Tuesday, November 5, 2013

தங்கை இசைப்பிரியாவை ஏளனப்படுத்தி ஶ்ரீலங்கா இராணுவத்தை நியாயப்படுத்தும் இனத்துரோகி கருணாநிதி.

ஈழம் எரிந்து 2009 ல் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்து முடியும்வரை ராஜபக்‌ஷவுக்கும் சோனியாவுக்கும் மனங்கவர்ந்த ஒற்றனாக எட்டப்பனாக மிக கச்சிதமாக இன அழிப்புக்காக அயராது பணியாற்றியவர் கருணாநிதி, 
இனப்படுகொலை முடிக்கப்பட்டபின் எழும்பவிருந்த விமர்சனங்களை குழி தோண்டி புதைப்பதற்காக சோனியாவின் பரிவாரங்களுடன் தனது மகளை ஶ்ரீலங்கா ஜனாதிபதியின் மாளிகைக்கு விருந்தாக அனுப்பி ராஜபக்‌ஷவை ஆரத்தழுவி அகமகிழ வைத்தவர் கருணாநிதி, 

மானங்கெட்டுச் சென்ற மகள்  சோரம்போய் ராஜபக்‌ஷவை மகிழ்வித்து மடி திறந்து பொருள் வாங்கிவந்த மகளை வரவேற்று, மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழுகிறார்கள் என்று ஊரை உலகத்தை ஏமாற்றியவன் தமிழ் இனத்துரோகி கருணாநிதி,

தமிழ் நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நாயிற் கேவலமாக நில மட்டத்தில் இருந்தபோதும் போதும் ஈழத்தின்மீதும், ஈழத் தமிழர்கள்மிதும் இருக்கும் வன்மம் குறையாமல்

நானும் என் இனமும் கோவிலாக கும்பிடும் என் தங்கை இசைப்பிரியாவை.

 "இசைப்பிரியா உலகத்தில் பிறந்ததற்கு, செய்த பாவம், விடுதலைப்புலிகளின் ஊடகப்பிரிவில் தன்னை இணைத்துக் கொண்டது தான்."

என்று இராஜபக்‌ஷவின் இராணுவத்தின் செயலை நியாயப்படுத்தி  குரோத வன்ம இரக்கம் செய்து உள்ளூர திருப்திப்பட்டு பத்திரிகையில் செய்தி வெளியிட்டு மகிழ்ந்திருக்கிறான்.

ஶ்ரீலங்கா இராணுவத்துக்கு எதிராக விடுதலைப்புலிகளின் ஊடகப்பிரிவில் இசைப்பிரியா வேலை செய்ததால் ஶ்ரீலங்கா இராணுவம் புலிகளுக்கு எதிரான நடவடிக்கையில்  இசைப்பிரியாவை கொன்றிருக்கிறது என்பது கருணாநிதியின் உள்வன்மம் பொதிந்த கருத்து.

இந்த கொடூரனுக்கான தண்டனையாக அவனை உயிருடன் கழுவில் ஏற்றாவிட்டாலும் தமிழ்நாடு வாழ் மானஸ்தர்கள் கயவன் கருணாநிதிக்கு தகுந்த தண்டனை கொடுத்து தமிழ்நாட்டு அரச நிர்வாக காரியங்களிலிருந்து 20011 மே, வெளியேற்றி விட்டனர்.

இருந்தும் ஒற்றன் கருணாநிதி தனக்கே உரித்தான நரித்தனமான குணத்துடன் மக்களை ஏய்க்கும் மாய்மாலங்களை அள்ளிவிட்டு அப்பாவிபோல் தன்னை வெளிப்படுத்தி ஈழ மக்களையும் இசைப்பிரியாவின் படுகொலையையும் கேவலப்படுத்தி அடுத்த தேர்தலுக்காக அற்பனாக கருத்து சொல்லியிருக்கிறான்..

அதற்கு, கருணாநிதி தான் ஐந்துமுறை முதலமைச்சராக இருந்து தமிழக மக்களுக்கும், ஈழத்துக்கும் ஆற்றிய தன்னுடைய சுயநலன் இல்லாத அரசியல் சாதனைகளையும்,  கருணாநிதியின்  குடும்பம் தமிழ்நாட்டுக்கும் ஈழத்துக்கும் செய்த மறக்க முடியாத சேவைகளையும் எடுத்து வைத்து வாக்கு கேட்கவேண்டியதுதானே. 

தமிழ்நாட்டு மக்கள் கயவன் கருணாநிதிக்கு தகுந்த தண்டனை கொடுத்தாகிவிட்டது இருந்தும் திமுக தொண்டர்கள் அனைவரும் தன் பின்னே இருப்பதாக காட்டுவதற்காக கோவிலாகிப்போன தங்கை இசைப்பிரியாவை கேவலப்படுத்தி அறிக்கை விடுப்பதை திமுக கட்சியிலிருக்கும் மானமுள்ள தமிழர்கள் தட்டி கேட்கமாட்டார்களா?

இசைப்பிரியா உலகத்தில் பிறந்ததற்கு செய்த பாவம் விடுதலைப்புலிகளின் ஊடகப்பிரிவில் தன்னை இணைத்துக் கொண்டது தான். என்று நஞ்சை கக்கும் கருணாநிதியை, 

கருணாநிதி இந்தியாவில் பிறந்தது குற்றம், தான் ஒரு தமிழன் என்று கூறுவது குற்றம். கருணாநிதி திமுக கட்சியை தந்தரமாக கைப்பற்றியது குற்றம், கருணாநிதி முதலமைச்சராக தமிழ்நாட்டில் தெரிவு செய்யப்பட்டது பெருங் குற்றம். சோனியாவின் எலும்புத் துண்டுக்காக ஈழத்தை சுடுகாடாக்கியது குற்றம், என்று ஆயிரமாயிரம் குற்றங்கள் குவிந்து கிடக்கின்றன. அந்த குற்றங்களால்த்தான் வஞ்சகன் கருணாநிதி மண்ணோடு மண்ணாக வீழ்த்தப்பட்டிருக்கிறான். இருந்தும் கருணாநிதியின் வன்மம் குறையவில்லை.

பிரணாப் முகர்ஜியை, சிதம்பரததை, சிவ்சங்கர் மேனனை, கொம்பு சீவி ஶ்ரீலங்காவுக்கு அனுப்பியது குற்றம் தப்பிப்பிறந்த மகளை ராஜபக்‌ஷவுக்கு முன் சதிராட அனுப்பியது குற்றம். கருணாநிதி ஈழம் பற்றி பேசுவதே கொடுங் குற்றம்.

செத்து தெய்வமாகிப் போன இசைப்பிரியாவை பற்றி வாய் திறக்க இனத்துரோகி கருணாநிதிக்கு என்ன யோக்கியதை இருக்கிறது.

மானஸ்தர்கள் எவராவது திராவிட முன்னேற்ற கழகம் என்ற கருணாநிதியின் கட்சியில் இருப்பார்களானால் இசைப்பிரியா பற்றி இளக்காரமாக பேசிய இனத் துரோகி கருணாநிதியை நிச்சியம் கண்டிப்பார்கள்.

ஊர்க்குருவி

No comments: