Wednesday, October 9, 2013

Genocide (குற்றப்பரம்பரையின்) தலைமையில் கொமன்வெல்த்! ? (மூன்றாவது கோணல்)"‏ஈழதேசம் செய்தி ஆய்வு"


மாயமானான, 13 வது திருத்த சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த வடக்கு கிழக்கு இணைப்பு இலங்கையில் நீதிமன்றம் ஒன்றின்மூலம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுவிட்டது, 
அடுத்து  காணி அதிகாரங்கள் ஶ்ரீலங்காவின் மத்திய ஆட்சியாளர்கள் மட்டுமே பரிபாலனம் செய்யும் உரித்துடையது என்றும் இலங்கையின் சுப்றீம் கோர்ட் தீர்ப்பு வழங்கிவிட்டது.  இலங்கையின் தேசிய பாதுகாப்பை கருத்தில்க்கொண்டு பொலிஸ் அதிகாரம் எக்காரணம் கொண்டும் மாகாணசபைகளுக்கு வழங்க முடியாது என்று இலங்கை அரசு திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.  இராணுவம் வடக்கு கிழக்கிலிருந்து திரும்ப பெறமுடியாது என்பதை ஐநா அமைப்பை தனது அடி மடிக்குள் வைத்திருக்கும் அமெரிக்காவுக்கும் இலங்கை அரசாங்கம் அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டது.

இந்த நிலையில் அடுத்த மாதம் கொழும்பில் கொமன்வெல்த் அமைப்பின் மாநாடு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

கொமன்வெல்த் தலைவர்களின் கூட்டம் இனப்படுகொலைகளை நடத்திய Genocide  ஒருவர் ஆட்சி செய்யும் ஒரு நாட்டில் நடத்தப்படக்கூட்டாது என்று சர்வதேசத்தில் வல்லமை உள்ள நாடான கனடா,  உட்பட பல சர்வதேச முதன்மை தொண்டரமைப்புக்கள் கடும் எதிர்ப்பு காட்டி வருகின்றன.

இந்தியா மட்டும் எப்பாடு பட்டாவது கொமன்வெல்த் மாநாட்டை Genocide  ராஜபக்‌ஷ தலைமையில் நடத்திவிடவேண்டுமென்று ஒற்றைக்காலில் நிற்கிறது. (அதற்கான உட் காரணங்கள் உண்டு)

பொதுநலவாய தலைவர்களின் மாநாடு ஒரு குற்றப்பரம்பரையின் கீழ் நடத்தப்படக்கூடாது என்பதை உணர்ந்த பொதுநலவாய அமைப்பின் கௌரவ தலைவியான எலிஷபெத் மகாராணி அம்மையார்,  அரசியல் விமர்சனங்களுக்குள் மாட்டிக்கொள்ளாமல் மநாட்டில் பங்குபற்றுவதிலிருந்து  நாகரீகமாக விலகியிருக்கிறார்.

இருந்தும் மனிதக்கழிவுகளுக்குள் பிறப்பெடுத்ததுபோன்ற அரசியல்வாதிகளை தலைவர்களாகக்கொண்ட  இந்தியா எதையும் சட்டை செய்யவில்லை.  

இருந்தும் இந்திய துணைக்கண்டத்தினுள் தமிழ்நாட்டு மக்கள் பொதுநலவாய மாநாடு இலங்கையில் நடத்தப்படக்கூடாது என்று எதிர்த்து குரல் கொடுத்துவருகின்றனர்,  மக்களின் எழுச்சியை எதிர்கொள்ள முடியாது என்று தெரிந்த திமுக கருணாநிதி,.  திருமாவளவன் போன்ற சந்தற்பவாத அரசியல்வாதிகள்கூட இலங்கையில் கொமன்வெல்த் மாநாடு நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்குமளவுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழர் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் தோழர் தியாகு அவர்கள் இலங்கையில் கொமன்வெல்த் மாநாடு நடத்தப்படக்கூடாது என்றும் அப்படி நடத்தப்பட்டாலும் இந்தியா அந்த மாநாட்டில் பங்குபற்றக்கூடாது என்றும் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

அந்த உண்ணாவிரதம் சம்பந்தமாக இந்திய சர்க்கார் எந்த எதிர்வினை கருத்தையும் வெளிவிடாதபோதும் உண்ணாவிரதம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது இலங்கைக்கு சுற்றுலா சென்ற இந்தியாவின் வெளிநாட்டு மந்திரி சல்மான் குர்திஷ் தன்னிச்சையாக கொமன்வெல்த் கூட்டத்தில் தான் பங்குபற்றப்போவதாக அறிவித்துருக்கிறார். (இதிலிருந்து இந்தியா முடிவாக என்ன முடிவில் இருக்கிறது என்பதை எவருக்கும் விளக்கி சொல்லத்தேவையில்லை.)

மறுபுறம்  வட மாகாண சபைக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் உட்பட 13வது திருத்தச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள.  சகல அதிகாரங்களையும் அப்படியே வழங்க வேண்டும் என இந்தியா, இலங்கை அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது என்றும்.   மாகாண சபைக்கான இந்த அதிகாரங்களை பெறுவதற்கான யோசனை ஒன்றை இந்திய அரசின் உதவியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடைபெற இருக்கும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை களமாக பயன்படுத்தி முன்வைக்க திட்டமிட்டுள்ளதாகவும்  அதற்காக  இந்தியாவின் உதவியுடன் கொமன்வெல்த் மாநாட்டை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்றையும் கூட்டமைப்பு முன்னெடுக்க உள்ளதாகவும் அதற்காக இந்தியா கட்டாயம் இலங்கையில் நடைபெற இருக்கும் கொமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளவேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் கனகசபாபதி விஸ்வலிங்கம் விக்கினேஸ்வரன்.  திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.

கூட்டிக்கழித்து பெருக்கிப் பிரித்துப் பார்த்தால் கொமன்வெல்த் மாநாட்டு நிகழ்ச்சி நிரல் அனைத்தும் ஏற்கெனவே திரை மறைவில் இந்திய இலங்கை ஆட்சியாளர்களால் திட்டமிடப்பட்டு விட்டதும் , எதிர்ப்புக்களை முறியடிக்கும் தந்திரமாக,, ஏன் இந்தியா மாநாட்டில் பங்குபற்ற வேண்டும் என்கிற விளக்கத்துக்கான சூத்திர சுருக்கு கயிற்றை தமிழரசு தளபதி சிங்கக்கொடி சம்பந்தன் மூலம் விக்கினேஸ்வரனிடம் கொடுத்துவிட்டு  இந்தியா மறைவுஸ்தானத்தில்  நின்றுகொண்டிருப்பது துல்லியமாக தெரிகிறது.  விக்னேஸ்வரன் அவர்கள் முதலமைச்சருக்கான  மாணிக்க மகுடம் என்று நினைத்து இந்தியாவிடம் வாங்கி சூடியிருப்பது முள்ளு மகுடம் என்பது விரைவில் அனைவரும் அறிவர். இது மாகாண சபையின் பயணத்தில் மூன்றாவது கோணல். 

ஊர்க்குருவி.

No comments: