Wednesday, December 28, 2011

அடிமையாக்க பார்க்கிறது மேற்குலகு அதற்கு ஒரு போதும் இடமளியேன் ஜனாதிபதி மஹிந்த புலம்பல்.


news
 புலிகளின் அதே மனோபாவத்துடனேயே தமிழ்க் கூட்டமைப்பினர் உள்ளனர். அவர்களின் கோரிக்கைகளான வடக்கு, கிழக்கு இணைப்பு, பொலிஸ் மற்றும் காணி அதிகாரப்பகிர்வு என்பன நடைமுறைச் சாத்தியமற்றவை. இந்த அதிகாரங்களை வழங்குவதன் மூலம் அவர்கள் என்னைக் கைதுசெய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா? 
 
மேற்குலகம் என்னைத் தங்களின் அடிமையாக வைத்திருக்கப் பார்க்கிறது. அதற்கு நான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.இவ்வாறு இந்தியாவில் இருந்து வெளியாகும் டெக்கன் குரோனிக்கல் நாளேட்டின் செய்தியாளர் பகவான் சிங்கிற்கு அலரி மாளிகையில் வைத்து அளித்துள்ள செவ்வியில் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
மேற்கு நாடுகளில் எஞ்சியுள்ள புலிகள் தான், இலங்கைக்கு எதிராக அடிப்படையற்ற விவகாரங்கள் குறித்து, அங்குள்ள அரசியல் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். மேற்கு நாடுகள் காஷ்மீர் தொடர்பாகவும் இலங்கை தொடர்பாகவும் தமது நாடாளுமன்றங்களில் பே_கின்றன. ஆனால் ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும், ஈராக்கிலும் தாம் என்ன செய்தன என்பதில் மௌனம் காக்கின்றன என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
 
நன்றி உதயன்.

Tuesday, December 27, 2011

மஹிந்தரின் தற்பெருமைக்கு சங்கரி வைத்த ஆப்பு!


13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்காவிட்டால் இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத்தீர்வு காண முடியாது என்று தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:
முதலாவதாக நாட்டை ஒரு கொடியின் கீழ் ஒற்றுமைப்படுத்தியுள்ளேன் எனக் கூறுவதை விட்டுவிடுமாறு வேண்டுகிறேன். ஏனென்றால் அதில் உண்மையில்லை.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சில பகுதிகளிலும் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களிலும் விடுதலைப்புலிகளின் பிரசன்னமும் அவர்களின் அழுத்தமும் இருந்தபோது இந்த நாட்டின் சகல மாவட்டங்களிலும் அன்றும் இன்றும் அரசால் நியமிக்கப்பட்ட அவ்வப்பகுதி மாவட்ட செயலாளர்கள் மற்றும் பல்வேறு திணைக்களங்களின் தலைவர்களின் நிர்வாகத்திலேயே இருந்து வந்துள்ளது. நாடு என்றும் இணைந்து இருந்தது.
மேலும் இந்த அரசு இன்னுமொரு நாட்டுடன் யுத்தம் புரியவில்லை. ஒரு நோக்கத்தோடு மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய போராட்டத்தை அடக்கியது மட்டுமே. பெருமளவில் உயிர்ச் சேதமும், சொத்தழிவும் ஏற்பட்டன.
ஆனால், வடக்குக் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் முற்றாகவும் ஏனைய மாவட்டங்களின் சில பகுதிகள் மிக மோசமாக பாதிப்புக்கு உள்ளாகின என்பதை ஒத்துக் கொள்வீர்கள் என நம்புகின்றேன்.
மூன்று அல்லது நான்கு இலட்சம் மக்கள் சமைக்கவோ, இரவுநேரங்களில் தங்குவதற்கோ போதிய வசதியில்லாத சிறு பிரதேத்திற்குள் நெருக்கி வைக்கப்பட்டமையால் ஏற்பட்ட துன்பங்கள் சொல்ல முடியாதவையாகும்.
இந்த நிலைமை இரண்டு அல்லது மூன்று மாதங்கள் நீடித்தன. தமது பல்வேறு தேவைகளை மேற்கொள்ள இவர்கள் எவ்வளவுதூரம் கஷ்டப்பட்டிருப்பார்கள் என்பதை கற்பனை பண்ணி பார்க்க முடியாது.
அவர்களின் கதைகளைக் கேட்டால் கல்நெஞ்சக் காரர்களையும் கண்ணீர்விட வைக்கும். மேலும் கண்ணீர் விடுவதற்கு கண்ணீரில்லை.
அவர்கள் தங்கள் பிரியமானவர்களை இழந்தனர். சிலர் தமது குடும்பத்தில் உள்ள அத்தனை பேரையும் இழந்தனர். அவர்களுடைய வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன.
ஒரு வீட்டிலாவது கூரையில்லை. மீள்குடியேற்றப்பட்ட இரண்டு, மூன்று ஆண்டுகளான பின்பு ஒரு விருந்தினரையோ, ஒரு உறவினரையோ வீட்டில் தங்கவைக்க வசதிகள் ஏதும் இல்லை.
அநேகர் வறுமையில் பசியுடன் போராடுகின்றனர். அவர்களுக்கு எந்தவித வருமானமும் இல்லை. அநேகமான வீடுகளில் பெண்கள் குடும்பத் தலைவியாக செயற்படுகின்றனர்.
வயது வந்த பெண் பிள்ளைகளை கொண்ட தாய்மார்கள் பயத்துடனும், பீதியுடனும் வாழ்கின்றார்கள். வடக்குக் கிழக்கில் 90 ஆயிரத்துக்கு மேற்பட்ட விதவைகள், ஆயிரக்கணக்கான அநாதை பிள்ளைகள் வாழ்கின்றனர்.
நிலைமையில் பெரியளவு மாற்றங்கள் ஏற்படவில்லை. போரில் இறந்த ஒவ்வொருவருக்கும் கல்லறைகள் அமைக்கப்பட்டிருந்தன. அவர்களில் ஆயிரக்கணக்கானோர் பல இடங்களில் அடக்கம் செய்யப்பட்டிருந்தனர்.
இன்று அவற்றில் ஒரு கல்லறைக்கூட இல்லை. நீங்கள் ஒரு தந்தை என்ற முறையில் இறந்த ஒரு மகனின் கல்லறையை இராணுவத்தினர் சிதைத்திருந்தால் அம் மகனின் பெற்றார் என்ற வகையில் மன உணர்வுகளை அறியக்கூடியதாக இருந்திருக்கும்.
தற்போது சண்டை நின்றுவிட்டது. துப்பாக்கிகள் அமைதியாகிவிட்டன. நீங்கள் வெற்றிகரமாக ஒரு புரட்சியை அடக்கிவிட்டீர்கள். அப்புரட்சி மீண்டும் வெடிப்பதற்கான வாய்ப்பு அறவே இல்லை.
இலங்கை இராணுவத்தினர் யுத்தத்தில் வெற்றிபெறுவதற்கான உதவிகள் பல்வேறு நாடுகளிடமிருந்து கிடைத்தன. பல வகையிலும் ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நாடுகளுக்கும் வெற்றியில் பங்குண்டு.
அவர்களுடைய புத்திமதிகளை நீங்கள் கேட்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு அவர்களுக்கு இருக்கக்கூடாதா? அயல்நாடான இந்தியா உதவாமல் இருந்திருந்தால் எமது படைகள் அழிக்கப்பட்டு புரட்சிக்காரர்கள் வெற்றி பெற்றிருப்பர்.
ஒரு நாட்டுக்கு இன்னொரு நாடு உதவுவது போல் ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் யுத்தத்தை வெல்வதற்கான உதவிகளை வழங்கின.
அத்துடன் அவை அப்பணியை நிறுத்த வேண்டும். வடக்கில் பல இராணுவ முகாம்கள் அமைத்து இராணுவ தளபாடங்கள் வழங்குவதற்கு எதுவித உரிமையும் கிடையாது.
இச் செயல் பிற்காலத்தில் தங்களுடைய அரசையே கழற்றியடிக்கின்ற வாய்ப்புகளுக்கு வழி கோலும். சீனா, ரஷ்யா போன்ற நாடுகளைப் போல் இலங்கைக்கு உதவிய ஏனைய நாடுகளுக்கு நமது நாட்டின் பிரச்சினைக்கு உரிய தீர்வைக் காண்பதற்கு உதவ தார்மீக கடமை உண்டு.
ஆனால் அவர்களுக்கு இலங்கையிலுள்ள ஒரு குறிப்பிட்ட இனத்தை அரசு அடக்குமுறையின் கீழ் கொண்டுவர உதவக்கூடாது. தற்போது தங்களுடைய முதற்கடமை தமிழ் மக்களின் உள்ளங்களை வென்றெடுப்பதே ஆகும்.
வன்னி மக்கள் தங்களை மீட்டெடுப்பதற்கு அரச படைகளுக்கு நிறையவே உதவியுள்ளனர் என்பதை நீங்கள் மறக்கக்கூடாது. ஆயுதங்கள் மீதான வெறுப்பே இதற்குரிய காரணமாகும்.
வடக்குக் கிழக்கு மக்கள் துப்பாக்கியில்லாத சூழலை உருவாக்கி அமைதியாக, சமாதானமாக வாழ விரும்புகின்றார்கள். தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் தற்போது நடைபெறுகின்ற பேச்சு சம்பந்தமாக சில கருத்துக்களைக் கூற விரும்புகின்றேன்.
13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் காணி, பொலிஸ் அதிகாரப்பகிர்வு புதிய விடயமல்ல. பல தடவைகள் மீண்டும் மீண்டும் பேசப்பட்ட விடயமாகும்.
பதினைந்து சுற்றுப் பேச்சு நடந்து முடிந்தபின் இந்த விடயத்திற்கொரு முடிவு காணாதது ஆச்சரியத்துக்குரிய விடயமாகும். இவ்விரு விடயத்திலும் வடக்குக் கிழக்கில் இராணுவத்தை வாபஸ் பெற வேண்டும் என்ற விடயத்திலும் விட்டுக் கொடுப்புடன் நடந்தால் நீங்கள் உங்கள் கிராமத்துக்கு போக முடியாது என்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையை நான் படித்தேன்.
தாங்கள் தயக்கம் காட்டுவதற்கு வேறு விசேட காரணங்கள் இருப்பின் நீங்கள் கொள்கையளவில் இவற்றை ஏற்றுக்கொண்டு தாங்கள் காட்டும் தயக்கத்துக்குரிய காரணங்களையும் கவனத்தில் எடுத்து இரு சாராரும் திருப்தியடையக்கூடிய ஒரு முடிவுக்கு வரலாம்.
மேலும் யுத்தம் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தவேளை 13 ஆவது திருத்தச்சட்டமும் அதற்கு மேலாகவும் தீர்வை வைக்க முன்வந்தனர்.
ஆனால், இன்று யுத்தம் முடிவடைந்த பின் சொன்னவற்றிலிருந்து பின்வாங்கினால் நாடு தன் நன்மதிப்பை இழக்க வாய்ப்பும் ஏற்படும். இந்த அடிப்படையில் ஒரு இறுதியான தீர்வு காண்பதை நியாயமாக சிந்திக்கின்ற எந்தவொரு சிங்கள மகனும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கமாட்டான் என நம்புகின்றேன்.
ஒன்றை மட்டும் உறுதியாக தெரிவிக்கிறேன். இவ்விரு அதிகாரங்களும் வழங்கப்படாவிட்டால் இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத்தீர்வு காண முடியாது.

நன்றி: தமிழ் சி என் என்.

Monday, December 26, 2011

இன்னும் இந்தியாவை நம்பச்சொல்லும் சம்பந்தரின் அறியாமை.

டில்லியின் வலியுறுத்தலை சாதகமாகப் பரிசீலிக்குக!; இந்தியாவின் கருத்தை வரவேற்று அரசிடம் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கோரிக்கை
news
அமைதித்தீர்வு முயற்சிகள் குறித்து இந்தியா வெளியிட்டிருக்கும் கருத்துகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றிருக்கும் அதேசமயம், புதுடில்லியின் இந்த வலியுறுத்தலை இலங்கை அரசு சாதகமான முறையில் பரிசீலிக்க வேண்டுமெனவும் சுட்டிக்காட்டியிருக்கிறது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளிவந்தபின்னர் இந்தியா வெளியிட்டிருக்கும் கருத்துகள் தொடர்பில் நேற்று உதயனிடம் கருத்து தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் இந்தியாவின் கருத்துகள் உள்வாங்கப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். 
அவர் மேலும் கூறியவை வருமாறு:
இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளரால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையை நாம் வரவேற்கிறோம்.  அதில் சில முக்கியமானவிடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. முதலாவதாக, மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நம்பகத்தன்மையான  வெளிப்படையான விசாரணைகள் தேவையென அவர்கள் கூறியிருக்கின்றனர். இது மிகவும் அவசியமானது. அதனை நாங்கள் வரவேற்கிறோம்.
இரண்டாவதாக, அர்த்தபுஷ்டியான அரசியல் அதிகாரப்பகிர்வு நடைபெறவேண்டுமெனக் கூறியுள்ளது. அவ்விதமான சாத்தியப்பாடான அதிகாரப்பகிர்வு இடம்பெறும்போதே நிதர்சனமான ஒரு நல்லிணக்கம் ஏற்படும். அதையும் நாம் வரவேற்கிறோம்.மூன்றாவதாக, இலங்கை அரசின் வாக்குறுதிகள் குறிப்பாக, இடம்பெயர்ந்த மக்களின் வாழ்வில் இயல்புநிலை திரும்புவதற்கும், யுத்தமற்ற சூழலில் அவற்றை நிறைவேற்ற அளித்த வாக்குறுதிகள் இலங்கை அரசால் நிறைவேற்றப்படவேண்டும். இதனையும் நாங்கள் வரவேற்கின்றோம்.
இந்தியாவின் இந்த அறிக்கையைப் பொறுத்தளவில் தமிழ் மக்களின் முக்கியமானதும், அத்தியாவசியமானதுமான தேவைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்தியா எமது விடயத்தில் நீண்டகாலமாக முக்கிய பங்கு வகிக்கும் ஒரு தரப்பாகும். தீர்வு முயற்சியில் இந்தியாவின் ஒத்துழைப்பு, அரசுக்கும் தமிழர்களுக்கும் தேவை. அந்த முயற்சியினூடாக நியாயமான  விசுவாசமான ஒரு தீர்வையே நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இந்தியாவின் இந்தக் கருத்தைச் சாதாரண ஒரு விடயமாக எடுத்துக்கொள்ளாமல் இலங்கை அரசு சாதகமாகப் பரிசீலிக்கவேண்டும். நிரந்தரமான அரசியல் தீர்வை எட்டும் முயற்சிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்பு நிச்சயம் கிடைக்கும்.என்று குறிப்பிட்டார் தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

Saturday, December 24, 2011

அதிகாரங்கள் எதையும் பகிர்ந்தளிக்க முடியாது. சிங்கள அரசு.




 மைதி தீவாக இருந்த இலங்கை அமைதியிழந்து யுத்தபூமியாக மாறியதற்கான அடிப்படை காரணம் வந்தேறு குடிகளான சிங்களஏகாதிபத்திய அரசியல்வாதிகளின் அடக்குமுறை என்பதுதான் கசப்பான வரலாறு.

நாட்டின் சொந்த பூர்வீக தேசிய இனமான தமிழர்களுக்கு சிறுபான்மை என ஒரு திணிக்கப்பட்ட அடக்குமுறைச்சட்டமும். வந்தேறிகளான சிங்களவர்கள் பெருகிவிட்டதால், பெரும்பான்மை என்ற ஏகபோக சட்டமும் காலாகாலமாக கடைப்பிடிக்க முற்பட்டதால் முறுகல் நிலை உருவானது.

தொடர்ந்து வந்த பேச்சுவார்த்தைகள் பேரினவாத சிங்கள இனவாதிகளால் மதிக்கப்படாததால் தமிழர்கள் ஆயுதம் தூக்கவேண்டிய துரதிஷ்டமும் ஈடேறியது.

2009 மே ஒரு பெரிய இனப்படுகொலையுடன் தமிழர்கள் மீண்டும் அடக்கப்பட்டனர். சுமூகமான ஒரு அமைதி அந்தநாட்டில் விளையவேண்டுமென்றால் அங்கு நிலவிவரும் அடிமைத்தளை களையப்படவேண்டும். மக்களின் உரிமைகள் அனைத்தும் மதிக்கப்பட்டு சமத்துவம் நிலைநிறுத்தப்படவேண்டும்.

சிங்கள தலைமைகள் நெருக்கடியான காலகட்டங்களில் சந்தற்பவாதமாக ஒரு பேச்சும், நெருக்கடிகள் சற்று விலகியதும் பழைய வக்கிரத்தை விட்டு விலகாத ஏமாற்றும் கதையும் தொடர்ந்து வருகிறது.

தமிழர்கள் தாம் சிங்களவர்களோடு இணைந்து வாழமுடியாது என்பதை பல்லாண்டுகால பட்டுணர்வின் அடிப்படையில் நியாயபூர்வமாக தரவுகளுடன் பதிவுசெய்துள்ளனர்.

ஆனால் சிங்கள அரசுத்தலைவர் மஹிந்த ராஜபக்க்ஷ இனப்படுகொலை குற்றத்திலிருந்து தப்பும் நோக்குடன். தாம் ஒரு நியாயமான தீர்வுத்திட்ட பேச்சுவார்த்தை நிலைக்கு வந்துவிட்டதாக உலகத்திற்கு வாக்குமூலம் கொடுத்து  ஏமாற்றியிருக்கிறது.

சிங்கள அரசியல்வதிகளின் சந்தற்பவாத வித்தையை நம்பிய சர்வதேசமும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வுகாணும்படி ஒத்துழைக்க முற்படும் தருணத்தில் சிங்களம் மீண்டும் தனது சுயரூபத்தை காட்டியிருக்கிறது.

"தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு பொலிஸ், காணி அதிகாரங்களைத் பிரித்து தரமுடியாது அந்த அதிகாரங்களை வலியுறுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவதில் பயன் ஏதும் இல்லை என்றும் சிங்கள அரசு தெரிவித்துள்ளது". 

தமிழர் சிங்களவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தையின் முக்கிய அம்ஷமே ஆட்சி அதிகாரத்துலுள்ள சிக்கல் தீரவல்ல கல்வி, காணி, சிவில் பாதுகாப்பு போன்றவற்றை பகிர்ந்தளிப்பதுதான் முடிவாக அமையும்.

வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் சிங்கள ஆட்சியாளர்களின் ஆட்சியின்போது தொடர்ச்சியாக கல்வி, காணிப்பங்கீடு, சிவில்ப்பாதுகாப்பு. ஆகியவற்றில் மிகவும் மோசமாக பாதிக்கப்படுள்ளனர். எனவே ஆகக்குறைந்தது அந்த மூன்று அதிகாரங்களவது தமிழர் கைகளில் இல்லையெனில் தமிழர்கள் மனிதர்களாக இலங்கையில் வாழமுடியும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே அந்த அதிகாரங்கள் வழங்கப்படாத ஒரு தீர்வு தேவையே இல்லை என்று கூட்டமைப்பு கூறியிருக்கிறது.

இலங்கையில் தமிழர்களுக்கான ஆட்சி அதிகாரம் பகிர்ந்தளிக்காவிட்டால். இன்று இராணுவ அடக்குமுறையினால் நிலமையை மூடிமறைத்தாலும் அடுத்துவரும் சந்ததி வேறொரு உபாயத்தை பயன்படுத்தி மீண்டுமொரு விடுதலைக்கான போராட்ட வித்தையை தோற்றுவிக்கும் என்பது எதிர்காலத்தில் தெரியவரும்.

Tuesday, December 20, 2011

இதை எவரிடம் முறையிடுவது?


இப்போ நான் புலம்பெயர்ந்து வசதியாக வாழ்ந்தாலும் ஈழம் எனக்குத்தான் சொந்தம்!...

எவ்வளவுபேர் போட்டிக்கு வந்தாலும் போராட்டம் எனக்குத்தான் சொந்தம்!...

ஆனால் கீழேயுள்ள காணொளி காட்சிகளை கவனிக்கக்கூட எனக்கு நேரமில்லை!...



Monday, December 19, 2011

சர்வதேச விசாரணை வளையத்தை நோக்கி நகரும் இனப்படுகொலை சூத்திரதாரி, ராஜபக்க்ஷ.

 

ஐநாவின் தயாரிப்பில் வெளிவந்த நிபுணர்குழுவின் அறிக்கைக்கு போட்டியாக, ஸ்ரீலங்கா சிங்களத் தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்பட்டு வெளிவந்த "ராஜபக்க்ஷ நல்லிணக்க ஆணைக்குழு"வின் தும்மல் அறிக்கை, டிச 16 அன்று ஸ்ரீலங்காவின் பாராளுமன்றத்தில் அதன் இயக்குனர்களால் சம்பிரதாயபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டிருக்கிறது.
சில நாட்களின் பின் அறிக்கையின் பிரதி உத்தியோகபூர்வமாக நண்பன் இந்தியாவிலும் சர்வதேச அரங்கின் சில இடங்களிலும், பெருமையுடன் வெளியிடப்படும் என நம்பப்படுகிறது.

போர்க்காலங்களில் களத்தில் அரசபடையினர் அத்துமீறிய ஒரு  நிகழ்வையாவது  அறிக்கை வெளிக்காட்ட விரும்பவில்லை. முற்றுமுழுதாக ஜனாதிபதி நலன் காக்கும் கவசமாக, நியாயப்படுத்தல் வாக்குமூலமாக அறிக்கை வரையப்பட்டிருக்கிறது. போரின்போது தவறிழைத்தவர்களை இனங்காணமுயலும் ஆராய்வாக எந்த அம்ஷமும் அறிக்கையில் காணப்படவில்லை.

போரின்போது மரபுமீறி இராணுவம் போர்க்குற்றம் புரிந்திருக்கிறது என்றும், மனித உரிமையை மீறும்வண்ணம் தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் பாவிக்கப்பட்டிருக்கின்றன என்பதையும், ஐநாவின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை ஒப்புக்கொள்ளுகிறது. போரின்போது பாதிப்புக்குள்ளான தனிமனிதர்கள். அமெரிக்காவிலும், அவுஸ்த்திரேலியாவிலும், இங்கிலாந்திலும் வேறு பல தேசங்களிலும் ராஜபக்க்ஷமீதும் இராணுவத்தினர்மீதும் வழக்குக்கள் தாக்கல் செய்திருக்கின்றனர். அந்நாட்டு நீதிமன்றங்களும் அவைகளை ஏற்றுக்கொண்டிருக்கின்றன.

ஸ்ரீலங்காவின் இனப்படுகொலையாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நேரடியாக நிறுத்தக்கூடிய முகாந்திரம் இல்லாததனால், குற்றஞ்சாட்டப்பட்ட தரப்பினர்மீது ஐநாவின் கண்காணிப்பில் உள்ளூரிலேயே நீதிவிசாரணைகளை நடத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும்படி ஐநா. ஸ்ரீலங்காவுக்கு அறிவுறுத்தியிருந்தது. அந்தப்பின்னணியில் அவசரமாக் பிறந்தது ஜனாதிபதியின் நல்லிணக்க ஆணைக்குழு. 

ஜனாதிபதி ராஜபக்க்ஷவின் தனிப்பட்ட நல்வாழ்வுக்காக, சர்வதேசத்தை ஏமாற்ற அமைக்கப்பட்ட அக்குழு, தமிழினம் எதிர்பார்த்தவண்ணம் எந்தச்சந்தர்ப்பத்திலும் போர்மரபுகளை இராணுவத்தினர் மீறியிருக்கவில்லை. இராணுவம் குற்றமற்றது என்று திட்டவட்டமாக தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

ஸ்ரீலங்கா நாட்டின் முப்படைகளின் தளபதியான ராஜபக்க்ஷவை காப்பாற்ற தயாரிக்கப்பட்டிருக்கும் அவ்வறிக்கையின் காட்சிகள் அனைத்தும், ராஜபக்க்ஷவை காப்பாற்றுவதற்காக முற்று முழுதாக உண்மைக்கு புறம்பாக புனையப்பட்டு, அரசாங்கத்தின் மனநிலையை அப்பட்டமாக நியாயப்படுத்தும் ஒருதலைப்பட்ட பரிந்துரையாக எழுதப்பட்டிருக்கிறது. தவிர, நிலவரத்தை பகுப்பாய்வு செய்து பாகுபாடற்ற வெளிப்படையான உண்மைத்தன்மை கொண்ட விசாரணை அறிக்கையாக அது இல்லை.

பாதிக்கப்பட்ட தமிழர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு முறையான பதில் எதுவும் எந்த பந்தியிலும் காணப்படவில்லை. அனைத்து எதிர் முறைப்பாடுகளுக்கும் ஒருதலைப்பட்ஷ நியாயப்படுத்தல்கள் மூலம் அரசாங்கத்தின் அவலத்தை தூக்கி நிறுத்த அறிக்கை பிரயத்தனப்பட்டிருக்கிறது.

இலங்கை இராணுவத்தினால் புரியப்பட்ட மோசமான போர்க்குற்றங்கள் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பொறுப்புக் கூறுவதற்கு முன்னேற்றமான நடவடிக்கைகளை மேற்கொள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் 400 பக்க அறிக்கையினால் நியாயபூர்வமாக எந்தப்பயனும் ஏற்படப்போவதில்லை. என நியுயோர்க்கை தளமாக கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

போரின்போது போராளிகளின்மீது மரபுமீறி நச்சு ஆயுதங்களை பாவித்ததை ஒருபுறம் தள்ளிவைத்தாலும், பொதுமக்களின்மீது இராணுவம் புரிந்த அத்துமீறல்கள். சரணடைந்த போராளிகள்மீது நடத்தப்பட்ட மிருகத்தனமான சித்திரவதை படுகொலைகள். வீடியோ காட்சிகளும்  இராணுவத்தினரின் கைபேசிகளில் பிடிக்கப்பட்ட நிழல்ப்படங்களும்  தொகுக்கப்பட்டு சனல்4 தொலைக்காட்சி ஆவணப்படமாக உலகம் முழுவதும் தரிசிக்கும் வண்ணம் பகிரங்கமாக போர்க்குற்றத்தை அம்பலப்படுத்தியது.

அந்த ஆவணப்படத்தில் இடம்பெற்ற காட்சிகளை தொழில்நுட்ப ரீதியாக ஆய்வுக்குட்படுத்தி அவை உண்மையானவை தான் என்று ஐநாவும் ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால் ராஜபக்க்ஷவின் ஆணைக்குழு அவை நம்பகத்தன்மையில்லாதவை என வழமைபோல் நிராகரித்திருக்கிறது.

நிராகரிப்பதற்கு எதிர்த்தரப்புக்கு பூரண உரிமையிருந்தாலும், அவை வாய்ச்சொல்லாகவோ எழுத்துமூலமாகவோ விதண்டா வாதமாக எதிர்ப்பதை விடுத்து அறிவியல் ஆதாரபூர்வமாக நிரூபிக்கவேண்டிய பொறுப்பும் அந்தத்தரப்பினருக்கு இருக்கிறது.

சர்வதேசமயப்பட்டிருக்கும் ஒரு இனப்படுகொலை விடயத்தை இலேசுவில் நீர்த்துப்போகச்செய்யலாம் என குற்றவாளிகள் மட்டமாக நினைத்து ஏமாற்றுவேலைகளில் ஈடுபடுவது ஒருகட்டத்தில் சர்வதேசத்தின் எரிச்சலுக்கு இட்டுச்செல்லும். ராஜபக்க்ஷ தரப்பினரின் இந்த உத்தி ஒரு இடைவெளியையும் காலதாமதத்தையும் பெற்றுக்கொடுக்க உதவலாமே தவிர ஒருபோதும் வெற்றியளிக்கப்போவதில்லை. சர்வதேசமும் இதற்கு ஒத்துப்போகும் என நம்பமுடியாது.

குற்றவாளியிடமே குற்றத்தை விசாரணை செய்யும்படி பணித்தால் குற்றத்தை நியாயப்படுத்துவதற்கே குற்றவாளி முயலுவான் என்பதுதான் யதார்த்தமான உண்மை. இருந்தும் சர்வதேசம் குற்றவாளியிடம் குற்றத்தை விசாரிக்க ஒப்புக்கொடுத்திருந்தது. இருந்தும் சில சங்கடங்களை கடப்பதற்கான தந்தரமாகவே சர்வதேசம் இந்த பொறிமுறையை ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் முன் விரித்திருப்பதாகவும் எண்ணுவதற்கான நியாயங்களும் புறக்கணிப்பதற்கில்லை.

இராணுவத்திலுள்ள "ஒருசிலரின் தவறான செயற்பாட்டினால் இராணுவத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட இடமளிக்கலாகாது" என்று, நல்ல இலக்கிய வசன நடையுடன் ஒப்புக்கு ஒரு பதம் அறிக்கையில் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த  வஞ்சகமான வசனத்திலிருந்து,   தந்திரமாக சில இராணுவத்தினரை தப்புச்செய்தவர்கள் என தெரிவுசெய்து, தண்டனைக்குட்படுத்துவதுபோல் காட்டி போர்க்குற்றத்திலிருந்து ராஜபக்க்ஷ தரப்பு தப்பிப்பதற்கு உபாயம் தேடுவது தெரிகிறது.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தி அதில் எவராவது குற்றம் இழைத்துள்ளார்கள் என்று நிரூபிக்கப்பட்டால்  அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து தண்டனை வழங்குவது அரசின் கடமை என்று நீதிதவறாத வேத வசனத்தையும் ஆணைக்குழுவின் மூலம்  உலகத்தை ஏமாற்ற கையாளப்பட்டிருக்கிறது

தான் தப்பிப்பதற்காக இந்த தந்திரத்தின் மூலம் சில பல இராணுவத்தினரை காவுகொடுக்கவும் முப்படைத்தளபதியான ராஜபக்க்ஷ பின்னிற்க மாட்டார் என்பதும் மறுப்பதற்கில்லை. அத்துடன் சில இராணுவ சிப்பாய்களை குற்றவாளிகளாக்கி நீதிமன்றத்தில் நிறுத்தி வழக்கை முடிக்காமல் தொடர்வதன் மூலம் பலவருடங்களை கடந்துவிடலாம் என்பதும் சிங்கள அரசின் தந்தர உத்தியாக நம்பலாம்.

போர் நடந்துகொண்டிருந்த காலத்திலும் சரி, முடிவுக்கு வந்தபின்னும் சரி, இராணுவத்தரப்பும் அதே தரப்பைக்கொண்ட அரசாங்கமும் போர்க்குற்றம் எதுவும் இலங்கையில் இடம்பெறவில்லையென்றே சாதித்து வந்திருந்தது. சர்வதேச இறுக்கம் அதிகரிக்க அதிகரிக்க மெல்ல மெல்ல காட்சிகள் மாறிக்கொண்டேயிருக்கின்றன. ராஜபக்க்ஷ நலன் காக்கும் அறிக்கையை உலகம் எப்படி எடுத்துக்கொள்ளுகிறது என்பதைப்பொறுத்து அடுத்த காட்சி மாற்றத்தை சர்வாதிகாரி ராஜபக்க்ஷ ஈடேற்றுவார்.

போர் மரபுகளை மீறி ஒருபோதும் தாக்குதல் நடத்தியிருக்கவில்லையென நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை பயன்படுத்தி  திடமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அக்கருத்தின்படி நோக்கினால் இறந்தவர்கள் அனைவரும் தாமாகவே எரிகுண்டுகளை இயக்கி அதற்குள் குடும்பம் குடும்பமாக விழுந்து இறந்திருக்கவேண்டும் என்றமுடிவுக்கு மட்டுமே எவராலும் வரமுடியும்.

விடுதலைப்புலிகள் வேறு, மக்கள் வேறு என்று சொல்லிவந்த அரசாங்கம் பலநாடுகளின் கூட்டத்தை ஒன்றாக்கி போரை நடத்தியது. வல்லமை இருந்திருந்தால் அந்தளவுக்கு ஆள் அம்புகளை சேகரித்து போர் புரிந்த அரச இராணுவம் விடுதலைப்புலிகளை இனங்கண்டு மக்களை பாதிப்புக்குள்ளாக்காமல் போரில் விடுதலைப்புலிகளை வென்றிருக்கவேண்டும்.

ஒரு பேச்சுக்கு எடுத்துக்கொண்டால் விதி மீறப்படவில்லை என சாதிப்பவர்கள். இறுதிப்போரில் பத்தாயிரம் போராளிகள் கொல்லப்பட்டிருந்தால், இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் எப்படி கொல்லப்பட்டனர் என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கவேண்டும். போருக்கு ஆதரவு தெரிவித்த சர்வதேசம் ஒருபோதும் மக்களை அழிக்கும்படி சொல்லியிருக்கவில்லை. போரின்போது ஸ்ரீலங்கா அரசுக்கு ஆதரவாக நின்ற சர்வதேசம் இன்று மரபு மீறிய படுகொலைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று விசாரணை செய்ய தொடர்ந்து வலியுறுத்துகிறது.

ஸ்ரீலங்கா அரசின் கோரிக்கைக்கு சம்மதித்து விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடைசெய்த இந்தியா, தவிர்ந்த ஏனைய நாடுகள், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான தமிழர்களின் நடவடிக்கைகளை ஒருசந்தற்ப்பத்திலும் தடைசெய்யவில்லை. தேசியக்கொடியான புலிக்கொடியை பிடித்து அனைத்துநாடுகளிலும் மக்கள் போராட்டம் நடத்தினர்.

அப்படிப்பார்க்கும்போது விடுதலைப்புலிகள் ஆயுதம் தூக்கி போராடியதை மட்டுமே ஏதோ காரணத்திற்காக சர்வதேச நாடுகள் அவ்வளவாக விரும்பவில்லை என்பது தெரிகிறது. தேசியக்கொடியை கையில் ஏந்திய மக்கள், இரவு பகலாக மேற்குநாடுகளின் வீதிகளில் ஆயுதம் தூக்காத விடுதலைப்போராட்டமாக விடுதலைப்புலிகளின் போராட்டத்தை ஆதரித்து நின்றதை எந்தநாடும் தடுக்கவில்லை.

அந்த நேரங்களில் அந்தந்த நாட்டு பொலிசார் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்ட மக்களுக்கு பாதுகாவலாக  நின்றிருக்கின்றனரே தவிர எவரையும் கைதுசெய்திருக்கவில்லை.அப்படியென்றால் விடுதலைப்புலிகளின் முத்திரை இலச்சினை பொறித்த கொடியும் விடுதலைப்போராட்டமும் சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது என்பதுதானே நிதர்சனம்.

விடுதலைப்புலிகளின் மதியுரைஞர் அண்ணன் அன்ரன் பாலசிங்கம் அவர்கள், தொடர்ந்து இங்கிலாந்தில் வசிக்க பிரித்தானிய அரசு எந்தத்தடையும் பிரயோகிக்கவில்லை. அரசியற்பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் மற்றும்பலர் பேச்சுவார்த்தைக்கு உலக நாடுகளுக்கு சென்றபோது எவரையும் இக்கட்டாக்கும் நெருக்கடிகளை சர்வதேசம் செய்திருக்கவுமில்லை.

இன்றுகூட போராட்டத்தை தாங்கி நிற்பவர்கள் அனேகர் இலங்கைக்குள் இல்லை. போர்க்குற்றவாளி ராஜபக்க்ஷ கூட்டத்தை பிடித்துக்கொடுப்பதற்கு கையில் சுருக்கு கயிற்றுடன் திரிபவர்கள் அனைவரும் நாட்டுக்கு வெளியில் மேற்குநாடுகளில் பகிரங்கமாகவே நின்றுகொண்டிருக்கின்றனர். இணையத்தளங்கள், பதிப்பு மற்றும் காட்சி வானொலி ஊடகங்கள் அனைத்தும் புலம்பெயர் நாடுகளில் சட்டத்துக்குட்பட்டு போராட்டத்தை ஆதரித்து இயங்கிவருகின்றன. இதையும்  சர்வதேசம் தெரிந்துகொண்டே அனுமதித்திருக்கிறது.

சிங்களவர்கள் 1980 கள் முடிவதற்குள் முழுத் தமிழினத்தை அழித்திருக்கவேண்டும். இன்று மிக மிக காலதாமதமாகிவிட்டது. ஈழத்தின் வேர் ஈழத்தில் மட்டுமல்லாது சகல தேசத்திலும் பரவிவிட்டது. இனி   இனப்படுகொலை சூத்திரதாரிகளை சர்வதேசமும் சர்வதேசத்திலுள்ள ஈழத்தின் வேர்களும் விட்டுவிடப்போவதில்லை.

ராஜபக்க்ஷ ஆணைக்குழுவின் அதிகார வரம்பு மற்றும் இதன் பயன் குறித்து எழுந்த ஐயப்பாடுகள் காரணமாக அம்னெஸ்ட்டி இன்டர்நேஷனல், ஹியூமன் ரைட்ஸ் வாட்ச், உள்ளிட்ட மனித உரிமை அமைப்புக்கள் இந்த ஆணைக்குழுவின் அமர்வில் பங்கு கொள்ள மறுத்துவிட்டன. மனித உரிமை கண்காணிப்பகம் சிபார்பு செய்வதுபோல சுதந்திரமான அனைத்துலக விசாரணைக்குழுவின் தேவையை இது உணர்த்துவதாக உள்ளது.

உலகநாடுகள், அனைத்துலக விசாரணை தேவை என்ற நிலையெடுப்பதற்கு  ராஜபக்க்ஷ தரப்பால் புனையப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையும் ஒரு அசைவாக்கத்தை நிச்சியம் உண்டுபண்ணும்.

ஈழதேசம் இணையத்திற்காக.
கனகதரன்.

Friday, December 16, 2011

தன்வினை தன்னைச்சுடும்.


கூத்தாடி குசும்பன்.

முல்லை பெரியாறு அணை விவகாரம் தமிழக விவசாயிகளின் உரிமைப்பிரச்சினை. தென்மாவடங்களில் இயற்கையாலும், அரசியற் செயற்கையாலும் காவுகொள்ளப்பட்டு நொடித்து நொந்துபோய் வாழ்வா சாவா என துவண்டுபோய்க்கிடக்கும் பல இலட்சம் விவசாயிகளின் உயிரினும் மேலான வாழ்வாதாரப்பிரச்சினை.

அம்மக்களுக்கு இப்படி ஒரு சூழ்நிலை வருவதற்கு அடிப்படையே தொலைநோக்கற்ற நரம்பில்லாத அரசியல் வியாதிகளின் பச்சோந்தித்தனமான சுயநலம் என்பதை எவரும் மறுக்கமுடியாது.

தமிழகத்து அரசியல்வியாதிகள் சோரம்போன தன்மையால் உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீப்பை, உடனடியாக கறாராக மத்திய அரசுக்கு கட்டளையிட்டு கேட்டுவாங்கி அமூல்ப்படுத்த முடியவில்லை. காலங்கடந்ததால் இன்று நிலமை கைமீறிப்போய்க்கொண்டிருக்கிறது. அரசியல் அரசியலாகவே தீட்டப்படுகிறது, ஆனால் மக்கள் கடை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழகத்திலிருந்து டில்லி சென்று நடுவண் அரசுக்கு முண்டுகொடுக்கும் பச்சோந்திகள். நாட்டு நலனை மனதில்க்கொண்டு டில்லிக்கு சென்றது கிடையாது. டில்லிக்கு போனத்தும் போகாததுமாக அனைத்தையும் துறந்து தூர வீசிவிட்டு, எண்சாண் கிடையாக கிடந்து கொள்ளையடிப்பதற்கு பசையுள்ள மந்திரிப்பதவிகளை கோருவதிலேயே குறியாக இருந்திருக்கின்றனர்.

எந்தத்தகுதியும் இல்லாமல் ஊழல் மட்டுமே குறியான இவர்கள் அடிமைச்சாசனம் எழுதிக்கொடுத்து மந்திரிப்பதவிகளை பெற்றதும் வாய் திறக்கமுடியாத தலையாட்டி பொம்மைகளாக மாறிவிடுகின்றனர். 

இறுதியாக அந்த இடத்தில் சம்மணமிட்டிருந்து டில்லிக்கு கூட்டத்தை தெரிவுசெய்து அனுப்பிவிட்டு நீலிக்கண்ணீர் வடித்து ஒவ்வொரு நெருக்கடியான சந்தற்ப்பத்திலும் மிக சாதுரியமாக ஒப்பாரி வைத்து மக்களை ஏமாற்றிக்கொண்டிருப்பவர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய அழுக்கனான காண்டாமிருகம் கருணாநிதி.

ஆடான ஆடெல்லாம் ஏதேதோவுக்கெல்லாம் அல்லோலப்பட, சப்பாணியான சொத்தியாடு, மறைந்த சூரியன் தனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு திரும்பி வரும்வரை முலைகுடியேன் என்று சபதமிட்டு சாகும்வரை உண்ணமாட்டேன் என ஒற்றைக்காலில் நின்று யாகம் செய்ததாம்.

அதுபோல முல்லை பெரியாறு பிரச்சினையில் கண்ணாயிரம் கருணாநிதி தனது பங்குக்கும் ஒரு அறிக்கையை விட்டு கண்ணீர்விட்டு அழுதிருக்கிரார். அதன் விபரம்:

1.கேரளாவில், தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வன்முறையை கட்டுப்படுத்த, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தலையிட வேண்டும்.???????.....!!!!!!!(சிரிப்புத்தான் வருதுங்க.)

2,காலங்காலமாக குடியிருந்து வந்த நூற்றுக்கணக்கான தமிழர்கள், சில சமூகவிரோத சக்திகளால் வெளியேற்றப்பட்டுள்ளனர். கேரளா எல்லையில் குடியிருந்து வரும் தமிழர்களின் சொத்துக்கள் மற்றும் உடைமைகள் மீது கல்வீச்சு சம்பவங்களும், தீக்கிரையாக்கும் செயல்களும் நடப்பதாக, அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன.

கேரளாவையே தங்களது தாய் மண்ணாகக் கருதி, நீண்ட நெடுங்காலமாக அங்கேயே வாழ்ந்துவரும் தமிழர்கள், "தமிழகத்துக்கு திரும்பச் சொல்லி நெருக்கடி கொடுத்தால் தற்கொலை செய்துகொள்வோம்' என எச்சரிக்கும் அளவுக்கு, நிலைமை சென்றுவிட்டது.!!!!!!!!!!!!!!(எவ்வளவு கரிசினை)

3,இப்பிரச்னையில் நீங்கள் நேரடியாகவும், உடனடியாகவும் தலையிட்டு, கேரளாவில் வாழும் தமிழர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என, கேட்டுக்கொள்கிறேன்......(ஆமா உடனடியாக ஈடேறிடும்)

கேரள மலயாளிகளின் அத்துமீறலை நிச்சியம் கோபத்துடன் உறுதிகொண்டு எதிர்க்கவேண்டும். முடிந்தவரை நியாயத்துக்காக மேல்மட்டத்துடன் அயராமல் போராடவேண்டும் மறுப்பேயில்லை.

ஆனால் அது இதயசுத்தியோடு வைகோ அளவுக்காவது இருக்கவேண்டும். முதல்வர் ஜெயலலிதாவின் கோபமளவுக்காவது இருக்கவேண்டும். விஜயகாந்தின் அரசியல் அளவுக்காவது இருக்கவேண்டும்.

அல்லது இதுவரை (கறுமநிதி) தான் செய்ததெல்லாம் குடும்பத்துக்காக சுயநலன்கொண்டு நரித்தந்திரமான குப்பாடித்தனமான குள்ளநரிவேலை என்பதை நாடறிந்துவிட்டதால் மவுனம் காக்கிறேன் என அறிக்கை விட்டு சிஐடி நகரில் படுத்து ஓய்வை தொடர்ந்திருக்கலாம்.

பிரதீபா போத்தில் தலையிட்டு ஒரு அணுத்துகழ் அளவு மாற்றம் நிகழும் நடைமுறைச் சாத்தியம் இந்தியாவில் இருந்திருக்குமானால் அந்த வாக்கியத்தை பாவிப்பதில் தவறு கிடையாது.

திருட்டு குற்றவாளி மகள் கனிமொழியின்  பெயிலுக்கு தள்ளுவண்டியில் டில்லிக்கு ஓடிப்போய் தியாகத்திருவிளக்கு சூனியாவின் காலில் விழுந்து கட்டி அழுத கருணானிதி, எரியிற வீட்டில் அரசியல் செய்து நானும் கூட என்று மக்களை ஏமாற்றுவதற்கு பிரதீபா போத்திலை பாவித்து வீரனாக அறிக்கையில் காட்டியிருக்கிறார்.

2011 தேர்தல் பிசச்சாரத்தின்போது திருவாரூரில் வடிவேலு விஜயகாந்தை நோக்கி எடுத்துவிட்ட கொமடிக்கு குறையில்லாமல் கருணானிதியும் கூவி ஓய்ந்திருக்கிறார்.

வடிவேலு கூவிய வாசகம்: விஜயகாந்த் நீ முதலமைச்சர் என்றால் நான் பிரதமர். நீ பிரதமர் என்றால் நான் ஜனாதிபதி. நீ ஜனாதிபதி என்றால் நான் ஒபாமா. என்று நடக்காத ஒன்றை ரசனையில்லாமல் கூவி தன்னை பெரிய பேச்சாளனாக காட்டி கைத்தடிகளிடம் கைதட்டு வாங்கினார்.(இன்று அதன் பாதிப்பு எவ்வளவு என்பதை வடிவேலுவும் சர்வதேச தமிழினமும் மிக நன்றாகவே அறிந்திருக்கிறது)

மக்களுக்கு அரசியல் சிந்தனை அறவேயில்லை என்ற நம்பிக்கையில் அதே விளையாட்டை கருணானிதியும் கூவி மிக மிக சின்னத்தனமான சிறுவனாகியிருக்கிறார்.

"தற்கொலை செய்துகொள்வோம்' என மக்கள் எச்சரிக்கும் அளவுக்கு, நிலைமை சென்றுவிட்டது" என்று கண்ணீர் வடிக்கும் கருணானிதி ஈழ மக்கள் கொத்துக்கொத்தாக செத்தது பொறுக்காத மறத்தமிழன் முத்துக்குமார் தீக்குளித்தபோது, அவனுக்கு வீட்டில் ஏதோ காதல் பிரச்சினை என்று கொமண்ட் அடித்துவிட்டு நாரிப்பிடிப்பு என்று கயிறு விட்டு ராமகிருஷ்ணா குளிர்ச்சி மருத்துவமனையில் காலங்கடத்தி வஞ்சகம் தீர்த்ததால். தொடர்ந்து பதினெட்டுப்பேர் தீக்குளித்தனர். அப்போ ஆட்சியும் கருணாநிதியிடம் இருந்தது அன்றைக்கும் ஜனாதிபதியிடம் இப்படி ஒரு கோரிக்கை வைத்திருக்கலாமே? ஏன் கறுமநிதி செய்யவில்லை.

அன்றைக்கு கோரிக்கை வைத்திருந்தால் அரசியலில் சிக்கல் திருப்பி தன்னை தாக்கும் என்பதால், அடுத்து 1/2 நாள் உண்ணா வேஷம் போட்ட கறுமநிதி.  இன்றைக்கு வெற்றுக்கூவல் கூவுவதால் மக்களை ஏமாற்றலாம் என்பது தவிர வேறு எது நடக்கப்போகிறது. எவ்வளவு சின்னத்தனமான மனிதன் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று தேவை.

தமிழரின் பெயரால் வாழ்க்கையை ஓட்டவேண்டும் என்பதற்காக, எவ்வளவு விமர்சனம் வந்தாலும் எவ்வளவு வயது போனாலும் இந்த முதலை தமிழினத்தை விட்டு விலகாமல் நீலிக்கண்ணீர் வடித்துக்கொண்டேயிருக்கிறது. கடவுள்தான் மக்களை காப்பாற்றவேண்டும்.

மீண்டும் சந்திப்போம்.

Tuesday, December 13, 2011

முல்லை பெரியாறு கேரளத்துக்கு சொந்தம். கடல் ஸ்ரீலங்காவுக்கு சொந்தம் சொல்லுவது இந்திய அரசு.

இந்திய அரசு சிங்கள அரசுடன் இணைந்து ஈழத்தமிழர்களுக்கு செய்த துரோகத்தின் ஈரம் காயுமுன், மலயாள அரசியல்வாதிகளின் அப்பட்டமான பிடிவாதத்தை மறைமுகமாக வழிமொழிந்து தமிழகத் தமிழர்களுக்கு மீண்டுமொரு துரோகம் ஈடேற்ற துணை பொய்க்கொண்டிருக்கிறது.
 
தமிழகம், கேரளம், இரு மானிலங்களுக்குமிடையில் நீண்டகாலமாக இருந்துவந்த முல்லை பெரியாறு நீர் பங்கீட்டு பிரச்சினை விரிசல் விரிவடைந்து இரண்டு வெவ்வேறு நாடுகளுக்கிடையில் உண்டாகும் போருக்கான முஸ்தீபுகள் போல நிலைமை மாறியிருக்கிறது.

உடனடியாக தலையிட்டு போர்க்கால அடிப்படையில் நிலைமையை சீராக்கவேண்டிய பொறுப்பு நடுவண் அரசுக்கு உண்டு. ஆனால் இந்திய நடுவண் அரசு கையாலாகாத்தனமாக மலயாள தேசத்தை காப்பாற்ற மூன்றாவது தரப்பு மத்தியஸ்தர்போல செயற்படுகிறது.

ஒரு நாட்டுக்குள் உள்ள இரண்டு மானிலங்களுக்கிடையிலான இந்தப்பிரச்சினை மிக நுண்ணியமாக கையாளவேண்டிய ஒன்று என்பது மறுக்கமுடியாதது.

எது எப்படியிருந்தாலும் தமிழகத்தின் பாசன வசதிக்காக மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலிருந்து அரபிக்கடலுக்கு வீணாக சென்றுகொண்டிருந்த நீரை தடுத்து 1000 ஆண்டுகளுக்குமுன் ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. முல்லை பெரியாறு அணை.

அணை தமிழக கேரள எல்லைப்பகுதியில் அமைந்திருப்பதால் அணைக்கு பங்கம் வருமாகவிருந்தால் பாதிப்புக்குள்ளாகப்போவது தமிழகம் என்பதே  நிதர்சனம். தாக்கம் அப்படி இருப்பதால் நியாயமான தீர்வு கிடைக்கும்வரை தெருவில் இறங்கவேண்டிய கட்டாயம் தமிழகத்து மக்களுக்கு கட்டாயமாகியிருக்கிறது.

தமிழக முதல்வர் அவர்கள் தமிழக மக்களை அத்து மீறவேண்டாம் என்றும் கேட்டிருக்கிறார். அதேநேரம்  ஏற்கெனவே நீதிமன்றம் பரிந்துரைத்த உண்மயின் அடிப்படையில் பிரச்சினையை திசைதிருப்பாமல் அமைதியான முறையில் நிரந்தரமாக பிரச்சினையை தீர்வுகாண மத்திய அரசை உடனடியாக தலையிட்டு தீர்த்து வைக்குமாறு கேட்டிருக்கிறார்.

ஆனால் மத்திய காங்கிரஸ் அரசு நீதிமன்ற தீர்ப்பை புறந்தள்ளிவிட்டு பிரச்சினையை அரசியலாக்கவே முனைப்பு காட்டி வருகிறது. கேரள அரசியல் கட்சிகளின் பொய் பிரச்சாரத்துக்கு வழிவிட்டு இரு மானிலங்களுக்குமிடையில் ஒரு மோதலை உருவாக்கி அதன்மூலம் கேரள அரசியல்வாதிகளின் திட்டத்துக்கு சாதகமாக முடிவை சாய்த்துவிடவே நடுவண் அரசு விரும்புவதாகத்தெரிகிறது.

ஒரு இந்தியா என்ற தாரக மந்திரத்தின்கீழ் இந்தியத்துணைக்கண்டம் இருந்துவருகிறது. அந்த அடிப்படையில் அருகாமையில் அமைந்திருக்கும் ஒரு மானிலத்தின் புவியியல் தன்மைசார்ந்து, ஒரு மானிலத்தின் இயற்கைவளம், மற்ற மானிலத்துக்கும் பரிவர்த்தனை செய்யவேண்டிய கடப்பாடு உண்டு. வளங்கள் பங்கிடுவதன் மூலமே ஒரே நாடு என்ற சுலோகம் உயிர்ப்புடன் இருப்பதற்கும்  நாடு வளமாவதற்கான மூலமும் ஆரம்பமாகிறது.

வெள்ளப்பெருக்கு ஏற்படுங்காலங்களில் தமிழ்நாட்டை நோக்கி வெள்ள நீரை கடத்தி சங்கடத்தை உண்டுபண்ணுவதும் வறட்சியான காலங்களில் நீரை தடைசெய்வதும் ஒரு மானிலத்தை அழிக்கும் செயலாகவே இருக்கும். இவற்றை உணர்ந்து பாகுபாடற்ற நெறிமுறைகளை அறிமுகப்படுத்தும் பொறுப்பு மத்திய அரசுக்கே உண்டு.

முடியாத பட்சத்தில் ஒவ்வொரு மானிலத்துக்கும் சுதந்திரப்பிரகடனம் செய்து அவரவர் போக்கில் விட்டுவிடவேண்டிய தர்மத்தை பின்பற்றவேண்டியவர்களாகின்றனர். தேர்தல் காலத்தில் கொள்கையற்ற கூட்டணி அமைக்கும் அரசியல்வாதிகள் தொட்டதற்கெல்லாம் கூட்டணி தர்மம் காக்கிறோம் என கூவுபவர்கள். கூட்டு மானிலங்களின் மக்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்சினையை கையாளமுடியாவிட்டால் அரசியல் சாசன விதிகளை மீறிய குற்றவாளிகளாகின்றனர்.

ஒவ்வொரு மானிலங்களும் நாட்டின் உயர் மையமான நீதித்துறையின் கட்டளைகளை கருத்திலெடுக்காமல் தாம் நினைப்பதை நிறைவேற்ற நினைப்பார்களாக இருந்தால் அந்த நாட்டின் இறையாண்மை வகிக்கும் பங்குதான் என்ன. எதையும் தனித்தனியாக கையாளும் பிடிவாதப்போக்கு  இருக்குமானால் அரசியல்ச்சாசனம் எதை செய்துவிடப்போகிறது.

1947க்கு முன் இந்திய தேசத்து மக்கள் ஆங்கிலேயருடன் போராடி மகாத்மா காந்தியின் தலைமையில் சுதந்திரத்தை ஒரு இரவுப்பொழுதில் பெற்றனர். ஆனாலும் அம்மக்கள் விடியலை இன்னும் தரிசிக்கவில்லை.  இங்கிலாந்திலிருந்து விடுபட்டபின்,  உருவான இந்திய தேசியக்காங்கிரஸ் இத்தாலியிடம் சிக்கியிருக்கிறது.

இந்தியாவின் இன்றய தலைவிதி,. பிரதமர், ஜனாதிபதி, நீதித்துறை சுயமாக செயற்படமுடியாமல் அடிமைப்பட்டு கிடக்கின்றன. இன்னுமொரு போராட்டத்தின் பின் ஒரு பகலில் இத்தாலியிடமிருந்து சுதந்திரம் கிடைத்தால் மட்டுமே மக்களுக்கு ஏதாவது விமோசனம் கிடைக்கக்கூடும்.

ஈழதேசம் இணையத்திற்காக.
கனகதரன்.
நன்றி ஈழதேசம் இணையம்.

Sunday, December 11, 2011

மனித உரிமை மீறல் குற்றங்களுக்காக அரசு மீது பகிரங்க விசாரணை தேவை; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்.நகரில் வலியுறுத்து

news
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்காக இந்த அரசை ஐக்கிய நாடுகள் சபை விசாரணை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

சர்வதேச மனித உரிமைகள் தினமான நேற்று யாழ். நகரில் இதனை வலியுறுத்தினார் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மாவை சேனாதிராசா.

"மனித உரிமைகள் மீறப் பட்டுள்ளமைக்காக இலங்கை அரசை ஐ.நா. விசாரணை செய்ய வேண்டும். அந்த விசாரணைகள் பகிரங்கமாக இடம்பெற வேண்டும். அதன் மூலம் எமது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தப்பட வேண்டும்" என்றார் மாவை சேனாதிராசா.

காணாமற்போனவர்கள் மற்றும் கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் யாழ். நகரில் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

போர் முடிந்து இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும்கூட இலங்கை அரசால் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றை முன்வைக்க முடியவில்லை என்று அங்கு சுட்டிக்காட்டினார் சோசலி ஸக் கட்சியின் பிரதிநிதி மஹிந்த தேவா.

"சர்வதேச மனித உரிமைகள் தினத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக மக்களது ஜனநாயகப் போராட்டம் அடக்கப்படுகிறது. போராட்டத்துக்கு வந்த மக்கள் தாக்கப்படுகிறார்கள். இவ்வாறான அடக்குமுறை மூலம் எவ்வாறு தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தப்போகிறீர்கள்? காணாமற் போனவர்களது கண்ணீருக்குப் பதில் சொல்ல வேண்டும்" என்று தனது உரையில் குறிப்பிட்டார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்.

இலங்கை அரசு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது என்று தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வந்தபோதும் அவற்றை அது தொடர்ந்து நிராகரித்தே வந்துள்ளது. மிக அண்மையில் இராணுவத்தைச் சேர்ந்த எவராவது அத்தகைய மீறல்களில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்று பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். ஆனால், அதற்காக, மனித உரிமை மீறல்களுக்கு அரசு பொறுப்பாளி அல்ல என்று நல்லிணக்கத்துக்கான படிப்பினைகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

நன்றி உதயன்.

Saturday, December 10, 2011

மனித உரிமைக்கு அர்த்தம் கொடுத்த மனித உரிமைகள் தினம்


   
  உலக மனித உரிமைகள் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 10ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின் 1945ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டுவரப்பட்ட மனித உரிமைகள் பிரகடனத்துக்கு 58 நாடுகள் அங்கீகாரம் வழங்கியிருந்தன. இதனையடுத்து 1950ஆம் ஆண்டிலிருந்து மனித உரிமைகள் தினம் உலகெங்கும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

மனிதப் படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் முதலானவற்றுக்கு எதிராகவே மனித உரிமைகள் பிரகடனம் ஐ.நா.வால் கொண்டுவரப்பட்டது. ஆனால், சில நாடுகளில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்ற போதிலும் மனித உரிமைகள் பெயரளவில் மாத்திரமே நடைமுறையில் உள்ளன. பல நாடுகளில் மனித உரிமைகள் மீறப்பட்டு வருவதை மறுப்பதற்கில்லை.

ஒரு சமூகத்தில் ஜனநாயகத்தைப் பாதுகாத்தல், பிரஜைகளின் பொது நலனை விருத்தி செய்தல், சமூக நீதியை நிலைநிறுத்தல் என்பவற்றுக்கு மனித உரிமை என்பது அத்தியாவசியம் மிக்க ஒன்றாக இருக்கின்றது. ஆனால், ஜனநாயக நாடு என்று பெயரளவில் சொல்லிக் கொள்ளும் நாடுகளில் பெரும்பாலும் மனித உரிமைகள் மீறப்பட்டே வருகின்றன என்பதை ஊடகங்கள் வழியாக நாம் அறிகின்றோம்.

அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் 30 உறுப்புரைகளைக் கொண்டது. அதாவது சகல இன மக்களும் தத்தமது சாதனை இலக்கின் பொது நியமமாக கொள்ளத்தக்கதாக இந்த அனைத்துலக மனித உரிமைப் பிரகடனம் அமைந்துள்ளது.

சமூகத்தின் ஒவ்வொரு மனிதனும் இப்பிரகடனத்தைக் கற்றறிந்து கொள்வதோடு அந்த உரிமைகளை மனதிலிருத்தி சுதந்திரங்களுக்கான மதிப்பினை மேம்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கமாக உள்ளது.

உறுப்புரை - 01 இல் 'மனிதப் பிறவியினர் சுதந்திரமாகவே பிறக்கின்றனர். அவர்கள் மதிப்பிலும் உரிமைகளிலும் சமமானவர்கள். அவர்கள் நியாயத்தையும் மனச்சாட்சியையும் இயற்பண்பாகப் பெற்றவர்கள். அவர்கள் ஒருவரோடொருவர் சகோதர வாஞ்சையுடன் நடந்து கொள்ள வேண்டும்" என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் உறுப்புரையே மனித உரிமைக்கு பூரண அர்த்தத்தைக் கொடுக்கின்றதல்லவா?

ஒரு நாட்டின் அரசினால் இந்த உரிமை பாதுகாக்கப்படுமாயின் ஏனைய உரிமைகள் தாமாகவே அந்நாட்டு மக்களுக்குக் கிடைத்து விடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

ஒருவரோடொருவர் சகோதரத்துவத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற நியதி ஒரு நாட்டில் இருக்குமானால் அந்நாட்டில் சகலரது உரிமைகளும் பாதுகாக்கப்படுவதோடு அனைவரும் உரிமைகளை அனுபவிக்கும் நிலையும் நிச்சயமாகத் தோன்றக் கூடும்.

இலங்கை நாட்டைப் பொறுத்தவரையில், ஆரம்ப கால அந்நியர் ஆட்சி முதல் இன்றைய ஜனநாயக ஆட்சி வரை மனித உரிமைகளுக்கு பூரண முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்ததா என்பது கேள்விக்குறியே.

இலங்கையில் பெரும்பான்மை ஆட்சியே அந்நாள் முதற்கொண்டு நடைபெற்று வருவதால், அந்நியர் ஆட்சியிலிருந்து இன்று வரை சிறுபான்மையினர் உரிமைகளை அனுப்பவிப்பதென்பது எட்டாக்கனியாகவே உள்ளது என்பது முழு உலகமுமே அறிந்த உண்மை.

அதாவது, 'சிறுபான்மையினருக்கு உரிமைகள்" என்பது ஆவண ரீதியில் காணப்பட்ட போதும் அவை நடைமுறையில் சாத்தியமற்றதாகவே இருப்பதையும் காணக் கூடியதாகவே உள்ளது. இவர்களுக்கு மனித உரிமை என்பது ஏதோ ஒரு கட்டுபாட்டுக்குட்பட்டதாகவே அன்றும் இன்றும் காணப்படுகின்றது. 1947ஆம் ஆண்டு சோல்பரி யாப்பின் போது பெரும்பான்மையினரால் சிறுபான்மையினர் அடக்கப்படுகின்றார்கள் என்ற கருத்து தமிழ்த் தலைவர்களால் முன்மொழியப்பட்டது. இதனையடுத்து அக்காலப்பகுதியில் சிறுபான்மையினருக்கென பல விசேட ஷரத்துக்கள் முன்வைக்கப்பட்ட போதும் அவை ஏதோ ஓர் அதிகாரத்துக்கு உட்பட்டதாக காணப்பட்டதால் அதன் பூரண பயன்பாட்டை சிறுபான்மையினர் அனுபவிக்கவில்லை. இது போன்றே இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றது.

இலங்கையைப் பொறுத்தவரையில் சிறுபான்மையினர் எனும் போதும் தமிழ், முஸ்லிம், பறங்கியர் அடங்குகின்றனர். இவர்களின் உரிமைகள் பெயரளவில் மாத்திரமே உள்ளன.

30 வருட கால போர்ச்சூழல் மறைந்து, நாட்டில் சமாதானச் சூழல் ஏற்பட்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் கூட, கொழும்பில் கடந்த ஒரு மாத காலப்பகுதியில் 10 பேர் காணாமல் போயுள்ளனர் என்றால் நம் நாட்டு மனித உரிமையை என்னென்பது?

இதே நிலையில் தான் நம் நாட்டில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது என்ற கசப்பான உண்மையையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

அனைத்துலக மனித உரிமைப் பிரகடனத்தின் உறுப்புரை 13இல் கூறப்பட்டுள்ளது போன்று ஒவ்வொரு நாட்டினதும் எல்லைக்குள் சுதந்திரமாக பிரயாணஞ் செய்வதற்கும் வதிவதற்கும் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.

ஆனால், நம் நாட்டில் நடப்பதென்ன?

அண்மைக் காலமாக நாட்டில் மீண்டும் உருவெடுத்துள்ள வெள்ளை வேன் கடத்தல், மர்ம மனிதத் தாக்குதல், மனித உயிர்கள் அநியாயமாகக் காவு கொள்ளப்படுதல், சித்திரவதைப்படுத்தல் போன்ற சம்பவங்கள் மேற்கூறப்பட்ட மனித உரிமைப் பிரகடனத்தையே கேலிக்குரியதாக்குகின்றனவே?

உரிமைகள் ஏட்டளவில் தான். நடைமுறையில் எதையும் காணோம். 'ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது" என்பதையே இத்தகைய சம்பவங்கள் தெளிவுபடுத்துவதாக உள்ளன.

இடத்துக்கிடம் சோதனைச் சாவடிகள், பொலிஸார் மற்றும் படையினரின் வீதி ரோந்து, சிவிலுடை தரித்த பாதுகாப்பு பிரிவினரின் கண்காணிப்பு என அதிஉயர் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ள போதும் கொழும்பு மாநகரில் கூட இத்தகைய வெள்ளை வேன் ஆயுததாரிகளால் பல கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதைத் தடுக்க முடியாதிருக்கிறது.

இதன் மூலம் ஒரு பிரஜை நாட்டின் எல்லைக்குள் சுதந்திரமாக நடமாட முடியாதபடி அவனது உரிமை மீறப்படுகின்றது என்பதுதானே அர்த்தமாகின்றது?

மனிதப் படுகொலைகள், பாலியல் பலாத்காரம், மனித உரிமை மீறல்கள் முதலானவற்றுக்கு எதிராகவே மனித உரிமைகள் பிரகடனம் ஐ.நா.வினால் கொண்டுவரப்பட்டது. மனித உரிமைகள் தினத்தைக் கொண்டாடுவதை விட மனித உரிமைகள் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளையும் நடவடிக்கைகளையும் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் நமது உரிமைகளைப் பற்றி நாம் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும். நிறைவாக, மனித உரிமைகள் மீறப்படும் போது இதைப்பற்றிச் சிந்திக்க வேண்டியவர்கள் இனிமேலாவது மக்கள் நலனில் அக்கறை கொண்டு, மனித உரிமைக்காக செயற்படுவார்களா? ___
நன்றி வீரகேசரி.

Friday, December 9, 2011

திமுக. திருட்டு முத்துவேல் கருணாநிதி,

 கூத்தாடி குசும்பன்.








னி நீயும் வேண்டாம் உன் சகவாசமும் வேண்டாம் என தமிழக மக்களால் தூக்கி எறியப்பட்டு வீழ்ந்து எழுந்திருக்க முடியாமல் தத்தளிக்கும் கருணாநிதிக்கு தக்க சமையத்தில் ஒரு பிடி கொம்பாக முல்லைப் பெரியாறு அணைவிவகாரம் கிடைத்திருக்கிறது. மகள் ஸ்பெக்ரம் ராணி கனிமொழியும் பெயிலில் வந்திருக்கும் இத்தருணம் கிழவன் கருணாவுக்கு ஒரு உசாரான காலம்.

இன்று காலை செயற்குழுக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. கருணாநிதி தலைமையில் தொடங்கியுள்ள கூட்டத்தில் மூத்த வீராங்கனை நடிகை குஷ்பு, கட்சிப் பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின்,   உள்ளிட்டோர் பங்கேற்று முடிவெடுத்திருக்கின்றனர்.

திட்டப்படி கருணா குஷ்பு தலைமையில் மனிதச்சங்கிலி தொடங்கியதும் கேரளாவும் மத்திய அரசும் பணிந்து உடனடியாக கருணாவின் கோரிக்கையை ஏற்று அனைத்து சிக்கல்களும்  சுமூக நிலைக்கு வரும் என கருணா ஆருடம் கூறியிருக்கிறார்.

ஈழ படுகொலையை வைத்து நாடகம் நடத்தி மத்திய அரசிடமிருந்து மகன். மகள். பேரப்பிள்ளைகளுக்கு எம்பி, மந்திரிப்பதவி வாங்க மனிதச்சங்கிலி, பதவி ராஜினாமா, உண்ணாவிரதம், என்று பல செத்தவீடுகள் செய்து தனது குடும்ப நலன் காத்த கருணாநிதி. இன்று மரண அடிவாங்கி நிலமட்டத்தில் இருக்கும் தருணத்தில் மலயாளிகள், தமிழர் பிரச்சினையை சமயோசிதமாக வஞ்சக நோக்கோடு கையில் எடுத்திருக்கிறார்.

இது ஒரு கழிவு கெட்ட சுயநல வெட்கம் கெட்ட நாடகம் என்பது ஊரறிந்தாலும். எவரும் எதிர்ப்பு காட்டமுடியாத சிக்கல் இருப்பதால் கருணாவுக்கு பெரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. திமுக வின் ஊழல் அடிமைகள் கைவசம் இருப்பதால் கருணாவுக்கு கணிசமான ஆள்ச்சேர்ப்பு சிரமமில்லாமல் இருக்கும். 

இருந்தும் கருணாவின் நாடகங்களால் ஒரு மண்ணும் நடந்துவிடப்போவதில்லை. கொள்ளையடித்த பெரும் பணமும் கணிசமான அடிமைகளும் துரோகி கருணாநிதியின் கையில் இருக்கும்வரை கருணாநிதி தனது எஞ்சிய அந்திம காலம்வரை இப்படியே நாடக மேடைகளை திறந்து சீரழித்து முடிவு எழுதுவார் என்பது தவிர்க்க முடியாதது.

மீண்டும் சந்திப்போம்.

Thursday, December 8, 2011

சாத்தான் வேதம் ஓதுகிறது.

  ஜனநாயத்தை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை பழைமைவாய்ந்த நாடு:ஜனாதிபதி. 

ஆசியாவில் மாத்திரமல்ல முழு உலகத்திலுமே ஜனநாயத்தை நடைமுறைப்படுத்தும் நாடுகளில் இலங்கையே மிகவும் பழைமைவாய்ந்த நாடாகும். அர்த்தமுள்ள ஜனநாயகத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்றால் பொதுமக்களுக்கும் அரசுக்கும் இடையே நெருங்கிய உறவுகள் காணப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தோனேசியாவில் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவில் ஆரம்பமான பாலி ஜனநாயக மாநாட்டில் கலந்துகொண்டு இன்று உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

"அரசியலமைப்பு மற்றும் தேர்தல் முறைமை தொடர்பான அனுபவங்கள் இலங்கையின் அரசியல் வரலாற்றில் முக்கியமான சந்திஷ்டானங்களாகும்" என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 


நன்றி. வீரகேசரி.

 

அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி _

  ஈரானியர்களுடன் தொடர்பு கொள்ளும் நோக்குடன் 'ஒன்லைன் ஈரானிய தூதரகம்' ஒன்றினை ஆரம்பித்தது அமெரிக்கா.

இதற்கு ஈரான் கடும் எதிர்ப்பினை வெளியிட்டது.

எனினும் ஆரம்பித்து சில மணித்தியாலங்களுக்குள் ஈரான் இவ் இணைய தூதரகத்தினை தனது நாட்டினுள் முடக்கியுள்ளது.

இதன்படி ஈரானுக்குள் இருந்து இவ் இணையத்தளத்தினை எவரும் பார்வையிட முடியாது.

இதற்கு வெள்ளை மாளிகை கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.

எனினும் ஈரானியர்கள் பிற இணையத்தளங்களின் ஊடாக அந்நாட்டு அரசின் தடைகளை மீறி இத்தளத்தினைப் பார்வையிட முடியுமென அமெரிக்கா அறிவித்துள்ளது.

மேலும் ஈரான் தனது மக்களின் தகவல் அறியும் உரிமையினைத் தடை செய்வதுடன், கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயல்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இத்தகவல் நேற்றே வெளியாகிய போதும் அதனை உறுதிப்படுத்திக்கொள்ள முடியவில்லை.

எனினும் தற்போது அத்தகவல் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது..


நன்றி வீரகேசரி.

Monday, December 5, 2011

விநாச காலே விபரீத புத்தி.

கூத்தாடி குசும்பன்.




2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் கொள்ளை வழக்கில் சிக்கி கைதாகி 6 மாதங்களுக்கும் மேலாக திஹார் சிறையில் கைதியாக அடைபட்டிருந்த கனிமொழி. சில நாட்களுக்கு முன்பு  நிபந்தனை ஜாமீனில் வெளிவந்திருக்கிறார்.

3ம் திகதி சென்னை திரும்பிய கனிமொழியை திமுக தலைவர்
 ஆளவந்தான் கருணாநிதி தனது அடிமைகள் புடைசூழ தாரை தப்பட்டை முழங்க தள்ளுவண்டியில் விமான நிலையம் சென்று வெட்கம் துறந்து நேரில் வரவேற்றார்.

வீடு திரும்பிய கனிமொழிக்கு வழி நெடுக திமுக அடிமைகள் அனைவரும் நீண்ட வரிசையில் நின்று  பூ, அரிசி, பொரி, முதலியவைகளை தூவி, சலாம் போட்டு பெருத்த நாடுகாத்த வீராங்கனையை வரவேற்பது போன்று வரவேற்றனர். இவை அனைத்தும் கருணாநிதியின் ஏற்பாட்டில் நடந்தேறிய அநிஞாயங்கள்.

இந்த வரவேற்பும் ஊர்வலமும் இந்திய அரசின் நீதித்துறையை அவமதித்து, சிபிஐ புலனாய்வு அமைப்பையும் அராஜகமாக காட்டும் ஒரு நடவடிக்கை என்பதை, மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுகவின் முதலாளி, கருணாநிதி கணக்கிலெடுக்கவில்லை, ஊழல் குப்பாடிகளின் கூட்டம்தான் அங்கும் இருக்கின்றனர் என்பதை மூத்த கொள்ளைக்காரன் கருணாநிதி அறிந்திருப்பதால் துணிச்சலாக தனது அடிமைகளை முன்னிறுத்தி மிகப்பெரிய ஊழல் குற்றவாளியை போராட்ட வீராங்கனை கணக்காக தோற்றப்படுத்தி திருப்தி கண்டிருக்கிறார்,

மகளை முதன்மைப்படுத்தி மக்களையும் நாட்டையும் மீண்டும் ஏமாறியிருக்கிறார். விழாவெடுத்தே மக்களை ஏமாற்றிவந்த ஆளவந்தான் அதே தந்திரத்தை பாவித்து திருட்டு வழக்கிலிருந்து ஜாமீனில் வெளிவந்த மகள் கனிமொழியை, அடையாளப்படுத்தியது தற்கால வெற்றிபோல் தெரிந்தாலும் திமுக அடிமைகள் தவிர்ந்த நாட்டிலுள்ள மற்றவர்கள் ரசிக்கவில்லை வெறுத்திருக்கின்றனர்.

அதன்பின் இனி தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபடுவீர்களா என்ற கேள்விக்கு,  தலைவர் என்னை அரசியலுக்கு அழைத்து வந்து இருக்கிறார். அவர் என்ன எதிர்பார்க்கிறாரோ அந்த அளவுக்கு நிச்சயமாக தொடர்ந்து தீவிர அரசியல் பணியில் ஈடுபடுவேன் என்று கனிமொழி வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். (கனிமொழி இல்லாவிட்டால் தமிழ்நாடு காணாமல் போய்விடும்?)

அக்கருத்து கனிமொழியின் தனிப்பட்ட குடும்ப தொழில் சார்ந்து தொடர்ந்து நடைமுறையில் உள்ள விடயம்.  கனிமொழி குறிப்பிட்டிருக்கும் கருணாநிதியின் எதிர்பர்ப்பு அரசியல்ப்பணி என்பது, இதுவரை கருணாநிதி குடும்பங்களுக்காக தொடர்ந்த கொள்ளையை தொடருவேன் என மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். 

கருணாநிதியும் ஜெயலலிதாவும் அரசியலுக்கு வந்ததால் தமிழகத்து மக்கள் நல்மாற்றம்கண்டு பலனடைந்ததில்லை. மாறாக பல ஆயிரம் கோடிகளில் ஊழல் செய்தனர் தொடர்ந்து செய்துகொணிருக்கின்றனர் என்பதை நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகள் பறைசாற்றுகின்றன.

கருணாநிதி நாட்டை கொள்ளையடித்து தனது குடும்பத்தை நாடாக்கினார். தனது புகழ்பாட மாதம் ஒரு விழா எடுத்து நம்பி வாக்களித்த மக்களை இழவெடுத்த வாழ்வில் தள்ளினார்,

2009ல் ஈழத்தமிழர்கள் 3 இலட்சம் பேரை கொன்றொழிக்க மத்திய காங்கிரஸ் அரசு துணை நின்று பல்வேறு நாடகங்கள் நடத்தி இறுதியில்  வெட்கம் கூச்சம் இரக்கமில்லாமல் 1/2 நாள் உண்ணா விரதமிருந்து ஏமாற்றினார்.

ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப்புலிகளின் அரசியல்த்துறையுடன் தொடர்புகளை பேணி  கழுத்தறுத்து காட்டிக்கொடுத்த கனிமொழியை ஈழத்தமிழினம் மறந்துவிடவில்லை.   கயமை கழுத்தறுப்பு செய்து பல போராளிகள் அழிய கருணாநிதியுடன் இணைந்து வஞ்சக நாடகங்களை கனிமொழி முன்னின்று நடத்தினார்,

அதுபற்றி மக்களிடமிருந்தும் சமூக அமைப்புக்களிலிருந்தும் எவ்வளவு விமர்சனங்கள் வந்து மோசமாக விமர்சித்தபோதும் எருமை மாட்டில் மழை பெய்ததுபோல கருணாநிதியையும் கனிமொழியையும் எதுவும் அசைத்துவிடவில்லை.

2011 சட்டசபை தேர்தலில் தமிழக மக்கள் சரியான செருப்படி கொடுத்தபோதும் கருணா கூட்டம் திருந்தியதாக தெரியவில்லை கனிமொழியும் அதை இன்னும் உணரவில்லை என்பதுபோல் தெரிகிறது.

உங்கள் மீதான வழக்கு குறித்து என்ன கருதுகிறீர்கள் என்ற கேள்விக்கு,  தான் குற்றவாளியல்ல என்றும் வழக்கை கழகமும், நானும் சரியான முறையில் நீதிமன்றத்தில் சந்தித்து வருகிறோம். கட்சிக்கும் எனக்கும் ஏற்பட்டுள்ள திருட்டு பேரை நீதி மன்றத்தில் சட்டப்படி சந்தித்து மீண்டு வருவேன் என திருட்டு கேசில் சிக்கி ஜாமில் வெளிவந்தவர்கள் சாதாரணமாகச் சொல்லும் அதே புலுடாவை விட்டு நல்ல பிள்ளைபோல் காட்டிக்கொண்டிருக்கிறார் ஊழல் பயங்கரவாதியான கனிமொழி.

கனிமொழிக்கு, தாரை, தப்பட்டைகள் முழங்க, சென்னை விமான நிலையத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில் சாவீட்டு ஊர்வல வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்த வரவேற்பு  . தொடர்ந்து மூன்று மணி நேரம், பேண்டு வாத்தியங்கள் முழங்கியதாலும், தி.மு.க.வினரின் நெரிசலாலும், விமான பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு பொதுமக்களின் போக்குவரத்து காட்டுமிராண்டித்தனமாக சிரமப்படுத்தப்பட்டிருக்கிறது.

சிபிஐ கனிமொழியை 6 மாதங்கள் உள்ளே வைத்து விசாரித்த வகையில் கனிமொழி ராசாவுடன் இணைந்து நாட்டுக்கு நம்பிக்கை மோசடி செய்திருக்கிறார் என குற்றஞ்சாட்டி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது. நாட்டுக்கு நம்பிக்கை மோசடிசெய்தல் என்பது தேசிய பாதுகாப்பை துவம்ஷம் செய்த குற்றத்துக்கு சரியான குற்றச்சாட்டாகும்.  

2Gஅலைக்கற்றை கொள்ளை வழக்கில் 176,000 கோடி ரூபா முறைகேடு நடந்துவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. அந்தத்தொகை யூக அடிப்படையில் கணிக்கப்பட்டதாகவும் 20.000 கோடிவரைதான் நஸ்டம் ஏற்பட்டிருக்கும் என கருணாநிதி தரப்பில் சொல்லப்பட்டது, அதன்பின் வெவ்வேறு கணக்குகளில் ஸ்பெக்ரம் அலைக்கற்றை வழங்கலில் நஸ்டம் நடந்திருக்கலாம் என சம்பந்தப்பட்டவர்கள் ஒவ்வொரு கணக்கை தமது ஊக அடிப்படையில் வெளியிட்டனர். 

ஆனால் எவரும் திருட்டு நடக்கவில்லை என்று மறுக்கவில்லை. அனைவரும் தொகையை குறைத்து காண்பிக்க முயன்றிருக்கின்றனரே தவிர முறைகேடு/ திருட்டு இடம்பெறவில்லை என சொல்லவில்லை.

அலைக்கற்றை வியாபாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் உள்த்துறை அமைச்சர் சிதம்பரம் ஆகியோர் சம்பந்தப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சியும் சுப்பிரமணிய சுவாமியும் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். சுவாமியின் குற்றச்சாட்டு சம்பந்தமாக வரும் 08 திகதி உச்சநீதிமன்றம் விசாரிக்க இருப்பதாகவும் தெரிகிறது. எனவே வழக்கு நியாயப்படி நடத்தப்படும் என்பதற்கு உத்தரவாதம் எதுவுமில்லை.

இக்குற்றச்சாட்டில் அலைக்கற்றையை கையாண்ட தொலைத்தொடர்புத்துறை திமுக மந்திரி ராசா பிரதானமானவர் என்பது அனைவரும் அறிந்ததே. ராசாவை இயக்கியவர்கள் என்று கருணாநிதியின் மகள் கனிமொழி மற்றும் கனிமொழியின் தாயார் ராசாத்தி அகியோர் என்பதும் பின்னணியில் கருணாநிதியே இருந்தார் என்பதற்கும் ஆதாரமாக நீரா ராடியா என்ற புறோக்கரின் தொலைபேசி அழைப்புக்கள் அப்பட்டமாக நிரூபிக்கின்றன.

அவை அனைத்தும் உலகம் அறிந்த விடயம். இப்படியிருக்கும்போது பிணையில் வெளியேவந்த கனிமொழி   கருணாநிதியின் கதைவசனத்தில் தனக்கு ஒன்றும் தெரியாத அப்பாவியாக மிக அருமையாக நடித்து வருகிறார். புலிக்கு பிறந்தது பூனையாக முடியாது என்பது அனுபவ/ அறிவியல்.

இந்திய அரசியலில் எதுவும் நடக்கலாம் இராமாயண கலத்திலிருந்து இந்தியா அந்த மனநிலையில்த்தான் இருந்துவருகிறது, ஆண்டான் அடிமை நிலை மாற்றமுடியாத ஒன்றாக இருப்பதற்கு அங்குவாழும் அடிமைகளே மூல காரணம். மக்களை அடிமைகளாக வைத்திருப்பதையே அந்தநாட்டு அரசியலும் விரும்புகிறது.

குஷ்புவுக்கும் நயன்தாராவுக்கும் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்து கும்பிடும் அளவு விஸ்தீரணம்தான் அங்கு வாழ்கிறது.

இதற்கான கடைசி உதாரணம் கனிமொழி திருட்டு வழக்கிலிருந்து தற்காலிக பிணையில் விடுபட்டு வந்ததற்கு திமுகவின் அடிமைகள் அரங்கேற்றிய பிரமாண்டம். ஏன் எதற்கு இப்படிச்செய்கிறோம் என ஒருவரும் நினைத்துப்பார்க்க விழையவில்லை. "கும்பலில் கோவிந்தா என்பதுபோல் அனைத்தும் நடந்தேறுகின்றன".

பல அடிமைகளுக்கு கனிமொழி எதற்காக எப்பேற்பட்ட குற்றச்சாட்டுக்காக சிறையில் அடைக்கப்பட்டார் என்பதே தெரியாது. அல்லது கருணாநிதியும் திமுகவும் தெரிய விடவில்லை. அல்லது கருணாநிதி தனது குடும்பத்திற்காக அனைவரையும் ஏமாற்றுகிறார் எனத்தெரிந்தும் பிழைப்புக்கு வழியின்றி இந்தக்கூட்டம் பின்னின்று வழிமொழிகிறது.

சிறையிலிருந்து திரும்பிய கனிமொழிக்கு திமுக அளித்த வரவேற்பு தேவையற்றது. அவரது ஜாமீன் எந்த நேரத்திலும் ரத்து செய்யப்படலாம் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி கூறியிருக்கிறார் பொறுத்திருந்து பார்ப்போம்.

விநாச காலே விபரீத புத்தி. என்பது நிச்சியம் ஒருநாள் தெரியவரும்.

மீண்டும் சந்திப்போம்.

Sunday, December 4, 2011

மேற்குலக இராஜதந்திரிகள் அதிர்ச்சி

அரசு  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடையிலான பேச்சில் விரிசல்நிலை ஏற்பட்டுள்ளதால், கொழும்பிலுள்ள மேற்குலக நாடுகளின் தூதுவர்கள், இராஜதந்திரிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
 
தமிழர் பிரச்சினை தொடர்பாக இலங்கை அரசு காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என மேற்குலக நாடுகள் வலியுறுத்திவரும் நிலையில், அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பான பேச்சுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதானது மேற்கத்தேய நாடுகளைப் பெரும் கவலையடையச் செய்துள்ளது என்று பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த இராஜதந்திரி ஒருவர் தெரிவித்தார்.
 

இதேவேளை, அரசியல் தீர்வு குறித்தான பேச்சுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளமை குறித்து தமது நாட்டுத் தலைமைப்பீடத்துக்கு இங்குள்ள இராஜதந்திரிகள் விளக்கமளிக்கும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர் என அறியமுடிகின்றது.இந்த வருட இறுதிக்குள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்படவேண்டும் என சர்வதேசம் வலியுறுத்திவரும் நிலையில், பேச்சுகளில் தடை ஏற்பட்டுள்ளதானது சர்வதேசத்தின் கவனத்தை இலங்கை நோக்கி நகரவைத்துள்ளது என அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 
 
நன்றி, உதயன் இணையம்.