Friday, December 16, 2011

தன்வினை தன்னைச்சுடும்.


கூத்தாடி குசும்பன்.

முல்லை பெரியாறு அணை விவகாரம் தமிழக விவசாயிகளின் உரிமைப்பிரச்சினை. தென்மாவடங்களில் இயற்கையாலும், அரசியற் செயற்கையாலும் காவுகொள்ளப்பட்டு நொடித்து நொந்துபோய் வாழ்வா சாவா என துவண்டுபோய்க்கிடக்கும் பல இலட்சம் விவசாயிகளின் உயிரினும் மேலான வாழ்வாதாரப்பிரச்சினை.

அம்மக்களுக்கு இப்படி ஒரு சூழ்நிலை வருவதற்கு அடிப்படையே தொலைநோக்கற்ற நரம்பில்லாத அரசியல் வியாதிகளின் பச்சோந்தித்தனமான சுயநலம் என்பதை எவரும் மறுக்கமுடியாது.

தமிழகத்து அரசியல்வியாதிகள் சோரம்போன தன்மையால் உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீப்பை, உடனடியாக கறாராக மத்திய அரசுக்கு கட்டளையிட்டு கேட்டுவாங்கி அமூல்ப்படுத்த முடியவில்லை. காலங்கடந்ததால் இன்று நிலமை கைமீறிப்போய்க்கொண்டிருக்கிறது. அரசியல் அரசியலாகவே தீட்டப்படுகிறது, ஆனால் மக்கள் கடை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழகத்திலிருந்து டில்லி சென்று நடுவண் அரசுக்கு முண்டுகொடுக்கும் பச்சோந்திகள். நாட்டு நலனை மனதில்க்கொண்டு டில்லிக்கு சென்றது கிடையாது. டில்லிக்கு போனத்தும் போகாததுமாக அனைத்தையும் துறந்து தூர வீசிவிட்டு, எண்சாண் கிடையாக கிடந்து கொள்ளையடிப்பதற்கு பசையுள்ள மந்திரிப்பதவிகளை கோருவதிலேயே குறியாக இருந்திருக்கின்றனர்.

எந்தத்தகுதியும் இல்லாமல் ஊழல் மட்டுமே குறியான இவர்கள் அடிமைச்சாசனம் எழுதிக்கொடுத்து மந்திரிப்பதவிகளை பெற்றதும் வாய் திறக்கமுடியாத தலையாட்டி பொம்மைகளாக மாறிவிடுகின்றனர். 

இறுதியாக அந்த இடத்தில் சம்மணமிட்டிருந்து டில்லிக்கு கூட்டத்தை தெரிவுசெய்து அனுப்பிவிட்டு நீலிக்கண்ணீர் வடித்து ஒவ்வொரு நெருக்கடியான சந்தற்ப்பத்திலும் மிக சாதுரியமாக ஒப்பாரி வைத்து மக்களை ஏமாற்றிக்கொண்டிருப்பவர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய அழுக்கனான காண்டாமிருகம் கருணாநிதி.

ஆடான ஆடெல்லாம் ஏதேதோவுக்கெல்லாம் அல்லோலப்பட, சப்பாணியான சொத்தியாடு, மறைந்த சூரியன் தனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு திரும்பி வரும்வரை முலைகுடியேன் என்று சபதமிட்டு சாகும்வரை உண்ணமாட்டேன் என ஒற்றைக்காலில் நின்று யாகம் செய்ததாம்.

அதுபோல முல்லை பெரியாறு பிரச்சினையில் கண்ணாயிரம் கருணாநிதி தனது பங்குக்கும் ஒரு அறிக்கையை விட்டு கண்ணீர்விட்டு அழுதிருக்கிரார். அதன் விபரம்:

1.கேரளாவில், தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வன்முறையை கட்டுப்படுத்த, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தலையிட வேண்டும்.???????.....!!!!!!!(சிரிப்புத்தான் வருதுங்க.)

2,காலங்காலமாக குடியிருந்து வந்த நூற்றுக்கணக்கான தமிழர்கள், சில சமூகவிரோத சக்திகளால் வெளியேற்றப்பட்டுள்ளனர். கேரளா எல்லையில் குடியிருந்து வரும் தமிழர்களின் சொத்துக்கள் மற்றும் உடைமைகள் மீது கல்வீச்சு சம்பவங்களும், தீக்கிரையாக்கும் செயல்களும் நடப்பதாக, அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன.

கேரளாவையே தங்களது தாய் மண்ணாகக் கருதி, நீண்ட நெடுங்காலமாக அங்கேயே வாழ்ந்துவரும் தமிழர்கள், "தமிழகத்துக்கு திரும்பச் சொல்லி நெருக்கடி கொடுத்தால் தற்கொலை செய்துகொள்வோம்' என எச்சரிக்கும் அளவுக்கு, நிலைமை சென்றுவிட்டது.!!!!!!!!!!!!!!(எவ்வளவு கரிசினை)

3,இப்பிரச்னையில் நீங்கள் நேரடியாகவும், உடனடியாகவும் தலையிட்டு, கேரளாவில் வாழும் தமிழர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என, கேட்டுக்கொள்கிறேன்......(ஆமா உடனடியாக ஈடேறிடும்)

கேரள மலயாளிகளின் அத்துமீறலை நிச்சியம் கோபத்துடன் உறுதிகொண்டு எதிர்க்கவேண்டும். முடிந்தவரை நியாயத்துக்காக மேல்மட்டத்துடன் அயராமல் போராடவேண்டும் மறுப்பேயில்லை.

ஆனால் அது இதயசுத்தியோடு வைகோ அளவுக்காவது இருக்கவேண்டும். முதல்வர் ஜெயலலிதாவின் கோபமளவுக்காவது இருக்கவேண்டும். விஜயகாந்தின் அரசியல் அளவுக்காவது இருக்கவேண்டும்.

அல்லது இதுவரை (கறுமநிதி) தான் செய்ததெல்லாம் குடும்பத்துக்காக சுயநலன்கொண்டு நரித்தந்திரமான குப்பாடித்தனமான குள்ளநரிவேலை என்பதை நாடறிந்துவிட்டதால் மவுனம் காக்கிறேன் என அறிக்கை விட்டு சிஐடி நகரில் படுத்து ஓய்வை தொடர்ந்திருக்கலாம்.

பிரதீபா போத்தில் தலையிட்டு ஒரு அணுத்துகழ் அளவு மாற்றம் நிகழும் நடைமுறைச் சாத்தியம் இந்தியாவில் இருந்திருக்குமானால் அந்த வாக்கியத்தை பாவிப்பதில் தவறு கிடையாது.

திருட்டு குற்றவாளி மகள் கனிமொழியின்  பெயிலுக்கு தள்ளுவண்டியில் டில்லிக்கு ஓடிப்போய் தியாகத்திருவிளக்கு சூனியாவின் காலில் விழுந்து கட்டி அழுத கருணானிதி, எரியிற வீட்டில் அரசியல் செய்து நானும் கூட என்று மக்களை ஏமாற்றுவதற்கு பிரதீபா போத்திலை பாவித்து வீரனாக அறிக்கையில் காட்டியிருக்கிறார்.

2011 தேர்தல் பிசச்சாரத்தின்போது திருவாரூரில் வடிவேலு விஜயகாந்தை நோக்கி எடுத்துவிட்ட கொமடிக்கு குறையில்லாமல் கருணானிதியும் கூவி ஓய்ந்திருக்கிறார்.

வடிவேலு கூவிய வாசகம்: விஜயகாந்த் நீ முதலமைச்சர் என்றால் நான் பிரதமர். நீ பிரதமர் என்றால் நான் ஜனாதிபதி. நீ ஜனாதிபதி என்றால் நான் ஒபாமா. என்று நடக்காத ஒன்றை ரசனையில்லாமல் கூவி தன்னை பெரிய பேச்சாளனாக காட்டி கைத்தடிகளிடம் கைதட்டு வாங்கினார்.(இன்று அதன் பாதிப்பு எவ்வளவு என்பதை வடிவேலுவும் சர்வதேச தமிழினமும் மிக நன்றாகவே அறிந்திருக்கிறது)

மக்களுக்கு அரசியல் சிந்தனை அறவேயில்லை என்ற நம்பிக்கையில் அதே விளையாட்டை கருணானிதியும் கூவி மிக மிக சின்னத்தனமான சிறுவனாகியிருக்கிறார்.

"தற்கொலை செய்துகொள்வோம்' என மக்கள் எச்சரிக்கும் அளவுக்கு, நிலைமை சென்றுவிட்டது" என்று கண்ணீர் வடிக்கும் கருணானிதி ஈழ மக்கள் கொத்துக்கொத்தாக செத்தது பொறுக்காத மறத்தமிழன் முத்துக்குமார் தீக்குளித்தபோது, அவனுக்கு வீட்டில் ஏதோ காதல் பிரச்சினை என்று கொமண்ட் அடித்துவிட்டு நாரிப்பிடிப்பு என்று கயிறு விட்டு ராமகிருஷ்ணா குளிர்ச்சி மருத்துவமனையில் காலங்கடத்தி வஞ்சகம் தீர்த்ததால். தொடர்ந்து பதினெட்டுப்பேர் தீக்குளித்தனர். அப்போ ஆட்சியும் கருணாநிதியிடம் இருந்தது அன்றைக்கும் ஜனாதிபதியிடம் இப்படி ஒரு கோரிக்கை வைத்திருக்கலாமே? ஏன் கறுமநிதி செய்யவில்லை.

அன்றைக்கு கோரிக்கை வைத்திருந்தால் அரசியலில் சிக்கல் திருப்பி தன்னை தாக்கும் என்பதால், அடுத்து 1/2 நாள் உண்ணா வேஷம் போட்ட கறுமநிதி.  இன்றைக்கு வெற்றுக்கூவல் கூவுவதால் மக்களை ஏமாற்றலாம் என்பது தவிர வேறு எது நடக்கப்போகிறது. எவ்வளவு சின்னத்தனமான மனிதன் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று தேவை.

தமிழரின் பெயரால் வாழ்க்கையை ஓட்டவேண்டும் என்பதற்காக, எவ்வளவு விமர்சனம் வந்தாலும் எவ்வளவு வயது போனாலும் இந்த முதலை தமிழினத்தை விட்டு விலகாமல் நீலிக்கண்ணீர் வடித்துக்கொண்டேயிருக்கிறது. கடவுள்தான் மக்களை காப்பாற்றவேண்டும்.

மீண்டும் சந்திப்போம்.

No comments: