Tuesday, March 27, 2012

ஈழ அரசியலுக்கான, ஒப்பந்தங்களும் தீர்மானங்களும், நேற்று,சிங்களம். இன்று,இந்தியா. நாளை,சர்வதேசம்!?.

ஸ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ, அவர்களால் சுயமாக தயாரிக்கப்பட்டு உலகத்தை ஏமாற்ற வழங்கப்பட்ட Lessons Learnt and Reconciliation Commission.(LLRC) அறிக்கையில், பரிந்துரைக்கப்பட்ட வேலைத்திட்டத்தை,
நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும் என்ற அமெரிக்க அரசின் தீர்மானம், மார்ச் 22, 2012 அன்று ஜெனீவா ஐநா சபையின் மனித உரிமை ஆணையத்தின் 19வது கூட்டத்தொடரின்போது வாக்கெடுப்புக்குவந்து. 24 நாடுகள் பெரும்பான்மை ஆதரவாக வாக்களித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் இலங்கை அரசு தனது சுத்துமாத்து வசதிக்கேற்றவாறு தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கையின் பரிந்துரைகளை நிறைவேற்றும் மனப்பாங்குடன் தயாரிக்கவில்லை என்பது தீர்மானத்தின்போது இடம்பெற்ற முரண்பாடுகளிலிருந்து தெரிகிறது.
ஒப்பந்தங்களையும் ஆணைக்குழுக்களையும் எழுத்தளவில் உருவாக்கி ஊரையும் உலகத்தையும் ஏமாற்றி பழக்கப்பட்ட இலங்கை ஆட்சியாளர்கள் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை எப்படி கைக்கொள்ளப் போகின்றனர் என்பதை வருங்காலங்களில் அறியவரும்.

1957 ஜூலை 26, 1957 அன்று அப்போதைய இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட"பண்டா செல்வா ஒப்பந்தம்"  கிழித்தெறியப்பட்டது தமிழுலகம் அறிந்ததே.

அதன்பின் முப்பது வருடங்களுக்குப்பின்,

22-03-2012 ஜெனீவா, அமெரிக்க தீர்மானம் நிறைவேறுவதற்கு இருபத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அன்றைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி, அவர்களும். அன்றைய இலங்கையின் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனா இருவருக்கும் இடையே யூலை 29, 1987 அன்று ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதை ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வுக்கான 'இலங்கை இந்திய ஒப்பந்தம்' என்று கூறப்பட்டது'?

அந்த ஒப்பந்தம், இலங்கையை ஒரு பல்லின, பலமத, பலமொழி நாடாக ஏற்று, வடகிழக்கை தமிழ் முஸ்லீம் மக்களின் இணைந்த தாயகப்பிரதேசமாக ஏற்று, தமிழ் மொழியை அரச மொழியாக ஏற்று, மாகாண சபைகளுடனான அதிகாரப் பரவலாக்கத்தை முன்வைக்கின்றது என்று வரையப்பட்டிருந்தது.

1. இலங்கையின் ஐக்கியம், இறைமை, பிராந்திய ஒருமைப்பாடு, ஆகியவற்றைப் பேணிக்காக்க விரும்பி,

2. இலங்கை சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள், பறங்கியர் ஆகியோரைக் கொண்ட பல்லின,பன்மொழி சமூகங்கள் வாழும் நாடு என்பதை உணர்ந்து,

3. "மிகக் கவனமாகப் பேணிக் காப்பாற்ற வேண்டிய தனித்தனிக் கலாசாரம்,மொழி அடையாளங்களை ஒவ்வொரு இனமும் கொண்டுள்ளதென்பதையும்",

4. வடக்கு,கிழக்கு மாகாணங்கள் அங்கு ஏனைய இனக்குழுக்களுடன் எல்லாக் காலத்திலும் ஒன்றாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுபூர்வமான வசிப்பிடங்கள் என்பதையும் அங்கீகரித்து,

5. இலங்கையின் ஐக்கியம்,இறைமை,பிரதேச ஒருமைப்பாடு ஆகிய அம்சங்களைப் பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த சகல பிரஜைகளும் சமத்துவமாகவும், பாதுகாப்பாகவும், ஒற்றுமையாகவும் சுபீட்சத்துடன் தங்கள் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றி வாழும் பல இன, பல மொழி பேசும் பல மதங்களைக் கடைப்பிடிக்கும் தன்மையைப் பேணி, பின்வரும் உடன்பாட்டிற்குவருகிறோம் என்று அந்த ஒப்பந்தத்தில் வரையப்பட்டிருந்தது.

அவ் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, இந்தியாவின் விருப்பத்திற்கமைய ஒருதலைப்பட்ஷமாக வடகிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக வரதராஜப்பெருமாள் நியமிக்கப்பட்டார். "ஒட்டுமொத்தமான ஈழத்தமிழர்களும், ஈழத்தமிழர்களின் ஒரே ஒரு பாதுகாப்பு அரணான தமிழீழ விடுதலைப்புலிகளும் விரும்பாத அந்த ஒப்பந்தத்தை தனது வரட்டு பிடிவாதத்தால் இலங்கையில் அறிமுகப்படுத்தியே தீருவேன் என்று அடம்பிடித்து ராஜீவ் அந்த ஒப்பந்தத்தை உருவாக்கியிருந்தார். ஆனால் அந்த ஒப்பந்தத்தில் உள்ள ஒரு சிறு துரும்புகூட ஸ்ரீலங்கா ஆட்சியாளர்கள் பாவனைக்குட்படுத்தவில்லை என்பது வேறுவிடயம்.

அப்போ அமைதி காக்கும் படை என்ற Indian Peace Keeping Force இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்தபோதும், ஒப்பந்தத்தில் வரையப்பட்ட எந்த ஒரு அதிகார அலகுகளையும் இலங்கையில் ஆட்சிபுரிந்த சிங்கள ஆட்சியாளர்கள் மூலம்  வடகிழக்கு மாகாணசபைக்கு வழங்கி செயல்வடிவமாக்க இந்திய வல்லாதிக்கத்தால் முடிந்திருக்கவில்லை. ஒரு சிறிய கிராம அபிவிருத்திச்சங்கத்துக்குள்ள அதிகாரம் கூட இல்லாமல் வடகிழக்கு மாகாணசபை பரிதாபமாக தேய்ந்து இல்லாமல் போனது.

காலாகாலமாக கடதாசி ஒப்பந்தங்கள் மூலம் ஏமாற்றப்பட்டு பொறிப்பந்தல் நிலையில் வாழ விரும்பாத வடகிழக்கு வாழ் தமிழ்பேசும் மக்களுக்கு, 1987  இந்திய அரசால் திணிக்கப்படும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் வரையப்பட்ட அம்ஷம்கள். அரசியல் ரீதியாக நீண்ட நிலையான தீர்வுதரக்கூடியவை அல்ல என்று, விடுதலைப்புலிகள் ஒப்பந்தத்தை புறக்கணித்திருந்தது அனைவரும் அறிந்தது.

சிங்கள ஆட்சியாளர்கள் துவேஷ நோக்கமின்றி, சகோதரத்துவ மனப்பாண்மையுடன், அன்று எழுதப்பட்ட ஒப்பந்தத்தில் பரிந்துரைக்கப்பட்ட அதிகாரங்கள் ஒருசிலவற்றையாவது காலவரையறை ஒன்றுக்கு உட்படுத்தாமல் படிப்படியாகவென்றாலும் நிறைவேற்றப்பட்டிருக்குமாயின், தமிழர் தாயக மக்களின் சூழ்நிலையில் மாற்றம் ஏற்ப்பட்டிருக்க முடியும்.  இந்திய-இலங்கை அரசுகள்மீது தமிழ்த்தரப்பினருக்கு ஐயுறவில்லாத ஒரு நம்பிக்கை பிறந்து ஆயுதப்போராட்டத்தில் காட்டும் முனைப்பைவிட ஜனநாயகவழியில் மீதி உரிமைகளுக்காக போராடும் சூழ்நிலை உருவாகியிருக்கக்கூடும்.

நிறைவான ஒரு மையத்தை அடைய காலம் நீடித்திருந்தாலும் பெருத்த பொருள் அழிவு, கூட்டம் கூட்டமாக மக்கள் அழிக்கப்பட்ட நிலமை தடுக்கப்பட்டிருக்கும்.

இலங்கை ஆட்சியாளர்களுக்கும் தமிழர் தரப்பிற்கும்  இடையில் காலாகாலமாக இருந்துவந்த முரண்பாட்டுக்கான தடைகளை அகற்றி. யதார்த்தமான, நியாயமான,  அரசியல் முன்னெடுப்புக்களை உருவாக்கி சரியான தீர்வை ஈட்டிக்கொடுக்க முடியுமென்று மத்தியஸ்தனாக இலங்கைக்குள் புகுந்த இந்திய அரசால் எதுவுமே முடியவில்லை. அமைதிப்படை என்று வந்திறங்கிய இந்திய இராணுவம், ஈழமக்களின் நிம்மதியை குலைத்து பெண்கள், குழந்தைகளின் வாழ்க்கையை சீரழித்தது. இறுதியில் சிங்கள ஆட்சியாளர்களாலேயே அவமானப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டது. துரதிஷ்டவசமாக இந்தியத்தலையீட்டால் தமிழினத்துக்கு அழிவுமட்டும் மிஞ்சியது. அதன் பின்னரும் ஈழதேசம் எங்கும் பழைய நிலை தோற்றுவிக்கப்பட்டு சிங்கள பாசிசவாதிகளால் போர் நீடிக்கப்பட்டது.

இந்திய வெளியேற்றம் நடந்து பின்வந்த பத்து, பதினைந்து வருடங்கள் இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் மற்றும் பாஜக ஆட்சியாளர்கள் இலங்கைப்பிரச்சினையில் தலையிடாக்கொள்கையை கடைப்பிடிப்பதுபோல் காட்டிக்கொண்டனர். ஈழத்தமிழன் படை வெற்றியின் புள்ளியை அண்மிக்கும் சமயத்தில் இலங்கை இன விவகாரங்களில் தலையிடா கொள்கையை கடைப்பிடிப்பதாக கூறிய இந்திய காங்கிரஸ் அரசு மறைமுகமாக ஸ்ரீலங்கா ராஜபக்க்ஷவின் இராணுவத்துக்கு அனைத்து உதவிகளையும் நேரடியாகச்செய்து முள்ளிவாய்க்காலில் முழு இன அழிப்புடன் போராட்டமும் வஞ்சகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

ஈழத்தமிழனின் கடந்தகால வாழ்வின் வரலாற்றுச் சூழலை ஆராய்ந்து அறிந்திராத சர்வதேசம், ஆயதப்போராட்டம் அரசியல் ரீதியான தீர்வுக்கு உகந்ததல்ல என்ற பொதுவான கருத்தை கூறிவந்தது.

முப்பது வருடங்களாக ஈழத்தமிழினம் அஹிம்சை வழியில் நடத்தப்பட்ட போராட்டங்கள் அனைத்தும் இழிவுபடுத்தப்பட்டு ஒடுக்கப்பட்டதால் வேறு வழியின்றி ஆயுதம் ஏந்தும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டோம் என்பதையும். தமிழினத்தை மதித்து எவரானாலும் ஒரு நல்ல தீர்வுத்திட்டத்தை வழங்கினால் ஆயுதப்போராட்டம் தேவையற்றதென்பதையும் தமிழர் தரப்பின் ஏக பிரதிநிதிகளான புலிகளும் ஒத்துக்கொண்டிருந்தனர். இருந்தும் ஒருகட்டத்தில் விடுதலைப்புலிகளை பயங்கரவாத அமைப்பாக சித்தரித்து உலக நாடுகள்  தடைசெய்வதற்கு முன்னுதாரணமாக இந்தியாவே பிள்ளையார் சுழி போட்டு பிரச்சாரம் செய்தது. இலங்கை-இந்திய கொள்கை வகுப்பாளர்களின் இட்டுக்கட்டிய பிரச்சாரம் உலகில் பல நாடுகள் விடுதலைப்புலிகள் இயக்கததை தடைசெய்ய உதவின.

ஒருகட்டத்தில் விடுதலைப்புலிகளிடம் தொடர் தோல்விகளை சந்தித்த ஸ்ரீலங்கா அதிபர் ராஜபக்க்ஷ பல நாடுகளிடமும் உதவியை நாடினார். அந்த சந்தற்பத்தை பயன்படுத்திய சோனியா தலைமையிலான இந்தியா, சிங்கள அரசின் தமிழர் விரோதமான அதே நிலைப்பாட்டை பின்பற்றி, புலிகள் இயக்கத்தை ஆயுதத்தாலும் வஞ்சக தந்திரங்களாலும் அழித்து வெற்றிகொள்ள ஸ்ரீலங்காவுடன் இணைந்து களமிறங்கியுருந்தது. இதற்கு தமிழ்நாட்டின் அரசியல்வாதிகளான கருணாநிதி மற்றும் பல காங்கிரஸ் அரசியல்வாதிகள் உறுதுணையாக இருந்து பல தந்திர நாடகங்களை நடத்தினர்.

கேணல் கிட்டுவின் படுகொலையில்த்தொடங்கி புலிகளின் ஆயுதக்கப்பல்களை அழிப்பதுவரை இந்தியாவின் நரித்தனமான தந்திரமே ஸ்ரீலங்காவின் கை ஓங்க காரணமாகியிருந்தது. ஆனாலும் போராட்டத்தில் வெற்றிகொள்ளமுடியவில்லை.

எந்தவிதத்திலும் தமிழரின் உணர்வுரீதியான போராட்டத்தை வெற்றிகொள்ள முடியாது என அறிந்த, காட்டுமிராண்டிகளை கொள்கை வகுப்பாளர்களாகவும் ஆட்சியாளர்களாகவும் கொண்ட இந்தியா, இறுதிக்கட்ட முள்ளிவாய்க்கால் அழிப்பின்போது நச்சு இரசாயின ஆயுதங்களை மிருகத்தனமாக  பயன்படுத்த ஸ்ரீலங்காவை அனுமதித்தது. அதற்கான நச்சு தொழில்நுட்பத்தையும் ஆளணிகளையும் எந்த குற்ற உணர்வுமில்லாமல் ஸ்ரீலங்காவுக்கு கொடுத்துதவி நடத்தப்பட்ட அத்தாக்குதலில் ஒரேநாளில் ஆயிரக்கணக்கான  தளபதிகளும் போராளிகளும் பல ஆயிரம் பொதுமக்களும் கொல்லப்பட்டனர்.

சர்வதேசம் குறிப்பிடும் போர்க்குற்றம் என்ற பதத்தின் எழுவாயாக, சர்வதேச நெறிமுறைகளை மீறி தடைசெய்யப்பட்ட ஆயுதப்பாவனை, குடியிருப்பு, மற்றும் குடியிருப்பற்று அவல் நிலையில் தத்தளிக்கும் மக்கள் மீதான இடைவெளியில்லாத விமான, வான்வெளி தாக்குதல் படுகொலை உத்தி, போன்ற மனித அழிவுக்கு காரணமான நாசகார அனர்த்தத்தையே பெருத்த மனித உரிமை மீறலாக ஐநா சாசனம் குறிப்பிடுகிறது. icrc  மற்றும் International Crisis Group  அமைப்புக்குக்களும் அவற்றையே வெறுக்கத்தக்க முதல்த்தர போர்க்குற்றமாக சுட்டிக்காட்டி வருகின்றன. ஆனால் சகல அத்துமீறல்களையும் இலங்கை இராணுவம், இந்திய ஆதரவுடன் ஈழத்தமிழ் மக்கள் மீது எந்தவித குற்ற உணர்வுமில்லாமல் பிரயோகித்திருக்கிறது.

முள்ளிவாய்க்கால் அழிவின்பின்,  இந்தியாவின் பணிப்பின் பேரிலேயேதான் ஈழப்போரை நடத்தி முடித்ததாக, ஸ்ரீலங்கா அதிபர் ராஜபக்க்ஷ, மற்றும் ஸ்ரீலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தபாய ராஜபக்க்ஷ ஆகியோர் பலமுறை செய்தியாளர்களை சந்தித்தபோது கூறி,  இந்தியாவுக்கு பகிரங்கமாக நன்றி தெரிவித்திருக்கின்றனர்.

போர் முடிந்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன. உலகநாடுகள் பலமுறை பல வாதப்பிரதிவாதங்களை ஆராய்ந்து இறுதியாக ஐநா மன்றத்தின் பணிப்பின்பேரில் மூன்றுபேர் கொண்ட நிபுணர்குழு அமைக்கப்பட்டது. நியமிக்கப்பட்ட குழுவினர்  போர்பற்றிய நீண்ட தகவல் ஆய்வு அறிக்கையையும் தயாரித்து ஐநா செயலரிடம் கையளித்திருக்கிறனர். இருந்தும் ஏதோ உள்அழுத்தம் காரணமாக ஐநா செயலாளர் அந்த அறிக்கையின் முக்கியத்துவத்தை இதுவரை பகிரங்கப்படுத்தியிருக்கவில்லை!.

சீன, ரஷ்ய எதிர்ப்பு தவிர, இந்தியத்தலையீடு காரணமாகவே அனைத்து நியாயங்களும் ஐநாவில் ஒடுக்கப்பட்டு வஞ்சகத்துக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது என்ற எண்ணமே சர்வதேச தொண்டமைப்புக்களுக்கும், இன்னர் சிற்றி போன்ற சர்வதேச ஊடகங்களுக்கும், தமிழினத்திற்கும் நெருடலாக இருந்து வந்திருகிறது.

இருந்தும் நீதி மேலெழுந்து நியாயம் கிடைப்பதற்கு முயற்சி நடப்பதாகவே சர்வதேச தொண்டமைப்புக்களின் தலையீடுகளின் ஒவ்வொரு கட்டங்களும் அறிவுறுத்தி வந்தன. இந்தத்தொடர்ச்சியில்   இலங்கையின் மனித உரிமைமீறல் விசாரணையின் ஒருகட்டமாக ஐநா மன்றத்தின் 19வது மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தொடர், சில நியாயங்களை வெளிக்கொண்டு வரும் என்ற நம்பிக்கை பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. நடந்து முடிந்த ஐநா மனித உரிமை மாமன்றத்தின் 19வது கூட்டத்தொடரில் ஸ்ரீலங்கா-இந்திய அரசபடைகளால் நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் இனப்படுகொலை எவற்றிற்கும்  சரிநிகரான நியாயம் எவராலும் கண்டுபிடிக்கப்படவில்லை.

பல இலட்சம் மக்கள் "தொடர் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர்". பல ஆயிரம் மக்கள் கை, கால், கண்கள் இழந்து ஊனமாக்கப்பாட்டிருக்கின்றனர். மேலாக பல ஆயிரம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டிருக்கின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் பற்றிய சரியான தகவல்கள் இன்றுவரை கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது. பலாத்காரம், கற்பழிப்பு, தவிர இராணுவமயத்துள் மக்கள் பேசாமடந்தைகள் ஆக்கப்பட்டிருக்கின்றனர். இவைகளுக்கான நியாயத்தை எவரிடம் கேட்டு பெறுவது? இதைவிடவும் துன்பம் ஒன்று உலகில் உண்டா! நம்பிக்கையாக இருந்த ஒரே தெரிவான ஐநா அமைப்பு? சர்வதேசம் அபிவிருத்தி, மீழ் கட்டமைப்பில் கரிசனை கொண்டிருந்தாலும். நடந்து முடிந்த மனிதப்படுகொலைகளுக்கான விசாரணையை பகிரங்கமாக்கி குற்றத்துக்கான தண்டனையிலிருந்து சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்காமல் ஒளிப்பு மறைப்புச்செய்து புறந்தள்ளமுடியாது.

(கசப்பான) கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு, ஸ்ரீலங்கா ஜனாதிபதி ராஜபக்க்ஷவின் ஆலோசனையுடன் வேறு எவரது தலையீடுமில்லாமல் சிங்கள தரப்பால் உருவான ஒரு அமைப்பு, உலகத்தை ஏமாற்றும் நோக்கத்துடன் தப்பித்தலுக்காக  உருவாக்கப்பட்ட ஒன்று, அந்த அமைப்பால் எழுதப்பட்ட வரைவு கொல்லப்பட்ட தமிழினத்திற்கு எந்தளவுக்கு நியாயமாக செயல்ப்படும் என்பது உள்ளூர், மற்றும் உலகம் அறிந்த விடயம்.  படுகொலையில் ஈடுபட்டவனே நீதி வழங்கும் நீதிமானாக இருப்பான் என்று புதிய சித்தாந்தத்தை நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு சொல்லுகிறது.---------------------

அந்த அறிக்கையின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதன் மூலம் தமிழர்களுக்கன சுபீட்சமான வாழ்வை உறுதிப்படுத்திவிடலாம் என்பதும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் ஒருதலைப்பட்ட வாதம்.   இதுபோன்ற ஆயிரம் வரைவுகளை தமிழினம் கண்டு கழித்துவிட்டது. வரைவுகளும் ஆணைக்குழுக்களும் இலங்கை வரலாற்றில் வல்லமை உள்ளதாக இருந்திருந்தால் ஆயுதத்திற்கும் படுகொலைகளுக்கும் இடமில்லாமல்ப்போயிருக்கும். கொலைக்குற்றவாளியான நண்பன் இந்தியா, தவிர வேறு எவரும் எல்எல்ஆர்சி அறிக்கையை  ஏற்றுக்கொள்ளவுமில்லை.

அறிக்கையை வெளியிட்டு வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்குவதுபோன்ற மாயையை உலவவிட்டு காலம் கடத்துவதே இலங்கை-இந்திய ஆட்சியாளர்களின் தந்திரம் என்பதை உலகம் உணர்ந்து கொண்டதனால், அந்த அறிக்கையில் கூறப்பட்ட பரிந்துரைகளை முதல்க்கட்டமாக நிறைவேற்றிக்காட்டுங்கள் என்பதே அமெரிக்க தீர்மானத்தின் கருப்பொருளாகவுள்ளது. இந்த மென்போக்கான கட்டளை பல திருகுதாளங்களை அரங்கேற்றி காலம் கடத்த உதவும் என்பதே உண்மை.

ஸ்ரீலங்காவே தயாரித்து வெளியிட்ட 'எல்எல்ஆர்சி' அறிக்கை, அதை நண்பன் இந்தியா வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்த நிலையில் அதை செயல்வடிவமாக்குவதற்கு இந்தியா-இலங்கை விரும்பவில்லை. அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தில்க்கூட திருத்தம் செய்து சர்வதேசத்தின் தலையீடு அல்லது அறிவுறுத்துவது இந்திய ஆதிக்கத்தால் தடுக்கப்பட்டிருக்கிறது. எதையும் பேப்பர் வடிவில் மட்டுமே பாவித்துப்பழக்கப்பட்ட சிங்கள-இந்திய ஆட்சியாளர்கள் சர்வதேசத்திடமிருந்து  இப்படியான ஒரு நெருக்கடி விரைவில் வரும் என்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. தமிழினத்தின் குரல்வளையை அடைக்கவல்ல சதித்திட்டம் நிறைந்த தரவுகள்தான் ஸ்ரீலங்காவின் அறிக்கையில் நிறைந்திருக்கின்றன, ஓரிரு சாதகமான பரிந்துரைகளும் தமிழினத்தை ஏமாற்றுவதற்காக இணைத்து செருகப்பட்டிருக்கின்றன. (கொடுக்காத கடன் என்றால் ஒரு ரூபாவென்ன ஒரு கோடி என்றால்த்தானென்ன எல்லாம் ஒன்றுதானே)

அமெரிக்க நெருக்குதலுக்கு பயந்து அறிக்கையை நடைமுறைப்படுத்த புறப்பட்டால் "தமிழினத்தை ஏமாற்றுவதற்காக செருகப்பட்ட" தமிழர்களுக்கு சாதகமான சில விடையங்களையும் செயல்ப்படுத்தவேண்டி வரும் என்ற ஐயமே "எவரும் தலைய்யீடு செய்து நிர்ப்பந்திக்காக்கூடாது" என்ற இந்தியாவின் திருத்தத்தின் தந்தரமாக காணலாம்.  நாளடைவில் போர்க்குற்றம் கிளறப்பட்டு சர்வதேச நீதிமன்றம்வரை செல்லவேண்டிய அபாயம் தோன்றிவிடும் என்ற அச்சமும். இந்திய இலங்கை ஆட்சியாளர்களை பறந்தடிக்க வைத்திருக்கிறது.

நடந்து முடிந்த ஐநா மனித உரிமை ஆணைக்குழுவின் அமர்பில் விவாதிக்கப்பட்ட விடயமாகட்டும், அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட தீர்மானமாகட்டும் ஸ்ரீலங்கா அரசின் விருப்புக்கு மாறாக முரணாக எதையும் நிறைவேற்றிவிடவில்லை. ஸ்ரீலங்கா அரசால் வரையப்பட்ட எல்எல்ஆர்சி அறிக்கை பரிந்துரைகளை துரிதமாக நடத்தவேண்டும் என்கின்ற காலக்கெடு மட்டுமே இடித்துரைக்கிறது.

அமெரிக்க கொண்டுவந்த தீர்மானத்தை 47 அங்கத்துவ நாடுகளில் பெரும்பன்மையான அங்கத்துவ நாடுகள் ஆதரவாக வாக்களிக்க தயாராக இருந்தன. இந்தியா ஆரம்பத்தில் தீர்மானத்தை எதிர்த்ததும், இந்தியாவை ஸ்ரீலங்கா அதிபர் ஆதரவாக வாக்களிக்கவேண்ட்டாம் என்று கேட்டுக்கொண்டதும் செய்தியாக வந்தன. ஆனால் தீர்மானம் பெரும்பான்மை வாக்குக்களால் நிறைவேற்றப்படப்போகிறது என்பது தெரிந்ததும் இந்தியா நிலமையை உணர்ந்துகொண்டது.  எதிராளியாக வெளியிலிருந்து முகமூடி கிழிக்கப்பட்டு மூக்குடைபடுவதிலும் பாற்க உள்ளிருந்து கழுத்தறுப்பு செய்யலாம் என்ற தந்திரத்துடன் தீர்மானத்துக்கு ஆதரவாக தானும் வாக்களிக்க இருப்பதாகவும் தீர்மானத்தில் சில திருத்தங்களை செய்யவேண்டும் என்றும் தீர்மானத்தின் உயிர்ப்புத்தன்மையான வசனங்களை மாற்றம் செய்து மந்தப்படுத்த இந்தியா முயன்று தன்னையும் காத்து நண்பன் ராஜபக்க்ஷவையும் காத்து உதவியிருக்கிறது.

ஐநா அமர்வின்போது தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்களித்திருந்தாலும், அமெரிக்காவின் தீர்மானம் ஓரளவு பெரும்பான்மை ஓட்டுக்களால் வெற்றியடைந்திருக்கும் என்பதே உலக நாடுகளின் கணிப்பும் யதார்த்தமும்.  தீர்மானம் நிறைவேற்றப்பட்டபின்  எவரது தடைகளையும் பொருட்படுத்தாது மேற்குலகின் நேரடித்தலையீடு ஸ்ரீலங்காவை நெருக்கடிக்குள் ஆக்கியிருக்கும். இதனால் போர்க்குற்றம் சம்பந்தமான பல விசாரணை வேலைத்திட்டங்களை இந்தியாவாலும் தடுக்கமுடியாமல் போய்விடும் என்பதால் இந்தியா தனது வழமையான நரித்தனத்தை பாவித்து தீர்மானத்துள் புகுந்து சதிசெய்ய இருப்பது பின்னர் அறியலாம்.

உலகத்தமிழ் செய்தி ஊடகங்கள் இதை ஒரு வெற்றிச்செய்தியாக வெளிப்படுத்தின. வட இந்திய ஊடகங்கள் வயிற்றெரிச்சலை வெளிப்படுத்தியிருக்கின்றன.   எதிர்கால விளைவின் வீரியத்தை உணராமல் அமெரிக்க எதிர்ப்பு அலைகளை உள் நாட்டில் ராஜபக்க்ஷ தூண்டிவிட்டிருக்கிறார். இதுகூட அமெரிக்காவை ஒரு கொதிநிலைக்கு இட்டுச்செல்லுமே தவிர தீர்மானத்தின் வீரியத்தை குறைக்குமெனச்சொல்லமுடியாது.

ஒருவேளை அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை காலதாமதமின்றி நேர்மையுடன் இலங்கை அரசு நிறைவேற்றினால் இலங்கை அரசின்மீது சர்வதேசத்திற்கு ஒரு நம்பிக்கை பிறப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. மறுபுறம் ராஜபக்க்ஷ உள்ளூரில் சிங்களவர்களை தூண்டிவிடுவதுபோல அவரால் தீர்மானத்தை முற்று முழுதாக புறக்கணித்துவிடவும் முடியாது. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் சொல்லப்பட்டதுபோல மனித உரிமை மீறல் மற்றும் படுகொலைகளுக்கான நீதியான விசாரணைகளையும் துரிதப்படுத்தவேண்டிய கட்டாயம் இருக்கிறது.

ஆனால் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 22 வது கூட்டத்தொடருக்குமுன் ஆக்கபூர்வமான முன்னேற்றத்தை காட்டியாக வேண்டும் அது நடக்கும் காரியம் என்றும் முடிவுக்கு வந்துவிடமுடியாத சிக்கல்கள் நிறையவே இருக்கின்றன.

சூழ்நிலை காரணமாக இலங்கைக்கு எதிரான ஐ.நா., தீர்மானத்தை ஆதரித்து ஒட்டளித்த இந்தியா அதிருப்தியில் இருக்கும்  ராஜபக்க்ஷவை சமாதானப்படுத்தும் வகையில் சமாதானக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.  பலகாரணங்களினால் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் ""நடுநிலைத்தன்மையுடன் அமையவேண்டுமென  இந்தியா முயற்சி மேற்கொண்டாகவும்"" பிரதமர் சிங் கூறியுள்ளார். எனினும், இலங்கை தமிழர்களுக்கு அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு அளிப்பதே பிரச்னைக்கான தீர்வு என்பதை குறிப்பிட்டுள்ளார்.

மன்மோகனின் அந்தக்கூற்றிபடி மனிதத்தன்மையற்ற அரக்கத்தனமான படுகொலைவாதி ராஜபக்க்ஷவை காப்பாற்றவேண்டிய தார்மீகக்கடமை என்ன மன்மோகன் சிங்கிற்கு இருக்கிறது.

அமெரிக்காவுக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக ஏன் ராஜபக்க்ஷ, மன்மோகன்மீது மட்டும் அதிருப்திப்படவேண்டும்,

அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் "நடுநிலைத்தன்மையுடன் அமையவேண்டுமென''  இந்தியா முயற்சி மேற்கொண்டாகவும் பிரதமர் கூறியுள்ளார்!?.

ஏன் இந்த பிரயத்தனமான முயற்சியை மேற்கொண்டு நடுநிலைத்தன்மையை நோக்கி திருப்புவதற்கு மன்மோகன் பிரயத்தனப்படவேண்டும்?. அத்துடன் "இலங்கை தமிழர்களுக்கு அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு அளிப்பதே" பிரச்னைக்கான தீர்வு என்பதை குறிப்பிட்டுள்ளார்.  கடைசி வரியிலுள்ள சாரத்தின்படி இலங்கை தமிழர்களுக்கு அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு அளிக்காவிட்டால் பிரச்சினை மீண்டும் சர்வதேச அரங்கை நோக்கி சென்றுவிடும் என்பதும்,, அப்படிச்செல்லும் பட்ஷத்தில் இந்தியாவும் யுத்தக்குற்றவாளி என்ற உண்மை உலகம் ஆதாரபூவமாக உறுதிப்படுத்திவிடும் என்பதும் இந்தியாவால் புரியப்பட்டிருக்கிறது.

எத்தனை வல்லரசுகள் வந்தாலும், அசுரர்கள் தோன்றினாலும், "காலம்தான் சரியான நீதியான தீர்மானத்தை நிறைவேற்றுகிறது"

ஈழதேசம் இணையத்திற்காக. 
கனகதரன்.

Saturday, March 24, 2012

ராஜபக்க்ஷவை சமாதானப்படுத்தும் மன்மோன் சிங்.

புதுடில்லி: ஐ.நா., மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட அமெரிக்க தீர்மானத்தில், நடுநிலைத்தன்மையை உறுதி செய்ய இந்தியா பாடுபட்டதாக, இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எழுதிய கடிதத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான ஐ.நா., தீர்மானத்தை ஆதரித்து இந்தியா ஒட்டளித்த நிலையில், அதிருப்தியில் இருக்கும் இலங்கையை சமாதானப்படுத்தும் வகையில், பிரதமர் மன்மோகன் சிங் அதிபர் ராஜபக்சேவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஐ.நா., தீர்மானத்தின் போது, இலங்கை குழுவினருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறு இந்திய குழுவை தான் கேட்டுக்கொண்டதாக கூறியுள்ளார். இதன்படி, அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நடுநிலைத்தன்மையுடன் அமைய இந்தியா முயற்சி மேற்கொண்டாகவும் பிரதமர் கூறியுள்ளார். எனினும், இலங்கை தமிழர்களுக்கு அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு அளிப்பதே பிரச்னைக்கான தீர்வு என்பதை குறிப்பிட்டுள்ள அவர், இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் நேர்மையான, மதிப்புமிக்க, சமமான மற்றும் சுயமரியாதையுடன் வாழ வழி செய்ய வேண்டும் என்றும் ராஜபக்சேவை கேட்டுக்கொண்டார்.

இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு நடந்த உள்நாட்டு போரின் இறுதிகட்டத்தில், பெருமளவு மனித உரிமைகள் மீறப்பட்டதாக கூறி, அந்நாட்டிற்கு எதிராக அமெரிக்க தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தை ஆதரிக்கக்கூடாது என ராஜபக்சே, பிரதமர் மன்மோகன் சிங்கை கேட்டுக்கொண்டார். எனினும் இந்தியா அமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவாக ஓட்டளித்தது. வெளிப்படையாக அமெரிக்காவுக்கு ஆதரவான நிலையை எடுத்ததாக காட்டிக்கொண்டாலும், "ஐ.நா., குழு இலங்கையின் அனுமதியின்றி, அத்துமீறி அங்கு நுழையாத வண்ணம் கடைசி நேரத்தில் தீர்மானத்தின் சில பகுதிகளை இந்தியா திருத்தியது குறிப்பிடத்தக்கது". எனினும், இவ்விஷயத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை போக்கும்வகையில், பிரதமர் மன்மோகன் சிங், தற்போது இலங்கை அதிபருக்கு கடிதம் எழுதி சமாதானப்படுத்தியுள்ளார். 

Thursday, March 22, 2012

ஜெனிவாவில் சிங்கள அரசிற்கு மரண அடி-பிரேரணையில் வெற்றி கொண்டது அமெரிக்கா.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் 24 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜெனிவாவில் இன்று காலை இந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, ஆதரவாக 24 நாடுகள் வாக்களித்தன.

தீர்மானத்துக்கு எதிராக 15  நாடுகள் வாக்களித்துள்ளன.

மேலும் 8 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தன.

இந்தியா இந்த வாக்கெடுப்பில் பங்கேற்று ஆதரவாக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

மலேசியா வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமால் நடுநிலை வகித்தது.

வாக்களிப்பு விபரம்

இலங்கைக்கு எதிரான பிரேரணையை ஆதரித்து
AUSTRIA
BELGIUM
BENIN
CAMERON
CHILE
COSTA RICA
CZECH REPUBLIC
GUANTEMALA
HUNGARY
INDIA
ITALY
LIBYA
MAURITUS
NIGERIA
NORWAY
PERU
POLAND
MOLODOVA
ROMANIA
SPAIN
SWISS
USA
URUGAY

இலங்கைக்கு எதிரான பிரேரணையை நிறைவேற்றக்கூடாதென்று
BANGALADESH
CHINA
CONGO
CUBA
ECUADOR
INDONESIA
KOWEIT
MALDIVES
MAURITANIA
PHILIPINES
QATAR
RUSSIA
SAUDI
THAILAND
UNGANDA

நடுநிலமையாக வாக்களிக்காம் ஒதுங்கி இருந்த நாடுகள்
ANGOLA
BRUKINA FASO
BOSTAWANA
DIJIBUTI
JORDAN
KYRGSTAN
MALAYSIA
SNEGAL
வடக்கில் இருந்து இராணுவத்தை மீளப் பெறுமா அரசு? (அமெரிக்காவின் பிரேரணை இணைப்பு)

ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா தொடர்பில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை, தீர்மானமாக நிறைவேற்றியுள்ளது. சிறிலங்கா அரசாங்கம் மாபெரும் இராஜதந்திரச் தோல்வியைச் சந்தித்துள்ளது. கடந்த 4 வாரங்களாக, உலகத் தமிழர்களின் எதிர்பார்புக்கு மட்டுமல்ல, இலங்கைத் தீவை மையப்படுத்திய உலக அரசியல் வெளியிலும், இப்பிரேரணை விவகாரம் முக்கியவிடயமாக மாறியிருந்தது.இந்நிலையில் இன்று ஐ.நா கூட்டத் தொடர் அமர்வில் கடும் வாதப் பிரதிநதிவாதங்களுக்கு மத்தியில் இந்தப் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்ட இன்று வாக்கெடுப்பு நடைபெற்றிருந்தது..

பிரேணையின் தமிழ் வடிவம் வருமாறு,

ஐக்கிய நாடுகள் சாசனம், சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம், மனித உரிமைகளுக்கான அனைத்துலக உடன்படிக்கைகள் மற்றும் பிற தொடர்புடைய விதிகளுக்கு அமைவாக…

பயங்கரவாதத்திற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் சர்வதேச விதிகளுக்கு அமைவாக இருப்பதை உறுதிப்படுத்தும் உறுப்பு நாடுகளது கடமைக்கு அமைவாகவும், குறிப்பாக பொருத்தமான சர்வதேச மனித உரிமைகள், பாதுகாப்பு, மனிதாபிமான விதிகளுக்கு அமைவாகவும்…

சிறிலங்காவின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின்  அறிக்கையின் முடிவுகளையும் பரிந்துரைகளையும் மற்றும் சிறிலங்காவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் இவ்வறிக்கை வழங்கிய பங்களிப்பை ஏற்றும்..

சட்டத்திற்கு முரணாக மேற்கொள்ளப்பட்டதாக கருதப்படும் படுகொலைகள் மற்றும் காணாமற் போதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளையிட்டு பக்கசார்பற்ற விசாரணை மேற்கொள்ளுதல், வடக்கிலிருந்து இராணுவத்தை விலக்குதல், காணி தொடர்பான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான பாரபட்சமற்ற பொறிமுறையை உருவாக்குதல், தடுத்து வைத்தல் தொடர்பான கொள்கைகளை மீளாய்வு செய்தல், சுயாதீனமான சிவில் சமூக கட்டமைப்புகளை பலப்படுத்துதல், மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குதல் மூலம் இனப்பிரச்சனைக்கான தீர்வைக் காணுதல், அனைவரதும் கருத்து வெளிப்பாட்டு உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல், சட்ட ஆட்சி முறை தொடர்பான சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல் போன்ற விடயங்கள் சார்ந்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்வைத்துள்ள ஆக்கபூர்வமான பரிந்துரைகளை வரவேற்று…

சர்வதேச சட்ட விதிகள் தீவிரமாக மீறப்பட்டமை குறித்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு போதுமான அளவு கவனம் செலுத்தவில்லை என்பதையும் கவனத்திற்கொண்டு..

1. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆக்கபூர்வமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதுடன் நீதி, பொறுப்புப் கூறுதல், சகல இலங்கையர்க்கும் இடையிலான நல்லிணக்கம் போன்றவற்றை உறுதிப்படுத்த, பொருத்தமானதும் நம்பிக்கையானதுமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும் சட்டரீதியான கடமைகளையும் பொறுப்புக்களையும் நிறைவேற்றவும் சிறிலங்கா அரசைக் கோருதல்

2. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட மற்றும் தொடர்ந்து எடுக்கப்படவுள்ள விபரங்கள் உள்ளிட்ட, விரிவான செயற்திட்டத்தை விரைந்து முன்வைக்குமாறும், சர்வதேச சட்டவிதிகள் மீறப்பட்டமை குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து கவனம் செலுத்துமாறும் சிறிலங்கா அரசாங்கத்தைக் கோருதல்

3. மேற்சொன்ன திட்டங்களை நடைமுறைப்படுத்தவதற்குரிய ஆலோசனைகளையும் தொழில்நுட்ட உதவிகளையும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தை வழங்குமாறும் சிறிலங்கா அரசாங்கத்தை இதனை ஏற்றுக்கொள்ளுமாறும் வேண்டுவதுடன் இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையகத்தின் 22 வது கூட்டத்தொடரில் வழங்கப்பட்ட உதவிகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தை வேண்டுதல்.

Friday, March 9, 2012

அரசியல்வாதிகளுக்கு முள்ளிவாய்க்கால் நிகழ்வு சிறு சம்பவம், பிள்ளையை பலிகொடுத்த தாய்க்கு அது சாபம்.

ina alipu
எந்த வெளியார் தலையீடுமில்லாமல் ஸ்ரீலங்கா அரசினால் சுயமாக தயாரிக்கப்பட்டு வெளிவந்த Lessons Learnt and Reconciliation Commission  ('எல்எல்ஆர்சி')    கற்றுக்கொண்ட பாடங்கள், மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை  (மஹிந்த சிந்தனை,) தொடர்பிலான வேலைத்திட்டத்தை இலங்கையில் விரைவுபடுத்தவேண்டும் என்று நெருக்கடி கொடுக்கும் விவாதத்துக்கான பிரேரணையை, 07-03-2012 அன்று ஜெனீவாவின் ஐ.நா மனித உரிமைச் சபையில்,  உலகவல்லரசு அமெரிக்கா, உத்தியோகபூர்வமாக தனது பங்கிற்கு சமர்பித்திருக்கிறது. 

ஐநா மனித உரிமை அமர்பில் அமெரிக்கா தாக்கல் செய்த பிரேரணை ஒன்றும் ஸ்ரீலங்கா அரசுக்கோ, போர்க்குற்றவாளிகளுக்கோ பாரதூரமான எதிரான விளைவை உண்டுபண்ணக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதுமல்ல, குறிப்பிட்ட, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்ததே ராஜபக்க்ஷ தலைமையிலான ஒரு சிங்களவர் குழு.

அந்தப்பிரேரணை அமெரிக்காவால் தாக்கல் செய்ய இருப்பதாக செய்திகள் வரத்தொடங்கியவுடனேயே, ஏது என்னவென்று அறிய முன்பே, இலங்கையும், இலங்கையின்  நண்பன்  இந்தியாவும், நிலைகொள்ளாமல் பறந்தடித்து ஏகப்பட்ட வாதப்பிரதி வாதங்களை உறுப்புநாடுகளுக்கு இட்டுக்கட்டி பிரேரணையை தோல்வியடையச்செய்யும் வேலைத்திட்டங்களில் மும்முரமாக ஈடுபட்டதாக அறியமுடிந்தது.

ஸ்ரீலங்கா ஜனாதிபதி ராஜபக்க்ஷ தனது கட்டுப்பாட்டிலுள்ள சிலரை நியமித்து வரையப்பட்ட தமிழர் நலன் தொலைக்கும்  வரைவு அறிக்கையில், அவர்களே சிபார்சு செய்த வேலைத்திட்டங்களை காலதாமதமின்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே அமெரிக்காவின் வேண்டுதல். அமெரிக்காவின் அந்த வேண்டுதல்கூட இலங்கைக்கும் இந்தியாவுக்குமான தன்மானப்பிரச்சினையாக பூதாகரமாக்கப்பட்டு பெரும் பூகம்பத்தை உலக அரங்கில் கிளப்பியிருந்தது.

இதிலிருந்து பார்க்கும்போது, உலகில் வல்லமையுள்ள ஆட்சியாளர்கள் தவிர, வேறு பொது நலன்விரும்பிகள், நியாயவாதிகள் எவராலும் கற்பழிப்பு, குழந்தைக்கொலை, மனித கூட்டத்தை அவலநிலைக்கு இட்டுச்செல்லல், மற்றும் மனித உரிமைமீறல்கள் போன்றவற்றை அவ்வளவு இலகுவாக உலக அரங்கில் அல்லது சாதாரண நியாய அரங்கில் விவாதத்திற்கு எடுத்து விவாதித்துவிடமுடியாது, அல்லது அவற்றிற்கு முக்கியத்துவம் இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது.

http://www.uyarvu.com/images/stories/new-photo/ina-alippu/poor-kuththam-130photos/war-crimes-sri%20lanka%205.jpgசெயற்கைகோள் பதிவுசெய்த நிழல்ப்படங்கள், பல சர்வதேச தொண்டரமைப்புக்கள் நேரடியாக கண்ட காட்சிகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள், வாக்குமூலங்கள், மற்றும் பல ஊடக ஸ்தாபனங்கள் பகிரங்கமாக ஆதாரபூர்வமாக தொகுத்து வெளிப்படுத்தியிருந்த சாட்சியப்பதிவுகள் அனைத்திலும் மிக மோசமான மனிதப்படுகொலைகள், சித்திரவதைகள், உயிருடன் கழுத்தறுப்புக்கள், வன்புணர்வுகள், "மிருகங்களே புறக்கணிக்கும்" இயற்கைக்குவிரோதமான இறந்த பெண்களின் உடல்கள் மீதான பாலியல் வக்கிரங்கள், இன்றும் நின்றுவிடாமல்  தொடராக இன்னும் வெளிவந்துகொண்டிருக்கின்றன.  தருஷ்மன் தலைமையிலான ஐநா நிபுணர்குழு அறிக்கையும் அவற்றில் உண்மையிருப்பதாக ஒத்துக்கொள்ளுகிறது. ஆனால் அவை அனைத்தையும் விவாதத்திலிருந்து ஓரங்கட்டி ஒதுக்கித்தள்ளவேண்டுமென்பதே இலங்கை, இந்தியா உட்பட பல நாடுகளின் நோக்கமாக இருப்பதை காணமுடிகிறது.

அமெரிக்காவின் பிரேரணை வரும் நாட்களில் மனித உரிமை கவுன்சிலில் உறுப்பு நாடுகளின் வாக்கெடுப்புக்கு வருகிறதோ இல்லையோ,  இந் நிகழ்வின் மூலம், Genocide  ராஜபக்க்ஷ,  தற்போதைக்கு போர்க்குற்றச்சாட்டிலிருந்து விடுப்பெடுத்துவிட்டார் என்றே தெரிகிறது.

தமிழன் சார்பாக கேட்பதற்கு ஆளில்லாதபடியால்,. ஸ்ரீலங்கா தானாக முன்வைத்த ஒரு வேலைத்திட்டத்தை "LLRC" துரிதப்படுத்தி செயற்பாட்டுக்கு கொண்டுவர வைப்பதற்கே உலக நாட்டாமை ஒருவர் உலக உச்ச மன்றமான ஐநாவில் பிரேரணை மூலம் கோரவேண்டியிருக்கிறது.

அமெரிக்காவின் கோரிக்கையை மற்றைய உறுப்பு நாடுகள் ஒருவேளை! ஏற்றுக்கொள்ளுமாயின்,   சிங்கள நல்லிணக்க ஆணைக்குழு  பரிந்துரைகளில் காணப்படும் இலகுவான செயற்திட்டங்கள் சிலவற்றை  ஸ்ரீலங்காவின் ஆட்சியாளர்கள் தெரிவுசெய்து, நத்தைவேகத்தில் சில நகர்வுகளை ஏற்படுத்தி கால நீடிப்பை உண்டுபண்ணிக்கொள்ளலாம், அத்துடன் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரை அனைத்தும் தமிழினத்துக்கு விரோதமான வேலைதிட்டம் என்பதையும் மனதில்க்கொள்ளவேண்டும், இதன்மூலம் தொடர்ந்து உலகத்தை ஏமாற்ற ராஜபக்க்ஷவிற்கு இன்னுமொரு நல்ல சந்தற்பம் கிடைத்திருப்பதாகவே வரும் காலங்களில் உணரலாம். இந்த ஐநா கூட்டத்தொடர் விவாதம்கூட ராஜபக்க்ஷவுக்கு ஒரு அதிர்ஸ்டமான நிலையை தோற்றுவித்திருக்கிறதென்றே கொள்ள முடியும்.

ராஜபக்க்ஷவின் நல்லிணக்க ஆணைக்குழு என்பதே பெருத்த ஏமாற்றுத்திட்டம் என்பதுதான் (கூட்டமைப்பு தவிர்ந்த) அனைத்து தமிழர்களின் கணிப்பீடு. ராஜபக்க்ஷ நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் சிபார்சுசெய்திருக்கும் விடயங்கள் எழுத்துருவில் எதையோ மாற்றியமைக்க எழுதப்பட்ட புனித நீதிச்சித்தாந்தம்போல் சிங்கள ஆட்சியாளர்கள் உலகத்துக்கு காட்டிக்கொண்டாலும், தமிழர்களின் நீண்டகால ""அரசியல் அபிலாஷைகள், அடிப்படையிலான உரிமைக்குரல்கள்"" அனைத்தையும் எடுபடாமல் செயலற்றுப்போகச்செய்யும் ஒன்றாகவே நல்லிணக்க ஆணைக்குழுவின் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டம்  இருக்கும் என்பது நிச்சியம் பின்னர் உணரப்படும்.

சர்வதேச நியாயவாத தொண்டமைப்புக்களின் நெருக்குவாரத்தின் காரணமாக சென்ற ஆண்டு ஐநா செயலாளர் பான் கீ மூன், அவர்களின் பணிப்பின்பேரில், சட்டவாளர் தருஷ்மன், தலைமையிலான மூவர் கொண்ட நிபுணர் குழு எட்டுமாத கால தேடுதலில் ஈழத்தின் யுத்தக்குற்றம் பற்றிய ஆய்வறிக்கையை தயாரித்தது.  சில விவாதங்களின்பின் அறிக்கை ஐநா செயலாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அந்த அறிக்கைக்கு போட்டியாக ராஜபக்க்ஷ தனது கையாட்கள் சிலரை நியமித்து (LLRC)  Lessons Learnt and Reconciliation Commission  'கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு' என்று ஒன்றை தோற்றுவித்து, தனது அதிகாரத்துக்குட்பட்ட ஆணைக்குழு பரிந்துரைப்பதைத்தான் நடைமுறைப்படுத்துவேன், சர்வதேய நெருக்குவரங்களுக்கு இடமளிக்கப்போவதில்லை என்று ராஜபக்க்ஷ கறாராக கூறிவந்தார்.

இன்று அது நிதர்சனமாகியிருக்கிறது. அமெரிக்கா என்ற வல்லரசும் வேறு வழியின்றி , ஐநா நிபுணர்குழுவின் அறிக்கையை புறந்தள்ளிவிட்டு, ராஜபக்க்ஷவின் கனவுத்திட்டத்தையே வழி மொழிந்திருக்கிறது.  தமிழர்தரப்பும் உலக அமைதி விரும்பிகளும் பெருத்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த, தருஷ்மன் தலைமையிலான நிபுணர்கள் குழு  தயாரித்த அறிக்கை எந்தப்பிரயோசனமும் இல்லாமல் வீசப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

ராஜபக்க்ஷவின் நல்லிணக்க ஆணைக்குழு சிபார்சு செய்த பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில், ஈழமக்கள்மீது நடத்தப்பட்ட அனைத்து மனித உரிமை மீறல்களுக்கும் இனப்படுகொலைகளுக்கும் நீதி கிடைக்கப்போவதில்லை. அத்துடன்   மிச்சம் மீதியாக ஈழத்தில் உயிருடன் இருப்பவர்களுக்கும் வருங்காலங்களில் எந்த உத்தரவாதமும் கிடைக்கப்போவதில்லை. இது தொடரும் பட்சத்தில் இன்னும் ஒரு இருபது ஆண்டளவில் அனைத்து தமிழர் பிரதேசங்களும்  சிங்களமயமாகும் அபாயம் எவராலும் தடுக்க முடியாது. அதற்கான ஆரம்ப வேலைகளை 2009ல் இருந்தே ராஜபக்க்ஷ அரசு செய்துவருவது அனைவரும் அறிந்ததே,

அதற்கு  உடந்தையாக (தமிழர்) தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், அவரது அன்பிற்குரியவரான சுமந்திரன் அவர்களும்,  இந்தியாவுடன் இணைந்து திரை மறைவில் ராஜபக்க்ஷவுக்கு நிறைய ஒத்தாசை வழங்கிவருகின்றனர்., ஒட்டுக்குழுத் தலைவரான டக்கிளஸ், மற்றும் கருணா பிள்ளையான் போன்றோர், சிங்கள ராஜபக்க்ஷவுடன் இணைந்து நேரிடையாகவே  பங்களித்து வருகின்றனர்.

ஜனநாயக முறைப்படி தமிழர் தரப்பின் இலங்கை பாராளுமன்ற பிரதிநிதுத்துவத்தின் பொருட்டு, தமிழர்களின் பேரம்பேசும் சக்தியாக தமிழர் தேசியக்கூட்டமைப்பு ஒன்றின் குரலுக்கு மட்டுமே, உலக நாடுகள் எடுக்கும் அசைவியக்கங்களை  தமிழர் சார்பாக ஆமோதிக்கும்/ நிராகரிக்கும் தகமை 2009க்குப்பின் இருந்ததாக கருதப்பட்டது. ஆனால் அதுவும் நடப்பு 19 வது மனித உரிமை அமர்வுகளுக்கு முன்னரே அடிபட்டுப்போய்விட்டதாக கருதப்படுகிறது. நடப்பு ஐநா மன்ற மனித உரிமை கூட்டத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை உலக மட்டத்தில் உண்டுபண்ணியிருந்தது. இருந்தும் தமிழர்தரப்பின் வாத பிரதிவாதங்களை பிரதிபலிக்கும்வண்ணம் கருத்தோ, கட்டுரையோ, வேண்டுகோளோ எதையும் தமிழர்சார்பாக ஐநா மன்றத்திற்கு சென்றடையவில்லை. மூன்றாம் தரப்பு நாடுகள் தமது பாட்டுக்கு ஏதேதோ விவாதிக்கின்றன.

sd
இன்றைய சூழ்நிலையில் தேசியக்கூட்டமைப்பினர் ஐநா மன்றுக்கு சமூகமளித்திருப்பின் சர்வதேசத்தின் பார்வையும் தமிழர்களின் நியாயப்பாடும், ஸ்ரீலங்கவுக்கான எதிர்க்குரலையும் வெளிப்படுத்தியிருக்கமுடியும். கொல்லப்பட்டவர்களின் நியாயமும் ஊடகங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களின் ஆவணங்களும் சேர்ந்து,  Genocide ராஜபக்க்ஷவுக்கு ஒரு சுருக்கு கயிற்று மேடையாக கூட்டத்தொடர் மாற நிறைய வாய்ப்புக்கள் இருந்தன. ஆனால் கெடு வாய்ப்பாக திட்டமிட்ட "கூட்டமைப்பின" சதியின் பின்வாங்கலால் ஐநாவின் கூட்டத்தொடர் வீரியமின்றி தெருக்கூத்து மேடையாக வேறு திசை நோக்கி சென்றுவிட்டது.

2009 லும், அதன்பிறகும், அதற்கு முன்னும், நடந்த இனப்படுகொலை மற்றும் போராளிகளின் சித்திரவதை படுகொலைக்காட்சிகள் இன்றுவரை புதிது புதிதாக புகைப்படங்களாக வெளிவந்து கொண்டேயிருக்கின்றன. மனிதரால் ஜீரணிக்க முடியாத அந்தக்காட்சிகள்,, போரில் எந்த பாதிப்புமடையாத அரசியல்வாதிகளான சம்பந்தன் போன்றோருக்கு  ஒரு சில அரசியல்ச் "சம்பவங்கள்". ஆனால் உணர்வுள்ளவனுக்கும் உறவுகளுக்கும் அவை உணர்வுடனான உருக்கமான என்றும் மறக்கமுடியாத உள்ளக் குமுறல்கள். சம்பந்தன் குழுவினரோ,  ஐநா பிரதிநிதிகளோ  முள்ளிவாய்க்காலின் ஒருநாள் ஒரு மணித்துளியை ஏன் மீட்டிப்பர்க்கவில்லை, சம்பந்தனுக்கும்  சுமந்திரனுக்கும் இல்லாத வலி, வேதனை,. வேறு நாடுகளில் வெவ்வேறு சூழலில் வாழும் வெள்ளையர்களுக்கு ஏன் வரப்போகிறது? எப்படி அவர்கள் முள்ளிவாய்க்காலை முற்று முழுதாக உணரமுடியும்?
http://www.uyarvu.com/images/stories/new-photo/ina-alippu/poor-kuththam-130photos/war-crimes-sri%20lanka%203.jpg
http://uyarvu.com//images/stories/new-photo/ina-alippu/poor-kuththam-130photos/war-crime-1.jpg
http://uyarvu.com//images/stories/new-photo/ina-alippu/poor-kuththam-130photos/war-crime-13.jpg http://uyarvu.com//images/stories/new-photo/ina-alippu/poor-kuththam-130photos/war-crime-9.jpg
இருந்தும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் சட்டத்திட்டங்களை மீறி, தருஷ்மன் தலைமையிலான நிபுணர்கள் குழு, இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணையை ஆரம்பிக்குமாறு, மனித உரிமை பேரவையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்காவினால் இலங்கை தொடர்பில் தாக்கல் செய்ய உள்ள யோசனையை மனித உரிமை பேரவையின் உறுப்பினர்கள் கண்காணித்து வருகின்றனர் என தெரிவித்துள்ள தருஷ்மன் குழுவினர், அமெரிக்காவின் யோசனை போதுமானதல்ல எனவும், போர் குற்றத்துடன் தொடர்புடையவர்களை கண்டறிய சுயாதீன விசாரணை நடத்தும் செயற்பாடுகளை பேரவை முன்னெடுக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளனர். (இந்த உணர்வு தமிழ் அரசியல் வியாபாரிகளிடம் ஊற்றெடுக்கவில்லையே என நினைக்கும்போது உடல் கூசுகிறது)

ina alipu
இந்த கோரிக்கை தொடர்பில் தருஷ்மன் குழுவினர் ஜெனிவா மனித உரிமை பேரவைக்கு மகஜர் ஒன்றை அனுப்பியுள்ளனர். மர்சுகி தருஷ்மன், ஸ்டீவன் ரட்னர், யஷ்மின் சூகா ஆகியோர் அனுப்பியுள்ள இந்த மகஜரில், வைத்தியசாலைகள் மீது விமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், "பொதுமக்கள் மீது எந்த பொறுப்புமின்றி தாக்குதல் நடத்தப்பட்டதாக" கூறியுள்ளனர். இந்த விடயத்தில் இலங்கை தனது பொறுப்பை நிறைவேற்றுகிறதா இல்லையா என்பதை விசாரணை செய்ய வேண்டியது சர்வதேசத்தின் பொறுப்பு எனவும் நிபுணர்கள் குழுவின் உறுப்பினர்கள் தமது மகஜரில் கூறியுள்ளனர்.

அந்தக்குரல்களுக்கு பலம் கொடுக்கவேண்டிய பொறுப்பு யாருக்கு உண்டு. வானத்திலிருந்து யாராவது வந்திறங்குவார்களா? இதைத்தான் தேசியத்தலைவர் சொல்லிக்கொடுத்தாரா? கண்மூடி, வாய் பொத்தி, காதுகளை இறுக அடைத்துக்கொண்டு சொகுசாக நாம் வாழ  அடுத்த வீட்டுக்காரன் எமக்காக போராடுவானா? அவனுக்கு இருக்கும் ரோசத்தில் அல்லது உணர்வில் சிறு துளியாவது எமக்கு இருக்க வேண்ட்டாமா. இதுவெல்லாம் தமிழனின் சாபக்கேடல்லாமல் வேறு எதுவென்று சொல்லமுடியும். பதவிக்கும் தலைமை வகிப்பதற்கும் ஒரு தகுதி வேண்டாமா? சுடுகாட்டின்மீது அரசியல்செய்வதிலும்பார்க்க செத்தொழிவது மேலானதில்லையா!

இவர்களுக்கு இந்தப்பதவியும் பட்டங்களும் எப்படி வந்தது? பதவி வந்த பின்னணியை சிந்திக்கவேண்டாமா. இன்று அமெரிக்க கொண்டுவரும் கோரிக்கைகூட  பாதிக்கப்பட்ட தமிழினத்தின் ஒப்புதலோடு நடந்த ஒன்றல்ல. இருந்தும் அமெரிக்கா, ஐரோப்பா தமது வல்லமையை பிரயோகித்து மனிதாபிமானத்தோடு சில இராஜதந்திர நடவடிக்கைகளை எடுக்க தலைப்பட்டிருக்கிறது. . தமிழர்களுக்கான நீதி  அரங்கத்தின் திறவுகோலாக அந்த நாடுகளின்  முன்னெடுப்புக்கள் இருக்கட்டும்.  எமது பங்களிப்பு என்ன. எமது வீட்டின் நிலை என்ன என உணர்ந்து அவைகளை எடுத்துவைக்கும் பொறுப்பு எமக்கு மட்டும்தான் உண்டு. இந்தியாவுக்கு பயணம் செய்வதும், கனடாவில் உட்கார்ந்து நாங்கள் எதையும் சொந்தம் என்று சொல்லவரவில்லை சும்மா பேச்சுக்கு சொன்னொம் என்று சொல்லுவதுடன் அரசியல் இராசதந்திரப்பணி முடிந்துவிடுமா? 

எனது உரிமைக்காக போராடிய பெண் போராளிகளின் மார்பிலும் பிறப்புறுப்பிலும் வக்கிரத்தை வெளிப்படுத்திய மிருகத்தின் கூட்டத்தையும், அதன் தலைவனையும் நீதியின்முன் நிறுத்தி சங்காரம் செய்யும்வரை ஒளித்து விளையாடிக்கொண்டிருக்கலாமா? ஒருபக்கம்  நடைப்பயணங்களும் பேரணிகளும் ஆற்பாட்டங்களும் தமது வல்லமைக்குட்பட்டு மானமுள்ளவர்கள் செய்கின்றனர். அரசியல் பச்சோந்திகளை நம்பி விடுதலைப்போராட்டம் தொடங்கப்படவில்லை என்பது மீண்டும் மக்களால் நன்கு உணரப்படுகிறது.

போராட்டத்தின் தொய்வை பயன்படுத்தி அரசியல் பச்சோந்திகள் நிறம் மாற்றி இடம்மாறலாம்,. போராட்டம் உணர்வு மயமானது. இழக்கப்பட்ட ஒவ்வொரு உயிர்களின் அந்த கணத்தை மனக்கண்ணில் இருத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதே குறியாகி அடுத்து தீர்வுத்திட்டத்தைப்பற்றி இனியும் மக்கள்தான் யோசிக்கவேண்டும்.
ina alipu
ina alipu
ina alipu
ina alipu
ina alipu
news
ina alipu
ina alipu
ina alipu
ina alipu
ஈழதேசம் இணையத்திற்காக.
கனகதரன்.

Sunday, March 4, 2012

இந்தியா, இலங்கை,தேசியக்கூட்டமைப்பு, முக்கூட்டு சதி ஐநா கூட்டதொடர் மூலம் அம்பலம் .

நடப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஜெனீவா கூட்டத்தொடர் ஏற்கெனவே பலரும் எதிர்பார்த்ததுபோல சற்று வித்தியாசமாகவே காரசாரமாக நடந்து முடியும்.
 
 
ஆனால் தற்போதைக்கு கொலைக்குற்றவாளி ராஜபக்க்ஷவுக்கு பெரிய அளவில் ஒன்றும் பாதகத்தை ஏற்படுத்திவிடப்போவதில்லை என்பது மட்டும் தெரிகிறது.

உலக நாடுகளின் போக்கும், நோக்கமும், குற்றவாளியின் பலவீனத்தை பாவித்து முதற்கண் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான அரசியற் தீர்வுக்கு வழிகோலிவிடவேண்டும் என்பதில் முனைப்புக்காட்டுவதாக நடவடிக்கைகளின் போக்குக்கள் நாசுக்காக தெரிவிக்கின்றன.  இருந்தும் சர்வதேச மயப்படுத்தப்பட்ட  ராஜபக்க்ஷ மீதான இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கு  இன்றைக்கு ஒருசில சக்திகளால் முண்டுகொடுத்து தப்பித்தாலும் குற்றச்சாட்டு நீர்த்துப்போகும் என நினைத்தால் அது அறிவீனம் என்பது மட்டும் புலனாகிறது.

ஜெனீவா நிலைவரங்கள் அப்படியிருக்க தமிழ்நாட்டிலிருந்து, தமிழர் தலைவர் என்று தன்னை தானே அழைத்துக்கொள்ளும் தமிழகத்து தாத்தா கருணாநிதியும். "அம்மா திமுக" தலைவி ஜெயலலிதாவும்.  இறுதிக்கட்ட போரின்போது நடந்த மனித உரிமைகள் மீறல் தொடர்பாக ஐக்கிய நாடு மனித உரிமைகள் கவுன்சில் கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும், என்று  .மன்மோஹனுக்கு கடிதம் எழுதியிருக்கின்றனர்.

இதற்கு பதிலளித்த இந்திய பிரதமர் மௌனம் மன்மோஹன் சிங், சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவுடன் கலந்துரையாடி பொருத்தமான நடவடிக்கை எடுப்பதாக ஒப்புக்கொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது.

சர்வதேச விசாரணை வளையத்துக்கு கொண்டுவரப்பட்டிருக்கும்,   21ம் நூற்றாண்டின்   மிகப்பெரிய உணர்வுபூர்வமான  மனித உரிமைப்பிரச்சினைபற்றி, ஒரு மானிலத்தின் முதல்வரும், முன்னாள் முதல்வரும் எழுதிய கடிதத்திற்கு சுயமாக பதிலளிக்க முடியாமல், மாறாட்ட நோயுள்ள உள்த்துறை மந்திரியை கேட்டு சொல்லுகிறேன், என்று நழுவும் பதிலை மண்மோஹன் தமிழகத்துக்கு சொல்லியனுப்பியிருக்கிறார். என்றைக்கும் இந்திய அரசியல்வாதிகள் சட்டத்திலிருக்கும் நியாயப்பாட்டை விட, சட்டத்திலிருக்கும் ஓட்டைகளையே பாவித்து நாட்டையும் மக்களையும், நீதி நியாயத்தையும் கொலை செய்து வருவது இதிலும் புரியப்பட்டிருக்கிறது.

"இந்திய வெளிவிவகார மந்திரி எஸ் எம் கிருஷ்ணா முன்பொருமுறை ஐநா சபையில் இந்தியா தொடர்பான கேள்வி ஒன்றின்போது மாறாட்டத்தில் ஸ்பெயின் நாட்டின் அறிக்கை ஒன்றை வாசித்து அதிர்ச்சி உண்டுபண்ணியவர் என்பதும், இன்னுமொருமுறை இந்திய பாராளுமன்றத்தில் தூக்க கலக்கத்தில் பிழையான பதிலை வழங்கியவர் என்பதும் பலர் மறந்திருக்க முடியாது.

ராஜபக்க்ஷவை காப்பாற்றுவதில் பகிரங்கமாக துணை நிற்கும் சீனா, ரஷ்யா தவிர. உற்ற நண்பனாக நட்பு பாராட்டிக்கொண்டு வெளியில் பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டி பசப்பு வித்தை காட்டிவரும் இந்தியா திரை மறைவில் மிக மோசமான காரியங்களை செய்துவருகிறது. நேற்றுவரை உள்ளடிவேலையில் ஈடுபட்டுவந்த இந்தியா. வியாழனன்று தனது நிலைப்பாடு பற்றிய விளக்கமொன்றை ஐநா அரங்கில் வெளிப்படுத்தியிருந்தது.

குறிப்பிட்ட ஒரு நாட்டுக்கு’ எதிராக ஐ.நா. மனித உரிமைக் குழுவில் கொண்டு வரப்படும் தீர்மானங்களை ஆதரிக்க மாட்டோம் இலங்கையை கண்டிக்க இப்போது அவசியமில்லை.  ஒரு குறிப்பிட்ட நாட்டின் மனித உரிமை நிலை பற்றி விவாதம் நடத்த அவசியம் என்றால், வழக்கமாக நடக்கும் உலகம் முழுவதுமான ஆய்வின்போது அதைச் செய்யலாம். இப்போது அதற்கான அவசியம் இல்லை, என்று தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட ஒரு நாட்டுக்கு எதிரான தீர்மானங்கள், மனித உரிமைக் குழுவின் ஆக்கப்பூர்வமான பேச்சுகளையும் அனைத்துத் தரப்புகளின் ஒத்துழைப்புடனான அணுகுமுறையையும் வலுவிழக்கச் செய்யும்’   அனைவரையும் அரவணைத்துச் செல்லும் தன்மை, உறுதியான பேச்சுகள், ஒத்துழைப்பு ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும் என்று வழமைபோல சட்டத்தின் ஓட்டையை சரியாகப்பாவித்து இந்தியா நியாயப்படுத்தியிருக்கிறது.

எனவே போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அதை இந்தியா ஆதரிக்காது என்றும் தனது சுயரூபத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. எல்எல்ஆர்சி எனப்படும் கற்றுக்கொண்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணையம் அளித்திருக்கும் பரிந்துரைகளை அமூல்படுத்துவதற்கு, அதுவரை தங்களுக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று இலங்கை ஏற்கெனவே கோரியிருக்கிறது.

இந்தியாவின் அந்த வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் சம்பந்தன் ஐயாவின் (தமிழர் தேசியக்) கூட்டமைப்பு ஐநா மன்ற கூட்டத்தொடரில் பங்குபற்றாமல் வெளிநடப்புச்செய்ததை சொல்லலாம்.

சம்பந்தன் ஐயாவின் கூட்டமைப்பு ஐநா அரங்குக்கு வந்திருந்தால் சபை அமர்பில் பேசுவதற்கு சில நிமிடங்களாவது வாங்கித்தருவதாக சில தமிழர் நலன் விரும்பும் தகுதியானவர்கள் உறுதியளித்ததாகவும் சொல்லப்படுகிறது.

சில நிமிடங்களில் ஈழ இனப்படுகொலை பற்றிய விளக்கம், மற்றும் இந்திய இலங்கை கூட்டுச்சதியால் மீறப்பட்ட மனித உரிமைகள் பற்றிய அனைத்து நிலைப்பாடுகளையும் ஒப்புவிக்க முடியாவிட்டாலும், தமிழர் தரப்பு சம்பவங்கள் பற்றி  சம்பந்தன் கூட்டமைப்பினால் தயாரிக்கப்பட்ட விவரமான அறிக்கையை அனைத்து நாட்டு தலைவர்க்ளுக்கும் வினியோகித்திருக்க முடியும்.

இச்சந்தற்பத்தில்  இலங்கையில் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களின் வழக்காளியின் நேரடி பிரசன்ம அங்கத்துவத்தை  கூட்டமைப்பினரின் பிரசன்மம்  உண்டுபண்ணி மிகப்பெரிய தாக்கத்தை ஐநாவில் ஏற்படுத்தியிருக்கமுடியும். மேற்கு நாடுகளுக்கு மேலதிக ஆதார சக்தியாகவும் விளங்கியிருக்க முடியும். ஆனால் அனைத்தும் இந்திய, இலங்கை, சம்பந்தன் கூட்டமைப்பு, ஆகிய துரோக சக்திகளால் கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் தொலைக்கப்பட்டிருக்கிறது.

இருந்தும் இன்னும் கால அவகாசம் இருக்கிறது. எது என்னவானாலும் பரந்துபட்டு அகதியாக வாழும் தமிழ்ச்சமூகம் கடைசி மூச்சுவரை இனப்படுகொலை குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக்கொடுக்காமல் தூங்கப்போவதில்லை.. அத்துடன் கூட்டமைப்பின் தலைமையை தமிழர்கள் தூக்கியெறியும் நேரமும் இதுவே என்பதும் வெளிப்படையாக தெரிய வந்திருக்கிறது.

ஈழதேசம் இணையத்திற்காக.
கனகதரன்.

Saturday, March 3, 2012