அவற்றை கண்டுக்காம (அறியாமல்) பலகோடி கடைநிலை மக்கள் தமது கிராம மட்டத்தில், பஞ்சாயத்து/ மற்றும் கிராமத்தலைவர், விதித்த கோட்டுக்குள் கட்டுப்பட்டு வாழ்வாங்கு வாழ்ந்து (?)அனுபவித்து வருகின்றனர்.
ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தன்னையும் மீறி, தனக்கு தனக்கு என்று பிரச்சினை தலை தூக்கி வரும்போதுதானே அந்தப்பிரச்சினையின் தாக்கம்
அவனால் உணரப்படுவதுண்டு.
அந்தவகையில் இரண்டு சம்பவங்கள் அண்மையில் இந்திய மத்திய அரசான காங்கிரஸின் கட்டுப்பாட்டுக்குள்ளிருந்து புறப்பட்டு, நாட்டையும் மக்களையும் புல்லரிக்க வைத்து உலகின் பார்வையில் இந்திய அரசின் புகழ் உச்சிக்கு கொண்டுபோயிருக்கிறது.
அதன்பின் தான் அதிகப்படியான மக்களால் அவை உணரப்பட்டுள்ளது.
இரண்டு சம்பவங்களும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக இருப்பதால், அந்த இரண்டு சம்பவங்களும் ஒவ்வொரு இந்தியக்குடிமகனையும். லிபியாவின் அதிபர் "கேர்ணல் கடாபியின்", சர்வாதிகார ஆட்சி அதிகாரத்தின் கீழ் குடியிருந்து வாழ்வது போன்ற உணர்வை உண்டாக்கி திகைக்கவைத்திருக்கிறது.
அதில் ஒன்று நாட்டின் பொருளாதாரத்தை குழிதோண்டி புதைத்த 2G ஸ்பெக்ரம் அலைக்கற்றை சம்பந்தப்பட்டது.
இன்னொன்று தமிழ் நாட்டின் மண்ணின் மைந்தன் ஒருவரை பட்டப்பகலில் தெருவில் வைத்து துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கு சம்பந்தப்பட்ட விடயம்களாகும்.
சாதாரணமாக இந்தியாவைப் பொறுத்தவரையில், அந் நாட்டில் உள்ள மானிலங்களில், அம் மானிலத்து அரசு முதலாளிகளும், மத்தியில், மத்திய அரசாங்கத்தை நடத்தும் அரசியல் முதலாளிகளும், தமக்கு சாதகமாக சட்டங்களை வளைத்து, அரசியல்த் தொழில் நடத்தி மன்னர்கள்போல் வாழ்வதுதான் வாடிக்கை.
இவை எழுதப்படாத சட்டமூலமாக, பாரம்பரியமாக பல வருடங்களாக இந்திய அரசியல்வாதிகளால் கட்டி காப்பாற்றப்பட்டு வருகின்றன.
இவைகள் படிப்பாளிகள் மட்டும் புரிந்துகொள்ளக்கூடிய விடயம் என்பதால். நாட்டில் படிப்பறிவு இல்லாத ஏழைகள் ஆக்கப்பட்ட பலகோடி கீழ்மட்ட மக்கள். இவற்றை புரிந்துகொள்ள முடியாமல், மந்தைக்கூட்டமாக அரசியல் கடவுள்களுக்கு காவடி எடுத்து துதிபாடி வழிமொழிந்து வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர்.
இந்த நடைமுறை அரசியல் முதலாளிகளுக்கு மிகுந்த அனுசரணையாகி துணைபுரிகிறது, அதனால் நாட்டை அதேநிலையில் இருந்து மேலெழுந்துவிட இந்த முதலாளிகள் ஒருபோதும் விரும்புவதில்லை.
மீறி எவராவது இடக்கு முடக்காக பொது நோக்கோடு ஆட்சியாளர்களை ஜனநாயக ரீதியாக ஏதாவது கேள்வி கேட்டுவிட்டால். அவர்களை அடக்க குண்டர் தடுப்பு சட்டம், அல்லது தேசியபாதுகாப்புச் சட்டம் போன்றவற்றை இயற்றி மக்கள்மீது அடக்குமுறையை பாய்ச்சி தூக்கி சிறையில் போட்டு, அமைதிகாத்து சட்டம் ஒழுங்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் மரபும் நடந்து வருகிறது.
அவற்றையும் மீறி சில பொது அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து ஆர்ப்பாட்ட முனைந்தால்.
முன்னிலை வகித்துச் செயற்படுபவர் கல்வி அறிவு இல்லாத கைநாட்டாக இருந்தாலும். ஆளும் முதலாளி வர்க்கத்தினர். கிளர்ச்சியில் முன்னிலை வகிப்பவரை தம்வசப்படுத்தி மந்திரிப்பதவி, செயலாளர் போன்ற பதவிகளை, அவர்களுக்கு கொடுத்து சரிக்கட்டி முடிவுக்கு கொண்டுவரும் அருமையான தந்திர அரசியல்ப் போக்கும் பெருந்தன்மையோடு உண்டு,
அதற்கும் கட்டுப்படுத்த முடியமல் பிரச்சினை மக்கள் மயப்பட்டுவிட்டால். காலதாமதம் இல்லாமல் விசாரணை கமிஷன் அமைத்து முடிவுகாணும்
ஆயுதபலமும் இருக்கிறது.
அரச முதலாளிகள் இதயசுத்தியோடு?? பாகுபாடில்லாமல் ஓய்வுபெற்ற ஒரு மூத்த கண்தெரியாத, காது கேட்காத, ஒரு நீதிபதியை நியமித்து "விசாரணை ஆணைக்குழு"!.! அமைத்து அப்பழுக்கற்ற நீதி விசாரணைக்கு உத்தரவிட்டு மனுநீதி காப்பாற்றப்பட்டு வருவதும் மரபாக பேணப்பட்டு வருகிறது.
காழ்ப்புணர்ச்சி காரணமாக எங்காவது ஒரு மானிலத்தில் ஆளும் அரசு எதிர்க்கட்சிக்காரர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால். எதிரணியினருக்கு மத்தியில் ஆளும் அரசிடம் செல்வாக்கிருக்குமானால், அந்த மானிலத்தின் பொலீஸில் அல்லது நீதிமன்றத்தில் முறையிடாமல். நேரடியாக ஜனாதிபதி எனப்படும் குடியரசுத்தலைவருக்கு முறையிட்டு தீர்வுகாணும் அபூர்வமான சு'தந்திர முறையும் உண்டு.
இருந்தும் இன்றைய காலகட்டம் இந்திய அரசியலில் நிலைவரம் சற்று வித்தியாசப்படுவதாகவே காணப்படுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்,
மக்கள் சற்று விழிப்படந்துவிட்டதாகவே இன்றய நிலை கணிப்பிடக்கூடியதாக உள்ளது.
இவைகளில் முன்னணியில் தமிழ்நாட்டு மக்கள் இருப்பதாக தரவுகள் தெரியப்படுத்துகின்றன,
இதனால் இந்தியாவில் நிலவிவந்த அந்த பழம்பெருமை வாய்ந்த பாரம்பரியமான அரசியல் கலாச்சாரம் திக்குமுக்காடி, மக்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய நெருக்கடியில் இன்று ஆட்சியாளர்களை தள்ளியிருக்கிறது.
அந்தவகையில் சமீபத்தில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியாளர்கள், தமது தில்லாலங்கடி திருகுதாளங்களை மூடிமறைப்பதற்கு, மேற்கொள்ளப்பட்ட தன்னிச்சையான எழுதப்படாத புதிய சட்டமூலங்களை, நீதிமன்ற விவகாரங்களிலும், சிபிஐ என்கிற இந்தியாவின் உயர்ந்த புலனாய்வு அமைப்புக்குள்ளும் புகுத்தி பரிசோதித்தபோது. மக்கள்மத்தியில் ஒவ்வாமை நிலைகண்டு செய்வதறியாமல் தடுமாறிக்கொண்டிருக்கின்றனர். என்று செய்திகள் தாறுமாறாக கைகொட்டிச் சிரிக்கின்றன.
அவையாவன:>.>
1).......
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை விசாரிக்க யாரும் எங்களை பணிக்க முடியாது என்று கோர்ட்டில் சி.பி.ஐ.,புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மத்திய அமைச்சர் பதவியை இழந்த ராஜா மற்றும் கனிமொழி உள்பட 17 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
முறைகேடு நடந்த காலகட்டத்தில் மத்திய நிதி அமைச்சராக இருந்த ப. சிதம்பரத்தை சி.பி.ஐ, விசாரிக்க உத்தரவிட வேண்டும் என ஜனதா கட்சி
தலைவர் சு.சாமி சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது ஒரு தனி நபரை விசாரியுங்கள் என்று ஒரு
நபர் சொல்ல முடியாது. இது நாங்களே எடுக்க வேண்டிய முடிவு என சி.பி.ஐ., அமைப்பு வக்கீல் மூலம் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.
மேலும் , 2008 ஸ்பெக்ரம் வழக்கு தொடர்பான விசாரணை முடிவடைந்து விட்டது. இந்த விஷயத்தில் தொடர்ந்து விசாரணை செய்துவரும் சிபிஐ கோர்ட்தான் விரும்பினால் மேற்கொண்டு ஏதாவது செய்யவேண்டுமா என்பதை முடிவு செய்ய முடியும். சுப்ரீம் கோர்ட் அல்ல என்றும் சிபிஐ யின் வக்கீல் கூறியிருக்கிறார்.
#கூகு> ஸ்பெக்ரம் வழக்கில் முதலில் கைதுசெய்யப்பட்டவர்களில் மத்திய தொலைத்தொடர்பு மந்திரி ஆராசா அவங்களும் அடக்கம். அவரை கைது செய்யக்காரணமா இருந்தது. அரசியல் கட்சிகளும், அரசின் கணக்கு சம்பந்தமான உள் உப பிரிவுகளும். பத்திரிகை ஊடகங்களும்தானுங்க.
அப்பொறமா தாமதாமா பத்திரிகை ஊடகங்களின் நச்சரிப்பு தாங்காம மானிலங்கள் அவையின் எம் பி கனிமொழி அவங்களும் குத்தவாளின்னு கைது
செய்யப்பட்டாய்ங்க. அவங்க இரண்டுபேரும் காங்கிரஸ் கட்சிக்காரய்ங்க இல்லை என்பதும் ஒரு காரணம்.
அதுக்கப்போறம் ஆ ராசா தனது சாட்சியத்தில அட்சர சுத்தமா சொல்லியிருக்காருங்க, ஸ்பெக்ரம் ஊழல்ல தாத்தா கருணா மட்டுமல்ல, தலப்பா
தாத்தா மண்மோஹன் சிங்கமும், சோடாப்புட்டி கண்ணாடிக்காரர் பசி, அவங்களும் சேந்துதான் கொள்ளை அடிச்சிருக்கோம், ன்னு விலாவாரியா
ஸ்ரேற்மன்ற் தகவல் குடுத்திருக்காரு. (பேப்பரில படிச்சிருப்பீங்க).
அதுமட்டுமில்லாம கண்ணாடி தாத்தாவோட பேரப்பய தயாநிதியும் மூல முக்கிய
பங்குன்னு பாயிண்ட் பை பாயிண்டா சொல்லியிருக்காரு.
ஆனா பாருங்க, அரசியல் மொதலாளி ங்க திடுக்கிட்டு திகைச்சுப்போயிட்டாய்ங்க.
அதெப்படி ஆட்சி நடத்திற மொதலாளிங்க மேல குத்தஞ்சாட்ட முடியுமுன்னும் அடம்புடிக்கிறாய்ங்க. அப்படித்தான் இருந்தாலும் அதெல்லாம் தப்பு கெடையாது. நாங்கதான் நாட்டை ஆட்சி செய்யிறவங்க எங்கமேல எப்புடி குத்தஞ்சுமத்துறது ங்கிறாய்ங்க.
அப்புடின்னா இது லிபிய அதிபர் கேர்ணல் கடாபி அவங்களோட ஆட்சிய ஒத்தது ங்கிறது தப்புங்களா. சரிதானுங்களே, இவனுகளுக்கு ஸ்ரீலங்கா அதிபர் ராஜபக்க்ஷ பரவாயில்லை ன்னே தோணுது.
இப்ப பசி,, அவைங்க மேல புகார் குடுத்தவரு. சு சுனா ங்கிற,, சு சுவாமி, அவிங்களும் ஒரு கச்சியை வச்சி நடத்துற தலிவர் தானுங்களே.
அவிர ஒரு கச்சித்தலிவரா மதிச்சு, மத்திய ஆட்சி மொதலாளிங்க சு சுனாவுக்கு இருவதுக்கு மேற்பட்ட கறுப்பு பூனைப்படை காவக்காரங்களையும் மக்களோட வரிப்பணத்தில நியமிச்சு வைச்சிருக்காய்ங்க. அப்புடின்னா சு சு முக்கியமான ஆளுதானுங்களே. தனிமனுஷன் ன்னு அவிர எப்படிங்க சொல்லமுடியும் கொளப்பமா இல்லீங்களா.
விசாரணை முடிஞ்சு போச்சு எங்கிறாய்ங்க. அதோட சிபிஐயோட கோர்ட்டு தவிர சுப்றீம் கோர்ட் எதுவும் பேசக்கூடாதுங்கிறாய்ங்க. இவனுக குத்தவாளியை புடிக்க விசாரிக்கிறாய்ங்களா இல்ல யாரையோ காப்பாத்த போராடுறாய்ங்களான்னு புரியல்லீங்க.
இந்த வழக்கே, யாரையோ செமத்தியா காப்பாத்துறத்துக்கு திட்டமிட்டு தொடங்கப்பட்டதாத்தான் தெரியுதுங்க.
இவய்ங்க விதண்டாவாதம் பண்றாப்பல இல்லீங்களா. இதே அரசியல் களவாணிங்க எத்தினிபேரு கொலை பண்ணிப்புட்டு மாத்தி மாத்தி அப்பீல்
பண்ணி அபசுரம் வாசிச்சு சுப்பிறீம் கோர்ட்டுக்கே சுப்ரபாதம் படிக்கல்லீங்களா.
அதோட பாருங்க, இதே தலப்பாக்கட்டி தாத்தா சொல்லுறாரு. ஸ்பெக்ரம் விசாரணை சுப்றீம் கோர்டின் கண்காணிப்பில்தான் நடக்குதுன்னு எத்தினிவாட்டி பேட்டி குடுத்திருக்காரு.
சுப்ரீம் கோர்ட்டோட கண்காணிப்பில் விசாரணை நடந்திச்சுன்னா இந்தியாவில் உள்ள எந்த ஒரு குடிமகனும் பொதுநலனோட சுப்றீம் கோர்ட்டை அணுகலாம்ன்னு விதி இருக்குங்களே.
அரசியல்ல இல்லாதவன் அல்லாமே பயித்தியம் ன்னு இவிரு நினைக்கிறாரா. ஸ்பெக்ரம் கேசு திசைமாறி தனக்கு சுடப்போவுது ன்னு தெரிஞ்சப்புறம் சிபிஐ யயும் ஊதுகுழலாக்கிட்டாய்ங்களா.
தகவல் அறியும் உரிமையையும் சட்டம் போட்டு தடுத்திட்டானுக இப்பிடியே போனா இந்தியா விளங்குங்களா?
ஊடகங்கள் எல்லாம் தினம் தினம் பசி, அவிய்ங்களையும் பிரதமரு தாத்தா அவிங்களையும் ,விசாரிச்சாகணுமுன்னும் அதுக்கான காரணங்களையும் விலாவாரியா தொடர்ச்சியா சுட்டிக் காட்டிக்கிட்டெ இருக்குதுங்க,
அடுத்ததா கட்டமா ஆட்டமட்டிக்கா பிரதமர் தாத்தாவும் விசாரணை வளையத்துக்குள்ள வந்திடுவார் எங்கிறது அல்லாரும் புரிஞ்சிட்டாய்ங்க.
இப்புடியே யாராச்சும் தொடர்ந்து இவனுகள நெருக்கடி குடுத்தீங்க ன்னு வைச்சுக்கங்க, பேசாம ஒரு ஓய்வு பெற்ற ஊமை, அதாங்க வாய் பேசமுடியாத நீதிமானை நெயமிச்சு காலவரம்பற்ற விசாரணைக்கமிஷன் அமைச்சிட்டு. போய்க்கிட்டே இருப்பானுவ.
இனி சிபிஐ மட்டுமில்லீங்க எவன் விசாரணை நடத்தினாலும் இவனுகளை தண்டிக்க முடியாதுங்க. தேர்தல் ஒண்ணு மட்டும்தான் இவனுகளை தண்டிக்க முடியும் ன்னு தோணுது.
2)...........
அடுத்து,,
சென்னையில் ஏழை அப்பாவி வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்படும் கொலைக் குற்றவாளியான இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது என்று உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.!!(சிரிங்க)
இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த ஆண்டு அரசு முறை
அதில், சென்னை சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்ற வாலிபர் 1986ல் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் டக்ளஸ் தேவானந்தா மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் கைதான டக்ளஸ் தேவானந்தா ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் இலங்கைக்கு தப்பிச் சென்றார். இவர் மீதான வழக்கு சென்னை 6வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த வழக்கில் 1994ல் டக்ளசுக்கு எதிராக தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே அவரை உடனடியாக கைது செய்யுமாறு சென்னை போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று புகழேந்தி கூறியிருந்தார்.
இந்த மனுவுக்கு மத்திய அரசின் சார்பில் இலங்கைக்கான வெளியுறவுத்துறை துறை சார்பு செயலாளர் கே.எம்.பி.சர்மா பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக இலங்கையுடன் இந்தியா எந்த உடன்படிக்கையும் செய்து கொள்ளவில்லை. இருப்பினும் கைதிகள் பரிமாற்றம் சட்டத்தின்கீழ் இரு நாடுகளுக்கு இடையே 1978ல் கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக ஒரு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டக்ளஸ் தேவானந்தா அந்நாட்டு அமைச்சராக உள்ளார். இந்தியாவுக்கு வருகை தந்தபோது அவரை கைது செய்ய முடியாது. அவரை கைது செய்வது என்பது இரு நாடுகளுக்கிடையேயான உறவுக்கு எதிரானதாகும். ஆகவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
#கூகு>....
இந்தச்செய்தியிலிருந்து இந்திய மத்திய அரசாங்கம் என்ன சொல்ல விழைகிறது என்பது யாருக்காவது புரியுதுங்களா?
டக்கிளஸ் தேவானந்தா என்பவர் கொலைகாரன் என்று பொலிசாரால் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார் அதன்பின் ஜாமீனில் வெளியே வந்து நீதிமன்றச்சட்டத்தையும் இந்திய நாட்டையும் ஏமாற்றிவிட்டு தப்பி ஓடியிருக்கிறார்.
ஒரு நாட்டையும் நீதித்துறையையும் அவமதித்துவிட்டு எந்த குற்ற உணர்வுமில்லாமல் பயமும் இல்லாமல் திரும்பவும் நாட்டுக்குள் நுழைந்திருக்கிறார்.
1994 டக்கிளஸுக்கு எதிராக நீதிமன்றத்தால் பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. என்று கூறப்படுகிறது!
டக்கிளஸ் எங்கிறவரு அரசியல் கச்சி நடத்துறார் என்பதால் கைது செய்யக்கூடாதுன்னு இந்திய உள்த்துறை சொல்லுதுங்க. இதெப்புடி இருக்குதுங்க. எவனாச்சும் படிச்சவன் உள்த்துறையில இருந்தா இப்படி நடக்குங்களா?.
சரி எல்லாம் போகட்டுமுங்க கைது செய்யாவிட்டாலும் கோர்ட்டில் ஆஜாராகி விளக்கத்துக்கு ஒத்துழைக்கும்படியாவது இவய்ங்க கேட்டிருக்கலாம்
இல்லீங்களா.
ஜனநாயகம் ன்னு சொல்லுறாய்ங்களே டக்கிளஸின் நாட்டு தலிவரு
ஏழை பாழைன்னா எவன் வேணா தெரு நாயை சுட்டதுபோல சுட்டுக் கொண்ணுபுட்டு அரசியல்ல சேர்ந்து மந்திரி ஆகிட்டா வுட்டுவாய்ங்களா. குத்தம் இல்லைன்னு ஆயிடுமாங்க இதென்னங்க யாருக்காச்சும் புரியுதுங்காளா?.
சரி ஒரு பேச்சுக்கு கேக்கிறாப்பல, டக்கிளஸ் மந்திரியா இருக்கிறதால அவிரு வந்து வடஇந்தியாவில ஆட்சியில உள்ள பெரிய அரசியல் தலிவரை போட்டுத்தள்ளிட்டார்ன்னு வைச்சுப்போம். வுட்டுடுவீங்களா. இப்படி ஒரு சட்டம் ஒலகத்தில இந்தியாவ விட வேறெங்காச்சும் இருக்கான்னு விசாரிச்சீங்களா. மக்கள் ஒங்கமேல நம்பிக்கை வய்ப்பானுங்களா.
மந்திரியா இருந்தா எவனை வேணா கொலை செய்யலாம் ங்கிறதுதான் இந்தியாவோட கொள்கைங்களா? சட்டங்களா? புல்லரிக்குதுங்க,
கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக இலங்கையுடன் இந்தியா எந்த உடன்படிக்கையும் செய்து கொள்ளவில்லை. ங்கிறாய்ங்க ராஜீவ் கொலை சம்பந்தமா குற்றவாளிகள்ன்னு தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களையும். விடுதலைப்புலிகள் இயக்கத்தோட புலனாய்வு பிரிவு தலைவர் பொட்டு அம்மான் அவங்களையும் கைது செய்து இந்தியாவுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டதும் இந்திய அரசுதானுங்களே.
அது எப்படி சாத்தியம்ங்க. சிக்கலா இல்லீங்களா. இந்தநேரம் எனக்கு என்னவோ மறைந்த நகைச்சுவை நடிகர் சந்திரபாபு அவங்களோட "ஒண்ணுமே புரியல்ல ஒலகத்திலே என்னமோ நடக்குது மர்மமாயிருக்குது" என்கிற பாடல்தான் நினைவுக்கு வருதுங்க.
மீண்டும் சந்திப்போம்.
வரட்டுங்களா.
No comments:
Post a Comment