2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் கொள்ளை வழக்கில் சிக்கி கைதாகி 6 மாதங்களுக்கும் மேலாக திஹார் சிறையில் கைதியாக அடைபட்டிருந்த கனிமொழி. சில நாட்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமீனில் வெளிவந்திருக்கிறார்.
3ம் திகதி சென்னை திரும்பிய கனிமொழியை திமுக தலைவர்
ஆளவந்தான் கருணாநிதி தனது அடிமைகள் புடைசூழ தாரை தப்பட்டை முழங்க தள்ளுவண்டியில் விமான நிலையம் சென்று வெட்கம் துறந்து நேரில் வரவேற்றார்.
வீடு திரும்பிய கனிமொழிக்கு வழி நெடுக திமுக அடிமைகள் அனைவரும் நீண்ட வரிசையில் நின்று பூ, அரிசி, பொரி, முதலியவைகளை தூவி, சலாம் போட்டு பெருத்த நாடுகாத்த வீராங்கனையை வரவேற்பது போன்று வரவேற்றனர். இவை அனைத்தும் கருணாநிதியின் ஏற்பாட்டில் நடந்தேறிய அநிஞாயங்கள்.
இந்த வரவேற்பும் ஊர்வலமும் இந்திய அரசின் நீதித்துறையை அவமதித்து, சிபிஐ புலனாய்வு அமைப்பையும் அராஜகமாக காட்டும் ஒரு நடவடிக்கை என்பதை, மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுகவின் முதலாளி, கருணாநிதி கணக்கிலெடுக்கவில்லை, ஊழல் குப்பாடிகளின் கூட்டம்தான் அங்கும் இருக்கின்றனர் என்பதை மூத்த கொள்ளைக்காரன் கருணாநிதி அறிந்திருப்பதால் துணிச்சலாக தனது அடிமைகளை முன்னிறுத்தி மிகப்பெரிய ஊழல் குற்றவாளியை போராட்ட வீராங்கனை கணக்காக தோற்றப்படுத்தி திருப்தி கண்டிருக்கிறார்,
மகளை முதன்மைப்படுத்தி மக்களையும் நாட்டையும் மீண்டும் ஏமாறியிருக்கிறார். விழாவெடுத்தே மக்களை ஏமாற்றிவந்த ஆளவந்தான் அதே தந்திரத்தை பாவித்து திருட்டு வழக்கிலிருந்து ஜாமீனில் வெளிவந்த மகள் கனிமொழியை, அடையாளப்படுத்தியது தற்கால வெற்றிபோல் தெரிந்தாலும் திமுக அடிமைகள் தவிர்ந்த நாட்டிலுள்ள மற்றவர்கள் ரசிக்கவில்லை வெறுத்திருக்கின்றனர்.
அதன்பின் இனி தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபடுவீர்களா என்ற கேள்விக்கு, தலைவர் என்னை அரசியலுக்கு அழைத்து வந்து இருக்கிறார். அவர் என்ன எதிர்பார்க்கிறாரோ அந்த அளவுக்கு நிச்சயமாக தொடர்ந்து தீவிர அரசியல் பணியில் ஈடுபடுவேன் என்று கனிமொழி வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். (கனிமொழி இல்லாவிட்டால் தமிழ்நாடு காணாமல் போய்விடும்?)
அக்கருத்து கனிமொழியின் தனிப்பட்ட குடும்ப தொழில் சார்ந்து தொடர்ந்து நடைமுறையில் உள்ள விடயம். கனிமொழி குறிப்பிட்டிருக்கும் கருணாநிதியின் எதிர்பர்ப்பு அரசியல்ப்பணி என்பது, இதுவரை கருணாநிதி குடும்பங்களுக்காக தொடர்ந்த கொள்ளையை தொடருவேன் என மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.
கருணாநிதியும் ஜெயலலிதாவும் அரசியலுக்கு வந்ததால் தமிழகத்து மக்கள் நல்மாற்றம்கண்டு பலனடைந்ததில்லை. மாறாக பல ஆயிரம் கோடிகளில் ஊழல் செய்தனர் தொடர்ந்து செய்துகொணிருக்கின்றனர் என்பதை நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகள் பறைசாற்றுகின்றன.
கருணாநிதி நாட்டை கொள்ளையடித்து தனது குடும்பத்தை நாடாக்கினார். தனது புகழ்பாட மாதம் ஒரு விழா எடுத்து நம்பி வாக்களித்த மக்களை இழவெடுத்த வாழ்வில் தள்ளினார்,
2009ல் ஈழத்தமிழர்கள் 3 இலட்சம் பேரை கொன்றொழிக்க மத்திய காங்கிரஸ் அரசு துணை நின்று பல்வேறு நாடகங்கள் நடத்தி இறுதியில் வெட்கம் கூச்சம் இரக்கமில்லாமல் 1/2 நாள் உண்ணா விரதமிருந்து ஏமாற்றினார்.
ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப்புலிகளின் அரசியல்த்துறையுடன் தொடர்புகளை பேணி கழுத்தறுத்து காட்டிக்கொடுத்த கனிமொழியை ஈழத்தமிழினம் மறந்துவிடவில்லை. கயமை கழுத்தறுப்பு செய்து பல போராளிகள் அழிய கருணாநிதியுடன் இணைந்து வஞ்சக நாடகங்களை கனிமொழி முன்னின்று நடத்தினார்,
அதுபற்றி மக்களிடமிருந்தும் சமூக அமைப்புக்களிலிருந்தும் எவ்வளவு விமர்சனங்கள் வந்து மோசமாக விமர்சித்தபோதும் எருமை மாட்டில் மழை பெய்ததுபோல கருணாநிதியையும் கனிமொழியையும் எதுவும் அசைத்துவிடவில்லை.
2011 சட்டசபை தேர்தலில் தமிழக மக்கள் சரியான செருப்படி கொடுத்தபோதும் கருணா கூட்டம் திருந்தியதாக தெரியவில்லை கனிமொழியும் அதை இன்னும் உணரவில்லை என்பதுபோல் தெரிகிறது.
உங்கள் மீதான வழக்கு குறித்து என்ன கருதுகிறீர்கள் என்ற கேள்விக்கு, தான் குற்றவாளியல்ல என்றும் வழக்கை கழகமும், நானும் சரியான முறையில் நீதிமன்றத்தில் சந்தித்து வருகிறோம். கட்சிக்கும் எனக்கும் ஏற்பட்டுள்ள திருட்டு பேரை நீதி மன்றத்தில் சட்டப்படி சந்தித்து மீண்டு வருவேன் என திருட்டு கேசில் சிக்கி ஜாமில் வெளிவந்தவர்கள் சாதாரணமாகச் சொல்லும் அதே புலுடாவை விட்டு நல்ல பிள்ளைபோல் காட்டிக்கொண்டிருக்கிறார் ஊழல் பயங்கரவாதியான கனிமொழி.
கனிமொழிக்கு, தாரை, தப்பட்டைகள் முழங்க, சென்னை விமான நிலையத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில் சாவீட்டு ஊர்வல வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்த வரவேற்பு . தொடர்ந்து மூன்று மணி நேரம், பேண்டு வாத்தியங்கள் முழங்கியதாலும், தி.மு.க.வினரின் நெரிசலாலும், விமான பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு பொதுமக்களின் போக்குவரத்து காட்டுமிராண்டித்தனமாக சிரமப்படுத்தப்பட்டிருக்கிறது.
சிபிஐ கனிமொழியை 6 மாதங்கள் உள்ளே வைத்து விசாரித்த வகையில் கனிமொழி ராசாவுடன் இணைந்து நாட்டுக்கு நம்பிக்கை மோசடி செய்திருக்கிறார் என குற்றஞ்சாட்டி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது. நாட்டுக்கு நம்பிக்கை மோசடிசெய்தல் என்பது தேசிய பாதுகாப்பை துவம்ஷம் செய்த குற்றத்துக்கு சரியான குற்றச்சாட்டாகும்.
2Gஅலைக்கற்றை கொள்ளை வழக்கில் 176,000 கோடி ரூபா முறைகேடு நடந்துவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. அந்தத்தொகை யூக அடிப்படையில் கணிக்கப்பட்டதாகவும் 20.000 கோடிவரைதான் நஸ்டம் ஏற்பட்டிருக்கும் என கருணாநிதி தரப்பில் சொல்லப்பட்டது, அதன்பின் வெவ்வேறு கணக்குகளில் ஸ்பெக்ரம் அலைக்கற்றை வழங்கலில் நஸ்டம் நடந்திருக்கலாம் என சம்பந்தப்பட்டவர்கள் ஒவ்வொரு கணக்கை தமது ஊக அடிப்படையில் வெளியிட்டனர்.
ஆனால் எவரும் திருட்டு நடக்கவில்லை என்று மறுக்கவில்லை. அனைவரும் தொகையை குறைத்து காண்பிக்க முயன்றிருக்கின்றனரே தவிர முறைகேடு/ திருட்டு இடம்பெறவில்லை என சொல்லவில்லை.
அலைக்கற்றை வியாபாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் உள்த்துறை அமைச்சர் சிதம்பரம் ஆகியோர் சம்பந்தப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சியும் சுப்பிரமணிய சுவாமியும் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். சுவாமியின் குற்றச்சாட்டு சம்பந்தமாக வரும் 08 திகதி உச்சநீதிமன்றம் விசாரிக்க இருப்பதாகவும் தெரிகிறது. எனவே வழக்கு நியாயப்படி நடத்தப்படும் என்பதற்கு உத்தரவாதம் எதுவுமில்லை.
இக்குற்றச்சாட்டில் அலைக்கற்றையை கையாண்ட தொலைத்தொடர்புத்துறை திமுக மந்திரி ராசா பிரதானமானவர் என்பது அனைவரும் அறிந்ததே. ராசாவை இயக்கியவர்கள் என்று கருணாநிதியின் மகள் கனிமொழி மற்றும் கனிமொழியின் தாயார் ராசாத்தி அகியோர் என்பதும் பின்னணியில் கருணாநிதியே இருந்தார் என்பதற்கும் ஆதாரமாக நீரா ராடியா என்ற புறோக்கரின் தொலைபேசி அழைப்புக்கள் அப்பட்டமாக நிரூபிக்கின்றன.
அவை அனைத்தும் உலகம் அறிந்த விடயம். இப்படியிருக்கும்போது பிணையில் வெளியேவந்த கனிமொழி கருணாநிதியின் கதைவசனத்தில் தனக்கு ஒன்றும் தெரியாத அப்பாவியாக மிக அருமையாக நடித்து வருகிறார். புலிக்கு பிறந்தது பூனையாக முடியாது என்பது அனுபவ/ அறிவியல்.
இந்திய அரசியலில் எதுவும் நடக்கலாம் இராமாயண கலத்திலிருந்து இந்தியா அந்த மனநிலையில்த்தான் இருந்துவருகிறது, ஆண்டான் அடிமை நிலை மாற்றமுடியாத ஒன்றாக இருப்பதற்கு அங்குவாழும் அடிமைகளே மூல காரணம். மக்களை அடிமைகளாக வைத்திருப்பதையே அந்தநாட்டு அரசியலும் விரும்புகிறது.
குஷ்புவுக்கும் நயன்தாராவுக்கும் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்து கும்பிடும் அளவு விஸ்தீரணம்தான் அங்கு வாழ்கிறது.
இதற்கான கடைசி உதாரணம் கனிமொழி திருட்டு வழக்கிலிருந்து தற்காலிக பிணையில் விடுபட்டு வந்ததற்கு திமுகவின் அடிமைகள் அரங்கேற்றிய பிரமாண்டம். ஏன் எதற்கு இப்படிச்செய்கிறோம் என ஒருவரும் நினைத்துப்பார்க்க விழையவில்லை. "கும்பலில் கோவிந்தா என்பதுபோல் அனைத்தும் நடந்தேறுகின்றன".
பல அடிமைகளுக்கு கனிமொழி எதற்காக எப்பேற்பட்ட குற்றச்சாட்டுக்காக சிறையில் அடைக்கப்பட்டார் என்பதே தெரியாது. அல்லது கருணாநிதியும் திமுகவும் தெரிய விடவில்லை. அல்லது கருணாநிதி தனது குடும்பத்திற்காக அனைவரையும் ஏமாற்றுகிறார் எனத்தெரிந்தும் பிழைப்புக்கு வழியின்றி இந்தக்கூட்டம் பின்னின்று வழிமொழிகிறது.
சிறையிலிருந்து திரும்பிய கனிமொழிக்கு திமுக அளித்த வரவேற்பு தேவையற்றது. அவரது ஜாமீன் எந்த நேரத்திலும் ரத்து செய்யப்படலாம் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி கூறியிருக்கிறார் பொறுத்திருந்து பார்ப்போம்.
விநாச காலே விபரீத புத்தி. என்பது நிச்சியம் ஒருநாள் தெரியவரும்.
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment