இலங்கையில் உள்ள தமிழர்களின் பொருளாதாரம் மேம்பட அங்கு பொதுநலவாய மாநாடு
நடைபெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் இந்திய மத்திய தொழில்துறை
இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் அரிய கண்டுபிடிப்பு ஒன்றை சமீபத்தில்
வெளிப்படுத்தியிருக்கிறார்.
தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து
கொண்டு செய்தியாளர்களை சந்தித்த நாச்சியப்பன். ஈழத் தமிழர்களின்
வாழ்வியலின் அடிப்படை யதார்த்தநிலையை கடுகளவுகூட கருத்தில் கொள்ளாமலும்,
தமிழகமக்கள், மற்றும் தமிழக அரசியற் கட்சிகளின் ஒன்று திரண்டு பொதுநலவாய
மாநாடு இலங்கையில் நடத்தக்கூடாது என்று எதிர்த்துவருகின்றனர் என்பதை
புரிந்துகொள்ளாதவர்போல, ஆளும் காங்கிரசின் தலைமைக்கு வக்காளத்து வாங்கும்
விதமாகவும் இலங்கையின் இனப்படுகொலை சர்வாதிகாரி ராஜபக்ஷவுக்கு தனது ஆதரவை
தெரிவிக்கும் முகமாகவும் குதர்க்கமாக குளப்பத்தை உண்டாக்கும் நஞ்சுத்தனமான
கருத்தை தெரிவித்து திருப்திப்பட்டிருக்கிறார்.
இலங்கையில்
கண்டிப்பாக பொதுநலவாய மாநாடு நடைபெற வேண்டும் என்று விரும்புகிறேன்.
இலங்கையில் ஏராளமான தமிழர்கள் வேலைவாய்ப்புகள் இல்லாமல் தவிக்கின்றனர்.
இந்தநிலையில் இந்த மாநாடு அங்கு நடைபெற்றால், அவர்களின் பொருளாதார நிலை
உயரும் என்று (தனிப்பட்ட முறையில்) அவர் கருதுவதாக அவர் வெளிப்படுத்திய
செய்தி சொல்லுகிறது.
துடிக்கத் துடிக்க இனப்படுகொலை நடத்திய ஒரு
சர்வாதிகாரியின் தலைமையில் இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் கூட்டு மாநாடு
இரண்டு நாட்கள் நடத்தப்படுவதால் எந்த வகையில் அங்கு அடிமைகளாக உரிமைகள்
அனைத்தும் பறிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு வாழும் மக்களுக்கு விமோசனம்
கிடைக்கும். என்று நாச்சியப்பன் சொல்லுவது எவருக்கும் புரியாத
புதிராகவுள்ளது.
சர்வதேசத்தினால் இன அழிப்பு குற்றவாளி என்று
சுட்டிக்காட்டப்படும் ஒரு மிருகத்தனமான ஆட்சியாளரிடமிருந்து அந்த
மக்களுக்கான விடுதலை சுதந்திரத்தைப்பற்றி சிந்திக்கவேண்டிய தமிழ்நாட்டில்
பிறந்து தமிழ் பேசும் நாச்சியப்பன் போன்ற அரசியல் வியாதிகள் தமிழர் விரோத
காங்கிரஸை நியாயப்படுத்துவதற்காகவும் சொற்ப பதவி சுகத்துக்காக
கூட்டிக்கொடுக்கும் செயலில் ஈடுபடுவது அனைவராலும் கண்டிக்கப்படவேண்டிய
ஒன்று.
அடிப்படையில் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் அன்றாடம்
அவதியுறும் மக்களுக்கு நாச்சியப்பன் சொல்லுவதுபோல பொதுநலவாய மாநாட்டின்
மூலம் வேலைவாய்ப்பு பொருளாதார சுபீட்ஷம் எப்படி ஏற்படும் என்பது
தெரியவில்லை.
இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகள்
பின்னடைந்திருக்கிறது. அதை முன்னுக்குகொண்டுவர வேண்டிய பொறுப்பு
அரசியல்வாதிகளுக்கு இருக்கிறது. அரசியல்வாதிகளுக்கு நீண்ட பார்வை
வேண்டும். அதனால் பொதுநலவாய மாநாடு நடத்தப்படவேண்டுமென்ற நாச்சியப்பனின்
குதர்க்கம் ஒரு பேச்சுக்கு நியாயம் என்று கொண்டாலும்,
அடிப்படையை
குழி தோண்டி புதைக்கும் விதமான குதற்கமாக கருத்து பகிர்ந்திருக்கும்
நாச்சியப்பன் ஏன் மாநாடு நடத்தப்படக்கூடாது என்று உலக மட்டத்தில் ஒரு
தரப்பு போராடுகிறது என்பதற்கான விவரணத்தையும் இனியாவது யாரிடமாவது கேட்டு
அறிந்துகொள்ள வேண்டும்.
நாச்சியப்பன் அங்கம் வகிக்கும் ஊழல்
காங்கிரஸ் ஆட்சிபுரியும் இந்தியாவில் சுமார் 21 கோடி மக்கள் பசி
பட்டினியால் வாடி வருவதாக சமீபத்திய நவ்தான்யா டிரஸ்ட் என்ற அமைப்பு
நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இது உலகம் முழுவதும் பசியால்
வாடும் மனித இனத்தில் 4 ல் ஒரு பங்கு ஆகும்.
இந்தியாவில் தினமும்
சுமார் 20 கோடி பேர் பட்டினி கிடப்பது இந்தஆய்வில் தெரிய வந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் 4 பேரில் ஒருவர் பட்டினியால் தவிக்கிறார்.
பட்டினிக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
நிச்சியமாக இவற்றை நாச்சி இன்னும் அறிந்துகொள்ளவில்லை!.
கடந்த
சில ஆண்டுகளாக இந்தியாவில் பட்டினி கிடப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி
உள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் 5 கோடியே 70 லட்சம் குழந்தைகள் போதுமான
உடல் எடை இல்லாமல் உள்ளனர்.
உலகில் வேறு எந்த நாட்டிலும் இந்த அளவுக்கு எடை குறைவான குழந்தைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய
அரசு ஏழை எளியவர்கள் நலனுக்காக பட்ஜெட்டில் 32 ஆயிரத்து 600 கோடி ரூபாயை
ஒதுக்கீடு செய்ததாக அறிவிக்கப்பட்டாலும் அரசியல்வாதிகளின் ஊழல் மற்றும்
அதிகாரிகளின் முறைகேடுகளினால் ஏழைகள் பலனடையவில்லை.
1991 ம் ஆண்டு
கணக்கெடுப்பின்படி ஒரு இந்தியனின் உணவு அளவு ஆண்டுக்கு தலா 186 கிலோவாக
இருந்தது. 2001, ம் ஆண்டு இந்த உணவு அளவு 152 கிலோவாக குறைந்து போனது.
தற்போது உணவுப்பொருட்கள் விலை பல மடங்கு உயர்ந்து விட்டதால் ஏழைகள் சாப்பிடும் உணவு அளவு மேலும் குறைந்துள்ளது.
இந்தியாவில்
மட்டும் சுமார் 21 கோடி மக்கள் பசியால் வாடி வருவதாக சமீபத்திய ஆய்வில்
தெரிய வந்துள்ளது. இது உலகம் முழுவதும் பசியால் வாடுபவர்களில் 4 ல் ஒரு
பங்கு ஆகும்.
பலகோடி மக்களுக்கான வறுமை ஒழிக்கும்
அபிவிருத்திக்கு பத்து இலக்கம் கொண்ட தொகையை ஒதுக்கீடு செய்யும் மத்திய
அரசின் ஊழல்கள் மட்டும் ஒவ்வொன்றும் 17,60,00,00,00,000 கோடி என்ற
கணக்கில் பதின்மூன்று பதின்நான்கு இலகம் கொண்டவையாக இருந்து வருகிறது.
ஈழ
மக்களின் பசி பட்டிணி வறுமை ஒளிப்பதற்கு அவர் முயலுவாராக இருப்பின்
நாச்சியப்பன் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் ஆட்சிசெய்யும் இந்தியாவின்
நிலவரத்தை அறிந்து தனது நாட்டுக்குள் பசி பட்டிணி, வேலை வாய்ப்பு இல்லாமல்
வாடும் மக்களுக்கான தீர்வை தனது ஆட்சி தலைவர்களுக்கு தெரிவித்து
சீர்செய்து தனது மலத்தை கழுவு சுத்தம் செய்பின் ஈழப்பிரச்சினை போன்ற
அவருக்கு புரியாத விடயங்கள் பற்றி உபதேசம் செய்வதே சிறப்பாக இருக்கும்.
நாசியப்பன் போன்ற குதற்கமாக பேசும் அரசியல் வியாதிகளை மக்கள் புறக்கணிக்காதவரை தமிழினத்துக்கே சாபக்கேடுதான்.
ஊர்க்குருவி.
No comments:
Post a Comment