Sunday, October 27, 2013

காங்கிரஸ் சுதர்சன நாச்சியப்பனின் கயமையான குதர்க்கம்.‏

இலங்கையில் உள்ள தமிழர்களின் பொருளாதாரம் மேம்பட அங்கு பொதுநலவாய மாநாடு நடைபெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் இந்திய மத்திய தொழில்துறை இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் அரிய கண்டுபிடிப்பு ஒன்றை சமீபத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்த நாச்சியப்பன். ஈழத் தமிழர்களின்  வாழ்வியலின் அடிப்படை யதார்த்தநிலையை கடுகளவுகூட கருத்தில் கொள்ளாமலும், தமிழகமக்கள், மற்றும் தமிழக அரசியற் கட்சிகளின் ஒன்று திரண்டு பொதுநலவாய மாநாடு இலங்கையில் நடத்தக்கூடாது என்று எதிர்த்துவருகின்றனர் என்பதை புரிந்துகொள்ளாதவர்போல, ஆளும் காங்கிரசின் தலைமைக்கு வக்காளத்து வாங்கும் விதமாகவும் இலங்கையின் இனப்படுகொலை சர்வாதிகாரி ராஜபக்‌ஷவுக்கு தனது ஆதரவை தெரிவிக்கும் முகமாகவும் குதர்க்கமாக குளப்பத்தை உண்டாக்கும் நஞ்சுத்தனமான கருத்தை தெரிவித்து திருப்திப்பட்டிருக்கிறார்.

இலங்கையில் கண்டிப்பாக பொதுநலவாய மாநாடு நடைபெற வேண்டும் என்று விரும்புகிறேன். இலங்கையில் ஏராளமான தமிழர்கள் வேலைவாய்ப்புகள் இல்லாமல் தவிக்கின்றனர். இந்தநிலையில் இந்த மாநாடு அங்கு நடைபெற்றால், அவர்களின் பொருளாதார நிலை உயரும் என்று (தனிப்பட்ட முறையில்) அவர் கருதுவதாக அவர் வெளிப்படுத்திய செய்தி சொல்லுகிறது.

துடிக்கத் துடிக்க இனப்படுகொலை நடத்திய ஒரு சர்வாதிகாரியின் தலைமையில் இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் கூட்டு மாநாடு இரண்டு நாட்கள் நடத்தப்படுவதால்  எந்த வகையில் அங்கு அடிமைகளாக உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு வாழும் மக்களுக்கு விமோசனம் கிடைக்கும். என்று நாச்சியப்பன் சொல்லுவது எவருக்கும் புரியாத புதிராகவுள்ளது. 

சர்வதேசத்தினால் இன அழிப்பு குற்றவாளி என்று சுட்டிக்காட்டப்படும் ஒரு மிருகத்தனமான ஆட்சியாளரிடமிருந்து அந்த மக்களுக்கான விடுதலை சுதந்திரத்தைப்பற்றி சிந்திக்கவேண்டிய  தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் பேசும் நாச்சியப்பன் போன்ற அரசியல் வியாதிகள் தமிழர் விரோத காங்கிரஸை நியாயப்படுத்துவதற்காகவும் சொற்ப பதவி சுகத்துக்காக கூட்டிக்கொடுக்கும் செயலில் ஈடுபடுவது அனைவராலும் கண்டிக்கப்படவேண்டிய ஒன்று. 

அடிப்படையில் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் அன்றாடம் அவதியுறும் மக்களுக்கு நாச்சியப்பன் சொல்லுவதுபோல பொதுநலவாய மாநாட்டின் மூலம் வேலைவாய்ப்பு பொருளாதார சுபீட்ஷம் எப்படி ஏற்படும் என்பது தெரியவில்லை.

இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகள் பின்னடைந்திருக்கிறது.  அதை முன்னுக்குகொண்டுவர வேண்டிய பொறுப்பு அரசியல்வாதிகளுக்கு இருக்கிறது. அரசியல்வாதிகளுக்கு நீண்ட பார்வை வேண்டும்.  அதனால் பொதுநலவாய மாநாடு நடத்தப்படவேண்டுமென்ற நாச்சியப்பனின் குதர்க்கம் ஒரு பேச்சுக்கு  நியாயம் என்று கொண்டாலும்,

அடிப்படையை குழி தோண்டி புதைக்கும் விதமான குதற்கமாக கருத்து பகிர்ந்திருக்கும் நாச்சியப்பன் ஏன் மாநாடு நடத்தப்படக்கூடாது என்று உலக மட்டத்தில் ஒரு தரப்பு போராடுகிறது என்பதற்கான விவரணத்தையும்  இனியாவது யாரிடமாவது கேட்டு அறிந்துகொள்ள வேண்டும்.

நாச்சியப்பன் அங்கம் வகிக்கும் ஊழல் காங்கிரஸ் ஆட்சிபுரியும் இந்தியாவில் சுமார் 21 கோடி மக்கள் பசி பட்டினியால் வாடி வருவதாக சமீபத்திய நவ்தான்யா டிரஸ்ட்  என்ற அமைப்பு நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.  இது உலகம் முழுவதும் பசியால் வாடும் மனித இனத்தில் 4 ல் ஒரு பங்கு ஆகும். 

இந்தியாவில் தினமும் சுமார் 20 கோடி பேர் பட்டினி கிடப்பது  இந்தஆய்வில் தெரிய வந்துள்ளது.   தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் 4 பேரில் ஒருவர் பட்டினியால் தவிக்கிறார். பட்டினிக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

நிச்சியமாக இவற்றை நாச்சி இன்னும் அறிந்துகொள்ளவில்லை!.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் பட்டினி கிடப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் 5 கோடியே 70 லட்சம் குழந்தைகள் போதுமான உடல் எடை இல்லாமல் உள்ளனர்.

உலகில் வேறு எந்த நாட்டிலும் இந்த அளவுக்கு எடை குறைவான குழந்தைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசு ஏழை எளியவர்கள் நலனுக்காக பட்ஜெட்டில் 32 ஆயிரத்து 600 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ததாக அறிவிக்கப்பட்டாலும் அரசியல்வாதிகளின் ஊழல் மற்றும் அதிகாரிகளின் முறைகேடுகளினால் ஏழைகள் பலனடையவில்லை.

1991 ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி ஒரு இந்தியனின் உணவு அளவு ஆண்டுக்கு தலா 186 கிலோவாக இருந்தது. 2001,  ம் ஆண்டு இந்த உணவு அளவு 152 கிலோவாக  குறைந்து போனது.

தற்போது உணவுப்பொருட்கள் விலை பல மடங்கு உயர்ந்து விட்டதால் ஏழைகள் சாப்பிடும் உணவு அளவு மேலும் குறைந்துள்ளது. 

இந்தியாவில் மட்டும் சுமார் 21 கோடி மக்கள் பசியால் வாடி வருவதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது உலகம் முழுவதும் பசியால் வாடுபவர்களில் 4 ல் ஒரு பங்கு ஆகும். 

பலகோடி மக்களுக்கான வறுமை ஒழிக்கும் அபிவிருத்திக்கு பத்து இலக்கம் கொண்ட தொகையை ஒதுக்கீடு செய்யும் மத்திய அரசின் ஊழல்கள் மட்டும் ஒவ்வொன்றும் 17,60,00,00,00,000 கோடி என்ற கணக்கில்  பதின்மூன்று பதின்நான்கு இலகம் கொண்டவையாக இருந்து வருகிறது.

ஈழ மக்களின் பசி பட்டிணி வறுமை ஒளிப்பதற்கு அவர் முயலுவாராக இருப்பின் நாச்சியப்பன் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் ஆட்சிசெய்யும் இந்தியாவின் நிலவரத்தை அறிந்து  தனது நாட்டுக்குள் பசி பட்டிணி, வேலை வாய்ப்பு இல்லாமல் வாடும் மக்களுக்கான தீர்வை தனது ஆட்சி தலைவர்களுக்கு தெரிவித்து சீர்செய்து தனது மலத்தை கழுவு சுத்தம் செய்பின் ஈழப்பிரச்சினை போன்ற அவருக்கு புரியாத விடயங்கள் பற்றி உபதேசம் செய்வதே சிறப்பாக இருக்கும்.

நாசியப்பன் போன்ற குதற்கமாக பேசும் அரசியல் வியாதிகளை மக்கள் புறக்கணிக்காதவரை தமிழினத்துக்கே சாபக்கேடுதான்.

 ஊர்க்குருவி.

Tuesday, October 22, 2013

தமிழர்களுக்கான அரசியல் வெற்றிடம் விரைவில் நிரப்பவேண்டும். கைக்கூலிகள் வெளியேற்றப்படவேண்டும்.‏

மூன்று தலைமுறை அரசியல்வாதிகளின் பட்டுணர்ந்த அரசியல் அனுபவம், 65 வருடகால நிமிர்த்திக்கொள்ள முடியாத பௌத்த சிங்கள இனக் குரோதம், மூன்று நான்கு இலட்சத்துக்கு மேலான சட்டத்துக்குட்படாத மனித இனப்படுகொலை, பதினைந்து இருபது இலட்சத்துக்கு மேலான மக்களின் நாடுகடந்த அகதிநிலை, மூன்று இலட்சத்துக்கு மேலான உள்ளூர் அகதிகள்,
கணக்கற்ற காணாமல் போதல், பல பத்தாயிரம் விசாரணையற்ற சிறைவாசம், குறைந்த பட்சம் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்ட தொண்ணூறு ஆயிரம் விதவைகள், சொந்தக் காணியில் கட்டிய வீட்டில் குடியிருக்க முடியாத அவலநிலை, முப்பது ஆண்டுகளுக்கு மேலான ஆயுத போராட்டம், நாற்பதினாயிரத்துக்கு மேலான விடுதலைக்காக உயிர் நீத்த (ஆண், பெண் பிள்ளைகள்) மாவீரர்கள்.

பல பத்து உள்ளூர் அரசியல் ஏமாற்று ஒப்பந்தங்கள் , சர்வதேச நாடுகளின் மத்தியஸ்த பேச்சு வார்த்தைகள், ஐநா, அமெரிக்க, ஐரோப்பிய, இந்திய, யப்பான் வரையிலான தலையீடுகள்.  இன்னும் விடுபட்ட புலுடாக்கள் போக அனைத்தும் நடந்து முடிந்து விட்டன.

கண்தெரியாத சம்பந்தரும், காதுகேளாத விக்னேஸ்வரனும் எதையாவது மீட்டுத்தருவார்கள் என்றால் முதலில் முறிகண்டி பிள்ளையார் கோவிலை மீட்டுத்தரட்டும் என்று கிளிநொச்சியில் சந்தித்த சிலர் கூறக்கேட்டோம்.

அரசியல்வாதி என்பதை தவிர்த்து மேற் குறிப்பிட்ட ஏதாவது ஒன்றில் சம்பந்தமில்லாதவர்கள்தான் இந்த இராசவரோதயம் சம்பந்தன் (திருகோணமலை) அண்ணாநகர் சென்னை தமிழ்நாடு, மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன், 3/1 தயா வீதி, கொழும்பு, கனகசபாபதி விசுவலிங்கம் விக்னேஸ்வரன், புதுக்கடை, கொழும்பு,

அவ்வளவு பட்டுணர்வின் அனுபவத்தில் உயிர் தியாக அற்பணிப்பிலும்,  மாற்றுக்கருத்துக்கு இடமில்லாமல் தீர்மானிக்கப்பட்டு,  வரலாற்று சான்றுகளுடன் தனித் தமிழ் ஈழம் என்று ஒருசேர அறிதியிட்டு விட்டுக்கொடுப்புக்கு எந்த முகாந்திரமும் இல்லையென்ற கொள்கை கொண்ட ஈழ மக்களின் விடுதலைக்கான உண்மைக் குரலை, சர்வதேச மட்டத்தில் ஜனநாயக ரீதியில் ஒலிப்பதற்காக இராசதந்திர தொலைநோக்கு பார்வையுடன், தமிழீழ தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன்,அவர்களால் தமிழர்களின் மிகப்பெரிய அரசியல் வெளியாக எதிர்பார்ப்புடன் 2001ல் உருவாக்கப்பட்டது "தமிழ் தேசியக் கூட்டமைப்பு" என்ற ( இரா சம்பந்தருக்கான அல்ல) ஈழத் தமிழருக்கான அரசியற்கட்சி.

ஆரம்பகாலத்தில் தமிழினத்தின் எதிர்பார்ப்புக்கமைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேசிய கட்டுப்பாடுகளுடன் நகர்த்தப்பட்டாலும் 2009 க்கு பின்னாக காலங்களில்  ஒரு சிலரின் தன்னிச்சையான நடவடிக்கையால் உணர்வுள்ளவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டபின் அனைத்து கட்டுப்பாட்டையும் இழந்து, கொண்ட இலக்குத்தவறி  நிர்ணயிக்கப்பட்ட தமிழர் தாயகத்துக்கான இராசதந்திர அரசியற் செயற்பாட்டிலிருந்து வழுவியிருந்தபோதும், ஒரு இக்கட்டான அரசியல் தருணத்தில் தமிழர்கள் தமது ஒற்றுமையை வெளிப்படுத்தி 2013 செப், வடக்கு மாகாணசபை தேர்தல் மூலம் கடமைக்கு ஒரு முதலமைச்சரை பிரசவித்துவிட்டு அடுத்த நகர்வுகள் பற்றி சிந்திக்கும் முன்னே  கட்சி பல துண்டுகளாக பிளவுபட்டு கம்பீரத்தை இழந்து கிடக்கிறது.

இங்கு இன்னும் ஒரு விடயத்தையும் சுட்டிக்காட்டவேண்டிய தேவை தவிர்க்கமுடியாதவை.  தமிழினத்திற்கும் தமிழர் தேசியத்திற்கும் எதிராக செயற்படும் இராணுவம் ஒரு படியென்றால் இராணுவத்தை  விடவும் ஆபத்தானவர்கள் எதிரிக்கு துணையாக செயற்டும் துரோக குழுக்கள். அப்படித்தான் புளொட், ஈபிடி,பி கருணா குழுக்கள் இலங்கை வரலாற்றில் ஈழத் தமிழ் மக்களின் வாழ்க்கையில் அழியாத களங்கமாக செயற்பட்டு மீண்டிருக்கின்றன.

ஈழப் போராட்டம் பலம்பெறத் தொடங்கிய காலத்திலிருந்து 2009 மே இனப்படுகொலை நடத்தி முடிக்கப்படும்வரை தமிழ் ஈழத்துக்கும் தமிழ் மக்களுக்கும் எதிராக இரவு பகலாக களத்தில் நின்று சிங்களவனின் கூலிப்படையாக ஈனத்தனமாக இராணுவத்துடன் கைகோர்த்து மும்முரமாக செயற்பட்ட  துரோகக்குழுக்கள் என்றால் 1 சித்தாத்தன் தலைமையிலான புளொட், 2, டக்கிளஸ் தலைமையிலானான ஈபீடிபி, 3 வதாக பின்னர் இணைந்துகொண்டது கருணா பிள்ளையான் குழு.

முள்ளிவாய்க்கால் வரை இராஜபக்‌ஷவின் இராணுவம் இனப்படுகொலை நடத்தி முடிக்கப்பட்ட பின்னும், கொலை வன்மம் தீராத புளொட் அமைப்பும் ஈபிடிபி, மற்றும் கருணா குழுவும் சரணடைந்த போராளிகளையும் அவலப்பட்ட மக்களையும் இராணுவத்துக்கு காட்டிக்கொடுத்து வஞ்சம் தீர்க்க தவறவில்லை. சரணடைந்த பெண் போராளிகள் கற்பழிக்கப்பட்டதிலும் இவர்களுக்கு முக்கிய பங்குண்டு. 1980 கள் தொடங்கி இந்திய இராணுவத்துடனும், ஶ்ரீலங்கா ஆட்சியாளர்களுடனும் இணைந்து நின்று முடிந்தவரை ஈழ விடுதலைக்கும், தமிழினத்துக்கும் தமிழ்த் தேசியத்திற்கும் துரோகமிழைத்து  தமிழீழ மக்களுக்கு முடிந்தவரை பின்னடைவுகளை ஏற்படுத்தி மக்களின் அன்றாட வாழ்வை சீரழித்து கப்பம் கடத்தல் படுகொலை ஆகியவைகளையே குறிக்கோளாக கொண்டு வாழ்ந்த புளொட் அமைப்பு இன்று தமிழினத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் தலைவர் சம்பந்தனால் உள்வாங்கப்பட்டு தர்மலிங்கம் சித்தாத்தன் மாகாணசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.. இதன் மூலம் தமிழ்த் தேசியம் நகைப்புக்குள்ளாகியிருக்கிறது.

இதை ஒரு அரசியல் பரிமாண வளர்ச்சி என்று அரசியல் விற்பன்னர்கள் எவராவது நியாயப்படுத்தினால் அவை ஏற்புடையதில்லை கண்டனத்துக்குரியது என்பதே விடுதலை போராட்டத்தையும், மாவீரர்களையும், உயிரினும் மேலான ஈழ தேசியத்தை மதிக்கும் ஒவ்வொரு தமிழனின் கருத்தாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அரசியல் ஒற்றுமை என்பது வேறு வங்குரோத்தை சமன்செய்ய அழுக்குக்களை நியாயப்படுத்த, குப்பை கூழங்களை (துரோகிகளை) உள்வாங்குவதென்பது வேறு. தமிழ்நாடு கருணாநிதியின் அரசியல் அகராதிக்கு அவை சரிப்பட்டு வரலாம். எமக்கு அவை பண்டாரவன்னியனுக்கு கிடைத்த காக்கை வன்னியன், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு கிடைத்த எட்டப்பன் எனக்கொள்ள முடியும். அதற்கான விவரணங்கள் நிறைய எடுத்துக்காட்ட முடியுமென்றாலும் இந்த விடயத்தில் அவை தேவையற்றது.

தமிழ்த் தேசியத்துக்காக ஈடுபாட்டுடன் உயிர் அச்சுறுத்தல் மத்தியிலும் தொடர்ச்சியாக பாடுபட்ட பத்மினி சிதம்பரநாதன், மற்றும் செல்வராஜா கஜேந்திரன் சிவாஜிலிங்கம் ஆகியோர் ஈழமக்களின் உணர்வுகளை கொள்கையாக விட்டுக்கொடுப்பின்றி பிரதிபலித்தபோது அவற்றை பொறுத்துக்கொள்ள முடியாமல் இந்தியாவையும் இலங்கை அரசையும் திருப்திப்படுத்தும் வகையில் உணர்ச்சியுள்ள அவர்களை கட்சியிலிருந்து நீக்கிய சம்பந்தன் தமிழ்த் தேசியத்துக்கு முழு எதிராக செயற்பட்ட ஒட்டுக்குழுவின் தலைவரான சித்தாத்தனை இராச மரியாதையுடன் கட்சிக்குள் உள் வாங்கி மாகாணசபையில் மந்திரி பதவி பெறுமளவுக்கு ஆதிக்கம் செலுத்தும் செல்வாக்குள்ளவராக ஆக்கப்பட்டிருக்கிறார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், சிவாஜிலிங்கம் ஆகியோர் கட்சி வெளியேற்றத்தின் பின்னும் கொள்கைரீதியாக உறுதியாக நின்றதால் இராணுவ புலனாய்வு பிரிவினர் விசாரணைக்கு பலமுறை முகங் கொடுத்துள்ளனர். பத்மினி சிதம்பரநாதன் அவர்களின் வீடு அலுவலகம் வாகனம் ஆகியவை இராணுவ ஒட்டுக்குழுக்களின் கொலைவெறி தாக்குதலுக்குள்ளானது.  சித்தாத்தன் மாகாணசபை மந்திரியாகவிருக்கிறார்.

ஒரு இனத்தின் அரசியல் வழிக் கொள்கைகளை தீர்மானிப்பவைகளாக அந்த இன மக்களின் அன்றாட வாழ்வில் ஏற்படும் அரசியற் தாக்கங்களும் உட்புற சூழல்களும் பெருங் காரணிகளாக இருந்து வருகின்றன அவற்றை மிகச்சரியாக புரிந்து கொண்டு வழிநடத்தும் பொறுப்பு மட்டும் "தெரிவு செய்யப்பட்ட" தலைவர்களுக்கு வழங்கப்படுகிறது, தலைவர்கள் சோரம்போகுமிடத்தில் அல்லது அகலக்கால் வைத்து தாந்தோன்றி தனமாக நடக்குமிடத்து தெரிவு செய்யப்பட்ட தலைவர்கள் எப்போ வேண்டுமானாலும் தூக்கி வீசப்படலாம் "ஆனந்தசங்கரிக்கு நடந்ததுபோல"

வடக்கு மாகாணசபை வெற்றியின் பின் ஒவ்வொரு கட்சிக்காரர்களும் தத்தமது விருப்பத்துக்கேற்ப மறுக்கமுடியாத நியாயங்களை கற்பிதம் செய்துவிட்டு வெவ்வேறு இடங்களில் மாகாணசபை உறுப்பினருக்கான  பதவிப்பிரமாணத்தை செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களது நியாயப்படுத்தலை புறந்தள்ளுவதற்கு  சம்பந்தன் அணியினரால் முடியவில்லை, வாக்களித்த மக்களாலும் குறைசொல்ல முடியாது என்பதும் தெளிவாக தெரிகிறது. கட்சி தலைமையோ வடக்கு மாகாணத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட  முதலமைச்சரோ எவரையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து கருமமாற்ற முடியவில்லை.

ஈற்றில் சமரச நிலைப்பாட்டை தரிசித்து நிற்பதாக படங்காட்டி உரிமைகளை பெறுவோம் உலகத்தரத்துக்கு ஈழப்பிரச்சினையை கொண்டு செல்வோம் என்று வீராப்பு அறிக்கைகள் மட்டும் சம்பந்தனிடமிருந்தும் விக்னேஸ்வரனிடமிருந்தும் பூசி மெழுகி தினமும் வெளிவருகின்றன, (இந்த இடத்தில் உள்ளூர் பழமொழி ஒன்று நினைவுக்கு வருகிறது)  இருந்தும் அவர்கள் கொண்ட கொள்கையில் எந்த மாற்றத்தையும் தோற்றப்படுத்துவதாகத் தெரியவில்லை.நாளை நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்குள் உட்கார்ந்துகொண்டு மாகாணசபை வேறு மத்திய அரசியல் வேறு என்று சம்பந்தர் அறிக்கவிடுவதை எவரும் ஆச்சரியத்தோடு பார்க்கத் தேவையில்லை.

வெளியிலிருந்து எவரும் இப்படியான இக்கட்டை ஏற்படுத்தி விடவில்லை. என்பது மட்டும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.வெளிப்படையாக சொல்வதானால் சம்பந்தர் என்ற ஒற்றை மனிதனின் எதேச்சதிகார நடவடிக்கையால் தமிழர்களின் மிகப்பெரிய ஜனநாயக அரசியல் வெளியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, என்ற கட்சி மட்டுமல்லாது மக்களுக்கான வீரியம் மிக்க சர்வதேசத்துக்கான அரசியலும் துரதிர்ஷ்ட வசமாக ஒரு பின்னடைவை சந்தித்துவிட்டது என்பதை மட்டும் அழிக்க முடியாமல் கறுப்பு பக்கத்தில் வரலாறு பதிவு செய்துவிட்டது.

துரோக கூட்டங்களின் கலப்பில்லாத மாற்று அரசியல் சக்தியொன்று மக்களுக்கான வழிநடத்தலையும் அரசியல் தலைமைத்துவத்தையும் காலதாமதமின்றி ஏற்றுக்கொள்ளவேண்டும்.  அப்படி ஏற்றுக்கொள்ளாதவரை சம்பந்தன், சுமந்திரன், விக்னேஸ்வரன் போன்ற தகுதியற்றவர்களை பிரித்து இனங்காட்ட முடியாது என்பதை தமிழினம் காலம் கடந்து நிச்சியம் புரிந்துகொள்ளும்.

மாகாண சபைக்கான உறுப்புரிமை பெற்ற அனைத்து தரப்பினரும் சுயக் கௌரவம், சம்பிரதாயத்துக்கான குறைந்தபட்ச சமூக நல்லிணக்கம் மற்றும் பதவி பகட்டு போன்றவற்றை மனதில்க்கொண்டு பிரிவினையின் வீரியத்தை வெளியில் காட்டிக்கொள்ளாமல் உள்ளுக்குள் மறைப்பதற்கு முனைந்தாலும் இனி இவர்கள் இணைந்து செயற்படுவது சாத்தியப்படாது என்றே தெரிகிறது. மாகாண சபையின் அமர்வுகள் தொடங்கப்பட்டு இரண்டு மூன்று அமர்வுகளின் பின் ஒட்டுக்குழுக்களின் கூட்டான தமிழரசுக் கட்சி ஒரு பிரிவாகவும் மற்றய கட்சிகள் இன்னொரு பிரிவாகவும் செயற்படப்போவதை நிச்சியம் மாகாணசபை பதிவுசெய்யும் என்பதை பின்னர் நாம் நிச்சியம் காண முடியும்.

இன்றைய நிகழ்வுகள் நிச்சியமாக சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பை பின்தள்ளி தமிழ் தேசியத்தை நேசிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை முற்று முழுதாக  வலுப்படுத்த உதவும். முள்ளிவாய்க்கால் களத்தில் உணர்வுபூர்வமாக சத்தியப்பிரமாணம் எடுத்து மிகத் துடிப்புடன் செயளாற்றிவரும் சிவாஜிலிங்கம் அவர்களும் இதை புரிந்து செயற்படுவார் என்று நம்பலாம். அந்த வேலைத்திட்டம்தான் தேசியக் கூட்டமைப்பில் இன்னும் இருந்துவரும் தேசியவாதிகளை திருத்தி நல்ல நிலைக்கு கொண்டுவர உதவும் மாற்று அணியாக அமையும் அல்லது கூட்டமைப்பை நிராகரிப்பதற்கான சரியான தெரிவாக இருக்கும் என்பதிலும் ஐயப்படத்தேவையில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள் விரிசலை சம்பந்தன் கூட்டாளிகள் தாமதமாக எதிர்பார்த்திருந்தாலும் உணர்வுள்ள ஈழத்தமிழர்கள் அனைவரும் 2009 க்குப்பின் படிப்படியாக எதிர்பார்த்த ஒரு நிலைமைதான் அது.

ஶ்ரீலங்கா ஜனாதிபதி ராஜபக்‌ஷவின் பாராளுமன்ற அமர்வுகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒரே கட்டுக்கோப்புடன் வேற்றுமையை வெளிக்காட்டாமல் இதுவரை உட்கார்ந்தவர்கள் வடக்கு மாகாணசபை மூலம் உருவான பிரிவினையை அடுத்து இனி வரும் பாராளுமன்ற அமர்வுகளில் எப்படியான சிதறலையும் உண்டுபண்ணலாம். தலைவர் சம்பந்தனின் சர்வாதிகார போக்கினால் ஒருசிலர் கூட்டமைப்பிலிருந்து விலகி அரசாங்கத்துடன் இணைந்து தமிழர்களுக்கான தேசிய சேவை செய்யப்போகிறேன் என்று சொன்னாலும் வியப்பதற்கில்லை.  மாறாக இதுவரை மறைமுகமாக ராஜபக்‌ஷவுக்கு  அடிமை சேவகம் புரிந்த சம்பந்தன் இனி வருங்காலங்களில் வெளிப்படையாக ராஜபக்‌ஷ அரசோடு இணைந்து அமைச்சரவையின் பேச்சாளராக வந்தாலும் புதினப்படுவதற்கில்லை.

தமிழ் தேசியக்கூட்டமைப்புக்குள் இவ்வளவு பிச்சல் பிடுங்கல் உண்டாகி மாகாணசபையின் முதலாவது சபை அமர்வுக்கு முன்னரே இப்படியொரு நிலை தோன்றியதையிட்டு அதிர்ச்சியடையாமல் மகிழ்ச்சியடையலாம்.

ஏனென்றால் 2009 க்குப்பின்னர் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் சிந்தனையற்று மிகவும் சின்னத்தனமாக  சிங்கள கைக்கூலியாகி தன்னிச்சையான செயற்பாடுகள், நடத்தைகள் பற்றிய விமர்சனங்கள் ஒன்று இரண்டல்ல. பல தரப்பிலிருந்தும் கணக்கற்ற விமர்சனங்கள் தினமும் உள்நாடு வெளிநாடு என்று பலதரப்பிலிருந்தும் வந்துகொண்டிருந்தன. இருந்தும் சம்பந்தன் அவர்கள் எதுபற்றியும் கவலைப்படவில்லை. ஏதோ ஒரு கணக்கை தன்னுள் வைத்துக்கொண்டு எதற்கும் கவலைப்படாமல் இந்திய+ மகிந்த தாளத்துக்குள் வீழ்ந்து கிடந்தார்.

1970 களின் யாழ் மேயர் அரல்பிரட் துரையப்பாவின் அரசியல் வழிக்குள் சம்பந்தன் இறங்கியிருக்கிறார் என்றே நிலவரங்கள் அச்சப்பட வைக்கின்றன.

ஒன்றில் மட்டும் சம்பந்தன் உறுதியாக இருந்தார், இருக்கிறார். போராட்டத்தோடு சம்பந்தப்பட்ட எவரையும் கட்சிக்குள் முன்னணியில் வைத்திருக்க அவர் விரும்பவில்லை. போராட்டத்தோடு சம்பந்தப்பட்டவர்களாக இருப்பின் அவர்கள் வடக்கு கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும், எனவே வடக்கு கிழக்கு மாகாண அங்கத்துவத்தை கட்சிக்குள் இருந்து அகற்றி, அல்லது முக்கியத்துவத்தை குறைத்து கொழும்பை வாழ்விடமாகக் கொண்ட சுமந்திரனை தனது வலதுகரமாக்கிக் கொண்டார், விடுதலைப்போராட்டத்துடன் சம்பந்தமுள்ளவர்களை வெளிநாட்டு பயணங்களின்போதும் அரசாங்க தரப்பு விவதங்களின்போதும் சம்பந்தன் அருகில் வைத்துக்கொள்ளவில்லை. அதன் தொடர்ச்சியாக முதலமைச்சருக்கான வேட்பாளர் தெரிவும் போராட்டத்துடன் சம்பந்தமில்லாத சிங்கள சம்பந்தியான விக்கினேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டார்.

தமிழரசு கட்சியின் மூத்தவரான மாவை சேனாதிராசா இவையனைத்தையும் எப்படி எடுத்துக்கொண்டார் என்பதும் இன்னும் பகிரங்கமாகவில்லை ஆனால் மாவை அவர்களின் மௌனம் மக்களிடையே மிகப்பெரிய சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது. போராட்டத்துடன் நிறைய சம்பந்தப்பட்டவரான ஶ்ரீதரனும் சம்பந்தரின் வித்தைக்குள் கட்டுப்பட்டு நடப்பவராகவே பார்க்கப்படுகிறது.

இன்று மாகாணசபையின் கல்வி கலாச்சார அமைச்சராக தெரிவு செய்யப்பட்டிருப்பவர் தம்பிராஜா குருகுலராஜா, அவர் கிளிநொச்சி மாவட்டத்தை பிறப்பிடமாக கொண்டவர், முரசுமோட்டை கிராமத்திலுள்ள நவஜீவனம் என்ற கிறிஸ்துவ மடத்தின் வாரிசு. போராட்டத்தை அணுவணுவாக முற்று முழுதாக உணர்ந்தவர் கிளிநொச்சி மாவட்ட பாஊ ஶ்ரீதரனின் தெரிவாகவே த குருகுலராஜா அவர்கள் மாகாணசபைக்கு உள்வாங்கப்பட்டிருக்கலாம். அடுத்து அனந்தி,  அனந்தி அவர்களும் முற்று முழுதாக போராட்டப்பின்னணியிலிருந்து மாகாணசபைக்கு உள்வாங்கப்பட்டவர். இவர்களுக்கு நாம் போராட்டம் பற்றி பாடம் புகட்டவேண்டும் என்பதில்லை என்பதே இந்தப் பதிவின் முழு நம்பிக்கை.

இருந்தும் அவர்களின் நிறம் என்ன என்பதை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்ப்பது தவிர்க்க முடியாதது.

இனப்படுகொலையாளி (ராஜபக்‌ஷ) முன்னிலையில் விக்னேஸ்வரன் வட மாகாண முதலமைச்சராக பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டபோது அதிகமான உறுப்பினர்கள் பங்குபற்றவில்லை,

ராஜபக்‌ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ளும்போது உணர்ச்சியுள்ள மாகாணசபை உறுப்பினர்கள் பெரும்பாலானவர்கள் சமூகமளிக்க மறுப்பார்கள் என்று தெரிந்துகொண்டு எவரையும் முதலமைச்சரின் சத்தியப்பிரமாணத்துக்கு வரவேண்டாம் நீங்கள் பகிஸ்கரிப்பதுபோல் பகிஸ்கரியுங்கள் நாங்கள் ஒரு சம்பிரதாயத்துக்கு கொழும்புக்கு போய் சத்தியப்பிரமாணத்தை பெற்றுக்கொள்ளுகின்றோம் இதன்மூலம் எங்கள் எதிர்ப்பை அரசாங்கத்துக்கு காட்டுவோம் என்று பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டிஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கப்போன சம்பந்தர் அன்ட் கோ தோலுரிக்கப்பட்டுவிட்டது என்பது உண்மை.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்கு வேட்டைக்காக மக்கள் முன் வலியுறுத்தப்பட்ட தேசம், சுயநிர்ணயம், இறைமை என்ற கோசங்கள் அலரி மாளிகையில் சத்தியப்பிரமாணம் செய்யும்போதே அடிபட்டுப்போயிருந்தது, வடக்கு மாகாண சபைக்கான உறுப்பினருக்கான பதவிக்காக கடமைகளையும் வழிவகைகளையும் ஶ்ரீலங்கா ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியல் அமைப்புக்கும் சட்டத்துக்கும் இணங்க இலங்கை குடியரசுக்கு விசுவாசமுள்ளவனாக இருப்பேன் என்றும்,  எனது திறமைக்கு இயன்றவரை இலங்கை ஜனநாயக குடியரசின் அரசியலமைப்பை உறுதியாக போற்றி காப்பேன் என்றும் பயபக்தியுடன் வெளிப்படுத்தி உறுதி செய்கிறேன். என்று விக்னேஸ்வரன் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். பின்னர் இரண்டுநாள் கழித்து தனது முதலமைச்சருக்கான பொறுப்புக்களை உத்தியோக பூர்வமாக விக்னேஸ்வரன் பொறுப்பேற்றுக்கொண்டதாகவும் நிகழ்வுகள் நடைபெற்று முடிந்துவிட்டன.

மாகாணசபைக்கான வேலைத்திட்டங்கள் என்ன என்பது இன்னும் எவருக்கும் தெரியாமலே இருந்து வருகிறது.மாகாணசபைக்கான அதிகாரங்கள் என்னென்ன என்பது பற்றி முதலமைச்சர் முதற்க்கொண்டு எவருக்கும் இன்னும் தெளிவாக்கப்படவில்லை.

இருந்தும் சம்பந்தன் விக்னேஸ்வரன் ஆகியோர் கூறுவதுபோல இந்தியா ஶ்ரீலங்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி எதையாவது பெற்றுக்கொடுத்தால்த்தான் உண்டு. என்ற நிலைதான் மாகாணசபையின் வேலைத்திட்டமாக இருக்கும். மற்றப்படி வழமையாக அரசாங்க அதிபர் மூலம் வடக்குக்கு கிடைக்கப்பெறும் சலுகைகளில் குறிப்பிட்ட அளவை அரசாங்கம் மாகாணசபைக்கு வழங்கும் அவற்றை மாகாணசபை பரிபாலனம் செய்யலாம். என்பது தவிர வேறு புதினம் இப்போதைக்கு இல்லை என்பதே யதார்த்தம்.

ஆனால் ஶ்ரீலங்கா ஜனாதிபதி ராஜபக்‌ஷ சர்வதேச முரண்பாட்டு நெருக்கடியிலிருந்து ஒரு படியை தந்தரமாக தாண்டிவிட்டது என்பது சம்பந்தருக்கும் மகிந்தருக்கும் இந்தியாவுக்கும் நன்கு புரியும்.

ஈழதேசம் செய்திகளுக்காக.

கனகதரன்.

Wednesday, October 9, 2013

Genocide (குற்றப்பரம்பரையின்) தலைமையில் கொமன்வெல்த்! ? (மூன்றாவது கோணல்)"‏ஈழதேசம் செய்தி ஆய்வு"


மாயமானான, 13 வது திருத்த சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த வடக்கு கிழக்கு இணைப்பு இலங்கையில் நீதிமன்றம் ஒன்றின்மூலம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுவிட்டது, 
அடுத்து  காணி அதிகாரங்கள் ஶ்ரீலங்காவின் மத்திய ஆட்சியாளர்கள் மட்டுமே பரிபாலனம் செய்யும் உரித்துடையது என்றும் இலங்கையின் சுப்றீம் கோர்ட் தீர்ப்பு வழங்கிவிட்டது.  இலங்கையின் தேசிய பாதுகாப்பை கருத்தில்க்கொண்டு பொலிஸ் அதிகாரம் எக்காரணம் கொண்டும் மாகாணசபைகளுக்கு வழங்க முடியாது என்று இலங்கை அரசு திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.  இராணுவம் வடக்கு கிழக்கிலிருந்து திரும்ப பெறமுடியாது என்பதை ஐநா அமைப்பை தனது அடி மடிக்குள் வைத்திருக்கும் அமெரிக்காவுக்கும் இலங்கை அரசாங்கம் அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டது.

இந்த நிலையில் அடுத்த மாதம் கொழும்பில் கொமன்வெல்த் அமைப்பின் மாநாடு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

கொமன்வெல்த் தலைவர்களின் கூட்டம் இனப்படுகொலைகளை நடத்திய Genocide  ஒருவர் ஆட்சி செய்யும் ஒரு நாட்டில் நடத்தப்படக்கூட்டாது என்று சர்வதேசத்தில் வல்லமை உள்ள நாடான கனடா,  உட்பட பல சர்வதேச முதன்மை தொண்டரமைப்புக்கள் கடும் எதிர்ப்பு காட்டி வருகின்றன.

இந்தியா மட்டும் எப்பாடு பட்டாவது கொமன்வெல்த் மாநாட்டை Genocide  ராஜபக்‌ஷ தலைமையில் நடத்திவிடவேண்டுமென்று ஒற்றைக்காலில் நிற்கிறது. (அதற்கான உட் காரணங்கள் உண்டு)

பொதுநலவாய தலைவர்களின் மாநாடு ஒரு குற்றப்பரம்பரையின் கீழ் நடத்தப்படக்கூடாது என்பதை உணர்ந்த பொதுநலவாய அமைப்பின் கௌரவ தலைவியான எலிஷபெத் மகாராணி அம்மையார்,  அரசியல் விமர்சனங்களுக்குள் மாட்டிக்கொள்ளாமல் மநாட்டில் பங்குபற்றுவதிலிருந்து  நாகரீகமாக விலகியிருக்கிறார்.

இருந்தும் மனிதக்கழிவுகளுக்குள் பிறப்பெடுத்ததுபோன்ற அரசியல்வாதிகளை தலைவர்களாகக்கொண்ட  இந்தியா எதையும் சட்டை செய்யவில்லை.  

இருந்தும் இந்திய துணைக்கண்டத்தினுள் தமிழ்நாட்டு மக்கள் பொதுநலவாய மாநாடு இலங்கையில் நடத்தப்படக்கூடாது என்று எதிர்த்து குரல் கொடுத்துவருகின்றனர்,  மக்களின் எழுச்சியை எதிர்கொள்ள முடியாது என்று தெரிந்த திமுக கருணாநிதி,.  திருமாவளவன் போன்ற சந்தற்பவாத அரசியல்வாதிகள்கூட இலங்கையில் கொமன்வெல்த் மாநாடு நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்குமளவுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழர் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் தோழர் தியாகு அவர்கள் இலங்கையில் கொமன்வெல்த் மாநாடு நடத்தப்படக்கூடாது என்றும் அப்படி நடத்தப்பட்டாலும் இந்தியா அந்த மாநாட்டில் பங்குபற்றக்கூடாது என்றும் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

அந்த உண்ணாவிரதம் சம்பந்தமாக இந்திய சர்க்கார் எந்த எதிர்வினை கருத்தையும் வெளிவிடாதபோதும் உண்ணாவிரதம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது இலங்கைக்கு சுற்றுலா சென்ற இந்தியாவின் வெளிநாட்டு மந்திரி சல்மான் குர்திஷ் தன்னிச்சையாக கொமன்வெல்த் கூட்டத்தில் தான் பங்குபற்றப்போவதாக அறிவித்துருக்கிறார். (இதிலிருந்து இந்தியா முடிவாக என்ன முடிவில் இருக்கிறது என்பதை எவருக்கும் விளக்கி சொல்லத்தேவையில்லை.)

மறுபுறம்  வட மாகாண சபைக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் உட்பட 13வது திருத்தச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள.  சகல அதிகாரங்களையும் அப்படியே வழங்க வேண்டும் என இந்தியா, இலங்கை அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது என்றும்.   மாகாண சபைக்கான இந்த அதிகாரங்களை பெறுவதற்கான யோசனை ஒன்றை இந்திய அரசின் உதவியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடைபெற இருக்கும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை களமாக பயன்படுத்தி முன்வைக்க திட்டமிட்டுள்ளதாகவும்  அதற்காக  இந்தியாவின் உதவியுடன் கொமன்வெல்த் மாநாட்டை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்றையும் கூட்டமைப்பு முன்னெடுக்க உள்ளதாகவும் அதற்காக இந்தியா கட்டாயம் இலங்கையில் நடைபெற இருக்கும் கொமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளவேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் கனகசபாபதி விஸ்வலிங்கம் விக்கினேஸ்வரன்.  திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.

கூட்டிக்கழித்து பெருக்கிப் பிரித்துப் பார்த்தால் கொமன்வெல்த் மாநாட்டு நிகழ்ச்சி நிரல் அனைத்தும் ஏற்கெனவே திரை மறைவில் இந்திய இலங்கை ஆட்சியாளர்களால் திட்டமிடப்பட்டு விட்டதும் , எதிர்ப்புக்களை முறியடிக்கும் தந்திரமாக,, ஏன் இந்தியா மாநாட்டில் பங்குபற்ற வேண்டும் என்கிற விளக்கத்துக்கான சூத்திர சுருக்கு கயிற்றை தமிழரசு தளபதி சிங்கக்கொடி சம்பந்தன் மூலம் விக்கினேஸ்வரனிடம் கொடுத்துவிட்டு  இந்தியா மறைவுஸ்தானத்தில்  நின்றுகொண்டிருப்பது துல்லியமாக தெரிகிறது.  விக்னேஸ்வரன் அவர்கள் முதலமைச்சருக்கான  மாணிக்க மகுடம் என்று நினைத்து இந்தியாவிடம் வாங்கி சூடியிருப்பது முள்ளு மகுடம் என்பது விரைவில் அனைவரும் அறிவர். இது மாகாண சபையின் பயணத்தில் மூன்றாவது கோணல். 

ஊர்க்குருவி.

Monday, October 7, 2013

விக்கினேஸ்வரன் வடக்கு மாகாணசபை உறுப்பினருக்கான பதவிக்கு சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். (இரண்டாவது கோணல்)‏



இன்று,  07/10/2013 திங்கள் காலை 09 மணிக்கு ஶ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ முன்னிலையில் ஒரு வளர்ப்பு பிராணியின் பௌவியத்துடன் வடக்கு மாகாண (முதலமைச்சராக)  உறுப்பினராக  திரு விக்னேஸ்வரன் வாக்கிய பஞ்சாங்கப்படி காலை 08 மணியிலிருந்து 09 1/2 வரையிலான எமகண்டத்தில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.  பதவி ஏற்பின்போது தமிழ் தரப்பாக ஒட்டுக்குழு தளபதிகள் டக்ளஸ் தேவானந்தா, புளொட் சித்தார்த்தன், முன்னிலை வகித்தனர்.  பின் வரிசையில் சிங்கக்கொடி சம்பந்தன், தமிழ் காங்கிரஸுலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட அப்பாத்துரை வினாயகமூர்த்தி ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்.
 
விக்கினேஸ்வரனின்  குடும்ப உறவினர்களான வாசுதேவ நாணயக்கார மைத்திரிபால சிறிசேன,   ஆகியோர் கைலாகு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்

 சத்தியப்பிரமாணத்தின்போது வடக்கு மாகாணத்து முதலமைச்சருக்கான சத்தியப்பிரமாணமாக விக்னேஸ்வரன் எந்த இடத்திலும் கடுகளவும் காட்டிக்கொள்ளவில்லை.

மாறாக ஶ்ரீலங்கா ஜனாதிபதியை திருப்திப்படுத்தும் வகையில்  ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியல் அமைப்புக்கும் சட்டத்துக்கும் இணங்க இலங்கை குடியரசுக்கு விசுவாசமுள்ளவனாக இருப்பேன் என்றும்,  எனது திறமைக்கு இயன்றவரை இலங்கை ஜனநாயக குடியரசின் அரசியலமைப்பை உறுதியாக போற்றி காப்பேன் என்றும்,  பயபக்தியுடன் வெளிப்படுத்தி உறுதி செய்கிறேன் என்று தனதும்,  தனது தலைவர் சம்பந்தனாரின்  உள்ளுணர்வின் உண்மையை வெளிப்படுத்தி  ராஜபக்‌ஷவுக்கு உண்மையாக இருப்பேன் என்பதை மட்டும் முன்னிறுத்தி சத்தியப்பிரமாணம் செய்திருந்தார்.

வடக்கு மாகாண சபைக்கு விசுவாசமுள்ளவனாக இருப்பேன் என்றோ,  தமிழ் மக்களின் வாழ்வை வளம்படுத்த பாடுபடுவேன் என்றோ, குறைந்த பட்ஷம்  தமிழ் மக்களுக்கான சேவையை  வடக்கு மாகாண சபை மூலம் முதலமைச்சராக இருந்து இயன்றவரை பணியாற்றுவேன் என்றோ வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக பொறுப்பேற்கின்றேன் என்றோ விக்னேஸ்வரன் உச்சரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

வடக்கு மாகாண சபைக்கான உறுப்பினருக்கான பதவிக்கான கடமைகளையும் வழிகளையும் ஶ்ரீலங்கா ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியல் அமைப்புக்கும் சட்டத்துக்கும் இணங்க இலங்கை குடியரசுக்கு விசுவாசமுள்ளவனாக இருப்பேன் என்றும்,  எனது திறமைக்கு இயன்றவரை இலங்கை ஜனநாயக குடியரசின் அரசியலமைப்பை உறுதியாக போற்றி காப்பேன் என்றும் பயபக்தியுடன் வெளிப்படுத்தி உறுதி செய்கிறேன் என்று சத்தியப்பிரமாணம் செய்யப்பட்டிருந்தது.

வடக்கு மாகாணத்துக்கான தேர்தலில் வாக்கு கேட்டபோது மாவிரர்களையும்,  போராட்டத்தையும் சுய நிர்ணய உரிமை பற்றி பேசிய விக்னேஸ்வரன்.  இன்று துரோக கூட்டங்களான டக்ளஸ், சித்தாத்தன் ஆகியோர் முன்னிலையில் வடக்கு மாகாண உறுப்பினருக்கான பதவிக்காக என்று பம்மியது இரண்டாவது கோணலாக வரலாற்றில் பதிவு செய்யப்படுகிறது.

ராஜபக்‌ஷவுக்கு தமது எதிர்வினையை துணிவுடன் தேர்தலில் காட்டிய மக்கள் விக்கி சம்பந்தனாரின் திருகுதாளங்களுக்கு அடுத்து வரும்காலங்களில் சரியான பதிலடியை கொடுப்பார்கள் என்பதில் எவரும் ஐயப்படத்தேவையில்லை.


ஊர்க்குருவி.