Saturday, February 5, 2011

பிரித்தானியாவில் தமிழினத்தை இன்னும் நிமிரவைத்த தமிழீழத்தேசியக்கொடி,

கரிநாளான சிறிலங்காவின் சுதந்திரதினத்தை தமிழர்கள் கறுப்பு தினமாக அறிவித்து,நேற்று புலம்பெயர்ந்த தேசங்களில் உள்ள சிறிலங்காவின் தூதுவராலயங்களுக்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியுள்ளனர்.


தமிழீழத் தேசியக் கொடி தடை செய்யப்பட்டதாக பிரித்தானியக் காவல்துறைக்கு அறிவித்த சிறிலங்கா தூதுவராலயம், அதனை மக்கள் பிடித்திருப்பதை தடுக்குமாறும் கோரியிருந்துள்ளது. பிரித்தானியா காவல்துறையினர், அங்கு வந்து தமிழீழ தேசியக் கொடியைப்பிடிப்பதற்கு தடை எதுவும் இல்லை என்று கூறியதுடன், மக்கள் தொடர்ந்து அதனைப்பிடித்திருப்பதற்கும் அனுமதித்துள்ளனர்.

உலகிலுள்ள அனைத்து இனங்களின் வெளிப்பாடான தேசியக்கொடிகள், மக்களையும் அவர்கள்தம் தாயகத்தையும் வரலாற்றையும் மற்றய சமூகத்திற்கு காட்டி நிற்பதுபோல், தமிழ்த்தேசியத்தின் முதலாவது வெளிப்பாடு (புலிக்கொடி) தமிழீழத்தேசியக்கொடி.

தியாகமும் மரணங்களும் இரத்தமும் உறக்கமில்லாத விழிகளினதும், உயிரோவியமான பிரதிப்பிம்பம் ஒப்பற்ற ஈழத்தேசியக்கொடி, தேசியக்கொடி இல்லாமல்ப்போவதும் தமிழ் இனம் இல்லாமல்ப்போவதும் ஒன்றுதான்.

கோவில் திருவிழா,, சாதாரண மூன்றுபேருள்ள அரசியல்க்கட்சி, பாடசாலை விளையாட்டுப்போட்டிக்கு, கொடி ஒன்று தேவைப்படும்போது, நாற்பதினாயிரம் உயிர்களை விடுதலைக்கு விதையாக்கி, இலட்சக்கணக்கான உயிர்களை பலிகொடுத்து உருவான. விடுதலை வேள்வியில் இரத்தத்தாலான தேசியக்கொடியின் பெறுமதி உணர்வுள்ளவனுக்கு. அது மானம், உயிர், சொத்து, கற்பு, அவனது மூச்சுக்காற்று,

ஒவ்வொரு இனமும் தத்தமது அடையாளமாக ஒரு தேசியக்கொடியை சிருஸ்டித்துக்கொள்ளுகின்றன, ஒரு இனத்தின் வரலாறு பாரம்பரியம் உணர்வுகள் இன்பம் துன்பம் இலாபம் நட்டம் எதிர்காலம் எல்லாவற்றின் வெளிப்பாடாக உருவான வரலாற்று சின்னம் தேசியக்கொடி,

உலகிலுள்ள எந்த இனமாக இருந்தாலும் தமது அடையாளத்தை மொழி கலாச்சார குறியீடுகள் தவிர்த்து, தம்மை மற்றய சமூகத்தின்முன் வெளிப்படுத்தும் ஒப்பற்ற தமது இறைமையின் அடையாள ஆதாரம் தேசியக்கொடி தவிர வேறெதுவாகவும் இருக்க முடிடாது.

இதை உணர்ந்து தமிழீழ தேசியக் கொடியைப் ஏந்துவதற்கு தடை எதுவும் இல்லை என்று கூறியதுடன், மக்கள் தொடர்ந்து அதனைப் வைத்திருப்பதற்கு அனுமதித்துள்ள பிரித்தானிய அரசாங்கத்தின் பெருந்தன்மையை போற்றி அந்தநாட்டின் சட்டத்தை மதித்து , தமிழ்சமுதாயம் நன்றியை தெரிவித்துக்கொள்வோம், தேசியக்கொடியின் அருமை புரியாதவர்களும் வேற்று இனத்து பிரித்தானிய வெள்ளையர்களின் ஆழமான புரிதலின் பின்னாவது தேசியக்கொடி என்பது தெருவில் ஆலவட்டம் போடும் நிறத்துண்டு, அல்ல என்பதை புரிந்து கொள்ளுவார்கள்.

நன்றி ஈழதேசம் இணையம்

No comments: