Monday, November 25, 2013
தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன், அவர்களின் ஐம்பத்தொன்பதாவது சூரிய அகவை.
நேரிய கோட்டினில் நிமிர்ந்த நல் உருவாய்
நின்றொரு தாமதம் கண்டிடா நடையாய்
பாரினில் தமிழன் பிறந்ததன் பலனாய்
பக்குவம் கொண்டதோர் சித்திர வடிவாய்
காலத்தின் கட்டளை பெற்றதோர் மகவாய்
கண்ணென கண்ட என் தமிழனின் முதலே.
நீண்டதோர் சன்னதம் கொண்டு நீ துடித்தாய்
நித்திரை துறந் தெங்கள் சந்ததி வளர்த்தாய்
கண்ணென்று தமிழினை காத்தருள் செய்தாய்
காட்டிலும் மேட்டிலும் காவலாய் நின்றாய்
விண்ணள வானதோர் வீரனாய் ஆனாய்
விடுதலைப் புலிகளின் தலைவனே பொருளே.
விண்ணது சிறியது வெல்லுவோம் என்றாய்
வீரத்தின் விளை நிலம் நீயென்று ஆனாய்
கண்ணிலும் பெரிதென கடமையை கொண்டாய்
காற்றிலும் புயலிலும் கலந்து நீ வந்தாய்
தண்மையாம் உன் முகம் சந்திரன் என்றால்
சரி நிகர் வெம்மையில் சூரியன் என்பார்.
ஆண்டொரு நான்கது எங்கு நீ மறைந்தாய்
அற்புத வீரத்தை என்னிடம் ஈர்ந்தாய்
மீண்டொரு நாள் வந்து மீதியை முடிப்பாய்
மிகச்சரி யானதோர் கட்டளை வகுப்பாய்
வேரிலும் மண்ணிலும் விடுதலை என்றாய்
விழி திறந்துன்வழி காத்திருக் கின்றோம்.
மண்ணினை காத்திட மலையென வந்தாய்
மானத்தை உலகம் அறிந்திட வைத்தாய்
நடத்தையில் நீயொரு இலக்கணம் ஆனாய்
நிமிர்ந்து நாம் நடந்திட பெரு வெளியானாய்
பூமியில்த் தமிழொரு புள்ளியாய்க் கொண்டாய்
புதியதோர் சரித்திரத் தலைவனே வாழி.
அகவையும் ஐம்பத் தொன்பதென் றாச்சு
அலைகடல் திரும்பியுன் வழி எதிர்பார்ப்பு
நாவிலும் உயிரிலும் உன் உருவாச்சு
நடை வழி எங்கினும் உன் பெயர் பேச்சு
பூமியில் நீ பிறந் தின்றைய நாளில்
போற்றி நாம் வாழ்த்துவோம் பிறந்த நாளென்று.
ஊர்க்குருவி.
Sunday, November 24, 2013
மலேசியாவில் ஈழத்தமிழர்களின் கலை இசை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
உருவாக்கப்பட்டது: 24 நவம்பர் 2013
24,11, 2013 ஞாயிறு அன்று மலேசியா, கோலாலம்பூர் மகாராஜாலேலே, என்ற இடத்தில் அமைந்திருந்த சைனீஸ் அசெம்பிளி மண்டபத்தில் புலம்பெயர் ஈழத் தமிழ் குழந்தைகள், மற்றும் இளைஞர்களின் கலை இசை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
இந் நிகழ்வை மலேசியா வாழ் இலங்கை தமிழர் அகதிகள் அமைப்பு (STROM) நடாத்தியது. இந் நிகழ்வில் நடனம், பாடல், ஓவியம் வரைதல், போன்ற நிகழ்ச்சிகள் பரீட்சாத்தமாக நடத்தப்பட்டது. முற்று முழுதாக ஈழத்தமிழ் மக்கள் நிகழ்ச்சிகளில் பங்குபற்றினர்.
ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து மலேசியாவில் அகதிகளாக வாழ்ந்தாலும், தமிழ் பெற்றோர்கள் தமது குழந்தைகளை தமிழ் கல்வி மற்றும் கலை போன்றவற்றில் புலனை திருப்புவதே "இலங்கை தமிழர் அகதிகள் அமைப்பு" (STROM) ன் நோக்கம் என்று அந்த அமைப்பினர் தெரிவித்தனர்.
நிகழ்வில் முந்நூறுக்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர். சிறப்பம்ஷமாக மலேசிய இன மக்களும் வந்திருந்து விழாவை சிறப்புற செய்தனர்.
24,11, 2013 ஞாயிறு அன்று மலேசியா, கோலாலம்பூர் மகாராஜாலேலே, என்ற இடத்தில் அமைந்திருந்த சைனீஸ் அசெம்பிளி மண்டபத்தில் புலம்பெயர் ஈழத் தமிழ் குழந்தைகள், மற்றும் இளைஞர்களின் கலை இசை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
இந் நிகழ்வை மலேசியா வாழ் இலங்கை தமிழர் அகதிகள் அமைப்பு (STROM) நடாத்தியது. இந் நிகழ்வில் நடனம், பாடல், ஓவியம் வரைதல், போன்ற நிகழ்ச்சிகள் பரீட்சாத்தமாக நடத்தப்பட்டது. முற்று முழுதாக ஈழத்தமிழ் மக்கள் நிகழ்ச்சிகளில் பங்குபற்றினர்.
ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து மலேசியாவில் அகதிகளாக வாழ்ந்தாலும், தமிழ் பெற்றோர்கள் தமது குழந்தைகளை தமிழ் கல்வி மற்றும் கலை போன்றவற்றில் புலனை திருப்புவதே "இலங்கை தமிழர் அகதிகள் அமைப்பு" (STROM) ன் நோக்கம் என்று அந்த அமைப்பினர் தெரிவித்தனர்.
நிகழ்வில் முந்நூறுக்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர். சிறப்பம்ஷமாக மலேசிய இன மக்களும் வந்திருந்து விழாவை சிறப்புற செய்தனர்.
Monday, November 18, 2013
கொமன்வெல்த் மாநாட்டில் ராஜபக்ஷவை நியாயப்படுத்திய இந்திய வெளியுறவு மந்திரி சல்மான் குர்ஜித்.
பொதுநலவாய
அமைப்பு நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தினை இலங்கையில் தந்தரமாக நடந்தி
முடித்து, பங்குபற்றும் தலைவர்களை தலை கழுவி தன்மீதுள்ள இனப்படுகொலைப்
பழியை தாண்டிவிட முயன்ற ஶ்ரீலங்காவின் ஜனாதிபதி ராஜபக்ஷ மிகப்பெரிய
சர்வதேச பொறியில் சிக்கியிருக்கிறார்.
கொமன்வெல்த் சாரலில் நடந்த, நடந்துகொண்டிருக்கும் விமர்சனங்களுக்கு
ராஜபக்ஷவால் பதிலளிக்க முடியவில்லை. விமர்சனக் கேள்விகள் ஒன்றின்மேல்
ஒன்றாகி உள்ளேயும் வெளியேயும் இடியப்பச் சிக்கலை தோற்றுவித்து நிற்கிறது.
இனப்படுகொலை
சம்பந்தமாக எழுந்திருக்கும் உயர்மட்ட விமர்சனங்கள் பூசி மெழுகி
அமுக்கிவிடக்கூடியதல்ல என்பது மட்டும் அரசியல் தெரியாத என்போன்ற
பதர்களுக்கு புரிகிறது, அதே நிலையையில்தான் இனப்படுகொலை சூத்திரதாரியான
ராஜபக்ஷவும், ராஜபக்ஷவின் இடக்கரம் வலக்கரமான இந்தியாவும் இப்போது
கொண்டுள்ளன என்பதும் அவரவர் பேச்சுக்களிலிருந்து புரியக்கூடியதாக உள்ளது.
கொமன்வெல்த்
மாநாட்டு கூட்டங்களின் முன்னும் பின்னும் இலங்கை மீதும், இலங்கை ஜனாதிபதி
ராஜபக்ஷ மீதும் சுமத்தப்பட்ட நெருக்கடிகளை பூசி மெழுகி களைவதற்கு
கொமன்வெல்த் அமைப்பின் பொதுச்செயலாளர் கமலேஷ் சர்மா, மற்றும் இந்திய வெளி
விவகார அமைச்சர் சல்மான் குர்ஜித்து ஆகியோர் பகீரத பிரயத்தனம்
எடுத்துக்கொண்டுள்ளனர்.
15,ம் திகதிக்கு பிந்திய கொமன் வெல்த்
கூட்டத்திலும் கூட்டம் இல்லாத தனிச்சந்திப்புக்களிலும் பிரிட்டன் பிரதமர்
ராஜபக்ஷவுடன் சற்று கடுமையாகவே பேசிக்கொண்டார் என்றும் பேச்சுவார்த்தைகள்
சாதாரண பேச்சுவார்த்தைபோலல்லாமல் வாக்குவாதம்போல் நடந்ததாகவும் செய்திகள்
சொல்லுகின்றன.
முடிவாக,
1, இலங்கையில் நடைபெற்றுள்ள
போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் தான்
உறுதியுடன் இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமருன் கடுமைபட
கூறியுள்ளார். வரும் மார்ச் மாதத்திற்குள் போர்க் குற்றம் குறித்து
விசாரிக்க உரிய ஏற்பாடுகளை செய்யவில்லை என்றால், சர்வதேச விசாரணை நிச்சயம்
தொடங்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கெமருன் இலங்கைக்கு
எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் போர்க்குற்றங்களை மறைக்க இலங்கை முயற்சி
செய்வது உண்மை என்றும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.
இலங்கை
சுயமான விசாரணை பொறிமுறை ஒன்றை அமைத்து, அதன் இராணுவப் படையினர் மீதுள்ள
போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை கையாள்வதாக உலகுக்குக்
காட்டவேண்டும் அப்படி காட்டினால், அது அது மிகப்பெரிய மாற்றத்தை
ஏற்படுத்தும் என்று பிரிட்டனின் வெளியுறவுச் செயலர் வில்லியம் ஹேக்
கூறியிருக்கிறார்.
2, பிரித்தானியாவின் கருத்தை கொண்டிருந்த கனடா
இலங்கை மண்ணில் மிதிப்பதை பாவமாக உருவகப்படுத்தி கொமன்வெல்த் மாநாட்டில்
கலந்து கொள்ளவில்லை, ஈழ மண்ணில் நடந்த இனப்படுகொலைகள் சர்வதேச
விசாரணைக்குட்படுத்தவேண்டும் என்றும் மனித உரிமை மீறல்கள்
விசாரிக்கப்படவேண்டும் என்றும் திடமான முடிவை கனடா தெரிவித்திருக்கிறது.
அத்துடன்,
மனித
உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க இலங்கை உரிய
நடவடிக்கை எடுத்துள்ளதாக பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர்
கமலேஷ் சர்மா தெரிவித்திருந்த துறை சாராத தலையீட்டுக்கு கனடா பெரும்
அதிருப்தியை வெளியிட்டிருந்தது. சர்மாவின் கருத்து ஏற்றுக்கொள்ளக்
கூடியதல்ல, மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள
நடவடிக்கைகள் போதுமானவையல்ல வடக்கில் மனித உரிமை மீறல்கள் தொடர்ச்சியாக
இடம்பெற்று வருவதாகவும், பொதுநலவாய நாடுகள் அமைப்பு கடமை தவறிச் செயற்பட்டு
வருவதாகவும் கனடா தனது மிகப்பெரிய அதிருப்தியை தெரிவித்துள்ளது..
3,
ஒக செப் மாதங்களில் இலங்கைக்கு விஜயம் செய்து கள நிலவரங்களை நேரில்
பார்வையிட்ட ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்கள் இலங்கையில்
நடந்த இனப்படுகொலைகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் சர்வதேச விசாரணை
தேவை என்று அழுத்தமாக தெரிவித்திருக்கிறார்.
4, பொதுநலவாய
மாநாட்டு இலச்சினையில் “வணக்கம்” என்ற பதத்தை நீக்கிவிட்டு “ஆயுபோவன்”
என்ற சிங்களப் பதத்தை தமிழில் எழுதப்பட்டிருந்தது அது ஏன்? என்று
வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அந்தக் குழு
வில் தான் இல்லை என்று சிறீலங்கா அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா
பதிலளித்தார்.
பொதுநலவாய மாநாட்டு இலட்சினையில் அழகான
தமிழில் “வணக்கம்” என்று எழுதப்பட்டிருந்ததற்கு மேலாக துவேஷ
மனப்பாண்மையில் திட்டமிட்டு சிங்கள வாக்கியமான “ஆயுபோவன்” என்ற சிங்கள
வார்த்தையை தமிழில் எழுதி ஒட்டப்பட்டுள்ளது.
நிலவரங்கள் இப்படி இருக்கும் பட்சத்தில்,
மனித
உரிமைகள் மீறல்கள் தொடர்பில் இலங்கை மீது முன்வைக்கப்பட்டுள்ள பாரிய
குற்றச்சாட்டுக்கள் குறித்து இலங்கை அரசாங்கம் மேற்கெள்ளும் விசாரணைகள்
திருப்தியடைவதாக இந்திய வெளிவவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்
தெரிவித்திருக்கிறார்.
(நகைப்புக்குரியதென்று கருதப்பட்ட) கற்றுக்
கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க அணைக்குழு நியமித்ததன் ஊடாக இலங்கை
அரசாங்கம் சுயாதீன விசாரணையை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.!!
இலங்கையில்
இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய
பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்திருந்த கருத்து பற்றிய கேள்விக்கு
பதிலளித்த சல்மான் குர்ஷித், பிரச்சினைகளுக்கு உடனடியான தீர்வுகளை வழங்க
முடியாது எனவும் வடக்கு, கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும்
வேலைத் திட்டங்களை அரசாங்கம் செயற்படுத்தி வருகிறது. இதற்கு இந்திய
அரசாங்கம் உதவி வருவதாகவும் கூறினார்.
தமிழ் இனமும், சர்வதேசமும்
முரண்பாடாக இருக்கும் விடயமான மனித உரிமைகள் விவகாரம், மற்றும்
இனப்படுகொலை ஆகியவைகளை தொட்டும் பார்க்காமல் அவைகளை தாண்டி அரசியல்
செய்யும் போக்கையே ஶ்ரீலங்கா ஜனாதிபதி முன்னிலைப்படுத்தி வருகிறார், அது
சர்வாதிகார போக்கை வெளிப்படுத்துவதாக சர்வதேச மட்டத்தில் எதிர்ப்பு
கிளம்பியிருக்கிறது,
உச்ச போர்க்காலத்தில் நடந்து முடிந்த சகல
விடயங்களுக்கும் விரிவான சட்ட விசாரணை தேவை என கண்டிப்பான உத்தரவுகள்
பிறக்கத்தொடங்கியிருக்கின்றன.
இப்படியான நற் தருணங்களில் இந்தியா தமிழர்களுக்கு எதிரான தனது சதிவேலையை தொடருவது வழமையானது,
ஒரு
காலகட்டத்தில் ஶ்ரீலங்காவின் இத்தகைய இன விரோதப் போக்கால் தமிழ் இளைஞர்கள்
துப்பாக்கி தூக்கி ஶ்ரீலங்கா அரசாங்கத்துக்கு எதிராக 35 வருடங்களுக்குமேல்
போராட தள்ளப்பட்டனர்.
அதே செயற்பாட்டினை இந்தியாவும் முனைப்பு
காட்டிவருவதால் தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் மற்றும் அரசியற் கட்சிகள்
கொதி நிலையில் இந்திய மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்தி
வருகின்றனர்.
இந்திய மத்திய அரசு அடிப்படையை உணராமல்
மிலேச்சத்தனமான அரசியலில் ஈடுபட்டு ராஜபக்ஷவின் கொள்கையை ஆதரித்து
தமிழர்களை அடிமைப்படுத்த தொடர்ந்து நிர்ப்பந்திக்குமானால் இலங்கையில்
பிறந்த கலகம் போன்ற துரதிர்ஷ்டம் இந்தியாவையும் மையம் கொள்ளலாம்.
ஈழதேசம் செய்திகளுக்காக.
ஊர்க்குருவி.
Saturday, November 16, 2013
கொமன்வெல்த் மாநாடும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமருன், அவர்களின் கண்டனமும்.
இங்கிலாந்து பிரதமர் நேற்றய தினம் யாழ்ப்பாணம் சென்று திரும்பிய
நிகழ்வானது, ஆர்வத்தின் நிமித்தம் உள்ளூர் செய்திகளில் சொல்லிக்கொள்வது
போல ஈழத் தமிழர்களின் வரலாற்றில் பெரிய திருப்பத்தை உண்டுபண்ணி விடும் என
நம்பிவிட முடியவில்லை.
போரினால் பாதிக்கப்பட்ட ஈழத்து தமிழ் மக்களை, பிரித்தானிய பிரதமர்,
சந்தித்து ஈழ மக்களின் கொலனித்துவ கால மற்றும் வரலாற்று சூழல் அடிப்படையை
மனதில் நிறுத்தி நேர்மையுடன் நீதியான முறையில் பிரித்தானிய அரசாங்கத்தின்
ஆதரவை பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு நல்குவார் என்றும், போர்க்குற்றம்
தொடர்பாக பாரபட்சமில்லாமல் இலங்கை அதிபர் ராஜபக்ஷவிடம் முறையான கேள்வி
எழுப்பி, ""இனப்படுகொலை"" (சர்வதேச அரசியல்த் தலைவர்கள்
சொல்லிக்கொள்வதுபோல) யுத்தக்குற்றம் சம்பந்தமாக விசாரணை நடத்தப்படவேண்டும்
என்று அழுத்தம் கொடுப்பார் என்று செய்திகள் வந்தாலும், இதயபூர்வமாக
நம்புமளவுக்கு எந்த நம்பிக்கையும் வெளிப்படவில்லை.
யாழ்ப்பாணம்
சென்ற பிரித்தானிய பிரதமர் கெமருன் அவர்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின்
சுமந்திரனின் வழிகாட்டுதலில் ஒரு சில நலன்புரி நிலையங்களுக்கு
சென்றதாகவும், குறிப்பாக வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை
சந்தித்து தமிழர்களின் அரசியல் முன்னேற்றம் சம்பந்தமாகவும் பேச்சுவார்த்தை
நடத்தியதாகவும் தெரிகிறது.
அவை தவிர,
இதுபோன்ற
சர்வதேச தலையீடுகள் உண்டாகும் தருணங்களில் மக்களிடையே உண்டாகும் பொதுவான
எதிர்பார்ப்பும், ஏதாவது மாற்றம் நிகழாதா என்ற மக்களின் அதீத ஆதங்கமும்
அவற்றை குலைக்கவேண்டாமே என்ற உள்ளூர் ஊடகங்களின் செய்திகளும் ஒரு மாயமான
தோற்ப்பாட்டை உண்டுபண்ணி முடிந்திருக்கிறது என்பதே உணரக்கிடைக்கிறது.
இன்று
16 ,11 2013 சனிக்கிழமை தனது உரையை முடித்துக்கொண்டு பிரித்தானிய பிரதமர்
நாடு திரும்பிவிட்டார். அவர் நாளைய நிகட்சிகளில் கலந்து கொள்ளாமல் அவசரமாக
புறப்பட்டதும் கூட சர்வதேச அரங்கில் இலங்கைக்கு சொல்லப்பட்ட ஒரு
செய்தியாகவே சித்தரிக்கப்படுகிறது.
பிரித்தானியாவின் பிரதமர்
டேவிட் கெமருன் யாழ் மண்ணில் இருக்கும்போதே ஶ்ரீலங்கா இராணுவ புலனாய்வு
படையினர் பொலிஸ் படை உதவியுடன் பகிரங்கமாக அத்துமீறி தெருவில் திரண்டிருந்த
பொதுமக்களை தாக்கி உருக்குலைத்து அலைக்கழித்திருக்கின்றனர். அப்பேர்ப்பட்ட
மனநிலையை அந்த அரசாங்கம் பொலிஸாருக்கும் இராணுவ புலனாய்வு படையினருக்கும்
கருத்து தெரிவிக்க வல்ல அமைச்சர்களுக்கும் வழங்கியிருக்கிறது.
இருந்தும்
அந்த மக்களுக்கு இப்படியான தருணங்களில் தங்கள் மனதிலுள்ள ஆதங்கங்களை
வெளிப்படுத்தி போராடுவது தவிர வேறு ஆதாரமும் இல்லை வழியிமில்லை.
முன்னதாக
யாழ்ப்பாணம் செல்லவிருந்த சனல் 4, குழுவினரை யாழ்ப்பாணம் செல்ல விடாமல்
சிங்கள காடையர்கள் தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றனர்.
இந்த ஆற்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் எல்லாம் தயாரிக்கப்பட்ட ஶ்ரீலங்காவின்
அரசு தரப்பின் இராணுவப் புலனாய்வு படையினர் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிய
வந்திருக்கிறது. அனுரதபுர மாகாணசபை உறுப்பினர்களும் இன்னும் ராஜபக்ஷவின்
பரிவாரங்களும் அனுரதபுரம், வவுனியா ஆகிய இடங்களில் எந்த இடைஞ்சலும்
இல்லாமல் மிகச் சாதாரணமாக ஆற்பாட்டத்தில் ஈடுபட்டு துணிச்சலுடன்
இங்கிலாந்தின் சனல்4, குழுவை திருப்பி அனுப்பியிருக்கின்றனர்,
டேவிட்
கெமருன் யாழ் விஜயத்தின் பின், இரண்டாவது முறையாக முயற்சித்து யாழ் சென்ற
சனல்4, தொலைக்காட்சி, இலங்கை மிகப் பெரிய மயான பூமி என நேற்றிரவு
பிரசாரங்களை ஆரம்பித்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது. இந்த மயான பூமியில்
விடுமுறையை கழிப்பதை தவிர்த்து கொள்ளுமாறு அந்த தொலைக்காட்சி தனது நாட்டு
மக்களுக்கும் சர்வதேச சுற்றுப்பயணிகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளது.
என்றும் அந்த செய்தி குறிப்பிடுகிறது.
ஒருநாள்
சுற்றுப்பயணத்தை இலங்கையில் சுதந்திரமாக நடத்தமுடியாது என்ற உண்மையை
பகிரங்கமாக வெளிப்படுத்திய சனல்4, தொலைக்காட்சி இயக்குனரை மனதார
பாராட்டிக்கொள்ளலாம்.
ஐக்கிய இராய்ச்சியத்தின் பிரதமருக்கும்,
அங்கிருந்து வந்த பிரசித்தி பெற்ற ஊடகங்களான சனல்4, மற்றும் பிபிசி,
போன்ற பாரம்பரிய ஊடகங்களுக்கு ஒரு நாளை சுதந்திரமாக இலங்கையில் காலம்
கடத்த முடியவில்லை என்றால், ஈழத்தமிழினம் எவ்வளவு அனீதிகளை கொள்வனவு
செய்து ஜீரணிக்க முடியாமல் அந்த மண்ணில் வாழ்க்கையை கழித்திருக்கும் என்பதை
பிரித்தானிய பிரதமர் கெமருன் அவர்களை நேரடியாக சந்தித்து பேசிய வடக்கு
மாகாணசபை முதலமைச்சர் புரிய வைத்திருக்க வேண்டும்.
ஆனால் வடக்கு
மாகாண முதலமைச்சர் தனது மேதாவிலாசத்தை பிரதிபலித்து வேறு எவரையும்
உள்வாங்காமல் சம்பந்தன் போன்ற குறிப்பிட்ட ஒரு சிலருடன் பிரித்தானிய
பிரதமருடன் அழாவழாவியதாகவே தெரிகிறது.
வடக்கு
மாகாணசபையின் அதிக விருப்பு வாக்குக்களை பெற்று தெரிவு செய்யப்பட்ட
மாகாணசபையின் உறுப்பினரான அனந்தி, களத்தில் மக்களோடு மக்களாக போராடி
தெருவில் நின்று கெமருன் அவர்களுக்கு மகஜர் கையளித்திருக்கிறார், மக்கள்
போராட்டத்தில் பங்குபற்றிய அனந்தி, பொலிஸாரின் தாக்குதலுக்கும்
உள்ளாகியிருக்கிறார், வடக்கு மாகாணசபையின் உறுப்பினரான அனந்தியின்
சிறப்புரிமைக்கு அரச படையினர் எந்த மரியாதையையும் கொடுக்கவில்லை.
பிரித்தானிய
பிரதமர் டேவிட் கெமருனைச் சந்திக்க முனைந்த மக்கள் மீது இலங்கை அரச
உளவுப்படைகள் வழமைபோல தாக்குதல் நடத்தியுள்ளன. காணாமல் போனவர்களை
மீட்டுத்தருமாறு பதாகைகளுடன் நடந்த அமைதியான ஆர்ப்பாட்டத்தின் மீது இலங்கை
பாசிச அரசின் உளவுப்படைகள் தாக்குதல் நடத்தின. பின்னதாக டேவிட் கெமருன்
பயணம் செய்த வாகனத் தொடரணியை மக்கள் சூழ்ந்துகொண்டு அவலக் குரலில்
கண்ணீர்வடித்தனர். இத்தகவலை பிரித்தானியப் பத்திரிகைகள் அனைத்தும் பதிவு
செய்துள்ளன.
இவை அனைத்தையும் பார்த்தபின்னர் டேவிட் கமரன்,
"பயங்கரவாதம் அழிக்கப்பட்டுவிட்டது", சண்டை முடிந்து விட்டது, போர்
நிறைவடைந்து விட்டது ஆக நாடு வெற்றிப்பாதையில் செல்வதற்கான வாய்ப்புகள்
உள்ளன. நாட்டை ஒற்றுமைப்படுத்த இலங்கை அரசு பெருந்தன்மையுடன் செயற்பட
வேண்டும்” என்று ராஜபக்ஷ குறிப்பிடுவதைப்போலவே குறிப்பிட்டிருக்கிறார்.
பெண்கள்
பெரியோர் குழந்தைகள் என்று சாரிசாரியாகப் மனிதர்கள் புதைக்கப்பட்ட
மண்ணிலிருந்துகொண்டு, இலங்கை அரசு பெருந்தன்மையோடு நாட்டை
ஒற்றுமைப்படுத்தும் என்றுகூறும் கெமருன் அவர்களின் செய்தி சாதாரண மனித
மனதில் பெருத்த பய உணர்வையும் நம்பிக்கையீனத்தையுமே தோற்றுவிக்கிறது.
இனப்படுகொலை
களமான இலங்கையில் நடைபெறவிருக்கும் கொமன்வெல்த் மாநாட்டுக்கு பிரித்தானிய
பிரதமர் செல்லாமல் புறக்கணிக்க வேண்டும் என்று புலம்பெயர் தமிழ்
அமைப்புக்கள் போராட்டம் நடாத்தி முன்னர் கோரிக்கை வைத்திருந்தன, அந்த
கோரிக்கைக்கு இசைவாக டேவிட் கெமருன் கொமன்வெல்த் மாநாட்டுக்கு சென்று
ராஜபக்ஷவிடம் போர்க்குற்றம் தொடர்பாக பல கேள்விகளை எழுப்புவேன் என்றும்
அதற்காக தான் கொமன்வெல்த் மாநாட்டில் பங்குபற்ற வேண்டும் என்றும்
வாக்குறுதி அளித்திருந்தார்.
பிரித்தானிய தமிழ் அமைப்புக்களுக்கு
அளித்த வாக்குறுதிக்கமைய மாநாட்டு நிகழ்வின்போது இலங்கையில் நடந்த போர்
குற்றங்கள் குறி்த்து, உடனடியாக வெளிப்படையான விசாரணை நடத்த இலங்கை அரசு
முன் வர வேண்டும். இதை வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடக்கவிருக்கும் மனித
உரிமை அமர்வுகளுக்கு முன் செய்து முடிக்க வேண்டும். இல்லாவிட்டால்,
பிரிட்டன் இந்த விஷயத்தில் நேரடியாக தலையிடும். இலங்கை போர்க்குற்றங்கள்
குறித்த சர்வதேச விசாரணைக்கு இங்கிலாந்து ஏற்பாடு செய்யும். நியாயமான
விசாரணை நடக்க வேண்டும் என பிரிட்டன் எதிர்பார்க்கிறது. இங்கு பத்திரிகை
சுதந்திரம் காக்கப்பட வேண்டும் என்றும் உரை நிகழ்த்தியிருந்தார்.
அதே
கருத்தை உலக மகா வல்லரசான அமெரிக்காவும் இலங்கை அரசுக்கு எதிராக
இரண்டுமுறை ஜெனீவா அரங்கத்தில் தீர்மானமாக கொண்டுவந்திருக்கிறது என்பதும்
அதை பிச்சைக்கார நாடான இந்தியா, லாவகமாக நீர்த்துப்போகச்செய்திருந்தது
என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கவை.
சோர்ந்துபோனாலும், போரின்
வடுக்களை மறக்கமுடியாத ஈழத்தமிழர்கள் ஒவ்வொரு சர்வ தேச தலைவர்கள்
இலங்கைக்கு செல்லும்போதும் சோர்வில்லாமல் தமது உரிமைக்கான போராட்டத்தை
வெளிப்படுத்தி வருகின்றனர். அதற்கு பின்புலமாக தமிழ் தேசிய மக்கள்
முன்னணியும், மாகாணசபை உறுப்பினர்களான அனந்தி, மற்றும் சிவாஜி லிங்கம்
போன்றவர்களும், புலம்பெயர் தேசங்களில் இருக்கும் சில அமைப்புக்களும்
இருக்கின்றார்கள் என்ற திருப்தி ஒன்று மட்டுமே ராஜபக்ஷவை சர்வதேச
தீர்ப்பாயத்தின் முன் நிறுத்த நிச்சியம் வழி வகுக்கும் என்ற
நம்பிக்கையுடன் இழையோடுகிறது.
ஈழதேசம் செய்திகளுக்காக.
கனகதரன்.
Tuesday, November 5, 2013
தங்கை இசைப்பிரியாவை ஏளனப்படுத்தி ஶ்ரீலங்கா இராணுவத்தை நியாயப்படுத்தும் இனத்துரோகி கருணாநிதி.
ஈழம் எரிந்து 2009 ல் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்து முடியும்வரை
ராஜபக்ஷவுக்கும் சோனியாவுக்கும் மனங்கவர்ந்த ஒற்றனாக எட்டப்பனாக மிக
கச்சிதமாக இன அழிப்புக்காக அயராது பணியாற்றியவர் கருணாநிதி,
இனப்படுகொலை முடிக்கப்பட்டபின் எழும்பவிருந்த விமர்சனங்களை குழி தோண்டி
புதைப்பதற்காக சோனியாவின் பரிவாரங்களுடன் தனது மகளை ஶ்ரீலங்கா ஜனாதிபதியின்
மாளிகைக்கு விருந்தாக அனுப்பி ராஜபக்ஷவை ஆரத்தழுவி அகமகிழ வைத்தவர்
கருணாநிதி,
மானங்கெட்டுச் சென்ற மகள் சோரம்போய் ராஜபக்ஷவை
மகிழ்வித்து மடி திறந்து பொருள் வாங்கிவந்த மகளை வரவேற்று, மக்கள் அனைவரும்
மகிழ்ச்சியாக வாழுகிறார்கள் என்று ஊரை உலகத்தை ஏமாற்றியவன் தமிழ்
இனத்துரோகி கருணாநிதி,
தமிழ் நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டு
நான்கு ஆண்டுகள் நாயிற் கேவலமாக நில மட்டத்தில் இருந்தபோதும் போதும்
ஈழத்தின்மீதும், ஈழத் தமிழர்கள்மிதும் இருக்கும் வன்மம் குறையாமல்
நானும் என் இனமும் கோவிலாக கும்பிடும் என் தங்கை இசைப்பிரியாவை.
"இசைப்பிரியா உலகத்தில் பிறந்ததற்கு, செய்த பாவம், விடுதலைப்புலிகளின் ஊடகப்பிரிவில் தன்னை இணைத்துக் கொண்டது தான்."
என்று
இராஜபக்ஷவின் இராணுவத்தின் செயலை நியாயப்படுத்தி குரோத வன்ம இரக்கம்
செய்து உள்ளூர திருப்திப்பட்டு பத்திரிகையில் செய்தி வெளியிட்டு
மகிழ்ந்திருக்கிறான்.
ஶ்ரீலங்கா இராணுவத்துக்கு எதிராக
விடுதலைப்புலிகளின் ஊடகப்பிரிவில் இசைப்பிரியா வேலை செய்ததால் ஶ்ரீலங்கா
இராணுவம் புலிகளுக்கு எதிரான நடவடிக்கையில் இசைப்பிரியாவை கொன்றிருக்கிறது
என்பது கருணாநிதியின் உள்வன்மம் பொதிந்த கருத்து.
இந்த
கொடூரனுக்கான தண்டனையாக அவனை உயிருடன் கழுவில் ஏற்றாவிட்டாலும் தமிழ்நாடு
வாழ் மானஸ்தர்கள் கயவன் கருணாநிதிக்கு தகுந்த தண்டனை கொடுத்து தமிழ்நாட்டு
அரச நிர்வாக காரியங்களிலிருந்து 20011 மே, வெளியேற்றி விட்டனர்.
இருந்தும்
ஒற்றன் கருணாநிதி தனக்கே உரித்தான நரித்தனமான குணத்துடன் மக்களை ஏய்க்கும்
மாய்மாலங்களை அள்ளிவிட்டு அப்பாவிபோல் தன்னை வெளிப்படுத்தி ஈழ மக்களையும்
இசைப்பிரியாவின் படுகொலையையும் கேவலப்படுத்தி அடுத்த தேர்தலுக்காக அற்பனாக
கருத்து சொல்லியிருக்கிறான்..
அதற்கு, கருணாநிதி தான் ஐந்துமுறை
முதலமைச்சராக இருந்து தமிழக மக்களுக்கும், ஈழத்துக்கும் ஆற்றிய தன்னுடைய
சுயநலன் இல்லாத அரசியல் சாதனைகளையும், கருணாநிதியின் குடும்பம்
தமிழ்நாட்டுக்கும் ஈழத்துக்கும் செய்த மறக்க முடியாத சேவைகளையும் எடுத்து
வைத்து வாக்கு கேட்கவேண்டியதுதானே.
தமிழ்நாட்டு மக்கள் கயவன்
கருணாநிதிக்கு தகுந்த தண்டனை கொடுத்தாகிவிட்டது இருந்தும் திமுக தொண்டர்கள்
அனைவரும் தன் பின்னே இருப்பதாக காட்டுவதற்காக கோவிலாகிப்போன தங்கை
இசைப்பிரியாவை கேவலப்படுத்தி அறிக்கை விடுப்பதை திமுக கட்சியிலிருக்கும்
மானமுள்ள தமிழர்கள் தட்டி கேட்கமாட்டார்களா?
இசைப்பிரியா
உலகத்தில் பிறந்ததற்கு செய்த பாவம் விடுதலைப்புலிகளின் ஊடகப்பிரிவில் தன்னை
இணைத்துக் கொண்டது தான். என்று நஞ்சை கக்கும் கருணாநிதியை,
பிரணாப் முகர்ஜியை,
சிதம்பரததை, சிவ்சங்கர் மேனனை, கொம்பு சீவி ஶ்ரீலங்காவுக்கு அனுப்பியது
குற்றம் தப்பிப்பிறந்த மகளை ராஜபக்ஷவுக்கு முன் சதிராட அனுப்பியது
குற்றம். கருணாநிதி ஈழம் பற்றி பேசுவதே கொடுங் குற்றம்.
செத்து தெய்வமாகிப் போன இசைப்பிரியாவை பற்றி வாய் திறக்க இனத்துரோகி கருணாநிதிக்கு என்ன யோக்கியதை இருக்கிறது.
மானஸ்தர்கள்
எவராவது திராவிட முன்னேற்ற கழகம் என்ற கருணாநிதியின் கட்சியில்
இருப்பார்களானால் இசைப்பிரியா பற்றி இளக்காரமாக பேசிய இனத் துரோகி
கருணாநிதியை நிச்சியம் கண்டிப்பார்கள்.
ஊர்க்குருவி
மன்மோகன் கொமன்வெல்த் மாநாட்டில் பங்குபற்றினால் ராஜபக்ஷவுக்கு யோகம் பங்குபற்றவில்லையென்றால் கருணாநிதிக்கு யோகம்.
ஒப்பீட்டளவில், கடந்த நான்கு ஆண்டுகளாக ராஜபக்ஷவின் ஶ்ரீலங்கா சிங்கள
அரசு இனப்படுகொலை தொடர்பாகவும், மனித உரிமை மீறல் குற்றம் சம்பந்தமாகவும்
தொடர்ந்து பல சர்வதேச நெருக்கடிகளை சந்தித்து வருகிறது,
ஒவ்வொரு நெருக்கடிக் காலத்திலும் ராஜபக்ஷ சர்வதேச சட்ட நெருக்கடிக்குள்
சிக்கிக்கொள்ளும் சந்தற்பம் ஏற்படும்போதெல்லாம் சீனா பாக்கிஸ்தான்
ராஜபக்ஷவுக்கு உதவுகிறதோ இல்லையோ மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய அரசு
ஆபத்தாந்தவனாக களத்தில் இறங்கி சர்வதேச நெருக்கடியிலிருந்து
இனப்படுகொலையாளி ராஜபக்ஷவை தோள் கொடுத்து காப்பாற்றி வந்திருக்கிறது.
ஒருமுறை
இரண்டு முறையல்ல 2009 ம் ஆண்டிலிருந்து 2013 வரை ஐந்துக்கு மேற்ப்பட்ட
சர்வதேச இறுக்கங்களின்போது இந்தியா தலையிட்டு விதிகளை மாற்றி
ராஜபக்ஷவுக்கு காப்பரணாக நின்று வந்திருக்கிறது.
அந்த வரிசையில்
ஒட்டுமொத்த உலக தமிழினத்தின் எதிர்ப்பையும் கணக்கிலெடுக்காமல்
ஶ்ரீலங்காவில் நடைபெறவிருக்கும் கொமன்வெல்த் மாநாட்டிலும் பங்குபற்றி
ராஜபக்ஷவை காப்பாற்றும் முயற்சியில் மன்மோகன் சிங்கின் அரசு குறியாக
நிற்கிறது. அதன் முன்னோட்டமாக தமிழ்நாடு அரசு இந்தியா கொமன்வெல்த்
மாநாட்டில் பங்குபற்றக்கூடாது என்று சட்டசபையில் தீர்மானம்
கொண்டுவந்தபோதும், தமிழகத்தின் உணர்வை கவனத்திலெடுக்காமல் டில்லியில்
காங்கிரஸ் உயர்மட்டக் குழு சோனியா தலமையில் கூடி மன்மோகன் சிங் கொமன்வெல்த்
கூட்டத்தில் கலந்து சிறப்பிக்கவேண்டும் என்று தமிழ்நாட்டின்
தீர்மானத்துக்கு போட்டியாக தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது
இந்தியாவின்
இந்த கீழ்த்தரமான செயற்பாடுகள் அகற்றப்பட்டிருக்குமாயின் போர் முடிந்த
நான்கு வருடத்தின் பின்னான இன்றைய காலகட்டத்திலாவது எஞ்சிய தமிழர்களின்
அரசியல்ப் பிரச்சினையாவது மிக இலகுவாக சர்வதேச சட்ட அனுமானங்கள் மூலம்
தீர்க்கப்பட்டிருக்கும். அதற்கான mechanism மூலோபாயங்கள் சர்வதேச
சட்டதிட்டங்களுக்கமைய, கொமன்வெல்த் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின்
பொதுவான நீதி நிர்வாக அமைப்புகிளிடையே நிறையவே இருக்கின்றன. இந்தியாவின்
குறுக்கிடு இல்லாவிட்டால் சர்வதேச தீர்ப்பாயத்துக்கு செல்லுவதற்கான வழியும்
இலகுவாக்கப்பட்டிருக்கும்.
இந்தியாவின் வன்மத்துடன் கூடிய
தேவையற்ற தலையீடு ஒரு இனத்தை வேரோடு அழிக்கும் வெலைத்திட்டமாகவே
தொடர்கிறது, இதற்கான மாற்று வழியை தேடாதவரை அந்த இழுக்கு தொடரவே செய்யும்.
இந்திய ஆட்சியாளர்கள் தமது இயலாமையை சரிக்கட்டி பதவிக்கான
ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளுவதற்காக, ஆட்சி அதிகாரமற்ற வல்லமை குறைந்த
தரப்பான ஈழத்தமிழர்களின் வாழ்க்கையில் தொடர்ச்சியான வினையாகி நேர்மையற்ற
முறையில் தலையீடு செய்து இல்லாத பல காரணங்களை நியாயப்படுத்தி
தமிழர்களுக்கான தேசிய உரிமையை கிடைக்காமல் செய்யும் வகையில் தன்னிச்சையாக
குறுக்கே நின்று அராஜகம் செய்து வருகிறனர்.
போர் முடிந்து நான்கு
வருடங்களானபோதும், இந்தியா பின்னணியில் இருந்து இலங்கை அரசுக்கு தேவையற்ற
விதமாக முட்டுக் கொடுத்துக்கொண்டிருப்பதால் ஶ்ரீலங்கா அரசு தமிழ்
மக்களுக்கான ஆகக்குறைந்த அடிப்படை தனிமனித பாதுகாப்பு தேவைகளைக்கூட
உறுதிப்படுத்த முயற்சிக்கவில்லை. உதாசீனப்படுத்தப்பட்டே வருகிறது.
சர்வதேசம் அந்த பிரச்சினைகளில் தலையிடும்போதெல்லாம் இந்தியா தனது பிராந்திய
மேலாண்மை என்ற மாயையை காரணங்காட்டி தலையீடு செய்து வருவதால் சர்வதேசத்தின்
தலையீடு தவிர்க்கப்பட்டு வாக்குறுதிகளும் வாய்தாக்களுமே தமிழர்களின்
அரசியலாக மாற்றங் கண்டிருக்கிறது.
அந்த இழிநிலைக்கு ஒரு வழியில்
2009 க்குப் பின் சம்பந்தன் தலைமையினாலான தமிழ் தேசியக் கூட்டமைப்பும்
தம்மால் இயன்றவரை உதவி வருகின்றதென்பதும் எவரும் மறுப்பதற்கில்லை.
தமிழர்
பிரச்சினைகளில் ஈடுபாட்டுடன் சர்வதேசம் தலையிடும்போதெல்லாம் இந்தியாவின்
அறிவுறுத்தலுக்கொப்ப நிறைவேற்றுவதில்லை என்ற நிலையிலும் ஜனநாயகம் என்ற
புலுடாவை கவசமாக்கி தந்தரமாக பொய் வாக்குறுதிகளை ஐநா அரங்கிலும்
சர்வதேசத்தின் முன்னிலையிலும் ஒப்புக்கொடுத்து உணர்வுமயப்பட்டது போன்ற
மிகப்பெரிய பொய் உரைகளை நிகழ்த்தி கால அவகாசத்தை கச்சிதமாகப் பெற்று அடுத்த
நிலைக்கு சென்று ஶ்ரீலங்கா தப்பித்து வருகிறது
எதிர்வரும் 2014
மார்ச் ஜெனீவா மனித உரிமை அமர்வுகளின்போது சர்வதேச அரங்கில் ஏற்கெனவே
ஒப்புக்கொண்டு வாக்குறுதியளிக்கப்பட்ட பல வேலைத்திட்டங்களுக்கான
பெறுபேறுகளை ஒப்படைக்கவேண்டிய தவணைக்காலம். ஆனால் மாறாக ஈழத்தமிழர்கள்
வாழ்ந்த பூர்வீக மண்ணில் குடியிருப்புக்கள் உடைத்து தரைமட்டமாக்குதலும்
சிங்கள குடியேற்ற நிறுவல்களும் புத்தர் சிலைகளும் அதற்காக சில தெருக்கள்
செப்பனிடப்பட்ட வேலைத்திட்டங்கள் தவிர தமிழ் மக்களுக்கான அடிப்படை எதுவும்
ராஜபக்ஷ அரசால் அங்கு நிறுவப்பட்டிருக்கவில்லை. தினச்செய்திகளில் அவை
அப்பட்டமாக வெளிவந்தவண்ணம் இருக்கின்றன.
சர்வதேசத்தின் முன்
பெருத்த ஒரு எடுத்துக்காட்டாக வடக்கு மாகாணசபை தேர்தல் நடத்திய பெறுபேற்றை
காட்டி முதலமைச்சர் விக்கினேஸ்வரனை கொமன்வெல்த் கூட்டத்தில் பேச வைப்பதன்
மூலம் 2014 மார்ச் ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவின் அமர்வில்
தமிழர்களுக்கான ஆட்சி அதிகாரம் வழங்கப்பட்டுவிட்டது அனைத்தும்
மாகாணசபையிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது தமிழர்களுக்கான வேலைத்திட்டங்கள்
அனைத்தும் படிப்படியாக நடைபெறும் எல்லோரும் மகிழ்ச்சியுடன்
பொறுத்தருளவேண்டும் என்று கூறி தப்பித்துவிடலாம் என்பது
இந்திய+ராஜபக்ஷ=சம்பந்த திட்டமாக இருந்தது.
முதலமைச்சர்
விக்னேஸ்வரனை கொமன்வெல்த் கூட்டத்தில் பேச வைப்பதன் மூலம் தமிழர்களின்
பிரச்சினை எல்லாம் தீர்க்கப்பட்டுவிட்டதாக காட்டிக்கொள்ளும் திட்டத்தின்
முதல் வேலைத்திட்டம்தான் வடக்கு மாகாணத்துக்கான தேர்தல். இந்த தேர்தலை
நடத்தி முடித்த சக்திகள் 1, இந்தியா, 2, ஶ்ரீலங்கா ஜனாதிபதி ராஜபக்ஷ, 3,
தமிழர் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சப்பந்தன், ஆனால் துரதிர்ஷ்ட
வசமாக கூட்டமைப்பினுள் எழுந்த கூட்டுக்கட்சிகளின் பிரிவினை விக்கினேஸ்வரன்
கொமன்வெல்த் கூட்டத்தில் உரையாற்ற தடைவிதிக்குமளவுக்கு போய் ராஜபக்ஷவை
திகைப்பிலாழ்த்தியிருக்கிறது.
கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின்
எதேச்சதிகாரத்தால் கூட்டமைப்புக்குள் விரிசல் தோற்றுவிக்கப்பட்டது. அந்த
விரிசல் விக்கினேஸ்வரனை மாநாட்டில் சமூகமளிக்க தடை உத்தரவாகி சிங்கள
அரசுக்கு எதிர்பாராத பின்னடைவை தோற்றுவித்தது. அது ஒன்று மட்டும் இன்றைக்கு
தமிழர்களுக்கு ஓரளவு திருப்தியளிக்கும் ஒரே ஒரு அனுகூலமாக காணலாம்.
2014
மார்ச் நடக்கவிருக்கும் மனித உரிமை அமர்வில் எழவிருக்கும் நெருக்கடிகளை
மந்தமாக்கும் பொருட்டு, இந்திய ஆலோசனையின் பேரில் ஒரு சில
அபிவிருத்திக்கான ஒப்பீடுகளை முன்னோட்டமாக பொதுநலவாய மாநாட்டில் வேலைத்
திட்டமாக முன் மொழிந்து விக்னேஸ்வரனையும் விருந்தினராக்கி பல
நாட்டுத்தலைவர்களை கவர்ந்து திருப்திப்படுத்தி 2014 நடக்கவிருக்கும்
ஜெனீவா மனித உரிமை பேரவயின் கடுமையை குறைத்துக்கொள்ள ராஜபக்ஷ மன்மோகன்
கூட்டாளிகள் மிகப்பெரிய இராசதந்திர களமாக பயன்படுத்த திட்டமிடப்பட்டிருந்த
இடம் கொமன்வெல்த் மாநாடு அரங்கம்
இந்த மாநாட்டில் ஶ்ரீலங்காவின்
கூட்டாளி இந்தியா கலந்து கொள்ளவில்லையென்றால் ராஜபக்ஷ சர்வதேச பொறிக்குள்
இழுக்கப்படுவதன் ஆரம்பம் உறுதிப்படுத்தப்பட்டதாகிவிடும். அதாவது
கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொண்டு ராஜபக்ஷவுக்கு
முண்டுகொடுக்கவில்லையென்றால் அதன் எதிர்த் தாக்கம் மார்ச் 2014 ஜெனீவா மனித
உரிமை ஆணையத்தின் கூட்டத்தொடர் ஶ்ரீலங்காவுக்கு எதிரான கடுமையான கட்டளைகளை
பதிவுசெய்யும் என்பது தவிர்க்கமுடியாமலிருக்கும்.
அந்தநிலை
ஏற்படக்கூடாது என்பதே இன்றைக்கு காங்கிரஸ் தலைவி சோனியா, மன்மோகன் சிங்
மற்றும் இந்திய கொள்கை வகுப்பாளர்களின் கவுரவக் கவலை.
இந்திய
அரசியலில் இன்றைக்கு பாராளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாட்டுக்காலம்
என்பதால் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள், கட்சிகள் அவரவர் தமது தேர்தல்
வியூகத்தின் அடிப்படையில் கொமன்வெல்த் மாநாட்டை கவசமாக்கி கருத்துக்களை
விதைத்துக்கொண்டிருக்கின்றனர். தேர்தல் காலம் இல்லாமல் இருக்குமானால்
மன்மோகனுக்கு இவ்வளவு சிக்கல் இருந்திருக்க வாய்ப்பில்லை.
தமிழ்நாட்டிலிருந்து
ஈழ இனப்படுகொலைக்கு முழு முதற் பொருளான திமுக தலைவர் கருணாநிதி,,
கருணாநிதியின் அடிவருடி திருமாவளவன், அதே கொள்கை கொண்ட மருத்துவர்
இராமதாஸ், ஆரம்பத்தில் தமிழ் ஈழம் கண்டுதான் பிறந்தநாள் கொண்டாடுவேன் என்று
கதை விட்டு அரசியலுக்கு வந்து பேசாமடந்தையாக இருந்த விஜயகாந்த்,
அவர்களுடன் தமிழக காங்கிரசின் ஒரு பிரிவான வாசன் ஆகியோர் தமது அரசியல்
இருப்பை உறுதிப்படுத்தவேண்டும் என்பதற்காகவும், தமிழக மக்களின் வக்கு
வேட்டையை கணக்கில்க் கொண்டும், தமக்கான தேர்தல் ஆதாயத்தின் பிரகாரம்
கொமன்வெல்த் மாநாட்டுக்கு மன்மோகன் சிங் செல்லக்கூடாது என்று அரசியல்
ஆதாயத்திற்காக பிடிவாதமாக எதிராக நிற்கின்றனர்.
காங்கிரஸும்
வீழ்ச்சியின் விளிம்பில் இருப்பதால் திடமாக இவற்றை எதிர்கொள்ள முடியாமல்
தடுமாறுகிறது. இதை ஒரு தேர்தல் காலத்துக்கான அரசியல் அலை என்று கொள்வது
தவிர ஈடுபாட்டுடன் தமிழக அரசியல்வாதிகள் எதிர்க்கின்றனர் என்று
எடுத்துக்கொள்ள முடியாது.
இங்கு ஒருவிடயத்தை அரசியல்வாதிகள்
தவிர்ந்த தமிழகத் தமிழர்கள், மற்றும் ஈழத்தமிழர்கள் புரிந்து கொள்ள
கடமைப்பட்டுள்ளனர்,. தமிழக மக்கள் சார்ந்த வாழ்வாதார பிரச்சினையானாலும்சரி
ஈழத் தமிழர்களின் தேசிய பிரச்சினையானாலும்சரி, தமிழகத்தின் சக்திவாய்ந்த
அரசியற் கட்சிகளின் உள்ளுடன்களை நிதானமாக ஆழ நீளம் பார்க்காமல் இந்தியாவை
ஆட்சிசெய்யும் எந்த ஒரு மத்திய அரசும் ஒரு முடிவுக்கு வந்துவிடுவதில்லை.,
தமிழகத்தின் சாதக பாதகங்களை தமக்கு சாதகமான கட்சிகளுடன் பேசி உடன்பாட்டை
ஏற்படுத்திய பின், அவற்றை ஒருபுறம் வைத்துக்கொண்டு அவற்றையும் தாண்டி
உளவுத்துறை மற்றும் கொள்கைவகுப்பாளர்கள் மூலம் பகுப்பாய்ந்து
பிரச்சினையின் சாதக பாதகங்களை கணக்கிட்டு அதன்பின்னரே ஒரு முடிவான
கொள்கைக்கு வருவார்கள் என்பது மிக சாதாரணமான விடயம்.
இந்திய
மத்திய அரசு ஈழத்தமிழர்களின் அரசியலில் தீர்வுக்கான வேலைத்திட்டம்
சம்பந்தமாக தலையிடுவதென்று ஒரு முடிவுக்கு வந்து களத்தில் இறங்கி நிற்கிறது
என்றால், ஒன்று தமிழ்நாட்டின் பெரிய அரசியற் கட்சிகளான திமுக அல்லது
அதிமுக இரண்டில் ஒரு கட்சி மத்திய அரசுக்கு ஒத்திசைவாக இருக்கிறதென்றே
அர்த்தப்படும். 2009ல் கருணாநிதியின் திமுக அப்படி ஒரு ஒப்பந்த
அடிப்படையில் இருந்ததால்த்தான் தமிழகத்தின் எழுச்சியை மிகக்கவனமாக
கட்டுக்குள் வைத்துக்கொண்டு மிகப்பெரிய இனப்படுகொலையை மூன்று நான்கு
மாதங்களுக்குள் நடத்தி முடிக்கப்பட்டது.
அந்த நேரங்களில் மக்கள்
எழுச்சியை கட்டுப்படுத்துவதற்காக கருணாநிதி பறந்தடிப்பதுபோல் வெளியே
காட்டிக்கொண்டாலும் மத்திய அரசுக்கு எதிராக ஒரு அசைவாக்கத்தையும்
பகிரங்கமாக வெளியிட்டு தனது எதிர்ப்பை காட்டிக்கொள்ளவில்லை, காலதாமதத்தை
உண்டாக்கக்கூடிய கதாப்பிரசங்கங்களையே அவர் 2009 மே மாதம் முடிந்த பிறகும்
தொடர்ந்தார். போர் நிறுத்தப்பட்டு விட்டது தூவானம் நிற்க சில தினங்கள்
எடுக்கும் என்றும் அவர் கூறிய வாசகங்கள் காலத்தால் மறக்க முடியாதவை.
ஜெனீவாவில்
அமெரிக்க தீர்மானத்தின்போதும் மாணவர்களின் போராட்ட வீச்சை எதிர்கொள்ள
முடியாத கருணாநிதி காங்கிரஸின் ஒப்புதலுடன் இரகசிய உடன்பாட்டுடனேயே
கூட்டணியிலிருந்து வெளியேறியதாக அறிவித்தார் என்பதையும் அவர் வெளியேறியபின்
மத்திய அரசு சம்பந்தமாக வெளிவந்த அவரது கபடத்தனமான அறிக்கைகள் பறைசாற்றி
நின்றன.
இன்றைக்கு தமிழகத்தில் தீண்டுவார் அற்ற கட்சிகள் என்ற
நிலை காங்கிரஸுக்கும் திமுகவுக்கும் ஏற்பட்டு விட்டதால் கருணாநிதி
காங்கிரஸை கழற்றி விட வழி தேடுகிறார். அதேபோல காங்கிரஸ் தன்னை புதிய ஒரு
அணியுடன் இணைத்து பலப்படுத்திக்கொள்ள
கருணாநிதியை கழற்றிவிட்டு விஜயகாந்தை
இணைத்துக்கொள்ள சோனியாவின் மைந்தன் ராகுல் ஆர்வம் காட்டி வருகிறார்
என்பதும் பகிரங்கமாக பத்திரிகை ஊடகங்கள் அறிவிக்கின்றன.
ஈழத்தில்
நடத்தப்பட்ட இனப்படுகொலையால் திமுகவும் காங்கிரஸும் தமிழகத்தில்
தனிமைப்பட்டிருப்பது ஓரளவு உறுதியாகியிருக்கிறது. இருந்தும் காங்கிரஸை
குற்றவாளியாக்கிவிட்டு தப்பிப்பதற்கே கருணாநிதி மிக பிரயத்தனப்படுகிறார்.
அதன் வெளிப்பாடுகள்தான் டெசோ, தமிழீழம் கொமன்வெல்த் எதிர்ப்பு கோசம்
இருந்தும் கருணாநிதி மக்கள் மன்றத்தில் தப்பிப்பது அவ்வளவு சுலபமான
விடயமுமல்ல என்பது காங்கிரஸுக்கும் தெரியாததுமல்ல.
எனவே
கருணாநிதியின் சலசலப்பு தமிழ் நாட்டில் ஒருவேளை எடுபடலாம் டில்லியில்
சோனியா மட்டத்தில் எடுபடாது. அனேகமாக மன்மோகன் சிங் கொமன்வெல்த்
மாநாட்டில் பங்கேற்கக்கூடும் அப்படி பங்கேற்றால் அது கருணாநிதியின்
பிற்போக்கான சந்தற்பவாத அரசியலினால் ஏற்பட்ட விளைவு என்பதை உலக தமிழினம்
புரிந்துகொள்ளும்.
கனகதரன்.
Subscribe to:
Posts (Atom)