Tuesday, July 26, 2016
VIP.
---------------------------------------------------------------------------
சுபாஸ் சந்திரபோஸ்.
...................
இந்திய சுதந்திரத்துக்கு
உணர்வு பூர்வமாக
போராடிய மாவீரன்
ஆங்கிலேயருக்கு எதிராக
பெருத்த இராணுவத்தை
கட்டி எழுப்பி
ஆயுத போராட்டத்தை நிறுவியவர்
ஜெர்மனி, ரஷ்யா, ஜப்பான், சீனா
போன்ற நாடுகளுக்கு
பயணம் செய்து
இராசதந்திர நட்பில் இருந்தவர்
முக்கியமான ஒரு தருணத்தில்
காணாமல் போனவர்
இருந்தும்
மக்கள் மனங்களில்
மலைபோல் உயர்ந்து நிற்கிறார்.
----------------------------------
மோகன்லால் கரம்சந்த் காந்தி.
....................
லண்டனில் சட்டம் படித்தவர்
ஆங்கிலேயர் தனது
நட்பு வட்டம் என்று போற்றியவர்
பிடிவாதக்காரர்.
அகிம்சைவாதி என்று
உள்ளூரில் முழங்கிக்கொண்டு
இரண்டாம் உலகப்போருக்கு
ஆபிரிக்காவில்
வெள்ளையருக்கு
ஆள் திரட்டி கொடுத்தவர்
எழுபது வயதினிலும்
பதின்ம வயது பெண்களை
நிர்வாணமாக்கி
தன்னோடு படுக்க வைத்தவர்
நேதாஜியை
இருட்டடிப்பு செய்வதற்காக
இங்கிலாந்து மூலம்
முதன்மை படுத்தப்பட்டு
தேசபிதா ஆனவர்...,..
----------------------------------------
வ உ சிதம்பரம்பிள்ளை.
.......................
வசதியான குடும்பத்தில் பிறந்தவர்
பச்சை தண்ணீர் போன்ற
குணம் படைத்தவர்.
வெள்ளையரின் ஏஜண்டான
பார்ப்பன சதியை உணராமல்
மூர்க்கமாக முழு நாளும்
சுதந்திரத்துக்கு போராடியவர்.
சொத்துக்களை விற்று
கப்பல் கட்டி
வரலாறு படைத்தவர்
வஞ்சகத்தின் வக்கிரத்தால்
அந்தமானில்
சிறை பறவையானார்
செக்கிழுத்தார்
சிதிலமாகி
செத்து மடிந்தார்..........
------------------------
எம் ஜீ ஆர்.
தமிழகத்தின்
புரட்சி தலைவன்
தமிழ் சினிமாவின்
ஒற்றை சூரியன்
சிறின்ப சிருங்காரன்
மலருக்கு மலர் தாவி
மன்மதன்போல் வாழ்ந்தாலும்
மறுபக்கம் கொடை வள்ளல்.
இன்றைக்கும்
இவர்தான்
சினிமாவின் சுப்பஸ்ரார்.
மக்கள் திலகமாக
மனங்கவர் தலைவனாக
தீய சக்தி
கருணாவின் -முக
திரை கிழித்த பேராசான்.
என்றைக்கும் இறவாத
ஒப்பற்ற ஒளிக்கீற்று......
-------------------------
கவியரசு கண்ணதாசன்.
பிறந்தார் வறுமையுடன்
பெற்றோரால் விலைபோனார்.
பெருங்கவியாய்
புகழடைந்தார்
மழைபோல்
படைப் பியன்றார்
மனம்போல்
உணவெடுத்தார்
மங்கை மது சங்கமமித்து
சுந்தரமாய் களிப்படைந்தார்.
கவியரசாய்
கவிப்பேரரசாய்
காலத்தால் அழியாத காவியமாய்
இன்றும்
கல்வெட்டாய் வாழுகின்றார்........
-------------------------
காமராசர்.
அப்பழுக்கில்லாத
ஆழ்கடலின் முத்து இவர்,
கறுப்பு வைரம் அவர்
காமராசர் எனக்கண்டோம்.
படிக்காத மேதை
பள்ளி சாலைகளை
படைத்துவிட்ட விடிவெள்ளி.
கருணா குழுமத்தின்
திராவிட சதி மோத
இதயம்
உடைந்துருகி
அவர் இறந்த வரலாறு,
மக்கள் மனங்களில்
தீ சுட்ட புண்னாக
தீய்ந்து கிடக்கிறது.
நேற்றல்ல இன்றும் நாளை
மறுநாளும்
நீக்கமற நெஞ்சில் வாழுகின்ற
சுத்த தமிழ் வித்து
கர்ம வீரன்
காமராஜர்.
-----------------------------
பாரதிதாசன்.
தமிழை அமிழ்தென்றார்
தமிழே உயிரென்றார்,
தலை போய் தொலைந்தாலும்
தான் மறவேன்
தமிழ் என்றார்.
முறை தவறி
தமிழ் வளர்த்தால்
முகத்தினில் அறை என்றார்.
பாரதியின் தாக்கத்தில்
பக்தியுடன்
கவி புனைந்தார்
கனக சுப்பு பெயர் மாறி
பாரதிதாசன் என
பண் தமிழில்
நாம் கண்டோம்.
-----------------------------
கருணாநிதி.
திருட்டு ரயிலேறி
திராவிடத்தில்
இடம் பிடித்தார்.
அண்ணாவும் பெரியாரும்
அகராதி என்றவுழ்த்து விட்டார்.
மூன்று மணம் புரிந்தார்
முப்பது பேரை வைத்திருந்தார்.
காகம்போல் கரகரத்தார்
கடைசிவரை பொய்யுரைத்தார்.
ஊழல் பொய் வாழ்வாகி
உலை மூடி போல் வாழ்ந்தார்
நாச படுகொலைக்கு
நடு நாயகமாய்
அடுப்பெரித்தார்.
சாகும் வயதினிலும்
சகுனிபோல் தான் வாழ்ந்தார்.
தட்சணாமூர்த்தி என்றும்
கருணா நிதியென்றும்
வடமொழியில் பெயரமைத்து
தமிழன்
தீராத சிறுமைபட
திக்கெட்டும் பழியானார்.
-----------------------------
அட்டை கத்தி ரஜனிகாந்த்.
------------------------------
மராட்டியில் கருவாகி,
கன்னட
மானிலத்தில் அவதரித்தார்
முறுக்கு தெறித்தாற்போல்
முப்பொருளில் வசனமிட்டார்
வறுமை தமிழினத்தின்
உழைப்பு அனைத்தையுமே
தன் பொருளாய்
காவுகொண்டார்.
படத்துக்கு படம் பஞ்சு
டயலாக்கு பறக்கவிட்டார்
கவுத்து மடி நிறைத்தார்
காரியத்தில் குறியானார்.
பச்சோந்தி என்ற பெயர்
மொத்த பொருந்தி நின்றார்.
மொட்டை தலையாகி
முகமெல்லாம் புலையாகி
நிச்சியமில்லாத
நடு இரவு சாமத்தில்
செல்லா காசு இவரை
கல்லாக நட்டு
கபாலி என்று பெயருமிட்டு
இல்லாத ஊருக்கு
வழிகாட்டும் ஊடகங்கள்.
நெருப்பென்றார்
பருப்பென்றார்
கபாலி
ஓய்ந்தவுடன்
காணாமல் போய்விடுவார்.
-ஊர்க்குருவி-
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment