Monday, September 5, 2011

மதுரையை எரித்ததாள் கண்ணகி! தமிழீத்தை எரித்தாள் சோனியா –உமா

இந்திய வெளிவிவகாரம் எதிர்நோக்கும் மாற்றங்கள்!

கண்டப் பெயர்ச்சிக்கு ஒப்பான பாரிய மாற்றம் இந்திய வெளிவிவகாரத்தில் ஏற்படுவதை அரசியல் நோக்கர்கள் அவதானிக்கின்றனர். பிராந்திய வல்லரசு என்ற கட்டத்தில் இருந்து சர்வதேச மட்ட வல்லரசாக மாறும் இடைக் காலத்தில் இந்தியா இப்போது இருக்கிறது. அதாவது ஒன்றாக இருந்தபடி இன்னொன்றாகவும் மாறும் நிலை.

சர்வதேசமட்ட வல்லரசுக்குரிய அடையாளங்களும் தகுதிகளும் இந்தியாவுக்கு இருக்கின்றனவா என்பது தான் இந்தியா எதிர்நோக்கும் சமகாலப் பிரச்சனை. இந்த நோக்கில் இந்திய அரசின் கொள்கை வகுப்பாளர்கள் பொருத்தமான நகர்வுகளை மேற்கொள்கிறார்களா என்று இந்தியத் தேசியவாதிகள் கேட்கிறார்கள்.

தற்போது மத்திய ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கூட்டணி அரசு மேற்கொள்ளும் வெளியுறவுத் திட்டங்கள் எதிர் கட்சியின் கைகளுக்கு ஆட்சி மாறும் போது தாக்குப் பிடிக்குமா என்பது இன்னொரு கேள்வி. வெளிவிவகாரம் தொடர்பான முன்னெடுப்புக்கள் தூர கால, இடைக் கால, குறுகிய கால நோக்கு உடையவையாகக் கருதப்படுகின்றன.

தூர நோக்கிற்குப் பதிலாகக் குறுகிய கால நோக்குடைய கொள்கை முன்னெடுப்புக்களை இந்தியா எடுப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதன் காரணமாக உள்நாட்டுக் கொந்தளிப்பும் அமைதியின்மையும் கடந்த சில மாதங்களாகத் தொடர்ச்சியாக நடக்கின்றன. இது காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு எதிராக மாத்திரமல்ல மத்திய அரசு ஆட்சி முறைக்கு எதிராக மாறும் வாய்ப்பு இருக்கிறது.

யாருக்கு இலங்iகை மீதான அதிக்கம் என்ற சதுரங்கப் போட்டியில் இந்தியா சீனாவிடம் கடும் தோல்வி கண்டிருக்கிறது. ராஜீவ் காந்தியின் படுகொலை ஈழத் http://www.eeladhesam.com/index.php?option=com_joomgallery&func=watermark&catid=13&id=3659&Itemid=53தமிழர்கள் செய்த மிகப் பெரிய தவறு என்று சொல்லலாம். அதிலும் பெரிய இமாலயத் தவறு ஈழத்தமிழர்களை அழிப்பதற்கு இலங்கை அரசுக்கு இந்தியா வழங்கிய இராணுவ உதவியாகும்.

இலங்கை நிகழ்வுகள் இந்தியா மீது பாரியளவில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்ற இந்திரா காந்தியின் கோட்பாட்டை உதாசீனம் செய்த காங்கிரஸ் கூட்டணி அரசு புத்தியற்ற (Imprvdent )நகர்வுகள் மூலம் அதே பாதிப்புக்களை வரவழைத்துள்ளது. சுருங்கச் சொன்னால் ஈழத் தமிழின அழிப்பு என்ற அவசரத் தீர்மானம் இந்திய ஒருமைப்பாட்டிற்கு உலை வைக்கும் அளவுக்கு ஊதிப் பருத்துள்ளது.

கண்ணகி மதுரையை அழித்தது போல் வஞ்சம் தீர்க்கும் நோக்கில் ராஜீவ் காந்தியின் மனைவி ஏவிய கணைகள் ஈழத் தமிழினத்தைச் சுட்டுப் பொசுக்கியுள்ளது. சோனியா காந்தி விடுத்த உத்தரவுகளுக்கு அமைவாக ஈழத் தமிழர்களுக்கு எதிரான போருக்கு இந்திய மத்திய அரசு உதவியதாக ஸ்ரேற்ஸ்மன் பத்திரிகைக் கட்டுரையில் இந்தியாவின் பழம்பெரும் ஊடகவியலாளர் சாம் ராஜப்பா எழுதியுள்ளார்.

அடுத்ததாக ஈழத் தமிழின அழிப்பு இந்தியாவின் கையில் இருந்த காத்திரமான நெம்பு கோலைப் பறித்துள்ளது. விடுதலைப் புலிகள் ஆட்சியில் இருக்கும் வரை இலங்கையில் நிலவிய வலுச் சமநிலை 2009க்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது.

புலிகள் அதிகாரத்தில் இருக்கும் வரை இலங்கை அரசிற்கு இந்திய உதவி தேவைப்பட்டது. புலிகள் அகற்றப்பட்ட பிறகு புதுடில்லியின் தேவை அருகிவிட்டது. சீனாவின் இலங்கைப் பிரவேசத்திற்கு இலங்கை தொடர்பான இந்தியாவின் தவறான கொள்கை தான் காரணம் என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் யஷ்வந்த் சின்கா சொன்னது முற்றிலும் உண்மை.

இலங்கையைத் தன்வசம் இழுக்கும் இந்தியாவின் ஒரு நூற்றாண்டிற்கு மேற்பட்ட தூர நோக்குக் கொள்கை குறுகிய நோக்கு நடவடிக்கைகள் மூலம் 2009ல் முடிவுக்கு வந்துள்ளது. இழப்பை இந்தியாவால் ஈடுசெய்ய முடியுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.

இந்தியா எதிரி நாடுகளால் சுற்றி வளைக்கப்பட்ட நாடு. இந்த வியூகத்தை உடைத்துக் கொண்டு இந்தியா தனது இலட்சியக் கனவுகளை அடைவது சந்தேகம். ஆயுதத் தொழில்நுட்பம் உட்பட அனைத்திலும் சீனாவால் தனித்தியங்க முடியும். அது சர்வதேச வல்லரசின் இலட்சணம். அமெரிக்கா, இஸ்ரேயில் போன்றவற்றில் சார்ந்து வாழத் தான் இந்தியாவால் முடியும். இது அவலட்சணம்.


நன்றி ஈழம் பிறஸ்.

1 comment:

anbu pavanar said...

kannakiyudan parathaiyai oppidaatheerkal! thalaipe thavaraanathu.... soniyaavin vanjakam kannakiyin ilappudan oppida mudiyaathathu.