Wednesday, September 7, 2011

>கூத்தாடி குசும்பன்< அங் 8.

சுய விளம்பரத்துக்காக தமிழ்ப் புத்தாண்டு தேதியை மாற்றிய கருணாநிதி: ஜெ தாக்கு



பொய்யான புகார்களின் பேரில் திமுகவினரை அதிமுக அரசு கைது செய்து அரசியல் பழிவாங்கலில் ஈடுபடுகிறது. ரவுடிகள் மீது ஏவப்படும் குண்டர்
சட்டத்தின் கீழ் திமுகவினரைக் கைது செய்கிறார்கள் என்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலிடம், திமுக எம்.பிக்கள் குழு நேற்று புகார் கொடுத்துள்ளதாக செய்தி வந்திருக்கு.

கூகு>> குடியரசுத்தலைவர்கிட்ட தூக்குத்தண்டனை கைதிங்க கருணை மனு குடுப்பாய்ங்க. ஆயுள் தண்டனை பெற்ற சிறை கைதிங்க கருணை காட்டும்படி மனிதாபிமான உதவி கேட்பாய்ங்க. அதுவே பதினோரு வருஷம் கழிச்சுத்தான் பார்வைக்கு எடுத்து குடியரசுத்தலைவரு தீர்ப்பு கூறுவாரு.

இவய்ங்க என்னடா,ன்னா, நாட்டையே குட்டிச்சுவராக்கி.. இந்திய நாட்டிலேயே ஊழல்ல கொடிகட்டி பறக்கிற ஒண்ணாம் நம்பர் கச்சியான, தி.மு.க (திருட்டு முன்னணி களவாணிகள்) கச்சியென்னு நாடே அலை கடலாட்டம் Dinamalar cartoon அறிஞ்சப்புறம். நல்லபுள்ளைக்கு நடிக்கிறானுவ.

ரவுடிகள் மீது ஏவப்படும் குண்டர்ச் சட்டம் ஒண்ணும் சும்மானாச்சும். தீபாவளி ஈக்குவாணமாட்டம் ஏவமுட்டியாதுங்க, மூணு வலுவான கிரிமினல் குத்தச்சாட்டு இருக்கணும் ன்னு சொல்ல்றாய்ங்க. அதுக்கப்பொறந்தான் குண்டர் சட்டத்த விலாவாரியா வீசலாங்கறது சாத்தியமாகும் ன்னு சட்டப்படி ஊரே சொல்லுது,

நானே நாட்ட விட்டு ஓடி பதினைஞ்சு வருசமாச்சு. அதோட நான் ஒரு ஈழத்தில பொறந்த பாவப்பட்ட பொறப்பாவும் இருந்தும், இந்தியாவினோட தில்லு முல்லு தெரிஞ்சிருக்கும்போது.. பாலு அண்ணாச்சி, தாத்தா எடுத்து குடுத்தத டில்லியில பறக்கவிடுறாரு எங்கிறது. தமிழ்நாட்டுக்கார தமிழனுக்கு புரியாதென்னா நினைக்கிறாரு அண்ணாச்சி.

பள்ளிக்கூடத்து வாசல்ல டீக்கடை வச்சிருந்த சனியன் புடிச்ச ஜெகஜ்ஜாலக்கரன் எல்லாம், அரசியலுக்கு வந்த அப்பொறம், கல்வி ரட்சகர், கல்வித்தந்தை, ன்னு அடைமொழியோட அம்பது கல்லூரி நடத்றான். ஐயாயிரம் கோடிக்கு சொத்து சேத்து வச்சிருக்கான். மூணு நாலு பொண்டாட்டி வைச்சிருக்கான்,

இவனுகள் நாட்டுக்கும் மக்களுக்கும் செஞ்ச துரோகத்துக்கும் ஊழல் கொள்ளைங்களுக்கும். நாயமா பாத்தா தேசிய பாதுகாப்பு சட்டத்துல கைது பண்ணி மூணு நாலு வருஷங்களுக்கு விசாரணை இல்லாம இருட்டறையில சிறையில போடணும்,

அந்தம்மா பொலிசு காரன்கிட்ட கண்டிப்பா ஓடர் போட்டு. சட்டம் ஒழுங்கை சரிப்பண்ண விடமாட்டாய்ங்க போலிருக்கு.

போலீஸுக்காரன் பொய்வழக்கு போட்டான்னா கோர்ட்டுக்கு போகவேண்டியதுதானே, நீதிமன்றம் வழக்கை ஏற்றுக்கொண்டு

பொலிஸுக்காரனுக்கு ஓடர் போட்டா, பொலிஸு மூணு நாள்ள நடவடிக்க எடுப்பாய்ங்க, சுத்தவாளின்னா வெளியில வாங்க. குத்தவாளின்னா இருந்து கழி தின்னுங்க. அதுதானே நியதிங்க.

குடியரசு தலைவர் கிட்ட வழக்கு போடுறதுக்கு இந்தியாவில சட்டம் இருக்கான்னும் தெர்யல்ல. அப்படித்தான் சட்டம் இருந்தாலும், முடிவெடுக்க அதுக்கான கால வரம்பு சுத்தமா இல்லைன்னு உள்த்துறை அமைச்சு போனவாரம் தகவல் வெளியிட்டிருந்திச்சு. இவனுங்க பத்திரிகைகளுக்கு அறிக்கை குடுக்குற வீரைய்ங்களா இருக்காய்ங்களே தவிர, பேப்பர் படிச்சாதானே நாட்டு நடப்பு வெளங்கும்.

இதுவரை 90 (திருட்டு) நிர்வாகிகளை பொய் வழக்கின் கைது செய்துள்ளது அதிமுக அரசுன்னு, அண்ணாச்சி குடியரசு தலைவர்கிட்ட புகார் குடுத்திருக்காரு.

தமிழ்நாட்டு பொலிஸுக்காரன் எல்லாம் அதிமுக காரைய்ங்களா. இல்ல முதலமைச்சரும் மந்திரி மாரும் போயா கைது செய்யிறாங்க,

இம்புட்டுநாளும் கம்முன்னு கெடந்தவரு, தன்னோட நாளும், தலையோட நாளும் எண்ணப்படுகிறதுன்னு, சூதானமா தெரிஞ்சப்பொறம். வேற வழி தெரியாம தாத்தா எடுத்து குடுத்த பாயிண்ட புடிச்சி டில்லிக்கு ஓடியிருக்காரு.

தமிழ்நாட்டுக்குன்னு ஒரு நிர்வாகம் இருக்கு, தமிழ்நாட்டுக்குன்னு ஒரு சட்டம் இருக்கு. தமிழ்நாட்டுக்குன்னு பொலிஸு இருக்கு, கோர்டு இருக்கு. இது ஒண்ணுமே இவங்க கண்ணுக்கும் தெர்யல்ல, காதுக்கும் எட்டல்ல, டில்லிக்கு ஓடிப்போயி ஒப்பாரி வைச்சி பட்டம் விடுறானுவ.

பொம்முடி எங்கிற முன்னாள் மாண்புமிகு, சைதாபேட்டையில மாநரராட்சி பூங்கா கட்டவேண்டிய எடத்தில வூடு கட்டி குடும்பம் நடத்துறதா சொல்லுறாய்ங்க. லஞ்ச ஒழிப்பு போலீஸும் பொம்முடி ஐயா மேல லஞ்ச வழக்கு போட்டிருக்கிறதாயும் குமுதம் றிப்போட்டர் செய்தி சொல்லுது,

ஏகப்பட்ட குத்தச்சாட்ட கண்டுபிடிச்சப்பொறம், பொம்முடி ஐயாவ பொலிஸுக்காரங்க கைது செஞ்சப்போ. நான் நினைக்கிற எடத்திலதான் அடைக்கணும் ன்னு பொம்முடி ஐயா, அடம்புடிக்கிறாரு. ஆடு நெனைக்கிற எடத்தில பட்டி போடுறதா? பட்டி இருக்கிற எடத்தில ஆட்டை அடைக்கிறதா யாருக்காவது பதில் தெரிஞ்சா சொல்லுங்க.

ஒரு சுப்பன், இல்லாங்காட்டி ஒரு கபாலி, 50 ரூவா திருடிட்டன்னு வைச்சுக்கங்க. பொலிஸு புடிச்சுட்டாங்கன்னா. அவங்க தாங்க நெனைக்கிற எடத்திலதான் அடைச்சு விசாரிக்கணும் ன்னு அடம்புடிச்சா, நடக்கிறதென்ன... முட்டி பேர்ந்திடாதா, மூஞ்சி மொகரைய பொலிஸுகாரனுவ விட்டு வைப்பானுகளாங்க?

கோடி கோடியா கொள்ளை அடிச்சுக்கிட்டு,, முன்னாள் அமைச்சரா இருந்திருக்கேன். சட்டப்படி எது எப்படி நடக்கணுமோ அதே வழிய கொஞ்சூண்டு திருட்டு வேலை செஞ்சு கொள்ளையடிச்சிருக்கேன். அது தப்பு கிடையாது. எங்க தெறமைதான் அதுன்னு நம்புறோம் ங்கிறீங்க,

நாங்க ஆட்சி செய்யும்வரை எவரும் இப்புடி பிழை பிடிப்பனுவன்னு நினைச்சும் பாக்கல்ல. எங்க தலிவரும் விழா எடுத்து சந்தோசமா அல்லாத்தையும் கொண்டாடியிருக்காரு, எதயும் முகம் சுழிக்கம ஒத்துக்குவாரு, ங்கிறீங்க.

அத நாட்டு சட்டம் ஒத்துக்கணும் ங்கிறீங்களா? புதுசா ஆட்சிக்கு வந்த அரசும் ஒத்துக்கணும் ன்னு சட்டம் இருக்குங்களா?

இந்திய வரலாற்றிலேயே முதல் முதலாக 176.000 00 00 000. ரூபா ஊழல் பண்ணிய திருட்டு கச்சின்னா ஒங்க கச்சி திமுக தவிர வேற எத சொல்லமுடியுங்க.

பெத்த மவளையே திருட்டு குத்தத்துக்கு சிறைக்கு அனுப்பிய கட்சி தலிவர் வேற யாருங்க.

சிறையில் செத்துப்பிழைக்கும் அந்தப்பொண்ண பத்தி எவனாச்சும் எண்ணி பாத்தீங்களா, ஒங்க அக்கா தங்கச்சிக்கு இப்படி ஒரு நிலை வந்திச்சுன்னா நிம்மதியா இருக்க முடியுமான்னு யோசிச்சு பாருங்க. இதுக்கெல்லாம் காரணம் என்ன. பேராசை, ஊழல். திருட்டுத்தானேங்க.

தயவு செஞ்சு ஒங்க தலிவர்கிட்ட சொல்லி குத்தத்தின் மூலவேர், அவருதான் என்பதை பகிரங்கமா ஒப்புக்கொண்டு அந்த பொண்ண வெளியில கொண்டுவரப்பாருங்க, அவங்க அந்தப்பொண்ணு ஒங்க தலிவர்போல வாழ்ந்து முடிச்சவங்க கிடையாது. வாழவேண்டியவங்க. மானசீகமா சொல்லுறேன் எனக்கே மனது கனக்குதுங்க.

ஒங்க திருகுதாளம் எல்லாம் ஆட்சி மாறிச்சின்னா வுட்டுடுவாங்களா. நீங்க எல்லாம் அரிச்சந்திரன்களா. இல்ல நாட்டு மக்கள் எல்லாம் ஆடு மாடா, 50 ரூவா பொளைக்க ஆலா பறக்கிறான் மனுஷன். நீங்க என்னடான்னா எதயுமே கேட்டுக்கவே மாட்டங்கிறீங்க. இப்புடியே போனீங்கன்னா ஒங்க நிலமைய கொஞ்சம் ரோசனை பண்ணி பாருங்க.

அம்மா அவங்க மேலயும் ஒங்க தலிவர் போட்ட வழக்கு 13க்கு மேல. அம்மா அவங்க நீதி மன்றம் போய் எல்லாம் பொய் வழக்கின்னு நிரூபிச்சு வெற்றி பெற்றிருக்காங்க. இன்னும் ஒண்ணோ ரண்டோ வழக்கு நிலுவையில் இருக்குன்னும் சொல்லுறாங்க ஆனா அம்மா வாய்தா வாங்கினாலும் சட்டப்படி வழக்க சந்திச்சுட்டுத்தானே இருக்காங்க இது ஏன் ஒங்களுக்கு புரியமாட்டேங்குது.

மத்திய அரசு பிரதமரு, மந்திரிங்க, சொத்து கணக்கு காம்பிச்சதா பேப்பர் சொல்லுது, ஐஞ்சு வாட்டி அமைச்சரா இருந்தவனை விட, அஞ்சா நெஞ்சன் அழகிரி அண்ணனுக்கு 30 கோடிக்கு மேல சொத்து இருக்கிறதா காட்டியிருக்காரு. 50.00.000.ரூவா சொத்த 50,000 ரூவா மேனிக்கு பெறுமனம் காட்டி சொத்து மதிப்ப கொறைச்சி காட்டியிருக்காரு ன்னு பத்திரிகையில செய்தி போடுறானுவ. யாராச்சும் பத்திரிகைகள் மேல் மான நஸ்ட வழக்கு போட்டிருக்கானுவளாங்க.

அண்ணனோட சொத்து 30 கோடி ங்கிறதுக்கு பின்னாடி இன்னும் இரண்டு பூய்ச்சியம் போட்டா சரியாகும் ன்னு கருத்து சொல்லுறாய்ங்க, இம்ம்புட்டு சொத்தும் வானத்திலிருந்து கொட்டிச்சுதுங்களா. வெத்தலையில் மை போட்டுப்பாத்தாலும் கண்டுபிடிக்க முடியாத மர்மமா தெர்யல்லயாங்க.

இந்தியாவில் மக்கள் 98 வீதமும் அரசியல்வாதிங்க 02 வீதமும் இருப்பதாகவும். 98% பொருளாதாரம் 02% அரசியல்வாதிகளிடம் சிக்கியிருப்பதாகவும், 02% பொருளாதாரம் மட்டும், 98% மக்களிடமும் இருப்பதாக சென்றவாரம் ஒரு தொலைக்காட்சி கலந்துரையாடலின் விவாதத்தின்போது தெரியப்படுத்தினாங்க. யாராவது இல்லைன்னு மறுக்க முடியுங்களா. இப்புடியே போனா முடிவுதான் என்னங்க,

உலக நாயம் இப்புடி இருக்கும்போது நீங்க பெரிய வார்த்தையெல்லம் உபயோகித்து மனித உரிமை மீறல் என்று சாயம்பூசி மனித உரிமையையே கொச்சைப்படுத்திட்டீங்களே,

இவங்களோட மனுவைப் பெற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், இதுகுறித்து பிரதமருடன் ஆலோசனை நடத்தி

முடிவெடுப்பதாக தெரிவித்ததாக சொல்ல்றாய்ங்க.

ஸ்பெக்ரம் கொள்ளையில பிரதமரும் உடந்தைன்னு ஆ ராசா கோர்டில வாதாடியிருக்காரு. அதில பிரதமரும் பசி,யும் கடகடத்திட்டிருக்காங்க அதுமட்டுமில்லீங்க. பிரதமரே சொந்தமா முடிவெடுக்க முடியாத நிலையில இருக்காரு சோனியாச்சி தான் எல்லாம் முடிவெடுக்கிறதா தங்கம்பாலு அண்ணன்கூட சொல்லியிருக்காரு,

எதுக்கும் தாத்தா ஒருவாட்டி டில்லிக்குப்போய் சோனியாச்சிக்கிட்ட கால்ல விழுந்தாருன்னா ஏதாச்சும் நடக்கக்கூடும்.

வரட்டுங்களா.
மீண்டும் சந்திப்போம்.

No comments: