வன்னியில்
2008 ,2009 களில் விடுதலைப்போர் உக்கிரமாக நடந்துகொண்டிருந்தபோது,
இந்திய மத்திய அரசில் மிகப்பெரிய ஆதிக்க சக்தியாக பங்கு வகித்தவர்
முத்துவேல் கருணாநிதி,
தமிழ் மக்களுக்கான முதலமைச்ர் என்ற பெயரோடு, தமிழ்நாடு மானிலத்தில்
இருந்துகொண்டு, ஈழ இனப்படுகொலையை நடத்தி முடித்த இலங்கை, இந்திய
ஆட்சியாளர்களுக்கு சற்றும் குறைவில்லாத இணையாக, தனது அனைத்து அதிகார
தந்திரங்களை திருப்பிவிட்டு தமிழ்நாட்டு மக்களை அடக்கி ஒடுக்கி அனைத்து
தமிழக ஊடகங்களையும் தனது அதிகாரத்தினால் கட்டுப்படுத்தி, முள்ளிவாய்க்கால்
எரிந்து முடியும்வரை பல்வேறுபட்ட கபடத்தனமான அரசியல் ஒப்புவாயங்களையும்,
நஞ்சுத் தனமான நாடகங்களை நடத்தி ஈழத்தமிழனத்தின் உயிரோட்டத்தையே
அழிப்பதற்கான மூல வேராகி விபரிக்க முடியாத மிகப்பெரிய துரோகியாக
இருந்தவர் நவீன நரகாசுரன் முன்னை நாள் முதலமைச்சர் மு கருணாநிதி.
கருணாநிதி
மற்றும் சோனியா, பிரணாப், சிதம்பரம் கூட்டாளிகளின் கபடமான தமிழ் ஈழ விரோத
செயற்பாட்டை பொறுக்கமுடியாத தமிழகத்து கல்லூரி மாணவர்கள், சட்டத்தரணிகள்
இன்ன பிற பல அமைப்புக்கள், பொதுமக்கள் என்று ஒட்டு மொத்த தமிழ்நாடே
திரண்டு தெருவுக்கு வந்து முடிந்தவரை போரை நிறுத்துவதற்காக கருணாநிதியின்
ஆட்சி நிர்வாகத்தை மண்டியிட்டும் உயிரை விட்டும் பல வடிவங்களில் போராடி
தோல்வி கண்டனர்.
அன்றைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதா,
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நெடுமாறன் போன்ற தலைவர்கள் உண்ணாவிரதமிருந்து
போராட்டத்தை நிறுத்தும்படி மத்திய மானில அரசுகளை கேட்டு தமது எதிர்ப்பை
பதிவு செய்தனர். எந்தப்பலனும் கிடைக்க கருணாநிதி விடவில்லை.
இன்னொரு
பக்கம் தியாகி முத்துக்குமார் தொடங்கி இருபதுக்கு மேற்ப்பட்ட
உணர்வாளர்கள் தமிழகத்து தெருக்களில் தீக்குளித்து தினம் தினம் கருகி
மாண்டனர்.
சோனியா அரசு எடுத்துக்கொண்ட முடிவுக்கு மாறாக ஒரு மண்ணைக்கூட அசைய கருணாநிதி அனுமதிக்கவில்லை.
சோனியாவின்
கட்டளையை விடவும் இன்னொரு படி மேலே போய் நோய்வாய்ப்பட்டு மருத்துவத்துக்கு
வந்த தேசியத்தலைவர் வே பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதி அம்மாவை
முதியவர் என்றும் பார்க்காமல் வஞ்சகத்தின் உச்சமாக விமான நிலையத்திலிருந்து
ஒரு மணி நேரத்தில் திருப்பி அனுப்பினார் கருணாநிதி.
விஞ்ஞானத்துக்கே
புலப்படாத கருணாநிதியின் கயமை மனதை எந்த சக்தியாலும் கரைகாண முடியவில்லை.
நவீன நரகாசுரனான கருணாநிதி தனது குடும்ப செல்வச் செழிப்புக்காக ஈழத்தமிழ்
மக்களை புழுக்களை விடவும் மலிவாக அன்றைக்கு நடத்தினார்.
தமிழகத்தின்
கொந்தளிப்பு அதிகரிக்கும்போது செய்வதையும் செய்துகொண்டு நாரிப்பிடிப்பு
என்று பாசாங்கு செய்து லுங்கியை கட்டிக்கொண்டு இராமகிருஷ்ணா
மருத்துவமனையில் சென்று பதுங்கினார், நிலமை முற்றியபோது உச்சக்கட்ட கபட
நாடகமாக தானும் உண்ணாவிரதமிருப்பதாக வேடங்கட்டி முள்ளி வாய்க்கால் எரிந்து
சாம்பலாகும்வரை தன்னாலான அனைத்து நாடகங்களையும் நடத்தி வெற்றி கொண்டார்
நவீன நரகாசுரன் கருணாநிதி.
ஈழ இனப்படுகொலையின் மூலவேரான
கருணாநிதியின் வரலாற்று துரோகத்திற்கு எதிராக பலத்த எதிர்ப்பு உலக
தமிழர்கள் மத்தியில் எழுந்திருந்தது,
அந்த களங்கத்திலிருந்து
தப்பிப்பதற்காக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை சென்னையில் நடத்தி ஈழத்து
கல்விமான்களை மேடையேற்றி தனது களங்கத்தை திசை திருப்ப கருணாநிதி
முயன்றபோது அதற்கு தமிழ் ஆராய்ச்சி அமைப்பு குழுவிடமிருந்து எதிர்ப்பு
கிளம்பியது.
தமிழாராய்ச்சி மாநாடு என்ற பதத்தை மாற்றி செம்மொழி
மாநாடு என்று புதியதொரு வியாக்கியானத்தோடு விழாவை எடுத்து தனது களங்கம்
விட்டுப்போய்விடும் என்று நம்பி ரூபா 311.5 கோடி செலவு செய்து சொம்மொழி
மாநாட்டையும் 2010 ல் கோவையில் நடத்தி நரகாசுரன் கருணாநிதி குடும்பத்துடன்
குதூகலித்து மகிழ்ந்தார்.
இருந்தும் உலகத் தமிழினத்தின் எதிர்ப்பு
கருணாநிதி மீது மையம் கொண்டு பெருத்த விரிசல் உருவாகி வருவதை உணர்ந்த
கருணாநிதி அந்த விரிசல் ஒரு நிறுவனப்பட்ட எதிர்ப்பாக திரண்டு விடுவதை
தடுப்பதற்காக பல மேடைகளை திறந்து தனது திரை மறைவு தமிழின விரோத
செயற்பாடுகள் அனைத்தையும் மூடி மறைத்து தனிமைப்பட்டு போகாமல்
தப்பிப்பதற்கு பல மேடைகளை திறந்து வேடங்கட்டினார்.
கருணாநிதியின்
நயவஞ்சகம் அனைத்திற்கும் பக்கபலமாக அன்றும் இன்றும் அரணாக நிற்கும் சில
பிரபலங்களில் சினிமா பாடலாசிரியர் வைரமுத்து, பேராசிரியர் சுபவீர
பாண்டியன், திராவிடர் கழகத்தின் தலைவர் வீரமணி, விடுதலை சிறுத்தைகள்
கட்சித்தலைவர் தொல் திருமாவளவன். போன்றோர் முன்னிலையில் இருந்து
வருகின்றனர்.
முள்ளிவாய்க்காலில் அன்றாடம் ஆயிரம், ஐந்தாயிரம்,
பத்தாயிரம், நாற்பதாயிரம் என்று மக்கள் கொல்லப்பட்டபோதும், தமிழ்நாட்டின்
மண்ணின் மைந்தர்கள் இருபதுக்கு மேற்பட்ட பொது மக்கள் தீக்குளித்து
மாண்டபோதும், குறிப்பிட்ட வைரமுத்து, சுபவீர பாண்டியன், வீரமணி,
திருமாவளவன் போன்ற அந்த பிரபலங்கள் கருணாநிதியின் செயற்பாட்டை கண்டித்து
குரல் கொடுக்காமல், கருணாநிதி மக்களை திசை திருப்ப திட்டமிட்டு நடத்திய
சினிமா களியாட்ட நிகழ்ச்சிகளில் கூட்டுச் சேர்ந்து பச்சோந்திகள் போல
புத்துணர்வுடன் கலந்து வஞ்சக புகழ்ச்சி செய்து இனத்துரோகியான கருணாநிதியை
எதுகை மோனை வசன நடையில் புகழ்ந்து தள்ளிய வீடியோ பதிவுகள் இன்றும்
வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இன்றைக்கு கருணாநிதி தனக்கும்
ஈழப்படுகொலைகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றும், இனப்படுகொலை
நடைபெறும்போது இந்திய அரசியலில் எந்த அதிகாரமும் இல்லாமல் இருந்தவர்
போலவும், செத்துப்போன சடலம்போல கோமாவில் இருந்தவர்போலவும் மேடைகளில் பேசி
கடைந்தெடுத்த அயோக்கியத்தனமான அரசியல் செய்துகொண்டிருக்கிறார்.
ஒரு
புறம் அதிக விகிதாசாரத்திலுள்ள மக்களோ உலகமோ அதை
ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், இரண்டும் கெட்டான் மனநிலையில் உள்ளவர்களான
விளிம்பு நிலை மனிதர்களும். படிப்பறிவில்லாத இளைய சந்ததியும் கோயபல்ஸ் போல
கருணாநிதி குழுமத்தால தொடர்ச்சியாக திரித்துக்கூறப்படும் பொய்களை நம்பி
கருணாநிதி சூழ்நிலை குற்றவாளியோ என்று எண்ணும் வண்ணம் பிரச்சாரங்கள்
முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதனால் காலப்போக்கில் இளைய தலைமுறை
ஒருவித மயக்கமடையும் அபாயம் இருப்பதால் இதுபோன்ற துரோகிகளை தினமும்
சமூகத்துக்கு ஞாபகப்படுத்தவேண்டிய பாரிய பொறுப்பு எனக்கு மட்டுமல்ல அனைத்து
உணர்வாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் உண்டு.
உதாரணத்துக்கு புத்த
பிக்குக்காளால் திட்டமிட்டு திரித்து எழுதப்பட்ட "மஹாவம்ஷம்" என்ற
கிரந்தம் இலங்கையின் உண்மையான வரலாற்றை சந்தேகிக்கும் வண்ணம் பல பொய்த்
தகவல்களை உலக மட்டத்தில் பரப்பியிருக்கிறது.
இன்றைக்கு கருணாநிதி
ஓரளவுக்கு தனிமைப்படுத்தப்பட்ட ஒரு அரசியல்வாதி ஆக்கப்பட்டிருக்கிறார்,
இருந்தும் மக்கள் மந்தைக்கூட்டம் போன்றவர்கள் மறக்கும் மனநிலையுடையவர்கள்
என்ற நம்பிக்கை அனுபவசாலியான கருணாநிதியிடம் அதிகமாக இருப்பதை உணர
முடிகிறது.
தான் மட்டுமே வரலாற்று உண்மையை திரிவு படுத்தி
கொண்டிருந்த கருணாநிதி பொறுத்த கட்டங்களில் கீ வீரமணி, சுபவீர பாண்டியன்,
பாடலாசிரியர் வைரமுத்து போன்றோரின் பலவீனத்தை சாதகமாக பயன்படுத்தி
தன்பாட்டிற்கு அவர்களை சிலாகித்து புகழ்ந்து தனது கட்டுப்பாட்டிலிருந்து
அவர்கள் வெளியேறவிடாமல் தனது அரணாக பயன்படுத்தி வருகிறார்.
கருணாநிதியின்
கபட வித்தையை பலப்படுத்தும் வண்ணம் சினிமா பாடலாசிரியரான வைரமுத்து
கருணாநிதியின் ஆட்சிக்காலத்தி கருணாநிதி முன்னின்று நடத்தி முடித்த
(2009,மே) இனப்படுகொலையை, வேறு திசைப்பக்கமாக தந்தரமாக திருப்பும்
வேலைத்திட்டம் ஒன்றை தொடங்க இருப்பதாக தெரிகிறது.
அடுத்த ஆண்டு என்ன செய்வதாக உத்தேசம்? என்று ஒரு கேள்வியை ஆனந்தவிகடன் பத்திரிகையில் எழுப்பி.
அடுத்த
ஆண்டில், இலங்கையில் நடந்த படுகொலைகள் தொடர்பான ஆக்கங்களை படைக்கப்போவதாக
சினிமா பாடல் ஆசிரியர் வைரமுத்து வெட்கம் கெட்டு கயமையான கருத்து ஒன்றை
தெரிவித்துள்ளார்.
கருணாநிதி முதலமைச்சராக இருந்து இனப்படுகொலை
நடத்தப்பட்ட 2007, 2008, 2009, களிலும் சரி அதன்பின்னும் சரி
ஈழப்படுகொலைகளுக்கு எதிர்ப்பாக நிமிர்ந்து நின்று குரல் கொடுக்க முடியாத
பச்சோந்தி வைரமுத்து படுகொலைகளை எதிர்த்து தீக்குளித்த இருபது உயிர்களை
நியாயப்படுத்தி ஒரு குரல் கொடுக்காத வைரமுத்து, கருணாநிதியுடன் நெருக்கமாக
இருந்தபோதும் பாராட்டு விழாக்களில் மூச்சடக்கி வசனம் பேசியபோதும்
இனப்படுகொலை பற்றி��்டி புதைக்க திட்டமிட்டு தொடங்கப்படும் வைரமுத்துவின்
வஞ்சக ஒப்பாரியை தமிழகத்து உண்மை தமிழர்கள் இனங்காணவேண்டும் என்பதற்காக
ஊர்க்குருவி ஆள்க்காட்டியாக இன்று குரல் கொடுக்கிறது.
தமிழகமே தமிழினமே சிந்தித்துப்பார்.
கருணாநிதியின்
காலடியில் கிடப்பவன் ஈழத்தமிழினத்துக்கு ஆதரவாக ஏதாவது எழுதுவானா? அப்படி
எழுதப்புறப்பட்டால் அந்த ஆக்கத்தில் என்ன மிதப்பாக இருக்கும்.
கருணாநிதி
பராசக்தியில் வசனமெழுதி தமிழ்நாட்டை கைப்பற்றியதுபோல வைரமுத்து
ஈழப்படுகொலைக்கு வசனமெழுதி கருணாநிதியை பிணையெடுக்க நிற்கும் சதியை தமிழகமே
அம்பலப்படுத்து.
வைரமுத்து தொடர்ந்து திரைப்படத்துக்கு பாட்டெழுதட்டும் ஈழப்படுகொலையை திரிவுபடுத்தி பூங்காவனம் அமைக்க வேண்டாம்.
கருணாநிதியின் உயிர் நண்பன் வைரமுத்துவின் ஈழ அந்தாதி இன்னுமொரு மகாவம்ஷமாக அமைந்துவிடும்.
ஊர்க்குருவி.