Wednesday, December 28, 2011

அடிமையாக்க பார்க்கிறது மேற்குலகு அதற்கு ஒரு போதும் இடமளியேன் ஜனாதிபதி மஹிந்த புலம்பல்.


news
 புலிகளின் அதே மனோபாவத்துடனேயே தமிழ்க் கூட்டமைப்பினர் உள்ளனர். அவர்களின் கோரிக்கைகளான வடக்கு, கிழக்கு இணைப்பு, பொலிஸ் மற்றும் காணி அதிகாரப்பகிர்வு என்பன நடைமுறைச் சாத்தியமற்றவை. இந்த அதிகாரங்களை வழங்குவதன் மூலம் அவர்கள் என்னைக் கைதுசெய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா? 
 
மேற்குலகம் என்னைத் தங்களின் அடிமையாக வைத்திருக்கப் பார்க்கிறது. அதற்கு நான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.இவ்வாறு இந்தியாவில் இருந்து வெளியாகும் டெக்கன் குரோனிக்கல் நாளேட்டின் செய்தியாளர் பகவான் சிங்கிற்கு அலரி மாளிகையில் வைத்து அளித்துள்ள செவ்வியில் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
மேற்கு நாடுகளில் எஞ்சியுள்ள புலிகள் தான், இலங்கைக்கு எதிராக அடிப்படையற்ற விவகாரங்கள் குறித்து, அங்குள்ள அரசியல் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். மேற்கு நாடுகள் காஷ்மீர் தொடர்பாகவும் இலங்கை தொடர்பாகவும் தமது நாடாளுமன்றங்களில் பே_கின்றன. ஆனால் ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும், ஈராக்கிலும் தாம் என்ன செய்தன என்பதில் மௌனம் காக்கின்றன என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
 
நன்றி உதயன்.

No comments: