Friday, September 2, 2011



கூத்தாடி குசும்பன்< அங் 7,

விஜயாலயசோழன் கணைகளை இழந்து போர்க்களத்துக்கு தன்னந்தனியாக வந்ததுபோல், யாரை நம்மிடம் இருந்து பிரித்தாலும், யாரை எங்கு அனுப்பி வைத்தாலும் கழகத்தை காக்கும் உறுதியையும், நெஞ்சுரத்தையும் பெரியாரும், அண்ணாவும் (நமக்கு)(!) அளித்திருக்கிறார்கள். அதை மனதில் கொண்டு பணியாற்ற வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
Hilarious political cartoon images


கூ கு> இந்த தத்துவத்தை தாத்தா யாருக்கு கூறியிருக்காருன்னே தெர்யல்ல, ஆனால் நெஞ்சுரமும் உறுதியும் அவரிடம் இருப்பது மறுப்பதற்கில்லை, கழகத்தை வளர்த்தவரும் அவருதான் இன்னிக்கு கழகத்தை துடைச்சு தொலைத்தவரும் அவருதான்.

தெரியாமத்தான் கேக்கிறேன் தாத்தா, பெரியாரையும் அண்ணாவையும் எப்பவும் இயுத்துக்கிட்டே இருக்கீங்களே, அவங்களவிட அதிக ஆண்டுகாலம் முதலமைச்சராயும் சரி, எதிர்க்கட்சியாயும் சரி. அரசியல்ல கோலோச்சினவர் நீங்க. சொந்தமா ஒங்க புகழை சொல்லுவீங்களா, அத உட்டுப்போட்டு அவங்களயே இயுத்து பால்க்காவடி எடுத்து பரவசமாய் ஆடிக்கிட்டிருக்கீங்க அலுத்துப்போக்ல்லீங்களா,

தெய்வமாகிப்போன அவங்களோட கொள்கையும் ஒங்க நடைமுறையும் எப்பவாச்சும் கட்சி பெயரை தவிர ஒரு புள்ளியாச்சும் ஒத்துப்போயிருக்கா?,

பெரியாரோட நடைமுறை சாத்தியமில்லைன்னுதானே அண்ணாத்துரை, திராவிட முன்னேற்றக்கழகத்தை அன்னிக்கு ஆரம்பிச்சாரு. அதெல்லாம் அரசியல்க்காரங்களுக்கு வெளங்கிற சமாச்சாரம், நம்பளுக்கு என்னத்த புரியப்போவுது. இருந்தும் ஒரு டவுட்டு அய்த்தான் கேட்டுப்புட்டேன்.

அண்ணா காலமானதுக்கப்பொறம். அண்ணா ஒங்களுக்கு மட்டும் சொந்தம் ன்னு யார்சொன்னாங்க.,, அண்ணா, சீட்டு ஏதாச்சும் எயுதி குடுத்துட்டு போனாரா. நீங்களே ஒங்கபாட்டுக்கு நரித்தனமா, அண்ணா பெரியார்ன்னு, மக்கள ஏமாத்திறீங்களே இது நல்லாவா இருக்கு. சத்தியம் பண்ணி சொல்லுங்க,,

அடுத்ததா பாத்தீங்கன்னா தாத்தா,,, அண்ணாவோட ஒண்ணா இருந்த எம்ஜீஆர் அவங்க, ஒங்க அலப்பறை தாங்காம 1972/ 1974,ல் அண்ணவின்
கொள்கை உட்பட ,அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தை, எம்ஜீஆர் அவர்கள் அண்ணா பெயராலதான் ஆரம்பிச்சாரு,

மக்களும் கூட்டமா அவரு பின்னாடித்தானே நின்னாங்க.... நீங்க ஒப்பாரி வச்சும் குத்துக்கரணம் அடிச்சும் ஒண்ணும் நகரல்லீங்களே.,

எம்ஜீஆர் அவங்க உசிரோட இருக்கும்வரைக்கும், ஒங்கள எவினும் கண்டுக்கல்ல தனிச்சி, கதவசனம் எயுதிக்கிட்டிருந்தீங்க,

அடுத்து அடுத்து படுதோல்வி அடைஞ்சீங்க, எம் ஜீ ஆர் அவங்க மறைவுக்கப்பொறம் ஒங்க மனம் பூரிச்சுப்போச்சு, அம்மா வந்தாங்க, எவ்வளவு தில்லுமுல்லு பண்ணி வாய்ஜாலம் காட்டி ஏமாத்தினீங்க.

அப்பொறம் மலையாட்டம் கட்சியில மக்கள் ஆதரவுகொண்ட, படிச்ச அறிவுள்ள துடிப்பான, வைகோவை.. ஒங்க வாரிசு முன்னிலை படணுமுன்னு வவுறெரிஞ்சு, கொலைகாரன் ன்னு குத்தஞ்சாட்டி ஓட்டி வெரட்டினீங்க,

வைகோ அவங்களும், அண்ணாவைத்தான் தன்னோட மானசீக தலைவரா மதிச்சு, அண்ணா கொள்கைப்படி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்த நடந்துக்கிட்டு வறாரு. வைகோவோட நடைமுறையும். எளிமையா, கொள்ளை அடிக்காம. கிட்டத்தட்ட அண்ணா அவங்க மாதிரித்தான் இருக்குன்னு தமிழ்நாட்டு மக்கள் பேசிக்கிறாய்ங்க,

சரிங்க அத ஒருபக்கம் வைச்சிட்டு பெரியார் அண்ணா அவங்க பேர் படுறபாட்ட சிந்திச்சா தலை சுத்துதுங்க,

திராவிடர் கழகம் (வீரமணி) குஞ்சாமணி அண்ணன்கிட்ட மாட்டிக்கிட்டிருக்கு. பெரியார் திராவிடர்கழகம், மானத்தமிழன் கொளத்தூர் மணி ஐயா அவங்ககிட்டையும், விடுதலை ராஜேந்திரன் ஐயா கிட்டயும். ஐக்கியமாய்டிச்சு,

ஒண்ணு போச்சா,,

எம்ஜீஆர் அவர்களால் உருவாக்கப்பட்டு, அண்ணாவின் பெயருடன் உயிர்ப்புடன் இயங்கிவரும், அண்ணா திராவிடமுன்னேற்றக் கழகம் முன்னை பல தடவைகளும் இப்போ. 2011ல் கடசியாவும். ஒங்கள துண்டக்காணோம் துணியக்காணோம் எங்கிற அளவுக்கு. ஓட ஓட விரட்டியிடிச்சு.

அப்படியெங்கிறப்போ நீங்க கூவுற பெரியாரும் அண்ணாவும் யாருங்க.

இப்ப நீங்க குறிப்பிட்டு பெரியார், அண்ணா, ங்கிறது யார மனசில வச்சி சொல்றீங்க, அழகிரியையும் ஸ்ரார்லினையுமா, இல்ல ஒங்களையும்
அழகிரியையுமாங்க.

யாரை நம்மிடமிருந்து பிரித்தாலும் யாரை எங்கு அனுப்பிவைத்தாலும் கழகத்தை காக்கும் உறுதியையும் நெஞ்சுரத்தையும் "பெரியாரும் அண்ணாவும்" நமக்கு அளித்திருக்கிறார்கள் எங்கிறீங்க,

கிரிமினலையும், நிலக்கொள்ளைக்காரனையும், ஊழல்வாதிகளையும். காப்பாத்த பெரியாரையும் அண்ணாவையும் பயன்படுத்துறீங்களே, மானசீகமா சொல்லுங்க நாயங்களா?

சிறையில் இருக்கும் ஒங்க கட்சிக்காரங்க எவனும் குற்றம் செய்யாமத்தான் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறானுவ எங்கிறீங்களா.

ஒரு உயிரை காக்கவேண்டும் என்றால் பொய் சொல்லுவது தப்பல்லங்க. நல்லவிடயத்துக்காக ஒரு பொய் சொல்லுவது மன்னிக்கப்படக்கூடியதுங்க. நீங்க வாய் திறந்தாலே பொய் பித்தலாட்டம்.சுத்துமாத்து, உங்க வயதுக்கு நியாயமாகப்படுகிறதா. வெட்கம் இல்லையா

நீங்க குறிப்பிடுற :அண்ணா பெரியார் எங்கிற அழகிரியும் ஸ்ரார்லினும் பாம்பும் கீரியும் கணாக்கா படமெடுத்து சீறிக்கிட்டிருக்காங்க, ஒங்க காமடிக்கு
அளவே இல்லாமப்போச்சு.

மறைந்த பெரியார் அண்ணா ங்கிற அப்பளுக்கற்ற அந்த பெரியவங்க பேரை பாவிச்சு, பதவியை புடிச்சு தமிழ் நாட்டில் மூணுபங்க முழுங்கிட்டீங்க.

கொள்ளையடிச்ச ஒங்க கூட்டாளிங்க நிறையப்பேர் கம்மி எண்ணிக்கிட்டிருக்காய்ங்க, மீதிப்பேரைப்பத்தி புலனாய்வுத்துறை விசாரிச்சுக்கிட்டிருக்காங்கன்னு சேதி வருது. இப்போ ஒங்களுக்கு உள்ளூராட்சி சபை கேக்குதா. காங்கிரசுக்கு நீங்க கேக் வெட்டி பிரியாவிடை குடுக்கல்லைன்னு வைச்சுக்குங்க .நீங்க மட்டுந்தாம் மிஞ்சுவீங்க.

வடிவேலுவும் குசுப்புவும் கூட எஸ்கேப் ஆகிற வழிய பாத்திட்டிருக்காங்க,

ஒங்களுக்கும் ஒங்க குடும்பத்துக்கும் இப்பவோ நாளையோ வில்லங்கம் சுத்தி வளைச்சிடிச்சு, கலிஞர் டிவி கடகடத்து காவத்துறைக்கிட்ட கைபோறாப்போல சேதி வருது, மானாட மயிலாட பாக்கிற வாய்ப்பும் ஒங்களிடமிருந்து விடை வாங்க இருக்கு.

இந்த கண்டிசனில ஒங்க வசப்பு வம்பு வாய் ஜாலம் மட்டும் கொறையல்லீங்க அதுக்காய்ச்சும் ஒங்கள பாராட்டி ஆவணும்,

வரட்டுங்களா,
மீண்டும் சந்திப்போம்.

No comments: