மூன்று தலைமுறை அரசியல்வாதிகளின் பட்டுணர்ந்த அரசியல் அனுபவம், 65
வருடகால நிமிர்த்திக்கொள்ள முடியாத பௌத்த சிங்கள இனக் குரோதம், மூன்று
நான்கு இலட்சத்துக்கு மேலான சட்டத்துக்குட்படாத மனித இனப்படுகொலை,
பதினைந்து இருபது இலட்சத்துக்கு மேலான மக்களின் நாடுகடந்த அகதிநிலை, மூன்று
இலட்சத்துக்கு மேலான உள்ளூர் அகதிகள்,
கணக்கற்ற காணாமல் போதல், பல பத்தாயிரம் விசாரணையற்ற சிறைவாசம், குறைந்த
பட்சம் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்ட தொண்ணூறு ஆயிரம் விதவைகள், சொந்தக்
காணியில் கட்டிய வீட்டில் குடியிருக்க முடியாத அவலநிலை, முப்பது
ஆண்டுகளுக்கு மேலான ஆயுத போராட்டம், நாற்பதினாயிரத்துக்கு மேலான
விடுதலைக்காக உயிர் நீத்த (ஆண், பெண் பிள்ளைகள்) மாவீரர்கள்.
பல பத்து உள்ளூர் அரசியல் ஏமாற்று ஒப்பந்தங்கள் , சர்வதேச நாடுகளின் மத்தியஸ்த பேச்சு வார்த்தைகள், ஐநா, அமெரிக்க, ஐரோப்பிய, இந்திய, யப்பான் வரையிலான தலையீடுகள். இன்னும் விடுபட்ட புலுடாக்கள் போக அனைத்தும் நடந்து முடிந்து விட்டன.
கண்தெரியாத சம்பந்தரும், காதுகேளாத விக்னேஸ்வரனும் எதையாவது மீட்டுத்தருவார்கள் என்றால் முதலில் முறிகண்டி பிள்ளையார் கோவிலை மீட்டுத்தரட்டும் என்று கிளிநொச்சியில் சந்தித்த சிலர் கூறக்கேட்டோம்.
அரசியல்வாதி என்பதை தவிர்த்து மேற் குறிப்பிட்ட ஏதாவது ஒன்றில் சம்பந்தமில்லாதவர்கள்தான் இந்த இராசவரோதயம் சம்பந்தன் (திருகோணமலை) அண்ணாநகர் சென்னை தமிழ்நாடு, மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன், 3/1 தயா வீதி, கொழும்பு, கனகசபாபதி விசுவலிங்கம் விக்னேஸ்வரன், புதுக்கடை, கொழும்பு,
அவ்வளவு பட்டுணர்வின் அனுபவத்தில் உயிர் தியாக அற்பணிப்பிலும், மாற்றுக்கருத்துக்கு இடமில்லாமல் தீர்மானிக்கப்பட்டு, வரலாற்று சான்றுகளுடன் தனித் தமிழ் ஈழம் என்று ஒருசேர அறிதியிட்டு விட்டுக்கொடுப்புக்கு எந்த முகாந்திரமும் இல்லையென்ற கொள்கை கொண்ட ஈழ மக்களின் விடுதலைக்கான உண்மைக் குரலை, சர்வதேச மட்டத்தில் ஜனநாயக ரீதியில் ஒலிப்பதற்காக இராசதந்திர தொலைநோக்கு பார்வையுடன், தமிழீழ தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன்,அவர்களால் தமிழர்களின் மிகப்பெரிய அரசியல் வெளியாக எதிர்பார்ப்புடன் 2001ல் உருவாக்கப்பட்டது "தமிழ் தேசியக் கூட்டமைப்பு" என்ற ( இரா சம்பந்தருக்கான அல்ல) ஈழத் தமிழருக்கான அரசியற்கட்சி.
ஆரம்பகாலத்தில் தமிழினத்தின் எதிர்பார்ப்புக்கமைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேசிய கட்டுப்பாடுகளுடன் நகர்த்தப்பட்டாலும் 2009 க்கு பின்னாக காலங்களில் ஒரு சிலரின் தன்னிச்சையான நடவடிக்கையால் உணர்வுள்ளவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டபின் அனைத்து கட்டுப்பாட்டையும் இழந்து, கொண்ட இலக்குத்தவறி நிர்ணயிக்கப்பட்ட தமிழர் தாயகத்துக்கான இராசதந்திர அரசியற் செயற்பாட்டிலிருந்து வழுவியிருந்தபோதும், ஒரு இக்கட்டான அரசியல் தருணத்தில் தமிழர்கள் தமது ஒற்றுமையை வெளிப்படுத்தி 2013 செப், வடக்கு மாகாணசபை தேர்தல் மூலம் கடமைக்கு ஒரு முதலமைச்சரை பிரசவித்துவிட்டு அடுத்த நகர்வுகள் பற்றி சிந்திக்கும் முன்னே கட்சி பல துண்டுகளாக பிளவுபட்டு கம்பீரத்தை இழந்து கிடக்கிறது.
இங்கு இன்னும் ஒரு விடயத்தையும் சுட்டிக்காட்டவேண்டிய தேவை தவிர்க்கமுடியாதவை. தமிழினத்திற்கும் தமிழர் தேசியத்திற்கும் எதிராக செயற்படும் இராணுவம் ஒரு படியென்றால் இராணுவத்தை விடவும் ஆபத்தானவர்கள் எதிரிக்கு துணையாக செயற்டும் துரோக குழுக்கள். அப்படித்தான் புளொட், ஈபிடி,பி கருணா குழுக்கள் இலங்கை வரலாற்றில் ஈழத் தமிழ் மக்களின் வாழ்க்கையில் அழியாத களங்கமாக செயற்பட்டு மீண்டிருக்கின்றன.
ஈழப் போராட்டம் பலம்பெறத் தொடங்கிய காலத்திலிருந்து 2009 மே இனப்படுகொலை நடத்தி முடிக்கப்படும்வரை தமிழ் ஈழத்துக்கும் தமிழ் மக்களுக்கும் எதிராக இரவு பகலாக களத்தில் நின்று சிங்களவனின் கூலிப்படையாக ஈனத்தனமாக இராணுவத்துடன் கைகோர்த்து மும்முரமாக செயற்பட்ட துரோகக்குழுக்கள் என்றால் 1 சித்தாத்தன் தலைமையிலான புளொட், 2, டக்கிளஸ் தலைமையிலானான ஈபீடிபி, 3 வதாக பின்னர் இணைந்துகொண்டது கருணா பிள்ளையான் குழு.
முள்ளிவாய்க்கால் வரை இராஜபக்ஷவின் இராணுவம் இனப்படுகொலை நடத்தி முடிக்கப்பட்ட பின்னும், கொலை வன்மம் தீராத புளொட் அமைப்பும் ஈபிடிபி, மற்றும் கருணா குழுவும் சரணடைந்த போராளிகளையும் அவலப்பட்ட மக்களையும் இராணுவத்துக்கு காட்டிக்கொடுத்து வஞ்சம் தீர்க்க தவறவில்லை. சரணடைந்த பெண் போராளிகள் கற்பழிக்கப்பட்டதிலும் இவர்களுக்கு முக்கிய பங்குண்டு. 1980 கள் தொடங்கி இந்திய இராணுவத்துடனும், ஶ்ரீலங்கா ஆட்சியாளர்களுடனும் இணைந்து நின்று முடிந்தவரை ஈழ விடுதலைக்கும், தமிழினத்துக்கும் தமிழ்த் தேசியத்திற்கும் துரோகமிழைத்து தமிழீழ மக்களுக்கு முடிந்தவரை பின்னடைவுகளை ஏற்படுத்தி மக்களின் அன்றாட வாழ்வை சீரழித்து கப்பம் கடத்தல் படுகொலை ஆகியவைகளையே குறிக்கோளாக கொண்டு வாழ்ந்த புளொட் அமைப்பு இன்று தமிழினத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் தலைவர் சம்பந்தனால் உள்வாங்கப்பட்டு தர்மலிங்கம் சித்தாத்தன் மாகாணசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.. இதன் மூலம் தமிழ்த் தேசியம் நகைப்புக்குள்ளாகியிருக்கிறது.
இதை ஒரு அரசியல் பரிமாண வளர்ச்சி என்று அரசியல் விற்பன்னர்கள் எவராவது நியாயப்படுத்தினால் அவை ஏற்புடையதில்லை கண்டனத்துக்குரியது என்பதே விடுதலை போராட்டத்தையும், மாவீரர்களையும், உயிரினும் மேலான ஈழ தேசியத்தை மதிக்கும் ஒவ்வொரு தமிழனின் கருத்தாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அரசியல் ஒற்றுமை என்பது வேறு வங்குரோத்தை சமன்செய்ய அழுக்குக்களை நியாயப்படுத்த, குப்பை கூழங்களை (துரோகிகளை) உள்வாங்குவதென்பது வேறு. தமிழ்நாடு கருணாநிதியின் அரசியல் அகராதிக்கு அவை சரிப்பட்டு வரலாம். எமக்கு அவை பண்டாரவன்னியனுக்கு கிடைத்த காக்கை வன்னியன், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு கிடைத்த எட்டப்பன் எனக்கொள்ள முடியும். அதற்கான விவரணங்கள் நிறைய எடுத்துக்காட்ட முடியுமென்றாலும் இந்த விடயத்தில் அவை தேவையற்றது.
தமிழ்த் தேசியத்துக்காக ஈடுபாட்டுடன் உயிர் அச்சுறுத்தல் மத்தியிலும் தொடர்ச்சியாக பாடுபட்ட பத்மினி சிதம்பரநாதன், மற்றும் செல்வராஜா கஜேந்திரன் சிவாஜிலிங்கம் ஆகியோர் ஈழமக்களின் உணர்வுகளை கொள்கையாக விட்டுக்கொடுப்பின்றி பிரதிபலித்தபோது அவற்றை பொறுத்துக்கொள்ள முடியாமல் இந்தியாவையும் இலங்கை அரசையும் திருப்திப்படுத்தும் வகையில் உணர்ச்சியுள்ள அவர்களை கட்சியிலிருந்து நீக்கிய சம்பந்தன் தமிழ்த் தேசியத்துக்கு முழு எதிராக செயற்பட்ட ஒட்டுக்குழுவின் தலைவரான சித்தாத்தனை இராச மரியாதையுடன் கட்சிக்குள் உள் வாங்கி மாகாணசபையில் மந்திரி பதவி பெறுமளவுக்கு ஆதிக்கம் செலுத்தும் செல்வாக்குள்ளவராக ஆக்கப்பட்டிருக்கிறார்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், சிவாஜிலிங்கம் ஆகியோர் கட்சி வெளியேற்றத்தின் பின்னும் கொள்கைரீதியாக உறுதியாக நின்றதால் இராணுவ புலனாய்வு பிரிவினர் விசாரணைக்கு பலமுறை முகங் கொடுத்துள்ளனர். பத்மினி சிதம்பரநாதன் அவர்களின் வீடு அலுவலகம் வாகனம் ஆகியவை இராணுவ ஒட்டுக்குழுக்களின் கொலைவெறி தாக்குதலுக்குள்ளானது. சித்தாத்தன் மாகாணசபை மந்திரியாகவிருக்கிறார்.
ஒரு இனத்தின் அரசியல் வழிக் கொள்கைகளை தீர்மானிப்பவைகளாக அந்த இன மக்களின் அன்றாட வாழ்வில் ஏற்படும் அரசியற் தாக்கங்களும் உட்புற சூழல்களும் பெருங் காரணிகளாக இருந்து வருகின்றன அவற்றை மிகச்சரியாக புரிந்து கொண்டு வழிநடத்தும் பொறுப்பு மட்டும் "தெரிவு செய்யப்பட்ட" தலைவர்களுக்கு வழங்கப்படுகிறது, தலைவர்கள் சோரம்போகுமிடத்தில் அல்லது அகலக்கால் வைத்து தாந்தோன்றி தனமாக நடக்குமிடத்து தெரிவு செய்யப்பட்ட தலைவர்கள் எப்போ வேண்டுமானாலும் தூக்கி வீசப்படலாம் "ஆனந்தசங்கரிக்கு நடந்ததுபோல"
வடக்கு மாகாணசபை வெற்றியின் பின் ஒவ்வொரு கட்சிக்காரர்களும் தத்தமது விருப்பத்துக்கேற்ப மறுக்கமுடியாத நியாயங்களை கற்பிதம் செய்துவிட்டு வெவ்வேறு இடங்களில் மாகாணசபை உறுப்பினருக்கான பதவிப்பிரமாணத்தை செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களது நியாயப்படுத்தலை புறந்தள்ளுவதற்கு சம்பந்தன் அணியினரால் முடியவில்லை, வாக்களித்த மக்களாலும் குறைசொல்ல முடியாது என்பதும் தெளிவாக தெரிகிறது. கட்சி தலைமையோ வடக்கு மாகாணத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரோ எவரையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து கருமமாற்ற முடியவில்லை.
ஈற்றில் சமரச நிலைப்பாட்டை தரிசித்து நிற்பதாக படங்காட்டி உரிமைகளை பெறுவோம் உலகத்தரத்துக்கு ஈழப்பிரச்சினையை கொண்டு செல்வோம் என்று வீராப்பு அறிக்கைகள் மட்டும் சம்பந்தனிடமிருந்தும் விக்னேஸ்வரனிடமிருந்தும் பூசி மெழுகி தினமும் வெளிவருகின்றன, (இந்த இடத்தில் உள்ளூர் பழமொழி ஒன்று நினைவுக்கு வருகிறது) இருந்தும் அவர்கள் கொண்ட கொள்கையில் எந்த மாற்றத்தையும் தோற்றப்படுத்துவதாகத் தெரியவில்லை.நாளை நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்குள் உட்கார்ந்துகொண்டு மாகாணசபை வேறு மத்திய அரசியல் வேறு என்று சம்பந்தர் அறிக்கவிடுவதை எவரும் ஆச்சரியத்தோடு பார்க்கத் தேவையில்லை.
வெளியிலிருந்து எவரும் இப்படியான இக்கட்டை ஏற்படுத்தி விடவில்லை. என்பது மட்டும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.வெளிப்படையாக சொல்வதானால் சம்பந்தர் என்ற ஒற்றை மனிதனின் எதேச்சதிகார நடவடிக்கையால் தமிழர்களின் மிகப்பெரிய ஜனநாயக அரசியல் வெளியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, என்ற கட்சி மட்டுமல்லாது மக்களுக்கான வீரியம் மிக்க சர்வதேசத்துக்கான அரசியலும் துரதிர்ஷ்ட வசமாக ஒரு பின்னடைவை சந்தித்துவிட்டது என்பதை மட்டும் அழிக்க முடியாமல் கறுப்பு பக்கத்தில் வரலாறு பதிவு செய்துவிட்டது.
துரோக கூட்டங்களின் கலப்பில்லாத மாற்று அரசியல் சக்தியொன்று மக்களுக்கான வழிநடத்தலையும் அரசியல் தலைமைத்துவத்தையும் காலதாமதமின்றி ஏற்றுக்கொள்ளவேண்டும். அப்படி ஏற்றுக்கொள்ளாதவரை சம்பந்தன், சுமந்திரன், விக்னேஸ்வரன் போன்ற தகுதியற்றவர்களை பிரித்து இனங்காட்ட முடியாது என்பதை தமிழினம் காலம் கடந்து நிச்சியம் புரிந்துகொள்ளும்.
மாகாண சபைக்கான உறுப்புரிமை பெற்ற அனைத்து தரப்பினரும் சுயக் கௌரவம், சம்பிரதாயத்துக்கான குறைந்தபட்ச சமூக நல்லிணக்கம் மற்றும் பதவி பகட்டு போன்றவற்றை மனதில்க்கொண்டு பிரிவினையின் வீரியத்தை வெளியில் காட்டிக்கொள்ளாமல் உள்ளுக்குள் மறைப்பதற்கு முனைந்தாலும் இனி இவர்கள் இணைந்து செயற்படுவது சாத்தியப்படாது என்றே தெரிகிறது. மாகாண சபையின் அமர்வுகள் தொடங்கப்பட்டு இரண்டு மூன்று அமர்வுகளின் பின் ஒட்டுக்குழுக்களின் கூட்டான தமிழரசுக் கட்சி ஒரு பிரிவாகவும் மற்றய கட்சிகள் இன்னொரு பிரிவாகவும் செயற்படப்போவதை நிச்சியம் மாகாணசபை பதிவுசெய்யும் என்பதை பின்னர் நாம் நிச்சியம் காண முடியும்.
இன்றைய நிகழ்வுகள் நிச்சியமாக சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பை பின்தள்ளி தமிழ் தேசியத்தை நேசிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை முற்று முழுதாக வலுப்படுத்த உதவும். முள்ளிவாய்க்கால் களத்தில் உணர்வுபூர்வமாக சத்தியப்பிரமாணம் எடுத்து மிகத் துடிப்புடன் செயளாற்றிவரும் சிவாஜிலிங்கம் அவர்களும் இதை புரிந்து செயற்படுவார் என்று நம்பலாம். அந்த வேலைத்திட்டம்தான் தேசியக் கூட்டமைப்பில் இன்னும் இருந்துவரும் தேசியவாதிகளை திருத்தி நல்ல நிலைக்கு கொண்டுவர உதவும் மாற்று அணியாக அமையும் அல்லது கூட்டமைப்பை நிராகரிப்பதற்கான சரியான தெரிவாக இருக்கும் என்பதிலும் ஐயப்படத்தேவையில்லை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள் விரிசலை சம்பந்தன் கூட்டாளிகள் தாமதமாக எதிர்பார்த்திருந்தாலும் உணர்வுள்ள ஈழத்தமிழர்கள் அனைவரும் 2009 க்குப்பின் படிப்படியாக எதிர்பார்த்த ஒரு நிலைமைதான் அது.
ஶ்ரீலங்கா ஜனாதிபதி ராஜபக்ஷவின் பாராளுமன்ற அமர்வுகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒரே கட்டுக்கோப்புடன் வேற்றுமையை வெளிக்காட்டாமல் இதுவரை உட்கார்ந்தவர்கள் வடக்கு மாகாணசபை மூலம் உருவான பிரிவினையை அடுத்து இனி வரும் பாராளுமன்ற அமர்வுகளில் எப்படியான சிதறலையும் உண்டுபண்ணலாம். தலைவர் சம்பந்தனின் சர்வாதிகார போக்கினால் ஒருசிலர் கூட்டமைப்பிலிருந்து விலகி அரசாங்கத்துடன் இணைந்து தமிழர்களுக்கான தேசிய சேவை செய்யப்போகிறேன் என்று சொன்னாலும் வியப்பதற்கில்லை. மாறாக இதுவரை மறைமுகமாக ராஜபக்ஷவுக்கு அடிமை சேவகம் புரிந்த சம்பந்தன் இனி வருங்காலங்களில் வெளிப்படையாக ராஜபக்ஷ அரசோடு இணைந்து அமைச்சரவையின் பேச்சாளராக வந்தாலும் புதினப்படுவதற்கில்லை.

தமிழ்
தேசியக்கூட்டமைப்புக்குள் இவ்வளவு பிச்சல் பிடுங்கல் உண்டாகி மாகாணசபையின்
முதலாவது சபை அமர்வுக்கு முன்னரே இப்படியொரு நிலை தோன்றியதையிட்டு
அதிர்ச்சியடையாமல் மகிழ்ச்சியடையலாம்.
ஏனென்றால்
2009 க்குப்பின்னர் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள்
சிந்தனையற்று மிகவும் சின்னத்தனமாக சிங்கள கைக்கூலியாகி தன்னிச்சையான
செயற்பாடுகள், நடத்தைகள் பற்றிய விமர்சனங்கள் ஒன்று இரண்டல்ல. பல
தரப்பிலிருந்தும் கணக்கற்ற விமர்சனங்கள் தினமும் உள்நாடு வெளிநாடு என்று
பலதரப்பிலிருந்தும் வந்துகொண்டிருந்தன. இருந்தும் சம்பந்தன் அவர்கள்
எதுபற்றியும் கவலைப்படவில்லை. ஏதோ ஒரு கணக்கை தன்னுள் வைத்துக்கொண்டு
எதற்கும் கவலைப்படாமல் இந்திய+ மகிந்த தாளத்துக்குள் வீழ்ந்து கிடந்தார்.
1970
களின் யாழ் மேயர் அரல்பிரட் துரையப்பாவின் அரசியல் வழிக்குள் சம்பந்தன்
இறங்கியிருக்கிறார் என்றே நிலவரங்கள் அச்சப்பட வைக்கின்றன.
ஒன்றில்
மட்டும் சம்பந்தன் உறுதியாக இருந்தார், இருக்கிறார். போராட்டத்தோடு
சம்பந்தப்பட்ட எவரையும் கட்சிக்குள் முன்னணியில் வைத்திருக்க அவர்
விரும்பவில்லை. போராட்டத்தோடு சம்பந்தப்பட்டவர்களாக இருப்பின் அவர்கள்
வடக்கு கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும், எனவே வடக்கு
கிழக்கு மாகாண அங்கத்துவத்தை கட்சிக்குள் இருந்து அகற்றி, அல்லது
முக்கியத்துவத்தை குறைத்து கொழும்பை வாழ்விடமாகக் கொண்ட சுமந்திரனை தனது
வலதுகரமாக்கிக் கொண்டார், விடுதலைப்போராட்டத்துடன் சம்பந்தமுள்ளவர்களை
வெளிநாட்டு பயணங்களின்போதும் அரசாங்க தரப்பு விவதங்களின்போதும் சம்பந்தன்
அருகில் வைத்துக்கொள்ளவில்லை. அதன் தொடர்ச்சியாக முதலமைச்சருக்கான
வேட்பாளர் தெரிவும் போராட்டத்துடன் சம்பந்தமில்லாத சிங்கள சம்பந்தியான
விக்கினேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டார்.
தமிழரசு கட்சியின்
மூத்தவரான மாவை சேனாதிராசா இவையனைத்தையும் எப்படி எடுத்துக்கொண்டார்
என்பதும் இன்னும் பகிரங்கமாகவில்லை ஆனால் மாவை அவர்களின் மௌனம் மக்களிடையே
மிகப்பெரிய சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது. போராட்டத்துடன் நிறைய
சம்பந்தப்பட்டவரான ஶ்ரீதரனும் சம்பந்தரின் வித்தைக்குள் கட்டுப்பட்டு
நடப்பவராகவே பார்க்கப்படுகிறது.
இன்று மாகாணசபையின் கல்வி
கலாச்சார அமைச்சராக தெரிவு செய்யப்பட்டிருப்பவர் தம்பிராஜா குருகுலராஜா,
அவர் கிளிநொச்சி மாவட்டத்தை பிறப்பிடமாக கொண்டவர், முரசுமோட்டை
கிராமத்திலுள்ள நவஜீவனம் என்ற கிறிஸ்துவ மடத்தின் வாரிசு. போராட்டத்தை
அணுவணுவாக முற்று முழுதாக உணர்ந்தவர் கிளிநொச்சி மாவட்ட பாஊ ஶ்ரீதரனின்
தெரிவாகவே த குருகுலராஜா அவர்கள் மாகாணசபைக்கு உள்வாங்கப்பட்டிருக்கலாம்.
அடுத்து அனந்தி, அனந்தி அவர்களும் முற்று முழுதாக
போராட்டப்பின்னணியிலிருந்து மாகாணசபைக்கு உள்வாங்கப்பட்டவர். இவர்களுக்கு
நாம் போராட்டம் பற்றி பாடம் புகட்டவேண்டும் என்பதில்லை என்பதே இந்தப்
பதிவின் முழு நம்பிக்கை.
இருந்தும் அவர்களின் நிறம் என்ன என்பதை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்ப்பது தவிர்க்க முடியாதது.
இனப்படுகொலையாளி
(ராஜபக்ஷ) முன்னிலையில் விக்னேஸ்வரன் வட மாகாண முதலமைச்சராக
பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டபோது அதிகமான உறுப்பினர்கள் பங்குபற்றவில்லை,
ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ளும்போது
உணர்ச்சியுள்ள மாகாணசபை உறுப்பினர்கள் பெரும்பாலானவர்கள் சமூகமளிக்க
மறுப்பார்கள் என்று தெரிந்துகொண்டு எவரையும் முதலமைச்சரின்
சத்தியப்பிரமாணத்துக்கு வரவேண்டாம் நீங்கள் பகிஸ்கரிப்பதுபோல்
பகிஸ்கரியுங்கள் நாங்கள் ஒரு சம்பிரதாயத்துக்கு கொழும்புக்கு போய்
சத்தியப்பிரமாணத்தை பெற்றுக்கொள்ளுகின்றோம் இதன்மூலம் எங்கள் எதிர்ப்பை
அரசாங்கத்துக்கு காட்டுவோம் என்று பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும்
காட்டிஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கப்போன சம்பந்தர் அன்ட் கோ
தோலுரிக்கப்பட்டுவிட்டது என்பது உண்மை.
தேர்தல் விஞ்ஞாபனத்தில்
வாக்கு வேட்டைக்காக மக்கள் முன் வலியுறுத்தப்பட்ட தேசம், சுயநிர்ணயம்,
இறைமை என்ற கோசங்கள் அலரி மாளிகையில் சத்தியப்பிரமாணம் செய்யும்போதே
அடிபட்டுப்போயிருந்தது, வடக்கு மாகாண சபைக்கான உறுப்பினருக்கான பதவிக்காக
கடமைகளையும் வழிவகைகளையும் ஶ்ரீலங்கா ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியல்
அமைப்புக்கும் சட்டத்துக்கும் இணங்க இலங்கை குடியரசுக்கு விசுவாசமுள்ளவனாக
இருப்பேன் என்றும், எனது திறமைக்கு இயன்றவரை இலங்கை ஜனநாயக குடியரசின்
அரசியலமைப்பை உறுதியாக போற்றி காப்பேன் என்றும் பயபக்தியுடன் வெளிப்படுத்தி
உறுதி செய்கிறேன். என்று விக்னேஸ்வரன் சத்தியப்பிரமாணம்
எடுத்துக்கொண்டார். பின்னர் இரண்டுநாள் கழித்து தனது முதலமைச்சருக்கான
பொறுப்புக்களை உத்தியோக பூர்வமாக விக்னேஸ்வரன் பொறுப்பேற்றுக்கொண்டதாகவும்
நிகழ்வுகள் நடைபெற்று முடிந்துவிட்டன.
மாகாணசபைக்கான
வேலைத்திட்டங்கள் என்ன என்பது இன்னும் எவருக்கும் தெரியாமலே இருந்து
வருகிறது.மாகாணசபைக்கான அதிகாரங்கள் என்னென்ன என்பது பற்றி முதலமைச்சர்
முதற்க்கொண்டு எவருக்கும் இன்னும் தெளிவாக்கப்படவில்லை.
இருந்தும்
சம்பந்தன் விக்னேஸ்வரன் ஆகியோர் கூறுவதுபோல இந்தியா ஶ்ரீலங்காவுடன்
பேச்சுவார்த்தை நடத்தி எதையாவது பெற்றுக்கொடுத்தால்த்தான் உண்டு. என்ற
நிலைதான் மாகாணசபையின் வேலைத்திட்டமாக இருக்கும். மற்றப்படி வழமையாக
அரசாங்க அதிபர் மூலம் வடக்குக்கு கிடைக்கப்பெறும் சலுகைகளில் குறிப்பிட்ட
அளவை அரசாங்கம் மாகாணசபைக்கு வழங்கும் அவற்றை மாகாணசபை பரிபாலனம்
செய்யலாம். என்பது தவிர வேறு புதினம் இப்போதைக்கு இல்லை என்பதே யதார்த்தம்.
ஆனால் ஶ்ரீலங்கா ஜனாதிபதி ராஜபக்ஷ சர்வதேச முரண்பாட்டு
நெருக்கடியிலிருந்து ஒரு படியை தந்தரமாக தாண்டிவிட்டது என்பது
சம்பந்தருக்கும் மகிந்தருக்கும் இந்தியாவுக்கும் நன்கு புரியும்.
ஈழதேசம் செய்திகளுக்காக.
கனகதரன்.
No comments:
Post a Comment