Wednesday, August 31, 2011

>கூத்தாடி குசும்பன்< அங் 6.

லோக்பால் மசோதா- குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலிடம் பிரதமர் விளக்கம்


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு குடியரசுத்தலைவரால் கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டபின். பேரறிவாளன்,
முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரை எட்டு வாரங்களுக்குத் தூக்கிலிடக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.


முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை நிறுத்தக் கோரி தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகப்பன், சத்யநாராயணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், தூக்குத் தண்டனையை 8 வாரங்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டிருக்கின்றனர்.

"விசாரணையை எடுத்துக்கொண்ட நீதிபதிகள் கருணை மனு தாமதமானதற்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டனர்".

அடுத்த நடவடிக்கையாக ராஜிவ் கொலை வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின்
தண்டனையை குறைக்க தமிழக சட்டசபையில் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

ராஜிவ் கொலை வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் தண்டனையை குறைக்கக்கோரும் தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா அவர்களும் சட்டசபையில் கொண்டுவந்தார்.

தூக்கு தண்டனை தமிழக மக்களை வருத்தப்பட வைப்பதாக உள்ளதாகவும், எனவேதமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதாக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இத்தீர்மானம் சட்டசபையில் ஏகமனதாக நிறைவேறியது. இத்தீர்மானம்
ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது..

மாநில அரசு அரசியல் அமைப்புச் சட்ட ஷரத்து 161ல் உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, நிச்சயம் இந்த தண்டனையை மாற்றுவதற்கு வாய்ப்பு
உள்ளது. என்று சட்ட வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த இரு நிகழ்வுகளும் மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. 21 வருடமாக சிறையில் கிட்டத்தட்ட ஆயுள் தண்டனையை அனுபவித்தவர்களுக்கு தூக்குத் தண்டனை என்பது இரண்டு தண்டனை கொடுப்பதற்குச் சமம். இது நியாயமற்றது என்று பொதுமக்கள் சட்டவல்லுனர்கள் கருத்து தெரிவித்தனர்.

சிறைக்கைதிகள் தமது கூற்றில் 26.4.2000-ல் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினோம். எனினும், எங்கள் மனு மீது பல ஆண்டுகளாக எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், உடனடியாக முடிவெடுக்கும்படி நினைவுபடுத்தி அடுத்தடுத்து கடிதம் எழுதினோம். எனினும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. என்று தங்கள் சக்திக்குட்பட்ட முயற்சி கண்டுகொள்ளப்படவில்லை என்பதை தெரிவித்தனர்.

இந்நிலையில் 11 ஆண்டுகளுக்குப் பின் இம்மாதம் 12-ம் தேதி எங்கள் கருணை மனுக்களை நிராகரித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். வரும் செப்டம்பர் 9-ம் தேதி நாங்கள் தூக்கிலிடப்பட உள்ளதாக எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் ஏற்கெனவே 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளோம். இது ஆயுள் தண்டனை காலத்தைவிட அதிகமாகும்.
மேலும், இந்த தண்டனைக் காலத்தில் பாதிக்கும் மேற்பட்ட ஆண்டுகள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு, வாடி வருகிறோம்.

இவ்வளவு நீண்ட காலம் நாங்கள் சிறையில் வாடிய பிறகும்கூட, எங்களுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது என்பது ஒரு குற்றத்துக்கு 2 தண்டனை அளிப்பதாகும். இவ்வாறு தண்டனை அளிப்பது சட்ட விரோதமானதாகும். மேலும், இது வாழ்வதற்குரிய சட்ட ரீதியிலான எங்களின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாகும்.

கருணை மனுக்களின் மீது உடனடியாக முடிவெடுக்கப்பட வேண்டும் என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கருணை மனுக்களின்
மீதான முடிவுகள் தாமதமானதால் ஏராளமான தூக்கு தண்டனை உத்தரவுகளை உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் ரத்து செய்துள்ளன.

இந்நிலையில், நாங்கள் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை அனுப்பிவிட்டு அதன் முடிவு தெரியாமல் 11 ஆண்டுகளுக்கும் மேலாகத் தவித்தோம்.

ஆகவே, 11 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் கருணை மனு மீது முடிவெடுக்காமல் காலதாமதம் செய்ததால், எங்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

#கூ கு: ஒன்றை கவனிக்கவேண்டும் தூக்கு தண்டனை தீர்க்கப்பட்ட கைதிகளுக்கு அவர்களது கருணைமனுவும் ஜனாதிபதியால் நிராகரிக்கப்படு தூக்குக்கான நாள் நிச்சயிக்கப்பட்ட பின்னும். சென்னை உயர்நீதிமன்றம் திரும்பவும் குறிப்பிட்ட மீழ் கோரிக்கையை ஏற்றிருக்கிறது, இடைக்கால தடையும் விதித்திருக்கிறது.
Senkodi
ஆட்சியாளர்கள் நம்பகத்தன்மையுடன் நடந்திருந்தால் இளங்குருத்து "செங்கொடியின்" உடல் தீயில் கருகி பெரும் சோகமாக முடிந்திருக்க இடமில்லாமல் போயிருக்கும்.

ஜனாதிபதியின் நிராகரிப்புடன் எல்லாம் முடிந்தது என்று விட்டிருந்தால் 9ம் திகதி மூன்று சவப்பெட்டிகள் சிறைச்சலையைவிட்டு சுடுகாடு சென்றிருக்கும்.

இதிலிருந்து குடியரசுத்தலைவரை உயர்நீதிமன்றம் நம்பவில்லை என்கிறது வெள்ளிடை மலையாக தெரிகிறது. இது நகைப்புக்குரியதா, வெட்கப்படவேண்டியதா என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

அத்துடன் மரணதண்டனையை சமூகம் எவ்வளவு வெறுக்கிறது என்பதற்கும் இது ஒரு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது.

தூக்குத்தண்டனை கைதிகளானாலும் சரி, கழுவில் ஏற்றி கொல்லும் தண்டனையானாலும் சரி, சரியான நீதியோடு புள்ளி தவறு நிகழாமல் காலதாமதமில்லாமல் மனித நேயத்தோடு தண்டனையை நிறைவேற்றுவதுதான் மரபு.

தூக்குத்தண்டனைக்கைதிகளிடம் உங்கள் கடைசி ஆசை என்ன என்று கேட்பதுகூட, மனிதநேயம் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதை வெளிக்காட்டும்
தன்மையாகவே கருதப்படுகிறது.

இந்தியா ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பீற்றிக்கொள்ளும் ஆட்சியாளர்கள் குறிப்பிட்ட கைதிகளை தீர்ப்பு வழங்கப்பட்டு 20 வருடங்கள்
சிறைக்கைதியாக வைத்திருக்கின்றனர். மீழ் விசாரணை, கருணை மனுவென்று, கைதிகள் சட்டத்துக்குட்பட்டு தமது தரப்பு நியாயத்தை எடுத்து காலம்
கடந்தாலும். அனைத்தும் நிராகரிக்கப்பட்டு தண்டனை உறுதி செய்யப்பட்டபின். 26.04.2000 ம் ஆண்டு குடியரசுத்தலைவருக்கு பரிவுடன் கருணை மனு அனுப்பியிருக்கின்றனர்.

பிரதமருக்கு கருணைமனு அனுப்பியிருந்தால் அதை கவனிப்பதற்கு பிரதமருக்கு செலவழிக்க காலம் இருக்காது. ஊழல் விவகாரங்களை கவனிக்கவே இந்திய பிரதமர்களுக்கு நேரம் போதாமல் இருப்பது மறுப்பதற்கில்லை,

திருவாளர் பரிசுத்தம் என்று சொல்லிக்கொண்டு போபர்ஸ் பீரங்கி ஊழலில் தொடங்கி ஒவ்வொரு பிரதமர்களும் ஊழலில் பிதாமகர்களாகவே இருந்து வருகின்றனர்.

ஆளும் அரசியல்வாதிகளின் அவலடசணங்களை அங்கீகரிப்பதற்கென்று குடியரசுத்தலைவர் என்று ஒரு பொம்மை பதவியை ஒருவருக்கு கொடுத்து
ஜனாதிபதியாக்கி வைத்திருக்கின்றனர். ஆழும் கட்சிக்கு முரணாக கருத்து தெரிவித்த ஜனாதிபதி என்று எவரும் இதுவரை காணப்படவில்லை

ஏதாவது ஒரு மானிலம் ஆட்சி கலைக்கப்பட்டால் அது ஜனாதிபதியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என்று சட்டப்படி சொல்லப்படுகிறது.
ஆனால் நாட்டை ஆளும் கட்சியின் தலைவர் என்ன நினைக்கிறாரோ அதுதான் ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இன்றைய பிரதமர் பரிசுத்தம் மண்மோஹன் சிங்கம் காங்கிரஸ் தலைவி இத்தாலிய அந்தோனியோ மொய்னோ, என்ன சொல்லுகிறாரோ சிரம்தாழ்த்தி
அதை நிறைவேற்றும் நன்றியுள்ள பிராணியாக இருக்கிறார்.

1948 அளவில் அமெரிக்காவில் அன்றைய பொருளாதாரம் படித்த அவர். ஸ்பெக்ரம் ஊழலில் ஸ்வாகா செய்யப்பட்ட பணத்தின் எண்ணிக்கைக்கு
எத்தனை சைபர் என்பதை அறிந்திருப்பாரோ, என அவரது ஆளுமை புல்லரிக்க வைக்கிறது,

கிட்டத்தட்ட மூன்று ஜனாதிபதிகளின் சொகுசான வாழ்க்கைக்காலத்தில், மூன்று தூக்குத்தண்டனை கைதிகளின் கருணை மனுவை பரிசீலிக்க இந்திய ஜனாதிபதிகளுக்கு நேரம் இருக்கவில்லை.

ஒருமனிதனுக்கு வாழ்வில் எத்தனையோ ஆசாபாசங்கள் இருக்கும். அவை அனைத்தையும் அஸ்தமிக்கும் வண்ணம் ஒரு மனிதனின் கருணை கோரிக்கையை அவனது அரைவாசி வாழ்க்கைக்காலம்,, காலம் தாழ்த்தி நிராகரிக்கப்பட்டதாக அறிவிப்பது ஆறறிவு கொண்ட மனித இனம்
செய்யக்கூடிய ஒரு செயல்தானா.

மதிப்பு மிக்க அன்னா ஹசாரே, அவர்கள் ஆளும் வர்க்கத்தினரின் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார். கிட்டத்தட்ட 10 நாட்களில் அவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படுவதாக பிரதமர் பணிந்துபோனது சில நாட்களின்முன் நடந்து முடிந்தது.

ஆளும் வர்க்கத்தின் சீர்கேடுகளை தட்டிக்கேட்க மக்கள் திரளும்போது ஆட்சியாளர்கள் துடிக்கும் துடிப்பும் அவசரமும் ஏன் கைதிகளின் நலனில்
காட்டமுடியவில்லை.

கருணை மனுவை கவனிப்பாரற்று போடப்பட்டதால் கைதிகள் மட்டுமல்லாமல் அவர்களின் பெற்றோர் உறவினர்களும், 20 வருடங்களாக தினமும் செத்துப் பிழைத்துக்கொண்டிருக்கின்றனர். மனிதத்தன்மையுடன் ஏன் இந்த ஆட்சியாளர்களால் மட்டும் இதை உணரமுடியவில்லை,

திட்டமிடல் இல்லாத இந்திய அரசியல் வண்டியில் எதை ஏற்றினாலும் எப்போ ஊர் போய் சேரும் என்பது தெரியாது. இதற்கு உதாரணம் இந்திய
குடியரசுத்தலைவருக்கு அனுப்பிய கருணை மனு மிகச்சிறந்த சான்று.

நன்றி மீண்டும் சந்திப்போம்.

Tuesday, August 30, 2011

முதலமைச்சரின் தீர்மானம் மக்களிடையே உணர்வுபூர்வமான நம்பிக்கையை ஊட்டுகிறது.

தமிழ்ச்சமூகம் பெரும் பதட்டநிலையில் எதிர்பார்த்த முருகன், சாந்தன், பேரறிவாளன், ஆகியோரின், அனீதியான தூக்கு தண்டனையை, இரத்து செய்யும்படி,

தமிழக மற்றும் உலக தமிழ் மக்களின் மனிதாபிமான கோரிக்கை தமிழ்நாடு அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையாரால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

முதல்வர் ஜெயலலிதா அவர்களின் அரசியல் வரலாற்றில் இது ஒரு உணர்வுபூர்வமான வரலாற்று சிறப்புமிக்க சம்பவமாக கருதலாம்.

2008 ம் ஆண்டிலிருந்து 2009 மே வரை பல்லாயிரக்கணக்கான மக்கள் மடிந்துபோவதற்கு (ஈழப்படுகொலை) நாடகமாடிய பச்சோந்தி கருணாநிதியின் செயற்பாட்டையும், இன்றய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் எடுத்திருக்கும் திடமான மனிதத்தன்மையான நிலைப்பாட்டையும் தமிழ் உலகம் ஒருபோதும் மறக்கமுடியாது.

ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையாரின் உணர்வுபூர்வமான அந்த முயற்சிக்கு முதற்கண் தமிழ் சமுதாயம் சிரந்தாழ்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறது.

முதல்வர் ஜெயலலிதா இன்று காலை சட்டசபை கூடியதும் இந்தத் தீர்மானத்தைத் தாக்கல் செய்தார். பின்னர் அவர் பேசுகையில், மூன்று பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படவுள்ளது தமிழக மக்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. மக்கள், அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் இந்தத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

எனவே மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தத் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு குடியரசுத் தலைவரை இந்த சபை கேட்டுக் கொள்கிறது என்று தெரிவித்தார்.

இதையடுத்து அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் ஒருமித்த குரலில் தீர்மானத்தை ஆதரித்து அதை நிறைவேற்றினர். வேறு வழியின்றி திமுக வும் சுயநலன் கருதி தீர்மானத்தில் இணைந்து கொண்டிருக்கிறது.

குடியரசுத் தலைவர் இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்டால், 3 பேரின் தூக்குத் தண்டனையும் இரத்தாகும் வாய்ப்புள்ளது.

முன்னதாக நேற்று சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, மூவரையும் காப்பாற்றும் அதிகாரம் தனக்கு இல்லை என்று கூறியிருந்தார். மேலும் குடியரசுத் தலைவர்தான் அவர்களைக் காப்பாற்ற முடியும் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில், தற்போது அதிரடியாக அவர் நிறைவேற்றியுள்ள தீர்மானம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூவரின் விடுதலைக்காக கடுமையாக போராடி வருவோருக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

இதேநேரம் ராஜிவ் கொலை வழக்கில், முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூவரையும் தூக்கிலிட 8 வாரங்கள் தடை விதித்து சென்னை ஐகோர்ட்டும் உத்தரவிட்டுள்ளது.

தண்டனைக்கைதிகளின் கருணைமனு, இந்தியாவின் முதல் பிரஜையான ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டு, தண்டனை உறுதிப்படுத்தப்பட்டு தூக்குத்தண்டனைக்கான நாள் குறிக்கப்பட்டிருந்தும், சென்னை ஹைக்கோர்ட் குற்றஞ்சாட்டப்பட்ட மரணதண்டனை கைதிகளை 8 வாரங்கள் காலதாமதப்படுத்தி உத்தரவிட்டதிலிருந்து, ஜனாதிபதியின் கட்டளை மீள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளக்கூடியது ஒன்று என்பதை சென்னை நீதிமன்றத்தின் செயல் உணர்த்துகிறது.

இந்த நேரத்தில் பலர் பலவிதமான வியாக்கிஞானங்களை பேசினாலும் தமிழக சட்டமன்றத்தின் தீர்மானம் ஒரு பாதிப்பை நிச்சியம் இந்திய மத்திய அரசுக்கு உண்டுபண்ணும் என்பதில் சந்தேகமில்லை. முயற்சி திருவினையாக்கும் என்பது தவிர வேறு ஒன்றும் நமது கையில் கிடையாது.

இந்தியாவின் முதல்த்தரமான் கிரிமினல் வழக்கறிஞர், ராம் ஜெத்மலானி,யின் வாதப்படி முன்பு ஒரு வழக்கில் இரண்டு ஆண்டுகள் தாமதித்து கருணை மனு நிராகரிக்கப்பட்டதால், தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.என்று குறிப்பிட்டு வாதாடியிருக்கிறார். சட்டம் அப்படி இருக்கும் என்றால் இந்த வழக்குக்கும் அவை பொருத்தமானது என்றே கொள்ளலாம்.

அரசியல்க்காரணங்களுக்காகவும் காங்கிரஸ் தலைமையின் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாகவும், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களை நெருக்கடிக்குள்ளாக்கும் தந்தரத்தோடும் தூக்குத்தண்டனை தூசுதட்டி எடுக்கப்பட்டிருக்கிறது.

இன்னும் ஒரு காரணமாக தமிழர்கள் என்ற இளக்காரமும் டில்லிக்கு ஒரு மைனஸ்ஸாக இருந்தே வந்திருக்கிறது. இந்த இழக்காரத்தை உண்டுபண்ணியவர்கள் கருணாநிதிபோன்ற முதுகெலும்பற்ற அரசியல் வாதிகள் என்பது வருத்தத்திற்குரியது,

ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியை தாங்கியே திராவிடக்கட்சிகள் ஆட்சியமைக்கும் நிலை இருந்தும் வந்திருக்கிறது. இதன்காரணமாக காங்கிரஸின் பிம்பம் தமிழ்நாட்டில் தொடர வழிவகுத்திருக்கிறது.

ஈழப்பிரச்சினையின்பின் செந்தமிழன் சீமானின் வரவால் காங்கிரஸ் காணாமல் போயிருந்தாலும், கருணாநிதி போன்ற கபோதிகள் காங்கிரஸுக்கு கால் கழுவிவிடுவதை நிறுத்தவில்லை.

திமுக தான் போக வழியைக்காணவில்லை ,மூஞ்சூறு விளக்குமாத்தை காவியகணக்காக காங்கிரஸுக்கு இன்னும் தமிழ்நாட்டில் ஆதரவு இருப்பதாக காட்டி தான் தப்பிக்க தந்தர நாடகம் ஆடுவதை வரப்போகும் உள்ளூராட்சி தேர்தலில் உணரப்படுவார்கள்.

செந்தமிழன் சீமான் அவர்களின் சீற்றமும் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றுவதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.

காலப்போக்கில் தமிழர் நலன்கள் புறந்தள்ளப்பட்டு திராவிடக்கட்சிகள் எழுந்தமானத்தில் நடந்துகொண்டால் தவிர்க்கமுடியாமல் ஆட்சிப்பொறுப்பு சீமானிடம் செல்வதற்கான அனைத்து தகுதிகளும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு இருக்கிறது. இது உணர்சிவசமான கருத்து அல்ல.போகப்போக தமிழ்நாடு நன்கு உணர்ந்துகொள்ளும்.

எது நடந்திருந்தாலும் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் தனது திடமான ஒரு முடிவை துணிச்சலுடன் எடுத்திருக்கிரார் என்பது தமிழர்களிடையே அதிமுக அரசுக்கு இன்னும் அதிக வலுச்சேர்ந்திருக்கிறது.

இந்த முடிவை இரண்டுதினங்களுக்குமுன் முதல்வர் அவர்கள் எடுத்திருப்பாராக இருந்தால், செந்தமிழ்ச்செல்வி வீரமங்கை செங்கொடியின், இழப்பை தவிர்த்திருக்க முடியும் என்ற நெருடல் மிகுந்த வேதனையை அளிக்கிறது. வாழவேண்டிய அந்த துளிர் வீணாக தீயில் கருகிவிட்டது. இனிமேலும் எவரும் இப்படி உணர்ச்சி வசப்பட்டு நடந்துகொள்ளக்கூடாது என்பதே எல்லோரினதும் அவாவாகும்.

ஆட்சிப்பொறுப்பேற்றது முதல் தமிழக முதல்வர் ஈழத்தமிழர்கள் நலனில் துணிச்சலுடன் காட்டும் அக்கறை தமிழினத்திற்கு நம்பிக்கையூட்டும்வண்ணம் இருக்கிறது. நெருக்கடியான பல சந்தற்பங்களிலும் ஈழமக்கள் பட்ட துன்பத்தை துடைக்க துணிவுடன் போராடும் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மா அவர்களுக்கு மீண்டும் தமிழர்கள் சார்பாக நன்றிகள்.

கனகதரன்,

நன்றி ஈழதேசம் இணையம்.

Monday, August 29, 2011

செந்தமிழ் குருத்து "செங்கொடிக்கு", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .



ஊர்கூடி தேர் இழுத்து உலகமே அதிரும்வண்ணம்
போராடி சலிப்புக்கொண்ட பைந்தமிழ் நங்கை நல்லாள்
நேர்கொண்ட துயரம் மேவ நிமிர்ந்தனள் உறவு காக்க
ஓர் நொடி சிந்திக்காமல் உதறினாள் உகந்த வாழ்வை
பார் புகழ் தமிழர் நெஞ்சம் பற்றியே எரிந்ததுகாண்.
கோவிலாள் "செங்கொடி" தன் கொள்கையால் தனலாயானாள்.


பாரதம் மட்டுமல்ல பார் வெட்கும் சேதியாச்சு
வாழ்வொரு சில நாட்காலம் வசந்தமாம் இளமை நாளில்
சீற்றமும் சினமும் கொண்டு "செங்கொடி" தீயாய் ஆனாள்
நேற்றவள் பிறந்தபோது நீடிய சிறையில் மாண்ட
மூத்தவர் மூவர் மீழ முடிந்தது குருத்தின் மூச்சு
ஆண்டொரு இருபத்தொன்று ஆறுமோ எவரின் நெஞ்சம்.

செங்கொடி பிறந்தபோது சிறையினில் வாழ்வை கொண்டு
துஞ்சிய மூவர் வாழ்வு துலங்கிட கனவு கண்டாள்
வஞ்சகர் சூழ்ந்த நாட்டில் வழி தேடி நல்லாள் இன்று
பிஞ்சிலே தீயில் மாண்டு பெரும் சோகம் சுமந்தோம் நாங்கள்
செங்கொடி மாண்ட செய்தி திறக்குமோ மனிதநேயம்-முத்து
குமாரனின் முடிவைபோல மறையுமோ மண்ணுள் மண்ணாய்.

கற்றவள் செங்கொடிக்கு கண்ணீர்தான் முடியும் அம்மா-உன்
பெற்றவர் வயிற்றெரிவு புதியதோர் வழியைக்காட்டும்
மற்றவர் எவராய் ஆயின் வேண்டாமே இந்த வேகம்
நித்தியமாக நீங்கள் போராட மறுப்பே இல்லை
துச்சமாய் உயிரை எண்ணி துறந்திட வேண்டாம் காணீர்
நிச்சியம் ஒருநாள் உங்கள் நினைவுகள் நனவாய் ஆகும்.

பத்தினி உன்னை நாங்கள் பாரத தாயாய் கண்டோம்
எத்தனை காலம் சென்றும் இருப்பாய் நீ தமிழர் நெஞ்சில்
நிச்சியம் இனிமேல் யாரும் திக்கிரையாக வேண்டாம்
வற்றாத வீரத்தோடு வாழ்வுடன் போராடுவோம்
உணர்வுற்றவர் நீங்கள் மாண்டால் உலகினில் மீதி என்ன
பற்றுடன் உந்தன் பாதம் பணிகின்றோம் அம்மா தாயே.

செங்கொடி என்றுனக்கு சீரிய பெயரையிட்டு-பெற்றோர்
நெஞ்சினில் உணர்வைக்கூட்டி நேர்மையாய் வளர வைத்தார்
தங்கை நீ துடிப்பு கூடி சாவினை அணைத்தாய் தப்பு
நெஞ்செல்லாம் நெருப்பாயாகி நிலை தடுமாறிவிட்டோம்
அன்னையும் நீ, தங்கையும் நீ, ஆலயம் வாழ் அம்மனும் நீ,
கோவிலாய் ஆகிவிட்டாய் கும்பிட்டோம் பணிந்தோம் அம்மா,

ஊர்க்குருவி.
ஈழதேசம் இணையம்,
http://www.eeladhesam.com/images/eeladhesam/senkodi%201.jpg

Friday, August 26, 2011

>கூத்தாடி குசும்பன்< அங் 5.

சித்திரை புத்தாண்டு பற்றி கருணாநிதி புலம்பல்::,
,
er

"நம்மைப் பொறுத்தவரை, தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு துவங்கும் நாள்' என்று, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அவரது அறிக்கை: தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று திமுக கொண்டுவந்த தினத்தை மாற்றி, மீண்டும் சித்திரை மாதம் முதல் தேதிக்கு மாற்றிட, சட்டசபையில் மசோதா ஒன்றை அமைச்சர் மூலம் தாக்கல் செய்து, குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. .

அவர்கள் எப்படி வேண்டுமானாலும் செய்து விட்டு போகட்டும். நம்மைப் பொறுத்தவரை, தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு துவங்கும் நாள். தமிழர்களாகப் பிறந்த மக்களுக்கு, திராவிடச் சமுதாயத்தை தனது இனமென தலை நிமிர்ந்து கூறுகிற மக்களுக்கு, ஒரு இனிய விழா என்பதை மனதில் கொண்டு, அந்நாளை உவகை பொங்கிடக் கொண்டாடி மகிழ்வோம். இவ்வாறு தன் இயலாமையை வெளிப்படுத்தி கருணாநிதி கூறியுள்ளார்.


கூ கு:>
திராவிடம் என்பது பல மொழிகள் கொண்ட ஒரு இனக்கூட்டுக்குழுவின் குறியீடு, தெலுங்கு. கன்னடம். மலயாளம். தமிழ் எல்லாம் சேர்ந்தத்துதான் திராவிடம் என சொல்லக்கேள்வி.

தனி ஒரு மொழி என்பது ஒரு இனத்தின் பண்பாட்டுக்கூறுகளை அந்த இனத்திற்கு புரியவைப்பது. இது தமிழன் பற்றிய பண்பாட்டு பிரச்சினை. இதுக்குள்ள போய் திராவிடம் என்று ஒங்க குடும்ப வில்லங்கத்த சொருவிறீங்களே. தாத்தா. சித்திரை புத்தாண்டை தமிழர் புத்தாண்டு என்றுதானே சொல்லுறாங்க,

ஒங்களப்பொறுத்தவரை தை முதல் நாளை தீபாவளி நாளா வேணுமாச்சும் கொண்டாடிக்குங்க. யார் வாணாங்கிறா. ஆனால் மக்கள கொளப்பாதீங்க.

தமிழர்கள் உலகம் முழுவதும் தையை பொங்கல்த்திருநாளாத்தான் கொண்டாடுறாய்ங்க, சித்திரை முதல் நாளைத்தான் தமிழர்கள் புது வருடப்பிறப்பாக் கொண்டாடிக்கொண்டிருக்கிறாங்க.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சித்தர்களும் யோகிக்ளும் அட்சரசுத்தமா வனவியலை நுணுக்கமா கணிச்சிருக்கிறாங்கங்க, தமிழர் காலக் கணிப்பு முறையின்படியும் புவியியல் முறைகளின்படியும், ஒரு ஆண்டுக்குரிய 12 மாதங்களில் சித்திரை தான் முதலாவது மாதமாகும். இது சூரியனின் நகர்வை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுகிறது. சூரியன், மேஷ ராசிக்குள் நுழைவதிலிருந்து, அந்த ராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதம் ஆகும்.

திருவள்ளுவர் சாலச்சிறந்த மகான் அதில் வேற்றுக்கருத்து இல்லீங்க, ஆனா திருவள்ளுவருக்கு புத்தாண்டை கொடுத்திடா. இன்னுமொருத்தரு ஒளவையார் பொறந்ததுதான் புத்தாண்டு ன்னு ஒங்களப்போல வில்லங்கம் பண்ணவும் சான்ஸ் இருக்குங்க, இன்னும் ஒருத்தரு கம்பருக்கும் காவடி எடுப்பாரு.

ஜேசுவை குறிச்சி ஆங்கில புதுவருடம் வந்திச்சு அது அவங்களோட பிரச்சினை. அத வுட்டுட்டு சுயமா சிந்தியுங்கங்க,

அறிவியல் விஞ்ஞானத்தில் முன்னணியிலுள்ள அமெரிக்க நாசாவின் கணிப்பும், சித்தர்கள் வழிவந்த பஞ்சாங்களும் இதுவரை முரண்பட்ல்லீங்களே. ஒங்களுக்கு ஏனுங்க வீண் வெட்டிவேலை.

சீனாக்காரன்கூட ஜனவரி மாதத்தில் புத்தாண்டா கொண்டாடுவது கெடையாதுங்க. சீனாக்காரனோட பூகோள அமைப்பின்படி பிப்ருவரி மாதத்தில் புத்தாண்டு பிறக்கிறது, சீனர்கள் சந்திரனை கணக்கிட்டு பல ஆயிரம் ஆண்டுகளாக புத்தாண்டு கொண்டாடுகிறார்கள்.

சேதுகால்வாய் திட்டத்தின்போது ராமர் எந்தக்கல்லூரியில் இஞ்சினீயரிங் படிச்சாரு என்கிறீங்க, யாரையாச்சும் கலாய்க்கணுமின்னா ராமாயணத்தையும் பாரதத்தையும் இயுக்கறீங்க, நீங்க எம்ம்புட்டு படிட்டீங்கன்னா, ஆறாம்பாப்பு எங்கிறாங்க. என்னையா இது.

புருசோத்மரே புரட்டுக்காரியின் உருட்டு முழியிலே உலகத்தை காண்பவரே ன்னு 1950ல் போட்டியில்லாத அந்தக்காலத்து சினிமாவில் மனோகராவுக்கு வசனம் எழுதினால். வானவியல் பத்தி புரியுமுங்களா? we

இதுவரைக்கும் மூணு நாலு கலியாணம் கட்டி அவிங்கள கோடிசுவரர்களாக்கியிருக்கீங்க,, காலையில் கோவாலபுரம், ராத்திரி சிஐடி நகரு, ன்னு வலம்வந்தது தவிர ஒரு வெளிநாட்டை எட்டிப்பாத்திருக்கீங்களா?

நீங்க ஒங்க பாண்டித்தியத்தை காம்பிக்க சித்திரையை தையாக்குறீங்க தையை கார்த்திகை ங்கிறீங்க. நாடு விளங்குமாய்யா,

இப்போ நீங்க மக்களால் விரட்டப்பட்டிருக்கீங்க. ஒங்க செயல்ப்பாடு மொத்தமும் தப்புன்னு தானே மக்கள் ஓட ஓட வெரட்டியிருக்காங்க.

அப்போ நீங்க செஞ்ச அக்கப்போர் அனைத்தையும் திருத்தித்தானே ஆவணும். அந்த அம்மா என்னசெய்வாங்க கொஞ்சம் கொஞ்சமாதானே உங்க தில்லுமுல்லுகளை கண்டுபிடிச்சு களையணும், அதுக்குத்தானே மக்கள் அவங்களுக்கு ஆணை குடுத்திருக்காங்க. அதவுட்டு ஒங்க தில்லாலங்கடியை ஒப்புக்கொண்டு தொடர்ந்தா அந்த அம்மாவ மக்கள் நம்புவாங்களா. அது நாயமா சொல்லுங்க தாத்தா?

நீங்களே சொல்லுறீங்க மக்கள் எனக்கு விடைகொடுத்து ஓய்வாயிருக்க சொல்ல்றாங்கன்னு, அப்பொறம் தினமும் ஏன்தான் ஓலம்பாடி பொலம்புறீங்க?

சித்திரை முதல் நாளைத்தான் புது வருஷமா உலகத்தமிழர்கள் கொண்டாடுகின்றனர். அதில ஏந்தான் மூக்கை நுழைக்கிறீங்க. பழம்பெரும் தொல்காப்பியத்தையே திருத்திறேன் பேர்வளி என்று 500 பிழைவிட்ட வீணன் தானே நீங்க.

ஒருத்தியை மனைவிங்கிறீங்க இன்னொருத்திய துணைவிங்கிறீங்க இன்னொருத்திய பொண்டாட்டி எங்கிறீங்க, ஒண்ணுமே புரியல்லீங்களே.

முத்துவை மகன் எங்கிறீங்க, அழகிரியையும் மகன் எங்கிறீங்க, ஸ்ராலின் தமிழரசுவையும் மகன்கள், என்னுதான் சொத்துசேர்த்து கொடுத்திருக்கிறீங்க,
செல்வியும் மகள், கனிமொழியும் மகள். ஆனா அவங்கள பெத்த பத்மாவதி பொண்டாட்டி, தயாளு, மனைவி. ராசாத்தி துணைவி. எவ்வளவு பெரிய விகடகவி நீங்க தாத்தா,

இலங்கையில் உள்ள தமிழன் சித்திரையை புதுவருஷம் என்கிறான், மலேசியாவில் உள்ள தமிழனும் சித்திரை புதுவருஷம் என்றுதான் சொல்றான், மொறீசியஸ், தென்னாபிரிக்கா ஐரோப்பா கனடா அமெரிக்கா தமிழனும் சித்திரைதான் புதுவருஷம் என்று கொண்டாடுகிறான், ஒங்களுக்கு மட்டும் ஏன் இந்த விதண்டாவாதம்.

உதாரணத்துக்கு வடக்கை தெற்கென்று கூறமுடியிங்களா? முரணாத்தெரியல்லீங்களா? நீங்களும் ராமதாசு மாமாவும், அடங்கமறுப்போம் தெருமாவும், மக்கள மடையன்கள் என்று முடிவு கட்டிட்டீங்களா

நேத்திக்கு ஒங்க கைத்தடி டி ஆர் பாலு என்ற பச்சோந்தி, இனவெறி படுகொலைகளை நடத்திய ராஜபக்சேவை சர்வதேச கோர்ட்டில் நிறுத்தி கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று பார்லிமேன்றில் கூவினார்,

ஒங்களுக்கும் ஒங்க கச்சிக்கும் மான ரோசம் வெக்கமில்லையா.

ராஜபக்க்ஷவை கோபப்படுத்தவேண்டாம் என்று காவடி எடுத்த துரோகி நீங்கள் என்பதை வசதியா மறந்திட்டீங்களா. நரம்பில்லாத நாக்கு என்பதால் எதுவேணுமென்றாலும் பேசிடுவீங்களா?

ராஜபக்க்ஷ இனவெறி படுகொலை குற்றவாளி. நம் 3, என்றால். ஒங்க தோழி சோனியாவும் நீங்களும்தான் 1ம் 2ம் கொலைகாரர். இதை நான் சொல்லங்க உலகம் முழுவதும் சொல்லும் குற்றஞ்சாட்டுது,

ஈழத்தமிழன் எவன் ஒருத்தனாவது ஒங்கள நம்புறான் என்னு நினைக்கிறீங்களா. எங்க தேசத்தின் அன்னை பார்வதி அம்மாவை வைத்தியம் பார்க்காமல் விரட்டிய பழிதானே ஐயா இப்போ ஒங்க மகள் திஹாரின் கம்பி எண்ண விட்டுட்டு பொலம்புறீங்க. இதோட முடியாதுங்க.மனைவி, துணைவி, மவன் அழகிரி அவனோட குடும்பம் எல்லாம் கழி திங்கத்தான் போவுது.

ஒங்கள மட்டும் உள்ள போடவேணாமின்னு அம்மாக்கிட்டயில்ல ஆண்டவனிடம் கேட்டிருக்கிறோம், ஏன்னா நீ அழுந்தி அழுது அழுது சாவணும்.

ஈழத்தில் நடந்த இறுதிக் கட்ட போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளைக் கூட இலங்கை அரசு தரவில்லை. முகாம்களில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் அடைக்கப்பட்டனர். இன்னும் கூட அவர்களுக்கு விடிவு பிறக்கவில்லை. இதை ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையே சொல்கிறது. ன்னு பாலுப்பயல் பொலம்மியிருக்காரு.

வணங்காமண் கப்பலில் வந்த மருந்து குழந்தைகளுக்கான பால்மா இவறை ஈழத்தமிழனுக்கு சென்றடையாமல் தடுத்தது யாரு தாத்தா, நீதானே,

ராமேஸ்வரம் வழியால் உணர்வுள்ள சில தமிழகத்தமிழனால் அனுப்பப்பட்ட உயிர்காக்கும் இரத்த உறைகளை ஜபார் சேட் என்ற கிரிமினல் பொலிஸை வைச்சு பறிச்சு கடலில் வீசியது யாரோட அனுமதியோட, அப்பொறம் இப்ப என்ன ஞாணொதயம் பொறக்குது,

முகாம்களில் அடைக்கப்பட்ட தமிழர்கள் சொல்லொணா துயரத்திற்கும், சித்திரவதைக்கும் உள்ளானார்கள். பலர் படுகொலை செய்யப்பட்டனர். பெண்கள் கற்பழிப்புக்குள்ளானார்கள்.ன்னு பச்சொந்தி பாலுகிட்ட எழுதி குடுத்திருக்குறியே, ஒன்னோட மகள் கனி, இதே பச்சொந்தி டிஆர் பாலு, தெருமா எல்லோரும் ராஜபக்க்ஷவீட்டில தின்னுபுட்டு. ஈழத்தமிழர்கள் எல்லாம் முகாமில் சௌகரியமா இருக்கிறதா நீ முதலமைச்சரா இருக்கிறப்போ குடுத்த ஸ்ரேற்மென்ரை மறந்துட்டீங்களா.




இலங்கையில் தமிழர்களைப் படுகொலை செய்த கொலைகாரன் ராஜபக்சேவுக்கு சர்வதேச கோர்ட்டில் கடும் தண்டனை வாங்கித் தர வேண்டும். தமிழர்கள் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண இலங்கையை இந்தியா கடுமையாக கேட்டு் கொள்ள வேண்டும் என்று கம்பியெண்ணும் கனிமொழியை மனதில்வைத்து காங்கிரஸை சீண்டுவதற்காக உள் நோக்கத்தோடு நீங்க எயுதிக்கொடுத்ததை கழுத்து நரம்பு புடைக்க கூவி ஒக்காந்தாரு பச்சோந்தி டிஆர் பாலு.

ராஜபக்க்ஷவுடன் தாத்தா நிங்களும்தான் கொலைக்குற்றவாளியா கோர்ட்டுக்கு போவணும், எங்களைப்பொறுத்தவரை கருணாநிதி. மற்றும் இந்திய மத்திய அரசில் பலர் கொலைக்குற்றவாளிகள் என்றே முடிவெடுத்திருக்கிறோம். வழக்கு தொடங்கும்போது யார் யார் கொலைகாரர் என்பது தெரியவரும். அதற்கிடையில் கடவுள் பழிதீர்த்துவிடுவார்போல் தெரிகிறது,

எப்படி நடந்தாலும் எங்கள் கண்ணுக்கு முன்னே கருமாதி ஆனால் சந்தோசம்தான்.

வரட்டுங்களா?
மீண்டும் சந்திப்போம்.

Wednesday, August 24, 2011

டில்லி பயணம் தேசியக்கூட்டமைப்புக்கு அங்கீகாரத்தை வழங்குமா?

மக்கள் புரட்சி ஒன்றின் ஆரம்பம், ஊழலுக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் வாயிலாக, இந்திய அரசியலை மையம் கொண்டு தாக்கி வருவதாக தெரிகிறது.

இந்தியாவுக்குள் புரையோடிப்போய் கிடக்கும் ஊழல் பூதத்திற்கு எதிராக கிளம்பியிருக்கும் மக்கள் கிளர்ச்சி, அன்னா ஹசாரே என்ற காந்தியவாதியின் தலைமையில், பெருநெருப்பாக பற்றி எரியத்தொடங்கியிருக்கிறது.

காலாகாலமாக இந்தியாவில் ஊறிப்போயிருந்த ஊழலுக்கு எதிரான போராட்டம், இவ்வளவு நெருக்கடியை இந்திய அரசுக்கு ஏற்படுத்தும் என்று காங்கிரசு அரசும் அதன் கூட்டாளிகளும் நினைத்திருக்கவில்லை.

நாட்டுக்குள் உருவான இந்த ஜனநாயக கிளர்ச்சி போராட்டம். இந்திய ஆட்சியாளர்களால் இலகுவில் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும் இத்தருணத்தில்,ஈழத்தமிழர் பற்றிய உணர்வான கொதிநிலையும் தமிழ்நாட்டிலிருந்து அரசியல் ரீதியாகவும் அமைப்புகள் ரீதியாகவும் எழுந்து இந்திய மத்திய அரசுக்கு மிகப்பெரிய சங்கடத்தை தோற்றுவித்திருக்கிறது.

கொலைக்குற்றவாளி ராஜபக்க்ஷவையும் மற்றும் கொலை கூட்டாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்கவேண்டும் என்று, தமிழ்நாடு முதலமைச்சரும், முதலமைச்சர் அவர்களை தலைமையாகக் கொண்ட தமிழக அனைத்து தமிழ்மக்களும், பிற பல அமைப்புக்களும் புள்ளி வேறுபாடு இல்லாமல் ராஜபக்க்ஷவை எதிர்த்து இறுக்கமாக நிற்கின்றன.

அத்துடன் ராஜீவ் கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியமூவரின் தூக்குத்தண்டனைக்கான கருணை மனுவும் காங்கிரஸ் அரசியல்வாதிகளால் திட்டமிட்டவகையில் நிராகரிக்கப்பட்டிருக்கும் எதிர்வினை. தமிழக மக்களிடையே இனரீதியான கசப்பை அரசியல் ரீதியாகவும் மனிதாபிமான கோரிக்கைகள் மூலமாகவும், இந்திய காங்கிரஸ் அரசுக்கு உண்டாக்கக்கூடும்.

இந்திய அரசியல் மட்டத்தில் உருவாகும் பல்வேறுபட்ட, ஒவ்வொரு சம்பவமும் ஒன்றோடு ஒன்று கைகோர்த்து இந்திய அரசியலில் ஒரு அசாதாரண நிலையை தோற்றுவிப்பதற்கான சூழ்நிலையை வெளிப்படுத்தும் என்றே தெரிகிறது.

இந் நெருக்கடிகளிலிருந்து இலேசுவில் தப்பித்து வெளிவரமுடியாத இந்திய அரசு, பிரச்சினையை திசை திருப்பி தப்பிக்கும் நோக்கத்தோடு அடுத்த காய் நகர்த்தலுக்கு அச்சாரம் போட்டிருக்கிறது. இது வழமையான தந்தரம் போன்றதல்லாமல் சற்று கடினமானதாகவே இந்திய அரசு காலப்போக்கில் உணரக்கூடும்.

காந்தியவாதி என்று சொல்லப்படும் அன்னா ஹசாரே, தலைமையில் உருவெடுத்திருக்கும் போராட்டம். 'லோக்பால்' மசோதா என்கிற தளத்திலிருந்து விரிவடைந்து ஜன் லோக்பால், என்கிற தளத்திற்கு பிருமாண்டமாக உருவெடுத்திருக்கிறது. இந்தக்கோரிக்கைக்கு மக்கள் மத்தியில் நிறைய வரவேற்பும் இருக்கிறது

இந்த மசோதா அமூலுக்கு வருமாகவிருந்தால், இந்தியாவின் உச்ச பதவிவகிக்கும் நாட்டின் பிரதமர், வரை பாகுபாடில்லாமல் விசாரணைக்குட்படுத்தும் வகையில் நிலமை உருவாகும் சாத்தியம் உள்ளது. என்று நம்பப்படுகிறது.

ஜன் லோக்பால் மசோதா மூலம்,100% ஊழல்வாதிகளை களையெடுக்க முடியாவிட்டாலும், உயர்மட்ட அரசியல் முதலாளிகளை தட்டிக்கேட்கக்கூடிய தளம் ஒன்று சட்டரீதியாக உருவாகும் சாத்தியம் உண்டாகும் என்று, போராட்டத்திற்கான ஏற்பாட்டாளர்கள் நம்புகின்றனர். எனவே இது ஒரு நல்ல ஆரம்பம் என்பதுதான் அதிகமான மக்களின் கருத்தாகவும் காணப்படுகிறது.

இந்தநிலையில் பாரதநாட்டின் பரிசுத்தம் என்று கூறப்படும் பிரதமர் மன்மோஹன் சிங், வழமைபோல சிரித்து மழுங்கடிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். தடையில்லாமல் அன்னா ஹசாரேயின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றும், கொஞ்சம் காலதாமதமாகும் என்றும் காய் வெட்டி தப்பிக்க முனைந்தாலும் கிளர்ச்சிக்காரர்கள் போராட்டத்திலிருந்து பின்வாங்குவதாகத் தெரியவில்லை.

அரசதரப்பிலிருந்து போராட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்தாலும், வயோதிபரான அன்னா ஹசாரே, நீண்டநாட்கள் உண்ணாவிரதத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல் போராட்டம் தொய்வுறும் சந்தற்பத்தில், சம்பிரதாயத்திற்கு சில வாக்குறுதிகளை கொடுத்து போராட்டத்தை பிசுபிசுக்க செய்வதே மத்திய காங்கிரசு அரசின் கபடமாக இருக்கும்.

அதே நேரத்தில் இலங்கை தமிழர் படுகொலை விசாரணை நடத்தப்படவேண்டுமென்றும், தமிழ்நாட்டின் ஆறரைகோடி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மத்திய அரசு கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டுமென்றும், தனது அரசு இருக்கும்போது ஈழத்தமிழர்கள் பிரச்சினையை தான் கைவிடப்போவதில்லையென்றும் தமிழக முதல்வர், இடைவிடாது மிக இறுக்கமாக குரல்கொடுத்து வருகிறார்.

அழுக்கன் கருணாநிதியின் திமுகவும் தனது எதிர்காலத்தை கருத்தில்க்கொண்டு, தமிழக அரசின் அதே கருத்தை மத்திய அரசிடம் தமது பங்குக்கு தனியாக வைத்திருக்கிறது. கருணாநிதியிடம் நிச்சியம் உள்நோக்கம் இருக்கும் என்று நம்பினாலும், ஒப்புக்கேனும் இலங்கை தமிழர் சார்பாக சாதகமான கருத்தை வெளியிடாவிட்டால், திமுக சிதைவடைந்திருக்கும் இன்றைய நிலையில் தப்பிப்பிழைப்பதற்கு வேறு வழியில்லை என்பதையும் கருணா நன்கு உணர்ந்து காய் நகர்த்துகிறார்.

திமுகவும் சரி, தெருமாவின் வி சி. மற்றும் ராமதசுவின் பாமக. போன்ற கட்சிகளுக்கும் வேறு பிடிகொம்பு எதுவும் இல்லாமல் நிர்வாணமாகவே நிற்கின்றன, ஈழப்பிரச்சினையையும் புறந்தள்ளினால் அரசியல் பாலைவனத்தில் மூழ்கி அடிச்சுவடும் இல்லாமல் போய்விடுவோம், என்பதை அவர்கள் உணர்ந்து நாளொருவண்ணம் கூவிக்கொண்டிருக்கின்றனர்.

ஈழப்பிரச்சினையை உதாசீனம் செய்து அரசியல் நடத்தினால், மக்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டுவிடுவோம் என்பதை காங்கிரசு தவிர்ந்த ஏனைய கட்சிகள் நன்கு உணர்ந்தே இருக்கின்றன. இந்த நிலையில் காங்கிரஸ் தனது மாற்றுத்திட்டமாக இலங்கையில் உள்ள தமிழ்க்கட்சிகளை ஒன்றிணைத்து ஒற்றுமை பற்றி அறியும் ஒப்பரேசனுக்கு அழைப்பு விடுத்து ஆழம் பார்க்க முயற்சிக்கிறது. முடிவு என்ன என்பதை பொறுத்துத்தான் பார்க்கவேண்டும்.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மீண்டும் இந்திய நேரடித் தலையீடுகள் ஏற்படத் தொடங்கி உள்ளன என்றும் இதன் முதற்கட்டமாகத் தீர்வு தொடர்பில் பேசுவதற்கு வருமாறு இலங்கையில் உள்ள தமிழ்க் கட்சிகளுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது என்றும், இலங்கை அரசுடன் ஒரு தீர்வை? எட்டுவதற்கு முன்பாக தமிழ்க் கட்சிகளிடம் ஒருங்கிணைந்த கருத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னையின் அரசியல் வட்டாரங்களை மேற்கோள் காட்டி சிலநாட்களுக்கு முன்பு ஒரு செய்தி வந்திருந்தது.

தமிழக அரசின் நெருக்கடியின் அழுத்தத்தை குறைப்பதற்கு, இந்திய மத்திய அரசு தொடங்கியிருக்கும் ஒரு நாடகம் என்றே இதை நம்பினாலும், இலங்கை தமிழர்களின் நம்பிக்கைக்குரிய தமிழர் தேசியக்கூட்டமைப்பின் மதி நுட்பத்தைப்பொறுத்தே இந்திய அரசின் கபடத்தை அம்பலப்படுத்தமுடியும்.

தமிழ்நாடு அரசின் இலங்கை தமிழர் ஆதரவை சரியாகப்பயன்படுத்தி இந்திய அரசின் ஏமாற்று பொறியில் விழுந்து காலத்தை இழுத்தடிக்க துணைபோகாமல், வெட்டொண்டு துண்டு இரண்டாக பேச்சை முடிக்கவேண்டிய பொறுப்பு தேசியக்கூட்டமைப்புக்கு இருக்கிறது.

ஆரம்பமாக தமிழ்க் கட்சிகளுக்கு இடையில் தீர்வு தொடர்பான கருத்தொருமைப்பாட்டை ஏற்படுத்த புதுடில்லி விரும்புகிறது. அதற்காகவே தமிழ்க் கட்சிகள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் "தமிழ்க் கட்சிகள் அனைத்தையும் வருமாறு இந்தியா அழைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தமிழக நாடாளுமன்ற உறுப்பினரான சுதர்சன நாச்சியப்பன் இது தொடர்பிலான அழைப்பை அனுப்பி உள்ளார்'' என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சுதர்சன நாச்சியப்பன் காங்கிரஸ் கட்சியின் தமிழ்மானில அளவில் உள்ள ஒரு சிற்றூழியர், காங்கிரஸ் மேலிடம் எதை செய்யச்சொல்லுகிறதோ தன்னை தக்கவைத்துக்கொள்ளுவதற்காக அதை அட்சரசுத்தமாக செய்யவேண்டிய பணியாளராகவே இருக்கிறார்.

இலங்கை தமிழ்க்கட்சிகள் தொடர்பான கருத்தொற்றுமை இந்தியாவுக்கு தேவையற்ற ஒன்று என்றே கருதலாம். தீர்வுத்திட்டத்திற்கும் தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமைக்கும் முடிச்சு போடவேண்டிய தேவை இல்லை என்றே கருதலாம். தமிழ்க்கட்சிகள் என்று எடுத்துக்கொண்டால் ஈழத்தமிழர்களின் விருப்பு வெறுப்புகளை பிரதிபலிக்கக்கூடிய பிரதிநிதுத்துவம் கொண்ட ஒரே ஒரு கட்சி தேசிய கூட்டமைப்பு ஒன்று மட்டுமே.

தவிர, தமிழர் நலனில் அக்கறை கொண்ட கட்சிகள் என்று பார்த்தாலும் சிவாஜிலிங்கம் தலைமையிலான தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ். இரண்டுகட்சிகளும் தேசியக்கூட்டமைப்பு எடுக்கும் காத்திரமான தீர்வு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்போவதில்லை.

சமீபத்தில் ஒரு கூட்டத்தில் உரையாற்றிய புளொட் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், தமிழ்க் கட்சிகள் யாவும் ஒன்றாக இருக்கின்ற காரணத்தினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான் தமிழ் மக்களுடைய உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டிய அமைப்பு என்று நம்பிக்கை வைத்து இந்த மக்கள் ஆணையைத் தந்துள்ளார்கள். இந்த ஆணையை ஏற்று தமிழ் மக்களின் உரிமைகளைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்க வேண்டும்.என்று தெரிவித்திருந்தார்.

மற்றுமொரு தமிழ் கட்சித்தலைவர் என்று சொல்லப்படும் டக்கிளஸ் தேவானந்தாவின் இராணுவ ஒட்டுக்கட்சியான ஈபிடிபி எந்தவகையிலும் தமிழர்களுக்கான நலன் பேணும் கட்சியல்ல, இது இந்தியா மட்டுமல்ல சர்வதேசமும் அறிந்தவிடயமும் ஆகும். அத்துடன் டக்கிளஸ் தேவானந்தா இந்தியாவில் தேடப்படும் கொலைக்குற்றவாளியாக இருந்துவருகிறார். எனவே டக்கிளச் இந்தியாவின் இந்தக்கலந்துரையாடலில் இணையும் சந்தற்பமும் கிடையாது.

தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வீ ஆனந்தசங்கரி. அவர்களும் தேசியக்கூட்டமைப்புடன் இணைந்து செய்ற்படவே விரும்புகிறார். அப்படி இருக்கும்போது சுதர்சன நாச்சியப்பன் தமிழ்க்கட்சிகளை இந்தியாவுக்கு அழைத்து என்ன கருத்தொற்றுமையை கண்டுவிடப்போகிறார்.

சுதர்சன நாச்சியப்பன் அங்கம்வகிக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியை எடுத்துக்கொண்டாலும், தமிழ்நாட்டிலேயே காங்கிரஸு 30 மேற்பட்ட கோஸ்டிகளாக அவர்களுடைய கருத்தொற்றுமை புல்லரிக்கும் வண்ணம் இருக்கிறது.

இதிலிருந்து தெரிவது என்னவென்றால் இந்தியாதான் ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய ஒரே சக்தி என்பதை காட்டி எந்த ஒரு சக்தியையும் உள் நுழையவிடாமல் தடையை ஏற்படுத்திக்கொண்டு, போர்க்குற்றவாளியை காப்பாற்றி ,எதையும் முடிவுக்கு வந்துவிடாமல் இழுத்தடித்து கால விரையத்தை நீட்ட முயற்சிக்கின்றனரே தவிர ஈழப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்கிற மேலான எண்ணம் இருப்பதாகத்தெரியவில்லை.

திமுக, கருணாநிதி கூறுவதுபோல 1956 ஆண்டிலிருந்து இலங்கை தமிழருக்காக குரல்கொடுத்து வருகிறேன் பதவியை ராஜினாமா செய்யவும் முன்வந்தேன். சாகாமலிருக்கும்வரை 1/2 நாள் உண்ணவிரதமிருந்தேன். என்று கூறுவதுபோல, காங்கிரஸ் கட்சியும் இந்திரா காந்தி காலத்தில் தொடங்கி, ராஜீவ் வழியாக தொடர்ந்து, சோனியா மன்மோஹன் சிங்கம் வரை ஈழப்பிரச்சினை தீராமல் இருப்பதற்கு பேச்சுவார்த்தை தொடர்ந்துகொண்டே இருக்கின்றனர்.

அடிப்படையில் இலங்கையில் என்ன நடக்கிறது தமிழர்களின் சூழ்நிலை எப்படி இருக்கிறது என்பது தெரிந்தும். அதை புறந்தள்ளி விட்டுவிட்டு புதிது புதிதாக ஏதேதோ தேடிக்கொண்டிருக்கின்றனர்.

இந்தியாவின் நோக்கமெல்லாம் நண்பன் ராஜபக்க்ஷ, போர்குற்றவாளி என்று சட்டபூர்வமாக சர்வதேசத்தில் இனங்காணப்பட்டுவிடக்கூடாது, ராஜபக்க்ஷ குற்றவாளியாக காணப்பட்டால் நெருக்கடி காங்கிரஸ் கட்சிக்கும் உண்டு, அதை தடுப்பதற்கு இப்போ தேவைப்படுவது தமிழ்க்கட்சிகளின் கருத்தொற்றுமை பற்றிய விசமமான ஒரு உப்புச்சப்பற்ற ஒப்பறேஷன் கலந்துரையாடல்.

இதை முதலாவதாக உணர்ந்து கொள்ளவேண்டியவர்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பினர்.

விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆட்சிக்காலமான எண்பதுகளிலிருந்து, 2009 வரை குறிப்பாக யாழ்ப்பாணத்தை எடுத்துக்கொண்டால் ஒழுக்கம், கல்வி, உழைப்பு, ஆகியவற்றில் முன்னுதாரணமாக திகழ்ந்த ஒரு பூமி. வன்னிப்பகுதி சில கல்விக்கான கட்டமைப்புக்கள் குறைந்திருந்தாலும் எந்த விதத்திலும் வன்னியும் குறைந்து போகவில்லை.

2009 யுத்தம் முடிவுக்கு வந்ததாகக்கூறப்படும் இரண்டு வுருடங்களில், யாழ் மாவட்ட கலாச்சார தரவுகள் அனைத்தும் தலை கீழாக ஆக்கப்பட்டிருக்கின்றன.

யாழ். மாவட்டத்தில் இந்த வருடம் (2011) ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையான 5 மாதங்களுக்குள் பதினெட்டு வயதுக்குட்பட்ட 75 பிள்ளைகள் திருமணமாகாமலே கர்ப்பம் தரித்துள்ளதாக யாழ் பிராந்திய சுகாதாரத் திணைகள வைத்திய அதிகாரி திருமதி திருமகள் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சம்பவங்களில் பாடசாலை மாணவிகளே அதிகளவில் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இவர்கள் இவ்வாறான தவறான வழிக்குச் செல்வதற்கு பெற்றோர்களும், ஆசிரியர்களுமே காரணம் எனவும், அவர் குற்றம் சுமத்தியிருக்கிறார்,

இதை வெறும் செய்தியாக பார்ப்பவர்களுக்கு 10 நிமிடங்களில் மறக்கப்பட்டுவிடும் செய்தி மட்டுமே, இந்திய அரசியல்வாதிகளுக்கு இது ஒரு சிறிய விவாதத்துக்குரிய புள்ளிவிபரம். ஆனால் ஈழத்தமிழனுக்கு வாழ்க்கைப்பிரச்சினை. விடுதலைப்புலிகளின் தலைவர் அவர்களுக்கு அவரால் கற்பனை பண்ணிப்பார்க்காத அழுக்காறு. இவற்றை மனதில்க்கொண்டு தமிழ் அரசியல் தலைமைகள் சிந்திக்க தலைப்படவேண்டும்

நீண்ட நெடுங்காலமாக கலாச்சார பிறழ்வுகள் நெருங்காத யாழ் மண்ணில், இவ்வளவு கலாச்சார சீர்கேடுகள் நடக்கிறதென்றால் அங்கு நடைமுறையில் இருக்கும் நிர்வாகத்தில் சந்தேகப்படாமல், ஆயுதமுனையில் அடங்கிக்கிடக்கும் பெற்றோர் ஆசிரியர்களை குற்றம் காணுவது எந்தவிதத்தில் நியாயம்.

மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் புள்ளிவிபரம் யாழ் பிராந்தியத்தில் பாடசாலை மட்டத்திலிருந்து மட்டும் பெறப்பட்டுள்ளது. பாடசாலை தவிர்ந்த வெளிக்கள விபரம் எதுவும் வெளிவருவதற்கான சாத்தியம் கிடையாது. மக்கள் நலன்சார்ந்து உதவும் நிர்வாக அமைப்புக்கள் தமிழ்பிரதேசங்களில் துண்டற இல்லை. அப்படித்தான் ஏதாவது வசதி இருந்தாலும், தமது பிள்ளைகளுக்கு தோற்றுவிக்கும் அவலங்களை வெளிப்படுத்தும் மனநிலையில் பெற்றோர் தாய்மார், மக்கள் இல்லை.

பாடசாலை மட்டங்களில் இருந்துகூட, சரியான கணக்கு சேகரிக்கப் பட்டிருக்கும் என்று சொல்லுவதற்கான பொதுநல சுகாதார அமைப்புக்களோ நிர்வாக சுதந்திரமோ வடக்கு கிழக்கு பகுதிகளில் இல்லை.

மக்கள் தமது சொந்த மண்ணில் ஒவ்வொரு பொழுதையும் கழித்து, உயிர் வாழ்வதற்கான பிரச்சினைகள் ஆயிரம் தலைக்குமேல் இருக்கின்றன.

இப்படி ஏற்படும் சக்திக்கு மிஞ்சிய கலாச்சாரகேடுகளை வேறுவழியின்றி கௌரவப்பிரச்சினை சார்ந்து, வீட்டோடு தீர்த்து சமாளித்துவிடுவதற்கு தமிழ்ச்சமூகம் நினைக்குமே தவிர அம்பலத்துக்கு கொண்டுவர ஒருபோதும் அம்மக்கள் விரும்பமாட்டார்கள்.

அப்படியல்லாமல் இப்படிப்பட்ட பிரச்சினைகளை வெளிக்கொண்டுவருவதால் நியாயம் எதுவும் அவர்களுக்கு கிடைத்துவிடவும் போவதில்லை. பணவிரையமும் மிரட்டல்களும் அவமானங்களும் சுற்றிப்படருமேதவிர, நிவாரணம் கிடைக்கப்போவதில்லை.

யாழ் பிராந்தியம் தவிர, வன்னி பெருநிலப்பரப்பு, வடமராட்சி, தென்மராட்சி, கிழக்கு மாகாணம். ஆகிய இராணுவ ஆதிக்கம் அதிகமாகவுள்ள கிறிஸ்பூதங்கள் கோலோச்சும் பின்தங்கிய பகுதிகளிலிருந்து புள்ளிவிபரங்கள் இடப்படவில்லை.

குறிப்பாக யாழ்மாவட்டத்தில் கல்விசார்ந்த கட்டமைப்புக்கள் இப்போது அதி செயல்த்திறன் இல்லாது சிதைக்கப்பட்டிருந்தாலும், நிர்வாக மார்க்கத்தில் அடிப்படை அமைப்புக்கள் தொடர்ச்சியாக கொஞ்சமாவது இருந்து வருகின்றன.

வன்னி மற்றும் பிற்படுத்தப்பட்ட கிழக்கு பகுதிகளில் கல்வி சார்ந்த கட்டமைப்பு நீண்ட நெடுங்காலமாகிறது சிதைக்கப்பட்டிருக்கிறது. .

விடுதலைப்புலிகளின் ஆட்சிக்காலத்தில் கல்விக்கட்டமைப்புக்களை பரவலாக நிறுவி நடத்திவந்தனர். கிழக்கு வீழ்ச்சிக்குப்பின் அப்பகுதியிலும் வன்னி வீழ்ச்சிக்குப்பின் வன்னி பெருநிலப்பரப்பிலும், கல்வி மற்றும் கல்விசார்ந்த கட்டமைப்புக்கள் கட்டடங்களுடன் அழிக்கப்பட்டு காணாமல் போயிருக்கின்றன. அங்கு வாழும் மக்களின் சிதைவுகள் சீர்கேடுகள் வெளிவராமலே அமுக்கப்பட்டுக்கிடக்கின்றன.

இப்படி சிறுகச்சிறுக ஒரு இனம் அழிவுநிலைக்கு செலுத்தப்பட்டிருக்கும்போது, இந்தியா போன்ற கயமைவாதிகளின் உளசுத்தியற்ற திட்டம், செயல்த்திறன் ஏதுமில்லாமல் ஏமாற்றும் நோக்கோடு காலவிரையத்தையே நீடிக்கவே வழி செய்யும்.

இப்படியே காலவிரையத்தை நீட்டுவதை விடுத்து, தமிழக முதலமைச்சர் போகும் வழியை பின்பற்றி ராஜபக்க்ஷவை போர்க்குற்றவாளியாக கூண்டில் ஏற்ற முயற்சி செய்வதே மரணித்துப்போன மாவீரர்களுக்கும் ஊனமாகி ஊசலாடும் தமிழ்ச்சாதிக்கும் பிராயச்சித்தமாகும் என்றே எண்ணத்தோன்றுகிறது, இதை ஈழத்து அரசியல் தலைமைகள் கொஞ்சமேனும் சிந்தித்தால் சிங்களவன் அடங்கிப்போவதற்கு நிறையச்சந்தற்பம் இருக்கிறது.

கோத்தபாய வின் சமீபத்திய பேச்சுக்களை பார்த்தால் இலங்கை அரசும் அதன் கூட்டாளிகளான இந்திய அரசும் போர்க்குற்றம் ஒன்றிற்கு மட்டுமே அச்சப்படுவது தெரிகிறது.

சமீபத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் பற்றி புலம்பிய கோத்தபாய, உண்மையிலேயே ஈழத் தமிழர்கள் நலனில் அக்கறை இருந்தால் அவர்களின் மறுவாழ்வு பற்றி பேசுங்கள். அதை விட்டுவிட்டு போர்க்குற்றம், பன்னாட்டு விசாரணை பற்றியெல்லாம் பேசக்கூடாது என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோத்தபயா ராஜபக்சே அறிவுரை கூறியுள்ளார்.

ஜெயலலிதா அரசியல் ஆதரவைப் பெருக்கும் நோக்கத்தில் தான் தமிழக சட்டசபையில் இலங்கைக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளார். அவை எல்லாம் அர்த்தமற்ற தீர்மானங்கள் என்றும் தனது காழ்ப்புணற்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள், கிட்டத்தட்ட ஏழு கோடி தமிழர்களுக்கு தலைமை வகிப்பவர், ஈழத்தமிழர்கள் பற்றி ஜெயலலிதா அவர்கள் பேசாமல் பிரணாப் முகர்ஜியை வைத்தா தமிழர் பிரச்சினையை உணர்வு ரீதியாக பேசி தீர்வுகாண முடியும்?

இலங்கை நிலவரத்தை நாங்கள் ஜெயலலிதாவுக்கு அளிக்க வேண்டும். தமிழர்களை அவர்கள் வாழ்ந்த இடங்களிலேயே மீள் குடியமர்த்த வேண்டும், மறுவாழ்வு தரப்பட வேண்டும் என்பது தான் முக்கியம். அதையெல்லாம் விட்டுவிட்டு போர்க்குற்றம், பன்னாட்டு விசாரணை பற்றி அவர் பேசக் கூடாது. இலங்கையின் கொலைக்களங்கள் என்று சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணங்கள் போலியானவை. அந்த தொலைக்காட்சியின் நடவடிக்கை நேர்மையானதன்று என்றும் கோத்தபாய நியாயப்படுத்தியிருந்தார்.

இலங்கை ஒன்றும் சர்வாதிகார நாடல்ல, ஜனநாயகம் தான். பன்னாட்டு விசாரணைக்கு ஒரு போதும் ஒப்புக்கொள்ள முடியாது. நாங்கள் ஒரு இறையாண்மை????? உள்ள நாடு. எனவே, நாங்கள் கூறுவதை பன்னாட்டுச் சமூகம் நம்ப வேண்டும். எந்த ஒரு இறையாண்மை உள்ள நாடும் பன்னாட்டு விசாரணைக் குழுவை அனுமதிக்காது என்று அவர் பேசியுள்ளார்.

இந்தியாவிலுள்ள ஒரு மானிலத்தின் ,தமிழக சட்டசபையை அவமானப்படுத்தியும், தமிழக முதல்வரை விமர்சித்தும், மரியாதைக்குறைவாக பேசியுள்ள கோத்தபாயவை இதுவரை மத்திய அரசும், வெளியுறவுத்துறையும் கண்டித்து ஒரு வார்த்தை பேசவில்லை, இதிலிருந்து இந்தியாவின் குள்ளநரி தந்திரத்தை கூட்டமைப்பு புரிந்துகொண்டுருக்கும்.

முதல்வர் ஜெயலலிதா அவர்களை அவர் ஒரு மானிலத்தின் முதல்வர் என்றும், அவருடன் எந்த பேச்சுவார்த்தையும் வைத்துக்கொள்ள வேண்டிய தேவை ஸ்ரீலங்கவுக்கு இல்லை என்று ஒரு சமையத்தில் கூறிய கோத்தபாய,முதல்வர் ஜெயலலிதா அவர்களின் இறுக்கமான நடவடிக்கையை கண்ட பின், இலங்கை நிலவரத்தை நாங்கள் ஜெயலலிதாவுக்கு அளிக்க வேண்டும். தமிழர்களை அவர்கள் வாழ்ந்த இடங்களிலேயே மீள் குடியமர்த்த வேண்டும், மறுவாழ்வு தரப்பட வேண்டும் என்பது தான் முக்கியம். ஜெயலலிதா அதை வந்து கண்காணிக்கவேண்டும் , அதையெல்லாம் விட்டுவிட்டு போர்க்குற்றம், பன்னாட்டு விசாரணை பற்றி அவர் பேசக் கூடாது. என்று தொப்பியை புரட்டி தப்பிக்க முயன்றிருக்கிறார்.

ஆகவே ஒரு சுற்றுப்பயண குதூகலத்துடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் டில்லிக்கு சென்று வர வாழ்த்துக்கள்.வழங்கும் நேரத்தில் இந்திய காங்கிரஸுன் பேச்சுவார்த்தை பழைய குருடி கதவைத்திறவடி என்றே அமையக்கூடும் என்பதே சாமானியனின் நோக்கு.

ஈழதேசம் இணையத்திற்காக.
கனகதரன்,

நன்றி ஈழதேசம் இணையம்.

Monday, August 22, 2011

>கூத்தாடி குசும்பன்< அங் 4,

>கூத்தாடி குசும்பன்< அங் 4,



உள்ளாட்சித் தேர்தலில் ராமதாசரின் பாமக தனித்து போட்டியிடும் என்று அறிவித்ததும். கேலியும் கிண்டலும் செய்கிறார்கள், என்று அக்கட்சியின் முதலாளி டாக்டர் ராமதாஸ் ஒப்பாரி வச்சு அயுதிருக்கிறாரு.

பாமகவின் திருவள்ளூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று மணவாளநகரில் நடந்தது. அதில் கலந்து கொண்ட கட்சியின் முதலாளி ராமதாஸ் பேசியதாவது,

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர், திருத்தணி, மதுரவாயல், அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி சட்டசபை தொகுதிகளில் கட்சியை மேலும் வலுப்படுத்தவும்?, இளைஞர் படையை அமைக்கவும்?, தொகுதி வளர்ச்சிக்காகவும்??? ஆட்களை தேடினோம்!!!. அப்போது பாலா என்ற பாலயோகியின் திறமை மீது நம்பிக்கை வைத்து அவரை மாநில துணை பொதுச் செயலாளர் ஆக்கியுள்ளோம். அவருக்கு நீங்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
Hilarious political cartoon images

தமிழகத்தில் பாமக மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கப் போகிறது?.

மக்களை வறுமையில் தள்ளி, இலவசங்களைக் கொடுத்து தமிழகத்தையே சீரழித்த திராவிடக் கட்சிகளை ஒழித்துக் கட்ட ஒவ்வொரு இளைஞனும், இளம்பெண்ணும் சபதம் எடுக்க வேண்டும்!.

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாமக தமிழகத்தில் குறைந்தது 13 இடங்களையாவது கைபற்றும்?.

வரும் உள்ளாட்சித் தேர்தலில் பாமக மிகப் பெரிய வெற்றி அடையப் போகிறது?.

1989-ம் ஆண்டு கட்சியை ஆரம்பித்த புதிதில் தனித்து போட்டியிட்டு 17 லட்சம் வாக்குகள் பெற்றோம்.

மீண்டும் 1991-ம் ஆண்டு தனித்து நின்று 1 எம்.எல்.ஏ. வைப் பெற்றோம்.

1996-வது ஆண்டிலும் தனித்தே நின்று 4 எம்.எல்.ஏ.க்களை பெற்றோம்.

அதன் பிறகு தான் கூட்டணி வைத்தோம். தற்போது வெறும் 3 எம்.எல்.ஏ.க்கள் தான் உள்ளனர்.

பாமக தனித்து போட்டியிடும் என்றதுமே கேலியும், கிண்டலும் செய்கிறார்கள் என்றார்.

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாமக தமிழகத்தில் குறைந்தது 13 இடங்களையாவது கைபற்றும்??? என்று ராமதாசு மாமா நம்பிக்கையோடு??? கூறியிருக்கிறார்,



கூ கு: அது என்ன பதிமூணு இடம் புரியவேயில்லைங்க.

அதுசரி ராமதாசு மாமா 2009 மக்களவை தேர்தலின்போதும், அம்மாவோடு கூட்டுச்சேர்ந்து நீங்க குடுத்த ஸ்ரேற்மென்ரை வசதியாக மறந்திட்டீங்களோ. வேற்றிக்கூட்டணி என்று கூவினீங்க. உங்க ஆளுங்க ஒருத்தர்கூட தேறல்லீங்களே.

அப்பொறம் ஞானம் பொறந்ததா சொல்லி. 2011 சட்டசபை தேர்தல் வந்தபோது குத்துக்கறணம் அடிச்சு கண்ணாடி குடும்ப தாத்தாவோட ஒறவாடி அன்னியோன்யமாகி கூட்டு அமைச்சு கடை போட்டீங்க, அப்ப குடுத்த ஸ்ரேற்மன்ரிலையும், அன்பு பொங்க வெற்றிக்கூட்டணி. 234 தொகுதியிலும் வெற்றிவாகை சூடுவோம் ன்னு அக்கப்போரா கூறினீங்க, ஒருத்தனும் தேறல்லங்களே.

ஒங்களுக்கு ஞானமும் வரல்ல வெக்கமும் வரல்ல!

இப்ப எந்த ஆதாரத்தின் அடிப்படையில் 13 எடத்தை படம் புடிச்சு வச்சு கூவுறீங்க. இது ஒங்களுக்கே தமாசா இல்லீங்களா?

ஒங்களுக்கு தான் வெக்கம் கக்கம் ஒண்ணும் கிடையாது. அது போவட்டும் தமிழ்நாட்டு மக்கள எல்லாம் மடையன்கள் என்றே முடிவு கட்டிட்டீங்களா?

வரும் உள்ளாட்சித் தேர்தலில் பாமக, மிகப் பெரிய வெற்றி அடையப் போகிறது ன்கிறீங்க, எப்பிடீங்க? நீங்க சொன்னா சரீங்களா? நீங்க சொன்ன அத்தினியும் தலைகீழாதான் ஆயிருக்குங்க, நீங்க விழுந்த பாட்டுக்கு குறி சுடுற பச்சோந்திங்கிறாங்க. நாளைக்கு எந்த மரத்தில இருப்பீங்கன்னு ஒங்களுக்கே தெரியாது,

ஓட்டுபோடுற சனம்தானுங்க சொல்லணும், தீர்மானிக்கணும். நீங்களே துடுப்பு இல்லாத, பாய்மரம் இல்லாத ஒரு பட்டமரம். அத கட்டுமரம்ன்னு நீங்க நினைக்கிறது புல்லரிக்குதுங்க.

ஒங்க சுத்துமாத்து இனியும் பலிக்கும் ன்னா நம்புறீங்க. கட்சி சொன்னதுக்கு கட்டுப்பட்டு ஒங்க பாச மகனை கட்சிக்காக மத்திய மந்திரி ஆக்கினதா நீங்க சொல்லுற நாயம் சிலிர்க்க வைக்குதுங்க,

1989-ம் ஆண்டு கட்சியை ஆரம்பித்த புதிதில் தனித்து போட்டியிட்டு 17 லட்சம் வாக்குகள் பெற்றோம். என்னுறீங்க இன்னிக்கு 2011 ம் ஆண்டு 22 வருசமாச்சு இன்னிக்கு நாதியத்து ஒண்ணுமில்லாமல் வெரட்டப்பட்டும். வாய் வீரம் ஒண்ணும் ஒங்களுக்கு குறையல்லீங்க, ஒங்க தன்னம்பிக்கை தலை கிறுகிறுக்குதுங்க

பாமக தனித்து போட்டியிடும் என்றதுமே கேலியும், கிண்டலும் செய்கிறார்கள் என்று நீங்க சொல்லி அழுவுறீங்க. அதில என்ன தப்புங்க. நாட்டு நடப்பு உண்மை அப்பிடி இருக்கும்போது, உங்க ஒருத்தரின் ஆகாசப் புளுகை நம்பச்சொல்லுறீங்களா?. ஒங்க நிலைமை இன்னும் மோசமாவப் பொகுதுன்னு சனங்க கேலியும் கிண்டலும் செய்வது தப்புங்கிறீங்களா.

எந்த நோக்கத்தில கச்சி கடை தொறந்தீங்களோ ஒங்களதவிர யாருக்கும் தெரியாது. ஆனால் திராவிடக்கட்சிகள் சரியோ பிழையோ, அவிங்க சைக்கிள்ளதானே மாறி மாறி, இம்புட்டு நாளும் சவாரிபண்ணிக்கிட்டிருந்தீங்க. காங்கிரசு கட்சியயாச்சும் நீங்க விட்டு வச்சீங்களா. எந்தக்கச்சியோடு நீங்க கூட்டு வைக்கல்லை. ஒரு கட்சியயாச்சும் விட்டு வச்சீங்களாங்க. கொள்கைன்னு ஏதாச்சும் இருக்குங்களா ஒங்ககிட்ட?

இப்போ மறைந்த நடிகர் சந்திரபாபுவின் பாட்டை எடுத்துவிட்டு துள்ளிவரும் காவேரியில் குதிக்கணுமா சோறு தண்ணி ஏதுமில்லாம கெடக்கணுமா, ன்னு, அதுக்கு மேலயும் போயி தீக்குளிக்கவும் தயார் ங்கிறீங்க அதுக்கு நீங்க நாக்க புடுங்கிக்க வாணாமா மாமா?

நடக்ககூடிய காரியத்த பேசுங்க மாமா! 70 வருசமா தாத்தா ஆடின ஆட்டம் பாத்தீங்கதானே. அவிரும் இப்பெல்லாம் ஒங்களப்போலதான் வில்லங்கமான வியாக்கிஞானம் பேசி பொலம்பிக்கிட்டிருக்காரு.

ஒரு பேச்சுக்கு கேக்கிறேனுங்க நேத்திக்கு சொன்னீங்க ஒரு கட்சியுடனும் கூட்டணி இல்லைன்னீங்க, அடுத்தநாள் சொன்னீங்க எந்த கட்சியுடன் கூட்டணி அமைச்சாலும் பாசக்கார மகன் கட்சிதான், தலைமை வகிக்கும் ன்னீங்க, அப்பொறமா தெருமா கூட்டணியில் சேர்ந்திருக்கிரார் இரு கட்சிகளும் இணைஞ்சி புரட்சி பண்ணுவோம் ன்னீங்க.

இப்போ என்னடான்னா தமிழகத்தில் பாமக மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கப் போகிறது? ன்னு பெரிய பட்டாசை கொயுத்தி போடுறீங்க. பாமாக ன்னு ஒண்ணு இருக்கு அல்லாங்காட்டி இல்லாம போச்சுன்னு யாரு அழுவுறாய்ங்க.

பொழுது போக்குக்கு நீங்க பொலம்பினாலும் கொஞ்சமாகிலும் நடைமுறை சாத்தியமான யதார்த்தம் இருக்குணுமுங்க, இப்பெல்லாம் நீங்க முழு ஜோக்கர் என்பதை பப்பிளிக்கில காட்டிக்கிட்டெ வர்றீங்க.

சனத்துக்கு சலிப்பு வந்திச்சுன்னா கல்லெடுத்து அடிச்சு விரட்டவும் தயங்க மாட்டாங்க பாத்து நடவுங்க. வரட்டுங்களா?

மீண்டும் சந்திப்போம்<

Thursday, August 18, 2011

>கூத்தாடி குசும்பன்< அங் 3,



.திமுகவின் தாத்தா, கருணா இப்போ மூணு நாலு மாசமா பாராட்டு விழா சுத்தமா ஒண்ணுமில்லாம வாழ்க்கை வெறுத்துப்போயிட்டாரு.

பொலம்பி ஒப்பாரி வச்சுப்பாத்தாரு கச்சிக்காரன் சினிமாக்காரன் எவினும் கண்டுக்கல்ல, தாத்தா வெறுப்பின் உச்சத்துக்கு போயி அடுத்து என்னதான் செய்யலாம்ன்னு ஓசிச்சு முடிவில சமச்சீர் வெற்றிவிழா, ன்னு ஒரு கூட்டமாச்சும் நடதிடலாம்ன்னு திட்டத்தோட தள்ளுவண்டியில் மயிலை மாங்கொல்லைக்கு பொறப்பட்டிட்டாருங்க.

சமச்சீர் கல்வியில இவிரு தன்னோடா சுயபுராணமும். கனி அக்காவோட சென்னை சங்கமம் விளம்பரங்களும், இன்னும் பல கழுத்தறுப்புக்களும் படிக்கிற புள்ளங்களுக்கே புடிக்கல்ல.

அதுக்காக என்னதான் பண்ணுறது, பாவப்பட்ட ஏழை பாழை குழந்தைய்ங்க. ஏதோ பாடம் படிக்கணுமுன்னா தலைவிதின்னு இந்தக்கண்றாவியயும் சமாளிச்சி போகவேண்டியிருந்திச்சு.

நீதிமன்ற தீர்ப்பில இவிரோட சுயபுராணத்த ஒண்ணுமில்லாம கத்தரிச்சுட்டுதான் சமச்சீர் புத்தகங்கள அமூல்படுத்த சொல்லியிருக்காங்க, நீதிமன்றத்தின் அந்த செருப்படிக்கு பிறகு இவிரு சாவறுதி காலத்துக்கு அதுபற்றி பேசவே தகுதியில்லை.

அதுதான் புதிய முதல்வர் ஜெயலலிதா அவங்களோட விருப்பமும், அதோட தரமான கல்வி தரம் அந்த புத்தகங்களில் போதாது என்பதும் உண்மைதான் அதால அந்த அம்மா கொஞ்சம் கூடுதலா முரண்டுபிடிச்சதும் தப்புத்தான்,

இப்ப இவிரு நல்லவனுக்கு நடிச்சு கல்விக்கடவுளா தன்னய காட்டிக்க சமச்சீர் வெற்றிவிழா நடத்தப்போறாராம். இந்த அழுக்கு மனிசன்.

இவர எந்த விலங்கோட ஒப்பிடறதென்னே டவுட்டா இருக்கு, முதலை. காண்டாமிருகம், நரி, ஓநாய், அழுங்கு, ஆமை இப்படி எத்தனையோ ஒப்பிட்டுட்டாங்க இனி எதத்தான் ஒப்பிடுறதென்னு தெரியல்லை.

கெட்டிக்காரனின் பொய்யும் பொரட்டும் எட்டுநாள் மட்டுந்தான் தாக்கிப்புடிக்கும்ன்னு, கவியரசு கண்ணதாசன் சொல்லியிருந்தாரு அதையே பச்சைப்பொய்யாக்கினவரு நம்ம தாத்தா.

இப்போ தாத்தனுக்கு 90 வயதாகிறது, இந்த அந்திமகாலத்திலயும் புகழ் ஆசை விட்டுவிலகல்லீக்க,, சனம் தன்னை மறந்துபோய்விடக்கூடாது என்கிற தந்திரத்தை மனதில வச்சு தினமும் ஏதாவது ஒரு பொய்யை கேள்வி பதிலா எயுதி பொலம்பிக்கிட்டுருக்காரு.


அடுத்ததா எப்புடியாச்சும் குதிச்சு ஒரு குட்டிக்கரணம் அடிச்சு ஒரு பாராட்டு விழா போட்டுக் காட்டுவோம் என்றால் தமிழ்நாட்டிலை சனம் கூடுவதாயும் காணல்லைங்க.

கோவையில ராசாத்தி ஆச்சியையும் ஒக்கார வச்சு கச்சி கூட்டம்ன்னு, ஒரு கூட்டம் போட்டாரு, அங்கயும் மவனுவ அடிச்சு கொளப்பிட்டு போயிட்டானுவ. அதுக்காக அவிரு விழா எடுக்க அவிரோட பூர்வீக பூமியான ஆந்திராவுக்கு போகமுடியுங்களா.

கடந்த ஐஞ்சு வருசமா கூத்தும் கும்மாளமும்ன்னு, தூங்குறத்துக்கே நேரம் கெடைக்காம பாராட்டு மழையில் பொரண்டு கெடந்தவரு சும்மா கெடக்க முடியுங்களா.

பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா, திரையுலகின் ஆசான் சிருங்காரவேலன் ஐயாவுக்கு பாராட்டு, தமிழ் வளர்த்த தானை தாத்தாவுக்கு பாராட்டு, வாழும் வள்ளுவன் வித்தமிழ் முத்தலுக்கு பாராட்டு, தொல்காப்பியத்தை திருத்தி எயுதிய பூலோகத்து பூங்காவனத்துக்கு பாராட்டுவிழா, செம்மொழி வளர்த்த சிங்காரவேலனுக்கு பாராட்டுவிழா அப்பிடின்னு அவிரு தானே நடத்தி ஆடின ஆட்டமெல்லாம் கொஞ்ச நஞ்சமா.

கண்ணுக்கு குளிச்சியா நடிகைகளை வளைச்சுவச்சு நடு நாயகமா தாத்தா ஒக்காந்திருந்த அழகே அழகுதாங்க,

நவீன திரொவ்பதை வீர விண்ணி, குஷ்பு கட்சியில் இணையும் விழா, நடத்தினாரு. அனுஸ்காவுக்கும் அசினுக்கும் தமிழ் நாடு அரசின் கலைமாமணி விருது குடுத்து பூரிச்சுப்போனாரு. மானாட மயிலாட நடத்தின நீதவான் நமீதாவை புகழ்ந்து பாராட்டி விழா எடுத்தாரு..

ரஜனி, கமலு, வாலி, வைரமுத்து, குஷ்பு, ன்னு முன்னணியெல்லாம் இப்போ செத்த மாட்டை விட்டு உண்ணி கழண்ட கணக்கா தாத்தாவ பின்னணிக்கு தள்ளிட்டாங்க அவிங்க எவரும் இப்போ கண்டுக்கறதே இல்லை நோவாம என்ன பண்ணுவாரு பாவம் தாத்தா!

அந்த அம்மா ஆட்சிக்கு வந்து மூணு மாசம் முடியப்போவுது அவங்களால ஐயாவாட்டம் ஒரு விழா எடுக்க முடிஞ்சுச்சுங்களா?. திரையுலகம் தானா வந்து பாராட்டு ஒண்ணு நடத்துவோமான்னு கேட்டத்துக்கு நேரமில்லைன்னு மறுத்திட்டாங்க அந்த அம்மா.

தாத்தாவுக்கு நேரம் மொத்தமா படுபட்சியாயிடிச்சு. அவிரு வாய தொறந்தாலே சனியன் தலைவிரிச்சு ஆடி சங்காரத்தில முடியுது. எப்படியாச்சும் ஒரு விசயத்திலயாச்சும் மக்களோட அனுதாபத்த புடிச்சுடணுமென்னு பறந்தடிச்சும் எதுவுமே தேறல்ல.

ஒண்ணே ஒண்ணு சமச்சீர் கல்வி ஒண்ணுதான் அவருக்கு ஆதரவா கெடைச்ச கொம்பு. அதுவும் சொதப்பிடிச்சு. அதையும் முதலமைச்சர் அம்மா நீதிமன்ற தீர்ப்பை மதிச்சு நீதிமன்றம் குறிச்சு சொன்ன தாத்தாவோட சுயபுராணத்தை வெட்டி வீசிட்டு அமுல்படுத்துறதா ஒத்துக்கிட்டாங்க, மேட்டர் ஓவர்,

இவிரு விடுறதாயில்லங்க.

சமச்சீர் கல்வி வெற்றி விழா பொதுக்கூட்டம்ன்னு மயிலை மாங்கொல்லையில் நாளை நடத்தப்போறாராம். இதில தி.மு.க தாத்தா கருணாநிதி சிறப்புரையாற்றுகிறார் என்று பீதியை கெளப்பியிருக்காங்க.

தி.மு.க இளைஞரணி, மாணவர் அணி சார்பில் சமச்சீர் கல்வி வெற்றி விழா பொதுக்கூட்டம் மயிலை மாங்கொல்லையில் நாளை மாலை 6 மணிக்கு நடக்கிறது.

பகுதி செயலாளர் மயிலை த.வேலு தலைமை வகிக்கிறார். தென்சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ முன்னிலை வகிக்கிறார். பூவை சி.ஜெரால்டு, வி.எஸ்.ராஜ் ஆகியோர் வரவேற்கின்றனர்.

இதில் தி.மு.க தலைவர் கருணாநிதி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். பேராசிரியர் சுப.வீரபாண்டியன் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் பேசுகிறார்கள்.

கோ.அன்பு கபாலி, ஜி.மணி, சத்தியமூர்த்தி ஆகியோர் நன்றியுரையாற்றுகின்றனர். முன்னதாக இறையன்பன் குத்தூசின் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. கூட்டத்துக்கான ஏற்பாடுகளை மயிலை பகுதி கழகத்தினர் செய்துள்ளனர்.

இப்படி ஒரு செய்தி வந்து மிரட்டியிருக்கு. ஒண்ணை பாருங்க விழாவுக்கு வந்து உரையாற்றுவார்கள் என்பவர்கள் ஒரு சிலரை தவிர மற்ற எல்லோரும் புது ஆட்களாயிருக்கிறாங்க. பழைய ஆளுங்க எல்லாம் திஹார், வேலூர், பாளயங்கோட்டை, திருச்சி, புழல். என்று சிறையில் கழி திங்கிறாங்க.

பாவம் கனிமொழி பொண்ணாப்பொறந்து வாழும் வயதில் இந்த நாதாரியின் தப்பான வழிகாட்டலால் திஹாரில் சிறைப்பட்டு கிடக்கிறாங்க. இவரு சரியான மனிசனா இருந்தா, குத்தம் எல்லாம் நடக்குறத்துக்கு நான்தான் பொறுப்பு பேராசையில் அந்தப்பொண்ணு கனிமொழியின் பெயரை தப்பா யூஸ்பண்ணி பினாமியா போட்டு அவவோட வாழ்க்கையை கெடுத்திட்டேன்னு, குத்தத்தை ஒப்புக்கொண்டு கனிமொழியை விட்டுவித்துவிட்டு இவிரு போய் சிறையில் கிடக்கலாம்தானே. இன்னும் ரண்டு, மூணு, ஐஞ்சு, வருசத்தில முடியப்போறாரு பெத்த மகளை விடுவித்தவர் என்று மக்களிடையே செத்த அப்புறனாச்சும் ஒரு அனுதாபம் கிடைக்கும். ஆனா இவிரு செய்யமாட்டாருங்க.

மீண்டும் சந்திப்போம்

Tuesday, August 16, 2011

>கூத்தாடி குசும்பன்< அங் 2.





>கூத்தாடி குசும்பன்< அங்2.

கூத்தாடி குசும்பன்>:

தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் பிரபலமான ஒரு பத்திரிகையின்,, தாமரை மலர்போன்ற இணையத்தளம் ஒன்று, இந்தியாவின் 65 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒரு நகைச்சுவையான செய்தியை நேற்று வெளியிட்டு திகைக்க வத்திருந்ததுங்க.

அதன் விபரம் பின்வருமாறு, மக்களை மட்டுமல்ல என்னையும் குளப்பத்தில் ஆழ்த்திவிட்டது. உலகின் பெரிய ஜனநாயக நாடாக இந்தியா இருக்கிறது????. விண்வெளி, மருத்துவம், கல்வி, பொருளாதாரம், ராணுவம், அணு சக்தி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் உலகளவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது.????? என்று, இந்த நூற்றாண்டின் பெருத்த நகைச்சுவையாக செய்தி வந்திருந்தது.

இந்தியா வல்லரசு நாடாக உருவாவதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகும். ஏனெனில் வல்லரசாக வேண்டுமெனில் பல்வேறு துறைகளில் நாம் மேலும் வளர்ச்சியடைய வேண்டும். உலகில் தற்போது அமெரிக்கா வல்லரசு நாடாக விளங்குகிறது..... ""சீனா", இந்தியா" உள்ளிட்ட நாடுகள் இந்த நூற்றாண்டில் வல்லரசு நாடாக உருவாகும் என அந்த இணையச்செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

கூ கு>: நகைச்சுவை என்னவென்றால் உலகத்தில் அமெரிக்கா ஒன்றுதான் வல்லரசு நாடு என்பதே அந்த இணையத்தளத்தின் கணிப்பு, உலகத்தில் பிரித்தானியா. பிரான்ஸ். ரஷ்யா. சீனா. அமெரிக்கா. ஆகிய ஐந்து நாடுகள் ஏற்கெனவே வல்லரசாகி பாதுகாப்புச்சபையில் நிரந்தர உறுப்புரிமை பெற்று, வீட்டோ அதிகாரம் கொண்ட நாடுகளாக இருக்கின்றன. வீட்டோ பவர் எனப்படும் நிராகரிக்கும் அதிகாரம் சீனாவுக்கு நீண்டகாலமாகவே இருக்கிறது இதை அறியாமல் சீனா என்கிற ஒரு பெரும் வல்லரசு நாட்டை,. சாதாரணமான இந்திய ஊழல் நாட்டுடன் ஒப்பிடப்பட்டிருந்தது அந்த இணையத்தளச்செய்தி.

கூ கு> உலகத்தின் சனத்தொகையில் இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கிறது என்பது உண்மையே. விண்வெளி, மருத்துவம், கல்வி, பொருளாதாரம், ராணுவம், அணு சக்தி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் உலகளவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது. என்பது இந்தியாவின் அரசியல்வாதிகளின் மன திருப்த்திக்கும் பத்திரிகைகளின் ஆசைக்கும் சொல்லிக்கொள்ளலாமே தவிர உண்மையாகிவிடமுடியுங்களா.

இந்தியா விண்வெளிக்கு அனுப்பிய சந்திராயன் விண்கலம் திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.425 கோடி ஆகும். இருந்தும் இத்திட்டம் பெருத்த வெற்றியளிக்கவில்லை. இந்தியத்திருநாட்டில் ஒருவேளை உணவுக்கு வழியில்லாதவர்கள் 46 கோடி என ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது.

"கான மயிலாட கண்டிருந்த வான் கோழி தானுமதுவாகப் பாவித்து தன் கொல்லாச்சிறகை விரித்தாடினாற் போலவே" என்பதுபோல இந்தியாவின் வாணவேடிக்கைக் கதை இருக்க, ஊழல் இந்தியா எதைச் சாதித்து விடப்போகிறது?

செயற்கைக்கோள்களால் சுனாமியின் அழிவை முன்னறிந்து சொல்ல முடிந்ததா? அந்த நேரத்தில் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களை முன்னறிந்து கூறப் பயன்படும் செயற்கைக் கோள்கள், பருவநிலை மாற்றத்தை முன்னறிவித்து விவசாயிகளுக்குப் பயன்பட்டதுண்டா? குடிநீரோ, கழிப்பிட வசதியோ, கல்வியறிவோ இன்றி கோடிக்கணக்கான மக்கள் வாழும் வறுமை நிறைந்த ஒரு நாட்டில் நிலவுக்கு வாணம் அனுப்பி நானும் விண்ணன் என்று காட்ட முடியுமேதவிர வேறு ஒன்றும் நடக்கப்போவதில்லை.

இந்தியாவின் சில நகரங்களின் மருத்துவ விரிவாக்கம் ஓரளவு நல்லநிலையில் இருந்தாலும், ஏழை பாழைகளுக்கு அவை எட்டாக்கினியாகவே இருந்து வருகிறது.

அத்துடன் அரசியல் முதலாளிகள் எவரும் இந்தியாவில் மருத்துவம் பார்க்க விரும்புவதுமில்லை. கருணா தாத்தாவின் பொண்டாட்டி தயாளு பாட்டி அமெரிக்காவில் மூக்குக்கு மருத்துவம் பார்க்க சென்று வந்திருக்கிறார். திமுக தளபதி? ஸ்ராலின் லண்டனிலும், நடிகர் ரஜினிகாந்த் சிங்கப்பூரிலும்தான் மருத்துவம் பார்க்கின்றனர்.

இந்தியாவில் நல்ல மருத்துவம் இருந்தால் இவர்கள் ஏன் வேறு நாடுகளுக்கு சென்று வைத்தியம் பார்க்கவேண்டும். ஒரு குப்பனுக்கும் சுப்பனுக்கும் பெருத்த ஒரு நோய் பிடித்துக்கொண்டால் மரணத்தை வரவேற்பது தவிர அவர்களுக்கு வேறு வழியுண்டா?. இந்த நிலையில் வல்லரசு,, இது முடியுமுங்களா?

கல்வியும் அதே நிலைதான் ஓடிக்கொண்டிருக்கிறது. பணமுள்ள சில நகரவாசிகள் மட்டும் தமது பிள்ளைகளை, அரசியல் முதலாளிகளின் வர்த்தக கல்விமையங்களில் படிக்க வைக்கலாம். 60 ,70 சத வீதமான கீழ்த்தட்டு மக்கள் கல்விபற்றி அறியாமலே வாழ்ந்து வருகின்றனர்.

பொருளாதாரம் அனைத்தும் சோனியா, கருணா. லல்லு. மாயாவதி. போன்ற அரசியல்வாதிகளின் கைகளிலும் சினிமாகாரர்களிடமும் பெருகி, சுவிஸ் வங்கிகளில் மாண்டுபோய் கிடக்க. மக்களின் வயிற்றுப்பாடு இலவசத்தை நம்பி அவர்களது தலைவிதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பமக, ராமதாசரின் மக்கள் தொல்லைக்காட்சியில் ஒரு காமடி நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதில் மக்கள் மத்தியில் தமிழ் அறிவு சார்ந்த கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஒரு கேள்விக்கும் யாரிடமிருந்தும் சரியான பதில் கிடைக்கவில்லை. அதுதான் தமிழ்நாட்டின் கல்வித்தரம் என்று அந் நிகழ்ச்சி பல்லிழிக்கிறது.

பூடு, எந்த மரத்திலிருந்து கிடைக்கிறது என்ற கேள்விக்கு ஒரு பெண் ஒலிவ் மரத்திலிருந்து கிடைக்கிறது என்று பதிலளிக்கிறார். அந்த நிகழ்ச்சியை நடத்தும் தொல்லைக்காட்சிக்கும் வெட்கமில்லையா என்று எண்ணத்தோன்றுகிறது,

சமச்சீர் புத்தகங்களில் கருணாநிதியின் கழுத்தறுப்புக்களும், கனிமொழியின் சென்னை சங்கமம் விளம்ம்பரங்களும், கவிதை என்ற பெயரில் கலைஞர் குடும்ப தேவாரங்களும் அச்சமூட்டுகின்றன. ஆண்டவன் அருளால் திமுக வுக்கு விடை கொடுக்கப்பட்டு ஜெயலலிதா முதல்வராகி தமிழ்நாட்டை பிணை எடுத்திருக்கிறார் அந்தவகையில் தமிழ்நாட்டைப்பொறுத்து கொஞ்சம் நிம்மதி,

இராணுவத்தை எடுத்துக்கொண்டால் உலகத்தில் அதிக சனத்தொகை கொண்ட ஒரு நாடு என்பதால் மக்கள் வேலை வாய்ப்பை முனைப்பாக்கி இராணுவத்தில் சேர்ந்து எண்ணிக்கையில் இராணுவம் அதிகமாக இருக்கலாம். நவீனமான பலமான இராணுவம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

உதாரணம் 1964 அளவில் சீனாவுடனான போரில் இந்திய இராணுவம் போரில் படுதோல்வியடைந்தது.

1987ல் ஸ்ரீலங்கவுக்கு சென்ற ஐபிகேஎஃவ் என்ற இராணுவ அணி, ஈழத்து பெண்களை கற்பழித்து பொதுமக்களை கொன்றொழித்து சாதனை படைத்ததே தவிர, சண்டையில் விடுதலைப்புலிகளிடம் தோல்வி கண்டே திரும்பியது.

சமீபத்தில் அருணாச்சலப்பிரதேசத்தில் பிரமபுத்திரா அணையை சீனா அமைத்து வருகிறது. அதை எதிர்க்கும் திராணி மண்மோஹன் சிங்கத்திடம் இல்லை. சீனா சொல்லிக்கொடுத்தபடி அணைகட்டுவதால் இந்தியாவுக்கு எந்தப்பங்கமும் இல்லை என்று சீனாவின் ஸ்ரேற்மென்ற் ஐ வழிமொழிந்திருக்கிறார் பாரதப்பிரதமர் மண்மோகன் சிங்கம்!.

தமிழக கடற்பரப்பில் ஸ்ரீலங்கா படையினர் தினம் தினம் அத்துமீறி தமிழக மீனவர்களை சிறைப்பிடிப்பதையும் சுட்டுக்கொல்லுவதையும் பார்த்து வாய் பொத்தி கைகட்டி நிற்கிறது இந்திய அரசு, இப்படியிருக்கும்போது இராணுவம் தன்னிறைவு + வல்லரசு என்பது ஜோக்கா எடுக்காம எப்படீங்க எடுக்க முடியும்,

மொத்தத்தில் இந்தியா என்கிற வறுமைநாடு, ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளுடன் ஒப்பிடும்வையில் இருப்பதை மறுக்க முடியாது.

எப்போ ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான், வல்லரசாகிறதோ அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தியாவும் வல்லரசாகிவிடும். மறுப்பதற்கில்லை. அதற்கு முன் இந்தியாவை வல்லரசாக பார்க்கவேண்டுமென்ற ஒரு ஆசை மக்களுக்கு இருக்குமாகவிருந்தால்.

இப்போ அரசியலில் இருக்கும் அரசியல் ஆடுகளை ஒன்றாக்கி விரட்டி கடலில் தள்ளினால் மட்டும். அப்துல் கலாம் கூறியதுபோல நடக்கவும் கூடும்,

ஏனெனில் இந்தியாவில் வல்லரசுக்கான அனைத்து வளங்களும் இருக்கின்றன. சாக்காட்டு அரசியல் மாற்றம் பெற்றால் அப்துல் கலாம் கூறிய கனவு நனவாகும். கலாம் அவர்களின் வார்த்தைகளை திரும்பவும் மீட்டுப்பார்த்தால் அவர் கூறியிருப்பவையின் கருப்பொருள் இளைஞர்கள் நினைத்தால்! 2020ல் இந்தியா வல்லரசாகும் என்றுதானே கூறியிருக்கிறார்.

அதன் உட்பொருள் இளைஞர்கள் அரசியல் ஆடுகளை விரட்டியடிக்க லத்தியை கையில் எடுக்கவேண்டும் என்பதாகவே படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை வல்லரசுக்கான தகுதி என்பதெல்லாம் இந்திய அரசியல் சாக்கடைவாசிகளிடம் இல்லை மக்கள் கையில்த்தான் உண்டு,

மீண்டும் சந்திப்போம்.

Saturday, August 13, 2011

>கூத்தாடி குசும்பன்< அங் 1.

>கூத்தாடி குசும்பன்< அங் 1.




ஆக 13 2011,சென்னை:"நான் பைத்தியக்காரர்களின் உளறலுக்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தையும், கண்ணியத்தையும் வீணடிக்க விரும்ப வில்லை' என, விஜயகாந்த் பேச்சுக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி பதில் தெரிவித்துள்ளார். தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி - பதில் அறிக்கை: அரிசி கடத்தல் பற்றி, பக்கம் பக்கமாக அறிக்கை வெளியிட்ட ஜெயலலிதா, ஆட்சிக்கு வந்த பின்னும், தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட, 145 டன் அரிசி, புதுவை மாநிலத்தில் பதுக்கியதாக, அவருக்கு ஆதரவான நாளிதழிலேயே செய்தி வந்துள்ளது.

தி.மு.க., ஆட்சியில், இலங்கை தமிழர்களுக்காக, நான் எடுத்த நடவடிக்கைகள், "எல்லாம் கண்துடைப்பு நாடகங்கள்' என சட்டசபையில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். நான், 1956ல், சிதம்பரம் தி.மு.க., பொதுக் குழுவில், இலங்கைத் தமிழர்களுக்கான தீர்மானத்தை முன்மொழிந்துள்ளேன். இதுபோன்று, இலங்கை தமிழர்களுக்கு பல நடவடிக்கைகளை ஆதரித்துள்ளேன். இதையெல்லாம் கண் துடைப்பு நாடகம் என்றால்,"ஒரு போர் என்றால், அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல' என்று அறிக்கை விட்டவர் ஜெயலலிதா.

இதன் மூலமே, கண் துடைப்பு நாடகம் யார் ஆடுவது என்பது தெரியும்.இரண்டாவது முறையாக, அப்துல் கலாமை ஜனாதிபதியாக வர விடாமல், நான் தடுத்ததாக விஜயகாந்த் கூறியுள்ளார். பையத்தியக்காரர்களின் உளறலுக்கெல்லாம் பதில் சொல்லி, நேரத்தையும் கண்ணியத்தையும் வீணடிக்க விரும்பவில்லை. தொல்காப்பியப்பூங்கா புத்தகத்திற்கு, தொல்காப்பியர் விருதை எனக்கு வழங்கி, அந்த விழாவில் கலாம் ஆற்றிய உரையை அறியாதவர்கள், இப்படியெல்லாம் சொல்கிற பொய்யை யார் நம்புவார்கள்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

"நான் பைத்தியக்காரர்களின் உளறலுக்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தையும், கண்ணியத்தையும் வீணடிக்க விரும்ப வில்லை' என, விஜயகாந்த் பேச்சுக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி பதில் தெரிவித்துள்ளார்.

> கூத்தாடி குசும்பன்: "நான் பைத்தியக்காரர்களின் உளறலுக்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தையும், கண்ணியத்தையும் வீணடிக்க விரும்ப வில்லை' எங்கிறீங்க. தினம் தினம் ஒரு பைத்தியக்காரத்தனமாக கேள்வியும் நானே பதிலும் நானே என்று முரசொலியில் புலம்பிக்கொண்டிருப்பது யாருங்க?

> கண்ணியம் என்கிற வார்த்தையை தாத்தா கருணா பாவிக்க ஏதாவது தகுதி வைச்சிருக்கிறாருங்களா? கண்ணியம் எங்கிற ஒண்ணு தாத்தாக்கிட்ட இருந்தாதானுங்களே அதை வீணடிக்க முடியும்.

> சரி விடுங்க அவருக்கிட்டதான் இல்லைன்னாலும் அவரோட குடும்பத்தில யாருகிட்டயாச்சும் கண்ணியம் எங்கிறது மருந்துக்காச்சும் இருக்கிங்களா?

> மக்கள் தனக்கு ஓய்வு தந்திருப்பதாக வாக்குமூலம் குடுத்தாரு, கம்முன்னு கெடக்கவேண்டியதுதானுங்களே, அப்பொறம் ஏன் தினமும் பினாத்தி பொலம்பிக்கிட்டிருக்காரு?


# தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி - பதில், அரிசி கடத்தல் பற்றி, பக்கம் பக்கமாக அறிக்கை வெளியிட்ட ஜெயலலிதா, ஆட்சிக்கு வந்த பின்னும், தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட, 145 டன் அரிசி, புதுவை மாநிலத்தில் பதுக்கியதாக, அவருக்கு ஆதரவான நாளிதழிலேயே செய்தி வந்துள்ளது.

> கூ.கு: வேலையத்த இவிரு சிவனேன்னு சும்மா கெடக்காம, அந்த அம்மாவ சீண்டிவிட்டு நில அபகரிப்பு மோசடியில அவரோட திமுக கட்சிக்காரங்க அத்தினிபேரும் கம்பி எண்ணிக்கிட்டிருக்கானுவ, சும்மா கெடக்கமாட்டாம அரிசிக்கடத்தல் பத்தி சங்கை ஊதி, அவரோட திமுக ஆட்சியில அரிசி கடத்தல்ல ஈடுபட்ட மிச்ச (திமுக) கட்சிக்காரரையும் மாட்டிவிடப்போறாரு.


# தி.மு.க., ஆட்சியில், இலங்கை தமிழர்களுக்காக, நான் எடுத்த நடவடிக்கைகள்,"எல்லாம் கண்துடைப்பு நாடகங்கள்' என சட்டசபையில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். நான், 1956ல், சிதம்பரம் தி.மு.க., பொதுக் குழுவில், இலங்கைத் தமிழர்களுக்கான தீர்மானத்தை முன்மொழிந்துள்ளேன். இதுபோன்று, இலங்கை தமிழர்களுக்கு பல நடவடிக்கைகளை ஆதரித்துள்ளேன். இதையெல்லாம் கண் துடைப்பு நாடகம் என்றால்,"ஒரு போர் என்றால், அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல' என்று அறிக்கை விட்டவர் ஜெயலலிதா. இதன் மூலமே, கண் துடைப்பு நாடகம் யார் ஆடுவது என்பது தெரியும்.

> கூ.கு: இவிரு நடத்தின சுத்துமாத்து எல்லாத்தையும் கண்துடைப்பு நாடகமுன்னு சொல்லாம கக்கூஸ் துடைப்புன்னா சொல்லமுடியும்?. ஒண்ணா ரெண்டா தாத்தா ஒங்க ஆக்டிங்கு அளவே இல்லாமபோச்சு. 1956 ல் ஒங்களோட சிதம்பரசக்கரம் யார் கேட்டாங்க, கடைசி போரில் ஈழத்தமிழர்கள் பட்ட அவஸ்த்தையை 2008 ல் இருந்து 2009 ஒங்களோடா 2 மணிநேர கடற்கரை லஞ்ச் நாடகம் வரைக்கும் நாங்க பாத்திட்டுத்தானே இருக்கோம்.

> அதென்ன தீர்மானத்தை முன் மொழிஞ்சீங்களா?. நீங்க முன் மொழிஞ்சுதான் என்ன பின்மொழிஞ்சுதான் என்ன.. நீங்க ஒளிஞ்சு விழையாடினதில எத்தினி அப்பாவி கொழந்தைங்க, தாய்மாருங்க, செத்தாங்க, எத்தினபேர கொன்னீங்க, அந்தக்கணக்கை எடுத்து விடுங்கசாமி,

> அந்தம்மா "ஒரு போர் என்றால், அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல' என்று அறிக்கை விட்டாலும் இன்னிக்கு ராஜபக்க்ஷவை தூக்கிலேத்தி ஈழத்தமிழர்களுக்கு சம உரிமை வாங்கி கொடுக்காம இந்த அரசு ஓயாது என்று நேரடியா இந்திய மத்திய அரசையும் ஸ்ரீலங்காவையும் மிரட்டுறாங்க. பாத்திட்டுத்தானே தள்ளுவண்டியில ஒக்காந்து கேள்வி பதில் எயுதிக்கொண்டிருக்கிறீங்க.

> நீங்கமட்டும் என்னவாம், மழைவிட்டு தூவானம் மாறவில்லைன்னு, 40 ஆயிரம்பேருக்கு முள்ளிவாய்க்காலில் ஒருநாளையில சங்கூதி ஆப்படிச்ச நரி தானுங்களே, முத்துக்குமார் நெருப்பில எரிஞ்சப்ப ராமகிருஷ்ணா மருத்துவமனையில நாரிப்பிடிப்புன்னு ஆளவந்தான் கமலஹாசன் கணக்கா ஒக்காந்து, முத்துக்குமாருக்கு வீட்டில ஏதோ பிரச்சினை அதுதான் தீக்குளிச்சு செத்திட்டான்னு கதை அளந்த வம்பந்தானே நீங்க.

> இலங்கை தமிழர்களுக்கு பல நடவடிக்கைகளை ஆதரித்துள்ளேன். ங்கிறீங்க அதுதான் ஒங்க செல்ல மகள் கனியும், ஒங்க கூட்டாளி தெருமாவும், கொழும்புக்கு போயி டக்கிளஸுக்கு, ஆதரவு தெரிவித்து சால்வை போட்டத சொல்லுறீங்களா. அப்பொறம் ராஜபக்க்ஷ, கோத்தபாய ஆட்களுடன் விருந்து உண்டு பரிசு வாங்கிவந்தத சொல்லுறீங்களா?

#இரண்டாவது முறையாக, அப்துல் கலாமை ஜனாதிபதியாக வர விடாமல், நான் தடுத்ததாக விஜயகாந்த் கூறியுள்ளார். பையத்தியக்காரர்களின் உளறலுக்கெல்லாம் பதில் சொல்லி, நேரத்தையும் கண்ணியத்தையும் வீணடிக்க விரும்பவில்லை.

கூ.கு: விஜயகாந்த் அவங்கதான் இன்னிக்கு தமிழகத்தோட இரண்டாவது பெரிய சக்தி. உலகத்தில் அதிகமான ரசிகர்களையும் தமிழகத்தில் அதிகமான தொண்டர்களையும் அவர் வைத்திருக்கிறார். பைத்தியக்காரத்தனமா அவரை வம்புக்கிழுக்காதீங்க காணாம பொயிடுவீங்க. நீங்க சொல்லுறமாதிரி தமிழ்நாட்டில நீங்க ஒண்ணும் இரண்டாமிடத்திலை கிடையாதுங்க. சட்டசபை தேர்தலில விழுந்த ஓட்டுக்கள் ஒங்களுக்கு விழுந்ததா நெனைச்சிடாதீங்க ஒங்களோட கூட்டு வைச்ச கட்சிங்களுக்கெல்லாத்துக்கும் அதில பங்கிருக்குங்க பிரிச்சு பங்குபோட்டு கணக்கு பண்ணிபாருங்க ஒங்க திமுக கடைசியில வருவீங்க ஆமா.


#தொல்காப்பியப்பூங்கா புத்தகத்திற்கு, தொல்காப்பியர் விருதை எனக்கு வழங்கி, அந்த விழாவில் கலாம் ஆற்றிய உரையை அறியாதவர்கள், இப்படியெல்லாம் சொல்கிற பொய்யை யார் நம்புவார்கள். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

கூ.கு: நீங்களே ஒரு பச்சை பொய்ப்பிண்டம்தானே. அப்படித்தானே உலகம் சொல்லுது, தொல்காப்பியம் பல ஆண்டுகளுக்கு முன் தொல்காப்பியரால் எழுதப்பட்டது அதிலபோய் நீங்க மூக்க நுழைச்சி 500 பிழைகள் விட்டதாக புலவர், அ.நக்கீரனார், ஆதாரத்துடன் 11,01,2003 ல் குற்றச்சாட்டுக்களுடன் திருத்தஞ்செய்து சுட்டிக்காட்டியிருந்தார். முதலில் சுயமாக எதையாவது பிழையில்லாமல் எயுத முயற்சி செய்யுங்க தாத்தா.
பொய்யை நீங்க எத்தின தடவை உரக்கச் சொன்னாலும் உண்மையாகாது,


> நீங்க பொறந்ததே பெரிய குத்தமா தமிழன் அழுவுறான் தயவு செஞ்சு அடங்குங்க, ஓய்வெடுத்துக்குங்க.

Friday, August 12, 2011

போர்க்குற்றவாளிகளை தூக்கில் ஏற்ற என்ன செய்யவேண்டுமோ அந்தப்பணியே முதன்மையானது.

இன்றைய காலகட்டம் மட்டுமல்லாது, நீண்ட காலமாக இலங்கையின் தேசிய இனமான ஈழத்தமிழர்கள், சிங்கள பாசிச வாதிகளின் அடக்குமுறையில் இருந்து விடுதலை பெறுவதற்கு எடுத்துக்கொண்ட அனைத்து முயற்சிகளும் வெவ்வேறு தலையீடுகளால், இன்றய திகதிவரை தடங்கலாக வந்திருக்கின்றன.

2009ல், இனப்படுகொலையில் முடிந்த சிங்கள இனத்தின் ஆக்கிரமிப்பு, ஒற்றை தமிழனும் இலங்கையில் இல்லாத அளவுக்கு அழித்தொழிப்பதற்கான திட்டங்களுடன் நகர்வுகள் தொடருகின்றன.

தமிழினமும் தன்னால் முடிந்த அளவுக்கு மான உணர்வுடன் எதிர்ப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் செய்து வருகிறது.

கடைசியாக இனப்படுகொலைக் குற்றவாளிகளை தண்டிப்பதற்கு தமிழினம் எடுத்துவரும் முயற்சியையும், இல்லாது அழிப்பதற்கு நரித்தனமான உள்ளடி வேலைகளும் வெளிப்படையான சதிகளும் தந்திரங்களும் பல முனைகளில், சர்வதேச மட்டத்தில் போட்டிபோட்டு நடைபெற்றுவருகின்றன.

தமிழினம் தொடர்ந்து அடிமையாக அழிந்துபோவதற்கு இலங்கைத்தீவில் பெரும்பான்மையாக பெருகிவிட்ட வந்தேறுகுடியான சிங்களவன் மட்டும் காரணமல்ல, சிங்கள இனத்தின் ஆதிக்க அராஜகத்திற்கு துணையாகி, சில அயல் நாடுகளும், ஈழத்தமிழரின் அழிவில் முக்கிய பங்கு வகித்தே வந்திருக்கின்றன.

உலக அரங்கில் தமிழனுக்கென்று ஒரு நிலப்பரப்பு இல்லாத காரணத்தால், தமிழனின் குரல் சரியான இடங்களுக்கு தடங்கலின்றி சென்று சேரவில்லை, புலம்பெயர் தேசங்களில் ஈழத்தமிழன் காலூன்றியதன் பிற்பாடே சில தகவல்கள் உலக அரங்கில் அறிமுகமாகியிருக்கின்றன.

அயலில் செல்வாக்காக இருக்கும் சில நாடுகள் திரிவுபட சொல்லுபவைகளை கேட்டு ஆடிக்கொண்டிருக்கும் உலக வல்லரசுகளும். இவையனைத்தையும் கட்டுப்படுத்தும் தகமை வாய்ந்த ஐநா மன்றமும் தர்கரீதியாக அராய்ந்து நியாயத்தை நிலைநிறுத்த தவறிவிட்டமையே ஒரு பழமையான, இன மக்கள் அழிந்து போவதற்க்கும் சிதைவுக்கும் மூல காரணமாகும்.

பல ஆண்டுகளாக கேட்பாரற்று, தினம் தினம் சித்திரவதைப்பட்டு செத்து அழிந்து கொண்டிருக்கும் சிறுமைப்பட்ட ஒரு இனமாக, செயற்கையாக வேண்டுமென்றே ஈழத்தமிழர்கள் ஆக்கப்பட்டிருக்கின்றனர்.

இது ஏன் எதற்கு! இதற்கு ஒரு முடிவுமில்லையா! என்கிற கேள்வி தமிழர்களைத்தாண்டி உலகமட்டத்திலும் இப்போ எழுந்திருக்கிறது, இருந்தும் சில சக்திகள் இவ்விடயத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளாமல் தடுத்து மூடிமறைக்க முயன்றாலும், மூடிவிடமுடியாத நிலைக்கு "இன அழிப்பு" படுகொலைகள் பற்றிய அவலங்கள் உலகத்தை அச்சுறுத்தும் வண்ணம் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

சம்பந்தப்பட்ட தமிழர்தரப்பு தொடர்ந்து முனைப்புடன் செயற்படாவிட்டால், சந்தற்பம் பார்த்து காத்திருக்கும் துரோகக்கூட்டங்களும் எதிரியும் சேர்ந்து உலகின் பார்வையை திசை திருப்பி குற்றச்சாட்டுக்கள் வீரியமற்று, விடயம் மூடி மறைக்கப்பட்டுவிடும் அபாயம் இருப்பதை உணரவேண்டும்.

வீரியமான இன மக்கள் என்று அறியப்பட்ட ஈழத்தமிழினம் காலப்போக்கில் அவுஸ்திரேலியாவின் பழங்குடிகள் போல, அருகி அழிந்து போவதற்கான அபாயத்தை சிங்களவனுடன் சேர்ந்து உலகத்திலுள்ள சில நாடுகள் செய்து முடித்துவிடும்..

ஈழ விடுதலைப்போராட்டம் தொடங்குவதற்கு முன், பல ஆண்டுகாலமாக அடக்குமுறை கொடுமையிலிருந்து மீழ்ச்சிபெற, அரசியல் ஈதியாக தமிழர்கள் எடுத்த முயற்சி எதையும் பெரும்பான்மையான சிங்கள இனம் மதித்து நடந்துகொள்ளவில்லை. நீர்மேல் எழுத்தாக அவை காணாமல்ப் போய்விட்டன.

வேறு வழியின்றி பட்டுணர்ந்த அனுபவத்தை ஞானமாக்கி மாற்றுவழியில் உயிரை பணயம் வைத்து மான உணர்வோடு தமிழினம் தொடர்ந்த ஆயுதப்போராட்டமும் வெற்றிபெறும் தறுவாயில் சில நாடுகளின் சுயநலத்தாலும் தவறான அணுகுமுறைகளாலும் பொய்ப்பிரச்சாரத்தாலும் வஞ்சகமாக தடுக்கப்பட்டுள்ளது.

போராட்டம் எந்த அடிப்படையில் எதற்காக தொடங்கப்பட்டது என்பதை தமிழினம் உலகுக்கு தெரியப்படுத்தியிருந்தும் கூட, உலக வல்லாதிக்க சூழ்ச்சிக்காரர்கள் சிலரின் கயமையினால், சிறிய இனமான தமிழினத்தின் குரல் நாகரீகமான உலக அரசியல் மட்டத்திற்கு சென்றடைய விடாமல் தடுக்கப்பட்டது.

காலம் கடந்து, இன்று பல நியாயவாத நாடுகள் போராட்டத்தின் நியாயம் அறியப்பட்டிருப்பதாக ஒப்புக்கொள்ளுகின்றன.

சனல்4 ஆவணப்படத்தை கண்ணுற்றபின் பிரித்தானிய அரசு, இலங்கை அரசாங்கத்தின் செயலை கண்டித்து போர்க்குற்றத்திற்கான விசாரணைகள் நடத்தப்படவேண்டுமென கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க வெளியுறவுச்செயலர் கிளாரி கிளிண்டன், அவர்களும் தமிழர்களின் ஆயுதப்போரட்டத்தின் நியாயத்தை தாம் முன்பு தவறாக புரிந்துகொண்டதாக கவலை தெரிவித்து தமிழ்நாட்டுக்கு வருகை தந்தபோது கருத்து கூறியிருக்கிறார்.

யதார்த்தமான நியாயத்தின் பிரகாரம் ஈழத்தமிழரின் விடுதலை போராட்டத்தை பகுப்பாய்ந்து பார்த்து நியாயக்கூறுகளின் வரையறைக்குட்பட்டு போராட்டத்தின் தாற்பரீகத்தை பரிசீலிக்க உலகம் முயற்சிக்கவில்லை. செல்வாக்கும் வல்லமையும் சுயநலன் சார்ந்த குறுகிய ஆதிக்க மனப்பாண்மையும் ஒரு இனத்தின் வாழ்வுக்கான உரிமைப்போராட்டத்தை சீரழித்திருக்கிறது.

கொலனித்துவ ஆதிக்கத்திலிருந்து இலங்கைத்தீவை சிங்களவரிடம் கையளித்துவிட்டுப்போன ஐக்கிய ராய்ச்சியம், தொடங்கலாக, பான் கீ மூனை பொதுச்செயலாளராக கொண்டியங்கும், இன்றைய ஐநா, அதிகார மையம்வரை ஈழ படுகொலைக் குற்றத்திற்கு ஒத்திசைவாகிய சூத்திரதாரிகளாக நாகரீக உடைக்குள் மறைந்திருக்கின்றனர்.

அப்படியிருந்தும் நியாயம் வெளியே மிதந்துவரும் இந்தச்சமையத்தில் சில சக்திகள் தங்கள் தரப்பை நியாயப்படுத்துவதற்கு கண்களை இறுக்கமூடிக்கொண்டு தமது தவறுகளை மூடிமறைப்பதற்கு தொடற்சியாக ஆயிரம் ஆயிரம் நியாயம் தப்பாக கற்பித்து தப்பிக்கொண்டிருக்கின்றன.

தமிழர்தாயகத்தின் 70 சத வீதத்திற்கும் மேலான பகுதிகளை சிங்கள ஆதிக்கத்திடமிருந்து மீட்டெடுத்து, தமது நிர்வாகத்திற்குள் கொண்டுவந்து, உலகமே வியந்துபார்த்த சிறந்தொரு ஆட்சியை நடத்திய விடுதலைப்புலிகளை சர்வதேச நாடுகள் சிலவற்றின் துணைகொண்டு முழுமையாக அழித்து ஆக்கிரமித்து மீதமுள்ள தமிழர்களையும் இல்லாதொழிப்பதற்கு ஸ்ரீலங்கா சிங்கள அரசு தொடர்ந்து முயற்சி செய்கிறது.

போர் நிறைவுற்றதாகக் கூறப்படும் கடந்த இரண்டு வருடங்கள் தாண்டியும், தமிழ் மக்கள் தங்கள் தாயகத்தின் பகுதியில் உள்ள தமது சொந்த வீடுகளில் திரும்ப குடியமரக்கூட அனுமதிக்கப்படவில்லை. காலா காலமாக வாழ்ந்துவந்த பெரும் பகுதியை நிரந்தரமாக இராணுவ முகாம்களுக்கும் இராணுவக்குடியிருப்புக்களுக்கும் சட்டவிரோத சிங்கள குடியேற்றவாசிகளிடமும், தமிழர்கள் பறிகொடுத்துள்ளனர். மீதமுள்ளவர்கள் தற்காலிக கொட்டகைகளில் எந்தச்சுதந்திரமும் இல்லாமல் இராணுவ காவலுக்குள் அடிமைகள் ஆக்கப்பட்டிருக்கின்றனர்.

தமிழர் தாயக நிலப்பரப்பின் பெரும் பகுதியை சிங்கள அராஜகத்தின் சின்னமாக, புத்தர்சிலைகளும் அரசமரக்கன்றுகளும் ஆக்கிரமித்திருக்கின்றன. இராணுவ ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டிருக்கும் தமிழர்கள், எதிர்த்து வாய் திறக்க முடியாமல் கொலை அச்சுறுத்தல் சூழ்ந்திருக்கிறது.

ஊடக சுதந்திரத்திற்குட்பட்டு தமிழர்கள் தமது தரப்புச்செய்திகளை வெளியிட முடியாத அடக்குமுறை தொடர்கிறது. சமீபத்தில் உதயன் பத்திரிகை செய்தி ஆசியரியர் செய்தி வெளியிட்டு படுகொலை செய்யப்படுமளவுக்கு விசமத்தனமாக தாக்கப்படிருக்கிறார்.

மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசியல்வாதிகள் கூட எதையும் தீர்மானிக்கமுடியாத அடக்குமுறை அராஜகம் தாண்டவம் ஆட்டுவதாகவும், தமிழினம் அடிமைகள் ஆக்கப்பட்டிருப்பதாகவும் சர்வதேசத்தின் மிகப்பிரபலமான றொய்ட்டர், செய்தி ஸ்தாபனம் தனது செய்தியில் கவலை தெரிவித்து பகிரங்கப்படுத்தியுள்ளது.

மஹிந்தசிந்தனை எனப்படும் துவேசமான கபட சிங்கள வேலைத்திட்டத்தின் கீழ், காடைச் சிங்களவர்களையும் இராணுவத்தையும் தூண்டிவிட்டு தமிழினத்தை அழிக்கும் நடவடிக்கை மும்முரப்படுத்தப்பட்டுள்ளது. மஹிந்த சிந்தனைக்கு ஆதரவாக யாழ் குடா நாட்டுக்கான நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கையும் மட்டுப்படுத்தி குறைக்கும் சதியும் நடைபெறுகிறது.

அரசாங்க அதிபர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் தலை கழுவப்பட்டும், மிரட்டப்பட்டும் தமிழருக்கு எதிராக அரசாங்கத்தின் ஊதுகுழலாக மாற்றம் பெற்றிருக்கின்றனர்.

மறுபுறம் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுவிட்டதாக கூறப்படும் வடக்கு கிழக்கைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளை, இராணுவத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் பங்குகொள்ளச் செய்யும் வகையில் அவர்களை துப்பாக்கி முனையில் திறந்தவெளியில் கொத்தடிமைகளாக இராணுவம் பயன்படுத்தி வருவதாக ஸ்ரீலங்காவின் சிங்கள பத்திரிகைகளே தெரிவிக்கின்றன.

இராணுவ முகாம்களில் மேற்கொள்ளப்படும் எடுபிடி வேலைகள், கழிவறைகளை சுத்தப்படுத்தும் பணிகள் ஆகியவற்றில், இவர்கள் கட்டாய பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும். அந்த இளைஞர், யுவதிகள் தெரிவித்துள்ளனர். வடக்கு கிழக்கில் இப்பணிகளில் சுமார் 8,000 க்கு மேற்பட்ட இளம் ஆண் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார். ஆனாலும் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்றே அஞ்சத்தோன்றுகிறது.

விடுதலைப்புலிகளை அடியோடு ஒழித்துவிட்டோம் இனியும் தீர்வு, அதிகாரப் பகிர்வு அது இது என்று பேசிக் கொண்டிருக்கத் தேவையில்லை என்று சர்வாதிகார மிடுக்குடன் பாதுகாப்பு அமைச்சின் செயலரும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தம்பியுமான, கோத்தபாய ராஜபக்ஷ உத்தியோகபூர்வமான பாணியில் திடுக்கிடும் தீர்மானம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

இலங்கையின் நிம்மதி இழப்புக்கும், அழிவுக்கும் காரணமாக இருந்துவந்த துவேச மனப்பாண்மையை, சிங்கள இனவாதிகள் எவ்வளவோ பாடம் கற்று கழுமரம் ஏறும் தறுவாயில்க்கூட கைவிடத்தயாராக இல்லை.

கோத்தபாய ஒன்றும் இலங்கை மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு பிரதிநிதியுமல்ல, நீண்டகாலமாக இழுபறியில் இருந்துவரும் இனப்பிரச்சினையை தீர்த்து வைக்கக்கூடிய தகுதி கொண்டவருமல்ல, இராணுவச்சிப்பாயாக இருந்து, அண்ணன் மஹிந்தரினால் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பதவி உயர்வு பெற்றவர் என்ற தகுதி மட்டே உடையவர்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி, மற்றும் அமைச்சர்கள் குளறுபடியான குறைப்பிரசவமான கருத்துக்களை வெளியிட்டாலும்,பேசுவதற்கான ஒரு தகுதியாவது இலங்கை அரசு மட்டத்தில் அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் சர்வாதிகாரியான மஹிந்தவின் தம்பி என்ற ஒரு தகுதியையும் பாதுகாப்பு சம்பந்தமாக சில கருத்துக்களை பத்திரிகைகளுக்கு கூறவல்லவருமான கோத்தபாய, தமிழர்களின் எதிர்காலம் பற்றிய தீர்வுத்திட்ட அதிகார அலகுகள் பற்றிய முடிவுகளை ஒரு இராணுவ ஆட்சியாளரின் தலைமைத்துவ தொனியோடு எழுந்தமானத்தில் கூறியிருக்கிறார்.

தம்மிடம் "இறைமையுடன் கூடிய அரசமைப்பு" ஒன்று இருக்கிறது என்றும். அதில் மேலும் திருத்தங்கள் செய்ய வேண்டி இருந்தால் மட்டும் அந்த நேரத்தில் வடக்கு கிழக்கில் பிரதிநிதித்துவம் பெற்ற நாடாளுமன்ற தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் பேச முடியும். வேறு தேவையும் தமிழருக்கு இல்லையென்றும், மேலதிகமாக தமிழர்களுக்கான திர்வுத்திட்டம் என்று எதுவும் தேவையில்லை என்றும், நாட்டின் சகல அதிகாரங்களையும் கொண்டவர்போல கோத்தபாயவின் கூற்று அமைந்திருந்தது.

இந்தியாவின் ஹெட்லைன்ஸ் ருடே ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியின்போதே கோத்தபாய தனது அடக்குமுறை கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

1948 ம் ஆண்டிலிருந்து சிங்கள அரசியல் கயமைகள் பாராளுமன்றத்தில் தமிழரை ஏமாற்றியே வந்திருக்கின்றனர். மூன்றாம் தரப்பு ஒன்று, அல்லது சர்வதேச தலையீடு இல்லாமல் சிங்களவர்களை நம்பி இலங்கையின் உள்நாட்டுப்பிரச்சினை தீர்க்கப்படமுடியாது என்பது இலங்கையில் வாழும் ஒரு தெருப்பிச்சைக்காரனும் தீர்ப்பு கூறுமளவுக்கு நிலைமை இருக்கிறது.

இறுதிப் போரின் போது நடந்தவைகள் குறித்து அனைத்துலக விசாரணை ஒன்று வேண்டும் என்று கேட்பது எமது ஆளுமையைக் குறைத்து மதிப்பிடுவதாக அமைகிறது என்றும் கோத்தபாய தனது புலமையை வெளிப்படுத்த தவறவில்லை.

ஒரு இறைமையுள்ள நாட்டுக்குள் எப்படி அனைத்துலக விசாரணை ஒன்றை முன்னெடுக்க முடியும்? அது நியாயமற்றது. அப்படி விசாரணை கோருபவர்களை சர்வதேச சமூகம் என்று குறிப்பிடுவது தவறான விபரிப்பு என்றும் கூறியிருக்கிறார்.

இலங்கை இறைமையுள்ள?? ஒரு நாடு. பிரிட்டிஷார் விட்டுச் சென்ற சிறந்த நீதித்துறை எம்மிடம் இருக்கிறது. இலங்கையின் இறைமைக்குட்பட்டு சரியான தீர்வை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் எம்மை நிச்சியமாக உலகம் நம்பவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

மொத்த உலகமும் எங்களை ஆதரிக்கிறது. ரஷ்யாவில் ஆரம்பித்து சீனா, மற்றும் அதிக சனத்தொகை கொண்ட பிராந்திய வல்லரசான இந்தியாவும், நிச்சயமாக எங்களைத்தான் ஆதரிக்கிறது, பாகிஸ்தான், அரபு, ஆபிரிக்க நாடுகள் அனைத்தும் எங்களை ஆதரிக்கின்றன. அவைதான் சர்வதேச சமூகம். ஒரு சிலர் மட்டும் தங்களை சர்வதேச சமூகம் என்று கூறிக்கொள்ள முடியாது. அத்தகைய ஒரு அனைத்துலக விசாரணையை இந்தியா அனுமதிக்கும் என்று நான் நினைக்கவில்லை, என்று இந்தியாவின் நிலைப்பாட்டையும் நம்பிக்கையுடன் தெரிவித்திருந்தார்.

போரில் எந்த ஒரு பொதுமகனும் கொல்லப்படவில்லை என்று நான் சொல்லமாட்டேன். ஆனால் அந்த எண்ணிக்கை மிகச் சிறியது என்று என்னால் சொல்ல முடியும். பெரும் படுகொலை என்று அதனை வகைப்படுத்த முடியாது??. என்னுடைய வாதம் எல்லாம், ஏன் எந்த ஒரு அனைத்துலக நிறுவனமும் ஒரு இறைமையுள்ள அரசைச் சந்தேகிக்க வேண்டும் என்பதுதான் என்றும் கூறியிருக்கிறார்.

ஆரம்பகாலம் தொட்டு விடுதலைப்புலிகளின் மாவீரர்களின் விபரங்களின்படியும், இறுதி யுத்தத்தின்போதான மாவீரர்களின் அண்ணளவான கணக்குப்படியும், போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்து 2009 மே போராட்டம் நிறித்திவைக்கப்பட்டிருக்கும் காலம்வரை மாவீரரான போராளிகளின் எண்ணிக்கை அண்ணளவாக முப்பத்து இரண்டாயிரத்திலிருந்து, முப்பத்து ஆறாயிரம் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இதே காலங்களில் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் சரியான தொகை ஒருபோதும் அரசதரப்பு வெளிவிடவில்லை. ஒவ்வொரு சந்தற்பத்திலும் இருட்டடிப்பு செய்யப்பட்டு ஒவ்வொரு எண்ணிக்கை கூறப்பட்டு வந்திருக்கிறது. இருந்தும் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் எண்ணிக்கை நாற்பதினாயிரத்திற்கும், அதிகமாக இருக்கலாம். ஆயுதம் தூக்கி போராடிய இரண்டு தரப்பிலும் மரணித்தவர்களின் தொகையை கணக்கிட்டால் கிட்டத்தட்ட எண்பதுனாயிரம்பேர் மாண்டிருக்கலாம்.

முள்ளிவாய்க்கால் முற்றுகையின்போது, 2009 ஏப், கருணாநிதியின் உண்ணா மறுப்பு நாடகத்தின் பின்னரான ""ஒரு சிலநாட்களில் மட்டும் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஸ்தலத்தில் நின்றிருந்த ஐநா அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்"".

அவைபோக கிளிநொச்சியின் வீழ்ச்சியின் பின்னரான முள்ளிவாய்க்கால் முற்றுகையில் குறைந்தபட்சம், ஒரு இலட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர், காணாமல்ப்போனவர்களின் பெரிய பட்டியல் கணக்கற்ற பெருந்தொகையாக இருந்துகொண்டிருக்கிறது. இப்படி அதிர்ச்சியளிக்கும் தமிழர்களின் இன அழிப்பு கணக்கு இருக்கும் நிலையில், கோத்தபாய அவர்களுக்கு தமிழர்களின் பல இலட்சம் படுகொலை அழிப்பு சிறிய தொகையாக தெரிகிறது. இப்படியான வக்கிர எண்ணம் குடிகொண்டிருக்கும் சிங்கள ஆட்சியாளர்கள், இறைமை, முறைமை, என்று இலக்கணம் பேசமுடியுமே தவிர, முடிவான தீர்வுத்திட்டம் எதையும் நிறைவேற்றப்போவதில்லை.

இரு இனங்களும் இணைந்து வாழ்வதற்கு தற்போது இருக்கும் அரசமைப்பே போதுமானது. அதில் எந்தப் பிரச்சினைகளும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. என்று சாகக்கிடக்கும் இந்த சர்வாதிகார கோத்தபாய விடுத்திருக்கும் அறிக்கை பலமொழிகளிலும் மொழிபெயர்த்து உலக அரங்கில் பகிரங்கப்படுத்தவேண்டிய ஒன்றாக இருக்கிறது.

அதிகாரப் பகிர்வு என்ற ரீதியில் நாங்கள் போதியளவுக்கு ஏற்கனவே வழங்கி விட்டோம், என்றே நான் நினைக்கிறேன். அதைவிட மேலதிகமாக ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. கலந்துரையாடல்கள் மூலம் இதைத்தான் தீர்வாக மக்களிடம் கொடுக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன், என்று அப்பட்டமான அடக்குமுறையை வெளிப்படுத்தி தனது கழுத்தறுப்புத் திட்டத்தை இந்தியாவின் ஒப்புதலோடு கூறியிருக்கிறார்..

இந்தியாவுடன் இணைந்து நடத்திய படுகொலைகளை கோத்தபாய, தமிழருக்கான அதிகாரப்பகிர்வு என்று ஹெட்லைன்ஸ் ருடே, க்கு கூறியிருக்கிறார்.

வட இந்தியாவிலிருந்து ஒளிபரப்பாகும் அத் தொலைக்காட்சி செவ்வியை, ஊமை பிரதமர் பார்த்திருக்காவிட்டாலும் அந்நாட்டின் புலனாய்வுத்துறை கவனித்திருக்கக்கூடும். கோத்தபாயவின் வாக்குமூலத்தை ஒப்புக்கொள்வதுபோலவே அந்நாட்டின் வெளிவிவகாரத்துறையின் அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணாவின் நிலைப்பாடும் இருப்பதாகவே அவரது சமீபத்திய நாடாளுமன்ற பேச்சு அமைந்திருந்தது.

இலங்கையில் போரின் போது ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து, "சேனல் 4' ஒளிபரப்பிய காட்சிகள் குறித்து தெரியும். "அது இப்போது முக்கியமல்ல". இலங்கை பயங்கரவாதத்திற்காகப் பலியான நாடு என்றுகூட சொல்லலாம். கடந்த 30 ஆண்டுகளாக, அங்குள்ளவர்கள் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயுதப் போராட்டக்காரர்களுடன் போராடியே வந்த நாடு. போரினால் வீடுழந்து தவிக்கும் தமிழர்களுக்கு, வீடு கட்டித் தருவதற்கு இந்தியா அனைத்து உதவிகளையும் செய்தது என்று கோத்தபாய கூறியதை சற்று மாற்றி எஸ் எம் கிருஸ்ணா கூறிவிட்டு தூக்கத்தை தொடர்ந்திருக்கிறார்.

கிருஷ்ணாவின் கூற்றுப்படி இனப்படுகொலை ஒன்றும் முக்கியமில்லை, செத்தவர்களின் பேரால் சில வீடுகளை கட்டித்தருவதாக சொல்லிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று மடைத்தனமான ஒரு கருத்தை சொல்லியிருக்கிறார்.

உதயன் செய்தி ஆசிரியர் தாக்கப்பட்டமை ஒரு சின்ன விடயம். இலங்கையில் நாளாந்தம் நடக்கும் தாக்குதல்களுடன் ஒப்பிடும்போது இது ஒன்றும் பெரிய விடயமே இல்லை. இது சாதாரணமானது. மற்றைய நாடுகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுவாக நடக்கின்றன என்று தனது நாட்டில் நடைபெறும் சாக்காட்டு செய்தியை அசாதாரணமாக அந்த தொலைக்காட்சி செவ்வியின்போது கோத்தபாய ஒப்புக்கொண்டிருக்கிறார்.

மிகப்பெரிய சர்வாதிகாரிக்கான தொனியில் அமைந்த கோத்தபாயவின் தலைக்கனமான பேச்சு அப்பட்டமாக ஸ்ரீலங்காவின் நிலைப்பாட்டை வெளிக்காட்டியிருக்கிறது.

கோத்தபாயவின் சர்வாதிகார நிலைப்பாட்டை ஆமோதிக்கும் விதத்தில் இந்திய ஊழல் நாட்டின் பொம்மை பிரதமர் மன்மோஹன் சிங் கோத்தபாயவின் நிலைப்பாட்டை நிராகரிக்க முடியாது என்றும் எதிர்க்க முற்பட்டால் இந்தியா அழிந்துபோகும் என்று தனது கவலையை வைக்கோ அவர்களுக்கு அப்பாவியாக தெரிவித்து அழுதிருக்கிறார்.

தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளால் விடுக்கப்பட்டுவரும் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அயல்நாடான இலங்கை மீது ஒருபோதும் பொருளாதாரத் தடையை ஏற்படுத்த முடியாது. இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அழுத்தம் கொடுப்பதற்கு இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இலங்கையின் சிங்களவருக்கான அபிவிருத்தி மற்றும் வர்த்தக தொடர்புகளில் இருந்து இந்தியா விட்டு விலகும் போது அந்த இடத்தை சீனா பிடித்துவிடும், இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல்களை நடத்துவதற்காக சீனா ஏற்கனவே இலங்கைக்கு கடற்படை உதவிகளை வழங்கியுள்ளது. அவற்றைக்கூட தட்டிக்கேட்கக்கூடிய நிலையில் இந்தியா இல்லை.

அத்துடன் சீனா பாகிஸ்தானை நெருங்கிய நட்பு நாடாக வைத்திருக்கிறது, அப்படியிருக்கையில் நாம் இலங்கையுடனான பொருளாதார தொடர்புகளை முறித்துக் கொண்டால் அது இந்தியாவிற்கு பாதகமாகவும், அச்சுறுத்தலாகவும் அமையும் என்பதை, தலைப்பா கட்டிய ஊமை, பொம்மை பிரதமர் வெட்கமில்லாமல் வைகோ அவர்களுக்கு சொல்லிவிட்டு சப்பாத்தி சாப்பிட சென்றுவிட்டது எனத்தெரியவருகிறது.

சீனா அதி நவீன படகுகளை கொடுத்து ஸ்ரீலங்காவின் இராணுவத்தின் மூலம் தமிழக மீனவர்களை அழிப்பது தெரிந்திருந்தும். இந்திய மத்திய அரசு ஸ்ரீலங்காமீது, ஆக்கபூர்வமாக இதுவரை எந்த நடவடிக்கைகளையும் எடுத்ததில்லை. வைகோ அவர்களின் சந்திப்பின்போது பொம்மை பிரதமர் அதை அப்பட்டமாக ஒத்துக்கொண்டிருக்கிறார்.

தனது நாட்டிலுள்ள தமிழ் மக்களை அழிக்கும், ஒரு சிறிய அயல்நாடான இலங்கையை கண்டிக்காமல் தண்டிக்காமல் சர்வதேச போர்க்குற்றச்சாட்டிலிருந்து ஸ்ரீலங்காவை பாதுகாக்க இந்திய ஆட்சியாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனரே தவிர, தனது நாட்டின் மக்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்று கொள்கையளவில்க்கூட அக்கறைப்படாமலிருப்பது இலங்கை தமிழ் இன அழிப்பில் இந்தியாவின் பங்கு எவ்வளவு என்பது புரிகிறது.

மன்மோஹன் சிங்கின், இந்தக் கருத்தின்படி,, சீனாவுடனும், ஸ்ரீலங்காவுடனும், எந்தவிதத்திலும் இந்தியாவால் மோதமுடியாது என்பது தெரிகிறது. இவ்வளவு மோசமான பலயீனம் இந்திய மத்திய அரசிடம் இருப்பதால் ஈழத்தமிழர்களை ஈழத்திலும், தமிழகத் தமிழர்களை இந்திய கடற்பரப்பிலும் தொடர்ந்து பலிகொடுத்துக்கொண்டிருப்பதை தவிர வேறு வழி இந்தியாவுக்கு இல்லை என்றும், இது ஒன்றும் தப்பில்லை. என்றும், மன்மோஹன் சிங், ஏதோ ஒன்றிற்காக, சம்பந்தப்படாத ஏதோ ஒன்றை இரையாக்குவது சரியே என்று நியாயப்படுத்துவது புரிகிறது.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்றைக்கும் தமிழினத்திற்கு எதிராக இருப்பதால், இலகுவாக ஈழப்போராட்டத்தில் இந்தியா ஊடுருவி அப்பட்டமாக ஸ்ரீலங்காவிற்கு உதவி செயற்பட முடிந்திருக்கிறது. அதற்கு பக்க பலமாக கூட்டாளிக் கட்சியான திமுக எந்தவிதத்திலும் குறைவில்லாமல் ஒத்துழைத்து வருகிறது.

படுதோல்வியடைந்து தமிழ்நாட்டிலிருந்து ஆட்சி அதிகாரத்திலிருந்து விரட்டப்பட்டு, எதிர்க்கட்சி என்ற நிலைக்கும் இல்லாமல் ஓலம்பாடி ஒப்பாரி அரசியல் செய்துகொண்டிருக்கும், திமுக, 2008, 2009, ல் குடும்ப பதவிக்காக தமிழின அழிப்பில் மத்திய காங்கிரஸுடன் கைகோர்த்து செயற்பட்டது. இன்று தமிழ் நாட்டிலிருந்து விரட்டப்பட்டாலும் ஸ்பெக்ரத்தில் குற்றவாளிகளான குடும்பத்தினரை காப்பாற்றுவதற்காகவும், நில மோசடி, கட்டப்பஞ்சாயத்து, கொலைகுற்றம், போன்றவற்றிலிருந்து தப்பிப்பதற்காகவும், காங்கிரசை விட்டு விலக முடியாத வில்லங்கத்தில் மாட்டியிருக்கிறது. இதை திமுகவின் கூட்டாளியான தோல் திருமா, திமுக இன்று சூழ்நிலைக்கைதியாக இருக்கிறது என்று நக்கலடித்து குத்திக்காட்டினார்.

சமீபத்தில் இலங்கை போர் நடைபெற்ற போது, அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டது குறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டிருக்கும் அறிக்கை தொடர்பாக பார்லிமென்டில் விவாதம் நடத்த, தமிழகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. - கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் விதி எண் 193 ன் கீழ் விவாதிக்கப்படவேண்டுமென நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

தி.மு.க.வும் தனது பங்கிற்கு நோட்டீஸ் ஒன்றை தாக்கல் செய்திருந்தது. அப்போ திமுக திருந்தி தமிழ் இன உணர்வுடன் நோட்டீஸ் தாக்கல் செய்திருப்பதாக அப்பாவிகள் சிலரால் நம்பப்பட்டது.

ஆனால் நேற்றைய தினம் திமுக நோட்டீஸ் தாக்கல் செய்ததன் தந்திரம் விதி எண் 193ன் கீழ் நடைபெற இருக்கும் விவாதத்தின் கருப்பொருளே மாற்றியமைக்கத்தான் என்ற உண்மை வெளிவந்திருக்கிறது.

லோக்சபாவில், விதிஎண் 193ன் கீழ், பொது விவாதமாக நடைபெறவுள்ள இலங்கை தமிழர் பிரச்னை, கடந்த வாரமே நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், நடக்கவில்லை. இந்நிலையில், லோக்சபா அலுவல்கள் குறித்த கையேடு நேற்று காலை வழக்கம் போல அனைவருக்கும் வினியோகிக்கப்பட்டது. அதில், இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து ஐ.நா., சபை வெளியிட்டுள்ள அறிக்கையை மையமாக வைத்து பொது விவாதம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அ.தி.மு.க., சார்பில் தம்பித்துரை மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் சிலர் இதுகுறித்த நோட்டீஸ் அளித்திருந்தாலும், தி.மு.க.,வின் பார்லிமென்டரி கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு அளித்த நோட்டீஸ் மட்டுமே பட்டியலாகியிருந்தது.

Discussion under rule 193 shri T.R.BAALU, shri SHAILENDRA KUMAR to raise a discussion on alleged killing of Sri Lankan Tamils by Sri Lankan army in the year 2009 as recently revealed in a United Nations Report என்ற வாசகங்கள் இடம்பெற்று இருந்தன. இந்த லோக்சபா குறிப்பேடு, பத்திரிகையாளர்கள் மற்றும் எம்.பி.,க்கள் என, அனைவருக்குமே காலையிலேயே வினியோகிக்கப்பட்டது. ஆனால், பா.ஜ.க வினர் அமளி காரணமாக சபை ஒத்திவைக்கப்பட்ட நேரத்தில், எம்.பி.,க்கள் மத்தியில், திருத்தப்பட்ட ஒரு குறிப்பேடு வினியோகிக்கப்பட்டது.

அதில், இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தின் விவாதம் குறித்து, காலையில் அளிக்கப்பட்டிருந்த குறிப்பேடு வாசகங்கள் அப்படியே மாற்றியமைக்கப்பட்டிருந்தன. ஒரு சில எம்.பி.,க்கள் இதை கண்டு ஆச்சரியமும், குழப்பமும் அடைந்தனர். அதாவது, ரிவைஸ்டு லிஸ்ட் ஆப் பிசினெஸ் என, தலைப்பிட்டு அதில், இலங்கையில் வாழும் தமிழர்களின் புனர்வாழ்வுக்கு இந்தியா செய்து வரும் உதவிகள் மற்றும் நடவடிக்கைகள் மீதான விவாதம் நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதாவது, shri.T.R.BAALU, shri SHAILENDRA KUMAR to raise a discussion on the steps taken by Government of India for relief and resettlement of Tamils in SriLanka and other measures to promote their welfare என்று வாசகங்கள் மாற்றம் செய்யப்பட்டிருந்தன. போரின்போது அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்பது பார்லிமென்டில் விவாதமாக வரக்கூடாது என இந்திய அரசு கவனமாக இருப்பது தெரிகிறது. இந்த வரிகள் மாற்றியமைக்கப்படுவதற்கு திமுக எம்பி, ரி ஆர் பாலு சமர்ப்பித்த நோட்டீஸ் பயன்படுத்தப்பட்டிருப்பதால் காங்கிரஸ் திமுக கூட்டுச்சதியின் பின்னணியிலேயே நிச்சியம் இந்த மாற்றம் நடத்தப்பட்டிருக்கிறது.

வாதத்திற்கு எடுத்துக்கொண்டாலும் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் கொண்ட எம்பிக்களின் எண்ணிக்கையில் திமுக அதிகமாக இருப்பதால் திமுக வின் நோட்டீஸ் முன்னிலைப்படுத்தப்பட்டதாக நியாயப்படுத்தவும் தகுதி இருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்பி திருமா, திமுக கூட்டணியில் இருந்து விலகிவிட்டதாக தெரிவித்திருந்தாலும். இச்சந்தற்பத்தில் தந்திரவாதியான, திருவாளர் திருமா பாராளுமன்றத்தில் சமூகமளிக்கவில்லை.

இறுதியாக: ஈழத்தமிழர் பிரச்சினையில் இந்தியா தீர்வு பெற்றுத்தரும் என்று யாராவது நம்பினால் அதைவிட பெரிய கற்பனைக்கோட்டை வேறு எதுவுமாக இருக்கமுடியாது. அரசியலோ ஆயுதப்போராட்டமோ ஈழத்தமிழர்கள் சரியாகத்தான் செய்துகொண்டு வந்திருக்கின்றனர், வருகின்றனர். குறுக்கே புகுந்து நாசகார வேலைகளில் இந்தியா எப்போதும் மூக்கு நுழைத்து சேறடித்தே வருகிறது.

சம்பிரதாயத்திற்கு வேண்டுமென்றால் சிலர் சொல்லுவதுபோல் இந்தியாவை இணைத்து பயணிப்போம் என்பது சரியாகவும் இருக்கக்கூடும்.ஆனால் காரியம் தடங்கலும் கழுத்தறுப்பும் மிஞ்சுமே தவிர கால் காசுக்கு பலன் கிடைக்கப்போவதில்லை.

இன்று தமிழினத்தினதும், தமிழினத்தினது நட்புச்சக்திகளினதும் குறியாக, போர்க்குற்றத்தில் எவர் ஈடுபட்டிருந்தாலும் அவர்களை தண்டிப்பதற்காக உலக அரங்கில் திரண்டுவரும் அனைத்து ஆதரவையும் திரட்டி,, குற்றவாளிகளை கூண்டிலேற்றி, கழுமரத்தில் ஏற்றி, தலை முழுக முனைப்பாக முயற்சிக்க வேண்டும். மற்றவை அனைத்தும் சரியாக நடைபெறும்.

போர்க்குற்றம் என்கிற ஒரேயொரு அஸ்திரம்தான் இன்று பலரை திகைப்பூண்டில் மிதித்த வழிப்போக்கனைப்போல திகைக்கவைத்து. அதிகாரப்பகிர்வு, அபிவிருத்தி, தீர்வுத்திட்டம், என்று ஏதேதோ பேசவைத்து, போர்க்குற்ற விசாரணையை திசை திருப்பி இழுத்தடிக்க அல்லது இல்லாமல்ச்செய்ய புலம்ப வைக்கிறது.

கூட்டத்தோடு கூட்டமாக போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் பலர் போர்க்குற்றம் விசாரிக்கப்படவேண்டும் என்று குரல் கொடுப்பதை தமிழர்கள் பலர் இன்னும் இனங்காணவில்லை. குற்றவாளி ராஜபக்க்ஷவை குற்றவாளிக்கூண்டில் ஏற்றினால் மற்றக்குற்றவாளிகளை ராஜபக்க்ஷ இனங்காட்டி உதவுவார். எல்லாமே சுபமாக முடிவுக்கு வரும்.

மீண்டுமொருமுறை தமிழினம் நன்கு சிந்தித்து இன்றைய எமது முக்கிய பணி போர்க்குற்றவாளிகளை தூக்கில் ஏற்ற என்ன செய்யவேண்டுமோ அந்தப்பணியே முதன்மையானது என்று உறுதியெடுத்துக்கொள்ள வேண்டும்.மற்றவை எல்லாம் சரியாக நடப்பதாகவே படுகிறது.

ஈழதேசம் இணையத்திற்காக
கனகதரன்,

நன்றி ஈழதேசம் இணையம்.