Thursday, June 30, 2011

போர் குற்றவாளி ராஜபக்க்ஷவுக்கு தமிழ் நாட்டிலிருந்து இன்னுமொரு நெருக்கடி.

உலக சித்திரவதைகள் படுகொலைகள் (எதிர்ப்பு) தினம் ஜூன் 26, அன்றய தினம் ஈழத்தமிழினத்தின் படுகொலைகளின் நினைவாக தமிழ்நாடு சென்னை மெரினா கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு நிகழ்ந்து முடிந்திருக்கிறது.

'மே17, என்ற ஈழத்தமிழர்கள் ஆதரவு அமைப்பால் இதயபூர்வமாக நினைவுகூரல் ஏற்பாடு செய்யப்பட்டு மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செய்யும் நினைவேந்தல் சிறப்பாக இடம்பெற்றது.

முக்கியமான ஈழ ஆதரவு அமைப்புக்களான, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், மதிமுக, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், உள்ளிட்டோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டனர்.

இந் நினைவு நிகழ்வின்போது, முன்னைய தமிழகத்து ஆட்சியில், தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் அளவுக்கு கடுமையாக இருந்த பொலீஸ் கெடுபிடி இருக்கவில்லை. பொலீஸ் கெடுபிடி இல்லாமைக்கு இன்றைய அ.இ.அ.தி.மு.க. அரசின் ஈழ ஆதரவு, எதிர்ப்பின்மை. அல்லது தமிழ்நாடு அரசு தமிழக மக்களின் மனநிலைக்கு மதிப்பளித்திருக்கிறது எனக்கொள்ள முடியும்.

நிகழ்வின் சிறப்பம்சம் என்னவென்றால் அரசியல் கலப்பற்ற ஒரு அமைப்பான, மே17 இயக்கம், இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருத்தது. மே17, அமைப்பைப்பொறுத்தவரை அவர்களின் தொடர் நடவடிக்கைகளை கவனிக்கும்போது, அவர்கள் உணர்ச்சிமயமான செயற்பாட்டை விட அறிவுபூர்வமாக செயற்படுவதையே நோக்கமாக கொண்டியங்கி வருவது தெரிகிறது.

ஒரு சில அமைப்புக்கள் தவிர, தமிழ்நாட்டின் அனேக அரசியல்கலப்பான அமைப்புக்கள் ஈழ ஆதரவு தளத்தில் சுயநலமான ஏதேதோ நோக்கத்தோடு ஈழ கோசத்தை விட்டு விலகாமல் இரும்புப்பிடியோடு இருந்தாலும், இன்றுவரை அவர்களால் ஈழத்தமிழினத்திற்கு எந்தப்பயனும் விளைந்திருக்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

தமிழகத்திலுள்ள அனேக அமைப்புக்கள் மக்களின் உணர்வை தூண்டிவிட்டு தாம் சொகுசாக வாழுவதற்கே முழு முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கின்றன. அவைகளின் செயற்பாடுகள், குமுறி கொந்தளிக்கும் மக்களின் உணர்வை அவ்வப்போது கட்டுக்குள் கொண்டுவரும் கோசங்களாகவும், வெற்று தீர்மானங்களாகவும், தமது இருப்பை தக்கவைத்துக்கொள்ள உகந்த ஏமாற்றாகவே உள்ளடி வேலைகளை திரைமறைவில் நிகழ்த்தி தமிழ்நாட்டில் வாழ்ந்திருக்கின்றன.

இவைகளில் முன்னணியில் உள்ள திமுக, மற்றும் விடுதலைச்சிறுத்தைகள், பாமக போன்ற சுயநலன் சார்ந்த அரசியல் கட்சிகளை இனங்காண முடியும். இந்த அமைப்புக்கள்தான் தமிழ்நாட்டின் ஈழ போராட்ட எழுச்சியின் அழிவுக்கு காரணமான சக்திகள் என்பதும் உலக மூலையில் இருக்கும் ஒவ்வொரு சாமானியத் தமிழனும் அறிவான்.

கருணாநிதியின் திமுக வை பொறுத்தவரை தனது குடும்ப முன்னேற்றம் தவிர்ந்து, என்றைக்கும் அக்கட்சி ஈழத்தமிழருக்கு ஆதரவாக கடுகளவும் நேர்மையாக இருந்ததில்லை.

ஈழப்போராட்ட ஆரம்பத்திற்கு முன்பிருந்தே, தமிழ்நாட்டில் அதிக தொண்டர்களை கொண்ட கட்சிகளாக அதிமுக, மற்றும் திமுக, போன்ற கட்சிகள் இருந்து வருகின்றன.

தமது கட்சி கட்டுப்பாட்டின் இருப்பிலிருக்கும் தொண்டன் திசைதிரும்பி வெளியேறிவிடாமல் தடுப்பதற்காக, ஈழ வித்தையும், தமிழ்வேசம் போடவேண்டிய தேவையும் அவர்களுக்கு இருந்ததுண்டு. ஈழம் கொலைக்களமானபோது தொண்டனின் மனக்குமுறலான கொந்தளிப்பு நிலையை ஏற்றுக்கொண்டதுபோல் காட்டிக்கொள்ள பல்வேறு நாடகங்களும் தந்திரமும் கருணாநிதி, திருமாவளவன், ராமதாஸ் போன்றோரிடம் இரண்டறக்கலந்து அவர்களது பிறப்பு வாசியாக இன்றும் தொடர்கிறது.

கருணாநிதியின் அரசியல் வாழ்வில் தமிழீழத்திற்கென்று 1958 இருந்து 2011 வரை மில்லியன் கணக்கான வாக்குறுதிகளும் தீர்மானங்களும், அனுமன் வால்போல அவர் சளைக்காமல் பட்டியல் இட்டு தனது குடும்ப சுகத்தை நிறைவேற்ற உதவியிருக்கிறது.

2011 ஏப் நடந்த சட்டமன்றத்தேர்தல், ஈழப்படுகொலைக்கு துணை நின்ற தமிழகத்து துரோகிகளை களங்கமற இனங்காட்டியது. ஈழப்படுகொலைக் கோபம், இந்த நாடக அரசியல் பண்டிதர்களின் புலுடாவால் கட்டுப்படுத்த முடியவில்லை. துரோகத்தின் வேசம் கலைக்கப்பட்ட தேர்தலாகவும், திமுக, விடுதலைச்சிறுத்தைகள். மற்றும் பாமகவுக்கு, சரியான சூடு வைத்த தமிழகமக்களின் வெற்றியாகவும் 2011ஏப் வரலாற்றில் அமைந்துவிட்டது.

இன்று ஆட்சியிலிருக்கும் ஜெயலலிதா அவர்களின் அதிமுக, பகிரங்கமான ஈழ, புலி, எதிர்ப்பு கட்சி என்று பலரும் பார்க்கமுடியும். இதில் உண்மையில்லாமலும் அல்ல, ஆனால் அக்கட்சி இன்று மக்களின் மனவோட்டத்தை உணர்ந்து யதார்த்தத்தை ஓரளவு புரிய தலைப்பட்டிருக்கிறது. கொள்கைகளில் நிறைய மாற்றத்தை கொண்டுவந்திருக்கிறது. மக்களின் நாடித்துடிப்பை நன்கு அறிந்து, வெற்றி தோல்வியின் வீரியத்தை படிப்பினையாக பெற்றிருக்கிறது. என்று படுகிறது.

முதலமைச்சர் ஜெயலலிதா பகிரங்கமாக சொல்லாவிட்டாலும், முதல்வர் அவர்களின் ஒவ்வொரு அரசியல் நகர்வுகளும் இந்த உண்மை பிரதிபலிப்பதை காணலாம். ஜெயலலிதா அவர்களின் நடவடிக்கையை அவரது பொதுவான குணம் சார்ந்து ஓரளவாவது அனுபவ ரீதியாக அனுமானிக்க முடியும்.

கருணாநிதியைப்போன்று உள்ளொன்றுவைத்து புறம் ஒன்று பேசுவது, தந்தரமான சொல்லாடல்கள், முகஸ்துதியான பேச்சுக்கள் முதல்வர் ஜெயலலிதாவிடம் பெரும்பாலும் காணமுடியாதது. பட்டதை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று சிலகட்டங்களில் நடந்துகொள்வாரே தவிர, ஒருவரை திருப்திப்படுத்துவதற்கு பொய்யான வாய் ஜாலம் நாடகம் போடுவதெல்லாம் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அகராதியில் கிடையாத ஒன்று. இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே தமிழகத்து தமிழனும் உலக தமிழினமும் ஜெயலலிதா அவர்களை ஓரளவேனும் நம்புகின்றனர்.

வரலாறு காட்டிய அரசியல் முதிர்ச்சி காரணமாக, தமிழக மக்களின் மனநிலையை ஜெயலலிதா நன்கு உணர்ந்திருக்கிறார். தனது விட்டுக்கொடுக்காத முன்னைய கடும்போக்கு வீழ்ச்சியை விளைவிக்கும் என்பதை நன்கு புரிந்துமிருக்கிறார்.

ஈழப்பிரச்சினை தீர்க்கப்பட்டால் நன்றிக்கடன் காரணமாகவும்,, தீர்க்கப்படாவிட்டால் நம்பிக்கைத்துரோகம் காரணமாகவும்,, இன்னும் ஒரு பத்தாண்டுகாலம் ஈழப்பிரச்சினை தமிழ்நாடு அரசியலை ஆளும், என்ற உண்மை யதார்த்தத்தை உணர்ந்திருக்கிறார். அதுதான் நிஜம் என்பதையும் கடந்த கால அரசியலில் ஜெயலலிதா மட்டுமல்ல இன்னும்பல அரசியல்வாதிகள் பாடமாக கற்றிருக்கின்றனர்.

ஜெயலலிதா அவர்கள் தான் தீர்க்கமாக முடிவெடுத்து முனைப்பு காட்டும் முயற்சிகளில் வரும் தடைகளையும் அவர் இலேசாக விட்டுவிட மாட்டார் என்பதும் நிச்சியம். தனக்கு பிடிக்காதவற்றை நேரடியாகவே மறுத்துவிடும் துணிச்சலும் அந்த நேர்மையும் ஜெயலலிதா அவர்களிடம் இருக்கிறது.

இந்நிலையில் தமிழக மக்களின் விருப்பத்திற்கமைய தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஸ்ரீலங்கா அரசுத் தலைவருக்கு எதிரான தீர்மானத்தை முதலமைச்சர் ஜெயலலிதா ஜூன் முற்பகுதியில் முன்மொழிந்து நிறைவேற்றினார். இத்தீர்மானம் பற்றி பலதரப்பட்ட ஊகங்களும் கருத்துக்களும், எதிராகவும் சாதகமாகவும் வந்துகொண்டிருக்கின்றன.

முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவுடன் இந்திய மத்திய அரசு தடாலடியாக பணிந்து தீர்மானத்தை நிறைவேற்றிவிடும் என்பதும் சுவாரஸ்யமான கற்பனைதான்.

சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மறுநாள் மத்திய அரசின் மூவர் குழு சென்னைக்கு வந்து முதலமைச்சரின் எண்ணக்கருவை கேட்டறிந்த பின் ஸ்ரீலங்கா சென்று திரும்பியது. மறுநாட்செய்திகளிலேயே தமிழ்நாடு அரசின் தீர்மானம் கவனத்தில் கொள்ளப்பட்டதற்கான சான்று எதுவும் காணப்படவில்லை மத்திய அரசின் தூதுக்குழு ஸ்ரீலங்கா அரச தரப்பிடம் தமிழ்நாட்டின் உணர்வை எடுத்துச்சொன்னதாகவும் தெரியவில்லை.

இரண்டு நாடுகளுக்கிடையே நடைபெறும் இராசதந்திர பேச்சுக்களின்போது ஒரு மானில அரசின் கருத்தை நேரடியாக வலியுறுத்தாமல் பொதுவான கொள்கையாக அக்கருத்தை முன்னிலைப்படுத்தவேண்டிய கட்டாயம் ஒரு அரசுக்கு உண்டு. ஆனாலும் இந்திய அரசின் மோசமான பலவீனம் ஸ்ரீலங்கா அரசுடன் வெட்டு நறுக்காக எதையுமே பேசித்தீர்க்க இதுவரை முடிந்திருக்கவில்லை. அதற்கு வேறு உட் காரணங்களும் இருக்கக்கூடும்.

மூத்த மந்திரிகள் பிரணாப் முகர்ஜி, கிருஷ்ணா. தொடங்கி வெளியுறவு செயலாளர் நிருபாமா ராவ், வரை எத்தனையோ மட்ட தூதுக்குழுக்களின் கால விரையமும் பணவிரையமும் தவிர, ஸ்ரீலங்காவின் செயற்பாட்டில் ஈழத்தமிழ் இனம் சார்பாக சிறு துரும்பைக்கூட இந்தியாவால் இடம் மாற்ற முடியவில்லை. 2020ல் இந்திய என்கிற பிச்சைக்கார ஊழல் நாடு வல்லரசாகிவிடும் என்பது மட்டும் அரசியல் மட்டத்திலிருந்து விசுவின் மக்கள் அரங்கம்வரை குத்துப்பாட்டாக வலம்வருகிறது.

இப்படியிருக்கும்போது மீண்டும் தமிழ்நாடு அரசு தீர்மானம் எதையாவது நிறைவேற்றப்போகிறதா ஈழம் அல்லது இலங்கை தமிழர் சார்ந்து ஏதாவது போராட்ட நடவடிக்கைகளுக்கு அறிவிக்கப்போகிறதா என்று பலரும் சிந்திக்கின்றனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களும் எந்த எதிர்விளைவையும் காட்டிக்கொள்ளவுமில்லை. அப்படியானால் கருணாநிதி முன்பு பலதடவை கூறியதுபோல ஒரு அடிமைக்கு இன்னொரு அடிமை எந்தவிதத்தில் உதவ முடியும், இன்னொரு நாட்டின் விவகாரத்தில் ஒரு மானில அரசாங்கம் ஒரு அளவுக்குத்தான் தலையிட முடியும் என்பதுதான் நடைமுறைச்சாத்தியமா என்றும் சிந்திக்க இடமிருக்கிறது.

ஒரு நாடு நெருக்கடிநிலையில் இருக்கும்போது, உள்நாட்டு கிளர்ச்சி அல்லது போர் ஏதாவது நடந்துகொண்டிருக்கும் நிலையில், உதவி செய்யும் பொருட்டோ, சிக்கலை தீர்த்து வைக்கும் பொருட்டோ இன்னுமொரு நாடு தலையிட முடியும் என்றும் ஐநா சாசனம் சொல்லுகிறது. அது தகுதியுள்ள அயல் நாடாக இருந்தால் இன்னும் கூடுதல் முன்னுரிமையுமுண்டு என்றும் வரையப்பட்டிருக்கிறது. அந்த சாரத்துக்கமையத்தான் தமிழ்நாடு சட்டசபை தீர்மானத்தின் தாக்கம் நகர்த்தப்படவேண்டும்.

போர்த்தலையீடாக இருந்தால் மட்டும் ஐநா பாதுகாப்புச்சபையின் அனுமதியில்லாமல் எந்த ஒருநாடும் இன்னுமொரு நாட்டுக்குள் தன்னிச்சையாக தலையிட முடியாது.

ஆனால் இந்தியா இந்த மரபைமீறி ஈழப்போரின் போது இரகசியமான போர் தலையீடு செய்து இராணுவ ரீதியில் ஸ்ரீலங்கா அரசுக்கு உதவியதற்கான குற்றச்சட்டு புகைப்பட ஆதாரங்களுடன் இருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை உறுதிப்படுத்தப்பட்டால் சர்வதேச சட்டப்படி இந்தியாவும் போர் குற்றம்புரிந்த நாடாக சர்வதேசத்திற்கு இனங்காட்ட முடியும்.

வல்லாதிக்க சக்திகளிடம் ஐநா சபை கட்டுண்டு மூழ்கிப்போயிருப்பதால், ஈழத்தமிழினம் போன்ற சிறிய பிரிவால் இந்தியாவை குற்றவாளியாக்க முடியுமா என்பதும் பில்லியன் டொலர்க் கேள்வி! உலகத்தின் கண்முன் கொத்துக்கொத்தாக தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களால் தமிழினம் சிங்களவனால் அழிக்கப்பட்ட கொடுமைக்கு அனைத்து உயர் அமைப்புக்களும் ஒருவரை ஒருவர் ஆள்க்காட்டிக் கொண்டிருக்கும்போது சிங்கள அராஜகத்திற்கு மறைந்திருந்து உதவிய இந்திய கொடுங்கோலை உலகத்துக்கு இனங்காட்டுவது யார்?

போர் முடிவுக்கு வந்துவிட்ட ஸ்ரீலங்கா போன்ற ஒரு தேசத்தில், போருக்குப்பின் காரணமின்றி வேறு எந்த ஒருநாடும் தலையிட முடியாது என்று சில கருத்துக்கள் சிலநாடுகளாலும் ஸ்ரீலங்கா அதிபராலும் முன் வைக்கப்படுகின்றன.

இலங்கையில் போர் முடிவுக்கு வந்து சுமூகநிலை ஏற்பட்டிருந்தால் அங்கு வாழும் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்புடன் நீதியான வாழ்வாதாரம் கிடைத்திருக்கவேண்டும். சிக்கலற்ற சுதந்திர உணர்வு காணப்படவேண்டும். தடங்கலற்ற பேச்சு சுதந்திரமாவது கிட்டியிருக்கவேண்டும். இவைகளை அரசசார்பற்ற மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் சர்வதேச பொது தொண்டர் அமைப்புக்கள் உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். குறைந்தபட்ஷம் பாரபட்சமற்ற சக்திவாய்ந்த ஒரு ஊடகம் செய்தியாவது வெளியிட்டுருக்கவேண்டும்.

மேற் சொன்ன எதுவும் ஸ்ரீலங்காவில் நடைபெறவில்லை. நாட்டின் நெருக்கடி நிலையும் "அவசரகாலச்சட்டமும்" போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து அமூலில் இருந்து வருகிறது. வீடு வாசலற்று மரங்களின் கீழ் வாழும் மக்களின் இருப்பிடமும் நாளுக்கு நாள் இராணுவத்தால் சோதனைக்குள்ளாக்கப்படுகிறது. விசாரணைக்கென்று அழைத்துச் செல்லப்படும் விதவைப் பெண்கள் வீடுதிரும்புவதில்லை.

ர்வதேச மட்டத்தில் ராஜபக்க்ஷ படு மோசமான போர் குற்றவாளி என்றும், இனவெறி கொண்டு ஒரு இனத்தை மோசமாக அழிக்கிறான் என்றும், அதற்கான ஆதார காணொளிகளை திகதி வாரியாக உலக தொலைக்காட்சிகள் மிக வருத்தத்துடன் ஒளிபரப்புகின்றன.

போர் மட்டும் நிறுத்தப்பட்டிருப்பது ஒத்துக்கொள்ளவேண்டிய ஒன்றுதான். ஆனால் ஸ்ரீலங்கா முழுவதும் தொடர்ச்சியாக போர்க்கால கட்டமைப்புக்களே பரவி காணப்படுகின்றன.

மக்கள் சொந்த வீடுகளுக்கு சென்று வாழும் சூழல் பூச்சியமாயிருக்கிறது, மக்களின் சுதந்திரம் எவராலும் உறுதிப்படுத்தப்படவில்லை. இராணுவ வல்லாதிக்கம் கட்டுப்பாடற்று தலையீடு செய்கிறது , அவசரகாலச்சட்டம் என்கிற கொடுமையான இராணுவச்சட்டம் நீக்கப்படவில்லை. சிவில் நிர்வாக அமைப்புக்கள் இராணுவ கொட்டடியில் முடங்கி கிடக்கின்றன,

இந்த அடிப்படையில் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் ஈழத்தமிழ் மக்களுக்கு உதவ சக்தி வாய்ந்த எவராவது தலையிட்டாகவேண்டிய கட்டாயம் ஸ்ரீலங்காவுக்குள் நிறையவே காணப்படுகிறது.

ஒரு மோசமான பாசிச போர்குற்றவாளியின் அராஜக ஆட்சிப்பிடியில் தொடர்ச்சியாக குந்தகம் அனுபவிக்க அந்த துயரத்தை சுமந்த மக்களால் இனியும் முடியாது என்பதை உலகம் உணரவேண்டும்.

போர்க்கால சூழலை விட மிக மோசமாக பாதிப்புக்குள்ளாகியிருக்கும் அம்மக்களின் கையறுநிலையை திரிவுபடுத்தி இங்கு எவரும் போர் நிறுத்தம் சம்பந்தமாக ஸ்ரீலங்கா அரசுத்தலைவருடன் பேச முயலுவதாகவும் எந்த தரவுமில்லை.

அபிவிருத்தியும் அந் நாட்டின் சிறுபான்மை மக்களான தமிழர்களது உயிர் அச்சுறுத்தலற்ற அன்றாட பாதுகாப்பான வாழ்வுக்கான அரசியல் அதிகாரங்களும் கிடைக்க வழி செய்யவேண்டும் என்பதே தலையிடுபவர்களின் குறியீடு.

போர்நடந்து முடிந்த நாடாக, மக்கள் அச்சமின்றி வாழக்கூடிய சூழல் ஏற்பட்டிருந்தால், கேள்வி கேட்க எவரும் முனைப்புக்காட்டியிருக்க மாட்டார்கள். தேவையும் இருந்திருக்காது. போர் முடிவுக்கு வந்ததாக ஸ்ரீலங்கா அரசு சுட்டிக்காட்டும் 2009 மே 19ம் திகதிக்குப்பின் சரணடைந்தவர்களையும், சாதாரணமாக இடம்பெயர்ந்து வழி தெரியாமல் இராணுவத்தின் பிடியில் சிக்கி திகைத்தவர்களையும் நீதி விசாரணைக்குட்படுத்தாமல், இனத்துவேசம் காரணமாக சித்திரவதை செய்து கற்பழித்து படுகொலை நிகழ்த்திய ஒரு பாதக அரக்கனை விசாரணைக்குட்படுத்துங்கள் என்பதுதான் இன்றைய உலகத்தின் கேள்வி.

தமிழர்களுக்கு அனுசரணையாக முதலுதவி புரியக்கூடியவர்கள் தமிழர்களே, அந்த உரிமையில்த்தான் தமிழ்நாட்டை ஈழத்தமிழினம் நம்பிக் கொண்டிருந்தது. ஏற்கெனவே இருந்து காலாவதியாகிப்போன தமிழக முதலமைச்சர் கருணாநிதி செய்த மிருகத்தைவிட மோசமான காரியத்தை இன்றய முதலமைச்சர் மாற்றி எழுதுவார் என்று பலர் எதிர்பார்க்கின்றனர்

தொன்று தொட்டு இரத்த உறவு முறையில் உள்ள ஒரே மொழி ஒரே கலாச்சாரத்தைக்கொண்ட, இன்னுமொரு நாட்டில் வாழும் தொப்புள்க்கொடி உறவான தமிழர்கள், தலையிட்டு கேள்வி கேட்பதற்கும் முன்னுரிமை உண்டென்றே கருத இடமிருக்கிறது. மனமிருந்தால் அரசியல் ரீதியாக தலையிடுவதற்கும் சகல உரிமையும் தமிழக அரசுக்குண்டு.

இந்த அடிப்படையில்த்தான் தமிழ்நாட்டு தமிழர்கள் தாமாகவும் அமைப்பு ரீதியாகவும் குழுக்களாகவும் தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு இப்பிரச்சினையை கொண்டுவந்து பல வருடங்களாக போராடி வருகின்றனர். தமிழக மக்களின் நியாயமான மனிதாபிமான கோரிக்கை தமிழ்நாடு அரசு மூலமாகத்தான் இந்திய மத்திய அரசை சென்றடைய வேண்டும். அதன் பிற்பாடு மத்திய அரசாங்கத்தின் நடத்தை பொறுத்து அடுத்த கட்டத்திற்கு தமிழக மக்கள் சென்று சேரக்கூடும்.

இந்த ஒழுங்கு அடிப்படையில் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் சட்டசபை தீர்மானத்தை பார்க்கலாம். சட்டசபையின் தீர்மானத்திற்கான சரியான மறுமொழியை மத்திய அரசு தமிழ்நாடு அரசுக்கு கொடுத்தாகவேண்டும் .தீர்மானத்தை நிராகரிப்பதாக இருந்தால் அதற்கான நியாயத்தையும் வெளிப்படுத்தியாகவேண்டும். ஆனாலும் இத்தீர்மானம் நிராகரிக்க முடியாத தன்மையை கொண்டிருப்பதாக இன மொழி கடந்து உலகம் பரிந்துரைத்துக்கொண்டிருக்கிறது.

இதன் எதிரொலியாகத்தான் சிவ்சங்கர் மேனன் தலைமையிலான தூதுக்குழுவினரின் பிரசன்ம நாடகம் நடத்தப்பட்டது. தீர்மானத்தை நீர்த்துப்போகச்செய்தல், காலவிரயம்பண்ணி இழுத்தடித்தல், இதற்கே மத்திய அரசு முயலக்கூடும். மூன்று வருட ஆட்சி ஆயுட்காலம் இருக்கும் மத்திய அரசு, பெரும்பான்மையற்ற தொங்கு நிலையில் ஓடிக்கொண்டிருக்கிறது. முண்டு கொடுத்துக்கொண்டிருந்த திமுக, ஊழல் நெருக்கடியில் சிக்கி இன்றைக்கோ நாளைக்கோ வெளியேற மறுத்தாலும் வெளியேறவேண்டிய நிலையில் தடுமாறிக்கொண்டிருக்கிறது.

அதிமுக, தனது வலையில் சிக்க மாட்டாதோ என்ற பேரவாவும் மத்திய காங்கிரஸ் ஆரசுக்குண்டு, அப்படி ஆகிவிட்டால் சுலபமாக முன்னைய கருணாநிதி அரசை கையாண்டு ஈழ விவகாரத்தை இழுத்து மூடியதுபோல் நீர்த்துப்போகச்செய்யலாம் என்கிற ராசதந்திரமும் ஒருபுறம் நடக்கிறது. ஆனாலும் முதல்வர் ஜெயலலிதா இதில் சிக்கிவிடுவதற்கான வங்குரோத்து நிலையில் தமிழ்நாடு அரசு இல்லை. வேறு சமிக்ஞைகளும் காணப்படவில்லை.

ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு மிகப்பெரிய பெரும்பான்மையுடன் இருக்கிறது. வரும் ஐந்து வருடங்களுக்கு எவரும் எதுவும் செய்துவிடமுடியாத மக்கள் ஆதரவும் இருக்கிறது.

இந்த ஐந்து வருடங்களில் மக்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு மக்களுக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே, அடுத்த ஐந்தாண்டுகளை அதிமுக சிந்திக்க முடியும். கோரிக்கைகளில் மிகவும் முக்கியமானதாக தமிழ்நாட்டு தமிழன், தமிழ்நாடு அரசின் முன் வைத்திருப்பது ஈழப்படுகொலைக்கான நீதி, அங்கு ஈழதேசத்தில் அனாதரவாக நிற்கும் மனிதருக்கான நிம்மதியான வாழ்வு, இந்த இரு விடயங்களுக்கும் மனிதாபிமான அடிப்படையில் முதல்வர் ஜெயலலிதா ஏதாவது தீர்வு கண்டாகவேண்டும்.

அண்மையில் டில்லிக்கு சென்று திரும்பிய முதல்வர் மரியாதை நிமித்தம் கூட காங்கிரசுத்தலைவி சோனியாவை சந்திக்க விரும்பவில்லை. அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு ஜெயலலிதா அவர்கள் செவ்வி வழங்கியபோது, 2010 ஆண்டு காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்த கருத்துக்கும் இன்றய அரசியல் நிலைக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதாகவும், காங்கிரசுடன் கூட்டு வைக்கவேண்டிய தேவை அதிமுக வுக்கு இல்லை என்றும் தெரிவித்தார்.

வரும் காலங்களில் ஈழப்பிரச்சினை சம்பந்தமாக ஜெயலலிதா அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியில் முனைப்பு காட்டுவார் என்பதே இன்றய அரசியல் நீரோட்டம், மக்கள் சக்தி மூலமாக வழி காட்டுகிறது.

ஜூன் 29, தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் சரத்குமார், சத்யராஜ், தலைமையில் கூடிய திரைப்பட நடிகர் நடிகைகள் முதலமைச்சரை சந்தித்தனர், ராஜபக்க்ஷவை போர்க்குற்றவாளியாக விசாரணைக்குட்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்து பேரணி நடாத்த அனுமதி கேட்டிருக்கின்றனர்.

எந்த மறுப்புமின்றி அனுமதி தருவதாக முதலமைச்சர் ஜெயலலிதா ஒப்புக்கொண்டிருக்கிறார். ஜூன் 26ம் திகதி, மே17, இயக்கத்திற்கு மெரீனாவில் மெழுகுவத்தி ஏந்திய ஒன்று கூடலுக்கு தடையில்லாமல் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தின் மூலம் இதுவரை தமிழ்நாட்டில் ஈழம் பற்றி பேசுவது தேசக்குற்றம் என்றிருந்த நிலை மாற்றப்பட்டிருக்கிறது. ஈழப்போராட்ட அழிவு சூத்திரதாரியாக இருந்த இந்திய மத்திய அரசை நோக்கிய அமைதியான மக்கள் போராட்டத்திற்கு புதிய தமிழக அரசு வழி விட்டு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது.

நாளை சீமான் அவர்களின் நாம்தமிழர் அமைப்பு தமிழ்நாட்டின் அரச அனுமதியுடன் ராஜபக்க்ஷ / இந்திய மத்திய அரசுக்கு எதிராக நிச்சியம் பேரணி நடத்தக்கூடும். இன்னும் பல அமைப்புக்களினதும் மக்களினதும் வாய்ப்பூட்டு உடைக்கப்பட்டிருக்கிறது. காலம் கடந்தேனும் ஈழம் நோக்கிய ஆதார கைகள் கட்டவிழ்ந்து ஒன்றுகூடுகின்றன. இந்த எழுச்சி ஐநா வரை சென்றடையா விட்டாலும் இந்திய மத்திய அரசை நிச்சியம்
நெருக்கடிக்குள்ளாக்கும்.

ஈழதேசம் இணையத்திற்காக.
கனகதரன்,

நன்றி ஈழதேசம் இணையம்.

Wednesday, June 22, 2011

டில்லியில், கண்ணாடியை கழற்றி வைத்துவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி.

தமிழினத்தின் விரோதியாக இனங்காணப்பட்ட, முன்னாள் முதலமைச்சர் மூ கருணாநிதி, அரசிலை,.. அரசியல்,நீதி, சட்டங்களை,.. மக்கள் சக்தியை,.. மனித வாழ்வின் ஏற்ற இறக்கத்தை,..

பாசத்தை,.. புத்திரசோகத்தை,.. காலம் தாழ்ந்து இப்போது நன்கு புரிந்துகொண்டிருக்கிறார். ஜூன் 20 ந் திகதி மூன்றாவது முயற்சியாக டில்லி உச்சநீதிமன்றத்தில் கனிமொழியின் பெயில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அதிர்ச்சியடைந்த கருணாநிதி கறுப்பு கண்ணாடியை கழற்றி வைத்துவிட்டு கண்ணீர்விட்டு அழுதார்.

நாஸ்தீகர், பகுத்தறிவுவாதி சுயமரியாதைக்காரர், என்றும் புலுடா விடும் அவர், விதியைப்பற்றியும்,மனித சாபத்தின் வீரியத்தையும்,கடவுளின் கட்டளையையும் மிக நன்றாக இப்போ புரிந்து கொண்டிருப்பார். இனி கருணாநிதிக்கு எக்காலத்திலும் ஏற்றம் என்பது கிடையாது. பாதாளத்தை நோக்கிய படு மோசமான இறங்கு முகம்தான்.

கருணாநிதியை மனிதனாக திருத்துவதற்கு இறைவன் கொடுத்த பல சந்தற்பங்களை தனது தலைக்கனத்தால், மோசமான பேராசையால் கண்டுகொள்ளாமல் கவிழ்த்து உதாசீனப்படுத்திவிட்ட கருணாநிதி, இன்று சகல வீரியங்களும் இழந்து, பாவத்தின் தண்டனைக் கைதியாக பரிதாப நிலையில்,பொது இடத்தில் என்றைக்குமே கழற்றாத கறுப்பு கண்ணாடியை கழற்றி வைத்துவிட்டு கண்ணீர் விட்டு கதறுமளவுக்கு கர்ம விதி தலைகீழாக புரட்டி அவரை தனது அகோரப்பிடிக்குள் கொண்டுவந்து விட்டது.

இனி அவர் திருந்திவிட்டதாக சுயவாக்குமூலம் கொடுத்தாலும் கடவுள்கூட மன்னிக்கப்போவதில்லை. கடவுளால் கருணாநிதிக்கு கொடுக்கப்பட்ட சந்தற்பங்கள் அனைத்தும் காலாவதியாகிவிட்டது. இனி சாபத்தால் சபிக்கப்பட்ட தண்டனை அனைத்தையும் பெறவேண்டிய சாமானியனே கருணாநிதி.

மகள் கனிமொழியை சிறையிலிருந்து மீட்க கருணாநிதி எடுத்த அனைத்து முயற்சிகளும் கடவுளால் நிராகரிக்கப்பட்டுவிட்டது. இதிலிருந்து அவர் தனது கையில் ஒன்றுமில்லை என்பதை நன்கு புரிந்து கண்ணீர் விட்டு அழுகிறார்.

கருணாநிதியின் வஞ்சகத்தால் எவ்வளவு கொடுமைக்கு ஆட்பட்டவர்களாக இருந்தாலும் ஈழத்தமிழனாகிய எனக்கு கனிமொழியின் நிலமையும் கருணாநிதி படும் துயரும் மனதில் இரக்கத்தை உண்டுபண்ணுகிறது.

ஆனால் இதுபோல பல ஆயிரம் மடங்கு எனது இனம் சிறுமைப்பட்டு சித்திரவதைக்குள்ளாகி தவித்தபோதி இந்த மனிதன் கருணாநிதியும் மகள் கனிமொழியும் அவருடைய ஆடுகால்களும் செய்த வஞ்சகம்.. காலம் கடந்து தண்டிக்கும் குணங்கொண்ட கடவுள் சக்திக்குக்கூட பொறுக்கவில்லை மிக வேகமாக கடவுள் தனது தீர்ப்பை எழுதி தண்டனையை நிறைவேற்றியிருக்கிறார்.

கருணாநிதியின் நிலையை கண்டு பாவம் என்று சொல்லியபோது எனது மனைவியும் குழந்தைகழும் என்னை திட்டித்தீர்க்கிறார்கள். அந்த படு பாதகனை "பாவம்" என்று சொன்னாலே அந்த பழி எங்களை ஆயுட் காலம் முழுவதும் ஆட்கொண்டுவிடும் என்று என் மனைவி சொல்லுவதும் நியாயம் என்றே எனக்கு படுகிறது.

ஈழத்தமிழினத்தின் எண்ணிலடங்காத மனித அவலத்தை கருணாநிதி தனது குடும்ப சுகத்துக்காக வழிமொழிந்து அமைதியாக வெவ்வேறு வியாக்கிஞானங்களை விளக்கவுரைகளாக வெளியிட்டு ஏமாற்றியிருக்காவிட்டால் ஈழப்போராட்டம் இன்று எந்தச்சக்தியாலும் அழிக்க முடியாத உயிர்ப்புடன் இருந்திருக்கும். கருணாநிதியையும் வரலாறு மனிதனாக பதிவு செய்திருக்கும்.

கருணாநிதி என்ற காதகன் தமிழ்நாட்டில் இருந்திருக்காவிட்டால் இந்தியாவின் மத்திய ஹிந்தி அரசாங்கத்தால் அத்துமீறிய ஆக்கிரமிப்பை ஒருபோதும் ஈழத்தில் ஈடேற்றியிருக்க முடியாது. எனவே முற்று முழுதான மக்கள் அழிவுக்கும், மிகப்பெரிய சீரிய முயற்சியான ஒரு இனத்தின் விடுதலை போராட்டம் சிதைவுக்கும் கோடாரிக்காம்பு கருணாநிதியே.

இன்றும் எனது மனதில் தமிழ்நாடுதான் ஈழப்போராட்டத்தில் சிதைவுக்கு காரணம் என்ற ஒரு மோசமான நெருடல் வெளியில் சொல்ல முடியாமல் வேதனையாக தொடர்கிறது. ஆதரவுச்சக்திகள் அதிகம் தமிழகத்தின் கீழ்மட்டத்தில் இருந்தாலும், அரசியல் சார்ந்து மேல்மட்டத்தில் இருப்பவை எல்லாம் சுயநலன் சார்ந்த அழிப்பு சக்திகளாகவே மாறி கொள்ளி வைக்கும் கோடாரிக்காம்பாக இருந்திருக்கின்றனர்.

பல்வேறுபட்ட விமர்சனத்திற்கு உட்ப்பட்டிருந்தாலும் ஈழத்தமிழரிடத்தில் ஈழ அரசியலைப்பொறுத்தவரை தீர்மானமாக தீர்மானிக்கப்பட்ட ஒரே ஒரு நம்பிக்கைச் சக்தி தேசியத்தலைவர் வே.பிரபாகரன், அவர்களின் தலைமையிலான விடுதலைப் புலிகள் இயக்கம், ஒன்று மட்டுமே.ஈழ மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே ஆதரவு சக்தியாக எதிர்கால நம்பிக்கையாக இருந்த, போராட்டத்தில் மண் விழுவதற்கு கருணாநிதியும், அவரது கைத்தடியான திருமாவளவனும், இன்னும் சில சக்திகளும் கங்கணம் கட்டி பெருத்த நாடகங்கள் நடத்தி வென்றாலும், மக்கள்மத்தியில் இன்று வீழ்த்தப்பட்டுவிட்டனர். ஈழத்தின் சாபம் பழிவாங்கி வீழ்த்தியிருக்கிறது என்று சொல்வதை சிலர் நகைச்சுவையாக எடுத்தாலும் என்னைப்பொறுத்த மட்டில் கடவுளின் கருணை என்றே அதைச்சொல்லுவேன்.

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்ட அனுபவங்கள்தான். காலப்போக்கில் சட்டங்களாக எழுதப்பட்டு நீதி நூல்களாக நீதிமன்றங்களில் சமூகத்தை வழிநடத்துகிறது. ஒரு நாட்டின் அரசியல்த்தலைமையின் சிந்தனையும் வழிகாட்டலும்தான் அந்த நாட்டின் செழிப்பு அல்லது வீழ்ச்சிக்கு காரணமாயிருக்கிறது. அந்தவகையில் பார்த்தாலும் விடுதலைப்புலிகள் அமைப்பு சுயநலன் பற்றி சிந்திக்காத மிக நேர்மையான நடத்தையுடன் நேர்கோடாக பயணித்த ஒரு அமைப்பு என்பதே காலத்தால் அழியாத பதிவு.எந்த தொடர்புமில்லாத வெளி நாடுகள் கூட இந்த விடயத்தில் கருத்து முரண்படவில்லை.

தமிழ்மக்கள் தொகையில் மிக அதிகம் கொண்ட தமிழ்நாட்டின் அரசியல்ச்சக்திகள் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் நிழலில் நின்று அரசியல் செய்தால் சீக்கிரம் மக்கள் மனங்களை கவர்ந்து வெற்றி பெற்று விடலாம். என்ற வித்தையை கபடத்தனமாக மலிவாகப்பயன்படுத்தி சில வெற்றியும் சில தோல்வியும் அடைந்திருக்கின்றன. இந்த ராசதந்திரத்தை மூத்தவர் கருணாநிதி அறியாதவரல்ல. எனவே அவர் தனது உள் மனதிலுள்ள புலி எதிப்பை எங்குக் வெளிப்படையாக காட்டிக்கொள்ளவில்லை. நல்லவர்போல் நடித்து புலிகளை இல்லாதொழித்து விடுவதிலேயே அவர் குறியாக இருந்தார். அந்த ராசதந்திரத்தில் ஓரளவு அவர் வெற்றி பெற்றாலும் வேசம் கலைந்தபோது அரசியல் ரீதியாக மக்களால் அவர் தூக்கி வீசப்பட்டார்.

உலகத்தமிழர் தலைவன் என்ற பட்டம் அமரத்துவத்தின்பின் வேறு எவரிடமும் போய்விடக்கூடாது. தனது பெயர் மட்டும் வரலாற்றில் இடம்பெறவேண்டும் என்ற ஈகோ மாயைபேராசையே அவரை ஒரு மோசமான சைக்கோத்தனமான முடிவுகளுக்கு தள்ளிவிட்டது. இன்று ஊழ்வினை கஸ்டடியில் மகள் கனிமொழியின் பெயில் ஜூன்20ல் உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடிசெய்யப்பட்டது அறிந்து தள்ளுவண்டியுடன் டில்லி சென்ற கருணாநிதி. புத்திர சோகம் வாட்ட, டில்லியில் அவரது கூட்டாளிகளான காங்கிரஸுக்காரரே ஒதுக்கிவிட்ட நிலையில். கறுப்பு கண்ணாடியை கழற்றி வைத்துவிட்டு கண்ணீர் விட்டு அழுதார்,, முள்ளிவாய்க்காலில் ஒவ்வொரு ஈழத்தமிழினமும் பட்ட வேதனையை கருணாநிதி அனுபவிப்பது காலங்கடந்தாலும் கடவுளின் சரியான தீர்ப்பே.

ஈழதேசம் இணையமூடாக ஊர்க்குருவி.

நன்றி ஈழதேசம்.

Sunday, June 19, 2011

பிரித்தானிய அரசாங்கத்தின் விஷப்பரீட்சை

பிரித்தானிய அரசாங்கத்தின் விஷப்பரீட்சை.-ஈழதேசம் இணையத்திற்காக கனகதரன்.

படுகொலைகள் மற்றும் பாலியல் வன்புணர்வுகளையும் மகாவம்சத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற வரலாற்று உண்மையை,

சிறீலங்காவின் பிரசித்திபெற்ற முன்னாள் கொலைக்கள தளபதியும், போர்க்குற்ற நபருமான சரத் பொன்சேகா கொழும்பு மேல் நீதிமன்றத்தில், செய்தியாளர்களின் சந்திப்பின்போது, மகாவம்சத்தில் கண்டிப்பாக இணைக்க வேண்டிய காலப் பதிவை, சிறையில் ஞானம்பிறந்த நிலையில் வெளிப்படுத்தியுள்ளார்.

யாழ். குடாநாட்டில் மீண்டும் படைத்தரப்பினர் ஆட்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளை, ஒரு வரைமுறைக்குட்படாத வகையில், மீண்டும் போர்க்கால அடிப்படையில் தொடங்கியிருக்கின்றனர்.

காலைவேளைகளில் முகாம்களிலிருந்து புறப்படும் எட்டு முதல் பத்துப்பேர் வரையிலான சிப்பாய்களைக் கொண்ட குழுவே, பதிவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முன்னதாக வீட்டை சல்லடை போட்டுத் தேடும் இவர்கள், சமையலறை மற்றும் குளியலறையைக் கூட விட்டு வைப்பதில்லையென குற்றஞ்சாட்டப்படுகின்றது. பின்னர் வீட்டு அங்கத்தவர்களது விபரங்கள் திரட்டப்படுவதுடன், தம்மோடு எடுத்துவரும் கைத்தொலைப்பேசிகளால் குடும்ப அங்கத்தவர்களும், வீடுகளும் புகைப்படம் பிடிக்கப்படுவதாக கூறப்படுகின்றது.

குடும்ப அங்கத்தவர்களில் எவராவது விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தனரா?, காணாமல் போயுள்ளனரா? தடுப்பு முகாம்களில் உள்ளனரா, என்பது பற்றியே கேள்விகள் அமைகின்றன. அத்துடன் புலம் பெயர்ந்த நாடுகளில் தங்கியுள்ள அங்கத்தவர்கள் பற்றியும் அதிகம் கேள்வி எழுப்பப் படுவதாக சொல்லப்படுகின்றது. எவர்மீதாவது சந்தேகம் இருப்பதாக இராணுவத்தினரின் மனநிலை இருந்தால், விசாரணைக்கு என்று சம்பந்தப்பட்ட நபரை கையோடு அழைத்துச் செல்லப்படுவதாகவும் கூறப்படுகிறது.

நிலமை இப்படியிருக்கும்போது, விஞ்ஞானிகள், கொடு நோய்க்கான மருந்து வகைகளை கண்டுபிடிப்பதற்கு, தவளை, எலி, போன்ற பிராணிகளை மருத்துவ ஆராய்ச்சியில் பயன்படுத்தி, நோய்க்கிருமிகளின் தாக்கத்தை அறிந்து மருந்து கண்டுபிடித்து தீர்வு காண்பதுபோல, சில தினங்களுக்கு முன், பிரித்தானிய இராய்ச்சியம் 26 ஈழத்தமிழர்களை, அவர்களது விருப்பமில்லாமல் வலுக்கட்டாயமாக ஸ்ரீலங்காவுக்கு திருப்பி அனுப்பி அராய்ச்சி செய்திருக்கிறது.

இந்த 26 பேரும், சிங்கள் இராணுவ பேராதிக்க அரசிடமிருந்து தப்பிப் பிழைத்தால்,, ஏற்கெனவே திட்டமிட்டபடி அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டு இருக்கின்ற இலங்கையர்களில் இன்னும் ஒரு தொகையினர், எதிர்வரும் 30 ஆம் திகதி நாடு கடத்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டு இருக்கின்ற இலங்கையர்களில். ஒரு தொகையினர் கடந்த 16 ஆம் திகதி விசேட விமானம் ஒன்றின் மூலம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதனை நாடி பிடித்துப் பார்க்கும் ஒரு சோதனை நடவடிக்கையாகவே பிரிட்டன் மேற்கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.

அவ்வாறு தமிழர்கள் நாடு கடத்தப்பட்ட போது, பிரிட்டனில் பாரிய எதிர்ப்பலைகள் எழும்பாத காரணத்தினால், தற்போது தஞ்சம் மறுக்கப்பட்ட அடுத்த தொகுதி அகதிகளையும் திருப்பியனுப்ப பிரிட்டனின் எல்லை முகவர் அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. அடுத்த நாடு கடத்தல் இம்மாத இறுதியில் இடம்பெற உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஜூன்16 ம் திகதி, நாடு கடத்தப்பட்ட 26 பேரும் விசேட விமானம்மூலம் ஸ்ரீலங்கா சென்றடைந்து தரையிறங்கியதும். தயாராக இருந்த ஸ்ரீலங்காவின் பொலிஸ் இராணுவப்பிரிவின் புலனாய்வுத்துறையினர். குறிப்பிட்ட அனைவரையும் விசாரணைக்குட்படுத்துவதற்காக, முகாம்களுக்கு அழைத்துச்சென்றதாக தகவல்கள் வருகின்றன. நாடு கடத்தப்பட்ட அகதிகள் பற்றிய மேலதிக நிலமைகள்பற்றி எந்த செய்தியும் ஸ்ரீலங்கா வெளியிடப்படவில்லை.

பிரித்தானிய அரசை திருப்திப்படும் வகையில் குறிப்பிட்ட அகதிகளை விசாரணையின்பின் ஒருவேளை? விடுவிக்கப்பட்டாலும், இராணுவத்தினர் சிலதினங்களின்பின் அவர்கள் மீண்டும், கைது செய்யப்படமாட்டார்கள் என்பதற்கான உத்தரவாதம் எதுவும் கிடையாது. திருப்பி அனுப்பப்பட்டவர்கள் பலர், பிரித்தானியாவில் பல ஜனநாயக மக்கள் போராட்டங்களில் இணைந்து குரல் கொடுத்து காணொளிகளில் ஆவணமாகிவிட்டவர்கள் என்பதும் அச்சத்திற்கு இன்னும் ஒரு அதிககாரணம். இவர்கள் விடுவிக்கப் படாவிட்டாலும் ஏன் என்று கேட்டு விவாதிப்பதற்கு எந்த வழிமுறையும் ஸ்ரீலங்காவில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய அரசின் இந்தப்பரிசோதனை, ஈழத்தமிழர்கள் பலரின் வாழ்க்கையில் கொடும் விதியாக விளையாடியிருக்கிறது. ஸ்ரீலங்காவில் உள்ள கொடூரமான பேரினவாத நோய்க்கிருமிகளால், திருப்பி அனுப்பப்படுபவர்கள் மோசமான தாக்கத்துக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்பதை பிரித்தானியா உள்ளூர உணர்ந்தாலும் கேட்பார் இல்லாதபடியால் மனிதாபிமானம் இல்லாமல் திருப்பி அனுப்பும் விஷப்பரீட்சை சாதாரணமாக நடந்திருக்கிறது.

ஆனால் ஈழத்தமிழர்களின் கவசமாக இருப்பதாகச்சொல்லும், நாடுகடந்த அரசு,, இதில் உடனடியாக தலையிட்டு அகதிகளை தடுத்து நிறுத்த முயற்சி எதையும் எடுத்ததாக தெரியவில்லை. நாடுகடந்த அரசில் இருப்பவர்கள் ஏதோ ஒருவகையில் நல்ல வதிவிட உரிமையை பெற்று, வசதி வாய்ப்புக்களோடு இருப்பவர்கள் என்பதால், விளிம்பு நிலையில் அகதிகளாக திருப்பி அனுப்பப்படும் நிலையில், அல்லலுக்குள்ளாகி தத்தளிப்பவர்களின் மனநிலை பற்றி உளமார உணர முடியாமல் இருந்துவிட்டனரோ, என்று வேதனையடைய வைக்கிறது.

இங்கிலாந்தில் மட்டுமல்லாது, மேற்கத்திய நாடுகள் அனைத்திலும் அடைக்கலம் கோரும் ஒருவரது தனிப்பட்ட உயிர் அச்சுறுத்தலும், அதற்கான காரணங்களும் மட்டுமே அந்த நாடுகளில் கவனத்தில் கொள்ளப்படுகிறது. ஒருவரது உயிர் அச்சுறுத்தலுக்கான முக்கியமான பல புறக்காரணிகள் எவ்வளவுதான் எடுத்துரைத்தாலும், பெரும்பாலானவை ஏனோ ஏற்றுக்கொள்ளப்பட்டுவதில்லை.

ஆனால் ஸ்ரீலங்காவில் இராணுவத்தால் ஒருவர் விசாரணைக்குட்படுத்தப்படும்போது, ஒருவரது குடும்பம், அவரது உறவினர்கள், அயல் வீட்டின் நண்பர்கள் பற்றியும், மிகவும் முக்கியத்துவம் கொடுத்து விசாரிக்கப்படுகிறது. அப்படி இராணுவ வளையத்தில் இருக்கும் நண்பர்களலும் குடும்பத்தினராலும் உயிர் அச்சுறுத்தலுக்குள்ளானவர்கள் நிறையவுண்டு, இதை இந்த புலம்பெயர் நாடுகளுக்கு புரியவைப்பது யார்.

குடும்ப அங்கத்தவர்களில் எவராவது விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தனரா? காணாமல் போயுள்ளனரா? தடுப்பு முகாம்களில் உள்ளனரா என்பது பற்றிய கேள்விகள் ஸ்ரீலங்கா இராணுவத்திடம் மிக முக்கியத்துவம் பெறுகிறது. அத்துடன் புலம் பெயர்ந்த நாடுகளில் தங்கியுள்ள அங்கத்தவர்கள் பற்றியும் அதிகம் கேள்வி எழுப்பப் படுகின்றது.

ஈழத்தமிழர்களில் பலர் சூழ்நிலை குற்றவாளிகளாகி, புறச் சூழலில் பல காரணிகள் அவரது உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலையை தோற்றுவித்து அச்சுறுத்துவது எந்தவித சோடிப்புமில்லாத உண்மை. இவற்றை புலம்பெயர் தேசங்களிலுள்ள நிறுவனப்பட்ட தமிழர் அமைப்புக்கள் தலையிட்டு, பொதுப்பிரச்சினையாக அந்தந்த நாடுகளின் நீதிமன்றங்களுக்கு அல்லது சார்ந்த துறைகளுக்கு எடுத்து சென்று விளக்கவேண்டும், இப்பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்து, பிரச்சினையை சட்டத்துக்குட்படுத்தி கட்டுக்குள் கொண்டுவரத் தவறினால், பிரச்சினை வேறு நாடுகளையும் சென்றடையும் அபாயம் உண்டு.

2010 ஆண்டில் சுவிற்சர்லாந்தில் அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட அகதிகள், 2,000 பேருக்கும் அதிகமாக ஸ்ரீலங்காவுக்கு திருப்பி அனுப்பும் அனுமானத்தோடு தயாராக இருப்பதாக அந்நாட்டிலிருந்து செய்திகள் வந்தன. அதுபற்றி அறிவுறுத்தல்களையும் அலோசனை கூட்டங்களையும் சுவிற்சர்லாந்து தமிழர் பேரவை, ஈழத்தமிழ் அகதிகளுக்கு அறிவுறுதல்களையும் பகிர்ந்து சில வேலைத்திட்டங்களையும் நடத்தியிருந்தது. சுவிற்சர்லாந்து தமிழர் பேரவை சுவிஸ் குடியேற்ற அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடி நிலமையை கொண்டு சேர்த்ததாகவும் தெரிகிறது,

பிரித்தானிய தொலைக்காட்சி, சனல்4, சிலதினங்களுக்கு முன்தான், அத்துமீறிய ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கொடும் போர் குற்ற காட்சிகள் அடங்கிய காணொளித் தொகுப்பை, ஆவணப்படமாக வெளியிட்டது. அந்த ஆவணத்தொகுப்பின் எதிரொலியாக, பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன்,அவர்கள் இலங்கையின் இறுதி கட்டப் போரின்போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்களை பதிவு செய்துள்ள ஆவணப்படத்தை சனல் 4 ஒளிபரப்பியுள்ள நிலையில், அது குறித்த விசாரணைகளை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது உரையாற்றுகையில், அவர் இவ்வாறு இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளார்.

சனல் 4 ஆவணப் படம் குறித்து இங்கிலாந்து வெளியுறவுத்துறை துணை அமைச்சரான அலிஸ்ட்டர் பர்ட் கூறுகையில், "இந்த ஆவணப்படத்தை பார்த்து நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். அதைப் பார்க்கும் போது, சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறியதற்கான ஆதாரங்கள் இருப்பது போல இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க, இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், சர்வதேச சமூகத்துடன் இணைந்து அனைத்து சாத்தியக்கூறுகளையும் கண்டறிய இங்கிலாந்து அரசு தயாராக இருக்கிறது," என்றார்.

இவை நடந்து முடிந்த கையோடு 26 ஈழத்தமிழர்கள் நாடுகடத்தப்பட்டமை மிகவும் அதிர்ச்சி அளிப்பதாகவே காணப்படுகிறது. இது இங்கிலாந்து அரசிற்கு ஈழ அகதிகள் பற்றிய மிகச் சரியான தகவல்கள் போய்ச்சேரவில்லை, அல்லது இங்கிலாந்து அரசு ஸ்ரீலங்கா அரசுபற்றியும் அந்த நாட்டில் ஈழத்தமிழர்களுக்கு இருக்கும் ஆபத்துப்பற்றியும் சரியாக புரிந்துகொள்ளவில்லை,, என்கிற சந்தேகமும், இரட்டை வேட நாடகங்கள் எங்காவது ஈடேறுகிறதா என்கிற பயமும். அடைக்கலம் நிராகரிக்கப்பட்டு விளிம்பு நிலையில் தளம்பும் ஒவ்வொரு ஈழத்தமிழனுக்கும் உண்டு.

90 களுக்குப்பிந்திய அதிக காலகட்டங்களில் இலங்கையில் வாழலாம் திரும்பிப்போ. என்று திருப்பி அனுப்பபட்ட பலர் காணாமல் போனதும், இராணுவ சித்திரவதைக்குள்ளாகி சிறைப்பட்டதும், கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. ஸ்ரீலங்காவின் ஜனாதிபதியும் அமைச்சர்களும் திருப்பி அனுப்பப்படுபவர்கள் மனிதாபிமானத்துடன் நடத்தப்படுவார்கள் என்பதும் சித்திரவதைக்குட்படமாட்டார்கள் என்று சொல்லுவதும் புதிதல்ல.

தமிழனுக்கு பாதுகாப்பில்லை என்பதை பல நாடுகளும் தொண்டு நிறுவனங்களும் ஒப்புக்கொள்ளுகின்றன. தமிழருக்கான அரசியல் தீர்வு எதுவும் ஸ்ரீலங்காவில் நிறுவப்படவில்லை என்பதும் அமெரிக்கா இங்கிலாந்து ஐநா சபை கூட ஒப்புக்கொள்ளுகிறது.

தமது நாட்டுக்குள் அகதியாக எவரும் நுழையவேண்டாம் என்று கட்டளையிட அந்த அந்த நாடுகளுக்கு உரிமையுண்டு, ஐநாவின் அகதிகளுக்கு மறுவாழ்வளிக்கும் சாசனத்தில் கைச்சாத்திட்டுவிட்டு, மனிதாபிமானமில்லாமல் ஒரு கொலைக்களத்துக்கு ஒருவரை தாரைவார்த்து திருப்பி அனுப்புவதென்பது மனிதாபிமானமற்ற சட்டத்துக்கு புறம்பாந்தென்பதே பொதுவான கருத்து.

"ஒரே ஒரு விடுதலைப் புலிகள் இயக்கம்" இன்று பல முகத்துடன் பயணிக்கிறது. ஒவ்வொருவரிடமும் கருத்துக்கேட்டால். தலைவர் வே பிரபாகரன் என்றும். நோக்கம் சிங்கள ஏகாதிபத்தியத்திடமிருந்து ஈழத்தமிழ் இனத்துக்கான விடுதலை, என்றும் கூறுகின்றனர். இன்றய நிலையில் களம் புலம்பெயர் தேசங்களில்த்தான் சாத்தியமாகவும் இருக்கிறது. தலைவர் வெளிவரமுடியாத நிலையில், தலைவரின் இராசதந்திரமும் அப்படித்தான் சொல்லுகிறது.

ஆனால் திருப்பி அனுப்பப்படும் அகதியைக்கூட சட்டத்துக்குட்பட தடுத்து நிறுத்த எம்மால் முடியவில்லை, அல்லது முயற்சி செய்ய நேரம் இல்லை, என்றே தோன்றுகிறது. நாடு கடந்த ஈழத்தமிழ் மக்களுக்காக ஒரு அரசாங்கமும் இயங்குகிறது எல்லாத்துறைகளுக்கும் மந்திரி மாரும் உள்ளனர். அடைக்கலம் தேடி வந்தவர்களுக்கான துறை இல்லையோ என்ற சந்தேகம், எல்லா அடைக்கல அகதிகளையும் பற்றி நிற்கிறது.
அடுத்த மாதம் நாடு கடத்தப்பட இருக்கும் அகதிகளை நிறுத்துவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கையிலாவது நாடுகடந்த அரசு உடனடியாக இறங்கி அதற்கான முயற்சியை செய்யும் என்று ஒவ்வொரு ஈழ அகதித் தமிழனும் நம்புகிறான்.

இனியாவது அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளை சார்ந்தவர்கள் ஈழத்தமிழன் ஒருவன் திருப்பி ஸ்ரீலங்காவுக்கு அனுப்பப்பட்டால் அவனுக்கு என்ன நேரும் எப்பேற்பட்ட சங்கடங்களையும் சித்திரவதையையும் அனுபவிப்பான் அவனது உயிருக்கு உத்தரவாதம் உண்டா, அவனது குடும்பம் உறவினர்களின் நிலைப்பாடு எப்படி இருக்கும் என்பதை , நாம் ஒவ்வொருவரும் எமது நிலையில் இருந்து பார்த்தால், அதுவேதான் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கொள்கையாகவும்,, ஈழத்தமிழனத்தின் நம்பிக்கையாகவும் இருக்கும்.

ஈழதேசம் இணையத்திற்காக.
கனகதரன்.

Thursday, June 16, 2011

"சாக்காட்டின் சரிதை"

அவர்கள்
தமது உரிமைக்காக
உடமைகளை மட்டுமல்ல
உடலுறுப்புக்களையும்
ஒப்பற்ற "உயிரையும்"
ஒப்புக்கொடுத்திருந்தனர்.

அவர்களது தியாக வேள்வி
நியாயத்தின் அடிப்படையில்
நம்பிக்கையை முதலீடாக்கி
நடத்தப்படுவதாக
அவர்கள் மட்டுமல்ல
உலகமும் நம்புகிறது.

ஆனாலும்
அவர்களது வேகத்தை
நம்பிக்கையை மழுங்கடிக்க,
ஒரு வர்க்கக் கூட்டம்
பல இடங்களில் ஒளிந்திருந்து
ஓங்காரமாக பூசை செய்து கொண்டிருக்கிறது.

அவர்கள் சுயமாக
நாட்டி வளர்த்த மரங்களும்,
கட்டி வாழ்ந்த வீடும்,
வாழ்வாதாரங்களும்,
அடிக்கடி கொடிய விலங்குகளால்
சுடுகாடாக்கப்பட்டபோது,
ஏன் என்று ஒருவரும் கேட்கவில்லை.

அவர்கள் ஒருமுகமாக
ஒப்பற்ற தலைமையுடன்
எதிர்கொண்டு எழுந்தபோது,
சூத்திரம் சுக்குநூறாகியது.
மானுடம் திரும்பி பார்த்தபோது
பட்டிமன்றகாரர்கள்
பதைபதைத்துவிட்டனர்.

வைரத்தை வைரத்தால்
வெட்டவேண்டாமென்றும்
கொடுந் தீயை
நீர் கொண்டு அணைக்க வேண்டாமென்றும்
வைக்கோல் கொண்டு மூடும்படி
பட்டிமன்ற பேச்சாளர்களின்
ஆராய்ச்சியின் முடிவு சொல்லுகிறது.

ஊரே சுடுகாடாகி
ஓலச்சத்தம்
விண் முட்டி வெளியானபோதும்,
பத்துப்பேரின் பலியா
பால்குடிகளின்
படுகொலையா, கொடியது
சாவை தலைப்பாக்கி
பட்டிமன்றங்களில்
விவாதங்கள் வித்தியாசமாக.

இன்று
அவர்களது ஒருபகுதி
ஈமைக்கிரியை செய்யப்படாத
(சுடுகாடல்ல), "சாக்காட்டின் சரிதை"
ஒரு புள்ளியளவு
"ஒருசில மனிதாபிமானிகளால்"
ஆவணமாக அம்பலமாகியபோது,
மீண்டும்
பட்டிமன்ற விற்பன்னர்களின்
வெறும் வாய்
விவாதத்துக்கு தயாராகிவிட்டது.

ஆனாலும்
அவர்களது உரிமை நிலை
பட்டிமன்றங்களால்
ஒருவேளை செப்பனிடப்பட்டால்!
அவர்கள் திரும்பக்கூடும்!.

>ஊர்க்குருவி.<

நன்றி ஈழதேசம் இணையம்.

Friday, June 10, 2011

பதிலே இல்லாத கேள்வி நேரம்: அனஸ் மாமாவுக்கு ஒரு திறந்த கடிதம் !

09 June, 2011 by admin

தீபம் தொலைக்காட்சியில் சமீபத்தில் கேள்வி நேரம் என்னும் ஒரு நிகழ்ச்சியூடாக பல விவாதங்களும் விமர்சனங்களும், மற்றும் மக்கள் கருத்துக்களும் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருகின்றதை நான் பார்த்து வருகிறேன். நேற்று முன்தினம் புலிக்கொடி பிடிக்கவேண்டுமா வேண்டாமா என்று ஒரு விவாதக் களத்தை நீங்கள் திறந்து விட்டிருந்தீர்கள் ! விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளும் விடயம் என்ன? எடுத்துக் கொள்ளக்கூடாத விடயம் என்ன என்று தெரியாமல் நீங்கள் தத்தளித்தால் இக் கடிதம் அதனை உங்களுக்கு நன்றாக விளக்கும் என நான் நினைக்கிறேன். ஊடகவியலாளராக இருக்கும் நீங்கள் முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும் !

நிகழ்ச்சி நடந்த பின்னர் தீர்ப்புக் கூறுவது: மாற்றுக்கருத்தோடு தொலைபேசியில் தொடர்புகொள்வோரை இடையில் துண்டிப்பது: நிகழ்ச்சியின் கருப்பொருளுக்கு அப்பால் சென்று சம்பந்தமே இல்லாத விடயங்களைப் பற்றி அலசி ஆராய்வது என்பது ஒரு ஊடகவியலாளாரருக்கு அழகில்லை. தீர்ப்பு கூற நீங்கள் என்ன பட்டி மன்றம் நடத்துகிறீர்களா? இல்லை உங்கள் கருத்தோடு ஒத்துப் போகாத ஒருவர் நிகச்சியில் பேசவந்தால் நேரம் காணாது என்று சொல்லி துண்டித்துவிடுவீர்களா? புலிக்கொடி பிடிக்கலாமா இல்லை பிடிக்கக்கூடாதா என்ற விவாதத்திற்கும், ராஜிவ் காந்தி கொலைக்கும் இல்லை முஸ்லீம்கள் யாழை விட்டு விரட்டி அடிக்கப்பட்டதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது திரு. அனஸ் அவர்களே?

கொன்ஸ்டைன், என்கின்ற நபர் யார்? இல்லை அந் நிகழ்ச்சியில் ராஜா என்கின்ற நபர் யார்? இவர்கள் 2009ம் ஆண்டுக்கு முன்னர் எங்கே இருந்தார்கள்? இப்போது நிகழ்சிகளுக்கு வந்து புலிக்கொடி பிடிக்கவேண்டாம் என்று கூறுகிறீர்களே, 2009ம் ஆண்டு எங்கே இருந்தீர்கள்? ஏன் அப்போது அந்தக் கருத்தை நீங்கள் சொல்லவில்லை. இவ்வாறான நிகழ்ச்சிகளை ஏன் நடத்துகிறீர்கள் என்று உங்களிடம் சிலர் கேட்டால்... மக்கள் இப்போது தான் கேள்விகேட்க ஆரம்பித்திருக்கிறார்கள் அதனை நாம் ஊக்குவிக்கவேண்டும் என்று சொல்லுகிறீர்கள். தமிழர்கள் இவ்வளவு நாளாக கேள்வி கேட்காத இனமாக வாழ்ந்துவிட்டதாகவும், இனித் தான் கேள்விகேட்கும் இனமாக வாழப்போகிறார்கள் அதனை ஊக்குவிக்கப்போகிறேன் என்று சொல்கிறீர்கள்.

கேள்வி கேட்க பல விடயங்கள் உள்ளன. அதற்கு தேசிய கொடி பிடிக்கவேண்டுமா வேண்டாமா என்பது தான் ஒரு கேள்வி அல்ல ! கேள்வி நேரம் என்பது ஒரு நிகழ்சி அதில் உங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளை மேடை ஏற்றவேண்டாம். குறிப்பாக எமது தேசியத்தோடு விளையாடவேண்டாம். தமிழ் தேசியத்தை கேள்விக்களமாக்க நீங்கள் யார்? தமிழர் இறையாண்மையை கேலிக்கூத்தாக்க நீங்கள் யார் ? தேசியத்துக்காகவும் தேசிய கொடிக்காவும் உயிர்நீத்த பல்லாயிரம் மாவீரர்கள் புதைந்த ஈரம் காயுமுன்னரே தேசிய கொடியைப் பிடிக்கலாமா இல்லைப் பிடிக்கக் கூடாதா என்று நிகழ்ச்சி நடத்தி தமிழர்களின் உணர்வுகளோடு விளையாடவேண்டாம்.

கீழே உள்ள படத்தை நன்றாகப் பாருங்கள்...இது ரணில் விக்ரமசிங்கவின் தாயார் கடந்த 6ம் திகதி இறந்தபோது எடுக்கப்பட்டது. அதில் மகிந்தர் கலந்துகொண்டு துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறார். சிங்களவர்கள் எவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே ஒரு நல்ல எடுத்துக்காட்டு. நாம் ஏன் தோல்வியடைந்தோம் என்பதற்கு யார் நல்ல எடுத்துக்காட்டு என்று உங்களுக்கே தெரியும். எதை விவாதிப்பது எதை விவாதிக்ககூடாது என்பதில் நியதி உண்டு. எனவே இனிவரும் காலங்களில் கேள்வி நேரம் என்னும் நிகழ்வை பயனுள்ளதாக, தமிழ் மக்களுக்கு விழிப்பூட்டும் நிகழ்வாக, ஆக்கபூர்வமாக நடத்துவீர்கள் என நான் நினைக்கிறேன். விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் ஒரு தமிழனாக அதுவும் ஒரு ஊடகவியலாளராக நீங்கள் செயல்பட நான் வாழ்த்துகிறேன்.

இந்தத் திறந்த மடலை யார் பிரசுரிப்பார்களோ தெரியாது ஆனால் பிரசுரித்தால் எனது நன்றி !

அன்புடன்,

வல்லிபுரத்தான்.நன்றி அதிர்வு இணையம்.

Wednesday, June 8, 2011

உன் கண்ணில் நீர் வழிந்தால்

புதன்கிழமை, 08 ஜூன் 2011 17:48

கண்ணீர் விட்டார் ராசாத்தி அம்மாள் என்று செய்தி வெளியிட்டதற்கு, ஒரு வாசகர், அந்தக் காட்சியைக் காணக் கொடுத்து வைக்கவில்லையே என்று வருத்தப் பட்டிருந்தார். அந்த வாசகருக்காக....

rajathi-ammal.-3

#ஊர்க்குருவி.,,,,,

கனிமொழியின் தாயே!
உன் நிலை கண்டு
மகிழ்ச்சியும்,
ஒருபுறம் வேதனை அடைகின்றேன்...

வேதனை,
பிணை மறுக்கப்பட்டு
தொடர்ந்து அவள் சிறை பறவையாக
இருப்பதற்காக மட்டும் அல்ல.

அது
நாம் விரும்பி,
நாளும் கடவுளை வேண்டிய ஒன்றுதான்.

அதற்காக கிழவனைப்போல்
எனக்கும் இதயம்
இல்லையென்று எண்ணிவிடாதே.

நீ நிச்சியம் நினைத்திருக்க மாட்டாய்,
இப்படி ஒரு பிரகண்டம் வருமென்று.
உன் தோழன் உனக்கும் உன் மகளுக்கும்
எதையும் நுணுக்கமாக
சொல்லித்தரவில்ல ை..
வாழ்க்கை, நீதி, அரசியல், உட்பட...

பிறகேன்
வேதனையடைகிறேன் என்கிறாயா.

உன் துணைவன் இன்னும்
வெளியிலிருந்து வேசம் கட்டி,
"தானும் தப்பி" தன் மனைவி,
உன் சக்களத்தினி
தயாளுவை காப்பாற்ற மட்டோமோ?
என்ற சூனிய நோக்கத்துக்காக,

தொடர்ந்து
நல்லவன்போல பாசாங்கு செய்து
புலம்பிக்கொண்டி ருக்கிறான்.

கிழவன்,,
தானே முன்வந்து,
அவனது திரைக்கதை வசனம்தான்,
"திராவிட முன்னேற்ற கழகம்'',
அழிந்து போனதற்கும்,
""தி.மு.க. வீழ்ச்சிக்கும்"".
"கனிமொழி சிறை செல்லவும் காரணமென்ற"
வாக்குமூலத்தை,
மக்களுக்கு கொடுத்துவிட்டால ே,,

உன் மகள் ஊழல் குற்றவாளியாக இருந்தாலும்,,
அவள்மீது நீதிமான்களுக்கு
கொஞ்சம் அனுதாபமாவது ஏற்படும்.

உன் துணைவன் தன்னை காப்பற்ற
எதுவும் செய்வான் மறந்துவிடாதே,

அடுத்த மாதமளவில்
'தறுதலை', உன் பேரன் தயாநிதி
திஹார் சிறை 8ம் எண் அறைக்கு
செல்வதற்கான ஆயத்தங்கள்
எழுதப்பட்டுவிட் டன.

அந்த கொண்டாட்டத்துக் கான
ஆயத்த வேலைகளில்
நான் இருப்பதால்
உன்னோடு செலவழிக்க
எனக்கு அதிக நேரமுமில்லை,

என் வேதனை எல்லாம்,
உன் துணைவன் எடுத்து விடும்
மிக மிக தப்பான,
கிஷ்வத் காம்போதி ராகத்தினால்,

சிறையில்
வெவ்வேறு அறைகளாக இருந்தாலும்
நீங்கள் அனைவரும் குடும்பமாக
திஹாரில் "ஒரே இடத்தில்"
கூடப்போகிறீர்கள ் என்பதுதான்.
நன்றி.சவுக்கு இணையம்.
Quote

Saturday, June 4, 2011

"வரும் ஆனால் வராது" ராஜபக்க்ஷ, பான் கீ மூன், நகைச்சுவை.

.

27 மே 2011 அன்று ஸ்ரீலங்காவின் தலைநகரம் கொழும்பு முழுவதும் ஏகப்பட்ட பந்தோபஸ்து குவிக்கப்பட்டு. பல ஆயிரக்கணக்கான சிவில் உடைதரித்த இராணுவ, பொலிஸ் பிரிவுகளின் புலனாய்வுதுறையினரின் பாதுகாப்புக்குள்,

பாதுகாப்பாக பிரதான தெருக்கள் எல்லாம் மூடப்பட்ட நிலையில், காலி முகத்திடலில் குண்டு துளைக்காத கூண்டினுள் நின்று ஸ்ரீலங்காவின் அதி உத்தம ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ, 2 ம் ஆண்டு வெற்றிக்கொண்டாட்ட நிகழ்வில் உரையாற்றினார்.

ஜனாதிபதி தனது உரையில், தேசிய ஒருமைப்பாட்டுடன் வட, கிழக்கு வாழ் மக்களுக்கான ஜனநாயக உரிமையினை வழங்குவதற்கு நாங்கள் ஒருபோதும் தயங்கவில்லை. இருப்பினும் பிரிவினைவாதக் குழுக்கள் கேட்பதை கொடுக்க நாங்கள் தயாராகவில்லையென ஒருவித பயத்துடன் அதை வெளிக்காட்டாமல் தலை கனத்த நிலையில் முழக்கமாக சிங்கள மக்கள் கூட்டத்தின் முன் தெரிவித்தார்.

அவரது முழக்கத்தின் சாராம்ஷம், "வரும்? ஆனால் வராது!" என்ற அர்த்தப்பட்டதாகவே தொனித்தது. அவர் ஸ்ரீலங்கா நாட்டின் அதி உத்தம சனாதிபதி. நிறைவேற்று அதிகாரம் கொண்டவர். சர்வ வல்லமை படைத்தவர். அந்தப்பெருமகன் இந்தக்கருத்தை இன்று நேற்று அல்ல, தொடர்ந்து சொல்லிக்கொண்டுதானிருக்கிறார், இருந்தும் அவர் குறிப்பிட்ட "தேசிய ஒருமைப்பாட்டுடன் வட, கிழக்கு வாழ் மக்களுக்கான ஜனநாயக உரிமையினை வழங்குவதற்கு நாங்கள் ஒருபோதும் தயங்கவில்லை." அந்த "தயங்கவில்லை" என்று அவர் கூறும் அதை தயக்கமில்லாமல் நிறைவேற்றுவதற்கு என்ன தடை குறுக்கே நிற்கிறது. இதுதானே பாவப்பட்ட அந்த மக்களின் எதிர்பார்ப்பு.

அவர் குறிப்பிடுவதுபோல, பிரிவினைவாதக் குழுக்கள் கேட்பவற்றை கவனத்திலெடுக்காமல், தேசிய ஒருமைப்பாட்டுடன் வட, கிழக்கு வாழ் மக்களுக்கான ஜனநாயக உரிமையினை வழங்கவேண்டியதுதானே, அப்படி அவர் வழங்கினால்த்தானே அது என்னவென்று வடக்கு கிழக்கு மக்களுக்கு புரியும். மக்களுக்கு வழங்கவேண்டிய ஜனநாயக உரிமைகள் வழங்கப்பட்டுவிட்டால் பிரிவினைவாதிகளை மக்களே புறந்தள்ளி விடப்போகிறார்கள். விட்டு விட்டு வாய்ப்பந்தல் போட்டு மட்டும் காரியம் என்ன ஆகப்போகிறது.

சர்வதேசத்தைப் பயன்படுத்தி பிரிவினைவாதக் குழுக்கள் முன்னெடுக்கும் முயற்சிகள், சாத்தியமாகப் போவதில்லை?. உள்வீட்டுப் பிரச்சினைகளை நாமே தீர்த்துக்கொள்வோம்.? அதில் வெளியார் தலையீட்டுக்கு ஒருபோதும் இடமில்லையெனவும் அவர் கூறினார். வீட்டிலுள்ள பெரியவர்கள் குழந்தைகளுக்கான சுதந்திரத்தையும், உணவு உடையை ஆகியவற்றை கொடுத்துவிட்டால் குழந்தைகள் தெருவுக்கு வந்து ஆற்பாட்டம் போடவேண்டிய தேவை ஏற்படப்போவதில்லையே. குழந்தைத்தனமாக பேசுவதை சனாதிபதியார் விட்டுவிட்டு, ஆகவேண்டியதை பார்க்கவேண்டும். இப்படியே புலுடா காட்டிக்கொண்டிருப்பாராக இருந்தால் உலக நாடுகளுடன் சேர்ந்து குழந்தைகள் பெரியவர்கள் செய்யவேண்டிய வேலையைத்தான் செய்ய முயற்சிப்பார்கள், அதன்பின் அவர்களை பயங்கரவாதிகள் என்றோ பிரிவினைவாதிகள் என்றோ சனாதிபதி தவிர வேறு எவரும் சொல்லப்போவதில்லை.

ஸ்ரீலங்கா ஜனாதிபதி போர் நடந்து கொண்டிருந்த காலப்பகுதியிலும், பின் 2009 மே, சண்டை முடிவுற்றுவிட்டதாக அறிவித்தபின்னும், உலகத்தை ஏமாற்றும் நோக்கத்தோடு அவர் கூறுவதுபோல ஒற்றை சிங்கள தலைமையின் கீழ். தமிழினம் வாழமுடியும் என்று கூறுவதற்கு சுதந்திர இலங்கையின் அறுபது ஆண்டுகால வரலாற்றில் ஏதாவது ஒரு அடிப்படை ஆதாரம் இருக்கவேண்டும். அல்லது அதற்கான முன்னுதாரணமாக இன்றய நிலையிலாவது பட்டுணர்ந்த பாடங்களின் அடிப்படையில் சனாதிபதி அவர்கள் வாய்ப் பேச்சை நிறுத்தி தமிழருக்காக சிறு துரும்பையாவது அகற்றி கருமமாற்ற முயலவேண்டும்.

முட்டலுக்கும் மோதலுக்குமான, பிரிவினை வாய்ச்சவடால்களை அவர் முதலில் நிறுத்தவேண்டும். சிங்களவனின் வாய்ச்சவடால்களும் அடக்குமுறையும்தான் தமிழனை ஆயுதம் தூக்க வைத்தது. நிலமை சீராக்கப்படாவிட்டால் மீண்டும் தமிழன் எவனும் ஆயுதம் தூக்க மாட்டேன் என்று எழுதிக்கொடுக்கவுமில்லை. "முக்கியமானவைகள் எதுவும் அழிந்து போனதாகவும் தெரியவில்லை மறைவுத்தானத்திலும் தனல் நிலையிலும் இருப்பதால்த்தான் வெப்பமும் புகையும் வெளியே வந்துகொண்டிருக்கிறது" இந்த யதார்த்தத்தை சிங்கள அரசியல்வாதிகள் உணராதவரை பிரிவினையும் விரிசலும் அதிகரிக்குமே தவிர சுருங்குவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. இப்படிப்பட்ட பெரும்பான்மையினரின் மனநிலைதான் ஸ்ரீலங்காவிலும் வேறு பல தமிழர்கள் வாழும் நாடுகளில் காணப்படுகிறது.

வேண்டாப் பெண்டாட்டியின் கைபட்டால் குற்றம். கால்பட்டாலும் குற்றம். இது ஒரு தமிழ்ப்பழமொழி., இந்தப் பழமொழி உலகத் தமிழினத்திற்கு சரியாகத்தான் பொருந்தியிருக்கிறது. விவாகரத்துக்கான விரிசலின் முதல் ஆணிவேரே இந்த மனநிலைதானே.

இலங்கையில் வந்திறங்கிய ஐரோப்பியரின் ஆட்சிக்காலத்தில், தமிழருக்கான பிரதேசங்களில் தமிழினம் வெள்ளையருக்கு திறை செலுத்தி வேண்டப்பெண்டாட்டியாக வாழவேண்டிய நிர்ப்பந்தம் இருந்திருந்தாலும் நாகரீகம் தெரிந்த ஐரோப்பியர்கள் தமிழன்தன் தனித்தன்மைக்கு ஓரளவு மதிப்பளித்து நாகரீகமாக நடந்து வந்திருக்கின்றனர். வெள்ளையரிடம் நாடு அடிமைப்பட்டுக்கிடந்தபோது இல்லாத மானுடம் காணாத சகிக்க முடியாத சிறுமையை சுதந்திரத்துக்குப்பின் தமிழினம் மிக மோசமாகச் சிங்களவனிடம் சந்தித்திருக்கிறது இவை இலகுவில் மறக்கக்கூடியவைகளுமல்ல.

சிங்கள இனம்தான் மிருகத்தனமாக நடக்கிறதென்றால், பார்வையாளர்களாக இருந்து நியாயத்தை சொல்லக்கூடியவர்களும், மத்தியஸ்தம் வகிக்க வந்த மேல் நாட்டவரும். இலங்கைக்குள் தூதரகங்களை வைத்திருப்பவர்களும். ஏனோ நியாயத்தின்பக்கம் நிற்காமல் ஆட்சி அதிகாரம் இருக்கும் பக்கம் பார்த்து ஒருதலைப்பட்ஷமாக, அதிகாரம் மிகுந்த சிலநாடுகளின் வெறுப்புக்கு ஆளாகாமல் தப்பிக்கும் நோக்கத்தோடு தமது வெளியுறவுக்கொள்கையை சிக்கலில்லாமல் தவிர்க்கும் பொருட்டு. "வரும் ஆனால் வராது" என்பதுபோல் திரிவுபட பேசி அடிப்படையை மறைத்து முற்றுப்பெறாத தொடராக ஏதேதோ தொடர்ந்து பேசிக்கொண்டேயிருக்கின்றனர்.

உதாரணமாக அதி உத்தம ஐநா வின் பொதுச்செயலாளரான பான் கீ மூன் அவர்களின் சறுக்கல் போக்கையே எடுத்துக்கொள்ளலாம்: இலங்கை விவகாரம் தொடர்பாக பல கேள்விகளைக் கேட்டு அடிக்கடி ஐ.நா அதிகாரிகளை சங்கடத்துக்கு உள்ளாக்கும் ஒரே ஒரு ஊடகமாக இருப்பது இன்னர் சிற்றி பிரஸ், (இந்த ஊடகமும் இல்லையென்றால் ஐநா கலாசாலையின் அதிக அழுக்குக்கள் வெளியே தெரிவதற்கான வாய்ப்பும் இல்லை.)

சமீபத்தில் இவ்வூடகம் ஐ.நா நிபுணர்கள் குழு பரிந்துரைசெய்த அறிக்கையை ஏன் அமுல்படுத்த முடியாமல் உள்ளது என்ற கேள்வியை நேரடியாக பான் கீ மூன், அவர்களிடம் தொடுத்திருந்தது. அதற்கு பதிலளித்த கீ மூன், சர்வதேச சுயாதீன விசாரணை தேவை என்பதனை கருதி தன்னால் அதை நகர்த்த முடியாது என்றும், ஐநா பொதுக் குழு கூடித்தான் முடிவெடுக்கவேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

இச் சந்தேகத்தை இன்னர் சிற்றி பிரஸ், ஐநா பொதுக் குழுவின் தலைவர் ஜோசெப்,பிடம் கேட்டபோது. இவ்விடையம் குறித்து பான் கீ மூன் அவர்களே முடிவெடுக்கவேண்டும் என பொதுக்குழுவின் தலைவர் ஜோசேப் தெரிவித்துள்ளார். பான் கீ மூனிடம் கேட்டால் பொதுக் குழுவின் தலைவர் அல்லது பாதுகாப்பு கவுன்சிலே முடிவெடுக்கவேண்டும் என்று கூறுவதும், பொதுக் குழுவின் தலைவரிடம் கேட்டால் பான் கீ மூனே முடிவெடுக்கவேண்டும் என்று கூறுவதும் சிறுபிள்ளைத் தனமாக இருப்பதாக இன்னர் சிற்றி பிரஸ், விசனம் தெரிவித்துள்ளது. நிபுணர்கள் குழு அறிக்கை வெளியாகி மாதக்கணக்காகியும் இது குறித்து இன்னமும் தீர்க்கமான எந்த ஒரு முடிவும் இதுவரை எடுக்கப்படவே இல்லை.

இந்நிலையில் ஈழத்தின் போர்க்குற்றம் சம்பந்தமாக ஒரு நிபுணர்கள் குழுவை அமைத்து ஏன் ஒரு அறிக்கையை பான் கீ மூன் தயார் செய்தார் என்கிற கேள்வி எழுகிறது, ஒரு வாதத்திற்கு அந்த அறிக்கையின் நகர்வுகளை பொதுக்குழுதான் நகர்த்தவேண்டுமென்றால் நிபுணர்கள் குழுவை கலைக்காமல் அறிக்கையையும் நிபுணர் குழுவினரையும் தனது சிபார்சுடன் பொதுக்குழுமுன் நிறுத்தியிருக்கவேண்டிய பொறுப்பு பான் கீ மூன் அவர்களுக்குத்தானே இருக்கிறது. இங்கும் "வரும் ஆனால் வராது" நகைச்சுவைதானே பல்லைக்காட்டுகிறது.

ஐநா செயலாளர் கூட, எந்தெந்தநாடுகள் இலங்கை விடயத்தில் நடவடிக்கை எடுக்க முனைப்பு காட்டுகின்றதென்பதை நாசுக்காக கவனித்து உச்ச சக்திவாய்ந்த நாடுகள் என்ன கருத்தை கொண்டிருக்கின்றதென்பதை சூசகமாக உணர்ந்து. காரியமாற்ற முயற்சிக்கிறார் என்றால் நீதி நியாயம் என்பது எல்லாம் தனி மனித நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதன் கருத்துக்கொப்பவே நகர்த்தப்படுகிறதென கொள்ள முடியும். அடுத்த ஐநாவின் செயலாளர் தெரிவில் பதவி விட்டுப்போய்விடக்கூடாது என்னும் பயம் பான் கீ மூன் அவர்களிடம் அடி மனதில் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கவும் கூடும். பான் கீ மூனின் நடத்தையும், ரோம் நகரத்து நீரோ மன்னனின் பிடில் வாசிப்பும் ஒத்துப்போவது தெரியவில்லையா.

இலங்கையில் காலாகாலமாக வாழ்ந்து வருவது இரண்டுக்கு மேற்பட்ட வேறுபட்ட இனங்கள், மொழி வாரியாக பார்த்தாலும் ஒன்றுக்கொன்று புரியாத எந்தத் தொடர்பும் இல்லாத இரண்டு வெவ்வேறு மொழிகள், மதம் என்று பார்த்தாலும் முற்று முழுதாக வேறுபட்டவர்கள், இவர்கள் ஒன்றாக ஒரு நாட்டுக்குள் தினக்கொலையும் குற்றுயிருமாக வாழ்வதும் தவிர வேறு எந்த ஒற்றுமையும் இலங்கைக்குள் இல்லை.

சிங்களவனால் தமிழினத்திற்கு ஏற்பட்ட இழப்புக்கள் கொஞ்ச நஞ்சமல்ல. பகைக்கான காரணங்கள் படுகொலைகளை தாண்டி நிறையவுண்டு, ஒத்துப்போய் வாழ முடியாததற்கு முற்று முழுதாக அவை தமிழ்மக்களின் ஆழ்மனதின் உணர்வு சம்பந்தப்படவை. வயிற்றுக்காக, கல்விக்காக, கற்புக்காக, உயிரைவிடவேண்டும் அல்லது நீதி விசாரணை எதுவுமில்லாமல் சிறையில் கிடக்கவேண்டும். என்கிற சூழ்நிலை, இச் சூழல் அனைத்தும் ஒரு இரவில் நடந்து முடிந்த நிகழ்வுமல்ல இவை கால ஓட்டத்தின் நீண்ட கால வரலாற்றுப் பதிவுகள். இந்த வரலாற்று உண்மை உலகத்திலுள்ளவர்களுக்கு தெரியாததுமல்ல. இருந்தும் துணிச்சலுடன் எவரும் தமிழ்க்களுக்கு ஒரு சுமூகமான முடிவு கட்டுவதற்கு தயங்குகின்றனர். தமிழர்களுக்கென்று ஒரு ராய்ச்சியம் இல்லாததும் தமிழருக்கு சாதகமாக பல நாடுகள் இருந்தாலும் வல்லாதிக்கங்களை எதிர்த்து நேர்சீரான குரல் கொடுக்கக்கூடிய ஆதரவு இல்லாததுமே இதற்கான முக்கிய காரணமாகும்.

முதலாவதாக இலங்கை என்கிற தீவு, இந்தியாவுக்கு அருகாமையில் பூகோள ரீதியாக உருவானது மிகப்பெரிய துரதிஸ்டமும், அவமானமும் காலக்குற்ற அவலமுமாகும்.


இப்படிச்சொல்லுவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. சிறுபான்மையான தமிழினத்தை சீண்டினால் ஏன் என்று கேட்பார் எவரும் இல்லையென்ற மனநிலையோடு, இந்திய மத்திய மானில அரசுகளின் தேவையற்ற அரசியல் தலையீடுகள். நடைமுறைப் படுத்தப்போவதில்லை என்று தெரிந்துகொண்டும், தான்தோன்றித்தனமான தாமே நிறைவேற்றும் தமிழருக்கான தீர்வுத்திட்டங்கள் வரைதல். அத்திட்டங்களை காட்டி தமது அரசியலை வளர்த்து ஏமாற்றும் அசிங்கம். பேச்சுவார்த்தை என்னும் போர்வையில் தன்னலன் சார்ந்த முண்டுகொடுப்பு. சர்வதேசரீதியான தலையீட்டு சதிகள். உள்ளூரில் தமிழரின் உரிமைப்போராட்டத்துக்குள் மரபு மீறி செய்த அநீதிகள். இவை அனைத்தும் சேர்ந்து ஈழத்தவரின் உச்ச வெறுப்பில் இன்று ஸ்ரீலங்காவை விட முன்னணியில் பகைமை கொண்டு நிற்பது இந்தியா என்கிற தற்குறி நாடாகும்,

மிருக வம்ஷமான, (சிங்கத்துக்கு பிறந்த) சிங்கபாகு என்ற இந்திய சிற்றரசனால் இந்தியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டவன். சிங்கபாகு பெற்ற மகனான விஜயன். சுக்கான் இல்லா கப்பலில் ஏற்றி விரட்டப்பட்டு, அவன் பல ரவுடிகளுடன் கரையொதுங்கிய இடம் இலங்கை. இந்தியாவுக்கு அருகாமையில் இலங்கைத்தீவு அமைந்திருந்ததால் விஜயன் இலங்கையில் தரையிறங்குவதற்கு சாதகமாக இருந்தது. இந்நிகழ்வே இன்று இலங்கை தமிழினத்துக்கு மாபெரும் கேடாக அமைந்திருக்கிறது.

இலங்கையின் தமிழ் அரசியல் தலைமைகள் தாம் வாழுவதற்காக, இந்தியாவை தாய் வீடென்றும் தந்தை வீடென்றும் போற்றி. இந்தியத்தலையீட்டை வேண்டி விளக்கு வைத்து வரவேற்றதும், வீணே வேண்டாத அவலத்தை ஈழ மண்ணில் விஷ தாவரமான பரத்தேனியம் செடி கணக்காக வளர்த்து விட்டிருக்கிறது. அன்றய தமிழ் அரசியல் தலைமைகள் விட்டுச்சென்ற மாபெரும் தவறுகளே இன்றய தமிழினத்தின் அழிவுக்கு பெரும் காரணியாக பல இடங்களில் "குற்றமாகியிருக்கிறது".

நாடு சுதந்திரத்திற்கு முன்னும் பின்னுமான 1915/ 1960 காலப்பகுதிகளில் ஆங்கிலேயருடன் பேச்சுக்களை நடத்தக்கூடிய கற்றறிந்த வல்லமை கொண்ட, ஈழத்து வரலாறு அறிந்த அரசியல்த் தலைமைகள் சிங்கள அரசியல் வாதிகளை விடவும் தமிழர் தரப்பில் அதிகமாக இருந்திருக்கின்றனர். ஆனால் அவர்கள், தாம் இலங்கையின் மேட்டும்குடியில் பிறந்த பெருத்த கல்விமான்கள் என்பதை பிரித்தானியர் மத்தியில் காண்பிக்க முயன்றனரே தவிர. பிற்காலத்தில் ஏற்படப்போகும் அனர்த்தத்தை ஊடுருவி நெடும் பார்வைகொண்டு சிந்திக்கவில்லை என்றே படுகிறது.

ஈழத்து கல்விமானான வன்னியை சேர்ந்த சுந்தரலிங்கம் என்பவர் பிரித்தானியா மகாராணிக்கு கணித பாடம் சொல்லிக் கொடுத்தவர் என்ற பெருமை பெற்றவர். பிரித்தானியா மகாராணிக்கு கணிதம் சொல்லிக்கொடுத்த அவரால் தமிழினத்திற்கு நியாயமாக கிடைக்கவேண்டிய உரிமை எதையும் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. 56 தேசங்களை பிரித்தானியா தனது ஆளுகைக்குட்படுத்தி வைத்திருந்தபோது, மகாராணிக்கு கணக்கு சொல்லிக்கொடுக்கக்கூடிய சிறந்த ஒரு ஆசிரியர், ஈழத்தமிழினத்தில் பிறந்து கல்விமானாக இருக்கிறார். என்பதை மதிப்பிட்டு பிரித்தானிய அரசு தேடி கண்டுபிடித்திருக்கிறது. தமிழினத்தில் பிறந்த சுந்தரலிங்கம் அவர்கள், பாண்டித்தியத்தில் தான் மதிப்பு பெற்று பெயர் எடுத்து உயர்ந்த அளவுக்கு, நாடு- மக்கள்- நலன் சார்ந்து சாதனை செய்து மதிப்பு பெறவில்லை என்றே படுகிறது.

பிரித்தானியா மாகாராணியின் மூலம் சிறீலங்காவில் தமிழர்களுக்கான குறைந்தபட்ஷ சுயநிர்ணய உரிமையை சுந்தரலிங்கம் அவர்களால் பெறமுடிந்திருந்தால் வரலாறு பேசியிருக்கும். இன்று படுகொலைகள்பற்றி பேசவேண்டியிருந்திருக்காது தமிழர்கள் சிறீலங்காவில் நிம்மதியாக வாழ வழி செய்திருந்தால் சுந்தரலிங்கம் அவர்கள் பற்றி பெருமையாக கூறலாம். பிரித்தானிய ராசாத்திக்கு கணக்கு பாடம் சொல்லிக் கொடுத்ததால் தமிழினத்துக்கு என்ன நன்மையை சுந்தரலிங்கம் அவர்கள் ஏற்படுத்தியிருக்கிறார், எலிசபெத் மகாராணிக்கும் தனக்கும் தனது குடும்பத்திற்கும் மட்டும் பெருமையை சேர்த்திருக்கிறார்.

எலிசபெத் மகாராணியாரின் திருமணத்திற்கான அழைப்பிதழ் அனுப்பப்பட்ட ஆசிய கண்டத்து தனிமனிதர் ஒருவர் என்றால் அது சுந்தரலிங்கம் அவர்கள் ஒருவர்தான். என்ற பெருமை தவிர வேறொன்றுமில்லை.

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட இனக்கலவரமாக 1915 சிங்கள-முஸ்லிம் இனக்கலவரம் என்றே கருதப்படுகிறது. கலவரத்தின் போது பாதிக்கப்பட்டவர்கள் சிறுபான்மையினரான தமிழ் பேசும் முஸ்லிம்கள். இக்கலவரம் பெரும்பான்மை சிங்கள இன மக்களுக்கும் சிறுபான்மையினரான முஸ்லிம் இன மக்களுக்கும் இடையே ஏற்பட்டது. இதுதொடர்பில் சிங்கள அரசியல்த்தலைவர்களே மூல காரணியாக இருந்து செயற்பட்டனர் என குற்றஞ்சாட்டி ஆங்கிலேய அரசு பாரபட்ஷம் பாராது தீவிரமாகச் செயற்பட்டு டீ. எஸ் சேனானாயக்கா, பண்டாரநாயக்கா, ஆர் டயஸ் பண்டாரநாயக்கா, டீ. எஸ் விஜேவர்தனா, டொக்டர் நெயிசர் பெரேரா, ஈ. டீ. த சில்வா, எச் அமரசூரிய, ஏ. எச். மொலமூறே போன்ற பல சிங்களத் தலைவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தது.

சிங்களவன் சிறைப்பட்டது கேள்வியுற்று சினம் கொண்ட தமிழ் அரசியல் தலைவரும் கல்விமானுமாகிய சேர் பொன்னம்பலம் இராமநாதன், விட்டேனோ பார் என ஆக்கிரோசம் கொண்டெழுந்து இங்கிலாந்து சென்று தனது வாதத்திறமையால் ஆங்கிலேய ராய்ச்சியத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி. சலுகைபெற்று சிங்களத் தலைவர்களை விடுதலை செய்ய வைத்தார். இங்கிலாந்தில் பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு இராமநாதன் நாடு திரும்பியபோது சிங்களத் தலைவர்கள் கொழும்பு துறைமுகத்தில் இராமநாதனை வரவேற்றதோடு, அவரது குதிரை வண்டியின் குதிரைகளைக் அவிழ்த்து விட்டு. வண்டியை தாமே காலி வீதி வழியாக அவரது வீடுவரை இழுத்துச் சென்றனர். இப்படிப்பட்ட மேதாவிலாசங்களைத்தான் இராமநாதன் போன்ற எமது மூத்த அரசியல் கல்விமான்கள் மிக விரும்பி ஏற்றிருக்கின்றனர்.

அந்த நேரத்தில் பிரித்தானிய அதிகாரத்திடமிருந்து சிங்களவனை காத்து பிணை எடுப்பதற்கு சிங்களவர்களிடம் தகுதியும் மதிப்பும் இருக்கவில்லை. தமிழனின் உதவி சிங்களவனுக்கு அப்போ தேவைப்பட்டது. இன்று தமிழன் நிம்மதியாக வாழமுடியாத தத்தளிப்பு நிலை சிங்களவனால் ஏற்படுத்தப்பட்டு இராணுவ கொடுஞ்சிறையில் வாடும் என் தாய் சகோதரிகளை பிணை எடுக்க கடவுளைத்தவிர வேறு எவரும் இல்லை! (கடவுளும் இல்லை என்றே தோன்றுகிறது!)

சிங்களவன், தமிழ் பேசும் முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறையில் இறங்கி. கலவரத்தை உண்டுபண்ணியதற்கான காரணத்தை அன்றே விலாவாரியாக ஆராய்ந்து. இனக்கிளர்ச்சிக்கு காரணமானவர்களை கடும்போக்கோடு தண்டிக்காவிட்டாலும் குற்றத்தை புரியவைத்து நீதி விசாரணையின் பின்,ஒரு நாட்டின் குடிமக்கள் அன்னியோன்யமான புரிந்துணர்வோடு வாழுவதற்கான சூழலை உருவாக்காமல் சிபார்சு அடிப்படையில் சிங்களவனை இராமநாதன், போன்றோர் பிணை எடுக்க முயற்சித்தது, இன்று முழுத்தமிழினமும் எவராலும் பிணையெடுக்க முடியாத சிக்கலுக்குள் மூழ்கியிருக்கிறது.

ஆரம்பத்திலேயே தொலைநோக்கோடு தமிழ்த் தலைமைகள் விடயத்தை அணுகியிருந்தால் பிரித்தானியருக்கும் மூலம் புரிந்திருக்கும். சிங்களவனுக்கும் படிப்பினையாக இருந்திருக்கும். யாழ்ப்பாண தமிழன் என தம்மை காட்டிக்கொண்டு கொழும்பில் குடியிருந்து சொகுசாக வாழ்ந்த தமிழ் தலைவர்கள் தமிழினத்துக்கு தொலை நோக்குப்பார்வையில் எதையும் செய்யவில்லை என்பதே உண்மை. இதேகருத்தை புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழருக்கான அரசியல் தலைமைகள் என்று சொல்லுபவர்கள் புரிந்துகொண்டு காரியத்தில் இறங்க வேண்டும். காலங்கடந்தபின் ஏற்படும் எந்த ஞானமும் கௌவைக்கும் உதவாது.

இலங்கையின் வரலாற்றில் சட்டவாளர்கள் நிறைய இருந்திருந்தாலும் குயின்ஸ் கவுன்சில், (Queen's counsel) என்ற தகமை பெற்ற சட்டத்தரணிகள் இரண்டே இரண்டு பேர் மட்டுமே. ஒருவர் ஜீஜீ பொன்னம்பலம் கியூ சி., அடுத்தவர் எஸ். ஜெ. வி. செல்வநாயகம் கியூ சி,. இந்த இரண்டு அறிவார்ந்த சட்டவாளர்களும், பிரித்தானிய பேரரசின்கீழ் ஆளப்பட்ட எந்த நாட்டிலும் ஒரு வழக்குக்காக அந்நாட்டின் உயர் நீதிமன்றத்தில் ஆஜாராகி வழக்காடும் தகுதி பெற்றிருந்தனர்.

இதன்காரணமாகவும்,, இலங்கை அரசியலில் மேலான இடத்தில் இவர்களின் பங்கீடு தேவைப்பட்டு இருந்ததாலும்,,. பிரித்தானிய அரசமட்டத்திலும் இவ் இருவரும் நன்கு அறியப்பட்டவர்களாக இருந்தனர். ஆனால் இவ்வளவு தகுதி பெற்ற இருவரும் சுதந்திரத்தின் பின் இலங்கை அரசியலில், தலைமை போட்டி காரணமாக ஒற்றுமையுடன் தமிழருக்கான நிலையான அரசியலை சீரிய முடிவாக நிறுவ முடியவில்லை. இவர்களின் பின் தமிழர்களுக்கு தலைமை வகித்த எந்த அரசியல் தலைவர்களும் மாற்றுச்சிந்தனை எதுவுமின்றி,, "தேசியத்தலைவர் பிரபாகரன், அவர்களது வரவுவரை", பாராளுமன்ற உறுப்பினர்கள் என்றவகையில் வந்ததும் பாராளுமன்ற கதிரையை சுத்தமாக்கிவிட்டு போனதும் மட்டுமே காணமுடிகிறது.

ஆரம்ப காலத்தில் அரசியல் ரீதியாக ஈழப்பிரச்சினையை தட்டிக்கேட்கக்கூடிய தகுதியுடன் இருந்த அரசியல் தலைவர்கள், மேதாவிலாசங்களையும் தமது பகட்டான இருப்பையும் முதன்மையாகக்கொண்டு மக்கள் அவஸ்த்தை படுவதற்கு இயன்றளவு அத்திவாரமிட்டுவிட்டு மேதாவிகளாக வாழ்ந்து, சிங்களவனுக்கு போதிய அளவு அரசியல் ஞானம் இராச(தந்திரம்) கற்பித்து உதவிவிட்டு சென்று சேர்ந்துவிட்டனர்.

இந்த பழைய தலைவர்கள் வேண்டுமென்று இவ்விடயங்களை செய்யாவிட்டாலும், தொலை நோக்கு பார்வையற்ற குறைபாடும்,படாடோபமும், தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களிடமுள்ள நுண்ணறிவான மதிநுட்பமும் மக்கள்மீதும் மண்மீதும் தலைவர் பிரபாகரன் அவர்கள் கொண்டது போன்ற பற்றுறுதியும் இல்லாததே குறைபாடாகும். தாம் கற்றறிந்த கல்விமான்கள் என்கின்ற வித்தகச் செருக்கு, என்கின்ற பலவீனமும். தமிழினத்தை இந்நிலைக்கு இட்டு படுகுழியில் தள்ளியிருக்கிறது என்பதுதான் தமிழினம் பட்டறிந்த பாடமாக கொண்டிருக்கிறது.

அடக்குமுறை என்பது ஸ்ரீலங்காவில் காலாகாலமாக இருந்தாலும் தமிழ் அரசியல்வாதிகளே அதை களைய முயற்சிக்காமல் வளர்த்து விட்ட மூலவேர்கள் என்பதும் எவராலும் மறுக்க முடியாது, சிங்களவனை குறை கூறுவதற்குமுன் எமது அரசியல்வாதிகளின் கடந்த கால வழித்தடத்தையும் நிகழ்காலத்தின் தமிழ் அரசியல் அம்புகள் விரையும் நேர் கோட்டையும் கவனத்தில் கொண்டால் விடை தேட நீண்ட தூரம் போக வேண்டியதில்லை.

இந்திய தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களின் வரலாற்றில், ஈழத்தமிழர் நெருக்கடிக்குள்ளான காலங்களில் தமிழகத்தில் கருணாநிதி, எம்ஜீஆர், ஜெயலலிதா ஆகியோர் தமிழக அரசில் அதிகாரத்தில் இருந்தவர்கள். இவர்களில் எம்ஜீஆர் அவர்கள் ஈழமக்களுக்கு நல்ல தீர்வு கிடைக்க வேண்டும் என்பதிலும், "ஈழமக்களின் அரசியல்" ஈழமக்கள் சார்ந்த விடயம் என்பதிலும் தெளிவாக இருந்து, தன்னால் முடிந்த உதவியை பிரதியுபகாரம் எதையும் எதிர்பார்க்காமல் துணிச்சலுடன் செய்தார், கருணாநிதியின் வஞ்சக சுயநல நாடகங்கள் உலகளாவி விக்கிலீக்ஸ்வரை நாற்றமெடுத்து கடை நிலையில் இப்போ அடங்கிக் கிடக்கிறது. ஜெயலலிதா அவர்கள் ஆரம்பத்தில் தவறான கண்ணோட்டத்தோடு ஈழத்தமிழினத்தையும் போராட்டத்தையும் நோக்கியிருந்தாலும், தற்போது ஈழத்தமிழர்களின் நிலை, மற்றும் உலக அரசியல் மாற்றங்கள். அனைத்தும் கவனித்த அவரது அரசியல் பாதையில் நிறைய வித்தியாசங்கள் தெரிகிறது. எனவே ஜெயலலிதா அவர்களின் நடவடிக்கைகளை ஈழத்தமிழினம் நம்பிக்கையுடன் சற்றே பொறுத்திருந்து பார்க்கவேண்டியுள்ளது.

முள்ளிவாய்க்கால் அனர்த்தத்தின் பிந்திய ஈழத்தமிழினத்தின் வாழ்வியலை, குறைபாடுகளை, இலங்கையில் அரசியல் செய்யும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டணி போன்ற கட்சிகளால் கடுகளவேனும் செப்பனிட முடியவில்லை. குறைந்தபட்ஷ அடிப்படையைக்கூட அவர்களால் நிறைவேற்ற முடியாத சூழல் தெரிகிறது. அப்பாவித்தனமான அவர்களது அறிக்கைகள்கூட உள்ளூர் பத்திரிகைகளுடன் கரைந்து போய் விடுகிறது. தாமும் ஸ்ரீலங்காவின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற தகுதி தவிர, பாராளுமன்றத்தில் இருந்து இவர்களால் ஒரு குண்டூசியைக்கூட பெற்றுக்கொள்ள முடியாது. இவைதான் அவர்களுடைய நீண்டகால அரசியல் யதார்த்தம். சுய ஆத்மதிருப்த்திக்கு எப்போ வேண்டுமானாலும் அவர்களால் அறிக்கை மட்டும் வெளியிடமுடியும். இராணுவத்தை விமர்சித்தோ ஜனாதிபதி அமைச்சர்களை விமர்சித்தோ தமிழர்களின் அவலம் குறித்தோ அறிக்கை எழுத அவர்களால் எண்ணிப்பார்க்கவும் முடியாது. அவற்றை அவர்களே தணிக்கைக்கு உட்படுத்திக்கொள்ளுவதுமுண்டு.

பயம் ஒரு காரணமாக இருந்தாலும் இவர்களுக்கான அரசியல் விஸ்தீரண பரப்பளவு வெளியும் அவ்வளவுதான் காணப்படுகிறது. இதற்கு தமிழ் எட்டப்பர்களான டக்கிளஸ் தேவானந்தா, வினாயகமூர்த்தி முரளிதரன் என்கிற கருணா, கிழக்கு மாகாணத்தின் அபசகுனமான பிள்ளையான் போதாக்குறைக்கு கேபி. இந்த எட்டப்பர் கூட்டம் சிங்களவனுடன் தூமை தோய்த்துக்கொண்டிருக்கும் வரை ஸ்ரீலங்காவில் உள்ளூர் தமிழ் அரசியல்வாதிகள் எண்ணுக் கணக்குக்கு பாராளுமன்றத்தில் ஆசனங்களை நிரப்பிக்கொண்டிருப்பனரே தவிர, உரிமை எதனையும் வென்றெடுத்து சாதனை படைக்கப்போவதில்லை.

விடுதலைப்புலிகளின் ஆட்சி ஈழத்தில் இருக்கும்வரை துணிவுடன் சில கருத்துக்களையாவது முன் வைத்த தமிழ் அரசியல்வாதிகள், முள்ளிவாய்க்கால் அமைதிக்குப்பின், என்ன செய்கிறார்கள் என்பதை கவனிப்பதற்க்குக்கூட தமிழினம் சிரத்தை எடுத்ததாகவும் தெரியவில்லை.

ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி ராஜபக்க்ஷ விடுதலைப்புலிகளை முற்றாக அழித்துவிட்டேன் என்று கொக்கரித்த வாயால் வெளிநாடுகளில் தப்பி வாழும் விடுதலைப்புலிகளால் தனக்கும் தனது அரசுக்கும் நெருக்கடிகள் தொடருகிறதென்று திரும்பவும் அழுகிறர். சமீபத்தில் காலிமுகத்திடலில் நடைபெற்ற யுத்த வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் புலம்பியவை. சமீபத்தில் தமிழ்நாட்டின் மூத்த முதலையான கருணாநிதி புலம்பியதை ஞாபகமூட்டியது. ராஜபக்க்ஷ வெளியிட்ட கருத்துக்களும் அதற்கான கற்பனை பதில் மறுமொழிகளும்.

1,வெளிநாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் இலங்கையில் பிரிவினைகளை ஏற்படுத்த தொடர்ந்தும் போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

#(எது போலியான பிரச்சாரங்கள். ஐநா அறிக்கையா. சனல்4 வெளியிட்டிருக்கும் படுகொலைக்காட்சிகளா?)

2,புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகளை விடுதலை செய்வதன் மூலம், இலங்கை நேர்மையான மனித உரிமைகளை கட்டியெழுப்பிவருகிறது.

#(சரணடைந்த 14 ஆயிரம் புலிகளில் மூவாயிரம் புலிகள் கணக்கில் காட்டினால். மீதி 11 ஆயிரம் போராளிகளும், ரமேஸ், புதுவை இரத்தினதுரை, யோகி, போன்ற தலைவர்களும் மனித உரிமைகளை கட்டியெழுப்பும் கட்டிட நிர்மாண வேலையில் இருந்துகொண்டு இருக்கின்றனரா?)

3,தேசிய ஒருமைப்பாட்டுடன் வடக்கு, கிழக்கு வாழ் மக்களுக்கான ஜனநாயக உரிமையினை வழங்குவதற்கு நாங்கள் ஒருபோதும் தயங்கவில்லை.

#(வடக்கு கிழக்கு மக்களுக்கான ஜனநாயக உரிமை என்ன என்பதை தெரியப்படுத்தலாமே)

3,A,இருப்பினும் பிரிவினைவாதக் குழுக்கள் கேட்பதை கொடுக்க நாங்கள் தயாராகவில்லை.

# (நீங்கள் என்னத்தை கொடுக்கிறது, காலாகாலமாக சிங்களவனுடன் வாழ முடியாதென்று பிரிவினை கோருபவர்கள் தமிழர்கள், பிரிவினை கோராதவர்கள் என்று நீங்கள் கூறுவது , டக்கிளஸ், கருணா. பிள்ளையான் கேபி. இவர்களை, இந்த கூட்டத்தை வைத்துக்கொண்டு எவ்வளவு காலம் ஓட்டுவதாக உத்தேசம்?

4,எமது உள்வீட்டுப் பிரச்சினைகளை நாமே தீர்த்துக்கொள்வோம். அதில் வெளியாரின் தலையீட்டுக்கு இடமளிக்கப்படமாட்டாது.
# அப்படியே ஆகட்டும்,, தமிழர்களும் அப்படியே,

5,பழைய காயங்களை பெருப்பித்து மக்கள் மத்தியில் கலவரத்தை ஏற்படுத்த இனிமேல் ஒருபோதும் இடமில்லையென்பதை அரசியல் கட்சிகளுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

# (நீங்கள் கூறுவது தமிழர் தேசியக்கூட்டமைப்புக்குத்தான் என்பது தெரியும். ஆனால் அந்தப் பழைய காயங்கள்தானே வலியோடு ஆறாமல் எங்களை அரற்றுகிறது, அதை தமிழர் தேசியக்கூட்டமைப்பிற்கு கூறி ஒன்றும் நடக்கப்போவதில்லை)

6, அரசாங்கத்துடன் இணைந்து நாட்டையும் நாட்டு மக்களையும் அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்வதற்கான முயற்சிகளில் கட்சிகள் ஈடுபட வேண்டுமென்பதையும் கேட்டுக்கொள்கிறேன்.

#( டக்கிளஸ், கருணா, பிள்ளையான், உங்களோடுதானே சாகும்வரை இருப்பார்கள் கேக்கத்தேவையில்லை)

7,எமது இராணுவத்தினர் ஒரு கையில் துப்பாக்கியையும், மறு கையில் மனித உரிமைப் பிரகடனத்தையும் சுமந்து கொண்டுதான் பயங்கரவாதிகளிடமிருந்து இந்நாட்டை விடுதலை செய்வதில் தங்களை அர்ப்பணித்திருந்தார்கள்.

# (சனல் 4 தொலைக்காட்சியையும், ஐநா நிபுணர்கள் குழுவின் அறிக்கையை திரும்ப பார்க்கவும்,)

8, ஆயிரக்கணக்கான முப்படையினர் மற்றும் பொலிசாரின் உயிர்த்தியாகங்களின் மூலம் விடுதலை செய்யப்பட்ட நாட்டை எந்தவொரு அந்நிய சக்திகளிடமோ, பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளிடமோ ஒருபோதும் தாரைவார்க்க நான் தயாராக இல்லை.

#(ஆயிரக்கணக்கான துப்பாக்கி ஏந்திய முப்படையினர் பொலிஸாரின் குண்டுகளில் மாண்டுபோனது அன்னியரல்ல எங்கள் இலட்சக்கணக்கான உறவினர்கள்)

9, பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்பட்டதன் காரணமாக தங்கள் வருமானத்தை இழந்துள்ள முன்னாள் பயங்கரவாதிகள் மீண்டும் ஒன்று சோ்ந்து தாய்நாட்டுக்கு விரோதமான முறையிலும் வடக்கு மற்றும் கிழக்கின் அபிவிருத்தித்திட்டங்களுக்கு எதிர்ப்புக் காட்டும் முறையிலும் செயற்படத் தொடங்கியுள்ளனர்.

#(புலிகள் என்று சொல்லுங்கோ,, புலிகளை அழிச்சிட்டம் என்று நீங்கள் சொன்னதாக ஞாபகம்,,, பீனிக்ஸ் பறவைபோல அவர்கள் சாம்பலிலிருந்து புறப்படுகிறார்கள் என்று நினைக்கத்தொன்றுகிறது, அத்துடன் வருமானத்தை அப்புகாமியும் பியசேனவும் கொடுத்திருந்தால் சிலவேளை உங்களுக்கு நஸ்டம். ஆனால் சுப்பையாவும், கணபதிப்பிள்ளையும், அன்னலட்சுமியும் தங்கள் காசை, அதுவும் வெளிநாட்டிலிருந்து தாய் நாட்டுக்காக குடுத்து என்னவாகுதல் செய்யட்டுமே நீங்க ஏன் அழுகிறீங்க)

10, ஆயினும் முன்னைய காயங்களை மீண்டும் மீண்டும் கிளறுவதாலோ, நடந்து முடிந்த சம்பவங்களை திரும்பத்திரும்ப ஞாபகப்படுத்திக் கொண்டிருப்பதாலோ யாருக்கும் எந்தவித நன்மையும் விளையப் போவதில்லை

#அதைத்தானே நாங்களும் சொல்லிக்கொண்டிருக்கிறோம் நீங்கள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாமல் காயம் பட்ட வலிக்கு மருந்து தடவ விட்டிருந்தால் கொஞ்சமாவது அமைதி காக்க தோன்றும்,, விடுத்து வேதனையை விதந்து சீண்டிக்கொண்டிருந்தால். காயம் ஏற்படுத்தியவனையும் துன்பங்களை உண்டாக்கியவனையும் கழுவில் ஏற்றாமல் தமிழினம் உறங்காது)

மேலே குறிப்பிட்டவை ஜனாதிபதி ராஜபக்க்ஷவின் வாயிலிருந்து விழுந்த நஞ்சுகள், ,அவை ராஜபக்க்ஷவின் இயலாமையின் வெளிப்பாடு என்பதை உணர்ந்து நகைச்சுவையாக யதார்த்தமான பதில்கள் பதியப்பட்டிருக்கிறது.

இலங்கையில் வாழும் பூர்வீக தமிழர்களின் தேசிய உரிமையும் அன்றாட வாழ்வில் தமிழன் படும் இன்னல்களும் "வரும் ஆனால் வராது" என்ற இந்த வடிவேலுவின் நகைச்சுவை வேடிக்கை வார்த்தை மிகச்சரியாக பிரதிபலித்தே வந்திருக்கிறது. படவேண்டிய அனைத்து அலைச்சல்களையும் சந்தித்தவன் தமிழன் என்பதால் இச்சொல்லை புதிய பொன்மொழியாக பின்பற்றி எழுதப்படும் கணிப்பீடும் சரியாகத்தானிருக்கும்.

இந்தியன் ஆமி வந்திறங்கியபோது அப்பாவியாக ஆனந்தத்தோடு கை காட்டி வரவேற்றான் தமிழன். ஐரோப்பியர் வந்திறங்கியபோதும் புளகாங்கிதத்துடன் வரவேற்றான் தமிழன்.முன்பு போத்துக்கீசர் ஒல்லாந்தர் வந்தபோதும் இவனின் கொள்ளுப் பாட்டன் எள்ளுப் பாட்டன் ஆ,,,,வென்று இப்படித்தான் வரவேற்றிருப்பான். அதேபோலத்தான் அன்றொருநாள் இந்தியாவிலிருந்து விஜயன் என்பவன் தாமிரபரணியில் வந்திறங்கியபோதும் தமிழன் பல்லைக்காட்டி வரவேற்றிருப்பான். இனி தமிழன் என்ன செய்யப்போகிறான் என்பதை உலகம் பொறுத்திருந்து பார்த்து பதிவு செய்யும்.

ஈழதேசம் இணையத்திற்காக
கனகதரன்.