தினை காட்டிக் கொடுத்தார்கள் நவீன யூதாசுகள். தன் மவுனமே தன் இனத்தினைக் கொன்றது என்ற குற்ற உணர்வில் சிலுவை சுமக்கிறது தமிழினம்.. நினைவெங்கும் அப்பிக் கிடந்து வன்மம் வளர்க்கச் சொல்கிறது சொந்த சகோதரனின் குருதி. எதன் பொருட்டும் மன்னிக்கவே முடியாத..மறக்கவே இயலாத காயங்களை நம்முள் ஏற்படுத்தியவர்கள் புனிதர்களாய் மாறி ஓட்டுப் பிச்சை கேட்டு வீதியில் வருகிறார்கள். கையோடு…கைகளாய் இணைந்து வரும் அந்த இணக்கத்தின் இடைவெளியில் பாருங்கள் .. சொட்டிக் கொண்டே இருக்கிறது …சரியாக மூடப்படாத இரவு நேரத்து குடிநீர் குழாய் போல நம் ஈழத்தின் ரத்தம். .நம் விரலில் இடப்படுகின்ற அடையாளம் வெறும் மையல்ல. நாம் பொத்தி பொத்தி நம்முள் வளர்த்து வரும் நம் இனத்தின் வன்மம் அது. நம் தமிழினத்தின் ஒற்றைக் கனவான தமிழீழத்தினை தகர்த்த காங்கிரசினை ஆவேசம் கொண்ட தமிழினம் இந்த மண்ணை விட்டு அகற்றட்டும்.வாக்குச் சாவடிக்குள் நுழையும் போது சற்றே எத்தனிப்போம். ஒரு நொடி கண் மூடுவோம். பல்லாயிரக்கணக்கான நம் சகோதரர்களின் பிணங்கள். சகிக்க முடியாத நம் சகோதரிகளின் ஓலங்கள்… எதுவும் அறியாத நம் அப்பாவி குழந்தைகளின் சிதைந்த உடல்கள்..அத்தனையும் நினைவிற்கு வரட்டும். பிறகு அழுத்துவோம். ஒரே அழுத்து. அந்த ஒற்றை அழுத்தலில் பல்கி பெருகி வெடிக்கட்டும் ஒரு இனத்தின் கோபம். .திலீபன்(எ)மணி.செந்தில். நாம் தமிழர் கட்சி கும்பகோணம் www.manisenthil.com. |
Monday, March 14, 2011
ஐநா செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழுவின் அறிக்கை எதை சாதிக்கப்போகிறது?ஈழதேசம் இணையத்திற்காக கனகதரன்
பௌத்த சிங்கள ஆதிக்கம் இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை மூன்று தசாப்தகாலத்திற்கு மேலாக இராணுவ அடக்கு முறைக்குள் கொண்டுவந்து பயங்கர ஆள் அழிப்புச்சட்டங்களான அவசரகாலச்சட்டம்,
பயங்கரவாத தடைச்சட்டம் ஆகியவற்றினுள் இருத்தி தமிழ் பேசும் மக்களை அடக்கி சர்வாதிகார ஆட்சி செய்தே வருகிறது. அதற்கு பல வெளிநாடுகள் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் ஆதரவு வழங்கி வருகின்றன.
இதற்கு சிங்கள ஆட்சியாளர்களால் கூறப்பட்ட காரணம் தமிழீழ விடுதலைப்புலிகள், விடுதலைப்புலிகளிடமிருந்து நாட்டையும் அரசையும் காப்பதற்கு இராணுவமயப்படுத்தல் தேவைப்பட்டது என்ற காரணம் காட்டப்பட்டது. யார் இந்த விடுதலைப்புலிகள். ஏன் இவர்கள் தோற்றம் பெற்றனர். என்னத்துக்காக கலவரம் செய்கின்றனர் அல்லது எதற்காக ஆயுதம் தூக்கினர், என்பதை ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை எவரும் ஆராய விரும்பியிருக்கவில்லை, அனாலும் ஒருதலைப்பட்சமாக சிங்களவனால் கூறப்பட்ட அந்த நியாயம் சர்வதேசத்தால் ஓரளவு ஏற்றுக்கொள்ளப்பட்டும் இருந்தது. 2009 ம் ஆண்டு இலங்கையின் பிரிவினைப்போராட்டம் சர்வதேசத்தின் உதவியுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு விட்டதாக இலங்கை அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்து வெற்றிவிழாக்களும் கொண்டாடியது, இதை இலங்கை அரசு மட்டுமல்லாது சர்வதேச பார்வையாளர்களும் ஒப்புக்கொண்டிருக்கின்றனர். அப்படியானால் அந்தமண்ணில் அமைதி திரும்பியிருக்க வேண்டும் அங்குவாழும் மக்களுக்கு இனியும் இராணுவ நெருக்கடியில்லாத அவர்களுக்கான உரிமையை நிம்மதியை கொடுக்கவேண்டிய பொறுப்பு ஆட்சிசெய்யும் அரசுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் உண்டு.
போராட்டத்தின்போது பயங்கரவாதத்தடைச்சட்டம் மற்றும் அவசரகாலச்சட்டம் ஆகியவற்றால் போர்த்தியபடி கணக்கற்ற மனித உடல்களின்மீது பாதை அமைத்து இராணுவத்தை ஏவி வேட்டை நடத்திய சிங்கள அரசுத்தலைவர் ராஜபக்க்ஷ, யுத்தம் முடிவுக்கு வந்தபின் சர்வதேசத்திற்கு அளித்த வாக்குமூலத்தில் மனித உரிமைகளை மதித்து ஒரு கையில் துப்பாக்கியும். மறு கையில் மனித உரிமையை வைத்துக்கொண்டு தனது இராணுவத்தினர் போர் புரிந்ததாக பெருமையுடன் அடிக்கடி சொல்லுவதுண்டு. அப்படியானால் இலங்கை ஜனாதிபதி மனித உரிமைகள்பற்றி நன்கு தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார் என்றே கொள்ளமுடியும்.
போராட்டக்காலங்களில் மோதலில் ஈடுபட்டிருந்த இருபக்கங்களிலும் மனித உரிமை பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது சர்வதேச மனித உரிமை ஆர்வலர்களினதும், நிர்ணயம் செய்யக்கூடிய ஐநா போன்ற அமைப்புக்களின் ஆவலுமாகும், போராட்டம் நடக்கும் காலங்களில் எதுவும் நடக்க சந்தற்பங்கள் நிறைய உண்டு, கலவரம் ஓய்வுக்கு வந்தபின்தான் நடைபெற்ற போராட்டம் அப்பாவி மக்களை எந்தவகைக்குள் இட்டுச்சென்றது. போராடிய இருதரப்பும் சர்வதேச நெறிமுறைகளை பின்பற்றி போரை நடத்தியிருந்தனரா என்பதையெல்லாம், போராட்டத்தில் பங்குபற்றியவர்களால் பாரபட்சமில்லாமல் தீர்மானிக்க முடியாது என்பதும் உலகம் அறியக்கூடிய உண்மை.
அப்படியென்றால் பக்கச்சார்பில்லாத நிர்ணயிக்கப்பட்ட மூன்றாவது தரப்பு ஒன்றுதான் நடந்துமுடிந்த போராட்டத்தை நுணுக்கமாக ஆராய்ந்து மனித உரிமைகள் பாதிக்கப்பட்டிருந்ததா. அப்பாவிகள் கொல்லப்பட்டிருந்தனரா துன்புறுத்தப்பட்டிருந்தனரா. என்பதை வெளிப்படையாக தெரியப்படுத்தவேண்டும். சிங்களத்தரப்பிலிருந்தும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் வரலாம். குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் சர்வதேச சட்டத்திற்குட்பட்டு தண்டிக்கப்படலாம், அதேபோல தமிழர் தரப்பிலிருந்தும் எழும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை மனச்சாட்சியுடன் விசாரித்து நீதி வழங்கவேண்டிய பொறுப்பு இலங்கை தேசத்தையும் தனது அமைப்புக்குள் உள்வாங்கி அங்கம் வகிக்கும் ஐநா சபைக்கு உண்டு. இந்த ஒரேயொரு நம்பிக்கைதான் அனாதரவாக நாடற்று திரிசங்கு நிலையில் திகைத்து நிற்கும் தமிழினத்தின் ஒரேயொரு நம்பிக்கையாகும்.
யுத்தம் முடிவுக்குவந்து மூன்றுவருடத்தை எட்டும் இன்றுவரை சர்வதேசத்தின் முக்கியமான அமைப்புக்களால் பாதிக்கப்பட்ட தமிழினத்துக்கு நியாயமான நீதி நகர்வு என்று எதையும் இனங்காட்ட முடியவில்லை. அரசுசார்பற்ற சர்வதேச தொண்டு அமைப்புக்களும் ஊடக அமைப்புக்களும் பல அதிர்ச்சியளிக்கக்கூடிய படுகொலை ககட்சிகளையும் மனித உரிமை மீறல்களையும் ஆதாரபூர்வமாக உலக கண்களின் முன் கொண்டுவந்திருக்கின்றன. அவற்றை ஆராய்ந்து அசைவாக்கம் கொடுக்கக்கூடிய வல்லமை அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச சபை அமைப்புக்களையே சாரும். உலக அரங்கில் ஐநா சபை உருவான பின்னணியை பார்த்தாலே 2ம் உலக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலத்தை கண்ணுற்றபின் 1945ல் தோற்றம்பெற்றதுதான் ஐநா அமைப்பு. இன்று ஐநா அமைப்பு, தமிழ்நாட்டின் திமுக கட்சிபோலவும், அமெரிக்கா, காங்கிரஸுக்கட்சிபோலவும் செயற்படத்தொடங்கியிருக்கிறது, போதாக்குறைக்கு திடகாத்திரமில்லாத பான் கீ மூன் ஐநாவின் செயலாளராகவும், அவரது மகளை திருமணஞ்செய்த இந்திய விஜய் நம்பியார் பான் கீ மூனின் உதவியாளராகவும், ஐநாவை தங்கள் பதவிக்காகவும் சுயலாபத்துக்காகவும் பாதை மாற்றி விட்டிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழும்பியிருக்கிறது.
இன்று யுத்தம் முடிவுக்கு வந்துள்ள வளம் நிறைந்த வன்னியில் குறைந்த தொகையில் ஆண்களும் விதவைகளாக்கப்பட்ட பெருவாரியான பெண்களும் வாழ்வுக்கான ஆதாரம் எதுவும் இல்லாமல் நடைப்பிணமாக வாழ்ந்து வருகின்றனர். இங்கு வாழுகின்ற மக்களில் ஒருவருக்கு மூன்று ஆயுதம் தாங்கிய இராணுவவீரரும் இந்தக்கணக்குக்குள் உட்படாமல் உதிரியாக பல ஆயிரக்கணக்கான பொலிஸாரும் குவிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் வன்னியில் எந்தக்காலத்திலும் இல்லாத அளவுக்கு கடத்தல்களும் கொலைகளும் கற்பழிப்புக்களும் வீடுபுகுந்து கொள்ளையடிக்கும் கூட்டமும் வரலாறு காணாத அளவுக்கு பெருகியிருக்கிறது. இவையெல்லாம் எதை சுட்டிக்காட்டுகின்றன. தமிழினம் கூண்டோடு இல்லாமல் அழிந்து போகவேண்டும் அல்லது சுய சிந்தனையற்றவர்களாக நடைப்பிணங்களாக செத்துத்தொலைந்துவிட வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரல் ஏதோ ஒரு சக்தியால் கச்சிதமாக ஈடேற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்தச்சதி ஈழத்தில் மட்டுமல்லாது தமிழன் எங்கு போராட்டக்குணத்துடன் அடங்க மறுக்கிறானோ அங்கெல்லாம் விஸ்தரிக்கப்பட்டுவிட்டது,
சமீபகாலமாக ஈழத்தமிழர்கள் சார்ந்த செய்திகள் தமிழினத்துக்கு சாதகமாக எதுவுமில்லை என்கிற அளவிற்கு வெளிவருகின்றன, சிலதினங்களுக்கு முன் சிங்கள மக்களின் நலனையும் தனது குடும்ப நலனையும் மறக்காமல் ராஜபக்க்ஷ பகிரங்கமாக தனது முடிந்த முடிவாக கக்கியிருந்த கருத்து இவை. எமது நாட்டின் இராணுவம் மற்றும் அரச அதிகாரிகள் வெளிநாட்டவரினால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவதை ஒருபோதும் நான் அனுமதிக்கமாட்டேன். எந்தவொரு விசாரணை நடவடிக்கைகளும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் உள்ளூரில் மட்டுமே இடம்பெற வேண்டும். அத்துடன் நாட்டையும் அதன் இறைமையையும் பாதுகாப்பதற்கு நான் கடமைப்பட்டிருக்கின்றேன். அதனை காட்டிக் கொடுப்பதற்கு நான் தயாரில்லை என்று தெரிவித்தார். இறைமை என்று சிங்கள அரசியல்வாதிகள் அடிக்கடி பிரயோகிக்கும் சொற்பதத்தின் அர்த்தம் என்னவென்பது இன்றுவரை எவரும் புரியாத புதிராகும். ராஜபக்க்ஷவினால் விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கைச்செய்தி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தையும் ஐநா அமைப்பையும் அடங்கிக்கிடவுங்கள் என்று மிரட்டுவதாகவே எடுத்துக்கொள்ள முடியும்.
இலங்கை அரசு 1955ம் ஆண்டு டிசம்பர் காலப்பகுதியில் ஐநா சபையின் சட்டதிட்டங்களுக்கமைய ஐநா சபையில் இணைந்துகொண்டது, அப்படியாயின் ஐநா சபையின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக நடந்துகொள்ள வேண்டிய தார்மீகக்கடமை இலங்கைக்கு உண்டு. அதேபோல ஐநா சபையும் உலகில் நடைபெற்ற மிக கொடூரமான ஒரு இனப்படுகொலை பற்றி கண்மூடி மௌனியாக ஏனோதானோவென்று விட்டுவிட முடியாது. ஒரு சமூகம் தான் சார்ந்துள்ள உள்நாட்டு சட்டதிட்டங்களையும் மீறி தன்மீது திணித்து சுமத்தப்படும் பாரதூரமான உரிமை மீறல்களை (genoside) ஏதாவதொரு அமைப்பு ரீதியாக ஐநாவிடம் கொண்டுசென்று நியாயம் தேடுவது நம்பிக்கையான கடைசி முயற்சியாக இருக்கும், அதை புரிந்துகொள்ளக்கூடிய மனிதாபிமானி ஒருவரே அந்த அமைப்பை வழி நடத்துபவராகவும் இருக்கவேண்டும். ஆனால் சர்வாதிகாரியான ராஜபக்க்ஷ எதற்கு கட்டுப்படுபவராகவும் தெரியவில்லை ஐநாவின் செயலாளர் பான் கீ மூன் எதையும் கட்டுக்குள் கொண்டுவரக்கூடியவராகவும் தெரியவில்லை.
நானே நாட்டின் தலைவர், நானே முப்படைகளின் தளபதி, நானே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி, நானே கொலைசெய்வேன், நானே புதைப்பேன், நானே வழக்குரைஞராகவும் இருப்பேன், நானே நீதிபதியாக தீர்ப்பும் வழங்குவேன், இதை எல்லோரும் ஏற்றுக்கொண்டாகவேண்டும். என்பதே இலங்கை ஜனாதிபதியின் கருத்தாகக்காணலாம், இலங்கையை பொறுத்தளவில் சர்வாதிகாரம் அதுதான் நியதியென்றால் அவரது ஆட்சிக்குட்பட்டு அவரது நவீனநாடு அதை ஏற்றுக்கொள்ளவும் கூடும். ஆனால் அவர் அறைகூவல் விடுத்து சவால் விட்டிருப்பது தமிழனுக்கு மட்டுமல்ல சர்வதேசத்திற்கும் என்பதை சர்வதேசம் என்றைக்கு உணர்ந்துகொள்ளப்போகிறது, இதையே முன்னுதாரணமாகக்கொண்டு உலக நாடுகள் எல்லாம் இவற்றை பின்பற்றப்போகின்றனவா, என்பதும் இங்கு கேள்வியாக்கப்பட்டிருக்கிறது, இந்த கேள்வி தொடரும்வரை உலகில் கலவரங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்குமா என்ற இன்னொரு கேள்வியும் ஐநா சபையை நோக்கி எழுகின்றது.
போர் முடிவுக்கு வந்தபின்னும் எவரும் வாய் திறந்துவிடக்கூடாது என்பதை குறியாகக்கொண்டு மாதா மாதம் இலங்கையில் அவசரகாலச்சட்டம் நீடிக்கப்பட்டுக்கொண்டே வருகிறது. வாய் திறந்து பேசக்கூடிய சுதந்திரம் புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்களுக்கு மட்டும் கொஞ்சம் இருந்தாலும் அங்கும் ஊடுருவிவிட்ட சிங்களவனின் பிரித்தாளும் தந்திரம் தமிழ்மக்களை இரண்டுபட வைத்திருக்கிறது, போராட்டகாலங்களில் பதுங்கி வாழ்ந்தவர்களெல்லாம் சுயநலன் சார்ந்து இன்று புலம்பெயர் நாடுகளில் தாமே போராட்டத்தை தலையில் சுமந்து வெந்து விறுவிறுத்து நிற்பதுபோல ஒருவர்மீது ஒருவர் பாய்கின்றனர். அந்த ஒரு பாய்ச்சலே அவர்களின் அஸ்தமனத்தின் ஆரம்பம் என்பதை சில நாட்களில் அவர்களே உணர்ந்து முடங்கும்போது அவர்களாலேயே புரியப்படும். "விரால் இல்லாத குளத்தில் குறவை மீன் குதித்து நான்தான் தலைவன் என்று துள்ளி விளையாடியதாம்" அதே போல் நகைச்சுவையான சம்பவங்களும் நடக்கத்தான் செய்கின்றன. காலம் விரைவில் இதற்கெல்லாம் பதிலளிக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு நிறையவேயுண்டு.
ஒரு நாட்டின் ஜனாதிபதியென்று சொல்லிக்கொண்டு உலக அரங்கத்தில் படுகொலைகள் மூலம் அறிமுகமாகியுள்ள ஒருவர் தான் என்பதை மறந்து இலங்கை ஜனாதிபதி ராஜபக்க்ஷ சிறுபிள்ளைத்தனமாக புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் தெரியாது என்று சொல்லி மகிழ்ந்திருக்கிறார், ஸ்ரீலங்காவின் சிங்கள மக்களுக்கான தனது தொலைக்காட்சி உரையின் போதே ராஜபக்க்ஷ இவ்வாறு விஷமத்தனமாக கருத்து தெரிவித்து மகிழ்ந்திருக்கிறார். இவ்வாறு தமிழ் தெரியாதவர்களே தமக்கு எதிராக சர்வதேச நாடுகளில் பரப்புரை செய்வதாகவும் இவ்வாறு பரப்புரை செய்யும் பலருக்கு தமிழே பேசத் தெரியாதென்றும் மகிந்தர் தெரிவித்துள்ளார். உண்மை என்னவென்றால் ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கு பல இடையூறுகள் காரணமாக கல்வியை தொடரமுடியாமல் இடையில் நிறுத்திவிடவேண்டிய சந்தர்ப்பங்கள் குறுக்கிட்டு பாழ்படுத்தியதுண்டு, ஆனால் புலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு கல்வியை தொடராமல் இடை நிறுத்தும் சந்தற்பங்கள் குறைவு. அத்துடன் 90 களுக்குப்பின் புலம்பெயர் அனைத்து நாடுகளிலும் தேசியத்தலைவரின் சீரிய சிந்தனையின் வெளிப்பாடாக தமிழாலயங்கள் மூலம் தமிழ்க்கல்வி சிறப்பாக தழைத்தோங்கியே இருக்கிறது, புலம்பெயர்தேசத்து குழந்தைகளின் தமிழ் உச்சரிப்பு திறன் ஈழத்துக்குழந்தைகளை விட துல்லியமானதென்றே காணமுடியும். இப்படியிருக்கும்போது மகிந்த தானோரு தமிழ் அறிந்த பண்டிதர்போல புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழர்களுக்கு தமிழ் தெரியாது என்று கூறி மகிழ்ந்திருக்கிறார். உலகத்தில் பலதேசங்களில் தமிழர்கள் வாழ்ந்தாலும் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களது காலத்தில்த்தான் தமிழனுக்கு பெருமை கிடைத்திருக்கிறது, முற்று முழுதாக தமிழை இணையத்தளம் வரைக்கும் கொண்டு சேர்த்த பெருமை தேசியத்தலைவர் அவர்களையே சாரும், சிங்களம் என்றொரு மொழியும் துட்டத்தனமான ஒரு இனமும் இருப்பதுகூட உலகம் இனங்கண்டுகொள்வதற்கு தமிழினமே காரணமாயிருந்தது.
உள்நாட்டில் இதே மொழிக்கொள்கையின் தரப்படுத்தலில் ஆரம்பமானதுதான் விடுதலைப்புலிகள் இயக்கம் என்பதை மறந்து பழைய சிங்களத்தலைமைகள் செய்த அதே விஷமத்தனத்தை வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள்மீது ராஜபக்க்ஷ விதைத்து திருப்தியடைந்திருக்கிறார் லண்டனிலும் அமெரிக்காவிலும் தமிழினத்தால் விரட்டியடிக்கப்பட்ட இயலாமையின் வெளிப்பாடாக பல நாசகாரத்திட்டங்களை சில சோரம்போகும் தமிழர்கள் மூலமே ஈடேற்றிவிடலாம் என்பது ராஜபக்க்ஷவின் தந்திரமாக காணப்படுகிறது, அதற்காக வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடத்தில் ஊடுருவி பிரிவினையை தூண்டுவது, உள்ளூரில் தமிழ்க்கட்சிகளை மிரட்டி அடிபணிய வைப்பது போன்ற தன்னால் முடிந்த அளவு குறுகிய வேலைத்திட்டங்களிலேயே அவரது புத்தி ஓடிக்கொண்டிருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
இதுபற்றி கருத்துத்தெரிவித்த மாற்றுக் கொள்கைகளுக்கான அமைப்பின் தலைவரான பாக்கியசோதி சரவணமுத்து கடந்த 9ம் திகதி ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மாநாட்டின் அமர்வில் உரையாற்றும்போது மறைமுகமாக ராஜபக்க்ஷவின் கயமையின் வெளிப்பாட்டை சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் பிரச்சினைகளுக்கான தீர்வு ஒன்று தொடர்பில் மனித உரிமைகளை அறிக்கைப்படுத்தும் சர்வதேச பொறிமுறை ஒன்று இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களை மறந்து எதிர்காலம் நோக்கி செல்லலாம் என சிறீலங்கா அரசாங்கம் கூறுகின்ற போதும், முறையான புனர்நிர்மாண, புனர்வாழ்வளிப்பு இன்றி, கடந்த காலங்களை மறக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கிடையில், இலங்கையில் தற்போது பல அபிவிருத்தி செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் அவை தன்னிச்சையாக சுயலாபத்துடன் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களாக உள்ளதெனவும் அவர் கூறியுள்ளார். இந்த அபிவிருத்தி செயற்பாடுகள் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படாமல், தன்னிச்சையாக திணிக்கப்பட்டு வருவதாகவும் பாக்கியசோதி சரவணமுத்து குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்க்ஷவை சுற்றி பலதரப்பட்ட போர்கால உரிமை மீறல் படுகொலை குற்றச்சாட்டுக்கள் குவிந்திருக்கும் இந்த வேளையில். அவருக்கு கை கொடுத்து உதவுவது, அவரது பதவியும் சில தமிழ் ஒற்றர்களும் என்பதுதான் உண்மை, அந்த இரண்டும் சில வருடங்களை தாக்கிப்பிடித்தாலும் தொடர்ந்து கைகொடுக்கும் என்று கொள்ளமுடியாது, தமிழர்தரப்பிலிருந்து பன்முகப்பட்ட குற்ற முறைப்பாடுகள் ஜனநாயக முறைமைக்குட்பட்டு சர்வதேச அரங்கில் குவியும்போது நிச்சியமாக நீதியின் ஒரு கதவு திறக்கவேண்டிய கட்டாயத்தில்தள்ளப்படும், ஐநா சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சார்புக்கொள்கையை மனதில்க்கொண்டு மூடி மறைக்க முற்பட்டாலும். சர்வதேச சட்ட அரங்கினுள் முறையீடுகள் வந்து வீழ்ந்துவிட்டால் அவை நீர்த்துப்போவதற்கு காரணங்களில்லை என்பதற்கு சான்றாக அவுஸ்த்ரேலிய பிரதமர் யூலியா கிலாட் போர் குற்றவாளி பாலித கோகன்ன பற்றிய தனது கருத்தில் குறிப்பிட்டவை , குறிப்பிட்ட இந்த வழக்குத் தொடர்பான முழுமையான விபரங்கள் எதுவும் தனிப்பட்ட ரீதியில் எனக்குத் தெரியாது. அதேநேரம் "அனைத்துலக குற்றவியல் நீதிமன்றினையும் அதனது முறையான சட்ட நடவடிக்கைகளையும் நாங்கள் ஆதரிக்கிறோம்". நடப்பிலுள்ள சட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அரசியல் தலைவர்கள் கருத்துக்களை வெளியிடாமல் இருப்பதுதான் நல்லது" என பிரதமர் யூலியா கூறுகிறார். எனவே ஜனநாயக மரபிற்குட்பட்டு சட்டம் தனது கடமையை செய்யும் என்பதுதான் அவுஸ்த்ரேலிய பிரதமரின் சாராம்ஷமாகக்காணலாம்.
கடைசியாக போர் முடிவுக்கு வந்தபின் சரணடைந்த பெண் போராளிகள் சிலரை இராணுவத்தினர் மண்வெட்டியால் தலையில் கொத்தியும் அடித்தும் கொடூரமாக கொன்றுள்ளனர். என்று ஆதாரத்துடன் இன்னொரு குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. சில இடங்களில் இலங்கை இராணுவம் பாவித்த எரிகுண்டுகளால் பலரின் உடல்கள் எரிந்து கருகியுள்ளதையும் கிடைக்கப்பெற்றுள அப் புகைப்பட ஆதாரங்கள் சில காண்பிக்கின்றன என்றும் தெரிகிறது. குறித்த புகைப்படங்கள் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவான ஒரு இராணுவச் சிப்பாய் ஊடாக வெளியிடப்பட்டுள்ளது. என்றும் தெரிகிறது அவரது கையடக்கத் தொலைபேசியில் உள்ள சில புகைப்படங்களை தமிழர்களின் போராட்டத்திற்கு சார்பான இணையம் ஒன்று பெற்றுள்ளது. இது குறித்து ஜ.நாவின் சட்டத்துக்கு புறம்பான கொலைகளுக்கு பொறுப்பதிகாரியாகவுள்ள பிலிப் அல்ஸ்டனை அந்த இணையம் தொடர்புகொண்டு அப் புகைப்படங்களை அவர்களுக்கு வழங்குவதற்கான முயற்சிகளில் அவர்கள் முனைப்புடன் இருப்பதாகவும் தெரிகிறது.
ஐநா செயலாளர் பான் கீ மூன் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டிருந்த மூவர் கொண்ட நிபுணர் குழு தமது ஆய்வறிக்கையை ஐநா செயலரிடம் விரைவில் கையளிக்க இருக்கின்றனர், நிபுணர் குழுவினரை இலங்கைக்குள் நுழையவிடாமல் சர்வாதிகாரி ராஜபக்க்ஷ தடை போட்டிருந்தார் ஆனால் நிபுணர் குழுவினர் எதோ ஒரு கற்பனை திறனின் வடிவமாக ஒரு அறிக்கையை தயார்செய்திருக்கின்றனர், இப்போ அந்த அறிக்கை தமது பார்வைக்கு வைக்கப்பட்டபின்தான் அதுபற்றி விவாதிக்கமுடியும் என்று ராஜபக்க்ஷ கட்டளையிட்டிருப்பதாகவும் ஐநா அதற்கும் ஒப்புக்கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது, ஐநா பெருமன்றத்தின் நடவடிக்கை பற்றி சிறியோனான எனக்கும் என்போன்றவர்களுக்கும் அதிகம் தெரியாது என்பதால் அதுபற்றி விமர்சிக்க முடியாது. ஆனால் எமது இனத்துக்கு ஏற்பட்ட படு மோசமான இந்த நிலைக்கு இவர்கள் பதிலளித்து குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை லண்டனில் நடந்த ஜனநாயக போரட்டமும் அடுத்து மூண்டு பற்றிப்பிடிக்கத்தயாராக இருந்த அமெரிக்க ஜனநாயகப்போராட்டமும் தொடரவேண்டும் என்பதே எல்லோரது அவாவாகவும் இருக்கும்.
ஈழதேசம் இணையத்திற்காக,
கனகதரன்,, ,
Friday, March 11, 2011
தயாளு அம்மாள், கனிமொழியிடம் சி.பி.ஐ. விசாரணை
Friday, March 4, 2011
ஈழப்போராட்டத்தை வீழ்ச்சியில் தள்ள பாடுபடும் தமிழ்நாட்டின் சுக்குமான் தடிகள்,ஈழதேசம் இணையத்திற்காக கனகதரன்,,
சமீபத்திய இரண்டு மூன்று ஆண்டுகளாக புலம்பெயர் நாடுகளின் தமிழருக்கான வெகுஜன ஊடகங்களிலும் சரி, சர்வதேசத்து பிறமொழி ஊடகங்களிலும் சரி, ஈழம் பற்றி வெளியாகும் செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள், காட்சிகள்,
அனேகமானவை ஈழத்தமிழர்தம் போராட்டத்தின் இன்றைய பின்னடைவை மையமாகக் கொண்டவைகளே, அரசியல் பொருளாதாரம், தொடங்கி கலை கலாச்சார, படைப்பிலக்கியங்கள் எவையாக இருந்தாலும், பல்வேறு விடயங்களைத்தொட்டு முத்தாய்ப்பாக மையப்படும் கருப்பொருள், ஈழத்தின் போராட்டத்தை தொடர்பு கொண்டதாகவே சுட்டி நிற்பதைக் காணலாம்.
ஈழத்தமிழினத்தின் முதல்முக்கிய மூலப் பேசுபொருள், தேவை விடுதலைப்போராட்ட அரசியலாக இருந்தபோதும், போராட்டத்தோடு நேரடித் தொடர்பில்லாத பல்வேறுபட்ட புறக்காரணிகளும் நிறையவே தன் நலன் சார்ந்து தமிழர் போராட்டத்தினுள் விரும்பியோ விரும்பாமலோ செல்வாக்கு செலுத்தும் விதமாக உள் நுழைந்து கொள்ளுகின்றதையும் காணலாம், இன்ன பல வேறுபட்ட புறக்காரணிகள் எட்டத்தே போராட்டத்தோடு எந்தத் தொடர்புமற்ற உதிரிகள் போல் தோன்றினாலும். அவை தமிழர் போராட்டத்தில் ஏதோ ஒருவகையில் தவிர்க்க முடியாமல் தன்னிச்சையாக குறுக்கீடு செய்து ஆதிக்கம் செலுத்தி ஊறு விளைவிக்கும் தன்மை கொண்டவையாகவே காணப்படுகின்றன.
உதாரணத்திற்கு அமெரிக்காவில் கோதுமை விளைச்சலில் சறுக்கல் ஏற்பட்டுவிட்டால்,. அந்தப்பிரச்சினை அமெரிக்காவுடன் முடிந்துவிடாமல், சில காலங்கடந்து வேறு ஒருநாட்டில், அல்லது எமது சொந்த நாட்டிலேயே உணவுத்தட்டுப்பாட்டையும், உள்ளூரில் மாவின் விலையேற்றத்தையும் ஏற்படுத்தி எதிர்த் தாக்கத்தை உண்டுபண்ணி, பொருளாதார ரீதியான நெருக்கடிக்குள் தள்ளிவிடுவதுபோல, ஈழ போராட்டத்திலும் பல்வேறு சக்திகளின் அசைவாக்கம் நல்லவைபோல் உள் நுழைந்து சங்கடங்களை உண்டுபண்ணிக்கொண்டிருப்பதை அனுபவரீதியாக காணுகின்றோம்.
இந்த நெறிமுறைக்கு உட்பட்டு புறக்காரணிகள் தவிர்ந்து தமிழர்களின் போராட்டம் மட்டுமல்ல, தமிழர்களின் சமூக அரசியலிலும் வெளியுலகத்தின் ஊடுருவலின்றி எதையும் முன்னெடுக்க முடியாத, அகப்புறச்சூழல்கள் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்திருப்பது அனுபவ ரீதியாக எவராலும் மறுக்க முடியாத யதார்த்தமாகும்.
ஈழப்போராட்டத்தில், உலகிலுள்ள எந்த நாடுகளையும் விட இந்தியாவின் அசைவாக்கமும் தலையீடுகளும் மிகப்பிரதான பங்குவகித்திருக்கிறது, இனி வருங்காலங்களிலும் இந்தியாவின் பங்கு தவிர்க்க முடியாத ஒன்றாகவே காணலாம். இந்தியா என்னும்போது நன்மையோ தீமையோ. ஒரு முகமான எதிர்வினையைத்தான் ஈழப்போராட்டம் இந்தியாவிடம் முகங்கொடுத்து சந்தித்ததாகக் கொள்ளமுடியாது. அரசியல் பொருளாதார இராணுவ ஆதிக்கசக்திகளுடன்,, மொழி உறவு கலாச்சாரம் பண்பாடு போன்ற இன்னும் ஒருவிதமான உளவியல் ஆக்கிரமிப்புச் சக்திகளுடனும் முகங்கொடுத்து போராட்டத்தை கொண்டு செலுத்த, வெவ்வேறுபட்ட இராசதந்திரம் பேண வேண்டிய இக்கட்டும் ஈழத்தமிழர்களுக்கு தொடர்ச்சியாக இருந்தே வந்திருக்கிறது.
பிரித்துக்கூறுவதாயின் இந்திய மத்திய அரசை ஆட்சிசெய்யும் அதிகாரத்திலுள்ள காங்கிரசு கட்சி அரசின் வெளியுறவுக்கொள்கை, மற்றும் பாஜக கட்சி ஆட்சி செய்யும்போது கடைப்பிடிக்கும் வெளியுறவுக்கொள்கை, தவிர தமிழ்நாடு எனப்படும் திராவிட கூத்தாடி அரசுகளின் சுயநலன் சார்ந்த குழப்பமான கொள்கை வகுப்பு, சினிமா நட்சத்திரங்களை ஏவிவிட்டு திசைதிருப்பிய உளவியல் குளப்படிகள் இப்படி பல நெருக்கடிகளை ஈழப்போராட்டம் வேண்டியோ வேண்டாமலோ சமாளிக்க வேண்டியிருந்தது.
2009 கடைசிக்கட்ட இன அழிப்பின்போது, தமிழர் விரோதப்போக்குக்கொண்ட மத்திய அரசின் போக்கை, மானசீகமாக கட்டுப்படுத்தக்கூடிய அசைவாக்கம் கொண்டுள்ள தமிழ்நாட்டு தமிழர்களின் உளப்பூர்வமான எழுச்சி நிறைந்த மக்கள் ஆதரவைக்கொண்டு, தென்னிந்தியத் திராவிடக்கட்சிகள் மத்திய அரசை கட்டுக்குள் கொண்டுவரக்கூடிய சாதகமான சூழல் நிறையவே தமிழ்நாட்டில் உண்டாகியிருந்தது. இருந்தும் திராவிடக்கட்சிகள் ஒன்றிடமிருந்து ஒன்றைக் காட்டிக்கொடுத்து அதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டி அரசியலில் ஈடுபட்டனவே தவிர கடுகளவுகூட மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளவில்லை.
போட்டி சுயநலன் மட்டுமே காரணமாக முரண்பாட்டுக் கொள்கையுள்ள தேசியக்கட்சிகளுடன் பிறழ்வான கூட்டு, சுயமாக முடிவெடுக்க முடியாத சிறுபான்மையான அரசாங்க அமைப்பு, ஊழல், பதவிவெறி, போன்றவை காரணமாக திராவிடக்கட்சிகள் இன-மானம் கடந்து, மிகக்குறுகிய நோக்கத்துடன் தன்நலன் சார்ந்து பதவியை காப்பாற்றவேண்டுமென்ற ஒரே சுயநல நோக்கத்துடன் விசித்திரமான தந்திரங்களையே ஈழப்பாசமாக மேடையேற்றி மாறி மாறி ஈழப்போராட்டத்தில் குளிர் காய்ந்து வந்திருக்கின்றன.
மீறி உணர்ச்சி வசப்பட்ட தன்மானத்தமிழர்களின் உண்மையான உணர்வுள்ள சக்திகள் அனைத்தும் பரிதாபமாக தீக்குளித்து செத்தவை போக, மீதி அனைத்தும் அதிகாரத்தால் காட்டுமிராண்டித்தனமாக அடக்கப்பட்டுமிருந்தன. மற்றும் பல சோரம்போன அடிப்பொடிகள் அரசியலில் சில்லறை காசாகி தலையாட்டிப்பொம்மைகள் ஆக்கப்பட்டிருக்கின்றனர். இன்னும்பல சந்தற்பவாத அரசியல்வாதிகள் தம்மை பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு பச்சோந்தியாக மாறி. நேரம் ஒரு கிளையில் குடியிருந்து நிறம் மாற்றி மாற்றி காலம் தள்ளிக்கொடிருப்பதைக் காணலாம், ஆனால் மேலே குறிப்பிட்டவர்களில் அதிகாரத்திலிருக்கும் இந்தியப்பிரதமர் முதல் தமிழ்நாட்டு கடைசி அரசியல்வாதிவரை, எவருமே ஈழத்தமிழருக்காக தம்மை அர்ப்பணிப்பதாகவே காட்டிக்கொள்ள முனைகின்றனர், தவிர எவரும் தமது உண்மையான துரோக நிலைப்பாட்டை ஏதோ காரணத்துக்காக இழுத்து மூடி மறைப்பதையே காணலாம்.
ஈழத்தமிழர்கள் போராட்டம் தொடங்கியதற்கான காரணம், தேவையற்ற விளையாட்டுத்தனமான பிரிவினைவாதம் அல்ல, அது இந்தியாவுக்கான அல்லது தமிழ்நாட்டுக்கான காவடி எடுப்புமல்ல. காலா காலமாக தனித்தன்மையுள்ள இலங்கைத் தீவுக்குள் சிங்களவனின் அடக்குமுறைக்கும் அராஜகத்திற்கும் ஆளாகிய தமிழினம் மிக மோசமான அபாயக்கட்டத்தில் வேறு வழியின்றி தற்காப்பு உபாயமாகவே ஆயுதப்போராட்டம் பிறப்பெடுத்ததைக் காணலாம். சுதந்திரத்திற்கான கிளர்ச்சிக் காரணிகளாக சிங்களவனின் தரப்படுத்தலும் அடக்குமுறையும் பாதுகாப்பின்மையும் காரணமாகவிருந்தது.
ஆனால் போராட்டத்தை கொண்டு செலுத்தி குறியை அடைவதற்கு முயற்சிக்கும் போதுதான் உலக வல்லாதிக்கங்களுடனும் சுயநலம் மிக்க அயல் அரசியல்ச்சக்திகளுடனும் உள்ளூர் துரோகக்கூட்டங்களுடனும் முட்டி மோதவேண்டிய பெரும் நெருக்கடி குறுக்கே நிற்பதை தமிழினத்தால் இனங்காண முடிந்தது. இது சிங்களவனுடன் போராடுவதை விடவும் பல மடங்கு சக்தி இழப்பையும், பல்வேறு விதமான இராசதந்திர சிக்கலையும், நுணுக்கமான மதிநுட்பத்தை பாவித்து கடக்கவேண்டிய பொறிநிலையையும் உணர்த்தியது, இந்தக்காரணிகள் வெளிப்படையாக பொது அரங்கத்தில் அறியப்படாவிட்டாலும் போராட்டத்தின்மீது அதிக சுமையை சுமத்தியிருந்தது என்பதே உண்மை.
2009 மே வரை, முப்பது வருடங்களுக்கு மேலாக, ஒட்டுமொத்த இலங்கைத்தீவின் அசைவாக்கம் முழுவதையும் தமிழரின் போராட்டம் தன் கை வசத்திலேயே வைத்திருந்தது, அந்த நேரங்களில் காலாகாலம் இராணுவச்சமநிலை ஏற்ற இறக்கம் ஏற்பட்டிருந்தாலும் தமிழரின் தலைமையின் பண்பட்ட நெறியாள்கை கொண்ட தனித்தன்மை உலகளாவியரீதியில் வியக்க வைத்திருந்தது, ஆசிய வட்டகைவில் தமிழர்களின் ஆயுதக்கலாச்சார இராணுவ வளர்ச்சி உலக பெரும் வல்லாதிக்கங்களுக்கு கசப்பை ஏற்படுத்தியிருந்தாலும். தமிழர்களின் போராட்டத்திற்கான காரணம் நியாயமானதாகவே உணரப்பட்டதால், சமாதான பேச்சுவார்த்தை என்ற படிநிலைக்கு உலகம் இறங்கி வந்ததையும் காணலாம். ஆனால் அருகில் ஆறரைக்கோடி தமிழர்கள் வாழும் இந்தியாவின் போக்கு அப்படியிருக்கவில்லை. அதன் அடிநாதமான காரணம் தென்னிந்தியத் தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரத்தை ' ஈழத்தமிழரின் தலைமையைப்போல' ஒரு உண்மையான தமிழன் ஆட்சி செய்யாததும் ஒரு காரணமாக இருக்கமுடியும்.
சுதந்திரமடைந்த இந்திய அரசியலுக்கு முன், ஒட்டுமொத்த இந்தியர்களும், இந்தியர்கள் என்ற ஒரே கோசத்தின்கீழ் சுதந்திரப்போராட்டம் முனைப்போடு நடைபெற்றது, அப்போ மொழிவாரியான சுலோகங்கள் தேவைப்பட்டிருக்கவுமில்லை உணரப்படவுமில்லை, இந்திய மக்களுக்கான சுதந்திரம் மட்டுமே தேவையாக இருந்த காலம் அது, சுதந்திரத்தின் பின் மொழி-இன வாரியான வளர்ச்சியை நோக்கி மக்கள் நகர்ந்தபோதுதான் மொழிவாரியாக மானிலங்கள் பிரிந்துகொள்வதினால், அதிக வளர்ச்சியடையமுடியும் என்பதை மக்கள் உணர்ந்து கொண்டனர், பிற்பாடு தமிழ்நாடு பிரிந்த காலத்தில்கூட தமிழர்கள் தம்மை தாமே ஆளவேண்டுமென்று அம்மக்கள் அதிக முனைப்புக்காட்டவில்லை, பிறப்பால் வேற்று மொழிவழி பிறந்தவராக இருந்தாலும் அன்று சுதந்திர போராட்டத்தின் பால் சமூகத்தில் நன்கு அறியப்பட்ட தமிழ் தெரிந்த அரசியல் அறிவுள்ள திராவிட தலைவர்களிடம் தம்மை வழிநடத்த தமிழர்கள் மறுப்புத்தெரிவிக்கவில்லை.
காரணம் அன்று தமிழர்கள் அதிகமானோர் அரசியலறிவு பெற்றிருக்காத பாமரராக இருந்ததாலும், அரசியலின் ஆழ நீழம் தெரியாததாலும், பிரித்தானிய எச்சத்தில் மிஞ்சியிருந்த நிர்வாக நடைமுறைக்கு ஆங்கிலப்புலமை தேவைப்பட்டதாலும், ஈவேரா பெரியார் ராஜகோபாலாச்சாரியார் போன்ற வேற்று மொழிக்காரர்கள் தமிழர்களை வழிநடத்த முன்வந்தபோது அவர்களது புலமை அவர்களுக்கு வழிவிட்டு தலைவர்களாக்கியது வரலாறு.
தொடர்ந்து வந்த முத்துவேல் தெட்சணாமூர்த்தி என்ற (கருணாநிதி), மருதூர் கோபால மேனன் ராமச்சந்திரன். என்ற (எம்ஜீஆர்) அடுத்து வந்த கோமள வள்ளி என்ற இயற்பெயரைக்கொண்ட ஜெ.ஜெயலலிதா, இவர்கள் முறையே தெலுங்கு, மலயாளம், கன்னடம், ஆகியவற்றை தாய் மொழியாகக் கொண்டவர்கள், இதில் எம் ஜீ ஆர் அவர்களும் ஜெயலலிதாவும் தாம் வேற்று மொழிக்காரர் என்பதை தீர்க்கமாக மறுக்க முயற்சிக்காவிட்டாலும் கருணாநிதி நீண்டகாலமாக தன்னை யார் என இனங்காட்டிக் கொள்ளாமல் எந்தக்கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகிறார். ஆனாலும் அவர் தெலுங்கை தாய் மொழியாகக்கொண்டவர் என்றே அதிகமானோர் நம்பியிருந்தபோதும், அவர் தமிழராக இருக்குமோ என்ற சந்தேகம் எல்லோரிடமும் இருந்ததுண்டு. அந்தச் சந்தேகத்தை தீர்க்கும் பொருட்டு சமீபத்தில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பங்கெடுத்துக்கொண்டபோது, தமிழ்ப்பற்றாளரான நடிகர் ராஜேஸ், அவர்கள் தோழர் தியாகு, அவர்களின் முன்னிலையில் கருணாநிதி தெலுங்கர் தான் என்பதை ஆதார பூர்வமாக சந்தேகமற தெளிவு படுத்தியிருந்தார்.
பிறப்பால் தமிழரல்லாத தமிழை பேச்சு மொழியாக கொண்டவர் என்பதால்த்தான் தெலுங்கரான ஈவே ராமசாமி பெரியார் அவர்களால், தமிழ்நாட்டில் தமிழை முன்னிறுத்தி தமிழர் முன்னேற்றக்கழகம் என்று ஒரு கட்சியை ஆரம்பிக்க முடியாமல். பொதுவாக திராவிட முன்னேற்றக்கழகம், என்ற பெயரில் கட்சியை ஆரம்பிக்க முடிந்தது, திராவிட இன மக்களை பிரித்துப்பார்க்காத திராவிட நலன்பேணும் ஒருகட்சியாக அக்கட்சி தொடர்ந்து இருந்து வருகிறது, அண்மை காலங்களில் காவிரி, கிருஷ்ணா நீர்ப்பிரச்சினை தலைதூக்கி மக்கள் கொதிப்படைந்து கிளர்ந்தபோதும் கருணாநிதியோ, ஜெயலலிதாவோ, அதிக அசைவியக்கமில்லாமல் போக்குக்காட்டி மௌனம் சாதிப்பதைக்காணலாம், காரணம் தாம் தமிழர்கள் அல்லாதவர்கள் என்பதாலும் அவர்களது தாய் மொழித் தெலுங்கு கன்னட மக்கள் தம்மை தமிழர்களிடையே காட்டிக்கொடுத்து விடுவார்களோ என்றபயமும், தாம் தமிழர் இல்லை என்று தெரியவரும்போது தமிழ்நாடு தம்மை பிரித்துப்பார்க்க தொடங்கிவிடும், என்பதை அவர்கள் உள்ளூர நன்கு உணர்ந்தே இருக்கின்றனர், கருணாநிதி மக்கள் மத்தியில் பேசும்போது அடிக்கடி கூறும் வார்த்தை, ""நாம் திராவிடர்கள் என்பதை உணர்ந்து, அதை மறக்காமல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்""என்று உள் நோக்கத்துடன் திராவிடம் என்ற பதத்தை காப்பாற்ற மறப்பதில்லை.
நித்திரையாகக் கிடப்பவனை தட்டி எழுப்பமுடியும், நித்திரைபோல் பாசாங்கு செய்பவனை எழுப்புவதற்கு பல வழிகளை கைக்கொள்ள வேண்டியிருக்கும், அந்த நடைமுறைதான் இன்று தமிழ்நாட்டின் கட்சித்தலைவர்கள் செய்துகொண்டிருக்கும் அரசியலும் ஆட்சியும் என்பதைக்காணலாம். ஆனாலும் மக்கள் இப்போது சற்று விழிப்பு நிலையடைந்துவிட்டதை காணமுடிகிறது.
படிப்பறிவற்ற பாமர மக்கள் நிறைந்த இந்திய தேசத்தை, இந்த அரசியல்வாதிகளும் சினிமா நடிகர்களும் ஏமாற்றி தமது சுய லாபத்திற்கேற்றாற்போல் சாதகமாக பயன்படுத்த முயன்று கொண்டிருக்கின்றனர், இதன் அடுத்த படிநிலையாக தெலுங்கை தாய்மொழியாகக்கொண்ட சினிமா நடிகரான விஜயகாந்த் மக்களை தன்பக்கம் ஈர்ந்து தமிழக அரசியலில் கணிசமான வெற்றியையும் பெற்றிருக்கிறார், சிலவருடங்களுக்கு முன் சினிமாவில் மிக செல்வாக்குப் பெற்றிருந்த சிவாஜிராவ் என்ற கன்னடக்காரரான ரஜனிகாந்த், சினிமாவில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளுவதற்காக மக்கள்முன் தன்னை ஒரு வித்தியாசமானவராகக் காட்டி அரசியலில் இறங்க அடிகோலியிருந்தார், அந்த நேரம் ஜெயலலிதாவிடம் அடிபட்டு படுதோல்வியில் கிடந்த தந்திரசாலியான கருணாநிதி, ரஜனியை ஏமாற்றி ரஜனியின் செல்வாக்கை தன்வசப்படுத்தி தனது இருப்பை தக்கவைத்துக்கொண்டதை தமிழ்நாடு அறியும்.
எவை எப்படிப்போனாலும் நடப்பு பத்தாண்டுகளில் ஈழப்போராட்டத்தின் பாதிப்புக்காரணமாக தமிழ்நாட்டின் மக்களின் மனநிலையில் நிறையவே மாற்றம் கண்டுள்ளது, தலைவர் பிரபாகரன் அவர்களின் அப்பழுக்கற்ற நேர்மைத் தன்மையும், கற்பனை பண்ணிப்பாற்க முடியாத வீரமும் விவேகமும். மக்களை அவர் வழிநடத்திய விதமும், ஊழல் மோசடிகள் இல்லாத நிர்வாக நடைமுறைகளும், தமிழ்நாட்டின் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் ஈர்ப்புக்கொண்டிருப்பதை காணலாம், அதிகமான தமிழகத்தின் கிராமப்புற மக்களிடையே ஈழத்தலைமை போல ஒரு தலைமை தமக்கு கிடைக்காதா என்ற ஆதங்கம் உள்ளூர எழுந்திருப்பதையும் காணலாம், பலர் தலைவர் பிரபாகரன் அவர்களை தமது மானசீக தலைவராக வரித்துக்கொண்டதும் உண்மை, இவையெல்லாம் குளிர்சாதன அறையில் உட்கார்ந்து கொள்ளையடிக்கும் தெலுங்கு கன்னடத்தலமைகளுக்கு பெருத்த கலக்கத்தை ஏற்படுத்தியதன் விளைவு. புலிகள் பயங்கரவாதிகள் என்று மத்திய ஹிந்தி அரசுடன் இணைந்து பந்தம் பிடிக்க வேண்டிய அவசர தேவை அவர்களுக்கு உறக்கத்திலும் தேவைப்படுகிறது.
மூலத்தை நிர்மூலம் ஆக்கும் வகையில் தமிழ்-இன உணர்வை இந்த அரசியல் வந்தேறிகள் குழிதோண்டிப் புதைக்க முயலுவதும். மக்களை அடக்கு முறைக்குள்ளாக்குவதும் சாதாரணமாக்கப்பட்டிருக்கிறது, மக்களின் அறியாமையையும் வறுமையும் பயன்படுத்தி. இனாம் மூலமாக சோம்பேறிகளாக்கி இந்தக்கூட்டத்தின் மூளைச்சலவை திட்டமும் மக்களை முடிவெடுக்க முடியாமல் தடுமாற வைப்பதும் திட்டமிட்ட செயலாகக் காணலாம், அரசியலில் நல்ல அனுபவம் பெற்றவரான கருணாநிதியின் சந்தற்பவாத கவர்ச்சித்திட்டங்கள், சினிமா தொலைக்காட்சி போன்றவற்றிற்குள் மக்களை தள்ளிவிட்டு சிந்தனையை சிதைப்பதுமுண்டு, மக்களின் அறியாமையையும் வறுமையையும் கருணாநிதி போன்றவர்கள் மிகச்சரியாக பயன்படுத்தி வெற்றி பெற்று விடுகின்றனர்.
இவற்றிலிருந்து மக்களை விடுவிக்க ஆழமான பற்றுறுதி சமூக வளர்ச்சிக்கான தொலைநோக்கான திட்டங்கள் பலரிடமிருந்தாலும், அதிகாரபலம் பணம் உள் நோக்கங்கொண்ட கோரமான தந்தரம் அனைத்தும் கொண்ட அனுபவமிக்க அரசியல்வாதிகளை எளிதில் வென்றுவிடமுடியாத சிக்கலும் உண்டு, இவர்கள் தமது இருப்பை தொடர்வதற்காக தொடர்ந்து தம்மை ஈழப்போராட்டத்தின் நட்புச்சக்தியாக காட்டி, செய்துகொள்ளும் கீழ்த்தரமான அரசியலில் ஈடுபட்டு புனிதராகக்காட்டி மக்களை ஏமாற்றுவதையும் காணலாம், இதனால் ஈழப்போராட்டத்தின் புறநிலை மிகமோசமாக பலவீனப்பட்டுக் கொண்டிருப்பதை காணலாம்.
வரப்போகும் சட்டசபைத்தேர்தலை முன்னிட்டு அரசியல்வாதிகள் பலரும் சமீபத்தில் வெளியிட்ட சில செய்திகள் தலையை கிறுகிறுக்க வைக்கக்கூடியன இவர்களின் செயலுக்கும் வெளியிடும் செய்திகளுக்கும் எதிர்மறையான முரண்பாடு இருந்தாலும் வெட்கமில்லாமல் ஊடகங்களில் கூவித்தள்ளியிருக்கின்றனர், இதில் மிகவும் பெரிய நகைச்சுவை என்னவென்றால் நடக்கமுடியாதவற்றையும் செயற்படுத்த முடியாதவற்றையும் அடிப்படையில் தமது தவறுகளையும் மூடிமறைத்து கூவி தப்பிக்க முற்பட்டிருப்பதைக் காணலாம்; இதனால் சர்வதேச சக்திகள் நியாயமாக செய்ய விளையும் ஈழத்துக்கான அபிவிருத்திகள் கூட இந்த சுயநல அரசியல்வாதிகளின் சுயநலத்திற்கு பலியாகி பூச்சியத்தன்மையை தொடர்ந்து ஈழம் சந்திக்கும் கொடுமையை காணலாம்.
இந்த அரசியல் வியாபாரிகளை பின்பற்றி சினிமா நடிகரான விஜய் கடைசியாக அசினுடன் சோடி போட்டு நடித்து வெளிவந்த தனது திரைப்படமான காவலன் படத்தை ஓட்டுவதற்கு கருணாநிதியின் வழியை பின்பற்றி மீனவர்கள்மீது பாசத்தை பொழிந்து நாகபட்டணத்தில் ஒரு ஆற்பாட்டக்கூட்டம் நடத்தினார். ஸ்ரீலங்கா இராணுவத்தால் இனி தமிழர்களின் மீது விழும் ஒவ்வொரு அடியும், என் மீது விழும் அடி என்றும், சிறீலங்காவை உலக வரைபடத்தில் இருந்து அகற்றுவோம் என்றும், இலங்கை இராணுவத்தினர் என்ன மனிதர்களா இல்லை அரக்கர்களா? நாம் புலிப்பால் குடித்த பரம்பரை, மீனவர்கள் மீது தாக்குதல் தொடர்ந்தால் உலக வரைபடத்தில் இலங்கை காணாமல் போய் விடும் நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட, என்று அசின் நடித்த காவலன் படத்துக்கு தடையில்லா சான்றிதழ் தந்தரமாகப்பெற்றிருக்கிறார், கனவிலும் நடக்கமுடியாத ஒரு நாடக காட்சி வசனத்தை பேசி சினிமாப்பாணியிலான கூத்தை அரசியலாக்கி மக்கள் முன் விஜய் அரங்கேற்றியபோது, மக்கள் ஆரவாரித்து உணர்ச்சி வசப்பட்டதுதான் பரிதாபகரமான தமிழ்நாட்டு அரசியல்.
சென்ற ஆண்டு தமிழர்களின் எதிர்ப்பையும் நடிகர் சங்கத்தின் கட்டுப்பாட்டையும் தூக்கி கடாசிவிட்டு மலயாள தேசத்து சினிமா நடிகை அசின் சல்மான்கானுடன் ஸ்ரீலங்கா தலை நகரில் நடைபெற்ற IFFA,விருது விழாவுக்கு சென்று ராஜபக்க்ஷவின் மகன் நாமலுடனும் கூத்தடித்ததும் பின் ராஜபக்க்ஷவின் மனைவியுடனும் யாழ்ப்பாணம் சென்று கண்சிகிச்சை முகாம் நடத்துகிறேன் என்ற பேரில் பலருக்கு கண் தெரியாமல் போவதற்கு அசின் காரணமாயிருந்ததும், இதுபற்றி உலகளாவிய ரீதியில் தமிழ் சமூகத்தால் கண்டனங்கள் பல வந்திருந்தன. இவற்றை தொடர்ந்து நடிகர்சங்க செயலாளர் ராதாரவி அசினை மன்னிப்பு கேட்கும்படி கேட்டிருந்தார், ஆனால் நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார் அசினுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை விரும்பவில்லை, சரத்குமாரின் பலவீனத்தை பயன்படுத்திய நடிகை அசின், நடிகர் சங்கத்திற்கு கட்டுப்படவுமில்லை. இந்த பின்னணி நன்கு தெரிந்த நிலையில் நடிகர் விஜய் தமிழ்ச்சமூகத்தின் மனநிலையை கணக்கிலெடுக்காமல் அசினை தனக்கு ஜோடியாக்கி காவலன் என்ற படத்தை நடித்திருந்தார். படம் வெளிவரும் சமயம் சுயநலவாதி கருணாநிதியின் குடும்பத்தால் காவலன் படத்துக்கு இடையூறு வந்தபோது விஜய் எடுத்த தற்காப்பு சுயநல ஆயுதம் நாங்கள் புலிப்பால் குடித்த பரம்பரை என்று ஈழப்போராட்டத்தை குடையாகப்பிடித்து போராட்டத்தை கொச்சைப்படுத்தி தப்பித்திருக்கிறார்.
இதே இழிவான செயல்ப்பாடுகளைத்தான் அரசியல் வியாபாரிகளான ராமதாசு, திருமாவளவன், ஆரம்பகாலத்தில் விஜயகாந்த் ஆகியோரும் தமிழ் தேசியத்தின் காப்பரணாக இருக்கவேண்டிய கருணாநிதியும், ஜெயலலிதாவும், செய்து குளிர்காய்ந்துகொண்டிருக்கின்றனர், தமிழ்நாட்டு மக்களிடையே புலிகள் இயக்கத்துக்கிருக்கும் ஆதரவை புரிந்துகொண்ட இந்தக்கூட்டம். அந்த மக்கள் கூட்டத்தை தமக்கு ஆதரவாக்கி, ஓட்டாக மாற்றுவதற்காக ஈழ ஆதரவின் மக்கள் அணிக்கு தாமே தலைமை தாங்குவதாக வேசம் போட்டு நாடகம் ஆடுவதாலேயே தமிழ்நாட்டு மக்களுக்கு தமிழ்த் தேசியத்துக்கான சரியான ஒரு அணியைதெரிவுசெய்து பின்பற்றமுடியாத மயக்கநிலை தொடர்வதைக்காணலாம்.
ஏதாவது ஒருவிதமாக ஒரு மக்கள் சக்தி திரண்டு அரசியல் ரீதியாக போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க விளையும்போது சிவபூசையில் கரடி நுழைந்து நாசமாக்குவதுபோல், எப்படியாவது அதை அழிக்கும் முனைப்போடு அறிக்கைவிடுவதும், பிரித்து மக்கள் சக்தியை சிறு சிறு குழுக்களாக சிதைப்பதையுமே, இந்திய அரசியல்வாதிகள் காலங்காலமாக செய்து சிறுமைப் படுத்திக்கொண்டிருப்பதை காணலாம், இந்த நிலைகாரணமாகவே 2009 இலங்கை இராணுவத்திற்கு இந்தியாவால் நிதி உதவியும், உலகத்தால் தடை செய்யப்பட்ட ஆயுதங்களும் வழங்கி ஒரே மாதத்தில் 1,000,000 மக்களை கொன்று குவிக்க முடிந்தது, கொலை வெறி முடிந்தபின்னும் ஈழத்துக்கு எதிராக அரசியல் ரீதியான தலையீடுகளை செய்து உலக அளவில் ஐநா அரங்கத்திலும் இந்தியா ஸ்ரீலங்கவை காப்பாற்றி தமிழர்களை அவலத்தில் தள்ளியது, அதுபோக ஐநா சபையில் அதிகாரியாக பணியாற்றும் மலயாளியான விஜய் நம்பியார் வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த விடுதலைப்புலிகளின் தலைவர்களை நயவஞ்சகமாக கொல்ல இலங்கை இராணுவத்திற்கு உதவினார் என்று குற்றச்சாட்டும் உறுதியாகியிருக்கிறது.
இவை எல்லாவற்றிற்கும் எழுவாய் எனப்படும் மூலம், தமிழ்நாட்டு அரசியல் வியாபாரிகள் என்பதை பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கத்தேவையில்லை, புலி ஆதரவாளர்கள் என்று தம்மை காட்டிக்கொண்டு ஈழமக்களுக்கு ஆதரவான தமிழ்நாட்டு தமிழர்கள் முன் நாடகமாடி பின் பதவிக்காக ஈழத்துக்கு முழுமுதல் விரோதிகளான திராவிடக்கட்சிகளிடம் சரணடையும் ராமதாஸ், திருமாவளவன், போன்றவர்களும் புலம்பெயர் தேசங்களில் தமது சினிமாக்களை விற்கவேண்டும் என்பதற்காக சினிமாவில் இருந்துகொண்டு மக்களை ஏமாற்றும் சரத்குமார். சூர்யா, கமலகாசன். விஜய் போன்றவர்களுமே ஈழப்போராட்டத்தின் சிதைவுக்கு முக்கிய காரணமானவர்கள், இவர்கள் உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் புரியாமல், தமது வளர்ச்சியை அல்லது தம்முடைய முட்டுக்கட்டைகளை தீர்ப்பதற்காக முழு ஈழ ஆதரவாளரென்று காட்டி தீமூட்டி குளிர்காயாமல், தமது சுய சக்திமூலம் தமது பிரச்சினைகளை தீர்த்துக்கொண்டாலே ஈழத்துக்கு விடுதலை கிடைத்துவிடும்.
கடைசி அலங்கோலமாக புலம்பெயர் ஈழ மக்களிடையேயும் இந்த அரசியல் வியாபாரிகள் ஊடுருவி புலம்பெயர் தமிழர்களையும் குழுநிலைகளாக பிரிப்பதற்கு அமைப்புக்களும் உருவகிக்கொண்டிருப்பதாக தெரியவருகிறது, இவை இந்திய புலனாய்வு பிரிவினரின் சதியோ அல்லது ஈழ/ இந்திய அரசியல்வாதிகளின் கூட்டு கபட திட்டமோ என்று புரியப்படவில்லை, தமிழ்நாட்டில் சரியான ஒன்றிணைக்கக்கூடிய பலமான ஒரே தலைமை ஒன்று உருவாகும்வரை, இந்தக்குளறுபடிகள் தொடரத்தான் செய்யும், இருந்தும் தேசியத்தலைவரின் தீர்க்கமான தொலை நோக்குத் திட்டம் எல்லாவற்றையும் ஈடு செய்யும் என்ற பரி பூரணமான நம்பிக்கை தமிழ்நாட்டு இன-மான-உணர்வு தமிழருக்கும் ஈழத்தமிழருக்கும் உண்டு.
ஈழதேசம் இணையத்திற்காக
கனகதரன்,,
Tuesday, March 1, 2011
இனிக்காத சர்க்காரியா
ராஜேந்தர் சிங் சர்க்காரியா… இந்தப் பெயரில் சர்க்கரை இருந்தாலும், கருணாநிதிக்கு இந்தப் பெயர் வேப்பங்காயாகவே கசக்கும். கருணாநிதியின் ஊழல்களையும், அவர் ஊழல் செய்யும் முறைகளையும், மிகச் சிறப்பான புலனாய்வு அதிகாரிகளைக் கொண்டு ஆராய்ந்து, கருணாநிதியின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றிய பெருமை, இந்த நீதிபதி சர்க்காரியாவையே சாரும்.
அந்த சர்க்காரியா கமிஷனின் அறிக்கை ஒரு அரசு ஆவணமாகும். வழக்கமான அரசு ஆவணங்கள், தவறாமல் இருக்கக் கூடிய இடங்கள், சென்னை கன்னிமரா நூலகம், ஆவணக்காப்பகம், தலைமைச் செயலக நூலகம் மற்றும் சட்டப் பேரவை நூலகம். இந்த அத்தனை இடங்களிலும் இந்த நூல் திடீரென்று காணாமல் போவது தற்செயல் நிகழ்வாக எடுத்துக் கொள்ள முடியுமா ? ஆனால் இதுதான் நடந்துள்ளது. என்னதான் நடந்துள்ளது என்று சென்னை கன்னிமரா நூலகத்தில் விசாரித்த போது, தலைமைச் செயலகத்தில் அமைச்சர் அலுவலகத்தில் இருந்து அனைத்து நகல்களும் வாங்கிச் செல்லப் பட்டு விட்டன என்ற தகவல் தெரிய வந்தது. யார் வாங்கிச் சென்றார்கள் என்று கேட்டால், ‘மினிஷ்டர் ஆபீஸ்லேர்ந்து வாங்கிகினு போனாங்க சார்… அத்தோட அவ்ளோதான்….’ என்று கூறினார்.
இது போல ஆவணங்களை மறைப்பதன் மூலம், வரலாற்றை திரித்து, உத்தம சீலர் வேஷம் போட நினைக்கிறார் கருணாநிதி. ஆனால் கருணாநிதியின் கணக்கை பொய்யாக்க வேண்டாமா ? சவுக்கும் அதன் வாசகர்களும், பெரிய தில்லாலங்கடி இல்லையா ? சாம்பிளுக்காக ஒரே ஒரு பகுதி மட்டும், என் அன்பு சவுக்கு வாசகர்களுக்காக இதோ…..
தர்மாம்பாள் என்ற அல்லது இராஜாத்தி என்னும் திருமதி தர்மா தென்னாற்காடு மாவட்டத்தில் ஸ்ரீமுஷ்ணத்தில் திருமதி சிவபாக்கியம் அம்மாளுக்குப் பிறற்த கடைசி மகள் ஆவார். திருமதி சிவபாக்கியம் அம்மாள் முதலில் கருப்பையா நாடார் என்பவரை மணந்தார். அவர் மரணத்திற்குப் பின்னர் ஸ்ரீமுஷ்ணத்தைச் சேர்ந்த முத்துக்குமாரசாமி நாடார் என்பவரை மறுமணம் செய்து கொண்டார். இரண்டாவது திருமணத்திற்குப் பின்னர் அவருக்கு இராஜலட்சுமி, சுப்ரமணியம், தர்மா என்ற மூன்று பிள்ளைகள் பிறந்தனர். இரண்டாவது கணவரும் இறந்து விட்டார். அதன் பின்னர் சிவபாக்கியம் அம்மாள் அந்த கிராமத்தை விட்டு சிதம்பரம் வந்து அங்கு தன் மூன்று பிள்ளைகளுடன் தங்கியிருந்தார். அதன் பிறகு அவர் தனது இருப்பிடத்தை சென்னைக்கு மாற்றிக் கொண்டார். அவர் வசதியான நிலையில் இல்லை. அவருடைய மூன்று குழந்தைகளில் யாரும் தொடக்கக் கல்வியைத் தவிர உயர்கல்வி படிக்க முடியவில்லை. சென்னையில் சிவகாக்கியமும் அவர் குழந்தைகளும், இராயப்பேட்டையில் 62, முத்துமுதலி தெருவில் உள்ள ஓர் அறையில் தங்கியிருந்தனர். அதற்கு மாதம் ரூ.18 வாடகை கொடுத்து வந்தார். திருமதி தர்மா நாடகத்தில் நடிப்பதை தன் வாழ்க்கைத் தொழிலாக மேற்கொண்டார். அவர் சகோதரர் சுப்ரமணியம் எம்.பி.டி லாரி சர்வீசில் கூலியாக வேலை பார்த்து வந்தார். 1962ல் மயிலாப்பூர், விவேகானந்தா கல்லூரிக்கு எதிரேயுள்ள ஒரு வீட்டை மாதம் ரூ.75 வாடகைக்கு எடுத்துக் கொண்டு அங்கு அவர் குடியேறினர்.
1966ல் “காகிதப்பூ“ என்னும் நாடகத்தில் திருமதி தர்மாவும் திரு.மு.கருணாநிதியும் ஒன்றாக இணைந்து நடித்த போது அவர்கள் இருவரும் சந்திக்க நேரிட்டது. திரு.கருணாநிதி கூறியுள்ளபடி, அவர் திருமதி.தர்மாவை 1966ல் செப்டம்பர் மாதம் 23ந் தேதி சமயச் சார்பற்ற முறையில் (இதுக்குப் பேர்தான் சுயமரியாதைத் திருமணமா ? … கருமம். கருமம்) திருமணம் செய்து கொண்டார். அது முதற்கொண்டு இருவரும் கணவன் மனைவியாகவே வாழ்ந்து வருகின்றனர். 1966ம் ஆண்டு மார்ச் 10ல் திருமதி தர்மா, சென்னை.17, தியாகராய நகரில், 24.A, திருமூர்த்தி தெருவில் மாதம் ரூ.100 வாடகைக்கு வீடு ஒன்றை எடுத்து அதில் வசித்து வந்தார். இந்த வீட்டுக்கான வாடகையை கருணாநிதி கொடுத்து வந்தார். திருமதி தர்மாவுடன் அவர் தாயார், சகோதரர், சகோதரி ஆகியோரும் அதே வீட்டில் வசித்து வந்தனர். திரு கருணாநிதிக்கு 1968ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் நாளில் ஒரு பெண் குழந்தைக் பிறந்தது (அப்போ ஜாதகம் பாத்திருந்தா, ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடியை இந்தப் பிள்ளை ஆட்டையைப் போடும் என்று சொல்லியிருப்பார்களோ… நமக்கு இந்த மேட்டர் தெரிஞ்சுருந்தா அப்போவே ஏதாவது பண்ணியிருக்கலாம் பாஸ்) என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
சென்னை தியாகராய நகர் திருமூர்த்தி தெருவில் உள்ள அவரது வீட்டில் தொலைபேசி ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. திரு கருணாநிதி தர்மாவை பார்க்க அவ்வீட்டிற்கு அடிக்கடி வருவது வழக்கம். அதன் பின்னர் 1969ம் ஆண்டு ஜனவரி மாதம் 20ம் நாளில் திருமதி தர்மா, சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் எண் 9, முதல் குறுக்குத் தெருவில் உள்ள வீட்டை திருமதி ஈ.எல்.விசுவாசம் என்பவரிடமிருந்து 57 ஆயிரத்திற்கு கிரயத்திற்கு வாங்கியதாக கூறப்படுகிறது.
சாம்பிள் எப்பூடி…. ? இதில் ஒரு ஒற்றுமையை கவனித்தீர்களா பாஸ்…. ? கருணாநிதிக்கும் ராஜாத்தி மூன்றாவது மனைவி. ராஜாத்திக்கும் கருணாநிதி மூன்றாவது கணவர். விதியின் இந்த அற்புதமான விளையாட்டைப் பார்த்தால் அழுகை வருகிறது பாஸ். தமிழில் மிக முக்கியமான நாடகத் துறை ஒரு காதலை அரங்கேற்றியிருக்கிறது… அதற்கு போய் பய புள்ளைக என்னமா பேசுறாங்க பாஸ்… அதுவும் இந்த எதிர்க்கட்சிக் காரய்ங்க இருக்காங்களே….
காதல் வயப்பட்டிருக்கும் காதலர்கள், அப்போது வெளியாகியுள்ள திரைப்படங்களில் உள்ள பாடல்களை தங்கள் காதலியிடம் / காதலரிடம் பாடி, மகிழ்வது வழக்கம். இவர்களுக்கு திருமணமானது 1966ம் ஆண்டு. அந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் உள்ள பாடல்களில், இந்த சிறப்பான ஜோடிக்கு பொருத்தமான பாடல் எது என்று சவுக்கு ஆராய்ந்ததில், முகராசி படத்தில் இடம் பெற்ற, இந்தப் பாடலே மிக மிக பொருத்தமாக இருக்கிறது.
“எனக்கும் உனக்கும் தான் பொருத்தம்..
இதில் எத்தனை கண்களுக்கு வருத்தம்…
நம் இருவருக்கும் உள்ள நெருக்கம்….
இதில் யாருக்கு இங்கே கிடைக்கும்…”
60களில் 75 ரூபாய் வாடகைக்கு இருந்த ராஜாத்தி கருப்பையா நாடாராக இருந்து, பின்னர் ராஜாத்தி முத்துக்குமாரசாமி நாடாராக மாறி, தற்போது ராஜாத்தி கருணாநிதியாக இருப்பவருக்கு இன்று எத்தனை சொத்துக்கள் தோழர்களே…..
வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக்ஸ் என்ற பல கோடி ரூபாய் கப்பல் போக்குவரத்து நிறுவனம், சிஐடி காலனி வீடு, பினாமி பெயரில் அண்ணாசாலை வோல்டாஸ் கட்டிடம், ஊட்டியில் 535 ஏக்கர் எஸ்டேட், விலையுயர்ந்த கார், மாட மாளிகை, கூட கோபுரம்…..
என் அன்பு உறவுகளே…. சவுக்கை படிக்கும் நீங்கள் இணையத்தில் எத்தனை வல்லவர்கள் என்பது நன்கு தெரியும்…. உங்களிடம் சவுக்கு உரிமையோடு அன்புக் கட்டளை இடுகிறது. இணையத்தை பயன்படுத்தும் தமிழர் ஒருவர் கூட, இந்த விபரத்தை படிக்காமல் இருக்கக் கூடாது. நகலெடுத்து, அத்தனை பேருக்கும் மெயிலில் இதை அனுப்புங்கள். இறந்து போன ஈழத் தமிழர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி, துரோகிகளை துகிலுரிப்பதுதான். சவுக்கை ஏமாற்ற மாட்டீர்கள் தானே… ?
நன்றி சவுக்கு,