Thursday, September 15, 2011

கூத்தாடி குசும்பன்< அங் 10,திமுக வின், முதலாளி கருணா தாத்தா காங்கிரசுக்கு கொள்ளிக் கட்டை இறுக்கி கருமாதி பண்ணிட்டதா அறிவிச்சிருக்காரு.

அதேநேரத்தில் மறைமுகமாக தனது தலையிலும் மண்ணை அள்ளி போட்டிருக்காரு போலத்தான் தெர்யிது.

வரும் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை!. தி.மு.க. தனித்துப் போட்டியிடும்! என்று அதிரடியா தாத்தா அறிவிச்சிருக்காரு.

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி மன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில், தி.மு.கவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து திமுக மொதலாளி (அதிபர்) கருணா தாத்தா, வழமையான தனது கரகரப்பான கிரந்த மொழியில் அறிக்கை வெளியிட்டிருக்காரு.

அதன் சாராம்ஷம் "வரும் ஆனா வராது". எங்கிறாப்பல சிதம்பர சக்கரமா ஒண்ணும் புரியல்ல. இருந்தாலும் தாத்தா சொன்னா சரியாத்தானே இருக்கும்,ங்க!

இது குறித்து அவரது அறிக்கை:

நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதென்பது இந்திய நாட்டில் மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும் என்ற அக்கறையின்
அடிப்படையில், தி.மு.க.வும் உறுதுணையாக நின்றோ- ஒத்துழைப்பு நல்கியோ அத்தகைய கூட்டணியின் வெற்றிக்காகப் பாடுபட்டுள்ளது?.

நாடாளுமன்றத் தேர்தல், மத்தியில் ஒரு முற்போக்கு?/? அரசை அமைத்திடவும், சட்டமன்றத்தேர்தல், மாநிலத்தில் ஒரு ஜனநாயக ஆட்சியை அமைக்கவும் பயன்பட வேண்டும் என்ற காரணத்திற்காகவே!!!, நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் ஒத்த கருத்துடைய?? கட்சிகளோடு ஒன்றுபட்டு கூட்டணி அமைத்து மத்தியிலும், மாநிலத்திலும், மதச்சார்புடையதும், மனித நேயத்திற்கு விரோதமானதுமான ஆட்சி அதிகாரமையங்கள் அமைந்து விடக்கூடாது என்ற அக்கறையுடன் செயல்படுகின்ற தி.மு.க.,

(இவிரோட திமுக கச்சி தவிர மத்த கச்சி அல்லாமே மனிதநேயத்துக்கு
Doubt Dhanapal விரோதமானதுங்க. இவிரோட அக்கறை புல்லரிக்குதுங்க)

அண்மையில் வரவிருக்கின்ற உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் அரசியல் அடிப்படையோ, கொள்கை அடிப்படையோ முன் வைக்கப்படாமல் பொதுமக்களுக்குத் தேவையான சுகாதார வசதி, கல்வி வசதி, சாலை வசதி, மருத்துவ வசதி, குடிநீர் வசதி போன்ற பொதுப் பணிகளை குறிக்கோளாகக் கொண்டு - இயங்க வேண்டும் என்பதே எல்லோராலும் விரும்பப்படுகிற?? - ஏற்கப்படுகின்ற?? நிலை என்பதைக் கருத்திலே கொண்டு!!!!!!!!!! உள்ளாட்சி மன்றத்தேர்தல்களில் அரசியல் நோக்கில் கூட்டணிகளை உருவாக்குவது தேவையில்லை என்பதை ஆழ்ந்த சிந்தனைக்குப்பிறகு(??) தி.மு.க. முடிவாக எடுத்துள்ளது.

இந்த முடிவின் அடிப்படையில் உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் எந்த ஒரு அணியும் அமைக்காமல், மாநில அளவிலான சட்டமன்றத் தேர்தல்; தேசிய அளவிலான நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் மட்டுமே - கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்று தி.மு.க. முடிவெடுக்கின்றது.
இவ்வாறு அந்த கிரந்தத்தின் மூலம் கருணாநிதி கூறி உள்ளார்.

கூ கு> தாத்தாவோட பொலம்பல்ல இருந்து அவரோட ஆதங்கம் அனுமானம் என்னென்னு புரிஞ்சிருப்பீங்க.

கூ கு> கனிமொழி திருட்டுக்கேசுக்கே பொதுக்குழுவை, அண்ணா அறிவாலயத்தில் ஒண்ணுக்கு மூணுவாட்டி கூட்டி முடிவெடுப்பாரு, பாட்டி தயாளுவை காப்பாத்த பொதுக்குளுவை கூட்டுவாரு, பொதுமக்களோட பிரச்சினையான இதுக்கு மட்டும் பொதுக்குழு செயற்குழு எதையுமே கூட்டல்லீங்களே, தொண்டன் அல்லாம் கோச்சுக்க மாட்டாய்ங்களா. இல்லாங்காட்டி ஒத்துக்கிட்டாய்ங்களா. அத சொல்லா மறந்திட்டீய்ங்க தாத்தோவ்.

உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்து போட்டியிடும் என்று அறிவித்ததும், கேலியும், கிண்டலும் செய்றாய்ங்கன்னு ராமதாஸ் மாமாவும் போனவாரம் பொலம்பினாரு.

சட்டசபை தேர்தல்ல ஓறவு வச்சி ஒண்ணா ஒறவாடி நின்ன நீங்க அல்லோரும் இப்போ உள்ளூராட்சி தேர்தல்ல எதிர் எதிரா நிக்கப்போறீங்க.

காங்கிரசு, ராமதாசுகச்சி. திருமாகச்சி. ஒங்கவீட்டுகச்சி அல்லாம் சேர்ந்தே நின்னும் சட்டசபை தேர்தல்ல முடியாமப்போயி மண்ணு தின்னீங்க. இப்போ தனிச்சி நின்னு என்னத்த திங்கப்போறீங்க.

அப்பொறம் சொல்லுறீங்க மத்தியில் காங்கிரஸு கிட்ட ஒறவு தொடருதெங்கிறீங்க. உள்ளூராட்சியில எதிர்ப்போம் ங்கிறீங்க ஒண்ணுமே
புரியல்லீங்களே.

ஒண்ணொண்ணுக்கும் ஒங்கபாட்டுக்கு காரணம் காமிச்சுக்கிட்டே இருக்கீங்க, யாராச்சும் நம்புவானா ன்னு ரோசனை பண்ணினீங்களா, வர வர ஒங்க கிரந்தம் ஒருத்தருக்குமே புரியமாட்டேங்குது ஒங்களுக்காச்சும் ஏதாச்சும் புரியுதுங்களா?

திமுகவுடன் எந்தவித விரிசலோ, மனக்கசபப்போ இல்லை, இன்னும் திமுக கூட்டணியில் தான் உள்ளோம். என்று திருமா அண்ணனும் அப்படியே
Thirumavalavan
ஒங்கபாணியில் கூவிக்கிட்டிருக்காரு. நீங்க கூப்பிட்டனுப்பி ஏதாச்சும் தகவல் சொன்னீங்களாங்கங்க.

தங்கம்பாலு அண்ணனும் ஒங்களோடதான் கூட்டு வைச்சுக்கப்போறதா பிரஸ்மீட் நடத்தினாரு. எதயுமே நீங்க கண்டுக்கல்லீங்களா. சொக்கத்தங்கம் சோனி,க்கு Dinamalar cartoon தகவல் குடுத்தீங்களாங்க, அவிங்க கோவத்துக்கு மட்டும் ஆளாயிடாதீங்க.

ஒங்களுக்கு என்னத்த சொல்றது, நீங்களே பெரிய தில்லாலங்கடியாச்சே, லாபமில்லாமல் நீங்க பல்லுக்கூட வெளக்கமாட்டிங்கன்னு சொல்றாய்ங்க.

அண்மையில் வரவிருக்கின்ற உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் அரசியல் அடிப்படையோ, கொள்கை அடிப்படையோ முன் வைக்கப்படாமல்
பொதுமக்களுக்குத் தேவையான சுகாதார வசதி, கல்வி வசதி, சாலை வசதி, மருத்துவ வசதி, குடிநீர் வசதி போன்ற பொதுப் பணிகளை குறிக்கோளாகக் கொண்டு - இயங்க வேண்டும் என்பதே எல்லோராலும் விரும்பப்படுகிற - ஏற்கப்படுகின்ற நிலை என்பதைக் கருத்திலே கொண்டு உள்ளாட்சி மன்றத்தேர்தல்களில் அரசியல் நோக்கில் கூட்டணிகளை உருவாக்குவது தேவையில்லை என்பதை (ஆழ்ந்த) சிந்தனைக்குப்பிறகு தி.மு.க. முடிவாக எடுத்துள்ளது. ங்கிறீங்க,

பச்சப்புள்ளையாட்டம் ஒங்க பரந்த மனச மக்கள் புரிஞ்சுக்காம போயிட்டாய்ங்களோன்னு வேதனை ஒருபக்கம் இருந்தாலும், ஒண்ணுமே புரியல்லீங்க.

இதுவரை 70 ஆண்டுகளா நீங்க கூவிவந்த கொள்கைக்கு இன்னிய ஆழ்ந்த முடிவு எங்கேயோ இடிக்கிறாப்பல இருக்குங்களே.

சந்தற்ப வசமா பேசுறாப்பல இருக்குன்னு சிலபேர் நெனைச்சுக்குவாய்ங்க. ஆனா நீய்ங்க அப்படிப்பட்டா ஆளுங்களா. நீய்ங்க முடிவெடுத்தா ஒரு நாயம் இருக்கும்ங்க, நீதியான பொது நோக்கு நிச்சியம் இருக்கும்.

குடும்ப ஆசாபாசத்துக்கு ஒங்க அகராதியில இடமில்லை என்பது தமிழ்நாட்டில மட்டுமல்லங்க ஒலகத்தில உள்ள அத்தன கொழந்த புள்ளக்கும் புரியுமுங்க.

வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட திமுக முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது, இதன்மூலம் காங்கிரஸுக்கு இருந்த தேவையற்ற சுமை குறைந்துவி்ட்டது என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் மன மகிழ்ச்சி தெரிவிச்சிருக்காரு.

உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக திமுக எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது. இதனால், காங்கிரஸுக்கு இருந்த தேவையற்ற சுமை குறைந்துள்ளது. திமுகவுடன் தொடர்ந்து கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதை இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களோ, காங்கிரஸாரோ விரும்பவில்லை என்பது தெரிந்துதான் திமுக தலைவர் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கக்கூடும் என்றும் சொல்லியிருக்காரு.

அல்லாத்தையும் கூட்டி கழிச்சு பெருக்கி பாத்தா, சனீஸ்வரன் ஒங்க கூட்டணி மத்தியில சம்மணம்போட்டு ஒக்காந்திட்டாரு ங்கிறது மட்டும் புரியறது.
அவிருதான் ஒங்க அல்லாரையும் பேசவைக்கிறார் ய்ங்கிறதும் புரியுறது.

ஒங்க கச்சி, ராமதாஸ் கச்சி, சோனியா கச்சி, திருமா கச்சி, அத்தினியயும் தமிழ் நாட்டவிட்டு வெரட்ட சனீஸ்வரன் முடிவெட்டுத்திட்டாப்பல. இதுக்குமேல யாரும் ஒண்ணும் பண்ணுறதுக்கில்லீங்க.

அதுக்காக நீய்ங்க அறிக்கை வுடுறத்தையோ கேள்வி பதில் எயுதுறதையோ சனீஸ்வரன் தடுக்கமாட்டாரு. ஏன்னா அவிரு ஒங்க கூட்டணியில ஒருத்தராயிட்டார்ங்க.

ஒங்கள அவிரு புடிச்சே ரண்டு வருஷமாச்சுங்க, இன்னும் ஐஞ்சரை வருசத்தில வெலகிடுவாரு அப்போறம் நீங்க மெல்ல மெல்ல முன்னேறினாத்தான் உண்டு.

வரட்டுங்களா?
மீண்டும் சந்திப்போம்.

1 comment:

Tamilscafe said...

good one...

http://Tamilscafe.blogspot.com/