Tuesday, August 16, 2011

>கூத்தாடி குசும்பன்< அங் 2.





>கூத்தாடி குசும்பன்< அங்2.

கூத்தாடி குசும்பன்>:

தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் பிரபலமான ஒரு பத்திரிகையின்,, தாமரை மலர்போன்ற இணையத்தளம் ஒன்று, இந்தியாவின் 65 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒரு நகைச்சுவையான செய்தியை நேற்று வெளியிட்டு திகைக்க வத்திருந்ததுங்க.

அதன் விபரம் பின்வருமாறு, மக்களை மட்டுமல்ல என்னையும் குளப்பத்தில் ஆழ்த்திவிட்டது. உலகின் பெரிய ஜனநாயக நாடாக இந்தியா இருக்கிறது????. விண்வெளி, மருத்துவம், கல்வி, பொருளாதாரம், ராணுவம், அணு சக்தி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் உலகளவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது.????? என்று, இந்த நூற்றாண்டின் பெருத்த நகைச்சுவையாக செய்தி வந்திருந்தது.

இந்தியா வல்லரசு நாடாக உருவாவதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகும். ஏனெனில் வல்லரசாக வேண்டுமெனில் பல்வேறு துறைகளில் நாம் மேலும் வளர்ச்சியடைய வேண்டும். உலகில் தற்போது அமெரிக்கா வல்லரசு நாடாக விளங்குகிறது..... ""சீனா", இந்தியா" உள்ளிட்ட நாடுகள் இந்த நூற்றாண்டில் வல்லரசு நாடாக உருவாகும் என அந்த இணையச்செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

கூ கு>: நகைச்சுவை என்னவென்றால் உலகத்தில் அமெரிக்கா ஒன்றுதான் வல்லரசு நாடு என்பதே அந்த இணையத்தளத்தின் கணிப்பு, உலகத்தில் பிரித்தானியா. பிரான்ஸ். ரஷ்யா. சீனா. அமெரிக்கா. ஆகிய ஐந்து நாடுகள் ஏற்கெனவே வல்லரசாகி பாதுகாப்புச்சபையில் நிரந்தர உறுப்புரிமை பெற்று, வீட்டோ அதிகாரம் கொண்ட நாடுகளாக இருக்கின்றன. வீட்டோ பவர் எனப்படும் நிராகரிக்கும் அதிகாரம் சீனாவுக்கு நீண்டகாலமாகவே இருக்கிறது இதை அறியாமல் சீனா என்கிற ஒரு பெரும் வல்லரசு நாட்டை,. சாதாரணமான இந்திய ஊழல் நாட்டுடன் ஒப்பிடப்பட்டிருந்தது அந்த இணையத்தளச்செய்தி.

கூ கு> உலகத்தின் சனத்தொகையில் இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கிறது என்பது உண்மையே. விண்வெளி, மருத்துவம், கல்வி, பொருளாதாரம், ராணுவம், அணு சக்தி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் உலகளவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது. என்பது இந்தியாவின் அரசியல்வாதிகளின் மன திருப்த்திக்கும் பத்திரிகைகளின் ஆசைக்கும் சொல்லிக்கொள்ளலாமே தவிர உண்மையாகிவிடமுடியுங்களா.

இந்தியா விண்வெளிக்கு அனுப்பிய சந்திராயன் விண்கலம் திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.425 கோடி ஆகும். இருந்தும் இத்திட்டம் பெருத்த வெற்றியளிக்கவில்லை. இந்தியத்திருநாட்டில் ஒருவேளை உணவுக்கு வழியில்லாதவர்கள் 46 கோடி என ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது.

"கான மயிலாட கண்டிருந்த வான் கோழி தானுமதுவாகப் பாவித்து தன் கொல்லாச்சிறகை விரித்தாடினாற் போலவே" என்பதுபோல இந்தியாவின் வாணவேடிக்கைக் கதை இருக்க, ஊழல் இந்தியா எதைச் சாதித்து விடப்போகிறது?

செயற்கைக்கோள்களால் சுனாமியின் அழிவை முன்னறிந்து சொல்ல முடிந்ததா? அந்த நேரத்தில் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களை முன்னறிந்து கூறப் பயன்படும் செயற்கைக் கோள்கள், பருவநிலை மாற்றத்தை முன்னறிவித்து விவசாயிகளுக்குப் பயன்பட்டதுண்டா? குடிநீரோ, கழிப்பிட வசதியோ, கல்வியறிவோ இன்றி கோடிக்கணக்கான மக்கள் வாழும் வறுமை நிறைந்த ஒரு நாட்டில் நிலவுக்கு வாணம் அனுப்பி நானும் விண்ணன் என்று காட்ட முடியுமேதவிர வேறு ஒன்றும் நடக்கப்போவதில்லை.

இந்தியாவின் சில நகரங்களின் மருத்துவ விரிவாக்கம் ஓரளவு நல்லநிலையில் இருந்தாலும், ஏழை பாழைகளுக்கு அவை எட்டாக்கினியாகவே இருந்து வருகிறது.

அத்துடன் அரசியல் முதலாளிகள் எவரும் இந்தியாவில் மருத்துவம் பார்க்க விரும்புவதுமில்லை. கருணா தாத்தாவின் பொண்டாட்டி தயாளு பாட்டி அமெரிக்காவில் மூக்குக்கு மருத்துவம் பார்க்க சென்று வந்திருக்கிறார். திமுக தளபதி? ஸ்ராலின் லண்டனிலும், நடிகர் ரஜினிகாந்த் சிங்கப்பூரிலும்தான் மருத்துவம் பார்க்கின்றனர்.

இந்தியாவில் நல்ல மருத்துவம் இருந்தால் இவர்கள் ஏன் வேறு நாடுகளுக்கு சென்று வைத்தியம் பார்க்கவேண்டும். ஒரு குப்பனுக்கும் சுப்பனுக்கும் பெருத்த ஒரு நோய் பிடித்துக்கொண்டால் மரணத்தை வரவேற்பது தவிர அவர்களுக்கு வேறு வழியுண்டா?. இந்த நிலையில் வல்லரசு,, இது முடியுமுங்களா?

கல்வியும் அதே நிலைதான் ஓடிக்கொண்டிருக்கிறது. பணமுள்ள சில நகரவாசிகள் மட்டும் தமது பிள்ளைகளை, அரசியல் முதலாளிகளின் வர்த்தக கல்விமையங்களில் படிக்க வைக்கலாம். 60 ,70 சத வீதமான கீழ்த்தட்டு மக்கள் கல்விபற்றி அறியாமலே வாழ்ந்து வருகின்றனர்.

பொருளாதாரம் அனைத்தும் சோனியா, கருணா. லல்லு. மாயாவதி. போன்ற அரசியல்வாதிகளின் கைகளிலும் சினிமாகாரர்களிடமும் பெருகி, சுவிஸ் வங்கிகளில் மாண்டுபோய் கிடக்க. மக்களின் வயிற்றுப்பாடு இலவசத்தை நம்பி அவர்களது தலைவிதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பமக, ராமதாசரின் மக்கள் தொல்லைக்காட்சியில் ஒரு காமடி நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதில் மக்கள் மத்தியில் தமிழ் அறிவு சார்ந்த கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஒரு கேள்விக்கும் யாரிடமிருந்தும் சரியான பதில் கிடைக்கவில்லை. அதுதான் தமிழ்நாட்டின் கல்வித்தரம் என்று அந் நிகழ்ச்சி பல்லிழிக்கிறது.

பூடு, எந்த மரத்திலிருந்து கிடைக்கிறது என்ற கேள்விக்கு ஒரு பெண் ஒலிவ் மரத்திலிருந்து கிடைக்கிறது என்று பதிலளிக்கிறார். அந்த நிகழ்ச்சியை நடத்தும் தொல்லைக்காட்சிக்கும் வெட்கமில்லையா என்று எண்ணத்தோன்றுகிறது,

சமச்சீர் புத்தகங்களில் கருணாநிதியின் கழுத்தறுப்புக்களும், கனிமொழியின் சென்னை சங்கமம் விளம்ம்பரங்களும், கவிதை என்ற பெயரில் கலைஞர் குடும்ப தேவாரங்களும் அச்சமூட்டுகின்றன. ஆண்டவன் அருளால் திமுக வுக்கு விடை கொடுக்கப்பட்டு ஜெயலலிதா முதல்வராகி தமிழ்நாட்டை பிணை எடுத்திருக்கிறார் அந்தவகையில் தமிழ்நாட்டைப்பொறுத்து கொஞ்சம் நிம்மதி,

இராணுவத்தை எடுத்துக்கொண்டால் உலகத்தில் அதிக சனத்தொகை கொண்ட ஒரு நாடு என்பதால் மக்கள் வேலை வாய்ப்பை முனைப்பாக்கி இராணுவத்தில் சேர்ந்து எண்ணிக்கையில் இராணுவம் அதிகமாக இருக்கலாம். நவீனமான பலமான இராணுவம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

உதாரணம் 1964 அளவில் சீனாவுடனான போரில் இந்திய இராணுவம் போரில் படுதோல்வியடைந்தது.

1987ல் ஸ்ரீலங்கவுக்கு சென்ற ஐபிகேஎஃவ் என்ற இராணுவ அணி, ஈழத்து பெண்களை கற்பழித்து பொதுமக்களை கொன்றொழித்து சாதனை படைத்ததே தவிர, சண்டையில் விடுதலைப்புலிகளிடம் தோல்வி கண்டே திரும்பியது.

சமீபத்தில் அருணாச்சலப்பிரதேசத்தில் பிரமபுத்திரா அணையை சீனா அமைத்து வருகிறது. அதை எதிர்க்கும் திராணி மண்மோஹன் சிங்கத்திடம் இல்லை. சீனா சொல்லிக்கொடுத்தபடி அணைகட்டுவதால் இந்தியாவுக்கு எந்தப்பங்கமும் இல்லை என்று சீனாவின் ஸ்ரேற்மென்ற் ஐ வழிமொழிந்திருக்கிறார் பாரதப்பிரதமர் மண்மோகன் சிங்கம்!.

தமிழக கடற்பரப்பில் ஸ்ரீலங்கா படையினர் தினம் தினம் அத்துமீறி தமிழக மீனவர்களை சிறைப்பிடிப்பதையும் சுட்டுக்கொல்லுவதையும் பார்த்து வாய் பொத்தி கைகட்டி நிற்கிறது இந்திய அரசு, இப்படியிருக்கும்போது இராணுவம் தன்னிறைவு + வல்லரசு என்பது ஜோக்கா எடுக்காம எப்படீங்க எடுக்க முடியும்,

மொத்தத்தில் இந்தியா என்கிற வறுமைநாடு, ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளுடன் ஒப்பிடும்வையில் இருப்பதை மறுக்க முடியாது.

எப்போ ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான், வல்லரசாகிறதோ அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தியாவும் வல்லரசாகிவிடும். மறுப்பதற்கில்லை. அதற்கு முன் இந்தியாவை வல்லரசாக பார்க்கவேண்டுமென்ற ஒரு ஆசை மக்களுக்கு இருக்குமாகவிருந்தால்.

இப்போ அரசியலில் இருக்கும் அரசியல் ஆடுகளை ஒன்றாக்கி விரட்டி கடலில் தள்ளினால் மட்டும். அப்துல் கலாம் கூறியதுபோல நடக்கவும் கூடும்,

ஏனெனில் இந்தியாவில் வல்லரசுக்கான அனைத்து வளங்களும் இருக்கின்றன. சாக்காட்டு அரசியல் மாற்றம் பெற்றால் அப்துல் கலாம் கூறிய கனவு நனவாகும். கலாம் அவர்களின் வார்த்தைகளை திரும்பவும் மீட்டுப்பார்த்தால் அவர் கூறியிருப்பவையின் கருப்பொருள் இளைஞர்கள் நினைத்தால்! 2020ல் இந்தியா வல்லரசாகும் என்றுதானே கூறியிருக்கிறார்.

அதன் உட்பொருள் இளைஞர்கள் அரசியல் ஆடுகளை விரட்டியடிக்க லத்தியை கையில் எடுக்கவேண்டும் என்பதாகவே படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை வல்லரசுக்கான தகுதி என்பதெல்லாம் இந்திய அரசியல் சாக்கடைவாசிகளிடம் இல்லை மக்கள் கையில்த்தான் உண்டு,

மீண்டும் சந்திப்போம்.

No comments: