Tuesday, February 22, 2011

திருமாவின் அஞ்சலியை முற்றாக நிராகரித்த "தேசத்தின் அன்னை"

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தாய் அன்னை பார்வதி அம்மாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்கச் சென்ற விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் குழுவினர் கொழும்பு விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு உடனடியாக சென்னைக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக செய்தி வந்திருந்தது.
அதைத்தொடர்ந்து விடுதலைச்சிறுத்தைகள் சங்கத்தின் தலைவர் திருமாவளவன் தனது நியாயப்பாட்டையும் அவருக்கு நிகழ்ந்த அவமானத்தையும் அறிக்கை ஒன்றின்மூலம் வெளிப்படுத்தியிருந்தார், அவர் வெளிப்படுத்தியிருக்கும் கருத்துக்கள் குற்றச்சாட்டுக்கள் அப்படியே எதிர்மறையாக முன்னுக்குப்பின் முரண்பட்டதாகவும் அவர் ஏதோ சுயலாபம் தேடி அழுவதுபோலவும் படுகிறது, அவரது அறிக்கையும் ஆவேசமும் சென்னையில் அவர் ஸ்ரீலங்கா தூதரகத்தின் முன் நிகழ்த்திய ஆற்பாட்டமும் அவருக்கு இலாபத்தை நட்டத்தை தருகிறதோ இல்லையோ ஈழத்தில் மரணவிளிம்பில் நின்றுகொண்டிருக்கும் இளம் சந்ததியினருக்கு வேண்டாத நெருக்கடிகளை தோற்றுவிக்கும் என்பது கடந்தகால அனுபவம்.

திருவாளர் திருமாவளவன் தமிழீழ தேசத்தின் அன்னைக்கு அஞ்சலி செலுத்த முயற்சித்ததை எவரும் கொச்சைப்படுத்தவில்லை தடுக்கவுமில்லை, அண்ணன் அவர்கள் சட்டசபை தேர்தலில் ஏற்படப்போகும் தோல்விக்கு அனுதாபம் தேடுவதற்கு கருணாநிதியால் அனுப்பப்பட்டிருக்கும் ஒரு ஆயுதம், தேசத்து அன்னையின் மறைவுக்கு அழுதுபுலம்பும் திருமா அவர்கள் 2009ல் கூட்டங்கூட்டமாக ஈழம் பிணக்காடானபோது கருணாநிதிக்கும் அந்தோனியோ மொய்னோ என்ற சோனியாவுக்கும் வாழ்த்துப்பாடி வழிமொழிந்ததை வசதியாக வெகு விரைவில் மறந்திருக்கிறார்.

திருமா திருப்பி அனுப்பப்பட்டதும் ஒருவகைக்கு அவருக்கு நல்லதே சிலவேளை அவர் வல்வெட்டித்துறைக்கு சென்றிருந்தால் அங்குள்ள தாய்மார்கள் விளக்குமாறு ஆராத்திக்கு உட்படுத்தியிருக்கவும் கூடும் அந்த பழி கடவுள் கிருபையால் தடுக்கப்பட்டிருக்கிறது.

2009 முள்ளிவாய்க்கால் முற்றுகையின்போது கொல்லப்பட்ட தாய்மார்களும் குழந்தைகளின் படுகொலை அவலங்களையும் அன்னை பார்வதி அம்மா அவர்கள் நேரடியாக இருந்து இரண்டறக்கலந்து அனுபவித்த சோகங்கள் கவலைகள் கொஞ்ச நஞ்சமல்ல.

அந்த வெறுப்பும் விரக்தியும் அம்மா இறந்துபோனாலும் அந்த ஆத்மாவின் ஆவியில் ஆழமாக என்றும் மாறாத வடுவுடனேயே உடலைவிட்டு பிரிந்து சென்றிருக்கிறது, அம்மா அவர்களின் அடிமனதில் அன்று திருமா ஏற்படுத்திய விரும்பாத குத்துக்கரணங்கள் தலைவருக்கு செய்த நம்பிக்கை மோசடிகள் வெறுப்பின் உச்சத்துக்கு சென்றிருந்தாலும் அம்மா அவற்றை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.

அம்மா அவர்கள் மறைந்து இறைபதம் அடைந்திருந்தாலும், அவர் உயிருடனிருக்கும்போது திருமா செய்த இரண்டக அதகளியை மறக்காமல் தனது பூதவுடலுக்கு திருமாவின் அஞ்சலியை வேண்டாமென்று நிராகரித்துவிட்டார்கள் என்றே நான் மனதார நம்புகின்றேன்.

ஒன்றை திருமாவும்சரி, இந்திய ஆதிக்கவாதிகள் எவராக இருந்தாலும் சரி நன்கு புரிந்துகொள்ளவேண்டும், இவர்களின் அசிங்கமான உள்நோக்கம் கொண்ட அரசியலை எங்களது அற்பணிப்பான புனிதமான போராட்டத்துடன் கலப்பதை அதிகமானவர்கள் விரும்பவில்லை, நாகரீகம் கருதி நாசூக்காக சில சமிக்கைகளை காட்டமுடியுமேதவிர எட்டப்பன் கருணாநிதியைப்போலவோ மற்றய அரசியல் வியாபாரிகள் போலவோ எட்டி உதைத்து முகத்துக்கு கரிபூச எம்மவர்கள் விரும்புவதில்லை.

அன்னையின் இறுதி வணக்க நிகழ்வில் கலந்துகொண்டு விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் அஞ்சலி செலுத்துவதற்காக நேற்று (21.02.2011) நள்ளிரவு 12.30 மணியளவில் கொழும்பு சென்றபோது. எமது குழுவினரை வல்வெட்டித்துறைக்கு அழைத்துச் செல்ல தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விமான நிலையத்தின் வெளியே காத்திருந்ததாகவும். கொழும்பு விமான நிலையத்தில் ஸ்ரீலங்கா அரசின் குடிவரவுத் துறை அதிகாரிகள் வழிமடக்கி, இலங்கைக்குள் நுழைய அனுமதியில்லை. இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள் என்று கூறினர் என்று கூறியிருக்கிறார்.

உறவினர்கள் எவரும் அருகில் இருக்க சந்தற்பமில்லாத சூழலில், பாரிசவாத நோயாளியாக மிக சிரமப்பட்டு மருத்துவத்திற்காக தமிழ்நாட்டுக்கு சென்ற எங்கள்தேசத்தின் அன்னை பார்வதி அம்மாவை, விமான நிலையத்தில் வைத்து நெஞ்சில் ஈரமில்லாமல் திருப்பி அனுப்பிய கருணாநிதியின் கைத்தடி திருமாவை சிங்களவன் திருப்பி அனுப்பியதில் எமக்கு மனக்கிளர்ச்சி வேதனை எதுவுமில்லை, அம்மாவை மருத்துவத்திற்கு அனுமதிக்காத இந்திய அரசாங்கத்தில் இரண்டறக்கலந்து அங்கம் வகிக்கும் ஒரு விரும்பத்தகாத ஒருவராகவே திருமாவை காலமும் சந்தற்ப சூழல்களும் முடிவு செய்திருக்கிறது.

முற்றுமுழுதான சுயலாபநோக்கோடு தேர்தல் விளம்பரம் தேடி வந்த ஒருவரை வரவேற்க தமிழர் தேசியக்கூட்டமைப்பினர் வந்திருந்தால் அவர்கள் முகத்திலும் கரிபூசப்பட்டிருக்கிறது, இனியாவது தேவையற்ற காவடிகளை த தே கூ அமைப்பினர் ஆர்வக்கோளாறுகாரணமாக அவசரப்பட்டு ஆரவாரஞ்செய்யமாட்டார்கள் என நம்புவோம்.

நாங்கள் பிரபாகரன் அவர்களின் தாயாரின் இறுதி வணக்க நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவே வந்திருக்கிறோம். வேறெதுவும் உள்நோக்கம் இல்லை. ஆகவே எங்களை அனுமதிக்க வேண்டும் என்று வாதாடினோம். இயலாது. நீங்கள் வந்த அதே விமானத்தில் திரும்பிச் செல்லுங்கள் என்று வற்புறுத்தினர்.

நான் ஏற்கனவே பலமுறை இலங்கைக்கு வந்திருக்கிறேன். இந்திய நாடாளுமன்றக் குழுவிலும் ஓர் உறுப்பினராக வந்து போயிருக்கிறேன். நான் சமூக விரோதி அல்ல. இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் எனக்கு மதிப்பளிக்காவிட்டாலும்????, இந்திய அரசுக்காவது நீங்கள் மதிப்பளிக்க வேண்டும். இது தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்பட்ட அவமானம் என்பதைவிட ""இந்திய அரசுக்கும், இந்திய தேசத்திற்கும் இழைக்கும் பெரும் அவமதிப்பே ஆகும்"". இதை இந்திய நாடாளுமன்றத்தில் ஓர் உரிமைப் பிரச்சினையாக எழுப்புவேன்? என்றும் எச்சரிக்கை விடுத்தேன் என்று தனது புலமையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இந்திய அரசியல்வாதிகளால் 176,000 கோடி ஊழல் புரிந்த குடும்பங்களின் கையில் ஆட்சியை வைத்து மன்னராட்சி நடத்தும் ஏழைகளின் நாட்டில் தினந்தினம் கடலில் ஸ்ரீலங்கா ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்படும் மீனவர்களை காப்பாற்ற வக்கற்று ஏனென்று கேட்க தைரியமில்லாத நாடாளுமன்றத்தில் இந்த விடயத்தை ஓர் உரிமைப் பிரச்சினையாக எழுப்புவேன் என்றும் எச்சரிக்கை விடுத்து வந்திருக்கும் திருமா அவர்கள் அது நடக்கக்கூடிய காரியமா என்பதை சிறிதேனும் சிந்திக்கவில்லை, #அன்புடையீர்! திருமா கூறியவற்றை குறித்துவைத்துக்கொள்ளுங்கள் கடுகளவு முன்னேற்றத்தை திருமா பெற்றாலும் அது கடலளவாக கருதக்கூடியதே.

மேலும் தன்னையும் தன்னுடன் வந்தவர்களையும் எதற்காகத் திருப்பி அனுப்புகிறீர்கள் என்பது தொடர்பாக எழுத்து பூர்வமான அறிக்கையினை அளிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார் திருமா . அதெல்லாம் வழங்க முடியாது என்று மறுத்ததோடு வலுக்கட்டாயப்படுத்தி திருப்பி அனுப்யிருக்கின்றனர்.

மேதகு பிரபாகரன் அவர்களுக்கு மட்டுமின்றி இனமான உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் அன்னையாய் விளங்கும் பார்வதி அம்மாளுக்கு அஞ்சலி செலுத்துவதற்குக்கூட அனுமதிக்காத, ஈவிரக்கமில்லாத கொடுங்கோலன் ராஜபக்சேவையும் சிங்கள இனவெறி அரசையும் விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. என்று திருமா அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.

இனமானமுள்ளவர்களுக்கு நிச்சியம் அது பொருந்தும்,, ஐயா திருமா அவர்கள் அந்த உணர்வுகளுக்கு கிட்டவும் நீங்கள் நெருங்கமுடியாத இடத்தில் இருப்பதாக ஈழத்தமிழினம் முடிவுகட்டி நீண்ட நாட்களாகிவிட்டன இனியாவது திருமா அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அன்னை பார்வதி அம்மாள் இறப்பையொட்டி ஈழத்தில் கறுப்புக்கொடிகள் ஏற்றக்கூடாது எனவும் ஆங்காங்கே அவரின் திருவுருப்படங்களை வைத்து அஞ்சலி செலுத்தக்கூடாது எனவும் சிங்கள இனவெறியன் ராஜபக்சேவின் இராணுவ கொடுநெறி அரசு கெடுபிடி செய்து வருகிறது. என்றும் அன்னை பார்வதி அம்மாளுக்கு தமது கண்ணீர் அஞ்சலியைச் செலுத்தத் துடிக்கும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்குக்கூட அஞ்சுகிற வகையில் ராஜபக்சேவின் இராணுவம் மக்களை அச்சுறுத்தி வருகிறது என்று அழுதுகொண்டிருக்கும் திருமா அவர்களே,, அதற்கு என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவதென்று ஈழத்தில் ஒரு பழமொழியுண்டு, திருமா அவர்கள் அதற்கு மேலேயும் கற்பனையில் பயணஞ்செய்வது புரிகிறது.

நாங்கள்தான் அவற்றையும் பார்த்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம், உள்ளூரில் ஓரளவுக்கு உயிர்வாழும் மக்களை உங்கள் உசுப்பேத்தல் வாய்ப்பந்தல் மூலன் விரும்பத்தகாத பக்கவிளைவுகளை உண்டுபண்ணிவிடாதீர்கள், நீங்கள் படங்காட்டுவதற்காக சென்னையிலுள்ள ஸ்ரீலங்கா தூதரகவாசலில் துள்ளாட்டம் போட்டுவிட்டு கலைந்து போய்விடுவீர்கள், அல்லது பொலிஸைக்கொண்டு கைது பண்ணவச்சு படம்பிடித்துக்கொண்டு ஒருமணி நேரத்தில் கலைஞர் வீட்டுக்குப்போய் கதை முடிப்பீர்கள், ஆனால் ஐயா எங்கள் இனத்திற்கு உயிர்சம்பந்தப்பட்ட பிரச்சினை. சிங்கள இராணுவம் பழிவாங்க உங்கள் உயிரை எடுக்கப்போவதில்லை. ஒன்று பாவப்பட்ட ஏழை மீனவர்கள் அல்லது நாங்களும் எங்கள் சகோதரிகளும் பலியாகிவிடுவோம் தயவுசெய்து நீங்கள் எதிர்ப்புத்தெரிவிக்கவேண்டிய இடம் கருணாநிதியின் வாசஸ்தலம் /சட்டசபை /பாராளுமன்றம் /பிரதமரின் வாசஸ்தலம் போன்ற இடங்களே.

அதிலும் பலன் கிடைக்காதென்றே வரலாறு சொல்லியிருக்கிறது ஏனெனில் 29 ஜனவரி 2009 அன்று காலை உண்மையான மொழி-இன-மான-உணர்வுள்ள தமிழன் முத்துக்குமார் உங்கள் ஆட்சியாளர்களின் ஆளுனர் மாளிகை வாசலில் எத்தனை கோரிக்கைகள் எழுதி வைத்துவிட்டு தீக்குளித்து செத்தானே, ஏதாவது அசைந்ததா, பூச்சியம் தானே பலன்?

கடுகளவும் கருணையில்லாத கொடூரன் ராஜபக்சேவின் இத்தகைய தமிழர் விரோதப் போக்கு எல்லையற்று நீண்டுகொண்டே போகிறது. ஈழத்தமிழர்களுக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் இந்திய ஆட்சியாளர்களுக்கும் சவால் விடுகிற வகையில் ராஜபக்சேவின் அணுகுமுறைகள் தொடர்கின்றன.

இலட்சக்கணக்கான மக்களைக் கொன்றுகுவித்த இனவெறிபிடித்த கொலைவெறியன் ராஜபக்சேவுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் இந்திய அரசை ஓர் பொருட்டாகவே மதிப்பதில்லை என்பது இந்திய நாடாளுமன்ற உறுப்பினரான என்னை திருப்பி அனுப்பியதிலிருந்தே அறியலாம். இந்நிலையில் இந்திய, தமிழக அரசுகள் ராஜபக்சே கும்பலைக் கடுமையாக எச்சரிக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது. மேலும் தமிழகத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் வற்புறுத்துகிறது.என்று அவரது அறிக்கை நடக்க முடியாதவற்றை புலம்பியிருக்கிறது.

காலம் மெல்ல மெல்ல எல்லோரையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது புலனாகிறது,

ஈழதேசம் இணையத்திற்காக
கனகதரன்,


Sunday, February 20, 2011

வீரத்தின் விளை நிலம் விண் நோக்கி போனதுமேன்?

அன்னையே தாயே
அழியா புகழ் கொண்ட அற்புதமே!
ஈழத்தின் புள்ளியை பூமிப்பந்தில்
ஈட்டி கொண்டு
எழுத வைத்த ஈகைத்தாயே.

வீரத்தின் விளை நிலமே
விண்ணையும் விஞ்சிய
வீரனை விடுதலைக்கு
ஈன்றெடுத்த வேங்கைத்தாயே,

பாவத்தை அழிக்க வந்த பரவசத்தை
பார் போற்ற பிறப்பெடுத்து
பாலூட்டி வளர்த்த பார்வதியே!

பொக்கிஷமே புண்ணியமே
காலத்தால் அழியாத காவலனாம்
சூரியனை பெற்றெடுத்த
கண்ணகியே,, சொர்ணத்தாயே,,,

நீரையும் நெருப்பையும் நிழலாக்கி
நிமிர்ந்து நின்ற நாயகியே,

சோலை விருட்சம் அம்மா-நீ
சொந்தம் நாங்கள்
துயரம் கண்டாயோ-எம்
நெஞ்சு கனக்க
நிலையகன்று சென்றனையோ,

காற்றானாய்
உன் கண்மணிகள்
கண்ணில் நீரை இறைத்து நின்றோம்-நீ
பாலூட்டி வளர்த்த
எம் தலைவன் பரிதவிப்பான்-அதை
மறந்தாயோ?,

நேற்றோடு இன்று நாள் நகரும்-உன்
நினைவுகள்
என்றும் சங்கமிக்கும்,

கனகதரன்,

நன்றி ஈழதேசம் இணையம்,

Saturday, February 19, 2011

அன்னை பார்வதி அம்மா காலமானார்.

20,02,2011

எமது தமிழீழத் தேசியத் தலைவரின் அன்னை பார்வதி அம்மா அவர்கள் தமிழீழ நேரப்படி 20.02.2011 அன்று அதிகாலை 6.30 மணியலவில் இயற்கை எய்தினார். தமிழீழத்தின் விடியலுக்காக தேசப் புதல்வனைப் தமிழர்க்கு தந்த அன்னை அவர்கள் இறுதிவரை சாதாரண பெண்மணியாகவே வாழ்ந்து மடிந்தவர். அன்னை அவர்களுக்கு எமது வீர வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றோம். …

வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளை இப்புனிதத்தாய் 81வது அகவையில் விண்ணுலகத்தை அடைந்தார்.கடந்த பத்து வருடங்களாக பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் மலேசியாவில் சிகிச்சை பெற்றுவந்தார். தனது மேல் சிகிச்சைக்காக இந்தியா வந்த அவரை இந்திய அரசு சிகிச்சைக்கு அனுமதி மறுத்து அவர் வந்த விமானத்திலேயே மலேசியாவிற்கே திருப்பியனுப்பியது.பின்னர் இந்திய அரசு அவருக்கு நிபந்தனையின் அடிப்படையிலேயே கிகிச்சையளிக்க முன்வந்த போதில் அவரது குடும்பத்தினர் அதற்கு உடன்படாமையாலும் அவரை ஓர் அரசியல் சர்ச்சைக்குள் இழுக்கப்படுவதையும் விரும்பவில்லை.


இதனால், பார்வதி அம்மாள், அவர் பிறந்த ஊரான வல்வெட்டித்துறைக்குச் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரின் உடல் நிலை மோசமடைந்ததையடுத்து அவர் யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சற்று உடல் நலம் தேறிய அவர் மீண்டும் வல்வெட்டித்துறை மருத்துவமனைக்கே மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. கடந்த சில வாரங்களாக அவர் சுய நினைவை இழந்து அவதியுற்றார். இந்நிலையில் வல்வெட்டித்துறை மருத்துவமனையில் இன்று காலமானார்.



Monday, February 14, 2011

லெப்.கேணல் பொன்னம்மான் மற்றும் அவருடன் வீர காவியம் ஆன 9 மாவீரர்களின் 24 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.


maaveerar யோகரத்தினம் குகன்
யாழ்ப்பாணம்
23-12-1956 - 14-02-1987

லெப் கேணல் பொன்னம்மான் உடன் விடுதலைக்காய் வித்தானவர்களின் விபரம்

மேஜர் கேடில்ஸ் ( திலீபன்)
கப்டன் வாசு (சுதாகர்)
லெப். சித்தாத்தர் (வசீகரன்)
2ம்லெப். பரன் (அர்ச்சுணன்)
வீரவேங்கை யோகேஸ்(பாலன்)
வீரவேங்கை கவர்(நகுலேஸ்வரன்)
வீரவேங்கை அக்பர் (லோகநாதன்)
வீரவேங்கை குமணன்(மோகனலிங்கம்)
வீரவேங்கை தேவன்(வசந்தகுமார்)

லெப்.கேணல் பொன்னம்மான் மற்றும் அவருடன் வீர காவியம் ஆன 9 மாவீரர்களின் வரலாறு சுமந்த காணொளி


தந்தை தாய் இருந்தால் நமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ ஐயா....

என்ற பாடல் முகாமுக்குள் ஒலித்துக் கொண்டிருந்த ஓரிரவில் தோழர்கள் காற்று வெளியில் நின்று கொண்டிருந்தார்கள். அருமையான அந்தப் பாடல் காற்றில் என்னமாய் வந்து அவர்களை உதைத்தது.

எமது இயக்கத்தில் புதிதாக இணைந்து பயிற்சி எடுப்பதற்காக பயிற்சி முகாமில் நின்று கொண்டிருந்த புதியவர்களுக்கு நெஞ்சில் மெல்லிய சோகத்தை அந்த வரிகள் எழுதியிருக்கக்கூடும்.

ஆனால் அந்த அத்தனை பேருக்கும் தாயாக, தந்தையாக, அண்ணனாக, அம்மானாக, நின்ற பொன்னம்மானே அந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருந்தார். அம்மான் இருக்கும் இடத்தில் எப்போதுமே சந்தோசம் குடிகொண்டிருக்கும். ஆனால் எப்போதும் தமிழர் துயரநிலை கண்டு அவர் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது. அவர் அந்தப் பாடலை அடிக்கடி பாடும்போது தமிழர் துயரநிலையை சூட்சுமமாகப் பாடுவதாக தோழர்கள் நினைத்துக் கொள்வார்கள்.

எமது இயக்கத்தில் எமது தேசியத் தலைவர் பிரபாகரனுடன் அக்காலத்தில் தோளோடு தோளாய் நின்று இயக்கத்தைப் பலமாகக் கட்டியெழுப்புவதற்காக அயராது உழைத்தார் அம்மான்.

maaveerar
எழுபதுகளின் நடுப்பகுதியில் எமது தலைவருடன் இணைந்து கொண்டு செயற்படத் தொடங்கி உமையாள்புரம், திருநெல்வேலி தாக்குதல் உட்பட பல தாக்குதல்களில் தனது துணிவையும், வீரத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்.

1983ஆம் ஆண்டு திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட நடவடிக்கைக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மிகவும் வேகமாகவும் அதேவேளை நிதானத்துடனும் வளரத் தொடங்கியது. போர்ப்பயிற்சிகள் இந்தியாவில் ஆரம்பமாகின. அங்கு நடந்த முதலாவது பாசறையின் பொறுப்பாளராக இருந்த பொன்னம்மான் பயிற்சியின் போதே சகவீரர்களை எமது இயக்கத்தின் விதிமுறைக்கேற்ப உருவாக்கிக் கொண்டிருந்தார். இந்தப் பாசறையில் தளபதிகளான கிட்டு, விக்டர், புலேந்திரன், சூசை, பொட்டு, கணேஸ், அருணா, ராதா, பரமதேவா, பதுமன், கேடில்ஸ் போன்றவர்கள் உட்பட சுமார் நூறுபோராளிகள் இருந்தனர். பயிற்சியை முடித்துக் கொண்ட பொன்னம்மான் தமிழ்நாட்டில் பல இடங்களில் பயிற்சி முகாம்களை ஏற்படுத்தி புதிய வீரர்களை புரட்சியாளர்களாக்கினார். உலகமே வியக்கக்கூடிய வகையில் எமது போராட்டம் வளர்ச்சியடைவதற்குத் தேவையான, புதிய வீரர்களிற்குப் பயிற்சி அளித்தல், வேண்டிய ஆயுதங்களைச் செய்து கொள்ளல் போன்ற முக்கிய விடயங்களில் பொன்னம்மானின் முயற்சி கணிசமாக இருந்தது என்றே சொல்லலாம்.

வெடிமருந்துகளைக் கையாள்வதில் பொன்னம்மான் மிகவும் வல்லுனராக இருந்தார். அதற்கேற்றவாறு மேலும் பல வீரர்களை, ஆயுதங்கள் செய்யும் பிரிவிற்குத் தகுதியுள்ளவர்களாகவும் ஆக்கியிருந்தார். பேராட்டத்திற்கு கை எறிகுண்டு கணிசமான அளவு தேவையாக இருந்தது. அன்றைய காலகட்டத்தில் குண்டு தயாரிப்பு வேலைகள் சாத்தியமற்றதாக இருந்தது. பொன்னம்மானின் கடுமையாக முயற்சியினால் 85, 86ஆம் ஆண்டுகாலப் பகுதியில் மாதாமாதம் ஆயிரக்கணக்கில் கைக்குண்டுகள் தயாரிக்க வழிசெய்தார். இந்தியாவில் 2000இற்கும் அதிகமான வீரர்களைத் தோற்றுவித்தது மாத்திரமன்றி இராணுவத் தொழில்நுட்பத் வளர்ச்சிக்கும் முக்கிய காரணியாக பொன்னம்மான் செயற்பட்டார்.

பெரும் எண்ணிக்கையிலான விடுதலை வீரர்களை உருவாக்கி இயக்க வரலாற்றில் பெரும் சாதனை படைத்தவர் பொன்னம்மான். பல சிறப்புக்களும், தகுதியும், ஆளுமையும் மிக்க பொன்னம்மானின் போராட்ட வாழ்வின் இறுதிக்கணங்கள் வீரம் செறிந்தவை. யாழ்ப்பாணத்தில் உள்ள நாவற்குழி எனும் இராணுவ முகாம் மீது தாக்குதலை நடத்த கிட்டண்ணாவும் தோழர்களும் திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். அத்தாக்குதலில் பொன்னம்மானும் முக்கிய பங்கேற்று செயற்பட்டுக் கொண்டிருந்தார். இராணுவ முகாம் மிகவும் பலம் பொருந்திய வெளி அமைப்பைக் கொண்டிருந்தது. அது கடல் நீர் உள்வாங்கிய பகுதி. சுற்றிவர நூறு யாருக்கும் மேலாக ஒரே வெளிப் பிரதேசம். வெட்டை வெளி. சிறு நகர்வும் எதிரிக்குத் தெரிந்து விடக்கூடிய அபாயம் இருந்தது. இராணுவ முகாமைச் சுற்றி நான்கு பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு மண்ணை சுவர்போல குவித்து வைத்திருந்தனர்.maaveerar

அவர்களுடைய காவல் அரண்களை உடைத்துக் கொண்டு உட்புகுவது என்பது மிகவும் சிரமத்துக்குரியதும் எமது வீரர்கள் தரப்பில் அதிக சேதத்தை ஏற்படுத்தக் கூடியதுமான முயற்சி. எனவே அவர்களுக்கு அதிர்ச்சியூட்டி அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு அவர்கள் காவல் அரண்களை பலப்படுத்துவதற்கு முன்னர் நாம் தாக்கி உடபுகக் கூடியதாகத் திட்டம் தீட்டப்பட்டது. தினமும் அந்த இராணுவ முகாமுக்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு ஒரு பவுசர் செல்வது வழக்கம். அது வெளியாரின் வண்டி: சம்பளத்திற்கு அமர்த்தப்பட்டு இருந்தது. எனவே அதைப் போலவே ஒரு பவுசர் வண்டியைத் தயாரித்து, அதன் கீழ் அரைவாசிப் பகுதிக்கு தண்ணீரை விட்டு, திட்டமிட்ட நாளில் உள்ளே அனுப்பி வெடிக்க வைத்து முகாமை தாக்கியழிப்பதற்கான வேலைகள் நடக்கத் தொடங்கின. பழைய வண்டியைப் போல் ஒரு புதிய வண்டியைத் தயாரிப்பது என்பது மிகவும் கஸ்டமான விடயமாக இருந்தது.

அதிலும் அந்த பவுசர் எஙகோ தாக்குதலுக்குள்ளாகி ஒரு பக்கத்தில் நசுங்கியும் இருந்தது. அது மாத்திரமல்ல தோழர்கள் செய்யும் வண்டி வாயில் காவலர்களைத் தாண்டிச் செல்ல வேண்டி இருந்ததால் அதேபோல் நசுக்கப்பட வேண்டி இருந்தது. இயற்கையாக விபத்துக்குள்ளான வண்டியைப் போல் வெடிமருந்தேற்றிச் செல்லும் வண்டியை மிகச் சிரமத்திற்குப் பின் உருவாக்கினார்கள். புதிதாக மை பூசிய புவுசரை பழைய பவுசரைப் போல் உருமாற்றம் செய்ய வேண்டியிருந்தது. ஏன் பழைய வண்டியில் ஏற்பட்டிருந்த துருப்பிடித்த பகுதிகூட தாக்குதலுக்கு தயாரான பவுசரில் இருந்தாக வேண்டும். அதைவிடவும் பவுசர் இரு பகுதியாகப் பிரிக்கப்பட்டு கீழ் பகுதி வெடிமருந்து நிரப்பிய பகுதியாகவும், மேல் பகுதியில் தண்ணீர் நிரம்பிய பகுதியாகவும் தயாரித்தோம்.

ஏனென்றால் முகாம் வாயிலில் உள்ள காவல் அரணில் இருப்பவர்கள் பவுசரின் மேல் ஏறி மூடியைத் திறந்து தண்ணீரைப் பார்த்தபின்தான் உள்ளே அனுமதிப்பார்கள். இத்தனை சிரமங்களின் மத்தியிலும் அந்த பவுசரை மிக நேர்த்தியாக வடிவமைத்தார்கள். பவுசருக்கு வெடிமருந்தை இணைக்கும் பணியை பொன்னம்மான் எடுத்துக் கொண்டார். இம்முயற்சிக்கு வழிகோலி, அயராது உழைத்து வந்தவன் கேடில்ஸ்தான். கேடில்ஸ் அப்போது சாவகச்சேரிப் பகுதிக்கு பொறுப்பளராக விளங்கியவன். மிகத் துல்லியமாக முகாமை வேவு பார்த்து, இராணுவ முகாமினது ஒவ்வொரு நடவடிக்கையையும் அவதானித்து வைத்திருந்தான். கேடில்சும், வாசுவும் சேர்ந்துதான் இரவுபகலாக உழைத்து அந்த பவுசரை உருவாக்கினார்கள்.

அவர்களுக்குத் துணையாக ரஞ்சன் எனும் பொறியியலாளர் ஒருவர் பணியாற்றினார். அவர் பொன்னம்மானின் உறவினருங்கூட. மிகுந்த மதிநுட்பம் வாய்ந்த ரஞ்சன், வாசுவோடு சேர்ந்து விமானமொன்றைத் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தார். முழுவதுமாக தன்னை இயக்கத்துடனேயே இணைத்துக் கொண்டவர்.

14-2-87 அன்று தாக்குதல் நடத்துவதாக இருந்தது. கெரில்லா தாக்குதல்களை இரவு நடத்துவதுதான் தோழர்களுக்கு உசிதமாக இருந்தது. தாக்குதல் தொடங்கினால் இராணுவ ஹெலிகொப்டர்களும், குண்டு வீச்சு விமானங்களும் தகவல் பெற்று எம்மைத் தாக்கத் தொடங்கலாம். பகல் வேளையானால் மேலிருந்து கண்டுபிடித்து குண்டு வீசுவது அவர்களுக்கு மிகவும் சுலபமான விடயம். ஆனால் பிற்பகல் 6 மணிக்குப் பின் இராணுவ முகாமுக்கு தண்ணீர் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. எனவே கடைசி சந்தர்ப்பத்தை தோழர்கள் தாக்குதலுக்கான நேரமாக குறித்துக் கொண்டார்கள். 6:30 மணிக்கு சண்டை தொடங்குமானால் சுமார் ஒரு மணி நேரத்தில் இருட்டடித்துவிடும். அதன்பின் தோழர்களுக்கு மிகவும் பாதுகாப்பாகவே இருக்கும்.

முதல்நாள் இரவிரவாக பொன்னம்மான், வாசு, ரஞ்சன் ஆகியோர் மருந்தடைத்தனர். வெடிமருந்தின் நச்சுத்தன்மை அவர்களைப் பாதித்தது. அதனால் மூவரும் மிகச் சோர்வாக வேறு இருந்தார்கள். அதிகாலை வெடிமருந்து இணைக்கப்பட்ட நிலையில் பவுசர் தயாராக நின்றது. அம்மான் அவ்விடத்திலேயே தூங்கியும் விட்டார். வாசுவும் கிட்டண்ணாவும் தாக்குதல் குழுக்களைப் பிரித்து அவரவர்களுக்குத் தேவையான வெடிபொருட்களை இணைத்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள். மூன்று பெரிய லொறிகள் தயார்ப்படுத்தப்பட்டன. முகாமுக்குள் சென்ற பவுசர் வெடித்ததும் ஜொனி, கேடில்ஸ், சூசை தலைமையிலான குழுக்கள் லொறிகளில் விரைந்து முகாமுக்குள் சுட்டுக் கொண்டே உட்புகுவதாகத் திட்டம். லொறியின் முன்புறமும், மேல்பக்கமும் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டன. முதல் லொறியில் ரொக்கட் லோஞ்சருடன் நிற்பவன் உட்புகும் போது ரொக்கட்டால் வாயில் காவல அரணை உடைத்தெறிவதாக திட்டம் தீட்டப்பட்டிருந்தது.

நேரம் பிற்பகலை நெருங்கிக் கொண்டிருக்க தாக்குதல் குழுக்கள் தத்தமது நிலைகளுக்கு செல்லத் தொடங்கி விட்டனர். பவுசரை அனுப்பும் பொறுப்பு பொன்னம்மான், கேடில்ஸ், வாசு, ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. கிட்டண்ணா தாக்குதலை நடத்துவதற்காக, சகலருடனும் வாக்கிடோக்கியில் தொடர்பு ஏற்படுத்தக்கூடிய வகையில் இடம் தெரிந்தெடுக்கப்பட்டு அதற்குரிய வசதிகள் செய்திருந்தார்.

கிட்டண்ணா ஐந்து மணியளவில் எல்லாக் குழுக்களையும் சரி பார்த்து வந்து கொண்டிருந்தார். நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கிட்டண்ணா ஒரு குழுவினர் நின்ற வீட்டில் அவர்களை சரிபார்த்துக் கொண்டிருந்தார்... மிகப்பெரிய சத்தத்தைத் தொடர்ந்து ஒரு முறை பூமி அதிர்ந்தது. அதிர்ச்சி, வியப்பு, சற்றும் புரியவில்லை. 5:30க்கு வேறு இந்த வெடிச்சத்தம் கேட்டதால் தோழர்கள் மத்தியில் ஒரே குழப்பம். கிட்டண்ணா பொன்னம்மானை வாக்கியில் பலதடவை கூப்பிட்டார். கேடில்சைக் கூப்பிட்டார். வாசுவைக் கூப்பிட்டார். பதில் இல்லை. பல தடவைகள் அழைத்தார். மீண்டும் பதில் இல்லை. ஜொனியை அழைத்தார்: பதில் வந்தது. ஜொனியை அழைத்து உடனடியாக சத்தம் கேட்ட இடத்திற்கு அனுப்பினார். ஜொனி அங்கு சென்ற போது எங்கும் தூசிமயம். பிரளயம் ஒன்று ஏற்பட்டதைப் போல இருந்தது. அவ்விடத்தில் பெரிய குழி, அதற்கருகில் கேடில்சினுடைய கார் நொறுங்கிப் போய் கிடந்தது. இதற்கு 50 யார் தூரத்தில் லொறி நின்றது. லொறிக்குள் பார்த்தபோது ஐவர் அதற்குள் இறந்து கிடந்தார்கள். தண்ணீர் நிரப்பிக் கொண்டிருக்கையில் பவுசர் வெடித்து விட்டது. ஆனால் அந்த இடத்தில் நின்று சம்பவத்தைப் பார்த்த யாரும் உயிருடன் இல்லை.

பொன்னம்மான், கேடில்ஸ், வாசு, ரஞ்சன் ஆகியோர் அந்த இடத்துக்கு வந்ததாக தோழர்கள் கூறினார்கள். பவுசரில் தண்ணீர் நிரப்பும்போது தண்ணீர் சிறிது ஒழுகியதாம். அதைப் பொன்னம்மான் கேடில்சுக்கும் வாசுவுக்கும் தெரிவித்து பொறியியலாளர் ரஞ்சனையும் அழைத்துக் கொண்டு பவுசர் நின்ற இடத்திற்கு சென்றார்கள். பொறியியல் நடவடிக்கையின் போது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்த, அங்கு நின்ற எவருமே இல்லை. எல்லோரையும் தேடினார்கள். வாசுவின் பிஸ்டலும், அடையாள அட்டையும் கேடில்சின் காற்சட்டையின் ஒரு பகுதியும்தான் கிடைத்தது. பொன்னம்மானை அடையாளம் காணக்கூடியவகையில் அவருடைய உடலோ, உடலின் பகுதியோ எந்தத் தடமும் கிடைக்கவில்லை. ஈழத்தில் வீசிக் கொண்டிருக்கும் காற்றோடு காற்றாய் அவர் மறைந்து விட்டார்.

முகாம்கங்களில் கலைநிகழ்ச்சிகளை வைப்பித்தும், குறும்புகள் செய்தும், நடித்தும், சிரிக்க வைத்து, எந்த நேரமும் சந்தோசத்தைக் குடிகொள்ள வைத்திருக்கும் அந்த மனிதன் இன்று இல்லை. "அம்மான் ஒரு பாட்டுப் பாடுங்கோ" என்று தோழர்கள் அடம் பிடிப்பதும் அவர் எப்போதும் தோழர்களுக்காய் பாடிக் காட்டும் அந்தப் பாட்டும் நினைவில் நனைய கண்கள் பனிக்கின்றன. ஈரமான இதயம் சுமந்த மனிதர்களின் நண்பனாய், தந்தையாய், தனையனாய், தாயாய், எல்லாமுமாய் நின்ற எங்கள் அம்மானிடம் வளர்ந்த எத்தனையோ தோழர்கள் இன்றும் அவரது கனவைச் சுமந்தபடி மண்ணில் நிற்கிறார்கள்.

மூலம் - எரிமலை

தேசியத் தலைவரின் நினைவுகளில் லெப். கேணல் பொன்னம்மான்




Wednesday, February 9, 2011

விடுதலைப் புலிகள் இயக்கம் சாதாரணமானவர்களால் கையாளக்கூடிய ஒன்றல்ல,,-ஈழதேசம் இணையத்திற்காக. ஆரணி ,

30 ஆண்டுகளுக்கு மேலாக தேர்தலைக்காணாமல் இருந்த வன்னி, மற்றும் பல உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு 2011 மார்ச் மாதம் நடுப்பகுதியில் கிளிநொச்சி யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்காக பல தமிழ் அரசியல்க்கட்சிகள் தயாராகிக்கொண்டிருக்கின்றன. இத்தேர்தலில் பிரதான தமிழ்க்கட்சியான தமிழர் தேசியக் கூட்டமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆனாலும் தமிழர் தேசியக் கூட்டமைப்பை சரியான வழிநடத்தி கொண்டு செல்லுவதற்கான ஆளுமையுள்ள தலைமைத்துவத்தை காணமுடியவில்லை, சம்பந்தன் அவர்களின் உடல் நலக்குறைவும்,அவரது இந்தியசார்பு கொள்கை வியூகமும், மாவை அவர்கள் என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் எடுத்து வைக்கும் நகர்வுகளும், சுரேஸ் பிறேமச்சந்திரன் தனது பழைய சகாவான வரதராசருடன் இன்னொருபக்கமும், சிறிதரன் வேறொருபக்கமுமாக ஓடிக்கொண்டிருப்பதால் கட்சி இப்போ யாழ்ப்பாணத்து ஒடியல் கூழ் கலவையாக மாறியிருக்கிறது.

கூட்டணி தலைவர் ஆனந்தசங்கரி, புளொட் சித்தாத்தன். ஈபி.ஆர்.எல்.எஃப் வரதராசப்பெருமாள் என,,கற்பனை பண்ணிப்பார்க்க முடியாத முரண்பட்ட, கூட்டு ஒன்று சேர்ந்திருக்கிறது, தொடர்ச்சியாக இவர்கள் கருணாவையும் பிள்ளையானையும் டக்கிளஸையும், ராஜபக்க்ஷ ரனிலையும், சேர்த்து தமிழையும் தமிழீழத்தையும் நிச்சியம் வென்றாலும் ஆச்சரியமல்ல!? நடக்கப்போகும் அதிசயம் பாவப்பட்ட தமிழினத்துக்கு தாமதமாக புரியலாம்,, ஒன்றுமட்டும் தெளிவாகத்தெரிகிறது, எது எப்படிப்போனாலும் பரவாயில்லை தமது இருப்புக்கு பங்கம் வரக்கூடாது என்பதில் தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் உசாராக இருக்கின்றனர்.

ஈழ தாயகத்து மக்கள் தடை முகாம்களிலும் சிறைச்சாலைகளிலும், இராணுவ கொட்டடிகளிலும், இந்திய அகதிமுகாம்களிலும், இந்தியச் சிறைகளிலும், மலேசியநாட்டு வீதிகளிலும், இந்தோனேசிய காடுகளிலும், தாய்லாந்து தடைமுகாம்களிலும், அவுஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ்தீவின் அடிமைகளின் கொட்டகைகளிலும், எங்கே சென்றடைவோம் எனத்தெரியாமல் கடலிலும், கண்காணாத இன்னும் பல தேசங்களிலும், காற்றுப்போல் அலைந்து கொண்டிருக்கின்றனர். உள்ளூரில் யாழ்ப்பாணத்தில் வாழவே முடியாமல் தத்தளிக்கின்றனர், இந்த அனர்த்தம் எந்த அரசியல் வாதிகளாவது அறிந்திருக்கின்றனரா? என்பதும் சந்தேகம்.

தேசியத் தலைவர் பிரபாகரன், அவர்கள் ஈழத்தில் காவலனாக இருந்தவரை, இப்படியான அனர்த்தத்தை ஈழத்தமிழன் பெரும்பாலும் சந்திக்கவில்லை. தற்போதய பின்னடைவு தமிழர்களிடையே விரக்தியையும் தனிமைப் படுத்தப்பட்ட வெறுமையும், ஒருவித பீதி உணர்வையும் தோற்றுவித்திருக்கின்றது என்பதை அதிகமானோர் வெளியில் சொல்லவில்லை, விரைவில் பொழுது புலர்ந்து மாற்றம் வரும் என்ற நம்பிக்கையுடன் பொறுமை காக்கின்றனர், தலைவரின் வெளி வரமுடியாத இடைவெளியை நிமிர்த்த வேண்டிய தலையாய பொறுப்பு புலம்பெயர் தமிழர்களுக்கும், தமிழ் அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு.

ஆனால் இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வட்டம் கட்டி, மாறுபட்ட கருத்தை முன்மொழிந்து எங்கே போகிறோம் என்பது அவர்களுக்கும் புரியாமல் மக்களையும் சிக்கலில் சொருகியிருக்கின்றனர்.

தன்னையும் தமிழன் எனக்கூறும் கருணாநிதி ஆட்சிசெய்யும் தமிழகத்தின், செங்கல்ப்பட்டு சிறப்பு முகாம் என அழைக்கப்படும், சித்திரவதை முகாமில் பல வருடங்களாக இலங்கை தமிழர்கள் விசாரணை எதுவுமின்றி அடைத்து சித்திரவதை செய்யப்பட்டு கொடுமைப் படுத்தப் படுகின்றனர். கைதிகள் தம்மை விசாரணைக்கு உட்படுத்தும்படியும், அல்லது விடுதலை செய்யும்படியும், மன்றாடி வேண்டி பலவழிகளிலும் போராடி வருகின்றனர். தமிழ் நாட்டின் அரசியல் அதிமேதாவி கருணாநிதி அதுபற்றி கிஞ்சித்தும் கவனிக்காமல் குடும்பமே குறியாகி, எல்லாவற்றையும் திசைதிருப்பும் விதமாக புதிது புதிதாக நாடக அரங்கங்களை திறந்து வசனம் பேசுவதுடன் கடிதம் எழுதி காலத்தை போக்குகிறார்.

சமீபத்தில் தேர்தல் கவர்ச்சித்திட்டமாக தமிழ்நாட்டிலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளின் நலன் பேணல் மற்றும் மேம்பாட்டிற்கு நூறுகோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. என்று அறிவித்து தனது தேர்தல் வெற்றிக்கு வலை விரித்திருக்கிறார்.

வரப்போகும் தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு மக்களை கவரும் விதமாக இடைக்கால வரவு - செலவுத்திட்டம் ஒன்றை தமிழ்நாடு மாநில சட்டப்பேரவையில் சென்றவாரம் தாக்கல் செய்யப்பட்டது. அதன்போது நிதியமைச்சர் அன்பழகன் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துப் பேசும்போது,, தமிழ்நாட்டிலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் முகாம்களின் வசதிகளை மேம்படுத்த, நூறு கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். அதன் முதல்கட்டமாக முப்பது கோடி ரூபா பெறுமதியான பணிகள் தற்போது முடியும் தறுவாயில் உள்ளன என்றும்??. தமிழக மக்களுக்கு மட்டும் இதுவரை செயற்படுத்தப்பட்ட இலவச தொலைக்காட்சி? மற்றும் கலைஞர் காப்பீட்டுத் திட்டம், திருமண உதவித்திட்டம் என்பனவும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கும் விஸ்தரிக்கப்படவுள்ளது என்றும் தெரிவித்தார். இந்த இலவசம் என்கிற திட்டத்தை தாண்டி கருணாநிதியால் வேறு எதுவும் சிந்திக்கக்கூட முடிவதில்லை.

ஆக தமிழக அரசியல்வாதிகள், ஈழ அகதிகள் பெயரால் 10 கோடி செலவுசெய்தது போக, 90 கோடி ஈழத்தமிழர் பெயரால் ஸ்வாகா செய்துவிட்டனர் என நம்பலாம். தமிழர்கள் மீது கருணாநிதிக்கு உண்மையான கரிசனை இருக்குமானால் எந்த விசாரணையுமில்லாமல் சிறப்பு முகாம்கள் என அழைக்கப்படும் சித்திரவதை கொட்டகைகளில் தற்கொலை செய்துகொண்டும், போராடிக்கொண்டுமிருக்கும் அப்பாவிகளுக்கு ஒரு தீர்வை கொண்டுவர முயலவேண்டும். ஊழல் செய்வதற்கான நலத்திட்டங்களை அறிவித்துக்கொண்டிருக்கத் தேவையில்லை,

மறுபுறம் கருணாநிதி நேரடியாக ஸ்ரீலங்கா அரசுத்தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் நெருங்கிய நட்பைப் வளர்ப்பதாகவும் தெரிகிறது. இருவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசிக்கொள்வதாக டெய்லி மிரர் பத்திரிகை தெரிவித்துள்ளது. அரச தகவல்களின் படி கருணாநிதிக்கும் மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் தொலைபேசி வழி உரையாடல்களும் இடம்பெறுகின்றன என நம்பப்படுகிறது. தமிழ்நாட்டு முதல்வர் கருணாநிதிக்கும் சிறிலங்காவினது அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கும் இடையிலான இந்த உறவினை கலைஞரின் மகள் கனிமொழி ஊடாக ஆறுமுகன் தொண்டமான் சாத்தியமாக்கியுள்ளதாகவும் ஆந்த நட்பின் வெளிப்பாடாக அதிபர் ராஜபக்சவின் உருவப்படம் பொறிக்கப்பட்ட நாட்காட்டிகளைப் தமிழகத்து பாடசாலைகளில் விநியோகிக்கும் அளவிற்கு கருணாநிதி ராஜபக்க்ஷ நட்பு உயர்ந்திருக்கின்றது.இந்த இரட்டை வேடத்தைத்தான் அதிகமாக அரசியலில் இருப்பவர்கள் செய்துகொண்டிருக்கின்றனர்.

ஈழத்தின் இறுதிப்போரின்போது பொங்கியெழுந்த தமிழ்நாட்டை பலவழிகளிலும் கருணாநிதி அடக்கி வைத்திருந்து ஈழ அழிப்பிற்கு தன்னாலான அனைத்தையும் செய்து ராஜபக்க்ஷவுக்கு பேருதவி வழங்கியிருந்தார்.தற்போது உலக நாடுகளால் ராஜபக்க்ஷ யுத்தக்குற்றவாளியாக குற்றஞ்சுமத்தப்பட்டிருக்கும் நிலையில்,கருணாநிதியின் பயமெல்லாம் ராஜபக்க்ஷ தன்னையும் காட்டிக்கொடுத்து விடுவாரோ என்ற கலக்கம்,தினமும் ராஜபக்க்ஷவுடன் தொலைபேசியில் நலன் விசாரிக்குமளவுக்கு கீழ்த்தரமாக இறங்க வைத்திருக்கிறது.

இலங்கைக்குள் அமெரிக்காவின் ஆதிக்கமும், சீனாவின் பெருவாரியான ஆக்கிரமிப்பும், இந்தியாவின் சொல்லுக்கு கட்டுப்படாத ராஜபக்க்ஷவும், இந்திய ஆட்சியாளர்களுக்கு சமீபத்தில் மிகவும் வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ராஜபக்க்ஷவை கட்டுக்குள் கொண்டுவரக்கூடிய கடுமையான அரசியல் நகர்வுகளையும் இந்தியாவால் எடுக்கமுடியவில்லை என்பதே உண்மை.ஈழத்து அழிப்புக்கு இலங்கை கேட்குமுன்னே எடுத்துக்கொடுத்த யுத்த வியூகங்களும் வஞ்சக நோக்கோடு இந்தியாவால் வழங்கப்பட்ட தடைசெய்யப்பட்ட ஆயுதங்களும், இன்று சர்வதேசத்தில் தமக்கு அவப்பெயரை உண்டாக்குவது மட்டுமல்லாது, ஐநா பாதுகாப்பு கவுன்ஸிலின் நிரந்தர நாடாக இந்தியா இணைவதற்கு போட்டிருந்த கனவுத்திட்டத்திற்கும் இது பெருந்தடையாக உருவெடுத்துவிடும் என்றபயம் இந்தியாவை அச்சப்படுத்தி அரசியல் ரீதியாயான தோல்வியில் தள்ளவைத்திருக்கிறது.

தமிழகத்து மீனவர்களின் கடற்கொலைகள், ஏற்கெனவே ஈழப்படுகொலைகளினால் தமிழக மக்களிடையே வெறுப்பை சம்பாதித்திருக்கும் மத்திய அரசு மானில அரசுகளுக்கு இது தேர்தல்க்காலம்.மீனவர்களின் படுகொலை ஈழப்பிரச்சினையையும் கிண்டி கிளறி தமிழக அரசியல்க்கட்சிகள் மக்களை திருப்பிவிடுவார்கள் என்கிற அச்சம் தோன்றியிருக்கும். இந்நிலையில் அவற்றை பூசி மெழுகும் வகையில் நிருபாமா ராவ் ஸ்ரீலங்கவுக்கு அவசரமாக அனுப்பட்டிருந்தார்.

சிறீலங்கா வந்த இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபாமா ராவ் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் தெரிவித்திருந்த கருத்துக்கள் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சகத்தை கடும் விசனம் கொள்ளவைத்துள்ளது.தேர்தலுக்காக இந்தியா ஸ்ரீலங்காவிற்கு ஏற்படுத்திவரும் அழுத்தங்களை முறியடிப்பதற்கு சிறீலங்கா அரசு தமிழ் நாட்டையே மிஞ்சிவிடும் வகையில் தந்திர நகர்வாக தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்துவது போன்ற பாசாங்கு மேற்கொண்டுவருவதாக தெரிகிறது. இந்த பேச்சுக்கள் பல தமிழ்கட்சிகள் என விரிவுபடுத்தப்பட்டு நீண்டகாலம் நடைபெறும் நிலையில் இந்தியாவின் அழுத்தம் மழுங்கிப்போய்விடும் என சிறீலங்கா அரசு நம்புகின்றது, இதனிடையே மகிந்த ராஜபக்க்ஷவின் தாளத்திற்கு ஏற்ப இலங்கையின் தமிழ் கட்சிகள் தமது இருப்பை தக்கவைப்பதற்கு ஆடும்நிலையில் உள்ளதால், சிறீலங்கா அரசிற்கு தற்போதைய திட்டம் ஒருதற்காலிக வெற்றியை எட்டலாம். ஆனால் தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமை உலகம் அறிந்த ஒன்று என்பதால் தமிழ் மக்களுக்கு தீர்வு எதுவும் வந்து சேரப்போவதில்லை.

newsதமிழர் தேசியக்கூட்டமைப்பின் கொள்கையற்ற நிலைப்பாடு, ஸ்திரமற்ற தலைமை ஆளாளுக்கான முரண்பட்ட கருத்தியல் வெளிப்பாடு. ஆகியவை ஒருபுறமும், அரசியலில் 100% தமிழர்களால் நிராகரிக்கப்பட்டு அஞ்ஞானவாசம் சென்றிருந்த திரு வீ. ஆனந்தசங்கரி மற்றும் தமிழர்களிடையே மிக முரண்பட்ட இந்திய புலனாய்வு அமைப்பின் வளர்ப்பு ஆடாக வர்ணிக்கப்படும் வரதராஜப்பெருமாள் ஆகியோரை தமிழர் தேசியக்கூட்டமைப்பு தத்தெடுத்து உள்வாங்கியிருக்கிறது, அல்லது தமிழர் விடுதலைக்கூட்டணிக்குள் கூட்டமைப்பு புகுந்திருக்கிறதென்று கொள்ளலாம். ஆனால் இவர்கள் தமிழர் நலனில் உண்மையான அக்கறை உடையவர்களாயிருப்பின், இன்றல்லாவிட்டாலும் ஒரு நல்ல புரிதலின்பின் இதயசுத்தியுடன் ஒருகொடியின்கீழ் மேலான நோக்கோடு அனைவரும் அரசாங்கத்தை எதிர்த்து சேவையாற்ற வேண்டும், அப்படி சுயநலன் மறந்து உள்ளூராட்சி மன்றங்களை செவ்வெனவே வழிநடத்துவாராயின் தமிழ்மக்களுக்கு அதைவிட பேருதவி எதுவும் இருக்க முடியாது என்பதை நம்பலாம்.

சிலகாலங்களுக்கு முன் அரசியல் அரங்கம் ஒன்றை இவர்கள் ஏற்படுத்தியிருப்பதாக நகைச்சுவையான செய்தி ஒன்று றக்கை கட்டிப்பறந்தது, நகைச்சுவை என்னவென்றால். டக்ளஸ் தேவானந்தா, வரதராஜப்பெருமாள், புளொட் சித்தாத்தன் தேசியக்கூட்டமைப்பு, விடுதலைக்கூட்டணி, இவற்றில் டக்கிளஸ் மட்டும் பிரிந்துபோய் விட்டதாகவும். மற்றவர்கள் ஒன்றாக தொடர்ந்து இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.

ஒற்றுமைதான் இன்று தமிழினத்திற்கு தேவை. ஆனால் நச்சு வேர்களாக தமிழர்கள் மனதில் என்றும் ஆழமாகப்பதிந்துவிட்ட புளொட் சித்தாத்தன், வரதராஜப்பெருமாள் என்பவர்களின் பின்னணி என்ன என்பதை கூட்டமைப்பு ஏன் உணரவில்லை என்பதும் கேள்விக்குரியதே.மக்களின் பொதுவான நிலைப்பாட்டை இந்த அரசியல்வாதிகள் நிறைவேற்றப் போகிறார்களா அல்லது சம்பந்தரின் இந்தியசார்புக்குட்பட்ட வரதராஜப்பெருமாள், சித்தாத்தன் ஆகியோருடன் வழிப்போகும் சுரேஸ் பிறேமச்சந்திரன் மாவை, ஸ்ரீதரன் அவர்களின் திருப்திக்கு கட்சியையும் மக்களையும் கொண்டு செலுத்தப்போகின்றனரா? என்பது இந்த உள்ளூராட்சி தேர்தல் முடிந்து மூன்று மாதங்களில் தெரியவரும்.

ஆனந்தசங்கரி அவர்களின் அரசியல் மறுபிரவேசத்தின்போது அவர் அரசாங்கத்தின்மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கள் நியாயமனவைகளே, இன்றைய நிலையில் தமிழ் மக்கள் பிச்சையெடுக்கும் சூழலையே இந்த அரசாங்கம் உருவாக்கியுள்ளது. யுத்தத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களே சின்னாபின்னமாக அழிக்கப்பட்டது. இப்பகுதியில் ஒரு சில பகுதிகளிலேயே மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மக்களுக்கு அதைக் கட்டிக்கொடுக்கிறோம், இதைக்கட்டிக் கொடுக்கிறோம் என மக்களை ஏமாற்றி வருவதுடன் உலக நாடுகளையும் இந்த அரசாங்கம் ஏமாற்றி வருகிறது என அரசாங்கத்தை சாடியுள்ளார்.

வெளிநாட்டுத் தூதுவர்கள் தமிழ் மக்களுக்கு வீடுகளையோ அல்லது ஒரு கிராமத்தையோ கட்டிக்கொடுக்க முன்வரும்போது இந்த அரசாங்கம் தாம் கட்டிக் கொடுக்கிறோம் பணத்தைத் தருமாறு கேட்கிறது. இவ்வாறான நிலையில் நாம் என்ன செய்ய முடியும், என வெளிநாட்டுத் தூதுவர்கள் கேட்கின்றனர்.வெளிநாடுகளின் உதவியுடன் ஒருசிலவற்றைக் கட்டிக்கொடுக்கின்றபோது அதை தாம் கட்டியதாக விளம்பரப்படுத்துகிறார்கள். யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போதும் ஓமந்தை முதல் யாழ்ப்பாணம் வரையிலான ஏ9 வீதி மற்றும் ஏ35 வீதி, முல்லைத்தீவு - கிளிநொச்சி பிரதான வீதிகள் எங்கேயாவது புனரமைப்புக்கென கற்கள் பறிக்கப்பட்டுள்ளதா? இவற்றைச் செய்யாது வடக்கில் வசந்தம் வீசுகிறது என அரசாங்கம் தெரிவிக்கிறது. ஆனால் இங்கு புயலே வீசுகிறது. என்ற யதார்த்தத்தை உளப்பூர்வமாகப்பதிவு செய்திருந்தார். அந்த வகயில் ஆனந்தசங்கரி அவர்களின் சிந்தனை வரவேற்கக்கூடிய ஒன்றாகும்.

மஹிந்தவை தமிழ் கட்சிகளின் அரங்கத்தினூடாக இறுதியாகச் சந்தித்தபோது பயங்கரவாதம் அழிக்கப்பட்ட போது அழிக்கப்பட்ட பகுதிகளை நாம் மீளவும் கட்டித்தருவோமென தெரிவித்தீர்கள் அதனைச் செய்யலாமே எனக் கேட்டோம். அதற்கு "அது எனது தேர்தல் பிரசாரமே" எனப் பதிலளித்தார். இவ்வாறான ஜனாதிபதி ராஜபக்ஷ, தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வினைத் தருவாரா? இன்றைய சூழலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பல கட்சிகள் ஒன்றிணைந்துள்ளோம். இந்த இணைவு தொடர்ந்து நீடிக்கும். எனவே இந்த உள்ளூராட்சித் தேர்தலில் நாம் கட்சி பேதங்களை மறந்து ஒருமித்த குரலாக போட்டியிட்டு அனைத்து பிரதேச சபைகளையும் வென்றெடுப்போம். என்றும் கூறியிருந்தார், அவரது எண்ணம் நிறைவேற பிரார்த்திப்போம்.

முக்கியமாக கட்டுரையில் சுட்டிக்காட்ட விளையும் விடயம், கருத்து வேறுபாடு ஒற்றுமையின்மை காட்டிக்கொடுப்புக்களும் எம்மினத்திடையே காலாகாலமாக இரத்தத்தில் ஊறிவிட்ட ஒன்று. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் தமிழீழதேசம் இருந்தபோது நகமும் சதையும் போல் இருந்தவர்கள்கூட பதவி பணம் அதிகார மோகத்தில் தன்னிலை மறந்து பாதிக்கப்பட்ட மக்கள் நலனை சிந்திக்காமல் இந்திய ஆதிக்கத்தின் மாயைக்குள்ளும், இலங்கை அரசாங்கம் விரித்து வைத்துள்ள வலைக்குள்ளும், தெரிந்தோ தெரியாமலோ தாம் புதையுண்டுபோவதும் போதாமல். மக்களையும் சிக்கிவிட எடுகோலாகி கொண்டிருக்கின்றனர்.

சுதந்திரமடைந்த இலங்கைக்குள் ஈழத்தமிழர்கள் விடுதலையைத்தேடி பற்றிய ஆயுதம் பலசக்திகளின் சதியால் வெற்றியின் விளிம்பில் தடுக்கப்பட்டுள்ளது.தற்போது ஈழத்தில் களம் அனுசரணையாக இல்லாவிட்டாலும் புலம்பெயர் தேசங்களில் போராட்டத்தின் குறியீட்டை எட்டுவதற்கான வழிகள் போராட்டக்காலத்தில் தேசியத்தலைவரால் ஏற்படுத்தப்பட்டே இருக்கின்றன. போராட்ட முறைகள் மாற்றப்பட்டிருக்கலாம் ஆனால் அதன் உத்வேகம் எவரிடமும் குறைந்து போனதாக அறியமுடியவில்லை. அந்தவகையில் மஹிந்த ராஜபக்க்ஷவின் லண்டன் பயணத்தின்போது புலிக்கொடியுடன் வெற்றிகரமாக ராஜபக்க்ஷவை தமிழர்கள் விரட்டிய நிகழ்வு போராட்ட நோக்கத்தின் புள்ளியை அடைவதற்கான சிறந்த பொறிமுறையில் ஒன்றாகக்கொள்ளமுடியும். இப்படிப்பட்ட நடைமுறைகளை சமய சந்தற்பங்களுக்கு ஏர்ப்ப மாற்றி வெற்றி கொள்ளவேண்டும் என்பதுதான் விழுந்து எழுந்து நிற்கும் தமிழினத்தின் ஆவல்.

இன்று ஆளாளுக்கு சந்திக்கு சந்தி சங்கங்களையும், அரசாங்கங்களையும், அரங்கங்களையும், உருவாக்கி, மலிவு விலையில் ஈழதேசத்து விடுதலை கிடைக்க கடைகள் திறக்கப்பட்டுள்ளன. வேறு தேசத்து மக்களும் பங்காளிகளாக சேர்க்கப்பட்டிருக்கின்றனர். இது எங்கு போய் முடியும் என்பது இந்த முதலாளிகள் அறிந்திருக்கின்றனரோ என்பதும் ஐயம்தான், கவர்ச்சிகரமாக தந்திரசாலி கருணாநிதியின் வழிமுறையை பின்பற்றி உடனடி வாடிக்கை காரர்களைத்தானே இந்தச்சங்கங்கள் தேடுகின்றன, எதை எவர் செய்ய முனைந்தாலும் விடுதலைப்புலிகள் என்ற முகமூடியை மட்டும் எவரும் இழக்க விரும்பவில்லை.

தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் நோர்வே, அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், இந்தியா, என்று சர்வதேசத்தையும் நட்புச்சக்தியாக உள்வாங்கிய ஆளுமையை காணலாம். தலைவர் எவரையும் உறுப்பினராக முண்டுகொடுக்க இணைத்துக்கொண்டதில்லை. இந்தியாவினதும் தமிழ்நாட்டினதும் ஆதரவை தலைவர் அவர்கள் எப்போதும் வேண்டியே வந்திருக்கிறார், ஆனால் தமிழ்நாட்டின் எழுச்சியை ஆதரவை உள்வாங்கி குழுநிலையாக இணைந்து செயற்பட அவர் ஒருபோதும் முயற்சிக்கவில்லை, கல்லெறி தூரத்திலிருந்த தமிழகத்து ஆதரவை தவறான வழியில் தூண்டிவிட்டு உறுப்புரிமை அளித்து அவர்களின் உதவியுடன் போராட்டத்தை நகர்த்த ஒருபோதும் நினைக்கவுமில்லை.

அதற்கான காரணங்களும் உண்டு, இந்தியாவுக்குள் பிரிவினையை தூண்டிவிட்ட அவப்பெயர் வரலாற்றில் விடுதலைப்புலிகளுக்கு வந்துவிடக்கூடாது என்பதில் தலைவர் உறுதியாக இருந்ததைக்காணலாம், அதுவே தலைவர் அவர்களின் வெளிப்படையான கொள்கையாகவும் இருந்தது.வாழ்வோ சாவோ போராட்டம் எல்லாம் எங்களுடனேயே இருக்கட்டும் ஆதரவு சக்திகளாக அனைத்து உலகத்தையும் இணைத்துக்கொள்ளுவோம் என்பதே தலைவரின் அறுதி இறுதியான கொள்கையாக இருந்தது இதை உலகமும் நன்கு அறியும்.

இந்த நடைமுறையே தேசியத்தலைவர் பிரபாகரனுக்கு சர்வதேசத்தில் மிகுந்த மதிப்பும் மரியாதையும் கிடைக்க காரணமகியிருந்தது. தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள்,,, இயக்கத்தின் மையப்புள்ளியிலிருந்துதான் பல கிளை அமைப்புக்களை உருவாக்கியிருந்தார், இது சிலருக்கு பிடிக்காமலிருந்ததுமுண்டு, ஆனாலும் அவரது தீர்க்கமான தொலைநோக்கு சர்வதேச அரங்குவரை ஈழப்போராட்டத்தையும் விடுதலைப்புலிகளின் உறுதிவாய்ந்த கொள்கைகளையும் கொண்டுசென்றிருந்தது.அந்த ஒருமுகப்பட்ட தலைமத்துவத்தால் தான் போராட்டம் சிதையாமலும் நடத்தை ஒழுக்கம் கட்டுப்பாடுகளையும் பேணமுடிந்தது, அத்துடன் ஆதரவு சக்திகளை அவர் அரவணைக்காமல் உதாசீனப்படுத்தியதுமில்லை.

இன்றைய தமிழ் அரசியல்வாதிகள் போல் பலதரப்பட்ட குழுக்களை திறந்துவிட்டு காய்நகர்த்தும் தந்திரத்தை தலைவர் பிரபாகரன் என்றைக்கும் விரும்பியதாகத் தெரியவில்லை, கல்லெறி தூரத்திலிருக்கும் தமிழ்நாட்டுக்குள் மூன்றாம் தர அரசியல்வாதியாக கலவரத்தை தூண்ட அவர் ஒருபோதும் எத்தனிக்கவில்லை.

ஈழத்து இறுதி அழிப்பின்போது இந்திய அரசும் தமிழக அரசும் நடந்துகொண்ட மனித நாகரீகம் கடந்த அராஜகம் சீமானைகொதித்து கோபப்பட வைத்தது. கூட்டங்கூட்டமாக மனித உயிர்கள் காவு கொள்ளப்பட்டதை சகிக்கமுடியாத இயலாமை, போராட்டம் சிதைக்கப்பட்ட சினம், உணர்வுள்ள சீமானை நான் தமிழர் இயக்கத்தை தோற்றுவிக்கத்தூண்டியது. தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் மீது சீமானுக்கிருந்த மதிப்பு, தமிழ்மக்கள் மீதான இனப்பற்று விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தீவிர ஆதரவாளனாக்கியிருக்கிறது, அவரது ஆதரவை தலைவரும் சரி, ஈழ மக்களும் சரி,இன்று வெளியிலிருந்து வேலை செய்யும் இயக்க உறுப்பினர்களும் சரி, மனமார ஏற்றுக்கொள்ளுகிறார்கள் என்பது நடைமுறையில் புரிந்துகொள்ளலாம்.

ஆனாலும் சீமான் மேற்கொள்ளும் அரசியல்,, தமிழ்நாட்டின் உள்ளூர் அரசியல் என்பதுடன் சீமானின் சுய சுதந்திரத்துடன் அவரது பிராந்திய சூழலுக்குட்பட்ட அரசியல் இராசதந்திரமாகவே ஈழமக்கள் எடுத்துக்கொள்ளவேண்டும். அதுதான் யதார்த்தமுமாகும். சீமானின் அரசியலில் ஈழத்தை மூன்னிறுத்தி கருத்து ஒன்றை முன்வைத்து கவிஞர் தாமரை அவர்கள் தாலையீடு செய்திருந்தார் ,தாமரை அவர்கள் ஈழப்போராட்டத்தை காரணம் காட்டி சீமானின் அரசியலில் தலையிட்ட விதம் ரசிக்கக்கூடியதல்ல.

இந்திய-தமிழ்நாட்டு அரசியல் ஈழத்தவர்களால் இலகுவில் புரிந்துகொள்ளக்கூடியதுமல்ல திராவிடக்கட்சிகளின் இடியப்ப சிக்கலான கொள்கைகள் அவர்களைத்தவிர வேறு எவராலும் புரிந்துகொள்ள முடியாத அடி முடியற்ற ஒன்று, அதே நடைமுறையை இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பின்பற்றத்தொடங்கியிருக்கிறது, தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் குடியிருப்பதால் அவர்களும் தமிழ்நாட்டின் அரசியல் மனோநிலைக்குள் வீழ்ந்துவிட்டனர் என்றே கொள்ள முடியும்.

இரத்தமும், சதைகளும், எண்ணற்ற இளம் பிஞ்சுகளின் தியாகமும்,,, ஒளிவட்டத்தை கொண்ட ஒப்பற்ற தலைவனின், உன்னத வழிநடத்தலில் உருவான விடுதலைப்புலிகள் இயக்கம் சாதாரணமானவர்களால் கையாளக்கூடிய ஒன்றல்ல, காப்பரண்களான மூலங்கள் மறைந்தும் நிமிர்ந்தும் வழிநடத்துவர் விடுதலைப்புலிகள் இயக்கம் இருந்துகொண்டேயிருக்கும்.

ஈழதேசம் இணையத்திற்காக
ஆரணி,

Saturday, February 5, 2011

பிரித்தானியாவில் தமிழினத்தை இன்னும் நிமிரவைத்த தமிழீழத்தேசியக்கொடி,

கரிநாளான சிறிலங்காவின் சுதந்திரதினத்தை தமிழர்கள் கறுப்பு தினமாக அறிவித்து,நேற்று புலம்பெயர்ந்த தேசங்களில் உள்ள சிறிலங்காவின் தூதுவராலயங்களுக்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியுள்ளனர்.


தமிழீழத் தேசியக் கொடி தடை செய்யப்பட்டதாக பிரித்தானியக் காவல்துறைக்கு அறிவித்த சிறிலங்கா தூதுவராலயம், அதனை மக்கள் பிடித்திருப்பதை தடுக்குமாறும் கோரியிருந்துள்ளது. பிரித்தானியா காவல்துறையினர், அங்கு வந்து தமிழீழ தேசியக் கொடியைப்பிடிப்பதற்கு தடை எதுவும் இல்லை என்று கூறியதுடன், மக்கள் தொடர்ந்து அதனைப்பிடித்திருப்பதற்கும் அனுமதித்துள்ளனர்.

உலகிலுள்ள அனைத்து இனங்களின் வெளிப்பாடான தேசியக்கொடிகள், மக்களையும் அவர்கள்தம் தாயகத்தையும் வரலாற்றையும் மற்றய சமூகத்திற்கு காட்டி நிற்பதுபோல், தமிழ்த்தேசியத்தின் முதலாவது வெளிப்பாடு (புலிக்கொடி) தமிழீழத்தேசியக்கொடி.

தியாகமும் மரணங்களும் இரத்தமும் உறக்கமில்லாத விழிகளினதும், உயிரோவியமான பிரதிப்பிம்பம் ஒப்பற்ற ஈழத்தேசியக்கொடி, தேசியக்கொடி இல்லாமல்ப்போவதும் தமிழ் இனம் இல்லாமல்ப்போவதும் ஒன்றுதான்.

கோவில் திருவிழா,, சாதாரண மூன்றுபேருள்ள அரசியல்க்கட்சி, பாடசாலை விளையாட்டுப்போட்டிக்கு, கொடி ஒன்று தேவைப்படும்போது, நாற்பதினாயிரம் உயிர்களை விடுதலைக்கு விதையாக்கி, இலட்சக்கணக்கான உயிர்களை பலிகொடுத்து உருவான. விடுதலை வேள்வியில் இரத்தத்தாலான தேசியக்கொடியின் பெறுமதி உணர்வுள்ளவனுக்கு. அது மானம், உயிர், சொத்து, கற்பு, அவனது மூச்சுக்காற்று,

ஒவ்வொரு இனமும் தத்தமது அடையாளமாக ஒரு தேசியக்கொடியை சிருஸ்டித்துக்கொள்ளுகின்றன, ஒரு இனத்தின் வரலாறு பாரம்பரியம் உணர்வுகள் இன்பம் துன்பம் இலாபம் நட்டம் எதிர்காலம் எல்லாவற்றின் வெளிப்பாடாக உருவான வரலாற்று சின்னம் தேசியக்கொடி,

உலகிலுள்ள எந்த இனமாக இருந்தாலும் தமது அடையாளத்தை மொழி கலாச்சார குறியீடுகள் தவிர்த்து, தம்மை மற்றய சமூகத்தின்முன் வெளிப்படுத்தும் ஒப்பற்ற தமது இறைமையின் அடையாள ஆதாரம் தேசியக்கொடி தவிர வேறெதுவாகவும் இருக்க முடிடாது.

இதை உணர்ந்து தமிழீழ தேசியக் கொடியைப் ஏந்துவதற்கு தடை எதுவும் இல்லை என்று கூறியதுடன், மக்கள் தொடர்ந்து அதனைப் வைத்திருப்பதற்கு அனுமதித்துள்ள பிரித்தானிய அரசாங்கத்தின் பெருந்தன்மையை போற்றி அந்தநாட்டின் சட்டத்தை மதித்து , தமிழ்சமுதாயம் நன்றியை தெரிவித்துக்கொள்வோம், தேசியக்கொடியின் அருமை புரியாதவர்களும் வேற்று இனத்து பிரித்தானிய வெள்ளையர்களின் ஆழமான புரிதலின் பின்னாவது தேசியக்கொடி என்பது தெருவில் ஆலவட்டம் போடும் நிறத்துண்டு, அல்ல என்பதை புரிந்து கொள்ளுவார்கள்.

நன்றி ஈழதேசம் இணையம்