இனி நீயும் வேண்டாம் உன் சகவாசமும் வேண்டாம் என தமிழக மக்களால் தூக்கி எறியப்பட்டு வீழ்ந்து எழுந்திருக்க முடியாமல் தத்தளிக்கும் கருணாநிதிக்கு தக்க சமையத்தில் ஒரு பிடி கொம்பாக முல்லைப் பெரியாறு அணைவிவகாரம் கிடைத்திருக்கிறது. மகள் ஸ்பெக்ரம் ராணி கனிமொழியும் பெயிலில் வந்திருக்கும் இத்தருணம் கிழவன் கருணாவுக்கு ஒரு உசாரான காலம்.
இன்று காலை செயற்குழுக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. கருணாநிதி தலைமையில் தொடங்கியுள்ள கூட்டத்தில் மூத்த வீராங்கனை நடிகை குஷ்பு, கட்சிப் பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், உள்ளிட்டோர் பங்கேற்று முடிவெடுத்திருக்கின்றனர்.
திட்டப்படி கருணா குஷ்பு தலைமையில் மனிதச்சங்கிலி தொடங்கியதும் கேரளாவும் மத்திய அரசும் பணிந்து உடனடியாக கருணாவின் கோரிக்கையை ஏற்று அனைத்து சிக்கல்களும் சுமூக நிலைக்கு வரும் என கருணா ஆருடம் கூறியிருக்கிறார்.
ஈழ படுகொலையை வைத்து நாடகம் நடத்தி மத்திய அரசிடமிருந்து மகன். மகள். பேரப்பிள்ளைகளுக்கு எம்பி, மந்திரிப்பதவி வாங்க மனிதச்சங்கிலி, பதவி ராஜினாமா, உண்ணாவிரதம், என்று பல செத்தவீடுகள் செய்து தனது குடும்ப நலன் காத்த கருணாநிதி. இன்று மரண அடிவாங்கி நிலமட்டத்தில் இருக்கும் தருணத்தில் மலயாளிகள், தமிழர் பிரச்சினையை சமயோசிதமாக வஞ்சக நோக்கோடு கையில் எடுத்திருக்கிறார்.
இது ஒரு கழிவு கெட்ட சுயநல வெட்கம் கெட்ட நாடகம் என்பது ஊரறிந்தாலும். எவரும் எதிர்ப்பு காட்டமுடியாத சிக்கல் இருப்பதால் கருணாவுக்கு பெரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. திமுக வின் ஊழல் அடிமைகள் கைவசம் இருப்பதால் கருணாவுக்கு கணிசமான ஆள்ச்சேர்ப்பு சிரமமில்லாமல் இருக்கும்.
இருந்தும் கருணாவின் நாடகங்களால் ஒரு மண்ணும் நடந்துவிடப்போவதில்லை. கொள்ளையடித்த பெரும் பணமும் கணிசமான அடிமைகளும் துரோகி கருணாநிதியின் கையில் இருக்கும்வரை கருணாநிதி தனது எஞ்சிய அந்திம காலம்வரை இப்படியே நாடக மேடைகளை திறந்து சீரழித்து முடிவு எழுதுவார் என்பது தவிர்க்க முடியாதது.
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment